Jump to content

"காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை”

உச்ச நீதிமன்றம்.

supremecourt.jpg

புது தில்லி: "காவிரி நதிநீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று வெளியிட்ட தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும், காவிரியில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி விவகாரத்தில் பாசன வசதி பெறும் 4 மாநிலங்களும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வாசித்து வருகிறார். அதில் முதல் தகவலாக, காவிரி நதிநீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை என்று கருத்துக் கூறியுள்ளார்.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று அளித்து வருகிறது

காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 9- இல் தெரிவித்தது.

இதன்படி, காவிரி வழக்கு விசாரணை ஜூலை 11-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 20-ஆம் தேதி வரை 27 நாள்கள் நடைபெற்றது. விசாரணையின் போது, தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் அந்தந்த மாநில நலன்கள், உரிமைகளை முன்னிறுத்தி வாதங்களை முன்வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, காவிரி வழக்கு இறுதி விசாரணையில் இதுவரை நடைபெற்ற வாதங்கள், ஆவணங்கள், நீர்வள நிபுணர்களின் கருத்துகள் அடங்கிய எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் உள்ளிட்டவற்றை அந்தந்த மாநில வழக்குரைஞர்கள் சமர்ப்பிக்க அமர்வு உத்தரவிட்டது. மேலும், வழக்கு தொடர்பான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ஆம் தேதி ஒத்திவைத்தது.

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்வா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அறிவித்துள்ளது.

தினமணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு: தமிழகத்துக்கு வழங்கப்பட்ட காவிரி நீரில் 14.75 டிஎம்சி குறைப்பு

cauvery.jpg

புது தில்லி: 'காவிரி நீரில் தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருப்பதன் மூலம், 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் வழக்கில் 4 மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது.

காவிரியில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து 264 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்று தமிழகம் கோரியிருந்தது. ஆனால், 2007ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், தமிழகத்தில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் உள்ளது. எனவே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது. நிலத்தடி நீரை உடனடியாக கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

காவிரியில் இருந்து 184.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 4.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்ற நடுவர்மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது" என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காவிரி நதிநீர் வழக்கு: 

தீர்ப்பின் முக்கியம்சங்கள்!

புது தில்லி: "காவிரி நதிநீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை!" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று வெளியிட்ட தீர்ப்பில் ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்திருந்தார்.

மேலும், காவிரியில் இருந்து ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று வெளியிட்டது.

அந்த தீர்ப்பில், காவிரி நீர் என்பது தேசத்தின் பொதுச் சொத்து. காவிரி நதிநீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்று கருத்துக் கூறியிருந்தனர்.

காவிரி நதிநீர் எங்களுக்கேச் சொந்தம் என்று கர்நாடகம் கூறி வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த கருத்தை முன் வைத்துள்ளனர்.

தமிழகத்தில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் உள்ளது. எனவே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து 184.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகாவுக்கு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து ஆண்டுதோறும் கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரும் வழங்க வேண்டும் என்ற நடுவர்மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து எந்த மாநிலமும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியரசுத் தலைவர் மேற்பார்வையில் காவிரி மேலாண்மை வாரியம் செயல்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

குடிநீர் பயன்பாட்டை கருத்தில் கொண்டு பெங்களூருவுக்கு கூடுதல் நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், தமிழகத்துக்கு நிலத்தடி நீர் இருப்பதை நடுவர் மன்றம் கணக்கில் கொள்ளவில்லை என்றும், நிலத்தடி நீரை உடனடியாக கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், 'காவிரி நதிநீர் விவகாரத்தில் மெட்ராஸ் - மைசூர் இடையேயான ஒப்பந்தம் செல்லும் என்றும், அதன்படி, 1892, 1924ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தங்கள் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின்படி, தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா காவிரி நதியின் குறுக்கே புதிய அணைகளை கட்ட முடியாது' என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவுக்கு கூடுதலாக வழங்கப்படும் 14 டிஎம்சி தண்ணீரில் பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்கு 4 டிஎம்சியும், தொழில் நிறுவனங்களுக்கு 10 டிஎம்சியும் வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கர்நாடகம் வரவேற்பு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக விவசாயிகள் தங்களது கவலையை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு' என்று தெரிவித்துள்ளார்.

 

தினமணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு... எப்போதும் மாற்றான் தாய் பிள்ளை போலத் தானே பார்க்கக் படுகின்றது வன்னியன்!

இந்த நிலை எப்போதாவது மாறும் என்று நம்புகின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, புங்கையூரன் said:

தமிழ் நாடு... எப்போதும் மாற்றான் தாய் பிள்ளை போலத் தானே பார்க்கக் படுகின்றது வன்னியன்!

இந்த நிலை எப்போதாவது மாறும் என்று நம்புகின்றீர்களா?

'மத்திய அரசு நியாயமான தீர்வை தரும்' என நம்பியிருப்பது இலவு காத்த கிளி கதை தான்.

இரண்டே வழிகள்:

  • இலவசங்களுக்கு சோரம்போகும் மக்களின் எண்ணம் மாறி, அசுர பலம் பொருந்திய, தீர்க்கதரிசியான தமிழக தலைமை வரவேண்டும்..

அல்லது

  • தனியாக பிரிந்து சென்று பண்டைய மன்னர்கள் போல் தட்டிப்பறிக்க வேண்டும்..

இரண்டுமே தற்போது கானல்நீர் தான்..!

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DWI4r05U8AAeLOb.jpg

DWIegfIVAAEZDyc.jpgநான் இன்று மவுன விரதம். காவிரி தீர்ப்பு குறித்து கருத்து கேட்டு, கேட்டை ஆட்டாதீர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

DWIegfIVAAEZDyc.jpg

நான் இன்று மவுன விரதம். காவிரி தீர்ப்பு குறித்து கருத்து கேட்டு, கேட்டை ஆட்டாதீர்

இருக்கிற 'கூத்தாடிக் கோமாளிகள்' பத்தாதுன்னு இவரு வேறை 'ஆன்மீகம், கோமியம்'ன்னு அரசியலை குழப்புறது..  raleur2010.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ராசவன்னியன் said:

இருக்கிற 'கூத்தாடிக் கோமாளிகள்' பத்தாதுன்னு இவரு வேறை 'ஆன்மீகம், கோமியம்'ன்னு அரசியலை குழப்புறது..  raleur2010.gif

மீடியா வந்து எங்கேன்னு கேட்டா, சிஸ்டம் சரி பண்றது விஷயமா இமயமலை போயிருக்கேன்னு சொல்லிடுங்க.
DWI-qGlVAAAxu0K.jpg:large

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

177 டிஎம்சி ஆவது திறந்துவிடுவார்களா?அல்லது அதற்கும் போராட்டம் தானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

177 டிஎம்சி ஆவது திறந்துவிடுவார்களா?அல்லது அதற்கும் போராட்டம் தானா?

நிச்சயம் வராது. ஏட்டில் மட்டுமே இருக்கும்..! இந்தியாவின் நீதி(?)யை எவரும் மதிப்பதில்லை.

தமிழக மக்களும் சில நாளில் மறந்து அடுத்த சூடான செய்திக்கு மாறிவிடுவார்கள்.

ஒரே உலக அதிசயம், ஜல்லிக்கட்டு போராட்டம் மட்டுமே.அதுவும் மிகவும் வீக்கான மந்திரிசபை இருந்ததால் தான் அவ்வளவு கூட்டம்.

அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு போராட்டம் இவ்வளவு பெரிய அளவில் வளர விட்டிருக்க மாட்டார். ஏவல்துறையை ஏவி அடக்கியிருப்பார்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, உரை

ராகுல் காந்தியை... பிரதமர் ஆக்கினால், காவிரி தண்ணி கிடைக்கும்.  -குஸ்பு-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, உரை

ராகுல் காந்தியை... பிரதமர் ஆக்கினால், காவிரி தண்ணி கிடைக்கும்.  -குஸ்பு-

அரசியல் அரிசுவடி தெரியாத கூட்டம் அரசியல் பொறுப்பில் இருப்பது எங்கள் நாட்டுக்கு சேர்த்து அபத்தமானது .

43 minutes ago, ராசவன்னியன் said:

நிச்சயம் வராது. ஏட்டில் மட்டுமே இருக்கும்..! இந்தியாவின் நீதி(?)யை எவரும் மதிப்பதில்லை.

தமிழக மக்களும் சில நாளில் மறந்து அடுத்த சூடான செய்திக்கு மாறிவிடுவார்கள்.

ஒரே உலக அதிசயம், ஜல்லிக்கட்டு போராட்டம் மட்டுமே.அதுவும் மிகவும் வீக்கான மந்திரிசபை இருந்ததால் தான் அவ்வளவு கூட்டம்.

அம்மையார் உயிரோடு இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு போராட்டம் இவ்வளவு பெரிய அளவில் வளர விட்டிருக்க மாட்டார். ஏவல்துறையை ஏவி அடக்கியிருப்பார்.

ஆள் உயிருடன் இருக்கும்வரை தமிழகத்துக்கு என்ன தேவையோ அடிப்படையான விடயங்களில் குறைவைக்கவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அரசியல் அரிசுவடி தெரியாத கூட்டம் அரசியல் பொறுப்பில் இருப்பது எங்கள் நாட்டுக்கு சேர்த்து அபத்தமானது .

தமிழக அரசியலில் உள்ள, வெற்றிடத்தை நிரப்ப.... 
ரஜனி, கமல், விசால், சுகாசினி, குஸ்பு என்று...   சினிமாவில் இருந்து ஒரு பட்டாளமே  இறங்கியுள்ளதை பார்க்க,
தமிழ் நாட்டின் மீது இருந்த, அபிமானம் போய் விட்டது. 

சகாயம் போன்றவர்கள்.... இனியும்,  தாமதிக்காமல்.... 
தமிழக நலன் கருதிய.... ராமதாஸ், சீமான், வேல்முருகன்,  கட்சிகளின்  சேர்ந்து ஒரு அரசியலை ஆரம்பிக்க வேண்டியது என்பது.... காலத்தின் கட்டாயம்.
இதனை... தவற விடும் அரசியல் என்பது.... அவர்களுக்கும், தமிழகத்துக்கும் சோகமான முடிவாக இருக்கும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீர்ப்பானது நியாமற்றது தஞ்சை விவாசாய மண்டலம் ஒரு பேச்சுக்காவது கவனிப்பில்லாமல் கிடக்கு தண்ணீர் குறைபபுக்குரிய முக்கிய காரணம் பங்களூர் போன்ற டெக் நகரங்களின் அவசிய தண்ணிர் தேவையை பற்றியே மூச்சுக்கு முன்னூறு தடவை நீதிபதிகள் கவலைபடுகினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'விவசாயி நல்லசாமி' சொல்வதில் நியாயம் இருக்கிறது..

ஒவ்வொரு நாளும் இவ்வளவு நீர் என பிரித்துக் கொடுத்துவிடுவதே சிறந்த வழி, குழப்பங்களை, மனக்கசப்பை தவிர்க்கும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

177 டிஎம்சி ஆவது திறந்துவிடுவார்களா?அல்லது அதற்கும் போராட்டம் தானா?

 

wlr75w.jpg

 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்க்கும்..!

சித்தராமையா தடாலடி

 

siddaramaiah-1518867980.jpg    16kyyyb.jpg

 

பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

இன்னும் 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம், நேற்று, காவிரி வழக்கில் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று நிருபர்களிடம் கூறுகையில், "பொதுவாக எந்த ஒரு நதிநீர் விவகாரமாக இருந்தாலும், மேலாண்மை வாரியம் அல்லது, கண்காணிப்பு குழு அமைப்பது வழக்கம்தான்.

காவிரி விவகாரத்தில் கண்காணிப்பு குழு ஏற்கனவே செயல்பட்டு வருவதால், மேலாண்மை வாரியம் அமைக்க தேவையில்லை. மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும். காவிரி பாசன மாநிலங்கள் அனைத்தையும் மத்திய அரசு ஒருங்கிணைத்து இதற்கு தீர்வு காண வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளதாக ஊடகங்களில் தப்பாக செய்தி வெளியாகியுள்ளது. நான், தீர்ப்புக்கு பிறகு கர்நாடக, வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதே தவிர, குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை(?) என தெரிவித்தனர்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

ஒன் இந்தியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்க்கும்..!

 

சித்தராமையா தடாலடி

ஏற்கனவே 2000 tmc தண்ணீரை அநியாயமாக கடலுக்குள் விட்டு விளையாடுகினம் . இதற்க்குள் தமிழ்நாட்டுக்கு 20 tmc உச்ச நீதிமன்றமே குறைத்துவிட்டுது இப்ப இந்தாள் இப்படி கூத்தடிக்குது .

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.