Jump to content

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் 2018


Recommended Posts

உள்ளுராட்சி தோ்தல் 2018 - மட்டக்களப்பு மாவட்ட இறுதி முடிவுகள்!

 

 

மட்டக்களப்பு மாவட்டம் - ஏறாவூர் நகர சபை 

  • இலங்கை தமிழரசுக்கட்சி - 1105 வாக்குகள் (ஆசனம் -02) 
  • ஐக்கிய தேசிய கட்சி - 4024 வாக்குகள் (ஆசனம் -04) 
  • ஐக்கிய சமாதான கூட்டமைப்பு -1308 வாக்குகள் (ஆசனங்கள் -01) 
  • மக்கள் விடுதலை முன்ணணி -139 வாக்குகள் (ஆசனங்கள் -00) 
  • தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 439 வாக்குகள் (ஆசனங்கள் -01) 
  • முஸ்லீம் தேசிய கூட்டமைப்பு - 4237 வாக்குகள்(ஆசனங்கள் -05) 
  • ஸ்ரீலங்கா சுதந்தர கட்சி - 2815 வாக்குகள் (ஆசனங்கள் - 03) 
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 116 வாக்குகள்(ஆசனங்கள் - 00) 
  • சுயேட்டை குழு - 557 வாக்குகள்(ஆசனங்கள் -01)

மட்டக்களப்பு மாவட்டம் - காத்தான்குடி நகர சபை

  • ஸ்ரீலங்கா சுதந்தர கட்சி - 12499 வாக்குகள் (ஆசனங்கள் - 10)
  • நல்லாட்சிக்கான தேசிய முன்ணணி - 5815 வாக்குகள் (ஆசனங்கள் -04)
  • முஸ்லீம் தேசிய கூட்டமைப்பு - 4633 வாக்குகள் (அசனங்கள் - 03)
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 779 வாக்குகள்(ஆசனங்கள் -01)
  • மக்கள்  விடுதலை முன்ணணி - 219 வாக்குகள் (ஆசனங்கள் -00)
  • ஐக்கிய சமாதான கூட்டமைப்பு -219 வாக்குகள் (ஆசனங்கள் -00)

https://news.ibctamil.com/ta/internal-affairs/local-government-election-2018-in-batticalo

Link to comment
Share on other sites

  • Replies 142
  • Created
  • Last Reply
சாவகச்சேரி நகர சபை முடிவுகள்
 


யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி நகர சபை முடிவுகள் வெளியாகியுள்ளன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2,779 வாக்குகள், 6 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி - 2,481 வாக்குகள், 5 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 1,372 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - 1,029 வாக்குகள், 2 ஆசனங்கள்
தமிழர்களுக்கான சமூக ஜனநாயகக் கட்சி - 518, 1ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி - 344 வாக்குகள், 1 ஆசனம்

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சாவகச்சேரி-நகர-சபை-முடிவுகள்/71-211448

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை
 


யாழ். மாவட்டத்திலுள்ள வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 6,206 வாக்குகள், 9 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 5,232 வாக்குகள், 7 ஆசனங்கள்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - 5,129 வாக்குகள், 7 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி - 2,264 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 1,975 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1,109 வாக்குகள், 2 ஆசனங்கள்

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடமராட்சி-தெற்கு-மேற்கு-பிரதேச-சபை/71-211449

Link to comment
Share on other sites

யாழ் மாநகரசபைக்கு 3 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு

 
 
 

 

Untitled.jpg
 
நடந்துமுடிந்த உள்ளுராட்சி தேர்தலில், யாழ்ப்பாண மாநகர சபைக்கு 3 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்களில் நிலாம் ஐக்கிய தேசியக் கட்சி - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
நிபாஹிர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவாகியுள்ளார்.
 
மேலும் ஏ.ஜீ. நவ்பர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த போனஸ் ஆசனம் மூலம் யாழ் மாநகர சபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

http://www.jaffnamuslim.com/2018/02/3_11.html

Link to comment
Share on other sites

மட்டக்களப்பு மாநாகர சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம்

 

 

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆட்சியை அமோக வெற்றியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

batti.jpg

நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்று மட்டக்களப்பு மாநகரசபையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையில் 17 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

லேலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 05 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 04 ஆசனங்களையும்,  தமிழர் விடுதலைக் கூட்டணி 04 ஆசனங்களையும்,  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 04 ஆசனங்களையும், மூன்று சுயேட்சைக் குழுக்கள் தலா 03ஆசனத்தையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 01 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

இந்த நிலையில் பெரும்பான்மை பலத்தை  மட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்று ஆட்சியமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/30522

Link to comment
Share on other sites

"எமக்கு ஊழலற்ற
சொத்துகளை கொள்ளை அடிக்காத
எல்லா சமூகங்களுடனும் இயந்து போக விரும்புகின்ற
ஒரு நல்லாட்சி தேவையில்லை,
எமக்கு தேவையெல்லாம் சிறுபான்மை சமூகங்களை சிதைக்கின்ற
மக்களின் சொத்துக்களை
கொள்ளையடிக்கின்ற
கோயில்களையும், மசூதிகளையும், தேவாலயங்களையும்
எரிக்கின்ற
இனவாத கட்சியும் ஆட்சியும் மட்டும்தான்"
 
-இப்படிக்கு பெரும்பான்மை இனம்
Link to comment
Share on other sites

3190 ஆசனங்களுடன் மகிந்த அணி முன்னிலையில்

 

local-election results (3)சிறிலங்காவில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சுமார் 46 இலட்சம் வாக்குகளைப் பெற்று, மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி முன்னணியில் இருக்கிறது.

மொத்தமுள்ள 340 உள்ளூராட்சி சபைகளில் சிறிலங்கா பொதுஜன முன்னணி 222 சபைகளைக் கைப்பற்றியுள்ளது. ஐதேக 41 சபைகளையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 34 சபைகளையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 7 சபைகளையும் கைப்பற்றியுள்ளன.

சிறிலங்கா நேரப்படி, இன்றிரவு 9.09 மணியளவில் வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், பிரதான கட்சிகள் பெற்றுள்ள வாக்குகள், மற்றும் ஆசனங்களின் விபரம் வருமாறு

சிறிலங்கா பொதுஜன முன்னணி   –  4,598,119 – 45.11% – 3190  ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி                        –  3,285,172 – 32.23% – 2213 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –    906,629 –  8.89%   –  634 ஆசனங்கள்
ஜேவிபி                                                   –    632,314 – 6.20%    –  401 ஆசனங்கள்
|சிறிலங்கா சுதந்திரக் கட்சி                –    470,867 – 4.62%    –  339 ஆசனங்கள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி            –    300, 029 – 2.94%   –  370 ஆசனங்கள்

http://www.puthinappalakai.net/2018/02/11/news/29048

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள்…

Jaffna-Entrance.png?resize=663%2C404

யாழ்.மாநகர சபை 

தமிழரசு கட்சி :-  16
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 10
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  13
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 01
ஐக்கிய தேசிய கட்சி :- 03
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 02
 
 
நல்லூர் பிரதேச சபை. 
 
தமிழரசு கட்சி :-  06
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 04
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  05
தமிழர் விடுதலைக்கூட்டணி
ஐக்கிய தேசிய கட்சி :- 01
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01
சுயேட்சை குழு :- 02
 
 
சாவகச்சேரி நகர சபை 
 
 
தமிழரசு கட்சி :- 05
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 03
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  06
ஐக்கிய தேசிய கட்சி :- 01
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 02
தமிழர் சமூக ஜனநாயக கட்சி :- 01
சாவகச்சேரி பிரதேச சபை 
 
தமிழரசு கட்சி :- 13
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 04
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  06
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 02
ஐக்கிய தேசிய கட்சி :- 02
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 03
தமிழர் சமூக ஜனநாயக கட்சி :- 01
 
பருத்தித்துறை பிரதேச சபை 
 
தமிழரசு கட்சி :- 08
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 03
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  04
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 02
ஐக்கிய தேசிய கட்சி :- 01
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 02
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன :- 01
 
 
 
வல்வெட்டித்துறை நகரசபை 
 
தமிழரசு கட்சி :- 07
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 02
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  02
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 01
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01
சுயேட்சை குழு :- 04
 
வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை 
 
 
தமிழரசு கட்சி :- 09
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 03
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  07
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 03
ஐக்கிய தேசிய கட்சி :- 02
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 07
 
வலி. வடக்கு பிரதேச சபை 
 
தமிழரசு கட்சி :- 17
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 08
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  06
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 02
ஐக்கிய தேசிய கட்சி :-  02
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 04
 
 
வலி. கிழக்கு பிரதேச சபை. 
 
தமிழரசு கட்சி :- 13
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 06
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  06
தமிழர் விடுதலைக்கூட்டணி :-03
ஐக்கிய தேசிய கட்சி :- 01
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 03
சுயேட்சை குழு :- 04
 
வலி.தென் மேற்கு பிரதேச சபை 
 
 
தமிழரசு கட்சி :- 12
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 07
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  04
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 02
ஐக்கிய தேசிய கட்சி :- 02
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01
 
 
ஊர்காவற்துறை பிரதேச சபை 
 
 
தமிழரசு கட்சி :- 05
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 07
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 01
 
வேலணை பிரதேச சபை 
 
தமிழரசு கட்சி :- 08
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 06
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  01
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 01
ஐக்கிய தேசிய கட்சி :- 01
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன :- 02
 
 
நெடுந்தீவு பிரதேச சபை 
 
தமிழரசு கட்சி :- 04
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 06
சுயேட்சை குழு :- 02
ஐக்கிய தேசிய கட்சி :- 01

http://globaltamilnews.net/2018/66443/

Link to comment
Share on other sites

6 minutes ago, நவீனன் said:

யாழ்ப்பாணத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள்…

Jaffna-Entrance.png?resize=663%2C404

 
 
வேலணை பிரதேச சபை 
 
தமிழரசு கட்சி :- 08
ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 06
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :-  01
தமிழர் விடுதலைக்கூட்டணி :- 01
ஐக்கிய தேசிய கட்சி :- 01
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி :- 01
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன :- 02
 
 

http://globaltamilnews.net/2018/66443/

மஹிந்த கட்சி வேலணையில் 2 இடம்

Link to comment
Share on other sites

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 2018 – நாடுமுழுவதுமான முடிவுகள்…

Ele.png?resize=800%2C408

http://globaltamilnews.net/2018/66463/

Link to comment
Share on other sites

உள்ளூராட்சித் தேர்தலில் பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகள், ஆசனங்கள் – இறுதி முடிவு

 

local-election results (2)சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் அனைத்து முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான, சிறிலங்கா பொதுஜன முன்னணி, 239 சபைகளைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில், 4,941,952 வாக்குகளை (44.65%) பெற்றுள்ளதன் மூலம், சிறிலங்கா பொது ஜன முன்னணிக்கு   3369 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

15 மாவட்டங்களில் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு அதிகளவு வாக்குகள் கிடைத்துள்ளன.

இரண்டாமிடத்தை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுள்ளது. இந்தக் கட்சி 41 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ளது.  ஐதேகவுக்கு, 3,612,259 வாக்குகள் (32.63%) கிடைத்துள்ளன. இந்தக் கட்சிக்கு  2385 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

மன்னார், நுவரெலிய, அம்பாறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் ஐதேக அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில் தமிழ், மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து அமைத்த கூட்டணிகளின் மூலமே ஐதேகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

ஐதேக கொழும்பு, தெகிவளை- கல்கிசை, நீர்கொழும்பு, மாநகரசபைகள், மற்றும் கொலன்னாவ நகரசபை, வத்தளை- மாபொல நகரசபை உள்ளிட்ட 41 சபைகளைக் கைப்பற்றியுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி வடக்கு உள்ளிட்ட சில இடங்களில் தனித்து கை சின்னத்திலும், ஏனைய இடங்களில்,  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிட்டிருந்தது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 989,821 வாக்குகளை (8.94%) பெற்று 674 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி,  சிறிலங்கா சுதந்திரக் கட்சி 491,835 வாக்குகளை (   4.44% ) பெற்று 358 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம், மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் மொத்தமாக, 1,481,656 வாக்குகளை (13.38%) பெற்று மொத்தம் 1032 ஆசனங்களை இந்த இரண்டு கட்சிகளும் கைப்பற்றியுள்ளன.

இந்தக் கட்சிகள் 10 உள்ளூராட்சி சபைகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளன.

ஜேவிபி   693,875 வாக்குகளை  (6.27% )  பெற்று 431 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. எனினும் எந்தவொரு உள்ளூராட்சி சபையையும் ஜேவிபி கைப்பற்றவில்லை.

அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  சுமார் 339,675   வாக்குகளை (3.07%)  பெற்றுள்ளது. கூட்டமைப்பு 38 உள்ளூராட்சி சபைகளில் 407 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இறுதி முடிவுகள்

சிறிலங்கா பொதுஜன முன்னணி-  4,941,952 –  44.65% –    3369
ஐக்கிய தேசியக் கட்சி- 3,612,259-   32.63%     – 2385
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –    989,821 –   8.94% – 674
ஜேவிபி  – 693,875     – 6.27%     -431
சிறிலங்கா சுதந்திரக் கட்சி-  491,835     – 4.44%     – 358
இலங்கை தமிழ் அரசுக் கட்சி-     339,675     – 3.07% –  407

http://www.puthinappalakai.net/2018/02/12/news/29064

Link to comment
Share on other sites

All Island Results - Cumulative

உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 – முழுமையான முடிவுகள்- ஒரே பார்வையில்!

 

உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 – முழுமையான முடிவுகள்- ஒரே பார்வையில்!

ஜனவரி 30 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடைபெற்றது. 

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகுவதில் மந்தநிலை காணப்பட்ட போதிலும் தற்போது 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 

இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 231 சபைகளில் வெற்றிபெற்றுள்ளது. 

மேலும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளன. 

முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்.... 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 231 சபைகளில் வெற்றி
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 43 சபைகளில் வெற்றி
ஐக்கிய தேசிய கட்சி - 34 சபைகளில் வெற்றி
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 7 சபைகளில் வெற்றி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (அ.கி) - 5 சபைகளில் வெற்றி
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 4 சபைகளில் வெற்றி
சுயேட்சைக் குழு - 4 சபைகளில் வெற்றி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 சபைகளில் வெற்றி
ஈழ மக்கள் ஜநனாயக கட்சி - 2 சபைகளில் வெற்றி
தேசிய காங்கிரஸ் - 2 சபைகளில் வெற்றி
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 1 சபையில் வெற்றி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 1 சபையில் வெற்றி
தமிழர் விடுதலை கூட்டணி - 1 சபையில் வெற்றி
தேசிய மக்கள் கட்சி - 1 சபையில் வெற்றி
எக்சத் லங்கா மகா சபா கட்சி - 1 சபையில் வெற்றி
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு - 1 சபையில் வெற்றி

http://tamil.adaderana.lk/news.php?nid=99931&mode=lead

Link to comment
Share on other sites

அதிக சபைகளை கைப்பற்றிய 2ஆவது கட்சியின் தலைவர் சம்பந்தர் – மகிந்தருக்கும் எதிர்கட்சித் தலைவரானார்…

Mahinda-Sampanthan.jpg?resize=581%2C364

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

340 உள்ளூராட்சி சபைகளுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.  இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 231 சபைகளில் வெற்றிபெற்றுள்ளது. இரண்டாவது பெரும் கட்சியாக தமிழரசுக் கட்சி முன்னேறியுள்ளது.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளன.

முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்….

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 231 சபைகளில் வெற்றி
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 43 சபைகளில் வெற்றி
ஐக்கிய தேசிய கட்சி – 34 சபைகளில் வெற்றி
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 7 சபைகளில் வெற்றி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (அ.கி) – 5 சபைகளில் வெற்றி
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 4 சபைகளில் வெற்றி
சுயேட்சைக் குழு – 4 சபைகளில் வெற்றி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2 சபைகளில் வெற்றி
ஈழ மக்கள் ஜநனாயக கட்சி – 2 சபைகளில் வெற்றி
தேசிய காங்கிரஸ் – 2 சபைகளில் வெற்றி
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1 சபையில் வெற்றி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1 சபையில் வெற்றி
தமிழர் விடுதலை கூட்டணி – 1 சபையில் வெற்றி
தேசிய மக்கள் கட்சி – 1 சபையில் வெற்றி
எக்சத் லங்கா மகா சபா கட்சி – 1 சபையில் வெற்றி
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு – 1 சபையில் வெற்றி

http://globaltamilnews.net/2018/66532/

Link to comment
Share on other sites

திரு­ம­லையில் எந்­தக்­கட்­சியும் அறுதிப் பெரும்­பான்மை இல்லை

 

மூதூர்­ நி­ரு­பர)

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வு­களின் படி திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் அநே­க­மான சபை­களில் எந்­த ­கட்­சியும் அறுதிப் பெரும்­பான்­மை­யுடன் ஆட்­சி­ய­மைக்கும் நிலைமை காணப்­பட வில்லை. முன்னர் தமிழ் கூட்­ட­மைப்பின் ஆட்­சியில் இருந்த திரு­கோ­ண­மலை நகர சபை மற்றும் திரு­கோ­ண­மலை நக­ர­மும்­சூ­ழலும் சபை­க­ளிலும் கூட இந்­ நி­லைமை ஏற்­பட்­டி­ருப்­ப­தாக வெளியான தேர்தல் வாக்­க­ளிப்பு முடி­வுகள் தெளிவு­ப­டுத்­தி­யுள்­ளன.

திரு­கோ­ண­மலை நக­ர­ச­பை­யின்­ மு­டி­வுகள் நேற்று பிற்­பகல் வெளியி­டப்­பட்­டன. அதன்­படி நக­ர ­ச­பையில் அதி­க­மான உறுப்­பி­னர்­க­ளாக 9 உறுப்­பி­னர்­களை இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி பெற்­றி­ருந்­தது. அக்­கட்சி பெற்ற வாக்­குகள் எண்­ணா­யி­ரத்து எண்­ணூற்றி முப்­பத்­தி­ரண்டு ஆகும். தாமரை மொட்டுச் சினத்தில் போட்­டி­யிட்ட மஹிந்த ராஜ­பக் ஷவின் பொது­ஜன பெர­முன சார்பில் மூவா­யி­ரத்து நூற்றி எழு­பத்­தொரு வாக்­குகள் பெறப்­பட்­டன. இதற்­கி­ணங்க 4பேர் தெரிவு செய்­யப்­பட்­­டி­ருந்­தனர்.

 ஐ.தே.கட்சி சார்பில் இரண்டு உறுப்­பி­னர்­களும், அகில இலங்கைத் தமிழ் காங்­கிரஸ் பெற்­றுக்­கொண்ட உறுப்­பி­னர்கள் இரண்டும், சுயேச்­சைக்­குழு (கேடயம்) இல் இரு­வரும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்­கிரஸ் சார்பில் ஒரு உறுப்­பி­ன­ரு­மாக தெரி­வா­கி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் உதி­ரி ­க­ட்­சி­களின் எண்­ணிக்கை அதி­க­மா­க­வுள்­ள­மை­யினால் தமி­ழ­ரசுக் கட்சி தனி­யாக ஆட்­சி­ய­மைக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளன. இதே நிலை­மையே திரு­கோ­ண­மலை நக­ரமும் சூழலும் பிர­தேச சபை­யிலும் காணப்­ப­டு­கின்­றன.

இச் ­ச­பையை முன்னர் தமிழ்­ கூட்­மைப்பு ஆட்சி செய்து வந்­தி­ருந்­தது. இம்­முறை அதி­க­மாக 7 ஆச­னங்­களை பெற்று இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி முன்­ன­ணியில் இருந்­தாலும் கூட மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஸ்ரீலங்க பொது­ஜன முன்­னணி 5ஆச­னங்­க­ளையும் ஐ.தே.கட்சி 3 ஆச­னங்­க­ளையும், ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு 2 உறுப்­பி­னர்­க­ளையும் இவ்­வாறே தபால் பெட்­டிச் ­சின்­னத்தில் போட்­டி­யிட்ட சுயேச்சைக் குழு 2 உறுப்­பி­னர்­க­ளையும் பெற்­றி­ருந்­தனர்.

ஈ.பி­.டி­.பி. ­கட்சி மற்றும் வட­ கி­ழக்கு மாகாண முன்னாள் முதல்வர் தலைமையில் போட்­டி­யிட்ட தமிழ் சமூக ஜன­நா­யக் ­கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன தலா ஒரு உறுப்பினர்களையும் பெற்றிருந்தன. இந் நிலையில் தமிழ் கட்சிகளின் முழுமையான ஆளுகைக்குள் இருந்த மேற்படி இரண்டு சபைகளும் கட்சிகள் பிரிந்து நின்றமையினால் தங்கி நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-12#page-3

Link to comment
Share on other sites

149 ஆசனங்களை சுவீகரித்த மயில்

 

 

images.jpg
-ஊடகப்பிரிவு-  
 
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு சுமார் 150க்கு மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், அனுராதபுரம் மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய 08 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் களமிறங்கியது.
மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் 34 ஆசனங்களையும், வவுனியா மாவட்டத்தில் 17 ஆசனங்களையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 ஆசனங்களையும், யாழ் மாவட்டத்தில் 01 ஆசனத்தையும், கிளிநொச்சி மாவட்டத்தில் 02 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 ஆசனங்களையும், கொழும்பு மாவட்டத்தில் 02 ஆசனங்களையும், புத்தளம் மாவட்டத்தில் 08 ஆசனங்களையும், அனுராதபுரம் மாவட்டத்தில் 04 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது.

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபையையும், மாந்தை மேற்கு பிரதேச சபையையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனதாக்கிக் கொண்டுள்ளது. அத்துடன், மன்னார் பிரதேச சபையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமாகின்றது. நானாட்டான் பிரதேச சபையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காலாகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த மாந்தை மேற்கு பிரதேச சபையை மக்கள் காங்கிரஸ், கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் கைப்பற்றி வடமாகாண அரசியல் வரலாற்றில் ஒரு சாதனையை ஏற்படுத்தியிருக்கின்றது.  

வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச சபை, செட்டிக்குளம் பிரதேச சபை ஆகியவற்றிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி அதிகாரங்களைப் பெறக்கூடிய தெளிவான மக்கள் ஆணை கிடைத்துள்ளது.

அதேபோன்று, முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று  பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, மாந்தை கிழக்கு பிரதேச சபை ஆகியவற்றில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கக் கூடிய சூழல் அல்லது மக்கள் காங்கிரஸின் ஆதரவின்றி பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் நகர சபையிலும், எதிரணிக்குச் சமனான ஆசனங்களைக் கொண்டுள்ளதால், அந்த ஆட்சியையும் வேறு சில கட்சிகளுடன் இணைந்து நிறுவக்கூடிய வாய்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்து மயில் சின்னத்தில் கல்முனை மாநகர சபை, சம்மாந்துறை பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றில் போட்டியிட்டது. அக்கரைப்பற்று பிரதேச சபையில் 01 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்தப் பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு சுமார் 40,407 வாக்குகள் கிடைத்துள்ளன. சம்மாந்துறைப் பிரதேச சபையில் 12, 911 வாக்குகளைப் பெற்று 08 ஆசனங்களை தம்வசப்படுத்தி பலமான நிலையில் இருக்கும் மக்கள் காங்கிரஸின் ஆதரவிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஆட்சியை அமைக்கக் கூடிய வலுவான நிலை உள்ளது.

அதேவேளை, நிந்தவூர் பிரதேச சபையில் 7260 வாக்குகளைப் பெற்று 06 ஆசனங்களுடன், ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியைத் தனதாக்கிக் கொள்ளும் நிலையில் உள்ளது. கல்முனை மாநகர சபையில் 7573 வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களுடனும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 4384  வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும், பொத்துவில் பிரதேச சபையில் 4288 வாக்குகளைப் பெற்று 04 ஆசனங்களையும், இறக்காமம் பிரதேச சபையில் 2313 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்ட எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்காத நிலை தற்போது உருவாகியுள்ளதால், சில சபைகளில் மக்கள் காங்கிரஸின் உதவியின்றி எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாத சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. காரைதீவு பிரதேச சபையில் மக்கள் காங்கிரஸ் 1010 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தைப் பெற்றமை சிறப்பம்சமாகக் கருதப்படுவதுடன், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபையில் நற்பிட்டிமுனை வட்டாரத்தில் ஒரேயொரு உறுப்பினரை மாத்திரம் பெற்று, அம்பாறை மாவட்ட அரசியலில் கால்பதித்த மக்கள் காங்கிரஸ், கடந்த பொதுத் தேர்தலில் தனித்து மயில் சின்னத்தில் களமிறங்கி சுமார் 33,000 வாக்குகளைப் பெற்றமையை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு ஓட்டமாவடி பிரதேச சபையிலும் ஆட்சியமைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை காத்தான்குடியில் தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் சில சபைகளில் இணைந்து போட்டியிட்டு 04 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகரசபை, கிண்ணியா பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை ஆகியவற்றில் மக்கள் காங்கிரஸின் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாக பல்வேறு சபைகளில் தனித்துப் போட்டியிட்டு சுமார் 10,500 வாக்குகளுடன் 08 ஆசனங்களைப் பெற்று மலையக முஸ்லிம் அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு நகர சபையில் தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தையும், குருநாகல் மாவட்டத்தில் 05 ஆசனங்களையும், களுத்துறை மாவட்டத்தின் களுத்துரை நகரசபை, பேருவளை பிரதேச சபை ஆகியவற்றில் தலா ஒவ்வொரு ஆசனத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

http://www.jaffnamuslim.com/2018/02/150_12.html

Link to comment
Share on other sites

மொட்­டுக்கு 239, ஐ.தே.க. 42 கூட்­ட­­மைப்பு 38, மைத்­தி­ரிக்கு 10

aa-e86d0ca029f993ef2384c59d089ff1c6e7e48de3.jpg

 

(ரொபட் அன்­டனி)

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­முன 239 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. தேர்­தலில் பொது­ஜன பெர­மு­ன­வா­னது மொத்­த­மாக 4941952 வாக்­கு­களை பெற்று அனைத்து உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளிலும் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன 3369 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது. அதன்­படி பொது­ஜன பெர­முன 44.65 வீத­மான வாக்­கு­களை பெற்­றுக்­கொண்­டுள்­ளது.  

அத்­துடன் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்சி நாடு முழு­வதும் மொத்­த­மாக 3612259 வாக்­கு­களை பெற்று 42 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் 2385 உறுப்­பி­னர்­களை தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது. அதன்­படி  ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது 32.63 வாக்­கு­ களை பெற்று உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த லில் இரண்­டா­வது  இடத்தைப் பெற்­றுக்­கொண்­டுள்­ளது.    

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் இணைந்து மொத்­த­மாக 1481656 வாக்­கு­களை பெற்று 10 சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் 1032 உறுப்­பி­னர்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. இதே­வேளை வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 339675 வாக்­கு­களை பெற்று 38 சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் 407 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது. கூட்­ட­மைப்பு 3.07 வீத­மான வாக்­கு­களை பெற்­றுள்­ளது. மக்கள் விடு­தலை முன்­னணி 693875 வாக்­கு­களை பெற்று 431 உறுப்­பி­னர்­களை தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது. 6.27 வீத­மான வாக்­கு­களை ஜே.வி.பி. பெற்­றுள்­ளது.

இத­னி­டையே பிர­தான கட்சி என்ற வகையில் சுதந்­திரக் கட்­சியே இந்தத் தேர்­தலில் பாரிய பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளது. பல சின்­னங்­களில் போட்­டி­யிட்ட சுதந்­திரக் கட்­சி­யா­னது கிட்­டத்­தட்ட 15 வீத வாக்­கு­களை பெற்­றுள்­ளது.

அந்­த­வ­கையில் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் கள­மி­றங்­கிய சிறி­லங்கா பொது­ஜன பெர­முன அமோக வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. வடக்கு கிழக்கு தவிர்ந்த அனைத்து மாவட்­டங்­க­ளிலும் அதி­க­மான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன ஆதிக்கம் செலுத்­து­கின்­றது.

தென்­னி­லங்­கையின் பெரும்­பான்மை மக்கள் செறிந்து வாழ்­கின்ற பகு­தி­களில் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­முன பாரிய வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.

தென்­னி­லங்­கையில் அதி­க­மான உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களில் ஐக்­கிய தேசிய கட்சி சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­விடம் தோல்­வியை தழு­வி­யுள்­ளது. ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது வழ­மை­போன்று கொழும்பு மாந­கர சபையில் அமோக வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. எனினும் மொத்­த­மாக கொழும்பு மாவட்­டத்தில் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன வெற்­றி­பெற்­றுள்­ளது.

 கண்டி மாத்­தளை மாநக ர சபைகள் அம்­பாந்­தோட்டை நகர சபை வத்­தளை பிர­தேச சபை நுவ­ரெ­லியா மாந­கர சபை நாவ­லப்­பிட்டி அக்­கு­ரணை போன்ற உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை ஐக்­கிய தேசிய கட்சி கைப்­பற்­றி­யுள்­ளது. அம்­பாறை மாவட்­டத்­திலும் ஐக்­கிய தேசிய கட்சி சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்து பல உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது.

ஐக்­கிய தேசிய கட்­சியை பொறுத்­த­வரை சிறு­பான்மை மக்கள் அதி­க­மாக வாழும் பிர­தே­சங்­க­ளி­லேயே வெற்­றி­யீட்­டி­யுள்­ள­துடன் அதிக வாக்­கு­க­ளையும் பெற்­றுள்­ளது.

வழ­மைப்­போன்று வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வெற்­றி­களை பெற்­றுள்­ளது. வடக்கு கிழக்கில் கூட்­ட­மைப்பு 38 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. உதா­ர­ண­மாக யாழ். மாவட்­டத்தில் யாழ். மாந­கர சபை உள்­ளிட்ட அதி­க­மான உள்­ளூ­ராட்சி சபை­களை இலங்கை தமி­ழ­ரசு கட்­சியில் போட்­டி­யிட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பெற்­றுக்­கொண்­டுள்­ளது. சில சபை­களில் தனித்து ஆட்­சி­ய­மைக்க முடி­யா­வி­டினும் சபை­களை வெற்­றிக்­கொண்­டுள்­ளது.

 இம்­முறை யாழ். மாவட்­டத்தில் சைக்கிள் சின்­னத்தில் போட்­டி­யிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி இரண்டு உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களின் அதி­கா­ரத்தை கைப்­பற்­றி­யுள்­ளமை விசேட அம்­ச­மாகும். அக்­கட்­சி­யா­னது யாழ். மாந­க­ர­ச­பையில் எதிர்க்­கட்­சி­யா­கவும் உரு­வெ­டுத்­துள்­ளது. சாவ­கச்­சேரி மற்றும் பருத்­தித்­துறை உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி கைப்­பற்­றி­யுள்­ளது. இதே­வேளை ஈ.பி.டி.பி. கட்­சி­யா­னது நெடுந்­தீவு மற்றும் ஊர்­கா­வற்­றுறை உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது.

 அதே­போன்று மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை உள்­ளிட்ட பல சபை­க­ளையும் அம்­பாறை மாவட்­டத்தில் சில உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளையும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் பல உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளையும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யுள்­ளது.

மலை­யகம்

மலை­ய­கத்தை பொறுத்­த­வரை நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து சேவல் சின்­னத்தில் போட்­டி­யிட்ட இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் பல சபை­களை கைப்­பற்­றி­யுள்­ளது. அத்­துடன் தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து யானை சின்­னத்தில் போட்­டி­யிட்டு மூன்று சபை­களை கைப்­பற்­றி­யுள்­ளது. அத்­துடன் பதுளை மாவட்­டத்தில் வெற்­றிலை சின்­னத்தில் போட்­டி­யிட்ட இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் வெற்­றி­பெற்­றுள்­ளது.

 ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி - சுதந்­திரக் கட்சி

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பல சின்­னங்­களில் இம்­முறை போட்­டி­யிட்­டது. எப்­ப­டி­யி­ருப்­பினும் சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் இணைந்து 10 சபை­களை வெற்­றி­கொண்­டுள்­ளன. இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மற்றும் தேசிய காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் ஊடா­கவும் சுதந்­திரக் கட்­சி­யா­கவும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யா­கவும் சில பிர­தே­சங்­களில் போட்­டி­யிட்­டது.

 தென்னிலங்கையில் மிகவும் குறைவான உறுப்பினர்களைளே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சுதந்திரக் கட்சி பெற்றுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி

இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி எந்த உள்ளூராட்சிமன்றத்தையும் கைப்பற்றவில்லை. மாறாக குறிப்பிடத்தக்க அளவில் ஆசனங்களை பெற்றுள்ளது. 693875 வாக்குகளை மொத்தமஇாக பெற்றுள்ள மக்கள் விடுதலை முன்னணியானது 431 உறுப்பினர்களை பெற்றுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பெற்றதைவிட வாக்குகளைவிட அதிக வாக்குகளை மக்கள் விடுதலை முன்னணி இந்தத் தேர்தலில் பெற்றுக்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-13#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

உள்ளூராட்சித் தேர்தல்களில்... தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, யாழ்ப்பாண மாவட்டத்தில் பின்னடைவா? தோல்வியா?
14 பிரதேச சபைகள், 3 நகர சபை 1 மாநகர சபை ஆக மொத்தம் 17 சபைகள். 
வலிகாமம் வடக்குத் தவிர்ந்த ஏனைய சபைகளுக்கு 60%க்குக் கூடுதலானோர் வாக்களித்தனர். 
வாக்களித்த மூன்றேகால் இலட்சம் வாக்காளருள், ஓரு லட்சம் வரையான வாக்காளரே (33.9%) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர்.
தேர்தலில் வெற்றிபெற்ற 413 உறுப்பினருள் 151 உறுப்பினர் (37%) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.
எந்த ஒரு சபைக்கும் 50%க்கும் கூடுதலான உறுப்பினர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பெறமுடியவில்லை. எனவே எந்த ஒரு சபையிலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை. 

-இணையத்திருந்து.... -

Link to comment
Share on other sites

வாக்குச் சீட்டுகளில் புள்ளடிக்கு பதிலாக இதயங்கள்
 

image_85dbfcf6d8.jpgஇம்முறை கட்சிகள் தத்தமது கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு மக்களை வலியுறுத்திய நிலையில், எந்தவொரு கட்சியும் வாக்குச்சீட்டில் புள்ளடியிடுவது தொடர்பில் தெளிவுப்படுத்த தவறியமையால் பல வாக்குச்சீட்டுகளில் புள்ளடிக்கு பதிலாக இதயங்கள் வரையப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டினார்.

தேர்தல் பெறுபேறுகளின் தாமதத்திற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.


தேர்தல்கள் செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


தமிழ் மற்றும் சிங்கள மொழித் தெரிந்த அதிகாரிகளின் பற்றாக்குறையே தேர்தல் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தாமதமானதற்கான காரணம் என்றும், எனவே உரிய பரீட்சைகளை நடத்தி இரு மொழியிலும் தேர்ச்சிப் பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வாக்குச்-சீட்டுகளில்-புள்ளடிக்கு-பதிலாக-இதயங்கள்/175-211528

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.