இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் ஆட்டோமொபைல் துறையினருக்கு இந்த ஆண்டு மோசமான ஆண்டு என்று சொல்லலாம். விற்பனை குறைவினால் அவதிப்பட்ட பெரிய நிறுவனங்கள், தங்களது தொழிற்சாலைக்கு சில நாள்கள் விடுமுறை விட, பல சிறிய நிறுவனங்கள் சத்தமில்லாமல் நஷ்டத்தால் பூட்டப்பட்டன. ஆட்டோமொபைல் துறையின் இந்த டெக்டானிக் அதிர்வில் அதிகம் பாதிக்கப்பட்டது ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள்.
இப்போது, புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் உலக அளவில் ஆட்டோமொபைல் துறையில் பல தொழிலாளர்கள் வேலையை இழந்துவருகிறார்கள். ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட டேட்டாவின்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெய்ம்லர் மற்றும் ஆடி நிறுவனங்கள் 20,000 ஊழியர்களை வேலையிலிருந்து நிறுத்தியுள்ளன.
பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள், வரும் ஆண்டுகளில் 80,000 பேர் வரை வேலையிலிருந்து நீக்கவுள்ளன. இதனால் ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள்தான் அதிகம் பாதிக்கப்படும், இந்தியா போன்ற வளரும் நாடுகளும் இதனால் சிறிதளவு பாதிக்கப்படலாம்.
வேலை இழப்புகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டுமில்லை... ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலும் தொடர்கின்றன. எலெக்ட்ரிக், தானியங்கி மற்றும் ஆப் சார்ந்த கார் சேவைகளின் வளர்ச்சியால் தற்போது அனைத்து நிறுவனங்களும் வேலையாட்களையும், வேலை செய்யும் முறையையும் மாற்றிவருகின்றன. சீனாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திசெய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனமான NIO Inc, பல கோடி ரூபாயை இந்த ஆண்டு இழந்துள்ளது. நியூயார்க் ஸ்டாக் மார்க்கெட்டில் இதன் பங்குகள் சரிவதால், இந்த நிறுவனம், கடந்த செப்டம்பர் மாத இறுதியில் 20 சதவிகித தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது. இதனால், 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
"தானியங்கி மற்றும் எலெக்டரிக் கார்களுக்காக, ஒவ்வொரு ஆட்டோமொபைல் நிறுவனமும் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை தங்களது ஆராய்ச்சிக்காக செலவழித்துள்ளன. இதனால், ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையில் இருந்த நிறுவனங்களுக்கு விற்பனை குறைவு என்பது இன்னும் நெருக்கடியைக் கொடுக்கும் விஷயாக இருக்கிறது" என்கிறார், ப்ளூம்பெர்க் இன்டலிஜென்ஸ் அனலிஸ்ட் கில்லியன் டேவிஸ்.
இதனால், தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் பணத்தை மிச்சம்பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிஸான் நிறுவனம்கூட, அதன் தலைவர் கார்லோஸ் கோன் கைதுக்குப் பிறகு கொஞ்சம் சரிந்துள்ளது. ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள், உலகில் பல இடங்களில் இருக்கும்
தங்களது தொழிற்சாலைகளிலிருந்து 12,500 வேலையாட்களைக் குறைக்கப்போவதாக, இந்த ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.
வேலை குறைப்பு மற்றும் தொழிற்சாலைகள் மூடுவதை எதிர்த்து, ஜெனரல் மோட்டார்ஸின் 46,000 ஊழியர்கள் அமெரிக்காவில் 40 நாள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். நவம்பர் 22 அன்று, ஜெர்மனியின் ஸ்டுக்கார்ட் நகரில் 15,000 ஊழியர்கள் தொழிலாளர் வேலை இழப்புக்கு எதிராகப் பேரணி நடத்தியுள்ளார்கள். இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்த ஜெர்மனியின் பெரிய தொழிற்சங்க அமைப்பான IG Metall, தற்போது ஜெர்மனியில் 1,50,000 தொழிலாளர்களின் வேலை, ஆபத்தில் உள்ளதாகக் கூறுகிறது.
ஃபோர்டு நிறுவனம், தன்னுடைய தொழிலை மாற்றியமைக்கப்போவதாகக் கூறி, 10 சதவிகித சம்பள ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது. 6 தொழிற்சாலையை மூடியுள்ளது. இதனால், 17,000 பேர் வேலை இழந்துள்ளார்கள். இதில் 12,000 பேர் ஐரோப்பிய ஊழியர்கள். இப்போது, நம் முன் இருக்கும் முக்கியமான கேள்வி, அமெரிக்கா-ஐரோப்பாவில் ஏற்பட்ட பாதிப்புகள், இந்தியாவில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான்.
https://www.vikatan.com/technology/motor/carmakers-announced-20000-layoffs-in-a-week
வரைபடத்தில் பார்த்தால் மேற்கில் இருப்பதாகத் தெரியும். ஆனால் தொண்டமானாறு கடற்கரையை ஒட்டி இருப்பதால் வடமராட்சி வடக்கு அதிகாரத்திற்குள் வரும்.
வடமராட்சி தெற்கு- மேற்கு கரவெட்டிப் பிரதேச சபையைக் குறிக்கும். இந்தப் பகுதியில் அல்வாய், அத்தாய், இமையாணன், கட்டைவேலி, கப்பூது, கரணவாய், கரவெட்டி, மாத்தோணி, நெல்லியடி, சமரபாகு, இலக்கிணாவத்தை, துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டி ஆகிய ஊர்கள் இருக்கின்றன.
தமிழகத்தில் விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட இருந்த 120 வயது ஆலமரம், தனியார் அமைப்பின் முயற்சியால் வேருடன் இடமாற்றம் செய்யப்பட்டது.
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டுசாலை அருகே, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வீதி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விரிவாக்க பணிகளுக்காக அங்கிருந்த 120 ஆண்டு பழமையான ஆலமரத்தை வெட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த ஆலமரத்தை வேருடன் பெயர்த்து, வேறு இடத்தில் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அங்கு, கோவையைச் சேர்ந்த 'ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், ஆலமரத்தின் விழுதுகள் மற்றும் கிளைகளை வெட்டினர். பின்னர், மரத்தை சுற்றி 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, வேருடன் மரத்தை கீழே சாய்த்தனர்.
தொடர்ந்து, கிளைகள் மற்றும் விழுதுகள் இல்லாத மரத்தை இரண்டு கிரேன்களின் உதவியுடன் 1000 அடி தொலைவிலுள்ள கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்திற்கு கொண்டு சென்று, மாற்று இடத்தில் நட்டனர்.
இதுகுறித்து, 'ஓசை' நிர்வாகி கே.சையது தெரிவித்ததாவது,
“இதுவரை 200க்கும் அதிகமான மரங்களை வேறு இடத்தில் நட்டு, அவைகளுக்கு மறுவாழ்வு வழங்கியுள்ளோம். மரங்கள்தான் நம் மூச்சுக் காற்று அதை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
ஒரு மரத்தை வளர்க்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதுபோன்ற மரங்கள் என்றால், நுாறு ஆண்டுகள் ஆகும். மரங்களை பாதுகாக்க வேண்டும். எந்த பகுதியிலும் மரங்களை மாற்று இடத்தில் வைக்க சேவை மனப்பான்மையுடன் உதவ நாங்கள் தயாராக உள்ளோம். எங்களை, 70103 50066 மற்றும் 84288 59911 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
https://www.virakesari.lk/article/70591
பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளில் கூட இன்னும் மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாத நிலையில் தாயகம் உட்பட பொருளாதார ரீதியாக வளர்ந்துவரும் நாடுகளில் இதை யாரும் பிரச்சனையாகவே பார்க்காத துர்ப்பாக்கிய நிலை உள்ளது.
ஒரு ஒரு மனிதாபிமான பிரச்சனையா இல்லை சமூக பிரச்னையா இல்லை பொருளாதார பிரச்சனையா இல்லை அரசியல் பிரச்சனையா என பார்த்தால் எல்லாமும் சேர்ந்த கலந்த ஒரு சிக்கலான பிரச்சனை. சகல தரப்புக்களும் இணைந்தே தீர்வை நோக்கி நகரவேண்டும்.
ஆககுறைந்தது பாடசாலைகளில் இந்த சமூகம் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஊட்டி, ஒரு சிறந்த சமூகத்தை வளப்படுத்தலாம்.