யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நவீனன்

உலக கிண்ண கால்பந்தாட்டம் 2018 செய்திகள், ஆய்வுகள், கருத்து பகிர்வுகள்

Recommended Posts

உலகக் கிண்ணத்தின் வரலாற்றுக் கதை

World-Cup-696x464.jpg
 

பிஃபா என்ற வார்த்தையைத் தெரியாத விளையாட்டு ஆர்வளர்கள் இன்று இருக்கின்றனர் என்றார் அது வியப்படைய வேண்டிய ஒரு விடயமாக இருக்கும். காரணம், உலக சனத்தொகையில் மிகப் பெரிய ஒரு பங்கு மக்கள் விரும்பும், மதிப்பளிக்கும் ஒரு விடயமாக பிஃபா (கால்பந்து) உலகக் கிண்ணம் இருக்கின்றது.

ஆனால் இது இன்று. இதன் ஆரம்பம் வித்தியாசமானது. அவ்வாறான ஒரு ஆரம்பத்துடன் இன்று இந்த விளையாட்டும், இதன் மீதான ஆர்வமும் இவ்வளவு விரிவடைந்துள்ளது என்பது வியப்பான ஒரு விடயமே.

 

முதலாவது பிஃபா உலகக் கிண்ணத்தில் பங்கேற்க வரும்படி பல நாடுகளிடமும் கெஞ்சிக் கூத்தாட வேண்டி இருந்தது. ஆனால் இன்று கிட்டத்தட்ட 200 நாடுகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவதற்கு போராட வேண்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகக் கிண்ணப் போட்டிகளின் 21ஆவது அத்தியாயம் அடுத்த மாதம் ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், 1930ஆம் ஆண்டு தொடக்கம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிஃபா உலகக் கிண்ணத்தின் வரலாற்றை ஒரு முறை நாம் இங்கு பார்ப்போம்.

1930 – உருகுவே

1930-1.jpgமுதலாவது பிஃபா உலகக் கிண்ணம் தென் அமெரிக்க நாடான உருகுவேயில் நடைபெற்றது. 13 அணிகள் மாத்திரமே போட்டியில் பங்கேற்றன என்பதை விட பங்கேற்க முடிந்தன என்று கூறினாலே சரியாக இருக்கும்.

அந்த காலத்தில் தென் அமெரிக்காவுக்கு பிரயாணம் செய்வது என்பது கடினமாக இருந்தது என்பதால் நான்கு ஐரோப்பிய நாடுகள் மாத்திரமே போட்டியில் பங்கேற்றன. பிரான்ஸின் லூசயென் லோரண்ட் உலகக் கிண்ணத்தில் முதல் கோலை போட்டவராக பதிவானார். மெக்சிகோவுடனான அந்தப் போட்டியில் பிரான்ஸ் 4-1 என வென்றது.

 

1928 ஒலிம்பிக் கால்பந்து சம்பியனான உருகுவே இறுதிப் போட்டியில் தனது அண்டை நாடான ஆர்ஜன்டீனாவை 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று முதலாவது உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. இந்த போட்டியை 93,000 பேர் பார்வையிட்டார்கள் என்பது கன்னி உலகக் கிண்ணத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.


1934 – இத்தாலி

1934-1.jpgதகுதிகாண் முறையில் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன.

32 அணிகள் தகுதிகாண் போட்டியில் ஆடியதோடு 16 அணிகள் தேர்வு பெற்றன. எதிர் காலத்தில் கிண்ணத்தை கைப்பற்றப்போகும் போட்டியை நடத்தும் இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் முதல் முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்றன.

இத்தாலி மற்றும் செக்கொஸ்லோவாக்கியா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி 1-1 என சமநிலையானது. எனவே, முதல் முறை வெற்றி அணியை தேர்வு செய்ய மேலதிக நேரம் வழங்கப்பட்டது. ஐந்து நிமிடங்களின் பின் இத்தாலி கோல் புகுத்தி கிண்ணத்தை வென்றது. எனினும், இந்த தொடரில் நடுவர்களை பணத்துக்கு வாங்கியதான சர்ச்சை ஒன்று இருந்ததை குறிப்பிட வேண்டும்.


1938 – பிரான்ஸ்

1938-1.jpgஐரோப்பாவில் இரண்டாவது முறையாக உலகக் கிண்ணம் நடந்தது.

போட்டியை நடத்துவது பற்றிய சர்ச்சையால் உருகுவே மற்றும் ஆர்ஜன்டீனா உலகக் கிண்ணத்தை புறக்கணித்தன. அப்போது டச்சு கிழக்கு இந்தியா என்று அழைக்கப்பட்ட இந்தோனேசியா ஆசியாவின் முதல் நாடாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்றது.

 

ஹங்கேரிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வென்ற இத்தாலி அடுத்தடுத்து இரண்டாவது உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. அடுத்ததாக இரண்டாவது உலகப் போர் மூண்டதால் இத்தாலியின் பிஃபா அதிகாரி ஒட்டோரினோ பராசி உலகக் கிண்ணத்தை தனது கட்டிலுக்கு கீழ் மறைத்து பாதுகாத்தார்.

இந்த உலகப் போரால் அடுத்த 12 ஆண்டுகளில் எந்த ஒரு உலகக் கிண்ணமும் நடைபெறவில்லை.


1950 – பிரேசில்

1950-1.jpg1946 ஆம் ஆண்டு பிஃபாவில் இணைந்த இங்கிலாந்து முதல் முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்றதோடு உலகப் போருக்கு பின்னரான முதல் தொடர் என்பதால் அச்சு நாடுகளான ஜப்பான், ஜெர்மனிக்கு போட்டியில் தடை விதிக்கப்பட்ட அதேவேளை, நடப்புச் சம்பியன் இத்தாலி அந்த தடையில் இருந்து தப்பித்துக் கொண்டது.

இரண்டு கட்ட குழுநிலை போட்டிகளாக நடந்த இந்த உலகக் கிண்ணத்தில் தனியே இறுதிப் போட்டி ஒன்று இருக்கவில்லை. என்றாலும் தீர்மானம் மிக்க கடைசி குழுநிலை போட்டியில் உருகுவே அணி போட்டியை நடத்தும் பிரேசிலை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் ஒருமுறை சம்பியனானது. ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் மரகானா அரங்கில் நடந்த இந்த போட்டியை பார்வையிட 200,000 ரசிகர்கள் கூடினார்கள்.


1954 – சுவிட்சர்லாந்து

1954-1.jpgஇந்த முறை ஸ்கொட்லாந்து முதல் முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்றதோடு புதிதாக உருவாக்கப்பட்ட மேற்கு ஜெர்மனி அணியும் கலந்து கொண்டது.

ஒரு கத்துக்குட்டி அணியாக கலந்து கொண்ட மேற்கு ஜெர்மனி இறுதிப் போட்டியில் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஹங்கேரியை சந்தித்தது. பேர்ன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனி 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றபோதும் அதனை ‘பெர்னின் அதிசயம்’ என்றே இன்றுவரை அழைக்கின்றனர். இந்த போட்டியில் ஹங்கேரி வீரர் புஸ்காஸ் 88ஆவது நிமிடத்தில் சமநிலையாக்கும் கோல் ஒன்றை புகுத்தியபோது சர்ச்சைக்குரிய முறையில் அது ஓப்சைட் என அறிவிக்கப்பட்டதே ஜெர்மனிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது.


1958 – சுவீடன்

1958-1.jpgசோவியட் ஒன்றியம் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது.

இரண்டு முறை சம்பியனான இத்தாலி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறவில்லை. 17 வயதான பீலே தனது முதல் உலகக் கிண்ணத்தில் பங்கேற்றார். அப்போது அவர் உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற இளம் வீரராக சாதனை படைத்தார். போட்டியை நடத்திய சுவீடனுடனேயே பிரேசில் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியது. அதில் பீலே இரண்டு கோல்களை புகுத்த பிரேசில் 5-2 என வெற்றி பெற்று முதல் முறை உலகக் கிண்ணத்தை வென்றது.


1962 – சிலி

1962-1.jpgஐரோப்பாவில் இரண்டு உலகக் கிண்ணப் போட்டிகள் அடுத்தடுத்து நடத்தப்பட்ட பின் தென் அமெரிக்க நாடான சிலிக்கு அதனை நடத்த வாய்ப்பு கிடைத்தது.

எனினும் வரலாற்றில் இதுவரை பதிவான மிகப்பெரிய பூகம்பத்திற்கு 1960 ஆம் ஆண்டு முகம்கொடுத்த சிலி போட்டியை நடத்துவதில் சிரமப்பட்டது. அதன் பல மைதானங்களும் சேதமடைந்தன.

 

ஆரம்ப இரு போட்டிகளைத் தவிர பீலே காயத்தால் போட்டிகளில் பங்கேற்காத நிலையிலும் பிரேசில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கரின்சா மற்றும் அமரில்டோவின் திறமையான ஆட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்திய பிரேசில் செக்கொஸ்லோவாக்கியாவுடனான இறுதிக் போட்டியில் 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அடுத்தடுத்து இரண்டாவது உலகக் கிண்ணத்தை வென்றது.


1966 – இங்கிலாந்து

1966-1.jpgபோட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் உலகக் கிண்ணம் களவுபோக, மோப்ப நாய் ஒன்றின் உதவியோடே அது மீட்கப்பட்டது.

போர்த்துக்கல் மற்றும் வட கொரியா தனது முதல் உலகக் கிண்ணத்தில் பங்கேற்றன. வெம்ப்லின் அரங்கில் 98,000 பார்வையாளர்கள் முன் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி மேற்கு ஜெர்மனியை எதிர்கொண்டது. மேலதிக நேரத்திற்கு போன போட்டியில் இங்கிலாந்து 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.


1970 – மெக்சிகோ

1970-2.jpgமெக்சிகோவில் நடந்த 1970ஆம் ஆண்டு உலகக் கிண்ணமானது வட அமெரிக்காவில் இடம்பெற்ற முதல் உலகக் கிண்ணமாகும்.

முந்தைய உலகக் கிண்ண போட்டியில் தாம் இலக்கு வைத்து எதிரணிகளால் தடுக்கப்பட்டதால் 1970 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதை ஆரம்பத்தில் மறுத்த பீலே, தகுதிகாண் போட்டிகளில் அணிக்கு திரும்பி பின்னர் திறமையை வெளிப்படுத்தினார். இத்தாலியுடனான இறுதிப் போட்டியில் 4-1 என பிரேசில் வென்று உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறை தன்வசமாக்கியது.

 

இந்த இலக்கை எட்டியதால் பிரேசில் அணிக்கு ஜுல்ஸ் ரிமெட் கிண்ணம் நிரந்தரமாக சொந்தமானது. ரியோ டி ஜெனிரோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்தக் கிண்ணம் 1983ஆம் ஆண்டு களவாடப்பட்டு கடைசி வரை கிடைக்கவே இல்லை.


1974 – மேற்கு ஜெர்மனி

1974-1.jpg1966 உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து 1974 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறவில்லை.

புதிய உலகக் கிண்ணம் உருவக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் நெதர்லாந்துடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த போட்டியை நடத்தும் மேற்கு ஜெர்மனி தகுதி பெற்றது. போட்டியின் ஆரம்பத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் உதவியோடு ப்ரன்ஸ் பெகன்பேர்க் தலைமையிலான மேற்கு ஜெர்மனி 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.


1978 – ஆர்ஜன்டீனா

1978-1.jpgஆர்ஜன்டீனா இராணுவ ஆட்சியின் கீழ் இருந்தபோது நடைபெற்ற இந்த உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற மீண்டும் இங்கிலாந்து தவறிவிட்டது. இதில் முதல்முறை பங்கேற்ற துனீசிய அணி மெக்சிகோவுக்கு எதிரான போட்டியில் 3-1 என வென்று உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை பெற்ற ஆபிரிக்க அணியாக பதிவானது.

 

நெதர்லாந்துடனான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஆர்ஜன்டீனா 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று முதல் முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. நெதர்லாந்து தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் இறுதிப் போட்டியில் தோற்றது.


1982 – ஸ்பெயின்

1982-1.jpg1982 உலகக் கிண்ணத்தில் அணிகளின் எண்ணிக்கை 16 இல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் ஆபிரிக்க மற்றும் அசிய அணிகளுக்கு அதிக வாய்ப்பு கடைத்தன.

குழுநிலை போட்டியில் எல்சல்வடோரை 10-1 என ஹங்கேரி வீழ்த்தியது அதிக கோல் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக உள்ளது. இதில், மெட்ரிட்டின் பெர்னபு அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் இத்தாலி அணி மேற்கு ஜெர்மனியை 3-1 என வீழ்த்தி மூன்றாவது முறை உலகக் கிண்ணத்தை வென்றது.


1986 – மெக்சிக்கோ

1986-1.jpgகொலம்பிய அணியே உலகக் கிண்ணத்தை நடத்த வேண்டி இருந்தபோதும் பொருளாதார நெருக்கடி காரணமாக அது மெக்சிகோவுக்கு கிடைத்தது. ஏற்கனவே 1970  உலகக் கிண்ணத்தையும் நடத்திய மெக்சிகோ இரண்டு முறை உலகக் கிண்ணத்தை நடத்திய முதல் நாடாக இருந்தது.

அரங்கில் உள்ள ரசிகர்கள் அலை அலையாக காட்டும் ‘மெக்சிகோ வெள்’ கொண்டாட்டம் இந்த உலகக் கிண்ணத்தில் அறிமுகமாகி இன்றுவரை தொடரும் ஒன்றாக உள்ளது.

இறுதிப் போட்டியில் டியாகோ மரடோனாவின் ஆர்ஜன்டீனா 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. இந்த தொடரில் இங்கிலாந்துடனான காலிறுதியில் மரடோனா தனது கையால் போட்ட கோல் இன்று வரை அவருக்கு கறையை ஏற்படுத்தி இருப்பதோடு அதே போட்டியில் அவர் போட்ட மற்ற கோல் நூற்றாண்டின் சிறந்த கோலாக பதிவானது.


1990 – இத்தாலி

1990-1.jpgஇரண்டாவது தடவையாக இத்தாலி நடத்திய உலகக் கிண்ணத்தில் கெமரூன் அணி அதிர்ச்சி கொடுத்து காலிறுதி வரை முன்னேறியது. ஆபிரிக்க அணி ஒன்று காலிறுதிக்கு வந்தது இதுவே முதல்முறை.

முந்தைய இரண்டு உலகக் கிண்ணங்களிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோற்ற மேற்கு ஜெர்மனி, மூன்றாவது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஆர்ஜன்டீனாவை எதிர்கொண்டது. இம்முறை சந்தர்ப்பத்தை கைவிடாத மேற்க ஜெர்மணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.


1994 – அமெரிக்கா

1994-3.jpgஅமெரிக்காவில் நடைபெற்ற இந்த உலகக் கிண்ணம் அதுவரை அதிகம் பேர் பார்வையிட்ட உலகக் கிண்ணமாக மாறியது.

ஆர்ஜன்டீனாவின் நட்சத்திர வீரர் டியாகோ மரடோனா ஊக்கமருந்து சோதனையில் சிக்கி வெளியேற்றப்பட்டார். அன்ட்ரஸ் எஸ்கோபர் போட்ட ஓன் கோல் கொலம்பிய அணியின் தோல்விக்கு காரணமாக, பத்து நாட்கள் கழித்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

ரோஸ்போலில் பிரேசில் மற்றும் இத்தாலி அணிகள் மோதிய இறுதிப் போட்டி மேலதிக நேரத்திலும் கோலின்றி முடிந்ததால் முதல் முறை பெனால்டி உதைகள் மூலம் வெற்றி அணி தீர்மானிக்கப்பட்டது. இத்தாலியின் ரொபர்டோ பக்கியோ உதைத்த பந்து கோல் கம்பத்துக்கு வெளியே பறந்து செல்ல, பிரேசில் கிண்ணத்தை வென்றது.


1998 – பிரான்ஸ்

1998-1.jpgஇம்முறை உலகக் கிண்ண அணிகள் 24 இல் இருந்து 32 ஆக அதிகரிக்கப்பட்டன. இதனால் குரோசியா, ஜமைக்கா, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தனது முதல் உலகக் கிண்ணத்தில் ஆட வரம் பெற்றுக்கொண்டன.

பிரான்ஸ் மற்றும் பிரேசில் அணிகள் மோதிய இறுதிப் போட்டிக்கான பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஆரம்பத்தில் இடம்பெற்றிருக்கவில்லை. அவருக்கு சிறிதாக வலிப்பு வந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டபோதும் கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டார்.

எனினும் சினேடின் சிடேனின் இரண்டு கோல்கள் மற்றும் எம்மானுவேல் பெடிடின் கோல் என்பவற்றால் 3-0 என வெற்றி பெற்ற பிரான்ஸ் முதல் முறை உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.


2002 – ஜப்பான் மற்றும் தென் கொரியா

2002-1.jpgஜப்பான் மற்றும் தென் கொரியா ஒன்றிணைந்து நடத்திய இந்த உலகக் கிண்ணம் ஆசியாவில் நடத்தப்பட்ட முதல் உலகக் கிண்ணமாக இருந்தது.

முந்தைய உலகக் கிண்ணங்களை வென்ற ஏழு அணிகளும் இந்த உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றபோதும் முதல் போட்டியில் கத்துக்குட்டி செனகலிடம் பிரான்ஸ் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. பின்னர் உருகுவே மற்றும் டென்மார்க்கிடம் தோற்ற நடப்புச் சம்பியன் கோலின்றி வெளியேறியது.

பிரேசில் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் திறமையின் உச்சத்தில் இருந்த ரொனால்டோ இரண்டு கோல்களை புகுத்த பிரேசில் அதிகபட்சமாக ஐந்தாவது முறை உலகக் கிண்ணத்தை வென்றது.


2006 – ஜெர்மனி

2006.jpgஒன்றுபட்ட ஜெர்மனிக்கு உலகக் கிண்ணத்தை நடத்த வரம் கிடைத்தது. உலகக் கிண்ணத்தில் அதிகபட்சமாக 15 கோல்களை போட்டவராக பிரேசில் முன்கள வீரர் ரொனால்டோ பதிவானார்.

இத்தாலி மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிய இறுதிப் போட்டி 1-1 என சமநிலையாக, பெனால்டி முறையில் இத்தாலி கிண்ணத்தை வென்றது. இதில் தனது கடைசி போட்டியில் ஆடிய பிரான்சின் சினேடின் சிடேன் இத்தாலி வீரர் மார்கோ மடரெசியின் நெஞ்சில் தலையால் முட்டி சிவப்பு அட்டை பெற்று வெளியேறியது மறக்க முடியாத நிகழ்வாக மாறிவிட்டது.


2010 – தென்னாபிரிக்கா

2010-1.jpgஆபிரிக்காவுக்கு உலகக் கிண்ணத்தை நடத்த முதல் தடவை வாய்ப்பு கிடைத்தது. அரங்கில் கூடிய ரசிகர்கள் நீண்ட ஊதுகுழல் மூலம் ஒலி எழுப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது இந்த உலகக் கிண்ணத்தின் சிறப்பம்சமாகும்.

 

ஸ்பெயின் – நெதர்லாந்துக்கு இடையிலான இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்பெயின் 1974 மேற்கு ஜெர்மனிக்கு பின் உலகக் கிண்ணம் மற்றும் ஐரோப்பிய கிண்ணத்தை வென்ற முதல் நாடாக இடம்பெற்றது.


2014 – பிரேசில்

2014-1.jpgஅதிகபட்சமாக 207 நாடுகள் தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்ற இந்த உலகக் கிண்ணத்தை நடத்த பிரேசில் வாய்ப்பு பெற்றது.

நடப்பு சம்பியன் ஸ்பெயின் முதல் சுற்றிலேயே எதிர்பாராமல் வெளியேறியது. மேலும் அதிர்ச்சி தரும் வகையில் பலம்மிக்க பிரேசில் அணி அரையிறுதியில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் ஜெர்மனியின் மிரொஸ்லோ க்ளோஸ் போட்ட கோல் மூலம் உலகக் கிண்ணத்தில் அதிகபட்சம் 16 கோல்களை பெற்றவராக ரொனால்டோ சாதனையை முறியடித்தார்.

ஆர்ஜன்டீனாவுக்கு எதிரான இறுதிப் போட்டியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்ற ஜெர்மனி நான்காவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்றது.

இவ்வாறான சாதனைகள் மற்றும் சோதனைகளுடன் இடம்பெற்ற பிஃபா உலகக் கிண்ணத் தொடரின் அடுத்த கட்டமாக இம்முறை இடம்பெறும் தொடரில் கிண்ணத்தை வெல்லும் அணி எது?

http://www.thepapare.com

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

வேட்டை தாகம் தீராத லயோனல் மெஸ்ஸி

 

 
19CHPMUMESSI3
19CHPMUMESSI4
17chpmuLogo
19CHPMUFANS3
 
 

2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் 1-0 என்று தோல்வியைத் தழுவி கோப்பை வாய்ப்பை நழுவ விட்டது, 2015 கோப்பா அமெரிக்கா இறுதியில் சிலி அணியிடம் பெனால்டியில் தோல்வி அடைந்து கோப்பை வாய்ப்பை நழுவ விட்டது மட்டுமல்ல... 2016 கோப்பா அமெரிக்காவின்போதும் மெஸ்ஸி இறுதிப் போட்டியில் சிலி அணியிடம் மீண்டும் பெனால்டியில் தோல்வி கண்டார்.

இதனால்தான் அவர் “நான் அனைத்தையும் செய்து பார்த்து விட்டேன், 4 இறுதிப் போட்டிகளில் இருந்தும் சாம்பியன் ஆக முடியவில்லை, இது எனக்கும் அணிக்கும் கடினமான தருணம். அர்ஜென்டினாவுக்கு விளையாடுவது என்பது முடிந்துவிட்டது” என்ற விரக்தியில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கால்பந்து இறுதிப் போட்டியின் முடிவில் கனத்த இயத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.

 

ஆனால் சில மாதகால இடைவெளியில் அவர், தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் சர்வதேச போட்டிகளில் களம் கண்டார். 30 வயதான மெஸ்ஸிக்கு இது 4-வது உலகக் கோப்பை தொடர். மெஸ்ஸி விளையாடிய 3 உலகக் கோப்பையிலும் அவரது கனவை சிதைத்தது ஜெர்மனி அணிதான். 2006 மற்றும் 2010-ல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியை கால் இறுதியுடன் மூட்டை கட்ட வைத்த ஜெர்மனி, 2014-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இறுதிப் போட்டியில் பேரிடி கொடுத்தது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் கோல்கள் அடிக்கப்படாத நிலையில் கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களில் 113-வது நிமிடத்தில் மரியோ கோட்ஸே அடித்த கோல் அர்ஜென்டினா அணியின் கனவை நிர்மூலமாக்கியது. எனினும் கடைசி கட்டத்தின் அர்ஜென்டினாவுக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கடவுளை வேண்டிக்கொள்ள மேஜிக் மெஸ்ஸியின் காலில் இருந்து மாயங்கள் நிகழும் என எதிர்பார்த்த நிலையில், அவரோ பந்தை கோல் கம்பத்துக்கு மேலே உதைக்க ரசிகர்களின் மனம் நொறுங்கியது.

இந்த ஆட்டத்தில் முன்னதாக 47-வது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்திருந்த வாய்ப்பையும் மெஸ்ஸி விரயமாக்கியிருந்தார். ஒட்டுமொத்தத்தில் அன்றைய நாள் மெஸ்ஸிக்கான நாளாக அமையவில்லை. அந்த உலகக் கோப்பையில் கோல்டன் பந்து விருதை மெஸ்ஸி பெற்றாலும் அது சுமையாகவே இருந்தது. ஏனெனில் அவரது சிறந்த ஆட்டம் அன்றைய நாளில் வெளிப்படவில்லை. இதேபோல்தான் 2016-ம் ஆண்டு கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் மெஸ்ஸி கோல் அடிக்க தவற கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த கோப்பை நழுவியது.

பார்சிலோனா அணிக்காக கோல் மழை பொழியும் மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக பெரிய அளவிலான தொடர்களில் அதைத் செய்வதில்லையென்று என்று ரசிகர்கள் பொருத்தமற்ற எதிர்மறை கருத்துக்களை அள்ளித்தெளிப்பதும் உண்டு. ஆனால் உண்மையை கூறவேண்டுமெனில் மெஸ்ஸிக்கு பார்சிலோனாவும், அர்ஜெடின்னாவும் வேறு வேறு இல்லை என்பது அவரை பற்றி ஆழமாக தெரிந்து கொண்டவர்களுக்கு புரியும். “பார்சிலோனா அணி இதயம் என்றால் அதன் ஆத்மா அர்ஜென்டினா” என்ற கோட்பாட்டிலேயே மெஸ்ஸியின் இயக்கம் சுழன்று கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டங்களில் கடைசி கட்டங்களில் அர்ஜென்டினா அணி சில ஆட்டங்களை டிராவில் முடித்திருந்ததால் பெரும் சிக்கலை சந்தித்தது. கடைசி ஆட்டத்தில் ஈக்வேடார் அணியை வீழ்த்தினால் மட்டுமே உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டது அர்ஜென்டினா. ஈக்வேடாருக்கு சாதகமான சூழ்நிலைகளை கொண்ட குயிட்டா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அந்த அணி முதல் 40 விநாடியிலேயே கோல் அடித்து மிரட்டியது. ஆனால் மந்திரநாயகன் மெஸ்ஸி அசரவில்லை. அனைவராலும் நம்பமுடியாத வகையிலான அதிசயிக்கத்தக்க ஹாட்ரிக் சாதனையுடன் 3-1 என வெற்றி பெற்று அர்ஜென்டினா அணி உலகக்கோப்பைக்குள் அழைத்துச் சென்றார்.

இந்த ஆட்டத்தில் அவர், அடித்த ஒவ்வொரு கோல்களும் அவர் ஒரு ஜீனியஸ் என்பதை உலகுக்கு காட்டியது. இந்த ஆட்டத்தில் ஜெயிக்க தவறியிருந்தால் 1970-ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக உலகக் கோபைக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியிருக்கும் அர்ஜென்டினா.

ஆனால் அந்த நிலைமைக்கு செல்லவிடவில்லை மெஸ்ஸி. 32 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வெல்லும் தனது தேசத் தின் கனவை மீண்டும் தன் தோள்களில் சுமக்கிறார் மெஸ்ஸி. கடந்த 10 ஆண்டுகளாக தேசத்துக்கு மகு டம் சூட்ட போராடி வரும் மெஸ்ஸியின் தீராத வேட்டை தாகம் தீருமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் இந்த ரஷ்ய உலகக் கோப்பையின் வாயிலாக.

http://tamil.thehindu.com/sports/article23933292.ece

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

‘பை-சைக்கிள் கிக்’ லியோனிடாஸ்

20CHPMULEONIDASDASILVA

 
லியோனிடாஸ்
20CHPMUITALYSNATIONALSOCCER

உலகக் கோப்பையுடன் இத்தாலி அணியினர்.   -  AFP

24col
ScoreFinalcol
20CHPMULEONIDASDASILVA
 

லியோனிடாஸ்

3வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1938-ல் பிரான்ஸில் நடைபெற்றது. தொடர்ந்து 2-வது முறை யாக உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை ஐரோப்பா கண்டத்துக்கு வழங்கியதால் கோபமடைந்த தென் அமெரிக்க நாடுகளான உருகுவேயும், அர்ஜென்டினாவும் போட்டியை புறக்கணித்தன. உள்நாட்டு போர் காரணமாக ஸ்பெயின் பங்கேற்கவில்லை.

 

ஆஸ்திரியா, உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றிருந்தபோதிலும், ஜெர்மனியுடன் இணைக்கப்பட்ட தைத் தொடர்ந்து போட்டியிலிருந்து விலகியது. ஆஸ்திரிய வீரர்கள் சிலர் ஜெர்மனிக்காக உலகக் கோப்பையில் விளையாடினர். ஆனால் ஆஸ்திரியாவின் நட்சத்திர வீரரான மத்தியாஸ் சைன்டீலர் ஒன்றிணைந்த அணிக்காக விளை யாட மறுத்துவிட்டார். முந் தைய உலகக் கோப்பையைப் போன்றே இந்தப் போட்டியும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இதில் ஹங்கேரி, ஸ்வீடன், பிரேசில், இத்தாலி ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதியில் ஹங்கேரி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை தோற்கடித்தது.

மற்றொரு அரையிறுதியில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வென்றது. இந்த ஆட்டத்தில் முன்னணி வீரரான லியோனிடாஸுக்கு பிரேசில் பயிற்சியாளர் ஓய்வு கொடுத்ததே அந்த அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இறுதிப்போட்டியில் இத்தாலி அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்றது. 1938 உல கக் கோப்பையில் பெரிதும் பேசப்பட்டவர் பிரேசில் வீரர் லியோனிடாஸ்தான். அந்த உலகக் கோப்பையில் 7 கோல்களை அடித்த அவர், போலந்துக்கு எதிராக ஹாட்ரிக் கோலடிக்க பிரேசில் அணி 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

பிரேசிலுக்காக 23 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இவர், தலைசிறந்த ஸ்டிரைக்கராக திகழ்ந்ததோடு, தனது பை-சைக்கிள் கிக்கால் உலக அளவில் பிரபலமடைந்தார். பிரேசில் நாட்டின் கருப்பு வைரம் என அழைக்கப்பட்ட லியோனிடாஸ் சர்வதேச போட்டியில் முதலில் அறிமுகமானது உருகுவே அணிக்காகதான். ஆனால் அடுத்த ஓரே ஆண்டில் பிரேசில் அணிக்கு தாவிய அவர், பிரேசில் கால்பந்து வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தார்.

http://tamil.thehindu.com/sports/article23939750.ece

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

பிரேசில் கனவை கலைத்த உருகுவே

 

 
football%20tableFinalcol
21CHPMUJUANALBERTOSCHIAFFINO

1950-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பிரேசில் அணிக்கு எதிராக கோல் அடிக்கும் உருகுவே அணியின் முன்கள வீரரான ஜுவான் ஆல்பர்ட்டோ ஷியாபினோ.   -  AFP

17CHPMUMASCOT

  -  AFP

17chpmuLogo
23%20dayscol
 
 
 
21CHPMUJUANALBERTOSCHIAFFINO

1950-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பிரேசில் அணிக்கு எதிராக கோல் அடிக்கும் உருகுவே அணியின் முன்கள வீரரான ஜுவான் ஆல்பர்ட்டோ ஷியாபினோ.   -  AFP

இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவில்லை. போர் முடிந்து சகஜ நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து 1950-ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு வழங்கப்பட்டது. உலகக் கோப்பையின் முதல் சாம்பியனான உருகுவே ஐரோப்பாவில் நடைபெற்ற இரு உலகக் கோப்பை போட்டிகளை புறக்கணித்த நிலையில், தென் அமெரிக்க கண்டத்துக்கு மீண்டும் உலகக் கோப்பை வந்ததைத் தொடர்ந்து மீண்டும் பங்கேற்றது.

போட்டிக்கான டிரா இறுதி செய்யப்பட்ட பிறகு சில அணிகள் விலகின. அதில் இந்தியாவும் ஒன்று. இந்திய வீரர்கள் ஷூ அணியாமல் வெறும் காலோடு விளையாட சர்வதேச கால்பந்து சம்மேளனம் அனுமதி மறுத்ததால், இந்தியா போட்டியிலிருந்து விலகியது. இந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற அணிகள் தலா 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இறுதிச்சுற்றில் 4 அணிகளும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என்றும் அதில் அதிக புள்ளிகள் பெறும் அணியே சாம்பியனாகும் என அறிவிக்கப்பட்டது.

 

அந்த வகையில் உருகுவே, ஸ்வீடன், பிரேசில், ஸ்பெயின் ஆகிய அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. பிரேசில் மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டி சாம்பியனை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது. பிரேசில் டிரா செய்தாலே உலகக் கோப்பையை வென்றுவிடலாம் என்ற நிலை ஏற்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில், 2-வது பாதி ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே பிரேசிலின் பிரைகா கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

66-வது நிமிடத்தில் ஜுவான் ஆல்பர்ட்டோ ஷியாபினோ அடித்த கோலால் ஸ்கோரை சமன் செய்தது உருகுவே. 11 நிமிடங்கள் எஞ்சிய நிலையில் மேலும் ஒரு கோலை போட்டு 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது. வெற்றிக்கான இந்த கோலை ஜிகியா அடித்திருந்தார். இந்த உலகக் கோப்பையில் உருகுவே பட்டம் வென்றதில் ஜுவான் ஆல்பர்ட்டோ ஷியாபினோ முக்கிய பங்குவகித்தார். முன்கள வீரரான அவர் இந்தத் தொடரில் 5 கோல்கள் அடித்திருந்தார்.

http://tamil.thehindu.com/sports/article23946365.ece

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

2018 உலகக் கிண்ணம்: இங்கிலாந்து அணியின் முன்னோட்டம்

england-national-team
 

உலகின் சிறந்த கால்பந்து லீக் என்ற பெருமையை பெற்றிருந்தபோதும் 1966 உலக சம்பியனான இங்கிலாந்து கால்பந்து அணியால் 1990 இல் இருந்து அரையிறுதியை தாண்டி முன்னேற முடியவில்லை.  

இந்த மூன்று சிங்கங்கள் இம்முறை ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ணத்தில் தமது 15ஆவது முறையான உலகக் கிண்ண பங்கெடுப்பாக விளையாடவுள்ளது. நவீன கால்பந்து சமூகத்தின் முன்னோடி தேசமான இங்கிலாந்து திறமையான இளம் வீரர்களைக் கொண்ட குழாமின் மூலம் நம்பிக்கையை அதிகரித்துக் கொண்டுள்ளது.   

 

 

உலகக் கிண்ண வரலாறு

வெம்ப்ளியில் தனது சொந்த மண்ணில் பலம்கொண்ட மேற்கு ஜெர்மனியை மேலதிக நேரத்தில் வீழ்த்திய இங்கிலாந்து 1966 இல் கடைசியாக உச்ச விருதை வென்றது.    

1950 – முதல் சுற்று

1954 – காலிறுதி

1958 – முதல் சுற்று

1962 – காலிறுதி

1966 – சம்பியன்

1970 – காலிறுதி

1974 – தகுதி பெறவில்லை

1978 – தகுதி பெறவில்லை

1982 – முதல் சுற்று

1986 – காலிறுதி

1990 – அரையிறுதி

1994 – தகுதி பெறவில்லை

1998 – 16 அணிகள் பங்கு கொள்ளும் சுற்று

2002 – காலிறுதி

2006 – காலிறுதி

2010 – 16 அணிகள் பங்கு கொள்ளும் சுற்று

2014 – முதல் சுற்று

1954 இல் இங்கிலாந்து அணி உருகுவேயால் வெளியேற்றப்பட்டதோடு 1962 இல் சம்பியன் அணியான பிரேசிலினால் வெளியேற்றப்பட்டது. 1970 இல் இங்கிலாந்து மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னெறியபோதும் மேற்கு ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டது. அது 1966 இல் தோற்றதற்கு பதிலடி கொடுப்பதாக இருந்தது

 

 

1986 இல் டியாகோ மரடோனா இங்கிலாந்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியதோடு, 1990இல் மீண்டும் ஜெர்மனி அவர்களை அரையிறுதியில் பெனால்டிகள் மூலம் தோற்கடித்தது. அது தொடக்கம் இங்கிலாந்துக்கு கடினமான தொடர்களாகவே உலகக் கிண்ணம் இருந்தன. அன்று தொடக்கம் இன்று வரை அவர்கள் காலிறுதியை தாண்டியதில்லை.  

இம்முறை எவ்வாறு தகுதி பெற்றது?

தற்போது உலக தரவரிசையில் 15 ஆவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து 10 தகுதிகாண் போட்டிகளில் 8 வெற்றி மற்றும் 2 சமநிலை என்று தோல்வியுறாத அணியாகவே உலகக் கிண்ணத்திற்கு முன்னேறியது. இந்த பயணத்தின்போது இரு தடவைகள் பயிற்சியாளர்களை மாற்றியதோடு இடைக்கால முகாமையாளர் கரெத் சௌத்கேட்டுடன் கடைசியில் தகுதியை பெற்றது.

அணியின் முன்கள வீரர்களின் தாக்குதல் ஆட்டம் பற்றி கேள்விகள் உள்ளன. ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கிய, லிதுவேனியா, மோல்டா மற்றும் ஸ்கொட்லாந்து போன்ற குழுநிலை அணிகளுடன் ஒப்பிடுகையில் அவர்கள் மொத்தமாக வெறும் 18 கோல்களையே பெற்றபோதும், வலுவான தற்காப்பை கொண்டிருப்பதால் 3 கோல்களை மாத்திரமே விட்டுக் கொடுத்துள்ளனர். தகுதிகாண் போட்டிகளில் ஹம்டன் பார்க்கில் நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணியுடனான பலம்மிக்க ஆட்டத்தில் இங்கிலாந்து ஹரிகேன் கடைசி நேரத்தில் புகுத்திய கோல் மூலம் போட்டியை 2-2 என சமன் செய்தது.   

2018இல் நெதர்லாந்து மற்றும் இத்தாலிக்கு எதிரான உயர்மட்ட நட்புறவு போட்டிகளில் ஆடிய இங்கிலாந்து அவைகளில் முறையே 1-0 என வெற்றியும் 1-1 என சமநிலையும் பெற்றது. இங்கிலாந்து உலகக் கிண்ணத்தில் தனது முதல் போட்டியில் ஆடுவதற்கு முன் தமது அணியின் அமைப்பு மற்றும் சமநிலையை சோதிப்பதற்கு நைஜீரியா மற்றும் கொஸ்டாரிக்காவுடன் நட்புறவு போட்டிகளில் ஆடவுள்ளது.

 

 

முகாமையாளர் மற்றும் ஆட்ட பாணி

சாம் அல்லார்டிஸ் இடம் இருந்து ஒரு இடைக்கால பணிக்காக 2016 செப்டெம்பரில் இங்கிலாந்து பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற கரேத் சௌத்கேட் 2016 நவம்பர் 30 ஆம் திகதி உத்தியோகபூர்மாக அந்த பதவியில் அமர்த்தப்பட்டார். இங்கிலாந்தின் முன்னாள் பின்கள வீரரான அவர் பிரான்ஸில் 1998 மற்றும் கொரியாஜப்பானில் 2002ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ணங்களில் இங்கிலாந்து அணியில் அங்கம் வகித்துள்ளார்.

ஐரோப்பிய தகுதிகாண் சுற்றில் F குழுவில் முன்னிலை பெற்று தொடர்ச்சியாக ஆறாவது முறையாக இங்கிலாந்து உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற அவர் அணியை வழி நடாத்தியுள்ளார்.   

ஜோ கோமஸ், ஒக்ஸ்லட்சம்பர்லின் போன்ற வீரர்கள் இல்லாத நிலையிலும் அடம் லல்லான் போதிய போட்டி பயிற்சிகள் இல்லாத நிலையிலும் யார் மத்திய களத்தில் தாக்குதல் ஆட்டத்தை முன்னெடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வியுடனேயே இங்கிலாந்து அணி ரஷ்யாவுக்கு பயணிக்க தயாராகி வருகிறது.

4-4-2 என்ற அமைப்பில் ஆடுவது குறித்து சௌத்கேட் ஆர்வம் காட்டியுள்ளார். இதனை முன்களத்தை 10 ஆம் இடத்திற்கு கீழிறக்கி 4-2-3-1 என்றும் அமைக்கலாம். இந்த நிலையில் மைதானத்தின் புஃல்பக் (Fullback) வீரர்கள் தள்ளப்பட்டு முன்கள எல்லைகளில் ஆடும் வீரர்கள் அங்கிருந்து வெளியே வந்து, மத்திய முன்களம் பிளவுபடும்.

பலமும் பலவீனமும்

ஆர்வமுள்ள இளம் வீரர்கள், மத்தியகளத்தின் வேகம் மற்றும் உறுதியான பின்களமே இங்கிலாந்தின் பலமாகும். பெரிய தளத்தில் போதிய போட்டி அனுபவம் இல்லாமை பலவீனமாக உள்ளது. கடந்த ஐரோப்பிய கிண்ணத்தில் அதனை பார்க்க முடிந்தது. அந்த தொடரில் சவாலான போட்டிகளை சமாளிப்பதில் இங்கிலாந்து நெருக்கடியை சந்தித்தது. இங்கிலாந்து வீரர்கள் பலருக்கும் இது முதலாவது உலகக் கிண்ண போட்டியாக அமையவுள்ளது.  

 

 

பெல்ஜியம், துனீசியா மற்றும் பனாமா அணிகள் கொண்ட குழுநிலை போட்டிகளை கடந்து வர இங்கிலாந்து எதிர்பார்த்துள்ளது. இதன்போது தாம் எந்த அதிர்ச்சிக்கும் முகம்கொடுக்க மாட்டோம் என்று இங்கிலாந்து உறுதியாக நம்புகிறது.

முக்கிய வீரர்கள்

சினேடின் சிடேனினால் ஒருபூர்த்தியான வீரர்என்று முடிசூடப்பட்ட ஹாரி கேன் உலகின் முன்னணி முன்கள வீரர்களில் ஒருவரென உறுதியாக நிறுவியுள்ளார். டொட்டன்ஹாம் ஹொட்பூர் நட்சத்திரமான ஹாரி கேன் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் தனது ஆறு போட்டிகளில் ஐந்து தடவைகள் கோலடித்துள்ளார்.

டொட்டன்ஹாமுக்காக மற்றுமொரு சிறப்பான பருவத்தில் ஆடிய ஹாரி கேன் 2017 ப்ரீமியர் லீக்கில் 30க்கும் அதிகமான கோல்களை செலுத்தி முதல்நிலை தாக்குதல் ஆட்டக்காரர் என நிரூபித்துள்ளார். அவருக்கு கோல் பெற ரஹீம் ஸ்டர்லிங் மற்றும் மார்கஸ் ரஷ்போர்ட் உதவியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4-4-2 அமைப்பில் ஜெமி வார்டி அல்லது டானி வெல்பக்கு, கேனுக்கு அடுத்த இடத்தில் இருக்க வாய்ப்பு உண்டு.

பிரித்தானியாவின் சம்பியனான மன்செஸ்ர் சிட்டியின் ஸ்டார்லிங்கிற்கு இந்த பருவம் சிறந்ததாக இருந்தது. அவர் தனது கழகத்திற்காக கோல் பெற்றது மற்றும் கோல் பெற உதவுவதில் சோபித்ததோடு அவரது வேகம் எதிரணி பின்கள வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்றபோதும் தனது ஆட்டத்தை மெருகேற்ற வேண்டிய தேவை அவருக்கு உள்ளது.

அணித் தலைவருக்கான கைப்பட்டியை அணிய வாய்ப்பு இருக்கும் ஜோர்டன் ஹென்டர்சன் மத்தியகளத்தில் பிரதானமாக செயற்படவுள்ளார். இது கால்பந்து உலகின் மிகத் திறமை மிக்க இளம் வீரரான டெலே அலிக்கு சுதந்திரமாக ஆடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.  

 

எரிக் டயரும் இங்கிலாந்து அணிக்கு பெயரிடப்பட்டுள்ளார். மத்தியகள வீரராக அவருக்கு இந்த பருவம் சிறந்ததாக இருந்தது. முன்களத்தில் கேன் மற்றும் அலிக்கு முன்னால் ஆடுவதற்கு அவர் எதிர்பார்த்துள்ளார்.  

கரி கஹில் மற்றும் ஆஷ்லி யங் ஒன்றிணைந்து பின்களத்திற்கு அனுபவம் சேர்க்கின்றனர். இவர்கள் அண்மைக்காலத்தில் மீண்டும் எழுச்சி பெற்று மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கு உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சம்பியன் சிட்டி அணியின் கைல் வோகர் மற்றும் ஜோன் ஸ்டோன்ஸ் பின்களத்தில் 4 வீரர்களை பூர்த்தி செய்கின்றனர்.

உத்தேச குழாம்

கோல் காப்பாளர்கள்

ஜக் பட்லான்ட், ஜோர்டன் பிக்போர்ட், நிக் பொப்.

பின்கள வீரர்கள்

ட்ரென்ட் அலெக்சான்டர்ஆர்னோல்ட், கரி கஹில், பாபியன் டெல்ப், பில் ஜோன்ஸ், ஹரி மகுயிரே, டன்னி ரோஸ், ஜோன் ஸ்டோன்ஸ், கிரன் ட்ரிப்பியர், கைல் வோகர், ஆஷ்லி யங்.

மத்தியகள வீரர்கள்

டெலே அலி, எரிக் டயர், ஜோர்டன் ஹென்டர்சன், ஜேஸ் லங்கார்ட், ரூபன் லொப்டஸ்சீக்.  

பின்கள வீரர்கள்

ஹாரி கேன், மார்கஸ் ரஷ்போர்ட், ரஹீம் ஸ்டர்லிங், ஜெமி வார்டி, டனி வெல்பக்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

ஹங்கேரி ஆதிக்கத்துக்கு முடிவு கட்டிய மேற்கு ஜெர்மனி

 

football%20table%20newFinalcol
22CHPMUMAXMORLOCK

1954-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹங்கேரி அணிக்கு எதிராக கோல் அடிக்கும் மேற்கு ஜெர்மனி வீரர் மேக்ஸ் மோர்லாக். (கோப்பு படம்).   -  THE HINDU ARCHIVES

17CHPMUMASCOT
17chpmuLogo
 
 
 

1954-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹங்கேரி அணிக்கு எதிராக கோல் அடிக்கும் மேற்கு ஜெர்மனி வீரர் மேக்ஸ் மோர்லாக். (கோப்பு படம்).   -  THE HINDU ARCHIVES

1954-ம் ஆண்டு 5-வது உலகக் கோப்பை தொடர் ஃபிபாவின் தலைமையகம் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்டது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடர்தான் முதன் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தொடர்ச்சியாக 27 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத நிலையில் இந்தத் தொடரில் விளையாடிய ஹங்கேரி எதிரணிகளை தனது அசாத்தியமான ஆட்டத்தால் பயமுறுத்தியது.

இறுதி ஆட்டத்துக்கு முன்னதாக 4 ஆட்டங்களில் ஹங்கேரி 24 கோல்களை அடித்து அசத்தியது. இதில் மேற்கு ஜெர்மனியை 8-3 என்ற கோல் கணக்கிலும், தென் கொரியாவை 9-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது முக்கிய தருணங்களாகும். ஒவ்வொரு ஆட்டத்திலும் கோல் மழை பொழிந்ததில் ஃபெரெக் புஸ்காஸ், சாண்டோர் கோசிஸ், நாண்டோர் ஹைட்கூட்டி, ஜோஸ்ஸெப் போஸ்சிக் உள்ளிட்டோர் முக்கிய பங்களிப்பு செய்திருந்தனர். அசைக்க முடியாத அணியாக வலம் வந்த ஹங்கேரிக்கு இறுதி ஆட்டத்தில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. லீக் ஆட்டத்தில் 8 கோல்கள் வாங்கி தோல்வியடைந்திருந்த மேற்கு ஜெர்மனியை இறுதி ஆட்டத்தில் சந்தித்தது ஹங்கேரி. இந்த ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனியை எளிதாக ஹங்கேரி வெல்லும் என கருதப்பட்டது. உலகக் கோப்பை வரலாற்றில் மிகவும் பரபரப்பான, எதிர்பாராத முடிவை அளித்த ஆட்டம் என்று இப்போது வரை வர்ணிக்கப்படும் இந்த இறுதி ஆட்டத்தில் முதல் 10 நிமிடங்களுக்குள் ஹங்கேரி 2 கோலடித்து முன்னிலை பெற்றது. இரு கோல்கள் அடிக்கப்பட்டதுமே உலகக் கோப்பையை வென்று விட்டது போன்ற மகிழ்ச்சியில் ஹங்கேரி ரசிகர்கள் திளைத்தனர். ஆனால் 10-வது நிமிடத்தில் மேக்ஸ் மோர்லாக்கும், 18-வது நிமிடத்தில் ஹெல்முட் ரஹ்னும் அடித்த கோலால் ஆட்டத்தை சமன் செய்தது மேற்கு ஜெர்மனி. ஆட்டம் முடிவடைய இரு நிமிடங்கள் இருந்த போது ஹெல்முட் ரஹ்ன் மேலும் ஒரு கோல் அடித்து 3-2 என்ற முன்னிலையை பெற்றுத்தந்தார். இதுவே மேற்கு ஜெர்மனி அணியின் வெற்றி கோலாக அமைந்தது. 1950-ல் இருந்து தொடர்ந்து தோல்வியை சந்திக்காமல் இருந்த ஹங்கேரியின் வெற்றிப் பயணமும் அத்துடன் முடிவுக்கு வந்தது.

http://tamil.thehindu.com/sports/article23956100.ece

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

உலகக்கோப்பை கால்பந்து- இங்கிலாந்து அணி கேப்டனாக ஹரி கேன் நியமனம்

 
அ-அ+

ரஷியாவில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இங்கிலாந்து அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #WorlCup2018

 
உலகக்கோப்பை கால்பந்து- இங்கிலாந்து அணி கேப்டனாக ஹரி கேன் நியமனம்
 
ரஷியாவில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற இருக்கிறது. இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு நாடும் தங்களது அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

201805221513091383_1_harrykane001-s._L_styvpf.jpg

இந்நிலையில் இங்கிலாந்து அணி ஹேர் கேன்-ஐ கேப்டனாக நியமித்துள்ளது. ஹரி கேன் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறது. இந்த சீசனில் 30 கோல் அடித்து அசத்தியுள்ளார். இவரது ஆட்டத்தால் டோட்டன்ன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/22151309/1164857/Striker-Harry-Kane-will-captain-England-at-next-month.vpf

Share this post


Link to post
Share on other sites

29 கோல்கள் அடித்த இகார்டி இல்லை; 2014-ல் தோற்ற அணியிலிருந்து 8 வீரர்கள்: அர்ஜெண்டினா உ.கோப்பை அணி சர்ச்சை

 

 
Messi

படம். | ஏ.எஃப்.பி.

ரஷ்யாவில் நடைபெறும் 2018 உலகக்கோப்பைக் கால்பந்து தொடருக்கான அர்ஜெண்டீன அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 23 பேர்கள் கொண்ட இந்த அணியில் சீரி ஏ கால்பந்து தொடரில் இண்டர் மிலன் அணிக்காக ஆடி 29 கோல்களை அடித்த மவ்ரோ இகார்டியைத் தேர்வு செய்யாதது அர்ஜெண்டீன கால்பந்து உலகில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பயிற்சியாளர் சம்போலி மாறாக யுவண்டஸ் அணிக்கு ஆடிய பாவோ டைபலா மற்றும் கொன்சாலோ ஹிகுவெய்ன் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.

 

சமீபத்தில் நடந்த எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் ஆடத் தேர்வு செய்யப்படாத பாவோ டைபலா ஏன் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கேள்வியும் சம்போலா மீது எழுந்துள்ளது. ஆனால் பாவோ டைபலா சாதாரண வீரர் அல்ல, மெஸ்ஸிக்கு இணையாகப் பேசப்படும் ஒரு வீரர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதனால்தான் மெஸ்ஸிக்கு ஒரு பேக்-அப் ஆக எடுத்திருப்பதாக சம்போலி தெரிவிக்கிறார்.

மாறாக இகார்டியை எடுக்காததற்கு அவரது சொந்த வாழ்க்கையே காரணம் என்று கூறப்படுகிறது. இகார்டியின் மனைவி வாண்டா நாரா ஒரு பிரபலஸ்தர். இகார்டியுடன் ஆடும் சக வீரர் மேக்ஸ் லோபஸ் உடன் நாரா இருந்த போதே இகார்டி நாராவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்தார். மேக்ஸி லோபஸ் அர்ஜெண்டினா அணியில் பலருக்கும் நண்பர், எனவே இகார்டியை அணியில் சேர்ப்பதற்கு சம்போலியை இந்த விவகாரம் தடுத்திருக்கலாம் என்றும் அர்ஜெண்டின வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இகார்டி-நரா விவகாரம் அர்ஜெண்டினாவின் கிசுகிசு பத்திரிகைகளில் பிரபலம்.

icardijpg

சர்ச்சைக்குரிய ஆனால் பிரமாதமான ஆட்டக்காரர் மவ்ரோ இகார்டி. | ஏ.பி.

 

இந்த விவகாரத்தோடு மெஸ்ஸிக்கு நெருங்கிய செர்ஜியோ அகுயெரோ உடற்தகுதி பெறவில்லையெனில் இகார்டோவை சேர்க்கலாம் என்று இருந்தது அர்ஜெண்டின அணி நிர்வாகம் ஆனால் செர்ஜியோ அகுயெரோ தகுதி பெற்று விட்டார்.

எப்படிப்பார்த்தாலும் இண்டர் மிலன் அணிக்காக 156 போட்டிகளில் 98 கோல்களை அடித்த மிக முக்கியமான ஒரு வீரரை அணியிலிருந்து புறக்காரணங்களுக்காக நீக்கலாமா என்ற கேள்வி அங்கு எழுந்துள்ளது

இந்த ஆண்டு நடைபெற்ற பிரெண்ட்லீ போட்டிகளில் இடம்பெறாத பிரமாத கோல் கீப்பர் பிராங்கோ அர்மனி உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். அப்போது அவரை ஏன் முன்னால் அணியில் சேர்க்கவில்லை? என்ற கேள்வியும் சம்போலா மீது எழுந்துள்ளது.

2014 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஜெர்மனியிடம் தோற்ற அர்ஜெண்டினா அணியிலிருந்து 8 வீரர்கள் இந்த உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மே 27ம் தேதி அர்ஜெண்டீனா அணி வெலேஸ் சர்ஸ்பீல்ட் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபடுகிறது, இது பொதுமக்கள் பார்வையில் நடைபெறும், இதற்கு 2 நாளுக்குப் பிறகு ஹைட்டி அணியுடன் நட்பு ரீதியான ஆட்டத்தில் விளையாடுகிறது அர்ஜெண்டினா அத்துடன் ரசிகர்களிடமிருந்து பிரியாவிடை பெறுகிறது.

அடுத்த நாள் அர்ஜெண்டினா அணி ஸ்பெயினுக்குச் சென்று பார்சிலோனாவில் மேலும் பயிற்சியில் ஈடுபடுகிறது. ஜூன் 9-ம் தேதி இஸ்ரேலுடன் இறுதி நட்பு ஆட்டத்தில் ஆடுகிறத்.

அணி விவரம்:

கோல்கீப்பர்கள்: செர்ஜியோ ரொமீரோ, வில்பிரெட் கபலெரோ, பிராங்கோ அர்மானி

தடுப்பாட்ட வீரர்கள்: கேப்ரியல் மெர்காடோ, ஜேவிர மஸ்செரானோ, நிகோலஸ் ஒட்டாமெண்டி, ஃபெட்ரிகோ ஃபாசியோ, மார்கஸ் ரோஜோ, நிகோலஸ் டாக்லியாஃபிகோ, கிரிஸ்டியன் அன்சால்டி, மார்கோஸ் அகுனா.

நடுக்கள நாயகர்கள்: லூகாஸ் பிக்லியா, எட்வர்டோ சல்வியோ, எவர் பனேகா, ஏஞ்செல் டி மரியா, மேனுவல் லான்ஸீனி, கியோவனி லோ செல்சோ, மேக்ஸிமிலியானோ மேஸா, கிரிஸ்டியன் பவன்.

http://tamil.thehindu.com/sports/article23959464.ece

Share this post


Link to post
Share on other sites

ஸ்பெயின், பெல்ஜியம் குழாம்களில் முன்னணி வீரர்கள் இல்லை

footy-696x464.jpg
 

ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடருக்கான ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகளின் குழாம்களில் முன்னணி வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.

 

திங்கட்கிழமை (21) அறிவித்த 23 வீரர்கள் கொண்ட ஸ்பெயின் குழாமில் செல்சி முன்கள வீரர் அல்வாரோ மொராடாவுக்கு இடம் கிடைக்கவில்லை. அதேபோன்று, 28 வீரர்கள் கொண்ட குழாமை அறிவித்திருக்கும் பெல்ஜியம், அதில் ரோமா மத்திய கள வீரர் ராட்ஜா நாயிங்கோலனுக்கு இடம் வழங்கவில்லை. இதனை அடுத்து அவர் வருத்தத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

2010 பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணி, இம்முறை ஜுன் 15 ஆம் திகதி சொச்சியில் போர்த்துக்கலுக்கு எதிரான போட்டியுடன் தனது உலகக் கிண்ண பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. B குழுவில் இடம்பெற்றிருக்கும் அந்த அணி ஈரான் மற்றும் மொரோக்கோ அணிகளுடனும் மோதவுள்ளது.

ஸ்பெயின் பயிற்சியாளர் ஜுலன் லொபடிகியு அறிவித்திருக்கும் உலகக் கிண்ணத்திற்கான ஸ்பெயின் குழாத்தில், தனது முதல் ப்ரீமியர் லீக் தொடரில் சோபிக்க தவறிய மொராடா நீக்கப்பட்டு, முன்களத்திற்கு அட்லாண்டிகோ மெட்ரிட் கழகத்தின் டியாகோ கொஸ்டாவுடன் இயாகோ அஸ்பாஸ் மற்றும் ரொட்ரிகோ மொரேனோ ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

செல்சி அணிக்காக தனது முதல் பருவத்தில் ஆடிய 25 வயதான மொராடா 11 கோல்களை போட்டார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற எப்.. கிண்ண இறுதிப் போட்டியில் கிண்ணத்தை வென்ற செல்சி அணிக்கு கடைசி நேரத்தில் பதில் வீரராகவே இவர் களமிறங்கினார்.  

 

மொராடாவின் செல்சி அணி சக வீரர்களான மார்கஸ் அலொன்சோ மற்றும் செஸ்க் பப்ரேகாஸுடன் ஆர்சனல் பின்கள வீரர் ஹெக்டர் பெல்லெரினும் ஸ்பெயின் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின் குழாமில் அனுபவ மத்தியகள வீரர் அன்ட்ரெஸ் இனியஸ்டா, இஸ்கோ உட்பட மொத்தம் பத்து வீரர்கள் ரியெல் மெட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே 28 வீரர்கள் கொண்ட உத்தேச உலகக் கிண்ண குழாமை அறிவித்திருக்கும் பெல்ஜியம் வரும் ஜுன் 4 ஆம் திகதி அதனை 23 வீரர்களுக்கு சுருக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

எனினும் ரோமா அணி சம்பியன்ஸ் லீக் அரையிறுதி வரை முன்னேறுவதற்கு உதவிய 30 வயதுடைய நாயிங்கோலன் அந்த அணியில் இடம்பெறவில்லை. நாயிங்கோலன் முக்கியமான வீரர் என்ற பெல்ஜியம் முகாமையாளர் ரொபர்டோ மார்டினஸ் மேலும் கூறும்போது, ராட்ஜா (நாயிங்கோலன்) தனது கழகத்தில் முக்கிய பங்காற்றுவது எமக்கு தெரியும். என்றாலும் எமது குழாத்தில் நாம் அவருக்கு அந்த பங்கை வழங்க முடியாதுஎன்றார்.  

தான் நீக்கப்பட்டது குறித்து சமூகதளத்தில் பதலளித்த நாயிங்கோலன், மிக தயக்கத்துடன் எனது சர்வதேச கால்பந்து வாழ்வு முடிவுக்கு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.  

பெல்ஜியம் குழாத்தில் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வீரர்களான மன்செஸ்டர் சிட்டியின் டுவோ கெவின் டி ப்ருயின் மற்றும் வின்சன்ட் கொம்பனி, செல்சி முன்கள வீரர் உடெக் ஹசார்ட் மற்றும் மன்செஸ்டர் யுனைடெட் முன்கள வீரர் ரொமேலு லுகாகு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

இங்கிலாந்து அணி இருக்கும் G குழுவில் இடம்பெற்றிருக்கும் பெல்ஜிய விரர்களில் 15 பேர் இங்கிலாந்து ப்ரீமியர் லீக் ஆடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெல்ஜியம் உலகக் கிண்ணத்தில் தனது முதல் போட்டியில் ஜுன் 18 ஆம் திகதி பனாமாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்த குழுவில் துனீஷியாவும் இடம்பெற்றுள்ளது.     

ஸ்பெயின் குழாம்

கோல்காப்பாளர்கள்

டேவிட் டி கீ (மன்செஸ்டர் யுனைடெட்), பேபே ரீனா (நபோலி), கெபா அரிசபலகா (அத்லெடிக் பில்போ).  

பின்கள வீரர்கள்

ஜோர்டி அல்பா (பார்சிலோனா), நகோ மொன்ரியல் (ஆர்சனல்), அல்வாரோ ஒட்ரியோசோலா (ரியல் சொசிடாட்), நாகோ பெர்னாண்டஸ் (ரியெல் மெட்ரிட்), டானி கார்வஜால் (ரியல் மெட்ரிட்), கெரார்ட் பிகு (பார்சிலோனா), செர்ஜியோ ரமோர்ஸ் (ரியல் மெட்ரிட்), சீசர் அஸ்பிலிக்குடே (செல்சி).  

மத்தியகள வீரர்கள்

செர்ஜியோ புஸ்கெட்ஸ் (பார்சிலோனா), இஸ்கோ (ரியெல் மெட்ரிட்), தியாகோ அல்கன்டாரா (பயெர்ன் முனிச்), டேவிட் சில்வா (மன்செஸ்டர் சிட்டி), அன்ட்ரெஸ் இனியஸ்டா (பார்சிலோனா), சாவுல் நிகுயிஸ் (அட்லெடிகோ மெட்ரிட்), கொகே (அட்லெடிகோ மெட்ரிட்).

முன்கள வீரர்கள்

மார்கோ அசன்சியோ (ரியெல் மெட்ரிட்), இயாகோ அஸ்பாஸ் (செல்டா விகோ), டியாகோ கெஸ்டா (அட்லெடிகோ மெட்ரிட்), ரொட்ரிகோ மொரேனோ (வலென்சியா), லூகாஸ் வாஸ்க்வெஸ் (ரியெல் மெட்ரிட்).

 

பெல்ஜியம் குழாம்

கோல்காப்பாளர்கள்

கொயேன் காஸ்டீல் (வோல்ஸ்பேர்க்), திபவுட் கோர்டொயிஸ் (செல்சி), சிமொன் மிக்னொலட் (லிவர்பூல்), மட்ஸ் செல்ஸ் (நியூகாஸ்ட்ல் யுனைடெட்).  

பின்கள வீரர்கள்

டோபி ஆல்டேர்வீர்ல்ட் (டொட்டன்ஹாம் ஹொட்புர்), டெட்ரிக் பொயாடா (செல்டிக்), லோரன்ட் சிமான் (லொஸ் ஏஞ்சல்ஸ் எப்.சி.), கிறிஸ்டியன் கபலெலே (வட்போர்ட்), வின்சன்ட் கொம்பனி (மன்செஸ்டர் சிட்டி), ஜோர்டன் லுகாகு (லாசியோ), தோமஸ் மியுனியர் (பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்), தோமஸ் வெர்மலன் (பார்சிலோனா), ஜான் வெர்டோன்கன் (டொட்டன்ஹாம் ஹொட்புர்).  

மத்தியகள வீரர்கள்

யன்னிக் கரஸ்கோ (டாலியன் யிபாங்க்), கெவின் டி ப்ருயின் (மன்செஸ்டர் சிட்டி), மூசா டெம்பேலே (டொட்டன்ஹாம் ஹொட்புர்), லீன்டர் டென்டொன்கர் (அன்டர்லெட்ச்), மருவான் பெல்லைனி (மன்செஸ்டர் யுனைடெட்), எடன் ஹசார்ட் (செல்சி), தொர்கான் ஹசார்ட் (பொருசியா மொன்சன்க்ளாட்பச்), அத்னன் ஜனுசாஜ் (ரியெல் சொசிடாட்), டெரிஸ் மெர்டன்ஸ் (நபோலி), யூரி டிலமன்ஸ் (மொனாகோ), அக்செல் விட்செல் (டியான்ஜின் குவான்ஜியன்).  

முன்கள வீரர்கள்

மிச்சி பட்சுவாயி (செல்சி), கிறிஸ்யன் பென்டெகே (கிறிஸ்டல் பளஸ்), நாசெர் சாட்லி (வெஸ்ட் ப்ரோம்), ரொமெலு லுகாகு (மன்செஸ்டர் யுனைடெட்).      

http://www.thepapare.com

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

கால்பந்து உலகில் தோன்றிய முதல் நட்சத்திர நாயகன் பீலே

 

21%20days%201col
23CHPMUPELE

1958-ம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக கோல் அடிக்கும் பிரேசில் வீரர் பீலே. (கோப்பு படம்)

 
 

1958-ம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக கோல்

அடிக்கும் பிரேசில் வீரர் பீலே. (கோப்பு படம்)

ஸ்வீடனில் 1958-ல் நடைபெற்ற 6-வது உலகக் கோப்பையை ஸ்வீடன் நடத்தியது. இந்தத் தொடரில்தான் 17 வயதான பீலே அறிமுகமானார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் இரு ஆட்டங்களில் அவர் களமிறக்கப்படவில்லை. லீக் சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தை பிரேசில் கோல்கள் எதுவுமின்றி டிராவில் முடித்தது.

 

இதையடுத்து மாற்றங்கள் செய்யப்பட்ட அணியில் பீலேவுக்கு களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. சோவியத் யூனியனுக்கு எதிராக அவர் களமிறங்கிய முதல் ஆட்டத்தில் கோல் ஏதும் அடிக்கவில்லை. மாறாக நட்சத்திர வீரரான வாவா கோல் அடிக்க உதவி செய்திருந்தார். இந்த ஆட்டத்தில் பிரேசில் 2-0 என வெற்றி கண்டிருந்தது.

இதையடுத்து வேல்ஸ் அணிக்கு எதிரான கால் இறுதியில் பீலே கோல் அடித்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் அவர் அடித்த கோல் காரணமாகவே பிரேசில் அணி 1-0 என வெற்றி பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் அணிக்கு எதிரான அரை இறுதியில் பீலே ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைக்க பிரேசில் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.

இறுதிப் போட்டியில் பிரேசில், ஸ்வீடனை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் பேராதரவுடன் களமிறங்கிய ஸ்வீடன் 4-வது நிமிடத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற்றது. பிரேசில் அணியின் வாவா 9 மற்றும் 30-வது நிமிடங்களில் கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுத் தந்தார். இதன் பிறகு பீலேவின் ஆதிக்கம் தொடங்கியது. 55 மற்றும் 89-வது நிமிடங்களில் அவர் கோல் அடிக்க முடிவில் 5-2 என்ற கணக்கில் பிரேசில் வென்று உலகக் கோப்பையை முதல்முறையாக கைகளில் ஏந்தியது. இறுதி போட்டி முடிந்ததும் உணர்ச்சி பெருக்கில் பீலே தனது சீனியர் வீரர்களை அரவணைத்தப்படி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

பிரேசில் அணிக்காக கடைசி 4 போட்டிகளில் மட்டும் விளையாடிய பீலே 6 கோல் அடித்ததுடன் பிரேசில் அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்குவகித்தார். இந்தத் தொடரில் இருந்துதான் கால்பந்து உலகின் நட்சத்திர நாயகனாக பீலே உருவெடுத்தார். அடுத்த இரு தசாப்தங்களாக உலகளாவிய ரசிகர்களை தனது கால்களின் வித்தையால் மெய்மறக்கச் செய்த வேளையில் அனைவரையும் கவர்ந்திழுக்கவும் செய்தார்.

ஸ்வீடனில் நடந்த உலகக் கோப்பையில் பிரான்சின் ஜஸ்ட் பான்டெய்ன் அடித்த 13 கோல்களையும் விடவும் பீலே அடித்த 6 கோல்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக அமைந்தது. பீலே அறிமுகமான தொடரில் பிரேசில் அணியில் காரின்சா, வாவா, டிடி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இருந்தனர். எனினும் 17 வயது சிறுவனான தன் மீது அணி நிர்வாகம் கொண்ட நம்பிக்கையை பீலே, நீர்த்து போகச்செய்யவில்லை.

http://tamil.thehindu.com/sports/article23965254.ece

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

இத்தாலியின் வலியை அறியுமோ கால்பந்து ?

 

 
22CHPMUWC-TROPHY

உலகக் கோப்பைக்கான பிரதி டிராபியை வடிவமைக்கும் கலைஞர்.   -  AFP

 

21-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரை வெகுவிமரிசையாக நடத்துவதற்காக ரஷ்யா முழு வீச்சில் தயாராகி உள்ளது. இந்த உலகக் கோப்பைப் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையானது இத்தாலி நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உலகக் கோப்பை தொடருக்கான மாதிரி கோப்பையும் இங்குதான் வடிவமைக் கப்படுகிறது.

 

ஆனால் வேதனையிலும் வேதனை, இந்த தொடருக்கான கோப்பையை செதுக்கும் அந்த நாட்டு தேசிய அணி இம்முறை உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியாததுதான். உலகக் கோப்பையில் பிரகாசிக்கும் வாய்ப்பை இழந்துள்ள இத்தாலி, கோப்பையை பளபளப்பாக்குவதன் மூலம் காயத்துக்கு மருந்து போட்டுக் கொண்டுள்ளது.

4 முறை சாம்பியனான இத்தாலி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தின் பிளே ஆஃபில் ஸ்வீடனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து 1958-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெறமுடியாமல் வெளியேறியது. உலகக் கோப்பை தொடருக்கு இத்தாலி செல்ல முடியாவிட்டாலும், உலகக் கோப்பையே இத்தாலிக்கு வந்தது.

ஆமாம், ஒவ்வொரு 4 வருடங்களுக்கும் ஒருமுறை மிலன் நகருக்கு அருகில் உள்ள ஒரு தொழில்துறை நகரத்தில் பெயரிடப்படாத கட்டிடம் ஒன்றில் உலோகத் தூளின் மேகங்கள், அச்சகங்கள், சுத்தியலின் ஒலி ஆகியவற்றுக்கு மத்தியில் இத்தாலி நிறுவனம் ஒன்று உலகக் கோப்பை தொடருக்கான டிராபியை மறுசீரமைப்பு செய்து கொடுத்து வருகிறது.

மிலனின் புறகர் பகுதியான பதர்னோ துக்னானோவில் உள்ள ஜிடிஇ பெர்டோனி என்ற சிறிய நிறுவனம்தான் இந்தப் பணியை செய்து வருகிறது. 1971-ம் ஆண்டு பிரேசில் அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை வென்றதால் ஜூலியஸ் ரைமெட் டிராபியை அந்த அணி சொந்தமாக்கிக் கொண்டது.

இதன் பின்னர் தற்போது வழங்கப்பட்டு வரும் கோப்பையை வடிவமைத்தது ஜிடிஇ பெர்டோனி நிறுவனம்தான். இந்த அசல் கோப்பையானது ஒவ்வொரு 4 ஆண்டு காலங்களிலும் மறுசீரமைப்பு செய்வதற்காக 12 ஊழியர்களை மட்டுமே கொண்ட ஜிடிஇ பெர்டோனி நிறுவனத்தின் கைகளுக்கு வந்து சேருகிறது.

1938-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் இயக்குநராக தற்போது வெலண்டினா லோசா என்ற பெண்மணி இருந்து வருகிறார். அசல் உலகக் கோப்பையை வடிவமைத்தது இந்த நிறுவனத்தின் கலை இயக்குநரும், சிற்பியுமான சில்வியோ காசானிகாதான். அதேவேளையில் உலகக் கோப்பையின் மேல் உலக உருண்டை போன்ற வடிவத்தை இடம் பெறச் செய்வதற்கான ஆலோசனையை வெலண்டினா லோசாவின் தந்தை ஜியோர்ஜியோவே வழங்கியுள்ளார்.

வெலண்டினா லோசா கூறும்போது, “அசல் உலகக் கோப்பை எங்களிடம் வரும்போது எப்போதுமே ஒரு சிறப்பான உணர்வு எங்களுக்குள் ஏற்படும். அசல் எப்போதுமே அசல்தான். அசலான மோனலிசா ஓவியத்தை பார்ப்பதற்கும் அதன் நகலை பார்ப்பதற்கும் இடையிலான வித்தியாசம் போன்றதுதான் இது.

நாங்கள் வடிவமைத்த கோப்பையை முதன் முதலாக கையில் ஏந்தியது 1974-ம் ஆண்டு ஜெர்மனி அணியின் கேப்டன் ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர்தான். கோப்பையை வடிவமைப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 53 திட்ட வரைவுகள் வந்தன. ஆனால் நாங்கள் மட்டும்தான் மாதிரியை வடிவமைத்துக் கொடுத்தோம்” என்றார்.

ஒவ்வொரு உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகும் ஃபிபா அமைப்பானது 38 செ.மீ. உயரம் மற்றும் 6 கிலோ தங்கம், மலாகிட் எனும் கற்கள் பதிக்கப்பட்ட டிராபியை பொலிவு பெறச் செய்வதற்காக ஜிடிஇ பெர்டோனி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கிறது. அந்த நிறுவனத்தின் ஊழியர்களில் ஒருவரான பீட்டோ பிராம்பில்லா கூறும்போது, “4 ஆண்டுகாலத்தில் கோப்பை பல்வேறு இடங்களுக்கு பயணிப்பதால் சிறிய அளவில் சேதம் ஏற்படும். இதை நாங்கள் சரி செய்து கொடுப்போம்.

ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் அணியின் கேப்டன் கோப்பையை கைகளில் ஏந்தும் போது எனது கண்களில் இருந்து கண்ணீர் நிரம்பி வழியும், ஏனெனில் எங்களது கைகளில் இருந்து உலகக் கோப்பை செல்கிறதே என்ற ஏக்கம்தான்.

அது ஒரு அற்புதமான உணர்வு. உலகக் கோப்பையை நாங்கள் கையில் ஏந்தியுள்ளோம் என பெரும்பாலான மக்கள் கூறமுடியாதல்லவா அதுதான்” என்றார்.

அசல் கோப்பையை வடிவமைத்துள்ள பெர்டோனி நிறுவனம் அதன் மாதிரியை செய்வதிலும் மெனக்கெட வேண்டி உள்ளது. இந்த மாதிரி டிராபிதான் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள் தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்லும்.

அசல் கோப்பையானது தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்குதான் சொந்தமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மாதிரி டிராபியானது வெண்கலத்தில் செய்யப்படுகிறது. அதன் பின்னர் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டு பளபளப்பு கூட்டப்படுகிறது.

ஜூலை 15-ம் தேதி நெய்மர் (பிரேசில்), லயோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), ஹ்யூகோ லொரிரிஸ் (பிரான்ஸ் ), செர்ஜியோ ரமோஸ் (ஸ்பெயின்), மானுவல் நெவர் (ஜெர்மனி) ஆகியோரில் யாராவது ஒருவரது கைகளில் உலகக் கோப்பை அசல் டிராபி தவழ்ந்தாலும் ஒரு சில மாதங்களில் மீண்டும் அது இத்தாலியில் உள்ள தொழில்துறை நகரத்தின் ஒரு மூலையில் உள்ள நிறுவனத்தில் தஞ்சம் அடைய காத்திருக்கிறது.

http://tamil.thehindu.com/sports/article23965251.ece

Share this post


Link to post
Share on other sites
கடந்த முறை காயத்துக்கு பழிதீர்க்குமா பிரேஸில்?
 
 

image_afe93eb828.jpg

 

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணம், 21ஆவது தடவையாக ரஷ்யாவில் அடுத்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கின்ற நிலையில், கடந்த உலகக் கிண்ணம் நடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்த உலகக் கிண்ணம் வரையான நான்கு ஆண்டுகளில் நாட்களை எண்ணிக் காத்திருந்த அணி பிரேஸிலாகத்தான் இருக்க முடியும்.

 

ஏனெனில், கால்பந்தாட்ட உலகக் கிண்ணம் ஆரம்பிக்கப்பட்ட 1930ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோராண்டும் உலகக் கிண்ணத்தில் விளையாடிவரும் பிரேஸில், தமது சொந்த நாட்டில் கடந்த 2014ஆ,ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில், நட்சத்திர முன்கள வீரர் நெய்மர், அப்போதைய தமது அணித்தலைவர் தியாகோ சில்வா இல்லாமல் 7-1 என்ற கோல் கணக்கில் மோசமாக ஜேர்மனியிடம் தோற்றது அவ்வணிக்கு இன்னும் ஆறாத வடுவாகக் காணப்படுகிறது.

குறித்த போட்டியில் தோல்வியடைந்ததுக்கு, பின்களத்தில் தியாகோ சில்வா இல்லாதது ஒரு காரணமாய் அமைந்ததோடு, அத்தொடரில் நெய்மர் என்ற தனிப்பட்ட நட்சத்திரத்தையே பெரும்பாலாக பிரேஸில் தங்கியிருந்தது என்று விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், இம்முறையும் நெய்மர் முக்கியமானவராகக் காணப்படுகின்றபோதும் மார்ஷெல்லோ, கஸேமீரோ, பிலிப் கோச்சினியோ, வில்லியன், கப்ரியல் ஜெஸூஸ், றொபேர்ட்டோ பெர்மினோ என அதிரடித் தாக்குதல்களை நிகழ்த்தக் கூடிய திறமை மிக்க குழாம் காணப்படுகின்றது.

இதில், முன்னேறி தாக்குதல்களை நடத்தக் கூடிய வலது பின்கள வீரரான டனி அல்விஸை காயம் காரணமாக பிரேஸில் இழந்தமை அவ்வணிக்கு சிறிது பாதகத்தை வழங்குகின்றது.

இதேவேளை, பின்கள வீரர்களான மார்ஷெல்லோ, டனி அல்விஸ் ஆகியோர் முன்னேறிச் சென்று தாக்குதல்களை நடத்தியது நேர்மறையான விடயங்களை வழங்கியிருந்தபோதும் கடந்த உலகக் கிண்ணத்தில் பின்கள வீரரான டேவிட் லூயிஸ் முன்னேறிச் சென்று விளையாடும்போது அந்த இடைவெளியைப் பயன்படுத்தி எதிரணிகள் கோல்களைப் பெற்றிருந்தன. ஆக, பின்களத்தில் தியாகோ சில்வா, மார்க்குயின்ஹொஸ், மிராண்டா ஆகியோரிடமிருந்து அதிக உறுதித் தன்மை எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, கால் காயம் காரணமாக இவ்வாண்டு பெப்ரவரி 26ஆம் திகதியிலிருந்து போட்டிகளில் நெய்மர் பங்கேற்காத நிலையில், அடுத்த மாத ஆரம்பத்திலேயே போட்டிகளில் பங்கேற்பதற்கான முழு உடற்றகுதியை நெய்மர் அடைவார் என்று கூறப்படுகிறது. ஆக, இவ்வளவு நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் நெய்மர் எவ்வாறு விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றபோதும் நெய்மரை மாத்திரம் அணி தங்கியிருக்காததன் காரணமாக பாரியளவில் பாதிப்புகளில்லை. எவ்வாறெனினும் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் வீரராக நெய்மரே விளங்கப் போகின்றார் என்பதில் சந்தேகமில்லை.

உலகக் கிண்ணத்தை அதிக தடவைகளாக ஐந்து தடவைகள் வென்ற பிரேஸில், இவ்வாண்டு உலகக் கிண்ணத்துக்கான தகுதிப்போட்டிகளின் ஆரம்பத்தில் டுங்காவின் பயிற்றுவிப்பின் கீழ் தென்னமெரிக்க பிரிவில் ஆறாமிடத்தில் காணப்பட்டதுடன், உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறத் தவறும் அபாயத்தைக் கொண்டிருந்தது.

எவ்வாறெனினும் டிட்டே பயிற்சியாளரானதன் பின்னர் எழுச்சி பெற்ற பிரேஸில், முதலாவது அணியாக உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றிருந்த நிலையில், இறுதியாக தாம் உலகக் கிண்ணத்தை 2002ஆம் ஆண்டு வென்று 16 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இம்முறை உலகக் கிண்ணத்தை குறிவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கொஸ்டாரிக்கா, சேர்பியா, சுவிற்ஸர்லாந்துடன் குழு ஈயில் உலகக் கிண்ணத்தில் இடம்பெற்றுள்ள பிரேஸில், அடுத்த மாதம் 17ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 11.30 மணிக்கு சுவிற்ஸர்லாந்துடன் மோதவுள்ள போட்டியுடன் தமது உலகக் கிண்ணத்தை ஆரம்பிக்கின்றது.

http://www.tamilmirror.lk/sports-articles/கடந்த-முறை-காயத்துக்கு-பழிதீர்க்குமா-பிரேஸில்/139-216367

Share this post


Link to post
Share on other sites

சிறகடித்து பறந்தலிட்டில் பேர்டு கரிஞ்சா

 

 
 
 
Detailcol
garrincha%201

1962-ம் ஆண்டு 7-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி தென்அமெரிக்க நாடான சிலியில் நடைபெற்றது. 1960-ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 5 ஆயிரம் பேர் வரை உயிரிழந் தனர். இதனால் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெறுவதில் அந்நாடு பெரும் சிக்கலை சந்தித்தது.

 

இந்தத் தொடரில் 1958-ம் ஆண்டு 2-வது இடம் பெற்றிருந்த ஸ்வீடன் இந்த உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவில்லை.

நடப்பு சாம்பியனான பிரே சில் அணி தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது. புகழின் உச்சியில் இருந்த பீலே, மெக்ஸிகோ அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஒரு கோல் அடிக்க பிரேசில் 2-0 என்ற கணக்கில் வென்றிருந்தது. ஆனால் செக்கோஸ்லோவேகியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் பீலே காயமடைந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் தொடர் முழுவதுமே களமிறங்கவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உலகக் கோப்பை கால்பந்தில் வீரர்கள் மிகமோசமாக விளையாடிய ஆட்டமாக இத் தாலி - சிலி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அமைந்தது. எதிரணியினரை தள்ளி விடுவது, உதைப்பது போன்ற மோசமான செயல்களில் இரு தரப்பினரும் ஈடு பட்டனர். இத்தாலி வீரர்களான ஜியோர்ஜியோ ஃபெரினி, மரியோ டேவிட் ஆகியோர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப் பட்டனர். போட்டி முடிந்த பிறகு இரு அணியினரையும் போலீஸார் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உருவானது. இந்த ஆட்டத்தில் சிலி 2-0 என்ற கணக்கில் வென்றது.

பிரேசில் அணியில் பீலே இல்லாத குறையை கரிஞ்சா போக்கினார். இவரது இயற் பெயர் மானுவேல் பிரான் சிஸ்கோ ஆகும். எனினும் அவர் செல்லமாக கரிஞ்சா என்றே அழைக்கப்பட்டார். கரிஞ்சா என்றால் போர்த்துக்கீசிய மொழியில் ‘லிட்டில் பேர்டு’ (சிறிய பறவை) என்று பொருள். உலகக் கோப்பையில் சிறகடித்து பந்த கரிஞ்சா, கால் இறுதி மற்றும் அரை இறுதியில் தலா இரு கோல்கள் அடித்து அசத்தினார். இறுதிப் போட்டியில் பிரேசில் அணி செக்கோஸ்லோ வேகியாயுடன் மோதியது.

அரை இறுதி ஆட்டத்தின் போது ஒரு கட்டத்தில் எதிரணி வீரருடன் முரட்டுத் தனமாக கரிஞ்சா நடந்துகொண்டார். இதனால் இறுதிப் போட்டியில் அவர் தடையை எதிர்கொள்ள இருந்தார். ஆனால் பிரேசில் நாட்டு பிரதமரின் தலையீடு காரணமாக தடையில் இருந்து கரிஞ்சா தப்பினார்.

பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 15-வது நிமிடத்திலேயே கோல் அடித்து செக்கோஸ்லோவேகியா முன்னிலை பெற்றது. ஆனால் 2-வது நிமிடத்திலேயே பிரேசில் கோல் கணக்கை சமன் செய்தது. இதன் பிறகு போட்டி கடுமையானது. இரு அணிகளுமே கோல் அடிக்க கடுமையாக போராடின. 68-வது நிமிடத்தில் ஸிட்டோவும், 77-வது நிமிடத்தில் வாவாவும் கோல் அடிக்க பிரேசில் அணி 3-1 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. பீலே இல்லாமல் பிரேசில் உலகக் கோப்பையை வெல்ல கரிஞ்சாவின் சிறப்பான ஆட்டம் முக்கியக் காரணமாக இருந்தது.

http://tamil.thehindu.com/sports/article23974598.ece

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

உலகக்கோப்பை கால்பந்து- காயத்தால் அர்ஜென்டினா கோல் கீப்பர் விலகல்

அ-அ+

ரஷியாவில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான அர்ஜென்டினா அணியில் இருந்து கோல்கீப்பர் விலகியுள்ளார்.

 
 
 
 
உலகக்கோப்பை கால்பந்து- காயத்தால் அர்ஜென்டினா கோல் கீப்பர் விலகல்
 
ரஷியாவில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று விளையாடும் 32 நாடுகள், தங்கள் அணி வீரர்களை அறிவித்து வருகிறது. அர்ஜென்டினா தங்கள் அணி வீரர்கள் பட்டியலை சமீபத்தில் அறிவித்திருந்தது. அதில் கோல் கீப்பர் செர்ஜியோ ரொமேரோ இடம்பிடித்திருந்தார்.

நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) ரொமேரோவிற்கு கால் மூட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் அணியில் இருந்து அவர் விலகியுள்ளார் என்று அர்ஜென்டினா கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளார்.

201805241500020573_1_romero002-s._L_styvpf.jpg

இதுகுறித்து அர்ஜென்டினா கால்பந்து சங்கம் ‘‘ரொமேரோ 23 பேர் கொண்ட அர்ஜென்டினா அணியில் இருந்து நீக்கப்படுவார். அவருக்கான மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார்’’ என்று தெரிவித்துள்ளது. ரொமேரோ அர்ஜென்டினா அணிக்காக 2010 மற்றும் 2014 உலகக்கோப்பையில் விளயைாடியுள்ளார். அர்ஜென்டினாவிற்கு 83 போட்டியில் களம் இறங்கியுள்ளார்.

https://www.maalaimalar.com/

Share this post


Link to post
Share on other sites

நாய்கள் ஓட்டப்பந்தயமும் 1966 உலகக் கோப்பையும்..

 

timecol
25CHPMUBOBBYMOORE

1966-ல் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியினர்.   -  AFP

 
 
 

1966-ல் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியினர்.   -  AFP

1996-ல் நடைபெற்ற 8-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இங்கிலாந்து நடத்தியது. இந்தத் தொடரில்தான் முதன்முறையாக போட்டிக்கான சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கிலாந்து உலகக் கோப்பையின் சின்னமாக சிங்கம் அறிவிக்கப்பட்டு அதற்கு வில்லி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான பிரேசில் கடும் பின்னடைவை சந்தித்தது. முதல் ஆட்டத்தில் பல்கேரியாவுக்கு எதிராக 2-0 என பிரேசில் வென்றது.

இந்த ஆட்டத்தில் பீலேவும், கரிஞ்சாவும் கோல் அடித்தனர். ஹங்கேரிக்கு எதிரான ஆட்டத்தில் காயம் காரணமாக பீலே விளையாடவில்லை. இதில் 1-3 என்ற கணக்கில் பிரேசில் வீழ்ந்தது. அரை இறுதிக்கு தகுதி பெற முடியாத நிலைக்கு பிரேசில் தள்ளப்பட்டது. இதனால் தொடர்ந்து இருமுறை கோப்பையை வென்ற பிரேசில் முதல் சுற்றுடன் வெளியேறியது. 3 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்ற பிரேசில் அணியால் தொடரில் 11-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அரை இறுதி ஆட்டங்களில் மேற்கு ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் சோவியத்யூனியனையும், இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்தில் போர்ச்சுக்கலையும் வென்றன.

 

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - மேற்கு ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் தலா இரு கோல்கள் அடிக்க ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது.

இதையடுத்து கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. சார்லஸ் ஹர்ஸ்ட் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்த ஆட்டத்தில் அவர், அடித்த 2-வது கோல் சர்ச்சைக்குள்ளானது.

இந்த உலகக் கோப்பையில் சுவாரசியமான சம்பவம் ஒன்றும் நடைபெற்றது. இங்கிலாந்து அணி லீக் சுற்றில் குரூப் 1-ல் இடம் பெற்றிருந்தது. இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள அனைத்து அணிகளின் ஆட்டமும் வெம்ப்ளே மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரான்ஸ் - உருகுவே அணிகள் ஜூலை 15-ம் தேதி இந்த மைதானத்தில் மோத இருந்த ஆட்டம் ஒயிட் சிட்டி மைதானத்துக்கு மாற்றப்பட்டது. அன்றைய தினத்தில் வெம்ப்ளே மைதானத்தில் பாரம்பரியமான முறையில் நடத்தப்படும் நாய்களுக்கான ஓட்டப் பந்தயம் நடத்த திட்டமிட்டிருந்ததால் மைதானத்தின் உரிமையாளர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த அனுமதிக்கவில்லை.

நவீனகால கால்பந்து போட்டிகள் பிறந்த இடமாக கருதப்படும் இங்கிலாந்தில் அதுவும் முதன்முறையாக உலகக் கோப்பையை நடத்தியபோது நாய்கள் ஓட்டப்பந்தயத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது அனைவருக்கும் சற்று ஆச்சர்யமாக இருந்திருக்கலாம். ஆனால் இதன் பின்னணியில் மற்றொரு காரணமும் பொதிந்திருந்தது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் ‘ஜூல்ஸ் ரைமட் டிராபி’ தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இது திடீரென காணாமல் போனது. அந்த கோப்பை நாய்களின் உதவியுடன்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

http://tamil.thehindu.com/sports/article23984812.ece

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

எகிப்தின் நம்பிக்கை நாயகன் முகமது சாலா

 

Titilecol
17CHPMUMASCOT

உலகக் கோப்பை போட்டி சின்னம் ஸபிவகா.   -  AFP

17chpmuLogo
24CHPMUMOHAMEDSALAH

முகமது சாலா   -  Stu Forster

DATE1col
DATE2col
Titilecol
17CHPMUMASCOT

உலகக் கோப்பை போட்டி சின்னம் ஸபிவகா.   -  AFP

 

கேப்டன்: எஸாம் எல் ஹாடர்ரி

 

பயிற்சியாளர்: ஹெக்டர் கப்பர்

 

 

ஃபிபா தரவரிசை: 46

 

இதுவரை

எகிப்து அணி 14 முறை போராடி 3 முறை மட்டுமே உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. முதன்முறையாக 1934-ல் தகுதி பெற்றது. கடைசியாக 1990-ல் விளையாடியிருந்தது. இருமுறையும் முதல் சுற்றை கடக்கவில்லை.

 

தகுதி பெற்ற விதம்

2017-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் காங்கோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை தொடரில் கால்பதித்துள்ளது எகிப்து. இந்த ஆட்டத்தில் வெற்றிக்கான இரு கோல்களையும் இளம் நட்சத்திரமான முகமது சாலா அடித்திருந்தார். அதிலும் இன்ஜுரி நேரத்தில் 94-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை 12 அடி தூரத்தில் இருந்து உதைத்த சாலா எகிப்து விளையாட்டு வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கத் தவறவில்லை.

உலகக் கோப்பை தகுதி சுற்று 3-வது கட்ட ஆட்டங்களில் 5 கோல்கள் அடித்து அசத்திய சாலா எகிப்தின் மெஸ்ஸி என்ற வருணிக்கப்படுகிறார். அவரது அபாரமான ஆட்டத்தின் காரணமாக ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து முதல் அணியாக எகிப்து, ரஷ்யா உலகக் கோப்பைக்குள் நுழைந்தது. தகுதி சுற்றில் எகிப்து அணி அடித்த கோல்களில் 71 சதவீதம் முகமது சாலாவின் உதையில் இருந்தே வந்தது. அதிலும் தகுதி சுற்றின் 3-வது கட்டத்தில் ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் கோல் அடிக்க தவறவில்லை.

 

முகமது சாலா

தொழில்முறை கால்பந்து போட்டிகளில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வரும் 25 வயதான முகமது சாலா பிரிமீயர் லீக் தொடரில் இந்த சீசனில் 36 ஆட்டங்களில் 32 கோல்கள் அடித்து மிரளச் செய்துள்ளார். இதற்கு முன்னர் ஆலன் ஷீரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் அடித்த 31 கோல்களே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தகர்த்துள்ள முகமது சாலா ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் 51 ஆட்டங்களில் லிவர்பூல் அணிக்காக 44 கோல்கள் அடித்துள்ளார். இவற்றுடன் தேசிய அணிக்காக முகமது சாலா 57 ஆட்டங்களில் 33 கோல்கள் அடித்து பலம் சேர்த்துள்ளார்.

பிரிமீயர் லீக் சீசனில் தனது அபார பார்மால் இந்த ஆண்டின் சிறந்த வீரர் விருதை சாலா பெற்றுள்ளார். ஆப்பிரிக்க நாட்டில் இருந்து இந்த விருதை பெறும் 2-வது வீரர் சாலா ஆவார். இதற்கு முன்னர் அல்ஜீரியாவின் நடுகள வீரரான ரியாத் மஹ்ரெஜ் கடந்த 2016-ம் ஆண்டு இந்த விருதை வென்றிருந்தார்.

பிரிமீயர் லீக் தொடரின் பார்மை முகமது சாலா ரஷ்ய உலகக் கோப்பைக்கும் வியாபிக்க செய்தால் எதிரணிகளுக்கு சிக்கல்தான். எகிப்து அணி ரஷ்ய உலகக் கோப்பையில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் போட்டியை நடத்தும் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா, உருகுவே அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் உருகுவே மட்டுமே பலம் வாய்ந்த அணி. இதனால் இம்முறை எகிப்து அணி எப்படியும் முதல் சுற்றை கடந்து சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் அனைவரது பார்வையும் முகமது சாலா மீதுதான் இருக்கக்கூடும். இதில் எந்தவித ஆச்சர்யத்துக்கும் இடமிருக்காது. பிரிமீயர் லீக் தொடரில் சாலாவை போன்று திறனை வெளிப்படுத்திய ஆப்பிரிக்க வீரர்கள் பலர் வரலாற்று பக்கங்களில் இருந்திருக்கவில்லை. பிரிமீயர் லீக் தொடரானது சாலாவுக்கு ஆண்டின் சிறந்த விருதான பாலோன் டி’ ஆர் விருதை கூட பெற்றுத்தரக்கூடும் என்ற கருத்துகளும் உலாவத் தொடங்கி உள்ளன.

லிவர்பூல் அணி போன்று எகிப்து தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறனை கொண்டது கிடையாததுதான். ஆனால் தேசிய அணிக்காக விளையாடும் போது கூடுதல் பொறுப்புணர்வுடன் சாலாவிடம் இருந்து மேம்பட்ட திறன் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சுற்றை எகிப்து எளிதில் கடந்தாலும் அடுத்த சுற்றில் போர்ச்சுக்கல் அல்லது ஸ்பெயின் போன்ற வலுவான அணிகளை சந்திக்க நேரிடும். எனினும் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தாலே எகிப்து அணிக்கு அது சாதனைதான்.

 

தளராத நம்பிக்கை

எகிப்து அணியின் பயிற்சியார் ஹெக்டர் கப்பர் கூறும்போது, “லிவர்பூல் அணிக்காக அற்புதமாக விளையாடி வரும் முகமது சாலா அதே திறனை ரஷ்ய உலகக் கோப்பையில் தேசிய அணிக்காக வெளிப்படுத்துவார் என நாங்கள் நம்புகிறோம். உலகக் கோப்பை தொடர் கடினமாகவே இருக்கும். ஆனாலும் நாங்கள் தளராத நம்பிக்கையுடன் உள்ளோம்” என்றார்.

 

பயிற்சி ஆட்டங்கள்

எகிப்து நாளை குவைத் அணியுடன் நட்புரீதியிலான ஆட்டத்தில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 1-ல் கொலம்பியாவுடன் விளையாடும் எகிப்து அதன் பின்னர் ஜூன் 6-ல் ரஷ்யா புறப்பட்டு செல்கிறது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அங்கு 3 பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கிறது. எகிப்து அணி பங்கேற்ற கடைசி இரு நட்புரீதியிலான ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article23984808.ece

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

திருட்டு பட்டம் கட்டப்பட்ட இங்கிலாந்து கேப்டன்

 

 
25CHPMUPELE

சாம்பியன் கோப்பையுடன் பிரேசில் வீரர் பீலே. (கோப்பு படம்)   -  AFP

1970

-ம் ஆண்டு நடைபெற்ற 9-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரை மெக்ஸிகோ நடத்தியது.

 

. பிரேசில், இத்தாலி, மேற்கு ஜெர்மனி, உருகுவே ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி யால் 8-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

அரையிறுதியில் உருகுவே அணியை 3-1 என்ற என்ற கணக்கில் தோற்கடித்த பிரேசில், இறுதி ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை 3 முறை வென்ற முதல் அணி என்ற பெருமையை பிரேசில் பெற்றது. இந்தத் தொடரில் பிரேசில் அணியின் ஜெய்ர்ஜின்கோ 7 கோல்களையும், பீலே 4 கோல்களையும் அடித்து அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தனர். அதேவேளையில் அணி வீரராகவும் பயிற்சியாளராகவும் கோப்பையை வென்றவர் என்ற சிறப்பைப் பெற்றார் மரியோ.

1966-ல் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் அதீத பலத்துடன் இந்த உலகக் கோப்பையில் களமிறங்கியது. இந்தப் போட்டிக்கு தயாராவதற்காக அந்த அணி கொலம்பியா மற்றும் ஈக்வேடார் அணிக்கு எதிராக நட்புரீதியிலான ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது. இதற்காக கொலம்பியாவின் போகோடா நகரில் உள்ள ஓட்டலில் இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருந்தனர்.

கொலம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பாபி மூரே, சக அணி வீரரான சார்ல்டனுடன் இணைந்து ஓட்டலுக்கு அருகே உள்ள நகைக் கடைக்கு சென்றனர். இவரும் அங்கு சிறிது நேரத்தை செலவிட்ட நிலையில் எதுவும் வாங்காமலேயே அங்கிருந்து திரும்பி வந்தனர். இதன் பின்னர்தான் வினை ஆரம்பித்தது. காட்சிப் படுத்தப்பட்ட பெட்டகத்தில் இருந்து பாபி மூரே, பிரேஸ்லெட்டை (தங்கச்சங்கிலி ) திருடி விட்டதாக நகைக்கடை உதவியாளர் பகிரங்க புகாரை கூறினார்.

இதைத் தொடர்ந்து பாபி மூரே, சார்ல்டனிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர், எனினும் அவர்களை அப்போதைக்கு விடுவித்தனர். கொலம்பியா, ஈக்வேடார் அணிகளுக்கு எதிராக ஆட்டத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து அணி அதே ஓட்டலில் தங்கியது. அப்போதுதான் திருட்டு வழக்கில் பாபி மூரே கைது செய்யப்பட்டார். 4 நாட்கள் அவர், ஓட்டலுக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டார். இதனால் இங்கிலாந்து கேப்டன் இல்லாமல் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி மெக்ஸிகோ புறப்பட்டு சென்றது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் எந்தவித ஆதாரமும் இல்லாததால் பாபி மூரே விடுவிக்கப்பட்டார். இதனால் பாபி மூரே மெக்ஸிகோவில் தனது அணியினருடன் இணைந்தார். ஆனால் உத்வேகம் சீர்குலைந்த இங்கிலாந்து அணியால் கால் இறுதி சுற்றைக்கூட தாண்ட முடியாமல் போனது. ஆனால் வலுவான இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை சிதைக்கும் சதிச் செயலாகவே தங்கச்சங்கிலி திருட்டு விவகாரம் எழுப்பப்பட்டதாக இங்கிலாந்து ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

http://tamil.thehindu.com/sports/article23996790.ece

Share this post


Link to post
Share on other sites

வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடிப்பாரா நெய்மர்?

26CHPMUNEYMAR2

நெய்மர்   -  AFP

17CHPMUMASCOT

உலகக் கோப்பை போட்டி சின்னம் ஸபிவகா.   -  AFP

26CHPMUNEYMAR

நெய்மர்   -  AFP

26CHPMUNEYMAR2

நெய்மர்   -  AFP

17CHPMUMASCOT

உலகக் கோப்பை போட்டி சின்னம் ஸபிவகா.   -  AFP

 

தகுதி சுற்று போட்டியின் தொடக்கத்தில் பிரேசில் அணியின் பயிற்சியாளராக துங்கா பணியாற்றினார். அந்த சமயத்தில் பிரேசில் அணி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தாததால் 6-வது இடத்தில் இருந்ததுடன் ரஷ்ய உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதும் கேள்விக்குறியானது. ஆனால் புதிய பயிற்சியாளர் டைட் பொறுப்பேற்றுதும் நிலைமை முற்றிலும் மாறியது. வீரர்கள் இழந்த பார்மை மீட்டெடுத்தனர். எதிரணிக்கு அச்சமூட்டும் ஆட்டத்தை பிரேசில் வெளிப்படுத்த தகுதி சுற்று ஆட்டங்களில் வெற்றிகள் குவியத் தொடங்கின. ரஷ்ய உலகக் கோப்பை தொடருக்கு முதல் அணியாக தகுதி பெற்றது பிரேசில்தான். தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடையிலான தகுதி சுற்றில் பிரேசில் அணியே முதலிடம் வகித்தது.

 

பலம்

2014 உலகக் கோப்பையில் கற்றுக்கொண்ட மோசமான பாடத்தால் இம்முறை பிரேசில் அணி தனிப்பட்ட வீரரின் திறனை சார்ந்திருக்காமல் முழு வீச்சில் தயாராகி உள்ளது. நட்சத்திர வீரரும் கேப்டனுமான நெய்மர் தற்போதும் அந்த அணியின் துருப்பு சீட்டாகவே உள்ளார். எனினும் அவரை மட்டுமே இம்முறை பிரதானமாக நம்பியிருக்காதது பலமாக கருதப்படுகிறது. அதாவது தனிநபர் ஆட்டத்தின் பின்னலுக்குள் இருந்து பிரேசில் அணி தன்னை விடுவித்துக்கொண்டுள்ளது. இந்த மாற்றம் டைட் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னரே சாத்தியமாகி உள்ளது. புதிய பயிற்சியாளர், புதிய அணுகுமுறை ஆகியவற்றால் நெய்மர் முன்பை விட சுதந்திரமாக செயல்பட வழிவகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அணி முழுமையான வடிவமும் அடைந்துள்ளது.

உலகக் கோப்பைக்கான அணியில் அனைவரும் அறிந்த முகங்களான தானி ஆல்வ்ஸ், மார்செலோ ஆகியோருடன் புதிய முகங்களான காஸ்மிரோ, கபேரியல் ஆல்வ்ஸ் மற்றும் ஐரோப்பிய தொடர்களில் அசத்தி வரும் பிலிப் கவுடின்கோ, வில்லியன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த அணிக்கு எந்த இடத்தில் பதுங்க வேண்டும், எந்த இடத்தில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ள வேண்டும், பந்துகளை எப்படி எதிரணியின் ஊடாக கடத்த வேண்டும் என்பது அத்துப்படிதான். எல்லாவற்றுக்கும் மேலாக ஐஸ்கீரிம் மீது வைக்கப்படும் செர்ரி பழம் போன்று நெய்மரும் பலம் சேர்க்கிறார்.

 

பலவீனம்

முக்கியமான 3 விஷயங்கள் பிரேசில் அணிக்கு பின்னடைவை கொடுக்கக்கூடும். முதல் விஷயம் தந்திரோபாயத்தை சார்ந்தது. தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறன் கொண்ட தானி ஆல்வ்ஸ், மார்செலோ ஆகியோர் முன்களத்தில் விளையாடினால் சிறப்பு திறன்களை வெளிப்படுத்துவது அவசியம். அதேவேளையில் இவரது இடங்கள் எதிரணியினரின் ஆய்வுக்கு உட்படாமல் இருக்க வேண்டும். 2-வது விஷயம் அனுபவம். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் போதிய அனுபவத்தை கொண்டவர்கள் இல்லை. டைட் பயிற்சியின் கீழ் பிரேசில் வீரர்கள் உயர்மட்ட அணிகளுக்கு எதிராக சில சோதனைகளை நடத்தி உள்ளனர். எந்த எந்த அளவுக்கு உலகக் கோப்பையில் கை கொடுக்கும் என்பது தெரியவில்லை.

3-வது விஷயம் நெய்மரின் உடல் தகுதி. காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நெய்மர் கடந்த பிப்ரவரி 26 முதல் எந்தவித ஆட்டங்களிலும் விளையாடவில்லை. தற்போது குணமடைந்துள்ள அவர், உடற் தகுதி பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறார். எனினும் மீண்டும் ஒரு முறை பிரேசில் அணி அவரை மட்டுமே நம்பியிருத்தல் கூடாது. ஆனால் நட்சத்திர வீரரான அவர் இல்லாமல் தொடக்க சுற்றுகளில் விளையாடுவது என்பது அந்த அணிக்கு சற்று கவலையை கொடுக்கக்கூடும்.

 

நட்சத்திர வீரர்

அனைவரது பார்வையும் இம்முறையும் நெய்மர் மீதே இருக்கக்கூடும். 2010-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பிரேசில் அணிக்காக நெய்மர் அறிமுகமானார். அந்தத் தொடரில் பிரேசில் அணி கால் இறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது. இதன் பின்னர் 2014 உலகக் கோப்பையில் கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது நெய்மர் காயம் அடைந்தார். இதனால் அவர், அரை இறுதியில் ஜெர்மனிக்கு எதிராக களமிறங்கவில்லை. விளைவு இந்த ஆட்டத்தில் பிரேசில் 1-7 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது.

அதில் இருந்து 2 வருடங்களில் ரியோ ஒலிம்பிக்கில் பிரேசில் அணிக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்தார் நெய்மர். இதன் பின்னர் தொழில் முறை போட்டிகளில் பார்சிலோனா கிளப் அணியில் லயோனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரெஸ் ஆகியோருடன் இணைந்து தனது திறனை மேலும் மெருகேற்றினார் நெய்மர்.

இதன் விளைவாக கடந்த 2017-ல் அவரை பெரும் தொகைக்கு வளைத்து போட்டது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி. இதற்கிடையே உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களிலும் நெய்மர் அபார திறனை வெளிப்படுத்தினார். 6 கோல்கள் அடித்த அவர், 8 கோல்கள் அடிக்க உதவியும் செய்தார்.

முழு உடல் தகுதியை எட்டாத நெய்மர் , ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் விளையாடுவாரா என்பதில் இன்னும் சந்தேகம் நிலவுகிறது. கடந்த பிப்ரவரி முதல் கால்பந்து களத்தை சந்திக்காத அவர், எப்படி மீண்டு வரப்போகிறார் என்பது தெரியவில்லை. எல்லோரும் நெய்மரின் ஆட்டத்தை காண காத்திருக்கின்றனர். ஏன் அவரும் கூடத்தான். சமீபத்திய பேட்டி ஒன்றில் நெய்மர், “எனது நாட்டுக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுக்க மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது குழந்தைப் பருவம் முதல் நான் பெற்றிருக்கும் கனவு இது. இம்முறை எனது கோப்பை என்று நம்புகிறேன்” என்றார். அவரது கனவு மெய்ப்படுமா, வரலாற்று பக்கங்களில் பீலே, ரொனால்டோ ஆகியோரது வரிசையில் இடம் பெறுவாரா என்பது கால்களின் திருவிழா (ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடர்) தொடங்கியதும் தெரியவரும்.

http://tamil.thehindu.com/sports/article23996788.ece

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

மொராட்டா, டேனி ஆல்வ்ஸ், இகார்டி... உலகக் கோப்பையை மிஸ் செய்யும் ஸ்டார்கள்! #WorldCup

 
 

விரைவில் ஆரம்பிக்கப் போகிறது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா. ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை, ஒரு மாதம் ரஷ்யாவில் நடக்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கவுள்ள 32 அணிகளும், 23 பேர் கொண்ட தங்களின் இறுதி வீரர்கள் பட்டியலை அறிவித்துக் கொண்டிருக்கிறன. இந்நிலையில், உலகின் பல சிறந்த வீரர்களும் கூட, தங்களது தேசிய அணியில் இடம் பிடிக்காமல் போயிருப்பது, கால்பந்து உலகில், பல ஆச்சர்யங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. இந்தத் தொடரை மிஸ் செய்யப்போகும் அந்த ஸ்டார்கள் யார்?

உலகக் கோப்பை

 

ஸ்பெயின்

2010 உலகக் கோப்பை சாம்பியனான ஸ்பெயின் அணியில், ஸ்டார் வீரர்களுக்கு எப்போதும் பஞ்சமென்பதே கிடையாது. ஸ்பெயின் உட்பட, உலகின் டாப் கிளப்புகளில் விளையாடும் ஸ்பெயின் வீரர்கள் அனைவருமே, நிச்சயம் தங்கள் தேசிய அணியில் இடம் பிடித்துவிடுவர். ஆனால்,  இறுதி வீரர்கள் பட்டியலை ஸ்பெயின் பயிற்சியாளர் அறிவித்தபோது, அதில் பல ஸ்டார்கள் மிஸ்ஸிங்!

அல்வாரோ மொராட்டா, ஸ்பெயினின் இளம் ஸ்ட்ரைக்கர். கடந்த வருடம் வரை ரியல் மாட்ரிட் அணிக்காக அசத்தி வந்த 24 வயதான மொராட்டாவை, அதிக எதிர்பார்ப்புகளோடு வாங்கியது இங்கிலாந்தின் டாப் கிளப்பான செல்சீ. ஆனால், ஓப்பனிங்கில் கெத்து காட்டி கோல்கள் அடித்த அவரால், சீசனின் இறுதிவரை அந்த ஃபார்மை தக்கவைக்க முடியாமல் போக, அது உலகக் கோப்பையில் அவரது இடத்துக்கே வினையாகி விட்டது. பிரீமியர் லீக்கில் வெறும் 11 கோல்கள் மட்டுமே அடித்துள்ள அவருக்கு வேர்ல்ட் கப் அணியில் இடம் கிடைக்கவில்லை.

மொராட்டா

மொராட்டாவைப் போலவே செல்சீ அணிக்காக விளையாடிவரும், அனுபவ மிட்ஃபீல்டர்களான, செஸ் ஃபேப்ரிகாஸ் மற்றும் பெட்ரோ ஆகியோரின் பெயர்களும் மிஸ்ஸிங். மிட்ஃபீல்ட் ஜாம்பவான்களான இனியெஸ்டா, செர்ஜியோ புஸ்கட்ஸ் மற்றும் டேவிட் சில்வா ஆகியோர் ஏற்கெனவே தங்களது இடத்தை உறுதி செய்துவிட்ட நிலையில், நடுகளத்தில் இடம்பெற மட்டுமே ஸ்பெயினில் கடும் போட்டி நிலவியது. அதனால் சுமாரான ஃபார்மில் இருந்த இருவரும் அணியில் சேர்க்கப்படவில்லை.

அதைப்போலவே மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிவரும் யுவான் மாடா மற்றும் ஆண்டர் ஹெரேரா, அர்செனல் இளம்புயல் ஹெக்டர் பெல்லரின் மற்றும் பார்சிலோனாவின் 'வெர்சடைல்' செர்ஜி ராபெர்டோ ஆகியோரும் இந்தத் தொடரை மிஸ் செய்ய உள்ளனர்.

இங்கிலாந்து

1996 உலகக் கோப்பை சாம்பியனான இங்கிலாந்து, தனது அனுபவ கீப்பரான ஜோ ஹார்ட்டையே இந்த உலகக் கோப்பைத் தொடரில் புறக்கணித்திருக்கிறது. ஆனால், பல வருடங்களாக ஃபார்ம் இல்லாமல், தொடர்ந்து சொதப்பி வருகிற ஹார்ட், இந்த சீசனில் வெஸ்ட் ஹாம் அணிக்கு லோன் ஆப்ஷனில் விளையாடினார். வெறும் 19 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஹார்ட், இங்கும் சொதப்ப,  அணியிலிருந்து கழட்டிவிட்டுள்ளார் இங்கிலாந்து மேனேஜர் கெரத் சவுத்கேட்.

பிரேசில்    

இந்த உலகக் கோப்பையின் நம்பர் ஒன் ஃபேவரிட், நிச்சயம் `ஆல் ஸ்டார்’ டீமான பிரேசில் தான். லிஸ்டில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவருமே, உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் தான் என்றாலும் கூட, பிரேசிலும் தங்கள் ஸ்டார் பிளேயர்கள் சிலரை இந்த உலகக் கோப்பையில் மிஸ் செய்யப் போகிறது.

dani alves

டேனி ஆல்வஸ், உலகின் சிறந்த ரைட் பேக். பிரான்சின் லீக் ஒன் சாம்பியனான, பிஎஸ்ஜி அணிக்காக விளையாடிவரும் 35 வயதான டிஃபெண்டர். டிஃபென்ஸ் மட்டுமல்லாமல், அட்டாக்கிலும் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஆனால், ஃபிரெஞ்ச் கப் ஃபைனலில்போது, முழங்காலில் காயம் அடைந்த டேனி ஆல்வஸ், ஒரு மாதத்துக்கும் மேல் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். எனவே, 2006 முதல் பிரேசில் தேசிய அணியில் தவறாமல் இடம் பிடித்துவரும் அவர், வேறு வழியின்றி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது பிரேசில் ரசிகர்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் ஒரு நிகழ்வு. அவரைப் போலவே, மற்றொரு சிறந்த டிஃபெண்டரான, செல்சீயின் டேவிட் லூயிஸின் பெயரும், பிரேசில் மேனேஜரான டிடே அறிவித்த இறுதி வீரர்கள் லிஸ்டில் இடம் பெறவில்லை. 

அர்ஜெண்டினா

2014 உலகக் கோப்பை மாதிரி இல்லாமல், இந்தமுறை துண்டை தவறவிட்டுவிடக் கூடாது என்ற கனவிலிருக்கிறது அர்ஜெண்டினா. லியோ மெஸ்சி, அக்வேரோ, ஹிகுவைன் மற்றும் டிபாலா என பார்த்துப் பார்த்து, பயிற்சியாளர் ஜோர்ஜ் சம்போலி தன் அட்டாக்கிங் லைனை செதுக்கியிருந்தாலும், இன்டர் மிலன் கேப்டனான மாரோ இகார்டியை அவர் புறக்கணித்திருப்பது, பலவித விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

மாரோ இகார்டி, 29 வயதான ஸ்டிரைக்கர். இன்டர் மிலன் அணியின் கேப்டன். இத்தாலியின் சீரி ஏ தொடரில், 33 போட்டிகளில் விளையாடி 29 கோல்கள் அடித்துள்ள அவர், இந்த சீசனின் இன் ஃபார்ம் ஸ்ட்ரைக்கர்களில் ஒருவர்; தொடரின் டாப் ஸ்கோரரும் அவரே தான். ஆனால் உலகக் கோப்பையில் விளையாடும் தகுதியற்றவர் என சம்போலியால் அவர் நிராகரிக்கப்பட்டிருப்பது தான் வேதனையின் உச்சம். 2016 க்கு பிறகு, அர்ஜெண்டினாவுக்காக ஒரு கோல் கூட அடிக்காத, ரசிகர்களால் ஃபார்ம் அவுட் என விமர்சிக்கப்படும் ஹிகுவைனை தேர்வு செய்திருக்கும் சம்போலி, ஃபுல் ஃபார்மில் இருக்கும் இகார்டியை கழற்றிவிட்டிருப்பது நிச்சயம் அர்ஜெண்டினாவுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.

icardi

தான் ஜீனியஸ் என்ற பெயரெடுக்க, மேலும் ஒரு பரிசோதனை முயற்சியாக, போக்கா ஜூனியர்ஸ் அணியின் இளம் வீரரான கிறிஸ்டியன் பவோனை அவர் தேர்வு செய்திருப்பது சர்ச்சையை வலுப்படுத்துகிறது. இகார்டி நிச்சயம் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒரு வீரர். ``ஒருவேளை சம்போலி மற்றும் மெஸ்சியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளே, இந்த அதிர்ச்சியான நிராகரிப்பின் காரணங்களாக இருக்கலாம்" என அர்ஜெண்டினா முன்னாள் வீரரான ஹெர்னன் கிரெஸ்போ கருத்து தெரிவித்துள்ள நிலையில், தனது கனவுகளும், நம்பிக்கைகளும் சிதைந்து போனது என இந்த நிராகரிப்பு குறித்து, இன்ஸ்டாகிராமில் தனது வருத்தத்தை பதிவுசெய்திருக்கிறார் இகார்டி.

அர்ஜெண்டினாவின் நம்பர் ஒன் கோல்கீப்பரான செர்ஜியோ ரோமெரோ, இறுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், திடீரென அவர் காயத்தால் விலகியுள்ளது அர்ஜெண்டினா ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெல்ஜியம்

கடந்த 2014 உலகக் கோப்பையின் `black horses' என வர்ணிக்கப்பட்ட அணி பெல்ஜியம். அதற்கேற்ப காலிறுதி வரை முன்னேறியது. ஆனால், இம்முறை அந்த அணியின் மிட்ஃபீல்டர் நெய்ன்கோலன் காரணமே இல்லாமல் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். அந்த அதிர்ச்சியில், சர்வதேச கால்பந்திலிருந்து தான் ஓய்வு பெறப்போவதாகவும் அறிவித்துவிட்டார் அவர்.

30 வயதான ரட்ஜா நெய்ன்கோலன், இத்தாலி நாட்டு கிளப்பான ரோமாவின் முக்கியமான பிளேயர்களில் ஒருவர். சாம்பியன்ஸ்லீக் தொடரின் அரையிறுதி வரை ரோமா முன்னேற, முக்கிய காரணமாகவும் இருந்தவர். ரோமாவுக்காக இந்த சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் அவருக்கும், பெல்ஜியத்தின் பயிற்சியாளரான ராபர்டோ மார்டினெஸுக்கும் இடையில் நல்லுறவு இல்லாததுதான், இந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து நைங்கோலன் வெளியேற்றப்படக் காரணமே.

nainggolan

``அவர் கிளப்புக்காக(ரோமா) முக்கியமான வீரராக இருக்கலாம், ஆனால் என் உத்திகளில் அவருக்கு இடம் இல்லை” என மார்டினெஸ் கை விரித்துவிட, ”என் சர்வதேச கரியர் இத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது” என்று வருத்தத்துடன் அறிவித்து விட்டார் நெய்ன்கோலன்.
தனது பெர்சனல் பிரச்னைகளுக்காக ஒரு சிறந்த வீரரை, சப்பைக்கட்டு கட்டு வெளியேற்றியிருக்கும், பெல்ஜியம் பயிற்சியாளர் மார்டினெஸின் செயல் வருத்தமளிக்கக் கூடிய ஒன்று; அதே சமயத்தில் கண்டிக்கப் படவேண்டிய ஒன்றும் கூட.

பிரான்ஸ்

1998 உலகக் கோப்பை சாம்பியனான ஃபிரான்ஸ், இந்தமுறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. ஓசுமான் டெம்பெலே, கிலியன் எம்பாப்பே, தாமஸ் லெமார் மற்றும் நபில் ஃபெக்கிர் என, மற்ற அணிகளைக் காட்டிலும் இளம் வீரர்கள் இங்கு அதிகம். எனவே, ஃபிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர் டெஸ்காம்ப்ஸ் அறிவித்த இறுதி வீரர்கள் லிஸ்டில், பல முக்கியமான சீனியர் வீரர்களின் இடம் பறிபோனது அதனால்தான். 

அலெக்சாண்ட்ரே லக்கஸெட், சென்ற வருடத்தில் மிகுந்த எதிர்பார்ப்போடு ஃபிரான்ஸின் ஒலிம்பிக் லியானிலிருந்து, இங்கிலாந்தின் அர்செனலுக்கு பறந்த 26 வயது ஸ்டிரைக்கர். ஆனால், ஃபிரான்ஸில் 'மோஸ்ட் வான்ட்டட்' ஸ்ட்ரைக்கராக அவருக்கு இருந்த மதிப்பு, இங்கிலாந்தில் கிடைக்கவில்லை. எப்போது இங்கிலாந்துக்கு வந்தாரோ அப்போதே அவரின் உலகக் கோப்பை கனவுகளும் கலையத் தொடங்கிவிட்டிருந்தன. ஏனென்றால், பிரீமியர் லீக்கில் இந்த சீசனில் 32 போட்டிகளில் வெறும் 14 கோல்கள் மட்டுமே அடிக்க, உலகக் கோப்பை வாய்ப்பு பறிபோனது.

lacazette

அதேபோல், மான்செஸ்டர் சிட்டி அணியால் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட ”காஸ்ட்லி டிஃபெண்டர்” 23 வயதான அய்மெரிக் லபோர்டேவுக்கும், உலகக் கோப்பை அணியில் இடமளிக்கவில்லை ஃபிரான்ஸின் மேனேஜரான டெஸ்காம்ப்ஸ். மேலும், மான்செஸ்டர் யுனைடெட்டின் அந்தோணி மார்ஷியல், மற்றும் ரியல் மாட்ரிட்டின் நம்பர் 9 கரிம் பென்சிமா, யூரோ நாயகன் டிமிட்ரி பயட் ஆகியோரும் கூட இந்த உலகக் கோப்பையில் விளையாடப் போவதில்லை.
 
போர்ச்சுக்கல்

`ரியல் மாட்ரிட் சூப்பர்ஸ்டார்’  கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணியிலும் பல சீனியர் ஸ்டார்கள் மிஸ்ஸிங். கடந்த 2016 ல், யூரோ கப் அடித்த போர்ச்சுக்கல் அணியிலிருந்த, பல முக்கியமான அனுபவ கம் இளம் வீரர்கள், இந்த உலகக் கோப்பைக்கான பட்டியலில் இல்லை.  

யூரோ கப் தொடரில், சிறப்பாக செயல்பட்ட வீரர்களில் ரெனாடோ சான்ச்செஸும் ஒருவர். அந்த தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை வாங்கியதும் அவரே. ஜெர்மனியின் பேயர்ன் முன்ச் அணியிலிருந்து, லோன் மூலம் இங்கிலாந்தின் ஸ்வான்சீ அணிக்கு வந்த மிட்ஃபீல்டரான சான்செஸ், அங்கு சொதப்பிவிட, இப்போது உலகக் கோப்பை வாய்ப்பு அவருக்கு மிஸ் ஆகி விட்டது. அதேபோலவே, யூரோ கப் பைனலில் வெற்றிக்கான கோல் அடித்த `சூப்பர் ஹீரோ’ எடரும், போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளர் ஃபெர்னாண்டோ சான்டோஸால் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, போர்ச்சுகலின் அனுபவ வீரர்கள் நானி மற்றும் பார்சிலோனா வீரர்களான ஆண்ட்ரே கோமெஸ் மற்றும் நெல்சன் செமெடூ ஆகியோரும் இந்த உலகக் கோப்பையில் தங்களுக்கான இடங்களை இழந்துவிட்டனர்.

sanches

பெரு
பெரு அணியின் கேப்டன் பாவ்லோ கரேரா போதை மருந்து விவகாரத்தில் சிக்கியதால், நடக்கவுள்ள உலகக் கோப்பையில் பங்கேற்கப் போவதில்லை. பெருவின் `ஆல் டைம்’ டாப் ஸ்கோரரான அவர், கடந்த அக்டோபரில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி, கால்பந்து போட்டிகளில் விளையாட தடைபெற்றார். ஃபிஃபாவின் ஒரு வருட தடையை அப்பீல் செய்து குறைத்த அவர், ஆறு மாதங்கள் விளையாடத் தடைபெற்ற நிலையில், பின்னர் அந்த தடையை 14 மாதங்களாக நீட்டித்து தீர்ப்பளித்தது, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் (சிஏஎஃப்). எனவே, தனது டாப் ஸ்கோரரை இழந்த பெருவுக்கு இது மிகப்பெரிய பின்னடைவுதான்.

 

இந்த உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்தாலும், இவர்கள் அனைவருமே, தங்கள் அணிகளின் வெற்றிக்காகவும், நடக்கவிருக்கும் உலகக் கோப்பையில், தங்களது அணியை வெற்றிபெறவைத்து, சாம்பியனாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அணியில் இடம்பெறக் கடுமையாக உழைத்தவர்கள். அவர்கள் உலகக் கோப்பையை மிஸ் செய்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் உலகக் கோப்பை அவர்களை மிஸ் செய்யப் போகிறது.

 

https://www.vikatan.com/news/sports/126008-the-list-of-stars-who-will-miss-2018-fifa-world-cup.html

Share this post


Link to post
Share on other sites

சர்ச்சையில் சிக்கிய நெதர்லாந்து

 

ScoreFinalcol
17CHPMUMASCOT

உலகக் கோப்பை போட்டி சின்னம் ஸபிவகா.   -  AFP

17chpmuLogo
27CHPMUFRANZBECKENBAUER

சாம்பியன் கோப்பையுடன் மேற்கு ஜெர்மனி கேப்டன் ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர். (கோப்பு படம்)   -  THE HINDU ARCHIVES

17col
ScoreFinalcol
17CHPMUMASCOT

உலகக் கோப்பை போட்டி சின்னம் ஸபிவகா.   -  AFP

1974-ம் ஆண்டு 10-வது உலகக்கோப்பை தொடரை மேற்கு ஜெர்மனி நடத்தியது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்பட்டு வந்த ஜூலிஸ் ரிமிட் என்ற பெயரிலான கோப்பையை பிரேசில் 3 முறை வென்று சொந்தமாக்கிக் கொண்டதால் புதிய கோப்பை வடிவமைக்கப்பட்டது. இத்தாலியைச் சேர்ந்த பிரபல சிற்பி சில்வியோ கசானிகா இதனை வடிவமைத்தார். ஃபிபா உலகக் கோப்பை என்று பெயரிடப்பட்ட இந்த கோப்பை தான் இப்போது வரை சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் இயற்கை கடுமையாக விளையாடியது. போட்டி நடைபெற்ற நாட்களில் பெரும்பாலும் மழை பெய்தது. சேறும் சகதியுமான ஆடுகளங்களில்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தத் தொடரில் நெதர்லாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் வியக்க வைத்தது. அதேவேளையில் நட்சத்திர வீரரான பீலே இல்லாமல் களமிறங்கிய நடப்பு சாம்பியனான பிரேசில் அணி யால் இந்த தொடரில் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

 

போட்டியை நடத்திய மேற்கு ஜெர்மனி அணி, லீக் ஆட்டத்தில் கிழக்கு ஜெர்மனியிடம் தோல்வியடைந்து கடும் நெருக்கடியை சந்தித்தது. எனினும் இந்த தோல்வி ஒருவகையில் அந்த அணிக்கு உதவியாகவே இருந்தது. ஏனெனில் அடுத்த சுற்றில் பலம் வாய்ந்த பிரேசில், அர்ஜென்டினா அணிகளை எதிர்கொள்வதில் இருந்து தப்பித்தது மேற்கு ஜெர்மனி. 2-வது சுற் றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மேற்கு ஜெர்மனி. அந்த அணி போலந்து, யூகோஸ்லோவியா, ஸ்வீடன் ஆகிய அணிகளை பந்தாடியிருந்தது.

மற்றொரு பிரிவில் ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்தும் அனைத்து அணிகளையும் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. அந்த அணியின் கேப்டன் ஜோகன் குரிஜிஃப் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அவரது டோட்டல் புட்பால் என்ற புதிய உத்தி பலம் வாய்ந்த பிரேசில், அர்ஜென்டினா ஆகிய அணிகளுக்கு எதிராக பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. களத்தில் சிறப்பாக செயல்பட்ட நெதர்லாந்து அணி களத்துக்கு வெளியே பெரிய சர்ச்சையில் சிக்கியது. இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஜெர்மனியில் உள்ள நாளிதழ் ஒன்று நெதர்லாந்து அணி குறித்து பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டது.

அதில், 2-வது சுற்றில் பிரேசில் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக நெதர்லாந்து வீரர்கள் நிர்வாண விருந்தில் கலந்து கொண்டதாகவும் அதில் அந்த அணியைச் சேர்ந்த 4 வீரர்கள், ஜெர்மனியை சேர்ந்த இரு பெண்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் அந்த புகைப்படங்கள் வெளியாகவில்லை. இந்த செய்தியானது நெதர்லாந்து அணியை உருக்குலையச் செய்தது. மறுநாள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணி 1-2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியிடம் வீழ்ந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

http://tamil.thehindu.com/sports/article24003419.ece

Share this post


Link to post
Share on other sites

அடுத்தடுத்து உலகக் கோப்பையை எங்களால் வெல்ல முடியும்- ஜெர்மனி கால்பந்து அணி பயிற்சியாளர்

 
அ-அ+

ரஷியாவில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் வெற்றி பெற்று சாதனைப் படைக்க முடியும் என ஜெர்மனி பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 
 
அடுத்தடுத்து உலகக் கோப்பையை எங்களால் வெல்ல முடியும்- ஜெர்மனி கால்பந்து அணி பயிற்சியாளர்
 
பிபா நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற தொடரில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி ஜெர்மனி உலகக்கோப்பையை கைப்பற்றியது.

2018-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் அடுத்த மாதம் 14-ந்தேதி தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்று அடுத்தடுத்து உலகக்கோப்பையை வென்ற 3-வது அணி என்ற சாதனையைப் படைப்போம் என்று ஜெர்மனி அணி பயிற்சியாளர் ஜொயாசிம் லோயிவ் கூறியுள்ளார்.

201805271612280166_1_JoachimLoew-s._L_styvpf.jpg

பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் எந்த அணியும் ஹாட்ரிக் அடித்தது கிடையாது. இத்தாலி 1934 மற்றும் 1938-ம் ஆண்டு அடுத்தடுத்து உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதன்பின் பிரேசில் 1958 மற்றும் 1962-ம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.

அதேபோல் இத்தாலியின் விட்டோரியோ போஸ்ஸோ என்ற பயிற்சியாளர் மட்மே இரண்டுமுறை உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. தற்போது ஜெர்மனி பயிற்சியாளருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/27161228/1166010/We-can-definitely-win-back-to-back-World-Cups-Germany.vpf

Share this post


Link to post
Share on other sites

அர்ஜென்டினாவுக்கு கோப்பையை பெற்றுத் தந்த மரியோ கெம்பஸ்

 

 
Table-01col
SAN-MARIOKEMPES

இறுதி ஆட்டத்தில் கோலடித்த மகிழ்ச்சியில் மரியோ கெம்பஸ் (கோப்புப் படம்).   -  AFP

16col
 
SAN-MARIOKEMPES

இறுதி ஆட்டத்தில் கோலடித்த மகிழ்ச்சியில் மரியோ கெம்பஸ் (கோப்புப் படம்).   -  AFP

1978-ம் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை அர்ஜென்டினா நடத்தியது. இது 11-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியாக பிரம்மாண்டமான முறையில் நடந்தேறியது.

மேலும் 1962-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் தென் அமெரிக்க நாட்டில் உலகக் கோப்பை நடத்தப்பட்டது இந்தப் போட்டியின் விசேஷமாகும். அர்ஜென்டினாவில் 1976-ம் ஆண்டு ராணுவப் புரட்சி வெடித்தது. 1978-ம் ஆண்டு அர்ஜென்டினாவில் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்ததால் போட்டியில் பங்கேற்பதில் பல நாட்டு வீரர்கள் தயங்கினர்.

 

மேலும் உலகக் கோப்பை கால்பந்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கொரில்லா குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவமானது போட்டியில் பங்கேற்கும் நாடுகளுக்கு பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

ஆனாலும் வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் முழுபாதுகாப்பு அளிக்கப்படும் என்ற அர்ஜென்டினா ராணுவ அரசு உத்தரவாதம் அளித்தது. பலத்த பாதுகாப்புக்கு இடையே போட்டிகள் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏது வும் இல்லாமல் நடைபெற்றன. எனினும் பல்வேறு காரணங்களால் பிரபல வீரர்கள் சிலர் போட்டியில் பங்கேற்க மறுத்து விட்டனர்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. ரவுண்ட் ராபின் முறையில் ஆட்டங்கள் நடந்தேறின. வெற்றி பெற்றால் 2 புள்ளிகளும், தோல்வியடைந்தால் ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. இந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் முதலிடம் பிடிக்கும் இரு அணிகளும் இறுதி ஆட்டத்தில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த உலகக் கோப்பையில்தான் பெனால்டி ஷூட் அவுட் முறையை உலக கால்பந்து சம்மேளனம் (பிபா) முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. நாக்அவுட் ஆட்டங்களில் போட்டி நேரம் முடிந்த பிறகு இரு அணிகளும் சமநிலையில் இருந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஆப்பிரிக்க நாடு ஒன்று முதன்முறையாக ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது இந்த உலகக் கோப்பை போட்டியின்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த டூனிசியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது உலக கால்பந்து ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அர்ஜென்டினா - நெதர்லாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இதனால் இருநாட்டு ரசிகர்களும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி துள்ளிக் குதித்தது.

அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மரியோ கெம்பல் சிறப்பாக விளையாடி 6 கோல்களைப் போட்டு அசத்தினார். அவரே தங்க கால்பந்து விருதையும் தட்டிச் சென்றார். இறுதி ஆட்டத்தில் இவர் 2 கோல்களை அடித்து அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தார்.

http://tamil.thehindu.com/sports/article24010063.ece

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

அதிர்ஷ்டம் + திறமை = இத்தாலி

 

ScoreFinalcol
SAN-ROSSI

இறுதி ஆட்டத்தில் கோலடிக்கும் பாலோ ரோஸி. (கோப்புப் படம்)   -  AFP

29-ch-san-mascot

உலகக் கோப்பை போட்டி சின்னம் ஸபிவகா.   -  AFP

15col
 
 
 

 

பன்னிரெண்டாவது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை ஸ்பெயின், முன்னெப்போதும் பார்த்திராத வகையில் கோலாகலமாக நடத்தியது.

 

1982-ம் ஆண்டு நடந்த இந்த 12-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற அணிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 24 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் அல்ஜீரியா, கேமரூன், ஹோன்டுராஸ், குவைத், நியூசிலாந்து உள்ளிட்ட ஆசிய, ஆப்பிரிக்க அணிகள் உலகக் கோப்பையில் விளையாட முதல்முறையாக வாய்ப்பு கிடைத்தது. இதனால் அந்த நாட்டு கால்பந்து ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இத்தாலி களமிறங்கிய போது அந்த அணியுடன் சேர்ந்து அதிர்ஷ்டமும் களமிறங்கியதாக கால்பந்து விமர்சகர்கள் பின்னர் தெரிவித்தனர். அதிர்ஷ்டமும் திறமையும் ஒருங்கே இணைந்ததால் 3-முறையாக இத்தாலி உலக கோப்பையைத் தட்டிச் சென்று சாதனை படைத்தது.

அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. லீக் ஆட்டத்தில் ஒரு வெற்றியைக் கூட பெறாத இத்தாலி கோல் கணக்கின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றதை அதிர்ஷ்டம் என்று கூறாமல் வேறு என்னவென்று சொல்வது? உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெறாத ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இதுவே முதல்முறையாகும். லீக் ஆட்டத்தில் போலந்து, பெரு, கேமரூன் ஆகிய அணிகளுடனான போட்டியை இத்தாலி அணி டிரா மட்டுமே செய்தது.

இருந்தபோதும் கவலைப்படாமல் 2-வது சுற்றில் இத்தாலி வீரர்கள் உத்வேகத்துடன் களமிறங்கி கலக்கினர். இத்தாலியின் நட்சத்திர ஆட்டக்காரர் என்று கருதப்பட்ட பாலோ ரோஹி பிரேசில் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல்களை அடித்து அசத்தல் சாதனை புரிந்தார். இதனால் பிரேசிலை 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது. அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது. அதே உத்வேகத்துடன் அரையிறுதிக்கு முன்னேறி போலந்து அணியை வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

இறுதி ஆட்டம் 1982-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி சான்டியாகோ பெர்னாபு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 90 ஆயிரம் ரசிகர்கள் கண்டுகளித்த இறுதி ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனி – இத்தாலி அணிகள் மோதின. இதில் 3-1 என்ற கோல்கணக்கில் மேற்கு ஜெர்மனியை இத்தாலி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மேலும் 3-வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி சாதனையையும் படைத்தது.

மொத்தம் 7 ஆட்டங்களில் 12 கோல்களை மட்டுமே அடித்து இத்தாலி கோப்பையைக் கைப்பற்றி ரசிகர்களை வியப்புக் கடலில் மூழ்க வைத்தது. அந்த அணியின் பாலோ ரோஸி 6 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து தங்க கால்பந்து விருதை தட்டிச் சென்றார். இறுதி ஆட்டத்தில் இவர் ஒரு கோலடித்திருந்தார். இவர் 1980-ல் நடந்த போட்டியின்போது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சிக்கி 2 ஆண்டுகள் கால்பந்து விளையாட தடை விதிக்கப்பட்டார். 2 ஆண்டு தடை முடிந்த பின்னர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இடம்கிடைத்து விளையாடி சாதனையும் படைத்தார். இத்தாலி 3-வது முறையாக கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்தார். இத்தாலி கேப்டனும், கோல் கீப்பருமான டினோ ஜோப் அதிக வயதில் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றார். அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. இத்தாலி அணிக்காக உலகக் கோப்பையை வென்றபோது அவருக்கு வயது 40.

http://tamil.thehindu.com/sports/article24020017.ece

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

உலகக் கோப்பை கால்பந்து 2018: மைதானங்கள் ஒரு பார்வை

 

 
luzhniki10

லூசினிக்கி மைதானம் (மாஸ்கோ)


ரஷியாவில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் 65 ஆட்டங்கள் ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 

இதற்காக அமைக்கப்பட்ட பெரிய மைதானம் மாஸ்கோவில் உள்ள லூசினிக்கி மைதானம் ஆகும். சிறிய மைதானம் காலின்கிராட் நகர மைதானம் ஆகும்.
தொடக்க, இறுதி ஆட்டங்கள் நடக்க உள்ள லூசினிக்கி விளையாட்டரங்கம் (மாஸ்கோ)-

மொத்த பார்வையாளர்கள்-81000, இந்த விûளாட்டரங்கம் கடந்த 1956-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1980-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இங்கு நடைபெற்றன. கடந்த 1982-இல் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி ஒன்றில் ரசிகர்கள் அவசரமாக வெளியேற முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் 65 பேர் உயிரிழந்தனர்.
1996-இல் மேற்கூரை அமைக்கப்பட்டு மைதானம் புதுப்பிக்கப்பட்டது. 1999, 2008-இல் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டங்கள் நடந்தன. இந்நிலையில் தற்போது நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் தொடக்க, இறுதிச் சுற்று ஆட்டம், 3 முதல் சுற்று ஆட்டங்கள், அரையிறுதி ஆட்டம் போன்றவையும் லூசினிக்கி மைதானத்தில் நடக்கின்றன.

சிறிய மைதானம் காலின் கிராட்

kaliningrad_top1.jpg
காலின்கிராட் நகரில் அமைந்துள்ள அரேனா பால்டிக்கா எனப்படும் இந்த மைதானம் உலகக் கோப்பையை முன்னிட்டு கடந்த 2015-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. நிதிச் சிக்கல் உள்பட பல்வேறு காரணங்களால் இந்த மைதானம் கட்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. 
இதில் மொத்தம் 35000 பார்வையாளர்கள் அமர முடியும். உலகக் கோப்பையில் ஆட்டங்கள் நடைபெறுவதில் இது மிகச் சிறிய மைதானமாகும். காலின் கிராட் மைதானத்தில் 4 லீக் சுற்று துவக்க ஆட்டங்கள் நடக்கின்றன. எஃப் சி பால்டிகா அணி இதை தாயகமாகக் கொண்டு விளையாடி வருகிறது. 12 மைதானங்களில் இதுதான் சிறிய மைதானமாகும்.

1938 மூன்றாவது உலகக் கோப்பை சாம்பியன் இத்தாலி

1938-italy.jpg

1938-ம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இத்தாலி சாம்பியன் பட்டம் வென்றது.
1936-இல் நடந்த பிஃபா கூட்டத்தில் பிரான்ஸில் உலக கோப்பை போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக ஐரோப்பாவில் போட்டி நடத்த அனுமதி தரப்பட்டதால், தென் அமெரிக்க நாடுகள் அதிருப்தி அடைந்தன. உருகுவே, ஆர்ஜென்டீனா போன்றவை இதில் பங்கேற்கவில்லை.

நடப்புச் சாம்பியன் என இத்தாலியும், போட்டியை நடத்தும் நாடு என பிரான்ஸும் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 14 இடங்களில் 11 இடங்கள் ஐரோப்பாவுக்கும், 2 இடங்கள் அமெரிக்காவுக்கும், 1 இடம் ஆசியாவுக்கும் ஒதுக்கப்பட்டது. 1938 ஜூன் 4 முதல் 19-ஆம் தேதி வரை (16 நாள்கள்) போட்டி 10 நகரங்களில் நடைபெற்றது. 

அரையிறுதியில் ஸ்வீடனை 5-1 என ஹங்கேரியும், பிரேசிலை 2-1 என இத்தாலியும் வென்று இறுதிக்கு தகுதி பெற்றன. பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஹங்கேரியை 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்று தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இரண்டாம் உலகப் போரால் பாதிப்பு: இந்நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதால் 1942, 1946-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை நடத்த முடியவில்லை. அதன் பின்னர் 1950-இல் தான் நிலைமை சீரடைந்தது. எதிரி நாடுகளிடம் இருந்து கோப்பையை பாதுகாக்கும் வகையில் அப்போதைய பிஃபா துணைத் தலைவர் ஓட்டாரினோ காலணி பெட்டியில் மறைத்து வைத்திருந்தார்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/may/29/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-மைதானங்கள்-ஒரு-பார்வை-2928577.html

Share this post


Link to post
Share on other sites

ஸ்பெயினின் நட்சத்திர நாயகன் இனியெஸ்டா

 

Finalcol
SAN-INIESTA1

ஆந்த்ரே இனியெஸ்டா.   -  AFP

SAN-INIESTA1%202

ஆந்த்ரே இனியெஸ்டா.   -  AFP

SAN-INIESTA3

ஆந்த்ரே இனியெஸ்டா.   -  REUTERS

2010-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி ஸ்பெயின் கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு பொன்னான நாள். ஆம் அந்த நாளில்தான் ஸ்பெயின் உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப்பை முதன்முறையாக வென்றது. ஸ்பெயின் நாடே ஆனந்தக்கூத்தாடியது. கால்பந்து ரசிகர்களின் உற்சாகம் எல்லை மீறிப் போனது. அந்த உற்சாகத்துக்கு வித்திட்டவர்தான் ஸ்பெயின் அணி நடுகள ஆட்டக்காரர் ஆந்த்ரே இனியெஸ்டா.

 

2010-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக கோலடித்து அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தவர்தான் இந்த இனியெஸ்டா.

1984-ம் ஆண்டு பிறந்த இனியெஸ்டாவுக்கு சிறுவயது முதல் கால்பந்து என்றால் கொள்ளைப் பிரியமாம். எப்போதும் கால்பந்தும் கையுமாகவே இருப்பாராம். பார்சிலோனா இளைஞர் அகாடமியில் இணைந்து தனது கால்பந்து கனவை வளர்த்துக் கொண்டார். பள்ளி, கல்லூரிகளில் கால்பந்துடன் திரிந்தவர் 2002-ல் தொழில்முறை கால்பந்து வீரராக மாறினார். 16, 18 19 வயதுக்குட்பட்டோர் ஸ்பெயின் அணிக்காகவும் அவர் விளையாடி வந்தார். பார்சிலோனா அணிக்காக ஆடி வந்த இனியெஸ்டா, 2006-ல் முதன்முறையாக சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் ஆடினார். 2006-க்குப் பிறகு அவரது கால்பந்து கள வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. 2008-ம் ஆண்டு யூரோ-2008 கோப்பையை ஸ்பெயினுக்குப் பெற்றுத் தந்தார்.

2010-ல் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இனியெஸ்டாவுக்குக் கிடைத்தது. அரிதான வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி சரித்திரமாக்கினார். தனது அற்புதமான ஆட்டத்தால் இறுதிச் சுற்று வரை ஸ்பெயினை அழைத்து வந்தார். இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக ஒரு அற்புதமான கோலைப் போட்டு அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்தார். இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதையும் அவரே வாங்கினார். மேலும் 2010 உலகக் கோப்பைப் போட்டியின் ஆல் ஸ்டார் அணியிலும் அவருக்கு இடம் கிடைத்தது.

புகழ்பெற்ற பார்சிலோனா கிளப் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி, ஏராளமான வெற்றிகளை அந்த அணிக்காகக் குவித்திருக்கிறார். 2002-ல் பார்சிலோனாவுக்காக ஆடத் தொடங்கியவர், இன்று வரை அந்த கிளப்புக்காக ஆடி வருகிறார்.

கால்பந்து வரலாற்றில் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் இனியெஸ்டா. ஐரோப்பிய யூனியன் கால்பந்து அணி விருதுக்காக 2009-ம் ஆண்டு முதல் 6 முறை தேர்வு செய்யப்பட்டவர் இனியெஸ்டா. மேலும் பிபா உலக லெவன் விருதுக்காக 9 முறை பரிந்துரை செய்யப் பட்டவர்.

இந்த முறை உலகக் கோப்பையை மீண்டும் ஸ்பெயினுக்காக பெற்றுத் தரும் முனைப்பில் உள்ளார் இனியெஸ்டா. அதிக அனுபவம், அபாரமான திறமை, அற்புதமான செயல்திறனால் தற்போதுள்ள வீரர்களுடன் சிறந்த வீரர் போட்டிக்கு மல்லுக்கட்டுகிறார் இனியெஸ்டா.

ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் ஜூலன் லோபேடெகுவின் மேற்பார்வையில் தனது திறமையை மேம்படுத்தி வருகிறார். அணி வீரர்கள் மார்க்கோ அசென்சியோ, சால் நிகுஸ், செர்ஜியோ புஸ்குட்ஸ், டேவிட் சில்வா ஆகியோருடன் நட்சத்திர வீரராக இனியெஸ்டா ஸ்பெயினுக்காக களமிறங்குகிறார்.

2018-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் ஸ்பெயின் 10 ஆட்டங்களில் விளையாடியது. இதில் 9-ல் வெற்றி கண்டது. ஒரு போட்டி மட்டும் டிராவில் முடிந்தது. இதில் 36 கோல்களை ஸ்பெயின் வீரர்கள் அடித்தனர். மாறாக 3 கோல்களை மட்டுமே ஸ்பெயின் அணிக்கு எதிராக எதிரணி வீரர்கள் அடிக்க முடிந்தது. ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியடையாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின் அணி, எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

கேப்டன் செர்ஜியோ ரமோஸின் வழிகாட்டுதல்கள், இனியெஸ்டாவுக்கு கூடு தல் பலமாக அமைந்துள்ளது. சிறந்த நடு கள வீரராகத் திகழும் இனியெஸ்டா எதிரணியின் தடுப்புகளை உடைத்து கோல்களாக மாற்றுவதில் அசாத்திய திறமை படைத்தவர்.படுவேகம், லாவகமாக பந் தைக் கடத்தும் திறன், பந்துகளை சக வீரர்களுக்கு பாஸ் செய்வதில் நேர்த்தி, கோலடிக்கும் திறமை, சக வீரர்கள் கோலடிக்க உதவுவதில் அற்புதமான சாமர்த்தியம் போன்றவற்றால் மிளிர்கிறார் இனி யெஸ்டா.

அநேகமாக இவருக்கு இது கடைசி உல கக் கோப்பை கால்பந்துப் போட்டியாக இருக்கலாம் என கால்பந்து விமர்சகர்கள் கணிக்கின்றனர். அருமையான பார்மில் இனியெஸ்டா இருக்கிறார். எனவே இந்த முறை ஸ்பெயினுக்காக மீண்டும் கோப்பையை அவர் வெல்வார் என்கிறார்கள் கால்பந்துப் போட்டி விமர்சகர்கள். அதைத் தான் ஸ்பெயின் ரசிகர்களும் விரும்புகின்றனர். நடக்குமா ? ஜூலை 15-ம் தேதி தெரி ந்து விடும்.

http://tamil.thehindu.com/sports/article24020011.ece

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites