Jump to content

Recommended Posts

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு தேர்வு

 

ஜெய்ப்பூரில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL2018 # #KKRvRR

 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு தேர்வு
 
ஜெய்ப்பூர்:
 
ஐ.பி.எல். போட்டியின் 15-வது ‘லீக்‘ ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் - தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
 
முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.
 
இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:
 
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: அஜிங்கியா ரகானே (கேப்டன்), ஷார்ட், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்பா கவுதம், ஷ்ரேயஸ் கோபால், தவால் குல்கர்னி, ஜெய்தேவ் உனத்கட், பென் லாவ்லின்
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: கிறிஸ் லின், சுனில் நரேன், ராபின் உத்தப்பா, நிதிஷ் ரானா, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஆண்ட்ரு ரஸ்ஸெல், ஷுப்மான் கில், டாம் கர்ரன், பியூஷ் சாவ்லா, ஷிவம் மாவி, குல்தீப் யாதவ். #IPL2018 # #KKRvRR
#Tamilnews

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/18195754/1157755/Kolkata-Knight-Riders-won-the-toss-and-opt-to-bowl.vpf

Link to comment
Share on other sites

  • Replies 592
  • Created
  • Last Reply

ஐ.பி.எல் 2018: கொல்கத்தா அணிக்குச் சவாலான இலக்கு!#RRvKKR

 
 

ஐ.பி. எல் 18 -ன் 15 வது லீக் ஆட்டம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. 

ரஹானே

Photo: Twitter/IPL

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக கேப்டன் ரஹானே மற்றும் ஷார்ட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே ரஹானே அதிரடியாகவும், ஷார்ட் நிதானமானவும் விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில் ரஹானே ஆட்டமிழந்தார். ராஹானே 19 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். 
அடுத்ததாக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சாம்சன், இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அவர் 7 ரன்களிள் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய  ஷார்ட் 44 ரன்களில் நிதிஷ் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாகக் களமிறங்கிய திரிபாதி(15), ஸ்டோக்ஸ்(14), கெளதம்(12), ஸ்ரேயேஸ் கோபால்(0) ரன்களிலும் ஆடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  

 

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் நிதிஷ் ராணா மற்றும் குர்ரான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். கொல்கத்தா அணி வெற்றிபெற 20 ஓவர்களில் 161 ரன்கள்  தேவை. 

110/3
Link to comment
Share on other sites

ராஜஸ்தானை எளிதில் விழ்த்திய கொல்கத்தா நைட்ரைடர்ஸ்..! #RRvKKR

 
 

ஐபிஎல் தொடரின் 15 வது லீக் ஆட்டம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதிய இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயஸ் அணியை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

Photo: Twitter/IPL

 

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷார்ட் 44 ரன்கள் குவித்தார். கொல்கத்தா அணி சார்பில் நிதிஷ் ராணா மற்றும் குர்ரான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக நரைனும் க்றிஸ் லின்னும் களமிறங்கினர். முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார் லின். அடுத்து வந்த உத்தப்பா - நரைன் ஜோடி அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது. நரைன் 35 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். பிறகு உத்தப்பாவுடன் கைக்கோர்த்த ராணா சிறப்பாக விளையாடினார். 48 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் உத்தப்பா. பிறகு, பொறுப்புடன் விளையாடிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப்பெறச் செய்தார். இறுதியில், ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா ஆட்டநாயனாக தேர்வுசெய்யப்பட்டார்.

https://www.vikatan.com/news/tamilnadu/122613-kolkata-knight-riders-beat-rajastan-royals-in-jaipur.html

Link to comment
Share on other sites

ரூ.12.5 கோடி ஸ்டோக்ஸ், ரூ.11.5 கோடி உனாட்கட்...ஆடியதோ சொத்தை கிரிக்கெட்: ராஜஸ்தானை ஊதியது கொல்கத்தா

 

 
dinesh%20karthik

படம். | பிடிஐ

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் சொத்தை கிரிக்கெட்டுக்கும் குறிக்கோளுடைய கிரிக்கெட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசமாகும். அப்படி ஆடித்தான் தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அட்டவணையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

முதலில் குல்தீப் யாதவ், சாவ்லா, நிதிஷ் ராணா ஆகியோரைக் கொண்டு அதிரடி தொடக்கம் கண்ட ராஜஸ்தானை 160 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது, பிறகு சுனில் நரைன் (35), ராபின் உத்தப்பா (48) நிதிஷ் ராணா (35), தினேஷ் கார்த்திக் (42) என்று ஆக்ரோஷமாக ஆடி தொழில் நேர்த்தியுடன் 18.5 ஓவர்களில் 163/3 என்று அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் ஏலத்தில் ரூ.12.5 கோடி கொடுத்து பென் ஸ்டோக்ஸையும், இந்திய வீர்ர்களில் ஜெய்தேவ் உனாட்கட்டை ரூ.11.5 கோடிக்கும் ஏலம் எடுத்தது. ஆனால் உனாட்கட் ரூ.11.5 கோடிக்கு முன்பு நன்றாக வீசியவர் அதன் பிறகு பவுலிங்கை மறந்துள்ளார். நேற்று 3 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் 4 டாட் பால்கள், 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள். பென் ஸ்டோக்ஸ் 3 ஓவர்கள் 25 ரன்கள், பந்து வீச்சில் எந்த ஒரு தாக்கமும் இல்லை, ஒரு பீட்டன் கூட செய்ய முடியவில்லை. தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட அவரது பவுலிங் மேப்பின் படி இதுவரை ஆடிய இந்த ஐபிஎல் போட்டிகளில் 3-4 பந்துகளையே ஸ்டம்பில் வீசியுள்ளார் உனாட்கட்.

ராஜஸ்தான் பேட்ஸ்மென் டி ஆர்க்கி ஷார்ட் ஒரு வடிகட்டிய ஆஸ்திரேலிய வீரர் என்பது தெளிவானது, பிக் பாஷ் லீகில் அங்கு கடினமான பவுன்ஸ் பிட்ச்களில் வெளுத்துக் கட்டி 550 ரன்களுக்கும் மேல் எடுத்தவர், அதிகபட்சமாக 122 ரன்களை எடுத்தவர். ஆனால் இங்கு ஐபிஎல் மந்த பிட்ச்களில் அவர் போராடுகிறார். முதல் இரண்டு போட்டிகளில் ரன் அவுட். பெங்களூரு அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் சிக்சர் மழை பொழிய இவரோ 17 பந்துகளில் 11 ரன்களுக்குத் திணறினார்.

நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக எப்படியாவது நின்று விட வேண்டும் என்று போராடினர். 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்து நிதிஷ் ராணா பந்தில் பவுல்டு ஆனார். ஸ்பின்னர்களிடம் திணறினார் ஷார்ட்.

மாறாக சுனில் நரைனை வெளுத்துக் கட்டினார் ரஹானே, ஒரே ஓவரில் அவரை 4 பவுண்டரிகள் விளாச இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் சுனில் நரைன் 4 ஓவர்களில் 48 என்று அதிகபட்ச ரன்களை விட்டுக் கொடுத்தார்.

ரஹானே கிரிக் இன்போவில் வந்த கட்டுரையை படித்திருப்பார் போலும் ‘என்னைப் பற்றியா குறைகூறுகிறீர்கள்?’ என்று 19 பந்துகளில் 5பவுண்டரிகள் 1 சிக்சர் என்று 36 ரன்களுக்கு வெளுத்துக் கட்டினார். ஆனால் ராணாதான் பிரேக்த்ரூ கொடுத்தார், ராணா பந்தை மேலேறி வந்து ஆட முயன்று தோற்ற ரஹானேயின் மட்டையில் மிக லேசாகப் பட்டு லெக் திசையில் பந்து விழ தினேஷ் கார்த்திக் மிக அற்புதமாக இடது புறம் நகர்ந்து பந்தை எடுத்து ஸ்டம்பில் அடிக்க ரஹானே ஆட்டமிழந்தார்.

இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி தொடக்கத்தில் ஷார்ட், ரஹானேயிடம் வாங்கினாலும் அபாய வீரர் சஞ்சு சாம்சனை வேகமான ஷார்ட் பிட்ச் பந்தினால் 7 ரன்களில் பெவிலியன் அனுப்பினார். 13வது ஓவரில் 98/2 என்ற நிலையில் ராணாவிடம் ஷார்ட் ஆட்டமிழக்க திரிபாதி (15), பென் ஸ்டோக்ஸ் (14) ஆகியோரை குல்தீப், சாவ்லா வீழ்த்தினர். கடைசியில் ஜோஸ் பட்லர் 24 ரன்களை ஆட்டமிழக்காமல் எடுக்க 160/8 என்று ஓரளவுக்கு முடிந்தது. சாவ்லா 18 ரன்களையும் குல்தீப் 23 ரன்களையும் கொடுத்து தலா 1 விக்கெட்டைக் கைப்பற்ற நிதிஷ் ராணா, டாம் கரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

கொல்கத்தா ஆக்ரோஷ பேட்டிங்:

கிறிஸ் லின் ரன் எதுவும் எடுக்காமல் கவுதம் பந்தில் பவுல்டு ஆகி 2 பந்துகளிள் வெளியேற நரைன், உத்தப்பா எதிர்த்தாக்குதலில் ராஜஸ்தான் சொத்தைப் பந்து வீச்சு நிலைகுலைந்தது, அடிக்க அடிக்க ஏதாவது செய்ய வேண்டாமா ரஹானே, ஆனால் ஒன்றுமே முயற்சிகளே எடுக்கவில்லை, தீவிரமே இல்லை.

நரைனும் உத்தப்பாவும் 49 பந்துகளில் 69 ரன்களைச் சேர்த்தனர். பிறகு ராணா தனது அருமையான அணுகுமுறையில் 27 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார் அதுவும் மிட் ஆஃப் மேல் அடித்த சிக்ஸ் அபாரமானது. தினேஷ் கார்த்திக் வழக்கம் போல் தன் பாணியில் ஆடினார், உனாட்கட் பந்தை ஸ்கொயர் லெக் மேல் அடித்த சிக்ஸ் அலட்சியம். 23 பந்துகளில் 42 நாட் அவுட்.

சுனில் நரைன் 25 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள், ராபின் உத்தப்பா உண்மையில் ஒரு அபாய வீரர் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்து 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுக்க ராஜஸ்தானை நொறுக்கியது கொல்கத்தா, ஐபிஎல் அட்டவணையில் முதலிடம் பிடித்தது. ஆட்ட நாயகன் நிதிஷ் ராணா.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆட்டத்தில் எந்த ஒரு தீவிரமும் இல்லை, ஏனோதானோவென்று ஒரு ஆட்டத்தை ஆடி தோற்றார்கள்.

http://tamil.thehindu.com/sports/article23599210.ece?homepage=true

Link to comment
Share on other sites

மொகாலியில் இன்று மோதல்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றிக்கு தடை போடும் முனைப்பில் பஞ்சாப்

 

 
18CHPMUCHRISGAYLE

பயிற்சியில் ஈடுபட்ட பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயில்.   -  படம்: அகிலேஷ் குமார்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய உள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. முக்கியமாக பந்து வீச்சாளர்களின் உயர்மட்ட செயல் திறனால் அந்த அணி வெற்றிப் பாதையில் சவாரி செய்து வருகிறது. அதேவேளையில் அஸ்வின் தலைமையில் புதிய வடிவம் பெற்றுள்ள பஞ்சாப் அணி எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்யும் தாக்குதல் பேட்டிங்கை கொண்டதாக அமைந்துள்ளது. அந்த அணி 3 ஆட்டங்களில் இரு வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது.

ஹைதராபாத் அணி இந்த சீசனிலும் பந்து வீச்சில் அதீத பலம் கொண்டுள்ளது. புவனேஷ்வர் குமார், ரஷித் கான், பில்லி ஸ்டேன்லேக், சித்தார்த் கவுல், ஷகிப் அல் ஹசன், சந்தீப் சர்மா ஆகியோர் விக்கெட்களை கைப்பற்றுவதுடன் எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். அதேவேளையில் பேட்டிங் வரிசை அனுபவம் கொண்டதாக அமைந்துள்ளது. விருத்திமான் சாஹா, வில்லியம்சன், ஷிகர் தவண், மணீஷ் பாண்டே ஆகிய ோர் டாப் ஆர்டரிலும் ஷகிப் அல் ஹசன், தீபக் ஹூடா, யூசுப் பதான் ஆகியோர் நடுகள வரிசையிலும் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். எனினும் ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசை இந்த சீசனில் பெரிய அளவிலான இலக்குக்கு எதிராக சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. 3 ஆட்டங்களிலும் அந்த அணி குறைந்த அளவிலான இலக்கை துரத்தி வெற்றி கண்டது. அதிகபட்சமாக மும்பை அணிக்கு எதிராக 148 ரன்கள் இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. அதிலும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில்தான் வெற்றியை எதிரணியிடம் இருந்து தட்டிப்பறித்தது. அதேவேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியை 125 ரன்களுக்குள் மட்டுப்பத்தியது ஹைதராபாத் அணி.

எளிதான இந்த இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. ஷிகர் தவண் (78), வில்லியம்சன் (36) ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தனர். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ஹைதராபாத் அணி பந்து வீச்சாளர்கள் வீரர்கள் முக்கிய பங்கு வகித்தனர். முன்னணி வீரரான புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்கள் வீழ்த்த கொல்கத்தா அணியால் 138 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

மறுபுறம் பஞ்சாப் அணி, வலுவான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனது சொந்த மண்ணில் வீழ்த்திய உற்சாகத்தில் கூடுதல் நம்பிக்கையுடன் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. சென்னை அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 197 ரன்கள் குவித்த போதிலும் ஆட்டம் மிக நெருக்கமாகவே சென்று முடிவடைந்தது. இந்த சீசனில் முதன் முறையாக களம் கண்ட கிறிஸ் கெய்ல் 33 பந்துகளில் 63 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். இதன் மூலம் எதிரணிக்கு பயத்தை ஏற்படுத்தக் கூடிய திறன் இன்னும் தன்னிடம் இருப்பதாக கெயில் உணரச் செய்தார்.

மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுலுடன் இணைந்து கெயில் முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்து அசத்தியிருந்தார். இந்த சீசனில் கே.எல்.ராகுல் 3 ஆட்டங்களிலுமே சிறந்த பங்களிப்பு செய்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர், 16 பந்துகளில் 51 ரன்களும், பெங்களூரு அணிக்கு எதிராக 30 பந்துகளில் 47 ரன்களும் விளாசி மிரட்டியிருந்தார். அதேவேளையில் சென்னை அணிக்கு எதிராக 22 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார். இவர்களுடன் மயங்க் அகர்வால், கருண் நாயர் ஆகியோரும் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

அஸ்வினும் பேட்டிங்கில் சிறப்பாகவே விளையாடி வருகிறார். சீனியர் வீரரான யுவராஜ் சிங்கின் பார்ம் மட்டுமே கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. 3 ஆட்டங்களிலும் அவர் ஒட்டுமொத்தமாக 36 (12, 4, 20) ரன்களே சேர்த்தார். முதன்முறையாக அணியை வழிநடத்தும் அஸ்வின் சக அணி வீரர்களின் திறமையை சரியான விதத்தில் வெளிக் கொண்டுவருவதில் முனைப்பு காட்டுபவராக உள்ளார். முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை சொந்த மண்ணில் வீழ்த்திய நிலையில் அடுத்த ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் அதன் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்த போதிலும் சென்னை அணிக்கு எதிராக மீண்டு வந்திருந்தது பஞ்சாப்.

சென்னை அணிக்கு எதிராக அஸ்வின் கேப்டனாக சமயோஜிதமாக செயல்பட்டார் என்றே கருதப்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக பந்துவீசும் 17 வயதான சுழற்பந்து வீச்சாளாரான முஜீப் உர் ரஹ்மானிடம் இருந்து மீண்டும் ஒரு உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். அவருடன் அஸ்வின், மோகித் சர்மா, அக்சர் படேல், ஆன்ட்ரூ டை ஆகியோரும் பந்து வீச்சில் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article23598851.ece

Link to comment
Share on other sites

ஷாருக்கான் நம்பிக்கை... தினேஷ் கார்த்திக்கின் தன்னம்பிக்கை... கலக்கல் கேப்டன்! #RRvsKKR

 
 

இந்த ஆண்டு ஐ.பி.எல் களத்திலும் ஆளப்போறான் தமிழன் மொமன்ட்கள்தான். சென்னை சூப்பர் கிங்ஸில் பாடம் பயின்றவன் பஞ்சாபுக்குப் பறந்து போய் சென்னையை எப்படி தோற்கடித்தானோ, அதேபோல் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றுத்தந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை உச்சத்துக்குக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறான் சைலன்ட் தமிழன். #RRvKKR

`இந்த நீதிமன்றம் பல விநோதமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது’ என்பதுபோல இந்த ஐ.பி.எல் பல கேப்டன்களைச் சந்தித்திருக்கிறது. `கூல்’ கேப்டன்கள் முதல் `ஆங்கிரி பேர்டுகள்’ வரை கேப்டன்கள் பலவிதம். ஆனால், இவர் மட்டும் அதில் வித்தியாசம். என்ன செய்கிறார் என்றே வெளியே தெரியவில்லை. ஆனால், மாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. 

#RRvKKR

இந்த ஆண்டு ஐ.பி.எல்-ன் தொடக்கத்தில் செம வீக் கேப்டனாகப் பார்க்கப்பட்டவர்தான் தினேஷ் கார்த்திக். முதல் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தியும் தினேஷ் கார்த்திக் மீது யாருக்கும் நம்பிக்கை வரவில்லை. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 202 ரன்கள் எடுத்தும் தோல்வி. வினய் குமாருக்கு அந்த கடைசி ஓவரை ஏன் கொடுத்தார் என்பதில் ஆரம்பித்து, ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் முடிவுகள் எல்லாமே தப்பு என்பதில் வந்து நின்றது. முதல் மூன்று போட்டிகளில் இரண்டில் அடுத்தடுத்து தோல்வி. தினேஷ் கார்த்திக்கிடம் தலைமைப் பண்புகள் இல்லை என்று கிட்டத்தட்ட முடிவே கட்டிவிட்டார்கள். ஆனால், அணியின் உரிமையாளர் ஷாரூக்கான் நம்பிக்கை இழக்கவில்லை.

 கொல்கத்தா அணிக்குள் அடுத்த ஆறு ஆண்டுகள் வரை விளையாடக்கூடிய இளைஞர்கள் இருக்கவேண்டும் என்பது ஷாரூக்கானின் டீம் பிளான். அதனால்தான் இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் இளம் வீரர்களை வரிசைகட்டி எடுத்துக்கொண்டே இருந்தார்கள். 19 வயது ஷுப்மான் கில், 18 வயது நாகர்கோட்டி என முழுக்க முழுக்க இளம் படைதான். கொல்கத்தா அணியில் சீனியர்கள் என்றால் மிட்செல் ஜான்சனும், கேப்டன் தினேஷ் கார்த்திக்கும்தான்.

#RRvKKR

``இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக என்னுடைய திட்டங்களை கெளதம் கம்பீரிடம் சொன்னேன். சில விஷயங்கள் சரியாக வரவில்லை. அமைதியான முறையில் பிரிவதென்று முடிவெடுத்தோம். கன்சிஸ்டன்ஸி, பக்குவம், பொறுப்பு என கடந்த 10 ஆண்டுகளாக, ஐ.பி.எல் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் காட்டும் பர்ஃபாமென்ஸ் வேற லெவல். அவர் நிச்சயம் கொல்கத்தாவுக்கு வெற்றிகளைப் பெற்றுத்தருவார்'' என்றார் ஷாரூக் கான். அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை. 

 அமைதியாக, எந்த அதிரடியும், ஆர்பாட்டமும் இல்லாமல் தொடர்து அடுத்தடுத்த  இரண்டு போட்டிகளில் வென்று 'இவன் வேற மாதிரி' என்று கிரிக்கெட் உலகுக்குக் காட்டியிருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

ராஜஸ்தான் போட்டியில் நடந்தது என்ன?

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்  பெளலிங்கையே தேர்ந்தெடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸின் கோட்டையான இந்த ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் தொடர்ந்து 5 ஆட்டங்களாக தோல்வியே கண்டதில்லை என்கிற கெத்துடன் களமிறங்கியது ராஜஸ்தான். கேப்டன் ரஹானே, ஷார்ட் இருவரும் ஓப்பனிங் இறங்க, எதிர்பக்கம் ஸ்பின்னர்களுடன் ஆட்டத்தை தொடங்கினார் கேப்டன் தினேஷ் கார்த்திக். 

பவர்ஃபுல் ஸ்பின்னர்ஸ்!

பியுஷ் சாவ்லா வீசிய முதல் ஓவரில் 3 ரன், குல்தீப் வீசிய இரண்டாவது ஓவரில் நான்கு ரன், மீண்டும் சாவ்லா வீசிய மூன்றாவது ஓவரில் வெறும் 1 ரன் என பவர்ப்ளேவின் பாதி ஓவர்களில் வெறும் 8 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் எடுக்க, நம்பிக்கை கொண்டார் தினேஷ் கார்த்திக். ஆனால், விக்கெட் எதுவும் விழாததால் நான்காவது ஓவரை குல்தீப்பிடம் கொடுக்காமல் சுனில் நரேனிடம் கொடுத்தார் கேப்டன்.

நரேனை சுளுக்கெடுத்தார் ரஹானே. முதல் நான்கு பந்துகளிலுமே தொடர்ந்து நான்கு பவுண்டரிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் பறந்தது. இந்த ஓவரில் மட்டும் ராஜஸ்தானுக்கு 18 ரன்கள் கிடைத்தது. ஸ்பின்னில் இருந்து வேகப்பந்து வீச்சுக்கு மாறினார் கார்த்திக். இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மவி பெளலிங் போடவந்தார். சிக்ஸர், பவுண்டரி உள்பட இந்த ஓவரில் 13 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான். இரண்டு ஓவர்களும் மாறி மாறி ரன்கள் குவிந்ததால் பவர்ப்ளேவின் கடைசி ஓவரை மீண்டும் சாவ்லாவிடம் கொடுத்தார் கார்த்திக். 

#RRvKKR

பெளலர்களை மாற்றிக்கொண்டேயிரு!

சாவ்லா ஓவரில்  ரஹானேவால் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் விழாமல் 48 ரன்கள் எடுத்துவிட்டது ராஜஸ்தான். மீண்டும் பெளலிங் சேஞ்ச். இந்த முறை பந்து நித்திஷ் ராணா கையில். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் நடந்தது அந்த மேஜிக்கல் ட்விஸ்ட்.

மின்னல் வேக ரன் அவுட். ரஹானே எதிர்பார்க்கவே இல்லை. ராணா பந்தை லெக் சைடில் அடிக்க முயன்று  கிரிஸைவிட்டு வெளியே வரை சட்டென பந்தை எடுத்து ஸ்டம்ப்பில் அடித்தார் தினேஷ் கார்த்திக். ரஹானே அவுட் என்றாலும் இனிதான் ஆபத்தே இருக்கிறது என பயந்துகொண்டுதான் இருந்தார்கள் கொல்கத்தா வீரர்கள். காரணம் சஞ்சு சாம்சன்.

சோர்வான சாம்சன்!

சாம்சனுக்கு ஏனோ  இன்று செட் ஆகவில்லை. குல்தீப் யாதவின் பந்துகளை விரட்டி அடிக்காமல் சிங்கிள்ஸ் எடுப்பதிலேயே கவனம் செலுத்தினார். அந்த நிதானமான ஆட்டம் அடுத்த ஓவரிலும் இருந்திருக்கலாம். ஆனால், அவசரப்பட்டார் சாம்சன். மவியின் பந்தை சிக்ஸர் அடிக்கவேண்டும் என்று தூக்கியடிக்க, அது பேட்டில் சரியாக மீட் ஆகாமல் கேட்ச்  ஆனது. 7 ரன்னில் சாம்சன் அவுட் ஆக, ஆட்டம் கொல்கத்தா கன்ட்ரோலுக்குப் போனது.

டி'ஷார்ட் 44 ரன்களில் ஆட்டம் இழக்க, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 14 ரன்களில் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் 160 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். நரேனின் ஐபிஎல் வரலாற்றில், அதிக ரன் கொடுத்து விக்கெட் எடுக்காமல் இருந்தது இன்றுதான் (4-0-48-0)

ராஜஸ்தான் அணியை சுருட்டியது கொல்கத்தாவின் ஸ்பின் அட்டாக்தான். சாவ்லா, குல்தீப், ராணா என மூன்று ஸ்பின்னர்களும் வீசிய 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 52 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான். பெளலிங் ரொட்டேஷன் இந்த ஆட்டத்தில் சிறப்பாக இருந்ததுதான் தினேஷ் கார்த்திக்குக்கான கிரெடிட்.

#RRvKKR

 

பொறுப்பாக ஆடினால் வெற்றி!

விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக ஆடினால் போதும், வெற்றி உறுதி என்கிற நிலையில் பேட்டிங் செய்ய வந்த  கொல்கத்தாவுக்கு முதல் ஓவரே அதிர்ச்சி. கிறிஸ் லின் மூன்றாவது பந்திலெயே க்ளீன் போல்ட். கெளதம் வீசிய சுழற்பந்து ஸ்டம்ப்புகளை சரித்தது.  ராபின் உத்தப்பா உள்ளே வர, சுனில் நரேன் ஃபார்முக்கு வந்தார்.

மூன்று ஓவர் வரை நிதானம் காத்த சுனில் நரேன், குல்கர்னியின் நான்காவது ஓவரில் சுழன்றடித்தார். தொடர்ந்து மூன்று பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரிகள். அடுத்த ஓவர் உத்தப்பாவின் ருத்ரதாண்டவம் .உனத்கட் வீசிய இந்த ஓவரிலும் மூன்று பவுண்டரிகள். பவர்ப்ளேவின் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 53 ரன்களுடன் கெத்தாக நின்றது கொல்கத்தா.

ஒன்பதாவது ஓவரில் சுனில் நரேன் ரன் அவுட். 25 பந்துகளில் 35 ரன்கள் என பதற்றப்படாமல் ஆடிய நரேன், ஒரு ரன்னுக்காக அவசரப்பட்டு ஓட, அவுட் ஆனார். ஆனால், ராபின் உத்தப்பாவிடம் எந்த அவசரமும் இல்லை. செம நிதானமான ஆட்டம். அடித்து ஆட வேண்டிய பந்துகளை மட்டுமே அடித்தார். மற்றபடி சைலன்ட் சிங்கிள்ஸ்தான். 

13-வது ஓவரில் ரன்ரேட்டை கொஞ்சம் உயர்த்துவதற்காக பவுன்சராக, நல்ல லைனில் வந்த பந்தை சிக்ஸருக்காக தூக்கியடித்தார் உத்தப்பா. பவுண்டரி லைனில் பென் ஸ்டோக்ஸ். சிக்ஸருக்குப் போக வேண்டிய பந்தை தடுத்து, அந்தரத்திலேயே பவுண்டரி லைனுக்கு முன்னாள் பந்தைப் பறக்கவிட்டு, அவர் பவுண்டரி லைனுக்குள் போய் வந்து, பறந்துவந்த பந்தை அசால்ட்டாகப் பிடித்து என... சில விநாடிகளில் சிறப்பான கேட்ச்  மூலம்  கவனம் ஈர்த்தார் ஸ்டோக்ஸ். ஆனால், அவரின் பந்துவீச்சில் எந்த அசத்தலும், அதிரடியும் இல்லை!

#RRvKKR

இது கேப்டன் ஆட்டம்!

கேப்டன் தினேஷ் கார்த்திக் உள்ளே வந்தார். முதல் பந்தில் 2 ரன், அடுத்த பந்தில் 2 ரன், மூன்றாவது பந்தில் பவுண்டரி என மூன்று பந்துகளில் 8 ரன் என வந்த ஓவரிலேயே ஃபார்முக்கு வந்துவிட்டார். தேவையான ரன் ரேட் ஓவருக்கு 8 ரன் என்றபோதும்  தினேஷ் கார்த்திக்கும், ரானாவும் அவசரப்படாமல் ஆடினார்கள் . 

கடைசி நான்கு ஓவரில் 35 ரன்கள் தேவை. உனத்கட் பந்து வீசினார். தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸர், ராணா ஒரு சிக்ஸர் என இந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் எடுத்தது கொல்கத்தா. ரஹானேவின் எந்த பெளலிங் சேஞ்சும் எடுபடவே இல்லை. கடைசி 2 ஓவரில் 10 ரன் தேவை. லாலின் வீசிய இந்த ஓவரில் ஆட்டம் முடிந்தது. சிக்ஸருடன் வெற்றியைக் கொண்டாடினார் தினேஷ் கார்த்திக்.

வெற்றி கிடைக்கும்வரை களத்தில் நின்று 23 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர் என அவுட்டாகாமல் 42 ரன்கள் எடுத்து கேப்டனின் முக்கியத்துவத்தைக் கொல்கத்தாவுக்கு மட்டும் அல்ல, எல்லா ஐ.பி.எல் ரசிகர்களுக்குமே உணர்த்தினார் தினேஷ் கார்த்திக். 

 

கலக்குங்க டிகே!

https://www.vikatan.com/news/sports/122663-kuldeep-chawla-rana-lift-kkr-to-top-of-table.html

Link to comment
Share on other sites

ஐபிஎல்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் லெவன் பேட்டிங் தேர்வு

 
அ-அ+

சண்டிகரில் நடைபெறும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

 
 
ஐபிஎல்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் லெவன் பேட்டிங் தேர்வு
 
ஐபிஎல் தொடரின் 16-வது ஆட்டம் இன்றிரவு 8 மணிக்கு சண்டிகரில் தொடங்குகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் டாஸ் சுண்ட, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் ‘டெய்ல்’ என அழைத்தார். ஆனால் ‘ஹெட்’ விழ, அஸ்வின் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் பில்லி ஸ்டேன்லேக் நீக்கப்பட்டு கிறிஸ் ஜோர்டான் சேர்க்கப்பட்டுள்ளார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/19194548/1157952/IPL-2018-Kings-XI-Punjab-won-toss-select-bat-first.vpf

Link to comment
Share on other sites

2018 ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வரலாறு காணாத வரவேற்பு: முதல் வாரத்தில் டிவி பார்வையாளர்கள் எண்ணிக்கை தெரியுமா?

 

 
csk

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் வார தொலைக்காட்சி, ஆன்லைன் பார்வையாளர்கள் எண்ணிக்கை 371 மில்லியன் என்று தெரியவந்துள்ளது. இது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அதிகபட்ச வரவேற்பாகும்.

முதல்வாரத்தில் தொலைக்காட்சியில் 288.4 மில்லியன் மக்களும் ஹாட்ஸ்டார் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்க்கில் 82.4 மில்லியன் மக்களும் பார்வையிட்டுள்ளனர்

“ஐபிஎல் தொடங்கிய காலத்திலிருந்து முதல் வாரத்தில் இந்த அளவுக்கு அதிகபட்ச பார்வையாளர்கள் இருந்ததில்லை” என்று ஸ்டார் இந்தியா தெரிவித்துள்ளது

குறிப்பாக தெற்கில் 30% பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர். இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காள மொழிகளில் ஹாட்ஸ்டார் லைவ் ரிலே செய்து வருகிறது

தொடக்கம்தான் என்றாலும் இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு இல்லாத வரவேற்பு இந்த ஐபிஎல் போட்டிக்குக் கிடைத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23605919.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - கெயில் அதிரடி சதத்தால் ஐதராபாத் அணிக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்

 

மொகாலியில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெயில் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #IPL2018 #SRHvKXIP

 
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - கெயில் அதிரடி சதத்தால் ஐதராபாத் அணிக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
 
ஜெய்ப்பூர்:
 
ஐ.பி.எல்.லின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டி  
மொகாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.
 
முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும் கிறிஸ் கெயிலும் களமிறங்கினர். இந்த ஜோடி அரை சதம் கடந்த நிலையில், அணியின் எண்ணிக்கை 53 ஆக இருக்கும்போது ராகுல் 18 ரன்களில் அவுட்டானார்.
 
அடுத்து இறங்கிய மயங்க் அகர்வால் 9 பந்துகளில் ஒரு சிக்சர், 2 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த கருண் நாயர் களமிறங்கினார்.
 
201804192202473772_1_srh-2._L_styvpf.jpg
 
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் தூணாக நின்றார் கெயில். இவர் மீண்டும் தனது அதிரடியை தொடர்ந்தார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் பஞ்சாப் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. ஒரு ஓவருக்கு 10 ரன்கள் என்ற அளவில் ரன்களும் கிடைத்தது.
 
சிறப்பாக ஆடிய இந்த ஜோடி அணியின் எண்ணிக்கை 168 ஆக இருக்கும்போது பிரிந்தது. கருண் நாயர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆரோன் பிஞ்ச் இறங்கினார். அதிரடியில் மிரட்டிய கிறிஸ் கெயில் இந்த தொடரின் முதல் சதத்தை பதிவுசெய்தார்.
 
இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. கிறிஸ் கெயில் 63 பந்துகளில் 11 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 104 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 14 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
 
ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான், சித்தார்த் கவுல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
 
இதைத்தொடர்ந்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி ஆடி வருகிறது. #IPL2018 #SRHvKXIP #Tamilnews
 
107/2
Sunrisers Hyderabad require another 87 runs with 8 wickets and 38 balls remaining
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொக்குத்தனமாக போட்டியில் கலந்து கொள்ளாமல் விட்டுவிட்டேன்.பேசாமல் வென்றாலும் தோற்றாலும் கண்ணை முடிக்கொண்டு பஞ்சாப் அணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம்.:unsure::)

Link to comment
Share on other sites

கிறிஸ் கெயில் உதவியுடன் ஹைதராபாத் அணியை வீழ்த்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் ! #KXIPvsSRH

 
 

ஐ.பி.எல் தொடரின் 16வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

Photo: Twitter/IPL

 

டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அதிரடியாக விளையாடிய கெயில், 11 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 63 பந்துகளில் 104 ரன்கள் குவித்து இந்த சீசனின் முதல் சதத்தை பதிவு செய்தார். 20 ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கைக் கொண்டு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் களமிறங்கியது. தவான் எதிர்கொண்ட முதல் பந்து அவரது கையை பதம்பார்த்தது. அதனால், ரிட்டையர்ட் ஹர்ட் என தவான் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த வில்லியம்சன் பொறுப்புடன் விளையாடிக்கொண்டிருக்க, எதிர்முனையில் சாஹா, யூசுஃப் பதான் என அடுத்தடுத்த நடையைக்கட்ட ஆரம்பித்தனர். பிறகு, வில்லியம்சன்னுடம் - மணீஷ் பாண்டே ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்து ரன் சேர்த்தது. 54 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன் ஃபிஞ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.  இறுதியாக, மணீஷ் பாண்டே 57 ரன்களுடனும் சகிப் அல் ஹசான் 24 ரன்களுடனும் களத்தில் நின்றனர். 20 ஓவரின் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கிறிஸ் கெயில் தேர்வு செய்யப்பட்டார். 

https://www.vikatan.com/news/sports/122721-kings-xi-punjab-beat-sunrises-hyderabad-by-15-runs.html

Link to comment
Share on other sites

கிறிஸ் கெய்ல் பாணியை யாரும் காப்பியடிக்க முடியாது: கேப்டன் அஸ்வின் புகழாரம்

ashwinjpg

அஸ்வின். படம். | பி.ஜோதிராமலிங்கம்

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் அதிரடியிலும் பிற்பாடு மோஹித் சர்மா, முஜிப் உர் ரஹ்மான் பந்து வீச்சிலும் அபார வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் கெய்லைப் புகழ்ந்து பேசினார்.

கிறிஸ் கெய்ல் நேற்று மொஹாலி மைதானத்தை அலங்கரிக்கும் ஒளிவெள்ளத்துக்கு ஈடு செய்யும் சிக்சர் விளக்குகளை ஏற்றி 63 பந்துகளில் 1 பவுண்டரி 11 சிக்சர்களுடன் வீழ்த்த முடியாமல் 104 நாட் அவுட் என்று முடித்தார்.

 

ஆட்ட முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் அஸ்வின் கூறியதாவது:

இது ஒரு முழுமையான வெற்றி. 10 ரன்கள் குறைவாகக் கொடுத்து நிகர ரன் விகிதம் குறித்து நாங்கள் பரிசீலித்திருக்கலாம். அது நடக்கவில்லை, இருந்தாலும் மகிழ்ச்சியே.

கிறிஸ் கெய்ல் அவர்களிடமிருந்து வெற்றியைப் பறித்து விட்டார். பவர் பிளேயில் நன்றாக ஆட வேண்டும்.

இன்று ரசிகர்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. மொஹாலியில் இப்படிப்பார்த்ததில்லை. கிறிஸ் கெய்ல் அவர்களுக்கு இன்று விருந்து படைத்தார். கெய்ல் இன்னிங்ஸை வர்ணிக்க ஒரு வார்த்தைப் போதாது. அவரது ஆட்டப்பாணியை யாரும் காப்பியடிக்க முடியாது, அது தனித்துவமான ஒரு பாணி.

அதுவும் அவருக்கு ஆட்டம் சூடுபிடித்தால் அதற்கு இணையான ஒன்றை யாரும் செய்ய முடியாது.

இவ்வாறு கூறினார் அஸ்வின்.

http://tamil.thehindu.com/sports/article23611569.ece?homepage=true

Link to comment
Share on other sites

பீல்டர்கள் பார்வையாளர்களாக, பார்வையாளர்கள் பீல்டர்களாயினர்: ஆர்ப்பாட்டமற்ற கெய்ல் அதிரடி சதத்தில் கிங்ஸ் லெவன் பிரமாத வெற்றி

gayle

சதமெடுத்த கிறிஸ் கெய்ல்.   -  படம். | பிடிஐ.

மொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 16வது போட்டியில் கிறிஸ் கெய்ல் தனது 6வது ஐபிஎல் அதிரடி சதத்தை எடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் சன் ரைசர்ஸ் அணி 15 ரன்களில் முதல் தோல்வியைச் சந்தித்தது.

இந்த ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கிறிஸ் கெய்ல் 1 பவுண்டரி 11 சிக்சர்களுடன் 63 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தாலும் கிங்ஸ் லெவன் அணி 200 ரன்களை எட்டாமல் 193/3 என்று முடிந்தது. தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 178/4 என்று நெருக்கமாக வந்தது போல் தோன்றினாலும் 15-16 ஓவர்களிலேயே தோல்வியை நோக்கியே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று சிஎஸ்கேயை புரட்டி எடுத்த கிறிஸ் கெய்ல் இன்று இந்தத் தொடரின் சிறந்தப் பந்து வீச்சு கொண்ட சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சற்றே ஒளிந்து ஆடி பிறகு சீறி எழுந்தார். புவனேஷ்வர் குமாரை ஒன்றும் செய்ய முடியவில்லை, அவர் ஓவர்களைக் கடந்து வந்து சிறந்த டி20 பவுலரான ஆப்கானின் ரிஸ்ட் ஸ்பின்னர் ரஷீத் கானை முதல் முறையாக விளாசு விளாசென்ரு விளாசினார். அவரது பந்துவீச்சில் மட்டும் 16 பந்துகளில் 42 ரன்களை 6 சிக்சர்களுடன் விளாசினார் கிறிஸ் கெய்ல். ஆனாலும் கடைசி ஓவரை கெய்லுக்கு வீச ரஷீத் கானுக்கு அசாத்திய தைரியம் வேண்டும், அந்த ஓவரில்தான் கெய்லுக்கு வீச வேண்டிய லெந்தையே கண்டுபிடித்துக் கொண்டார் ரஷீத் ஆனால் அதற்குள் அங்கு சேதம் விளைவிக்கப்பட்டு விட்டது.

அதிர்ஷ்டம் இல்லாத ரஷீத்; கெய்ல் சரவெடி:

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த தைரிய கேப்டனானார் அஸ்வின். கெய்லும், கே.எல்.ராகுலும் தொடக்கத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் ஆடினர், புவனேஷ்வர் குமார், கிறிஸ் ஜோர்டானும் சிறப்பாக வீசி ஒரு 12 பந்துகளில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை.

கெய்ல் 14 ரன்களில் இருந்த போது ரஷீத் பந்தை கட் செய்ய விக்கெட் கீப்பர் சஹா ஒரு கடினமான கேட்ச் வாய்ப்பை விட்டார். இதைப் பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும் ஒருவேளை சன் ரைசர்ஸ் தன் வெற்றிப்பயணத்தைக் கூட தொடர்ந்திருக்கலாம்.

முதலில் கெய்ல் ஜோர்டான், ரஷீத் கான் ஆகியோரை 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரி அடித்தார். கே.எல்.ராகுல் புவனேஷ்வர் குமார் பந்தில் எல்.பி. என்று அவுட் கொடுக்கப்பட்டார் ஆனால் பந்து மட்டையில் லேசாகப் பட்டது தெரியவந்ததால் ரிவியூவில் பிழைத்தார்.

ரஷீத் கானின் 5வது ஓவரில் புல்டாஸ் ஒன்றை வீச அலட்டிக்கொள்ளாத சிக்ஸ். அடுத்து ரஷீத் என்ன வீசுகிறார் என்றெல்லாம் கெய்ல் பார்க்கவில்லை அடுத்து கூக்ளியில் பீட்டன் ஆனாலும் அதற்கு அடுத்த பந்தை மீண்டும் ஜென் அமைதியுடன் லாங் ஆனில் சிக்ஸ். 6வது ஓவரில் சித்தார்த் கவுலை ராகுல் 2 ஆஃப் திசை அற்புத பவுண்டரிகளை அடிக்க 6 ஓவர்களில் 49/0 என்று பவர் பிளே முடிந்தது.

gayle2jpg

படம். | அகிலேஷ் குமார்.

 

கெய்ல் சரவெடி சதமெடுத்தும் கிங்ஸ் லெவன் 200 ரன்களை எட்ட முடியாததற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்தால் 7வது ஓவரில் ஹூடா 2 ரன்களையே கொடுத்தார், 8வது ஓவரில் ரஷீத் 2 ரன்களையே கொடுத்து ராகுல் (18) விக்கெட்டைக் கைப்பற்றினார். பிறகு 11 மற்றும் 13வது ஓவர்களில் வெறும் 4+4 ரன்களே வந்தது. புவனேஷ்வர் ஒரு ஓவ்ரில் பவுண்டரியே கொடுக்காமல் 8 ரன்களையும் ஜோர்டான் கடைசியில் ஒரு ஓவரில் 6 ரன்களையே கொடுத்ததும் கிங்ஸ் லெவன் அணியை 200 ரன்களை எடுக்க விடாமல் தடுத்தது.

ராகுல் அவுட் ஆனவுடன் மயங்க் அகர்வால் இறங்கினார், ஹூடா வீச கெய்ல் ஒரு அடி முன்னால் வந்து ஒரே தூக்குத் தூக்கி சிக்ஸ் விளாசினார். ஷாகிப் அல் ஹசனை அகர்வால் 1 பவுண்டரி 1 சிக்சர் அடித்தார் ஆனால் இவரும் 9 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருக்கையில் கவுல் பந்தில் நேராக பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 11 ஓவர்களில் கிங்ஸ் லெவன் 83/2 என்று இருந்தது.

கிறிஸ் கெய்ல் தன் அரைசதத்தை 39 பந்துகளில் எடுத்தார், ஆனால் இவரது இருப்பே பவுலர்களை அச்சுறுத்தியது. வீட்டை ஒரு புலி கண்ணுக்குத் தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் சன் ரைசர்ஸ் அணிக்கு இருந்திருக்கும்.

அது போல்தான் இந்தப் புலி திடீரென பாய்ந்தது, ரஷீத் கானை, ஏ.பி.டிவில்லியர்ஸ் ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் விளாசியதற்குப் பிறகு நேற்று கெய்ல் வரிசையாக 4 சிக்சர்களை அடிக்க அந்த ஓவரில் 27 ரன்கள் வந்தது. ஒன்று புல் லெந்த் அல்லது கொஞ்சம் ஷார்ட், எங்கு போட்டாலும் அடிதான். ரஷீத்துக்கு இது ஒரு புதிய அனுபவம்.

சன் ரைசர்ஸின் முக்கிய பவுலருக்கே இந்தக் கதி ஏற்பட்ட பிறகு ஹூடா போன்றவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை 11வது சிக்சரை அடித்து 99 ரன்களுக்கு வந்த கெய்ல் 19 பந்துகளில் அடுத்த 50 ரன்களை எடுத்து ஐபிஎல் 6வது சதம் கண்டார். கருண் நாயரும் அபாரமாக ஆடி 31 ரன்களை எடுக்க கடைசி ஓவரில் ஏரோன் பிஞ்ச், ரஷீத் கானை ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து 14 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார், கெய்ல் 63 பந்துகளில் 104 நாட் அவுட்.

சன் ரைசர்ஸ் அணியில் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 25 ரன்கள் 1 விக்கெட், ஒரு பவுண்டரி 1 சிக்சர்தான் கொடுத்தார். 10 டாட்பால்கள். ரஷீத் கான் 4 ஓவர்களில் 55 ரன்கள்.

காயமடைந்த ஷிகர் தவண்; விரட்டலில் முடக்கப்பட்ட சன் ரைசர்ஸ்:

கெய்ல் அதிரடியில் ரணகளமாகிப் போன பிட்சில் இலக்கை விரட்டக் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியில் ஷிகர் தவண் காயமடைந்து வெளியேறியது பெரிய சறுக்கலுக்கு இட்டுச் சென்றது, பாரிந்தர் ஸ்ரண் பந்து ஒன்று நல்ல லெந்த்தில் பிட்ச் ஆகி எழும்பியது தவண் கட் செய்ய முயன்றார் இடது முழங்கையில் சரியான அடி. வெளியேறினார்.

மோஹித் சர்மா அன்று கடைசி ஓவரில் தோனியைப் பிடித்து ஆட்டிய தொடர்ச்சியாக பந்தின் வேகத்தை அருமையாக ஏற்றி இறக்கி சஹாவையும் யூசுப் பத்தானையும் பவுல்டு செய்தார்.

கேன் வில்லியம்சன் (54), மணீஷ் பாண்டே (57) ஆகியோர் 3வது விக்கெட்டுக்காக 76 ரன்களைச் சேர்த்தாலும் தேவைப்படும் ரன் விகிதத்துக்கு ஏற்ப அவர்கள் அடிக்க முடியவில்லை. மேலும் ஆப்கானின் புதிர் ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான் 4 ஓவர்களில் 27 ரன்களையே கொடுத்தார், அதில் ஒரேயொரு 4 மட்டும்தான். இத்தனைக்கும் 5 டாட்பால்கள்தான். அப்படியென்றால் அவர் பவுண்டரி பந்துகளை அதிகம் வீசவில்லை என்று பொருள். ஆண்ட்ரூ டையும் சன் ரைசர்ஸ் ‘டைட்’ செய்து 4 ஓவர்களில் 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மோஹித் சர்மா 51 ரன்களைக் கொடுத்தாலும் தொடக்கத்தில் 2 விக்கெட்டுகள் மூலம் முடக்கினார். அஸ்வின் 4 ஓவர்களில் 53 ரன்கள் என்று சோபிக்கவில்லை. 178/4 என்று முடிந்தது.

ஆட்ட நாயகனாக கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/article23611003.ece

Link to comment
Share on other sites

என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: ஆட்ட நாயகன் கிறிஸ் கெய்ல்

 

 
gayle3jpg

படம்.| ஏ.எஃப்.பி.

சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

கிறிஸ் கெய்லை ஏலம் எடுத்த சேவாக், கெய்ல் 2-3 போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்தால் கூட அவர் மீது செய்த முதலீட்டை திரும்ப எடுத்து விடுவோம் என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில் கெய்ல் கடந்த 2 போட்டிகளில் வெற்றிகர இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார்.

அவர் இது குறித்துக் கூறியபோது, “நான் எப்போதும் உறுதியுடன் ஆடுவேன், உலகில் எங்கு சென்று எந்த அணிக்கு ஆடினாலும் என் உறுதியில் மாற்றமில்லை.

நிறைய பேர் கிறிஸ் கெய்ல் நிரூபிக்க வேண்டும் என்று. விரேந்திர சேவாக் என்னை ஏலம் எடுத்து ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்.

‘கிறிஸ் ஓரிரு போட்டிகளை வென்றால் அவர் மேல் இட்ட முதலீட்டுக்கான பெறுமானம் இருக்கும்’ என்று ஒரு நேர்காணலில் சேவாக் கூறியிருந்தார், அவரிடம் இது குறித்து பேச வேண்டும்.

இங்கு சதம் எடுத்ததில் மகிழ்ச்சி. இந்தப் பிட்சை மிஸ் செய்கிறேன், காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க இங்கு வரவில்லை. கிரிக்கெட்டை மகிழ்வுடன் ஆடி நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான்.” இவ்வாறு கூறினார் கிறிஸ் கெய்ல்.

http://tamil.thehindu.com/sports/article23611225.ece

Link to comment
Share on other sites

புனே மைதானத்தில் இன்று சென்னை - ராஜஸ்தான் மோதல்: 2 ஆண்டு தடைக்கு பிறகு நேருக்கு நேர் சந்திப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு

 

 
20CHPMUDHONI

தோனி   -  THE HINDU

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. தடை முடிந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த இந்த ஆட்டம் காவிரி பிரச்சினை போராட்டம் காரணமாக புனேவில் நடைபெறுகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி இந்த சீசனில் 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 2 அணிகளும் மோதவுள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கேப்டன் அஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி தொடரை தோல்வியுடன் தொடங்கினாலும், அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டது. ஆனால் கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் தோல்வி கண்டது. ரஹானே சீராக விளையாடி வருகிறார். அதிரடியாக விளையாடும் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறுகிறார்.

கடந்த சீசனில் அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி மிடில் ஆர்டரில் களமிறங்குவதால் அவரால் சிறந்த பங்களிப்பை வழங்க இயவில்லை. இங்கிலாந்தை சேர்ந்த ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலியாவின் டி’ ஆர்சி ஷார்ட் ஆகியோரிடம் இருந்தும் பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. இதில் டி’ ஆர்சி ஷார்ட் கடந்த ஆட்டத்தில் 43 பந்துகளுக்கு 44 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். பிக்பாஷ் தொடரில் அதிரடியில் மிரட்டிய அவர், தொடக்கத்தில் மந்தமாக விளையாடுவது சற்று பின்னடைவாக உள்ளது.

பந்து வீச்சை பொறுத்தவரையில் கிருஷ்ணப்பா கவுதம், கோபால் ஆகியோர் மட்டுமே நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர். அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் ஆல்ரவுண்டராகவும், ஜெயதேவ் உனத்கட் பந்து வீச்சிலும் இதுவரை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பலம் வாய்ந்த சென்னை அணிக்கு எதிராக ஒட்டுமொத்தமாக இணைந்து வீரர்கள் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும். போட்டிக்கான மைதானம் மாறினாலும் சென்னை அணி வீரர்களின் ஆட்டத்திறனில் குறைவிருக்காது என்றே கருதப்படுகிறது. முதல் 2 ஆட்டங்களிலும் கடைசி ஓவர்களில் த்ரில் வெற்றி கண்ட சென்னை அணி, பஞ்சாப் அணிக்கு எதிராக நெருக்கமாக அமைந்த ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது. முதல் ஆட்டத்தில் பிராவோவும், 2-வது ஆட்டத்தில் சேம் பில்லிங்ஸூம் தங்களது அதிரடி ஆட்டத்தால் வெற்றி தேடிக் கொடுத்திருந்தனர்.

பஞ்சாப் அணிக்கு எதிராக முதுகுவலியுடன் விளையாடினாலும் தோனி கடைசி வரை போராடினார். 44 பந்துகளில் 79 ரன்கள் விளாசிய அவர், வெற்றியை எட்டக்கக்கூடிய நிலையிலேயே தவறவிட்டார். இந்த ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் டுவைன் பிராவோவை களமிறக்காமல் ரவீந்திரஜடேஜாவை களமிறக்கியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

டு பிளெஸ்ஸிஸ் உடல் தகுதியை எட்டி உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் இடம் பெற வாய்ப்புள்ளது. அவர் களமிறங்கும் பட்சத்தில் வாட்சன் அல்லது சேம் பில்லிங்ஸ் நீக்கப்படக்கூடும். முரளி விஜய்யும் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர் விளையாடாத பட்சத்தில் அம்பாட்டி ராயுடு மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும் என கருதப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் இம்ரன் தகிர் நெருக்கடி கொடுக்கக்கூடும்.

http://tamil.thehindu.com/sports/article23610963.ece

Link to comment
Share on other sites

``ஹார்சஸ் ஃபார் கோர்ஸஸ்'' - நீங்களே மறந்துடாதீங்க தோனி! #CSKvsRR

 
 

`சேப்பாக்கத்துக்கு பதில் புனே’ எனப் புதுவீட்டுக்குள் புகுந்து முதல் மேட்ச் ஆடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். மேட்ச் ஃபிக்ஸிங் புகாரால் இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் இருவரும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சந்திக்கிறார்கள். இரண்டு போட்டிகளில் வெற்றி, ஒன்றில் தோல்வி என ராஜஸ்தான் ராயல்ஸுடனான இன்றைய ஆட்டம் தோனி தலைமையிலான சென்னை அணிக்கு நான்காவது ஆட்டம். ராயல்ஸுக்கு இது ஐந்தாவது ஆட்டம். 2 வெற்றி, 2 தோல்வி என அவர்கள் சமநிலையில் இருக்கிறார்கள்.

#CSKvsRR

 

பழம் பெருமைகள் உதவாது! 

2018 ஐ.பி.எல் தொடங்குவதற்கு முன்பு `சென்னை சூப்பர் கிங்ஸ் ரிட்டர்ன்ஸ்’, `சென்னை எப்படிப்பட்ட அணி தெரியுமா?’, `தோனிதான் சூப்பர் கேப்டன் தெரியும்ல’ எனப் பலவித பில்ட் அப்களோடு தொடரைத் தொடங்கியது சென்னை. ஆனால், இப்போது சென்னை சூப்பர் கிங்ஸின் பலங்களைவிட பலவீனங்கள் அதிகம் என்பது மற்ற அணிகளுக்கு மட்டுமல்ல, எல்லா கிரிக்கெட் ரசிகனுக்கும் தெரிந்துவிட்டது. இனி ஆட்டம்தான் பேசவேண்டும். 

தனியொருவன்களின் டீம்!

மும்பை இந்தியன்ஸிடம் இருந்து பிராவோ காப்பாற்றினால், கொல்கத்தாவிடம் இருந்து பில்லிங்ஸ் காப்பாற்றினார். பஞ்சாபிடம் இருந்து தப்பிக்க தோனி தனியொருவனாக முயன்றார். ஆனால், தோனியால் வெற்றியை நெருங்கமுடிந்ததே தவிர வெற்றிபெற வைக்கமுடியவில்லை. மூன்று போட்டிகளிலுமே ஒரு கூட்டாக விளையாடாமல் யாராவது ஒருவர் காப்பாற்றிவிடுவார் என்கிற நிலையில்தான் சென்னையின் ஆட்டம் இருந்தது. ஆனால், இந்த தனியொருவன்களால் கோப்பையை வென்று தரமுடியாது. 

`ஹார்சஸ் ஃபார் கோர்சஸ்’ தியரியை கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பிரபலப்படுத்தியவர் தோனிதான். அந்த தோனி மீண்டும் ஹார்சஸ் தியரியைக் கையில் எடுத்தால்தான் சென்னை அணியைக் கரைசேர்க்க முடியும். 

தோனி

தோனி விளையாடுவார்!

பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் முதுகுவலியால் அவதிப்பட்ட தோனி மீண்டுவிட்டார் என்கிறார்கள். தோனி அணியில் இருக்கிறார் என்பதுதான் சென்னை அணிக்கான மிகப்பெரிய உளவியல் பலம். நேற்று வலைப்பயிற்சியில் தோனி ஈடுபட்டிருந்ததால் இன்றைய மேட்ச்சில் அவர் நிச்சயம் விளையாடுவார்.

சென்னையின் பெளலிங்தான் பேட்டிங்கைவிட மிகப்பெரிய பலவீனமே. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை 165 ரன்களுக்குள் சுருட்டியதுதான் இதுவரை சென்னையின் பெஸ்ட் பெளலிங். கொல்கத்தா, சென்னையின் பெளலர்களை அடித்தது துவைத்து 202 ரன்கள் எடுக்க, பஞ்சாப் 197 ரன்கள் எடுத்தது. அதனால் இன்றைய மேட்ச்சில் நிச்சயம் பெளலிங் மாற்றங்கள் வேண்டும். 

ரஹானே, சாம்சன், பென் ஸ்டோக்ஸ் என பலமான பேட்டிங் லைன் அப் கொண்டிருக்கும் ராஜஸ்தானை தோற்கடிக்க பெளலிங் அட்டாக் சிறப்பாக இருக்கவேண்டும். ராஜஸ்தான் பேட்ஸ்மேன் டார்சி ஷார்ட்டுக்கு பதிலாக இன்றைய மேட்ச்சில் க்ளாஸன் விளையாடக்கூடும். 

வருகிறார் வில்லி!

சென்னை அணியில் மிக முக்கிய மாற்றமாக இன்றைய மேட்ச்சில் டேவிட் வில்லி விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். வேகப்பந்து வீச்சாளரான டேவிட் வில்லி இங்கிலாந்து அணியின் மிக முக்கியமான டி-20 பெளலர். அவரது இடது கை பந்துவீச்சு நிச்சயம் சென்னை அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு மிகச்சிறப்பாக பந்து வீசியவர் சுழற்பந்து வீச்சாளர் கரன் ஷர்மா. இம்ரான் தாஹிருக்கு பதிலாக இன்றைய மேட்ச்சில் கரன் ஷர்மாவை தோனி தைரியமாகக் களமிறக்கலாம். 

ஜடேஜா

என்ன செய்கிறார் ஜடேஜா?

தோனி, ரெய்னாவுக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும், பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபெளமிங்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ரவீந்திர ஜடேஜா மீதுதான் வைத்திருக்கிறார்கள். ஆனால், கொல்கத்தாவுக்கு எதிராக அடித்த அந்த சிக்ஸரைத் தவிர பேட்டிங்கிலும், பெளலிங்கிலும்  இதுவரை ஜடேஜா  ஏமாற்றமே. மேலும், அணியில் அவருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் புதிராகவே இருக்கிறது. இடது கை ஸ்பின்னரான ஜடேஜா இரண்டு மேட்ச்களில் முழுமையாக பந்துவீசவே இல்லை. இவருக்கு காயமா? அல்லது இடது கை ஸ்பின்னரைப் பயன்படுத்துவதில்  தோனிக்கு என்ன பிரச்னை என்றே தெரியவில்லை. அதேபோல் பிராவோ செம ஃபார்மில் இருந்தும், ஃபார்மில் இல்லாத ஜடேஜா அவருக்கு முன்னாள் இறக்கப்படுகிறார். பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் பிராவோவுக்கு முன்னால் ஜடேஜா களமிறக்கப்பட, ஸ்பின்தான் காரணம் என்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ``பிராவோ ஸ்பின்னர்களுக்கு எதிராகத் திணறுவார். அதனால் ஸ்பின்னர்களின் ஓவர்கள் எல்லாம் முடிந்து வேகப்பந்து வீச்சாளர்களின் கைக்கு பந்து வரும்போது பிராவோவை இறக்குகிறோம். ஸ்பின்னர்களை சரியாக சமாளிக்கக்கூடிய பேட்ஸ்மேன் ஜடேஜா. நம்புங்கள்'' என்கிறது சூப்பர் கிங்ஸ் தரப்பு. ஆனால், ஜடேஜாவுக்கு ஏன் பெளலிங் வாய்ப்பு தரப்படுவதில்லை என்பதற்கு மழுப்பலாகவே பதில் சொல்கிறார்கள்.

இரண்டுக்குமே சாதகம்!

புனே மைதானம் பேட்டிங், பெளலிங் என இரண்டுக்குமே கைகொடுக்கும் ஆடுகளம்தான். இந்த பிட்ச்சில் அதிகபட்சமாக 205 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். அதேசமயம் 73 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆகியிருக்கிறார்கள். ஸ்பின், வேகப்பந்து என இரண்டு வகையான பெளலிங்குமே இங்கு எடுபடும். ஆனால், 20/20 போட்டிகளில் ஸ்பின்னர்கள்தான் அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்கள். 

குதிரைகள்...

இந்த மேட்ச்க்கு, இந்த ஆடுகளத்துக்கு என வீரர்களை களமிறக்கினால் மட்டுமே சென்னை, ராஜஸ்தானை வீழ்த்த முடியும். மிக முக்கியமாக ஓப்பனிங் பேட்டிங் பார்ட்னர்ஷிப் மிக முக்கியம். பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் இழக்காமல் அதிரடி ஆட்டம் ஆடினால் மட்டுமே சென்னையின் பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு பிரஷர் குறையும்.

வாட்சன்

விஜய்க்கு பதிலாக ராயுடுவே ஷேன் வாட்சனுடன் ஓப்பனிங் இறங்கலாம். ரெய்னா, தோனி, பில்லிங்ஸ், பிராவோ, ஜடேஜா என பேட்டிங் வரிசை இருந்தால் சிறப்பாக இருக்கும்.

பெளலிங்கைப் பொறுத்தவரை டேவிட் வில்லி, சஹார், பிராவோ ஹர்பஜன் சிங், கரன் ஷர்மாவுடன் ஜடேஜாவையும் பயன்படுத்தலாம். ராஜஸ்தானில் ஸ்டோக்ஸைத்தவிர இடது கை பேட்ஸ்மேன்கள் பெரிதாக இல்லை என்பதால் இடது கை ஸ்பின்னர் ஜடேஜாவை நிச்சயம் சென்னை பயன்படுத்தலாம்.

 

கமான் சிஎஸ்கே!

https://www.vikatan.com/news/sports/122750-csk-vs-rr-match-preview.html

Link to comment
Share on other sites

ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட கெயில்: டி20யில் 21-வது, ஐபிஎல்-இல் 6-வது சதம், 863 சிக்ஸர்கள்: சுவையான சில தகவல்கள்

 
GayleBCCI

கிறிஸ் கெயில்: கோப்புப் படம்   -  படம்: ஏபி

2018-ம் ஆண்டு 11-வது ஐபிஎல் சீசன் ஏலத்தில் முதல்நாளில் புறக்கணிக்கப்பட்ட கிறிஸ் கெயிலை, 2-ம் நாளில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. தனக்கு கிடைத்த இருபோட்டிகளை அருமையாக பயன்படுத்திய கெயில் அரைசதம், சதம் அடித்து தனது இருப்பை உறுதிசெய்துள்ளார்.

சண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 15 ரன்கள் வித்திசாயசத்தில் தோற்கடித்தது அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் அணி. இதில் கிங்ஸ் லெவன் அணி வீரர் கிறிஸ் கெயில் தனது காட்டடி பேட்டிங் மூலம் 63 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்தார். இதில் 11 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி அடங்கும்.

   

அதிகமான சிக்ஸர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று கிறிஸ் கெயில் 11 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் 102 ஐபிஎல் போட்டியில் கிறிஸ் கெயில் 280 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஒட்டுமொத்தமாக கிறிஸ் கெயில் 863 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

gaylejpg

கெயில் : கோப்புப்படம்

 

அதாவது டி20 போட்டிகளில் கெயில் சந்திக்கும் ஒவ்வொரு 8 பந்துகளுக்கும் ஒரு சிக்ஸர் அடித்து வருகிறார் என்பது புள்ளிவிவரங்கள் வாயிலாகத் தெரிகிறது. அடுத்தபடியாக டீவில்லியர்ஸ் தான் சந்திக்கும் ஒவ்வொரு 14 பந்துகளுக்கும் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் அதிகமான சிக்ஸர்கள் அடித்தவர்களில் கெயிலுக்குஅடுத்த இடத்தில் ரோகித் சர்மா 158 போட்டிகளில் 179 சிக்ஸர்கள் அடித்து 2-ம் இடத்தில் உள்ளார். ரெய்னா 159 போட்டிகளில் 174 சிக்ஸர்கள் அடித்து 3-ம் இடத்தில் உள்ளார்.

விராட் கோலி 145 போட்டிகளில் 167 சிக்ஸர்களும், டீவில்லியர்ஸ் 122 போட்டிகளில் 166 சிக்ஸர்களும் அடித்து 5-ம் இடத்திலும் உள்ளனர். 146 போட்டிகளில் விளையாடிய தோனி 162 சிக்ஸர்களும், 114போட்டிகளில் வார்னர் 160 சிக்ஸர்களும் அடித்துள்ளனர்.

ஒட்டுமொத்த டி20 போட்டிகளைப் பொறுத்தவரை கெயிலுக்கு அடுத்த இடத்தில் பொலார்ட் 523 சிக்ஸர்கள் அடித்துள்ளார். கிளப் போட்டிகளில் ஒரே ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் சர்வதேச அளவில் நமீபியா அணிக்கு எதிராக நார்த்வெஸ்ட் வீரர் நிக்கி வான் டென் பெர்க் 12 சிக்ஸர்கள், ஒர பவுண்டரி உள்ளிட்ட 101 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாகும்.

அதற்கு அடுத்ததாக, சிஎஸ்கே அணிக்கு எதிராக கொல்கத்தா வீரர் ரஸல் 11 சிக்ஸர்களும், கெயில் அடித்த 11 சிக்ஸர்களும் இடம் பெறுகின்றன.

21-வது சதம்

கிறிஸ் கெயிலைப் பொறுத்தவரை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக அவர் அடித்த சதம் டி20 போட்டிகளில் அடித்த 21-வது சதமாகும். ஐபிஎல் போட்டிகளில் விளையாடி கெயில் அடிக்கும் 6-வது சதமாகும்.

மேலும் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் கெயில் 6 சதங்களும் கரிபியன் ப்ரிமியர் லீக்கில் 3 சதங்களும், அடித்துள்ளார். இதுபோல டி20 உலகக்கோப்பையில் 2 சதங்கள், ராம்ஸ்லாம் டி20, நாட்வெஸ்ட் டி20, ஸ்டான்பிக் பேங்க் டி20, பிக்பாஷ் லீக் ஆகியவற்றிலும் தலா ஒருசதம் கெயில் அடித்துள்ளார்.

ipl-20jpg
 

மேலும், ஐபில் போட்டிகளில் கெயில் இதுவரை 6 சதங்கள் அடித்துள்ளார். அதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்று 5 சதங்களும், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று ஒருசதமும் அடித்துள்ளார். இதில் பெங்களூரு அணியில் இடம் பெற்று கெயில் அடித்த இருசதங்கள் கிங்ஸ்லெவன் அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 102 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெயில், 23 அரைசதங்கள், 6சதங்கள் உள்பட 3,873 ரன்கள் குவித்துள்ளார்.

சில சுவையான தகவல்கள்

1. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கெயில் 104 ரன்கள் சேர்த்ததே அந்த அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட தனிஒருவீரரின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் கடந்த 2015-ல் மெக்குலம் 100 ரன்கள் சேர்த்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

2. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கெயில் அடித்த சதம், இதற்கு முன் அடிக்கப்பட்ட சதங்களில் மிக மெதுவான, அதிகபந்துகளில் எடுக்கப்பட்ட சதமாகும்.

3. சன்ரைசர்ஸ் வீரர் ராஷித் கான் ஓவரில் கெயில் தொடர்ந்து 6 சிக்ஸர்கள் அடித்தார். இதுதான் ராஷித் கான் 55ரன்கள் கொடுத்தார். இதுதான் அவரின் பந்துவீச்சில் மிகமோசமானதாகும். இதற்கு முன் 2015ம் ஆண்டுபுலவாயோ நகரில் ஜிம்பாப்பே அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வீரர் ராஷித்கான் 52 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

4. ரஷித் கான் பந்துவீச்சில் மட்டும் நேற்று கெயில் 6 சிக்ஸர்கள் அடித்தார். இதற்கு முன் இதேபோல ஒருவர் ஓவரில் அதிகபட்ச சிக்ஸர் அடித்தவர்களாக விராட் கோலி,  ரஸல் ஆகியோர் வரிசையில் கெயில் இடம் பெற்றார். மேலும், அதிகமான சிக்ஸர் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்களாக கே.சி.கரியப்பா, டிவைன் பிராவோ, முகம்மது ஷமி ஆகியோர் வரிசையில் ராஷித் கான் இடம் பெற்றார்.

5. தொடரந்து 4 சிக்ஸர்களை இதுவரை 6 பேட்ஸ்மேன்கள் அடித்துள்ளனர். அதில் கெயில் மட்டும் 2 முறை அடித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23617316.ece

Link to comment
Share on other sites

பிளேயிங் லெவனில் மீண்டும் ரெய்னா, ஹர்பஜனுக்கு ஓய்வு! புனேவில் சென்னை பேட்டிங் #CSKvRR

 
 

ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கெதிராக டாஸ்வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்சன்

சென்னையிலிருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றப்பட்ட நிலையில், புனே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணியின் ஆடும் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாகக் கடந்த போட்டியில் விளையாட சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல், சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்குப் பதிலாக, கரண் ஷர்மா ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

அதேபோல், ராஜஸ்தான் அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தவால் குல்கர்னிக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பின்னியும், தொடக்க வீரர் டி ஆர்கி ஷார்ட்டுக்குப் பதிலாகத் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிளாசனும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். பந்தைச் சேதப்படுத்திய புகாரில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித்துக்குப் பதிலாக ராஜஸ்தான் அணியில் கிளாசன் சேர்க்கப்பட்டிருந்தார். 

53/1
Link to comment
Share on other sites

`ஷேன் வாட்சன் அசத்தல் சதம்!’ - 204 ரன்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ்#CSKvRR

 

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கெதிரான லீக் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. 

வாட்சன்

Photo: Twitter/IPL

ஐ.பி.எல் 2018 -ல் இன்று புனே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இரு அணிகளும் 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் முதல் முறையாக மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே சென்னை அணியை முதலில் பேட் செய்ய பணித்தார். சென்னை அணியில் முரளி விஜய்க்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்குத் திரும்பினார். ஹர்பஜனுக்குப் பதிலாகக் கரண் ஷர்மா சேர்க்கப்பட்டிருந்தார். தொடக்க ஆட்டக்காரராக ஷேன் வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். அம்பதி ராயுடு 8 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய ரெய்னா, வாட்சனுடன் இணைந்து அதிரடியாக விளையாட, சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென ஏறியது. 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. அரை சதத்தை நெருங்கிய ரெய்னா 46 ரன்னில் ஆட்டமிழந்தார். 

 

அதன் பின்னர் சென்னை அணியின் கேப்டன் தோனி களமிறங்கினார். சந்தித்த இரண்டாவது பந்திலே பவுண்டரி அடித்த அவர், அடுத்த பந்தில் சிக்ஸ் அடிக்க முயல, அது கேட்ச் ஆனது. அடுத்ததாக பிராவோ களமிறங்கினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம், தன் அதிரடியில் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டார் வாட்சன்.  அவர், 51 பந்துகளில் சதமடித்தார். இது அவருக்கு 3 -வது ஐ.பி.எல் சதமாகும். 57 பந்துகளில் 106 ரன்கள் எடுத்த வாட்சன் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. பிராவோ (24), ஜடேஜா(2) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணிதரப்பில் ஸ்ரேயேஸ் கோபால் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்தார், 

https://www.vikatan.com/news/sports/122827-watson-century-helps-to-set-a-good-target-against-rajasthan.html

Link to comment
Share on other sites

ஐபிஎல் 2018- பர்பிள் தொப்பியை வைத்திருக்கும் மயாங்க் மார்கண்டே

 
அ-அ+

ஐபிஎல் 11-வது சீசனில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை தக்க வைத்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் மார்கண்டே. #IPL2018

 
 
ஐபிஎல் 2018- பர்பிள் தொப்பியை வைத்திருக்கும் மயாங்க் மார்கண்டே
 
ஐபிஎல் 11-வது சீசன் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. சென்னை சூப்பர் கிஙஸ் அணியை தவிர்த்து மற்ற அணிகள் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டன. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாதித்த போதிலும், வேகப்பந்து வீச்சாளர்களும் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

சுழற்பந்து வீச்சில் குறிப்பாக லெக்ஸ்பின்னர்களும், ரிஸ்ட் ஸ்பின்னர்களும் அசத்தி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியின் மயாங்க் மார்கண்டே நான்கு போட்டிகளில் 15 ஓவர்கள் வீசி 113 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிறிஸ் வோக்ஸ் 4 போட்டியில் 14.2 ஓவர்கள் வீசி 150 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனிலை நரைன் 5 போட்டிகளில் 19 ஓவர்கள் வீசுி 130 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கட்டுக்கள் சாய்த்துள்ளார்.

ஆர்சிபியின் உமேஷ் யாதவ் 4 போட்டிகளில் 16 ஓவர்கள் வீசி 145 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் கைப்பற்றி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

ராகுல் டெவாடியா 4 போட்டியில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 5-வது இடத்தில் உள்ளார். அதன்பின் சித்தார்த் கவுல், குல்தீப் யாதவ், டிரென்ட் போல்ட், குருணால் பாண்டியா, புவனேஸ்வர் குமார் முறையே 6 முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.

201804201830556042_1_Capture-s._L_styvpf.jpg

அதிக ரன்கள் அடித்தவர்களில் விராட் கோலி 4 இன்னிங்சில் 201 ரன்களுடன் முதல் இடம் வகிக்கிறார். இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் 185 ரன்களும், கிறிஸ் கெய்ல் 167 ரன்களும், நிதிஷ் ராணா 162 ரன்களும், அந்த்ரே ரஸல் 153 ரன்களும், கேஎல் ராகுல் 153 ரன்களும், தினேஷ் கார்த்திக் 151 ரன்களும், கேன் வில்லியம்சன் 146 ரன்களும், எவின் லெவிஸ் 142 ரன்களும், கருண் நாயர் 139 ரன்களும் அடித்துள்ளனர்.

அந்த்ரே ரஸல் 19 சிக்சர்களடன் முதல் இடத்திலும், கிறிஸ் கெய்ல் 15 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், சஞ்சு சாம்சன் 12 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/20183055/1158096/IPL-2018-Mayank-markande-purple-cap-with-8-wickets.vpf

Link to comment
Share on other sites

வாட்சன் அதிரடியால் ராஜஸ்தான் அணியை அபாரமாக வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

 
அ-அ+

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் வாட்சன் அதிரடி சதத்தின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. #VivoIPL #CSKvRR

 
 
 
 
வாட்சன் அதிரடியால் ராஜஸ்தான் அணியை அபாரமாக வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
 
 
புனே:
 
ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டம் புனேவில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரகானே பந்து வீச்சு தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா, கரண் சர்மா ஆகியோரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கிளாசன், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஸ்டூவர்ட் பின்னி வீசினார். போட்டியின் முதல் பந்தை நோ-பாலாக வீசினார். அதற்குப் பதிலாக வீசிய பந்தை வாட்சன் பவுண்டரிக்கு விரட்டினார். அத்துடன் அந்த ஓவரில் மேலும் இரண்டு பவுண்டரிகள் விரட்டினர். 5-வது பந்தில் வாட்சன் கொடுத்த கேட்சை திரிபாதி ஸ்லிப் திசையில் பிடிக்க தவறினார்.
 
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட வாட்சன் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் சதமடித்தார். ராயுடு 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து களமிறங்கிய ரெய்னா 29 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். இதன் பின்னர் களமிறங்கிய தோனி 5, பில்லிங்ஸ் 3 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 
 
201804202346540797_1_watsoncsk._L_styvpf.jpg
 
106 ரன்கள் எடுத்து வாட்சன் கடைசி ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் களமிறங்கிய பிராவோ அதிரடியாக விளையாட சென்னை அணி 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்கியா ரகானே, ஹெயின்ரிச் கிளாசென் ஆகியோர் களமிறங்கினர். கிளாசன் 7 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரகானே 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
 
அதன்பின் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். பட்லர் 22 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிவந்த ஸ்டோக்ஸ் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் அணி 113 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 
 
201804202346540797_2_ipl2004._L_styvpf.jpg
 
இறுதியில் ராஜஸ்தான் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சென்னை அணி பந்துவீச்சில் தீபக் சஹார், ஷர்துல் தாகுர், வெய்ன் பிராவோ, கரண் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 
 
சென்னை அணியின் வாட்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின்மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் போட்டிகளில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #CSKvRR #VivoIPL #TamilNews

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/20234654/1158121/IPL-2018-Chennai-Super-Kings-beat-Rajasthan-Royals.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.