Archived

This topic is now archived and is closed to further replies.

poet

அன்பே காதலர் தின வாழ்த்துக்கள் - ஜெயபாலன்

Recommended Posts

அன்பே உனக்கு காதலர் தின வாழ்த்துக்கள்.
.
காதலர் தினத்தில் மனம்திறந்து சில உண்மைகளைப் பேச விரும்புகிறேன். குடும்பத்தில் குழப்பம் வரலாம். ஆனாலும் உண்மையாக இருக்கவே விரும்புகிறேன். நான் நெடுநாளளாக ஒரு அடக்கமில்லாத வாயாடி பேரழகியை வைச்சிருக்கிறேன். அவளுக்காகத்தான் நான் இத்தனை நாளாக பெசன்ற்நகரில் குடி இருக்கிறேன். 
அவளது அகன்ற விழிகளின் நீலத்தில் மயங்கி நீலி என்றுதான் அவளை செல்லமாக அழப்பேன். அவளுக்கு வெள்ளிச் சருகை இளைத்த நீல சேலைகளில் கொள்ளை ஆசை. இன்று அதிகாலை காதலர் தின ாழ்த்துக்கள் சொல்வதற்க்காக அவளைத் தேடிச் சென்றேன். நெடுநேரமாக எனக்காகக் காத்திருந்திருப்பாள் போல. வரவேற்பதற்க்கு ஓடிவந்தவள் பின்னர் சிணுங்கி கோபப்பட்டு வெண்பற்களை இழித்து அழகுகாட்டியபடியே திரும்பித் திரும்பி ஓடினாள். நெடுநேரம் இதே விளையாட்டு. நிறைய தமிழ்ப் படம் பார்த்திருப்பாள் போல. இறுதியில் உப்பு வியர்வையும் கண்ணீரும் தோய என்னோடு மல்லுக்கட்டியபடி ஓவென அழத்தொடங்கிவிட்டாள். பதறிப்போய் அவளது கண்ணீர் உப்புக் கரிக்கும் முகத்தில் அழுத்தி முத்தமிட்டபடி “காதலர் தின வாழ்த்துக்கள் என் நீலக் கடலே” என்று உருகினேன். 
.
நான் நீலக் கடலை வைச்சிருக்கும் கவிஞனாக்கும்.

Share this post


Link to post
Share on other sites

வாவ்...:27_sunglasses:

 

Share this post


Link to post
Share on other sites

காதலர் தின வாழ்த்துக்கள் கவிஞர் உங்களுக்கும் உங்கள் துணைவி வாசுகி அக்காவுக்கும். உங்களுக்குள் இப்படி ஓர் ரசிகன் இருப்பதை நான் இன்றுதான் அறிகின்றேன். இதுவரை நான் அறியாத உங்களின் ஓர் முகம் இது. பொயட் கவிஞருக்கு இப்படியும் எழுத வருமோ? பாராட்டுக்கள்! :17_heart_eyes:

Share this post


Link to post
Share on other sites

கவிதைக்கு பொய் அழகு கவிஞரே .......அலை அலையாய் அழகான பொய் , அதனால் அப்படியே நம்பிட்டோம் ......!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites