தமிழ் சிறி

ஈழத் தமிழரோடு பழகி பாருங்கள், -சுகி சிவம்.-

Recommended Posts

ஈழத்  தமிழரோடு பழகி பாருங்கள்,  அழகிய தமிழ் கேட்கலாம்.  -சுகி சிவம்.-

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

அருமையான பதிவு.....!

இதுபோல் இன்னொரு காட்சி கம்பராமாயணத்தில் வரும். அனுமன் சிறிய வடிவம் எடுத்து இராவணன் மாளிகைகளில் சீதையை தேடிக்கொண்டு வருகின்றார். அப்போது ஒரு மஞ்சத்தில் தாயார் மண்டோதரி  உறக்கத்தில் இருக்கின்றார். அவரை பார்க்கும்போது அனுமனும் இவர்தான் சீதையோ என ஐயுறுகின்றார். பின் அவள் முகம் சாந்தமாய் இருக்க நிம்மதியாக உறங்குகின்றாள்.இராமனை பிரிந்திருப்பவள் எப்படி உறங்க முடியும். அங்ஙணமாயின் இவள் சீதையாய் இருக்க முடியாது என அப்பால் சொல்லுகின்றார்.....!  tw_blush:

Share this post

Link to post
Share on other sites
On 2/22/2018 at 9:31 AM, தமிழ் சிறி said:

ஈழத்  தமிழரோடு பழகி பாருங்கள்,  அழகிய தமிழ் கேட்கலாம்.  - சுகி சிவம்.

அழகிய தமிழைக் கேட்டு என்ன செய்யுறது..?  blabla.gif

vil-denonce.gif ஆளாளுக்கு குடும்பிப் பிடி சண்டை, நம்பிக்கையீனம், கொஞ்சம் தலைக்கனம், பிரதேசவாதம்.. எல்லாம் இருக்கே?  vil-electric.gif

(எத்தனை dislike வரப்போகுதோ, கொளுத்திப்போடுவம்..!)

  • Like 3

Share this post

Link to post
Share on other sites

அருமையான பகிர்வு, இதுபோன்ற அரிய பதிவுகளைத் தொடர்ந்து பகிருங்கள்.

ஈழத் தமிழரின் தமிழ்ச்சொல் பயன்பாட்டை அறியும்பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. அனுங்குதல் என்ற சொல்லின் பொருளை இணையத்தில் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் பயனில்லை, நண்பர்கள் யாராவது அதன் பொருளை பகிர்ந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

Share this post

Link to post
Share on other sites
47 minutes ago, அருள்மொழிவர்மன் said:

... அனுங்குதல் என்ற சொல்லின் பொருளை இணையத்தில் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் பயனில்லை..

முணுமுணுத்தல், புலம்புதல், புறுபுறுத்தல்..!

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, ராசவன்னியன் said:

முணுமுணுத்தல், புலம்புதல், புறுபுறுத்தல்..!

@ ராசவன்னியன், நண்பருக்கு வணக்கம்.

ஆனால் 'முணுமுணுத்தல்'  என்ற சொல் இக்காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள அனங்குதல் என்ற சொல்லின் பொருளாக இல்லையே!  சுகிசிவம் அவர்கள் குழந்தைகளின் சிரிப்பைப் பற்றிக் குறிப்பிட்டு 'அனுங்குகிறான்' என்ற  சொல்லைப் பயன்படுதியிருகிறார். சரியான பொருள் இன்னும் புலப்படவில்லையே  !

Share this post

Link to post
Share on other sites
On 25/02/2018 at 4:47 AM, ராசவன்னியன் said:

அழகிய தமிழைக் கேட்டு என்ன செய்யுறது..?  blabla.gif

vil-denonce.gif ஆளாளுக்கு குடும்பிப் பிடி சண்டை, நம்பிக்கையீனம், கொஞ்சம் தலைக்கனம், பிரதேசவாதம்.. எல்லாம் இருக்கே?  vil-electric.gif

(எத்தனை dislike வரப்போகுதோ, கொளுத்திப்போடுவம்..!)

இதெல்லாம் ஜனநாயக‌த்தின் உச்ச பண்புகள் tw_blush:

  • Like 1
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
14 minutes ago, அருள்மொழிவர்மன் said:

@ ராசவன்னியன், நண்பருக்கு வணக்கம்.

ஆனால் 'முணுமுணுத்தல்'  என்ற சொல் இக்காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள அனங்குதல் என்ற சொல்லின் பொருளாக இல்லையே!  சுகிசிவம் அவர்கள் குழந்தைகளின் சிரிப்பைப் பற்றிக் குறிப்பிட்டு 'அனுங்குகிறான்' என்ற  சொல்லைப் பயன்படுதியிருகிறார். சரியான பொருள் இன்னும் புலப்படவில்லையே  !

வணக்கம் தம்புடு..!

சில தமிழ் சொற்களுக்கு அமையுமிடம் பொறுத்து பொருள் மாறுபடும்.. அவ்வகையில், 'அனுங்குதல்' இங்கே குழந்தையின் செயலை குறிப்பிடுவதால். 'சிணுங்குதல்' என கொள்ளலாம்.

புதுமொழி சொன்னால் ரசிக்கோணும், ஆராயப்படாது, கண்டியளோ..? 5.gif

Share this post

Link to post
Share on other sites

ஈழத்தில் நான் வாழ்ந்த இடத்தின் தமிழ்மொழி வழக்கில் அனுங்குதல் என்ற சொல்லுக்கு பின்வரும் பொருள் உண்டு.
நோய்வாய்ப்பட்டுள்ள ஒருவர் உடலின் இயலாமை காரணமாக வெளிவிடும் மெல்லிய சத்தம் அல்லது
கனாக்காணும் ஒருவர் நித்திரையில் முனுகும் சத்தம் என்றும் கொள்ளலாம்.

Edited by vanangaamudi
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 2/24/2018 at 12:47 PM, ராசவன்னியன் said:

அழகிய தமிழைக் கேட்டு என்ன செய்யுறது..?  blabla.gif

vil-denonce.gif ஆளாளுக்கு குடும்பிப் பிடி சண்டை, நம்பிக்கையீனம், கொஞ்சம் தலைக்கனம், பிரதேசவாதம்.. எல்லாம் இருக்கே?  vil-electric.gif

(எத்தனை dislike வரப்போகுதோ, கொளுத்திப்போடுவம்..!)

நீங்கள் தவறாக கருத்து சொல்கிறீர்கள்... நீங்கள் சொன்னதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமல்ல... எல்லாமே நிறைய..நிறைய...

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, valavan said:

நீங்கள் தவறாக கருத்து சொல்கிறீர்கள்... நீங்கள் சொன்னதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமல்ல... எல்லாமே நிறைய..நிறைய...

நிசத்திலும், களத்திலும் அனுபவத்தில் உணர்ந்து எழுதியதுதான்... sermain.gif

சிலர் விதிவிலக்காக உள்ளனர்.

Share this post

Link to post
Share on other sites

"ஆளாளுக்கு குடும்பிப் பிடி சண்டைஇ நம்பிக்கையீனமி கொஞ்சம் தலைக்கனமி பிரதேசவாதம்.. எல்லாம் இருக்கே?"

உலகத்தில் இவையில்லாமல் வாழும் ஒரு இனத்தை யாராவது சொல்லுங்கள்

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, vaasi said:

"ஆளாளுக்கு குடும்பிப் பிடி சண்டைஇ நம்பிக்கையீனமி கொஞ்சம் தலைக்கனமி பிரதேசவாதம்.. எல்லாம் இருக்கே?"

உலகத்தில் இவையில்லாமல் வாழும் ஒரு இனத்தை யாராவது சொல்லுங்கள்

எல்லா இனத்திலும் இருக்கு நம்மவர்கள் கறிக்கு போடும் கறித்தூள் போல் மேற்சொன்ன அவ்வளவும் துக்கலா இருக்கும் .

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now