Jump to content

பிடித்த பழைய பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மழையை வைத்து நிறைய சினிமா பாடல்கள் இருக்கின்றன. ஆனால்  “ஏழை சிந்தும் நெற்றி வியர்வை”,”கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளி”, “துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தைஎன்று  மழைக்கு உவமை சொன்ன ஒரு கவிஞன் .மருதகாசியாகத்தான் இருக்க முடியும்.

 

அதிலும்முட்டாப் பயலே மூளை இருக்கா?” என்று காதலி காதலனைப் பார்த்து கேட்கும்  விதமாக  ஒரு வரியை எழுதி விட்டு அடுத்த வரியில் அழகாக மாற்றி இருப்பது கவிஞரின் திறமை.

 

டி.ஆர். மஹாலிங்கம் அவர்களுடன் இசைக்குயில் பி. சுசீலா இணைந்து பாடிய  பாடல் 

கே.வி. மஹாதேவன் இசையில் ஆட வந்த தெய்வம் திரைப்படத்தில் வந்த இந்தப் பாடலுக்கு டி.ஆர். மஹாலிங்கத்தோடு ஆட்டம் போடுபவர் அன்றைய. நாட்டிய தாரகை .வி.சரோஜா.

 

பொறுமை இருந்தால் மட்டும் கேளுங்கள். பிறகு என்னை திட்டக் கூடாது.

 

https://m.youtube.com/watch?v=7unLk8rkpuk

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

மழையை வைத்து நிறைய சினிமா பாடல்கள் இருக்கின்றன. ஆனால்  “ஏழை சிந்தும் நெற்றி வியர்வை”,”கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளி”, “துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தைஎன்று  மழைக்கு உவமை சொன்ன ஒரு கவிஞன் .மருதகாசியாகத்தான் இருக்க முடியும்.

அதிலும்முட்டாப் பயலே மூளை இருக்கா?” என்று காதலி காதலனைப் பார்த்து கேட்கும்  விதமாக  ஒரு வரியை எழுதி விட்டு அடுத்த வரியில் அழகாக மாற்றி இருப்பது கவிஞரின் திறமை.

 

 

கவிஞரே, நேரடியாக பாடலை இப்படி இணைக்கலாமே..?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ இணைப்பை சரியாக இணைக்கத் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

ராசவன்னியன் உங்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

வீடியோ இணைப்பை சரியாக இணைக்கத் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

  1. 'யுடியூப்' காணொளியின் கீழ் வலதுகோடியில்  'SHARE' என்றொரு பொத்தான் இணைப்பு இருக்கும். அதை சொடுக்கினால் இக்காணொளியின் இணைப்பு சிறிய பெட்டி செய்தியில் கிட்டும்..
  2. அந்த இணைப்பை சுட்டியால்  copy செய்யவும்..
  3. அப்படி copy செய்த இணைப்பை, யாழ் பதிவு பெட்டியில் இணைத்துவிட்டு(paste), ஓ.கே செய்தால் பதிவு காணொளியோடு கிட்டும்.

விளக்கம் கீழே..

Untitled.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் நன்றி.

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ

 

பாடல்: சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ

படம்: சந்திரோதயம்

பாடலாசிரியர்: வாலி

இசை: எம் எஸ் வி

 

இந்தப் பாடல் எனக்கு பிடித்ததற்கான காரணம் அதனது இசை மட்டுமல்ல பாடலின் ஒவ்வொரு வரியிலும் கவிஞர் வாலி அள்ளிப் போட்டிருக்கும் உவமைகளுமே.

சந்திரோதயம், பெண்ணோவியம், செந்தாமரை,குளிர் காற்று கிள்ளாத மலர். கிளி வந்து கொத்தாத கனி. மேகம் தழுவாத நிலவு. முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பு. நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பு. சங்கீதம் பொழிகின்ற மொழி. கோயில் குடி கொண்ட சிலை,இளம் சூரியனது வடிவம். செவ்வானத்தின்  நிறம். பொன் மாளிகை போன்ற மனம் என்று பல உவமைகள் இந்தப் பாடலில் கொட்டிக்கிடக்கின்றன.

இலங்கை வானொலியில் அன்று இந்தப் பாடலை ஒலிபரப்பும் பொழுது,

இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ

இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ

மடிமீது தலை வைத்து இளைப்பாறவோ

முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ என்ற வரிகளை இசைத்தட்டில் கேட்க முடிந்தது. தணிக்கை காரணமாக படத்தில்,

எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ

எனக்கென்று சுகம் வாங்கத் துணை தேடவோ

மலர்மேனிதனைக் கண்டு மகிழ்ந்தாடவோ

மணக்கின்ற தமிழ் மண்னில் விளையாடவோ

கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ என மாற்றி இருந்தார்கள். படத்தில் வந்த காட்சியை பாடலோடு தரவேற்றம் செய்திருப்பதால் அசலை கேட்க வாய்ப்பில்லை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு பின்னணி பாடுவதற்கு எல்.ஆர்.ஈஸ்வரிதான் பொருத்தமானவர் என்ற கணிப்பு இருந்தது.

 

பொதுவாகவே தான் நடிக்கும் படங்களில் இடம் பெறும் மெலோடிப் பாடல்களுக்கு எஸ்.ஜானகியையே எம்.ஜி.ஆர் சிபாரிசு செய்வார். ஜெயலலிதாவுக்காக அதை மாற்றி, சில பாடல்களில் எல்.ஆர்.ஈஸ்வரியை பாட அனுமதி  அளித்தார் என்பதில் இருந்து அந்த கணிப்பின்  உண்மை தெரியும்.

 

எல்.ஆர்.ஈஸ்வரி, ரி.எம்.எஸ் உடன் இணைந்து குமரிக்கோட்டம் திரைப்படத்தில் பாடிய,

நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்

என காதல் தேவதை சொன்னாள்...” பாடல் அன்றைய காதலர்களுக்கு அமுதமாக இருந்தது. அதுவும் பாடலின்  முதல் பாதியில் முழுவதுமாக (ஹம்மிங் தவிர்த்து) பெண் குரலை மட்டும் தனியாக ஒலிக்க விட்டுபின்னர் ஆண் குரலும் இணைந்து கொள்ளும் போது பாடல் மேலும் இனிமையாகிறது.

 

கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலுக்கு விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். பெண்ணுக்கு இடது கண்ணும், ஆணுக்கு வலது கண்ணும் துடித்தால் நல்லது நடக்கும் என்பது முன்னவர்களின் கணக்கு.

 அதை இந்தப் பாடலில் வாலி நினைவூட்டியிருப்பார். மேலும் ஒவ்வொரு வரிகளிலும் உவமை வைத்து,

ட்டப்லினில் நிலவெரிக்க

நிலவினில் ர் சிரிக்க

ரினில் து இருக்க

து உண்ணம் துடிக்க

 

ட்டக்ருவிழி ழைக்க

வினில் உறவிருக்க

உறவினில் இரவிருக்க

இரவுகள் ர்ந்திருக்க

 

வெள்ளிப் னி விழும் லையிருக்க

லையினில் ழையடிக்க

ழையினில் தி பிறக்க‌ 

தி ந்து ல் க்க

 

என்று அந்தாதியில் அமைந்த பாடலாகவும் எழுதியிருப்பார்.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்திலே உரம் வேணுமடா

ஒரு விடயத்தை சத்தமாக உரத்த குரலில் சொன்னால்தான் புரியுமென்றில்லைமென்மையாகஅமைதியாகச் சொன்னாலே போதும் மனதில் பதிந்து விடும்

அறுபதுகளில் வெளிவந்த சரித்திரக் கதைகள் கொண்ட திரைப்படங்களில் நாயகன் குதிரையில்பயணித்துக் கொண்டே “சத்தியமே லட்சியமாய் கொள்ளடா உனை உணர்ந்து தலை நிமிர்ந்துசெல்லடா...” என்றோ, “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா..” என்று குதிரைக்குளம்பொலிக்கேற்ற பின்னணி இசை ஒலிக்க  உச்ச குரலில்  பாடிக்கொண்டு வருவார்கள்அந்தக்கட்டத்தில் வெளிவந்த திரைப்படம்தான் விஜயபுரிவீரன்இந்த திரைப்படத்தில்தான் சி.எல்.ஆனந்தன்நாயகனாக அறிமுகமானார்எஸ்.ராமதாஸுக்கும் இதுவே முதல் திரைப்படம்.

மூன்று நண்பர்கள் இணைந்து குதிரையில் பயணித்தபடி பாடுவதாக விஜயபுரிவீரன் திரைப்படத்தில் ஒருபாடல் இருக்கிறதுதஞ்சை ராமையாதாஸ் பாடலை இயற்ற ரி.ஆர்.பாப்பா இசையமைக்க .ம்.ராஜாகுழுவினரோடு இணைந்து பாடியிருப்பார்.ம்.ராஜாவின் மென்மையான குரலில் மனதை தளுவும் இந்தப்பாடலின் வரிகளை இன்று கூட பலர் பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன்.

“ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் ..”

“வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே

வாலிபத்தை விட்டு விடக் கூடாது..” போன்ற வரிகள் மனதில் பதிந்து போனவை.

 

உள்ளத்திலே உரம் வேணுமடா

உண்மையிலே திறம் காணுமடா 

ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா

 

வல்லவன் போலே பேசக்கூடாது 

வானரம் போலே சீறக்கூடாது

வாழத்தெரியாமலே கோழைத்தனமாகவே 

வாலிபத்தை விட்டு விட கூடாது

மானமொன்றே பிரதானமென்றே 

மறந்துவிடாதே வாழ்வினிலே

 

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் 

ஏறும் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்

ஏட்டு சுரைக்காயெல்லாம் மூட்டை கட்டியாகணும்

நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்

 

என்ற இந்தப் பாடல் அன்றைய இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பலரது விருப்பப் பாடல்.

 

கவி அருணாசலம் 

23.02.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்திற்கு(விஜயபுரி வீரன்) ஏ.சி.திருலோகசந்தர் உதவி இயக்குநராக பணியாற்றி அனுபவம் பெற்றதாக படித்த நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை ராசவன்னியன்.

திருலோகச்சந்தர் நடிகர் அசோகனின் நண்பர்  அசோகன் கேட்டதற்காகத்தான் எம்ஜிஆரின் அன்பே திரைப்படத்தை  இயக்க அவர் ஒப்புக் கொண்டார். அன்பேவா திரைப்படத்தின் உதவி இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாப்பிள்ளை காதலிச்சான்

டி.ஆர். ராமண்ணாவின் ஆர். ஆர். பிக்சர்ஸ் படம் என்றால் பாட்டுக்கள் அற்புதமாக இருக்கும். எம்ஜிஆரை வைத்துவரிசையில் பல படங்களை அவர் தயாரித்திருக்கிறார். பறக்கும் பாவை படத்துடன்  அவர்களது உறவு நல்லதாக இல்லை. அதற்குப் பிறகு டி.ஆர். ராமண்ணா எம்ஜிஆரை வைத்து படம் எடுக்கவில்லை.

 அறுபதுகளில் டி.ஆர். ராமண்ணாவின் தயாரிப்பில் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த படம்தான் பணம் படைத்தவன். எம்ஜிஆருடன் செளகார் ஜானகி, கே.ஆர்.விஜயா இருவரும் முதன் முதலாக இந்தப் படத்திலேயே இணைந்து நடித்திருந்தார்கள்.

 பணம் படைத்தவன் திரைப்படத்தில் எல்லா பாடல்களுமே பிரபலமானவை. ரி.எம்.எஸ். பாட எல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங் செய்ய பல காதலர்களின் இதயங்களை வருடிச் சென்ற பாடல்தான், “பவளக் கொடியில் முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும்..” என்ற பாடல். ரி.எம்.எஸ்., சுசீலா பாடிய, “மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க..” அன்று இலங்கை வானொலியில் பலரது விருப்பப் பாடலாக இருந்தது. இன்னுமொரு பாடல் அதன் இசையையும் பாடலில் இடம்பெற்ற வரிகளையும் இரசிக்க வைத்தது. அது ரி.எம்.எஸ். பாடிய, “கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?..” என்ற அந்தாதிப் பாடல். அதோடு எம்ஜிஆரின் விருப்பப் பாடலானஎனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்..” என்ற பாடலும் இந்தப் படத்திலேதான் இடம் பெற்றது.

 இவைகளை எல்லாம் விடுத்து நான் இங்கே சொல்ல வரும் பாடல்,  “அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையைப் பிடிச்சான்...” என்ற பாடல்ரி.எம்.எஸ்., சுசீலா பாடிய இந்தப் பாடலுக்கு எம்ஜிஆர், கே.ஆர்.விஜயா நடித்திருந்தார்கள்.

 அன்றைய திரைப்படங்களில் ஆற்றில் குளிக்கும் போதும் புடவையால் போர்த்திக் கொண்டே நாயகிகள் குளிப்பார்கள். பணம் படைத்தவன் படத்தில் கே.ஆர்.விஜயா சற்று வித்தியாசமாக குறுக்குக் கட்டோடு கிணற்றடியில் பாடும் காட்சி, படத்தைப் பார்ததுவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வரும் போதும் பலரது வாயை மூட விடாமல் பார்ததுக் கொண்டது. பாடலில் இடை நடுவே கட்டிலில் இருந்து துள்ளி எழுந்து எம்.ஜி.ஆர் போடும் ஆட்டமும் அற்புதம். இந்தப் பாடல் காட்சிக்காகவே அன்று இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு எனக்கு வீட்டில் அனுமதி மறுக்கப் பட்டது உண்மையில் கொடுமை

 “ அம்மம்மா என்ன சுகம் அத்தனையும் கன்னி சுகம்என்ற வரிகள் ஆபாசமானவை என்று படத்தில் தணிக்கை செய்யப்படஅம்மம்மா என்ன சுகம் அத்தனையும் கண்டதில்லை...” என்று படத்தில் ஒலிக்கும்.

 நேரம் இருந்தால் ஒரு தடவை கிணற்றடிப் பக்கம் போய் கே.ஆர்.விஜயா குளிப்பதைப் பாருங்கள்

 தணிக்கை செய்ததன் பின்னரும் வாலியின் பாடல்களில் எவ்வளவு ஆபாசம் இருக்கிறது

 

அந்த மாப்பிள்ளை காதலிச்சான்

கையைப் புடிச்சான் என்னை கையை புடிச்சான்

அங்கே முன்னால் நின்றேன் பின்னால் சென்றேன்

வா வா என்றான் கூடவே வா வா என்றான்    

 

ஊர் அடங்கக் காத்திருந்தான்

ஓய்வில்லாமே பார்த்திருந்தான்

பால் பழத்தை வாங்கி வந்தான்

பள்ளியறையின் வாசல் வந்தான்

வெட்கத்திலே நானிருந்தேன்

பக்கத்திலே தானிருந்தான்  

 

கண்ணுறங்க பாய் விரிச்சான்

கொடி இடையில் காய் பறிச்சான்

குத்து விளக்கைக் கொறச்சி வைச்சான்

கொதித்திருந்தேன் குளிர வைத்தான்

வெட்கத்திலே நானிருந்தேன்

பக்கத்திலே தானிருந்தான்

 

மண்ணளந்த பார்வை என்ன

மயங்க வைத்த வார்த்தை என்ன

முத்து நகையின் ஓசை என்ன

மூடி வைத்த ஆசை என்ன

என்னருகே பெண்ணிருந்தாள் 

பெண்ணருகே நானிருந்தேன்

 

அந்தப் பூங்கொடி பூத்திருந்தா காத்திருந்தா

என்னைப் பார்த்திருந்தா

அங்கே கண்ணால் கண்டேன் பின்னால் சென்றேன்

நீ தான் என்றேன் வாழ்வே நீ தான் என்றேன்

 

கட்டழகைப் பார்த்து நின்றேன்

கண்ணிரண்டில் பாடல் சொன்னேன்

மொட்டு சிரித்தாள்  விட்டுக் கொடுத்தாள்

தொட்டுக் கொடுத்தேன் தானும் கொடுத்தாள்

அம்மம்மா என்ன சுகம் அத்தனையும் கன்னி சுகம்   

 

 

கவி அருணாசலம்

03.03.2018

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் சொன்னதும் பொய்யே

கவிஞன் ஒருவன் பாடி ஒரு  நகரமே எரிந்து போயிற்று, கலம்பகப் பாட்டினால் நந்திவர்மன் என்ற அரசன் இறந்து போனான்  என்றெல்லாம் வாசித்திருக்கிறோம்.

 கவிஞர்கள் வாக்குக்கும், நாக்குக்கும்  அவ்வளவு வல்லமை இருக்கிறதா என்ற கேள்வியை விட, நீண்ட காலமாக  கவிஞர்கள் அறம் பாடினால் அழிந்து போய்விடுவோம் என்ற அச்சம் மட்டும் எங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருகிறது. அதுவும் தமிழகச் சினிமாவில் இந்த அச்சம் அதிகமாக இருக்கிறது.

 தோமஸ்பிக்சர்ஸ் தயாரித்த தலைவன் திரைப் படத்தில், “நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருந்தாள் பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்....” என்ற பாடல்  இடம் பெற்றிருந்தது. நீண்ட காலமாக அந்தப் படம் திரைக்கு வராமல் இருந்ததற்கு இந்தப் பாடலில் இடம் பெற்ற தலைவன் வாராமல் என்ற அறச்சொல்தான் காரணம் என்று வாலியை எம்ஜிஆர் கோவித்துக் கொண்டதாக அப்பொழுது செய்திகள் வந்தன.

இத்தனைக்கும் பகுத்தறிவுப் பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தவர் எம்ஜிஆர். அவர் கூட தனது படங்களின் பெயர்கள், பாடல்களின் வரிகளில் அறச்சொல் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

 நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமிக்காகசெந்தாமரை படத்திற்காக  ஒரு பாடலை கண்ணதாசன் எழுதினார்.

 ‘பாடமாட்டேன் - நான் பாடமாட்டேன்என்று பாடலின் பல்லவி அமைந்திருந்தது. அந்தப்ப் பாடலைப் பாடியதற்குப் பிறகு  கே.ஆர். ராமசாமி சினிமாவில்  பாடவேயில்லை

 

 “கருவூர்த்தேவரே தங்களின் தீந்தமிழ் இசைகேட்டு வெகுகாலம் ஆயிற்று எங்கே ஒரே ஒரு பாட்டுஎன்று  இராஜ இராஜ சோழனில் ரி.ஆர்.மகாலிங்கத்தைப் பார்த்து சிவாஜி கணேசன் கேட்பார். அவரும், பாடிவிட்டுப் போவார். அந்தஒரே ஒரு பாட்டுக்குப் பிறகு ரி.ஆர் மகாலிங்கம் திரையில் பாடவேயில்லை.

 

 

 

“நான் ஒரு ராசி இல்லா ராஜாஎன்று ரி.எம்.செளந்தரராஜன் ஒரு பாடல் பாடினார் அத்தோடு அவருக்கு சினிமாவில் பாடும் ராசி சரியாக அமையவில்லை. இன்னும் ஒரு பாட்டை ரி.எம்.செளந்தரராஜன் அன்று பாடி தன் கதையை முடித்துக் கொண்டார். அந்தப் பாடல், “என் கதை முடியும் நேரமிது என்பதைச் சொல்லும் பாடலிது

 அது ஏனோ தெரியவில்லை. சினிமாவில் பலிக்கும் அறச் சொற்கள் அரசியலில் மட்டும் வீரியம் இழந்துவிடுகின்றன.

கவி அருணாசலம்

20.04.2018

 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நீதானே என்னை அழைத்தது?

தமிழில் அன்று நடித்த தெலுங்கு நடிகர்களுக்கு கண்டசாலாதான் பின்னணி பாடிக் கொண்டிருந்தார்என்.டி.ராமராவ்எஸ்.நாகேஸ்வராவ்எஸ்.வி.ரங்கராவ் என்று அந்த “ராவ்” பட்டியல் இருக்கும்

கண்டசாலா கடைசியாக தமிழில் பாடியது அன்புச்சகோதரர்கள் படத்திற்காக “முத்துக்கு முத்துக்காக சொத்துக்கு சொத்தாக..” என்ற பாடல்இந்தப் பாடலை திரையில் பாடி நடித்தவர் எஸ்.வி.ரங்கராவ்இதில் உள்ள ஒற்றுமை என்னவென்றால் 

எஸ்.வி.ரங்கராவுக்கும் அதுவே கடைசித் தமிழ்ப் படமாகப் போனதுதான்.

கண்டசாலா ஜெமினி கணேசனுக்கும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்மாஜாபஜார் என்ற படத்தில் கண்டசாலாலீலா இணைந்துபாடிய பாடலொன்று இருக்கிறது

இந்தப் படம் வெளிவந்தது 1957ம் ஆண்டுஆனால்  இந்தப்பாடல் காட்சியைப் பார்க்கும் போது ipadஐதிறந்து வைத்துக் கொண்டு  Skype இல்  சாவித்திரி பாடுவது போன்ற  எண்ணம்தான் வருகிறது

 

முன்னையவர்களின் கற்பனையை பாராட்டாத்தானே வேண்டும்.

கவி அருணாசலம

05.05.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவின் மடியில் அடிக்கடி கேட்கும் இனிமையான சில பாடல்கள்..!

பாடலின் இனிமையில் லயிக்க, சில நேரம் அதிகாலையும் விடிந்துவிடும்.. music03.gif

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே

அண்ணா, . வி. கே. சம்பந், இரா. நெடுஞ்செழியன், கே. . மதியழகன், என். வி. நடராசன் ஆகியோர்தான் திமுகவின் ஆரம்ப கால ஐந்து முக்கியத் தலைவர்கள்.(கவனிக்க, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் இந்தப் பட்டியலில் இல்லை)  

அண்ணாவுக்கு அடுத்த தலைவராக இருந்தவர். . வி. கே. சம்பந், அவரின் துரதிருஸ்ரம் அண்ணாவை விட்டு பிரிந்ததுதான். அவர் மட்டும் அண்ணாவை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அவரே தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்திருப்பார்.அண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவிலிருந்து பிரிந்து சென்று தமிழ் தேசியக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்  . வி. கே. சம்பந். அவருடன் இணைந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள் கண்ணதாசனும் சிவாஜி கணேசனும் .1962 சட்டமன்றத் தேர்தலில் போடியிட்ட . வி. கே. சம்பந்தின் கட்சி படுதோல்வியடைந்தது.

 அந்த நேரத்தில் வெளிவந்த படம்தான் சிவாஜி கணேசன் நடித்த பலே பாண்டியா. அந்தப் படத்துக்காக கண்ணதாசன் எழுதிய பாடல்தான்யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே..”

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவி அருணாசலம் நீங்கள் தெரிவு செய்யும் பாடல்கள் அதற்கான காரணங்கள் விமர்சனங்கள் மிகவும் வியக்கவைக்கின்றன.தொடர்ந்தும் பதிவிடுங்கள்.ரசிக்க ஆவலாக இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சந்திர போஸ் என்ற இசை அமைப்பாளரை இன்று பலர் மறந்து போயிருக்கலாம். 300 படங்களுக்கு மேலாக இசை அமைத்தவர் மட்டுமல்ல பாடகர், நடிகர் என்ற அடையாளங்களும் இவருக்கு உண்டு. இவர் இசையமத்து கே.ஜே.யேசுதாஸ், சுசீலா பாடியமாம்பூவே சிறு மைனாவேஎன்ற பாடல் இலங்கை வானொலியில் அன்று முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.

ஆறு புஷ்பங்கள் படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் இவர் பாடியஏண்டி முத்தம்மா ஏது புன்னகைஎன்ற இந்தப் பாடலும் அன்று பலரால் இரசிக்கப்பட்ட பாடல்தான்

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அறுபதின் ஆரம்பம் சினிமாவையும், நாடகத்தையும் தங்களது பிரதான அரசியல் ஆயுதமாக திமுக பயன்படுத்திக் கொண்டிருந்த காலம்

அப்பொழுது அறிஞர் அண்ணாவின் மேடை நாடகங்களில் நடிகை பானுமதி நடித்துக் கொண்டிருந்தார் .

 “உங்கள் நாடகங்களில் அதிகமாக பானுமதியே நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா?” என்று ஒரு நிருபர் கேள்வி கேட்க, அண்ணாவின் பதில் இப்படி இருந்தது. “பானுமதியும் படிதாண்டா பத்தினி இல்லை.  நானும் முற்றும் துறந்த முனிவன் இல்லை " அண்ணாவின் இந்தப் பதிலால் அன்று பானுமதி என்னென்ன சிக்கல்களையும் வேதனைகளையும் அனுபவித்தார் என்பது பற்றிய சிந்தனை அன்றைய ஆணுலகத்துக்கு தேவையில்லாதது

 கண்ணதாசன்  தனது அனுபவங்களை மட்டுமல்ல, தனது தேவைகள், அரசியல் எல்லாவற்றையும் சாமர்த்தியமாக சினிமாப் பாடல்களில் எழுதி விடுவார். அவரிடம் ஒளிவு மறைவு இருக்கவில்லை. இரத்தத்திலகம் திரைப்படத்தில் தனது தன்மையை பாடலாக எழுதியிருந்தார். கே. வி. மகாதேவன் இசையில் ரி. எம். சௌந்தரராஜன் பாட, படத்தில் அந்தப் பாடற்காட்சியில் அவரே நடித்தும் இருந்தார்.

 ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு 

ஒரு கோலமயில் என் துணையிருப்பு

இசை பாடலிலே என் உயிர் துடிப்பு 

நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

காவியத் தாயின் இளைய மகன் 

காதல் பெண்களின் பெருந்தலைவன்

 கவியரசக்கு இருந்த துணிவு கவிப்பேரரசுக்கு இல்லை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா பாடல்களிலேயே செய்தி சொல்லி வந்த காலம் ஒன்றிருந்தது. தனிப்பட்ட  விருப்பு வெறுப்புகள், அரசியல் என்பதோடு சொற்களை வைத்து கவிஞர்கள் சிலம்பமும் ஆடி இருப்பார்கள்.

 “வேலை வணங்காமல் வேறென்ன வேலை..”

வக்கிலாத்து வசந்தா உன் மனதை என்தன் வசந்தா...” 

கடழகுக் கண்ணா உன்னைக் காணாத கண்ணும் ஒரு கண்ணா..?

என்பது கண்ணதாசன் பாணியாக இருந்தது.

கணவன் திரைப்படத்தில்  முத்தையா என்ற பாத்திரத்தில் எம்ஜிஆர் நடித்திருந்தார். அந்தப் படத்தில் ஜெயலலிதாவை கேலி செய்து எம்ஜிஆர் பாடும் பாடல் இப்படி இருக்கும்.

அடி ஆத்தி 

யாருக்கு நீ பேத்தி -உன்

ஆணவத்தை மாத்தி இந்த

ஏழைகளை ஏறெடுத்து

பாரு மகாராசி...”

 

 எம்ஜிஆரின் கேள்விக்கான பதிலை புதிய பூமி திரைப்படத்தில் கிளித்தட்டு விளையாடிக்கொண்டு ஜெயலலிதா சொல்லி இருப்பார்

நான்தாண்டி காத்தி

நல்லமுத்து பேத்தி

முத்தையா முத்தம்மா 

எத்தனைபேர் வாறீங்க?

 

 இரண்டு பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார்

 

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

படங்களின் தலைப்புகளோடு  ஒரு பாடலாவது  படத்தில் இடம் பெற்றுக் கொண்டிருந்த  காலத்தில்  வெளிவந்ததுதான் நிலவே நீ சாட்சி திரைப்படம். நிலவே நீ சாட்சி திரைப்படத்திலும்  அதன் தலைப்போடு (சோகம்/மகிழ்ச்சி) பாடல் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடலில் எம்.எஸ்.விஸ்வநாதன் வயலின் கொண்டு விளையாடி இருப்பார். வாத்தியங்களை அதிகம் பயன் படுத்தாமல் பி.சுசிலாவின் குரலோடு வயலினையும் இணைக்க விட்டு அழகான ஒரு பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் தந்திருந்தார். இதேபோல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பல அற்புதமான பாடல்கள் இருக்கின்றன. அநேகமான அந்தப் பாடல்களை அன்றைய நாயக நடிகர்களுக்கு ஏற்ப திரையில் காட்சிப்படுத்தி பாடல்களையே சீரழித்து விட்டிருப்பார்கள்

காட்சிகளை விடுத்து பாடல்களை மட்டும் தனியாகக் கேட்கும் போது  எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல்கள்  பிரமிக்க வைக்கும். அன்று  பாடல்களை காட்சிகளாக திரையரங்ககுகளிள் மட்டும் காண முடிந்தது.   மற்றும் படி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சேவையில்தான் பாடல்களை கேட்க அதிக வாய்ப்பு இருந்தது.

காட்சிகள் இல்லாமல் கேட்க முடிந்ததால்தான் பல பழைய பாடல்கள் தப்பித்து நீண்ட காலங்கள் வாழக் கூடியனவாக இருந்தன.

நிலவே நீ சாட்சி என்ற  பாடல் வந்த நேரம் எனக்கு விடலைப் பருவம்.

அலையும் உறங்க முயல்வதென்னமன
ஆசைகள் உறங்க மறுப்பதென்ன?

வலையில் விழுந்த மீன்களெனசில
வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன?”  என்று பி. சுசீலா  பாடும் போது கவிஞர் வாலி இந்தப் பாடலை எனக்காகத்தான் எழுதினாரா என்று நான் எண்ணியதுமுண்டு.

பொதுவாக காதலுக்கு கண் இல்லை என்பார்கள். இங்கே காதலுக்கு கண்கள் அவசியம் தேவை என்கிறார் கவிஞர் வாலி

கண்கள் இரண்டும் குருடானால்இந்தக்
காதல் கதைகள் பிறப்பதில்லை
உறவும் பிரிவும் நடப்பதில்லைஇந்த
உலகில் இனிப்பும் கசப்புமில்லை

எம்.எஸ்.விஸ்வநாதன் தனது பாடலின் தன்மையை பாடக,பாடகிகள் மீது பதிய வைப்பதில் வல்லவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பி.சுசீலாவின் குரலில் அது துல்லியமாகத் தெரியும்.

கண்களை மூடி இந்தப் பாடலை  காதுகளுக்குள் மட்டும் வாங்கிக் கொண்டால் திரும்பவும் கேட்கத் தோன்றும் ஒரு பாடல் இது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.