Jump to content

யாழில். கூட்டமைப்பின் தோல்விக்கு மதவாதமே காரணம் – ஸ்ரீகாந்தா


Recommended Posts

யாழில். கூட்டமைப்பின் தோல்விக்கு மதவாதமே காரணம் – ஸ்ரீகாந்தா

srikantha.jpg?resize=768%2C576
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆரதவு வழங்க வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான சிறீக்காந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார் . அதேவேளை அது தொடர்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து சில சாதகமான கருத்துக்கள் வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

யாழிலுள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இத் தேர்தலில் பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றேம். எமது பின்னடைவுக்கு சில காரணங்கள் உள்ளன. யாழ். மாநகர சபை, நல்லூர் பிரதேச சபையில் மதவாத கருத்துக்கள் பரப்பப்பட்டன. அதனை சுயேட்சைக் குழுக்கள் சில செய்தன. இறுதி 10 நாட்களில் தான் எமது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருந்தோம். இதுவும் எமது பின்னடைவுக்கு காரணம். ஆனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில சபைகளை தவிர பெரும்பாலான சபைகளின் நாங்கள் முன்னிலை வகிக்கின்றோம்.

எதுவாக இருந்தாலும் எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையிலே அனைத்து சபைகளின் தேர்தல் முடிவுகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில் இருக்கும் சபைகளில் ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி என்பன ஒத்துழைப்பு தர வேண்டும். சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை என்பவற்றில் முன்னிலையில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆட்சி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவினை வழங்கும்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஒவ்வொருவர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினோம். ஆனால் தேர்தலின் பின்னர் மக்களுக்கு செய்ய வேண்டுய கடமைகளை செய்வதற்க்கு ஒன்றுபட வேண்டும். பங்காளிகளாக இருக்காவிட்டாலும் பகை இல்லாமல் சபைகளை நடத்தி மக்களுக்கான சேவையினை செய்ய வேண்டும். பிரித்து நினற எங்களுக்கு இத் தேர்தலில் மக்கள் ஒரு ஆணையை தந்துள்ளார்கள். அதனை ஏற்று செயற்ப்பட வேண்டியது தமிழ் கட்சிகளின் கடமையாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண்போகாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எமது நெஞ்சில் இருக்கின்றது. தமிழ் இனம் தலை நிமிர நாங்கள் என்ன விலை என்றாலும் கொடுக்க தயாராக இருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/66699/

Link to comment
Share on other sites

"தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்காளியாகவும் இருக்கவேண்டாம், பகையாளியாகவும் இருக்கவேண்டாம்"

 

 

தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் சபைகளில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்காளியாகவும் இருக்கவேண்டாம், பகையாளியாகவும் இருக்கவேண்டாம்.  தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆட்சியமைக்கும் சபைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பங்காளியாகவோ, பகையாளியாகவோ இருக்காது எனவும்  ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி  சபை தேர்தலின் பின்னான நிலமைகள் தொடர்பாக நேற்று மாலை யாழ்.நகரில் நடைபெற்ற ரெலோ அமைப்பின் ஊடகவியலானர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே என்.சிறீகாந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது, 

srikantha.jpg

"தமிழ்தேசிய  கூட்டமைப்பு  இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி  சபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் பல கட்சிகள் அறுதி பெரும்பான்மையை எடுக்க தவறியிருக்கின்றது.

இந்நிலையில் எவருடனாவது கூட்டிணைந்தே தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் கொள்கை இல்லாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளுடன் கூட்டிணைவதற்கு நாங்கள் தயாராக இல்லை.மக்களுடைய ஆணைக்கு தலைவணங்கி தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்கும். 

சபைகளில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்காளியாகவும் இருக்கவேண்டாம், பகையாளியாகவும் இருக்கவேண்டாம். அதேபோல் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆட்சியமைக்கும் பருத்தித்துறை நகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபை போன்றவற்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பங்காளியாகவும் இருக்காது, பகையாளியாகவும் இருக்காது.

எனவே இருதரப்பும் ஒருவருக்கொருவர் தடையாக இருக்காமல் இருக்கவேண்டும்" என கேட்டு கொண்டார். 

http://www.virakesari.lk/article/30599

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.