Jump to content

உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2018 at 8:41 AM, நவீனன் said:

வளர்ப்பு நாய் வரை கேலிக்கு உள்ளான நெய்மர்

 

 
09CHPMUNEYMAR

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. முன்னதாக நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், எதிரணி வீரர் காலை தட்டிவிட்டதாகக்கூறி சில அடி தூரத்துக்கு டைவ் செய்தபடி உருண்டு சென்று விழுந்தார்.

இதுதொடர்பாக ஆட்டம் முடிவடைந்ததும் மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் கடும் விமர்சனம் செய்தார். நெய்மர் வேண்டுமென்றே நடித்து நேரத்தை கடத்தியதால் தங்கள் அணியின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்திலும் நெய்மர் பலமுறை பவுல் செய்யப்பட்டு கீழே விழுந்தார். இந்நிலையில் நெய்மர் களத்தில் விழும் காட்சிகளை கேலி செய்து ரசிகர்கள் டுவிட்டரில் வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்

 

சிறுவர்கள் முதல் வளர்ப்பு நாய் வரை நெய்மர் சேலஞ்சை செய்து வருகிறார்கள். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் இந்தியாவை சேர்ந்த வயதான பெண் ஒருவர், வீட்டு வேலைகளை செய்யும் போது லேசாக அடிப்பட்டதும் நெய்மர் போன்று கீழே சுருண்டு விழும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. சிறுவர்களும் தங்களது பங்குக்கு நெய்மரை கேலி செய்துள்ளனர். இதுபோதாதென்று ஒரு வீடியோவில் பூனை ஒன்று நாயை பார்த்து சீறுகிறது. உடனே நாய் அடிபட்டது போன்று கீழே விழுந்து உருள்கிறது.

http://tamil.thehindu.com/sports/article24369671.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Dhcpbl6VMAAjRnp.jpg

Dhcp3MuVAAEr48N.jpg

 

 

 

Dhe1smTU8AUjQLM.jpg

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 262
  • Created
  • Last Reply

2018 கால்பந்து: பெல்ஜியம், குரேஷியா என சிறிய நாடுகள் ஆதிக்கம் செலுத்துவது எப்படி?

 
பெல்ஜியம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபெல்ஜியம் அணி இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றால், உலகப்கோப்பையை கைப்பற்றும் மிகச்சிறிய நாடு(நில அளவில்) என்ற பெருமையை பெறும்.

2018 கால்பந்து உலகக் கோப்பையில், உலகின் மிகப்பெரிய நாடுகளை வீழ்த்தி பெல்ஜியமும், குரேஷியாவும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.

உலகப்கோப்பை கால்பந்தில் இதுவரை இந்த இரு நாடுகளும் இறுதிக்கட்டத்திற்கு நுழைந்ததில்லை. இந்நிலையில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

பெல்ஜியம் அணி இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றால், உலகப்கோப்பையை கைப்பற்றும் மிகச்சிறிய நாடு (நில அளவில்) என்ற பெருமையை பெறும். வெறும் 30,000 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் பெல்ஜியம் உள்ளது.

4.1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட குரேஷியா வெற்றி பெற்றால், 1950-ல் உருகுவே வெற்றி பெற்றதில் இருந்து கோப்பையை கைப்பற்றும் மிகச்சிறிய மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையை பெறும்.

அரையிறுதியில்..

மிகப்பெரிய நாடுகளில் திறமையானவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கைக்கு மாறாக, பெல்ஜியம் மற்றும் குரோஷியாவின் வெற்றி அமைந்துள்ளது.

முந்தைய உலகக் கோப்பை போட்டிகளை பார்த்தால், உருகுவே தவிர கோப்பையை வென்ற பெரும்பாலான நாடுகள் அதிக மக்கள் தொகையை கொண்டவை. பிரேசில்(207 மில்லியன்), ஜெர்மனி (83 மில்லியன்), பிரான்ஸ்(67 மில்லியன்), இத்தாலி(60மில்லியன்), இங்கிலாந்து(53மில்லியன்), அர்ஜண்டினா(43மில்லியன்) போன்ற அதிக மக்கள் தொகை நாடுகளே அதிகளவில் உலகக் கோப்பையை வென்றுள்ளன.

பெல்ஜியமும், குரேஷியாவும் இந்த போக்கை உடைத்துள்ளன- இந்த ஒரு முறை மட்டுமல்ல.

கால்பந்து உலகப்கோப்பையை கைப்பற்றிய மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடாக உருகுவே உள்ளது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகால்பந்து உலகப்கோப்பையை கைப்பற்றிய மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடாக உருகுவே உள்ளது.

கால்பந்தைவிட சாக்லேட், பியர், வறுத்த உணவுகளுக்குப் பெயர்போன பெல்ஜியம், 1986 உலகக் கோப்பையில் அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆனால், பெல்ஜியத்தின் வெற்றி மரடோனாவின் அர்ஜண்டினாவால் தடுத்து நிறுத்தப்பட்டது.

1998-ல் ஜெர்மனியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த குரேஷியா உலகை வியப்பில் ஆழ்த்தியது.

1990ல் நடந்த பால்கன் போரில் இருந்து மீண்டு வந்த குரேஷியாவின் வெற்றி அனைவரையும் கவர்ந்தது.

எவ்வாறு சாதிக்கின்றனர்?

சிறிய நாடுகள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவது புதிய விஷயமன்று.

ஒரு உதாரணம் உசேன் போல்ட். வெறும் 2.1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஜமைக்காவை சேர்ந்த போல்ட், ஒலிம்பிக் போட்டிகளில் பல முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

தங்களது சிறந்த வளங்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலமும், அவற்றை முழுவையாக பயன்படுத்திக்கொண்டதன் மூலமும் குரேஷியாவும், பெல்ஜியமும் வெற்றி பெற்றுள்ளன.

பெல்ஜியத்தில் வளம் என்பது பணமும், விளையாட்டின் புகழும் ஆகும்.

உலகின் முதல் 20 பணக்கார நாடுகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ள நிலையில், பெல்ஜியம் மக்கள் தங்கள் விளையாட்டை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கின்றனர்.

வெற்றியை கொண்டாடும் குரோஷிய மக்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவெற்றியை கொண்டாடும் குரோஷிய மக்கள்

2010 கணக்கின்படி பெல்ஜியத்தில் 17,000 கால்பந்து கிளப்புகள் உள்ளன. இதில் கிட்டதட்ட 1.35 மில்லியன் பேர் உறுப்பினராக உள்ளனர். இது அந்நாட்டு மக்கள் தொகையில் 10 சதவீதமாகும்.

இளம் வீரர்களை மேம்படுத்துதல்

நாடு முழுவதும் உள்ள கால்பந்து இளைஞர்கள் கிளப்பில், திறமை மேம்பாட்டுத் திட்டத்தை 2006ல் பெல்ஜியம் அதிகாரிகள் கொண்டுவந்தனர். இதன் விளைவு தற்போதைய உலகக் கோப்பையில் தெளிவாக தெரிந்தது.

பெல்ஜியத்தில் உள்ள முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை குடியேறி சமூகங்களை சேர்ந்த திறமைசாலிகளை ஊக்குவிக்கும் திட்டத்தை பெல்ஜியம் கொண்டுவந்தது. அரையிறுதியில் பிரான்ஸை எதிர்கொள்ள உள்ள பெல்ஜியம் அணியில், காங்கோ, மொராக்கோ, போர்ச்சுகல் மற்றும் கொசோவோ போன்ற நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் உள்ளனர்.

பெல்ஜியம் நாட்டை போல நிதி வளம் குரோஷியாவுக்கு இல்லை என்றாலும், விளையாட்டுகளில் குரோஷியா தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. 2016 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 207 நாடுகளில் குரோஷியா 17வது இடத்தை பிடித்தது.

அரசு முதலீடு

பயிற்சியில் பெல்ஜியம் வீரர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபயிற்சியில் பெல்ஜியம் வீரர்கள்

யுகோஸ்லாவியா நாடாக குரோஷியா இருந்தபோது, விளையாட்டை மேம்படுத்த அரசின் முதலீடு குரேஷியாவுக்கு கிடைத்தது. இதன் மூலம் சிறந்த பயிற்சியை குரோஷியா அளித்தது.

விளையாட்டுகளில் பங்கு பெரும் வீரர்களில் எண்ணிக்கையும் இங்கு அதிகமாக உள்ளது. குரோஷியாவில் 12 லட்சம் பதிவு செய்யப்பட்ட கால்பந்து வீரர்கள் உள்ளனர். இது மக்கள் தொகையில் 3% ஆகும்.

இந்த சதவீதம் பிரேசில் நாட்டை விட அதிகம். பிரேசிலில் மக்கள் தொகையில் பதிவு செய்யப்பட்ட கால்பந்து வீரர்கள் 1% உள்ளனர்.

மேலும் பெல்ஜியம், குரோஷியா நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள், தற்போது மிகப்பெரிய சர்வதேச கிளப்புகளில் விளையாடுகின்றனர். இதன் மூலமும் இருநாடுகள் பலன் பெறுகின்றன.

ரஷ்யாவில் நடந்து வரும் உலகக் கோப்பையில், இரு சிறிய நாடுகளும் ஆதிக்கம் செலுத்துவதற்கு இவையே முக்கிய காரணங்களாக உள்ளன.

https://www.bbc.com/tamil/sport-44768247

Link to comment
Share on other sites

கால்பந்து அணியினர் சென்ற பஸ் மீது கல்வீச்சு

 

உலக கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் பிரேஸில் அணி தோல்வியடைந்ததையடுத்து அந்நாட்டு ரசிகர்கள், வீரர்கள் சென்ற பஸ் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 5 முறை சம்பியனான பிரேஸில் அணி கால்இறுதி ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. இதனால் அந்த நாட்டு ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். 

sp_2.jpg

இந்த நிலையில் பிரேஸில் கால்பந்து அணி நாடு திரும்பியது. 

விமான நிலையத்திலிருந்து வீரர்கள் தனி பஸ்ஸில் செல்வதை அறிந்த ரசிகர்கள் அந்த பஸ்ஸை சூழ்ந்து கொண்டு, முட்டை மற்றும் கற்களை வீசி தாக்கினார்கள். ரசிகர்களின் ஆக்ரோஷ தாக்குதல் அதிகமானதை தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 

http://www.virakesari.lk/article/36311

 

Link to comment
Share on other sites

உலக கோப்பை கால்பந்து அரையிறுதி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்

 

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #WorldCup2018 #FRABEL

 
 
 
 
உலக கோப்பை கால்பந்து அரையிறுதி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்
 
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.
 
இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின.
 
ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.
 
ஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
 
201807110124166261_1_foot-6._L_styvpf.jpg
 
இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 - 0 என சமனிலை வகித்தன.
 
இரண்டாவது பாதி தொடங்கியதும் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
 
இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRABEL #BELFRA #FrancevBelgium

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/11012416/1175715/france-beat-belgium-1--0-in-first-half-in-world-cup.vpf

Link to comment
Share on other sites

2018 கால்பந்து: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ், தோல்வியில் மிளிரும் பெல்ஜியம்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் இடையே நடந்த அரை இறுதி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் பெல்ஜியம் தோல்வி அடைந்ததை அடுத்து, இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது பிரான்ஸ்.

'கால்பந்தாட்டத்தில் பெல்ஜியத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது' - தோல்வியிலும் மிளிரும் நம்பிக்கைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அல்லது குரேஷியா அணிக்கு எதிராக பிரான்ஸ் விளையாடும். 1966 ஆம் ஆண்டுக்கு பின் இப்போதுதான் இந்த மூன்று அணிகளும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திற்கான போட்டியில் உள்ளன.

முன்னேறி வந்த பெல்ஜியம்

பெல்ஜியம் கடுமையாக விளையாடி முன்னேறி வந்தது. கால் இறுதியில் முன்னாள் உலக சாப்பியனாக இருந்த பிரேசிலை வீழ்த்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அந்த மாயாஜாலம் அரை இறுதியில் நிகழவில்லை.

அரை இறுதி போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் பெல்ஜியம் அணிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவே கூறுகிறார் பெல்ஜியம் அணியின் மேலாளர் ராபர்டோ மார்டினஸ். அவர், "பெல்ஜியம் அணியில் மிகத் திறமையான இளம் வீரர்கள் இருக்கின்றனர்" என்கிறார்.

'கால்பந்தாட்டத்தில் பெல்ஜியத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது' - தோல்வியிலும் மிளிரும் நம்பிக்கைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதுவரை எந்த பெரிய போட்டிகளிலும் வெல்லாத பெல்ஜியம் அணி, ரஷ்யாவில் நடந்துவரும் இந்த உலகக் கோப்பை போட்டியில் வியத்தகு வகையில் விளையாடியது.

இதுவரை நிகழ்த்திய மாயாஜாலம்

அரை இறுதியில் தோற்றிருந்தாலும் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாகவே விளையாடியது பெல்ஜியம். இதற்கு என்ன காரணம், எப்படி அவர்களால் சாதிக்க முடிந்தது என்பதற்கு பதில் தருகிறார், பிபிசி உலக சேவையின் பெர்னாண்டோ டுவார்ட்.

அவர், " பெல்ஜியத்தில் வளம் என்பது பணமும், விளையாட்டின் புகழும் ஆகும். உலகின் முதல் 20 பணக்கார நாடுகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ள நிலையில், பெல்ஜியம் மக்கள் தங்கள் விளையாட்டை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கின்றனர். 2010 கணக்கின்படி பெல்ஜியத்தில் 17,000 கால்பந்து கிளப்புகள் உள்ளன. இதில் கிட்டதட்ட 1.35 மில்லியன் பேர் உறுப்பினராக உள்ளனர். இது அந்நாட்டு மக்கள் தொகையில் 10 சதவீதமாகும்." என்று குறிப்படுகிறார்.

உலகக் கோப்பை செல்லும் அணி?

பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்துவிட்டது பிரான்ஸ்.

'கால்பந்தாட்டத்தில் பெல்ஜியத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது' - தோல்வியிலும் மிளிரும் நம்பிக்கைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இன்று (புதன்கிழமை) இங்கிலாந்து குரேஷியாவுடன் மோதுகிறது. இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் பிரான்ஸுடன் மோதும்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு முறை பிரான்ஸ் கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. பாரீசில் நடந்த அந்தப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது அது. வரலாறு திரும்புமா, அல்லது வேறு பாதையில் செல்லுமா? காத்திருந்து பார்ப்போம்

https://www.bbc.com/tamil/sport-44789928

Link to comment
Share on other sites

குரேஷிய ”நட்சத்திரன்” லுகா மோட்ரிச் கால்களுக்கு இடையே பந்தைச் செலுத்துவேன்: இங்கிலாந்தின் டெலி ஆலி திட்டவட்டம்

 

 
dele%20alli

ஸ்வீடனுக்கு எதிராக கோல் அடித்த மகிழ்ச்சியில் இங்கிலாந்தின் டெலி ஆலி.   -  படம். | ஏ.பி.

உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் அதன் பரபரப்பான இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது, இதில் இன்று பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் இன்று மோதுகின்றன. புதனன்று இங்கிலாந்து, குரேஷியா அணிகள் மோதுகின்றன.

குரேஷியாவின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லுகா மோட்ரிச். இவரது கால்களுக்கு இடையில் பந்தைத் தள்ளி எடுத்துச் செல்வேன் என்கிறார் இங்கிலாந்தின் டெலி ஆலி.

 
 

கால்பந்தாட்டத்தில் ஒரு வீரரின் கால்களுக்கு இடையே அடித்துப் பந்தை எடுத்துச் செல்வது கால்கள் வழியே பந்தை விடு வீரருகு இழிவான ஒரு தருணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மெஸ்ஸி கால்கள் வழியாகப் பந்தை எடுத்துச் செல்வேன் என்றோ நெய்மர் கால்கள் இடுக்கில் பந்தை அடித்து எடுத்து செல்வேன் என்றோ அவ்வளவு சுலபமாக யாரும் கூறிவிட முடியாது, பிறகுதானே அவ்வாறு செய்வதற்கு?

ஆனால் கிட்டத்தட்ட குரேஷியாவின் ஒரு கிரேட் என்று பார்க்கப்படும் லுகா மோட்ரிச் கால்களுக்கு இடையில் பந்தை அடிப்பேன் என்று இங்கிலாந்து வீரர் டெலி ஆலி கூறியிருப்பது அவமரியாதையா அல்லது போட்டிக்கு முன்பாக அவரைச் சிறிது உசுப்பேற்றும் கூற்றா என்று தெரியவில்லை. மேலும் குரேஷியாவுக்கு எதிராக எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்ட போது பதற்றமா? எனக்கா? உற்சாகமாகவே அவர்களை எதிர்கொள்வேன் என்கிறார் டெலி ஆலி.

modricjpg

குரேஷிய நட்சத்திரம் லுகா மோட்ரிச். | ஏ.பி.

 

“தடுப்பாட்ட ரீதியாக ஸ்வீடனுக்கு எதிராகச் சரியாகச் செய்தேன். ஆனால் இன்னும் கொஞ்சம் பந்துடன் நான் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். வாய்ப்புகளை உருவாக்கும் அச்சுறுத்தல் வீரராகவே விரும்புகிறேன். நான் நன்றாக நகர்கிறேன் என்று தெரிகிறது, ஆனால் ஆட்டத்தில் கூர்மையில்லை. நான் பந்தை என் தரப்பில் நான் விரும்பும் அளவுக்கு வைத்துக் கொள்வதில்லையோ என்று தோன்றுகிறது. கோல் அடிப்பது நம்மைத் தூக்கி விடும். ஆனால் எனது மிகப்பெரிய விமர்சகனே நான் தான். இன்னும் சிறப்பாக ஆட முடியும் என்பதே என் விமர்சனம்.

எனது பிரார்த்தனை எளியதே, நான் கோல் அடித்தால் இங்கிலாந்து வெல்லும், அதைத்தான் மோட்ரிச்சுக்கு எதிராக முயற்சி செய்யப்போகிறேன். அவர் கால்களுக்கு இடையே பந்தைத் தட்டி விடுவது நடக்குமா, நடக்கும் என்றே நினைக்கிறேன். அதற்காக நான் கவனம் செலுத்தப்போவதில்லை, ஆனால் அப்படி நடந்தால் நன்றாக இருக்கும்” என்கிறார் டெலி ஆலி.

http://tamil.thehindu.com/sports/article24378782.ece

Link to comment
Share on other sites

ஆர்ஜன்டீனாவை வீழ்த்திய குரோஷியா இங்கிலாந்தையும் வெற்றிகொள்ளுமா?

 

 
 

உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் முன்னாள் உலக சம்பியன் பிரான்ஸை எதிர்த்தாடப்போவது குரோஷியாவா? இங்கிலாந்தா? என்பதைத் தீர்மானிக்கும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

croatia_vs_england__semi.jpeg

மொஸ்கோ, லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் இப் போட்டி இன்று புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குரோஷியாவும் இங்கிலாந்தும் 2 தசாப்தங்கள் அல்லது அதற்கு மேல் பொறுமையுடன் காத்திருந்து இம்முறை உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

உண்மையைக் கூறுவதென்றால் இந்த இரண்டு அணிகளுமே ரஷ்யாவில் அரை இறுதிவரை முன்னேறும் என உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், இம் முறை போட்டிக்கு சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடி இவை இரண்டு அணிகளும் அரை இறுதிவரை முன்னேறியுள்ளமை பாராட்டுககுரியதாகும்.

பிரான்ஸ் 1998 உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் தடவையாக விளையாடிய குரோஷியா அவ் வருடம் அரை இறுதிவரை முன்னேறி நான்காம் இடத்தைப் பெற்றது. அதன் பின்னர் இப்போது இரண்டாவது தடவையாக அரை இறுதியில் விளையாடவுள்ளது. குரோஷியா இதுவரை இறுதிப் போட்டியில் விளையாடியதில்லை.

eng.jpg

1966இல் தனது சொந்த மண்ணில் இறுதி ஆட்டத்தில் விளையாடிய முதல் சந்தர்ப்பத்திலேயே உலக சம்பியனான இங்கிலாந்து 24 வருடங்கள் கழித்து இத்தாலியில் அரை இறுதியில் விளையாடியிருந்தது. இப்போது மேலும் 28 வருடங்களின் பின்னர் மீண்டும் அரை இறுதி வாய்ப்பைப் பெற்றுள்ளது.

ரஷ்யாவில் முதல் சுற்றில் முன்னாள் உலக சம்பியன் ஆர்ஜன்டீனாவை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த குரோஷியா அப் போட்டியில் நட்சத்திர வீரர் லயனல் மெசிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. அதேபோன்று இன்றைய போட்டியில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஹெரி கேனை கட்டுப்படுத்த குரோஷியா வியூகங்களை வகுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் குரோஷியா தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கின்றது.

முதல் சுற்றில் நைஜீரியா (2 க்கு 0), ஆர்ஜன்டீனா (3 க்கு 0), ஐஸ்லாந்து (2 ககு 1) ஆகிய அணிகளை வெற்றிகொண்ட குரோஷியா நொக் அவுட் போட்டிகள் இரண்டில் டென்மார்க், வரவேற்பு நாடான ரஷ்யா ஆகியவற்றை பெனல்டி முறையில் வெளியேற்றியது.

இங்கிலாந்து முதல் சுற்றில் டியூனிசியா (2 க்கு 1), பனாமா (6 க்கு 1) என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. ஆனால் கடைசி லீக் போட்டியில் பெல்ஜியத்திடம் தோல்வி (0 க்கு 1) அடைந்தது. நொக் அவுட் சுற்றுகளில் கொலம்பியாவை பெனல்டி முறையில் வீழ்த்திய இங்கிலாந்து, சுவீடனுடனான கால் இறுதியில் 2 க்கு 0 என வெற்றிபெற்றது.

croatia_1.jpg

இந்த இரண்டு அணிகளிலும் மிகச் சிறந்த வீரர்கள் தாராளமாக இருப்பதால் இன்றைய போட்டி பரபரப்பை ஏற்படுத்தப் போவதுடன் மேலதிக நேரத்துக்கு நீடிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

குரோஷியாவும் இங்கிலாந்தும் உலகக் கிண்ணப் போட்டியில் ஒன்றையொன்று சந்திப்பது இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன்னர் 7 தடவைகள் இந்த இரண்டு நாடுகளும் விளையாடிய சந்தர்ப்பங்களில் 4 க்கு 2 என்ற ஆட்டக் கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கின்றது. ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

குரோஷிய அணியில் லூக்கா மோட்ரிக், ஐவன் பெரிசிக், டெனியல் சுபாசிக் ஆகியோரையும் இங்கிலாந்து அணியில் ஹெரி கேன், ரஹீம் ஸ்டேர்லிங், ஏஷ்லி யங் ஆகியோரையும் நட்சத்திர வீரர்களாக பெயரிடலாம். 

(என்.வீ.ஏ.)

அணிகள் 

குரோஷியா: டெனியல் சுபாசிக், சிமே விர்சால்ஜ்கோ, டிஜான் லவ்ரென், டொமாகொஜ் விடா, ஐவன் ஸ்ட்ரினிக், ஐவன் ராக்கிடிக், மார்செலோ ப்ரோஸோவிக், அன்டே ரெபிக், லூக்கா மொட்ரிக் (அணி்த் தலைவர்), ஐவன் பெரிசிக், மரியோ மண்ட்ஸூக்கிக்.  

இங்கிலாந்து: ஜோர்டான் பிக்போர்ட், கய்ல் வோக்கர், ஜோன் ஸ்டோன்ஸ், ஹெரி மெகயர், கீரன் ட்ரிப்பர், டேல் அலி, ஜோர்டான் ஹெண்டர்சன், ஜெசே லங்கார்ட், ஏஷ்லி யங், ரஹீம் ஸ்டேர்லிங், ஹெரி கேன் (அணித் தலைவர்).

http://www.virakesari.lk/article/36358

Link to comment
Share on other sites

2018 கால்பந்து: பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து வெற்றிக்கு உதவிய குடியேறிகள்

Belgium football team lining up before a match against Brazilபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபெல்ஜியம் அணி

உலகக் கோப்பை கால்பந்தில் அரையிறுக்கு தகுதி பெற்ற மூன்று அணிகளுக்கு புவியியல் அருகாமை ஒற்றுமை மட்டுமல்ல, வேறு ஒற்றுமைகளும் உள்ளது.

பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து அணிகளில் உள்ள நிறைய வீரர்கள், குடியேறிகளின் மகன்கள்.

பிரான்ஸ் அணியில் உள்ள 23 வீரர்களில் 16 வீரர்களின் பெற்றோர்களில் குறைந்தது ஒருவர் பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே பிறந்தவர்கள். மேலும் இருவர், பிரஞ்ச் கரீபியன் தீவில் பிறந்தவர்கள். இது பிரான்ஸின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

11 பெல்ஜியம் மற்றும் 6 இங்கிலாந்து வீரர்களின் பெற்றோர்களில் குறைந்தது ஒருவர் குடியேறி ஆவார். மேலும் நான்கு இங்கிலாந்து வீரர்கள் ஆப்பிரிக்க-கரீபியன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அதில் ஒருவரான ராஹீம் ஸ்டெர்லிங், ஜமைக்காவில் பிறந்தார்.

பிரான்ஸின் கால்பந்து அணி பல பண்பாட்டு வீரர்களைக் கொண்டிருப்பது ஆச்சரியமான ஒன்று அல்ல.

France squad 2018 World Cupபடத்தின் காப்புரிமைGETTY Image captionபிரான்ஸ் அணியில் உள்ள 23 வீரர்களில் 16 வீரர்களின் பெற்றோர்களில் ஒருவர் பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே பிறந்தவர்கள்

இதுவரை கால்பந்து உலகக்கோப்பையில் 1998-ம் ஆண்டில் மட்டுமே பிரான்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. பிரான்ஸின் இந்த வெற்றி, ஒருங்கிணைந்த பிரான்ஸ் சமூகத்தின் வெற்றி சின்னமாக கொண்டாடப்பட்டது. கலப்பின வீரர்களைக் கொண்ட இந்த அணிக்கு ''ரெயின்போ அணி'' என்ற பெயரும் உள்ளது.

பெல்ஜியம் அணியில் உள்ள 11 வீரர்களின் பெற்றோர்களில் குறைந்தது ஒருவர் குடியேறி. பெல்ஜியமின் தற்போதைய அணி, 2002 அணியை விட வித்தியாசமானது. 2002 பெல்ஜியம் அணியில், வெறும் 2 வீரர்கள் மட்டுமே பெல்ஜியம் அல்லாத வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

இங்கிலாந்து அணியிலும் குடியேறிகளின் மகன்கள் நல்ல இடத்தைப் பிடித்துள்ளனர். இங்கிலாந்து அணியில் உள்ள ஆறு வீரர்களின் பெற்றோர்களில் குறைந்தது ஒருவர் பிரிட்டனுக்குக் குடியேறியாக வந்தவர்கள்.

''பன்முகத்தன்மை கொண்ட இந்த அணி, நவீன இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களைக் கொண்டுள்ளது. '' என இங்கிலாந்து கால்பந்து அணியின் மேலாளர் சவூத்கேட் கூறுகிறார்.

The French team line up before a match with Uruguayபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிரான்ஸ் அணி

ஆனால், இன உறவு நிபுணர்கள் ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றனர்.

ஐரோப்பிய கால்பந்து அணியில் இனவாத பிரச்சினைகளை தீர்த்து வரும் FARE நெட்வொர்க்கின் நிறுவனர் பியார் பொவார், அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ள நான்கு அணிகளில் மூன்று அணிகள் பன்முகத்தன்மை கொண்டிருப்பது ஒரு வரலாற்றுப்பூர்வ தருணமாகும் என்கிறார்

''ஆனால், அதில் ஒரு பிரச்சனை உள்ளது. தற்போது கூட இன சிறுபான்மை வீரர்களே விமர்சகர்களால் குறிவைக்கப்படுகின்றனர். அரையிறுதில் இங்கிலாந்து தோல்வியடைந்தால், குடியேறியின் மகனான ரஹீம் ஸ்டெர்லிங் பலிகடா ஆக்கப்படலாம். உலகக்கோப்பையில் இருந்து ஜெர்மனி வெளியேறிய போது துருக்கிய வம்சாவளி வீரரான மெசட் ஓசில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது'' என்கிறார் பியார்.

The England team lining up before a match with Swedenபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇங்கிலாந்து அணி

2015 உலகக்கோப்பையை வென்ற ஜெர்மனி அணியில், குடியேறிகளின் மகன்களும், ஜெர்மானியர்களின் மகன்களும் இடம் பெற்றிருந்தனர். 2015 உலகக்கோப்பையை ஜெர்மனி வென்ற ஒராண்டு கழித்து ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்ட பொருளாதார வல்லுநர் வொல்ப்காங் பாங்கர், ''கால்பந்தில் மட்டுமல்லாமல் மற்ற விஷயத்திலும் ஜெர்மனி முன்னணி நிலையைப் பெற திறமை வாய்ந்த நபர்கள் ஜெர்மனிக்கு வேண்டும்'' என கூறியிருந்தார்.

''நீங்கள் கால்பந்தை விரும்பினால், குடியேறிகளை வரவேற்க வேண்டும்'' என்றார் அவர்.

அரசியல் ஆய்வாளர்களான எட்மண்ட் மால்செக் மற்றும் செபாஸ்டியன் சைக் ஆகியோர், ஐரோப்பியவின் ஐந்து (இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின்) முக்கிய கால்பந்து கிளப்பின் செயல்திறனைப் பற்றி ஆய்வு செய்தனர். பன்முகத்தன்மையைக் கொண்டிருக்கும் அணியின் செயல்திறன் அதிகரிக்கலாம் என அந்த ஆய்வில் கூறியிருந்தனர்.

https://www.bbc.com/tamil/sport-44784414

Link to comment
Share on other sites

கால்பந்து விளையாட்டுக்கே அவமானம்: பிரான்ஸ் அணியின் வெற்றி குறித்து பெல்ஜியம் கோல் கீப்பர் காட்டம்!

 

 
france23_belgium12

 

உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ் அணி முன்னேறியது. பரபரப்பாக நடந்த அரையிறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தை 1-0 என வீழ்த்தியது

முதல் அரையிறுதி ஆட்டம் செயின்ட்பீட்டா்ஸ்பா்க் மைதானத்தில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகளுக்கு இடையே திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்றறது. காலிறுதியில் பிரான்ஸ் அணி உருகுவேயையும், பெல்ஜியம் முன்னாள் சாம்பியன் பிரேஸிலையும் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றறன.

1998-ல் பட்டம் வென்ற பிரான்ஸ் தற்போது இரண்டாவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பிலும், முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் பெல்ஜியம் அணியும் மோதுவதால் இந்த ஆட்டத்துக்கு மிகுந்த எதிா்பாா்ப்பு ஏற்பட்டிருந்தது.

ஆட்டம் தொடங்கியது முதலே பெல்ஜியம் அணி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. பிரான்ஸ் அணி பலமான தற்காப்பு ஆட்டத்தால் பெல்ஜியம் வீரர்களின் முயற்சிகளை முறியடித்தது. 18-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரா் பிளேய்ஸ் மட்யுடி பெல்ஜிய கோல்பகுதியை நோக்கி அடித்த பந்து குறி தவறிச் சென்றது.

இதற்கிடையே பெல்ஜியம் வீரா்கள் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. அதே நேரத்தில் பிரான்ஸ் முன்கள வீரா் ஆலிவா் ஜிராட் பலமுறை பெல்ஜியம் கோல் பகுதியில் ஊடுருவி கோலடிக்க முயன்றாா். முதல் பாதி ஆட்டம் முடிய சில நிமிடம் இருந்த நேரத்தில் பிரான்ஸ் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நட்சத்திர வீரா் கிரைஸ்மேன் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.

முதல் பாதி ஆட்டம் கோலின்றி 0-0 என முடிந்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரா் கிரைஸ்மேன் காா்னா் மூலம் அனுப்பிய பந்தை தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினாா் சாமுவேல் உதிதி. பின்னா் பெல்ஜியம் வீரா்கள் சமன் செய்வதற்காக பலமுறை முயன்றும் பிரான்ஸ் தற்காப்பு அரணைத் தகா்க்க முடியவில்லை.

இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஆடிய விதத்தைக் கடுமையாக விமரிசித்துள்ளார் பெல்ஜியம் அணியின் கோல்கீப்பர் கோர்டோயிஸ். இதுபற்றி அவர் கூறியதாவது:

கடுப்பேற்றக்கூடிய வகையில் ஆட்டம் அமைந்தது. பிரான்ஸ் அணி விளையாடவே இல்லை. கோல் போஸ்டிலிருந்து 40 மீ. வரை 11 வீரர்களையும் நிறுத்தி தற்காப்பு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். எங்களை விடவும் சிறந்த அணியிடம் நாங்கள் தோற்கவில்லை, ஒன்றுமே விளையாடாமல் தற்காப்பில் மட்டும் கவனம் செலுத்திய அணியிடம் தோற்றோம் என்பது கடுப்பேற்றுகிறது.

உருகுவேக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஃப்ரீ கிக் மூலமாகவும் கோல் கீப்பரின் தவறாலும் அவர்கள் வென்றார்கள். இன்று கார்னர் மூலமாக கோலடித்து வென்றார்கள். இன்று பெல்ஜியம் வெற்றி பெறாதது கால்பந்து விளையாட்டுக்கு அவமானகரமானது என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

france_belgium1.jpg

http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/11/belgiums-courtois-blasts-france-victory-as-shame-for-football-2957856.html

Link to comment
Share on other sites

60 சதவித பொசஷன், 594 பாஸ், 91 சதவித பாஸ் அக்யூரசி... ஆனாலும், பெல்ஜியம் தோல்வி! #FRABEL

 

அரையிறுதி ஆட்டத்தில் அட்டகாசமாக விளையாடிய பெல்ஜியம். எது தேவையோ அதைமட்டுமே கொடுத்த பிரான்ஸ். வெற்றி எப்படிச் சாத்தியமானது.

60 சதவித பொசஷன், 594 பாஸ், 91 சதவித பாஸ் அக்யூரசி... ஆனாலும், பெல்ஜியம் தோல்வி! #FRABEL
 

பிரான்ஸ் - பெல்ஜியம் இடையே நடைபெற்ற உலகக் கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில் 1 கோல் அடித்து பிரான்ஸ் வெற்றிபெற்றது. 20 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேறியிருக்கிறது பிரான்ஸ். இதற்குக் காரணம், பிரான்ஸின் லெஜண்டுகள் இல்லை; பிரான்ஸின் வரலாறு இல்லை; அவர்கள் இளைஞர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை! இந்த இளைஞர்கள் பிரான்ஸுக்கு உலகக் கோப்பையை வென்றுதர பிறந்தவர்கள். ஆஸ்திரேலியாவையும், பெருவையும் ஒரு கோலில் ஜெயித்தது; டென்மார்க் உடன் டிரா செய்தது, 3 கோல்கள் அடித்து அர்ஜென்டினாவை வெளியேற்றியது, உருகுவேவின் அரணை உடைத்து இரண்டு கோல்கள் அடித்தது என பிரான்ஸ் இந்த உலகக் கோப்பையில் அதிரிபுதிரி ஃபார்ம். அதே சூட்டோடு நேற்று பெல்ஜியத்தையும் வென்றது. வெற்றிக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்கிறது பிரான்ஸ்.  #FRABEL

#FRABEL

பிரான்ஸ் ஒரு பக்கம் தன்னால் என்ன முடியும் என்பதைக் காட்ட, பெல்ஜியம் முடியாத விஷயங்களையும் முடித்து வைக்கும் திறனைப் பெற்றிருந்தது. எந்த அணிவந்தாலும் அதன் டிஃபென்ஸை உடைப்போம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தார்கள் ஹசார்டு, லுகாகு, டிப்ருயின் கூட்டணி. ``நான் சாதாரணமானவன். ஆனால், கிரவுண்டுக்குள் நான் ஒரு போராளியாக இருப்பதையே விரும்புகிறேன். எத்தனை கோப்பைகள் இருக்கின்றனவோ எல்லாவற்றையும் வென்றுதருவேன்" என ரோமலு லுகாகு ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். உண்மையிலேயே லுகாகு ஒரு போராளி. தேவையான நேரத்தில் கோல் அடிப்பதும், தேவையான நேரத்தில் விட்டுக்கொடுப்பதும் என்று பெல்ஜியம் போட்ட ஒவ்வொரு கோலிலும் அவர் பங்கு இருக்கிறது. ஆனால், கடைசி 2 போட்டிகளில் லுகாகுவின் போராட்டத்தை எப்படி ஒடுக்குவது என்று கற்றுக்கொண்டனர் எதிரணி டிஃபெண்டர்கள். அரையிறுதியில் பிரான்ஸுக்கு எதிராக அவரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. 

 

 

#FRABEL

இரண்டு அணிகளுக்குமே அட்டாக்தான் முக்கிய ஆயுதம். இதுவரை நடந்த போட்டிகளில் பிரான்ஸ் வேகமாக கோல்களை அடித்துவிட்டு டிஃபென்ஸில் இறங்கிவிடும். பெல்ஜியம் தொடர்ந்து கோல்களை அடிப்பதிலேயே முனைப்பு காட்டும். முதல் நிமிடத்திலிருந்தே இரண்டு அணிகளுமே அட்டாக் செய்வதிலேயே தன் மொத்த வித்தையையும் காட்டின. 12-வது நிமிடத்தில் எம்பாப்பே ரயில் வேகத்தில் டிஃபெண்டர்களைத் தாண்டி ஓட, பந்து கோல் பாக்ஸ் அருகே வரும்போதே எதிரில் ஓடிவந்து பந்தை கட்டிப்பிடித்துக் காப்பாற்றினார் கோல்கீப்பர் கோர்ட்வா. பெல்ஜியம் டிஃபெண்டர்கள் ஆபத்தை உணர்ந்து பொறுமையாகவே விளையாடினர்.

பெல்ஜியமும் பிரான்ஸுக்கு இதுபோன்ற அதிர்ச்சிகளைக் கொடுத்தது. 16-வது நிமிடம் டிஃபெண்டர்களைத் தாண்டி கோல் பாக்ஸில் சென்று ஹசார்டு அடித்த அந்த வைடு ஷாட் கொஞ்சம் சுமார்தான். ஆனால், 2 நிமிடத்தில் மீண்டும் அதேபோல ஒரு சான்ஸ். இந்தமுறை கோலாக வேண்டிய பந்து வாரான் மேல் பட்டு கோல்போஸ்ட்டை அடித்தது வெளியே சென்றது. கிடைத்த கார்னரில் ஹெட்டர் எதுவும் விழவில்லை. ஆனால், பந்து எங்கு வரும் என்று உணர்ந்து பந்தை ஈஸியாக வாங்கி ஆல்டர்வீல்டு ஓர் அசத்தல் ஷாட் அடிக்க, ஹூகோ லோரிஸ் அதைப் பாய்ந்து தடுத்துவிட்டார். `நம்மிடம் லோரிஸ் இருக்கிறார் கவலைப்படவே வேண்டாம்' என பிரான்ஸ் ரசிகர்கள் சந்தோஷப் பெருமூச்சு விட்ட தருணம் அது.

கோல்கீப்பர் கோர்ட்டுவா

தொடர்ந்து பிரான்ஸின் அட்டாக்கும் அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. மடூய்டி ஒரு லாங் ஷாட் அடித்து கோர்ட்வாவின் நீளமான கைகளுக்கு வேலை கொடுத்தார். ஹாஃப் டைம் வரவிருக்கும்போது, பெஞ்சமின் பவார்டு எம்பாப்பேவுடன் ஒன்- டூ பாஸ் கொடுத்து கோல் பாக்ஸுக்குள் நுழைந்து ஒரு curve ஷாட் முயற்சிக்க, அதை அற்புதமாகக் கால்களால் தடுத்து கோல் விழாமல் காப்பாற்றினார் கோர்ட்வா. ஆட்டத்தின் இரண்டாம் பாதியும் அட்டாக்கை மையமாக வைத்தே இருந்தது. ஜப்பான் உடனான ஆட்டத்தில் பெல்ஜியம் தனது மொத்த வித்தையையும் இரண்டாம் பாதியில்தான் இறக்கியது. இப்போதும், அப்படி ஓர் ஆட்டத்தை எதிர்பார்த்திருந்தார்கள் பெல்ஜியம் ரசிகர்கள். பெல்ஜியமும் அப்படியோர் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், எதிரில் இருந்தது ஜப்பான் இல்லை பிரான்ஸ். 

#FRABEL

51-வது நிமிடம் பரபரப்பான ஆட்டத்தின் முதல் கோல் விழுந்தது. கிரீஸ்மேனின் கார்னரை உம்டிட்டி முட்டி கோல் ஆக்கினார். கோர்ட்வா எதுவும் செய்யமுடியாமல் நின்றார். பிரான்ஸ் 1 கோல் அடித்து முன்னணியில் இருக்க, பெல்ஜியம் வெறித்தனமாக அட்டாக் செய்யும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பொறுமையாக ஃபார்மேஷனில் எந்தச் சொதப்பல்களும் இல்லாமல் தன் நிலையான பழைய அட்டாக் ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. பிரான்ஸுக்காக ஒரு கோல் அடிக்கும் வாய்ப்பு ஜிரோடுக்குக் கிடைத்தது. எம்பாப்பேவின் ட்ரிக்கியான பேக்ஹீல் பாஸ் ஜிரோடுக்கு கோல் வாய்ப்பை ஏற்படுத்த, ஜிரோடு அடித்த பந்து காற்றில் இருக்கும்போதே அதை ஓடிவந்து தடுத்துவிட்டார் கோர்ட்வா. பெல்ஜியத்தைக் காப்பாற்றிய அட்டகாசமான save அது. பெல்ஜியம் ஒரு கோல் அடிக்க எவ்வளவோ முயற்சி செய்தது.

65-வது நிமிடம் போக்பாவைத் தாண்டி ஃபெலாய்னி அடித்த ஹெட்டர், 81-வது நிமிடம் விட்செலின் லாங் ஷாட் என பெல்ஜியம் ஈகுவலைசருக்கான நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால், கடைசி வரை பெல்ஜியம் கோலடிக்கவே இல்லை. வெற்றி, தோல்வியைக் கடந்து பெல்ஜியத்தின் ஆட்டம் ஒரு சாம்பியனின் விளையாட்டுபோலவே இருந்தது. பிரான்ஸ் வழக்கம்போல ஒரு கோல் முன்னிலை பெற்ற பிறகு தனது டிஃபென்ஸ் ஆட்டத்தை பலப்படுத்தியது. எது தேவையோ அதை மட்டுமே செய்து மீண்டும் ஒரு ஆச்சர்யப்படும் வெற்றியை அடைந்தது பிரான்ஸ். 60 சதவிகித பொசஷன், 594 பாஸ்கள், 5 கார்னர் கிக், 9 ஷாட்களில் 3 ஆன் டார்கெட் ஷாட்கள், 91 சதவிகித பாஸ் அக்யூரசி என ஆட்டத்தில் பெல்ஜியம் ஜொலித்தாலும், வெற்றிபெற்றது என்னவோ பிரான்ஸ்தான்.

2016 யூரோ கோப்பை ஃபைனலில் சொந்த மண்ணில் தோல்வியடைந்த பிரான்ஸ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேறியிருக்கிறது. இரண்டு ஆண்டு இடைவெளியில் FIFA நடத்தும் இரண்டு பெரிய டோர்னமென்ட்களின் ஃபைனலில் முன்னேறுவது என்பது கால்பந்து உலகில் பெரிய விஷயம். 1998-க்குப் பின் உலகக் கோப்பை வென்று வரலாறு படைக்கக் காத்திருக்கிறது பிரான்ஸ். பிரான்ஸின் ஈஃபில் டவர் மட்டுமில்ல அதன் கால்பந்து அணியும் ஓர் அதிசயம்தான்!

https://www.vikatan.com/news/sports/130464-france-won-against-belgium-and-moved-to-worldcup-final.html

Link to comment
Share on other sites

உலகக் கோப்பை கால்பந்து: இறுதிப் போட்டிக்கு செல்லுமா இங்கிலாந்து?

2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கடைசி அரையிறுதி ஆட்டத்தில், இன்று (புதன்கிழமை) இங்கிலாந்தும் குரேஷியாவும் இன்னும் சில மணிநேரங்களில் மோதவுள்ளன.

உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து பைனலில் நுழையுமா?படத்தின் காப்புரிமைMATTHIAS HANGST/GETTY IMAGES

1990ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி பாபி ரோப்சனின் தலைமையிலான இங்கிலாந்து அணி மேற்கு ஜெர்மனியோடு அரையிறுதியில் போட்டியிட்டபோது, குரேஷியா என்ற ஒரு நாடே இருக்கவில்லை.

அந்நேரத்தில் இங்கிலாந்து அணிக்காக இப்போது விளையாடுகின்ற வீரர்களில் 17 பேர் பிறந்திருக்கவேயில்லை.

ஸ்வீடனோடு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் எவ்வித பதற்றமும் இல்லாமல், 2:0 என்ற கோல்கணக்கில் வெற்றி கொண்டதை தொடர்ந்து, இங்கிலாந்து கால்பந்து அணி பயிற்சியாளர் சௌத்கேட் அதே 11 பேரை அரையிறுதியிலும் ஆடுவதற்காக தேர்தெடுத்துள்ளார்.

இந்த அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்று உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் வரலாற்று பதிவாக அமையும் என்ற எதிர்பார்ப்போடு இங்கிலாந்து அணி களம் இறக்குகிறது.

உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்து பைனலில் நுழையுமா?படத்தின் காப்புரிமைALEX LIVESEY/GETTY IMAGES

மேற்கு ஜெர்மனியொடு நடைபெற்ற போட்டியில் பெனால்டி முறையில் தோல்வியடைந்த பின்னர் நடைபெறுகின்ற இங்கிலாந்தின் மிக முக்கிய உலகக் கோப்பை கால்பந்து போட்டியாக இது இருக்கும்.

இன்றைய அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றால், 52 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கின்ற மாபெரும் வெற்றியாக இந்த போட்டி கருதப்படும்.

காலிறுதி ஆட்டத்தில் குரேஷியா அணி ரஷ்யாவை வென்று அரையிறுதியில் நுழைந்துள்ளது.

முன்னதாக, நேற்று, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் இடையே நடந்த அரை இறுதி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் பெல்ஜியம் தோல்வி அடைந்ததை அடுத்து, இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது பிரான்ஸ்.

எனவே இன்று வெற்றிப்பெரும் அணி இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sport-44797499

Link to comment
Share on other sites

உலக கோப்பை கால்பந்து அரையிறுதி - முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை

 
அ-அ+

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. #WorldCup2018 #ENGCRO

 
 
 
 
உலக கோப்பை கால்பந்து அரையிறுதி - முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை
 
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.
 
இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின.
 
ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
 
இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்து வருகிறது. #WorldCup2018 #FifaWorldCup2018 #ENGCRO #CROENG #EnglandvCroatia

https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/12001733/1175922/england-lead-10-against-croatia-in-first-half-in-world.vpf

Link to comment
Share on other sites

2-1 என இங்கிலாந்தை வீழ்த்தியது குரோஷியா
கால்பந்து: பைனலில் பிரான்ஸ் - குரோஷியா மோதல்
Link to comment
Share on other sites

உலக கோப்பை கால்பந்து - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது குரோஷியா

 
அ-அ+

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #ENGCRO

 
 
உலக கோப்பை கால்பந்து - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது குரோஷியா
 
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.
 
இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின.
 
ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
 
இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது.
 
201807120207318191_1_eng-2._L_styvpf.jpg
 
இதையடுத்து, இரண்டாவது பாதியில் குரோஷியா அணி வீரர்கள் கடுமையாக போராடினர் இதற்கு பலன் அளிக்கும் விதமாக 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெர்சிக் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை அடைந்தன. அதன்பின்னர் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
 
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இதையடுத்து, முதல் கூடுதல் நேரத்திலும் எண்ட அணியும் கோல் அடிக்கவில்லை.
 
இரண்டாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா வீரர் மாரியோ மாண்ட்சிக் 109வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
 
இதைத்தொடர்ந்து, குரோஷியா அணி அபாரமாக விளையாடி இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன் இறுதி போட்டியிலும் நுழைந்தது. #WorldCup2018 #FifaWorldCup2018 #ENGCRO #CROENG #EnglandvCroatia
 
 
Link to comment
Share on other sites

உலககோப்பை கால்பந்து: இங்கிலாந்தின் 52 ஆண்டுகால கனவு தகர்ந்தது எப்படி?

உலகக்கோப்பை கால்பந்து 2018-ல் இங்கிலாந்து அணி குரேஷியாவிடம் அரை இறுதியில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இங்கிலாந்தின் 52 ஆண்டுகால கனவு தகர்ந்துள்ளது.

உலககோப்பை கால்பந்துபடத்தின் காப்புரிமைANADOLU AGENCY

1966-ல் உலக கோப்பை கால்பந்து தொடரில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இங்கிலாந்து. அதன்பின்னர் இங்கிலாந்து உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறவில்லை.

இம்முறை மாஸ்கோவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரான்சுடன் இங்கிலாந்து மோதும் என இங்கிலாந்து ரசிகர்கள் நம்பினர். ஆனால் அரை இறுதி போட்டியில் ஆட்டம் முடிவதற்கு 11 நிமிடங்கள் இருக்கும் வேளையில் குரோஷியாவின் மரியோ மன்ட்ஜூகிக் அடித்த வெற்றிக்கான கோல் இங்கிலாந்தின் அரை நூற்றாண்டு கனவை அடியோடு தகர்த்தது.

 

 

இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் கோலை ஐந்தாவது நிமிடத்திலேயே அடித்தது. முதல் பாதியில் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டம் இரண்டாவது பாதியில் குரோஷியாவின் பெரிசிக் 68-வது நிமிடத்தில் அடித்த கோலால் சமநிலை அடைந்தது.

இரண்டாவது பாதியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. இதையடுத்து கூடுதல் நேரம் தரப்பட்டது. கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

உலககோப்பை கால்பந்துபடத்தின் காப்புரிமைANADOLU AGENCY

இரண்டாவது பாதியில் இவான் பெரிசிக்கின் உதவியோடு மரியோ மன்ட்ஜூகிக் ஒரு கோல் அடித்தார். அதன் பிறகு குரோஷியா மேலும் கோல் போடும் முனைப்போடு துடிப்பாக ஆடியது. கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதி முடிவில் குரோஷியா 2-1 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

இங்கிலாந்து சனிக்கிழமையன்று மூன்றாவது/நான்காவது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் மோதுகிறது. ஞாயிற்றுகிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது ஃபிரான்ஸ்.

இங்கிலாந்து தோல்வியடைந்தபோதிலும் இங்கிலாந்து ரசிகர்கள் சவுத் கேட்டின் அணிக்கு எழுந்து நின்று மரியாதை செய்தனர். 1996-ல் நடந்த யூரோ கோப்பைக்கு பிறகு இங்கிலாந்தின் சிறந்த செயல்பாடு இதுவே. நான்கு வருடங்களுக்கு முன்பு பிரேசிலில் நடந்த உலககோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறியது. 2016 யூரோ கோப்பையில் கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்திடம் தோற்று காலியிறுதிக்கு தகுதிபெறாமல் வெளியேறியது.

இங்கிலாந்து முதல் பாதியில் வெற்றிக்கான ஓட்டத்தை துவங்கியது. ஆனால் இரண்டாவது பாதியில் சற்றே சுணங்கியதும் குரோஷியா கோல் போட விட்டதும் வெற்றி ஓட்டத்தை நிறுத்தியது. அதேசமயம் குரோஷியாவின் வெற்றி ஓட்டமானது இந்த உலககோப்பையில் எந்த அணியாலும் தடுத்து நிறுத்த முடியாததாக விளங்குகிறது.

https://www.bbc.com/tamil/sport-44803216

Link to comment
Share on other sites

`It's not coming home’... இங்கிலாந்தின் கலைந்த கனவு...உலகக் கோப்பை ஃபைனலில் குரோஷியா! #CROENG

 

``உலகக் கோப்பைக்கு முன் யாராவது எனக்கு மூன்றாம் இடத்திற்கான வெண்கலப் பதக்கத்தை வழங்கியிருந்தால் நானும் வாங்கியிருப்பேன். ஆனால்... இப்போது கண்டிப்பாக என்னால் அது முடியாது"

`It's not coming home’... இங்கிலாந்தின் கலைந்த கனவு...உலகக் கோப்பை ஃபைனலில் குரோஷியா! #CROENG
 

ரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் கால்பந்து உலகக்கோப்பைத் தொடர்தான் இதுவரை நடந்த உலகக்கோப்பைகளில் பெஸ்ட் எனக் கால்பந்து ஜாம்பவான்கள் பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். காரணம்... இதுவரை இல்லாத அளவுக்கு இத்தொடரில் பல அதிர்ச்சி முடிவுகளும், ஆச்சர்ய நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன. லூஸ்னிகி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா நேற்று மோதிய இரண்டாவது அரை இறுதிப்போட்டியும் கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் அளிக்கத் தவறவில்லை. #CROENG

இங்கிலாந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகும், குரோஷியா 20 ஆண்டுகளுக்குப் பிறகும் கால்பந்து உலகக்கோப்பை அரை இறுதிக்குத் தகுதிபெற்றிருக்கின்றன என்பதால் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற இப்போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

#CROENG

 

 

நேற்று இரண்டாம் அரை இறுதிப்போட்டி நடைபெற்ற லூஸ்னிகி மைதானம், இந்த உலகக்கோப்பைத் தொடரின் பல்வேறு ட்விஸ்ட்களை சந்தித்திருக்கிறது. முதல் போட்டியில், தனது சொந்த மண்ணில் 5-0 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவை ரஷ்யா பந்தாடியதும் இங்கேதான். நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோ அதிர்ச்சித் தோல்விக்கு உள்ளாக்கியதும் இங்கேதான். இத்தொடரின் `டல்'-லான மேட்ச் எனக் கருதப்படும், பிரான்ஸ் டென்மார்க் இடையேயான மேட்ச் கோல்-லெஸ் டிராவில் முடிந்ததும் இங்கேதான். உலகக் கோப்பையை வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான ஸ்பெயினை, `ரவுண்டு ஆஃப் 16' சுற்றில் ரஷ்யாவிடம் வீழ்ந்ததும் இங்கேதான். நேற்றைய போட்டியும் விதி விலக்கல்ல.

``உலகக் கோப்பைக்கு முன் யாராவது எனக்கு மூன்றாம் இடத்துக்கான வெண்கலப் பதக்கத்தை வழங்கியிருந்தால் நானும் வாங்கியிருப்பேன். ஆனால்... இப்போது கண்டிப்பாக என்னால் அது முடியாது" - இது, `செமி ஃபைனலில் குரோஷியா ஜெயிக்குமா? என்ற கேள்விக்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டேலிச் சொன்ன பதில். குரோஷியா செமி ஃபைனல் வரை தகுதிபெறும் என உலகக் கோப்பைக்கு முன் யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். இதே நிலைமைதான் இங்கிலாந்து அணிக்கும். `வாழ்நாளின் ஒரே வாய்ப்பு' என்ற எண்ணத்தில்தான் இரு அணிகளும் செமி ஃபைனலில் களமிறங்கின.

#CROENG

போட்டி தொடங்கியதுமே இங்கிலாந்து அட்டாக்கிங் ஆட்டத்தை ஆரம்பித்தது. விறுவிறுவென குரோஷியாவின் எல்லையை இங்கிலாந்து ஆக்கிரமித்தது. யாரும் எதிர்பார்த்திராத வகையில் மேட்ச் தொடங்கி 5-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து முதல் கோல் போட்டு குரோஷியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனக்குக் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை அற்புதமான கோல் ஆக மாற்றினார் ட்ரிப்பியர். மைதானம் முழுவதும் `Its coming home' பாடல் உரக்க கேட்கத் தொடங்கியது. 1-0 என ஐந்து நிமிடத்திலேயே முன்னிலை பெற்ற இங்கிலாந்து, முதல்பாதியில் உற்சாகமாக ஆடியது. இங்கிலாந்தின் அட்டாக்கிங் ஆட்டத்தை சமாளிப்பதற்கே குரோஷியா மொத்த உழைப்பையும் கொடுத்துக்கொண்டிருந்தது. ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில்தான் குரோஷியாவால் தனது முதல் ஆன் டார்க்கெட் ஷாட்டையே அடிக்க முடிந்தது. அதை இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்ட் அருமையாக save செய்தார். முதல்பாதி முடிவில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது.

குரோஷியா மீண்டு வருமா என மற்றவர்களுக்கு வேண்டுமானால் சந்தேகம் இருந்திருக்கலாம். ஆனால், அந்த அணி வீரர்கள் துளிகூட தன்னம்பிக்கை இழக்கவில்லை. சொல்லப்போனால் கடைசிவரை போராடுவதும், கொஞ்சமும் பிரஷ்ஷரை தலையில் ஏற்றிக்கொள்ளாததும்தான் அந்த அணி வீரர்களின் பலம். 

இரண்டாம் பாதி தொடங்கியது. இந்த முறை ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குரோஷியாவின் பக்கம் திரும்பியது. முதல் காரியமாக ஒரு கோல் போட்டு சமன் செய்துவிட வேண்டும் என்ற துடிப்போடு விளையாடியது குரோஷியா. பார்வை வேறெங்கும் விலகிவிடாதபடி ஒவ்வொரு நிமிடமும் மேட்சில் அனல் பறந்தது. இரு அணி வீரர்களின் ஃபவுல் எண்ணிக்கையும் உயர்ந்தது. பாக்ஸை குரோஷியா நெருங்குவதும், இங்கிலாந்து டிஃபண்டர்கள் அதைத் தடுப்பதும் அடுத்தடுத்து நடந்துகொண்டிருந்தது. இங்கிலாந்தின் தடுப்பரணைத் தாண்டி அவ்வப்போது ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புகளை கோல் போடத் தவறிக்கொண்டிருந்தார் பெரிசிச். அப்போதுதான் அந்த ட்விஸ்ட் நடந்தது.

68-வது நிமிடத்தில் பாக்ஸூக்கு வெளியே இருந்து வெர்சால்ஜ்கோ அடித்த கிராஸை, தலையால் முட்டிமோதித் தடுக்க இங்கிலாந்து டிஃபண்டர் வாக்கர் குனிய, அவரின் தலைக்கு மேலே பின்னாலிருந்து ஓடிவந்து காலை நீட்டி அதை கோல் போஸ்ட் நோக்கி உதைத்தார் பெரிசிச். இந்த முறை அவரின் குறி தப்பவில்லை. முதன்முறை பார்த்தபோது ஹெட்டர் கோல் போல தெரிந்தது. திரும்பத் திரும்ப ரீப்ளே பார்த்தபோதுதான் தெரிந்தது அது ஹெட்டர் கோல் அல்ல, பாதத்தை வைத்து அடிக்கப்பட்ட கோல் என்று. இந்த டோர்னமென்ட்டின் ஒன் ஆஃப் தி பெஸ்ட் கோல். குரோஷியாவுக்கு முதல் கோல். ஸ்கோர் போர்டு 1-1 எனச் சமனடைந்தது. ஆட்டம் சூடுபிடித்தது.

#CROENG

இரண்டாம் பாதியின் கடைசி 20 நிமிடங்கள் முழுக்க முழுக்க குரோஷியாவின் ராஜ்ஜியம்தான்! இரு அணிகளும் எவ்வளவோ முயற்சி செய்தும் மேலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான கோல்கீப்பர்களான இங்கிலாந்தின் பிக்ஃபோர்ட், குரோஷியாவின் சுபாசிச் இருவரையும் தாண்டி கோல் போடுவதென்ன அவ்வளவு எளிதான காரியமா?! இரண்டாம் பாதி 1-1 என்ற சம நிலையில் முடிவுக்கு வந்தது. எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்டது. முதல் எக்ஸ்ட்ரா டைமில் கோல் எதுவும் விழவில்லை. ஆனால், பந்தை எதிரணியிடமிருந்து கைப்பற்றும் முயற்சியில் வீரர்கள் பலரும் முட்டிமோதி விழுந்தனர்.

எக்ஸ்ட்ரா டைமின் இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களில் ஆட்டம் குரோஷியாவின் பக்கம் சென்றது. லெஃப்ட் விங்கிலிருந்து வந்த கிராஸை, இங்கிலாந்து டிஃபண்டர் வால்கர் சரியாக கிளியர் செய்யத் தவறினார். அதை பெரிசிச் பெனால்டி ஏரியாவுக்குள் ஹெட் செய்துவிட, மாண்ட்ஸூகிச் அதைத் தாமதிக்காது கோல் அடித்தார். 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா முன்னிலை பெற்றது. இன்னும் சில நிமிடங்களைக் கடத்திவிட்டால் போதும் வரலாற்று வெற்றியைப் பெற்றுவிடலாம் என்ற முனைப்பில் ஆடியது குரோஷியா. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நேரத்தை வீணடிக்கவும் செய்தது. இதனால் இரு அணி வீரர்களுக்கும் இடையே அவ்வப்போது கைகலப்பு ஏற்பட்டது. ரெஃப்ரி தலையிட்டு மேட்ச் தடைபடாமல் பார்த்துக்கொண்டார். தனது அணிக்காக மேட்ச் தொடங்கிய 5-வது நிமிடத்திலேயே கோல் போட்ட ட்ரிப்பியர் காயம் காரணமாக மைதானத்தை விட்டு சோகத்துடன் வெளியேறினார்.

#CROENG

ஆட்டத்தை முடிப்பதற்கான ரெஃப்ரியின் விசில் சத்தம்... நான்கு லட்சம் மக்கள் தொகையே கொண்ட சின்ன நாடான குரோஷியா முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. உலகக் கோப்பையை வெல்லும் நம்பிக்கையில் இருந்த இங்கிலாந்து வீரர்கள் சோகத்தில் கண்ணீர் மல்க வெளியேறினர். 1982-க்குப் பிறகு உலகக் கோப்பையில் இரண்டு ஐரோப்பிய நாடுகளை அடுத்தடுத்து வீழ்த்தியதில்லை என்ற இங்கிலாந்தின் சோக வரலாறு நேற்றும் தொடர்ந்தது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் 14-ம் தேதி நடக்கவிருக்கும் மூன்றாவது இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவிருக்கின்றன. பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதவிருக்கும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி, இதே லூஸ்னிகி மைதானத்தில் 15-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

``எங்களைப் போன்ற நாடும் இருக்கிறது... சிவப்பு வெள்ளை கட்டங்கள் கொண்ட டி-ஷர்ட் குரோஷியாவினுடையது. இவர்களின் கலாசாரம் இதுதான் என்பதை உலக மக்களுக்குக் காண்பிக்க வேண்டும். இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றதோடு உலகக் கோப்பையை வென்று குரோஷியாவின் பெயரை உலகக் கோப்பை வரலாற்றில் நிறுத்துவோம்" - போட்டி முடிந்ததும் குரோஷியா ரசிகர் ஒருவர் தொலைக்காட்சியில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் சொன்னது இது. அவருக்கு மட்டுமல்ல... குரோஷியா போன்ற அத்தனை நாடுகளுக்கும் அதுதான் ஆசை!

https://www.vikatan.com/news/sports/130576-croatia-overcomes-england-scare-to-enter-the-world-cup-final.html

Link to comment
Share on other sites

மரியோ மன்ட்ஸூ‘கிக்’ வெற்றி கோல்: முதல் முறையாக உ.கோப்பை இறுதியில் குரேஷியா; இங்கிலாந்து கனவு  தகர்ந்தது

 

 
MANDZUKIC%20-%20reutersjpg

வெற்றி கோலை அடிக்கும் குரேஷியாவின் மண்ட்சூகிக். | ராய்ட்டர்ஸ்.

சுமார் அரைநூற்றாண்டுக்குப் பிறகு உலகக்கோப்பைக் கால்பந்து இறுதித் திருவிழாவில் களம் காணும் இங்கிலாந்தின்  கனவை குரேஷியா நேற்று தகர்த்தது. 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வெளியேற்றியது. இதன் மூலம்  உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு குரேஷியா முதன் முதலில் முன்னேறியுள்ளது.

ஆட்டம் தொடங்கி 5-வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் கெய்ரன் ட்ரிப்பியர் முதல் கோலை அடித்து முன்னிலை  கொடுத்தார், அதன் பிறகு குரேஷியா ஆட்டத்திலேயே இல்லை, 67 நிமிடங்கள் வரை ஒன்று இங்கிலாந்து 1-0 வெற்றி  இல்லையெனில் இங்கிலாந்து இன்னொரு கோலை அடிக்கும் குரேஷியா கோல் அடிக்குமாறு ஆடவில்லை என்ற  பிம்பத்தையே இந்த ஆட்டம் அளித்தது.

     
 

ஆனால் திடீர் எழுச்சியாக 68வது நிமிடத்தில் குரேஷியாவின் இவான் பெரிசிச் ஒரு கோலை அடித்துச் சமன் செய்ய  ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது, அதில் 109வது நிமிடத்தில் குரேஷிய வீரர் மரியோ மண்ட்சூகிக் அடித்த அபார  இடது கால் கிக் கோலாக குரேஷியா 2-1 என்று முன்னிலை வகித்தது.

இங்கிலாந்து சாம்பியன்கள் போல் இதுவரை ஆடிவந்தனர், காலனியாதிக்க தேசமக்களின் இன்றைய தலைமுறை  கால்பந்துக் கனவுகளைச் சுமந்து இந்த உலகக்கோப்பையில் எளிதான குரூப் பிரிவுப் போட்டிகளைக் கடந்து இறுதி 16,  பிறகு காலிறுதியில் ஸ்வீடன் சவாலைச் சமாளித்து குரேஷியாவைச் சந்திக்க வந்தது, ஏறக்குறைய அந்த அணி  குரேஷியாவுக்கு எதிரான வெற்றியை உத்தரவாதமாக எடுத்துக் கொண்டது, இரு காலனியாதிக்க தேசத்தின் மக்களும்  தங்கள் அணிகள் இறுதிப் போட்டியில் களம் காணும் கனவில் திளைத்தனர், ஆனால் நடக்கவில்லை.

ட்ரிப்பியர் அடித்த ஸ்டன்னிங் முதல் கோல், இங்கிலாந்து 1-0

ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் பாக்சிற்கு சற்று வெளியே லுகா மோட்ரிச் தேவையில்லாமல் டெலி ஆலியை ஃப்வுல்  செய்ய விளைந்தது ஃப்ரீ கிக். கெய்ரன் ட்ரிப்பியர், டேவிட் பெக்காம் ஸ்டைலில் அதனை குரேஷிய வீரர்கள் சுவர்  வேடிக்கைப் பார்க்க, குரேஷியாவின் அபார கோல் கீப்பர் சுபாசிச்சும் ஒன்றும் செய்ய முடியாமல் கோலுக்குள்  செலுத்தினார், மிக அழகான ஒரு கோல். ஆகச்சிறந்த கோல்களில் ஒன்று, மிக அழகான கோல்களில் ஒன்று.

trippierjpg

அபாரமான ஃப்ரீ கிக், நேராக கோலுக்குள் சென்ற ட்ரிப்பியரின் ஷாட். | ஏ.பி.

 

இந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்த இங்கிலாந்தின் ஹாரி கேன் இருமுறை கோல் வாய்ப்பைத்  தவறவிட்டார். ஜெசி லிங்கர்டின் மிகச் சாதுரியமான பாஸுக்குப் பிறகு குரேஷிய கோல் கீப்பர் சுபாசிச்சுக்கு மிக  அருகிலான வாய்ப்பு இது, தவறவிட்டார். சுலபமாக உள்ளே செலுத்த வேண்டிய பந்தை சுபாசிச் கையில் அடித்து பந்து  ரீபவுண்ட் ஆகி திரும்பி இவரிடமே வந்த போதும், ஷாட்டை போஸ்ட்டில் அடித்தார்.

இப்படியாக திரும்பத் திரும்ப இங்கிலாந்தின் தாக்குதலில் குரேஷிய அணி நிலைகுலைந்தது, அவர்களில் சிறந்த  வீரர்களான மோட்ரிச், ராக்கிடிச் ஆகியோர் கூட இதனால் தாக்கம் செலுத்த முடியவில்லை, குரேஷியாவுக்கு ஊக்கம்  அளிக்க முடியவில்லை. ஆனாலும் ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் இருவரும் சேர்ந்து மிக நுட்பமான பாஸ்கள் மூலம்  இங்கிலாந்தின் கோல் பகுதிக்குள் பந்தைக் கொண்டு சென்றனர். பந்து ஆண்ட்டி ரெபிச்சிடம் வந்தது அவர் இடது காலால்  உதைத்த உதை இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்டினால் எளிதில் தடுக்கப்பட்டது.

முதலில் அருகில் கிடைத்த இரண்டு வாய்ப்புகளைத் தவற விட்ட ஹாரி கேன், ட்ரிப்பியர் அனுப்பிய தாழ்வான க்ராஸை  டைவ் அடித்து தலையால் முட்ட முயன்றார் ஆனால் பந்து சிக்கவில்லை, இது ஒரு கோல் சந்தர்ப்பமே. இது  இரண்டாவது பாதியில் தொடக்கத்தில் நடந்தது.

குரேஷியாவின் அபாரமான முதல் கோல்

இந்த வாய்ப்புகளை இங்கிலாந்து தொடர்ந்து நழுவ விட்டதால் உறுதி பெற்ற குரேசியா தாக்குதல் தொடுத்தது இதனால்  இங்கிலாந்தின் நடுக்கள வீரர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். 65வது நிமிடத்தில் இவான் பெரிசிச் மீண்டும் வலதுகாலால்  கோலை நோக்கி ஒரு அரக்க உதை உதைக்க கைலி வாக்கர் அதனை இடைமறித்தார். மீண்டும் குரேசியாவின்  இன்னொரு கிராஸ், வாக்கர் எம்பி தலையால் முட்டி கிளியர் செய்தார். இது 65வது நிமிடத்தில் நடந்த நெருக்கடி.

ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் வலது புறம் டீப்பாக இருந்த குரேஷிய வீரர் வ்ரசால்கோ கோல் நோக்கி அடித்த மிக அபாரமான ஷாட்டை  கைலி வாக்கர் அதனை தலையால் முட்டி வெளியே தள்ள முயற்சி செய்த வேளையில் பின்னால் இருந்த குரேஷிய  ஸ்ட்ரைக்கர் பெரிசிச்  இடது காலை  நன்றாக உயரேத் தூக்கி காற்றில் இருந்த பந்தை வலைக்குள் தள்ளினார், குரேஷியா சமன் செய்தது  ஸ்டேடியம் வெடித்து எழுந்தது. 1-1.

perisicjpg

பெரிசிச் இடது காலை உயரே தூக்கி பந்தை கோலுக்குள் திருப்பும் காட்சி. குரேஷியாவின் சமன் கோல், முதல் கோல். | ராய்ட்டர்ஸ்.

 

இந்த கோல் குரேஷியாவின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப ஆட்டத்தில் வேகம் கூடியது, இங்கிலாந்தின் ஸ்டோன்ஸ்  பந்துக்கு தயக்கம் காட்ட, வாய்ப்பைப் பார்த்துக் கொண்டிருந்த பெரிசிச் இடது புறம் பாக்சிற்குள் நுழைந்தார். பிறகு  இங்கிலாந்து கோலை நோக்கி தாழ்வான ஒரு ஷாட்டை மேற்கொண்டார். கோலாகவில்லை, பந்து மீண்டும் ரெபிக்கிடம்  வர ஆனால் இவரோ நேராக இங்கிலாந்து கோல் கீப்பர் கையில் அடித்தார். 71வது நிமிடத்தில் இது நடக்க குரேஷியாவின்  ஆட்டத்தில் கில்லர் இன்ஸ்டிங்க்ட் தலை தூக்கியது, 75வது நிமிடத்தில் வ்ரசாலிகோ வலது புறம் பந்தை எடுத்து வந்து  கோல் எல்லைக்குள் பந்தை பாஸ் செய்ய பெனால்டி ஸ்பாட்டில் பெரிசிச் நின்று கொண்டிருந்தார். ஆனால் இங்கிலாந்து  இம்முறை பந்தை வெளியே அனுப்பித் தப்பியது, ஆனால் இங்கிலாந்து அபாயத்தை உணரத் தொடங்கியது.

77வது நிமிடத்தில் ராக்கிடிச் இடது புறம் மிக அருமையாக ஒரு வளைந்த பாஸை நடுவை நோக்கி அடித்தார். ஆனால்  இங்கிலாந்தின் கோல் கீப்பர் பிக்போர்ட் முன்னேறி வந்து பாக்ஸின் ஓரத்தில் பந்தைப் பிடித்தார். இது கோலாக  மாறியிருக்கும், காரணம் பெரிசிச் அங்கு அபாயகரமாக வந்து கொண்டிருந்தார். குரேஷிய கடும் தாக்குதலிலும்  இங்கிலாந்துக்கு ஒரு எதிர்த்தாக்குதல் இதே நிமிடத்தில் கிடைத்தது. லிங்கர்டின் முயற்சி வெளியே சென்றது.

83வது நிமிடத்தில் வலது உள்புறம் குரேஷிய வீரர் ப்ரோசோவிக் பந்தை மண்ட்சூகிக்கிடம் அடிக்க அவர் ஒரு சுற்று சுற்றி  நெருக்கமான கோணத்திலிருந்து ஷாட் ஒன்றை கோல் நோக்கி அடித்தார். ஆனால் இங்கி. கோல் கீப்பர் பிக்போர்ட்  அதனை சிறப்பாக வெளியே தள்ளி விட்டார். இதே தருணத்தில் இங்கிலாந்து எதிர்த்தாக்குதல் தொடுக்க கோல் நோக்கி  அடித்த ஷாட்டை கோல் கீப்பர் சுபாசிச் எழும்பித் தடுத்தார்.

84வது நிமிடத்தில் உயரே வந்த பந்தை இங்கிலாந்து சரியாக எடுக்கவில்லை, பிக்போர்ட் தன் இடத்தை விட்டு பெயர்ந்து  வந்து பந்தை தள்ள முயன்றார் ஆனால் பந்து எதிராளி பெரிசிச்சிடம் இடது புறம் வந்தது, வலையைக் காக்க ஒருவரும்  இல்லை ஆனால் பெரிசிச் வாய்ப்பை கோலுக்கு மேலே அடித்துத் தவறவிட்டார்.

86ம் நிமிடத்தில் குரேஷிய வீரர் ஸ்ட்ரினிச் இடது புறத்திலிருந்து தன்னந்தனியாக பந்தை மிக வேகமாக எடுத்துச்  சென்றார் ஷூட் செய்ய வேண்டியதுதான் பாக்கி, ஆனால் வலது புறம் பெரிசிச்சை எதிர்நோக்கினார் இதனால் பாஸ்  சரியாக அமையவில்லை. பெரிசிச் நீட்டிக்கொண்டு அதை அடிக்க முற்பட வேண்டிவந்தது.

91வது நிமிடத்தில் இங்கிலாந்து தவறாக ஆட பந்து ராக்கிடிச்சிடம் வர அவரது முயற்சியை இங்கிலாந்து பாடுபட்டு  தடுத்தது, இல்லையெனில் அப்போதே குரேஷியா இறுதிக்கு முன்னேறியிருக்கும்.

92வது நிமிடத்தில் ட்ரிப்பியர் ஒரு ஷாட்டை கோல் நோக்கி பாஸ் செய்தார், கேன் அதனை தலையால் முட்டி  கோலுக்குள் தள்ள நினைத்தார். ஆனால் பந்து வைடாகச் சென்று கோலாகவில்லை, கேன் தலையில் கையை வைத்துக்  கொண்டார் மொத்தம் கேன் விட்ட வாய்ப்புகள் மட்டும் 3.

kanejpg

குரேஷிய கீப்பர் சுபாசிச்சிடம் கையில் அடித்து வாய்ப்பை கோட்டை விட்ட இங்கிலாந்தின் ஹாரி கேன்.| ராய்ட்டர்ஸ்.

 

கூடுதல் நேர ஆட்டத்தில் இங்கிலாந்தின் அயர்ச்சியில் குரேஷியா 2வது கோல்:

கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து வீரர் டையர் தூரத்திலிருந்து அடித்த ஷாட் ஒன்று இங்கிலாந்து சார்பாக கார்னர்  வாய்ப்பாக அதனை ட்ரிப்பியர் வலது புறத்திலிருந்து அடிக்க 12 அடியிலிருந்து இங்கிலாந்தின் ஸ்டோன்ஸ் செய்த  ‘தலை’யீடு கோல் போஸ்ட்டைத் தாக்கியது. இன்னொரு வாய்ப்பில் ஸ்டோன்ஸின் மற்றொரு தலை ஷாட்டை  வ்ரசாலிக்கோ கிளியர் செய்தர், இதுவும் கோலுக்கு நெருக்கமானதே.

கூடுதல் நேர ஆட்டத்தில் இங்கிலாந்து நன்றாக ஆடியது, அழுத்தம் கொடுத்தது. ஆனால் 11வது நிமிடத்தில் சாலிகோ  வலது புறம் பிரித்து மேய்ந்து பந்தை எடுத்துச் சென்றார். ரேஷ்போர்ட் சறுக்கிக் கொண்டு வந்து இடைமறிக்க ஃப்ரீ கிக்  கிடைத்தது, அது வேஸ்ட் செய்யப்பட்டது. கூடுதல் நேரத்தின் முதல் பாதி இறுதியில் பெரிசிச் இடது புறத்திலிருந்து ஒரு  ஷாட்டைட் தாழ்வாக மண்ட்சூகிக்கிடம் அடிக்க, 6 அடி பாக்ஸில் இங்கி. கோல் கீப்பர் பிக்போர்ட் முயற்சி மேற்கொள்ள  விடாமல் இடைமறித்தார். இது ஒரு மிகப்பெரிய தடுப்பாகும்.

கூடுதல் நேர 17வது நிமிடத்தில் இந்த ஆட்டத்தின் அபாய நாயகன் பெரிசிச் இடது புறம் பந்தை வேகமாக எடுத்து சென்ரார் இது கார்னரில் முடிந்தது. ஆனால் கார்னர் வாய்ப்பு ஒன்றுமில்லாமல் போனது. 18வது நிமிடத்தில் மீண்டும் புரோஸோவிக் இடது உள்புறம் ஏகப்பட்ட இடம் கிடைக்க பந்தை உள்ளே கொண்டுவந்து அடித்த அடி வைடாகச் சென்றது.  இங்கிலாந்து தப்பியது.

ஆனால் 19வது நிமிடத்தில் தடுக்க முடியவில்லை! இந்நிலையில் உயரமாக இங்கிலாந்து கோல் பகுதிக்குள் வந்த பந்தை இங்கிலாந்து வீரர்கள் வெளியே அனுப்பத் தவறினர்,  உயரமாக வந்த பந்தை ட்ரிப்பியரை விடவும் உயரமாக எழும்பி பெரிசிச் தலையால் அருமையாக முட்டி கோல் நோக்கித் திருப்பி விட அங்கு மண்ட்சூகிக்கின் இடது கால் கிக் வெற்றி கோலாக மாறியது, இங்கிலாந்தின் தடுப்பாட்டம் அந்த நிமிடத்தில் அயர்ச்சியில் விளைந்தது போல் தெரிந்தது, இரண்டுபேர் இருந்தும் மண்ட்சூகிக் உதையைத்தடுக்க முடியவில்லை. குரேஷியா 2-1 முன்னிலை. இந்த கோல் 109வது நிமிடத்தில் வந்தது. கடைசியில் டெலி ஆலி இடது புறம் தாக்குதல் தொடுத்தார் ஆனால் குரேசிய வீரர் படேல்ஜி அவரைத் தடுத்தார், இது ஹேண்ட்லிங் என்பதால் ஃப்ரீ கிக் ஆனது. ராஷ்போர்ட் ப்ரீ கிக்கை அடித்தார், அது சரியாக அமையவில்லை ஆட்ட நாயகன் பெரிசிச் பந்தை எடுத்துக் கொண்டு அப்பகுதியை விட்டு விரைவில் வெளியேறினார். விசில் ஊதப்பட்டது இங்கிலாந்தின் கனவு தகர்ந்தது, கடைசியில் பெரிசிச், மண்ட்ஸூகிக் இங்கிலாந்தை வெளியேற்றினர். இங்கிலாந்து வீரர்கள் தரையில் ஏமாற்றத்துடன் விழுந்தனர். இனி எப்போது, எங்கே உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு இங்கிலாந்துக்குக் கிட்டும். மிக அருகில் வந்து கைவிட்டனர்.

மாறாக குரேஷியா முதல் உலகக்கோப்பை இறுதிக்கு முன்னேறி பிரான்ஸைச் சந்திக்கிறது. பிரான்ஸுக்கு மிகமிகக் கடினம்.

http://tamil.thehindu.com/sports/article24396725.ece

Link to comment
Share on other sites

எங்களைத் தரக்குறைவாகப் பேசிய இங்கிலாந்து ஊடகங்களுக்கு அடி: வெற்றி குரேஷியாவின் மோட்ரிச் பெருமிதம்

modricjpg

லுகா மோட்ரிச். | படம். | ஏ.எஃப்.பி.

உலகக்கோப்பை அரையிறுதியில் பின்னிலையிலிருந்து எழுச்சி பெற்று இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வெளியேற்றி கனவைத் தகர்த்து அதிர்ச்சியளித்த குரேஷிய அணியின் ஸ்ட்ரைக்கர் லுகா மோட்ரிச், இங்கிலாந்தின் ஊடகங்களும், பண்டிதர்களும் எங்களை இன்னும் கொஞ்சம் கூடுதலாக மதித்திருக்க வேண்டும். மட்டமாகப் பேசியிருக்கக் கூடாது, கடைசியில் அதற்கான விலையைக் கொடுத்தனர்.

இங்கிலாந்தின் பெரிய பிரச்சினையே அதன் ஊடகங்கள்தான், ஒரு வகையான ஆங்கிலத் திமிர் பிடித்து எதிரணியினரை கேலி செய்வது, ஒன்றுமில்லாத அணி என்பது, ‘களைப்படைந்த அணி என்பது என்று தங்கள் வாய்ஜாலங்களைக் காட்டுவது வழக்கம்.

 

அன்று டெலி ஆலி, லுகா மோட்ரிச் கால்கள் வழியாக பந்தை அடிக்க ஆர்வம் என்று தூண்டிவிட்டார், அதை வைத்துக் கொண்டு இங்கிலாந்தின் ஊடகங்களும், பண்டிதர்களும் குரேஷியாவை மட்டம்தட்டிப் பேசினர், ‘களைப்படைந்த’ அணி என்றும் வயதான அணி என்றும் தரந்தாழ்த்திப் பேசினர். ஆனால் கடைசியில் அதற்கான பெரிய விலையை தோல்வி ரூபத்தில் கொடுத்தது இங்கிலாந்து.

இந்நிலையில் குரேஷிய நட்சத்திர வீரர் லுகா மோட்ரிச் ஐடிவிக்குக் கூறும்போது,  “இங்கிலாந்து பத்திரிகையாளர்கள், கால்பந்து பண்டிதர்கள் தொலைக்காட்சியில் பேசினர், பேசிக்கொண்டேயிருந்தனர். குரேஷியாவை குறைத்து மதிப்பிட்டனர். இது மிகப்பெரிய தவறு என்று இப்போது புரிந்திருக்கும்.

அவர்கள் பேசிய அத்தனைப் பேச்சையும் எங்களுக்கான ஊக்கமருந்தாக எடுத்துக் கொண்டோம். நாங்கள் அவர்கள் எழுதுவதையும் பேசியதையும் கவனித்துக் கொண்டிருந்தோம், அதன் பிறகு சரி இன்று யார் களைப்படைந்த அணி என்று காட்டுவோம் என்று உறுதிபூண்டோம். அவர்கள் விவேகாம இருக்க வேண்டும், எதிராளியை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாங்கள் களைப்படைந்த அணியல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தோம். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நாங்களே ஆதிக்கம் செலுத்தினோம். கூடுதல் நேரத்துக்கு முன்பே ஆட்டத்தை முடித்து அவர்களைக் காலி செய்திருக்க வேண்டும். எங்கள் கனவு நிறைவேறியது. குரேஷிய வரலாற்றில் இது பேசப்படும். நாங்கள் கர்வமாக உணர்கிறோம்.

இவ்வாறு கூறினார் மோட்ரிச்.

தடுப்பாட்ட வீரர் வ்ரசால்கோ, “இது புதிய இங்கிலாந்து அவர்கள் தங்கள் நீண்ட பாஸ்களை ஆடுவதில் மாறிவிட்டனர், லாங் பால்களை எடுப்பதில் மாற்றம் கண்டுவிட்டனர் என்று பொதுவாகப் பேசப்பட்டது, ஆனால் நாங்கள் அழுத்தம் கொடுக்கக் கொடுக்க அவர்கள் அவ்வாறு மாறிவிடவில்லை என்பது தெரிந்தது” என்றார்.

குரேஷியா அணி உலகக்கோப்பை இறுதிக்குள் நுழையும் 13வது அணியாகும். 2010-ல் ஸ்பெயின் புதிய இறுதிப் போட்டியாளராக நுழைந்தபிறகு இப்போது இறுதியில் புதிய அணி குரேஷியா. 1998-ல் அரையிறுதிக்குள் நுழைந்தது, இப்போது இறுதிக்குள் நுழைந்தது.

http://tamil.thehindu.com/sports/article24396944.ece

Link to comment
Share on other sites

இங்கிலாந்தின் அதிர்ச்சி தோல்வியும் குரேஷியாவின் சாதனை வெற்றியும் - 8 தகவல்கள்

புதன்கிழமை இரவு இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தந்த இரவாக மாறிப்போக இன்னொருபுறம் குரேஷியா ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சி தருவதாக அமைந்தது.

உலககோப்பை கால்பந்து 2018படத்தின் காப்புரிமைANADOLU AGENCY

உலககோப்பை கால்பந்து 2018-ல் அரை இறுதி சுற்றில் குரேஷியாவும் இங்கிலாந்தும் மோதின. இப்போட்டியில் குரேஷியா 2-1 என்ற கணக்கில் வென்றது. முதல் கோல் இங்கிலாந்தால் அடிக்கப்பட்டது. எனினும் இரண்டாவது பாதியில் குரேஷியா ஆட்டத்தை சமன் செய்தது. கூடுதல் நேரத்தில் குரேஷியா வெற்றிக்கான கோலை உதைத்து இங்கிலாந்தின் அரை இறுதி கனவை சிதறடித்தது.

இங்கிலாந்து குரேஷியா இடையேயான அரை இறுதி போட்டி குறித்த புள்ளிவிவரத்தகவல்கள்

1. மிகப்பெரிய அளவிலான கால்பந்து கோப்பைத் தொடர்களில் இதுவரை ஐந்து முறை இங்கிலாந்து அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குரோஷியாவோடு இம்முறை தோல்வியடைந்ததோடுச் சேர்த்து நான்கு முறை அரை இறுதியில் தோல்வி கண்டுள்ளது.

1963 யூரோ கோப்பை அரை இறுதியில் யுகோஸ்லேவியாவிடம் தோற்றது. 1990 உலக கோப்பை அரை இறுதியில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது. 1996 யூரோ கோப்பை அரை இறுதியிலும் ஜெர்மனியிடமே இங்கிலாந்து தோற்றது. தற்போது குரேஷியாவிடம் தோற்று வெளியேறியுள்ளது.

2. இதுவரை ஐந்து முறை உலககோப்பையில் விளையாடியுள்ள குரோஷியா முதல்முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

3. இந்நூற்றாண்டில் குரேஷியாவுக்கு எதிராக முக்கியத் தொடர்களில் இதுவரை மூன்று முறை தோல்விகண்டுள்ளது இங்கிலாந்து.

உலககோப்பை கால்பந்துபடத்தின் காப்புரிமைANADOLU AGENCY

4. உலக கோப்பை போட்டியொன்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கூடுதல் நேரம் வரை ஆட்டம் நீண்டும், அதில் கடைசி நேரத்தில் வெற்றிக்கான கோல் அடித்த பெருமை குரேஷியாவின் மரியோ மண்ட்ஜூகிக்குக்குச் சேரும். நேற்றைய தினம் ஆட்டத்தின் 108-வது நிமிடம் மூன்றாவது நொடியில் அவர் வெற்றிக்கான கோலை அடித்தார்.

5. உலகக்கோப்பையில் டேவிட் பெக்காமுக்கு பிறகு ஃப்ரீ கிக்கில் நேரடியாக கோல் போட்ட இங்கிலாந்து வீரராகியுள்ளார் கியாரன் ட்ரிப்பியர். இதற்கு முன்னதாக ஈக்வடார் அணிக்கு எதிராக 2006-ல் பெக்காம் கோல் அடித்தார்.

6. உலக கோப்பை அரை இறுதி போட்டியில் 1958க்கு பிறகு மிகவிரைவாக அடிக்கப்பட்ட கோல் ஆகியுள்ளது ட்ரிப்பியரின் கோல். முன்னதாக பிரேசில் - பிரான்ஸ் அணிகள் 1958-ல் மோதிய அரை இறுதியில் வாவா எனும் வீரர் ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திற்கு பிறகு கோல் அடித்தார். ட்ரிப்பியர் நான்காவது நிமிடம் 44-வது நொடியில் கோல் அடித்துள்ளார்.

உலககோப்பை கால்பந்து 2018படத்தின் காப்புரிமைANADOLU AGENCY

7. 1990 உலக கோப்பையில் இங்கிலாந்து மூன்று முறை தொடர்ச்சியாக கூடுதல் நேரத்தில் விளையாடியது. அதன்பின்னர் குரேஷியாதான் இம்முறை தொடர்ச்சியாக மூன்று முறை கூடுதல் நேரத்தில் விளையாடியுள்ளது.

8. உலககோப்பை 2018-ல் ஐந்து முறை ஆட்டம் கூடுதல் நேரம் வரை நீண்டது. இதில் நான்கு போட்டிகளில் இங்கிலாந்து அல்லது குரேஷியா இருந்தது. ஸ்பெயின் மற்றும் ரஷ்யா இடையிலான ஆட்டம் மற்றொன்றாகும்.

இங்கிலாந்து சனிக்கிழமையன்று மூன்றாவது/நான்காவது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் மோதுகிறது. ஞாயிற்றுகிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் குரேஷியாவை எதிர்கொள்கிறது ஃபிரான்ஸ்.

https://www.bbc.com/tamil/sport-44804477

Link to comment
Share on other sites

கால்பந்து வெற்றியை வீரர்களுடன் ஆட்டம்போட்டு கொண்டாடிய குரோசிய பெண் அதிபர்

 
அ-அ+

இறுதிப் போட்டிக்கு நுழைந்த சந்தோசத்தில் குரோசிய பெண் அதிபர் வீரர்களுடன் சேர்ந்து ஆட்டம்போட்டு சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார். #WorldCup2018

 
கால்பந்து வெற்றியை வீரர்களுடன் ஆட்டம்போட்டு கொண்டாடிய குரோசிய பெண் அதிபர்
 
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து - குரோசியா அணிகள் பலப்ரீட்சை நடத்தின. இதில் 2-1 என குரோசியா இங்கிலாந்தை வீழ்த்தி பிபா கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியை குரோசியா வீரர்கள் மட்டுமல்ல, குரோசியா நாடே கொண்டாடி வருகிறது.

குரோசியா நாக்அவுட் போட்டிகளை காண அந்நாட்டு பெண் அதிபரான கொலிண்டா கிராபர்-கிட்டாரோவிச் ரஷியா வந்துள்ளார். அவர் மைதானத்தில் அமர்ந்து போட்டியை நேராக கண்டுகளிப்பதுடன் வீரர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார். காலிறுதியில் ரஷியாவை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியபோது, வீரர்கள் மற்றம் பயிற்சியாளர்களை நேரில் சென்று பாராட்டினார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் குரோசியா வெற்றி பெற்றதும், வீரர்களை அறைக்குச் சென்று அவர்களுடன் சந்தோச மிகுதியில் ஆட்டம்போட்டார். நாட்டின் பெண் அதிபர் ஒருவர் வீரர்களுடன் ஆட்டம் போட்ட  வீடியோ வைரலாகி வருகிறது.
 
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/12195616/1176107/Croatia-president-dance-with-team-after-FIFA-World.vpf

Link to comment
Share on other sites

குரோஷியாவின் சாதனை வெற்றி: உலகக் கோப்பை வரலாற்றில் எந்த இடத்தைப் பிடிக்கப் போகிறது?

 

 
croatia_eng_sf1_(37)

 

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குரோஷிய அணி. அந்த அணி முதல்முறையாக இந்தத் தகுதியை அடைந்துள்ளது.

இங்கிலாந்து அணி காலிறுதியில் ஸ்வீடனையும், குரோஷியா போட்டியை நடத்தும் ரஷியாவையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறின. கடந்த 1998-க்கு பின் தற்போது தான் குரோஷியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அப்போது போட்டியை நடத்திய நாடான பிரான்ஸிடம் தோல்வி கண்டது. அதே நேரத்தில் 1966 சாம்பியனான இங்கிலாந்தும் 1990-க்குப் பிறகு தற்போது தான் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் துவக்கம் முதலே தனது தாக்குதல் ஆட்டத்தால் எதிரணிகள் மீது கோல் மழை பொழிந்தது. இந்த ஆட்டத்துக்கு முன்பு அந்த அணி வீரர்கள் மொத்தம் 11 கோல்களை அடித்துள்ளனர். இதில் 8 கோல்கள் திட்டமிட்டு அடிக்கப்பட்டவையாகும். 

குரோஷிய அணியும் முதல் சுற்றில் தோல்வியே காணாமல் அரையிறுதிக்கு முன்னேறியது. மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனாவை 3-0 என வீழ்த்திய பிறகு குரோஷியா அனைவரதும் கவனத்தையும் கவர்ந்து விட்டது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 5-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் மூலமாக அற்புதமான கோலை அடித்தார் இங்கிலாந்தின் டிரிப்பியர். ஆனாலும் முதல் பாதியில் கிடைத்த பல வாய்ப்புகளை இங்கிலாந்து வீரர்கள் வீணடித்தார்கள். 

68-வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தது குரோஷியா. கடைசிவரை இரு அணிகளும் 1-1 என இருந்ததால் கூடுதல் நேரம் தொடங்கப்பட்டது.

அதில் 109-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் மரியோ அட்டகாசமான கோலை அடித்தார். இதனால் குரோஷிய அணி முன்னிலை அடைந்தது. இதன்பிறகு இங்கிலாந்து வீரர்கள் கடும் முயற்சி எடுத்தும் பதில் கோலை அடிக்க முடியாததால் அரையிறுதியில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது குரேஷிய அணி. ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதவுள்ளன. இந்திய நேரம் இரவு 8.30 மணிக்குத் தொடங்கவுள்ளது. அதற்கு முன்பு, மூன்றாவது இடத்துக்கான போட்டி, சனிக்கிழமையன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கவுள்ளது. அதில் இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன.

*

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள பிரான்ஸ் இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் குரோஷிய அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. இதையடுத்து ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியை வென்று 2 முறை சாம்பியன்கள் ஆன ஆர்ஜென்டீனா, உருகுவே அணிகளுடன் பிரான்ஸ் இணையப் போகிறதா, அல்லது உலகக் கோப்பையை வெல்லும் 9-வது அணி என்கிற பெருமையை குரோஷிய அணி அடையவுள்ளதா என்கிற எதிர்பார்ப்பில் உள்ளார்கள் ரசிகர்கள். 

உலகக் கோப்பையை வென்ற அணிகள் 

பிரேஸில் - 1958, 1962, 1970, 1994, 2002 (5)
ஜெர்மனி - 1954, 1974, 1990, 2014 (4)
இத்தாலி - 1934, 1938, 1982, 2006 (4)
ஆர்ஜென்டீனா - 1978, 1986 (2)

உருகுவே - 1930, 1950 (2)
பிரான்ஸ் - 1998 (1)
இங்கிலாந்து - 1966 (1)
ஸ்பெயின் - 2010 (1)

இதுவரை நான்கு அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியும் கோப்பையை வெல்ல முடியாமல் உள்ளன. இந்தப் பட்டியலில் குரோஷியா இணையக்கூடாது என்பதுதான் அதன் ரசிகர்களின் விருப்பம்.

1. நெதர்லாந்து (1974, 1978, 2010)
2. ஹங்கேரி (1938, 1954)
3. செக் குடியரசு (1934, 1962)
4. ஸ்வீடன் (1958)

1974-ல் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முதல்முறையாகத் தகுதி பெற்ற நெதர்லாந்து அணி, பிறகு ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. எனினும், 1978-க்குப் பிறகு முதல்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடிய அணிகள் இரண்டும் (1998 - பிரான்ஸ், 2010 - ஸ்பெயின்)  உலகக் கோப்பையை வென்றுள்ளன. இந்தச் சாதனை குரோஷிய அணியின் வெற்றியிலும் தொடருமா?

croatia_eng_sf1_(38).jpg

http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/12/self-deception-lies-the-secret-behind-croatias-run-to-world-cup-final-2958613.html

Link to comment
Share on other sites

உலகக் கோப்பையில் 'குரோஷியா' பெயர் பொறிக்கப்பட்டால் உருவாகும் சாதனைகள் என்ன?

 

குரோஷியா உலகக் கோப்பையை வென்றால் பல்வேறு வரலாற்று சாதனைகளை படைக்கும்.

உலகக் கோப்பையில் 'குரோஷியா' பெயர் பொறிக்கப்பட்டால் உருவாகும் சாதனைகள் என்ன?
 

லகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முதன்முறையாக குரோஷியா தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா வீழ்த்தியது. இதற்கு முன், 7 முறை இங்கிலாந்துடன் மோதியுள்ள குரோஷிய இரு ஆட்டங்களிலேயே வெற்றி பெற்றிருந்தது. 2009-ம் ஆண்டு உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் 5-1 என்ற கோல் கணக்கிலும் 2008-ல் மற்றொரு உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கிலும் இங்கிலாந்து அணி குரோஷியாவை தோற்கடித்திருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் குரோஷிய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி, அந்த அணியின் உலகக் கோப்பை கனவை சிதைத்துள்ளது. 1966-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு, மறுமுறை இங்கிலாந்து அணியால்  இறுதி ஆட்டத்துக்குள் நுழையவே முடியாத சோகம் தொடர்கிறது. 

குரோஷியா வீரர்கள்

இங்கிலாந்தை மட்டுமல்ல பிரான்ஸை பழிவாங்கவும் குரோஷியாவுக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கே  ஒரு ஃப்ளாஸ்பேக்... 1998- ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குதான் முதன் முதலில் குரோஷிய அணி தகுதி பெற்றது. டேவார் சுகரின் அசத்தல் ஆட்டம் காரணமாக  குரோஷிய அணி அரையிறுதி வரை முன்னேறியது. போட்டியை நடத்திய பிரான்ஸ் அணியை அரையிறுதியில் சந்தித்தது குரோஷியா. அனல் பறந்த இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற, கடைசியில் 3-வது இடத்துடன் குரோஷியா திருப்தி அடைந்தது.

 

 

இந்த உலகக்  கோப்பைத் தொடரில் மீண்டும் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது குரோஷியா. ஜூலை 15-ம் தேதி மாஸ்கோவில் புதிய சாம்பியன் யார் என்று தெரிந்துவிடும். 'பிரான்ஸ் அணியை வீழ்த்தி 1998-ம் ஆண்டு உலகக் கோப்பை தோல்விக்கு பழி தீர்ப்போம். அதற்கான சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது' என்று குரோஷிய அணியின் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிக் சபதமிட்டுள்ளார். அவரது சபதம் நிறைவேறுகிறதா இல்லையா என்று 15-ம் தேதி லுஸ்கினி ஸ்டேடியம் பதில் சொல்லிவிடும். 

 

 

இன்னொரு விஷயம் என்னவென்றால் 1998-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 6 கோல்கள் அடித்து 'தங்கக் காலணி' விருது வென்ற டேவார் சுகர்தான் இப்போது குரோஷிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர். இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை குரோஷியா வீழ்த்தும் பட்சத்தில் டேவார் சுகர் தனிப்பட்ட முறையில் தனக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுவார். 

இதுவெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் குரோஷிய அணி உலகக் கோப்பையை வென்றால் பல வரலாற்றுச் சாதனைகள் படைக்கப்படும். . உலகக் கோப்பை வரலாற்றிலேயே இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய குட்டி நாடு குரோஷியாதான். 1950-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய உருகுவே. நாட்டின் மக்கள் தொகை 27 லட்சம்.  தற்போது குரோஷியாவின் மக்கள் தொகை 40 லட்சமே. ஃபிஃபா தரவரிசையில் குரோஷியா 20-வது இடத்தில் உள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் தரவரிசையில் இவ்வளவு இடங்கள் பின்தங்கியுள்ள அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருப்பதும் இதுவே முதன்முறை. இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ள பிரான்ஸ் அணி  தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ளது. உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடப் போகும் 13-வது அணி என்ற பெருமையையும் குரோஷியா பெற்றுள்ளது. 

உலகக் கோப்பையை வென்றால் உருகுவே, பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் அணிகள் வரிசையில் 9-வதாக குரோஷியா இடம் பிடிக்கும். உலகக் கோப்பையில் குரோஷியா என்ற நாட்டின் பெயர் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டால், 2021-ம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள கான்ஃபெடரேஷன் கோப்பையில் பங்கேற்கவும் அந்நாடு தகுதிபெறும்.

https://www.vikatan.com/news/sports/130670-if-croatia-wins-the-world-cup-what-are-the-records-will-be-made.html

Link to comment
Share on other sites

கோல் அடித்தாலும், அடிக்காவிடிலும் டிராபியை தூக்கிப்பிடிக்க ஆசைப்படுகிறேன்- கிரிஸ்மான்

 
அ-அ+

இறுதிப் போட்டியில் கோல் அடித்தாலும், அடிக்காவிடிலும் உலகக்கோப்பை டிராபியை தூக்கிப் பிடிக்க ஆசைப்படுகிறேன் என்று கிரிஸ்மான் தெரிவித்துள்ளார். #WorldCup2018

 
 
 
 
கோல் அடித்தாலும், அடிக்காவிடிலும் டிராபியை தூக்கிப்பிடிக்க ஆசைப்படுகிறேன்- கிரிஸ்மான்
 
ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை 3-வது மற்றும் 4-வது இடத்திற்கான ஆட்டமும், நாளைமறுநாள் இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - குரோசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பிரான்ஸ் அணியின் ஸ்டிரைக்கர் ஆன கிரிஸ்மான், குரோசியாவிற்கு எதிராக நான் கோல் அடித்தாலும், அடிக்காவிடிலும் உலகக்கோப்பையை தூக்கிப் பிடிக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குறித்து கிரிஸ்மான் கூறுகையில் ‘‘நான் சிறுவனாக இருக்கும்போதே உலகக்கோப்பை கனவு இருந்தது. இளைஞர் அணியில் விளையாடும்போது அனைத்து சிறுவர்களுக்கும் உலகக்கோப்பையில், அதுவும் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்ற கனவு உண்டு. எதிர்பார்ப்பு என்ன என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் கோப்பையை வெல்ல ஆசைப்படுகிறோம். அதற்காக காத்திருக்க முடியாது.

201807132049179029_1_griezmann001-ss._L_styvpf.jpg

குரோசியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் கோல் அடிக்கிறேனா, இல்லையா என்பது பெரிய விஷயம் இல்லை. உலகக்கோப்பை சாம்பியன் டிராபியை தூக்கிப் பிடிக்க ஆசைப்படுகிறேன். இதுதான் எனக்கு பெரிய விஷயம். உலகக்கோப்பையை வெல்ல எங்களுக்கு அதிக வாய்ப்புள்ளது’’ என்றார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/13204918/1176365/I-want-lift-world-cup-trophy-France-forward--griezmann.vpf

Link to comment
Share on other sites

பெல்ஜியம்-−இங்கிலாந்து இன்று களத்தில்

 

 

Untitled-1ssss.jpg

உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் இன்று நடக்கவுள்ள 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம்-−இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர்.

21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து திருவிழா முடிய இன்னும் 2 ஆட்டங்களே எஞ்சியுள்ளன.அதற்கு முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் இன்று 14ம் திகதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.இதில் பெல்ஜியம்-−இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. எந்த அணி 3-வது இடத்தை வெல்லபோகிறது? என்று எதிர்பார்க்கப்படுகிறது.பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் இந்த உலகக்கிண்ணத்தில் மோதுவது இது 2-வது முறையாகும்.

‘லீக்’ ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன. 2002-ல் பிரேசில்- துருக்கி அணிகள் 2 தடவை மோதின.

இந்தப்போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய பெல்ஜியம் அதிர்ஷ்டம் இல்லாமல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. அரை இறுதியில் 0-−1 என்ற கணக்கில் பிரான்சிடம் தோற்றது.

 

 
 

பெல்ஜியம் அணி 1986-ல் 4-வது இடத்தை பிடித்தே சிறந்த நிலையாக இருக்கிறது. தற்போது அதில் இருந்து முன்னேற்றம் காண இங்கிலாந்தை வீழ்த்தி 3-வது இடத்தை பிடிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

பெல்ஜியம் அணியில் ஈடன் ஹசாட், லுகாகு, டுபுரு யன், பெலானி போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.1966-ம் ஆண்டு சம்பியான அந்த அணி இதற்கு முன்பு 1990-ல் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இத்தாலியிடம் தோற்று இருந்தது. தற்போது அதே மாதிரி நடந்துவிடாமல் இருக்க வெற்றி பெற போராடும். இங்கிலாந்து அணியில் ஹரிகேன், லிங்கார்ட், ஸ்டெர்லிங் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் 21 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 15-ல், பெல்ஜியம் 1-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் ‘டிரா’ ஆனது.இங்கிலாந்து அணி அரை இறுதியில் குரோஷியாவிடம் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

http://www.thinakaran.lk/2018/07/14/விளையாட்டு/25367/பெல்ஜியம்-−இங்கிலாந்து-இன்று-களத்தில்

Link to comment
Share on other sites

‘சிறுவயதில் டி.வி.யில் கண்டுகளித்தேன்’; பிரான்ஸுக்கு எதிரான ஆட்டம் சிறப்பு வாய்ந்தது: மனம் திறக்கும் குரோஷியா வீரர் இவான் பெரிசிச்

 

 
13chpmuIvan%20Perisic

இவான் பெரிசிச்   -  Tim Goode/PA Wire/dpa

1998-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதியில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை சிறுவனாக தொலைக்காட்சியில் கண்டுகளித்த இவான் பெரிசிச், இன்று பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் குரோஷியாவுக்காக களமிறங்குகிறார்.

 

பிரான்ஸ் நாட்டில் கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் யூகோஸ்லோவியாவில் இருந்து பிரிந்த பின்னர் சுதந்திர நாடாக குரோஷியா அணி முதன்முறையாக அறிமுகமானது. அந்தத் தொடரில் அரை இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தது. இந்தத் தொடரை தற்போது குரோஷியா அணிக்காக விளையாடி வரும் முன்னணி வீரரான இவான் பெரிசிச், தொலைக்காட்சியில் ரசிகராக கண்டுகளித்தார். அந்த ஆட்டத்தில் குரோஷியா அணி 1-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. பெரிசிச்சால் அப்போது கண்ணீர் மட்டுமே சிந்த முடிந்தது. பதின்ம பருவத்தில் இருந்த அவர், குரோஷியாவில் உள்ள ஹெஜ்டக் கிளப் அணிக்காக விளையாடி வந்தார். அதன் பின்னர் குடும்ப பிரச்சினைகள் காரணமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள சோச்சாக்ஸ் கிளப் அணிக்கு தாவிய நிலையில் சுமார் 2 ஆண்டுகள் அங்கேயே விளையாடினார்.

இதன் பின்னர் 2009-ம் ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள புருக்கே கிளப்புக்காவும், அதைத் தொடர்ந்து ஜெர்மனியைச் சேர்ந்த போர்ஷியா டார்ட்மண்ட் மற்றும் வொல்ப்ஸ்பர்க் கிளப் அணிகளுக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பெல்ஜியன் லீக்கில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்த பெரிசிச், பன்டஸ்லிகா சாம்பியன் மற்றும் ஜெர்மன் கோப்பையை வென்றதிலும் முக்கிய பங்கு வகித்தார். விங்கரும், தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் நடுகள வீரருமான பெரிசிச் 2015-ம் ஆண்டு புகழ்பெற்ற இன்டர் மிலன் கிளப் அணியில் இணைந்தார். 2011-ம் ஆண்டு குரோஷியா அணிக்காக களமிறங்கிய பெரிசிச் இதுவரை 72 ஆட்டங்களில் விளையாடி 20 கோல்கள் அடித்துள்ளார்.

தற்போது குரோஷியா அணியில் மிக முக்கியமான வீராக உருவெடுத்துள்ள பெரிசிச், ரஷ்ய உலக கக் கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்திருந்தார். அவர், அடித்த கோலும் அதன் பின்னர் குரோஷியா அணியின் ஒட்டுமொத்த எழுச்சியும்தான், வரலாற்றில் முதன்முறையாக அந்த அணியை இறுதிப் போட்டியில் கால்பதிக்க வைத்துள்ளது. இவான் பெரிசிச் கூறும்போது, “பிரான்ஸ் அணிக்கு எதிராக மோதுவதில் என்னை விட அதிக மகிழ்ச்சி வேறு யாருக்கும் இருக்காது. நான் தாயிடம் பேசினேன். அப்போது அவர், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியுடன் குரோஷியா மோதுவது போன்று கனவு கண்டதாக தெரிவித்தார். தற்போது அது உண்மையாகி உள்ளது” என்றார்.

1998-ம் ஆண்டு உலகக்கோப்பையில் 3-வது இடம் பிடித்த குரோஷியா, அதன் பின்னர் பங்கேற்ற 3 தொடர்களிலும் சோபிக்கவில்லை. ஆனால் இம்முறை பெரிசிச், லுகா மோட்ரிச் உள்ளிட்டோரை உள்ளடக்கிய குரோஷியா அணி ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ளது. நாக் அவுட் மற்றும் கால் இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் வரையிலும் அரை இறுதியில் கூடுதல் நேரம் வரையும் சென்று வெற்றியை வசப்படுத்தியது.

இந்த 3 ஆட்டங்களிலும் குரோஷியா பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து வெற்றி பெற்றதுதான் கூடுதல் சிறப்பம்சம். இதுகுறித்து பெரிசிச் கூறும்போது, “குரோஷியா போன்ற ஒரு சிறிய நாட்டுக்கு அரை இறுதி ஆட்டம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிந்திருந்தோம். முந்தைய ஆட்டங்களில் பின்தங்கிய நிலையில் இருந்து எப்படி மீண்டு வந்தோம் என்பதை மீண்டும் காட்டியுள்ளோம்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article24417393.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.