Jump to content

காட்டூன்களை உருவாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படைப்புக்களத்தில் எந்த தலையங்கத்தின்கீழ் இதைப்பதிவது என்று தெரியவில்லை. அதனால் இங்கு பதிகிறேன்.

காட்டூன்களை உருவக்குதல் என்ற மாப்பிளையின் ஐடியாவிற்கு செயல்வடிவம் கொடுக்கும் நோக்குடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். மென்பொருட்களில் தேர்ச்சியுடையோருக்கும், மென்பொருள் சம்பந்தமான அனுபவ அறிவைப்பெற விரும்புவோருக்கும் தமது பொழுது போக்கு நேரத்தை பிரயோசனமாக செலவழிக்க இது வழிவகுக்கலாம். ஆனால் எல்லாரும் காட்டூன் ஐடியாக்களை வழங்குவதன் மூலம் பங்களிப்புச் செய்ய முடியும்.

முதலாவதாக, காட்டூன்களை உருவாக்குவது தொடர்பாக இந்தத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் தமது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்வது வரவேற்கத் தக்கது. எனக்குத் தெரிந்த வரையில், யாழின் அங்கத்தவரான சபேசன் நிருவகிக்கும் www.webeelam.com என்ற தளத்தில் தான் புதுப்புது காட்டூன்கள் வெளிவருகின்றன. இந்த வகையில், சபேசன் அவர்களை இங்கு காட்டூன் உருவாக்கம் சம்பந்தமாக ஒரு அறிமுகப் பதிவு வைக்கும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பதிவில், எவ்வாறு காட்டூன் களுக்கான கருத்தை தெரிவு செய்வது, எவ்வாறு திட்டமிடுவது, என்னென்ன மென்பொருட்களினை பாவிக்கலாம் போன்ற விடயங்களை உள்ளடக்குவது வரவேற்கத்தக்கது. இவ்வாறு உருவாக்கப்படும் காட்டூன்களை நாங்கள் மற்றைய இணையங்களுக்கும் மற்றும் பத்திரிகைகளுக்கு அனுப்பியும் பிரசுரிக்கச் செய்யலாம் (கோரலாம்).

காட்டூன் உருவாக்கம் தொடர்பான வேறுபல செய்திகளையும் தகவல்களையும் இங்கு இணையுங்கள். இது தொடபான உங்கள் அறிவையும் அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும், பங்களிப்பை பொறுத்து நாங்கள் காட்டூன் இயற்றும் போட்டியும் வைத்து பெறுமதியான பரிசில்களை வழங்கலாம்.

காட்டூன் படங்களை வரைவதற்கு முன்னர் என்னத்தை வரைய வேண்டும் என்று இங்கு விவாதிக்கலாம். இந்த வகையில், மென்பொருட்களில் பரிச்சயமில்லாதவர்களின் பங்களிப்பும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஒருவர் இப்படி ஒரு காட்டூனை வரையலாம் என்று எழுத்தில் பதியலாம். அதற்கு மற்றவர்கள் விமரிசனங்களினையும் முன்னேற்ற ஐடியாக்களையும் பதிவதன் மூலம் அந்த மூலக்கருத்தை வளப்படுத்தலாம். இதன் பின்னர், அதை வரையலாம். இந்த வகையில் எமது காட்டூன் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது நாங்கள் விவாதித்து முடிவுக்கு வந்த ஒரு கருவைப் பற்றி காட்டூன் வரையும் போட்டியை வைக்கலாம்.

உங்கள் கருத்தை முன்வையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழுள்ள இணைப்பையும் பார்க்கவும்..

http://kirukkall.blogspot.com/

Tamil Guardian இல் வரும் காட்டூன்கள் இவராலே வரையப்படுகின்றன.

http://www.tamilguardian.com/section.asp?type=7

Link to comment
Share on other sites

...

அந்தப் பதிவில், எவ்வாறு காட்டூன் களுக்கான கருத்தை தெரிவு செய்வது, எவ்வாறு திட்டமிடுவது, என்னென்ன மென்பொருட்களினை பாவிக்கலாம் போன்ற விடயங்களை உள்ளடக்குவது வரவேற்கத்தக்கது.

...

கருத்துக்களையும் திட்டமிடலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் காட்டூன் வரைவது சித்திரக் கலைஞர்களாலேயே முடியும். மென்பொருட்களினால் காட்டூன் வடிவமைப்பது கடினம். பென்சிலால் கடதாசியில் வரைவதே இலகுவானதாகும். பின்னர் அதை scan செய்து Photoshop அல்லது Illustrator போன்ற பென்பொருட்களைப் பாவித்து மெருகேற்றலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களையும் திட்டமிடலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் காட்டூன் வரைவது சித்திரக் கலைஞர்களாலேயே முடியும். மென்பொருட்களினால் காட்டூன் வடிவமைப்பது கடினம். பென்சிலால் கடதாசியில் வரைவதே இலகுவானதாகும். பின்னர் அதை scan செய்து Photoshop அல்லது Illustrator போன்ற பென்பொருட்களைப் பாவித்து மெருகேற்றலாம்.

யாழில் சித்திரக்கலைஞர்களும் இருப்பார்கள் தானே? :D

flash என்ற மென்பொருளை உபயோகப்படுத்தி இலகுவில் காட்டூன்களை உருவாக்கலாம் என நினைக்கிறேன். :lol:

கீழுள்ள இணைப்பையும் பார்க்கவும்..

http://kirukkall.blogspot.com/

Tamil Guardian இல் வரும் காட்டூன்கள் இவராலே வரையப்படுகின்றன.

http://www.tamilguardian.com/section.asp?type=7

தகவலுக்கு நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

flash என்ற மென்பொருளை உபயோகப்படுத்தி இலகுவில் காட்டூன்களை உருவாக்கலாம் என நினைக்கிறேன். :lol:

காட்டூனை அசைபடமாக மாற்றுவதற்குத்தான் Flash பாவிக்கலாம். வரைவதற்கு அல்ல.

Link to comment
Share on other sites

உங்கள் உரையாடலை தொடர்ந்து நான் காட்டுன் வரைதலுக்கான் மென்பொருட்களை தேடிப் பார்த்தேன் இதோ லிங்ஸ்

http://www.programurl.com/software/cartoons.htm

Link to comment
Share on other sites

காட்டூனை அசைபடமாக மாற்றுவதற்குத்தான் Flash பாவிக்கலாம். வரைவதற்கு அல்ல.

சாதாரணமாக Windows இல் Paint என்னும் மென்பொருளைப் பாவித்து

காட்டூன்களை வரையலாம். நீங்கள் கருதுவது போன்று அசையும்

படங்களுக்கு Flash ஐயும் உபயோகிக்கலாம்.

Link to comment
Share on other sites

பண்டிதரின் முயற்சி நல்ல பலனைத்தந்துள்ளதுடன் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. நன்றி. கிருபன், லிசா,வானவில் போன்றவர்களும் பயனுள்ள செய்திகளைத்தந்துள்ளார்கள். கிறுக்கல்.----கொம் ஊடாகவும் தமிழ் கார்டியன் உடாகவும் பல காட்டூன்கள் பார்க்கக்கூடியாதாக இருந்தது. சர்வ தேச தரத்திற்கு சில இருந்தன.பல செய்திகளை ஒரு பார்வையில் சொல்லும் காட்டூன்களை ஒவ்வொரு செய்திகள் வரும் போதும் கற்பனை செய்து நகைச்சுவையாகவும் எளிமையாகவும் கீறி சர்வதேச ஊடகங்களில் வெளிவரும் நாள் விரைவில் வர வைப்போம்....

இது கரு ------ உங்கள் திறமையை காட்டுங்கள் பார்ப்போம்

இலங்கை அரசுக்கு உலகம் தொலைவில் பல பொதிகளை காட்டுகிறது

அதில் ஒன்று மனித உரிமைகள் 2வது உலக நிதி உதவி இதில் கண்ணுக்கு எது தெரியும் இலங்கைக்கு....... அருச்சுனனுக்கு வில் பயிற்சி போது குருவி மட்டும் தெரிந்தது அவன்

எங்கெ உங்கள் திறமை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கரு ------ உங்கள் திறமையை காட்டுங்கள் பார்ப்போம்

இலங்கை அரசுக்கு உலகம் தொலைவில் பல பொதிகளை காட்டுகிறது

அதில் ஒன்று மனித உரிமைகள் 2வது உலக நிதி உதவி இதில் கண்ணுக்கு எது தெரியும் இலங்கைக்கு....... அருச்சுனனுக்கு வில் பயிற்சி போது குருவி மட்டும் தெரிந்தது அவன்

எங்கெ உங்கள் திறமை?

உங்கள் பதிவுக்கு நன்றி KUGGOO. தொடர்ந்து இது தொடர்பான உங்கள் சிந்தனைகளை தொடர்ந்து இங்கு பதியுங்கள். யாரும் அவற்றை வரைந்து போடவில்லையே என்ற கவலை வேண்டாம். எங்கள் கடமையை நாங்கள் செய்வோம் (பலனை எதிர்பார்க்காமல்).

யாராவது ஒரு வரைஞர் கட்டாயம் வருவார். :lol:

Link to comment
Share on other sites

  • 3 years later...

வரவேற்கத்தக்க போராட்டங்கள் தான்... ஆனால் ஏன் இன்னமும் இந்த தளங்களில் இயங்கமுடியவில்லை? அல்லது ஏன் இன்னமும் தாமதிக்கின்றீர்கள்? இதுதான் இப்போதைய காலத்தில் தேவையான போராட்ட முறையும் கூட.... யார் முன்வந்து செய்யப்போகின்றீர்கள்? நான் இந்தத் திட்டங்களில் பங்களிக்க தயாராக தாராள மனத்துடன் இருக்கின்றேன். வேறு யார் இந்த செயற்திட்டங்களை முன்வந்து செய்யப்போகின்றீர்களோ செய்யுங்கள்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.