Jump to content

கனடாவில் தமிழ் மொழியினால் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்ட தமிழர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழ் மொழியினால் தமிழர் ஒருவர் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்திய தமிழர் ஒருவரை ஒண்டாரியோ நீதிமன்றம் விடுவித்துள்ளது.

டெனிஸ் ஜோன் என்ற சந்தேக நபரே இவ்வாறு குற்றச்சாட்டில் இருந்து தப்பித்து கொண்டுள்ளார்.

கடந்த வாரம் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் தமிழர் ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். எனினும் பொலிஸார் குறித்த நபரிடம் மதுபான பரிசோதனையை மேற்கொள்வதற்கு முன்னர் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அழைத்து வர தவறியுள்ளனர்.

குறித்த தமிழருக்கு அறிவுறுத்தல்களைப் புரிந்து கொள்ள முடியாததால், அவரிடம் மதுபான பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீதிபதி David E. Harris குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

கனடாவிலுள்ள பன்முக கலாச்சார சமூகத்தில் அவர்களின் மொழிக் பிரச்சினைகளை கருத்திற் கொள்ள வேண்டும் என நீதிபதி, பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸாரின் ஆலோசனையை குறித்த தமிழர் புரிந்து கொள்ளவில்லை எனவும், அந்தப் பிரச்சினைக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரை வழங்குவதன் மூலம் அல்லது அவரைப் பற்றிய பிரச்சினையை ஆய்வு செய்வதில் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் எழுதியுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு படி, ஜோனின் முதல் மொழி தமிழ் மற்றும் அவருக்கு ஆங்கிலம் புரியும் ஆனால் சில நேரங்களில் புரிந்து கொள்வதில் பிரச்சினை ஏற்படும். குறித்த அதிகாரிகள் அந்த நபரிடம் ஆங்கிலத்தில் உரையாடியுள்ளனர். பொலிஸார் கூறியதில் சிலவற்றை மட்டும் தான் புரிந்து கொண்டதாக ஜோன் குறிப்பிட்டுள்ளர்.

இந்நிலையில் மொழி புரியாத ஒருவரிடம் ஒழுங்கான முறையில் சாட்சி பெற்றுக் கொள்ளாமையினால் குறித்த தமிழரை விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

www.todayjaffna.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதையில் சிலருக்கு சில வேளைகளில் சொந்த மொழி மட்டுமல்ல வேறு எந்த மொழியுமே புரிவதில்லை அல்லது  ஒருவர் புரியாததுபோல் பாசாங்கு பண்ணும்போது எந்த மொழியெர்ப்பாளராலும் அவருடன் உரையாடமுடியாது. குறித்த நபர் குடிபோதையில் வாகனத்தைச் செலுத்தி பாரிய விபத்தொன்றை ஏற்படுத்தி உயிர் இழப்புகள் ஏற்படமுன் அவரை பொலிசார் தடுத்து நிறுத்தியதற்காக பொலிசாரின் கடமையுணர்வை பாராட்டவேண்டும். நீதிபதியின் தீர்ப்பு போதையில் காரோட்டும் நபர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் இது ஒரு ஜதார்த்தமற்ற தீர்ப்பு என்றே சொல்லவேண்டும். இங்கு விபத்து நடந்து உயிரிழப்பும் நடந்திருந்தால் விபத்துக்கு போதையில் வாகனம் செலுத்தியதுதான் காரணம் என்பதை நிருபிக்க முடியாமல் போயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மொழி தெரியாவிட்டாலும் குற்றம் குற்றமே ...இவர்களால்தான்  அதிக விபத்துக்கள் நடைபெறுகின்றன.

எங்கோ பணம் நன்றாக விளையாடியிருக்கிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த விடுகை எல்லாம் பிரித்தானியாவில் சரிவராது. விசா வேணுமெண்டால், ஆங்கில புலமை சோதனை பாஸ் பண்ண வேணும்.

பிறகு ஆங்கிலம் புரியாது எண்டால், முதலுக்கே மோசம்.

படிக்க வந்த இடத்தில் தண்ணிய போட்டோடிப் பிடிபட்டு மறுநாள் காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து, வடக்கின் முக்கிய அரசியல் பிரமுக தேப்பனுக்கு போன் போட்டு, சொர்க்கமே ஆனாலும் நம்ம ஊர் போல வருமாப்பா என்று பாடி, அதான் அங்க இருக்க பிடிக்கல்ல வந்துட்டேன் என்று கதை விட்டார், மப்பு மகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைப்பு இது, என்னமோ தண்ணியடிச்சுபோட்டு ஓடுறவங்களுக்கு தமிழ் ஹெல்ப் பண்ணுது எண்டமாதிரி.

ஆங்கில மொழி தெரியாததால் தப்பிக்கொண்ட தமிழர் என்று வரவேண்டிய தலைப்பை, தமிழ்மொழியால் ஆபத்திலிருந்து தப்பிய தமிழர் என்று சொல்லி தலைப்பு போட்டு,,

பலரோட உயிராபத்துக்கு காரணமாக இருந்த ஒருவரை, என்னமோ அவர்தான் தமிழால் உயிராபத்திலிருந்து தப்பினமாதிரி.... தமிழை வளர்க்கிறார்கள் நமது ஊடக உலகநாயகர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

 மொழி தெரியாவிட்டாலும் குற்றம் குற்றமே ...இவர்களால்தான்  அதிக விபத்துக்கள் நடைபெறுகின்றன.

எங்கோ பணம் நன்றாக விளையாடியிருக்கிறது .

இதே இலங்கையென்றால் சொறிஞ்ச லங்காவில் இதெல்லாம் சகஜம் என்பார்கள்tw_blush: 

அனால் கனடாவில் அப்படி இருக்காது என நம்புவோம் :unsure:

ஆனால் இலங்கை மக்கள் தமிழ் மக்கள் என்றொன்றும் நல்ல குடிமக்கள் ஆவார் :unsure:

Link to comment
Share on other sites

52 minutes ago, valavan said:

நல்ல தலைப்பு இது, என்னமோ தண்ணியடிச்சுபோட்டு ஓடுறவங்களுக்கு தமிழ் ஹெல்ப் பண்ணுது எண்டமாதிரி.

ஆங்கில மொழி தெரியாததால் தப்பிக்கொண்ட தமிழர் என்று வரவேண்டிய தலைப்பை, தமிழ்மொழியால் ஆபத்திலிருந்து தப்பிய தமிழர் என்று சொல்லி தலைப்பு போட்டு,,

பலரோட உயிராபத்துக்கு காரணமாக இருந்த ஒருவரை, என்னமோ அவர்தான் தமிழால் உயிராபத்திலிருந்து தப்பினமாதிரி.... தமிழை வளர்க்கிறார்கள் நமது ஊடக உலகநாயகர்கள்!

நானும் அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி என்ற ரேஞ்சுக்கு இருக்கும் என்று நினைத்தேன்... மேட்டரு சப்புனு போச்சு... 

நாமலாம் சரக்கடிச்சா பைக்கையே ஃப்ளைட் மாதிரி ஓட்டுவோம்... சின்னபய போலிஸ்கிட்ட மாட்டினுட்டான்... So Sad...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

 மொழி தெரியாவிட்டாலும் குற்றம் குற்றமே ...இவர்களால்தான்  அதிக விபத்துக்கள் நடைபெறுகின்றன.

எங்கோ பணம் நன்றாக விளையாடியிருக்கிறது .

அக்கா நீங்கள் இங்கே தானே இருக்குறீர்கள்! 
இங்கே பணத்தால் எல்லாம் வைத்து "விளையாட"முடியாது.
நான் இதுவரையிலும் அப்படியான ஒன்றை அறிந்து இருக்கவில்லை.
ஒருவரை "குடிபோதையில்" வாகனம் செலுத்தினார் என்று கணித்து அவரை தடுப்பு காவலில் வைப்பது பற்றிய  சட்டம், அதை கடைபிடிக்கும் போலீசார் எப்படியெல்லாம் நிலைமையை கையாளவேனும் என்ற விளக்கங்கள் மிகவும் விபரமாக இருக்கின்றது.  அதை எல்லாம்  போலீசார் சரியாக கடைபிடித்தார்களா? என்பதே இங்குள்ள கேள்வி. அப்படி இல்லாத பட்சத்தில் தவறு செய்தவரும் கூட நிரபராதியாகத்தான் சட்டத்தின் முன்னாள் பார்க்கப்படுவார்.
மதுபோதையில் நான் ஓடவில்லை என்று நிரூபிக்கும் கடமை வாகன ஓட்டுனருக்கு இல்லை.
மாறாக வாகன ஓட்டுனர் மதுபோதையில் தான் வண்டி ஓட்டினார் என்று நிரூபிக்கும் முழுப் பொறுப்பும் அந்த இடத்தில் கடமை புரிந்த போலீசார் கையில் மட்டும் தான் இருக்கிறது.

பின் குறிப்பு: 
நான் கடந்த 2 மாதங்களாக "ஜூரி கடமைக்காக" ஒண்டாரியோ மேல்நீதி மன்றத்தில் பணியாற்ற  அழைக்கப்பட்டு இருந்தேன். நான் தெரிவு செய்யப்பட்டது ஒரு பாரிய போதை வஸ்து, கொலை, பணப் பரிமாற்றம் , ஆயுத கடத்தல் போன்றன  அடங்கிய ஒரு வழக்கு.
அதில் ஏகப்பட்ட அனுபவங்கள்.
முடிந்தால் ஒரு சில விடயங்களை (தனி நபர் விபரங்களோ அல்லது பகிர படக்கூடாத விடயங்கள் தவிர்த்து) பொதுவானவற்றை மட்டும் யாழில் எழுதும் நோக்கம் உள்ளது. பார்ப்போம்.

15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதே இலங்கையென்றால் சொறிஞ்ச லங்காவில் இதெல்லாம் சகஜம் என்பார்கள்tw_blush: 

அனால் கனடாவில் அப்படி இருக்காது என நம்புவோம் :unsure:

ஆனால் இலங்கை மக்கள் தமிழ் மக்கள் என்றொன்றும் நல்ல குடிமக்கள் ஆவார் :unsure:

விபரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தயவு செய்து இந்த சம்பவத்தையும் இலங்கையோடு ஒப்பிடாதீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Sasi_varnam said:

 

விபரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தயவு செய்து இந்த சம்பவத்தையும் இலங்கையோடு ஒப்பிடாதீர்கள். 

கனடாவில் அப்படி நடக்காது என்று எழுதியிருக்கிறன் :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இதோ ஒரு வழக்கின் முடிவு.
இதுவும் கூட மது போதையில் வண்டி ஓடிஇ சிறிய விபத்தில் மாட்டிக்கொண்ட ஒருவரின் வழக்குதான்.
இதை இங்கே இணைப்பதற்கான காரணம்இ சட்டம் எவ்வளவு தெளிவாகஇ நுணுக்கமாக இங்கே செயல் படுகிறது என்பதை காட்டுவதற்கே.
பின் குறிப்பு : இது பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படும் நீதிமன்ற  தீர்ப்புகளின் பிரதி.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Source: CanLII Website

COURT FILE NO.: 14-11126
DATE: 2018/01/25

ONTARIO

SUPERIOR COURT OF JUSTICE

B E T W E E N:
Her Majesty the Queen
Respondent
– and –
 Gravel
Appellant
 Karimjee for the Respondent

Addelman for the Appellant

HEARD: January 10, 2018
 
REASONS FOR JUDGMENT
 
O’BONSAWIN J.
 
Background

[1]               This is an appeal from the judgment of Justice Bourgeois of the Ontario Court of Justice of February 29, 2016, from the Appellant’s conviction for operating a motor vehicle having consumed alcohol in such a quantity that the concentration in his blood exceeded 80 milligrams of alcohol in 100 milliliters of blood, contrary to s. 253(1)(b) of the Criminal Code (“Code”), and of breaching probation, contrary to s. 733.1(1) of the Code.  The trial judge imposed onto the Appellant a fine of $1,700 for the count of having driven with more than the legal limit of alcohol of 80 milligrams and $150 for breaching his probation.  In addition, the trial judge imposed a one-year driving prohibition on the Appellant.

[2]               The evidence at trial consisted of three police witnesses and two civilians, Ms. Z and Mr. S.  The Appellant did not testify.  The trial lasted two days.

[3]               On June 7, 2014, the police were called to the scene of a motor vehicle accident that had occurred in a private parking lot.  The Appellant’s vehicle had collided with Ms. Z’s van when both were travelling in reverse (backing up) in the parking lot.

[4]                With regards to the time of the accident, Ms. Z testified that she was at home and stated, “I don’t exactly remember the time, but it’s around 8:30 in the morning” (p. 21 of the Transcript of February 26, 2016).  She was asked at what time she left her home and she responded:  “I think it’s around 8:30” (p. 21).  Ms. Z was also questioned about how long after the collision did the police arrive and she responded:  “Maybe a few minutes.  I – they didn’t they – they were very quick.  They came very quick.” (p. 32).

[5]               Constable Vaz testified that he was dispatched to the collision at approximately 11:17 am (p. 11 of the Transcript of August 25, 2015).  When he arrived, Ms. Z was standing on the left side of the parking lot and her three children were still inside of the minivan (pgs. 15-16).

[6]               Constable Tataryn testified that the accident was reported at 11:17 am by a passerby who had not witnessed the accident and he arrived at the scene at 11:26 am, within 9 minutes after the accident was reported.  He also testified that Constable Vaz was already on the scene (p. 36 of the Transcript of August 25, 2015).

Trial Judge’s Reasons

[7]               The trial judge made the following findings:

•        the first sample was obtained at 12:57 pm;

•        in order for the Crown to rely on the readings as per s. 258(1)(c) of the Code, the driving would have to have been as of 10:57 am, which is two hours prior;

•        from the time the police were dispatched at 11:17 am to the furthest time the driving could have taken place for the Crown to rely on the readings, 10:57 am, there is a 20 minute window span;

•        Mr. S testified that he saw the collision and that afterwards, Ms. Z was on the ground, freaking out and crying;

•        the officer testified that it was not a busy morning for them and they were able to respond promptly to the accident;

•        the trial judge looked at the totality of the evidence, not strictly at just Ms. Z’s evidence, and she had no reason to reject Ms. Z’s evidence about the timing of the collision as she referenced it to the time of the police arrival at the scene;

•        given Mr. S’s evidence as to Ms. Z’s emotional state right after the collision, the trial judge was of the view that this was a difficult moment for Ms. Z and she appeared to do her best;

•        the sequence of events was clear and she was able to follow what Ms. Z did and what she observed; and

•        at the end of the trial, when considering the totality of the evidence, she had no doubt that the timeframe was within the two hours of the taking of the breath samples (pgs. 53-56 of the Transcript of February 29, 2016).

Issue

[8]               There is only one issue on this appeal: did the learned trial judge misapprehend the evidence presented at trial regarding the time of driving and therefore erroneously rely on the presumption in s. 258 of the Code?

Standard of Review

[9]               The approach to be used when a court is reviewing the trial judge’s decision was described by the Supreme Court of Canada in R. v. Burns, 1994 CanLII 127 (SCC), [1994] 1 S.C.R. 656, at p. 663, in the following terms:

In proceeding under s. 686(1)(a)(i), the court of appeal is entitled to review the evidence, re-examining it and re-weighing it, but only for the purpose of determining if it is reasonably capable of supporting the trial judge's conclusion; that is, determining whether the trier of fact could reasonably have reached the conclusion it did on the evidence before it. Provided this threshold test is met, the court of appeal is not to substitute its view for that of the trial judge, nor permit doubts it may have to persuade it to order a new trial [Citations omitted].

[10]            In R. v. Biniaris, 2000 SCC 15 (CanLII), [2000] 1 S.C.R. 381, the Supreme Court of Canada concluded that considerable deference should be afforded to a trial judge as to whether or not the allegations before the court have been made out beyond a reasonable doubt.  Arbour J. stated, at para. 24:

Triers of fact, whether juries or judges, have considerable leeway in their appreciation of the evidence and the proper inferences to be drawn therefrom, in their assessment of the credibility of witnesses, and in their ultimate assessment of whether the Crown’s case is made out, overall, beyond a reasonable doubt.  Any judicial system must tolerate reasonable differences of opinion on factual issues.  Consequently, all factual findings are open to the trier of fact, except unreasonable ones embodied in a legally binding conviction.

Analysis

[11]           The Supreme Court of Canada concluded in R. v. Lee, 2010 SCC 52 (CanLII), [2010] 3 S.C.R. 99, that a misapprehension of the evidence cannot be supported by an allegation that the trial judge chose to interpret the evidence differently than the Appellant (para. 4).  In addition, the Supreme Court of Canada held in R. v. François, 1994 CanLII 52 (SCC), [1994] 2 S.C.R. 827, that a trier of fact may accept all of the evidence, some of the evidence or none of the evidence of each witness (p. 837).

[12]           In the present case, the trial judge’s reasons were very thorough, logical and clear.  She recognized the issue with regards to Ms. Z’s error in providing the time of the accident.  However, she found that Ms. Z may have been mistaken about the actual time of the accident but was certain that the police arrived within minutes.  This was supported by the fact that Constable Vaz testified that Ms. Z’s children were still in the minivan when he arrived and Constable Tataryn arrived at the scene at 11:26 am, within 9 minutes from the dispatch to the police officers at 11:17 am.  The first sample was obtained at 12:57 pm and the trial judge correctly found that this was within 2 hours of the time that the offence was committed in accordance with s. 258(1)(c) of the Code.

[13]           Taking into account the Supreme Court of Canada’s findings in Lee and François, I conclude that the trial judge properly took into account all of the evidence provided and made a determination based on the totality of the evidence.  This is not a case where it can be determined that the trial judge’s conclusions were unreasonable.  It was a verdict that was available to her based on the evidence provided.  Her decision was reasonable.  Consequently, I dismiss the appeal.

Justice M. O’Bonsawin
 
Released: January 25, 2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மைதான். 

http://torontosun.com/news/local-news/mandel-how-do-you-say-over-80-in-tamil

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

செய்தி உண்மைதான். 

http://torontosun.com/news/local-news/mandel-how-do-you-say-over-80-in-tamil

 

ரோட் சைன் போர்ட்டுகள் தமிழல் இராதே....

 என்ன சுத்து?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நாமலாம் சரக்கடிச்சா பைக்கையே ஃப்ளைட் மாதிரி ஓட்டுவோம்... சின்னபய போலிஸ்கிட்ட மாட்டினுட்டான்... so sad... "

நீங்க சரக்கடிச்சி புள்ளட்டை பிளைட்மாதிரி ஓட்டினா எமன் எருமைக்கடாவை ராக்கட்மாரில்லா ஓண்டுவாண்டா அம்பி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மதுபோதையில் நான் ஓடவில்லை என்று நிரூபிக்கும் கடமை வாகன ஓட்டுனருக்கு இல்லை. மாறாக வாகன ஓட்டுனர் மதுபோதையில் தான் வண்டி ஓட்டினார் என்று நிரூபிக்கும் முழுப் பொறுப்பும் அந்த இடத்தில் கடமை புரிந்த போலீசார் கையில் மட்டும் தான் இருக்கிறது."

 நீங்க ஒரு ஜூரி என்ற பார்வையில் சரியாக பட்டாலும் குடிபோதையில் இருப்பவர் வாகனத்தை செலுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்பது அவருக்கும் தெரிந்திருக்கும். குறித்த நபர் விபத்தொன்றில் சிக்கி மிகமோசமாக உயிர்போகும் தறுவாயில் தெருவில் அடிபட்டுகிடந்தால் மொழிபெயர்ப்பாளரை முதலில் அழைத்தபின்தானா அவசர உதவி அவருக்கு கிடைக்கும். அவர் அந்த நடைமுறையை ஏற்றுக்கொள்வாரா? இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எடுத்த எடுப்பில் வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது. மனச்சாட்சியை முன்னிறுத்தி  குறைந்தபட்சமாக நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் உன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒத்துக்கொள்கிறீரா என்று கேட்டு அவர் மறுத்தால் மட்டும் குற்றஞ்சுமத்தப்பட்டவரை விடுதலை செய்வது வழமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெனிஸ் ஜோன்! ஜேர்மன் பொலிசுக்கு  உப்புடி பேப்பட்டம் கட்டி ஆகலும் சேட்டை விட்டார் எண்டால் அமத்தி புடிச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய்  ஒரு கீசாவிலை ஒரு சொட்டு இரத்தத்தை எடுத்துப்போட்டு விடுவாங்கள். பிறகு அங்காலை வட்டிகுட்டியெல்லாம் சேர்த்து கட்ட வேண்டியதுதான்....பிறகு லைசன்சுக்கு நாய் அலைச்சல் அலைய விடுவாங்கள். :27_sunglasses:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vanangaamudi said:

"மதுபோதையில் நான் ஓடவில்லை என்று நிரூபிக்கும் கடமை வாகன ஓட்டுனருக்கு இல்லை. மாறாக வாகன ஓட்டுனர் மதுபோதையில் தான் வண்டி ஓட்டினார் என்று நிரூபிக்கும் முழுப் பொறுப்பும் அந்த இடத்தில் கடமை புரிந்த போலீசார் கையில் மட்டும் தான் இருக்கிறது."

 நீங்க ஒரு ஜூரி என்ற பார்வையில் சரியாக பட்டாலும் குடிபோதையில் இருப்பவர் வாகனத்தை செலுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்பது அவருக்கும் தெரிந்திருக்கும். குறித்த நபர் விபத்தொன்றில் சிக்கி மிகமோசமாக உயிர்போகும் தறுவாயில் தெருவில் அடிபட்டுகிடந்தால் மொழிபெயர்ப்பாளரை முதலில் அழைத்தபின்தானா அவசர உதவி அவருக்கு கிடைக்கும். அவர் அந்த நடைமுறையை ஏற்றுக்கொள்வாரா? இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எடுத்த எடுப்பில் வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது. மனச்சாட்சியை முன்னிறுத்தி  குறைந்தபட்சமாக நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் உன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒத்துக்கொள்கிறீரா என்று கேட்டு அவர் மறுத்தால் மட்டும் குற்றஞ்சுமத்தப்பட்டவரை விடுதலை செய்வது வழமை. 

நீங்கள் சொல்வதில் ஒரு ஞாயம் இருக்கிறது தான்.  

ஆனாலும் விபத்தொன்றில் சிக்கி மிகமோசமாக உயிர்போகும் தறுவாயில் ~ வேறு ஒரு சட்டம் அவரவருக்கான கடமைகளை தெளிவாக எடுத்துரைக்கும். 

நான் சிங்கன் பிழை விடவில்லை என்று சொல்ல வரவில்லை. காவல் தன்  கடமையை முழுமையாக, சரியாக நிறைவேற்ற தவறியுள்ளது.

இந்த வழக்கை  பொறுத்த வரையில் வேறு சில காரணங்களும் அலசப் பட்டிருக்கலாம். எங்களுக்கு அது தெரிய இப்போதைக்கு வாய்ப்பில்லை. ஆனாலும் "Violation of Charter of rights" இதுவே மேல்கோள் கட்டப்பட்டுள்ளது. 
கனடாவின் நீதி பரிபாலனத்தில் அடிப்படையே இந்த Charter of Rights தான்  

Dennis John's Charter of right to counsel was violated

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

டெனிஸ் ஜோன்! ஜேர்மன் பொலிசுக்கு  உப்புடி பேப்பட்டம் கட்டி ஆகலும் சேட்டை விட்டார் எண்டால் அமத்தி புடிச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய்  ஒரு கீசாவிலை ஒரு சொட்டு இரத்தத்தை எடுத்துப்போட்டு விடுவாங்கள். பிறகு அங்காலை வட்டிகுட்டியெல்லாம் சேர்த்து கட்ட வேண்டியதுதான்....பிறகு லைசன்சுக்கு நாய் அலைச்சல் அலைய விடுவாங்கள். :27_sunglasses:

 

கூ .சா அண்ணா நல்ல நேரம் நான் கனடா வந்து பிழைத்துக் கொண்டேன் :5_smiley:

Link to comment
Share on other sites

குற்றம் செய்தவர் தப்புவது தவறு!
இவர் திருந்தாவிட்டால் மிக விரைவில் சிறையில் இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, போல் said:

குற்றம் செய்தவர் தப்புவது தவறு!
இவர் திருந்தாவிட்டால் மிக விரைவில் சிறையில் இருப்பார்.

ஒரு குற்றவாளி தப்பலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்காப்படக் கூடாது.

போல் நீங்கள் சொல்வது போல இவர் திருந்தாவிட்டால் மிக விரைவில் சிறையில் இருப்பார்.

குற்றம் செய்து தப்புவது ~ சட்டத்தில் ஓட்டை 
குற்றம் செய்யாமல் தண்டணை பெறுவது  - சட்டமே ஓட்டை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல் பிழை விட்டிருக்கும்.

இங்கிலாந்தில்,   ஒரு கறுவலம்மானை கையும் களவுமா அமத்திட்டினம், காவல்.

அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும் என்பதால், காவல்நிலையம் வரை தலையை மூடிக் கொண்டு போக துணி...தேடினால்..... காவல் வாகனங்களில் இல்லை.

பக்கத்து வீடொன்றில் குப்பை கட்ட பயன்படும் கறுப்பு பையை வாங்கி, அப்படியே கறுவலம்மான் தலையை மூடிக் கொண்டோட......

அவரிண்ட, புறக்கிறாசியார்..... ஆச்சோ... போச்சா.... அப்படியா, இப்படியா.... என்ர  ஆளின்ர மனித உரிமை மீறப்பட்டுள்ளது எண்டு நல்ல காசு உருவீட்டார்.

வழக்கோ... அது... டிஸ்மிஸ். :grin: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.