Jump to content

உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்


Recommended Posts

மாரடோனாவையே கலங்க வெச்சிட்டிங்களே பாவிகளா... அர்ஜென்டினா தோல்வி ஏன்?!  #WorldCup #ARGCRO

 

``மெஸ்ஸி அசாதாரணமான வீரர். ஆனால், கால்பந்தில் மற்றவர்களின் உதவியும் தேவை. எல்லாவற்றையும் தனி ஒருவனாகச் செய்ய முடியாது’’ என்றார் குரோஷியாவின் லூகா மோட்ரிச். இது அப்பட்டமான உண்மை.

மாரடோனாவையே கலங்க வெச்சிட்டிங்களே பாவிகளா... அர்ஜென்டினா தோல்வி ஏன்?!  #WorldCup #ARGCRO
 

90-வது நிமிடத்தை நெருங்க நெருங்க அர்ஜென்டினா ரசிகர்களின் முகம் இறுக்கமாகி விட்டது. டெக்னிக்கல் லைனில் நிற்பதற்குப் பதிலாகப் பயிற்சியாளர் சாம்போலி பெஞ்ச் விட்டத்தில் கைவைத்தபடி விரக்தியாக நிற்கிறார். ரெஃப்ரி விசில் அடித்து முடித்ததும் தலையைத் தொங்க போட்டு தரையைக் கூர்ந்து பார்க்கிறார் மெஸ்ஸி. இடுப்பில் கைவைத்து விட்டேத்தியாக நிற்கிறார்கள் அர்ஜென்டினா வீரர்கள். #ARGCRO

#ARGCRO

மூன்றாவது கோலை பார்க்கச் சகிக்காது தேம்பி அழும் தன் மகனை மடியில் கிடத்தி ஆறுதல் படுத்துகிறார் ஒரு தந்தை. பெஞ்ச்சில் இருந்த சப்ஸ்டிட்யூட் பிளேயர்கள் முகத்தில் ஏகத்துக்கும் கடுப்பு. ஸ்டேடியம் எங்கும் குரோஷியாவின் வெற்றிச் சத்தம். மாரடோனா காலத்து அர்ஜென்டினா ரசிகர்கள் டிவியை ஆஃப் செய்துவிட்டு, வாட்ஸ் அப் பக்கம் நகர்ந்து விட்டனர். ட்விட்டரிலும் அதே பேச்சு. ஃபேஸ்புக்கிலும் அதே கிண்டல்.

 

 

ஐஸ்லாந்துக்கு எதிரான முதல் போட்டியை டிரா செய்து விட்டதால், குரோஷியாவுடன் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் நீஷ்னி நவ்கராட் ஸ்டேடியம் வந்தது அர்ஜென்டினா அணி. ஜாம்பவான் மாரடோனாவும் டிட் டாப்பாக அங்கு வந்திருந்தார். அதுவும் தன் பிரத்யேக ஸ்டைலில்... புகையிலை பிடிக்க தடை செய்யப்பட்ட போர்டுக்குக் கீழே, புகைவிட்டபடி அவர் நின்ற புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானாது. 

`தட் கெத்து மொமன்ட்கள்’ என அவரது ரசிகர்கள் சில்லறையைச் சிதறவிட்டனர். அவரும், தன் சிஷ்யப்பிள்ளை இந்தமுறை மேஜிக் நிகழ்த்துவார் எனக் காத்திருந்தார். அவர் நின்றிருந்த ஸ்டேண்டை நோக்கி கேமராக்கள் ஜூம் செய்தன. அர்ஜென்டினா ஜெர்ஸி அணிந்திருந்த அவர் கையில் வைத்திருந்த ஜெர்ஸியின் முன்புறம் இருந்த வாசகம் `மெஸ்ஸி  10’. அதற்குப் பின்புறம் "I love you, but I'm a mess" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்புவரை மாரடோனாவின் ஒவ்வோர் அசைவும் அர்ஜென்டினா ரசிகர்களுக்கு விருந்தளித்தது.

Diego Maradona  #ARGCRO

ஆனால், ஆட்டம் தொடங்கியதும் உற்சாகப்படுத்த வேண்டிய அர்ஜென்டினா வீரர்கள், அவரை ஏகத்துக்கும் டென்ஷனாக்கினர். கோல்கீ்ப்பர் வில்லி கேபயாரோ (Willy Caballero) ரைட் பேக்குக்கு பாஸ் செய்கிறேன் என  ஒரு கேவலமானா பாஸ் கொடுத்தார் ... அதை ஆன்ட்டி ரெபிச் அட்டகாசமாக கோல் அடிக்கிறார். `என்ன இது’ என ஆச்சர்யத்தில் மாரடோனா எழுந்து நின்று இரு கைகளையும் பக்கவாட்டில் விரித்து விரக்தியை வெளிப்படுத்துகிறார். 80-வது நிமிடம். லூகா மோட்ரிச் 18 யார் டு பாக்ஸுக்கு வெளியே இருந்து அட்டகாசமான கிக் அடிக்கிறார். அட இதுவும் கோல்...! 

அர்ஜென்டினா கோல் அடிக்க வேண்டிய நேரத்தில் குரோஷியா கோல் அடிக்கிறது. மாரடோனா முகத்தில் ஈயாடவில்லை. பத்து நிமிடத்தில் இரண்டு கோல்கள் அடித்தால் டிரா... மூன்று கோல்கள் அடித்தால் மட்டுமே வெற்றி... ஒரு கோலுக்கே வழியில்லை. அப்புறம் எங்கிட்டு மூன்று கோல்கள்... மாரடோனா நம்பிக்கை இழக்கிறார். மெல்ல தோல்வியின் ரேகை அவர் முகத்தில் படர்கிறது. நடப்பதை அவர் மனம் ஏற்க மறுக்கிறது. 

இஞ்சுரி டைமில் ரகிடிச் தன் பங்குக்கு ஒரு கோல் அடித்து விட்டார். ரிசல்ட் 3-0. தேம்பி அழுகிறார்கள் அர்ஜென்டினா ரசிகர்கள். அர்ஜென்டினா தன் கண் முன்னே மாபெரும் தோல்வியைச் சந்திப்பதை, காணச் சகியாது முகத்தை மறைத்து, தலைமேல் கைவைத்துக் கதறுகிறார் மாரடோனா. கண்ணீர் மட்டும்தான் வரவில்லை. ரசிகர்களை நோக்கிப் பறக்கும் முத்தம் கொடுத்து, டீ சர்ட்டை சுழற்றி ஆர்ப்பட்டமாக என்ட்ரி கொடுத்தார், 1986-ல் தனி ஆளாக அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த அந்த ஜாம்பவான். ஆனால், அர்ஜென்டினாவின் ஆட்டம் அவரைக் கலங்கவைத்துவிட்டது. கல்லு மாதிரி நின்ன மனுஷன் கலங்கி நிற்பதை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இந்த உலகக் கோப்பையின் சோக சித்திரங்களில் அதுவும் ஒன்று. 

அர்ஜென்டினா தோல்வி ஏன்?

Coach Sampaoli   #ARGCROகடந்த முறை ஃபைனலில் விளையாடிய அர்ஜென்டினா இந்தமுறை, குரூப் சுற்றுடன் வெளியேறப் போகிறது. 44 ஆண்டுகளுக்குப் பின் அர்ஜென்டினா முதன்முறையாக உலகக் கோப்பையின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெறத் தவறியிருக்கிறது. 1958-ல் செக்கோஸ்லோவியாவுக்கு எதிராக 1-6 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தபின், உலகக் கோப்பை குரூப் சுற்றில் அர்ஜென்டினா அடைந்த மிக மோசமான தோல்வி இது. 

முதன்முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குப் போக அடுத்தவர் தயவை எதிர்நோக்கி இருக்கிறது. இது இரண்டு முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு அவமானம். ஆனால், குரோஷியா 1998-க்குப் பின் முதன்முறையாக உலகக் கோப்பைப் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிபெற்றுள்ளது. அர்ஜென்டினாவின் இந்தத் தோல்விக்குக் காரணமான பயிற்சியாளர் சாம்போலி, `இதை அவமானமாகப் பார்க்கவில்லை. தோல்வி வருத்தமளிக்கிறது' என நழுவுகிறார்.

அர்ஜென்டினாவின் இந்தத் தோல்விக்கு மிக முக்கிய காரணம் சாம்போலி. 3-4-2-1 ஃபார்மேஷனிலிருந்து வீரர்கள் தேர்வு வரை, சப்ஸ்டிட்யூட் பிளேயர்களை இறக்கியது வரை, மெஸ்ஸியைச் சுற்றியே வியூகங்கள் அமைத்தது வரை, டஜன் கணக்கில் தவறுகள் செய்தார் சாம்போலி. டி பாலாவை ஏன் பிளேயிங் லெவனில் இறக்கவில்லை. டி மரியாவை ஏன் பெஞ்சில் உட்கார வைத்தார்கள், இகார்டியை அணியில் தேர்வு செய்யாதது ஏன்? முதல் போட்டிக்குப் பின் ஏன் பாடம் கற்கவில்லை; வியூகங்களை மாற்றவில்லை? மிட்ஃபீல்டில் ஏன் பந்து நிற்கவே இல்லை, ஆஃப் சைட் அப்பீல் கேட்டு மூன்றாவது கோலை கோட்டை விட்டது ஏன்? முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்காமல் பார்த்துக்கொண்டவர்கள், அடுத்த 45 நிமிடத்தில் மூன்று கோல்களை கன்சீட் செய்தது ஏன் என அர்ஜென்டினா ரசிகர்கள் மனதில் ஏராளமான கேள்விகள். 

தோல்விக்குப் பின், பயிற்சியாளர் சாம்போலி பதவி விலக வேண்டும், அவருக்குப் பதிலாக நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் ஜார்ஜ் புருச்சுகா பொறுப்பேற்க வேண்டும் என அர்ஜென்டினா வீரர்கள் கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. நல்ல முடிவு. 

மெஸ்ஸிக்கு என்னாச்சு?!

90 நிமிடத்தில் மொத்தம் 45 முறை மட்டுமே மெஸ்ஸி பந்தைத் தொட்டார். கோல் அல்ல கோல்கள் தேவை என்ற கடைசி 20 நிமிடத்தில் அவர் ஆறுமுறை மட்டுமே பந்தைத் தொட்டார். 64-வது நிமிடத்தில்தான் ஷாட் ஆன் டார்கெட் செய்தார். 6 யார்டு பாக்ஸுக்கு உள்ளே போஸ்ட்டின் ரைட் கார்னரில் மெஸ்ஸிக்கு கோல் அடிக்கக் கிடைத்த வாய்ப்பையும் ரகிடிச் தடுத்து விட்டார். 

போட்டி தொடங்குவதற்கு முன், தேசிய கீதம் பாடும்போதே மெஸ்ஸியின் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. அப்போதிருந்தே அவர் நம்பிக்கையில்லாமல்தான் இருந்தார். களத்திலும் ஆக்ரோஷம் இல்லை. எப்படியும் வென்றே தீர வேண்டும் என்ற தாகம் இல்லை. ஐஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி ஜாக்கிங் செய்து கொண்டும், நடந்து கொண்டும்தான் இருந்தார் எனப் புள்ளி விவரத்துடன் செய்தி வெளியானது. நேற்றும் அவர் அப்படித்தான் இருந்தார். 

#ARGCRO

2016 கோபா அமெரிக்கா ஃபைனலில் அர்ஜென்டினா தோல்வியடைந்த பின் தேசிய அணியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார் மெஸ்ஸி. அர்ஜென்டினா கால்பந்து நிர்வாகம் அவரை வம்படியாக மீண்டும் அணிக்குள் இழுத்துப் போட்டது. இந்தமுறையாவது உலகக் கோப்பை வாங்கிவிட வேண்டும் என்ற நினைப்பில் ரஷ்யா வந்தவருக்கு, எதுவுமே சாதகமாக அமையவில்லை. பார்சிலோனாவில் மெஸ்ஸிக்கு பாஸ் போட்டது போல, அட்டகாசமான வீரர்கள் அர்ஜென்டினாவில் அவருக்கு அமையவில்லை. முழுக்க முழுக்க மெஸ்ஸியை மட்டுமே சார்ந்திருந்தது அர்ஜென்டினா. இது மெஸ்ஸிக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த அர்ஜென்டினா அணிக்கும் பிரஷர் கொடுத்தது. அதற்கான பலனை அனுபவிக்கிறது அர்ஜென்டினா.  

Lionel Messi  #ARGCRO

``மெஸ்ஸி அசாதாரணமான வீரர். ஆனால், கால்பந்தில் மற்றவர்களின் உதவியும் தேவை. எல்லாவற்றையும் தனி ஒருவனாகச் செய்ய முடியாது’’ என்றார் குரோஷியாவின் லூகா மோட்ரிச். இது அப்பட்டமான உண்மை. அர்ஜென்டினா மட்டுமல்ல, பிரேசில், போர்ச்சுகல் என ஸ்டார் பிளேயர்களை மட்டுமே நம்பியிருக்கும் அணிகள் சுதாரிக்க வேண்டிய நேரமிது! 

https://www.vikatan.com/news/sports/128503-maradona-upset-with-argentinas-world-cup-performance.html

Link to comment
Share on other sites

  • Replies 262
  • Created
  • Last Reply

உலகக்கோப்பை கால்பந்து- கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி

 
அ-அ+

பல முயற்சிகளுக்குப் பிறகு கவுட்டினோ, நெய்மரின் கடைசி நிமிட கோலால் கோஸ்டா ரிகாவை 2-0 என வீழ்த்தியது பிரேசில். #WorldCup2018 #BRACRC

 
 
 
 
உலகக்கோப்பை கால்பந்து- கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி
 
உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் - கோஸ்டா ரிகா அணிகள் மோதின. முதல் ஆட்டத்தை டிரா செய்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையுடன் பிரேசில் களம் இறங்கியது.

ஆட்டம் தொடங்கியது முதலே பிரேசில் அணியின் நெய்மர், ஜீசஸ், கவுட்டினோ கோஸ்டா ரிகாவின் கோல் எல்லையை நோக்கி பந்தை கொண்டு சென்றே இருந்தனர். ஆனால் அதிர்ஷ்டமின்மை காரணமாக ஒரு பந்தும் கோல் கம்பத்திற்குள் செல்லவில்லை. அதிர்ஷ்டமின்மை மட்டும் காரணமல்ல. கோஸ்டா ரிகா கோல்கீப்பர் நவாஸும் ஒரு காரணம். பிரேசில் அணியின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார். இதனால் 90 நிமிடம் வரை பிரேசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

201806221948113440_1_coutinho-s._L_styvpf.jpg

90 நிமிடம் முடிந்தபிறகு காயம், ஆட்டம் நேரம் நிறுத்தத்தை கணக்கில் கொண்டு 7 நிமிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டது. இதில் பிரேசில் அணிக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. முதல் நிமிடத்திலேயே ஃபிர்மினோ தலையால் முட்டி பந்தை கேப்ரியல் ஜீசஸிடம் கொடுத்தார். அந்த பந்தை சரியாக ஜீசஸ் காலில் படாமல் நழுவிச் சென்றது. பந்து சென்றதும் அருகில் நின்றிருந்த பிலிப்பே கவுட்டினோ வேகமாக ஓடிவந்து பந்தை கோல் நோக்கி அடித்தார். பந்து நவாஸை ஏமாற்றி அவரது கால் இடைக்குள்ளோடு சென்று கோல் ஆனது. இதனால் பிரேசில் 1-0 என முன்னிலைப் பெற்றது.

201806221948113440_2_neymar001-12s._L_styvpf.jpg

அதன்பின் பிரேசில் சற்று நிம்மதி அடைந்து, தாக்குதல் ஆட்டத்தை கைவிட்டது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் கடைசி நொடியில் டக்ளஸ் வலது பக்கம் கோல் எல்லைக்குள் வைத்து நெய்மரிடம் பந்தை பாஸ் செய்தார். அதை நெய்மர் எளிதாக கோலாக்கினார். இதனால் பிரேசில் 2-0 என வெற்றி பெற்றது.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/22194811/1172046/World-Cup-2018--Brazil-beats-costa-rica-by-two-goals.vpf

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை கால்பந்து - நைஜீரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வென்றது

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நைஜீரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. #WorldCup2018 #NIGICE

 
உலகக்கோப்பை கால்பந்து - நைஜீரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வென்றது
 
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு டி பிரிவில் இடம் பிடித்துள்ள நைஜீரியா மற்றும் ஐஸ்லாந்து அணிகள் மோதின.
 
போட்டி தொடங்கியதில் இருந்து நைஜீரியா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐஸ்லாந்து அணியினரின் ஆட்டம் அமைந்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
 
201806222245439679_1_nige-3._L_styvpf.jpg
 
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 49-வது நிமிடத்தில் நைஜீரியா அணியின் அகமது மூசா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
 
தொடர்ந்து, ஆட்டத்தின் 75-வது நிமிடத்திலும் அகமது மூசா மற்றொரு கோல் அடித்தார். இதனால் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. நைஜீரியா அணியின் ஆட்டத்துக்கு ஐஸ்லாந்து அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை.
 
இறுதியில், ஆட்டத்தின் முடிவில் நைஜீரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/22224544/1172067/Nigera-beat-Iceland-20-in-Group-D-match.vpf

Link to comment
Share on other sites

2018 உலகக்கோப்பை கால்பந்து :ரஷ்யாவிற்கு சைக்கிளில் சென்ற தென் இந்தியர்

 
உலகக் கோப்பை கால்பந்துபடத்தின் காப்புரிமைCLIFIN FRANCIS

தென் இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் க்ளிஃபின் ஃப்ரான்சிஸ். ஒரு நாள் வீட்டில் அமர்ந்திருந்த க்ளிஃபினிடம், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு நீ போகவில்லையா என்று அவரது நண்பர் கேட்டுள்ளார்.

உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவை பார்க்க ரஷ்யாவிற்கு போனாலும் போவேன் என்று கூறியுள்ளார் க்ளிஃபின்.

இது ஆகஸ்டில் நடந்தது. ஆனால், கேரளாவில் இருந்து ரஷ்யா செல்ல விமான டிக்கெட் வாங்க அதிக செலவாகும். பகுதி நேரத்தில் கணித பாடம் எடுக்கும் அவர், நாள் ஒன்றுக்கு 40 டாலர்கள் ஊதியம் பெறுகிறார்.

"விமானத்தில் ரஷ்யாவிற்கு சென்று, அங்கு ஒரு மாதம் தங்கும் அளவிற்கு என்னிடம் போதிய பணம் இருக்காது. எப்படி மலிவாக அங்கு செல்வது என்று நானே என்னை கேட்டுக் கொண்டபோது, சைக்கிள்தான் அதற்கு ஒரே வழி என்று தோன்றியது."

அவரது நண்பர்கள் முதலில் நம்பவில்லை. ஆனால், சைக்கிளில் ரஷ்யா செல்ல மனதளவில் தயாராகியிருந்தார் க்ளிஃபின்.

உலகக் கோப்பை கால்பந்துபடத்தின் காப்புரிமைCLIFIN FRANCIS

பிப்ரவரி 23ஆம் தேதியன்று, தனது பயணத்தை தொடங்கிய க்ளிஃபின், விமானம் மூலம் துபாய் சென்று, அங்கிருந்து படகு வழியாக இரான் சென்றார். இரானில் இருந்து மாஸ்கோவுக்கு 4,200 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம்.

அவருக்கு இறுதியான பரிசு, உலகிலேயே சிறந்த கால்பந்து வீரர் என்று கூறப்படும் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸியை பார்க்க கிடைக்கப்பெறும் வாய்ப்பு.

"எனக்கு சைக்ளிங் என்றால் மிகவும் பிடிக்கும். மற்றும் கால்பந்து என்றால் வெறி கொண்டு பார்ப்பேன்" என்று பிபிசியிடம் கூறுகிறார் க்ளிஃபின்.

முதலில் பாகிஸ்தான் வழியாக பயணம் செய்ய திட்டமிட்டார் க்ளிஃபின். இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த பதற்றம் காரணமாக அந்த திட்டத்தை அவர் கைவிட்டார்.

கால்பந்து மற்றும் படங்கள்

"என் திட்டத்தை மாற்றி அமைத்ததினால் எனக்கு அதிக செலவுகள் ஆனது. என் சைக்கிளை துபாய்க்கு எடுத்து செல்ல இயலவில்லை. இதனால் அங்கு 700 டாலர்கள் செலவு செய்து புதிய சைக்கிள் ஒன்றை வாங்கினேன். அதிக தூர பயணங்களுக்கு அது உகந்தது இல்லை என்றாலும், அதைதான் என்னால் வாங்க முடிந்தது," என்று அவர் தெரிவித்தார்.

உலகக் கோப்பை கால்பந்துபடத்தின் காப்புரிமைCLIFIN FRANCIS

மார்ச் 11ஆம் தேதி இரான் நாட்டிற்கு சென்றடைந்தார் க்ளிஃபின்.

"உலகில் மிக அழகான நாடு அது. மக்கள் அவ்வளவு அன்பாக என்னை வரவேற்றனர். 45 நாட்கள் இரானில் இருந்தேன். ஆனால், இரண்டே நாட்கள்தான் விடுதியில் தங்கியிருந்தேன்" என்று கூறுகிறார் அவர்.

நாள் ஒன்று 10 டாலர்கள் மட்டுமே செலவு செய்யும் அளவிற்கு க்ளிஃபினிடம் பணம் இருந்தது. ஆனால், இரானில் மக்கள் பலரும் தங்கள் வீடுகளுக்கு அழைத்து தங்க வைத்து, உணவு அளித்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

"இரான் குறித்த என் பார்வை மாறிவிட்டது. உலக அரசியலை அடிப்படையாக வைத்து ஒரு நாடு இப்படிதான் என்று முடிவெடுக்கக்கூடாது" என்று கூறுகிறார் அவர்.

வியக்கத்தகுந்த இயற்கை காட்சிளை நினைத்து பார்க்கிறார் க்ளிஃபின்.

உலகக் கோப்பை கால்பந்துபடத்தின் காப்புரிமைCLIFIN FRANCIS

இரான் நாட்டில் உள்ள அழகான நிலங்களையும் கிராமங்களையும் பார்த்தபோது, சைக்ளிங் செய்தது அவ்வளவு கடினமாக இல்லை. நிச்சயம் அங்கு மீண்டும் ஒரு நாள் திரும்பிப் போகப் போவதாக அவர் கூறுகிறார்.

"ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் இரானுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு பாலிவுட் படங்கள் மிகவும் பிடித்திருக்கிறது. பல இடங்களில் அதை பற்றி பேசி கலந்துரையாட முடிந்தது. கால்பந்து விளையாட்டும், படங்களும் உலகில் உள்ள அனைவரையும் இணைக்கிறது என்பது உண்மையே" என்று க்ளிஃபின் தெரிவித்தார்.

சைக்ளிங்கால் மெலிந்துவிட்டேன்

இரானுக்கு அடுத்து அவர் சென்றது அசெர்பைஜான். கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவிற்கு இடையில் உள்ள நாடு இது.

அங்கு எல்லையில் இருந்த காவல்துறையினர், க்ளிஃபினின் ஆவணங்களை சரிபார்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில், தொடர்ந்து சைக்ளிங் செய்ததில் அதிக எடையை அவர் இழந்திருந்தார்.

உலகக் கோப்பை கால்பந்துபடத்தின் காப்புரிமைCLIFIN FRANCIS

"எனது ஆவணங்களில் இருக்கும் புகைப்படத்திற்கும், நேரில் இருந்த எனக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. எனது தகவல்களை சரிபார்க்க எட்டு மணி நேரத்திற்கு மேலானது, ஆனால் என்னிடம் அவர்கள் நன்றாக நடந்து கொண்டனர்" என்று க்ளிஃபின் தெரிவித்தார்.

அசெர்பைஜானில் ஹோட்டலில் தங்க போதிய பணம் இல்லாததால் பெரும்பாலும் ஆங்காங்கே இருந்த பூங்காக்களில் கூடாரம் அமைத்து அவர் தங்கினார்.

யாரும் இல்லாத இடத்தில் சிக்கிய க்ளிஃபின்

ஜார்ஜியா நாட்டை சென்றடைந்த க்ளிஃபினுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.

உலகக் கோப்பை கால்பந்துபடத்தின் காப்புரிமைCLIFIN FRANCIS

"என்னிடம் எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தது. அசெர்பைஜனக்கு என்னிடம் சிங்கிள் என்ட்ரி விசா இருந்ததினால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது" என்கிறார் அவர்.

இதனால் ஜார்ஜியா மற்றும் அசெர்பைஜான் இடையே மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு நாள் சிக்கியிருந்ததாக க்ளிஃபின் கூறுகிறார்.

மீண்டும் வேறொரு வழியை கண்டுபிடித்து ரஷ்யாவின் டஜெஸ்தான் எல்லையை அவர் அடைந்தார்.

மொழி ஒரு பெரும் பிரச்சினையாக இருந்ததாக க்ளிஃபின் குறிப்பிடுகிறார்.

ஒரு இந்தியர் சைக்கிளில் வருவதை அவரகள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

உலகக் கோப்பை கால்பந்துபடத்தின் காப்புரிமைREUTERS

டாம்பாவ் வரை சென்ற க்ளிஃபின், அங்கிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாஸ்கோவிற்கு ஜூன் 26ஆம் தேதிக்குள் செல்ல வேண்டும்.

அன்று நடைபெற உள்ள ஃபராண்ஸ் மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகளை மட்டும்தான் அவரால் பெற முடிந்தது.

"ஆனால் என் ஆதரவு அர்ஜென்டினாவுக்குதான். எனக்கு மிகவும் பிடித்தவர் லியோனல் மெஸ்ஸி. அவரை கடவுள் போல் நான் வழிபடுவேன். அவரை பார்த்து, அவரிடம் என் சைக்கிளில் கையெழுத்து வாங்க வேண்டும் என்பது என் கனவு" என்று கூறுகிறார் க்ளிஃபின்.

தனது இந்த பயணம், கால்பந்து மற்றும் உடல்நலம் ஆகிய இரண்டையும் மக்களிடத்தில் ஊக்குவிக்கும் என்று க்ளிஃபின் ஃப்ராண்சிஸ் நம்புகிறார்.

"உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், ஒரு நாள் இந்தியா விளையாடுவதை நான் பார்க்கவேண்டும். இந்தியாவில் பல குழந்தைகள் கால்பந்து விளையாடுவதை தேர்ந்தெடுத்தால்தான் அது சாத்தியமாகும்" என்று அவர் தெரிவித்தார்.

உலகக் கோப்பை கால்பந்துபடத்தின் காப்புரிமைCLIFIN FRANCIS

என் கதையை படித்தபிறகு பலரும், சைக்ளிங் செய்வதை பழக்கமாக்கிக் கொள்வர் என்றும் தாம் நம்புவதாக கூறினார்.

"என் பயணம், ஒரு சிறுவரையாவது கால்பந்து விளையாட ஊக்குவிக்கும் என்றால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்" என்று க்ளிஃபின் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/india-44559292

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை கால்பந்து - பரபரப்பான ஆட்டத்தில் செர்பியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து

 
அ-அ+

உலக கோப்பை கால்பந்து தொடரின் இ பிரிவில் நடந்த போட்டியின் இறுதி கட்டத்தில் கோல் அடித்து 2 - 1 என்ற கோல் கணக்கில் செர்பிய அணியை சுவிட்சர்லாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #WorldCup2018 #SWISER

 
 
உலகக்கோப்பை கால்பந்து - பரபரப்பான ஆட்டத்தில் செர்பியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து
 
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இ பிரிவில் இடம் பிடித்துள்ள செர்பியா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.
 
போட்டி தொடங்கிய 5-வது நிமிடத்தில் செர்பிய அணியின் அலெக்சாண்டர் மிட்ரோவிக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
 
அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் செர்பிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
 
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அந்த அணியின் கிரானிட் சாகா 52-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்ற சமநிலைக்கு கொண்டு வந்தார்.
 
இதையடுத்து, ஆட்டம் முடியும் நிலையில் பரபரப்பான 90-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் செர்டான் ஷாகிரி ஒரு கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
 
இதைத்தொடர்ந்து கூடுதலா கொடுத்த 6 நிமிடங்களில் செர்பிய அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், செர்பிய அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் பெற்றது.

 

 

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/23015001/1172076/Switzerland-beat-Serbia-21-in-Group-E-match.vpf

Link to comment
Share on other sites

90 நிமிடக் கடும் போராட்டம்: கோஸ்டாரிகாவை 2-0 என வெளியேற்றிய பிரேசில்

 

 
neymar

2வது கோலை அடித்த மகிழ்ச்சியில் பிரேசிலின் நெய்மர்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

உலகக்கோப்பைக் கால்பந்தில் இன்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முழு நேர ஆட்டத்திலும் போராடி கோல் அடிக்க முடியாமல் கடைசியில் கூடுதல் நேரத்தில் கூட்டின்ஹோ, நெய்மர் ஆகியோர் அடித்த கோல்களினால் 2-0 என்று கோஸ்டாரிகாவை வீழ்த்தி இந்த உலகக்கோப்பையில் முதல் வெற்றியை ஸ்டைலாகப் பதிவு செய்தது பிரேசில்.

சுவிட்ஸர்லாந்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய சுவிஸ் கோலினால் ட்ரா ஆனதையடுத்து இந்தப் போட்டியில் பிரேசில் வெற்றி பெற்றேயாக வேண்டுமென்ற நிலை இருந்தது, ஆனால் கோஸ்டாரிகா தானும் கோல் அடிக்காமல் பிரேசிலையும் கோலடிக்க விடாமல் 90 நிமிடங்கள் போராடி அலைக்கழித்தது. ஆனால் இரண்டு கோல்களினால் வெற்றி மூலம் பிரேசில் பிரிவு ஈ-இயில் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கோஸ்டாரிகா தன் முதல் போட்டியில் 1-0 என்று செர்பியாவின் அபார கோலினால் இழந்ததையடுத்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

   
 

முதல் பாதியில் பிரேசில் பெருமளவு பந்தை தங்கள் வசமே வைத்திருந்தது, கோஸ்டாரிக்கா எல்லைக்குள் அடிக்கடி ஊடுருவி அச்சுறுத்தியது ஆனால் கோல் வரவில்லை. 26 நிமிடங்கள் கழித்து கேப்ரியல் ஜீஸஸ் வலைக்குள் அடித்த ஷாட் ஆஃப் சைடு என்று மறுக்கப்பட்டதால் கோல் இல்லை.

கூட்டின்ஹோ, மார்செலோ ஆகியோர் நீண்ட தூரத்திலிருந்து செய்த கோல் முயற்சிகளும் இலக்குத் தவறியது. கோஸ்டாரிக்காவின் செல்சோ போர்ஹேசுக்கும் 8 அடியிலிருந்து ஒரு கோல் வாய்ப்புக் கிடைத்தது, ஆனால் வைடாக அடித்து வாய்ப்பைத் தவறவிட்டார், இவர் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்திருக்கலாம்.

இரு அணிகளுக்கும் 2ம் பாதியில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் மிகவும் ஃபவுல்களாகச் சென்ற ஆட்டத்தில் ஸ்பாட் கிக் கொடுத்தால்தான் ஓயும் என்ற அளவுக்கு இரு அணிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் தள்ளிவிட்டனர். ஆட்டம் முடிய 12 நிமிடங்கள் இருந்த போது பிரேசில் தனக்கு பெனால்டி கிக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது. கியான்ரோ கொன்சாலேஸுடன் ஏற்பட்ட மோதலில் தான் விழுந்ததை நாடகீயமாக்கினார் நெய்மர், நடுவரும் நெய்மரின் பலத்த நடிப்பைப் பார்த்து, அவருடன் மேற்கொண்ட வாதங்களும் தாக்கம் செலுத்த பெனால்டி கிக் கொடுத்தார். ஆனால் வீடியோ ரெஃபர் செய்த போது கீழே தள்ளும் அளவுக்கு அது பெரிய தொடர்பு இல்லை என்று நடுவர் கெய்ப்பர் முடிவு எடுத்தார். பெனால்டியை ரத்து செய்தார். இதற்கு சிறிது நேரத்திற்குப் பிறகு நெய்மரும், கூட்டின்ஹோவும் நடுவரை எதிர்த்ததால் புக் செய்யப்பட்டனர்.

கடைசியில் 90 நிமிடம் முடிந்து முதல் நிமிடத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முட்டல் மோதல் முடிவுக்கு வந்தது. பதிலி வீரர் ரொபர்ட்டோ ஃபெர்மினோ தலையால் பந்தை நடுவில் அனுப்ப கேப்ரியல் ஜீஸஸ் அதனை கோஸ்டா ரிகா தடுப்பு வீரரிடமிருந்து காப்பாற்றி பந்தை கூட்டின்ஹோவுக்கு அனுப்ப அருகிலிருந்து கோலாக்கினார் அவர்.

braziljpg

கூட்டின்ஹோ அடித்த முதல் கோல். | ராய்ட்டர்ஸ்.

 

கூட்டின்ஹோ இந்த உலகக்கோப்பையில் அடிக்கும் 2வது கோலாகும் இது. ஆட்டம் முடிய இன்னும் 3-4 நிமிடங்கள் கூடுதல் நேரம் இருந்த போது கேஸ்மிரோ வலது புறம் கோஸ்டாவை ரிலீஸ் செய்ய அவர் நெய்மருக்கு பந்தை அடிக்க கோல் கீப்பர் நவாஸ் அருகில் இல்லாததால் காலி வலையில் நெய்மர் அடிக்க 2வது கோலானது. ஆட்டம் முடிந்த பிறகு நெய்மர் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு கோப்பையை வென்ற கோல் போல் விசும்பி விசும்பி ஆனந்த அழுகை அழுதார்.

காரணம் கோஸ்டாரிகா நெய்மரைக் கையாண்ட விதம் கடுமையானது, நடுவர் கெய்ப்பரும் கண்டு கொள்ளவில்லை இதனால் ரெஃப்ரீக்கும் நெய்மருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்தன, ஒரு கட்டத்தில் நெய்மரை அவர் வெளீயேற்றி விடுவார் என்ற அளவுக்கு மிகவும் மோசமாக வாக்குவாதம் நடைபெற்றது.

90 நிமிட போராட்டம், பவுல்கள், மோதல்கள் கோஸ்டாரிகா கோல்கீப்பர் நவாஸாவின் போராட்ட தடுப்புகள்:

பாக்னர் தொடக்கத்தில் நெருக்கடி கொடுத்தார். பிரையன் ரூயிஸ் பந்தை கூட்டின்ஹோவிடம் கொடுக்க அவர் பந்தை ஷூட் செய்தார் ஆனால் மேலே சென்றது. 12வது நிமிடத்தில் கோஸ்டாரிகா வீரர் போர்ஹேஸ் அருமையாக பந்தை எடுத்து வந்து பிரேசில் கோல் எல்லைக்குள் புகுந்தார். ஆனால் கோலாக மாறவில்லை, இதற்கு 2 நிமிடங்கள் கழித்து நெய்மர் மீண்டுமொருமுறை கீழே தள்ளப்பட்டார். பிறகு மீண்டும் கோஸ்டாரிகா வீரர் கிறிஸ்டியன் கேம்போவுடன் ஏற்பட்ட நெருக்கடியில் நெய்மர் மீண்டும் கீழே விழுந்தார். மீண்டும் நடுவரிடம் சென்று முறையீடு.

நெய்மரைச் சுற்றியே கேமராவின் கவனமும் கோணமும் இருந்தது ஒவ்வொரு முறை அவர் கீழே தள்ளப்படும்போதோ, அல்லது அவர் விழுந்து அரற்றும்போதோ கண்ணீருடன் கூடிய நெய்மரின் முகத்தைக் கேமரா காட்டியபடியே இருந்தது.

இடையிடையே நவாஸ் கொஞ்சம் கோஸ்டாரிகாவைக் காப்பாற்றினார், இடைவேளையில் இரு அணிகளும் 0-0 என்று செல்லும் போதும் பிரேசில் வீரர்கள் புகார்களை எழுப்பினர். ஓய்வறைக்கு வெளியே நெய்மர் ரெஃப்ரீயிடம் ஏதோ பேசினார். கோஸ்டாரிகா சவால் அளித்தனர், ஆனால் பிரேசில் வீர்ர்கள் நெய்மரை வேண்டுமென்றே ஏதோ செய்கின்றனர் என்ற பார்வையிலேயே இருந்தனர்.

neymar2jpg

வெற்றிக்குப் பிறகு உணர்ச்சிவயப்பட்ட நெய்மர். |ராய்ட்டர்ஸ்.

 

நெய்மரின் நாடகங்களை விட கூட்டின்ஹோவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. அவர்தான் பந்தை எடுத்து சென்றார், பாஸ் செய்தார், அழகாக ஆட்டத்தை நகர்த்திச் சென்றார். வில்லியன் சரியாக ஆடவில்லை என்பதால் டக்ளஸ் கோஸ்டா களமிறக்கப்பட்டார். உடனடியாக பிரேசிலுகு புது ஆற்றல் கிடைத்தது. டக்ளஸ் கோஸ்டா பந்தை கேப்ரியல் ஜீஸசுக்குக் கிராஸ் செய்ய ஜீஸஸ் அதனை சக்திவாய்ந்த முறையில் தலையால் முட்டினார், அது கோல் பாரில் பட்டுத் திரும்பியது கூட்டின்ஹோ அடித்த ஷாட்டை கோஸ்டாரிகாவின் கிரிஸ்டியன் கேம்போ வெளியே தள்ளிவிட்டார்.

இடைவேளைக்குப் பிறகு முதல் 15 நிமிடங்களில் சுமார் 9-10 முறையாவது கோஸ்டாரிகா கோல் அருகே பிரேசில் சென்று தாக்குதல் நடத்தியிருக்கும், இதில் கோலை நோக்கி அடித்த 3-4 ஷாட்களை கோல் கீப்பர் நவாஸா தடுத்திருப்பார்.

கடைசியில் மார்செலோ வலது புறத்திலிருந்து ஒரு தொலைவான கிராஸைச் செய்ய பெர்மினோ அதனை தலையால் முட்டி நடுவுக்கு அனுப்பினார், கேப்ரியல் ஜீஸஸ் அதனை சரியாகக் கட்டுப்படுத்தத் தவறினார், பந்து தளர்வாக கூட்டின்ஹோவிடம் செல்ல அருகிலிருந்து கெய்லர் நவாஸைக் கடந்து கோல் அடித்தார். பிறகு நெய்மர், கோஸ்டாவின் கிராஸை நெய்மார் 2வது கோலாக மாற்றினார். 2-0 என்று பிரேசில் வென்று 4 புள்ளிகளை இதுவரை பெற்றுள்ளது. கோஸ்டாரிகா வெளியேறியது.

http://tamil.thehindu.com/sports/article24233443.ece

Link to comment
Share on other sites

பெனால்ட்டி வாய்ப்பைத் தவற விட்ட ஐஸ்லாந்து: அகமட் மியூசாவின் 2 கோல்களில் நைஜீரியா வெற்றி; அர்ஜெண்டினா உயிருடன் உள்ளது

 

 

AHMEDMUSA-KESAVANjpg

கோல் அடித்த மியூஸா (இடது). | ஏ.பி.

உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் நேற்று அர்ஜெண்டினாவுக்கு முக்கியமான போட்டியில் ஐஸ்லாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியா வீழ்த்தியது, அர்ஜெண்டினாவுக்கு ஓரளவுக்கு நிம்மதிப் பெருமூச்சை வரவழைத்திருக்கும்.

ஏனெனில் ஐஸ்லாந்து வென்றிருந்தால் ஜோர்ஹே சம்போலியின் மெஸ்ஸி புகழ் அர்ஜெண்டினாவுக்கு சங்கு ஊதப்பட்டிருக்கும். இப்போது நைஜீரியாவுக்கு எதிராக அர்ஜெண்டினா 3 புள்ளிகளைப் பெற்றால் கடைசி 16 சுற்றுக்கு முன்னேற ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் இது அவ்வளவு சுலபமல்ல, காரணம் அர்ஜெண்டினா அணியின் வீர்ரகள் தேர்வு, உத்தி, ஆட்ட உணர்வு எல்லாமே தற்போது குரேஷியா உதைக்குப் பிறகு சோர்வு கண்டுள்ளனர்.

 
 
 
 

மேலும் குரேஷிய அணிக்கு ஐஸ்லாந்து அதிர்ச்சியளிக்காமல் இருக்க வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

அஹமட் மியூஸாவை இந்தப் போட்டிக்குக் கொண்டு வந்தவர் மேனேஜர் கெர்னாட் ரோர். அவரும் கொண்டு வந்த மேனேஜரின் நம்பிக்கையை தனது 2 பிரமாதமான கோல்களினால் தக்கவைத்தார்.

ஐஸ்லாந்து கோட்டைவிட்ட பெனால்டி வாய்ப்பு:

ஆட்டத்தின் 80வது நிமிடங்களில் நைஜீரிய வீரர் எபூஹி ஐஸ்லாந்து வீரர் ஃபின்பாட்வார்சன் என்பவரை கீழே தள்ளினார், பெனால்டி பகுதிக்குள் இது நடந்ததால் நடுவர் காங்கர் வீடியோ உதவியை நாடினார். ஃபவுல் உறுதியானது. பெனால்டி கிக்கும் உறுதியானது.

ஐஸ்லாந்து ரசிகர்கள் உணர்ச்சிப்பெருக்கில் ஆரவாரம் மேலிட காத்திருக்கும் போது கில்ஃபி சிகுர்ட்சன் பந்தை ஸ்பாட் கிக்கிற்காக வைத்தார். கோல் கீப்பரை குழப்பி அவரைத் தவறான திசைக்குச் செல்லுமாறு செய்தவர் தானும் தவறான திசையில் கோல் பாருக்கு மேல் அடித்து வீணடித்தார். வலது மேல் மூலைக்கு குறிவைத்தார், ஆனால் பந்து நான் மேலேதான் செல்வேன், என்னை வலைக்குள் அடைக்க முடியாது என்று தப்பித்துச் சென்றது, பந்து சிரிக்க ஐஸ்லாந்து சோகமடைந்தது.

அகமட் மியூஸாவின் இரண்டு அற்புத கோல்கள்:

ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் லாங் பால் ஒன்று நைஜீரிய வீரரினால் எடுத்துக் கட்டுப்படுத்தப்பட விக்டர் மோசஸ் வலது உள்புறமாக மிக வேகமாக எடுத்துச் சென்றார். பிறகு மியூஸாவுக்கு ஒரு பாஸைத் தூக்கி அடித்தார் மியூஸா அதனை அருமையாகக் கட்டுப்படுத்தி ஐஸ்லாந்து கோல் கீப்பர் ஹால்டர்சனைத் தாண்டி முதல் கோலை அடித்தார்.

2வது கோல் அகமட் மியூசாவின் தனிமனித முயற்சியாகும். 75வது நிமிடத்தில் லாங் பால் ஒன்றை அழகாகக் கட்டுப்படுத்தி மிக வேகமாக எடுத்துச் சென்றார், நடுவில் ஐஸ்லாந்து வீரர் கேரி அர்னாசனை அனாயாசமாகக் கடந்து சென்று எடுத்துச் செல்ல ஆபத்தை உணர்ந்த ஐஸ்லாந்து கோல் கீப்பர் ஹால்டர்சன் கோலிலிருந்து முன்னேறி வந்தார் படு வேகத்தில் பந்துடன் வந்த மியூஸா இரண்டு தடுப்பு வீரர்களைக் கடந்து 10 அடியிலிருந்து கோல் அடித்தார். இவையெல்லாம் நாம் எழுதுவதைவிடவும் வேகமான விநாடிகளில் நடந்தது.

நைஜீரியா 2-0. 93வது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் சவர்ஸ்ஸன் அடித்த கோல் நோக்கிய வாய்ப்பை நைஜீரியா முறியடித்தது.

முதல் 45 நிமிடங்களில் நைஜீரியாவை ஐஸ்லாந்து பிரச்சினைக்குள்ளாக்கவில்லை என்றாலும் சில வாய்ப்புகளைத் தங்களுக்காக உருவாக்கினர். ஆனாலும் பயனில்லை, நேற்று நைஜீரியா கொஞ்சம் குறிக்கோளுடன் ஆடியது, ஐஸ்லாந்திடம் ஏமாறக்கூடாது என்ற திண்ணம் இருந்தது.

http://tamil.thehindu.com/sports/article24237855.ece

Link to comment
Share on other sites

ஜெர்மனி வீரர்களுக்கான விமான டிக்கெட்டுடன் கலாய்க்க வந்த ஸ்வீடன் பத்திரிகையாளர்: அனாயாசமாக எதிர்கொண்ட ஜெர்மனி வீரர்

 

  •  
Capture2

ஸ்வீடன் பத்திரிகையாளரும் ஜெர்மன் வீரர் சமி கேதிராவும்.   -  படம். | ட்விட்டர்

 

மெக்சிகோவிடம் தோல்வியடைந்ததையடுத்து உலகக்கோப்பைக் கால்பந்து எஃப் பிரிவு ஆட்டத்தில் இன்று இரவு இந்திய நேரம் 11.30 மணியளவில் ஜெர்மனி அணி ஸ்வீடனை வாழ்வா சாவா போட்டியில் சந்திக்கிறது.

முதல் போட்டியில் மெக்சிகோவுக்கு எதிராக ‘செத்த தவக்களைகள்’ போல் உடல்மொழி காட்டியதாக ஜெர்மனி வீரர்கள் மீது முன்னாள் ஜெர்மனி வீரர்கள் விமர்சனத் தாக்குதல் நடத்தியது ஒரு புறம் என்றால் ஸ்வீடன் பத்திரிகையாளர் ஒருபடி மேலே போய் உலக சாம்பியன் ஜெர்மனியை நகைச்சுவையாகவேனும் கடும் அவமானக்குட்படுத்தியது பரபரப்பாகியுள்ளது.

 

சில வேளைகளில் திட்டமிட்டு நடத்தப்படும் நகைச்சுவை காட்சிகள் அதன் விருப்பத்தை பூர்த்தி செய்வதில்லை, காரணம் எதிராளி புண்பட வேண்டும், அல்லது அவரே சிரித்துக் கொண்டாட வேண்டும், இந்த இரண்டும் இல்லாவிட்டால் ஜோக் அடித்தே பயனில்லை.

ஸ்வீடன் பத்திரிகயாளர் லுத்விக் ஹோல்ம்பர்கிற்கு நடந்தது அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்யவில்லை.

ஜெர்மனி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அந்த அணி வீரர் சமி கேதிராவிடம் ஸ்வீடன் நிருபர் லுத்விக் ஹோல்ம்பர்க் அவருக்கும் ஜெர்மனியின் அவரது சக வீரர்களுக்கு முன்னமேயே நாடு திரும்ப விமான டிக்கெட்டுகளைக் கொடுத்துள்ளார்.

அதாவது ஸ்வீடனுடனான இன்றைய போட்டியில் ஜெர்மனி தோற்கும் என்பதை அறிவுறுத்தும் விதமாக கேலிச்செயல் புரிந்துளார்.

ஆனால் இதனை மிகவும் அனாயசமாகவும், கோபமில்லாமலும் சிரிப்பும் இல்லாமலும் ஆச்சரியத்தக்க வகையிலான ஒரு நிதானத்துடனும் நடுநிலையுடனும் எதிர்கொண்டார் ஜெர்மனி வீரர் கேதிரா,

அவர் ஹோல்ம்பர்க்கிடம் கூறிய போது, “நன்றி. ஆனால் எங்களுக்குத் தேவைப்படாது (விமான் டிக்கெட்), நாங்கள் இன்றைய போட்டியில் வெல்வோம், அதாவது ஸ்வீடனை வீழ்த்துவோம்.

உடனே ஹோல்ம்பர்க், “இந்தப் போட்டிக்குப் பிறகு உங்கள் அணிக்கு டிக்கெட் தேவைப்படுமே” என்றார் நக்கலாக.

அதற்கும் அசராமல் கேதிரா, “இது எங்களுக்கு ஜூலை 16ம் தேதி தேவைப்படலாம்” (உலகக்கோப்பை இறுதிக்குப் பிறகு) என்றார் சற்றும் சலனப்படாமல்.

நட்புக் கலாய்ப்பாக நடந்த இந்தச் சம்பவம் இன்றைய போட்டியில் ஜெர்மனி வீரர்களை உசுப்பேற்றிவிடும், உத்வேகமூட்டும் என்று கூறப்படுகிறது.

 

http://tamil.thehindu.com/sports/article24240963.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

டியூனிசியாவை நாட்டுக்கு அனுப்பி வைத்தது பெல்ஜியம்

டியூனிசியாவுக்கு எதிராக மொஸ்கோ, ஸ்பார்ட்டக் விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற ஜீ குழுவுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் 5 க்கு 2 என்ற கோல்கள் அடிப்படையில் இலகுவாக வெற்றியீட்டிய பெல்ஜியம் இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தது. 

belgium_s_Michy_BATSHUAYI_3rd_to_belgian

அதேவேளை இப் போட்டியில் தோல்வியைத் தழுவய டியூனிசியா முதல் சுற்று முடிவில் நாடு திரும்பவுள்ளது.

இப் போட்டியில் ஈடன் ஹஸார்ட், ரொமேலு லூக்காக்கு ஆகிய இருவரும் தலா இரண்டு கோல்களை பெல்ஜியம் சார்பாக போட்டனர். லூக்காக்கு இதுவரை இரண்டு போட்டிகளில் நான்கு கோல்களைப் போட்டு க்றிஸ்டியானோ ரொனால்டோவுடன் தங்கப் பாதணிக்கான போட்டியில் சமநிலையில் உள்ளார்.

போட்டி ஆரம்பித்ததுமுதல் டியூனிசியா கோல் எல்லையை ஆக்கிரமித்த பெல்ஜியம் 6ஆவது நிமிடத்தில் பெனல்டி ஒன்றைப் பெற்றது. டியூனிசியா பெனல்டி எல்லையில் முரணாக வீழ்த்தப்பட்ட அணித் தலைவர் ஈடன் ஹஸார்ட், தனது அணிக்குக் கிடைத்த பெனல்டியை முறையாகப் பயன்படுத்தினார்.

belgium_lukaku_sxores_against_tunisia.jp

பத்து நிமிடங்கள் கழித்து ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் பரிமாறிய பந்தை சாமர்த்தியமாக நகர்த்திச் சென்ற லூக்காக்கு, முன்னோக்கி வந்த டியூனிசியா கோல்காப்பாளர் பாறூக் பென் முஸ்தபாவை கடந்து பந்தை இலாவகமாக கோலினுள் புகுத்தினார்.

ஆனால் அடுத்த இரண்டாவது நிமிடத்தில் பதிலடி  கொடுத்த டியூனிசியா கோல் நிலையை 1 க்கு 2 என ஆக்கியது. அந்த சந்தர்ப்பத்தில் களத்தின் இடதுபுறத்திலிருந்து காஸ்ரி உதைத்த ப்றீ கிக்கை டிலான் ப்றொன் தலையால் தட்டி கோலாக்கினார். 

இதனை அடுத்து நிலைமை மோசமாகிவிடுமோ என எண்ணிய பெல்ஜியம் அணியினர் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க பிரயத்தனம் எடுத்தனர்.

belgium_capt_eden_hazard_penalty.jpg

இடைவேளைக்கு முந்தய உபாதையீடு நேரத்தில் தோமஸ் மியூனியர் பரிமாறிய பந்தை பெற்றுக்கொண்ட லூக்காக்கு பந்தை நகர்த்தியவாறு முன்னே செல்ல, எதிரணி கோல்காப்பாளர் பென் முஸ்தபா தரையில் சாய்ந்தபோது பந்தை கோலினுள் செலுத்தி இரண்டாவது கோலைப் போட்டார்.

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்தபோது 51ஆவது நிமித்தில் கெவின் டி ப்றயன் பரிமாறிய பந்தை ஈடன் ஹஸார்ட் கோலாக்கினார்.

தொடர்ந்து பெல்ஜிய வீரர் மிச்சி பெட்ஷுஆய் அடுத்தடுத்து மூன்று கொல்போடும் வாய்ப்புகளக் துரதிருஷ்டவசமாக கோட்டை விட்டார்.

எனினும் 90ஆவது நிமிடத்தில் மிச்சி பெட்ஷுஆய் கொல்போட்டு தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொண்டார்

தொடர்ந்து உபாதையீடு நேரத்தின்போது வாஹ்பி காஸ்ரி மிக சாதுரியமாக டியூனிசியா சார்பாக ஆறுதல் கோல் ஒன்றைப் போட்டார். 

http://www.virakesari.lk/article/35458

Link to comment
Share on other sites

உலகக் கோப்பை கால்பந்து - பரபரப்பான ஆட்டத்தில் ஸ்வீடனை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி

 
அ-அ+

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. #WorldCup2018 #GERSWE

 
உலகக் கோப்பை கால்பந்து - பரபரப்பான ஆட்டத்தில் ஸ்வீடனை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி
 
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எப் பிரிவில் இடம் பிடித்துள்ள ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின.
 
போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்வீடன் அணியின் ஒலா டொல்வானன் 32-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
 
உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜெர்மனி தனது ஆக்ரோ‌ஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் மார்கோ ரூயஸ் ஒரு கோல் அடித்தார். அதற்கு பிறகு ஆட்டத்தின் இறுதிவரை இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 
 
201806240154216438_1_sweden-2._L_styvpf.jpg
 
இதையடுத்து, கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் ஜெர்மனி அணியின் டோனி குருஸ் 95-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினார்.
 
இறுதியில், போட்டியின் முடிவில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பையும் பெற்றது.
 
உலககோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/24015421/1172259/germany-beat-sweden-21-in-Group-F-match.vpf

Link to comment
Share on other sites

நாங்கள் எதைச் சொன்னாலும் உலகம் அதை நம்பாது: அர்ஜெண்டீனா கோல் கீப்பர் கவாலேரோ விரக்தி

 

 
caballero

குரேஷியாவின் லூகா மோட்ரிக்கின் புல்லட் ஷாட்டை தடுக்க முடியாமல் விட்ட அர்ஜெண்டினா கோல் கீப்பர் கவாலேரோ.| ஏ.பி.

ஐஸ்லாந்துடன் ட்ரா ஆனதற்கும் குரேஷியாவுக்கு எதிராக 0-3 என்று படுதோல்வையடைந்ததற்கும் அர்ஜெண்டினா அணியின் பிரதான காரணமாக கோல் கீப்பர் கவாலேரோவின் அபத்த கோல் கீப்பிங் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

ஆனால் ஐஸ்லாந்துக்கு எதிராக மெஸ்ஸி சொதப்பிய பெனால்டி கிக்கும், குரேஷியாவுக்கு எதிராக எங்கிருந்தார் என்றே தெரியாமல் ஆடியதும் அர்ஜெண்டினா அணி தற்போது வெளியேறும் அபாயத்தில் உள்ளது.

 

ஆனால் குரேஷியாவுக்கு எதிராக பந்தை அடித்து விரட்டாமல், அல்லது பிடித்து கோல் கிக் செய்யாமல் குரேஷிய வீரர் வெகு அருகில் இருக்கும் போதே சொத்தையாக பாஸ் செய்கிறேன் பேர்வழி என்று கோட்டைவிட குரேஷியா கோல் முதல் கோலை அடித்தது, அதன் பிறகு குரேஷியா திரும்பிப் பார்க்கவில்லை.

ஐஸ்லாந்துக்கு எதிராகவும் டைவ் அடித்துப் பந்தப் பிடிக்கும் முயற்சியில் பந்து ஐஸ்லாந்து வீரரிடமே வர கோல் ஆனது.

இந்த இரண்டுமே தவறுகள் என்று விமர்சனம் எழுந்தையடுத்து அவர் ஸ்பானிய மொழிப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியில் விரக்தியாகப் பேசியுள்ளார்:

நான் என் பணியில் கவனம் செலுத்த விரும்புகிறேன் பலிகடா ஆக விரும்பவில்லை, நன்றாக ஆடி வெற்றி பெற்ற பிறகு மன்னிப்பு கேட்க வேண்டும், வெறும் வார்த்தையால் என்ன பயன்?

கோல் கீப்பிங் மற்றும் அணியின் ஆட்டம் குறித்து மிகவும் மோசமான குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, மிகவும் கடினமான காலக்கட்டமாகும் இது. இதனைக் கடக்க வேண்டும்.

நான் நிறைய விஷயங்களைப் பேச விரும்புகிறேன், ஆனால் பேசுவதற்கு இது தோதான நேரம் அல்ல, வெற்றி பெற்றுவிட்டுத்தான் பேச வேண்டும். இப்போது கடினமாக உழைத்து வெற்றி பெறவேண்டும் அவ்வளவே, பேசுவதோ அறிக்கைகளோ விட்டு பலிகடாவாக விரும்பவில்லை.\

ஒரு ட்ரா, ஒரு தோல்விக்குப் பிறகு அர்ஜெண்டினா வீரர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள், ஆனால் அதுகுறித்து எதைக் கூறினாலும் உலகம் அதை நம்பப் போவதில்லை.

இவ்வாறு கூறினார் கவலேரோ விரக்தியுடன்.

http://tamil.thehindu.com/sports/article24239901.ece

Link to comment
Share on other sites

வாட்டே கம்பேக்..! கடைசி நிமிடத்தில் ஜெர்மனி த்ரில் வெற்றி! #WorldCup #GERSWE

 

உலக சாம்பியனின் தலையெழுத்து கடைசி நிமிடத்தில் மாற்றி எழுதப்பட்டுள்ளது. தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜெர்மனி அணி, இறுதி நொடிகளில் வெற்றியைத் தங்கள் வசப்படுத்தியுள்ளது. ஜெர்மனி - ஸ்வீடன் ஆட்டம் 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன்களுக்குச் சாதகமாக முடிந்தது. 

ஜெர்மனி

மெக்சிகோ அணியுடனான முதல் போட்டியில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்த ஜெர்மனி அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அணியில் 4 மாற்றங்கள். காயம்டைந்த ஹம்மல்ஸ் இடத்தில் ருடிகர். கெதிரா, ஒசில், பிளாட்டன்ஹார்ட் நீக்கப்பட்டு ரியூஸ், ரூடி, ஜோனாஸ் ஹெக்டர் களமிறக்கப்பட்டனர். அணி மாறியது. ஆனால், அவர்களின் அணுகுமுறை மாறவில்லை. அதே பொசிஷன் கேமிலேயே கவனம் செலுத்தினார்கள். விங்கில் இருந்து கிராஸ்கள் மூலம் கோலடிக்கவே நினைத்தனர். ஆனால், அது வசப்படவில்லை. 

 

 

ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் குரூஸ், ஸ்வீடன் வீரர்களிடம் பந்தை இழக்க, அவர்கள் துரிதமாக செயல்பட்டனர். விக்டர் கிளாசன் கொடுத்து த்ரூ பாலை அருமையாக கன்ட்ரோல் செய்த திய்வோனன் நூயரை ஏமாற்றி கோலடித்தார். 1-0 என ஜெர்மனி மீண்டும் பின்தங்கியது. உலகக் கோப்பைக் கனவு கலையத் தொடங்கியது. அந்த கோல் அடித்த பிறகு ஸ்வீடன் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியது. அதனால் முதல் பாதி 1-0 என்ற கணக்கில் முடிவுக்கு வந்தது.

 

 

ஜெர்மனி

இரண்டாம் பாதியில் இன்னொரு மாற்றம் செய்தார் ஜெர்மனி பயிற்சியாளர் லோ. டிராக்ஸ்லருக்குப் பதில் மரியோ கோமஸ். ஆட்டம் சூடு பிடித்தது. ஜெர்மனி விடாமல் ஸ்வீடன் பாக்ஸை முற்றுகையிட்டது. அதற்கு மூன்றே நிமிடங்களில் பலன். இடது விங்கில் இருந்து வெர்னர் கொடுத்த கிராஸை, கோமஸ் கன்ட்ரோல் செய்ய முடியாமல் செய்ய, அதை ரியூஸ் அற்புதமாக கோலாக்கினார். 1-1. கேம் ஆன். ஜெர்மனியின் அட்டாக் இன்னும் வேகம் எடுத்தது. ஃபௌல்கள் அதிகமாயின. உஷ்னம் அதிகரித்தது. ஆல்பின் ஏக்தால் யெல்லோ கார்ட். போடங் யெல்லோ கார்ட்...போடங் மீண்டும் யெல்லோ...ரெட் கார்ட்! ஜெர்மனி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை.

டிஃபண்டரை மாற்று வீரராக இறக்கவில்லை லோ. ஒரு டிஃபண்டரைத் தூக்கிவிட்டு, இன்னொரு விங்கரைக் களமிறக்கினார். களத்தில் இரண்டே டிஃபண்டர்கள். அதிலும் ஒருவர் ஃபுல் பேக். ஜெர்மனி வெற்றிக்காக மட்டுமே விளையாடியது. டிரா அவர்களின் அஜென்டாவில் இல்லவே இல்லை. ஒவ்வொருவராக ஷாட் அடிக்கிறார்கள். ஆனால், கோல் இல்லை. கிம்மிச் வெளியே அடிக்கிறார். வெர்னர் வெளியே அடிக்கிறார். பிரான்ட் போஸ்டில் அடிக்கிறார். ஆனால், கோலுக்குள் எதுவுமே விழவில்லை.

குரூஸ்

ஸ்டாப்பேஜ் டைமின் கடைசி நிமிடம். ஸ்வீடன் பாக்சுக்கு அருகே ஜெர்மனிக்கு ஃப்ரீ கிக் கிடைக்கிறது. குரூஸ், ரியூஸ் இருவரும் அருகில்  ஷார்ட் டச் கொடுத்து அதை அதியற்புதமாக கர்ல் செய்து கோலாக்கினார் டோனி குரூஸ். ஜெர்மனி வெற்றி. உலக சாம்பியன் வெற்றி. மொத்த அரங்கமும் ஆர்ப்பரித்தது. ஸ்வீடன் ரசிகர்கள் உடைந்துபோனார்கள். ஜெர்மன் வீரர்கள் கம்பீரமாக நிற்கிறார்கள். ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். பயிற்சியாளர் லோ, ரஷ்யாவில் முதல் முறையாக சிரிக்கிறார். சாம்பியன்கள் இப்படித்தான் கம்பேக் கொடுப்பார்கள்.

https://www.vikatan.com/news/sports/128658-germany-vs-sweden-match-report.html

Link to comment
Share on other sites

அடுத்த சுற்றில் கால் பதிக்கும் முனைப்பில் இங்கிலாந்து: பனாமா அணியுடன் இன்று மோதல்

 

 
24-CH-SAN-ENGLAND

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட இங்கிலாந்து அணி வீரர்கள்.   -  படம்: கெட்டி இமேஜஸ்

ரஷ்யா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் பனாமா அணியுடன் இங்கிலாந்து அணி இன்று மோதவுள்ளது.

ரஷ்யாவின் ரெபினோ நகரிலுள்ள நிஸ்னி நோவ்கோராட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து முதல் லீக் ஆட்டத்தில் துனீசியாவை வீழ்த்தி 3 புள்ளிகளைப் பெற்றது. இந்த நிலையில் உலகக் கோப்பையின் அறிமுக அணியான பனாமாவைச் சந்திக்கவுள்ளது இங்கிலாந்து. முதல் ஆட்டத்தில் துனீசியாவின் பாதுகாப்பு அரண்களை எளிதாகத் தகர்த்து வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து வீரர்கள் இம்முறையும், உலகக் கோப்பையில் தவழும் குழந்தையாக அறிமுகமாகி உள்ள பனாமா அணியை எளிதில் வெற்றி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன், ரஹீம் ஸ்டெர்லிங், ஜெஸ்ஸி லிங்கார்ட் ஆகியோர் தங்களது அபாரமான ஆட்டத்தை தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பனாமாவுக்கு எதிராக அதிக கோல்களை அடிக்கும் சூழ்நிலையில் இங்கிலாந்து அணி ஜி பிரிவில் முதலிடம் பெற வாய்ப்புள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து பயற்சியாளர் சவுத் கேட் கூறும்போது, “2-வது லீக் போட்டிக்காக அணி சிறந்த முறையில் தயாராகி வருகிறது. அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை நாங்கள்தான் தீர்மானிக்கவேண்டும். சில பத்திரிகைகளில் இங்கிலாந்து அணி வீரர் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இது சரியல்ல. போட்டியின்போது யார் விளையாடுவார்கள் என்பதை கடைசி நேரத்தில் அறிவிப்போம்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article24245062.ece

Link to comment
Share on other sites

ஜேர்மனிக்கு உயிர்கொடுத்தது க்ரூஸின் கடைசி கோல்

 

 
 

சுவீடனுக்கு எதிராக சொச்சி, பிஷ்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜீ குழுவுக்கான உலகக் கிண்ணப் போட்டியின் கடைசிக் கட்டத்தில் டோனி க்ரூஸ் போட்ட கோலின் உதவியுடன் 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஜெர்மனி மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

36188564_10209751381375990_6433578031192

அதுவும் கடைசி எட்டு நிமிடங்கள் 10 வீரர்களுடன் விளயைாடி ஜெர்மனி இந்த வெற்றியை ஈட்டியமை பெரிய விடயமாகும்.

நடப்பு உலக சம்பியன் ஜேர்மனியின் இந்த வெற்றியை அடுத்து ஜீ குழுவிலிருந்து இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு மெக்சிகோ, ஜேர்மனி, சுவீடன் ஆகிய மூன்று அணிகளுக்கும் தோன்றியுள்ளது.

போட்டியின் 32ஆவது நிமிடத்தில் ஜேர்மன் எல்லையில் ஏற்பட்ட தடுமாற்றத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஒலா டொல்வோனென் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு சுவீடனை முன்னிலையில் இட்டார். 

36046188_10209751382216011_9045586852093

டோனி க்ரூஸ் பந்து பரிமாற்றத்தில் இழைத்த தவறின் காரணமாக சுவீடன் வீரர்கள் இருவர் வெகமாக பந்து பரிமாற்றத்தில் ஈடுபட்டு இறுதியில் ஒலா டொல்வொனென் கோலாக்கினார். தனது தவறை கடைசி நிமிட கோல் மூலம் க்ரூஸ் நிவர்த்தி செய்தார்.

இந்த கோல் ஜெர்மனிக்கு எல்லாம் அஸ்மித்துவிட்டது போன்ற அதிர்ச்சியுடன் அழுத்தத்தையும் கொடுத்தது. ஆனால் அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக முயற்சித்தது. எனினும் முதலாவது பகுதியில் ஜேர்மனி கோல் போடவில்லை.

இதன் பிரகாரம் இடைவேளையின்போது 0 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் ஜேர்மனி பின்னிலையில் இருந்தது.

36041962_10209751382056007_7703094007961

இடைவேளைக்கு பின்னர் சுவீடன் எல்லையை ஆக்கிரமித்த ஜேர்மனி 48ஆவது நிமிடத்தில் கோல் நிலையை சமப்படுத்தியது. 

டிமோ வோர்னர் தாழ்வாகப் பரிமாறிய பந்தை மாற்று வீரர் மரியோ கோமஸ் தனது பாதங்களிடையே விட்டுக்கொடுக்க, மார்க்கோ ரேயஸ் துரிதமாக செயற்பட்டு பந்தை கோலின் வலது மூலை ஊடாக உள்ளே புகுத்தி கோல் நிலையை சமப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து முழு ஆதிக்கம் செலுத்திய ஜேர்மனி, எதிரணியின் கோல் எல்லையை தொடர்ச்சியாக ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது. இதனிடையே குறைந்தது நான்கு கோல்போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது.

35974504_10209751380815976_8128373818411

இந்தப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டால் இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்பு அதிகரிக்கும் எனக் கருதிய சுவீடன் தடுத்தாடுவதைக் குறியாகக் கொண்டு இரண்டாவது பகுதியில் விளையாடியது. 

இதனிடையே போட்டியின் 82ஆவது நிமிடத்தில் போலந்து மத்திஸ்தர் சீமன் மார்சினியக்கின் இரண்டாவது மஞ்சள் அட்டைக்கு இலக்கான ஜெரோம் போயெடெங் சிவப்பு அட்டையுடன் வெளியேற்றப்பட்டார்.

இதனை சாதகமாக்கிக்கொண்ட சுவீடன் போட்டியின் கடைசிக் கட்டத்தில் மூன்று தடவைகள் ஜெர்மனி எல்லையை அடைந்து கோல் போட கடுமையாக முயற்சித்தது. ஆனால் சுவீடனினால் வெற்றிக் கோலை போட முடியாமல் போனது.

போட்டி 90 நிமிட முழு நேரத்தைக் கடந்து உபாதை ஈடு நேரத்துக்குள் சென்ற ஐந்தாவது நிமிடத்தில் சுவிடன் பெனல்டி எல்லைக் கோட்டின் வலது புறத்தில் ஜெர்மனிக்கு ப்றீ கிக் ஒன்று கிடைத்தது.

35671773_10209751379855952_7017310833143

டோனி க்ரூஸ் பந்தை ஒரு யார் முன்னால் நகர்த்த, மார்க்கோ ரேயஸ் பந்தை நிறுத்திக்கொடுத்து பின்னால் நகர்ந்தார். அடுத்த கணம் க்ரூஸ் முழு பலத்துடன் உதைத்த பந்து வளைவாக சென்று சுவீடன் கோலின் இடது மேல் மூலை ஊடாக உள்ளே சென்றது. பந்து கோலினுள் சென்றதும் ஜெர்மனி வீரர்களும் இரசிகர்களும் பேரானந்தத்தில் மூழ்க, சுவீடன் வீரர்களையும் இரசிகர்களையும் சோகம் சூழ்ந்துகொண்டது.

மூன்று அணிகளுக்கு வாய்ப்பு

ஜேர்மனியின் இந்த வெற்றியை அடுத்து இக் குழுவிலிருந்து மூன்று அணிகள் இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான வாயில் திறக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவும் ஜேர்மனியும் வெற்றிபெற்றால் சுவீடனின் இரண்டாம் சுற்று வாய்ப்பு அற்றுப் போகும். சுவீடன் அதிக கோல் வித்தியாசத்தில் மெக்சிகோவை வெற்றிகொள்ளும் அதேவேளை தென் கொரியாவிடம் ஜேர்மன் தோற்றால் அல்லது அப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தால் மெக்சிகோவும் சுவீடனும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும். இது சாத்தியப்படும் என்று சொல்ல முடியாது.

அத்துடன் சுவீடனும் ஜேர்மனியும் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மெக்சிகோவின் இரண்டாம் சுற்று கனவு கலைந்துபோகும்.

எனவே ஜீ குழுவில் கடைசி இரண்டு போட்டிகளும் மிகுந்த பரபரப்பை தோற்றுவதாக அமையும்.

http://www.virakesari.lk/article/35468

 

 

 

ஷகிரியின் கடைசி நிமிட கோலால் விட்சர்லாந்து வெற்றி: 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது

 

 
24CHPMUXHERDANSHAQIRI

செர்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல்கீப்பரின் தடுப்பை மீறி கோல் அடிக்கும் சுவிட்சர்லாந்து வீரர் ஹெர்டான் ஷகிரி.   -  படம்: கெட்டி இமேஜஸ்

24CHPMUXHERDANSHAQIRI2

கோல் அடித்த மகிழ்ச்சியில் ஹெர்டான் ஷகிரி.   -  Getty Images

 
24CHPMUXHERDANSHAQIRI

செர்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல்கீப்பரின் தடுப்பை மீறி கோல் அடிக்கும் சுவிட்சர்லாந்து வீரர் ஹெர்டான் ஷகிரி.   -  படம்: கெட்டி இமேஜஸ்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கடைசி நிமிட கோலால் செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இ பிரிவில் இடம் பெற்றுள்ள சுவிட்சர்லாந்து - செர்பியா அணிகள் நேற்றுமுன்தினம் கலினின்கிராட் மைதானத்தில் மோதின. தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து 4-2-3-1 என்ற பார்மட்டில் களமிறங்கியது. அதேவேளையில் 34-வது இடத்தில் உள்ள செர்பியா அணியும் அதே பார்மட்டில் களம் புகுந்தது.

 

5-வது நிமிடத்தில் செர்பியாவின் லூகா மிலிவோஜெவிச்சின் கிராஸை பெற்ற அலெக்சாண்டர் மிட்ரோவிச், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டி கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் கோல்கம்பத்தின் வலது ஓரத்தில் அதனை கோல்கீப்பர் யான் சோமர் தடுத்தார். அடுத்த நொடியில் வலதுபுறத்தில் டூசான் டாடிக்கிடம் இருந்து கிராஸை பெற்ற அலெக்சாண்டர் மிட்ரோவிச் தலையால் முட்ட, யான் சோமருக்கு இடது புறமாக பந்து கோல் வலையை துளைத்தது. இதனால் செர்பியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

9-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ஹெர்டான் ஷகிரி, பாக்ஸின் வெளியே இருந்து அடித்த பந்து தடுக்கப்பட்டது. 10-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் பிளெரீம் ஸீமெய்லி, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்து, கோல்கம்பத்துக்கு வலது புறம் விலகிச் சென்றது. 16-வது நிமிடத்தில் செர்பியாவின் மிலின்கோவிச், பாக்ஸின் வெளியே இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு இடதுபுறம் விலகிச் சென்றது. 19-வது நிமிடத்தில் அலெக்சாண்டர் மிட்ரோவிச், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து இலக்கை நோக்கி உதைத்த பந்து உயரமாக கோல்கம்பத்துக்கு இடதுபுறம் வெளியே சென்றது. 30-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ஸ்டீவன் ஸூபரின் உதவியுடன் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து பிளெரீம் ஸூமெய்லி, அடித்த பந்தை இடது ஓரத்தில் செர்பியா கோல்கீப்பர் தடுத்தார்.

31-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ஃபேபியன் ஸ்கர், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்துக்கு மேலாக உயரமாக சென்றது. 37-வது நிமிடத்தில் செர்பியாவின் டூசான் டாடிக், பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து, கோல்கம்பத்தின் மையப்பகுதியில் யான் சோமரால் தடுக்கப்பட்டது. 42-வது நிமிடத்தில் அலெக்சாண்டர் மிட்ரோவிச், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்றது. 44-வது நிமிடத்தில் செர்பியாவின் டஸ்கோ டோசிக் கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமாக தலையால் முட்டிய பந்து இடது புறமாக வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது. அடுத்த நொடியில் அந்த அணியின் நேமஞ்சா மேட்டிக், 18 அடி தூரத்தில் இருந்து அடித்த பந்தும் இடது புறமாக விலகிச் சென்றது. முதல் பாதியின் முடிவில் செர்பியா 1-0 என முன்னிலை வகித்தது.

52-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து பதிலடி கொடுத்தது. பாக்ஸ் பகுதிக்குள் வைத்து ஷகிரி அடித்த பந்து செர்பியாவின் கோலரோவால் தடுக்கப்பட்டது. அவர் மீது பட்டு பாக்ஸ் பகுதிக்கு வெளியே வந்த பந்தை யாரும் மார்க் செய்யப்படாத நிலையில் இருந்த கிரானிட் ஸகா 25 யார்டு தூரத்தில் இருந்து அற்புதமாக வலது ஓரத்தை நோக்கி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற சமநிலையை அடைந்தது.

58-வது நிமிடத்தில் ஷகிரி, இடது புறத்தில் சற்று தொலைவில் இருந்து இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கம்பத்தின் வலது ஓர கம்பியை தாக்கியபடி விலகிச் சென்றது. 82-வது நிமிடத்தில் ஸ்டீவன் ஸூபர் உதவியுடன் சுவிட்சர்லாந்தின் பிரீல் எம்போலோ அடித்த பந்து, செர்பியா கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. 84-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் மரியோ காவ்ரனோவிச், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு வலது புறம் தடுக்கப்பட்டது.

90-வது நிமிடத்தில் மரியோ காவ்ரனோவிச்சிடம் இருந்து பந்தை பெற்ற ஹெர்டான் ஷகிரி பந்தை வேகமாக கடத்திச் சென்று பாக்ஸின் இடது புறத்தில் டிபன்டரான டோசிக்கின் தடுப்பை மீறி, கோல்கீப்பர் ஸ்டோகோவிச்சின் கால்களுக்கு ஊடாக அற்புதமாக கோல் அடித்தார். இது சுவிட்சர்லாந்தின் வெற்றி கோலாக அமைந்தது. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நிமிடங்களில் இரு அணிகள் தரப்பில் மேலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. முடிவில் சுவிட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது. முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து, பிரேசிலுக்கு எதிராக டிரா செய்திருந்தது. அதேவேளையில் செர்பியா அணி முதல் தோல்வியை சந்தித்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தியிருந்தது.

http://tamil.thehindu.com/sports/article24245073.ece

Link to comment
Share on other sites

பின்னிலையிலிருந்து மீண்டெழுந்த ஜெர்மனி: டோனி குரூஸின் திகைக்க வைத்த கடைசி நிமிட கோலினால் ஸ்வீடனை வீழ்த்தியது

 

 

 
toni%20kroos

திகைப்பூட்டும் 2வது கோலை அடித்த டோனி குரூஸைப் பாராட்டும் ஜெர்மனி.   -  படம். .| ஏஎஃப்பி.

உலகக்கோப்பைக் கால்பந்து 2018-லிருந்து ஜெர்மனி முதல் சுற்றிலேயே வெளியேறும் என்ற பலரது ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் வீணாகின. மெக்சிகோவுடன் தோல்விக்கு அடுத்து நேற்று முதல் பாதியில் ஸ்வீடன் 1-0 என்று முன்னிலை பெற்றவுடனேயே வர்ணனையாளர்கள் கடைசியாக ஜெர்மனி முதல் சுற்றில் வெளியேறியது எப்போது (1938) என்று ஜெர்மனியின் தோல்வி வரலாற்றை இரங்கற்பா பாடத்தொடங்கினர்.

80 ஆண்டுகள் ஒரு அணி முதல் சுற்றில் வெளியேறவில்லை என்பதே அந்த அணியின் கால்பந்து பாரம்பரியத்தை அறிவுறுத்துகிறது, ஆனால் சாம்பியன் அணிகள் தோற்க வேண்டும், சிறந்த அணிகள் தோற்க வேண்டும் என்பது பொதுவாக சிலருக்கு ஏற்படும் வக்கிர எண்ணமாகும். ஆனால் ஸ்வீடன் அணி ஜெர்மனியை கடைசியாக வீழ்த்தியது 1978-ல் தான். இந்தப் புள்ளி விவரங்களை அறியாத பத்திரிகையாளர்தான் அன்று ஜெர்மனிக்கு பிளைட் டிக்கெட் எடுத்துக் கொடுத்தார்.

     
 

ஆனால் நடந்தது என்ன? பலரது எதிர்பார்ப்புகளையும் மீறி ஜெர்மனி மார்கோ ரியூஸின் 48வது நிமிட கோலினாலும் டோனி குரூஸ் 90 நிமிடங்கள் கடந்து 4 நிமிடங்கள் கழித்து அடித்த மிகச்சிறப்பான கோலினாலும் ஜெர்மனி 2-1 என்று வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை சாம்பியன் அணிகள் பல அடுத்த உலகக்கோப்பையிலேயே முதல் சுற்றில் வெளியேறிய கதைகள் பேசப்பட்டன, பிரான்ஸ் 2002லும் இத்தாலி 2010-லும், ஸ்பெயின் 2014-லும் இப்படித்தான் வெளியேறின, அடுத்ததாக ஜெர்மனி என்று ஹேஷ்யங்கள் முன் வைக்கப்பட்டன.

ஸ்வீடன் அணி மிகவும் கடினமான அணி, அதிலும் அவர்கள் கோல் கீப்பர் ராபின் ஆல்சன் கடந்த அக்டோபர் முதல் கோல் விடாத ஒரு சாதனையில் ஆடவந்துள்ளார். ஆனால் ஜெர்மனி அணி மெக்சிகோவிடம் தோற்றதனாலோ என்னவோ கொஞ்சம் கட்டுக்கோப்பு இழந்து ஆடியது, அந்த அணியின் ஜெரோமி போட்டெங், ஸ்வீடன் வீரர் மார்கஸ் பெர்கை தடுக்க முனைந்து 2வது மஞ்சள் அட்டை வாங்கி ஜெர்மனி 10 வீரர்களுடன் ஆட நேரிட்டது, அதிலும் கடைசியில் கோல் வாங்காமல் கோல் அடித்தது சாம்பியன் அணிக்கான தருணம்.

அந்தக் கடைசி 4 நிமிடங்கள்:

ஏற்கெனவே போட்டெங் செய்த மடத்தனமான ஃபவுலினால் அவர் வெளியேற்றப்பட 10 வீரர்களுக்கு ஜெர்மனி குறுக்கப்பட்டது.

92வது நிமிடத்தில் வெர்னருக்கு இடது புறம் கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் லாங் பாஸ் செய்யாமல் ஷார்ட் பாஸ் மேற்கொண்டனர், குண்டோகன் சர்க்கிளின் முனையிலிருந்து பிராண்ட்டிடம் அனுப்பினார், பந்து பவுன்ஸ் ஆனது அதனை 20 அடியிலிருந்து இடது காலால் ஒரே குத்துக் குத்தினார், ஸ்வீடன் கோல் கீப்பர் ஆல்சனைக் கடந்து வலது போஸ்ட்டில் அடித்தது. பட்ட பந்து மீண்டும் வெர்னரிடம் வர அவர் அடிக்கும் முன் ஆஃப் சைடு விசில் ஊதப்பட்டது.

எந்த அணி வெற்றி பெறவும் 2 நிமிடங்கள் இருந்தன. 1-1 என்ற நிலையில் கடும் சவால். இருதரப்பினரும் மோதிக்கொண்டனர், ஆனால் ஜெர்மனி வசமே பந்து அதிகம் இருந்தது. அவர்கள் கால்களில் புதிய வேகத்தையும் அவசரத்தையும் காண முடிந்தது.

kroosjpg

டோனி குரூஸின் மிக அருமையான கடைசி கோல். | ஏஎப்பி.

 

அப்படிப்பட்ட தருணத்தில்தான் டுர்மாஸைக் கடந்து ஜெர்மனி வீரர் வெர்னர் பந்தை விறுவிறுவென ஸ்வீடன் கோல் எல்லைக்குள் கொண்டு வந்தார், ஆனால் வெர்னரைக் கீழே தள்ளி ஒரு வேஸ்ட் ஃபவுலைச் செய்தது ஸ்வீடன். ஃப்ரீ கிக் வழங்கப்பட்டது.

டொனி குரூஸ் ஃப்ரீ கிக்கிற்கு இடது புறத்திலிருந்து தயாரானார், கோல் வலை அந்தக் கோணத்திலிருந்து சற்றே கடினமானது, பாஸ் செய்து கோலடிக்கலாமே தவிர, அந்தக் கடினமான கோணத்திலிருந்து ஃப்ரீ கிக்கை நேரடியாக கோலுக்குள் அடிப்பது கடினம். டோனி குரூஸ் பந்தை சும்மா லேசாக மிக அருகில் இருந்த ரியூஸுக்குத் தட்டி விட்டார், அவர் பந்தை நிச்சலனமாக நிறுத்த டோனி குரூஸ் அடித்த ஷாட் இந்த உலகக்கோப்பையின் மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்பான கோல். வலது காலால் அவர் தூக்கி அடித்த ஷாட் வளைந்து கோலுக்குள் சென்றது, சாத்தியமில்லாத கோணம், சாத்தியமில்லாத ஷாட், ஜெர்மனி ஷாட்களையெல்லாம் தடுத்து வெறுப்பேற்றிய ஸ்வீடன் கோல் கீப்பர் ஆல்சனும் ஆச்சரியமடைந்த கோல்!! ஜெர்மனி 2-1 என்று கடினமான ஒரு வெற்றியை முயன்று பெற்றது.

ஜோக்கிம் லோ-வின் தைரியமான அணித்தேர்வு:

மெக்சிகோவுடனான தோல்விக்குப் பிறகு ஜெர்மனி மேலாளர் ஜோக்கிம் லோ தைரியமாக 4 வீரர்களை உட்கார வைத்தார், அதில் குறிப்பாக சேமி கேதிரா, மெசூட் ஓஸில் ஆகியோர் மிக முக்கியமானவர்கள். இடைவேளைக்கு முன்பாக செபாஸ்டியன் ரூடி, ஸ்வீடனின் ஒரே கோலை அடித்த டாய்வோனென் கைவரிசையில் மூக்குடைபட்டு பெஞ்சுக்குத் திரும்பினார்.

87வது நிமிடத்திலும் ஜோக்கிம் லோ மேற்கொண்ட அபார மாற்றமும் கைகொடுத்தது. ஹெக்டரை திரும்ப அழைத்து, தாக்குதல் நடுக்கள வீரர் ஜூலியன் பிராண்ட்டை களத்துக்கு அனுப்ப்பினார், அவர் வந்தவுடனேயே வெறித்தனமாக அடித்த ஷாட்தான் கோல் கீப்பர் ஜூலியன் டைவையும் மீறி கோல் போஸ்ட்டைத் தாக்கியது, ஸ்வீடன் அரண்டு போனது.

கடைசியில் வெற்றி கோலை திகைப்பூட்டும் விதத்தில் அரிய கோணத்தில் அடித்த டோனி குரூஸ்தான் முதல் பாதியில் பந்தை ஸ்வீடன் வீரர் பெர்கிற்கு விட்டுக் கொடுத்தார், ஆனால் அவர் முயற்சி வைடாக, விக்டர் கிளாசன் டாய்னவனுக்கு ஒரு அபார கிராஸ் செய்ய டாய்னவன் முதலில் மார்பில் பந்தைத் தாங்கி பிறகு மிக அருமையாக கோலுக்குள் தூக்கி விட்டார், இது ஷாட் அல்ல ஒரு டச்தான். ஜெர்மனி கோல் கீப்பர் மேனுயெல் நூயருக்கு ஒரு வாய்ப்பும் இல்லை. வேடிக்கைதான் பார்க்க முடிந்தது, ஸ்வீடன் அபாரமான முறையில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

முதல் பாதியில் ஸ்வீடன் கோல் அடித்தாலும் ஜெர்மனி முழுத்தாக்குதல் தொடுத்தது 70% பந்துகளை தங்கள் வசம் வைத்திருந்தது, ஆனால் போட்டெங், அனுபவ வீரர் க்லோஸ், வலது புறத்தில் முல்லர், டோனி குரூஸ் போன்றவர்கள் இருந்தும் கோல் மட்டும் வரவில்லை. ஸ்வீடன் கோல் கீப்பர் ஆல்சன் சாதாரணமானவர் கிடையாது, அசாதாரண கோல் கீப்பராவார். அவரது கணிப்புகள் எதுவும் தவறவில்லை, மிகத்துல்லியமாகக் கணித்து ஜெர்மனியின் ஷாட்களுக்குத் தக்கவாறு தன்னை நகர்த்திக் கொண்டார். அதே போல் அவரது கோல் கீக்கும் மிகத்துல்லியமானவை.

ஜெர்மனி தாக்குதல் ஆட்டம் ஆடினாலும் எதிர்த்தாக்குதலில் ஸ்வீடனும் சளைக்கவில்லை. ஸ்வீடன் மிகவும் ஒரு கடினமான அணி, தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஜெர்மனி தடுப்பாட்டமே ஓரிரு கணங்களில் ஒன்றுமில்லாமல் போனது.

ஸ்வீடனின் அற்புத எதிர்த்தாக்குதலும் முதல் கோலும்

அப்படிப்பட்ட எதிர்த்தாக்குதலில்தான் ஜெர்மனி வீரரிடமிருந்து பந்தைத் தட்டிப்பறித்த ஸ்வீடன் பந்தை பெர்க் பெற, அவர் மிக அருமையாக பந்தை வேகமாக எடுத்து வந்தார், எமில் ஃபார்ஸ்பெர்க்குக்கு கொடுக்க ஜெர்மனி தடுப்பாட்ட வீரர்களே இல்லை, கிளாசன் நல்ல நிலையில் நிற்க ஃபார்ஸ்பெர்க் அவருக்குக் கொடுத்தார், ஆனால் கிளாசன் பந்து வந்தவுடனேயே கோலை நோக்கி அடித்திருக்க வேண்டும், ஆனால் அவர் பந்தை நிறுத்த ஹெக்டர் குறுக்கே புகுந்து கோல் முயற்சியை தடுத்தார், இது பெனால்டி பகுதியில் ஹெக்டர் இப்படி தடுத்ததால் பெனால்டி வேண்டும் என்று ஸ்வீடன் அடம்பிடித்தது, வீடியோ ரெஃபரல் செய்திருந்தால் ஒருவேளை பெனால்டி கிடைத்திருக்கலாம். பிறகு பெர்க் அடித்த தலை ஷாட் ஒன்று நூயரை சிக்கலுக்குள்ளாக்கியது.

ola%20toivenonjpg

ஸ்வீடன் வீரர் டாய்வொனென் கோல் அடித்த பிறகு. | ஏ.எஃப்.பி.

 

ஆட்டத்தின் 28வது நிமிடத்திலிருந்தே ஸ்வீடன் அணி கொஞ்சம் தாக்குதல் ஆட்டத்தில் வேகம் காட்டியது. 26வது நிமிடத்தில்தான் ரூடியின் மூக்கை உடைத்து ரத்தம் வர அவர் வெளியேறினார். 28வது நிமிடத்தில் அகஸ்டின்சன் வலதுபுறம் பந்தை எடுத்துச் சென்று கிராஸ் செய்தார், ஹெக்டர் அதனை தலையால் முட்ட ஸ்வீடனுக்கு கார்னர் வாய்ப்பு. கார்னர் ஷாட்டை வெர்னர் தலையால் முட்டி வெளியே தள்ளினார்.

32வது நிமிடத்தில் ஜெர்மனிவசம் இருந்த பந்தை ஸ்வீடன் பிடுங்கியது, டோனி குரூஸ்தான் பந்தை ஸ்விடன் வசம் விட்டவர், பந்தை ஸ்வீடன் வலது புறம் வேகமாக எடுத்து சென்றது, கிளாசன் பார்த்தார், நடுவில் டாய்வோனென் இருந்ததைக் கவனித்தார், அவரிடம் ஒரு அழகான பாஸைச் செய்ய இரண்டு ஜெர்மனி தடுப்பாட்ட வீரர்களுக்கு இடையே பந்தை மார்பில் தாங்கினார் டாய்வோனென், பிறகு முன்னேறி வந்த ஜெர்மன் கோல் கீப்பர் நூயரைத் தாண்டி தூக்கி விட்டார். பந்து கனவுக் காட்சி போல் கோலுக்குள் சென்றது. பந்தை தன் வசமிழந்த டோனி குரூஸ் தன் முகத்தில் கையை வைத்து கொண்டு குற்ற உணர்வில் தவித்தார். டோனி குரூஸ் ஒருவேளை அப்போது முடிவெடுத்திருப்பார் வெற்றி கோலை அடிக்கப்போவது தானே என்று!!

இடைவேளையின் போது ஸ்வீடன் மிக அபாயகரமாக 1-0 என்று முன்னிலையுடன் சென்றது.

இடைவேளைக்குப் பிறகு ஜெர்மனி வேறொரு அணியானது. இங்கிலாந்து போல் பின்களத்தில் 4 வீரர்கள், நடுக்களத்தில் 4 வீரர்கள் முன் களத்தில் 2 வீரர்கள் என்று நிலைநிறுத்தியிருந்தது.

marco%20Reusjpg

ஜெர்மனியின் முதல் கோல், மார்கோ ரியூஸ். | ஏ.எப்.பி.

 

இடைவேளை முடிந்து இறங்கியவுடன் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளவில்லை 48வது நிமிடத்தில் இடது புறம் வெர்னர் தாக்குதல் தொடுக்க பந்தை உள்ளுக்குள் தள்ளி 6 அடி பாக்சிற்குள் கிராஸ் செய்தார், கோம்ஸ் அதை சரியாகக் காலாளவில்லை, அவரிடமிருந்து சுழன்று சென்றது பந்து ஆனால் ஸ்வீடன் வீரரைக் கடந்து ரியூஸ் உள்ளே வந்து ஆல்சன் தள்ளி நிற்க கோலாக மாற்றினார், ஜெர்மனி சமன் செய்தது.

கோம்ஸைக் கொண்டுவந்ததும் ஜோக்கின் லோவின் அருமையான ஒரு முடிவாகும். கடந்த 26 போட்டிகளில் உட்கார வைக்கப்படாத ஓஸிலை உட்காரவைத்தது ஜோக்கிம் லோ-வின் தைரியமான முடிவாகும். மொத்தத்தில் கடுமையாக ஆடிய ஸ்வீடனை ஜெர்மனி 10 வீரர்களுக்குக் குறைக்கப்பட்டாலும் அபாரமான தனிநபர் திறமைகளினால் வென்றது. ஆனால் முல்லர் என்ன செய்கிறார்? அவர்பாட்டுக்கு வலது புறம் தெய்வமேனு ஆடப்பணிக்கப்பட்டிருப்பது ஏன்? ஒரு ஸ்ட்ரைக்கரைப் பூனைக்குட்டிப் போல் ஆக்கிவிட்டு விங்கில் ஜோக்கிம் லோ குட்டிப்போட்ட பூனை போல் அலைவது ஏன்? ஒருவேளை வரும் போட்டிகளில் இதற்கு விடை கிடைக்கலாம்.

கொரியாவை ஜெர்மனி வீழ்த்தி, மெக்சிகோவை ஸ்வீடன் வீழ்த்தினால் 3 அணிகளும் 6 புள்ளிகளுடன் இருக்கும், அப்போது கோல் வித்தியாசம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் 2 அணிகளைத் தீர்மானிக்கும். இந்த குரூப் எஃப் தான் ஊசி முனையில் தள்ளாடுகிறது.

ஜெர்மனி போன்ற அணிகளிடம் காணப்படும் முக்கிய குணாம்சம் என்னவெனில் பெரிய தொடர்களில் சரியான நேரத்தில் அவர்கள் ஆட்டம் உச்சம் பெறும் சூடுபிடிக்கும், நேற்று ஸ்வீடன் அணிக்கு எதிராக அதுதான் நடந்தது, ஆனால் ஸ்வீடன் அணி உண்மையில் கடும் அச்சுறுத்தலான அணியாகும், மெக்சிகோ தோற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

http://tamil.thehindu.com/sports/article24245098.ece

Link to comment
Share on other sites

உலகக்கோப்பையில் இங்கிலாந்து கோல் மழை- பனமாவை 6-1 என துவம்சம் செய்தது

 

 

அ-அ+

ஹாரி கேன் ஹாட்ரிக்கால் கோல் மழை பொழிந்த இங்கிலாந்து 6-1 என பனமாவை துவம்சம் செய்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. #WorldCup2018

 
 
 
 
உலகக்கோப்பையில் இங்கிலாந்து கோல் மழை- பனமாவை 6-1 என துவம்சம் செய்தது
 
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து அறிமுக அணியான பனாமை எதிர்கொண்டது.

பலம் வாய்ந்த இங்கிலாந்து தொடக்கம் முதலே கோல் மழை பொழிந்தது. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் முதல் கோலை பதிவு செய்தார். 22-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கேப்டன் ஹாரி கேன் கோல் அடித்தார். 36-வது நிமிடத்தில் லிங்கார்டு கோல் அடித்தார். 40-வது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் மேலும் ஒரு கோல் அடித்தார். 45-வது நிமிடம் முடிந்து காயத்திற்கான நேரத்தின் முதல் நிமிடத்தில் மற்றொரு பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஹாரி கேன் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து முதல் பாதி நேரத்தில் 5-0 என முன்னிலைப் பெற்றது.

2-வது பாதி நேரத்திலும் இங்கிலாந்து கையே ஓங்கியது. 62-வது நிமிடத்தில் ஹாரி கேன் மேலும் ஒரு கோல் அடித்தார். ஹாரி கேனின் ஹாட்ரிக் கோலால் 62-வது நிமிடத்தில் இங்கிலாந்து 6-0 என முன்னிலைப் பெற்றது. 62-வது நிமிடத்தில் கோல் அடித்ததும் ஹாரி கேன், லிங்கார்டு உள்பட முன்னணி வீரர்கள் வெளியேறினார்கள்.

201806241943369338_1_harryKane1-s._L_styvpf.jpg

அதன்பின் இங்கிலாந்து ஆட்டத்தில் சற்று வேகம் குறைந்தது. இதை பயன்படுத்தி பனாமா 78-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. ப்ரீ ஹிக்கை பயன்படுத்தி அடித்த பந்தை, கோல் எல்லைக்குள் வைத்து பலோய் காலால் உதைத்து கோலாக்கினார்.

அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இங்கிலாந்து 6-1 என வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் 2-0 என வெற்றி பெற்றிருந்ததால், இரண்டு வெற்றியுடன் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/24194337/1172361/WorldCup-2018-England-Beats-panama-harry-kane-Hat.vpf

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை கால்பந்து - ஜெர்மனி அதிகாரிகள் மீது ஸ்வீடன் பயிற்சியாளர் பாய்ச்சல்

 
அ-அ+

ஜெர்மனி அணியின் வெற்றியை அதிகாரிகள் கொண்டாடிய விதத்திற்கு ஸ்வீடன் பயிற்சியாளர் ஆண்டர்சன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். #WorldCup2018

 
 
 
 
உலகக்கோப்பை கால்பந்து - ஜெர்மனி அதிகாரிகள் மீது ஸ்வீடன் பயிற்சியாளர் பாய்ச்சல்
 
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆன ஜெர்மனி ‘எஃப்’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. ஜெர்மனியுடன் இதே பிரிவில் மெக்சிகோ, ஸ்வீடன், கொரியா அணிகள் இடம்பிடித்துள்ளன.

ஜெர்மனி தனது முதல் ஆட்டத்தில் மெக்சிகோவை எதிர்கொண்டது. இதில் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தி மெக்சிகோ அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் ஜெர்மனி நேற்று ஸ்வீடனை எதிர்கொண்டது.

முதல் பாதி நேரத்தில் ஸ்வீடன் 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் 48-வது நிமிடத்தில் ஜெர்மனி ஒரு கோல் அடித்தது. இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. அதன்பின் காயத்திற்கான நேரத்தில் ஆட்டத்தின் 95-வது நிமிடத்தில் ஜெர்மின் மற்றொரு கோல் அடித்து 2-1 என வெற்றி பெற்றது.

மயிரிழையில் தப்பி வெற்றி பெற்ற ஜெர்மனியின் வெற்றியை, அந்நாட்டு பயிற்சியாளர்கள் குழு உட்பட அதிகாரிகள் ஸ்வீ்டன் பயிற்சியாளரை மோதும் வகையில் வேகமாக ஓடிவந்து கொண்டாடினார்கள். இது ஸ்வீடன் பயிற்சியாளருக்கு எரிச்சலை கொடுத்துள்ளது.

201806241803213843_1_sweden001-s._L_styvpf.jpg

இதுகுறித்து ஸ்வீ்டன் பயிற்சியார் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘வெற்றியை கொண்டாடிய சில அதிகாரிகள் எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். அப்போது எங்களது முகங்களை உரசிச் செல்வது போன்று சென்றார்கள். அவர்களின் செய்கை எனக்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. நான் மட்டுமல்ல எங்கள் அணியின் பெரும்பாலானோர் கோபம் அடைந்தனர். நாங்கள் 95 நிமிடங்கள் போராடினோம். அதனால் நான் மிகவும் கோபம் அடைந்தேன்’’ என்றார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/24180321/1172346/FIFA-World-Cup-2018-Angry-Sweden-coach-Janne-Andersson.vpf

Link to comment
Share on other sites

`சாம்பியன்களுக்கு எப்படி வெற்றிபெற வேண்டுமெனத் தெரியும்!' - நிரூபித்த ஜெர்மனி #GERSWE

 
 

அன்று மான்செஸ்டர் யுனைட்டெட் ரசிகர்கள் சொன்னது போலவே, இன்று ஜெர்மனி ரசிகர்கள் சொல்கிறார்கள்… `சாம்பியன்களுக்கு எப்போது ஜெயிக்க வேண்டும், எப்படி ஜெயிக்க வேண்டும் என்று தெரியும்!’

`சாம்பியன்களுக்கு எப்படி வெற்றிபெற வேண்டுமெனத் தெரியும்!' - நிரூபித்த ஜெர்மனி #GERSWE
 

கால்பந்து அரங்கில் ஒப்பீடுகள் ஒருபோதும் ஓயவே ஓயாது. இதோ இன்று புதிய ஒப்பீடு. 1999 சாம்பியன்ஸ் லீக் ஃபைனலுக்கும், நேற்று நடந்த ஜெர்மனி – ஸ்வீடன் மேட்ச்சுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதாகச் சொல்கிறார்கள் கால்பந்து நிபுணர்கள். #GERSWE

#GERSWE

கேம்ப் நூ, பார்சிலோனாவின் ஹோம் கிரவுண்ட். இங்கு, 90,245 ரசிகர்கள் கூடியிருக்கிறார்கள். இத்தனைக்கும் அது பார்சிலோனாவுக்கு சம்பந்தமில்லாத மேட்ச். மான்செஸ்டர் யுனைட்டெட் – பேயர்ன் மியூனிச் கிளப்கள் மோதும், 1999 சாம்பியன்ஸ் லீக் ஃபைனல். ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்திலேயே பேயர்ன் மியூனிச் விங்கர் மரியோ பேஸ்லர் கோல் அடித்துவிட்டார். 90 நிமிடம் வரை மான்செஸ்டர் யுனைடெட் இதற்கு பதிலடி கொடுக்கவில்லை. ஸ்டாப்பேஜ் டைம்… 3 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்தால் வெற்றி. வாய்ப்பிருக்கிறதா? 90 நிமிடங்களில் அடிக்காத கோல்களை கடைசி 3 நிமிடத்தில் அடிக்க முடியுமா?  `ரெட் டெவில்’ ரசிகர்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்.

 

 

#GERSWE

இஞ்சுரி டைம் 90+1… 18 யார்டு பாக்ஸுக்கு அருகே நின்றிருந்த ஷெரிங்ஹம் காலுக்கு வருகிறது பந்து. அதை அப்படியே கோல் போஸ்ட்டின் லெஃப்ட் கார்னரில் கோல் அடிக்கிறார் ஷெரிங்ஹம். ஸ்கோர் 1-1. மான்செஸ்டர் யுனைட்டெட் ரசிகர்களால் நம்பமுடியவில்லை. இன்னும் இரண்டு நிமிடங்கள். ஒரேயாரு கோல்… ஏதோ ஓர் ஒளி தெரிகிறது. அவசர அவசரமாக கேம் ரீஸ்டார்ட் ஆகிறது. 90+3 நிமிடம்… அதாவது மேட்ச் முடியப் போகும் கடைசி 60 நொடிகள். மான்செஸ்டர் யுனைட்டெட் கிளப்புக்கு கார்னர் கிக் கிடைக்கிறது. அந்த கிராஸை ஷெரிங்ஹம் ஹெட்டர் செய்ய, அது 6 யார்டு பாக்ஸில் கோல் போஸ்ட்டுக்கு மிக அருகில் நின்றிருந்த Solskjær காலுக்கு ஏதுவாக வருகிறது. அதை அவர் அப்படியே நேக்காக ஒரே டச்சில் வலைக்குள் செலுத்தினார். கோல்… அதுவும் 3 நிமிடத்தில் இரண்டு கோல்கள். பேயர்ன் மியூனிச் வீழ்ந்தது. 90 நிமிடம் கட்டிக் காப்பாற்றிய டிஃபன்ஸ் கடைசி 3 நிமிடங்களில் சுக்குநூறாக உடைந்தது. உடைத்தது மான்செஸ்டர் யுனைட்டெட்!  

 

ஏற்கெனவே, அந்த சீசனில் பிரிமியர் லீக், எஃப்.ஏ கோப்பை வென்றிருந்த மான்செஸ்டர் யுனைடெட், போனஸாக சாம்பியன்ஸ் லீக் பட்டமும் வென்றது. டிரிபிள் சாம்பியன். இந்த வெற்றிக்குப் பின் சாம்பியன்களுக்கு எந்த நேரத்தில் வெற்றிபெற வேண்டும் என்பது அத்துப்படி என, சர் அலெக்ஸ் பெர்குசன் அணியை ஏகத்துக்கும் பாராட்டினர்... நேற்று, ஜோகிம் லூவின் ஜெர்மனி அணியைப் பாராட்டியது போல!

மேன் யூ ரசிகர்கள் போலவே, ஜெர்மனி ரசிகர்களும் நேற்று நம்பிக்கையிழந்துவிட்டனர். ஆட்டம் 1-1 டிராவில் முடியும். ரவுண்ட் ஆஃப் 16 கனவு கலைந்து விடும் என ஃபிஷ்ட் ஸ்டேடியத்தில் இருந்த ஒவ்வொரு ஜெர்மனி ரசிகனும் சோகத்தில் இருந்தான். சிலருக்கு அழுகையும் வந்தது. இதே மைதானத்தில் எட்டு நாள்களுக்கு முன் ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில், கடைசி நிமிடத்தில் ஃப்ரீ கிக்கை கோல் அடித்து, ஆட்டம் டிராவில் முடிய காரணமாக இருந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அது கிறிஸ்டியானோ ரொனால்டோ… இது டோனி க்ரூஸ்… ரியல் மாட்ரிட் வீரர்கள் என்பதைத்தாண்டி, இருவருக்கும் வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. ஆனால், அந்த லாஜிக்கெல்லாம் இந்த நேரத்தில் எடுபடாது.

 

 

இப்போது, பாக்ஸின் வலதுபுறம் ஜெர்மனிக்கு ஃப்ரீ கிக் கிடைத்திருக்கிறது. இஞ்சுரி டைம் 90+6… ஸ்கோர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. ரொனால்டோ மீது எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது டோனி க்ரூஸ் மீது யாருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.  ஃப்ரீ கிக்கை எடுக்க ஆயுத்தமாகிறார் க்ரூஸ். அருகில் நிற்கிறார் ரியூஸ். ஒட்டுமொத்த ஸ்வீடன் வீரர்களும் 6 யார்டு பாக்ஸ் அருகே அடைத்து நிற்கிறார்கள். பொதுவாக, கிராஸ் போடுவதில் க்ரூஸ் வல்லவர். கார்னர் கிக் எடுப்பதில் கிங். இப்போது கார்னர் கிக்கும் இல்லை. கிராஸ் போட்டாலும், அதை எந்தளவு ஹெட்டர் கோல் அடிப்பார்கள் என்றும் தெரியாது. குழப்பம். Clock is ticking…

#GERSWE

அருகில் இருந்த ரியூஸ், டோனி க்ரூஸிடம் சொல்கிறார். `கிராஸ் போட வேண்டாம்… டேரக்ட்டா அடிச்சிரு…!’ அதுதான் சரி எனப்பட்டது. பந்தை லேசாக ரியூஸிடம் தட்டிக் கொடுக்கிறார் க்ரூஸ். ரியூஸ் மீண்டும் அதை டோனி க்ரூஸ் பக்கம் தட்டி விடுகிறார். இவர்கள் ஏதோ வித்தை காட்டுகிறார்கள் என ஸ்வீடன் வீரர்கள் இருந்த இடத்தில் இருந்து அசையவில்லை. இதுதான் நமக்குத் தேவை. கோல் கீப்பரும் லெஃப்ட் கார்னரில் இருக்கிறார். கோல் போஸ்ட்டின் டாப் ரைட் கார்னரில் கொஞ்சம் இடைவெளி தெரிகிறது. கோல் கீப்பரால் டைவ் அடித்துத் தடுக்கவும் வாய்ப்பில்லை. ஒரு கர்வ் போட்டால் போதும். கோலாகி விடும். க்ரூஸ் அடுத்து யோசிக்கவே இல்லை; தாமதிக்கவும் இல்லை. அந்த கேப்பில் அடித்தார். கோல் அடித்தார். அது வெற்றிக்கான கோல். ஜெர்மனியை மீட்டெடுத்த கோல். ரசிகர்களைத் துள்ளிக் குதிக்க வைத்த கோல். ஜோகிம் லூவை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த கோல். மொத்தத்தில் கொண்டாட்டத்துக்கான கோல்.

அன்று மான்செஸ்டர் யுனைட்டெட் ரசிகர்கள் சொன்னது போலவே, இன்று ஜெர்மனி ரசிகர்கள் சொல்கிறார்கள்… `சாம்பியன்களுக்கு எப்போது ஜெயிக்க வேண்டும், எப்படி ஜெயிக்க வேண்டும் என்று தெரியும்!’

https://www.vikatan.com/news/sports/128683-germany-sweden-match-resembles-manchester-uniteds-injury-time-winner-over-bayern-munich.html

Link to comment
Share on other sites

ஜப்பான், செனகல் போட்டி வேற்றிதோல்வியின்றி முடிந்தது 

 

 
 

2018 உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் ஆசியாவையும் ஆபிரிக்காவையும் கொடிகட்டிப் பறக்கசெய்வதற்கு முயற்சித்துவரும் ஜப்பானும், செனகலும் தமக்கு இடையிலான எச் குழு லீக் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டன.

japan_satisfied_with_a_draw.jpg

எக்கெத்தரினா எரினா விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் மாற்று வீரராக களம் நுழைந்த கெய்சூக் ஹோண்டா போட்டியின் 78ஆவது நிமிடத்தில் போட்ட அபார கோல் போட்டியை வெற்றிதோல்யின்றி முடிவடையச் செய்தது.

இதன் மூலம் மூன்று வெவ்வேறு உலகக் கிண்ணப் போட்டிகளில் (2010, 2014, 2018) ஜப்பான் சார்பாக கோல் போட்ட முதலாவது வீரரான ஹொண்டா, ஜப்பான் 1 க்கு 2 என்ற கோல்கள் அடிப்படையில் பின்னிலையில் இருந்தபோது ஷஞ்சி ககாவாவுக்குப் பதிலாக மாற்று வீரராக களம் இறக்கப்பட்டார். 

senagal_manu__no_10__scores.jpg

போட்டி முடிவடைய 12 நிமிடங்கள் இருந்தபோது ஹொண்டா எதிரணியின் கோலை நோக்கி பந்தை பலமாக உதைத்தபோது, செனகல் கோல்காப்பாளர் காதிம் எடியாயே இழைத்த தவறினால் ஜப்பானுக்கு கோல் கிடைத்தது.

இரண்டு அணிகளும் சமமாக மோதிக்கொண்ட இப் போட்டியின் 11ஆவது நிமிடத்தில் ஜப்பான் கோல்காப்பாளர் எய்ஜி கவாஷிமா திசைதிருப்ப விளைந்த பந்து சாடியோ மானேயின் முழங்காலில் பட்டு செனகலுக்கு கோலானது.

senegal_wabe_goal.jpg

கொல் நிலையை சமப்படுத்த கடும் முயற்சி எடுத்துக்கொண்ட ஜப்பான் 34ஆவது நிமிடத்தில் டக்காஷி இனுய் மூலம் அதனை ஈடேற்றிக்கொண்டது.

இந் நிலையிலிருந்து இரண்டு அணியினரும் வெற்றி கோலைப் போடும் நோக்கில் முரட்டுத்தனத்தைக் கடைப்பிடித்தனர். இதன் காரணமாக இத்தாலி மத்தியஸ்தர் ஜியான்லூக்கா ரொச்சியின் மஞ்சள் அட்டைக்கு சில வீரரகள் உள்ளானார்கள்.

japan_inui.jpg

எவ்வாறாயினும் போட்டியின் 71ஆவது நிமிடத்தில் மூசா வாகுவே போட்ட கோல் செனகலை மீண்டும் முன்னிலையில் இட்டது.

மறுநிமிடம் ககாவாவுக்குப் பதிலாக மாற்று வீரராக களம நுழைந்த ஹொண்டா 6 நிமிடங்கள் கழித்து கோல்போட்டு ஜப்பானின் ஹீரோவானார்.

japan_honda_eaqualizes.jpg

இதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் வெற்றி கோலுக்காக கடுமையாக முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சிகள் கைகூடாமல் போக ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தபோதிலும் தலா 4 புள்ளிகளுடன் இரண்டு அணிகளும் எச் குழுவில் முன்னிலையில் இருக்கின்றன. 

http://www.virakesari.lk/article/35490

Link to comment
Share on other sites

உலகக் கோப்பை கால்பந்து - போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணி வென்றது

 
அ-அ+

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி பெற்றது. #WorldCup2018 #COLPOL

 
 
 
 
உலகக் கோப்பை கால்பந்து - போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா அணி வென்றது
 
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எச் பிரிவில் இடம் பிடித்துள்ள போலந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதின.
 
போட்டி தொடங்கியதில் இருந்து கொலம்பியா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.
 
இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கொலம்பியா அணியின் சார்பில் ராடமல் பால்கோ 70-வது நிமிடத்திலும், ஜுவான் குவாட்ராடோ 75-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். இதனால் கொலம்பியா அணி 3-0 என முன்னிலை பெற்றது.
 
கொலம்பியா அணியினரின் அதிரடி ஆட்டத்தின் முன்னால் போலந்து வீரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
கூடுதலாக கிடைத்த நிமிடங்களிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் கொலம்பியா அணி 3 புள்ளிகள் பெற்றது.
 
ஆனாலும், எச் பிரிவில் ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் கொலம்பியா, போலந்து அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/25013806/1172402/Colombia-beat-Poland-30-in-Group-H-match.vpf

Link to comment
Share on other sites

ஃபிஃபா: கால்பந்து தோல்விக்கு காரணமானவர் மீது இனவெறி தாக்குதல்

 
 

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனியிடம் ஸ்வீடன் அணி தோற்க காரணமாக இருந்த வீரர் மீது சமூக வலைத்தளங்களில் இனவெறி தாக்குதல் நடந்து வருகிறது.

World Cup 2018படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜிம்மி டுர்மாஸ்

இந்த தாக்குதல்கள் குறித்து காவல் துறையில் புகார் செய்யப்படும் என்று ஸ்வீடன் கால்பந்து கூட்டமைப்பு கூறியுள்ளது.

சனிக்கிழமையன்று நடப்பு சாம்பியன் ஜெர்மனியுடன் ஸ்வீட்ன் அணி மோதிய ஆட்டத்தில், கடைசி நேரத்தில் ஸ்வீடன் வீரர் ஜிம்மி டுர்மாஸ் கால்பந்து விளையாட்டு விதிகளை மீறி ஃபௌவ்ல் உண்டாக்கியதால் ஜெர்மனிக்கு ஃபிரீ- கிக் தரப்பட்டது.

இப்போட்டியின்போது ஜெர்மனி வீரர், டிமோ வீரர் மீது டுர்மாஸின் கால் பட்டது.

இந்த ஃபிரீ- கிக்கில் ஜெர்மனி வீரர் டோனி க்ரூஸ் அடித்த கோல் ஜெர்மனி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

இதைத்தொடர்ந்து ஃபௌவ்லுக்கு காரணமான ஜிம்மி டுர்மாஸின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மீதான இன ரீதியான தாக்குதல் தொடங்கியது.

ஸ்வீடன் அணிக்கு விளையாடினாலும் ஜிம்மியின் பெற்றோர் துருக்கியில் இருந்து குடியேறியவர்கள் ஆவர். அவர்கள் சிரியாவின் அசீரிய கிறித்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஜிம்மி மீது வெறுப்பு காட்டப்படுவது மிகவும் முட்டாள்தனமானது என்று அவரது சக வீரர் ஜான் கைடெட்டி கூறியுள்ளார்.

"எதைப்பற்றியும் நான் கவலைப்படவில்லை. என் நாட்டுக்காக விளையாடுவதில் நான் பெருமைப்படுகிறேன்," என்று ஜிம்மி கூறியுள்ளார்.

ஃபிரீ-கிக்கில் ஜெர்மனி கோல் அடிக்காமல் இருந்திருந்தால் ஒன்றுக்கு ஒன்று என ஆட்டம் சமனில் முடிந்திருக்கும். தற்போது வெற்றி பெற்றுள்ளதால், ஜெர்மனி புள்ளிகள் பட்டியலில் ஸ்வீடனை சமன் செய்துள்ளது.

புதன்கிழமை நடக்கவுள்ள குரூப்-எஃப்இன் கடைசி ஆட்டத்தில் தென்கொரிய அணியுடன் ஜெர்மனி மோதுகிறது.

இந்த வெற்றிக்குப் பிறகு ஜெர்மனி அணியினர் அதைக் கொண்டாடிய விதம், ஸ்வீடன் அணியினரை கோபப்படுத்தியுள்ளது.

"அவமானப்படுத்தும் வகையில் சிலர் கொண்டாடினார்கள். அதனால் தேவையற்ற கோபம் உண்டானது. பின்னர் அதற்கு மன்னிப்பு கேட்டார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்று ஸ்வீடன் அணியின் பான்டஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

https://www.bbc.com/tamil/sport-44595692

Link to comment
Share on other sites

இன்றைய உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ? விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை !

 

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் வரவேற்பு நாடான ரஷ்யா, உருகுவே (ஏ குழு), பிரான்ஸ் (பி குழு), குரோஏஷியா (சி குழு), இங்கிலாந்து, பெல்ஜியம் (ஜீ குழு) ஆகிய ஆறு அணிகள் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளன. 

fifa.jpg

இந் நிலையில் இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெறவுள்ள மற்றைய எட்டு அணிகளைத் தீர்மானிக்கும் முதலாம் சுற்றின் மூன்றாம் கட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

குறிப்பாக நடப்பு சம்பியன் ஜேர்மனி, ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸில், ஐரோப்பிய பலசாலிகளான ஸ்பெய்ன், போர்த்துக்கல் ஆகிய அணிகள் சம்பந்தப்பட்ட போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இன்று முதல் நான்கு தினங்களுக்கு அந்தந்த குழுக்களின் கடைசி இரண்டு போட்டிகளும் ஏக காலத்தில் நடைபெறும்.

 

ரஷ்யா எதிர் உருகுவே

 

ரஷ்யாவும் உருகுவேயும் ஏ குழுவிலிருந்து ஏற்கனவே இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றுவிட்டன. எனினும் இக் குழுவில் முதலாம் இடத்தை அடையப் போகும் அணியை தீர்மானிக்கும் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் இன்று மோதவுள்ளன. 

uruguay_vs_russia.jpg

இதன் காரணமாக சமாரா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இப் போட்டி விறுவிறுப்பை தோற்றுவிக்கவுள்ளது. மேலும் ரஷ்ய இரசிகர்கள் அரங்கில் பெருமளவில் குவிவார்கள் என்பதால் உருகுவே சற்று அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும்.

தனது சொந்த நாட்டில் முதலிரண்டு போட்டிகளில் எவ்வித சிரமுமின்றி சவூதி அரேபியாவையும் எகிப்தையும் வெற்றிகொண்ட் ரஷ்யா, இன்றைய தினம் உருகுவேயிடம் கடும் சவாலை எதிர்கொள்ளவுள்ளது.

 

எகிப்து எதிர் சவூதி அரேபியா

 

ஆறுதல் வெற்றிக்காக எகிப்தும் சவூதி அரேபியாவும் வொல்கோக்ரட் விளையாட்டரங்கில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன. 

saudi_arabia_vs_egypt.jpg

பெரும்பாலும் இப் போட்டியில் எகிப்து வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் ஏக காலத்தில் மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும். 

 

 

அணிகள் நிலை ஏ குழு

 

அணி வி வெ தோ பெ கொ நி பு  

ரஷ்யா                           2 2 0 0 8 1 +7 6   

உருகுவே           2 2 0 0 2 0 +2 6  

எகிப்து                          2 0 0 2 4 -3 0  

சவூதி அரேபியா    2 0 0 2 0 6 -6 0  

 

(குறிப்பு: வி: விளையாடிய போட்டிகள், வெ: வெற்றி, ச: வெற்றிதோல்வியில்லை, தோ: தோல்வி, பெ: பெற்ற கோல்கள், கொ: கொடுத்த கோல்கள், நி: நிகர கோல்கள், பு: புள்ளிகள்)

 

 

(என்.வீ.ஏ.)

http://www.virakesari.lk/article/35521

இன்றைய போட்டிகள்.....

 

உருகுவே எதிர் ரஷ்யா

சவுதி அரேபியா எதிர் எகிப்து

ஸ்பெயின் எதிர் மொரோக்கோ

ஈரான் எதிர் போர்த்துகல்

Link to comment
Share on other sites

கேப்டனின் கால்கள்; ஹாரி கேனின் ஹாட்ரிக்; பனாமாவை ஊதிய இங்கிலாந்து: சுவையான தகவல்கள்

 

 
harry%20kane

ஹாட்ரிக் நாயகன், இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன். | படம்: ஏ.பி.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்தில் நேற்று பனாமாவை 6-1 என்ற கோக் கணக்கில் சிதைத்த இங்கிலாந்து இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது, இங்கிலாந்தின் ஹாரி கேன் ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

ஹாரி கேன் இதுவரை 5 கோல்களை அடித்துள்ளார்.

 

இங்கிலாந்து அணியிம் உலகக்கோப்பை பெரிய வெற்றியாகும் இது. ஹாட்ரிக்கில் 2 பெனால்டி கிக்குகளாகும், இந்த வெற்றி மூலம் பெல்ஜியம் அணியும் இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது.

இந்தத் தோல்வி மூலம் மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் பெரும் உலகக்கோப்பைக் கனவு சிதைந்தது குரூப் ஜியில் 9 கோல்களை பனாமா வாங்கி வெளியேறியது.

ஆஃப் டைமின் போதே இங்கிலாந்து கடக்க முடியாத 5-0 என்ற முன்னிலை பெற்றது, ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜான் ஸ்டோன்ஸ் கார்னர் ஷாட்டை தன் மார்க்கருக்கும் போக்குக் காட்டி தலையால் முதல் கோலை அடித்து முன்னிலை கொடுத்தார்.

22வது நிமிடத்தில் பனாமாவின் எஸ்கோபார் இங்கிலாந்து வீரர் ஜெசி லிங்கார்டைத் தள்ளி விட பெனால்டி கிக் கிடைத்தது இதனை கேப்டன் ஹாரி கேன் கோலாக மாற்றினார்.

பிறகு 36வது நிமிடத்தில் லிங்கர்ட் மிக அருமையான ஒரு கோலை அடிக்க, 40வது நிமிடத்தில் ஃப்ரீ கிக்கில் மீண்டும் ஸ்டோன்ஸ் தன் இரண்டாவது கோலை அடிக்க இங்கிலாந்து 4-0 என்று முன்னிலை பெற்றது. பிறகு ஆஃப் டைம் நெருங்கும் சமயத்தில் மீண்டும் கேப்டன் ஹாரி கேன் பெனால்டி கிக்கில் 5வது கோலை அடித்தார். 62வது நிமிடத்தில் கேப்டன் ஹாரி கேன் ஃப்ளூக்கில் ஹாட்ரிக் கோல் அடித்தார், பந்து அவரது ஹீலில் பட்டு கோலுக்குள் சென்றது.

பனாமா அணிக்காக பிலிப் பேலாய் ஆறுதல் கோலை அடிக்க 6-1 என்று பனாமா சிதைந்தது:

சுவையான தகவல்கள்:

ஹாரி கேன் உலகக்கோப்பைக் கால்பந்தில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தும் 3வது இங்கிலாந்து வீரர் ஆவார். ஜெஃப் ஹர்ஸ்ட் 1966-ல் ஜெர்மனிக்கு எதிராகவும், கேரி லினேகர் 1986-ல் போலந்துக்கு எதிராகவும் உலகக்கோப்பை ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய இங்கிலாந்து வீரர்களாவர்.

ஆஃப் டைமுக்கு முன்னதாக 5 கோல்கள் அடிப்பது இது 5வது முறையாகும் கடைசியாக, 2014 உலகக்கோப்பையில் ஒருதேசமே கண்ணீரில் ஆழ்ந்த பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில்ல் ஜெர்மனி இடைவேளைக்கு முன்பாகவே 5 கோல்களை சாத்தியது.

பனாமா 9 கோல்களை 2 ஆட்டங்களில் மொத்தமாக வாங்கியது 2வது அதிகபட்ச கோல் வாங்கலாகும், 1974ல் ஹைட்டி அணி 10 கோல்களை 2 போட்டிகளில் வாங்கியதையட்யடுத்து பனாமா அணி 9 கோல்களை வாங்கியுள்ளது.

107 பாஸ்களுடன் கைல் வாக்கர் அதிக பாஸ்களைச் செய்த வீரராகத் திகழ்கிறார், இதில் எதிரணியினர் பகுதியில் 55 பாஸ்கள். அதே போல் 120 முறை பந்தை டச் செய்துள்ளார் 6 முறை கிளியர் செய்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article24253371.ece

Link to comment
Share on other sites

உலகக் கோப்பையில் புதிய சர்ச்சை... மீண்டும் ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷ்யா! #WorldCup

 

உலகக் கோப்பையை நடத்தும் நாடு, சொந்த மண், ரசிகர்களின் உற்சாகம் என ரஷ்ய வீரர்கள் இவ்வளவு துடிப்பாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவர்களது முந்தைய செயல்பாடு அவர்களை சந்தேகக்கண்கொண்டே பார்க்கச் சொல்கிறது.

உலகக் கோப்பையில் புதிய சர்ச்சை... மீண்டும் ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷ்யா! #WorldCup
 

விளையாட்டு உலகத்தைப் பொறுத்தவரை ரஷ்யாவையும் ஊக்கமருந்தையும் பிரித்துப்பார்க்க முடியாமலே உள்ளது. ஒலிம்பிக் தொடங்கி ஒவ்வொரு டோர்னமென்ட்டிலும் `டோப்’ விவகாரத்தில் சிக்கி பெயரைக் கெடுத்துக்கொள்வது அவர்கள் வாடிக்கை. குழு விளையாட்டு மட்டுமல்லாது, தனிநபர் விளையாட்டுகளிலும் ஊக்கமருந்துச் சோதனையில் பதக்கம் இழந்த, தடை விதிக்கப்பட்ட ரஷ்ய வீரர், வீராங்கனைகள் ஏராளம். இந்த உலகக் கோப்பையும் அதற்கு விதிவிலக்கல்ல.

ரஷ்யா

ரஷ்யாவில் உலகக்கோப்பை தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே, ஊக்கமருந்துச் சோதனையில் ரஷ்ய கால்பந்து வீரர்களும் சிக்கியிருக்கிறார்கள், அவர்களை உலகக்கோப்பைக்கான ரஷ்ய அணியில் இடம்பெறக் கூடாது என்பதில் ஊக்கமருந்துக்கு எதிராக போராடுபவர்கள், பத்திரிகையாளர்கள் தெளிவாக இருந்தனர். அதனால்தான், ஊக்க மருந்துப் பிரச்னையை உலகத்துக்கு தொடர்ந்து அம்பலப்படுத்திவரும், ஜெர்மனியைச் சேர்ந்த ஹஜோ செப்பெல்ட் (Hajo Seppelt) என்பவருக்கு, இந்த உலகக் கோப்பையை நேரில் கண்டுகளிக்க அனுமதி அளிக்கவில்லை. `ரஷ்யாவுக்கு வேண்டப்படாதவர்கள்’ பட்டியலில் அவர் இடம்பெற்றிருப்பதால், செப்பெல்ட்டுக்கு விசா வழங்கவில்லை எனக் காரணம் தெரிவித்திருந்தது ரஷ்யா.

 

 

எதிர்பார்த்ததுபோலவே, இந்த உலகக் கோப்பையிலும் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தர வரிசைப் பட்டியலில் 70-வது இடத்தில் இருக்கிறது ரஷ்யா. முக்கிய டோர்னமென்ட்டுகளில் ரஷ்யா கடைசியாகப் பங்கேற்ற 9 போட்டிகளில், ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. ஏழு வார்ம் அப் போட்டிகளில் ஒன்றில்கூட வெற்றிபெறவில்லை. ஆனால், உலகக்கோப்பையின் முதல் போட்டியில், சவுதி அரேபியாவுக்கு எதிராக 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இரண்டாவது போட்டியில் எகிப்தை 3-0 என வீழ்த்தி, ஒரு போட்டியை மீதம் வைத்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின், உலகக்கோப்பையில் ரஷ்யா அடைந்த மாபெரும் வெற்றி இது. 

 

 

வெற்றி, தோல்விகள் ஒருபக்கம் இருந்தாலும், முதல் போட்டியின்போது ரஷ்ய வீரர்கள் கடைசி வரை சளைக்காமல் ஓடியது, கால்பந்து உலகில் பலரது புருவத்தையும் உயர்த்தியது. அந்த சந்தேகத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இருந்தது, FIFA வெளியிட்ட ஒரு புள்ளி விவரம். தனி நபர்களும்  ஒட்டுமொத்த அணிகளும் களத்தில் ஓடிய தூரம் குறித்த அந்தப் புள்ளிவிவரத்தில், ரஷ்ய அணியின்  `ஓட்டம்’ பிரமிக்கவைக்கிறது. சவுதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில், ரஷ்ய வீரர்கள் கடந்த தூரம் 118 கி.மீ. இரண்டாவது போட்டியில் எகிப்துக்கு எதிராக ஒட்டுமொத்த ரஷ்ய அணியும் 115 கி.மீ தூரத்தை கவர் செய்திருந்தது. இந்தப் பட்டியலில்,  எகிப்து 112 கி.மீ பயணித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 

ரஷ்யா

தனி நபர் வரிசையிலும் ரஷ்யா வீரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ரஷ்ய மிட் ஃபீல்டர் அலெக்சாண்டர் கோலோவின், ஒரு போட்டியில் 25.15 கி.மீ வரை ஓடியுள்ளார். அவர் மட்டுமல்ல அதிக டிஸ்டன்ஸ் கவர் செய்த டாப் -10 வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் இருப்பதும் ரஷ்ய வீரர்களே.  ஒரு நிமிடத்துக்கு கோலாவின்  118.1 மீ, அலெக்ஸாண்டர் சமடோவ் 116.7 மீ, ஐயூரி கஸின்ஸ்கி 113.9 மீட்டர் தூரம் ஓடியுள்ளனர். 

உலகக்கோப்பையை நடத்தும் நாடு, சொந்த மண், ரசிகர்களின் உற்சாகம் என ரஷ்ய வீரர்கள் இவ்வளவு துடிப்பாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவர்களது முந்தைய செயல்பாடு அவர்களை சந்தேகக்கண்கொண்டே பார்க்கச்சொல்கிறது. 2014 உலகக் கோப்பையில் இடம்பெற்ற ஒட்டுமொத்த ரஷ்ய வீரர்களிடமும் சோதனை நடத்தியதில், சிலர் ஊக்க மருந்துச் சோதனையில் சிக்கியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதேபோல, 2018 உலகக் கோப்பைக்கான ரஷ்ய அணியில், வீரர் ஒருவர் ஊக்கமருந்துச் சோதனையில் சிக்கியுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை, ரஷ்ய விளையாட்டு அமைச்சகம் மற்றும் ரஷ்ய கால்பந்து கூட்டமைப்பு இணைந்து மறைத்துவிட்டதாக, இங்கிலாந்து பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

 

 

உலகக்கோப்பை தொடங்குவதற்கு 18 மாதங்களுக்கு முன்பே, 155 ரஷ்ய கால்பந்து வீரர்கள் ஊக்கமருந்துச் சோதனையில் சிக்கியிருப்பதாகவும், அதில் 34 பேருக்கு எதிராக சரியான ஆதாரங்கள் இருப்பதாகவும், புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, FIFA-விடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது அவர்கள் குற்றச்சாட்டு. அதைவிட, தடைசெய்யப்பட்ட steroid dexamethasone பயன்படுத்திய ரஸ்லன் கேம்போலாவ், இந்த உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்ததுதான் உச்சம். கடைசியில் அவர், காயம் காரணமாக அணியில் இருந்து விலகியது வேறு விஷயம். காயத்தால் அவர் விலகினாரா இல்லை, ஊக்கமருந்துப் புகாரில் இருந்து தப்பிக்க ரஷ்ய கால்பந்து அமைப்பே இந்த வேலையைச் செய்ததா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. 

ரஷ்யா

சோச்சியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்குப் பின், ரஷ்ய அரசு ஊக்கமருந்துச் சோதனையை தீவிரப்படுத்தியது. ஒவ்வொரு ரஷ்ய வீரரும் தங்கள் ரத்த, சிறுநீர் மாதிரிகளைக் கொடுத்து, ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என  உத்தரவிடப்பட்டது. இருப்பினும், சிறுநீர் மாதிரியில் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தால், `clean urine bank’ என்ற முறைகேடான அமைப்பு மூலம், வீரர்கள் போலி மாதிரிகளைக் கொடுத்து தப்பித்துவந்துள்ளனர். இந்த பேங்க் மூலம், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் மாற்றப்பட்டுள்ளதாக `The daily Mail’ குறிப்பிட்டுள்ளது.

`கால்பந்து வீரர் கேம்பலோவின் சிறுநீரக மாதிரி உண்மையானது அல்ல; அவரது சிறுநீர் மாதிரிக்குப் பதிலாக வேறு ஒரு விளையாட்டு வீரரின் சிறுநீரக மாதிரி வைக்கப்பட்டிருந்தது.’ என, சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் விசாரணையாளரான பேராசிரியர் ரிச்சர்டு மெக்லேரன் தெரிவித்தார். இதேபோல, ஊக்கமருந்தில் சிக்கிய பலரது ஆவணங்கள் FIFA வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், FIFA இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைவிட, உலகக் கோப்பைக்கும் கால்பந்துக்கும் களங்கம் ஏற்படும் என்பதால், இதை அப்படியே மூடிமறைக்க முயற்சிக்கிறது என்பது இங்கிலாந்துப் பத்திரிகைகளின் வாதம். ஆனால், `ரஷ்ய கால்பந்து வீரர் ஊக்கமருந்து பயன்படுத்தினார் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை’ என  FIFA விளக்கம் அளித்துள்ளது.

அதேநேரம், உலகக்கோப்பை நடத்தும் உரிமம் பறிபோன ஆத்திரத்தில், இங்கிலாந்து பத்திரிகைகள் தங்கள்மீது இப்படி அபாண்டமாகக் குற்றம் சாட்டுவதாக ரஷ்யா தெரிவிக்கிறது. `FIFA எங்கள் அணியை 120 முறை சோதித்துவிட்டது, ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு 200 முறை சோதித்துவிட்டது. எங்கள் நாட்டின் ஊக்கமருந்து தடுப்பு ஆணையம், பயிற்சியின்போதே எங்கள் வீரர்களை பலமுறை பரிசோதித்துவிட்டது. இங்கிலாந்து வீரர்களைவிட எங்கள் வீரர்கள் பலமுறை சோதிக்கப்பட்டுவிட்டனர்’ என, இங்கிலாந்து மீது பாய்கிறது ரஷ்யா. 

ரஷ்யா

``ஏன் இங்கிலாந்து நிருபர்கள் மட்டும் இதைப் பற்றி கேள்வி எழுப்புகின்றனர்? ஃப்ரெஞ்ச் பத்திரிகையாளர்களோ, ஸ்பானிஷ் நிருபர்களோ ஏன் இதைப்பற்றி கேட்பதில்லை? இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். களங்கம் இல்லாத இடத்தில் அழுக்கைத் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். உலகக்கோப்பையை நடத்தும்போது யாராவது இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவார்களா? மனநிலை சரியில்லாதவர்கள் மட்டுமே அப்படிச் செய்வர். ஊக்கமருந்து பயன்படுத்தியதால் மட்டுமே, இரண்டு போட்டிகளில் எட்டு கோல்கள் அடித்துவிட முடியாது. கோல் அடிப்பதற்கு ஓட்டத்தைவிட,  இலக்கை நோக்கிய துல்லியமான ஷாட்டுகள்தான் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார், ரஷ்ய அணியின் செய்தித்தொடர்பாளர் ஐகர் விளாடிமிரோவ்.

இது, ரஷ்யா Vs ஊக்கமருந்து விவகாரமா அல்லது ரஷ்யா vs இங்கிலாந்து பிரச்னையா?! 

https://www.vikatan.com/news/sports/128812-russia-in-the-midst-of-doping-crisis.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.