Sign in to follow this  
நவீனன்

பொதுத்தேர்தலை உடன் நடத்துங்கள்....பிர­த­ம­ராகும் எண்­ண­மில்லை; தேர்தலை நடத்துங்கள் என்­கிறார் மஹிந்த

Recommended Posts

பொதுத்தேர்தலை உடன் நடத்துங்கள்

p18-29ab0328b11b6ea6bf2ca1eb3fbf815b1ea52e5a.jpg

 

பிர­த­ம­ராகும் எண்­ண­மில்லை; தேர்தலை நடத்துங்கள் என்­கிறார் மஹிந்த

(எம்.சி.நஜி­முதீன்)

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மூலம் பொதுத் தேர்­தலை நடத்­து­மாறு மக்கள் செய்­தி­யொன்றை வழங்­கி­யுள்­ளனர். ஆகவே அர­சாங்கம் உட­ன­டி­யாக பொதுத்தேர்­தலை நடத்த வேண்டும். அப்­பொதுத் தேர்தல் முடி­வு­களை அடிப்­ப­டை­யாகக்­கொண்டே நாம் ஆட்­சி­ய­மைப்போம். மாறாக ஐக்­கிய தேசியக் கட்சி­யையோ ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யையோ இணைத்து புதிய ஆட்சி தொடர்­வ­தற்கு  நாம் தயா­ரில்லை என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். 

 ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமைப் பத­வியை ஜனா­தி­பதி மைத்­தி­பால சிறி­சேன ஒரு­போதும் எனக்கு வழங்க மாட்டார். அத்­துடன் மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் எமக்­கி­ருப்­ப­தனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பிர­தி­நி­தித்­துவம் பற்றி அலட்­டிக்­கொள்­ளப்­போ­வ­தில்லை என்றும் மஹிந்த ராஜ­பக்ஷ குறிப்­பிட்­டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்ல நெலும் மாவத்­தை­யி­லுள்ள அக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன பெரு­வெற்றி பெற்­றது. அவ்­வெற்­றியை பெற்­றுத்­தந்த மக்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துக்­கொள்­கிறேன். குறு­கிய காலத்தில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஊடாக பிர­சார நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு இப்­பெ­ரிய வெற்­றி­பெற்­றுள்ளோம். 232 சபை­களில் நாம் வெற்­றி­பெற முடிந்­துள்­ளது. மஹ­ர­கம, மஹி­யங்­கனை, பண்­டா­ர­வளை, பேரு­வளை, திரப்­பன ஆகிய சபை­களில் நாம் ஆத­ரவு வழங்­கிய சுயேச்சை குழு­வி­னரே வெற்­றி­பெற்­றுள்­ளனர். ஏனைய பிர­தான கட்­சிகள் கடு­மை­யான பின்­ன­டைவைச் சந்­தித்­துள்­ளன. 

இத்­தேர்­த­லா­னது உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான உறுப்­பி­னர்­களைத் தெரி­வு­செய்யும் தேர்­த­லாக அமை­யாது தேசிய முக்­கி­யத்­து­வம்­வாய்ந்த சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பா­கவே அமைந்­தது. எமக்கு கிடைத்­தி­ருக்கும் வெற்­றியை வைத்துப் பார்க்­கும்­போது நாட்டை பிரிக்கும் அர­சி­ய­ல­மைப்பு, தேசிய வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்தல், வரிச் சுமை, மக்­க­ளுக்­கான சலு­கை­களை இல்­லாது செய்தல், அர­சியல் பழி­வாங்கல்,இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ரான கெடு­பி­டிகள் என்­ப­வற்­றுக்கு எதி­ரா­கவே மக்கள் ஆணை வழங்­கி­யுள்­ளனர்.

நாம் ஆட்­சியில் இருக்கும் போதும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தல்­களை எதிர்­கொண்­டுள்ளோம். அச்­சந்­தர்ப்­பங்­களில் அர­சாங்கம் மேற்­கொள்­ள­வுள்ள வேலைத்­திட்­டங்­களை முன்­னி­றுத்­தியே தேர்தல் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­துள்ளோம். எனினும் இம்­முறை அர­சாங்கம் எதிர்த்­த­ரப்­பினர் மீது சேறு பூசி பிர­சாரம் மேற்­கொண்டு தேர்­தலை வெற்­றி­கொள்­ளலாம் எனக் கரு­தியே பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டனர். ஆகவே ஜன­வரி எட்டாம் திகதி தேர்­தலில் வெற்­றி­பெற்­றது போல் வெற்­றி­பெ­று­வ­தற்கே அர­சாங்கம் எதிர்­பார்த்­தது. அதற்கு மக்கள் தகுந்த பதி­ல­ளித்­துள்­ளனர்.

 உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் மூலம் பொதுத் தேர்­தலை நடத்­து­மாறு மக்கள் செய்­தி­யொன்றை வழங்­கி­யுள்­ளனர். ஆகவே அர­சாங்கம் உட­ன­டி­யாக பொதுத் தேர்­தலை நடத்த வேண்டும் என அர­சாங்­கத்­திடம் கேட்­டுக்­கொள்­கிறோம். ஆகவே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் முடி­வு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நாட்டில் நிலவும் ஸ்திர­மற்ற நிலையைப் போக்­கு­வ­தற்கு பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்தி அப்­பெ­று­பே­று­களின் பிர­காரம் ஸ்திர­மான அர­சாங்­கத்தை அமைக்க வேண்டும்.மேலும் மூன்று மாகாண சபை­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்­ளது. அம்­மா­காண சபை­க­ளுக்­கு­மான தேர்­த­லையும் நடத்த வேண்டும்.

 கலப்புத் தேர்தல் முறையில் சிக்கல் நிலை உள்­ளது. பெறு­பேறு வெளி­யிடும் நட­வ­டிக்கை இன்னும் முழுமை பெற­வில்லை. அத்­துடன் சில தேர்தல் பெறு­பே­று­களில் சிறிய திரிபு நிலை காணப்­ப­டு­கி­றது. அதனால் சில பிர­தே­சங்­களில் பெற்­றி­பெற்ற தரப்பை விட தோல்­லி­ய­டைந்த தரப்­பினர் அதிக பிர­தி­நி­தித்­து­வங்­களைப் பெற்­றுள்­ளனர். பாரா­ளு­மன்றில் அவ­ச­ர­மாக நிறை­வேற்­றிய திருத்­தத்தின் மூலமே குறித்த சிக்கல் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

 உள்­ளு­ராட்சி மன்றத் தேர்­தலின் முழு­மை­யான பெறு­பே­றுகள் வெளி­யான பின்னர் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் தெரி­வா­கி­யுள்ள உறுப்­பி­னர்­களை அழைத்து தங்­களின் பிர­தே­சங்­களில் எவ்­வாறு வேலைத்­திட்­டங்­களை முன்­வைக்க வேண்டும் என்­பது தொடர்பில் ஆலோ­சனை வழங்­க­வுள்ளோம் என்றார்.

கேள்வி : 2020 ஆம் ஆண்­டுக்கு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் பொதுத்­தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்றா நீங்கள் கோரு­கி­றீர்கள்?

பதில் : நிச்­ச­ய­மாக… அதற்கு முன்னர் பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். மக்­களின் நம்­பிக்கை இல்­லாது ஆட்சி நடத்த முடி­யாது. அது தற்­போது அர­சாங்க தரப்­பிற்கும் நன்கு விளங்­கி­யி­ருக்கும்.

கேள்வி : அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆம் திருத்­தத்தின் பிராரம் குறித்த காலக்­கெடு நிறை­வ­டைய முன்னர் பாரா­ளு­மன்றத் தேர்­தலை நடத்­து­வ­தாக இருந்தால் பார­ளு­மன்றில் பிரே­ர­ணை­யொன்று கொண்டு வந்து நிறை­வேற்­றப்­பட வேண்டும். எனவே அப்­பி­ரே­ர­ணையை நீங்கள் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிப்­பீர்­களா?

பதில் : இல்லை. அவ்­வா­றான யோச­னை­யொன்றை முன்­வைக்­கப்­போ­வ­தில்லை. ஏனெனில் நாம் அவ்­வா­றான பிரே­ரணை கொண்­டு­வ­ரும்­போது அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்கள் எதிர்ப்புத் தெரி­விப்பர். ஆகவே அர­சாங்க தரப்பே அவ்­வா­றான பிரே­ர­ணை­யொன்றை பாரா­ளு­மன்­றிற்கு கொண்டு வர வேண்டும். அவ்­வாறு கொண்­டு­வ­ரப்­ப­டு­மி­டத்து அதற்கு நாம் ஆத­ரவு வாழங்­குவோம். மேலும் அப்­பி­ரே­ரணை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான மக்கள் அப்­பி­ராயம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும்.

கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அல்­லது ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து அர­சாங்கம் அமைப்­ப­தற்கு நீங்கள் எதிர்­பார்க்­கின்­றீர்­களா?

பதில் : அவ்­வாறு நாம் ஏன் இணைந்து ஆட்­சி­ய­மைக்க வேண்டும்? அவ்­வாறு செய்­வ­தாயின் தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டி­ய­தில்லை. புதிய அர­சாங்கம் அமைக்க வேண்­டு­மாயின் தேர்தல் நடத்தி அப்­பெ­று­பே­று­க­ளின்­படி அர­சாங்கம் அமைக்க வேண்டும் என்­பதில் உறு­தி­யாக உள்ளோம். அவ்­விரு தரப்­பி­ன­ரையும் மக்கள் நிரா­க­ரித்­துள்­ளனர்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் நாம் 96 ஆச­னங்­களைப் பெற்றோம். எனினும் அதி­லுள்ள சிலர் மக்­களின் ஆணைக்கு புறம்­பாக அர­சாங்­கத்தில் இணைந்து கொண்­டனர். ஆகவே நாம் எதிர்க்­கட்­சியில் அங்கம் வகித்தோம். எமக்கு கிடைக்க வேண்­டிய எதிர்க்­கட்சித் தலை­மை­யையும் இல்­லாமல் செய்­தனர். எனவே எந்­த­வொரு அதி­கா­ரமும் இல்­லாத நிலை­யி­லேயே நாம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை எதிர்­கொண்டு வெற்­றி­பெற்றோம்.

கேள்வி : தங்­க­ளுக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தல­மைப்­ப­தவி வழங்­கப்­பட்டால் அதனை நீங்கள் ஏற்­றுக்­கொள்­வீர்­களா?

பதில் : அது தொடர்பில் கட்­சியே தீர­மா­னிக்க வேண்டும். எனினும் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மைப்­ப­த­வியை வழங்க மாட்டார் என்றே கரு­து­கிறேன்.

கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் அங்­கத்­து­வத்தை வைத்­துக்­கொண்டு கட்­சியை சீர் குலைப்­ப­தாக சிலர் குற்றம் சாட்­டினர். அதன் யதார்த்தம் என்ன?

பதில் : அக்­குற்­றச்­சாட்­டுக்­கான தீர்ப்பை மக்கள் வழங்­கி­யுள்­ளனர்.

கேள்வி : ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் அங்­கத்­து­வ­தத்தை தொடர்ந்தும் பேணு­வீர்­களா?

பதில் : அது பற்றி பின்னர் தீர்­மா­னிப்போம். எனினும் நாட்டு மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் எமக்­கி­ருக்­கின்­ற­போது போலி­யான அங்­கத்­துவம் எமக்­கெ­தற்கு? மரு­தானை டார்லி வீதியில் இருக்கும் கட்­டிடம் மாத்­திரம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யல்ல.

கேள்வி : கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் தங்­களின் தலை­மையில் 96 உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­வா­கி­யி­ருந்­தனர். எனவே அவர்­க­ளையும் மேலும் சில­ரையும் இணைத்­துக்­கொண்டு புதிய அர­சாங்கம் அமைக்கும் எதிர்­பார்ப்­பி­ருக்­கி­றதா?

பதில் : இல்லை… அவ்­வா­றான எதிர்­பார்ப்பு எம்­மிடம் இல்லை. பொதுத் தேர்­தலை நடத்தி அதன் பெறு­பே­று­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு புதிய அர­சாங்கம் அமைப்­ப­த­தையே நாம் விரும்­பு­கிறோம். ஏனெனில் சூழ்ச்சி செய்து அர­சாங்கம் அமைக்கும் எண்ணம் எமக்­கில்லை. ஜன­நா­யக ரீதியில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கே எதிர்­பார்க்­கிறோம்.

கேள்வி : உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் தாங்கள் பெரும்­பான்மை பெறாத சபை­களில் வேறு கட்­சி­க­ளுடன் இணைந்து ஆட்­சி­ய­மைக்­க­வுள்­ளீர்­களா?

பதில் : அவ்­வாறு எம்­முடன் இணைந்து அட்­சி­ய­மைப்­தற்கு வேறு தரப்­பினர் ஆர்வம் காட்­டு­கின்­றனர். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தொண்­ட­மானின் கட்சி எம்­முடன் இணைந்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு தற்­போதே ஆயத்­த­மா­கி­யுள்­ளது.

கேள்வி : அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பார­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவ­ரா­வது தங்­க­ளுடன் இணை­வது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­னரா?

பதில் : இல்லை. அவ்­வாறு எவரும் பேச்­சு­வார்த்தை நடத்­த­வில்லை.

கேள்வி : அவர்கள் இணைந்­துகொள் முன்­வந்தால் இணைத்­து­கொள்­வீர்­களா?

பதில் : அதில் அங்கம் வகிக்கும் பல­ருக்கு எம்­முடன் இணை­வ­தற்கு விருப்பம் இல்லை.

கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட­சியும் இணைந்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்­சி­ய­மைக்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றதே?

பதில்: கட்சி தலை­மைகள் அதற்கு முற்­ப­டலாம்.எனினும் கிரா­மப்­பு­றங்­க­ளி­லுள்ள மக்கள் அதனை விரும்பப் போவ­தில்லை. அதனால் தெரி­வு­செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­களும் அதற்கு இணங்கப் போவ­தில்லை.

கேள்வி : நாட்டின் பொரு­ளா­தா­ர­தத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு எவ்­வா­றான நட­வ­டிக்­க­கைகள் மேற்­கொள்­ளலாம் என எதிர்­பார்க்­கி­றீர்கள்?

 பதில் : முதலில் அதி­கா­ரத்தை வழங்­குங்கள், அதன் பின்னர் செய்து காட்­டு­கிறோம். கடந்த காலங்­க­ளிலும் அதனை நாம் செய்து காட்­டி­யுள்ளோம்.

கேள்வி : ஐக்­கிய தேசியக் கட்­சியும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இணைந்து புதிய அர­சாங்கம் அமைப்­ப­தற்கு இட­முண்டு என சமூக வலைத்­த­ளங்­களில் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவ்­வாறு நடை­பெற்றால் அதனை நீங்கள் எவ்­வாறு எதிர்­கொள்­வீர்கள்?

பதில் : பொறு­தித்­தி­ருந்து பார்ப்போம்… எனினும் அவ்­விரு தரப்­பி­னரும் இணைந்து ஆட்­சி­ய­மைப்­பா­ளர்கள் என எதிர்­பார்க்க முடி­யாது. மக்கள் எமக்கு வழங்­கி­யுள்ள ஆணையை நிறை­வேற்றும் வகையில் செயற்­ப­டுவோம். ஆகவே நாட்டை இரண்­டாக பிரித்தல், தேசிய வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்தல் என்­ப­வற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்போம். மேலும் மத்­திய வங்கி பிணை­முறி மோச­டி­யுடன் தொடர்­பு­டை­ய­வர்­களைத் தண்­டிப்­ப­தற்கும் நாம் எதிர்க்­கட்­சியில் இருந்து கொண்டும் நட­வ­டிக்கை எடுப்போம்.

கேள்வி : பொதுத் தேர்­த­லுக்கு சென்றால் நீங்கள் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஊடா­கவா போட்­டி­யி­டு­வீர்கள்?

பதில் : மக்­களின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்­கவே அது தொடர்பில் நாம் நட­வ­டிக்கை எடுப்போம்.

கேள்வி : புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் எவ்­வா­றான நிலைப்­பாட்டில் உள்­ளீர்கள்?

பதில் : முதலில் தேர்தலுக்குச் செல்ல வேண்டும். அதன் பின்னர் அது பற்றி தீர்மானிப்போம்.

கேள்வி : நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை இல்லாது செய்யும் நடவடிக்ககைக்கு ஆதரவு வழங்குவீர்களா?

பதில் : ஆம், ஆதரவு வழங்குவேன்.

கேள்வி : வடக்கு கிழக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கான ஆதரவு எவ்வாறுள்ளது.

பதில் : வடக்கு கிழக்கிலும் எமக்கு ஆதரவு உள்ளது. அப்பிரதேசங்களில் எமது பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆகவே இன மத மொழி பேதமின்றி சகல தரப்பினரும் எமக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

கேள்வி : எதிர்க்கட்சி தலமைப் பதவியை இரா. சம்பந்தனால் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியுமா?

பதில் : அது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கை எடுக்கும் என்று தெரியாது. எனினும் மக்கள் தற்போதைய எதிர்க்கட்சித் தலைமையையும் நிராகரித்துள்ளனர். ஆகவே நாம் தான் உண்மையான எதிர்க்கட்சியாகச் செயற்படுகிறோம்.

கேள்வி : பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதி்ராக பாராளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டு வருவீர்களா?

பதில் : தேர்தல் மூலம் மக்கள் வழங்கியிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை விட வேறு நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையில்லை என்றே கருதுகிறேன். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-13#page-1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this