Sign in to follow this  
நவீனன்

ஒரு நிமிடக் கதைகள்

Recommended Posts

ஒரு நிமிடக் கதைகள்

 

white_spacer.jpg

ஒரு நிமிடக் கதைகள் white_spacer.jpg
title_horline.jpg
white_spacer.jpg
 
p126a.jpg சூப்பர் ரெசிப்பி!

மனைவி பிறந்த வீட்டுக்குப் போயிருந்தாள். அவள் இல்லாமல் சோத்துக்குத் திண்டாடுவேன் என்பது அவள் எண்ணம். எனக் கென்ன, சமைக்கத் தெரியாதா?

அன்றைக்கு ரவா அடை செய்தேன்.உங்களுக்கும் அந்த ரெசிப்பியை சொல்லித் தருகிறேன். துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு எல்லாவற்றையும் தலா அரை கப் எடுத்துக் கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் மிளகு, சீரகத்தைப் பொடித்துச் சேருங்கள். ரவை ஒரு கப், சற்று புளித்த தயிர், பெருங்காயம், கறிவேப்பிலை, கொஞ்சம் உப்பு சேர்த்துக் கரைத்து, சிறு சிறு அடைகளாகத் தட்டி, எண்ணெய் விட்டு வேக வைத்து எடுங்கள். ரவா அடை தயார்!

கொஞ்சம் பொறுங்கள். சாப்பிட்டு விடாதீர்கள். உங்கள் வீட்டில் நாய் இருந்தால், அதற்குப் போடுங்கள். தின்றுவிட்டு நன்றியுடன் வாலாட்டும். அல்லது, ராப்பிச்சைக்காரனுக்குப் போடுங்கள். பின்பு அருகில் உள்ள சரவண பவனுக்குப் போய் ஒரு வெட்டு வெட்டுங்கள். நான் அப்படித்தான் செய்தேன்.

மனைவிக்குச் சவால் விட்டுச் சமைக்கலாம். அதற்காக, தேக ஆரோக்கியத்தில் விளையாடலாமா?

- ஆர்.உஷாநந்தினி

 

 

 

p44c.jpg தலைமுழுக்கு!

குமரேசனுக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.

ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒருபூங்கா வில் விட்டுவிட்டு வந்தான் குமரேசன். ஆச்சர்யம்! அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்!

கடுப்பான குமரேசன், அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான். மறுபடி யும் ஆச்சர்யம்... வீட்டில் நாய்!

மூன்றாம் நாள்... காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான். ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான். இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான். இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, ‘‘உன் நாய், வீட்டில் இருக்கிறதா?’’ என்று கேட்டான்.

‘‘இருக்கிறதே! ஏன் கேட்கிறீர்கள்?’’ என்றாள் அவள்.

‘‘அந்த சனியன்கிட்டே போனைக் கொடு! வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு!’’

- சர்வஜித்

 

 

 

 

 
p44b.jpg பாவம்ப்பா அவங்க..!

எல்.கே.ஜி. படிக்கும் தன் மூன்று வயது மகன் ரிஷியை, ஆபீஸ் போகிற வழியில் கான்வென்ட்டில் விட்டுவிட்டுப் போவதற்காகத் தயாரானான் ராஜேஷ். ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டான். மகனை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

தன் பைக்கில், பின்புறம் இருந்த பிரத்யேக ஹூக்கில் ஹெல்மெட்டை மாட்டினான். மகனைத் தூக்கி முன்புறம் அமர்த்திக்கொண் டான். வண்டியைக் கிளப்பினான்.

போகிற வழியிலெல்லாம் ரிஷி பார்த்துக்கொண்டே வந்தான்... டூ வீலர் ஓட்டிக்கொண்டு போன அத்தனை பேரும்தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தார்கள்.

அவர்களைச் சுட்டிக்காட்டி அப்பாவிடம் சொன்னான் ரிஷி... ‘‘பாவம்ப்பா அவங்க..!’’

‘‘ஏண்டா அப்படிச் சொல்றே?’’

‘‘அவங்களுக்கெல்லாம் ஹெல்மெட் மாட்டுறதுக்கு வண்டியில இடம் இல்லே! அதனால பாவம், தலையிலேயே சொருகிக்கிட்டுப் போறாங்க!’’

ராஜேஷ் பாவம், தன் குழந்தைக்குஎன்ன பதில் சொல்வான்? அறிந்ததைச்சொல்வானா, தன் அறியாமையைச் சொல்வானா?

- ராஜ்திலக்

 

 

 

 

 

p44a.jpg லேட்டாக ஒரு விஷயம்!

எங்கிருந்தோ பிரபல தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் டைட்டில் சாங் ஒலிப்பது துல்லியமாகக் கேட்டது. நான் எப்போதாவது தான் அந்த சீரியலைப் பார்ப்பேன். அது என்றில்லை... எந்த சீரியலைப் பார்த்தாலும், அதில் யாராவது ஒருத்தி அழுதுகொண்டு இருப்பாள்; அல்லது, விரல் சொடுக்கியாருக் காவது சவால் விட்டுக்கொண்டு இருப்பாள். எப்படித்தான் பெண்கள் இப்படியான சீரியல் களை ஆர்வமாகப் பார்க்கிறார்களோ?

என் மனைவியும் ஒரு சீரியல் விடாமல் விழுந்து விழுந்து பார்க்கிறவள்தான். “இரண்டு நாளா புள்ளி புள்ளியா வருது’’ என்றாள். ஆபீஸ் போகிற வழியில், கேபிள் காரனிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டும்.

அடடா! பெட்ரோல் போடவே இல்லையே! நேத்து வரும்போதே ரிசர்வில்தானே ஓட்டி வந்தேன்? அருகில், பில்லர் பங்க் வரைக்கு மாவது வண்டி ஓடுமா?

இப்படி அடுக்கடுக்காகத் தோன்றிக் கொண்டு இருந்த எண்ணங்களுக்குமத்தி யில், ஒரு விஷயம் லேட்டாக உதித்தது...

‘ஆஹா! நான் இப்போது தியானத்தில் அல்லவா இருக்கிறேன்!’

- அருண்.கோ.

 

 

 

 

p44.jpg வா..!

‘‘வா’’ என்றான் அவன்.

‘‘ஊஹூம்!’’ என்றாள் அவள்.

‘‘வா’’ என்றான் மறுபடியும்.

‘‘ப்ச்ச்...’’ என்றாள் அவள் சலிப்பாக.

‘‘வா’’ என்றான் மீண்டும்.

‘‘இல்ல...’’ என்றாள்.

‘‘வா’’ என்றான் திரும்பவும்.

‘‘தப்பு..!’’ என்று முறைத்தாள்.

அதன் பிறகும், ‘‘வா’’ என்று இழுத்தான்.

‘‘போடா’’ என்று அவன் தலையில் ஒரு குட்டுவைத்தாள்.

‘‘வ பக்கத்துல ‘£’ போட்டிருந்தாதான் ‘வா...’னு இழுக்கணும். இது ‘வ’. எங்கே, சரியா சொல்லு பார்ப்போம், வ!’’ என்று பொறுமையாக அந்தச் சிறுவனுக்குத் தமிழ்ப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தினாள் அந்த மிஸ்!

- கே.ஆனந்தன்

https://www.vikatan.com

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   என்னுயிர் நீதானே... - ஒரு நிமிடக்கதை
      
       சுபாகர் என்னுயிர் நீதானே... ''சாமி, நான் இந்த ஊருக்கு வந்து ஏழு வருஷம் ஆச்சு. ஒரு ஹோட்டல்ல சப்ளையர் வேலை பாக்கு றேன். ஏனோ தெரியலை, உங்களைப் பார்த்ததுமே என் கதையைச் சொல்லி அழணும் போல இருக்கு!'' என்றான் அவன்.
   சாமி இளமை தொலையாத முகத்துடன், கருமை மறையாத தாடியுடன், சாந்தம் தவழும் கண்களுடன் அவனை, 'சொல் குழந்தாய்!' என்பது போல் பார்த் தார்.
   ''என் பேரு கோபால். ஊர் மதுரைப் பக்கம் ஒரு கிராமம். ஊர்ல எங்க குடும்பமும் எங்க மாமன் குடும்பமும்தான் பெரிய குடும்பங்கள். எல்லாரும் ஒண்ணுமண்ணா இருப்போம்!
   என் மாமனுக்கு வித்யா பொறந்தப்ப முதல்ல அந்தப் பேச்சு விளையாட்டாதான் ஆரம்பிச்சது. ஆனா, கொஞ்ச நாள்ல அதையே ரெண்டு குடும்பங்களும் தீர்மானமா எடுத்துக்கிட்டாங்க. கல்யாண வயசு வந்ததும் வித்யாவுக்கு என்னைக் கல்யாணம் கட்டி வெச்சுப்புடணும்னு முடிவு எடுத் தாங்க. அவங்க ஊட்டுன ஆசையில நான் சின்ன வயசுல இருந்தே 'வித்யா எனக்குத்தான்'கிற நினைப்போடவே வளர்ந்தேன்.
   வாலிப வயசுல வித்யா பைத்தியம் முத்தி என் உயிர், உலகம் எல்லாமே வித்யாதான் இருந்தா. ஆனா, ஒரு கை மட்டும் தட்டுனா ஓசை வருமா?வித்யா வுக்கு விவரம் புரிய ஆரம்பிச்சதுல இருந்தே என்கிட்ட ஓர் இடைவெளியோடுதான்நடந்துக் கிட்டா. அது எனக்குப் புரியாத அளவுக்கு வெறித்தனமா அவளை நேசிச்சுட்டு இருந்தேன். நான் எங்கப்பா மாதிரி மை கறுப்பு இல்லேன்னாலும் கொஞ்சம் கறுப்புதான். வித்யாவோ அப்பதான் பூத்த செம்பருத்தி மொட்டு கணக்கா எளஞ்சிவப்பு. எங்க கிராமம் அதோட ஆயுசுக்கும் வித்யா மாதிரி ஒரு அழகியைச் சுமந்திருக்காது.
     அழகு ஒரு காரணம்... ரெண்டாவது படிப்பு. நான் ஆறாம் கிளாஸ் ஃபெயில். வித்யா டவுன் காலேஜுக்கு எல்லாம் போய் படிச்சது. கல்யாணப் பேச்சு எடுத் தப்போ, வித்யா ஒரே வரியில் என்னைக் கல்யாணம் கட்டிக்க இஷ்டமில்லைன்னு சொல்லிருச்சு.
   அதைக் கேட்டுக்கிட்டு நான் எப்படி உயிரோடு இருந்தேன்னு இப்ப வரைக்கும் தெரியலை. அவளுக்கு அவங்க வீட்டுல நல்லா படிச்ச, சிவப்பா, அழகா ஒரு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்களாம்.
   அவ கல்யாணம் அன்னிக்குக் கிளம்பி இலக்கில்லாம எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு, கடைசியா இந்த ஊர்ல செட்டில் ஆயிட்டேன். இத்தனை வருஷம் பொழைச்ச என்பொழைப்புக்கு ஏதாவது அர்த்தம் இருக்குதா சாமி?''
   சாமி நிதானமாகக் கேட்டார், ''அது கிடக் கட்டும்... மணியஞ்சோலை கிராமத்து ரங்கசாமி, பாக்கியம் தம்பதியோட மகன்தானே நீ?''
   சாமியின் ஞான தீர்க்கத்தை எண்ணி கோபால் புல்லரித்துவிட்டான்.
   ''சா... சாமி என் ஊரும் அப்பா, அம்மா பேரும் உங்களுக்கு எப்படி சாமி தெரியும்?''
   ''உன் மாமன் மகள் வித்யாவைக் கல்யா ணம் பண்ண அதிர்ஷ்டக்கட்டை நான்தான். அந்த ராங்கிக்காரிகூட மனுஷன் வாழ முடியாதுப்பா. அதான், நான் சாமியாராயிட்டேன்! நீயாவது நிம்மதியா இரு!'' என்று கூறிவிட்டு கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார் 'சாமி'கள்!
    
   https://www.vikatan.com
    
  • By நவீனன்
   நன்றி
    
   நிவேதாவுக்கு வெறுத்துப் போயிற்று. சமையலில் அவள் கெட்டி. தன் குடும்பத்தினருக்காக ஒவ்வொரு நாளும் எதையாவது புதுசு புதுசாகச் செய்ய வேண்டுமே என பதைபதைப்பாள். அதில் தன் திறமை முழுவதையும் காட்டி சுவை கூட்டுவாள். அவள் புத்தக கலெக்‌ஷன் முழுவதுமே சமையல் கலை புத்தகங்களால் நிரம்பி வழியும். ஆனாலும் என்ன? ஒரு சின்ன பாராட்டுகூட கிடைக்காது! இன்று அவள் பார்த்துப் பார்த்து செய்த அரிதான ரெஸிபி... சாப்பிட்ட யாருமே ‘‘நல்லா இருக்கு’’ என வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. கணவன் சாப்பிட்டு கை கழுவிய வேகத்தில் ஆபீஸ் கிளம்பிப் போய் விட்டான். குழந்தைகள் இருவரும் வேகவேகமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடிவிட்டனர்.   மாமியாரும் சாப்பிட்டு முடித்தவுடன் அரட்டை அடிக்க பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டார். ‘‘நன்றியே யாருக்கும் இல்லை!’’ - இந்தப் புலம்பலின் முடிவில் நிவேதாவுக்கு அழுகையே வந்துவிட்டது. ‘‘சே, செய்த ரெஸிபிக்கு ஒரு சின்ன அங்கீகாரம் கூட கிடைக்கலையே! எதுக்காக கஷ்டப்படணும்?’’ - முணுமுணுத்தபடியே சாப்பிட்டவள், மீதத்தை நாய்க்குக் கொண்டுபோய் போட்டாள். அதைச் சாப்பிட்ட விக்கி, வாலை ஆட்டிக்கொண்டு வந்து நிவேதாவின் காலை நக்கிற்று. மனதுக்குள் ஒரு சின்ன பூரிப்பு. மலர்ச்சியுடன் மறுநாள் சமையலுக்கான ரெஸிபியைத் தேடத் துவங்கினாள் நிவேதா!    
    
   இல்லை
   தெருமுனையில் தியாகராஜனின் தலை தெரிந்ததும், பால்கனியில் நின்றிருந்த பால்சாமி ‘சட்’டென தன் அறைக்குள் நுழைந்தார். மனைவியை அழைத்து, ‘‘இதோ பார்! தியாகு வர்றான். என்னைக் கேட்டால் ‘வெளியூர் போயிருக்கார். வர ஒரு வாரம் ஆகும்’னு சொல்லி அனுப்பிடு. எப்போ பார்த்தாலும் கடன் கேட்டு வந்து நிக்கறான்’’ என்று சொல்லிவிட்டுப் பதுங்கிக்கொண்டார். அவளும் அப்படியே செய்ய, தியாகராஜன் திரும்பிப் போய்விட்டார். ஒரு வாரத்துக்குப் பின் தியாகராஜன் போன் செய்து, ‘‘நீ வெளியூர் போயிருந்த நேரத்துல ஒரு நல்ல ஆஃபர். ஒரு பெரிய பார்ட்டி ஆயிரம் ஜோடி ஷூ ஆர்டர் கொடுத்தாங்க. நீ இல்லாததால வேறு ஆள் மூலமா சப்ளை செஞ்சேன்!’’ என்று சொல்ல, பால்சாமிக்கு பகீரென்றது.   போனை கட் செய்துவிட்டு தன் மனைவி பக்கம் திரும்பிய தியாகராஜன், ‘‘நண்பனா இருந்து என்ன பிரயோஜனம்? ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஆயிரம் ரூபா கூட கடன் தரமாட்டேங்கறான். கஞ்சப் பய. வீட்ல இருந்துக்கிட்டே இல்லைன்னு வேறே பொய் சொல்றான். அதான் வருத்தப்படட்டும்னு சும்மா புருடா விட்டேன்’’ என்றார்.   
    
   தெய்வம்
   ‘‘ஹலோ, சம்பத் சாரா? சுதா நர்சிங் ஹோமுக்கு உடனே வாங்க!’’ ‘‘என்ன விஷயம்? நீ யாருப்பா?’’ ‘‘என் பேர் பொன்னுச்சாமி... சீக்கிரம் வாங்க சார், நேர்ல சொல்றேன்!’’ இருபது நிமிடங்களில் அங்கிருந்தான் சம்பத். ‘‘சார், உங்க பையன் ஸ்கூல் விட்டு வரும்போது ஆட்டோக்காரன் மோதிட்டுப் போயிட்டான். தம்பியோட பள்ளிக்கூட அட்டையில இருக்கிற உங்க போன் நம்பரை வச்சுதான் போன் பண்ணேன். தம்பிக்கு தலையில பலமா அடி பட்டிருச்சி. எல்லாரும் வேடிக்கை பாக்கறாங்களே தவிர, உதவிக்கு வரல. அதான் நானே ஆட்டோ பிடிச்சி இங்கே கொண்டுவந்து சேர்த்தேன்!’’ - முடிக்கும் முன்னமே பதட்டமாகிவிட்ட சம்பத், ஓடிப் போய் டாக்டரைப் பார்த்தான்...   ‘‘சரியான சமயத்தில் தூக்கிட்டு வந்ததால ஆபத்து ஒண்ணுமில்ல... காப்பாத்திரலாம்!’’ என நம்பிக்கை தந்தார் டாக்டர். நிம்மதிப் பெருமூச்சோடு வெளியே வந்த சம்பத், அப்போதுதான் பொன்னுச்சாமியை கவனித்துப் பார்த்தான். அழுக்கேறிய உடை... ஒரு கால் செயல் இழந்து தொங்கிக் கொண்டிருந்தது. ‘‘நீங்க...’’ ‘‘நான் அந்த ஸ்கூல் பக்கத்தில் இருக்கிற கோயில்ல பிச்சை எடுக்குறவன் சார்!’’ அதிர்ச்சியில் உறைந்த சம்பத், தெய்வம் கோயிலுக்கு உள்ளே மட்டுமல்ல, வெளியிலும் இருக்கிறது எனப் புரிந்துகொண்டான்!
    
   http://kungumam.co.in
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதைகள்
    
   வல்லவன்
      
   வல்லவன்   செ ல் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான் ஹரி. அவனது மேலதிகாரி.
   “சார், சொல்லுங்க சார்!”
   “ஹரி, என்னன்னு தெரியலே, திடீர்னு என் சிஸ்டம் ஹேங் ஆயிருச்சு. என்ன பண்றது?”
   ‘ஹூம்... இவருக்கெல்லாம் ஒரு கம்ப்யூட்டர்’ என்று மனசுக்குள் முனகிக்கொண்டு, “சார், கன்ட்ரோல் ஆல்ட் டெலிட் கீஸை பிரஸ் பண்ணுங்க. ஷட்டவுன் பண்ணிட்டு மறுபடியும் ஆன் பண்ணுங்க, சரியாயிடும்!” என்றான் ஹரி.
   தனது ஸ்கூட்டரில் அமர்ந்து, ஸ்டார்ட் பட்டனை அமுக்கினான். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. மறுபடி மறுபடி முயற்சி செய்தான். பலனில்லை.
   தூரத்திலிருந்து இதைப் பார்த்துக்கொண்டு இருந்த வாட்ச்மேன், ‘ஹூம்... இவருக்கெல்லாம் ஒரு ஸ்கூட்டர்!’ என்று முனகிக்கொண்டு, “சோக் போட்டு
    
   வறுமை
      
   வறுமை   கே.ஆனந்தன் பி ரமாண்டமாகப் படம் எடுப்பதில் பேர் வாங்கியிருந்த அந்த இளம் டைரக்டர், முன்னணி படத் தயாரிப்பாளரிடம் கதை சொல்லிக்கொண்டு இருந்தார்... “நாம இப்போ எடுக்கப்போற படம், வறுமையைப் பத்தின படம் சார்!”

   “சொல்லுங்க...”
   “மக்களின் வறுமைக்கு என்ன காரணம், இதைப் போக்க என்ன செய்யணும்னு ஆக்கபூர்வமா
     அலசப்போற படம்...”
   “ம்...”
   “ஹீரோ பரம ஏழை. சோத்துக்கே திண்டாடறான். நோயாளியான அம்மா, குடிகார அப்பா, கூடப் பொறந்த தங்கச்சிங்கன்னு எல்லாரையும் காப்பாத்தப் போராடறான். அவன் கடைசியில என்ன ஆகிறான்கிறதுதான் கதை!”
   “சரி சரி... பட்ஜெட் எவ்ளோனு சொல்லவே இல்லியே?”
   “அதிகம் இல்லே, ஐம்பது கோடி சார்!” என்றார் டைரக்டர்.
   ஸ்டார்ட் பண்ணுங்க, சார்!” என்றான்.
    
    
   திருவிளையாடல்.காம்
      
   new .திருவிளையாடல். com   நா ரதர் ஒரு கம்ப்யூட்டருடன் கைலாயத்துக்குள் நுழைந்தார். வழக்கம் போல கணபதிக்கும் முருகனுக்கும் அது யாருக்கு என்று சண்டை. “என்ன நாரதா, நீ வந்த நோக்கம் நிறைவேறிவிட்டதல்லவா?” என்று சிவன் கேட்க, “நாராயணா... அபசாரம்! அபசாரம்!” என்று நாரதர் பதற, “வேறு வழியில்லை சுவாமி, வழக்கம் போல் நீங்களே ஒரு போட்டி வைத்து, அந்த கம்ப்யூட்டர் யாருக்கு என்று முடிவு செய்யுங்கள்” என்றாள் பார்வதி.
   அதற்குள் முருகன் ‘ஓ’வென்று அழத் தொடங்கிவிட்டான். “கணபதி மவுஸை எடுத்துக்கொண்டு ஓடி விட்டான். எனக்கு ஒன்றும் இந்தக் கம்ப்யூட்டர் வேண்டாம். நான் பூவுலகம் சென்று, எனக்கென்று ஒரு வெப்ஸைட்
     உருவாக்கிக்கொண்டு என் பக்தர்களுடன் ‘சாட்’ செய்யப்போகிறேன்” என்று கோபமாகச் சொல்லிவிட்டு, மயில் வாகனத்தில் கிளம்பி விட்டான் முருகன்.
   ரவுசு பண்ணியபடி மவுஸுடன் ஓடும் கணபதியின் பின்னால் ‘பிரௌஸ்’ பண்ணிய படி ஓடினர் பரமசிவனும் பார்வதியும்.
   நாரதர் ‘யாஹூ..!’ என்று துள்ளிக் குதித்தார்.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   நிமிடக்கதை: நல்லா கதை விடுறாங்க!
    
    
    
    
    
    
   இன்னும் அரைமணி நேரம்தான் இருந்தது. அதற்குள் புடவை மாற்றி, முக டச்சப் செய்து, லேசாக வெள்ளை தெரிய ஆரம்பித்த முடி ஆரம்பங்களைக் கறுப்பு மை இட்டு மறைத்து... படப்படப்போடு கையும் படபடத்தது.
   "நந்தினி, அம்மா நந்தினி.... நெஞ்சு கரிக்குது, இருமல் நிக்காம வருது பார்...கொஞ்சம் சுக்கு வெல்லம் தட்டிப்போட்டு சுடு தண்ணீ எடுத்தா...." உள் அறையில் இருந்து கேட்டது குரல்.
     அலங்காரத்தை பாதியில் நிறுத்திவிட்டு அவசரமாக சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
   "என்ன நந்தினி...ரெடியா? மசமசன்னு சமையல் அறையிலே நிக்குற. நேரமாயிடுத்து. முகூர்த்தம் எட்டுக்கு. எல்லாம் முடிஞ்சு சாப்பாட்டு டைமுக்குத்தான் போக முடியும் இப்படி வேலை செய்தா...."
   எப்போதும் போல் சீக்கிரமாகக் கிளம்பி பின் முணுமுணுக்கத் தொடங்கினான் முரளி.
   அவளுக்கு எரிச்சல் வந்தது. அவன் அப்பா தண்ணீர் கேட்டதை அவனும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். என்னவோ இவளால் நேரம் ஆவது போல்....
   " நானா வரேன்னு சொன்னேன். நீங்கதான் ஆபீஸ் பாஸ் வீட்டுக் கல்யாணம். நீயும் வரணும்னு சொன்னதால அவசரமா கிளம்புறேன். இல்லை முதல்லயாவது சொல்லி இருக்கணும். கடைசி நிமிஷத்துல ... "
   முரளிக்கு சட்டென்று கோபம் வந்தது.
   " சரி நீ வரவேணாம். நான் மட்டும் போகிறேன். எதையாவது காரணம் சொல்லிச் சமாளிக்கிறேன்."
   அவளுக்கும் லேசாகக் கோபம் வந்தது.
   " ஆமாம் , சொல்லுங்கோ. அப்பாவுக்கு  உடம்பு முடியலை. பாரத்துக்க வேண்டி இருப்பதால் முடியவில்லை என்று"
   சுர் என்று கோபம் மூக்கில் ஏறியது.
   "இதப்பாரு, உடம்பு சரியில்லைன்னு காரணம் நான் சொல்லமாட்டேன். மேலே இருந்து தேவர்கள் நம் வார்த்தைக்கு ததாஸ்து என்று சொல்லிக்கொண்டே இருப்பாங்க. இதுபோல சொல்ல, அவர்கள் ததாஸ்து  என்று சொல்லி, அவருக்கு ஏதாவது ஆயிட்டா..."
   அவளுக்கும் அது சரியில்லை என்றே பட்டது. ஏற்கெனவே கொஞ்சம் உடம்பு படுத்துகிறது அவருக்கு!
   "அப்போ சரி, நம்ம பெண்ணுக்கு உடம்பு சரி இல்லை, அதனால் ஸ்கூல் போகலைனு சொல்லலாம்."
   "ஸ்டுபிட், உடம்பு சரியாயில்லைன்னு சொல்லக்கூடாதென்று இப்போதுதானே சொன்னேன். சரி, நேரம் ஆயிடுத்து, நான் பார்த்துக்குறேன்...." அவசரமாகக் கிளம்பிச்சென்றான்.
   நந்தினி நினைத்துக்கொண்டாள். என்ன காரணம் சொன்னார் என்பதை வந்ததும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். நாளை யாரையாவது நேரே சந்திக்கும்போது எதையாவது மாற்றிச்சொல்லி பிரச்சினையாகிவிடக்கூடாதே!  
   முரளி மிகவும் நேரம் ஆனதால் நேரே ஆபீசுக்குச்செல்ல, அவள் இதைப்பற்றி மறந்தே போனாள்.
   அடுத்தநாள் காலை விடாமல் அடித்துக்கொண்டிருந்த போனை எடுத்து ஹலோ சொல்வதற்குள்...
   "என்ன நந்தினி, ரொம்ப நேரமா போனை நீ எடுக்கவில்லையா. பயமாக போயிடுத்து. உடம்பு வேற சரி இல்ல உனக்கு. அதான் மயக்கமா இருக்கியோன்னு”
   ஆபீசில் முரளியுடன் பணி புரியும் ஆனந்தின் மனைவி...
   " எனக்கு உடம்பா...இல்லியே...." அவள் மேலே சொல்வதற்குள்...
   "உடம்பை பார்த்துக்கோ. எதாவது உதவி வேண்டும் என்றால் சொல்லு. முரளிக்கு நேற்று கல்யாணத்துல இருக்கவே முடியலை’  - அவள் பேசிக்கொண்டே இருந்தாள்... பொத்தென்று கீழே நந்தினி விழுந்தது அவளுக்கு எப்படித் தெரியும்?
  • By நவீனன்
   ஒருநிமிடக் கதை : கடனே வேணாம்!
    
    
       ஒருக்களித்து மூடி இருந்த கதவை லேசாகத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை. சத்தமில்லாமல் கதவைச் சாத்தினாள். உள்ளே பெரியவர் நிறுத்தி நிதானமாக மூச்சிழுத்துக் கொண்டிருந்தார். கண்கள் மூடியபடி இருக்க, அது தூக்கத்தையோ, மயக்கத்தையோ காட்டின. பக்கத்து ஸ்டூலில் அமர்ந்தபடி கதவை மறுபடியும் பார்த்து உறுதி செய்து கொண்டாள்.
   கைப்பேசியை கைப்பையிலிருந்து எடுத்து ஆன் செய்தாள். டிடிங் என்று அது ஆன் ஆகிற ஓசை பொன்னுசாமியின் நாயனம் கேட்டது போல் ஒரு திகைப்பை ஏற்படுத்தியது. கதவை மறுபடியும் பார்த்தாள். யாரும் வரவில்லை
     ”ஹலோ.... ”
   அன்றும் இப்படித்தான். அவள் ஹலோ சொல்லிவிட்டு காத்திருக்கும் நேரத்தில் மருமகள் வந்து விட்டாள்.
   ’’யேய்...பேரு என்ன...ராணியா கோணியா...இதப்பாரு, உங்க ஏஜென்சியிலே மொதக்கா சொல்லி இருக்கம். இங்கே வந்து நாள் முழுக்க போனை நோண்டுறது, கெக்கேபிக்கேன்னு சத்தம் போட்டுப் பேசுறது, தூங்கி வழியுறது இதெல்லாம் கூடாதுன்னு.  சொல்லட்டுமா இப்புடிச் செய்யிறேனு! ஜாக்கிரதை, வேல போயிடும். இன்னும் ஒருமுறை போன் கையிலே பாத்தேன்னு வையி...அம்புட்டுதான்.’’
   "ஹலோ....யாரு ரோஜா அம்மாங்களா...."
   " ஹலோ... ஹலோ....யாரு அது...ஹலோ யாரு பேசறீங்க..."
   எதிர்புறம் மிகவும் சத்தமாக பேசப்படும் குரல் வெளியே கேட்டுவிடக்கூடும். 
   "அம்மா, நாந்தான்மா உங்க பக்கத்து வூட்டு ராணி. ரோஜா இல்லீங்களா?"
   " ஓ...நீயாடி...எப்புடி இருக்க? ரோஜா குளிச்சிகிட்டு இல்ல இருக்கு...ஆமா...எங்கேடி போனே நீயி. உங்க அப்பா இழுத்துகிட்டு கிடக்காரு. நீ காசு பாக்க மெட்ராசுக்குப்  போயிட்ட..."
   " ரோஜாம்மா, நானு இப்ப நிறைய நேரம் பேசமுடியாது. அண்ணி போனை எடுக்க மாட்டேங்குறாங்க. அண்ணனும்தான். அதான் அப்பா எப்படி இருக்காரு.. ?"
   "இதப்பாருடி கூத்த? .அப்பா நலம் விசாரிக்க நேரமில்லையாமுல்ல! ரொம்ப சரிதான் உங்க அண்ணி சொன்னது..."
   " அய்யோ...அப்பா எப்படி இருக்காரு?"
   " ஆங்.. இந்த அவசதத்துக்கு குறைச்சல் இல்ல...மூத்திரம் பெஞ்சு அதுலயே பொறண்டு கிடக்காரு...சொந்த மக ஒனக்கில்லாத அக்கறை வந்தவளுக்கு என்னாத்துக்கு? அதான், கேட்டி இல்ல, சோறு தண்ணி கொடுக்க ஆள் இல்ல, ஒண்ணுக்கோ ரெண்டுக்கோ எடுத்துப் போட நாதி இல்ல. கேட்டுக்க...நானு போய் பார்க்கப் போனேன்...நாத்தம் கொடலைப் புடுங்குது..."
   பெரியவர் முகம் லேசான சுருக்கத்தோடு கால்கள் மேலும் கீழும் அசைந்தன. ஒண்ணுக்கு எடுக்கத்தான் இப்படிச் செய்வார்.
   "ரோஜா அம்மா.... வேலை வந்திடுச்சு...அப்புறமா பேசுறேன்..." போனைக் கட் செய்து ஜாக்கிரதையாக ஸ்விட்ச் ஆப் செய்து கைப்பையில் வைத்தாள்.
   "அம்மாடி ராணி, எனக்கு ஒரு சத்தியம் நீ செய்யோனும். இதப்பாரு உன் அண்ணா, வீட்டு மேலே கடன் வாங்கித்தான் எனக்கு இந்த ஆபரேசனை செஞ்சிருக்கான். அதனால, நீ மதராசுக்குப் போயி நிறைய சம்பாதிச்சு அந்தக் கடனை அடைக்கணும். உங்க அண்ணி என்னை எப்படி பாத்துகிட்டாலும் சரி. இருந்த ஒரே வீட்டையும் தின்னுட்டுப் போயிட்டான் கிழவன்னு பேச்சு எனக்கு வரக்கூடாது. வேற எந்தக்காரணம் காட்டியும் இங்கே வரக்கூடாது...செய்வியா? "
   மெதுவாக டையப்பரைக்கழட்டி எடுத்தாள். அங்கேயும் இங்கேயும் அசைந்ததால் படுக்கை வரை ஈரம் பரவி இருந்தது.
    "தாத்தா.... மெதுவா திருப்பி படுக்க வைக்கிறேன். அசையாம படுங்க, பெட்ஷீட்டை மாத்திடுறேன்..." என்றாள் டெட்டால் பாட்டிலை கையில் எடுத்தபடி.
   அந்த மனிதரின் கண்களில் இருந்து கசிந்த கண்ணீர், தலையணையை நனைத்திருந்தது.
   https://www.kamadenu.in
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதைகள்
             விசாரிப்பு பத்து நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சக ஊழியர்கோபாலனைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவதற்காக, மாணிக்கம் தன் மனைவியுடன் சென்றிருந்தார். அலுவலகச் செய்திகள், ஊர் வம்பு, சினிமா, அரசியல் என உற்சாகமாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசிக் கொண்டு இருந்துவிட்டுத் திரும்பி வருகையில் மனைவி கேட்டாள்...
   ‘‘ஏங்க, கல்யாண சந்தடியில் தாலிகட்ட மறந்துபோன கதையா, என்னென்னவோ அரட்டை அடிச்சுட்டுக் கடைசியில அவருடைய உடம்பைப் பத்தி விசாரிக்கவும், ஆறுதல் சொல்லவும் மறந்துட்டீங்களே... அவர் என்ன நினைச்சுப்பார்?’’
   மாணிக்கம் சிரித்தவாறே சொன்னார்... ‘‘ஒண்ணும் நினைக்க மாட்டான்! சந்தோஷம் தான் படுவான். நான் வேணும்னுதான் அவன் நோயைப் பத்திப் பேசலை. இந்தப் பத்து நாளில் எத்தனை பேரின் கேள்விகளுக்கு உடம்பைப் பத்தி, சிகிச்சைகள் பத்தி சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிருப்பான்? அந்த நிலையில் என் பேச்சு அவனுக்கு நிச்சயம் புத்துணர்வும் தெம்பும் கொடுத்திருக்கும்!’’
   - சொ.ஞானசம்பந்தன்
   முதல் இடம்! சு ந்தரியின் மகள் கவிதா பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் பள்ளியிலேயே இரண்டாவதாக வந்திருக்க, முதல் இடத்தைப் பிடித்தது, வேலைக்காரியின் மகள் அமிர்தா! இதை ஏதோ தனக்கு ஏற்பட்ட மானக்கேடாகவே எண்ணி, அன்றைக்கே வேலைக்காரியை நிறுத்திவிட்டாள் சுந்தரி.
   ‘‘என்னம்மா நீங்க, பாடங்கள்ல எனக்குத் தெரியாத சந்தேகங்களை எல்லாம் நான் அமிர்தாகிட்டேதான் கேட்டுத் தெரிஞ்சுப்பேன். அவ மட்டும் இல்லேன்னா, ஸ்கூல்ல நான் பத்தாவதாவோ பதினஞ்சா வதாவோதான் வந்திருப்பேன். இப்ப அவ அம்மாவை நீங்க வேலையை விட்டு நிறுத் திட்டீங்கன்னதும், அமிர்தா என்கிட்டே முகம் கொடுத்தே பேச மாட்டேங்கறா!’’ என்று கவிதா சிணுங்கவும், ‘அப்படியா விஷயம்’ என, மீண்டும் தேவியை வேலைக்கு வரச் சொன்னாள் சுந்தரி.
   மறுநாள் ஸ்கூலில்... ‘‘நடந்ததெல்லாம் அம்மா சொன்னாங்க கவிதா! உனக்கு நான் எதுவுமே சொல்லிக்கொடுக்கலே! இருந் தாலும், எங்க கஷ்டம் புரிஞ்சு, எனக்காகப் பொய் சொல்லி, மறுபடியும் அம்மாவை வேலைக்கு எடுத்துக்க வெச்சிருக்கே. ரொம்பத் தேங்க்ஸ்!’’- கவிதாவின் கை பற்றி, நெகிழ்ந்தாள் அமிர்தா.
   - ஆர்.ஜெசிந்தா
    
    
     எதிர்பாராத உதவி ஊரெல்லாம் கொலை, கொள்ளைகள். காவல்துறை இரவு நேர ரோந்துக்காவலை அதிகப்படுத்தி இருந்தது. நைட் ஷிஃப்ட் முடிந்து வீடு திரும்பிய ராஜுவை மறித்து, ‘ஐ.டி. கார்ட் இருக்கா? செல்போன் இருக்கா? ஆபீஸ் போன் நம்பர் இருக்கா?’ என்றுஎன் னென்னவோ கேட்டுக் குடைந்துவிட்டனர். ராஜு என்ன எடுத்துச் சொல்லியும், அவர் கள் சமாதானம் ஆகவில்லை.
   குழுமியிருந்த காவலர்களில் ஒருத்தர், தான் கடந்த மூன்று வருடங்களாக அந்தப் பகுதியிலேயேதான் சுற்றி வருவதாகவும், அவனை ஒருநாள்கூடப் பார்த்ததே இல்லை என்றும் சொல்லி வயிற்றில் புளியைக்கரைத்தார். அந்த நேரம், திடுதிடுவென ஏழெட்டுதெரு நாய்கள் ஓடிவந்தன. ராஜுவைச் சுற்றி நின்று வாலை ஆட்டிக் குழைந்தன.
   பேட்ரோல் வண்டியில் அமர்ந்திருந்த காவல் அதிகாரி மற்ற காவலர்களுக்குஉத்தர விட்டார்... ‘‘அந்த ஆளை விடுய்யா! அவர் இந்தப் பக்கத்து ஆள் மாதிரிதான் தெரியுது!’’
   - ஆர்.ஜெகந்நாதன்
   https://www.vikatan.com
  • By நவீனன்
   ஒருநிமிடக் கதை : தலையைச் சுத்தி ஒரு மொட்டை!
    
    
    
     உடல் தேறி, ஆபீசுக்குப்போகப்போவதாகச் சொன்னதும் மகிழ்ந்த மீனாட்சி, மகன் கால்களில் செருப்புடன் தலை முடி வெட்டக் கிளம்பியதும் திடுக்கிட்டாள்.
     இப்போதுதான் செந்தில் உடல் நலம் தேறி நடமாடத்தொடங்கி இருந்தான். அவன் பார்த்துப்பான் என்று கை விரித்து டாக்டர் சொன்னபோது ஒருநிமிடம் மூச்சு நின்றுபோய்தான் வந்தது அவளுக்கு.
   டாக்டர்…டாக்டர் என்று பின்னால் ஓடிப்போயும் கிடைக்காத பதிலால் சிறிது நேரம் திகைத்து , ஒரு... ஒருரூபாய் காயினை மஞ்சள் துணியில் முடிந்து
   “அப்பா, வெங்கடாசலபதி பெருமானே, நீதான் துணை. நல்ல படியா புள்ள பொழச்சு வந்தா அவன் தலைமுடியை காணிக்கை செலுத்துறேன் “ சத்தமாக அந்த ஏழுமலையானுக்கு வேண்டிக்கொண்டாள்.
   "அப்பா செந்திலு, திருப்பதிக்கு முடிக் காணிக்கை வேண்டுதல் இருக்கு. அதனாலே க்ராப் வேண்டாம். இந்த வாரமே திருப்பதி போயிட்டு வந்துடலாம் " என்றாள்.
   "யாரைக்கேட்டு இப்படி வேண்டிகிட்டே? முடி இல்லாம மொட்டைத்தலையா நானா?  சான்சே இல்ல" பதிலுக்குக் காத்திராமல் சலூனுக்குப்புறப்பட்டான்.
   எப்போதும் போகும் கடை மூடி இருந்ததால். புதிதாக திறந்திருந்த செவன் ஹில்ஸ் முடிதிருத்தத்திற்குள் சென்றான்.
   "பத்து நிமிடம்" என்ற சலூன்காரருக்கு தலையை ஆட்டிக் காத்திருந்தான்.
   சுகமாக ஒருவர் தலைமுடி வெட்டிய பின் மசாஜுக்கு தலையை இப்படியும் அப்படியும் திருப்பிக்காட்டியபடி சுகத்தில் லயித்திருந்தார்.
   “நல்லாத்தான் செய்யுற… சொகம் அள்ளுது, ஆமா… புதுசா இப்போத்தான் கடையை தொறந்திருக்க, இந்த வெட்டிய முடியை எல்லாம் இன்னாத்துக்கு மூலைல குவிக்கிற? இடம் நாஸ்டியா இல்ல போகுது“ என்று பாதி மூடிய கிறங்கிய கண்களுடன் சலூன்காரரைக் கேட்டார்.
   கை நிறைய எண்ணெய்யை எடுத்து உச்சந்தலையில் ஒரு சொத் சத்தத்துடன் அமுக்கிய வண்ணம் இப்படியும் அப்படியும் தேய்த்து விட்டபடி இருந்த சலூன்காரர்...
   "இல்ல சார். கீழே விழற முடியையெல்லாம் ரெஸ்டுலே இருக்கும்போது ஒரு மஞ்சள் பையிலே போட்டு வச்சுடுவேன் . திருப்பதிக்கு வேண்டுதல். முதல் மாசம் கடையில் கிடைக்கும் அனைத்தையும் ஏழுமலையானுக்குத்தான். இந்த முடியும் சரி பணமும் சரி "
   அவன் முறை வந்தபோது தெளிவாகச்சொன்னான்..."முழுசா எல்லா முடியையும் எடுத்துடுங்க".
   ‘மொட்டை போடணுங்கறீங்களா?’ என்று கேட்க, ஆமாம் என்று தலையாட்டினான்.  
   https://www.kamadenu.in
  • By நவீனன்
   ஒருநிமிடக் கதை: தேவைக்குத் தகுந்தது மாதிரி..!
    
    
    
   சிவா மிகவும் பதைபதைப்புடன் இருந்தான். அட்ரினல் சுரப்பிகள் ஓவர்டைமில் வேலை செய்து கொண்டிருந்தன. இருப்பா  அல்லது இறப்பா அளவிற்குப் பெரிய விஷயம் இல்லை.
     ஆனாலும் இருப்பா, கல்தாவா என்பது அந்த முப்பது வயது, வேலை இல்லாமல் இப்போது ஒரு ட்ரெய்னியாக எடுக்கப்பட்டு, இன்னும் சில வாரங்களில் வேலை நிச்சயமாக்கப்படும் நினைப்பில் தெருக் கோடி சாரதாவை அடிக்கடி பார்த்து,  அசட்டுத்தனமாக இளித்து, எதிர்பார்ப்போடு காதலைச் சொல்ல நினைத்தவனுக்குப் பெரிய விஷயமாகத்தான் இருக்கும்.
   சென்ற வாரம்தான் தலைமை எடிட்டர் காது குடைந்த சுகத்தில் மூழ்கி இருந்த வேளையில், அவனையும் ராஜாவையும் அழைத்தார். சுகானுபவத்தில் பாதி கிறங்கிய கண்களோடு அவர் வாயிலிருந்து விழுந்த முத்துக்கள் இவை...
   " ஏலே ரெட்டப்பயலுகளா.... பப்ளிஷர் முதலாளி ஒரு அசிஸ்டெண்ட் எடிட்டர் போஸ்ட்டுக்கு சம்மதிச்சுட்டான்.. கேட்டீயளா. நான் சொல்லிட்டேன், ஆமாம், புதுசா ஒரு பயலை எடுத்தாரவேண்டாம். போன வாரம் சேர்ந்த இந்த ரெண்டு பயலுக்கும் ஒரு டெஸ்ட்டு வெச்சுப் பாத்து, ஒருத்தனை பர்மனெண்ட் செஞ்சிடுவோம்னு.... "
   சிவா ராஜாவைப்பார்க்க, ராஜா சிவாவைப்பார்க்க ஒரு நிமிடம் அங்கே நீயும் நானுமா கண்ணா சீன் அரங்கேற்றியது.
   " இந்தா....ரெட்டை பேருக்கும் இத்தான் சவாலு. இந்த வார மேகசீனுக்கான மேட்டர் இந்தா இருக்கு. ரெண்டு பேரும் தனியா இத்த எடிட் செஞ்சு எடுத்தாங்க...அத்த வெச்சு முடிவு செஞ்சிடுவோம்."
   அப்போது சுரக்கத்தொடங்கிய அட்ரினல்தான் இதோ இப்போது கைகளில் இருவரின் எடிட்டட் மேட்டரை கைகளில் வைத்தபடி பார்க்கும் சீப் எடிட்டரை பார்க்கும் போது அதிகரித்திருந்தது.
   அவனுக்கு நம்பிக்கை இருந்தது, தான்தான் தேர்ந்தெடுக்கப் படுவோம் என்று.
   பின்னே... சும்மாவா வேலை செய்திருக்கிறான்.
   " அண்ணே ....முனுசாமிண்ணே.... நீங்கதான் இங்க பல வருஷமா இருந்துருக்கீங்க...நம்ம சீப் எடிட்டருக்கு என்ன பிடிக்கும்.... "
   " அட.. என்ன பயப்பா நீ...இன்னுமா தெரிஞ்சு வெச்சுக்கல்ல .... தமிழ் தான் ... ஆமாம்பா ... அய்யாவோடு உசிரே தமிழ்லதான் இருக்கு ... தெரியுமில்லை ...."
   " நண்பா.. நீ எனக்கு சீனியர்...போட்டோகிராபரா சீப் கூட நிறைய இடத்துக்குப்போயிருக்கே. அவருக்கு என்ன பிடிக்கும்?"
   " மச்சி, தமிழ்தான் அவருக்கு ரொம்ப பிடிச்சது. ஆங்கிலம் கலக்காமல் சுத்தமான தமிழ்ல எழுதினா ஆள் க்ளோஸ்..."
   இப்படி நிறைய ஹோம்வொர்க் செய்து அவன் தெரிந்து கொண்டது.... சுத்தமான , அழகான, ஆங்கிலம் கலக்காமல் பேசினால் அல்லது எழுதினால் சீப் எடிட்டரை இம்ப்ரெஸ் செய்யமுடியும்.
   இரண்டு நாட்கள் இரவு தூங்காமல் எடிட் செய்யக்கொடுத்த செய்திகளை மிக அழகாகத் திருத்தி, பத்தியில் இட்டு, பத்திரிகையின் முப்பது பக்கத்துக்குள் அடக்கினான்.
   அதுதான் இப்போது சீப் எடிட்டர் பார்வையில்.
   " அட ரெட்டப்பயலுங்களா... இப்படி என்ன அவஸ்தையிலே விட்டுட்டீங்களே... நா என்னா முடிவெடுக்க...?"
   சிவா ராஜாவின் பக்கங்களை கையில் எடுத்தான்.
   " சார்.... இங்க பாருங்க... இந்த கதையோட டைட்டில்.. இரண்டு வார்த்தைக்கு நடுவே ஒற்றுமிகும் "ப்" விட்டுப் போயிருக்குது.."
   சீப் எடிட்டர் சடாலென்று அதைப் பிடித்துக்கொண்டார்.
   " ஆமாம்ல....அட..இது தப்புதான்னேன்..."
   ராஜா மெதுவாகச் சொன்னான்.
   " அய்யா... இது தெரியாம நடக்கலை... இந்த ஒற்று எழுத்தைப்போட்டா மேலே இடம் நிறைய தேவைப்படுது. அதான் எடுத்துட்டேன். அங்க ஒரு பத்தி சோப்பு விளம்பரம் சின்னதாப் போடலாம்.. இதப்போலவே உள்ளேயும் செஞ்சிருக்கேன்...அதுலேயும் விளம்பரம் போட முடியும்.... "
   சீப் எடிட்டர் முகம் மலர்ந்தார்..
   " இதுல்ல புது திங்கிங் ...பாரு, விளம்பரம் அதிகமானா நம்ம ப்ரேக் ஈவன் லைனைத்தாண்டி எங்கியோ இல்ல மார்ஜின் போயிடும்.... அட... இந்த ஒற்றெழுத்து இப்போ யாரும் போடுதில்ல தெரியுமோ .... அதான் அர்த்தம் புரியுதுல்ல அது இல்லாமலே. . அப்புறம் அது இன்னாத்துக்கு ?"
   சிவாவிற்குப்புரிந்தது  வேலை யாருக்கு என்று . மற்றுமொன்றும் புரிந்தது ...மொழிக்கான சேவையும் தேவையை ஒட்டியே....!!!
   https://www.kamadenu.in
  • By நவீனன்
   ஒருநிமிடக்கதை: நடிப்பு!
    
    
    
   ஏதோ ஒரு நேரத்தில் நாம் காட்டும் ரியாக்‌ஷன் நம் வாழ்க்கையையே முடிவு செய்துவிடுகிறது. இந்தப்பாடத்தை மிக நன்றாகப் படித்து டிஸ்டிங்ஷனுடன் பாஸ் செய்யுமளவிற்குத் தேர்ந்துவிட்டான் குமார்.
   செய்து கொண்ட கல்யாணம் இதில் பெரும் பங்கு வகித்தது.ரொட்டியின் மிக அருமையான  பதத்தில் தட்டில் போடப்படும் தோசையை இனம் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் தருணத்தில் அவனிடம் கேள்வி கேட்கப்படும்.
     “என்னங்க... டிபன் பிடிச்சிருக்கா..”
   வேகமாகத் தலையை ஆட்டி மிக அற்புதமாக ”அமிர்தம்’’ என்று சொல்லி அது தோசையா ரொட்டியா என்ற எசகுபிசகான பதில் சொல்லி, கேள்வி கேட்டு மாட்டிக்கொள்ளாமல் சிவாஜி கணக்காக சிரித்துக்கொண்டே அழுவான் பாருங்கள். அதேபோல் அழகான பெண்களைப்பார்க்கும் போது சதாரணமாக அவன் பாப்பாயி போல் ஆவதுண்டு. ஆண்கள் பலருக்கு இதன் அர்த்தம் புரிந்திருக்கும்.
   மனைவி எதிரில் வேறொரு பெண்ணின் கால்களின் கீழ் உள்ள செருப்பை மட்டும் பார்த்து, செருப்பு புதுசா அல்லது பழசா என்று யோசிப்பது போல  நடிப்பில் தேறிவிட்டான்.
   ஆனால் அவனுக்கே இன்று தன் பாடம் மறந்து அதிர்ச்சியைக் காட்ட வேண்டிய அந்த வார்த்தைகளை அவள் சொன்னாள்.
   “என்னங்க... வேலைக்கார பெண்ணை அடுத்த மாசம் நிப்பாட்டிடப்போறேன்”  - அந்த ஒரு நிமிட கண்களின் அதிர்ச்சி ப்ளாஷ் அவளுக்கு போதுமானதாக இருந்தது..
   “சரி இல்லியே, நீங்க என்னாத்துக்கு அதிர்ச்சி அடையுறீங்க?”
   உள்ளே பதிந்திருந்த சிவாஜிகணேசன் தலையைக்காட்டினார்.
   “ மக்கு, நாள் முழுக்க வேலை. இப்பவே ரொம்பவும் டயர்டா தெரியுறே... வேலை செய்றவளையும் நிறுத்திட்டா... நோ... என் தங்கத்தை கஷ்டப்பட விடமாட்டேன் “
   நைஸாகத் திரும்பி வாசலில் வேலை செய்துகொண்டிருந்த மல்லிகாவைப் பார்த்தான். வயது... இருபது தாண்டாது. பளிச் முகம். டைட் ஃபிட்டிங் சுடிதார்தான் உடை. அவ்வப்போது இவனைப் பார்த்து ’களுக்’ சிரிப்பு. இவளை நிறுத்திவிட்டால்.?  
   “ ராஜாத்தி, ஏண்டா இந்த யோசனை..”
   “பின்ன என்னங்க, மத்த வீடுகள்ல ஐநூறுதான் தராங்க..நாம எண்ணூறு. ஆனா வேலை சுத்தமில்லீங்க.. ரொம்பவே வாயாடறா....”  - காரணங்களை அடுக்கிக்கொண்டே போனாள்.
   இதை எப்படித் தடுப்பது? உள்ளே சிவாஜிகணேசனுடன் கதை டிஸ்கஷனில் இருந்த பாரதிராஜா மெதுவாகத் தலை காட்டினார்.
   “இல்ல, எது செய்றதா இருந்தாலும் யோசிச்சு செய்... நேத்துதான் , அந்தத் தெருக்கோடி வீட்டு அம்மா, இவளை வாசல்ல வெச்சு ஏதோ பேசுறதைப் பாத்தேன். இவளை வேலைக்கு கூப்பிடாங்களோ என்னவோ?இவ அங்கே போய் நம்ம வீட்டுச் சமாசாரத்தை சொல்லிடப்போறா ”
   அந்த வீட்டுடன் இவளுக்கு ஆகவே ஆகாது. கொளுத்திப்போட்டது நன்றாக வேலை செய்தது.
   “ஆ... நேத்தா... பேசினாளா... சரியான ஊமக்கோட்டானுங்க நீங்க.. சொல்லவேஇல்ல. அவதான் இவளை கலைச்சுவிட்டிருக்கா...பாருங்க.. சொன்ன வேலையைக்கூட பண்ணாம போறா... அவ வீட்டுக்கு வேலைக்கு ஆள் தேடிக்கிட்டு இருக்கா. நான் விட்டுடுவேனா... ஆள் இல்லாம கஷ்டப்படட்டும்.  நான் நிறுத்தமாட்டேன்”
   அவனுக்குப் போன உயிர் திரும்ப வந்தது... நல்லவேளையாக மல்லிகா வீட்டில் மீதமாகிப்போன சாப்பாட்டை எடுத்துப்போகிறாள். புதிதாக ஒருத்தி வந்து இந்த படு மட்டமான சாப்பாட்டை எடுத்துச்செல்ல மறுத்தால்..? ஃபிரிஜ்ஜில் அவை வைக்கப்பட்டு அவனுக்குக் கொடுக்கப்பட்டு , அதை அவன் விழுங்கி, நன்றாக இருப்பது போல் ஓவர் ஆக்டிங் செய்து...
   அப்பப்பா... தப்பித்ததை நினைத்து ரசித்தான். ரசித்துச் சிரித்தான்.
   https://www.kamadenu.in/news/stories/3788-oru-nimida-kadhai-nadippu.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category
  • By நவீனன்
   ஒருநிமிடக் கதை: டைம்..!
    
    
    
    
   அங்கே இருந்த இருக்கைகள் யாவையும் யாரோ ஒருவரால் இறுக்கிப் பிடிக்கப்பட்டிருந்தது. மணிக்கணக்காக இப்படித்தான் இருக்கிறது. எழுந்து, இருக்கையில் கைக்குட்டை அல்லது கையில் இருந்த ஃபைல் என்று இடத்தை பத்திரப்படுத்தி பின் ரிசப்ஷனுக்குச் சென்று, ஏதோ விசாரித்து வந்தார்கள்.
     என்ன கேட்கப்பட்டது என்பதை அறிய கம்பசூத்திரம் தெரிய வேண்டாம், கேட்டது காதுகளில் விழவும் வேண்டாம். வேறு வேறு தொனிகளில், வேறு வேறு மொழிகளில், வேறு வேறு டெசிபலில் இது ஒன்றுதான் கேட்கப்பட்டிருக்கும் …
   “ டாக்டர் என்னை எப்போ கூப்பிடுவார்?”
   காத்திருப்பின் பாரம் அங்கே கருமேகமாகச் சூழ்ந்து வேகமாக அழுத்திக் கொண்டிருந்தது.
   சாம் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் சுவாமிநாதன் எள்ளாய் பொரிந்துகொண்டிருந்தார். பக்கத்தில் உள்ளவர் சிலரிடமும் பேசி முடித்துவிட்டார். அது போதாமல் ரிஸப்ஷனில் நின்றிருந்த அந்தச் சின்னப் பெண்ணிடம் சென்றார்.
   “ஏம்மா… பண்ணண்டுக்கு அப்பாயிண்ட்மெண்ட். வாங்கன்னு சொன்னீங்க. மணி பாருங்க மூணு. விளையாடறீங்களா…வேலை இல்லாதவன்னு நினைச்சீங்களா? இத்தனை நேரம் வீணாப்போயிடுத்து”
    “சார், அர்ஜெண்ட்டா ஒரு ஆபரேஷன். டாக்டர் இப்போதான் வந்தார். நீங்க மூணாவது. இன்னும் அரை அவர்லே பாத்துடலாம் சார்.”
   “இது இனெஃபிஷென்ஸி டு தி கோர்… ஃபோன் பண்ணி சொல்லலாமில்ல… நேரத்தை வீணடிச்சு…”
   நிறுத்தாமல் கத்திக்கொண்டே இருந்தார் நேரத்தைப்பற்றியும், அதன் உபயோகம் பற்றியும்!  உள்ளே போகும்வரை.
   ஆபீஸ் உள்ளே நுழைந்த சாமிநாதனிடம் அவர் பிஏ..
   “சாம்…. ஒரு எக்ஸ் எம்ப்ளாயி. காலையிலே பத்து மணிக்கு வரச்சொல்லி இருந்தீர்களாம். அவர் வெயிட்டிங்…”
    “ என்ன விஷயமாம்… இப்ப என்ன…?”
   “ நாம் சஸ்பெண்ட் செய்தோமே போன வாரம். அவர்தான். ரிலீவிங் ஆர்டரில் உங்க கையெழுத்து வேண்டும். நம்ம கம்பெனி ரூல்ஸ் படி கையெழுத்துக்கு முன்னாடி, உங்களோட அவர் பேச வேண்டும். பாவம். நாம்தான் இன்று வரச்சொல்லி இருந்தோம். பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட கடைசி நாளாம். இந்த பணம் செட்டில் ஆகி வந்தால்தான் முடியுமாம். பணத்திற்கு வேறு ஏற்பாடும் செய்ய முடியவில்லையாம். அவஸ்தைப் படுவதைப் பார்க்க பாவமாக இருக்கு. வரச்சொல்லவா…?”
   “ஓஹோ... அவன் புகார் சொல்ல, நீ கேட்டு தலை ஆட்ட, நன்றாக பொழுது போனதோ? நான் என்ன வேலைவெட்டி இல்லாம சும்மா இருக்கேனா..? போ… அவனை நாளைக்கி வரச்சொல்….  ஆயிரம் வேலை இருக்கு. டைம் இஸ் ப்ரெஷியஸ்…”
   உண்மைதான் .நேரம் பொன்னானது… ஆனால் அது அவரவருக்கு மட்டும்தான்.
   https://www.kamadenu.in