Jump to content

இனி தீர்வை எதிர்நோக்க வேண்டாம், தீர்ப்பை எழுதுவோம் நாமே! #SpeakUp


Recommended Posts

உதவிக்கு வந்தான்; அக்காவை வீடியோ எடுத்தான்! #SpeakUp #உடைத்துப்பேசுவேன்

 
 

"கூட்டத்தில் ஒருத்தியாக அல்ல, இனி கூட்டமாக உடைத்துப் பேசுவோம். 'இவன்தான் செய்தான்' என்று கைகாட்டுவோம். 'இப்படிச் செய்தான்' என்று கரிபூசுவோம். இனி தீர்வை எதிர்நோக்க வேண்டாம், தீர்ப்பை எழுதுவோம் நாமே! #SpeakUp என உடைத்துப் பேசுவோம்." என விகடன் முன்வைத்த கோரிக்கைக்கு விகடன் வாசகர்கள் பலர் உடைத்துப் பேசி இருக்கிறார்கள். இதோ, ஒரு வாசகியின் குரல்.

என் அக்கா கணவரின் உறவுக்காரப் பையன் அவன். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறான். என் அக்காவிடம் மிகவும் அன்பாக இருப்பான். புதிதாகத் திருமணமாகிச் சென்றிருந்த என் அக்காவுக்கு, ஆன்லைனில் இ.பி பில் கட்டுவதிலிருந்து அவசரத்துக்கு மாத்திரை வாங்கிவந்து கொடுப்பதுவரை அவள் சொல்லும் வேலைகளையெல்லாம் செய்துகொடுப்பான்.

 

ஆபாசமாக வீடியோ

கல்லூரி முடிந்த மாலை நேரங்கள், விடுமுறை தினங்கள் என அக்காவை அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வான். ஒருமுறை என் செமஸ்டர் விடுமுறையில் என் அக்கா வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அக்கா அவனை எனக்கு அறிமுகப்படுத்தினாள். ``உன்ன மாதிரிதான்... எப்போ பார்த்தாலும் மொபைலும் கையுமா இருப்பான்'' என்றாள். அன்று என் அக்கா வீடு கூட்டிக்கொண்டிருந்தாள். இவன் மாடிப்படியில் கையில் மொபைலுடன் அமர்ந்திருந்தான். நான் மேலே மாடியிலிருந்து இறங்கிவந்ததை அவன் கவனிக்கவில்லை. ஆனால், அவன் மொபைலில் என் அக்காவை, நைட்டி க்ளீவேஜுடன் அவன் வீடியோ எடுத்துக்கொண்டிருந்ததை நான் கவனித்துவிட்டேன். அதிர்ந்த நான், ஆத்திரத்துடன் படி இறங்கிவந்த வேகத்தில், அவன் மொபைலைப் பறித்துவிட்டேன். அவன் அதிர்ந்து, மொபைலைக் கேட்கும் திராணியற்று அவசரகதியில் எழுந்து ஓடினான். லாக் போட்டிருந்ததால் கேலரி செல்ல முடியவில்லை. ஆனால், மெமரி கார்டை எடுத்து என் மொபைலில் போட்டுப் பார்த்தேன். சமைக்கும்போது, டிவி பார்க்கும்போது, துணி காயப்போடும்போதெல்லாம், ஆபாச கோணங்களிலும், விலகிய துப்பட்டா, புடவையுடனும் என் அக்காவை அவன் புகைப்படங்களும் வீடியோக்களுமாக எடுத்து வைத்திருந்ததைக் கண்டு அதிர்ந்தேன். அக்காவுக்கோ ஒரே அழுகை. ``இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்'' என்றாள் அக்கா. ஆனால், நான் விடுவதாக இல்லை. மறுநாள் அவளை அழைத்துக்கொண்டு, அவன் வீட்டுக்குச் சென்று, அவன் அம்மாவிடம் அவர் மகன் செய்த வேலையைச் சொல்லி, புகைப்படங்கள், வீடியோக்களையும் காட்டினோம். அதற்குப் பின் அவன் எங்கள் வீட்டுப் பக்கம் வருவதில்லை. இனி இன்னொரு பெண்ணிடம் வாலாட்டாமல் இருப்பான் என்றும் நம்புவோமாக.

https://www.vikatan.com/news/tamilnadu/117201-he-came-to-help-he-took-a-video-of-pornography-.html

Link to comment
Share on other sites

``பேருந்தில் உரசினான்... எப்படி மடக்கினேன் தெரியுமா..?'' #SpeakUp #உடைத்துப்பேசுவேன்

 
 

கூட்டத்தில் ஒருத்தியாக அல்ல, இனி கூட்டமாக உடைத்துப் பேசுவோம். 'இவன்தான் செய்தான்' என்று கைகாட்டுவோம். 'இப்படிச் செய்தான்' என்று கரிபூசுவோம். இனி தீர்வை எதிர்நோக்க வேண்டாம், தீர்ப்பை எழுதுவோம் நாமே! #SpeakUp என உடைத்துப் பேசுவோம்." என விகடன் முன்வைத்த கோரிக்கைக்கு விகடன் வாசகர்கள் பலர் உடைத்துப் பேசி இருக்கிறார்கள். இதோ, ஒரு வாசகியின் குரல்.

சென்னையில் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம். ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்குச் செல்லலாம், எல்லோரும் ராயப்பேட்டை உட்லேண்ட்ஸ் தியேட்டரில் சந்திக்கலாம் என்று முடிவு செய்துவிட்டோம். ஆனால், எனக்கு ராயப்பேட்டைக்கு எப்படிச் செல்வதென்றே தெரியாது. நண்பர்களிடம் விசாரித்துவிட்டுப் பேருந்தில் ஏறினேன். 

பெண்கள்

 

கூட்ட நெரிசல் மூச்சு முட்டும் அளவுக்கு இருந்தது. 35 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண், எனக்குப் பின்னால் நின்றுகொண்டு, இடுப்பை இடித்துக்கொண்டே இருந்தார். என்ன நடக்கிறது என்பதே முதலில் எனக்கு புரியவில்லை. அது புரியவந்தபோது, என்ன செய்வதென்றே தெரியவில்லை. சென்னை வந்து ஆறு மாதம்தான் ஆகியிருந்தது. கூட்டமான பேருந்துகளுக்கு நான் அதுவரை அட்ஜஸ்ட்டாகி இருக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்ற அட்வைஸும் எனக்கு யாரும் கொடுத்ததில்லை. என்னுடைய முக மாற்றங்களைக் கவனித்த ஓர் அக்கா, 'இங்க வந்து நில்லுமா’ என்று பாதுகாப்பாக நிற்க வைத்தார். அவரிடம் நடுக்கத்திலேயே ‘தேங்க்ஸ் கா’ என்றுவிட்டு அடுத்த ஸ்டாப்பிலேயே பேருந்திலிருந்து இறங்கிவிட்டேன். அதன் பின், உட்லேண்ட்ஸ் போய் சேர்ந்தது பெரிய கதை. ஆனால், அந்தப் பாடத்தை மறக்கவே முடியாது. சமீபத்தில் ஒருமுறை பேருந்தில் ஒருவர் அதேபோல நடந்துகொண்டார். ‘கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பி நின்னீங்கனா நல்லா இருக்கும்’ என்று பல்லைக் கடித்துக்கொண்டு சத்தமாகச் சொல்ல, அவர் நகர்ந்து சென்றுவிட்டார்.

https://www.vikatan.com/news/tamilnadu/117203-i-was-raised-my-voice-he-moved-thenspeakup.html

Link to comment
Share on other sites

`ஏ ஜோக்' சொன்ன உயரதிகாரிக்குக் கொடுத்த சுளீர் பதிலடி! #SpeakUp #உடைத்துப்பேசுவேன்

 
 

கூட்டத்தில் ஒருத்தியாக அல்ல, இனி கூட்டமாக உடைத்துப் பேசுவோம். 'இவன்தான் செய்தான்' என்று கைகாட்டுவோம். 'இப்படிச் செய்தான்' என்று கரிபூசுவோம். இனி தீர்வை எதிர்நோக்க வேண்டாம், தீர்ப்பை எழுதுவோம் நாமே! #SpeakUp என உடைத்துப் பேசுவோம்." என விகடன் முன்வைத்த கோரிக்கைக்கு விகடன் வாசகர்கள் பலர் உடைத்துப் பேசி இருக்கிறார்கள். இதோ, ஒரு வாசகியின் குரல்.

ஒரு பெண் தனிமையில் இருக்கும்போது, `ஏ ஜோக்' சொல்கிற ஆண்களை நான் செய்ததுபோல இப்படித்தான் கையாள வேண்டும் பெண்களே...   

நான் நெல்லையில் இருக்கும் ஒரு பிரபல கல்லூரியின் பேராசிரியை. சிங்கிள். என்னுடன் பணியாற்றிய பேராசிரியர் அவர். அவருக்குத் திருமணமாகி குழந்தைகளும் இருக்கிறார்கள்.

 

ஜோக்

ஆசிரியர்கள் அறையில் எப்போதெல்லாம் நான் தனியாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் என் அருகிலிருக்கும் இருக்கையில் வந்தமர்ந்துகொண்டு, ஏ ஜோக் சொல்ல ஆரம்பித்துவிடுவார் (என்னிடம்தான்). அதிர்ச்சியான நான், அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறினேன். ஒருமுறை ஸ்டாஃப் ரூமில் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தபோது, ‘நான் தனியா இருக்கும்போதெல்லாம் வந்து ரமேஷ் சார் நிறைய ஏ ஜோக்ஸ் சொல்றாரே... உங்ககிட்டயெல்லாம்கூட  சொல்வாரா' என்று கேட்டுவிட்டேன். அவ்வளவுதான், எல்லோரும் அதிர்ச்சியுடன் அவரை நோக்கித் திரும்ப, அவமானத்தில் அவர் முகம் சுருங்கிப்போனது. இப்போது என் பக்கமே திரும்புவதில்லை. 

https://www.vikatan.com/news/tamilnadu/117202-i-betrayed-the-one-who-told-the-a-joke-in-front-of-everyone.html

Link to comment
Share on other sites

``அத்தையின் கணவனே பாலியல் தொல்லை கொடுத்தான்!'' #SpeakUp #உடைத்துப்பேசுவேன்

 
 

கூட்டத்தில் ஒருத்தியாக அல்ல, இனி கூட்டமாக உடைத்துப் பேசுவோம். 'இவன்தான் செய்தான்' என்று கைகாட்டுவோம். 'இப்படிச் செய்தான்' என்று கரிபூசுவோம். இனி தீர்வை எதிர்நோக்க வேண்டாம், தீர்ப்பை எழுதுவோம் நாமே! #SpeakUp என உடைத்துப் பேசுவோம்." என விகடன் முன்வைத்த கோரிக்கைக்கு விகடன் வாசகர்கள் பலர் உடைத்துப் பேசி இருக்கிறார்கள். இதோ, ஒரு வாசகியின் குரல்.

பலருக்கும் வீட்டில் இருந்துதான் செக்‌ஷுவல் ஹராஸ்மென்ட் தொடங்கும் என்பார்கள். எனக்கும் அது என் அத்தையின் கணவன் மூலமே நடந்தது. 

பாலியல் தொல்லை

 

பெங்களூருவில் இருக்கும் என்னுடைய அத்தை வீட்டுக்கு, ஒரு திருமணத்துக்காகச் சென்றிருந்தேன். நான், அத்தை, அவருடைய மகன் அனைவரும் ஒரே ரூமில் உறங்கினோம். அப்போது எனக்கு 12 வயது, அவருக்கு 30 வயதிருக்கும். அவர் பெட்டிலும், நானும் என் அத்தையும் கீழே பாய் விரித்தும் படுத்திருந்தோம். விடியற்காலையிலேயே அத்தை சமையல் வேலைகளுக்காக எழுந்து சென்றுவிட்டார். உறங்கிக்கொண்டிருந்தபோதே என்மீது திடீரென ஏதோ ஒரு பெரிய எடையை உணர்ந்தேன். கண் திறந்து பார்த்தால், அவன் என்மீது படுத்திருந்தான். அவனை மிகுந்த சிரமத்துடன் என்னிலிருந்து அகற்ற முயன்றேன். ஆனாலும், அவன் அதைத் தாண்டிய உடல் பலத்தோடு என்னை அழுத்தினான். எனக்கு 'அத்தை' என்று கத்த வாய்வரவில்லை. `மாமா விடுங்க' என்றேன் நசுங்கிய குரலில். அவனைப் பிடித்து தள்ளியபடியே இருக்கவே, அவன் எழுந்து அறையிலிருந்து வெளியே சென்றுவிட்டான். பிறகு காலை எதுவும் நடக்காததுபோல, ஹாலில் அமர்ந்தபடி, `தண்ணி எடுத்துட்டு வா' என்றான் என்னிடம். ஆனால், அந்த அதிகாலை இருட்டிலிருந்து என்னால் இன்னும் வெளிவர முடியவில்லை. பெண் குழந்தைகளை எக்காரணம் கொண்டும் மற்றவர்களுடன் தங்க அனுமதிக்காதீர்கள் பெற்றோர்களே! 

https://www.vikatan.com/news/tamilnadu/117216-my-aunts-husband-was-harass-me.html

Link to comment
Share on other sites

`குழந்தையைத் தூக்கும்போது அங்கே ஏன் கை உரசுகிறது?' #SpeakUp #உடைத்துப்பேசுவேன்

 
 

"கூட்டத்தில் ஒருத்தியாக அல்ல, இனி கூட்டமாக உடைத்துப் பேசுவோம். 'இவன்தான் செய்தான்' என்று கைகாட்டுவோம். 'இப்படிச் செய்தான்' என்று கரிபூசுவோம். இனி தீர்வை எதிர்நோக்க வேண்டாம், தீர்ப்பை எழுதுவோம் நாமே! #SpeakUp என உடைத்துப் பேசுவோம்." என விகடன் முன்வைத்த கோரிக்கைக்கு விகடன் வாசகர்கள் பலர் உடைத்துப் பேசி இருக்கிறார்கள். இதோ, ஒரு வாசகியின் குரல். 

என் மகன் அப்போது கைக்குழந்தை. சாயங்கால நேரங்களில் சாலையில் நின்று அவனுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கும்போது பக்கத்துவீட்டுப் பெரியவர் வந்து என் குழந்தையைச் சற்று நேரம் தூக்கிவைத்திருந்துவிட்டு, கொஞ்சிப் பேசிவிட்டுச் செல்வார். 'பேரன் என்னம்மா மெலிஞ்சு போயிட்டான்' என்பதுபோன்ற பேச்சும் விசாரிப்பும், அவர்மீது எனக்கு எந்தச் சந்தேகத்தையும் தரவில்லை.

 

கிழவன்

குழந்தையை அவர் என்னிடமிருந்து வாங்கும்போது அவர் கைகள் என் மார்பில் உரசும். என்றாலும்கூட, `பெரியவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டார், தெரியாம பட்டிருக்கும்' என்றுதான் முதலில் என்னைச் சமாதானப்படுத்திக்கொண்டேன். ஆனால், ஒவ்வொரு நாளும் இது தவறாமல் நிகழவே, எனக்குள் அவஸ்தை உண்டானது. அவர் குழந்தையைக் கொஞ்ச வரவில்லை, குழந்தையை வாங்கும் சாக்கில் என் மார்பை உரசவே வருகிறார் என்பது ஒரு கட்டத்தில் எனக்கு அப்பட்டமாகப் புரிந்துவிட்டது. அதனால், அவர் வருவதைக் கண்டாலே குழந்தையை வாக்கரில் வைத்துவிட ஆரம்பித்தேன். ஆனால் அவரோ வாக்கரில் இருந்து குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு, மீண்டும் அவனை என்னிடம் கொடுக்கும் சாக்கில் அதே வக்கிரத்தைச் செய்தார். அன்று... அவர் குழந்தையைத் தூக்கவந்தபோது, 'கெழட்டு நாயே, கையை உடைச்சிடுவேன். இன்னைக்கு உன் மருமககிட்ட வந்து உன் யோக்கியதையைச் சொல்றேன் பாரு' என்றேன் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில். குட்டக் குட்டக் குனிவேன் என்று நினைத்தவனின் முகம், பேயறைந்தாற்போல ஆனது. அன்று முதல் விட்டது அவன் தொல்லை.   

https://www.vikatan.com/special/speakup/

Link to comment
Share on other sites

''ஸ்கூலில் பாத்ரூம் போறப்பகூட என்னை துரத்திவர்ற கண்களை என்ன செய்ய?'' - திருநங்கை கிரேஸ் பானு #SpeakUp #உடைத்துப்பேசுவோம்

 
 

பெண்களுக்கு மட்டுமே பாலியல் சீண்டல்கள் நடப்பதில்லை. அவர்களைவிட அதிகமாக எங்களுக்கு நடக்குது. ஆனால், எங்களைப் பாதுகாக்க சட்டத்தில் இடமில்லை" எனத் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை வலியோடு பகிர்கிறார், திருநங்கை கிரேஸ் பானு. 

''திருநங்கைகள் பெருசா பாதிக்கப்படுவது வார்த்தைகளாலும் உடல்ரீதியாகவும் தான். நான் கிராமத்தில் பிறந்தேன். அங்கேதான் ஸ்கூல் படிச்சேன். பெற்றோர், உடன்பிறந்தோர் என இருந்தும் குடும்பச் சூழ்நிலையாலும் சமூக சூழ்நிலையாலும் வீட்டைவிட்டு வெளியேறிட்டேன். இப்போ எனக்கு 29 வயசு. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களை அனுபவிச்சிருக்கேன். ஸ்கூல் படிச்சுட்டிருக்கும்போது என்னைச் சரியாக உணர்ந்தேன். என் பெற்றோரோ, எனக்கு மனநிலை சரியில்லனு மனநல மருத்துமனையில் சேர்த்தாங்க. அங்கிருந்து தப்பிக்க, 'நான் நல்லாதான் இருக்கேன். எனக்கு எந்த மாற்றமும் ஏற்படலை'னு பொய் சொல்லி வீட்டுக்கு வந்தேன். பன்னிரண்டாம் வகுப்பு படிச்சப்போ நான் திருநங்கைங்குனு சொல்லி பள்ளியில் ஏத்துக்க மறுத்தாங்க. என் அம்மாவும் அப்பாவும் தலைமை ஆசிரியர் கால்ல விழுந்து கெஞ்சினாங்க. அப்போ தலைமை ஆசிரியர் ரெண்டு கண்டிஷன் போட்டார். ஒண்ணு, வகுப்புக்குள்ளே அனுமதிக்காம, அவர் ரூம் வாசலில் செருப்பு வைக்கும் இடத்துல உட்கார்ந்துதான் படிக்கணும். ரெண்டாவது, ஸ்கூலில் யாரும் என்கூட பேசக்கூடாது. நானும் அவங்களோடு பேசக்கூடாது. வீட்டுல உள்ளவங்களுடைய வற்புறுத்தலால் அதுக்கு ஒத்துகிட்டேன். 

 

அப்போ, ஸ்கூலில் என்னோடு படிக்கிற பசங்களெல்லாம்... அலி போன்ற இழிவுபடுத்தும் வார்த்தைகளில் என்னை கூப்பிடுவாங்க. பாத்ரூம்கூட போக முடியாது. ஏன்னா, பசங்க பாத்ரூமுக்குள் போனால், நான் எப்படி பாத்ரூம் போறேனு கூடிநின்னு பார்ப்பாங்க. அதுக்கு பயந்தே போக மாட்டேன். அடக்கி வெச்சுட்டு, ஸ்கூல் முடிஞ்சதும் அவசர அவசரமா வீட்டுக்கு ஓடுவேன். சில பசங்க என்னை சுவத்துல சாய்ச்சு முத்தம் கொடுத்துட்டு ஓடுவாங்க. எனக்கு அருவருப்பா இருக்கும். ஒரு பொண்ணுக்கு இப்படியாச்சுன்னா கம்ப்ளைன்ட் பண்ணலாம். ஒரு திருநங்கை யார்கிட்ட சொல்றது? எங்களுக்கு நடந்தா இந்தச் சமூகம் வேடிக்கைதான் பார்க்குமா? தொடர்ந்து அந்த ஸ்கூல்ல நிறைய பாலியல் துன்புறுத்தல்கள். அதேமாதிரி வீட்டைச் சுற்றி உள்ளவங்க கொடுத்த டார்ச்சரால், என் வீட்டுல உள்ளவங்களும் என்னை காயப்படுத்தினாங்க. இதை எல்லாம் பொறுக்க முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறிட்டேன். 

திருநங்கை கிரேஸ் பானு

வீட்டைவிட்டு வெளியேறிய திருநங்கையை இந்தச் சமூகம் எப்படி நடத்தும்னு சொல்லணுமா? வெறுத்து ஒதுக்கி பல தொல்லைகளைக் கொடுத்துச்சு. என்னை மாதிரி ஒரு திருநங்கை அரவணைப்பில் வளர்ந்தேன். அப்போதான் பாலிடெக்னிக் படிக்கப்போனேன். அந்தக் கல்லூரியில் ஒரு சில பசங்க என்னை ஏத்துக்கிட்டாங்க. ஒரு சிலர் திருநங்கைனு ஒதுக்கினாங்க. நான் போகும்போதும் வரும்போதும், 'ஊரோரம் புளியமரம்' பாட்டு பாடுவாங்க. அதை எல்லாம் சகிச்சுக்கிட்டுதான் கல்லூரி படிப்பை முடிச்சேன். அப்புறம், இன்ஜீனியரிங் காலேஜ் சேர்ந்தேன். கொஞ்சம் ஆறுதல் கிடைச்சது. அங்கே படிச்ச பசங்க, என்னை அக்காவா பார்த்தாங்க; நடத்தினாங்க. ஆனால், சமூக தீண்டாமை, குடும்பத் தீண்டாமையோடு அரசும் தீண்டாமைக்கு உட்படுத்தியதை யார்கிட்ட சொல்லமுடியும்? 

நான் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நேரம், ஒரு வீட்டில் நானும் பிரித்திகாவும் (இன்றைய, முதல் திருநங்கை சப் இன்ஸ்பெக்டர்) மட்டும்தான் இருந்தோம். நைட் ஒரு மணி இருக்கும்... யாரோ வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டு, ஜன்னல் வழியா பார்த்தோம். ஒரு பையன், 'கதவைத் திற... நான் உள்ளே வரே'னு சொன்னான். நாங்க அவனை 'போ, போ'னு விரட்டறோம். ஆனாலும், அவன் கதவை தொடர்ந்து தட்டிப் பார்த்துட்டு, கல்லைத் தூக்கி எறிஞ்சான். ரொம்ப நேரம் கழிச்சுதான் போனான். நைட் ஒரு மணிக்கு எங்க வீட்டுக் கதவை தட்டி கூப்பிடும் உரிமையை, தைரியத்தை அவனுக்கு யார் கொடுத்தாங்க? அதை நினைச்சு கோபமும் வேதனையும் உண்டாச்சு. 

திருநங்கை கிரேஸ் பானு

நான் சமூகப் போராட்டகளில் ஈடுபடும்போதெல்லாம் கைதுசெய்து கூட்டிட்டுப் போகும்போது, போலீஸ் கண்ட கண்ட இடத்தில் கை வைப்பாங்க. அரியலூர் அனிதாவுக்காகப் போராடும்போது என் ஆடைகளைக் கழற்றி, நிர்வாணமா நிக்கவெச்சதை ஏத்துக்கவே முடியாது. ஒரு பெண் போலீஸ், நான் அறுவை சிகிச்சை பண்ண இடத்தைப் பார்த்துட்டு, 'என்ன இது இப்படி இருக்கு?'னு சக போலீஸ்கிட்ட சொல்லி சிரிச்சாங்க. என் மார்புகளையும் தொட்டுப் பார்த்தாங்க. அவங்ககிட்ட என்ன இருக்கோ, அதுதான் என்கிட்டயும் இருக்கு. ஆண்கள் மட்டுமில்லாமல், பொண்ணுங்களும் எங்களை பாலியல் வன்கொடுமை பண்றாங்க. 

ஒரு பெண்ணோ, ஆணோ பாலியல்ரீதியா பாதிக்கப்படும்போது, குற்றவாளிமீது வழக்குத் தொடர இருக்கிற சட்டத் திட்டங்கள், எங்களை ஏத்துக்க மறுக்குது. எங்களுக்காகப் புதுசா ஒரு சட்டம் இயற்ற சொல்லலை. இருக்கும் சட்டத்தில் எங்களையும் இணைக்கச் சொல்றோம். அதுகூட நடக்கலை. நாங்களும் மனிதர்கள்தான் என்பதைச் சட்டமும், சமூகமும் எப்போ உணரப்போகுது?'' எனக் கொதிப்புடன் கேட்கிறார்  கிரேஸ் பானு. 

 

இதற்கான பதில் நம்மிடம்தான் இருக்கிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/111096-transgender-grace-banu-speaks-about-her-horrific-experiences-of-being-sexual-harassed.html

Link to comment
Share on other sites

“ஹார்வி ஒரு ராட்சஷன்!” - நடிகை சல்மா ஹயேக் #உடைத்துப்பேசுவோம் #SpeakUp

 
 

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்ட்டன் பற்றி கடந்த அக்டோபர் மாதம் பாலிவுட் நடிகைகளும், தயாரிப்பாளர்களும் உடைத்துப் பேசியது, அதன் பின் நடந்த #MeToo கேம்பைன் நமக்குத் தெரிந்ததுதான். இரண்டு மாதங்களுக்குப் பின் ஹார்வியைப் பற்றி பேசியிருக்கிறார் மெக்ஸிகன் நடிகை சல்மா ஹயக். ஹார்வி என்கிற அரக்கனிடமிருந்து தப்பித்து, தன்னை நிரூபித்துக்கொள்ள, தான் அடைந்த துன்பங்களை பேசியிருக்கும் சல்மாவின் கதை முடியும் போது சல்மாவின் வெற்றி நம்முடைய வெற்றியாகத் தோன்றுகிறது. அதனுடைய சுருங்கிய மொழிப்பெயர்ப்பு இதோ.

சல்மா ஹயேக்

 

ஹார்வி ஒரு துணிச்சல்காரர்; திறமைகளை ரட்சிக்கும் புரவளர்; அன்பான அப்பா. ஆனால் ஹார்வி ஒரு ராட்சஷனும்கூட. பல ஆண்டுகள் என்னை ஆட்டிப்படைத்த ராட்சஷன் அவர்.

என்னை என்னுடைய தோழி ஆஷ்லே ஜூட் (முதலில் ஹார்வியைப் பற்றி பத்திரிகைகளில் பேசியவர்) உள்பட பல பத்திரிகையாளர்கள் ஹார்வி பற்றி பேசும்படி கேட்டார்கள். எதிலிருந்து நான் வெளியே வந்துவிட்டதாக நம்புகிறேனோ அதைப்பற்றி பேசக்கேட்டார்கள்.

நான் பேச வேண்டியது முக்கியமில்லை. ஏற்கெனவே, ஹார்வியின் பக்கங்களை பல பேர் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துவிட்டார்கள் என்று நான் என்னை நானே சமாதானம் செய்து கொண்டிருந்தேன்.

ஆனால், உண்மையில் நான் நிறைய பேரின் கேள்விகளில் இருந்து தப்பிக்க நினைத்தேன். நான் ஹார்வியால் வளர்க்கப்பட்டவர்களில் ஒருவர். அவற்றைப் பற்றி நான் விவரிக்க விரும்பவில்லை.

எண்ணிலடங்காப் பெண்கள், அவர்களுக்கு நடந்தவற்றை ஒப்புக்கொண்ட போதுதான், எனக்கு நடந்தது ஒரு கடலின் சிறு துளி என்பதை நான் உணர்ந்துகொண்டேன். அதற்கு முன்புவரை, என்னுடைய வலியை யாரும் உணர்ந்துகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தேன். ஏனெனில், நான் ஒன்றுமில்லாதவள் என்று பலமுறை என்னிடம் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஹார்வியால். இந்த ஒன்றுமில்லதவளுக்கு ஒரு வாய்ப்பு, அதுவும் ஹாலிவுட்டில் என்பது பெரிய விஷயமாக இருந்தது. ஒரு மெக்ஸிகன் நடிகையால் ஹாலிவுட் படங்களில் நடிக்க முடியாது என்ற பொதுப்புத்தியில் இருந்து உடைபட்டு நான் சில படங்களில் வேலை பார்த்தேன்.

அதற்கான வலிமையை எனக்கு கொடுத்த என்னுடைய ஹீரோ ஃப்ரீடா கலோதான். அசாத்தியமான வரைபடக்கலைஞர். அவருடைய வாழ்க்கையை படமாக்க நான் விரும்பினேன். அந்தக் காலத்தில் வின்ஸ்ட்டனுடைய கம்பெனிதான் இது போன்ற ரியாலிட்டியான படங்களை நிறைய தந்து கொண்டிருந்தது. வேறொரு கம்பெனியில் இருந்து அந்தப் படத்தை ஹார்வியின் நிறுவனத்துக்குக் கொடுத்தேன். எனக்கு ஒரு சிறிய கதாப்பாத்திரத்துக்கான பணத்துடன் பத்து சதவீதம் சம்பளமும், தயாரிப்பாளர் என்கிற க்ரெடிட்டும் கிடைப்பதாக இருந்தது. பெண் தயாரிப்பாளர்களுக்கு சம்பளம் என்பதெல்லாம் குதிரைக் கொம்பு. நான் பணத்தைப் பார்க்கவில்லை. ஹார்வியுடன் வேலை பார்ப்பதற்காக நான் மிகவும் உற்சாகமாயிருந்தேன். எனவே சரி என்று கூறினேன். ஆனால், அவருடன் வேலை பார்க்க நான் பல முடியாதுக்களை சொல்லவேண்டியிருந்தது. இரவு வேலைகளில் திடீரென கதவைத்தட்டுவதற்கும், அவருடன் உறவு கொள்வதற்கும். என் முடியாது வகையறா ஹார்வியை கோவப்படுத்தியது. அவர் முடியாது என்கிற வார்த்தைகளுக்குப் பழகி இருக்கவில்லை.ஹார்வி வின்ஸ்ட்டன்

எனவே, அந்தப்படத்தை கைவிடப் போவதாகக் கூறினார். நிறைய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அந்தக் கதையை மொத்தமாக மாற்ற வேண்டும், நான்கு சிறிய காதாப்பாத்திரங்களுக்கு முன்னணி நடிகர்களை அமர்த்த வேண்டும் ஆகிய முடியவே முடியாத கோரிக்கைகளுடன் படத்தைச் செய்ய ஒப்புக்கொண்டார். என்னுடைய நண்பர்கள் என்னுடன் நின்றார்கள். நான் அனைத்தையும் செய்து முடித்த போது, ஹார்வி என்னை பாலியல் ரீதியாக சீண்டுவதை நிறுத்திவிட்டு, அதனைத் தாண்டிய பிரச்சனைகளை என் மீது குவித்தார்.

என்னை கொன்றுவிடுவேன் என்றெல்லாம் கூட மிரட்டி இருக்கிறார். ஒரு முறை படத்தில் என்னுடைய நடிப்பு கேவலமாக இருப்பதாகவும், என்னுடைய கதாப்பத்திரத்திற்கு நான் பொருத்தமானவள் இல்லை என்றும் கூறினார். மீண்டும் பெரிய பிரச்சனை நடந்து, ஃபாரிடாவின் கதாப்பாத்திரத்திற்கும் எனக்கும் இடையில் ‘செக்ஸ்’ காட்சி வைக்க வேண்டும் என்றார். வேறு வழி இல்லாமல் நான் ஒப்புக்கொண்டேன். அன்றைக்கு படப்பிடிப்பின் போது அழுதுத் தீர்த்தேன். அந்த மாதிரியான காட்சியில் நடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. ஹார்விக்காக செய்கிறேன் என்று தான். ஆனால், அங்கிருக்கும் யாருக்கும் என்னுடைய கதை தெரியாது என்பதால் அவர்களால் நான் எதற்கு அழுகிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

மருந்துகளை உட்கொண்டு அந்த சீனை நடித்து முடித்தேன். படம் முடிந்ததும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் அளவிற்கு அது இல்லை என்று ஹார்வி சொன்னார். எனவே, ஒரு டெஸ்ட் ரிலீஸ் செய்ய முடிவு செய்தோம். டெஸ்ட் ரிலீஸில் 80% மார்க் எடுக்கிறதா என்று பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். 10 சதவீதத்திற்கும் கீழான படங்கள்தான் டெஸ்ட் ஸ்கீரினில் அப்படியான ஒரு மார்க்கினைப் பெறும். எங்களுடைய படம் 85% மதிப்பெண்ணைப் பெற்றது. அப்படி இருந்தும் ஹார்வி சமாதானம் அடையவில்லை.  அப்போதுதான் என்னுடைய தோழி எனக்கு ஆதரவாக நின்றார். அவருடைய கணவரை ஹார்வி மிரட்டினார். ஒரு கட்டத்திற்கு மேல், விளம்பரம் இல்லாமல் படத்தை வெளியிட்டோம்.

அதுவரை பெரிதாக கவனிக்கப்படாத ஃப்ரிடா என்கிற கலைஞர் உலகத்தாரால் உணரப்பட்டார்.

ஃப்ரிடா இரண்டு ஆஸ்கர்களை வாங்கிக்கொடுத்தது. இன்னும் பல விருதுகளை வாங்கிக்கொடுத்தது. சில வருடங்களுக்கு பின்பு, ஹார்வி என்னிடம் “நீ அந்தப் படத்தில் சிறப்பாக வேலை பார்த்தாய். நாம் சிறப்பானதொரு படம் செய்தோம்” என்றார். அவருடைய அந்த வார்த்தைகள் என்னை எந்த அளவிற்கு ஆழமாக சந்தோஷப்படுத்தியது என்று அவருக்குத் தெரியாது. அவருடைய செயல் எந்த அளவிற்கு என்னைக் காயப்படுத்தின என்பதும் அவருக்குத் தெரியாது. அதன் பின் ஹார்வியைப் பார்க்கும் போதெல்லாம், எங்களுக்குள் நடைபெற்ற கசப்பானவற்றை மறந்துவிட்டு, நல்ல நிகழ்வுகளை மட்டும் நினைத்துக் கொள்வேன்.

பெண்ணாகப் பல இடங்களில் எங்களுடைய மரியாதையைக் காப்பாற்ற நாங்கள் ஏன் போராட வேண்டும்? பெண் ரசிகைகள் எந்தப் படங்களைப் பார்க்க விரும்புவார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே சினிமா துறை விரும்பாமல் போனது என்று நினைக்கிறேன்.

 

ஒரு சர்வேயில் 2007 - 2016 ஆம் ஆண்டிற்குள் 4% மட்டுமே பெண் இயக்குநர்கள் மட்டுமே படங்களை இயக்கியிருக்கிறார்கள். அதிலும் 80% பேர் ஒரே ஒரு படம் மட்டுமே செய்ய வாய்ப்பு பெற்றவர்கள். ஒவ்வொரு படத்திலும் 27% தான் பெண்கள் பேசும் டயலாக்குகளாக வருகிறது. எங்களுடைய சிக்கலுக்காக எங்களுடன் நின்றவர்களுக்கு நன்றி. எங்கள் மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்த்து விட முடியும் என்ற தைரியத்தில் ஆண்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். இனி அவர்களுடைய நடவடிக்கைகளைப் பற்றி எங்களால் பேசவும் முடியும்!

https://www.vikatan.com/news/world/110911-harvey-weinstein-is-a-monster-says-american-mexican-actress-salma-hayek-metoo.html

Link to comment
Share on other sites

“பேருந்தில் உரசினான்... பையால் சமாளித்தேன்!” #SpeakUp

 
 

பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விகடன் முன்னெடுத்திருக்கும் #SpeakUp முயற்சிக்கு, சகோதரிகளும், சில சகோதரர்களும் அனுப்பிவரும் அனுபவக் கடிதங்கள் நிறைய நிறைய. சிறிய அளவில் களைக்கப்பட்டிருக்கும் பெருமௌனம் ஒன்று, குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சக பெண்களுக்கு, குற்றம் தடுப்பதற்கான தைரியத்தையும் ஆலோசனைகளையும் இந்தப் பெண்களின் வார்த்தைகள் தருகின்றன. உடைத்துப் பேசுவோம் தொடர்ந்து! 

SpeakUp

 

இன்ஜினியரிங் பட்டதாரி நான். அன்று அரசுத் தேர்வெழுத, திருச்சியிலிருந்து சமயபுரம் செல்லும் பேருந்தில் கூட்டத்தில் திணறியடித்து நின்றுகொண்டிருந்தேன். அக்கம், பக்கம் நிற்பவர் ஆணா, பெண்ணா என்றுகூட அறிய முடியாத அளவுக்கு நெரிசல். பின்னால் நிற்பவர் என்னை அழுத்துவதுபோல ஓர் எண்ணம். நெரிசலில் இப்படித்தான் இருக்கும் என்பதால் முதலில் கண்டுகொள்ளவில்லை. நேரம் செல்லச் செல்ல, பின்னால் நின்றுகொண்டு என்னை உரசுபவர் ஓர் ஆண் என்றும், இது நெரிசல் காரணமாக நடக்கவில்லை, வேண்டுமென்றே வக்கிர எண்ணத்துடன் செய்கிறார் என்பதையும் உணர்ந்தேன். எழுதவிருக்கும் தேர்வைப் பற்றிய சிந்தனையில், பதற்றத்தில் இருந்த எனக்கு, சத்தமிட்டு அவரைக் கண்டிப்பது என்பது என்னை இன்னும் டென்ஷனாக்கும். பேருந்தைவிட்டு இறங்கிவிடலாம் என்றால் தேர்வுக்குத் தாமதமாகும். என்ன செய்வதென்று தெரியாமல், ஆனால் நடப்பதை சகித்துக்கொள்ளவும் முடியாமல் நின்றிருந்தேன். திடீரென அந்த யோசனை வந்தது. அருகில் நின்றிருந்த என் தோழியிடம், இரண்டு தோள்களிலும் மாட்டக்கூடிய பேக் பேக்(back bag)-ஐ கேட்டேன். என் தோழிக்கு நான் எதற்காகக் கேட்கிறேன் என்பது புரிந்துவிட்டது. சட்டென தந்தாள். வாங்கி, என் முதுகில் மாட்டிக்கொண்டேன். கத்திப் பேசவில்லை, திட்டி அறையவில்லை என்றாலும், அந்த அயோக்கியனின் செய்கைக்கு நான் என்னால் முடிந்த அளவில் புரிந்த இந்த எதிர்வினை, அவனைத் தானாக என்னைவிட்டு விலகி நிற்கச் செய்தது. அடுத்தடுத்த ஸ்டாப்களில் கூட்டம் குறைய, இறங்கும்போது அவனைப் பார்த்து முறைத்துவிட்டு இறங்கிச் சென்றேன். கத்திப் பேச தைரியமில்லை என்றாலும், அவன் தானாக விலகும் விதமாக அவனை நான் எதிர்த்த விதம், எனக்கு ஆறுதலாக இருந்தது. 

இதுவரை தன் மனதில் அழுத்திக்கொண்டிருந்த கனம் ஒன்றை முதன்முறையாக இங்கு இறக்கிவைத்திருக்கிறார் இந்தச் சகோதரி... இனியும் சகிக்க வேண்டாம் என்ற துணிவுடனும், இனி ஒருவருக்கு இது நேராக்கூடாது என்ற அக்கறையுடனும். இவர் யாரோ அல்ல, அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என நாம் தினம் காணும் பெண்களின் பிரதி. அவர் மீது அநாகரீகமான வார்த்தைகள் உமிழ்ந்து, ‘இந்த உலகம் இப்படித்தான்' என்ற பிம்பம் தரவேண்டாம் ப்ளீஸ். இனி இதுபோல் நேராத உலகம் படைப்போம்!

https://www.vikatan.com/news/tamilnadu/118031-i-retaliated-with-my-bag-when-a-guy-harassed-me-on-a-bus.html

Link to comment
Share on other sites

“அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாதான் வாய்ப்புக் கிடைக்கும்னா, அது வேண்டாம்!” ஆண் மாடலின் குமுறல் #SpeakUp #உடைத்துப்பேசுவோம்

 
 

ஆண் மாடல்

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைக்கான விசிட்டிங் கார்டு மாடலிங் ஃபீல்டு' என ஏராளமான கனவுகளோடு அதில் நுழையும் இளைஞர் பட்டாளம் மிக அதிகம். இவர்களின் கனவுகள் சில குரூர புத்திக்காரர்களின் மோகத்துக்கு இரையாவது இன்று சர்வசாதாரணமாகி வருகிறது. 'என்னது... பெண்களுக்குத்தானே இதுமாதிரியான பிரச்னைகள். ஆண்களுக்குமா?' என்று அதிர்ச்சி ஏற்படலாம். ஆனால், அதுதான் உண்மை. அத்தகைய கசப்பான அனுப்பவங்களை, சவால்களைச் சந்தித்துதான் மாடலிங் துறையில் நடைபோடுகிறார்கள்.. சென்னையைச் சேர்ந்த தன் அடையாளத்தைக் காட்டிக்கொள்ள விரும்பாத ஆண் மாடல் ஒருவர். "எப்படி அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினால்தான் சினிமா வாய்ப்பு என்ற சவாலை சந்திக்கும் பெண்களைபோல, மாடலிங் ஃபீல்டுல ஆண்களுக்கு அதிக பிரச்னை இருக்கு. இந்த மோசமான சூழல் மாறணும். உடலுக்காக கிடைக்காமல், எங்கள் திறமைக்கு வாய்ப்பு கிடைக்கணும்" என ஆவேசமாகத் பேசத் தொடங்குகிறார். 

 

"காலேஜில் படிக்கும்போதே, 'உன் லுக்தான் செமையா இருக்கே. மாடலிங் இல்லன்னா சினிமா ஃபீல்டுக்குப் போகலாம்'னு ஃப்ரெண்ட்ஸ் பலரும் சொல்வாங்க. எனக்கும் ஆர்வம் ஏற்பட்டுச்சு. முதலில் மாடலிங் டிரைப் பண்ணிப் பார்க்கலாம்னு முடிவுப் பண்ணினேன். ஜிம் போய் உடம்பை ஃபிட்டாக்கினேன். மாடலிங்ல இருக்கும் நண்பர்களிடம் ஆலோசனை கேட்டேன். 'இந்த ஃபீல்டுல நிறைய அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும். நம் திறமைக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்குறவங்களும் உண்டு. பார்த்து எச்சரிக்கையா இரு'னு சொன்னாங்க. ஒரு சில ஷூட் வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால், என் உடல் அவர்களுக்குத் தேவைப்பட அதையெல்லாம் தவிர்த்தேன். 

என் திறமைக்கு மதிப்பு கொடுக்கும் சின்ன அளவிலான ஷூட் வாய்ப்புகளும் கிடைச்சது. போட்டோ ஷூட், ரேம்ப் வாக் எனப் பண்ணினேன். தொடர்ந்து இந்த ஃபீல்டுல பயணித்தபோதுதான் நினைச்சு பார்க்காத அளவுக்கு ஓரினச்சேர்க்கை இருக்கிறது தெரிஞ்சது. அதையெல்லாம் கடக்க சந்தித்த சவால்கள் ரொம்ப அதிகம். குறிப்பாக, மாடலிங் ஏஜென்ஸி மற்றும் டிசைனரிடமிருந்து போன்கால் வரும். 'பெரிய ஷோ இருக்கு. நீங்க கலந்துக்கங்க'னு சொல்வாங்க. முதல்ல பாசிட்டிவா பேசிட்டு அப்புறம் குழைவாங்க. 'அட்ஜஸ்ட்மென்ட் பண்ணினால், உங்களைப் பெரிய ஆளாக்கிவிடுவோம்'னு சொல்வாங்க. சிலர் வீடியோ காலுக்கு வருவாங்க. அதில் அவங்க கொடுக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் படுமோசமா இருக்கும். அவங்க உண்மை முகம் வெளிப்பட்டதும், 'எனக்கு விருப்பமில்லை'னு சொல்லிடுவேன். இப்படிப்பட்ட ஆள்கள், ஃபேஷன் டிசைனர்ஸ், ஏஜென்ஸி நபர்களைப் பற்றி தெரிஞ்சுக்கவே ஒன்றரை வருஷம் ஆச்சு. 'அட்ஜஸ்ட்மென்ட்' விஷயத்தில் உடன்பாடில்லாமல் பல வாய்ப்புகளை இழந்திருக்கேன். பிரச்னை இல்லாதவங்க என்பது உறுதியானால் மட்டும்தான் ஷூட்டுக்கும் நிகழ்ச்சிக்கும் போவேன். எண்ணிக்கை குறைவா இருந்தாலும், மனநிறைவு இருக்கு. இந்தத் தெளிவுக்கு வர்றதுக்கு முந்தைய காலகட்டங்களில் பல இடங்களில் சிக்கி, தப்பிச்சால் போதும்னு ஓடி வந்திருக்கேன். அப்படியான கசப்பான அனுபவங்கள் நிறைய இருக்கு'' என அவர் சொல்லச் சொல்ல நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. 

“சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்களிடமிருந்தும் தப்பிச்ச அனுபவம் உண்டு. இந்த மோசமான அனுபவங்களுக்குப் பிறகு, மாடலிங்கை மட்டும் நம்பாமல், ஃபிட்னஸில் கவனம் செலுத்தினேன். நிறைய ஆணழகன் போட்டிகளில் கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கினேன். அதை சோஷியல் மீடியாவில் பதிவுசெய்தேன். அதைப் பார்த்து நல்ல வாய்ப்புகள் வந்திருக்கு. முன்னைவிட மோசமான, வெளிப்படையான சேட்டிங் அழைப்புகளும் வந்திருக்கு. ஆரம்பத்தில் கோபமாக இருந்தாலும், 'இதையெல்லாம் கடந்துதான் ஜெயிக்கணும். தவறான வழியில் மட்டும் போயிடக்கூடாது'னு உறுதியா இருக்கிறேன். 

தன் திறமையை வெளிப்படுத்தி ஃபேமஸாகணும். ஃபேமிலியைக் காப்பாத்தணும்னு என்றுதான் பல இளைஞர்கள் இந்தத் துறைக்கு வர்றாங்க. அதை சில மோசமான ஆண்கள் பயன்படுத்திக்கிறாங்க. ரொம்ப ஓபனாவே பேசறாங்க. அதை நம்பி ஒத்துழைக்கும் பசங்களைப் பயன்படுத்திட்டு, சொன்னபடி சான்ஸையும் வாங்கித்தராம ஏமாத்தறாங்க. அப்படியே வாய்ப்பு கொடுத்தாலும், பணம் கொடுக்காமல் ஏமாத்துறாங்க. வெளிமாநில பசங்கதான் இதில் அதிகம் பாதிக்கப்படறாங்க. சில அட்ஜஸ்ட்மென்ட் பசங்களைப் பெரிய அளவில் வளர்த்துவிடறதும் உண்டு. அது ரொம்பவே அரிதாக நடக்கிறது. இதில் கொடுமை என்னன்னா, டாக்டர்ஸ், இன்ஜினீயர்ஸ், எம்.பி.ஏ முடிச்ச பல பசங்க ஜெயிக்கும் வெறியில் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு உடன்பட்டு வேண்டா வெறுப்போடு மாடலிங் பண்ணிட்டிருக்காங்க. இப்படி ஒருத்தரின் ஃபேஷன் ஆர்வம், இன்னொருத்தருக்குப் பெரிய மோகமாக இருக்கு. நல்ல லுக், திறமை இருந்தும் ஒத்துழைக்காத பல பசங்கள், வாய்ப்புக்காக போராடிப் போராடி தோற்றுப்போய் வெளியேறினவங்களும் இருக்காங்க. இதெல்லாம் முழுசா மாறணும். நாங்க சாப்பிடும் உணவுப் பொருள்களுக்கே அதிக செலவாகுது. உடலைத் தொடர்ந்து பராமரிக்கவும் நேரச் செலவு இருக்கு. இதில் இந்த மாதிரியான சவால்களையும் சந்திக்கணும். 

 

லேடீஸ் டிசைனர் பலரும் ரொம்பவே நியாயமா இருக்காங்க. நல்ல முறையில் நடந்துக்கறாங்க. அப்படி சில ஷூட் மட்டும் பண்ணிட்டிருக்கேன். சில பெண்கள் பேசும்போதே ஆசையை வெளிப்படுத்திடுவாங்க. 'உடன்பாடில்லை'னு சொன்னால் டீசன்டா ஒதுங்கிடுவாங்க. இந்த மாதிரி பிரச்னைகளால், மாடலிங் பண்றதையே படிப்படியா குறைச்சுட்டேன். நிறைய வெளிமாநில மாடலிங் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வருது. நம்ம தமிழ்நாட்டிலேயே இப்படி இருக்கு. அங்கே போனால் என்ன ஆகுமோனு தவிர்த்துடறேன். எனக்கு சினிமாதான் இலக்கு. என் உடம்பை அடமானம்வெச்சு அந்த இலக்கை அடைய உடன்பாடில்லை. என் திறமைக்கான வாய்ப்பு ஒருநாள் நல்லமுறையில் கிடைக்கும்னு நம்பிக்கையோடு இருக்கேன்" என்கிறார் உறுதியான குரலில்.

https://www.vikatan.com/news/tamilnadu/109827-an-upcoming-model-shares-his-bad-experiences-on-sexual-harassment.html

Link to comment
Share on other sites

''ஏழு வயதிலிருந்து 37 வயதுவரை சகித்துவிட்டேன். இனி வெடிப்பேன்!" #SpeakUp

 
 

பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விகடன் முன்னெடுத்திருக்கும் #SpeakUp முயற்சிக்கு, சகோதரிகளும், சில சகோதரர்களும் அனுப்பிவரும் அனுபவக் கடிதங்கள் நிறைய நிறைய. சிறிய அளவில் கலைக்கப்பட்டிருக்கும் பெருமௌனம் ஒன்று, குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சக பெண்களுக்கு, குற்றம் தடுப்பதற்கான தைரியத்தையும் ஆலோசனைகளையும் இந்தப் பெண்களின் வார்த்தைகள் தருகின்றன. உடைத்துப் பேசுவோம் தொடர்ந்து! 

எனக்கு இப்போது 37 வயது. என் உடல் மீது முதன்முறையாக வன்முறை நிகழ்த்தப்பட்டபோது, ஏழு வயதுச் சிறுமி நான். அப்போது, குட் டச், பேட் டச் பற்றியோ, 'கத்திவிடு' என்றோ எனக்கு யாரும் அறிவுறுத்தியிருந்தால், ஒருவேளை அந்தக் கசப்பான சம்பவத்திலிருந்து தப்பித்திருப்பேன்.

 

SpeakUp

பருவ வயதில், சைக்கிளில் பள்ளிக்குச் செல்லும்போது, என் உடலைப் பற்றி ஆபாசமாகப் பேசியபடி இன்னொரு சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தவனிடம் இருந்து தப்பிக்க, எகிறிய என் இதயத் துடிப்புக்கு நிகராக சைக்கிள் பெடல்களை வேகமாக அழுத்துவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை, பிரேக் பிடித்து நின்று, அவனைத் எதிர்த்துப் பேசும், கண்டிக்கும், தேவைப்பட்டால் தண்டிக்கும் உரிமை எனக்குள்ளது, 100% உள்ளது என்பது அன்று எனக்குத் தெரிந்திருந்தால், தொடர்ந்து என் உடல் தீண்டப்பட்டபோதெல்லாம் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொண்டிருந்திருக்க மாட்டேன். 

பேருந்துப் பயணத்தில், பின் சீட்டில் அமர்ந்திருந்தபடி இருக்கையின் இடைவெளிக்குள் கையைவிட்டு ஒருவன் தடவியபோது, அப்போது என்னால் முடிந்தது சீட்டின் நுனியில் நகர்ந்து அமர்ந்துகொண்டது மட்டுமே. ஒருவேளை, பாலியல் சீண்டல்களுக்கு எதிராக ரியாக்ட் செய்த சக பெண்களின் அனுபவங்களை நான் அப்போது வாசிக்க நேர்ந்திருந்தால், நானும் அவனைக் கண்டித்திருப்பேன். மாறாக, ஓர் அயோக்கியனிடம்  அச்சம்கொண்டிருக்க மாட்டேன். திருமணமாகி, மொழி புரியாத வெளிநாட்டுக்கு வந்த பிறகும், பெண் என்பவள் ஆணைப் பொறுத்தவரை உடல்தான் என்று நிரூபித்தான் வெள்ளைக்காரன் ஒருவன். ஒரு பொது இடத்தில் வரிசைக்காகக் காத்திருக்கையில், தன் உறுப்பைத் தூக்கிக் காட்டி சைகை செய்தான். அவனிடமிருந்து தப்பிக்க, வரிசையும் வேண்டாம், வந்த வேலையைக்கூட முடிக்க வேண்டாம் என அவஸ்தையுடன் அவசரமாக வீடு திரும்பினேன். அதே வரிசையில் எனக்குப் பின்னரும் பல பெண்களிடம் அவன் அவ்வாறு வன்முறை செய்திருக்கலாம். 'இவன் இப்படிச் செய்தான்' என்று அங்கிருப்பவர்களிடம் உரக்கச் சொல்லும் தைரியம் எனக்கோ, அந்தப் பெண்களுக்கோ இருந்திருந்தால், இதுபோல் மற்ற பெண்கள் வன்முறைக்கு உள்ளாவது தவிர்க்கப்பட்டிருக்கலாம். என் இரண்டு வயதுக் குழந்தையுடன் பேருந்தில் பயணித்தபோது, எனக்கே எனக்குச் சொந்தமான இந்த உடம்பு மீண்டும் ஓர் அந்நியக் கையால் தீண்டப்பட்டபோது, இறங்க வேண்டிய இடத்துக்கு இரண்டு நிறுத்தங்களுக்கு முன்பே இறங்கியதைத் தவிர, தப்பிக்க அப்போது வேறு வழி தெரியவில்லை எனக்கு. 

#SpeakUp என்றால், ஆயிரக்கணக்கில் இல்லை, லட்சக்கணக்கில் இதுபோன்ற குமுறல்களை பெண்கள் கொட்டித் தீர்ப்பார்கள்தான். ஆனால், நமக்குத் தேவை குறைகளைக் கேட்கிற #SpeakUp இல்லை. குறைகளைத் தீர்க்கிற #SpeakUp. அதாவது, இதைப் படித்துவிட்டுக் கடந்துவிடாமல், இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ளப்போகும் தைரியமே முக்கியம். 

இனி, ஒருவேளை நான் பாலியல் தீண்டலை எதிர்கொள்ள நேர்ந்தால், விலகி ஓடப்போவதில்லை. செய்தவனை நேருக்கு நேர் கண்டிக்கும் துணிவை, அவனைத் தலைகுனிய வைக்கும் தைரியத்தை, இந்த 37 வயதில் பெற்றிருக்கிறேன். என்னைப்போல அஞ்சி நடுங்கியிருந்த பெண் நெஞ்சங்களுக்கு தைரியம் கொடுக்கும், தட்டியெழுப்பும் பல சகோதரிகளின் #MeToo, #SpeakUp குரல்கள், என்னை அதற்குத் தயார்படுத்தியிருக்கின்றன. என் குரலும் அப்படியாக மற்ற பெண்களுக்கு இருக்கவே, இதை எழுதுகிறேன். 

இதுவரை தன் மனதில் அழுத்திக்கொண்டிருந்த கனம் ஒன்றை முதன்முறையாக இங்கு இறக்கிவைத்திருக்கிறார் இந்தச் சகோதரி... இனியும் சகிக்க வேண்டாம் என்ற துணிவுடனும், இனி ஒருவருக்கு இது நேரக் கூடாது என்ற அக்கறையுடனும். இவர் யாரோ அல்ல, அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என நாம் தினம் காணும் பெண்களின் பிரதி. அவர் மீது அநாகரிக வார்த்தைகள் உமிழ்ந்து, ‘இந்த உலகம் இப்படித்தான்' என்ற பிம்பம் தர வேண்டாம் ப்ளீஸ். இனி இதுபோல் நேராத உலகம் படைப்போம்! 

https://www.vikatan.com/news/tamilnadu/118207-i-can-not-tolerate-harassments-anymore-speak-up-story-shared-by-women-to-vikatan.html

Link to comment
Share on other sites

``நடந்ததை வீட்டில் சொல்ல அச்சம்... சைக்கிளை அடம்பிடித்து வாங்கினேன்!” #SpeakUp

 
 

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விகடன் முன்னெடுத்திருக்கும் #SpeakUp முயற்சிக்கு, சகோதரிகளும்  சில சகோதரர்களும் அனுப்பிவரும் அனுபவக் கடிதங்கள் நிறைய நிறைய. சிறிய அளவில் களைக்கப்பட்டிருக்கும் பெருமௌனம் ஒன்று, குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சக பெண்களுக்கு, குற்றம் தடுப்பதற்கான தைரியத்தையும் ஆலோசனைகளையும் இந்தப் பெண்களின் வார்த்தைகள் தருகின்றன. உடைத்துப் பேசுவோம் தொடர்ந்து! 

செல்லச் சண்டையில் அப்பா, அம்மாவை அடிக்க, அம்மா என்னை வலிக்காமல் அடித்து விளையாட என, இப்படி இனிமையாகச் சென்றது என் பால்யம். பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால், பள்ளியிலிருந்து அவர்களுக்கு முன்பாக வீடு திரும்பும் நேரங்களில், நான் எதிர்வீட்டில் காத்திருப்பது வழக்கம். அவர்களிடம் எனக்கான ஸ்நாக்ஸை கொடுத்துச் சென்றிருப்பார் அம்மா. 

 

SpeakUp

அப்போது எனக்கு 10 வயது. எதிர்வீட்டில், அந்த அத்தை வெள்ளி, செவ்வாய் மற்றும் விசேஷ தினங்களில் கோயிலுக்குச் செல்லும்போது, நானும் மாமாவும் வீட்டிலிருப்பது வழக்கம். அவர் அப்போதெல்லாம் சாக்லேட், பிஸ்கட் என்று வாங்கித்தந்து, என்னுடன் விளையாடுவார். ஆனால், அந்நாள்களில் எல்லாம் விளையாட்டு என்ற பெயரில் அவர் என் உடலுக்கு நான் விரும்பாத ஏதோ ஒன்றைச் செய்தது புரிந்தது. ஆரம்பத்தில், அதுவும் ஒரு விளையாட்டு என்றே நினைத்தேன். அது தொடர்ந்தபோது, அவர் செய்வது தவறு என்பது புரிந்தது. 

ஒரு கட்டத்தில் என் அம்மாவிடம், 'அந்த மாமா என்னை இங்கயெல்லாம் தொடுறார்' என்றேன். அதிர்ந்துபோன என் அம்மா, அவரைத் திட்டிவிட்டு, 'சரி, இதை நீ யார்கிட்டயும் சொல்லிடாத. அப்பாகிட்டயெல்லாம் சொல்லிடவே கூடாது. நான் உன்கிட்டயும் ஒரு வீட்டுச் சாவி கொடுத்துட்டுப் போறேன். ஸ்கூல்விட்டு வந்ததும் நீ நம்ம வீட்டுலேயே வந்து இரு. கதவைப் பூட்டிக்கோ. டிவி பார்த்துட்டு, ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருக்கலாம்' என்று இந்த மாற்று ஏற்பாடுகளை அவஸ்தையுடன் செய்துகொடுத்தார். 'ஏன் எதிர்வீட்டுல இருக்கட்டுமே...' என்று அப்பா கேட்டபோது, 'அவங்களுக்கு எங்கேயாச்சும் வெளிய போகவேண்டியது இருக்கும், நம்ம புள்ள எதுக்கு அவங்களுக்குத் தொந்தரவா இருந்துட்டு? 10 வயசு ஆகிடுச்சுல்ல, அவ தனியாயிருந்து பழகிக்குவா' என்று சொல்லிச் சமாளித்தார். 

தப்பு செய்த மிருகத்துக்கு எந்தத் தண்டனையும், ஒரு கண்டிப்புக்கூட கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட எனக்குக் கிடைத்த பரிசோ, பால்யத்தில் தனிமை. 'மானம் போய்விடும்' என்று நினைத்து, என் அம்மா ஒருவகையில் ஒரு குற்றவாளியைக் காப்பாற்றியுள்ளார் என்ற ஆற்றாமை என்னை வதைத்தது. அந்த ஆள், அதற்குப் பிறகு என் அப்பாவிடம் பேசுவான், என் அம்மாவையோ, என்னையோ நிமிர்ந்துபார்க்காமல் கடந்துவிடுவான். அன்றிலிருந்து 40 வயதுகளில் இருக்கும் ஆண்கள் என்றாலே பயம், சந்தேகம் என்றாகிப்போனது எனக்கு. 

அடுத்த சீண்டலை நான் எதிர்கொண்டது, எட்டாம் வகுப்பு படித்தபோது. பள்ளிக்கு மினி பஸ்ஸில் சென்றுவருவது வழக்கம். ஒருநாள், மிகுந்த நெரிசலான தினம் ஒன்றில், பின்னிருந்து என் இடுப்பைச் சுற்றியது ஒரு கை. அதிர்ந்த நான், அந்தக் கையிலிருந்து என்னை விடுவிக்க முயல, அவன் எடுப்பதாய் இல்லை. அப்போது என் வாயிலிருந்து ஒரு வார்த்தையோ, கூச்சலோ வராத அளவுக்கு நான் பலமற்றவளாய் இருந்தேன். யாராவது இதைக் கவனித்து, என்னைக் காப்பாற்ற மாட்டார்களா என்று அழுகையாக வந்தது. மறுநாள், இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலிருந்த பள்ளிக்கு சைக்கிளில்தான் போவேன் என்று வீட்டில் அடம்பிடித்து, சைக்கிளும் வாங்கிக்கொண்டேன். 

இப்போது எனக்கு 25 வயதாகிறது. எப்போது நான் எந்தப் பேருந்தில் ஏறினாலும், அங்கிருக்கும் பெண்களையெல்லாம் என் கண்கள் ஒருமுறை பார்க்கும். அவர்களெல்லாம் பாதுகாப்பாக நிற்கிறார்களா என்று மனம் தவிக்கும். இன்றும் எனக்கு ஆண்களிடம் பேசுவதற்கு பயமாகத்தான் இருக்கிறது. காதலிலும், திருமணத்திலும் நம்பிக்கையில்லாத மனநிலையில்தான் இருக்கிறேன். எனக்கு நியாயம் கேட்கத் தவறிய என் அம்மாவின் அந்தச் செயலால், என் பிரச்னைகளைப் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தையும் தொலைத்தேன். சில நேரங்களில் என்மீதே எனக்கு நம்பிக்கையில்லாமல்போகிறது. அனைத்துக்கும் காரணம், என் உடலுக்கு நடந்த அந்த இரண்டு அநீதிகள். சில நொடிகள் சபல இன்பம் தங்களுக்குக் கிடைக்க, ஒரு சிறுமியின் மனதில், பெண்ணின் வாழ்க்கையில் எத்தளவுக்கு ஆறாத ரணத்தைத் தந்திருக்கிறார்கள் அவர்கள்! 

ஒருவேளை நான் தாயானால், என் மகளுக்கு 'speakup, shout your harassment' என்பதைத்தான் முக்கியமாகக் கற்றுக்கொடுப்பேன். ஆண் குழந்தையாக இருந்தால், பெண்களுக்கு எப்போதும் பாதுகாவலனாக இருக்கவேண்டிய கண்ணியத்தைச் சொல்லி சொல்லியேதான் அவனை வளர்ப்பேன். அதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள, அவன் அம்மாவுக்கு நடந்ததையும் சொல்வேன்!

இதுவரை தன் மனதில் அழுத்திக்கொண்டிருந்த கனம் ஒன்றை முதன்முறையாக இங்கு இறக்கிவைத்திருக்கிறார், இந்தச் சகோதரி... இனியும் சகிக்க வேண்டாம் என்ற துணிவுடனும், இனியொருவருக்கு இது நேராக் கூடாது என்ற அக்கறையுடனும். இவர் யாரோ அல்ல, அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என நாம் தினம் காணும் பெண்களின் பிரதி. அவர்மீது அநாகரிக வார்த்தைகள் உமிழ்ந்து, ‘இந்த உலகம் இப்படித்தான்' என்ற பிம்பம் தரவேண்டாம் ப்ளீஸ். இனி, இதுபோல நேராத உலகம் படைப்போம்!

https://www.vikatan.com/news/tamilnadu/118127-child-sexual-abuse-speak-up-story-shared-by-women-to-vikatan.html

Link to comment
Share on other sites

''அங்கிள்கள்தாம் அச்சம் தருகிறார்கள்!" #SpeakUp

 
 

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விகடன் முன்னெடுத்திருக்கும் #SpeakUp முயற்சிக்கு, சகோதரிகளும் சில சகோதரர்களும் அனுப்பிவரும் அனுபவக் கடிதங்கள் நிறைய நிறைய. சிறிய அளவில் கலைக்கப்பட்டிருக்கும் பெருமௌனம் ஒன்று, குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சக பெண்களுக்கு, குற்றம் தடுப்பதற்கான தைரியத்தையும் ஆலோசனைகளையும் இந்தப் பெண்களின் வார்த்தைகள் தருகின்றன. உடைத்துப் பேசுவோம் தொடர்ந்து! 

நான் பாலியல் தொல்லைகளை அதிகமாக எதிர்கொள்வது பயணங்களில்தான். வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அவை கொடூரமானவையாக இருக்கும். அந்த நேரங்களிலெல்லாம், அவர்களின் உறுப்பை வெட்டி அவர்களைக் கொலைசெய்ய வேண்டும் எனுமளவுக்கு எனக்குள் ஆத்திரம் பொங்கும்.

 

SpeakUp


20 வயது பெண் நான். என் வயது பையன்களிடம் நான் உணரும் பாதுகாப்பு உணர்வை, 35 - 50 வயது 'அங்கிள்'களிடம் உணர்வதில்லை. அவர்களிடம் பேசுவதோ பழகுவதோ ஆபத்தானதாகவே படுகிறது. குறிப்பாக நெரிசலான பேருந்துப் பயணங்களில், அவர்கள் அருகில் நிற்க நேர்வது. பேருந்துகளில் இடம்கிடைத்து அமர்ந்தாலும்கூட, பெண்களுக்கு அது பாதுகாப்பற்றதாகவே இருக்கிறது. என் பின் சீட்டில் அமர்ந்திருந்த 'அங்கிள்', சீட்களுக்கு இடையிலிருந்த இடைவெளிக்குள் கைகளைவிட்டான். சீட்டுக்கு அடியிலிருந்த இடைவெளிக்குள்ளும் அவன் கைகள் நுழைந்து என்னைத் தீண்டின. இது ஒருநாள் அனுபவமல்ல. எப்போதெல்லாம் என் பேருந்துப் பயணத்தின் பின் இருக்கையில் ஓர் 'அங்கிள்' அமர நேர்கிறதோ அப்போதெல்லாம் 80% இது நடக்கத்தான் செய்கிறது. என் தோழிக்கும் இது நடந்திருக்கிறது. அவள் பேருந்தில் பயணித்தபோது, ஜன்னல் பக்க இடைவெளிக்குள் கையைவிட்டு அவளையே சில நொடிகள் அவள் உடலை வெறுக்கவைத்திருக்கிறான் ஓர் 'அங்கிள்'. அவள் துணிச்சலுடன் அதைக் கண்டக்டரிடம் சொல்லி, அவன்மீது நடவடிக்கை எடுக்கவைத்திருக்கிறாள். 

சில வாரங்களுக்கு முன் நடந்தது இது. பேருந்தில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. அந்த இரவுப் பயணத்தில் நகரத்தைவிட்டு பேருந்து நகர்ந்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டு, இரண்டு விளக்குகள் மட்டுமே வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருந்தன. திடீரென, என் இருக்கைக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவன், masturbate செய்ய ஆரம்பித்துவிட்டான். எவ்வளவு வக்கிரம், வன்மம் இது?

இதுபோன்ற பாலியல் தொல்லைகள் எல்லாம் அந்நியர்களால் மட்டும் நடப்பதில்லை. பெண் இனத்தின் பலவீனமான சகிப்புத்தன்மையை, மௌனத்தை உறவினர்களும்கூட பயன்படுத்திக்கொள்ளத் தவறுவதில்லை. நான் என் சிறுவயதில், என் மாமாவால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானேன், கோடை விடுமுறைக்காக அவர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது. இதுவரை இதைப் பற்றி நான் யாரிடமும், என் பெற்றோரிடம்கூட சொல்லாதது ஏன் என்று தெரியவில்லை. அதனால்தான் அவரால், இன்றுவரை என் வீட்டுக்கு எந்த அச்சமும் இன்றி வந்துபோக முடிகிறது, விருந்து சாப்பிட முடிகிறது. உச்சகட்டமாக, தன் மகனுக்கு என்னைத் திருமணம் செய்ய வேண்டி என் பெற்றோரிடம் எந்தக் குற்ற உணர்ச்சியும் இன்றி பேசமுடிகிறது. 

இதுபோன்ற தொல்லைகளை இங்கு ஒவ்வொரு பெண்ணும் கடந்துவந்துகொண்டுதான் இருக்கிறாள். நான் ஆண்கள் என்றாலே இப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. ஆனால், ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி ஒரு கசப்பான அனுபவத்தைக் கொடுக்கும் எண்ணிக்கையிலான ஆண்கள் நிரம்பியதே இந்த உலகம். இனி இவற்றையெல்லாம் அனுபவமாகப் பகிராமல், சம்பவமாக்குவோம். அந்த இடத்தில், அந்த நொடியிலேயே ரியாக்ட் செய்வோம்.

இதுவரை தன் மனதில் அழுத்திக்கொண்டிருந்த கனம் ஒன்றை முதன்முறையாக இங்கு இறக்கிவைத்திருக்கிறார், இந்தச் சகோதரி... இனியும் சகிக்க வேண்டாம் என்ற துணிவுடனும் இனியொருவருக்கு இது நேராக் கூடாது என்ற அக்கறையுடனும். இவர் யாரோ அல்ல, அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என நாம் தினம் காணும் பெண்களின் பிரதி. அவர்மீது அநாகரிக வார்த்தைகள் உமிழ்ந்து, ‘இந்த உலகம் இப்படித்தான்' என்ற பிம்பம் தர வேண்டாம் ப்ளீஸ். இனி, இதுபோல நேராத உலகம் படைப்போம்!

https://www.vikatan.com/news/tamilnadu/118262-middle-aged-men-make-me-feel-unsafe-speak-up-story-shared-by-women-to-vikatan.html

Link to comment
Share on other sites

ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் அவசியம் படிக்க வேண்டிய தொடர்

இணைப்புக்கு நன்றி நவீனன்

Link to comment
Share on other sites

”தோழியிடம் தவறாக நடந்துகொண்டான்... தட்டிக்கேட்டேன்!” #SpeakUp

 
 

பாலியல் வன்முறைகளுக்கு எதிராக விகடன் முன்னெடுத்திருக்கும் #SpeakUp முயற்சிக்கு, சகோதரிகளும், சில சகோதரர்களும் அனுப்பிவரும் அனுபவக் கடிதங்கள் நிறைய நிறைய. சிறிய அளவில் கலைக்கப்பட்டிருக்கும் பெருமௌனம் ஒன்று, குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சக பெண்களுக்கு, குற்றம் தடுப்பதற்கான தைரியத்தையும் ஆலோசனைகளையும் இந்தப் பெண்களின் வார்த்தைகள் தருகின்றன. உடைத்துப் பேசுவோம் தொடர்ந்து! 

நான் மதுரையில ஒரு தனியார் கல்லூரியில் படிக்கிற மாணவி. #SpeakUp - விகடனின் இந்த முயற்சியை ஆன்லைனிலும், அவள் விகடன் இதழ்லயும் பார்த்துட்டு வர்றேன். இதில் பகிர்ந்துக்க ஒவ்வொரு பெண்ணிடமும் அனுபவங்கள் இருக்கு என்பதுதான் உண்மை. அதுக்கான தைரியம் இருக்காங்கிறது கேள்வி. அந்த தைரியம் எனக்கு இப்போ வந்திருக்கு.

 

SpeakUp


ஒருநாள் சாயங்காலம் ஆறரை மணி. காலேஜ் முடிஞ்சு தோழிகளோட கேலி, அரட்டைனு பேசி முடிச்சிட்டு, இன்னும் அரை மணி நேரத்துல நடக்கப்போறதைப் பற்றித் தெரியாம, பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். பீக் அவர் கடந்திருந்ததால, பஸ் ஸ்டாப்பில் அவ்வளவா கூட்டம் இல்லை. எதேச்சையா திரும்பிப் பார்த்தப்போ, ஸ்கூல்ல என்னோட படிச்ச தோழி ஒருத்தி நின்னுட்டு இருந்தா. 'யேய்... எப்டி இருக்கடி!'னு சந்தோஷமா அவகிட்டபோய் நின்னேன். ஆனா, அவ எப்போதும்போல இல்லாம, 'ஹாய்'னு சம்பிரதாயத்துக்குச் சொல்லிட்டு அமைதியா நின்னா.  

தோழி முகத்துல கலவரம், பயம்னு எல்லாம் தெரிய, 'என்னடி ஏதாச்சும் பிரச்னையா?'னு கேட்டேன். அவ பதில் சொல்லாம, கண் ஜாடை மட்டும் காட்டினா. அவ கண்கள் காட்டின பக்கம், ரெண்டு பசங்க பைக்ல உட்கார்ந்திருந்தாங்க. 'யாரு அவனுங்க?'னு மெதுவான குரல்ல கேட்டேன். 'தெரியல, அசிங்க அசிங்கமா கமென்ட் அடிச்சிட்டு இருக்காங்க'னு சொன்னா. அப்புறம்தான் கவனிச்சேன், தோழியோட டிரெஸ் கலரையும், அவளோட அங்கங்களையும் குறிப்பிட்டு அசிங்கமா பேசிட்டு இருந்தாங்க. 'ரெண்டு பேரும் ஆட்டோ எடுத்துட்டு இங்கயிருந்து கிளம்பிடுவோமா?'னு கேட்டா. நாங்க ஒரு முடிவெடுக்கிறதுக்குள்ள, கண்ணிமைக்கும் நேரம்தான், அந்தப் பொறுக்கி சட்டுனு வந்து என் தோழியைத் தீண்டிட்டு, பகிர முடியாத வார்த்தைகள்ல ஒரு கமென்ட் அடிச்சான். தனக்கு என்ன நடந்துச்சுனு சுதாரிக்கவே என் தோழிக்கு நொடிகள் ஆக, முகத்தை மூடி அழ ஆரம்பிச்சுட்டா. எனக்கோ, அடுத்த நிமிஷம் என் கை என்கிட்ட இல்ல. என்னையும் அறியாம அவனைக்  கன்னத்துல ஓங்கி அறைஞ்சுட்டேன். 

பொதுவா, இந்த மாதிரி சமயங்கள்ல பிரச்னை பண்ணினவங்களை இப்படி அறையுறது நமக்குதான் ஆபத்துனு எல்லாப் பொண்ணுங்களையும்போலவே சின்ன வயசுல இருந்து சொல்லி வளர்க்கப்பட்டவதான் நானும். ஆனால், அந்த நொடியில அதெல்லாம் எதுவும் என் மூளையில் இல்ல. உணர்ச்சிகள் உள்ள ஒரு பெண்ணா மட்டும் எதிர்த்து நின்னுட்டேன். அவனும் சும்மாவிடலை. திருப்பி என்னை அறைஞ்சிட்டு, அசிங்கமா திட்டிட்டு, 'உன்னைக் கொலைபண்றேன் பாரு'னு மிரட்டிட்டு, அவன் ஃப்ரெண்டோட பைக்ல ஏறிப் போயிட்டான். 

இத்தனையும் நடந்தது ஒரு பஸ் ஸ்டாப்ல. அந்த அக்கிரமம் நடந்தப்போ அவன் சட்டையைப் பிடிக்க வராத அந்த ‘நாலு மனுஷங்க' , எல்லாம் முடிஞ்ச பின்னாடி, 'பொம்பளைப் பிள்ளைகளுக்கு எதுக்குமா தேவையில்லாத பிரச்னை? வீட்டுக்குக் கிளம்புங்க'னு சொல்ல மட்டும் வந்தாங்க. என் மனசில் பயம் வரலை, ஆத்திரம்தான் இன்னும் வடியாம இருந்தது. என் தோழியை ஒரு ஷேர் ஆட்டோவுல ஏத்திவிட்டுட்டு, நானும் வீடு திரும்பினேன். 

அன்னைக்கு நைட், என் நெருங்கிய ஃப்ரெண்ட்ஸ் சிலர்கிட்ட மட்டும் இதைப் பற்றிச் சொன்னேன். ரகம் ரகமா, விதம் விதமா ஒவ்வொருத்தரும் ரியாக்ட் செய்தாலும், மொத்தத்தில் அதோட அர்த்தம் ஒண்ணுதான்... 'நீ அறைஞ்சதனால அவன் திருந்திடுவானா? உனக்கு எதுக்கு இந்த வம்பு?' ஆனாலும், அன்னைக்கு எனக்கு ஒரு பெரிய விஷயம் புரிஞ்சது. இந்த உலகத்தில, பெண்ணா இருக்கிறதுக்கு எவ்வளவு வலிமையா இருக்கணும் என்பதும், நமக்காக நாமதான் போராடணும் என்பதும் புரிஞ்சது. 

உடனே, 'இவன் ஃபெமினிஸம் பேசுறா'னு பின் பண்ணாதீங்க. நான் உலகத்த மாத்த சொல்லலை. நம்ம உடம்புமேல மரியாதை உள்ள மனுஷியா, அதுக்கு ஒரு சீண்டல் நேர்ந்தா எதிர்க்கிற மனுஷியா வாழ்வோம். நம் மேல ஊரும் கைகளை உணர்சிகளற்ற ஜடமா ஊருக்காக அடக்கிட்டுப் பேசாம இருந்தது போதும் . #SpeakUp girls! தேவைப்பட்டா, slap! 

குறிப்பு: 'நான் மார்புல கை வைப்பேன், அதை எதிர்க்கக் கூடாது. அப்படி எதிர்த்து அறைஞ்சா, நான் திருப்பி அறைவேன், கொலை பண்ணுவேன்'னு மிரட்டிட்டுப் போயிருக்கிற அந்த ஆணின் கவனத்துக்கு. நான் இன்னும் அதே காலேஜ்லதான் படிக்கிறேன். முடிஞ்சத பார்த்துக்கோப்பா!

இதுவரை தன் மனதில் அழுத்திக்கொண்டிருந்த கனம் ஒன்றை முதன்முறையாக இங்கு இறக்கிவைத்திருக்கிறார் இந்தச் சகோதரி... இனியும் சகிக்க வேண்டாம் என்ற துணிவுடனும், இனி ஒருவருக்கு இது நேரக் கூடாது என்ற அக்கறையுடனும். இவர் யாரோ அல்ல, அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என நாம் தினம் காணும் பெண்களின் பிரதி. அவர் மீது அநாகரிக வார்த்தைகள் உமிழ்ந்து, ‘இந்த உலகம் இப்படித்தான்' என்ற பிம்பம் தர வேண்டாம் ப்ளீஸ். இனி இதுபோல் நேராத உலகம் படைப்போம்! 

https://www.vikatan.com/news/tamilnadu/118106-group-of-men-harassed-my-friend-no-one-stepped-in-to-help-i-had-to-do-something-and-so-i-did.html

Link to comment
Share on other sites

''அவனது வக்ர புத்தி தெரிந்ததால்... திருமணத்தை நிறுத்தினேன்!'' #SpeakUp

 
 

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விகடன் முன்னெடுத்திருக்கும் #SpeakUp முயற்சிக்கு, சகோதரிகளும் சில சகோதரர்களும் அனுப்பிவரும் அனுபவக் கடிதங்கள் நிறைய நிறைய. சிறிய அளவில் கலைக்கப்பட்டிருக்கும் பெருமௌனம் ஒன்று, குற்றங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. சக பெண்களுக்கு, குற்றம் தடுப்பதற்கான தைரியத்தையும் ஆலோசனைகளையும் இந்தப் பெண்களின் வார்த்தைகள் தருகின்றன. உடைத்துப் பேசுவோம் தொடர்ந்து!

''எனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை, வீட்டில் பார்த்த மாப்பிள்ளையால் ஏற்பட்டது. அவன் ஓர் ஆசிரியர். ஆசிரியர் என்றால் பொதுவாக நன்னெறி மற்றும் ஒழுக்கம் மிகுந்த ஒருவராகத்தான் இந்தச் சமூகம் பார்க்கும். மேற்கொண்டு, காளியின் தீவிர பக்தன் என்று வேறு தன்னைச் சொல்லிக்கொண்டார். பூவைத்து, இருவரும் மொபைல் எண்கள் பரிமாறிக்கொண்ட பின், பேச ஆரம்பித்தோம். ஆனால், பேச்சில் காதலைவிட காமமே இருக்கும். அன்பு, மருந்துக்கும் இருக்காது... தன் அநாகரிக எண்ணங்களையே எப்போதும் வெளிப்படுத்துவான். எல்லா பெண்களையும் கொச்சையாக வர்ணிப்பான். கள்ளத்தொடர்பு பற்றிப் பேசுவது அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்.

 

SpeakUp

பெண் பார்த்துவிட்டுப்போன சில நாள்களிலேயே என்னைத் தொட முயன்றான். கை, தோள் என அவன் கைகள் நீண்டபோது, முதலில் பாசம், காதல் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த சில வாரங்களில், அவன் எல்லை மீற முயன்று நான் தடுத்தபோது, கீழ்த்தரமான தகாத வார்த்தைகளால் திட்டினான். ஏதோ ஒரு படத்தில், 'பொம்பளைன்னா படுக்கையில வேசியா இருக்கணும்' என்று ஒரு டயலாக் வருமே, அதைச் சொல்லிக்காட்டினான். அவன் எல்லை மீறுவது மட்டுமே அவனிடமுள்ள குறையென்று எனக்குப் படவில்லை. அவன் குணத்தில் பிழையென்று நான் உணர்ந்தேன். அவனிடம் வெளிப்பட்ட கட்டுக்கடங்காத ஆக்ரோஷத்தில் நான் விழித்துக்கொண்டேன். அவன் செய்கைகளை தராசில் வைத்துப்பார்க்க ஆரம்பித்தேன்.

நான் சொந்த ஊருக்குச் சென்றாலோ அல்லது வேலை முடிந்து தாமதமாக வீடு திரும்பினாலோ மிகவும் கொச்சையாகப் பேசினான் (தமிழில் உள்ள தரங்கெட்ட வார்த்தைகள் பெரும்பாலும் பெண்களையும் தாய்மையையும் சிறுமைப்படுத்தும் வார்த்தைகளாகவே உள்ளது ஏன்?). அவற்றுக்கெல்லாம் நான் அமைதியாக இருந்து, இன்னும் அவன் என்னவெல்லாம் செய்கிறான் என்று பார்த்தேன். நான் எதிர்பார்த்ததுபோலவே என் அமைதி அவனுக்குத் தைரியத்தைக் கொடுத்திருக்க வேண்டும். நாளுக்கு நாள் என்னை பொம்மைபோல ஆட்டிவைக்க முயன்றான். அவனை நான் தொட அனுமதிக்காதது, அவனுடைய முழு அசுர குணத்தையும் வெளிக்கொண்டுவந்தது. 

குடும்ப வன்முறை, பாலியல் அத்துமீறல் பற்றிய பல செய்திகளைத் தொடர்ந்து படித்துவந்ததால், அவனின் செய்கைகள் தவறு என்பது எனக்குப் புரிந்தது. அதேபோல, தான் ஒரு சைக்கோ என்பதை அவனே தன் செய்கைகளால் என்னை உணரவைத்தான். இப்படி ஒரு வக்ர, ஆக்ரோஷ புத்திக்காரனுடன் வாழ்ந்தால், என் மணவாழ்க்கை நிச்சயம் சிதையும் என்பதை உணர்ந்து, என் பெற்றோரிடம் அனைத்தையும் கூறினேன். அவர்கள், உடனடியாக நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தினார்கள். இத்தனை சம்பவங்கள் நடந்தபோதும் நான் ஒருமுறைகூட அழவில்லை. 

பின்னர், தான் திருந்திவிட்டதாக என் அலுவலகத்தில் வந்து என்னை இரண்டொரு மாதங்கள் தொந்தரவு செய்தான். ஆனாலும், அவனுக்குள் ஏதோ ஒரு வெறி தகித்துக்கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. இறுதிவரை நான் அவனுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாமல்போக, மீண்டும் அதே கொச்சையான வார்த்தைகளை உமிழ்ந்தான். 'போலீஸுக்குப் போவேன்' என்று நான் சொல்ல, குடும்ப மானத்துக்குப் பயந்து ஒதுங்கினான். 

அவன் பெற்றோரிடம் அவன் செய்ததையெல்லாம் சொன்னபோது அதிர்ந்தார்கள். இல்லை, அதிர்ந்ததுபோல் காட்டிக்கொண்டார்கள். அவனது சித்தப்பா மட்டும் எங்கள்மீதுகொண்ட மதிப்பால் அந்த உண்மையை உளறிவிட்டார். 'ஆமா, அவன் கொஞ்சம் அப்படித்தான். கல்யாணமானா சரியாகிடும்னு நினைச்சோம்' என்றார். உடனே என் அம்மா, 'இப்படிப்பட்டவனுக்கு என் பொண்ணைக் கட்டிக்கொடுத்து சாகடிக்கிறதுக்கு, அவ கல்யாண ஆகாம எங்ககூடயே இருந்தாலும் மகிழ்ச்சிதான்' என்றார். 

ஆரம்பத்திலேயே ஏதோ தவறு என்று சுதாரித்து, கண்ணோட்டமிடத் தொடங்கியதால், என் வாழ்க்கை தப்பித்தது. இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இரண்டொரு முறை அவனை தெருவில் எங்கோ பார்க்க நேர்ந்தது. அவனது வக்ரத்துக்கு அன்று நான் அனுமதிக்காததால், என்னால் தலைநிமிர்ந்து அவனைக் கடக்க முடிந்தது. அவன்தான் முகத்தை மறைத்துக்கொண்டு தலைமறைவானான். என் அனுபவத்தில் சொல்கிறேன், வக்ரம் நிறைந்த இன்றைய உலகில், பெண்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். திருமணம் செய்துகொள்ளவிருக்கும் மாப்பிள்ளையாக இருந்தாலும் சரி, காதலனாக இருந்தாலும் சரி, திருமணம் செய்துகொண்ட கணவனாக இருந்தாலும் சரி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்பவனை தைரியமாக எதிர்க்க வேண்டும். தேவைப்பட்டால், காவல் நிலையத்தில் புகார்செய்ய வேண்டும். பெற்றோர்களும் உறவினர்களும், தங்கள் பெண்களின் பாலியல் கொடுமை பிரச்னைகளை மூடிமறைக்கப் பார்க்காமல், அவர்களுக்குத் துணையாக, ஆதரவாக நின்று குற்றவாளியை எதிர்க்க வேண்டும். பெண்கள் மட்டுமல்ல, மொத்தச் சமூகமும் கைவிட வேண்டிய மௌனம் இது. 
#SpeakUp
 

இதுவரை தன் மனதில் அழுத்திக்கொண்டிருந்த கனம் ஒன்றை முதன்முறையாக இங்கு இறக்கிவைத்திருக்கிறார், இந்தச் சகோதரி. இனியும் சகிக்க வேண்டாம் என்ற துணிவுடனும் இனியொருவருக்கு இது நேராக் கூடாது என்ற அக்கறையுடனும், இவர் யாரோ அல்ல, அம்மா, மனைவி, சகோதரி, மகள், தோழி என நாம் தினம் காணும் பெண்களின் பிரதி. அவர்மீது அநாகரிக வார்த்தைகள் உமிழ்ந்து, ‘இந்த உலகம் இப்படித்தான்' என்ற பிம்பம் தர வேண்டாம் ப்ளீஸ். இனி, இதுபோல நேராத உலகம் படைப்போம்!

https://www.vikatan.com/news/tamilnadu/118455-i-realized-his-pervertness-and-decided-to-stop-my-marriage-speakup.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

“வெளியூர்ல வேலைக்கு வர்ற இளைஞர்கள் பலரும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகுறாங்க!” #SpeakUp #உடைத்துப்பேசுவோம்

 
 

பாலியல் சீண்டல் குறித்த விவாதம் எழும்போதெல்லாம், அவை பெண்கள் பற்றியும் பெண் குழந்தைகள் பற்றியும்தான் பேசுகிறோம். அது தவறில்லை என்றாலும், ஆண்களும் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. இது பலருக்கும் திடுக்கிடும் தகவலாக இருக்கலாம். ஆனால், அது உண்மை. என் சக நண்பர்கள் என்னிடம் தெரிவித்ததையும், நானே பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியிருக்கிறேன் என்பதையும் வைத்தே இதை என்னால் அழுத்தமாகச் சொல்லமுடிகிறது” - சென்னையைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 26 வயதான இளைஞரின் குமுறல் இது. வெளிப்படையாகப் பேசினாலும் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற கோரிக்கையோடு, தான் சந்தித்த பாலியல் துன்பங்களைப் பதிவுசெய்கிறார். 

பாலியல் சீண்டல்

“பசங்களைப் பொறுத்தவரை எல்லாத்திலும் வெளிப்படையா இருக்க நினைப்பாங்க. ஆனால், பாலியல் குறித்த விஷயங்களில் மட்டும் வெளிப்படையோடு இருக்க முடியறதில்லை. வெளியூர்களில் வேலை பார்க்கும் பசங்க, ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பசங்ககூட, பாலியல் விஷயங்களை சக நண்பர்களோடு பகிர்ந்துக்க திணறுறாங்க. வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கும் சுதந்திரம் இருந்தாலும், பெற்றோர்களைப் பிரிந்திருக்கும் தனிமை, ஏக்கம் எல்லாம் சேர்ந்து அவங்களைக் குழப்பும். 

இந்த நேரத்தில் அவங்களுக்குத் தவறான அணுகுமுறை, பழக்கவழக்கங்கள் என ஆரம்பிச்சு, அதில் சந்தோஷம் கிடைக்கிறதா நம்பறாங்க. பெரும்பாலான இளைஞர்கள் கட்டுக்கோப்பான குடும்பப் பின்னணியிலிருந்து வந்திருப்பாங்க. அவங்க தன் உணர்ச்சி மோதலை வெளிப்படுத்த ஒரு பெண்ணை நாடினால், அது விபரீதத்தில் முடியும்னு பயப்படறாங்க. அதனால், தன்னுடன் தங்கியிருக்கும் சகப் பாலினத்தவரின் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவதும், அவர்களின் பாலியல் தேவையை நிறைவேத்துறதுமா இருக்குறாங்க. ஆரம்பத்தில் இது பெரிய பாதிப்பாக இருக்காது. போகப்போக விபரீதமாகும். எத்தனையோ விடுதிகளில் வார்டன் மூலமாகவும், பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலமாகவும் பசங்களுக்கு தொல்லைகள் வருது. இதெல்லாம் வெளியில் தெரியுறது இல்லே. இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா விழிப்புஉணர்வு வர ஆரம்பிச்சிருக்கு. 

நான் சென்னைக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்த நேரம். என் நண்பனுக்குத் தெரிந்தவர்களோடு தங்கியிருக்கேன். அவன் வேற ஏரியா, நான் வேற ஏரியா என்பதால் அடிக்கடி மீட் பண்ணிக்க முடியாத சூழல். என் அறையில் இருந்தவங்களுக்கு என்னைவிட ஒன்றிரண்டு வயசுதான் வித்தியாசம். ஆரம்பத்தில் இரவு நேரத்தில் தூக்கத்தில் கை போடுற மாதிரி கை போடுவாங்க. போகப்போக என்கிட்ட அது தப்பி்ல்லே; இது தப்பில்லேனு சொல்லியே என்னை யோசிக்கவிடாம, அவங்க விருப்பத்துக்கு இணங்கவெச்சாங்க. 

 

இதைப்பற்றி என் நண்பனிடமும் என்னால் சொல்ல முடியலை. அதை நினைக்கும்போதெல்லாம் மனதுக்குள் ஒருவித அழுத்தம் உண்டாகிடும். ஆனால், அறையில் தங்கியிருந்த அவர்கள் ரொம்ப இயல்பா இருப்பாங்க. பள்ளிப் பருவத்திலேயே அவர்கள் இதுபோன்ற பாலியல் சீண்டலுக்கு உள்ளானதால், இது பெரிய விஷயமா தெரியலைன்னு அப்புறம் புரிஞ்சது. பள்ளிகளில் உயிரியல் பாடங்களில் கருவுறுதல் பற்றி வருது. அதைச் சொல்லிக்கொடுக்கும்போது, ஏன் பாலியல் பற்றியும் சொல்லிக்கொடுத்து மாணவர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தறதில்லை? பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாலியல் குறித்த பாதுகாப்பு சட்டம் இருக்கிற மாதிரி, ஆண்களுக்கும் சட்டம் வந்தால் இது வெளிப்படையாகத் தெரிய வாய்ப்பிருக்குது. அப்போதான் இதுக்கு தீர்வு உண்டாகும்” என்று தன் ஆதங்கத்தை முன்வைத்தார்.

https://www.vikatan.com/news/womens/110058-men-speak-about-their-terrific-moments-of-being-sexual-harassed.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.