Jump to content

யாழ்.மாவட்­டத்தில் புகை­யிலை பயிர்ச் செய்­கைக்கு பதி­லாக கற்­றாழை மற்றும் மிளகாய் செய்­கை அறி­முகம்

Recommended Posts

யாழ்.மாவட்­டத்தில் புகை­யிலை பயிர்ச் செய்­கைக்கு பதி­லாக கற்­றாழை மற்றும் மிளகாய் செய்­கை அறி­முகம்

யாழ்.மாவட்­டத்தில் புகை­யிலை பயிர்ச் செய்­கைக்கு பதி­லாக கற்­றாழை மற்றும்  மிளகாய் செய்­கை அறி­முகம்

யாழ்.மாவட்­டத்தில் புகை­யிலை பயிர்ச் செய்­கைக்கு பதி­லாக கற்­றாழை மற்றும் நீண்­ட­காலம் பயன் தரக்­கூ­டிய மிளகாய் செய்­கையும் என்­பன அறி­முகம் செய்­யப்­ப­ட­வுள்­ளன.இதன் முதற்­கட்­ட­மாக, கற்­றாழைப் பயிர்ச் செய்கை வேலணைப் பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்டு நல்ல வளர்ச்சி நிலையை அடைந்­துள்­ள­தாக மாவட்ட விவ­சாய போத­னா­சி­ரியர் திரு­மதி சசி பிரபா கைலேஸ்­வரன் தெரி­வித்தார்.

மேலும், 2020 ஆண்­டுடன் புகை­யிலைப் பயிர்ச்­செய்­கையை நிறுத்­து­வ­தற்கு அரசு தீர்­மா­னித்­துள்­ளதால் அதற்கு பதி­லாக கற்­றாழை மற்றும் நீண்­ட­காலம் நின்று பயன்­தரும் மிளகாய்ச் செய்கை என்­பன அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது.

வறள் நிலத் தாவ­ர­மான கற்­றா­ழையை தோட்ட நிலத்தில் மட்­டு­மல்ல திருத்தி அமைக்­கப்­ப­டாத நிலங்­க­ளிலும் செய்கை பண்­ணலாம். கற்­றாழை ஒரு கிலோ கிராம் 150 ரூபா­வுக்கு மேல் விற்­ப­னை­யா­கின்­றது.நல்ல விளைச்­சலில் ஒரு மடல் தண்டு 700 கிரா­முக்கு குறை­யாத நிறை உடை­ய­தாக இருக்கும். செய்­கையில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு ஊக்­கு­விப்பு உத­விகள் மற்றும் சந்­தைப்­ப­டுத்தல் வச­திகள் செய்து தரப்­படும் எனவும் மாவட்ட விவ­சாய போத­னா­சி­ரியர் திரு­மதி சசி பிரபா கைலேஸ்­வரன் மேலும் தெரிவித்துள்ளார்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-மாவட்­டத்தில்-புகை­/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லண்டனில் ஒரு கற்றாளை மடல் ஏழு பவுனுக்கு குறையாது அதுவும் மிக வெப்ப வலயம் என்றால் 15 பவுன் .

Link to comment
Share on other sites

  • 1 year later...

கற்றாளை உற்பத்தியாளர் சங்கம் ஆரம்பம்

யாழ்.மாவட்ட கற்றாளை உற்பத்தியாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி விவசாய மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, நிர்வாக தெரிவுகள் இடம்பெற்றன.

புகையிலைக்கு மாற்று பயிர்செய்கை வேண்டும் என விவசாயிகள் சிந்திக்கும் கால கட்டத்தில் கற்றாளை செய்கைக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளன.

அதனால் அவற்றின் உற்பத்தியினை ஊக்குவித்தல், அதற்கான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தல், சட்டவிரோதமான முறையில் பிடுங்கப்படும் கற்றாளைகளை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை குறித்த சங்கம் எதிர்வரும் காலத்தில் முன்னெடுத்து செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

image_03adb6e77b.jpg

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கற்றாளை-உற்பத்தியாளர்-சங்கம்-ஆரம்பம்/71-234003

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2018 at 10:26 AM, பெருமாள் said:

இங்கு லண்டனில் ஒரு கற்றாளை மடல் ஏழு பவுனுக்கு குறையாது அதுவும் மிக வெப்ப வலயம் என்றால் 15 பவுன் .

எங்க வாங்குகினம்? 

உந்த கருவேல்பிள்ளை இலை மாதிரி, கட்டிக் கொண்டு வந்திருவினமே... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

எங்க வாங்குகினம்? 

உந்த கருவேல்பிள்ளை இலை மாதிரி, கட்டிக் கொண்டு வந்திருவினமே... 

இலங்கையிலேயே உங்கள் வீடு தேடி வந்து வாங்குவினம்.ஆனால் அவர்கள் வாங்கும் விலையை விட பல மடங்கு லாபம் வைத்து விற்ப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சுவைப்பிரியன் said:

இலங்கையிலேயே உங்கள் வீடு தேடி வந்து வாங்குவினம்.ஆனால் அவர்கள் வாங்கும் விலையை விட பல மடங்கு லாபம் வைத்து விற்ப்பார்கள்.

அங்கதான் 150 ரூபா. £0.75 (75 பென்ஸ்)

நான் கேக்கிறது, லண்டனிலே எங்க வாங்குகினம்.... அல்லது எங்க நாம விக்கலாம் எண்டதை. 

பெருமாள் £15 எண்டு சொல்கிறார், அதுதான் கேட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

அங்கதான் 150 ரூபா. £0.75 (75 பென்ஸ்)

நான் கேக்கிறது, லண்டனிலே எங்க வாங்குகினம்.... அல்லது எங்க நாம விக்கலாம் எண்டதை. 

பெருமாள் £15 எண்டு சொல்கிறார், அதுதான் கேட்டேன்.

எனக்கு உள்ளுர் நிலமை தான் தெரியும்.உள்ளுரில் உள்ள விலையை நேரடியாக வெளிநாட்டு விலைக்கு பாக்கும் நடைமுறை எனக்குத்தெரியாது.முருங்கை இலையும் இப்படித்தான்.ஆனால் பெருமாளுக்கு இது எல்லாம் அது;துப்படி.அவர் இலங்கை அரசுடன் கோவத்தில் இருக்கிறார் என்டு நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

அங்கதான் 150 ரூபா. £0.75 (75 பென்ஸ்)

நான் கேக்கிறது, லண்டனிலே எங்க வாங்குகினம்.... அல்லது எங்க நாம விக்கலாம் எண்டதை. 

பெருமாள் £15 எண்டு சொல்கிறார், அதுதான் கேட்டேன்.

கறுப்பர்களின் முக்கிய உணவான மொட்டோக்கியா கிழங்கு விற்க்கும் கடைகளில் ஒரு நாலு துண்டாவது வைத்து விற்ப்பார்கள் New Spitalfields Market இரவு சந்தையில் palat கணக்கில் வந்து இறங்குவதை பார்த்தனான் .இனி அந்த பக்கம் போனால் விசாரிச்சு வைக்கிறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சுவைப்பிரியன் said:

எனக்கு உள்ளுர் நிலமை தான் தெரியும்.உள்ளுரில் உள்ள விலையை நேரடியாக வெளிநாட்டு விலைக்கு பாக்கும் நடைமுறை எனக்குத்தெரியாது.முருங்கை இலையும் இப்படித்தான்.ஆனால் பெருமாளுக்கு இது எல்லாம் அது;துப்படி.அவர் இலங்கை அரசுடன் கோவத்தில் இருக்கிறார் என்டு நினைக்கிறேன்.

முருங்கை இலையில் உள்ள சத்து போல் வேறொன்றிலும் இல்லை என்பார்கள் அதுவும் யாழ் மண்ணில் விளைந்த முருங்கைக்கீரைக்கு தனி மவுசு கறுத்த கொழும்பான் மாம்பழம் போல் ஆனால் அங்கு ஊர் போன நண்பன் முருங்கை மரமே இல்லையாமே யாழில் உண்மையா சுவைபிரியன் ?

Image result for நிதà¯à®¤à®¿à®¯ à®à®²à¯à®¯à®¾à®£à®¿ பà¯

மேல் உள்ளதை ஊரில் சுடலைபூ என்று ஒதுக்கிவிடுவம் நித்திய கல்யாணி பூக்களின்  வகையை சார்ந்தது அதன் வேரில் இருந்து தண்டு பூக்கள் வரை நிறைய கேள்வி உள்ளது ஆர்வமுள்ளவர்கள் முயற்ச்சி செய்யலாம் .

Link to comment
Share on other sites

moringa என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் முருங்கை இலை இப்பொழுது மிகவும் கிராக்கி நிறைந்த உணவு பொருள். இதை பல வகைகளிலும் சந்தைப்படுத்தலாம் ( இது தான் எமக்கு தெரியாத ஒன்று, எமது உணவையோ இல்லை பொருளையோ காப்புரிமை பெற்று வெள்ளையர்கள் பணம் சம்பதித்து விடுவார்கள்)  

அமெரிக்காவின் வைத்தியர் தளத்தில் கூட இதை காணலாம்
https://www.webmd.com/vitamins/ai/ingredientmono-1242/moringa

ஏன் யாழ்கள உறவுகள் இப்படி ஒரு பண்ணையை ஆரம்பிக்ககூடாது ?

இல்லை தாயகத்தில் இப்படி தொழில் செய்ய முனைவர்களுக்கு மேற்குலகம் போல உதவ முடியாது - ' கிரவுட் ப்ண்டிங்'   - Crowdfunding is a way for people, businesses and charities to raise money. It works through individuals or organisations who invest in (or donate to) crowdfunding projects in return for a potential profit or reward. Investing this way can be risky, so make sure you know what you're doing.

https://www.forbes.com/sites/alejandrocremades/2019/01/12/how-crowdfunding-works-for-entrepreneurs/#15b827f6c531

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

முருங்கை இலையில் உள்ள சத்து போல் வேறொன்றிலும் இல்லை என்பார்கள் அதுவும் யாழ் மண்ணில் விளைந்த முருங்கைக்கீரைக்கு தனி மவுசு கறுத்த கொழும்பான் மாம்பழம் போல் ஆனால் அங்கு ஊர் போன நண்பன் முருங்கை மரமே இல்லையாமே யாழில் உண்மையா சுவைபிரியன் ?

Image result for நிதà¯à®¤à®¿à®¯ à®à®²à¯à®¯à®¾à®£à®¿ பà¯

இப்பவும் முன்பு போல வழவுக்கு பின்னால இருக்கு.ஆனால் யாரும் இதை பெரும் எடுப்பில் செய்வதில்லை.இப்ப செடி முருங்கை கொ;சம் பிரபலமாகிறது .இந்த வகை இலையை குறிக்கோளாக வைத்து தான்.மற்றும் படி போன கிழமை 1 கிலோ முருங்கைக்காய் 20 ருபாய் என்டால் யார்தான் இதோடு மினைக்கிவார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்றாளையிலை எங்கடை ஊர்க்கறிமாதிரி சமைக்கலாமோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.