Jump to content

Recommended Posts

சென்னை ஐ.பி.எல் போட்டி இடமாற்றத்தால் இத்தனை கோடி இழப்பா?

 

சென்னை ஐ.பி.எல் போட்டி இடமாற்றத்தால் இத்தனை கோடி இழப்பா?

 

சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் புனேயிற்கு மாற்றப்பட்டுள்ளது.

11 ஆவது ஐ.பி.எல் போட்டி கடந்த 7 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டி மே மாதம் 27 ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளது.

இந்நிலையிலி தமிழகத்தில் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் ஸடெர்லைட் ஆலைக்கு தடை விதித்தல் போன்ற காரணங்களால் போராட்'டங்கள் நடைபெற்று வருகின்றது. இதனால் தமிழகத்தில் ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலும் நேற்று முன்தினம் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய 5 ஆவது போட்டி பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு வழங்க பொலிஸார் மறுத்துள்ளதாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் ஸடெர்லைட் ஆலைக்கு தடை விதித்தல் போன்ற போராட்டங்கள் நடைபெறுவதாலும், சென்னையில் நடைபெறவிருந்த ஏனைய 6 போட்டிகள். மராட்டிய மாநிலம் புனேயிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கும், மாநில அரசிற்கும் ரூபா 8.4 கோடி இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/cricket/lose-Chennai-IPL-match-transformation

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

ஐ.பி.எல். போட்டி - சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்

 
அ-அ+

ஐ.பி.எல். போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. #MIvsSRH #IPL2018

 
 
 
 
ஐ.பி.எல். போட்டி - சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்
 
ஐதராபாத்:

ஐ.பி.எல். போட்டியின் 11-வது சீசனில் ஏழாவது போட்டி இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், லெவிசும் களமிறங்கினர்.  

201804122227434474_1_9zbc01b1._L_styvpf.jpg

ஐதராபாத் அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கி மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் லெவிஸ் 29 ரன்னும், சூர்யகுமார் யாதவ், போலார்டு ஆகியோர் தலா 28 ரன்களும் எடுத்தனர்.

201804122227434474_2_ggrq0l82._L_styvpf.jpg

ஐதராபாத் அணி சார்பில் சந்தீப் சர்மா, பில்லி ஸ்டான்லேக், சித்தார்த் கவுல் தலா 2 விக்கெட்டும், ரஷித் கான், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. #Tamilnews #MIvsSRH #IPL2018

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/12222743/1156723/mumbai-indians-target-148-runs-against-sunrisers-hyderabad.vpf

Sunrisers Hyderabad require another 11 runs with 3 wickets and 9 balls remaining

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்.,: மும்பை அணி மீண்டும் தோல்வி

பரபரப்பான போட்டியில் கடைசிப் பந்தில் 1 ரன் வித்யாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சன்ரைஸ் ஹைதராபாத் மட்டும் என்ன லகானில் அமீர்கான் ரிஜெக்ட் பண்ணிய அணி போல கிடக்கு....!  tw_blush:

Résultat de recherche d'images pour "lagaan cricket team moving gif"

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். போட்டி - ஹூடாவின் பொறுப்பான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது

 
அ-அ+

ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. #IPL2018 #MIvsSRH

 
 
 
 
ஐ.பி.எல். போட்டி - ஹூடாவின் பொறுப்பான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது
 
ஐதராபாத்:

ஐ.பி.எல். போட்டியின் 11-வது சீசனில் ஏழாவது போட்டி இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், லெவிசும் களமிறங்கினர்.  

201804130001012659_1_4y1gbg7s._L_styvpf.jpg

ஐதராபாத் அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கி மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியது. இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் லெவிஸ் 29 ரன்னும், சூர்யகுமார் யாதவ், போலார்டு ஆகியோர் தலா 28 ரன்களும் எடுத்தனர்.

ஐதராபாத் அணி சார்பில் சந்தீப் சர்மா, பில்லி ஸ்டான்லேக், சித்தார்த் கவுல் தலா 2 விக்கெட்டும், ரஷித் கான், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சகாவும், ஷிகர் தவானும் இறங்கினர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு அரை சதம் கடந்தனர். அணியின் எண்ணிக்கை 62 ஆக இருக்கும்போது சகா 22 ரன்களில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாடி கொண்டிருந்த தவான் 28 பந்துகளில் 8 பவுண்ட்ரியுடன் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே 11 ரன்னுடனும், ஷகிப் அல் ஹசன் 12 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். அப்போது ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

201804130001012659_2_ggrq0l82 - Copy._L_styvpf.jpg

அடுத்து இறங்கிய தீபக் ஹூடாவும், யூசுப் பதானும் நிதானமாக ஆடினர். யூசுப் பதான் 14 ரன்னிலும். அடுத்த பந்தில் ரஷித் கான் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர்.

இதனால் ஐதராபாத் அணி வெற்றி பெற கடைசி இரண்டு ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் ஒரு ரன் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் முஸ்தபிசுர் ரகுமான். இதனால் இறுதி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது.

முதல் பந்தில் ஹூடா சிக்சர் அடித்தார். அடுத்த பந்து வைட் ஆக ஒரு ரன் கிடைத்தது. அடுத்த பந்தில் ரன் இல்லை. அடுத்த 3 பந்துகளில் தலா ஒரு ரன் அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. ஹூடா இறுதி வரை  அவுட்டாகாமல் 32 ரன்கள் எடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.#Tamilnews#IPL2018 #MIvsSRH

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/13000101/1156729/sunrisers-hyderabad-beat-mumbai-indians-in-one-wicket.vpf

Link to comment
Share on other sites

மார்க்கண்டேயின் திருப்புமுனை பவுலிங் வீண்: சன் ரைசர்ஸிடம் தோற்றது மும்பை

 

 
hooda

சன் ரைசர்ஸ் வெற்றியைக் கொண்டாடும் தீபக் ஹூடா.   -  படம். | ஏ.பி.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற 2018 ஐபில் தொடரின் 7வது போட்டியில் பரபரப்பான இறுதிக் கட்டத்தில் ஹைதராபாத் அணி மும்பை அணியை கடைசி பந்தில் வீழ்த்தியது. இதன் மூலம் மும்பை அணி தன் 2வது தோல்வியைச் சந்தித்துள்ளது.

டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் மும்பையை பேட் செய்ய அழைத்தார், ஆனால் ரஷீத் கான் (1/13), சித்தார்த் கவுல் (2/29) சந்தீப் சர்மா (2/25) ஆகியோரது சிறந்தப் பந்து வீச்சில் மும்பை அணி 147/8 என்று மடிந்தது. தொடர்ந்து ஆடிய ஹைதராபாத் அணி லெக் ஸ்பின்னர் மயங்க் மார்க்கண்டே (4/23), முஸ்தபிசுர் (3/23) ஆகியோரது பந்து வீச்சில் திக்கித் திணறினாலும் கடைசி பந்தில் வெற்றி ஷாட்டை அடித்து 151/9 என்று வெற்றி பெற்றது.

 

சன் ரைசர்ஸ் வெற்றியில் பதற்றமான தருணத்தில் தீபக் ஹூடாவின் (32 நாட் அவுட்) ஆட்டம் மிகச்சிறப்பாக அமைந்தது.

கடைசி ஓவரில் தீபக் ஹூடா, பென் கட்டிங் வீசிய வைடு ஃபுல் பந்தை முழங்காலை மடக்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவர் மேல் சிக்ஸ் அடிக்க மும்பை அதிர்ந்தது. இதுதான் சன் ரைசர்ஸ் அணியின் முதல் சிக்ஸாகவும் அமைந்தது. 11 ரன்கள் தேவை என்பது இந்த சிக்சரினால் 5 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்றானது. அடுத்த பந்தை கட்டிங் வைடாக வீசி ஒரு இலவச ரன்னை வழங்கினார். ஆனால் அடுத்த பந்தை ஹூடா சுற்ற பந்து சிக்கவில்லை. அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தார் ஹூடா. 4வது பந்தில் ஸ்டான்லேக் ஒரு ரன் எடுத்தார். ஒரு ரன் எடுத்தால் ஸ்கோர்கள் சமன் என்ற நிலையில் ஹூடா ஆட்டமிழந்திருப்பார், ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்கூப் செய்தார் பந்து சரியாகச் சிக்காமல் கேட்சாகச் சென்றது, பைன்லெக்கில் ஓடி வந்த பும்ராவுக்கு முன்னால் பந்து தரைதட்டியது. இந்தக் கேட்சைப் பிடித்திருந்தால் சன்ரைசர்ஸ் ஆல் அவுட் ஆகியிருக்கும். கடைசி பந்தில் 1 ரன் தேவை என்ற நிலையில் பீல்டர்கள் முன்னே வரவழைக்கப்பட்டனர், ஸ்டான்லேக் மிட்விக்கெட் மேல் தூக்கி பவுண்டரி அடிக்க சன் ரைசர்ஸ் அணிக்கு த்ரில் வெற்றி.

மார்க்கண்டேயின் அபாரத் திறமை

முன்னதாக ஷிகர் தவண் மிக அருமையாக ஆடினார், முதல் ஆட்டத்தில் 33 பந்துகளில் அரைசதம் கண்டார், நேற்றும் அபாரமாக ஆடினார் பந்தை அது வரும் திசையில் ஆடினார். மொத்தம் 8 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து மயங்க் மார்க்கண்டே பந்தை ஸ்வீப் ஆட முயன்றார், பந்து கொஞ்சம் கூடுதலாக பவுன்ஸ் ஆக எட்ஜ் எடுத்து பும்ரா டீப்பில் கேட்ச் எடுக்க 3 ஓவர்களில் 3 விக்கெட் என்று சன் ரைசர்ஸ் சரிவு தொடங்கியது.

முதலில் விருத்திமான் சஹா (22 ரன், 20 பந்து 3 பவுண்டரி), தவண் கூட்டணி 62 ரன்களை 7 ஓவர்களில் சேர்த்து அபாரத் தொடக்கம் கொடுத்தனர், இந்நிலையில் சஹா, மார்க்கண்டேயின் வேகமான கூக்ளியில் காலில் வாங்கி எல்.பி.ஆனார். நடுவர் அவுட் கொடுக்கவில்லை, ரிவியூவில் அவுட் என்று தெரிந்தது. ஆனால் நடுவர் லாங் திருப்தியடையவில்லை. அடுத்ததாக கேன் வில்லியம்சன் 6 ரன்களில் முஸ்தபிசுர் கட்டரை எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

markandejpg

பாண்டேயை வீழ்த்திய மகிழ்ச்சியில் மார்க்கண்டே   -  படம். | கே.வி.எஸ்.கிரி.

 

மணீஷ் பாண்டே மேலேறி வந்து பந்து ஸ்பின் ஆகும் திசைக்கு எதிர்த்திசையில் மட்டையை அசிங்கமாக சுற்ற பந்து காற்றில் எழும்பி ரோஹித் சர்மா கேட்ச் எடுத்தார், மோசமான ஷாட் ஆகும் இது. ஷாகிப் அல் ஹசன் (12) மார்க்கண்டேயின் கூக்ளியை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேற சன் ரைசர்ஸ் 73/1 என்ற ஆதிக்க நிலையிலிருந்து 107/5 என்று சரிவு கண்டது, மயங்க் மார்க்கண்டே தன் அபார 4 ஒவர்கள் ஸ்பெல் முடிவில் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 11 டாட் பால், 3 பவுண்டரிகள்.

தீபக் ஹூடா, யூசுப் பத்தான் (14) இணைந்து ஸ்கோரை 136 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது பும்ரா பிரமாதப் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை சொல்லி எடுத்தார். முதலில் யூசுப் பத்தான் நெஞ்சுயர ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட்டில் பொலார்டிடம் கேட்ச் கொடுத்தார், ரஷீத் கான் (0) அடுத்த பந்தே எட்ஜ் ஆகி வெளியேறினார். பும்ராவுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு கிட்டியது. சித்தார்த் கவுல், முஸ்தபிசுர் இடம் டக் அவுட் ஆனார். இதே 19வது ஓவரின் கடைசி பந்தில் சந்தீப் சர்மாவும் ஆஃப் திசையில் நகர்ந்து பைன் லெக் மேல் அடிக்க நினைத்தார், ஆனால் முஸ்தபிசுர் பந்து அவரை துரத்திச் சென்றது, ஷார்ட் பிட்ச் பந்து எழும்ப சந்தீப் சர்மா ஷாட் கேட்ச் ஆனது. சரியாக 19வது ஓவர் முடிவில் 137/9 என்று போட்டி விறுவிறுப்பான கடைசி ஓவருக்குச் சென்றது அப்போது ஸ்டான்லேக், ஹூடா இணைந்து வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

சன் ரைசர்ஸ் பவுலிங் தரத்தை புரிந்து கொள்ளாமல் ஆடிய மும்பை;புரிதலின்மையின் முன்னோடி ரோஹித் சர்மா

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி சன் ரைசர்ஸின் அபார பவுலிங் வரிசை முன் சரண் அடைந்தது. சந்தீப் சர்மா மிகப்பிரமாதமான ஸ்விங் பந்து வீச்சை வீசினார். ரோஹித் சர்மாவை படுத்தினார். அன்று தீபக் சாஹரிடம் தடவியது போல் சந்தீப் சர்மாவிடம் ரோஹித் தடவி கடைசியில் 11 ரன்களுக்கு ஸ்டான்லேக் பந்தில் ஷாகிபிடம் கேட்ச் ஆகி வெளியேறினார், 2வது போட்டியிலும் ரோஹித் சொதப்பல். இந்த 11 ரன்னில் ஒரு லைஃப், முதல் ஓவரிலேயே ஹூடா பின்னால் ஓடிச்சென்று கேட்சை விட்டார்.

சித்தார்த் கவுல் பவர் பிளேயின் கடைசி ஓவரில் இஷான் கிஷன் (9), எவின் லூயிஸ் (29) ஆகியோரை வீட்டுக்கு அனுப்ப மும்பை இந்தியன்ஸ் 54/3 என்று ஆனது. எவின் லூயிஸ் 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 29 ரன்கள் விளாசினார், சூர்யகுமார் யாதவ் மீண்டும் ஒரு நல்ல இன்னிங்சை பொறுப்புடன் ஆடி 31 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்து சந்தீப் சர்மாவின் வேகம் குறைந்த பந்தை லாங் ஆனில் கேட்ச் கொடுத்தார்.

மீண்டும் ஆப்கான் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் தன் பங்குக்கு மும்பை பேட்ஸ்மென்களைக் கட்டிப்போட்டார், 4 ஓவர்களில் 13 ரன்களுக்கு அவர் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். இதில் 18 டாட்பால்கள், இது ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன் இல்லாத பந்துகளாகும். மும்பையின் அதிகபட்ச கூட்டணியே 38 ரன்கள்தான் அது சூர்யகுமார் யாதவ்வுக்கும் கெய்ரல் பொலார்ட் (23 பந்துகளில் 28, 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள்) ஆகியோருக்கிடையே வந்ததுதான். குருணால் பாண்டியா 10 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஷாகிப் அல் ஹசன் ஸ்பின்னுக்கு வெளியேறினார். 147/8 என்று முடிந்தது மும்பை. அதிகமான ஷாட்களை ஆடப்போய்த்தான் மும்பை விக்கெட்டுகளை இழந்தது, சன் ரைசர்ஸ் பந்து வீச்சை அப்படியெல்லாம் அடித்து விட முடியாது என்ற பாடத்தை மும்பை இந்தியன்ஸ் கற்றுக் கொண்டது.

ஆட்ட நாயகனாக ரஷீத் கான் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/article23520959.ece

Link to comment
Share on other sites

‘டாட் பால்’ கிங் ரஷீத் கானின் நல்லுணர்வு: ஆட்ட நாயகன் விருதை மருத்துவமனையில் இருக்கும் நண்பரின் மகனுக்கு அர்ப்பணித்தார்

 

 
rashid%20khan

ஆட்டா நாயகன் விருது பெற்ற ரஷீத் கான் புதிய ஐபிஎல் சாதனை.   -  படம். | ஏ.எஃப்.பி.

செல்லும் இடங்களிலெல்லாம் சிறப்பு என்பதற்கேற்ப எந்த டி20 லீகிலும் தன்னுடைய பவுலிங் திறமையை நிலைநாட்டி உலகப்புகழ் பெற்று வரும் ஆப்கான் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் நேற்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 18 டாட்பால்களை வீசியது புதிய ஐபிஎல் சாதனையாகும்.

நேற்று அவர் 4 ஒவர்களில் 13 ரன்களையே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார், விக்கெட் முக்கியம் என்றாலும் மும்பை இந்தியன்ஸ் அதிரடி முயற்சிகளை முறியடித்துக் கட்டிப்போட்டார் ரஷீத் கான். அதுவும் கெய்ரம் பொலார்ட் போன்ற ஒரு கையில் சிக்சர் அடிக்கும் பேட்ஸ்மனை அவர் கட்டிப்போட்டது கண்கொள்ளாக்காட்சி, ஒரு பவுண்டரிதான் அவரை அடிக்க முடிந்தது பொலார்டினால் மீதி 5 பந்துகளும் டாட் பால்கள்.

சூரிய குமார் யாதவ், பொலார்ட் இருவருக்கும் ஒரு ஓவரை வீசியபோதும் 3 ரன்களையே கொடுத்தார். அவரது கூக்ளியை மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மட்டுமல்ல வேறு வீரர்களும் இதுவரை சரியாகக் கணித்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில் ஆட்ட நாயகன் விருதை நேற்று அவர் பெற்ற போது கூறியதாவது:

ரன் கொடுக்காத (டாட்பால்கள்) பந்துகள் குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் மிக முக்கியமானது. எனவே நான் டாட் பால்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். குட்லெந்தில் பிட்ச் செய்து கலவையான சுழற்பந்துகளை வீசி வருகிறேன்.

பேட்ஸ்மென்களின் பலவீனத்தை எப்போதும் குறிவைப்பேன். லெக் ஸ்பின் கூக்ளி இரண்டையுமே நன்றாகத் திரும்புமாறு செய்கிறேன். எந்த ஒரு லீகில் ஆடினாலும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் எங்களுக்குப் பக்கபலமாக உள்ளனர். அவர்களுக்கும் எங்களுக்கும் விளையாட்டைத் தவிர எங்கள் நாட்டில் வேறு மகிழ்ச்சி ஏது. நான், முஜீப், நபி இங்கு அவர்களுக்காக மகிழ்ச்சி அளித்து வருகிறோம்.

இந்த ஆட்ட நாயகன் விருதை மருத்துவமனையில் இருக்கும் என் நண்பரின் மகனுக்கு அர்ப்பணிக்கிறேன்.

இவ்வாறு கூறினார் ரஷீத் கான்.

http://tamil.thehindu.com/sports/article23521236.ece?homepage=true

Link to comment
Share on other sites

உதறல் பௌலர்கள்... அதிரடி பேட்ஸ்மென்... ஹைதராபாத் த்ரில்லர்! #SRHvMI

 

கடைசி ஓவர்களில் எல்லாம் சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே இந்த ஐ.பி.எல் தொடரின் த்ரில் வெற்றிகளுக்குக் காரணம். அந்த கடைசி ஓவர் சிக்ஸர் மும்பை - ஹைதராபாத் மேட்ச்சிலும் தொடர, மும்பையை வீழ்த்தியது ஹைதரபாத். தொடர்ந்து இரண்டாவது மேட்ச்சிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ். கடைசி ஓவர் திரில்லருக்கு முன் நடந்தது என்ன? #SRHvMI

பொலார்டு

இந்த ஐ.பி.எல் தொடரில் எல்லா கேப்டன்களுமே சொல்லிவைத்ததுபோல டாஸ் வென்றதும் பெளலிங்கைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். நேற்றும் அதுதான் நடந்தது. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார். அணியில் 5 பெளலர்கள். 5 பெளலர்களுக்கும் நான்கு ஓவர்கள் என ரூல்புக்கில் இருப்பதுபோல தெளிவான பெளலிங் ப்ளானோடு இருந்தார் கேன் வில்லியம்சன். 

ஹர்திக் பாண்டியா மிஸ்ஸிங்!

முதல் மேட்ச்சில் காயம் அடைந்த ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக பிரதீப் சங்வானையும், சென்னைக்கு எதிரான முதல் மேட்ச்சில் அதிக ரன்கள் கொடுத்த மிட்சல் மெக்லாகனுக்குப் பதிலாக பென் கட்டிங்கையும் அணிக்குள் கொண்டுவந்திருந்தார் மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா. ஹைதராபாத் அணியில் புவனேஷ்குமார் குமாருக்குப் பதிலாக சந்தீப் ஷர்மா இடம்பிடித்திருந்தார்.

               

அவுட் ஆஃப் ஃபார்ம் ரோஹித்!

சந்தீப் ஷர்மா, ரோஹித் ஷர்மாவுக்குப் பந்துவீச ஆட்டம் தொடங்கியது. ரோஷித் ஷர்மா சுத்தமாக ஃபார்மிலேயே இல்லை என்பதற்கு முதல் மூன்று பந்துகளே சாட்சி. ஒரு பந்தைக் கூட கனெக்ட் செய்ய முடியாமல் திணறினார் ரோஹித். முதல் மூன்று பந்துகளும் டாட் பால் ஆனதால் நான்காவது பந்தைத் தூக்கியடித்தார். மூன்று ஃபீல்டர்கள் கேட்ச் பிடிக்க ஓட, கடைசியில் தீபக் ஹீடாவின் கையில் பட்டு நழுவியது கேட்ச் வாய்ப்பு. முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஹைதராபாத்துக்கு சூப்பர் தொடக்கத்தைக் கொடுத்தார் சந்தீப். 

இரண்டாவது ஓவரை ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பில்லி ஸ்டான்லேக் வீசினார். முதல் ஓவரில் விட்டதைப்பிடித்துவிட வேண்டும் என்கிற வெறி ரோஹித் ஷர்மாவிடம் தெரிந்தது. இரண்டாவது ஓவரின் முதல் பந்து டாட் பாலாகிவிட, தலைக்கு மேல் வந்த இரண்டாவது பந்தை தூக்கியடித்தார் ரோஹித், ஆட்டத்தின் முதல் சிக்ஸர்.  ஐந்தாவது பந்தை மீண்டும் பவுண்டரிக்கு விளாசினார் ரோஹித். ஆனால், அடுத்தப்பந்திலேயே கேட்ச் கொடுத்து 10 ரன்களில் ஆட்டம் இழந்தார் ரோஹித். முதல் இரண்டு போட்டிகளிலுமே அடித்து ஆட வேண்டும் என்று மட்டும் நினைத்தாரே தவிர, சரியாகப் பந்துகளைக் கணித்து விளையாடவில்லை. மோசமானப் பந்துகளை அடித்து ஆடினால் ஓகே. கடினமானப் பந்துகளைக் கூட அடித்து ஆட வேண்டும் என்று நினைத்ததால் விக்கெட்டை இழந்தார்.

#SRHvMI

 

கூக்ளி கான்!

ரோஹித் ஆட்டம் இழந்துவிட மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஈவின் லூயிஸ் பவுண்டர்கள் அடித்துகொண்டிருந்தார். ரோஹித்துக்கு அடுத்துவந்த இஷான் கிஷன் இரண்டு பவுண்டரிகள் அடித்துவிட்டு ஆட்டம் இழந்தார். அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் நிதானமான ஆட்டம் ஆடினார். இதற்கிடையே 6-வது ஓவரில் கவுலின் பந்துவீச்சில் போல்டானார் லூயிஸ். 2 சிக்ஸர் உள்பட 17 பந்துகளில் 29 ரன்கள் அடித்திருந்தார் லூயிஸ். சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, க்ருனால் பாண்டியா 15 ரன்களில் ஆட்டம் இழந்தார். சீரான இடைவெளிகளில் ஹைதராபாத் பெளலர்களுக்கு விக்கெட்டுகள் கிடைத்துக்கொண்டேயிருந்தது. பொலார்ட் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் என 28 ரன்கள் அடித்துவிட்டு அவுட் ஆனார். பில்லி கட்லிங்கை சூப்பர் கூக்ளி மூலம் போல்டாக்கினார் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான். ஆட்டத்தின் கடைசி ஓவரில் மும்பையின் சுழற்பந்து வீச்சாளர் மார்க்கண்டே திரும்பி நின்று ஒரு பவுண்டரி விளாச மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 147 ரன்கள் அடித்தது. 

பகுதிநேர பெளலர்கள் யாரையும் வில்லியம்சன் பயன்படுத்தவில்லை. 5 பெளலர்கள்தான் என்றாலும் மாற்றி மாற்றிப் பயன்படுத்திக்கொண்டேயிருந்தார் வில்லியம்சன். ஹைதராபாத்தின் 5 பெளலர்களும் சிறப்பாக பந்து வீசியிருந்தாலும் ரஷித் கான்தான் டாப். 4 ஓவர்களில் வெறும் 13 ரன்களே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார். இவரது பெளலங்கில் ஈஸியாகப் பிடித்திருக்கவேண்டிய கேட்ச்சைக் கூட ஹைதராபாத் வீரர்கள் கோட்டைவிட்டிருந்தனர். ஸ்டான்லேக் மட்டுமே 4 ஓவர்களில் அதிகபட்சமாக 42 ரன்கள் கொடுத்திருந்தார். கடைசி 5 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை. 

#SRHvMI

நிதானமான சேஸிங்!

120 பந்துகளில் 148 ரன்கள் எடுத்தால்போதும் என்னும் ஈஸியான டார்கெட். தவான், சாஹா, கேன் வில்லியம்சன், மணிஷ் பாண்டே, ஷகிப் அல் ஹசன், ஹூடா, பதான் என வரிசைகட்டி ஹார்ட் ஹிட்டிங் பேட்ஸ்மேன்களை வைத்திருக்கும் ஹைதராபாத் ஈஸியாக வென்றுவிடும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பும். ஆனால், மும்பை பெளலர்களின் பந்துவீச்சு ஹைதராபாத் பேட்ஸ்மேன்களை நிலைகுலையவைத்தது.

               

சாஹாவும், தவானும் நிதானமாக ஆடி நல்ல ஸ்டார்ட்டைக் கொடுத்தனர். ஆனால், ரோஹித் ஷர்மா சங்வான், பும்ரா, கட்லிங், மார்க்கண்டே, பாண்டியா, முஷ்ஃபிகர் ரஹிம் என பெளலர்களை மாற்றிக்கொண்டேயிருக்க, ஹைதராபாத்தால் அடித்து ஆடமுடியவில்லை. முதல் விக்கெட்டாக 7-வது ஓவரில் சென்னையை கலங்கடித்த மார்க்கண்டே ஹைதராபாத்தின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பைக் குலைத்தார். சாஹா 22 ரன்னில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டம் இழந்தார். அடுத்த ஓவரிலேயே கேப்டன் கேன் வில்லியம்சன் அவுட். 6 ரன்னில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால், இந்த விக்கெட் மும்பைக்கு டிஆர்எஸ் அப்பீல் கேட்டபிறகுதான் கிடைத்தது.

மார்க்கண்டேவின் சூப்பர் ஓவர்கள்!

மீண்டும் அடுத்த ஓவரில் விக்கெட். மீண்டும் மார்க்கண்டே. 28 பந்துகளில் 45 ரன், 8 பவுண்டரிகள் என சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தவான் அவுட். பும்ராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் தவான். இதன்பிறகு அடுத்தடுத்து சோதனைகளாகச் சந்தித்தது ஹைதராபாத். மணிஷ் பாண்டே, ஷகிப் அல் ஹசன், யூசுஃப் பதான் என ஆளாளுக்கு 10 ரன்களைக் கடந்ததும் லூஸ் ஷாட்கள் அடிக்க விக்கெட் விழுந்துகொண்டேயிருந்தது.

ஒருபக்கம் தீபக் ஹூடா மட்டும் களத்தில் நிற்க, ரஷித் கான், கவுல், சந்தீப் ஷர்மா என அடுத்தடுத்த மூன்று பேட்ஸ்மேன்களும் டக் அவுட் ஆகி வெளியேற, மும்பை வென்றுவிடும் என்கிற நிலை உருவானது.  4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் எடுத்தார் மார்க்கண்டே. சாஹா, தவான், மணீஷ் பாண்டே, ஷகிப் அல் ஹசன் என நான்குமே முக்கியமான விக்கெட்டுகள்!

#SRHvMI

வில்லன் கட்லிங்!

கடைசி ஓவர் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி. தீபக் ஹூடாவும், கடைசி பேட்ஸ்மேன் ஸ்டான்லேக்கும் களத்தில் நிற்க, கட்லிங்கிடம் பந்தைக் கொடுத்தார் ரோஹித் ஷர்மா. முதல் மேட்ச்சில் சென்னை அணிக்கு எதிராக முஷ்ஃபிகர் ரஹீமிடம் பந்தைக் கொடுத்து அடி வாங்கியதால்தான் இந்தமுறை கட்லிங்கிடம் கொடுத்தார் ரோஹித். ஆனால், கட்லிங்கின் முதல் பந்திலேயே சிக்ஸர். ஹூடாவுக்கு இதைவிட ஈஸியானப் பந்து கிடைக்காது. ஃபுல் டாஸில் வந்த பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் ஹூடா. இதனால் 5 பந்துகளில் 5 ரன்கள் என டார்க்கெட் குறைந்தது.

கட்லிங்குக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. அடுத்தப்பந்தை வைடாக வீசினார். 1 ரன் குறைந்து எக்ஸ்ட்ராவாக இன்னொரு பந்தும் ஹைதராபாத்துக்கு கிடைத்தது. ஆனால், அதற்கு அடுத்த இரண்டு பந்துகளையும் மிகச்சிறப்பாக வீசினார் கட்லிங். ஹூடாவால் சிங்கிள்தான் அடிக்க முடிந்தது. 3 பந்துகளில் 3 ரன்கள் தேவை. ஸ்டான்லேக்கும், ஹூடாவும் அடுத்தடுத்த பந்துகளில் சிங்கிள் எடுக்க ஆட்டம் `டை’ ஆனது. கடைசி பாலில் கடைசி ரன், கடைசி பேட்ஸ்மேன் என ஆட்டம் பரபரப்பின் உச்சத்தில் இருந்தது. ஆஸ்திரேலியா பாணியில் எல்லா ஃபீல்டர்களையும் ரோஹித் ஷர்மா பேட்ஸ்மேனுக்கு அருகில் கொண்டுவந்து நிறுத்த, பதற்றப்படாமல் ஆடினார் ஸ்டான்லேக். ஸ்லோவாக, மிடில் ஸ்டம்ப்பை நோக்கிவந்த பந்தை தூக்கியடித்தார் ஸ்டான்லேக். வெற்றிபெற்றுவிட்டார்கள் என்பதால் மும்பை ஃபீல்டர் சரியாக ஓடக்கூடவில்லை. கடைசி பால் பவுண்டரியாக ஹீரோவானார் ஸ்டான்லேக். அதேசமயம் கடைசி ஓவர் உதறல்படி வில்லன் ஆனார் கட்லிங். 

#SRHvMI

 

மும்பை - ஹைதரபாத் மேட்ச்சில் பராட்டப்படவேண்டியவர்கள் பெளலர்கள்தான். 20/20 கிரிக்கெட்டில் பேட்டிங்கைவிட பெளலிங்தான் சிரமமானது. கட்லிங்கின் கடைசி ஓவரைத்தவிர சிறப்பாகப் பந்து வீசியும் மும்பையால் வெற்றிபெறமுடியவில்லை. காரணம் பேட்டிங் சொதப்பல். சாம்பியன் மும்பை பேட்டிங்கை மீண்டும் மீட்டெடுத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்!

https://www.vikatan.com/news/sports/122085-sunrisers-hyderabad-beats-mumbai-indians.html

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். போட்டி - டி வில்லியர்சின் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை வீழ்த்தியது பெங்களூரு

 
அ-அ+

ஐ.பி.எல். போட்டியில் டி வில்லியர்சின் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியது. #IPL2018 #RCBvKXIP

 
 
 
 
ஐ.பி.எல். போட்டி - டி வில்லியர்சின் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை வீழ்த்தியது பெங்களூரு
 
பெங்களூரு:

ஐ.பி.எல். போட்டியின் 11-வது சீசனில் இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும் மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.

பெங்களூர் அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கிய பஞ்சாப் அணி தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் பஞ்சாப் அணி 19.2 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 47 ரன்னும், கேப்டன் அஷ்வின் 33 ரன்னும், கருண் நாயர் 29 ரன்னும் எடுத்தனர்.

பெங்களூர் அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், வோக்ஸ், கேஜ்ரோலியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
201804132355579098_1_UM._L_styvpf.jpg


இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், மெக்கல்லம் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே மெக்கல்லம் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டி வில்லியர்ஸ் களமிறங்கினார்.

பொறுப்புடன் ஆடிய டி காக் 34 பந்துகளில் ஒரு சிக்சர், 7 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்தார். அடுத்து இறங்கிய சர்பிராஸ்கான் டக் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட்டுக்கு 87 ரன் எடுத்திருந்தது.

அவரை தொடர்ந்து மந்தீப் சிங் களமிறங்கினார். அவர் டி வில்லியர்சுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடி மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். அதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ் 40 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 57 ரன்னும், மந்தீப் சிங் 22 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
 
201804132355579098_2_vvl._L_styvpf.jpg


இறுதியில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிரிஸ் வோக்ஸ் ஒரு ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

பஞ்சாப் அணி சார்பில் அஷ்வின் 2 விக்கெட்டும், அக்சர் படேல், முஜிபுர் ரகுமான், ஆண்ட்ரு டை ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.  #IPL2018 #RCBvKXIP

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/13235558/1156925/Royal-Challangers-Banglore-beat-kings-XI-Punjab-in.vpf

Link to comment
Share on other sites

உமேஷ் யாதவ், டிவில்லியர்ஸ் பிரமாதம்: கிங்ஸ் லெவனை சற்றே போராடி வென்றது பெங்களூரு

 

 
abdjpg

அரைசதம் விளாசிய ஏபிடிவில்லியர்ஸ்.   -  படம். | ஏ.எஃப்.பி.

பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் 2018, 8வது போட்டியில் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட கிங்ஸ் லெவன் அணி ராகுல் (47) மற்றும் கேப்டன் அஸ்வின் (33) ஆகியோரது பங்களிப்பினால் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. உமேஷ் யாதவ் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளைக் காலி செய்தார். கேஜ்ரோலியா, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா  2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி போராடியே வென்றது. கடைசி ஓவரில் வாஷிங்டன் சுந்தர் பவுண்டரியில் 159/6 என்று 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் புள்ளிகளைப் பெற்றது. ஆட்ட நாயகன் உமேஷ் யாதவ்.

இந்திய பிட்ச்களின் தன்மைக்கு ஏற்ப முதல் ஓவரே அக்சர் படேல்தான் வீசினார், மறுமுனையில் அஸ்வின் வந்து விட்டார். பிஷன் சிங் பேடி கால நிலைமையை சிந்திக்க வைத்தது இந்த ஸ்பின் தொடக்கம். பிஷன் பேடியாவது பெயருக்கு மதன்லால் 2ஓவர், மொஹீந்தர் அமர்நாத் 2 ஓவர் என்று கொடுப்பார்.

ஆனால் அஸ்வினின் முடிவுக்கு பலன் இருந்தது அதிரடி மன்னன் மெக்கல்லம் 2வது பந்திலேயே அக்சர் படேலின் ஷார்ட் பிட்ச் பந்தை பேகவர்ட் பாயிண்டில் கேட்ச் கொடுத்தார், 17 வயது ஆப்கன் ஸ்பின்னர் முஜிபுர் கேட்ச் எடுத்தார்.

விராட் கோலியை அதிர்ச்சியடையச் செய்த 17 வயது முஜிபுர் ரஹ்மான்:

மெக்கல்லம் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் விராட் கோலி இறங்கினார், விக்கெட் எடுத்த ஓவரில் சிக்கனமாக வீச முடியாத அக்சர் படேல், விராட் கோலிக்கும், பிறகு டிக்காக்குக்கும் இரண்டு பவுண்டரிகளை வழங்கி முதல் ஓவரில் 10 ரன்களை  விட்டுக் கொடுத்தார்.

பிறகு அஸ்வினை கீப்பர் பின்னால் ஒரு பவுண்டரி அடித்தார் விராட் கோலி.

3வது ஓவரை ஆப்கான் இளம் லெக் ஸ்பின்னர் முஜீபுர் ரஹ்மான் வீசினார். கோலி, டிகாக் இருவருக்கும் வீசினாலும் அந்த ஓவரில் 3 ரன்களையே விட்டுக் கொடுத்தார் முஜீப்.

வேகப்பந்து வீச்சாளர் டை வந்தவுடனேயே மந்தமான இந்தப் பிட்சில் விராட் கோலி அவரை லாங் லெக்கில் புல்ஷாட் பவுண்டரியுடன் வரவேற்றார், பிறகு ஒரு ராஜ கவர் டிரைவ் பவுண்டரி என்று 13 பந்துகளில் அனாயசமாக 21 ரன்கள் வந்தார் விராட் கோலி.

அடுத்த ஓவரில்தான் விராட் கோலிக்கு முஜீபிடமிருந்து அதிர்ச்சி காத்திருந்தது. 5வது பந்து முஜீபின் அருமையான கூக்ளியாக பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி கடுமையாகத் திரும்பி கோலியின் மட்டை, கால்காப்பு இடைவெளியில் புகுந்து ஸ்டம்புகளை தொந்தரவு செய்தது. கோலி டிரைவ் ஆட முயன்றார். மிக அருமையான பந்து வீச்சு, கோலி அதிர்ச்சியடைந்தார்.

டிவில்லியர்ஸ் அதிரடி:

கோலி ஆட்டமிழந்தவுடன் டிவில்லியர்ஸ் புகுந்தார். மோஹித் சர்மாவின் ஒரே ஓவரில் 16 ரன்கள் விளாசினார், டிவில்லியர்ஸுகெல்லாம் மோஹித் சர்மா வீச முடியுமா? அதுவும் முதல் பந்தே ஷார்ட் பிட்ச் பின்னால் சென்று மிட்விக்கெட்டில் முறையாக சிக்ஸருக்கு அனுப்பினார். பிறகு பைன் லெக்கை முன்னால் வைத்துக் கொண்டு இடுப்புயர லெக் திசை ஸ்லோ பந்தை வீசினார் மோஹித் சர்மா கிளீனாக அதே திசையில் பவுண்டரி. கடைசி பந்து உண்மையில் ஈ  அடிப்பது போன்று கவர் திசையில் பவுண்டரி விளாசினார் டிவில்லியர்ஸ்.

அக்சர் படேல் ஓவரில் குவிண்டன் டிகாக் பிளம்பாக வாங்கினார், நாட் அவுட் என்றார் களநடுவர் அஸ்வின் ரிவியூ செய்தார் பலனில்லை அம்பயர் தீர்ப்பு என்று வந்தது, சூப்பர்ஸ்டார் அணிகள் ஆடும்போது நடுவர்களை கவனிக்க வேண்டுமென்று கூறுவதற்கு இன்னொரு சாட்சியம் இது. அதன் பிறகு டி காக் அஸ்வினை இறங்கி வந்து நேராக ராஜ சிக்ஸ் அடித்தார் பிறகு ஒரு ஸ்வீப் பவுண்டரி. அஸ்வின் 3-0-29-0.

அஸ்வினின் திருப்புமுனை 12வது ஓவரும் டிவில்லியர்ஸ் அபாரமும்

குவிண்டன் டி காக் 34 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்திருந்த போது 12வது ஓவரை அஸ்வின் ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து ஒரு பந்தை ஸ்டம்புக்குள் செலுத்தினார். டி காக் இறங்கி வந்து ஆடினார் சிக்கவில்லை பவுல்டு ஆனார்.

அடுத்த பந்திலேயே சர்பராஸ் கானுக்கு அஸ்வின் வீசிய பந்து டூ மச். ஸ்லிப்பை நிறுத்தி அபாரமான கேப்டன்சி செய்தார் அஸ்வின், ஸ்லிப்பை நிறுத்தி தன் புதிய ஆயுதமான லெக் பிரேக்கை வீசினார், உள்ளே காற்றில் வந்து பிட்ச் ஆகி வெளியே ஸ்பின் ஆனது சர்பராஸ் ஸ்லிப்பில் நாயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இது திருப்பு முனையாக ஆர்சிபி அணி 12 ஓவர்களில் 88/4 என்று கொஞ்சம் தடுமாறியது. ஆனால் டிவில்லியர்ஸ் 19 ரன்கலில் இருந்தார். இடையில் டிவில்லியர்ஸ் மோஹித் சர்மாவை செய்த ஸ்லாக் ஸ்வீப் பவுண்டரிதான் வர 17வது ஓவரில் முஜீப் உர் ரஹ்மான், டிவில்லியர்ஸுக்கு வீச நேரிட்டது, முதலில் மந்தீப் சிங் புல் ஷாட்டில் பவுண்டரி அடித்து பிறகு சிங்கிள் எடுத்து டிவில்லியர்ஸிடம் ஸ்ட்ரைக் கொடுக்க ஃபுல் பந்தை சும்மா ஸ்லைஸ் செய்தார் ஏபிடி அதுவே லாங் ஆஃபில் சிக்ஸ் ஆனது. அடுத்ததாக ஒரு புல்ஷாட்டையும் சிக்ஸாக மாற்றினார் டிவில்லியர்ஸ்.

முஜீப் 3 ஓவர்களில் 10 ரன்களையே கொடுத்திருந்தவர் கடைசி ஓவரில் 19 ரன்களைக் கொடுத்து 4-029-1 என்று முடிந்தார், ஆனாலும் இவரால் கோலியின் விக்கெட்டை மறக்க முடியாது.

மோஹித் சர்மா அடுத்த ஓவரில் வர 2வது பந்து ஸ்லோயர் ஒன்னாக அமைய காத்திருந்து ஒரே தூக்குத் தூக்கினார் ஏபிடி லாங் ஆனில் சிக்ஸ். இதுவே டிவில்லியர்ஸின் அரைசதமானது. சமன்பாடு 12 பந்துகளில் 10 என்று ஆனது. 19வது ஓவரின் முதல் பந்தில் அப்பர் கட் செய்து டீப்பில் கருண் நாயரிடம் கேட்ச் ஆனார் டிவில்லியர்ஸ். இவர் 40 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் என்ற அபார இன்னிங்ஸை ஆடி வெளியேறினார்.

மந்தீப் சிங் 19வது ஓவரின் 4வது பந்தில் 2 வது ரன் ஓட முயற்சித்து துல்லிய த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். இருவரும் அவுட் ஆக கிரீசில் இரண்டு புதிய வீர்ர்கள், கடைசி ஓவர் 5 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போதுதான் மோஹித் சர்மா ஷார்ட் பிட்ச் பந்தை வாகாக வீச வாஷிங்டன் சுந்தர் தேர்ட்மேனில் பவுண்டரிக்குத் தூக்கி விட்டார். கடைசியில் பீல்டர்கள் முன்னால் வர கவர் டிரைவ் பவுண்டரியில் வாஷிங்டன் சுந்தர் வெற்றி பெற்றுத் தந்தார். மோஹித் சர்மாவைத் தவிர அனைவரும் அருமையாக வீசினர், மோஹித் 3.3 ஓவர்களில் 45 ரன்கள். ஆட்ட நாயகன்  உமேஷ் யாதவ்

முன்னதாக...

யுவராஜ் சிங் மிடில் ஸ்டம்ப் பெயர்ந்தது: ஒரே ஓவரில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள்

yuvraj%20singh%20bowled

உமேஷ் யாதவ் பந்தில் யுவராஜ் சிங் கிளீன் பவுல்டு.   -  படம். | ஏ.பி.

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார் பெங்களூரு கேப்டன் விராட் கோலி.

இதில் 3 ஓவர்களில் 32/0 என்று கிங்ஸ் லெவன் அதிரடி காட்டிக் கொண்டிருந்தது.

அப்போது தன் 2வது ஓவரை வீசினார் உமேஷ் யாதவ். இன்னிங்சின் 4வது ஓவர்

முதலில் மயங்க் அகர்வால் (15) உமேஷ் யாதவ் பந்தை டிரைவ் ஆடச் செல்ல பந்து மட்டையின் விளிம்பில் பட்டு டி காக்கிற்கு வலது புறம் செல்ல டைவ் அடித்து அற்புதமான கேட்சைப் பிடித்தார்.

அடுத்த பந்தே ஆஸ்திரேலிய அதிரடி வீர்ர் ஏரோன் பிஞ்ச் இன்ஸ்விங்கரை கால் காப்பில் வாங்க நடுவர் கையை உயர்த்தினார், ஆனால் பிஞ்ச் அதனை ரிவியூ செய்தார். நடுவர் தீர்ப்பு இறுதி செய்யப்பட்டது, பிஞ்ச் டக் அவுட் ஆனார்.

யுவராஜ் சிங் இறங்கி ஹாட்ரிக் வாய்ப்பைத் தடுத்தார். 4வது பந்தையும் யுவராஜ் தடுத்தாடினார்.

அடுத்த பந்து மார்புயர ஷார்ட் பிட்ச் பந்து புல் ஆடினார், சரியாகச் சிக்கவில்லை, பீல்டர் பவுண்டரியில் நின்றிருந்தால் கேட்ச் ஆகியிருக்கும் ஆனால் அவர் முன்னே வந்ததால் பந்து பின்னால் சென்று பவுண்டரி ஆனது. மீண்டும் ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு பந்தை வேகமாக வீச வேகத்துக்கு ஈடுகொடுக்காமல் யுவராஜ் சிங் பவுல்டு ஆனார். மிடில் ஸ்டம்ப் பெயர்ந்தது. உமேஷ் இந்த விக்கெட்டை கொஞ்சம் ஆக்ரோஷமாகக் கொண்டாடினார்.

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள். 32/0 என்று தொடங்கிய கிங்ஸ் லெவன் 36/3 என்று சரிந்தது. உமேஷ் யாதவ் 3 ஓவர்கள் 15 ரன்கள் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

ஆனால் ராகுல்  (47), கருண் நாயர் (29) இணைந்து 7 ஓவர்களில் 58 ரன்கள் குவித்தனர். ஸ்டாய்னிஸை 11 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் ஸ்டம்ப்டு முறையில் வீழ்த்தியது முக்கியமானது. அஸ்வின் அருமையாக ஆடி 21 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து முக்கியப் பங்களிப்புச் செய்தார்.

வாஷிங்டன் சுந்தர் 22 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற கிங்ஸ் லெவன் 155 ஆல் அவுட்.

http://tamil.thehindu.com/sports/article23529882.ece

Link to comment
Share on other sites

பந்துவீச்சில் கதிகலக்கும் ‘சன்ரைசர்ஸ்க்கு’ பதிலடி கொடுக்குமா ‘தினேஷ் கார்த்திக் படை’

 

 
DineshKarthikKKRrcb

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக்   -  படம்உதவி: ஐபிஎல் ட்விட்டர்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடக்கும் ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் பந்துவீச்சில் வலிமையாக இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

சன்சைரர்ஸ் அணி தான் இதுவரைஆடிய 2 லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்று முன்னணியில்இருக்கிறது. ஹைதராபாத்தில் நேற்ற நடந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை விரட்டி தனது முத்திரையை பதித்தது. அதற்கு முக்கிய காரணம் வலுவான பந்துவீச்சு மூலம் மும்பை இந்தியன்ஸ்அணியை 147 ரன்களுக்கு சுருட்டியதாகும். ஆதலால், சன்ரைசர்ஸ் அணிக்கு அதனுடைய பந்துவீச்சு போட்டியில் முக்கியத் துருப்புச்சீட்டாக அமையும்.

அதேசமயம், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தனது முதல் போட்டியில் பெங்களூரு அணியை அடித்து நொறுக்கி இருக்கிறது. ஆனால் சென்னையில் நடந்த 2-வது போட்டியில், ரஸல் அதிரடியாக அடித்து ஆடி 202 ரன்கள் ஸ்கோர் செய்தது. ஆனால், தோனி படையின் வலுவான பேட்டிங் வரிசையின் முன் கொல்கத்தா நைட்ரைடர்ஸின் போராட்டம் எடுபடவில்லை.

டி20 போட்டியில் 202ரன்கள் வலுவான ஸ்கோர் என்கிற போதிலும், எதிரணி வீரர்களின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தும் வகையில் கொல்கத்தாவிடம் திறன்மிக்க பந்துவீச்சு கடந்த ஆட்டத்தில் இல்லை என்றே கூறலாம்.

ஆனால், இந்த முறை மிட்சல் ஜான்சன், கமலேஷ் நாகர்கோட்டி,சிவம் மால்வி ஆகியோர் வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. அதிலும், மிட்சல் ஜான்சன், நாகர்கோட்டி வருகை கொல்கத்தாஅணியின் பந்துவீச்சை உயிரோட்டமாக்கும், பந்துவீச்சும் பலப்படும்.

மேலும் 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் கலக்கிய சுப்மான் கில் கடந்த 2போட்டிகளாக வாய்ப்புகளின்றி இருக்கிறார், அவருக்கும் இந்தபோட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஹீத் ஸ்டீரீக் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால், சிஎஸ்கே அணிக்கு எதிரான கடைசி போட்டியில், கடைசி ஓவரை வீசிய வினய்குமார் சிக்கனமாகவும், துல்லியமாகவும் வீசிஇருந்தால் போட்டியின் முடிவு தலைகீழாக மாறி இருக்கும். ஆனால், ரன்களை பிராவோவுக்கு வாரிக்கொடுத்தது தோல்விக்கு முக்கியக்காரணமாக அமைந்தது. ஆதலால், வினய் குமாருக்கு இந்த போட்டியில் ‘கல்தா’ கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

பேட்டிங்கைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் ‘வெடிகுண்டு’போல் இருக்கிறார். எந்த பந்தை சிக்சருக்கும், பவுண்டிருக்கும் செல்லப்போகிறது என்று பந்துவீச்சாளரை பதற்றப்பட வைக்கிறார். அவர் களத்தில் நிற்கும் வரை ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்கிறது. கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக், உத்தப்பா, குல்தீப் யாதவ் ஆகியோரின் வலுவான பேட்டிங் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கிறது. ஆதலால், இந்த போட்டியில் கொல்கத்தா அணி தங்களின் பந்துவீச்சை பலப்படுத்துவது அவசியமாகிறது.

அதேசமயம், சன்ரைசர்ஸ் அணியின் மிகப்பெரிய பலமே பந்துவீச்சாகும். இதுவரை தான் மோதிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்தில் இருக்கிறது. ஒருவேளை சிறந்த ரன்ரேட்டில் இருவெற்றிகளையும் பெற்றிருந்தால், சென்னை அணியை பின்னுக்குதள்ளி இருக்கும்.

Rashid-khan-ipl-srhjpg

ரஷித்கான்

 

சன்ரைசர்ஸ் அணியில் குறிப்பிடத்தகுந்த வீரராக ஆப்கானிஸ்தான் லெக்ஸ்பின்னர் ரஷித்கானை சொல்லலாம். இவரின் மாயஜால சுழற்பந்துவீச்சுக்கு எதிரணி வீரர்கள் எல்லாம் நடுங்குகிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 18 டாட் பந்துகளை வீசி, 13 ரன்கள், ஒருவிக்கெட்டை ரஷித்கான் கைப்பற்றியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா, ஸ்டான்லேக், புவனேஷ் குமார், சஹிப் அல் ஹசன், டி நடராஜன், சித்தார்த் கவுல் என பந்துவீச்சுக்கு பட்டாளமே இருக்கிறது. அதேபோல பேட்டிங்கில் கேன் வில்லியம்சன், ஷிகர் தவான், மணீஷ் பாண்டே, சகிப் அல் ஹசன், யூசுப் பதான், விர்திமான் சாஹா, தீபக் ஹூடா என பேட்டிங்கிலும் சவால் விடுக்கும் வீரர்கள் இருக்கிறார்கள்.

அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியின் விழிம்பில் இருந்த அணியை ஸ்டான்லேக், தீபக் ஹூடா இருவரும் வெற்றிக்கு அழைத்துவந்தனர். இதுபோன்ற தன்னம்பிக்கை கொண்ட வீரர்கள் இருப்பது, தினேஷ் கார்த்திக் படைக்கு பெரிய குடைச்சலைக் கொடுக்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புனேஷ்குமார் விளையாடவில்லை, ஆனால், இந்தபோட்டியில் களமிறங்கும் பட்சத்தில் கொல்கத்தாவுக்கு மேலும் சவாலாக இருக்கும்.

ஒட்டுமொத்தத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான படைக்கு சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சும், பேட்டிங்கும் சவாலாகவே இருக்கும். இந்த போட்டியும் ரசிகர்களை இருக்கையின் நுனியில்அமர வைக்கப்போவது உறுதியாகும்.

இந்தபோட்டி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

http://tamil.thehindu.com/sports/article23529217.ece

Link to comment
Share on other sites

மூன்று கோல்டன் டக், நான்கு கோல்டன் சிக்ஸ்! - முதல் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு! #RCBvKXIP

 

ஐ.பி.எல்லின் கலர்ஃபுல் அணியான பெங்களூரு தன் ஹோம்கிரவுண்டில் முதல் போட்டியில் ஆடுகிறது. ஐ.பி.எல்லைப் பொறுத்தவரை சென்னை, மும்பை, பெங்களூரு அணிகளுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். எனவே இந்த மூன்று அணிகளும் ஹோம் கிரவுண்டில் ஆடும்போது எப்பாடுபட்டாவது வெற்றி பெறவே விரும்பும். முதல் போட்டியில் தோற்றிருந்ததால் நேற்று பிரஷரும் கேப்டன் கோலியின் மீது! டாஸை வென்று பீல்டிங் தேர்ந்தெடுத்தார் கோலி. இதுவரை ஆடிய எல்லாப் போட்டிகளிலும் டாஸ் வென்ற கேப்டன்கள் பீல்டிங்கையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

கே.எல் ராகுலும் மயாங்க் அகர்வாலும் களமிறங்கினார்கள். வோக்ஸின் முதல் ஓவரிலேயே இரண்டு சிக்ஸ்கள் பறக்கவிட்டார் ராகுல். அடுத்த ஓவர் உமேஷ் யாதவுடையது. அதில் தன் பங்குக்கு இரு பவுண்டரிகளை தட்டிவிட்டார் மயாங்க். இந்த ஆட்டம் அஸ்வின், கோலியைவிட இரண்டு பேருக்கு மிக முக்கியமானது. ஒருவர் பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல். இன்னொருவர் பெங்களூருவின் உமேஷ் யாதவ். இருவரையும் டெஸ்ட் பிளேயர்கள் என முத்திரை குத்தி மாதங்கள் பல ஆகின்றன. 'நாங்க டி20லயும் பொளந்து கட்டுவோம்' என இருவரும் நிரூபிக்க ஐ.பி.எல்லைவிட சிறந்த ப்ளாட்பார்ம் கிடைக்காது. செய்தார்களா?

பெங்களூரு

முதலில் தெறிக்கவிட்டது உமேஷ்தான். ஆட்டத்தின் நான்காவது ஓவரில் அவர் போட்ட பந்தை இழுத்து அடிக்க முற்பட்டு கீப்பர் டிகாக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மயாங்க். அதன்பின் களமிறங்கியது ஆரோன் பின்ச். இந்த ஐ.பி.எல்லில் அவர் சந்திக்கும் முதல் பால் இதுதான். விர்ரென காலுக்கு வந்த பந்தை தடுக்க முற்பட்டு எல்.பி.டபிள்யூ ஆனார். ஆட்டத்தின் முதல் கோல்டன் டக் இது. அடுத்த பந்து ஹாட்ரிக் டெலிவரி! எதிர்கொள்வது ஃபார்ம் அவுட் ஆகி திணறும் யுவராஜ். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வந்த பந்தை கவனமாக தடுத்தார் யுவராஜ். அதற்கடுத்த பந்தும் 'டொக்'! ஐந்தாவது பந்தை புல் ஷாட் ஆடி பவுண்டரிக்கு விரட்டினார். ஓவரின் கடைசி பால்! விருட்டென கால் நோக்கி வரும் பந்தை எதிர்பார்க்காத யுவராஜ் திணற பேடில் பட்டு ஸ்டம்ப்பை பிடுங்கிச் சென்றது பால்! Umesh You Beauty! ஒரே ஓவரில் மூன்று முக்கிய விக்கெட்கள். ஆட்டம் பெங்களூரு வசமானது.

பெங்களூரு

தள்ளாடிய பஞ்சாப்பை தன் நேர்த்தியான ஆட்டம் வழியே நங்கூரம் போட்டு நிறுத்தினார் கே.எல் ராகுல். அவருக்குத் துணையாக கருண் நாயரும் தோள் கொடுக்க, இந்த ஜோடி மட்டும் 58 ரன்கள் சேர்த்தது. போன மேட்ச்சில் சொதப்பிய வாஷிங்டன் சுந்தர் இந்த ஆட்டத்தில் மிரட்டியெடுத்தார். தன் முதல் ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே கொடுத்த சுந்தர் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ராகுலை பெவிலியனுக்கு அனுப்பினார். அதன்பின் கருண் நாயர், ஸ்டோய்னிஸ், அக்‌சர் படேல் எல்லாரும் வரிசையாக வெளியேற ஸ்கோரை உயர்த்த வேண்டிய பொறுப்பு கேப்டன் அஸ்வினுக்கு. விறுவிறுவென தன் பங்குக்கு 33 ரன்கள் சேர்த்தார். கடைசியில் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்கள் எடுத்தது பஞ்சாப்.

டாஸ் வென்றது முதல் வெற்றியென்றால் கடந்த ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய அதே ஐந்து பவுலர்களை வைத்து பஞ்சாப்பை சுருட்டியது இரண்டாவது வெற்றி. இப்போது பொறுப்பு பேட்ஸ்மேன்க.... சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ஓபனிங் பேட்ஸ்மேன் மெக்கல்லம் அவுட்! அதுவும் சந்தித்த முதல் பந்தில்! கோல்டன் டக்! பொதுவாகவே ஸ்பின்னர்களிடம் திணறும் மெக்கல்லம் அக்சரின் பந்தை தூக்கி முஜிப் ரகுமானிடம் கொடுத்துவிட்டு வெளியேறினார். 'யார் போனா என்ன நான் இருப்பேனடி' என அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி என்ட்ரியானார் கோலி. 

பெங்களூரு

டார்கெட் கம்மியென்பதால் குயின் டிகாக்கும் கோலியும் தட்டி தட்டி ஆடினார்கள். அதற்கும் சூனியம் வைத்தார் முஜிப் ரகுமான். ஒரு சூப்பரான ஆஃப் ஸ்பின் ஸ்லோ டெலிவரியை வீச, அதை முன்னால் வந்து கவர் ட்ரைவ் ஆட முற்பட்டார் கோலி. அவருக்கு போக்கு காட்டிய பந்து சட்டென டர்ன் ஆகி ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. மேட்ச் பார்க்காதவர்கள் இந்த ஒரு டெலிவரிக்காகவாவது ஹைலைட்ஸ் பார்த்துவிடுங்கள். That was one of the kind! 

இரண்டு தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இப்போது க்ரீஸில்! ஓரளவிற்கு செட்டிலாகியிருந்த டிகாக் முஜிப்பை சமாளித்து ஆடினாலும் டிவில்லியர்ஸ் ரொம்பவே திணறினார். இதற்கெல்லாம் சேர்த்து வைத்து மோகித் சர்மாவின் அடுத்த ஓவரை வெளுத்தார்கள். 16 ரன்கள். அதில் டிவில்லியர்ஸ் ஸ்கொயர் லெக்கில் அடித்த சிக்ஸும் அடக்கம். நன்றாக செட்டிலாகியிருந்த டிகாக்கை தன் ட்ரேட்மார்க் பந்தில் அவுட்டாக்கினார் அஸ்வின். அடுத்த பந்து இளம் சென்சேஷன் சர்ஃபராஸ் கானுக்கு! 'எனக்கு பத்து மணி சீரியல் பார்க்கணுங்க' என்ற ரீதியில் முதல் பந்தையே ஸ்லிப்பில் கொடுத்துவிட்டு அவரும் வெளியேறினார். ஆட்டத்தின் மூன்றாவது கோல்டன் டக்! 

பெங்களூரு

இப்போது முழுப் பொறுப்பும் டிவில்லியர்ஸ் கையில். தானும் அவுட்டாகிவிட்டால் டெயில் எண்டர்கள் மேல் எக்கச்சக்க பிரஷர் விழும் என்பதை உணர்ந்து நிதானமாக ஆடினார். அஸ்வினின் அந்த ஓவருக்கு பின் வந்த நான்கு ஓவர்களில் ஒரே ஒரு பவுண்டரிதான். அப்படியொரு நிதானமான ஆட்டம். 17வது ஓவர். முஜிப் ரகுமான் சுழல். ஸ்ட்ராடிஜிக் டைம் அவுட்டில் பேசி வைத்திருப்பார்கள் போல. மாறி மாறி அடித்தார்கள் டிவில்லியர்ஸும் மந்தீப்பும். லாங் ஆஃப்பில் ஒன்று, மிட் விக்கெட்டில் ஒன்று என இரண்டு சிக்ஸ் அடுத்தடுத்து! உபயம் - டிவில்லியர்ஸ். 

 

அதற்கடுத்த ஓவரில் மோகித்தின் அநியாய ஸ்லோ பாலை ஒரு சாத்து சாத்தினார். அது ஈபிள் டவர் உயரத்திற்கு பறந்து ஹாஸ்பிட்டாலிடி பாக்ஸைத் தொட்டது. நான்கு கோல்டன் சிக்ஸ்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்டைலில்! வாவ்! ஐம்பதைக் கடந்தார் டிவில்லியர்ஸ். அதற்கடுத்த ஓவரிலேயே அவுட்டாகினாலும் போதுமான டேமேஜை ஏற்கனவே செய்திருந்ததால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு! நிறைய நாட்கள் கழித்து கோலியின் முகத்தில் சிரிப்பு. பெங்களூரு ரசிகர்களின் முகத்திலும்!

https://www.vikatan.com/news/sports/122180-match-report-of-rcb-vs-kxip-match-eight.html

Link to comment
Share on other sites

`ஜேசன் ராய் அதிரடி!' - மும்பை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி MIvsDD

 
 

ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 

ஜேசன் ராய்

Photo: Twitter/DelhiDaredevils

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. 8.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களைக் கடந்த மும்பை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், 200 ரன்களைக் கடக்க முடியாமல் இன்னிங்ஸை முடித்தது. அந்த அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், எவின் லீவிஸ் 48 ரன்களும், இஷான் கிஷான் 44 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் ராகுல் டீவாட்டியா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

 

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு கௌதம் காம்பீர் - ஜேசன் ராய் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. 5.1 ஓவர்களில் 50 ரன்களை டெல்லி அணி எடுத்திருந்த நிலையில், காம்பீர் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ரிஷாப் பாண்ட், ஜேசன் ராயுடன் இணைந்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 69 ரன்கள் சேர்த்த நிலையில், 47 ரன்களுடன் பாண்ட் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேசன் ராய் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த அவர், கடைசி ஓவரில் அணியை வெற்றிபெற வைத்தார். ஜேசன் ராய் 91 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் குர்ணால் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு, இது முதல் வெற்றியாகும். அதேநேரம், மும்பை அணி, தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. 

https://www.vikatan.com/news/sports/122206-ipl2018-dd-wins-mi-by-7-wickets.html

Link to comment
Share on other sites

புவனேஷ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு - 138 ரன்களுக்கு சுருண்ட கொல்கத்தா அணி! 

 
 

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான  போட்டியில், கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. 

38_22065.jpg

ஐ.பி.எல் லீக்கின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியை சன் ரைஸர்ஸ் அணி எதிர்கொண்டது. கொல்கத்தா ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய கொல்கத்தாவில் இந்தமுறை சுனில் நரேன் ஓப்பனிங் ஆடவில்லை. மாறாக ராபின் உத்தப்பா - கிறிஸ் லின் இணை களமிறங்கியது. உத்தப்பா 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி தர மறுமுனையில் இருந்த கிறிஸ் லின் ஆறுதல் அளித்தார். அவர் 49 ரன்கள் எடுத்து அவுட் ஆக, அதற்கடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். கேப்டன் தினேஷ் கார்த்திக் ஓரளவுக்குத் தாக்கு பிடித்தாலும் 29 ரன்களில் அவரும் அவுட் ஆனார். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது.  பந்துவீச்சில் புவனேஷ்வர்குமார் சிறப்பாகச் செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கிடையே, 139 ரன்கள் இலக்குடன் களமிறங்கவுள்ளது. 

https://www.vikatan.com/news/sports/122214-kkr-scores-138-for-8-in-ipl-match-against-srh.html

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். போட்டி - கேன் வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்

 
அ-அ+

ஐ.பி.எல். போட்டியில் கேன் வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. #KKRvSRH #IPL2018 #SunRisers #Kolkatta

 
 
 
 
ஐ.பி.எல். போட்டி - கேன் வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்
 
கொல்கத்தா:

ஐ.பி.எல். போட்டியின் 11-வது சீசனில் இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பாவும், கிறிஸ் லின்னும் களமிறங்கினர். ஆட்டத்தின் ஏழாவது ஓவரில் மழை குறுக்கிட்டது. ஐதராபாத் அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கிய கொல்கத்தா அணி தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் கொல்கத்தா அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 138 ரன்கள் எடுத்தது.

201804150035171556_1_jr6q71ge._L_styvpf.jpg

அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 34 பந்துகளில் ஒரு சிக்சர், 7 பவுண்டரியுடன்  49 ரன்களும், தினேஷ் கார்த்திக் 29 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

ஐதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3  விக்கெட்டும், பில்லி ஸ்டான்லேக், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

201804150035171556_2_lb7zbl6l4._L_styvpf.jpg

இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷிகர் தவான் இறங்கினர். தவான் 7 ரன்னிலும், சகா 24 ரன்னிலும், மணீஷ் பாண்டே 4 ரன்னிலும் அவுட்டாகினர்.
 
அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சனும், ஷகிப் அல் ஹசனும் பொறுப்புடன் ஆடினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 4-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தனர். ஷகிப் அல் ஹசன் 27 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் அரை சதமடித்து அவுட்டானார். ஹூடாவும், யூசுப் பதானும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்

201804150035171556_3_aolus91c._L_styvpf.jpg

இறுதியில் ஐதராபாத் அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹூடா 5 ரன்னுடனும், யூசுப் பதான் 17 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன் 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா, ஜான்சன் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.#Tamilnews #KKRvSRH #IPL2018 #SunRisers #Kolkatta

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/15003517/1157033/sun-risers-hyderabad-beat-kolkatta-knight-riders-in.vpf

Link to comment
Share on other sites

பரபர..விறுவிறு.. கடைசி ஓவர்: ‘ஜேஸன் ராயின் காட்டடி’யில் டெல்லிக்கு முதல் வெற்றி: சொந்த மண்ணில் மும்பைக்கு சோகம்

 

 
jason%20roy

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் டெல்லி வீரர் ஜேஸன் ராய்   -  படம் உதவி: ஐபில் ட்விட்டர்

மும்பை வான்ஹடே மைதானத்தில் இன்று நடந்த பரபரப்பான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேஸன் ராயின் காட்டடி பேட்டிங் அணியின் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜேஸன் ராய், இறுதிவரை வெற்றிக்குப் போராடினார். ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

195ரன்கள் என்ற கடினமான இலக்கை மும்பை அணி நிர்ணயத்திருந்தும், நெருக்கடி தரும் பந்துவீச்சு, விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு ஏற்ப வீரர்களை மாற்றி அமைக்காத கேப்டன்ஷிப் ஆகியவை தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. நடப்பு சாம்பியன் மும்பை அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் சூர்யகுமார் யாதவ், லீவிஸ் ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.

கடந்த இருபோட்டிகளிலும் செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்காமல், சூரிய குமாரை களமிறக்கியது நல்ல பலன் கொடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 102 ரன்கள் சேர்த்தனர்.

அதிலும் அரங்கில் அமர்ந்திருந்த 18 ஆயிரம் பள்ளிக் குழந்தைகளுக்கும், ரசிகர்களுக்கும் விருந்து அளிக்கும் வகையில் தொடக்க ஆட்டக்கார்களின் பேட்டிங் அமைந்திருந்தது.

ஆட்டம் தொடங்கியதில் இருந்து சூரியகுமார் யாதவும், லீவிசும் டெல்லி அணி பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்கள். முதல் ஓவரிலேயே யாதவ், லீவிஸ் தலா ஒரு பவுண்டரி அடித்ததால் 15 ரன்கள் சேர்க்கப்பட்டது.

டிரன்ட் போல்ட் வீசிய 4-வது ஓவரில் யாதவ் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளும், லீவிஸ் ஒரு சிக்ஸரும் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். அடுத்து பந்துவீச வந்த நதீம், முகமதுஷமி, கிறிஸ்டியன் ஆகியோரின் ஓவர்களில் சராசரியாக 13 ரன்கள் வீதம் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தன.

4-வது ஓவரிலேயே மும்பை அணி 50 ரன்களை எட்டியது. பவர் ப்ளேயில் 84 ரன்கள் சேர்த்து டெல்லி அணிக்கு ‘கிலி’ ஏற்படுத்தியது. லீவிஸ், யாதவையும் பிரிக்க கம்பீர் 5 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் முடியவில்லை. 29 பந்துகளில் யாதவ் அரைசதம் அடித்தார்.

lewisyadavjpg

100 ரன்கள் பாட்னர்ஷிப் சேர்த்த லீவிஸ், சூர்யகுமார் யாதவ்

 

அதிரடியாக பேட் செய்து வந்த லீவிஸ் 48 ரன்களில்(28 பந்துகள் )டிவேசியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.

அடுத்த சில ஓவர்களில் சூரியகுமார் யாதவை வெளியேற்றினார் டிவேசியா. சூரிய குமார் 32 பந்துகளில் 53 ரன்கள் (ஒரு சிக்ஸர், 7ப வுண்டரிகள்) சேர்த்திருந்தார்.

3-வது விக்கெட்டுக்கு வந்த இசான் கிஷானுடன், கேப்டன் ரோகித் சர்மா இணைந்தார். கிஷான் அதிரடி ஆட்டத்தில் இறங்க, ரோகித் சர்மா நிதானத்தைக் கடைபிடித்தார். கிஷான் தான் சந்தித்த ஒவ்வொரு ஓவர்களிலும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு வானவேடிக்கை நிகழ்த்தினார்.

குறிப்பாக டிவேசியா வீசிய 13 ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்கள், ஷமி வீசிய 15 ஓவரில் 2 பவுண்டரிகள் உள்ளிட்ட 10 ரன்கள் என ரன்ரேட்டை உயர்த்தினார். இதனால்,அணியின் ஸ்கோர் 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிரடியாக பேட் செய்த கிஷான் 23 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்த நிலையில் கிறிஸ்டியன் பந்துவீச்சில் ‘கிளீன் போல்டா’னார். கிஷான் கணக்கில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும் அடுத்த பந்தில் பொலார்ட் டக்அவுட்டில் வெளியேறினார்.

இதன் பின் மும்பை இந்தியன்ஸ் சரிவு தொடங்கியது. அடுத்தடுத்து வந்த வீரர்கள் பொறுப்பற்ற முறையில் பேட் செய்ததால், 200 ரன்களுக்கு மேல் செல்ல வேண்டிய ஸ்கோர் படுத்துக்கொண்டது.

பொறுப்புடன் விளையாட வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா 18 ரன்களில் அடுத்த சில ஓவர்களில் ஆட்டமிழந்தார். தான் இன்னும் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இருப்பதை இப்போதும் நிரூபித்தார்.

பின்வரிசை வீரர்களான குர்னல் பாண்டியா(11), ஹர்திக் பாண்டியா (2) ஏமாற்றம் அளித்தனர். தனஞ்செயா 4 ரன்களுடனும், மார்கண்டே 4 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது.

டெல்லி அணித்தரப்பில் டிவேசியா, போல்ட், கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

198 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி களமிறங்கியது. ஜேசன் ராய், கம்பீர் ஆட்டத்தை தொடங்கினார்கள். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 50 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர்.

கடினமான இலக்கு என்பதை உணர்ந்த ஜேசன், கம்பீர் ஜோடி தொடக்கத்திலே அதிரடியாகத் தொடங்கி சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் விரட்டினார்கள். முதல் ஓவரிலேயே 10 ரன்களும், தனஞ்செயா வீசிய 2-வது ஓவரில் ராய் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என 10 ரன்கள் சேர்த்தார்.

அதேபோல ஹர்திக் வீசிய 5 ஓவரில் ஜேஸன் ராய் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியும், கம்பீர் ஒரு பவுண்டரியும் அடித்து ரன் ரேட்டை ராக்கெட் வேகத்துக்கு உயர்த்தினர்.

நிதானமாக பேட் செய்து வந்த கம்பீரை 15 ரன்களில் வெளியேற்றினார் முஸ்தாபிசுர் ரஹ்மான்.

2-வது விக்கெட்டுக்கு வந்த ரிஸ்பா பந்த், ஜேஸன் ராயுடன் இணைந்தார். அவ்வப்போது ஜேஸன் ராயும், ரிஸ்பாவும் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். எதிரணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளிய ஜேஸன் ராய் 27 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

மார்கண்டே வீசிய 9-வது ஓவரில் ஜேஸன் ராய் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் உள்ளிட்ட 14 ரன்கள் சேர்த்தனர். தனஞ்செயா வீசிய அடுத்த ஓவரில் ரிஸ்பா பந்த் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். இதனால், அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்து வந்தது.

அரை சதத்தை நோக்கி முன்னேறிய ரிஸ்பா பந்த் 47 ரன்களில் (23 பந்துகள்) ஹர்திக் வீசிய 12-வது ஓவரில் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். இவர் கணக்கில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 13 ரன்களில் ஹர்திக்கிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும் மறுமுனையில் ஜேஸன் தூண்போல் நின்று பேட் செய்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யரும், ஜேஸன் ராயுடன் இணைந்தார்.

ஸ்ரேயாஸ் அய்யர் நிதானம் காட்ட, ராய் மற்றொரு பக்கம் மும்பையின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தார். ஹர்திக் பாண்டியா, பும்ரா ஓவர்களில் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் ஜேஸன் ராய் பறக்கவிட்டார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச ஜேஸன் ராய் எதிர்கொண்டார். முதல் இரு பந்துகளில் ஒருசிக்ஸரும், ஒருபவுண்டரியும் அடித்து ஆட்டத்தின் பரபரப்பைக் குறைத்தார்.

ஆனால், அடுத்த 3 பந்துகளிலும் ரன் சேர்க்காததால், ஆட்டம் டை ஆகி சூப்பர் ஓவருக்கு சென்றுவிடுமோ என்ற பரபரப்பு நிலவியது. ஆனால், கடைசிப்  பந்தில் ஜேஸன் ஒரு ரன் எடுக்க டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை ருசித்தது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜேஸன் ராய் 91 ரன்களுடனும் (53 பந்துகள், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) ஸ்ரேயாஸ் அய்யர் 27 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

http://tamil.thehindu.com/sports/article23542421.ece

Link to comment
Share on other sites

ஈடன் கார்டனிலேயே கொல்கத்தா சிதைக்கப்பட்ட கதை..! ஹைதராபாத்தின் கெத்து #KKRvSRH

 
 

20/20 கிரிக்கெட்டின் ஆன்மா விரட்டி விரட்டி வெளுக்கும் சிக்ஸர்களிலோ, பவுண்டரிகளிலோ இல்லை. அது பெளலிங்கில் இருக்கிறது. 90-களில் பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பெளலர்களைக் குறிப்பிடுவோமே நினைவிருக்கிறதா? வால்ஸ், ஆம்ப்ரோஸ், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், ஷாயிப் அக்தர், மெக்ராத், வார்னே என டெண்டுல்கர், லாரா, மார்க் வாக் என பேட்ஸ்மேன்களுக்கு இணையாக பெளலர்களையும் பார்த்த காலம் அது.  #KKRvSRH

KKRvSRH

2000-த்துக்குப் பிறகு கிரிக்கெட் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களின் காலமாகிவிட்டது. அதுவும் 20/20, ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட பிறகு எவ்வளவு பெரிய பெளலராக இருந்தாலும் ஈவு இரக்கமின்றி அடித்து நொறுக்கப்பட்டனர். கடைசி ஓவரில் 30 ரன் தேவையாக இருந்தாலுமே சிக்ஸர்கள் பறக்க, பெளண்டரிகள் தெறிக்க ஐபிஎல் ஆட்டம் வேற லெவலில் போய்க்கொண்டிருக்கிறது. இங்குதான் ஹைதராபாத் கவனம் ஈர்க்கிறது. ஹைதராபாத் பெளலர்கள் 20/20 கிரிக்கெட்டை பெளலர்களின் ஆட்டமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

பெளலிங்கில் நீங்கள் ஸ்ட்ராங்காக இருந்தால் எப்படிப்பட்ட வெற்றிகள் கிடைக்கும் என்பதற்கு ஹைதராபாத்தே சாட்சி. ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியாக கொல்கத்தாவையும் வீழ்த்தி பாயின்ட்ஸ் பட்டியலில் கெத்தாக முதலிடத்தில் இருக்கிறது சன் ரைஸர்ஸ் ஹைதரபாத். 

தொடர்ந்து மூன்றாவது ஆட்டமாக சேஸ்தான் செய்தது ஹைதராபாத். இதுவரை ஹைதராபாத்துக்கு எதிரான எந்தப் போட்டியிலும் எதிர் அணி வீரர்கள் 150 ரன்களைத் தாண்டியதில்லை. நேற்றையை போட்டியிலும் பெளலிங்கையே தனது ஆயுதமாகக் கொண்டு கொல்கத்தாவை சந்தித்தது அந்த அணி. ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்தே கொல்கத்தாவை ஹைதராபாத் சிதைத்து எப்படி?

அதே டாஸ்... அதே ஃபீல்டிங்!

2018 ஐபிஎல் வழக்கப்படி டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கையே தேர்ந்தெடுத்தார். சென்னை போட்டியில் கடைசி ஓவரில் ரன்களை வாரி வழங்கிய வினய்குமாருக்கு பதிலாக மிட்செல் ஜான்சனையும், ரிங்கு, குரானுக்கு பதிலாக ஷுப்மான் கில்லையும், இளம் வீரர் ஷிவம் மவியையும் அணிக்குள் கொண்டுவந்தது கொல்கத்தா. ஷிவம் மவிக்கு இது முதல் போட்டி. காயம் காரணமாக மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாடாத புவனேஷ்குமார் ஹைதராபாத் அணியில் மீண்டும் இடம்பிடித்திருந்தார்.

KKRvSRH

ஓப்பனிங் நரேன் இல்லை!

சென்னை, பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் ஓப்பனிங் இறங்கிய சுனில் நரேனுக்குப் பதிலாக கிறிஸ் லின்னுடன் ஓப்பனிங் இறங்கினார் ராபின் உத்தப்பா. ஆனால், இந்த வித்தியாச காம்போ நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. முதல் ஓவர் வீசிய புவனேஷ்குமாரின் முதல் நான்கு பந்துகளையும் சமாளிக்க முடியாமல் திணறினார் உத்தப்பா. ஐந்தாவது பந்தில் எப்படியோ ஒரு சிங்கிள் எடுக்க முதல் ஓவரின் முடிவில் 1 ரன் மட்டுமே எடுத்தது கொல்கத்தா.

ஸ்டான்லேக்கின் இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசி கொல்கத்தாவுக்கு நம்பிக்கையைக் கொடுத்தார் கிறிஸ் லின். ஆனால், அடுத்த புவனேஷ்குமார் ஓவரிலேயே வீழ்ந்தார் உத்தப்பா. எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பருக்கு பந்து பறக்க, அவுட் இல்லை என அறித்தார் நடுவர். ஆனால் உடனடியாக கேன் வில்லியம்சன் ரிவியூ கேட்க, உத்தப்பா அவுட் என அறிவிக்கப்பட்டது.

அடுத்த ஸ்டான்லேக்கின் ஓவரில் நான்கு பந்துகளை டாட் பாலாக்கினார் ரானா. 4 ஓவரின் முடிவில் 23 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது கொல்கத்தா. சித்தார்த் கவுல் பந்து வீச வந்தார். ஓரே ஓவரில் மூன்று பவுண்டரிகள். கிறிஸ் லின் தெறிக்கவிட்டார். 'அடுத்த ஓவர் எனக்குத்தான்' என டர்ன் எடுத்து ஆடுவதுபோல ரஷித் கானின் ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார் ரானா. 

மழை... மழை..!

கவுல் அடிக்கப்பட்டதால் ஷகிப் அல் ஹசனிடம் பந்தைக் கொடுத்தார் கேன் வில்லியம்சன். முந்தைய ஓவர்களில் பவுண்டரியும் சிக்ஸருமாக வெளுத்த லின், ரானா இருவருமே சிங்கிள்ஸுக்கே திணறினார். இந்த ஓவரில் கொல்கத்தா மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க, மழை குறுக்கிட்டது. 8.30 மணிக்கு மழையால் ஆட்டம் நிறுத்தப்பட, மழை நின்று ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டபோது மணி 9.30. ஒரு மணி நேரம் ஆட்டத்தின் இடையே பிரேக் விழுந்திருந்தாலும் ஓவர்கள் எதுவுமே குறைக்கப்படாமல் ஆட்டம் தொடர்ந்தது.

KKRvSRH

லின்னைத் தவிர ஆள் இல்லை!

8-வது ஓவரில் ஸ்டான்லேக்கின் பந்தில் அவுட் ஆனார் ரானா. அவர் 1 சிக்ஸர் 2 பவுண்டரி உள்பட 18 ரன்கள் எடுத்திருந்தார். 10-வது ஓவர் வீசிய கவுலின் பந்துகளை மீண்டும் சிதறடித்தார் லின். 1 சிக்ஸர் 1 பவுண்டரி என 10 ஓவர்களின் முடிவில் 2விக்கெட்டுகள் இழந்து 70 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா. ஷகிப் அல் ஹசனின் ஓவரில் 49 ரன்களில் கிறிஸ் லின் ஆட்டம் இழக்க, அதன் பிறகு ரன் அடிக்க யாரும் இல்லாமல் திணறியது கொல்கத்தா. 

 பொறுப்பான தினேஷ் கார்த்திக்!

கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டுமே பொறுப்பை உணர்ந்து பந்துகளை கவனித்து நிதானமாக ஆடினார். ஆனால், மற்றவர்கள் எல்லோரும் பேட்டை சுழற்ற, விக்கெட்டுகள் விழுந்துகொண்டேயிருந்தது. 27 பந்துகளில் 1 சிக்ஸர் 2 பவுண்டரி உள்பட 29 ரன்கள் எடுத்தார் தினேஷ் கார்த்திக். 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது கொல்கத்தா!

நோ பார்ட் டைமர்ஸ்!

இந்தப் போட்டியிலும் பார்ட் டைமர்கள் யாரிடமும் பந்தைக் கொடுக்காமல் 2 ஸ்பின்னர், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என 5 பேருக்கு 4 ஓவர் என அதே பழைய பெளலிங் பிளான்தான். ஸ்டான்லேக்கும், ஷகிப்பும் ஆளுக்கு 2 விக்கெட்டுகள் எடுத்து தலா 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தனர். இவர்கள் இருவரின் பந்துவீச்சையும்தான் சமாளிக்க முடியாமல் திணறியது கொல்கத்தா. 

பொறுமையாக ஆடு!

முதல் இரண்டு போட்டிகளைப்போலவே பெளலர்கள் டார்கெட்டை குறைத்து கொடுத்திருந்ததால் பொறுமையான ஆட்டத்தையே  ஹைதரபாத் ஆடியிருக்கலாம். ஆனால், சாஹா அவசரப்பட்டார். ஜான்சன் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை பவுண்டரிகளால் சிதறடித்தார் சாஹா. மூன்று பவுண்டரிகள்.

இதே டெம்ப்போவோடு சுனில் நரேனை சஹா சந்திக்க கதை முடிந்தது. முதல் பந்திலேயே விக்கெட். பந்து பேட்டில் பட்டு எட்ஜாக மிகச்சிறப்பாக அதைப்பிடித்தார் தினேஷ் கார்த்திக். 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து சாஹா அவுட் ஆக, மீண்டும் அடுத்த சுனில் நரேன் ஓவரில் ஷிகர் தவான் அவுட். 5 ஓவர்கள் களத்தில் நின்ற தவான் வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.

வில்லியம்சன், மணிஷ் பாண்டே என பார்ட்னர்ஷிப் மாறியது. ஆனால், மணிஷ் பாண்டே ரன் எடுக்கத் திணறினார். வில்லியம்சனுக்கு சிங்கிள்ஸ் மாற்றிவிடக்கூட அவரால்  முடியவில்லை. 11 பந்துகளை சந்தித்து வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து குல்திப் யாதவின் பந்தில் அவுட் ஆனார் பாண்டே. 

KKRvSRH

பாயின்ட்ல சிக்ஸ்!

ஹைதரபாத்துக்கு பிரஷர் அதிகரிக்க ஆரம்பித்தது. கடைசி 5 ஓவர்களில் 1 பவுண்டரி கூட இல்லை என்கிற நிலையில் 11-வது ஓவரை குல்திப் யாதவ் கேன் வில்லியம்சனுக்கு வீசினார். அடுத்தடுத்த பந்துகளில் 2 பவுண்டரிகளை லெக் சைடில் சரியான ஃபீல்டிங் இடைவெளிக்குள் அடித்து பிரஷரைக் குறைத்தார் கேன். அடுத்த ஆண்ட்ரு ரஸிலின் ஓவரை ''இதுபோதும் எனக்கு... இது போதுமே...'' என அனுபவித்து ஆடினார் ஷகிப். கடைசி 3 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர். அந்த சிக்ஸர்தான் அற்புதம். பந்து பாயின்ட் திசையில் பார்வையாளர்கள் மத்தியில் போய் விழுந்தது. பாயின்ட்ல சிக்ஸர் பார்க்குற அனுபவம்லாம் ஐபிஎல்-லதான் அதிகம் கிடைக்கும்.  

வில்லியம்சன், ஷிகிப் பார்ட்னர்ஷிப் யாரும் பிரிக்கமுடியாதபடிபோக முதல் முறையாக பெளலிங் அட்டாக்கை மாற்றினார்  தினேஷ் கார்த்திக். ஐபிஎல்-ல் முதல் போட்டியில் ஆடும் ஷிவம் மவிக்கு 14-வது ஓவரைக் கொடுத்தார். வில்லியம்சன், ஷகிப் என சர்வதேச அளவில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும் பிரஷர் மவியின் பெளலிங்கில் பெரிதாகத் தெரியவில்லை என்பதே சிறப்பு. முதல் இரண்டு பந்துகளை மிகச்சிறப்பாக வீசினார் மவி. ஆனால், ஆடுவதற்கு கடினமான பந்தையும் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு விரட்டினார் வில்லியம்சன். 1 சிக்ஸர்தான். மற்றபடி மவி ஓவரில் ஹைதராபாத்தால் சிங்கிள்ஸ்தான் எடுக்க முடிந்தது. 

KKRvSRH

கேப்டன் கேனின் 50!

பியுஷ் சாவ்லாவின் அடுத்த ஓவரில் 27 ரன்களில் ஆட்டம் இழந்தார் ஷிகிப். அடித்து ஆடலாமா அல்லது தடுத்து ஆடலாமா என  ஷகிப் சில விநாடிகள் குழம்ப, லெக் ஸ்டம்ப்பைத் தட்டியது சாவ்லாவின் பந்து. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழ, கேப்டனின் இன்னிங்ஸ் எப்படி இருக்கவேண்டும் என்பதைக்காட்டினார் வில்லியம்சன். 17வது ஓவரில் அரை சதம் அடித்தார் வில்லியம்சன். 

கடைசி 3 ஓவர்களில் 21 ரன்கள் என 20/20கிரிக்கெட்டில் செம ஈஸி டார்கெட். ஆனால், ஜான்சனின் ஓவரில் வில்லியம்சன் ஆட்டம் இழக்க, ஹைதராபாத்துக்கு டென்ஷன் கூடியது. யூசுஃப் பதானை நம்பி ஹைதராபாத் காத்து நிற்க, சரியான நேரத்தில் பவுண்டரிகளை விளாசினார் பதான்.

12 பந்துகளில் 13 ரன்கள் எடுக்கவேண்டும் என்கிற நிலையில் ரஸல் பந்து வீசினார். 1 பவுண்டரி, 1 சிக்ஸர் என கடைசி ஓவருக்கு ஆட்டத்தைக் கொண்டுபோகாமல் கொல்கத்தாவின் கதையை முடித்தார் பதான்.

ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என மூன்று அணிகளையுமே பெரிய டென்ஷன் எல்லாம் இல்லாமல் ஈஸியாகவே வென்றிருக்கிறது ஹைதராபாத். இதற்கு முழுக் காரணம் ஹைதராபாத்தின் தெளிவான பெளலிங் அட்டாக்.

கார்த்திக்கிங் பெளலிங் ரொட்டேஷன்!

சென்னையைத் தொடர்ந்து ஹைதராபாத்திடமும் வீழ்ந்திருக்கிறது கொல்கத்தா. மிட்செல் ஜான்சன், சுனில் நரேன், குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா என நல்ல பெளலர்கள் இருந்தும் அவர்களை சரியான முறையில் ரோட்டேஷன் செய்யாததுதான் தினேஷ் கார்த்திக்கின் தவறு. ஸ்பின்னர்கள் நன்றாகப் பந்துவீசிகிறார்கள் எனத் தொடர்ந்து ஸ்பின்னர்களுகே முன்னுரிமை கொடுத்தார். ஷகிப்- வில்லியம்சன் கூட்டணியைப் பிரிக்க அவர் ஜான்சனைக் கொண்டுவந்திருக்கலாம். மவிக்கும் 1 ஓவர் மட்டுமே கொடுத்து முடித்துவிட்டார். பெளலிங் பிளானை தினேஷ் கார்த்திக் மாற்ற வேண்டிய நேரம் இது.

 

அடுத்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை சந்திக்கிறது ஹைதராபாத். இதுவும் ஹைதாராபத்துக்கு வெற்றியைத் தரும் மேட்ச்சாகவே முடியும் என எதிர்பார்க்கலாம்!

https://www.vikatan.com/news/sports/122240-ipl-match-ten-sunrisers-hyderabad-beats-kolkata-knight-riders.html

Link to comment
Share on other sites

தோனி Vs அஷ்வின்... 'தல'யை தோற்கடிப்பாரா சிஷ்யன்! #CSKVsKXIP

 

10 ஆண்டுகளாக தோனியின் பின்னால் நின்ற, தோனியிடம் கேப்டன்ஸி பாடம் பயின்ற, தோனியின் அத்தனை யுக்திகளையும் மிக அருகில் நின்று கவனித்த அஷ்வின் இன்று எதிர் திசையில் கேப்டனாக நிற்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸின் ஒரு அங்கமாக இருந்த  ரவிச்சந்திரன் அஷ்வின் இந்தமுறை பஞ்சாபின் கேப்டன். பஞ்சாப் மண்ணில் இன்று தன்னுடைய 'தல' தோனியை நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறார். தோனியை தோற்கடிக்க அஷ்வின் என்னவெல்லாம் செய்வார்? #CSKVsKXIP 

CSKVsKXIP

வெற்றியும் தோல்வியும்!

ஆடிய இரண்டு மேட்ச்சுகளிலுமே திரில்லர் வெற்றி கொடுத்திருக்கும் நம்பிக்கையில் பஞ்சாபை சந்திக்கிறது சென்னை. டெல்லியிடம் வெற்றி, பெங்களூருவிடம் தோல்வி என வெற்றியும் தோல்வியும் சந்தித்த கேப்டனாக தோனியை எதிர்கொள்கிறார் அஷ்வின். 

பேட்டிங் பலவீனம்!

அஷ்வினின் கவலையே பேட்டிங்தான். கே.எல். ராகுல், மயாங்க் அகர்வால், ஆரோன் ஃபின்ச், கருண் நாயர், யுவராஜ் சிங், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் என மிரட்டலாகத்தான் இருக்கிறது பேட்டிங் ஆர்டர். ஆனால் இதில் அகர்வாலும், யுவராஜ் சிங்கும் அவுட் ஆஃப் பார்மில் இருக்கிறார்கள். இந்த மேட்ச்சில் யுவராஜ் சிங்கிற்கு பதில் டேவிட் மில்லரை அஷ்வின் களத்தில் இறக்கலாம். 

சென்னைக்கும் பேட்டிங் ஒன்றும் பெரிய பலம் கிடையாது. கடந்த இரண்டு போட்டிகளிலும் பிராவோ, வாட்சன், பில்லிங்ஸ் என மூன்று பேட்ஸ்மேன்கள்தான் பேட்டிங்கில் பவர் காட்டியிருக்கிறார்கள். இன்றைய மேட்ச்சில் ரெய்னா இல்லை என்பதால் அதற்கு பதில் யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அனுபவம் வாய்ந்த முரளி விஜய்யா? அல்லது ஐபிஎல் அனுபவம் இல்லாத டெல்லி பேட்ஸ்மேன் துருவ் ஷோரியா? இருவரில் யாரைத் தேர்தெடுக்கப்போகிறார் என்பது தோனியின் இன்றைய சர்ப்ரைஸாக இருக்கும்.

அதேபோல் காயத்தில் இருந்து மீண்டிருக்கும் டு ப்ளெஸ்ஸியை இன்றைய மேட்ச்சில் ஆடுவாரா என்பதும் சந்தேகமே. வாட்ஸன், பிராவோ, பில்லிங்ஸ், தாஹிர் என வெளிநாட்டு ப்ளேயர்களின் லைன் அப் சரியாக இருப்பதால் இன்றைய போட்டியில் டு ப்ளெஸ்ஸிக்கு இடம் இருக்காது என்றே எதிர்பார்க்கலாம். 

CSKVsKXIP

அஷ்வினா? ஹர்பஜனா?

இன்றைய போட்டியில் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் யார் என்கிற போட்டியும் இருக்கிறது. சென்னை அணியில் அஷ்வினின் இடத்தைப் பிடித்திருக்கும் ஹர்பஜன் சிங், அஷ்வினுக்கு தான் எப்படிப்பட்ட ஆஃப் ஸ்பின்னர் என்பதைக் காட்ட ஆர்வம் காட்டுவார். அதேபோல் தன்னுடைய கேரம் பால்களால் சென்னையின் பேட்ஸ்மேன்களை திணறடிக்க அஷ்வினும் போட்டிபோடுவார். ஆஃப் ஸ்பின் மட்டுமல்லாமல் இடையிடையே லெக் ஸ்பின்னிலும் அஷ்வின் சுழன்றடிக்கிறார் என்பதால் இன்றைய ஸ்பின் அட்டாக் இரண்டு பக்கமுமே பயங்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.  

ஷேன் வாட்சனுக்கு எதிராக சூப்பர் பெளலிங் ரெகார்ட் வைத்திருக்கிறார் பஞ்சாபின் அக்ஸார் பட்டேல். 5 முறை வாட்சனின் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார் பட்டேல். 

அஷ்வின், அக்ஸார் பட்டேல், முஜீப் ரஹ்மான் என ஸ்பின் அட்டாக்கில் பலமாக இருக்கிறது பஞ்சாப். தோனி, ஜடேஜா, விஜய் என மூவரின் பலவீனங்களுமே அஷ்வினுக்குத் தெரியும் என்பதால் இன்றைய ஆட்டமே ஸ்பின்னில்தான் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம். 

 வெற்றி யாருக்கு?

அஷ்வினின் கேம் பிளான் மட்டுமே இன்றைய மேட்ச்சை பஞ்சாப் பக்கம் சாத்தியமாக்க வாய்ப்பிருக்கிறது. சென்னையின் பேட்டிங் ஆர்டர் எதிர்பார்த்ததுபோல் இல்லாததால் ஸ்பின்னர்களை வைத்து சென்னையின் பேட்டிங்கை அஷ்வின் சிதைக்க முயற்சிக்கலாம். அது நடந்தால் பஞ்சாப் வெல்லும். 

 

ஆனால், பேட்டிங், பெளலிங்கைவிட தன் முனைப்பில், தன் நம்பிக்கையில் பவர்ஃபுல்லாக இருக்கும் சென்னை அணி பஞ்சாபை  பந்தாடவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன!

https://www.vikatan.com/news/sports/122250-csk-vs-kxip-match-preview.html

Link to comment
Share on other sites

இன்றைக்கு ஆர்சிபி வீரர்கள் பச்சைநிற ஜெர்சி அணிந்து விளையாடுவது ஏன்று என்று தெரியுமா?

 
அ-அ+

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் இன்று பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடுகிறது. #IPL2018 #RCB

 
 
 
 
இன்றைக்கு ஆர்சிபி வீரர்கள் பச்சைநிற ஜெர்சி அணிந்து விளையாடுவது ஏன்று என்று தெரியுமா?
 
ஐபிஎல் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. இன்றைய முதல் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடி வருகிறார்கள். வழக்கமாக சிகப்பு நிற ஜெர்சி அணிந்து விளயைாடும் ஆர்சிபி வீரர்கள் இன்று ஏன் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடுகிறார்கள் என்று சந்தேகம் ரசிகர்களுக்கு வரலாம்.

201804151716039970_1_Kohli-s._L_styvpf.jpg

2011-ல் இருந்து ஆர்சிபி அணி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இப்படி ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடுவது வழக்கமாக கொண்டுள்ளது.

2011-ல் இருந்து ‘Go Green’ முயற்சியை மேற்கொண்டு வருகிறது. புவி வெப்பமாயதலை தடுக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொள்கிறது. ஆர்சிபி அணி மரம் வளர்த்தல், ரசிகர்கள் போட்டியை காண காரில் வராமல் பஸ்களில் வந்து எரிபொருளை சேமிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

201804151716039970_2_Kohli1-s._L_styvpf.jpg

2016-ல் ஆர்சிபி வீரர்கள் சைக்கிளில் அழைத்து வரப்பட்டனர். ரசிகர்கள் மைதானத்திற்கு வருவதற்கு ரிக்சாவும் ஏற்பாடு செய்திருந்தது. ரசிகர்களுக்கு மரக்கன்று பரிசாக வழங்குவதுடன் சுற்றுச்சூழ்ல் பாதுகாப்பு விழிப்புணர்வையும் எடுத்துரைக்கிறது. 

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/15171604/1157124/IPL-2018-Why-are-RCB-wearing-green-jersey-against.vpf

Link to comment
Share on other sites

விராட் கோலி அதிரடி வீண்! - ராஜஸ்தான் அணிக்கு 2-வது வெற்றி #RCBvsRR

 
 

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

விராட் கோலி

Photo: Twitter/IPL

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் ராயல்சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, சஞ்சு சாம்ஸனின் அதிரடியால் 200-க்கும் மேல் ரன் குவித்தது. சாம்ஸன் 45 பந்துகளில் 92 ரன்கள் குவிக்க, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் சஹால் மற்றும் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். நடப்பு ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 

 

218 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்குச் சரியான தொடக்கம் அமையவில்லை. முதல் ஓவரிலேயே 4 ரன்களுடன் மெக்கல்லம் நடையைக் கட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு தொடக்க வீரர் டிகாக்குடன் ஜோடிசேர்ந்த கேப்டன் கோலி, அதிரடி காட்டினார். இந்த ஜோடி 77 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 26 ரன்களில் டிகாக் வெளியேறினார். 26 பந்துகளில் அரைசதமடித்த கோலியும், 57 ரன்களில் வெளியேறினார். கோலி ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே டிவிலியர்ஸும் வெளியேற, பெங்களூர் அணி தடுமாறியது. இறுதி ஓவர்களில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடி 35 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்து, 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மந்தீப் சிங் 47 ரன்களுடனும், கிறிஸ் வோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் கோபால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 
 

https://www.vikatan.com/news/sports/122272-ipl-2018-rr-beat-rcb-by-19-runs.html

 

 

 

பெங்களூருவுக்கு இன்னொரு தோல்வி... பச்சை ஜெர்ஸி ராசியில்லையா? #RCBvsRR

 
 
 

இன்று ஐ.பி.எல்லில் இரண்டு போட்டிகள். இரண்டுமே முக்கியமான போட்டிகள். காரணம் கோலியும் தோனியும். முதல் போட்டியில் பெங்களூரை ஃப்ரண்ட் லோடிங் வாஷின் மிஷின் கணக்காக துவைத்து எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 

போட்டிக்கு முன்:

இந்தப் போட்டிக்கு முன் இரண்டு அணிகளும் 2 போட்டிகள் விளையாடி ஒரு வெற்றி பெற்றிருந்தன. இன்று ராஜஸ்தன் தன் டீமை மாற்றவில்லை. பெங்களூரு இருக்கும் இரண்டு ஸ்பின்னர்கள் போதாது என பவான் நெகியைச் சேர்த்திருந்தது. சின்ன மைதானம். அதில் 3 ஸ்பின்னர்கள் என்பது ரிஸ்க்தான். ஆனால், கோலிக்குதான் ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது ஆயிற்றே. ரன் அடிக்காத சர்ஃபராஸ் கானை தண்ணி தூக்கவிட்டு, நெகிக்கு வாய்ப்பு அளித்தார்.

இந்த முறை சிவப்பு ஜெர்ஸியை சலவைக்கு போட்டுவிட்டது பெங்களூரு. சீசனுக்கு ஒரு மேட்ச்சை பசுமைப் புரட்சிக்கு ஒதுக்குவது வழக்கம். டாஸ் போடும்போது ஒரு மரக்கன்றை ரஹானேவுக்கு வழங்கினார் கோலி. பச்சை ஜெர்ஸி பளபளத்தது. ஆனால், புள்ளி விவரம்தான் கொஞ்சம் பிரச்னை. இதுவரை பச்சை ஜெர்ஸியில் நடந்த 7 போட்டிகளில் 2-ல் மட்டுமே பெங்களூரு ஜெயித்திருந்தது. இந்த ரெக்கார்டுகளை எல்லாம் மீறி பெங்களூருதான் ஜெயிக்கும் என்பதே ப்ரீ-மேட்ச் நிலைமை.

யார் டாஸ் வென்றாலும் சேஸிங் எடுக்க வேண்டுமென்பதுதான் ஐ.பி.எல் 2018 எழுதப்படாத விதி. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவும் அப்படித்தான். அதனால் டாஸ் வென்ற கோலி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். 

பெங்களூரு

போட்டியின்போது:

பெங்களூரு தனது சொந்த மைதானத்தில் முதல் மேட்ச் ஆடியபொழுது வாஷிங்டன் சுந்தருக்கு பவர் ப்ளே முழுவதுமே பந்து வீசும் வாய்ப்பு தரப்படவில்லை. ஆனால், இந்த முறை முதல் ஓவரே சுந்தருக்கு தந்தார் கோலி. அட்டகாசமான முதல் ஓவர். ஒரே ஒரு ரன் தான். “இந்த மேட்ச்ல நம்ம திட்டமே வேற” என கோலி சொல்வது போல் இருந்தது.

இந்த சீசன் முழுக்கவே ஏகப்பட்ட இஞ்சூரிகள். ஐ.பி.எல் என்பதே இஞ்சூரி பிரீமியர் லீக் மீம் போடுமளவுக்கு நிறைய காயங்கள்.(இதில் மும்பைக்கு ஏற்படும் காயம் கணக்கில் வராது. அது வேற டிபார்ட்மெண்ட்). இன்றைய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் ரஹானேவுக்கு கால் பிடித்துக்கொண்டது. நல்லவேளையாக, ஃபிசியோ வந்து ‘மந்திரம்’ போட்டதும் சரியானது. அந்த மந்திரம் வேலை செய்து, சுந்தரின் ஓவரில் 4,6 என வெளுத்தார் ரஹானே. இந்த கிரவுண்டே ரஹானேவுக்கு ராசியானதுதான். 6 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இதே நாளில்தான் தனது முதல் டி20 சதத்தை இங்கே அடித்தார். அதுவும் பெங்களூருக்கு எதிராக. இன்றும் அது நடக்குமா என யோசித்தபோதே கிறிஸ் ஓக்ஸ் வீசிய ஸ்லோ பந்தில் அவுட் ஆனார் ரஹானே. 20 பந்தில் 36 ரன் என்பது ரஹானேவின் வேகத்துக்கு கொஞ்சம் அதிகம். அதனால், எப்படியும் 200 ரன் அடித்துவிடுவார்கள் என்பது அப்போதே தெரிந்தது. 

சஞ்சு சாம்சனின் ப்ளஸ் டைமிங்கா, பவரா என நினைக்க வைக்கும் முன் இரண்டு சிக்ஸர்களை வெளுத்தார். பெரிதாக ஃபுட் மூவ்மெண்ட் இல்லை. மோசமான பந்துகளும் இல்லை. ஆனால் இரண்டுமே நல்ல சிக்ஸர்ஸ். ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டனர் சாம்சனும் ஸ்டோக்ஸும். 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 76 ரன் சேர்த்திருந்தது.

10 ஓவருக்கு பின் ‘ஆக்டிவ் மோடு”க்கு மாறியது ராஜஸ்தான். சாம்சன், ஸ்டோக்ஸ், பட்லர் மூவரும் சின்னசாமி ஸ்டேடியத்தின் டெசிபல் கூட விடவேயில்லை. சாம்சனின் அரை சதத்தை பெங்களூருவாசிகள் கொண்டாடியிருக்கலாம். அட்டகாசமான இன்னிங்க்ஸ் அது. 

19-வது ஓவரில் வோக்ஸ் பந்தில் கோலியிடம் கேட்ச் தந்து அவுட் ஆனார் பட்லர். ஆனால், கேட்ச் பிடித்த கேப்டன் கோலி அதைக் கொண்டாடவேயில்லை. ‘அதான் இவ்ளோ ரன் அடிச்சிட்டீங்களே…போங்கடா’ என்பது போலவே இருந்தது அந்தச் செயல். அதன்பின், வோக்ஸ் ஹைஃபை கொடுக்க சிரித்தார் மிஸ்டர்.அனுஷ்கா. பெங்களூரு அணியின் ஸ்டார் ஆக டி-காக்கை சொல்லியே ஆக வேண்டும். உமேஷ் யாதவும் கெஜ்ரோலியாவும் வீசிய வைடுகளை தாவி தாவி பவுண்டரி போகாமல் தடுத்தார் இந்த தென்னாப்பிரிக்கா கீப்பர்.

20-வது ஓவரை ராகுல் திரிபாதி குத்தகைக்கு எடுத்துக்கொண்டார். 4,6,4 என அடிக்க, ஸ்கோர் 200-ஐ தாண்டியது.பெங்களூருக்கு எதிராக ராஜஸ்தானின் அதிகபட்ச ஸ்கோர் (217) இது. சாம்சன் 45 பந்துகளில் 92 ரன். சாஹல் தவிர வேறு எந்த பவுலரும் தப்பிக்கவில்லை. இந்தியாவுக்காக 3 ஃபார்மட்டிலும் விளையாட ஆசை என்ற உமேஷ் யாதவ் 4 ஓவரில் 59 ரன். 218 எடுத்தால் அதுதான் ஐ.பி.எல் வரலாற்றின் சிறந்த சேஸ் என்ற சூழலில் பேட்டிங் செய்ய வந்தது பெங்களூரு. 

பச்சை ஜெர்ஸி; ஆனால் பேடும் ஹெம்லெட்டும் சிவப்பு என்ற தெலுங்கு ஹீரோ போல் களத்துக்கு வந்தார் மெக்கல்லம். முதல் பாலே 4. ஆனால் பச்சை ஹெல்மெட் போடாத பாவம். அதே ஓவரில் கேட்ச் தந்து அவுட்டும் ஆனார். கோலிக்கும் அதே காம்போதான்; ஆனால் 2வது ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்து டெசிபலைக் கூட்டினார் கேப்டன். 

டி-காக்கும் கோலியும் அட்டகாசத்தைத் தொடர, நிமிர்ந்து உட்கார்ந்தது சின்னசாமி ஸ்டேடியம். ஆனால், நீடிக்கவில்லை. டி-காக் அவுட் ஆக, டி-வில்லியர்ஸ் - கோலி ஜோடி சேர்ந்தது. ஒரு நல்ல ரன் அவுட் சான்ஸை கீப்பர் பட்லர் மிஸ் செய்ய, டி-வில்லியர்ஸ் தப்பித்தார். அடுத்த ஓவரே கோலி பவுண்டரி லைனில் கேட்ச் தந்து அவுட் ஆனது சோகம். 57 ரன் ஓக்கேதான் என்றாலும் 217 ரன்னை சேஸ் செய்ய அது போதாதே.

சிறிது நேரத்திலே டி-வில்லியர்ஸூம் அவுட் ஆக ‘வீட்டுக்கு போலாமா வேணாமா’ மோடுக்கு போனது பெங்களூரு. அந்த அமைதியை கலைக்க முயன்றது மந்தீப்பின் ஸ்டிரெயிட் சிக்ஸ். ஆனால், சுனாமி வரும்போது சுண்டல் வாங்கி ரசிக்கவா முடியும்? தோல்வியை மானசீகமாக அப்போதே ஏற்றுக்கொண்டது சின்னசாமி ஸ்டேடியம். 

கோலி

வந்தவர்களை குதூகலமாக்க மந்தீப்பும் சுந்தரும் கொஞ்ச நேரம் வாணவேடிக்கை காட்ட, ரன் ரேட் அதிகம் விழாமல் தப்பித்தது. ஆனால், சொந்த மண்ணில் தோல்வி, 3-ல் 2 தோல்வி என பெங்களூரு ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது ஆர்சிபி

இந்தப் போட்டியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் சாம்சனும், பவுலிங்கில் கோலியையும் டி-வில்லியர்ஸையும் அவுட் ஆக்கிய கோபாலும் ராஜஸ்தானின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்கள். இருந்தாலும் ஆட்ட நாயகன் விருது சாம்சனுக்கே தரப்பட வேண்டும்; தரப்பட்டது.

 

கோலியின் முன் மிகப்பெரிய கேள்வி ஒன்று இருக்கிறது . அது, இந்திய அணியின் தொடர் வெற்றிக்கும் கோலியின் கேப்டன்ஸிக்கு தொடர்பேயில்லையா என்பதே. இன்னும் 11 போட்டிகள் இருக்கின்றன. கோலி பதில் சொல்லட்டும். 

https://www.vikatan.com/news/sports/122273-ipl-2018-match-11-rr-beats-rcb.html

Link to comment
Share on other sites

ஐ.பி.எல். போட்டி - சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்

 
அ-அ+

பஞ்சாப்பில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. #IPL2018 #KXIPvsCSK

 
 
 
 
ஐ.பி.எல். போட்டி - சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்
 
மொஹாலி:

ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் 8-வது ஓவரில் எளிதாக 96 ரன்களை கடந்தது.

201804152356315673_1_2t0u7dc5._L_styvpf.jpg

37 ரன்கள் எடுத்து லோகேஷ் ராகுல் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய கெயில் 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய மன்யங் அகர்வால் சற்றே அதிரடி காட்ட பஞ்சாப் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

எதிர்பார்ப்புடன் களமிறங்கிய யுவராஜ் சிங் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கருண் நாயர் அதிரடியாக விளையாடி 29 ரன் எடுத்து வெளியேறினார். இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது.

201804152356315673_2_9trr441l._L_styvpf.jpg

சென்னை அணி தரப்பில் தாகூர், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், முரளி விஜய் ஆடினர். வாட்சன் 11 ரன்னிலும், முரளி விஜய் 12 ரன்னிலும் அவுட்டாகினர்.

அவர்களை தொடர்ந்து ஆடிய அம்பதி ராயுடு ஓரளவு தாக்குப்பிடித்து 35 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய சாம் பில்லிங்ஸ் 9 ரன்னில் அவுட்டானார். அப்போது சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனியும் , ரவீந்திர ஜடேஜாவும் ஒன்றிரண்டாக ரன்கள் சேர்த்தனர். கடைசி 5 ஓவர்களில் 76 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் இணைந்து 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா 19 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய தோனி அரை சதமடித்தார். அடுத்து பிராவோ இறங்கினார். தோனி தனது அதிரடியை தொடர்ந்தார். இதனால் கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் இறுதி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை அணி தோல்வி அடைந்தது. தோனி 44 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 79ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. #KXIPvCSK #IPL #Tamilnews

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/15234822/1157159/king-XI-punjab-beat-chennai-super-kings.vpf

Link to comment
Share on other sites

தோனி செய்த இமாலயத் தவறுகள்: சிஎஸ்கேவை அதிரவைத்த அஸ்வின், கெயில்

 

kings2jpg
kings%20elevenjpg
kings2jpg
kings%20elevenjpg

கேப்டன்ஷிப்பில் மகேந்திரசிங் தோனி செய்த தவறுகளால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

ஏலத்தில் எடுக்காமல் தன்னை சிஎஸ்கே அணி கழற்றிவிட்டது தவறு என்பதை தனது தலைமைப் பண்பால் பஞ்சாப் அணி மூலம் அஸ்வின் நேற்றைய போட்டியின் முடிவின் மூலம் பதிலடி கொடுத்தார்.

இக்கட்டான நேரத்தில்தான் "பிரம்மாஸ்திரத்தை" பயன்படுத்தவேண்டும் என்று புராணங்களில் கூறுவதுண்டு. அதைப் போல், கெயில் எனும் "பிரம்மாஸ்திரத்தை" தோனிக்கு எதிராக கச்சிதமாக பயன்படுத்தி சென்னை அணியின் வெற்றிப்பாதைக்கு வேட்டு வைத்துவிட்டார் அஸ்வின். ஆட்டநாயகன் விருதையும் கெயில் பெற்றார்.

இதற்கு முன்னால் சென்னை பெற்ற 2 வெற்றிகளில் ஒன்று பிராவோவுக்குச் சொந்தம் இரண்டாவது ஆட்டம் சாம் பில்லிங்ஸுக்குச் சொந்தம், அதாவது ராயுடு, வாட்சன் அதிரடி தொடக்கத்துக்குப் பிறகு சாம் பில்லிங்ஸுக்குச் சொந்தம். மற்றபடி சென்னை சூப்பர் கிங்சை கேப்டன் கூல், தல தோனியினால் ஒன்று திரட்ட முடியவில்லை என்பதே தெரிகிறது, இதில் கேப்டன்சி தவறுகள், களவியூகத் தவறுகள் என்று தவறு மேல் தவறு செய்து கொண்டே ‘பினிஷர்’ என்றும் ‘சிறந்த கேப்டன்’ என்றும் தப்பும் தவறுமான பெயரில் அவரால் வலம் வர முடிவதற்குக் காரணம் அவருடைய மச்சம்தான்.

கெயிலின் அதிரவைத்த அரைசதம், ராகுலின் ஒத்துழைப்பான ஆட்டம், அஸ்வினின் சமயோஜித கேப்டன்ஷிப் ஆகியவை வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.

kings2jpg
 

அதேசமயம், "மிஸ்டர் கூல்" என்று பெயரெடுத்த கேப்டன் தோனி இந்த அளவுக்கு கேப்டன்ஷிப்பில் மோசமாக செயல்படுவார் என எதிர்பார்க்கவில்லை. பல தவறுகள் செய்து வெற்றியை தாரை வார்த்துக்கொடுத்துவிட்டார். தோனியின் கேப்டன்ஷிப்பில் செய்யப்பட்ட சோதனை முயற்சிகளும் அஸ்வினுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

இதன் மூலம் சிஎஸ்கே அணியும், பஞ்சாப் அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடி தலா 2 வெற்றிகள் ஒரு தோல்வியுடன் உள்ளன.

11-வது சீசன் ஐபில் போட்டியில் 12-வதுலீக் ஆட்டம் சண்டிகரில் நேற்று நடந்தது. டாஸ்வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சென்னையில் சுரேஷ் ரெய்னாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக முரளிவிஜய் சேர்க்கப்பட்டார்.

அதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஸ்டோய்னிஸுக்கு பதிலாக கிறிஸ் கெயிலும் , அக்சர் படேலுக்கு பதிலாக பரிந்தர் ஸ்ரனும் சேர்க்கப்பட்டனர்.

கெயில், ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர். கெயில் களத்தில் இறங்கியதும் ரசிகர்கள் விசில் சத்தம் காதை கிழித்தது.

ரூ.2 கோடி போதுமா

கெயில் மீது ரசிகர்களுக்கு இருக்கும் அன்பும், அவரின் அதிரடி ஆட்டத்துக்கு இருக்கும் வரவேற்பும் இன்னும் குறையவில்லை என்பது முதல் போட்டியிலேயே தெரிந்துவிட்டது.

கெயிலை யார் ஏலம் எடுப்பார்கள் என உதாசினப்படுத்தப்பட்ட நிலையில், பஞ்சாப் அணி அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வாங்கியது. ஆனால், அதற்கு மேல் நான் மதிப்பு மிக்கவன் என்பதை பேட்டிங்கால் கெயில் நேற்று நிரூபித்துவி்ட்டார். கெயிலின் அதிரடிஆட்டத்துக்கும், மேட்ச்வின்னிங் திறமைக்கும் இந்த போட்டி சிறு உதாரணம்.

. ரசிகர்கள் நம்பிக்கையை கெயில் வீணடிக்காமல் கெயில் கண்களுக்கு விருந்தளித்தார். முதல் விக்கெட்டுக்கு ராகுல், கெயில் ஆகிய இருவரும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

ராகுல் அதிரடியான தொடக்கத்தை அளித்தாலும், கெயில் நிதானத்தை கடைபிடித்தார். ஆனால், "சிங்கத்தை சீண்டுவதைப்" போல் ஹர்பஜன் கெயிலை சுழற்பந்தால் சீண்டினார். அவசரப்பட்டு அடிக்காமல் கெயில் ஒரு பவுண்டரியோடு நிறுத்திக்கொண்டார்.

4-வது ஓவரை ஹர்பஜன் மீண்டும் வீசினார். நினைத்ததுபோல் "கெயில் சிங்கம்" ஹர்பஜன் ஓவரை பிய்த்து எறிந்தது. ஒருசிக்ஸர்,பவுன்டரி என விளாச, ராகுலும் தனது பங்கிற்கு 2பவுண்டரிகள் விளாசினார். 19 ரன்கள் அடித்து "பாஜி" ஓவரை பஞ்சராக்கினார்கள்.

சாஹர் வீசிய 6-வது ஓவரையும் கெயில் விளாசி தள்ளினார்.  2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து சாஹரை திக்குமுக்காடச் செய்தார் கெயில். இம்ரான் தாஹிர் வீசிய 7-வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து கெயில் 22 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ஐபில் போட்டிகளில் கெயில் அடிக்கும் 22-வது அரை சதமாகும்.

ராகுல் 37 ரன்கள் சேர்த்தபோது, ஹர்பஜன் வீசிய புல்டாஸ் பந்தை தூக்கிஅடிக்க அது பிராவோவால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 96 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த அகர்வால், ஹர்பஜன் வீசிய 10ஓவரில் ஒருபவுண்டரி, சிக்ஸர் அடித்து பார்முக்கு திரும்பினார்.

கெயிலை களத்தில் நிற்கும்வரை சிஎஸ்கே அணியினருக்கு ரத்த அழுத்தம் எகிறியது மிஸ்டர் கூல் தோனி பந்துவீச்சை மாற்றி வாட்ஸனை அழைத்தார்.

வாட்சன் வீசிய 11வது ஓவரில் இம்ரான் தாஹிரிடம் கேட்ச் கொடுத்து கெயில் ஆட்டமிழந்தார். 33 பந்துகளில் கெயில் 63 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர்கள்,7 பவுண்டரிகள் அடங்கும்.

அதன்பின் பஞ்சாப் அணி வீரர்களின் ரன் வேகத்தை பிராவோவும், வாட்சனும் கட்டுப்படுத்தினர். இதனால் ரன்வேகம் குறையத் தொடங்கியது. மேலும், அடுத்து களமிறங்கிய வீரர்களும் நிலைத்து பேட்செய்யாமல், விரைவாக விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இம்ரான் தாஹிர் வீசிய 15-வது ஓவரில் அகர்வால் 30 ரன்களிலும், அடுத்த பந்தில் ஆரோன் பிஞ்ச் ஆட்டமிழந்தார். 2-வது முறையாக ஆரோன் பிஞ்ச் ஏமாற்றம் அளித்தார் . யுவராஜ் சிங் (20), கருண் நாயர் (29) , அஸ்வின் (14) ரன்களிலும் வெளியேறினர்.  டை 3 ரன்களிலும், ஸ்ரன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் கிங்ஸ் லெவன் அணி 7 விக்கெட் இழப்புக்கு 197ரன்கள் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் தாக்கூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.ஷேன் வாட்சனுக்கு 2 ஓவர்கள்தான், ஷர்துல் தாக்கூருக்கு 3 ஓவர்கள்.

கடின இலக்கும், கேப்டன்ஷிப் தவறும்

198 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி களமிறங்கியது. பேட்டிங் வரிசையில் மாற்றத்தை செய்ததால் அதிரடியான ஸ்கோர் செய்யும் வாய்ப்பு தோனியால் கெட்டது. இதனால், தொடக்கத்திலேயே சிஎஸ்கே விக்கெட்டுகளை இழந்தது.

கடந்த இரு போட்டிகளிலும் அம்பாட்டி ராயுடு சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகிறார். அவரையும், வாட்ஸனையும் தொடக்க வீரர்களாக தோனி இறக்கி இருக்கலாம். ஆனால், முரளி விஜயை களமிறக்கி நன்றாக இருந்த பாட்னர்ஷிப்பை குலைத்தார் தோனி.

கடினமான இலக்கு, அடித்து ஆடவேண்டும் என்ற அழுத்தத்தை தாங்கமுடியாமல் முரளிவிஜய், வாட்ஸன் அவசரப்பட்டு ஆட்டமிழந்தனர்.  2-வது ஓவரில் வாட்ஸன் 11 ரன்களில் மோகித் சர்மா வேகத்தில் ஆட்டமிழக்க, 5-வது  ஓவரில் முரளிவிஜய் 12 ரன்களில் ஆன்ட்ரூ டை வேகத்தில் நடையைக் கட்டினார்.

தொடக்கத்திலேயே அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்தது சென்னை அணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. கடந்த போட்டியில் சிக்ஸர்களாக படம் காட்டிய பில்லிங்ஸும் 9 ரன்களோடு படுத்துக்கொண்டார். அஸ்வின் இவரை வீட்டுக்கு அனுப்பினார். இதுமேலும் சிஎஸ்கே தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.  

ராயுடு, தோனியும் 4-வது விக்கெட்டுக்கு நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். ராயுடு அவ்வப்போது சிலபவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டையும் உயர்த்தினார்.

14-வது ஓவரில் 2-வது பந்தில் ராயுடுவை ரன்அவுட் மூலம் வெளியேற்றினார் கேப்டன் அஸ்வின். 49 ரன்களில் ராயுடு பெவிலியன் திரும்பினார். இதில் 5பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதன்பின் ஆட்டத்தின்  திருப்புமுனை  தொடங்கியது. பிராவோ அடுத்து களமிறங்குவார், ஆட்டம் விறுவிறுப்பாகும், அனல் பறக்கும் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில்,  ஜடேஜா களம் கண்டார். நெருக்கடியான காலகட்டத்தில் அடித்து ஆடக்கூடிய அளவுக்கு ஜடேஜா ஆல்ரவுண்டர் கிடையாது. ஜடேஜா இப்போதும் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர்தான் என்பதை மறந்து ஏன் ஜடேஜாவை தோனி களமிறக்கினார் என்பது தெரியவில்லை.

அதிலும் வெற்றிக்கு பந்துகள் குறைவாகவும், ரன்கள் இருமடங்காகவும் இருக்கும் போது, பிராவோ போன்ற அதிரடி பேட்ஸ்மன்களை களமிறக்குவதுதான் நல்ல கேப்டன்ஷிப்புக்கு அழகு.

 ஆனால், சோதனை முயற்சியாக சென்னையில் நடந்த போட்டியின் போது பிராவோ 7-வது வீரராக களமிறக்கி பெற்ற வெற்றியைப் போல் இதிலும் பெறலாம் என தப்பு கணக்கு போட்டுவிட்டார் தோனி.

நெருக்கடியை சமாளிக்க முடியாத ஜடேஜா ஸ்ரன் வீசிய ஒவரை அடித்து ஆடமுடியால் வீணாக்கினார். அப்போதே தொலைக்காட்சி முன்அமர்ந்திருந்த சிஎஸ்கே ரசிகர்கள் ஜடேஜாவை கரித்துக்கொட்டி இருப்பார்கள்.

ஜடேஜாவின் ஆட்டத்தைப் பார்த்து பொறுமை இழந்த தோனி அதிரடி ஆட்டத்தை கையாண்டார். டை ஓவரில் 2 பவுண்டரிகளும், மோகித் சர்மா ஓவரில் 2 சிக்ஸர்களும் பவுண்டரியும் அடித்து அரைசதத்தை 34 பந்துகளில் நிறைவு செய்தார்.

டைவீசிய 18-வது ஓவரில் ஜடேஜா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் தோனி 2 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி அடித்து பரபரப்பை எகிறச் செய்தார்.

கடைசி ஓவரை தோனியும், பிராவோவும் சந்தித்தனர். தேவைப்படும் நேரத்தில் பிராவோ களமிறங்காமல், ஒட்டுமொத்த அழுத்தமும் கடைசி ஓவர் எனும் புள்ளியில் குவியும் போது, பிராவோ களமிறங்கினார். அதனால், எந்த பயனும் விளையவில்லை.

சென்னை அணியில் இருந்து அனுபவங்களைக் கற்ற மோகித் சர்மாவை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினார் அஸ்வின்.

மோகித் சர்மா நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக பந்துவீசக்கூடிய திறமை பெற்றவர். அதிலும் 16 முதல் 20-வது ஓவர்களில் அருமையாக பந்துவீசுவார். 2015ம் ஆண்டில் இருந்து 16முதல்20 ஓவர்களுக்கு இடையே பந்துவீசி 43 ஐபிஎல் போட்டியில் 25 விக்கெட்டுகளை மோகித்சர்மா வீழ்த்தியுள்ளார். இதை சரியாக நிரூபித்தார் மோகித் சர்மா.

கடைசி ஒரு ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது.

தோனிக்கும், பிராவோவுக்கும் யார்கர்களை இறக்கிய மோகித் சர்மா திணறடித்து திக்குமுக்காடச் செய்தார். இரு சிங்கள் ரன்களும், 4-வது பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் சிக்ஸரும் மட்டுமே தோனியால் அடிக்க முடிந்தது.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களுக்கு 193 ரன்கள் மட்டுமே சென்னை அணி சேர்த்தது. கிங்ஸ் லெவன் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணித் தரப்பில் ஆன்ட்ரூ டை 2விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஆட்ட நாயகனாக கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார். 

http://tamil.thehindu.com/sports/article23553786.ece?homepage=true

Link to comment
Share on other sites

தினேஷ் கார்த்திக்கை துரத்தும் தோல்வி: டெல்லி அணியை இன்று வீழ்த்துமா? கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

 

 
dinesh%202

தினேஷ் கார்த்திக், கவுதம் கம்பீர்: கோப்புப்படம்   -  படம் உதவி: ட்விட்டர்

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அடுத்தடுத்த தோல்விகளால், துவண்டுள்ள நிலையில், நாளை நடக்கும் போட்டியில் கம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூரு அணியை மட்டுமே வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் அணிகளுடான போட்டியில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.

அதேபோல டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனது முதல் போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியிடமும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் டக்வொர்த் விதிப்படியும் தோல்வியைச் சந்தித்தது. ஆனால்,நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று எழுச்சியுடன் உள்ளது.

இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இருப்பதால், அடுத்த கட்டத்துக்கு செல்ல இந்த போட்டி இது முக்கியமானதாகும். டெல்லி அணி வீரர் முகமது ஷமிக்கு சொந்த மாநிலம் கொல்கத்தா என்பதால், நாளை அவர் தனது திறமையை நிரூபிக்க வேண்டியநிலையில் இருக்கிறார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தைப் பொறுத்தவரை, இதற்கு முன் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கம்பீருக்கு மைதானம், ஆடுகளம் குறித்து நன்கு தெரியும். மேலும், கடந்த கால வரலாற்றில் கொல்கத்தா அணியுடன் இங்கு விளையாடிய 12 போட்டிகளில் 8 போட்டிகளில் டெல்லி அணி தோல்வி கண்டுள்ளது. ஆதலால், இந்த முறை டெல்லி அணிக்கு தலைமை ஏற்று இருக்கும் கம்பீர் ஆடுகளம், மைதானத்தின் தன்மை குறித்து அறிந்து அணியை வெற்றிக்கு முயற்சிக்கலாம்.

டெல்லி அணியில் காலின் முன்ரோ, ஜேஸன் ராய் ஆகியோர் கடந்த போட்டியில் நிலைத்து ஆடி அணிக்கு வெற்றிதேடித் தந்தனர். இன்னும் கேப்டன் கம்பீர் பேட்டிங்கில் முழுமையான ஃபார்முக்கு திரும்பவில்லை. கடந்த 3 போட்டிகளிலும் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பவில்லை என்பதால், இந்த போட்டியில் சிறப்பாக பேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

அதேசமயம், கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை, பேட்டிங் வரிசையில் தினேஷ் கார்த்திக் கடந்த போட்டியில் செய்த மாற்றம் தோல்வியில் முடிந்தது. தொடக்க வீரராக தூள்கிளப்பி வந்த நரேனை நடுவரிசையில் இறக்கியது எடுபடவில்லை.

மேலும், 19வயதுக்குட்டபோருக்கான அணியில் இடம் பெற்றிருந்த சுப்மான் கில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடக் கூடியவர். அவரை 7-வது வீரராக நெருக்கடியில் களமிறக்கியபோது, அவரால் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது. இதைபோலவே பந்துவீச்சாளர் சிவம் மவியை பவர்ப்ளே ஓவரில் ப யன்படுத்தி இருக்க வேண்டும். அதைவிடுத்து மற்ற ஓவர்களில் பயன்படுத்தி தவறு செய்துவிட்டார் கார்த்தி.

இந்த இரு வீரர்களுக்கும் தங்களின் திறமையை நிரூபிக்க போதுமான அவகாசம் அளிக்காமல் இருந்துவி்ட்டார் கார்த்தி. ஆதலால், இந்த போட்டியில் இருவரையும் உரிய முறையில் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், கொல்கத்தா அணியில் முக்கிய வீரராக கருதப்படும் ராபின் உத்தப்பா இதுவரை 3போட்டிகளிலும் 50 ரன்களைக்கூட தாண்டவில்லை. ஆதலால், இன்றைய போட்டியில் நிலைத்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

கடுமையான அழுத்தத்துக்கும், வெற்றிக்கட்டாயத்திலும் இரு அணிகளும் இருப்பதால், வெற்றிக்காக கம்பீர் தலைமையும், தினேஷ் கார்த்திக் தலைமையும் கடுமையாக மோதிக்கொள்வார்கள். இதில் ஒருவர் வெறும் வெற்றிஅணிக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளித்துஅடுத்த கட்டத்துக்கு எடுத்தும் செல்லும் என்பதால், முக்கியத்துவம் பெற்றுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23548388.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நவீனன் said:

தோனி செய்த இமாலயத் தவறுகள்: சிஎஸ்கேவை அதிரவைத்த அஸ்வின், கெயில்

 

kings2jpg
kings%20elevenjpg
kings2jpg
kings%20elevenjpg

கேப்டன்ஷிப்பில் மகேந்திரசிங் தோனி செய்த தவறுகளால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

ஏலத்தில் எடுக்காமல் தன்னை சிஎஸ்கே அணி கழற்றிவிட்டது தவறு என்பதை தனது தலைமைப் பண்பால் பஞ்சாப் அணி மூலம் அஸ்வின் நேற்றைய போட்டியின் முடிவின் மூலம் பதிலடி கொடுத்தார்.

இக்கட்டான நேரத்தில்தான் "பிரம்மாஸ்திரத்தை" பயன்படுத்தவேண்டும் என்று புராணங்களில் கூறுவதுண்டு. அதைப் போல், கெயில் எனும் "பிரம்மாஸ்திரத்தை" தோனிக்கு எதிராக கச்சிதமாக பயன்படுத்தி சென்னை அணியின் வெற்றிப்பாதைக்கு வேட்டு வைத்துவிட்டார் அஸ்வின். ஆட்டநாயகன் விருதையும் கெயில் பெற்றார்.

இதற்கு முன்னால் சென்னை பெற்ற 2 வெற்றிகளில் ஒன்று பிராவோவுக்குச் சொந்தம் இரண்டாவது ஆட்டம் சாம் பில்லிங்ஸுக்குச் சொந்தம், அதாவது ராயுடு, வாட்சன் அதிரடி தொடக்கத்துக்குப் பிறகு சாம் பில்லிங்ஸுக்குச் சொந்தம். மற்றபடி சென்னை சூப்பர் கிங்சை கேப்டன் கூல், தல தோனியினால் ஒன்று திரட்ட முடியவில்லை என்பதே தெரிகிறது, இதில் கேப்டன்சி தவறுகள், களவியூகத் தவறுகள் என்று தவறு மேல் தவறு செய்து கொண்டே ‘பினிஷர்’ என்றும் ‘சிறந்த கேப்டன்’ என்றும் தப்பும் தவறுமான பெயரில் அவரால் வலம் வர முடிவதற்குக் காரணம் அவருடைய மச்சம்தான்.

கெயிலின் அதிரவைத்த அரைசதம், ராகுலின் ஒத்துழைப்பான ஆட்டம், அஸ்வினின் சமயோஜித கேப்டன்ஷிப் ஆகியவை வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.

kings2jpg
 

அதேசமயம், "மிஸ்டர் கூல்" என்று பெயரெடுத்த கேப்டன் தோனி இந்த அளவுக்கு கேப்டன்ஷிப்பில் மோசமாக செயல்படுவார் என எதிர்பார்க்கவில்லை. பல தவறுகள் செய்து வெற்றியை தாரை வார்த்துக்கொடுத்துவிட்டார். தோனியின் கேப்டன்ஷிப்பில் செய்யப்பட்ட சோதனை முயற்சிகளும் அஸ்வினுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

இதன் மூலம் சிஎஸ்கே அணியும், பஞ்சாப் அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடி தலா 2 வெற்றிகள் ஒரு தோல்வியுடன் உள்ளன.

11-வது சீசன் ஐபில் போட்டியில் 12-வதுலீக் ஆட்டம் சண்டிகரில் நேற்று நடந்தது. டாஸ்வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சென்னையில் சுரேஷ் ரெய்னாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக முரளிவிஜய் சேர்க்கப்பட்டார்.

அதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஸ்டோய்னிஸுக்கு பதிலாக கிறிஸ் கெயிலும் , அக்சர் படேலுக்கு பதிலாக பரிந்தர் ஸ்ரனும் சேர்க்கப்பட்டனர்.

கெயில், ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர். கெயில் களத்தில் இறங்கியதும் ரசிகர்கள் விசில் சத்தம் காதை கிழித்தது.

ரூ.2 கோடி போதுமா

கெயில் மீது ரசிகர்களுக்கு இருக்கும் அன்பும், அவரின் அதிரடி ஆட்டத்துக்கு இருக்கும் வரவேற்பும் இன்னும் குறையவில்லை என்பது முதல் போட்டியிலேயே தெரிந்துவிட்டது.

கெயிலை யார் ஏலம் எடுப்பார்கள் என உதாசினப்படுத்தப்பட்ட நிலையில், பஞ்சாப் அணி அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வாங்கியது. ஆனால், அதற்கு மேல் நான் மதிப்பு மிக்கவன் என்பதை பேட்டிங்கால் கெயில் நேற்று நிரூபித்துவி்ட்டார். கெயிலின் அதிரடிஆட்டத்துக்கும், மேட்ச்வின்னிங் திறமைக்கும் இந்த போட்டி சிறு உதாரணம்.

. ரசிகர்கள் நம்பிக்கையை கெயில் வீணடிக்காமல் கெயில் கண்களுக்கு விருந்தளித்தார். முதல் விக்கெட்டுக்கு ராகுல், கெயில் ஆகிய இருவரும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

ராகுல் அதிரடியான தொடக்கத்தை அளித்தாலும், கெயில் நிதானத்தை கடைபிடித்தார். ஆனால், "சிங்கத்தை சீண்டுவதைப்" போல் ஹர்பஜன் கெயிலை சுழற்பந்தால் சீண்டினார். அவசரப்பட்டு அடிக்காமல் கெயில் ஒரு பவுண்டரியோடு நிறுத்திக்கொண்டார்.

4-வது ஓவரை ஹர்பஜன் மீண்டும் வீசினார். நினைத்ததுபோல் "கெயில் சிங்கம்" ஹர்பஜன் ஓவரை பிய்த்து எறிந்தது. ஒருசிக்ஸர்,பவுன்டரி என விளாச, ராகுலும் தனது பங்கிற்கு 2பவுண்டரிகள் விளாசினார். 19 ரன்கள் அடித்து "பாஜி" ஓவரை பஞ்சராக்கினார்கள்.

சாஹர் வீசிய 6-வது ஓவரையும் கெயில் விளாசி தள்ளினார்.  2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து சாஹரை திக்குமுக்காடச் செய்தார் கெயில். இம்ரான் தாஹிர் வீசிய 7-வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து கெயில் 22 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ஐபில் போட்டிகளில் கெயில் அடிக்கும் 22-வது அரை சதமாகும்.

ராகுல் 37 ரன்கள் சேர்த்தபோது, ஹர்பஜன் வீசிய புல்டாஸ் பந்தை தூக்கிஅடிக்க அது பிராவோவால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 96 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த அகர்வால், ஹர்பஜன் வீசிய 10ஓவரில் ஒருபவுண்டரி, சிக்ஸர் அடித்து பார்முக்கு திரும்பினார்.

கெயிலை களத்தில் நிற்கும்வரை சிஎஸ்கே அணியினருக்கு ரத்த அழுத்தம் எகிறியது மிஸ்டர் கூல் தோனி பந்துவீச்சை மாற்றி வாட்ஸனை அழைத்தார்.

வாட்சன் வீசிய 11வது ஓவரில் இம்ரான் தாஹிரிடம் கேட்ச் கொடுத்து கெயில் ஆட்டமிழந்தார். 33 பந்துகளில் கெயில் 63 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர்கள்,7 பவுண்டரிகள் அடங்கும்.

அதன்பின் பஞ்சாப் அணி வீரர்களின் ரன் வேகத்தை பிராவோவும், வாட்சனும் கட்டுப்படுத்தினர். இதனால் ரன்வேகம் குறையத் தொடங்கியது. மேலும், அடுத்து களமிறங்கிய வீரர்களும் நிலைத்து பேட்செய்யாமல், விரைவாக விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இம்ரான் தாஹிர் வீசிய 15-வது ஓவரில் அகர்வால் 30 ரன்களிலும், அடுத்த பந்தில் ஆரோன் பிஞ்ச் ஆட்டமிழந்தார். 2-வது முறையாக ஆரோன் பிஞ்ச் ஏமாற்றம் அளித்தார் . யுவராஜ் சிங் (20), கருண் நாயர் (29) , அஸ்வின் (14) ரன்களிலும் வெளியேறினர்.  டை 3 ரன்களிலும், ஸ்ரன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் கிங்ஸ் லெவன் அணி 7 விக்கெட் இழப்புக்கு 197ரன்கள் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் தாக்கூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.ஷேன் வாட்சனுக்கு 2 ஓவர்கள்தான், ஷர்துல் தாக்கூருக்கு 3 ஓவர்கள்.

கடின இலக்கும், கேப்டன்ஷிப் தவறும்

198 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி களமிறங்கியது. பேட்டிங் வரிசையில் மாற்றத்தை செய்ததால் அதிரடியான ஸ்கோர் செய்யும் வாய்ப்பு தோனியால் கெட்டது. இதனால், தொடக்கத்திலேயே சிஎஸ்கே விக்கெட்டுகளை இழந்தது.

கடந்த இரு போட்டிகளிலும் அம்பாட்டி ராயுடு சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகிறார். அவரையும், வாட்ஸனையும் தொடக்க வீரர்களாக தோனி இறக்கி இருக்கலாம். ஆனால், முரளி விஜயை களமிறக்கி நன்றாக இருந்த பாட்னர்ஷிப்பை குலைத்தார் தோனி.

கடினமான இலக்கு, அடித்து ஆடவேண்டும் என்ற அழுத்தத்தை தாங்கமுடியாமல் முரளிவிஜய், வாட்ஸன் அவசரப்பட்டு ஆட்டமிழந்தனர்.  2-வது ஓவரில் வாட்ஸன் 11 ரன்களில் மோகித் சர்மா வேகத்தில் ஆட்டமிழக்க, 5-வது  ஓவரில் முரளிவிஜய் 12 ரன்களில் ஆன்ட்ரூ டை வேகத்தில் நடையைக் கட்டினார்.

தொடக்கத்திலேயே அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்தது சென்னை அணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. கடந்த போட்டியில் சிக்ஸர்களாக படம் காட்டிய பில்லிங்ஸும் 9 ரன்களோடு படுத்துக்கொண்டார். அஸ்வின் இவரை வீட்டுக்கு அனுப்பினார். இதுமேலும் சிஎஸ்கே தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.  

ராயுடு, தோனியும் 4-வது விக்கெட்டுக்கு நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். ராயுடு அவ்வப்போது சிலபவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டையும் உயர்த்தினார்.

14-வது ஓவரில் 2-வது பந்தில் ராயுடுவை ரன்அவுட் மூலம் வெளியேற்றினார் கேப்டன் அஸ்வின். 49 ரன்களில் ராயுடு பெவிலியன் திரும்பினார். இதில் 5பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதன்பின் ஆட்டத்தின்  திருப்புமுனை  தொடங்கியது. பிராவோ அடுத்து களமிறங்குவார், ஆட்டம் விறுவிறுப்பாகும், அனல் பறக்கும் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில்,  ஜடேஜா களம் கண்டார். நெருக்கடியான காலகட்டத்தில் அடித்து ஆடக்கூடிய அளவுக்கு ஜடேஜா ஆல்ரவுண்டர் கிடையாது. ஜடேஜா இப்போதும் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர்தான் என்பதை மறந்து ஏன் ஜடேஜாவை தோனி களமிறக்கினார் என்பது தெரியவில்லை.

அதிலும் வெற்றிக்கு பந்துகள் குறைவாகவும், ரன்கள் இருமடங்காகவும் இருக்கும் போது, பிராவோ போன்ற அதிரடி பேட்ஸ்மன்களை களமிறக்குவதுதான் நல்ல கேப்டன்ஷிப்புக்கு அழகு.

 ஆனால், சோதனை முயற்சியாக சென்னையில் நடந்த போட்டியின் போது பிராவோ 7-வது வீரராக களமிறக்கி பெற்ற வெற்றியைப் போல் இதிலும் பெறலாம் என தப்பு கணக்கு போட்டுவிட்டார் தோனி.

நெருக்கடியை சமாளிக்க முடியாத ஜடேஜா ஸ்ரன் வீசிய ஒவரை அடித்து ஆடமுடியால் வீணாக்கினார். அப்போதே தொலைக்காட்சி முன்அமர்ந்திருந்த சிஎஸ்கே ரசிகர்கள் ஜடேஜாவை கரித்துக்கொட்டி இருப்பார்கள்.

ஜடேஜாவின் ஆட்டத்தைப் பார்த்து பொறுமை இழந்த தோனி அதிரடி ஆட்டத்தை கையாண்டார். டை ஓவரில் 2 பவுண்டரிகளும், மோகித் சர்மா ஓவரில் 2 சிக்ஸர்களும் பவுண்டரியும் அடித்து அரைசதத்தை 34 பந்துகளில் நிறைவு செய்தார்.

டைவீசிய 18-வது ஓவரில் ஜடேஜா 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் தோனி 2 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி அடித்து பரபரப்பை எகிறச் செய்தார்.

கடைசி ஓவரை தோனியும், பிராவோவும் சந்தித்தனர். தேவைப்படும் நேரத்தில் பிராவோ களமிறங்காமல், ஒட்டுமொத்த அழுத்தமும் கடைசி ஓவர் எனும் புள்ளியில் குவியும் போது, பிராவோ களமிறங்கினார். அதனால், எந்த பயனும் விளையவில்லை.

சென்னை அணியில் இருந்து அனுபவங்களைக் கற்ற மோகித் சர்மாவை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினார் அஸ்வின்.

மோகித் சர்மா நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக பந்துவீசக்கூடிய திறமை பெற்றவர். அதிலும் 16 முதல் 20-வது ஓவர்களில் அருமையாக பந்துவீசுவார். 2015ம் ஆண்டில் இருந்து 16முதல்20 ஓவர்களுக்கு இடையே பந்துவீசி 43 ஐபிஎல் போட்டியில் 25 விக்கெட்டுகளை மோகித்சர்மா வீழ்த்தியுள்ளார். இதை சரியாக நிரூபித்தார் மோகித் சர்மா.

கடைசி ஒரு ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது.

தோனிக்கும், பிராவோவுக்கும் யார்கர்களை இறக்கிய மோகித் சர்மா திணறடித்து திக்குமுக்காடச் செய்தார். இரு சிங்கள் ரன்களும், 4-வது பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் சிக்ஸரும் மட்டுமே தோனியால் அடிக்க முடிந்தது.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களுக்கு 193 ரன்கள் மட்டுமே சென்னை அணி சேர்த்தது. கிங்ஸ் லெவன் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணித் தரப்பில் ஆன்ட்ரூ டை 2விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஆட்ட நாயகனாக கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார். 

http://tamil.thehindu.com/sports/article23553786.ece?homepage=true

இது அஸ்வினை CSK எடுக்காத கடுப்பில் எழுதியது,

ஒரேயொரு பந்தினைக் சந்தித்த பிரவோ மோகித் சர்மாவின் யாக்கர்களுக்கு எப்படி திணற முடியும்.

தோனியின் தவறு 7 வது ஓவரிலிருந்து 17 ஓவர் வரை மிக மந்தமாக விளையாடியது.

பிராவோவை அனுப்பாது ஜடேஜாவை அனுப்பியது பிளெமிங், இதனை தோனியே பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

வெல்ல வேண்டிய போட்டியை கடைசி 3 ஓவர்களில் அடித்து ஆடலாம் என்ற எண்ணத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள்.

ஏற்கனவே சென்னை ஆடுகளத்திற்கு பதிலாக புனே ஆடுகளத்திற்கு ஏற்ப வீரர்களை தயார்படுத்த வேண்டிய அழுத்தத்தில் உள்ள போது இந்த சோதனை முயற்சி தேவையற்றது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.