Jump to content

பருத்தித்துறை வடை.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Essen

பருத்தித்துறை வடை.

உழுந்து – 1/2 சுண்டு,
அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு
செ.மிள. பொடி – 2 தே. க
பெருஞ்சீரகம் – 1 மே.க
உப்பு – தே.அளவு
கறிவேப்பிலை – சிறிது ( பொடியாக வெட்டி)
எண்ணெய் – தே.அளவு
செய்முறை :-
* உழுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* உழுந்து ஊறியதும் அத்துடன் மற்றைய பொருட்களை சேர்த்து 3 மே.கரண்டி எண்ணெய் விட்டு நன்றாகக் குழைக்கவும்.
* சிறிய பாக்களவு உருண்டைகளாக உருட்டி, பூரிக் கட்டையால் அழுத்தி வட்டமாக்கி ( மெல்லியதாக) கொள்ளவும்.
* அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு ,கொதித்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
** (அடுப்பை மிதமான சூட்டில் இருக்குமாறு பார்க்கவும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறை வடை தின்ன தின்ன நாள் முழுக்க தின்று கொண்டே இருக்கலாம்.செய்வதும் ஒன்றும் கஸ்டம் அல்ல.

எப்படி ஒட்டாமல் தட்டையாக்குவது இது கொஞ்சம் வில்லங்கமான விடயம்.

செய்முறைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேநீருடன் மொறு மொறு வென்று கடித்து சாப்பிட அந்தமாதிரி இருக்கும். பலநாட்கள் கெடாமலும் இருக்கும். பல்லு கட்டியவர்கள் பக்குவமாக வாயில் ஊறவைத்து சாப்பிடுவது அவசியம்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பருத்தித்துறை வடை தின்ன தின்ன நாள் முழுக்க தின்று கொண்டே இருக்கலாம்.செய்வதும் ஒன்றும் கஸ்டம் அல்ல.

எப்படி ஒட்டாமல் தட்டையாக்குவது இது கொஞ்சம் வில்லங்கமான விடயம்.

செய்முறைக்கு நன்றி.

Bildergebnis für பூவரசம் இலை

ஈழப்பிரியன்!  பூவரசம் இலையிலை வைச்சு தப்பி எடுக்கிறது ....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

Bildergebnis für பூவரசம் இலை

ஈழப்பிரியன்!  பூவரசம் இலையிலை வைச்சு தப்பி எடுக்கிறது ....:grin:

ஐயா இப்ப இலை உதிர்காலம்.
இந்த பெரிய பெரிய இலைகள் வெளிநாட்டில் காணவே கிடைக்குதில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயா இப்ப இலை உதிர்காலம்.
இந்த பெரிய பெரிய இலைகள் வெளிநாட்டில் காணவே கிடைக்குதில்லையே?

 இலை இல்லாட்டி இப்பிடி கொஞ்சம் தடிப்பான பொலித்தீனிலை வைச்சு தட்டலாம்..:)

Ähnliches Foto

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயா இப்ப இலை உதிர்காலம்.
இந்த பெரிய பெரிய இலைகள் வெளிநாட்டில் காணவே கிடைக்குதில்லையே?

வாழை இலையை சிறிது கிழித்தெடுத்து,  அதன்மேல் சிறிது எண்ணை தடவிவிட்டு,  வடை மாவை அப்பி தட்டையாக்கி கொதிக்கும் எண்ணை மீது கவிழ்த்தால் தட்டை மாவு மட்டும் உள்ளே விழுந்து வடையாகி பொரிந்துவிடுமப்பு..!

இதெல்லாம் "வீட்டுப் பெண்கள் ஏரியா.." ஏன் மூக்கை நுழைப்பானேன்..? patisser.gifcookies.gif

எல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

 இலை இல்லாட்டி இப்பிடி கொஞ்சம் தடிப்பான பொலித்தீனிலை வைச்சு தட்டலாம்..:)

Ähnliches Foto

6 minutes ago, ராசவன்னியன் said:

வாழை இலையை சிறிது கிழித்தெடுத்து,  அதன்மேல் சிறிது எண்ணை தடவிவிட்டு,  வடை மாவை அப்பி தட்டையாக்கி கொதிக்கும் எண்ணை மீது கவிழ்த்தால் தட்டை மாவு மட்டும் உள்ளே விழுந்து வடையாகி பொரிந்துவிடுமப்பு..!

இதெல்லாம் "வீட்டுப் பெண்கள் ஏரியா.." ஏன் மூக்கை நுழைப்பானேன்..? patisser.gifcookies.gif

எல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்..! :)

தகவலுக்கு நன்றி குமாரசாமி வன்னியர்.

எமது வீட்டிலும் அடிக்கடி செய்வோம்.எனது வேலை தட்டி தட்டி போடுவது.மனைவி போட்டு எடுப்பா.தட்டும் போது எண்ணெயில் தடவியே தட்டி எடுத்து போடுவேன்.

மாவைத் தூவி செய்து பார்த்தேன் எண்ணெய் விரைவில் கறுக்கிறது.இரண்டுக்குமான சுவையும் வித்தியாசபடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

எமது வீட்டிலும் அடிக்கடி செய்வோம்.எனது வேலை தட்டி தட்டி போடுவது.மனைவி போட்டு எடுப்பா.தட்டும் போது எண்ணெயில் தடவியே தட்டி எடுத்து போடுவேன்.

கவலைப்படாதீர்கள்..

வேலையிலிருந்து நீங்கள் ஓய்வு பெற்றுவிட்டால், சமையலே தங்களின் நிரந்தர வேலையாகிவிடும்.. mange4.gif

பேரப்பிள்ளைகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Bildergebnis für பூவரசம் இலை

ஈழப்பிரியன்!  பூவரசம் இலையிலை வைச்சு தப்பி எடுக்கிறது ....:grin:

இப்ப மசுக்குட்டி புடிச்சி போய் கிடக்கு :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.