தம்பியன்

வணக்கம் எனதருமைத் தமிழுறவுகளே! உங்களுக்கு என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன்.

Recommended Posts

வணக்கம் எனதருமைத் தமிழுறவுகளே! உங்களுக்கு என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன்.

உலகெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் உறவுகளைத் தேடும் தமிழன் நான். தமிழீழம், தமிழ்நாடு என்ற இரு தமிழ்த் தேசங்களும் அடிமைத் தளை உடைத்து இழந்த இறைமை மீட்டு ஒப்புரவுத் தேச அரசுகள் அமைத்திட என்னாலான அத்தனையையும் செய்வேஎன் என்று உறுதியெடுத்து வாழ்பவன். ஏழை, எளிய, நலிவுற்ற, விளிம்பு நிலையிலுள்ள எனது தமிழுறவுகளின் வாழ்வு மலர ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏங்கித் தெரியும் வியத்தகு திறமைகள் ஏதுமற்ற்ற ஆனால் நெஞ்சுரமிக்க தமிழன். தமிழீழத்தின் எல்லாப் பகுதிகளிலும் சுற்றித் திரிந்தமையால் பெற்ற அனுபவத்தின் அடிaப்படையில் என்னினத்தினுள் உள்ள கடைந்தெடுத்த கேவலங்களான பிரதேசவாதம் (முதன்மையாக யாழ்மையவாதம்), சாதியம் போன்றவற்றை அடியொட்ட அழிக்க வேண்டும் என்று பெருவாஞ்சை கொண்டவன்.
அறிவுமையச் சமூகமாக என்னினம் திகழ என்னாலான பணிகளை மேற்கொள்ள வழி வகை செய்யக் கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்த விரும்பும் விருப்பின் பாற்பட்டு யாழ் இணையத்தில் உங்களுடன் இணைகின்றேன். விரைவில் அரசியற் பதிவுகளுடன் உங்களுடன் உரையாடுவதற்குள்ளேன். ஏலவே பல ஆண்டுகளுக்கு முன்னர் உங்களுடன் இணைந்திருந்தவன் தான் நான். நெடிய இடைவெளியின் பின்னர் தம்பியனாக உங்களிடமே மீண்டும் வந்துள்ளேன்.

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் தம்பியன் 

யாழ் இணையத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி அரிச்சுவடியில் தவளாமலேயே மற்றைய திரிகளில் புகுந்து விளையாடியுள்ளீர்கள்.பலே கில்லாடி.

மிகுந்த அனுபவசாலி போல இருக்கிறீர்கள்.ஏதாவது இணையம் புதிதாக ஆரம்பிக்கிறீர்களோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

Share this post


Link to post
Share on other sites

முன்னர் பலருடன் முட்டி மோதிய அனுபவங்களுண்டு. மண் மணம் மாறாமல் இருக்கும் பல அறிவார்ந்த தொடர்புகளை யாழிணையம் மூலம் பெற்றுப் பயனடைந்தவர்களில் ஒருவன். எனது பெயரை அழைக்கையில் உறவு (தம்பி) தானாக வந்துவிடுகின்றது. தம்பி என்ற சொல்லுக்கேற்ப துடிதாட்டமும் முரட்டுக்குணமும் கூடவே இருக்கும்......இணைந்திருங்கள் ஈழத்தைப் பிரியேன் என்று இருக்கும் ஈழப்பிரியன் அவர்களே.......

Share this post


Link to post
Share on other sites

Bildergebnis für well come gif

வணக்கம் தம்பியன். உங்களிடம்... நல்ல எழுத்தாற்றல் உள்ளது என்பதை... நீங்கள்  எழுதிய சில பதிவுகளிலேயே தெரிகின்றது.
வாருங்கள்.... உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். :)

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ வாங்கோ..!

துடியாட்டமும், முரட்டுத்தனமும் கூடவே இருக்கும் தங்களை வரவேற்கிறோம்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தம்பியா வாடாப்பா நலமா?

தேவையான விடயத்தோடு மீள் நுழைவு என்று தெரிகிறது. வரவேற்கிறேன். யாழ்மையவாதம் , சாதியம் என்பன நமக்குள் பெரும் சாபங்களாக மாறிவிட்டன. தற்சமயம் நம்மை நம் பிள்ளைகள் காறி உமிழ ஆரம்பிக்கும் காலகட்டத்தில் பயணிக்கிறோம். இந்த மையவாதமும் சாதியமும் இருக்கும் வரை தமிழினம் மீள ஒரு பலமிக்க இனமாக திகழ வாய்ப்பில்லை. வாய்க்கு வாய் விடுதலைப்புலிகளின் பெருமைகளை தம்பட்டம் அடிக்கும் எந்த தமிழரும் அவர்களின் கோட்பாடுகளை கடைப்பிடிக்க விடாதவாறு இந்த யாழ்மையவாதமும் சாதிய சிந்தனையும் அவர்கள் மனதில் வைரமாக இருக்கின்றன. முயற்சிப்போம் கருத்து வெளியில் இணைந்து பயணிப்போம்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, கறுப்பி said:

வணக்கம் வாங்கோ வாங்கோ..!

துடியாட்டமும், முரட்டுத்தனமும் கூடவே இருக்கும் தங்களை வரவேற்கிறோம்.

என்னை விட முரடனோ...

நான் சும்மா கொசுவே அடிக்க கையை தூக்கினால்,

சிங்கம் பின்னங் கால்கள் பொடனியில அடிக்க ஓடும்...

யானை எறும்பு புத்துக் குள்ள போய் உக்காந்துட்டு எறும்பு மாதிரி எறும்போடு எறும்பாக வரிசையில போகும்...

இத மாதிரி தம்பியானால செய்ய வைக்க முடியுமா...

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வாங்கோ .....!

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் !வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Share this post


Link to post
Share on other sites

வாங்கோ தம்பியா

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now