• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
நிழலி

நடிகை ஸ்ரீதேவி காலமானார்

Recommended Posts

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.

ஸ்ரீதேவி

 

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு இந்தி திரையுலகம் வரை சென்று தன் காலடியைப் பதித்தவர். 

ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். மரண செய்தியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. 

ரஜினி, கமல் போன்ற தமிழின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவி. அவர் நடித்த 16 வயதினிலே முக்கியமானப் படம். திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆனார். அவருடைய மரணம் திரையுலகுக்கு மிகப்பெரும் இழப்பாகும்.

https://www.vikatan.com/news/india/117425-actress-sridevi-passes-away.html

Share this post


Link to post
Share on other sites

உ;லக வாழ்வின் அவிழ்க்க முடியாத முடிச்சுக்களில்...இந்த மரணமும் ஒன்றாகும்!

அந்த முடிச்சு அவிழ்க்கப் பட்டால்....இறைவனின் தேவை...மனிதனுக்கு இல்லாமல் போகும்!

மாணவ காலங்களில்......அண்ணார்ந்து பார்த்த ....அழகுகளில் ஒன்று!

ஆழ்ந்த அஞ்சலிகள்!

Share this post


Link to post
Share on other sites
Just now, பெருமாள் said:

ஆழ்ந்த அஞ்சலிகள்!

இவவுடன் ஹிரோ ஆக நடிச்சவையல் இன்னும் ஹிரோவாக நடிக்கினம் .காலம் மெதுவாக போகுது போல் இருக்கு .

Share this post


Link to post
Share on other sites

அற்புதமான நடிகை .....ஆழ்ந்த அனுதாபங்கள்......!

Share this post


Link to post
Share on other sites

நம்பவே முடியாத அதிர்ச்சியான செய்தி!

54 வயது என்று சொல்லமுடியாத தோற்றம். ஆழ்ந்த இரங்கல்கள்..

ஶ்ரீதேவி ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.

Share this post


Link to post
Share on other sites

The Raag Desh actor married his longtime girlfriend Antara Motiwala on a lavish ceremony hosted in Waldorf Astoria Ras Al Khaimah in UAE. Sridevi was one of the first in the Kapoor family to introduce 'Antara Marwah' to the world  Sridevi instagrammed the photo....

DW1edppUQAAGnX5.jpg

Share this post


Link to post
Share on other sites

தேவையற்ற மார்பக பெரிதாக்கும் சிகிச்சை இந்த மாரடைப்புக்கு காரணமோ தெரியவில்லை, ஏனெனில் உலகில் பலருக்கு அப்படி நடந்திருக்கிறது, ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

நல்லதொரு நடிகை. இளவயதில்... காலமானது பெரும் சோகம். ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

கண்ணே, கலைமானே: டிவிட்டரில் கலங்கிய கமல், ரஜினி, பிரபல நடிகர்கள்

 
 
100170580100169840mediaitem100169837jpg
 

தமிழில் உதித்து, ஹிந்தியிலும் ஒளிர்ந்த பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு மாரடைப்பால் காலமானார்.

துபாயில் தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை ட்விட்டர் போன்ற சமூக இணையதளங்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

"என்னுடைய சிறந்த நண்பரை இழந்துவிட்டேன். திரைத்துறை ஒரு மிகச் சிறந்த திறமைசாலியை இழந்துவிட்டது" என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்" என்று நடிகர் கமல் ஹாசன்

"இந்திய சினிமாவின் கனவு தேவதை காற்றில் கலந்தது! ஆயினும் நம் நெஞ்சில் எப்போதும் நிழலாடும்!" என்று நடிகர் விவேக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"ஸ்ரீதேவி மறைந்துவிட்டதை அறிந்தவுடன் அதிர்ச்சிக்குள்ளானேன்" என்று கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

"அவரிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன், அவரது இழப்பை இதுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று நடிகை கஜோல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"ஸ்ரீதேவியின் அகால மரணத்தைப் பற்றி அறிந்தவுடன் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் அதிர்ச்சியடைந்தேன்" என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பதிவிட்டுள்ளார்.

"இதை என்னால் நம்ப முடியவில்லை, இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. நான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. இது இந்திய சினிமாவின் கருப்பு தினம்" என்று நடிகை ஹன்சிகா மோத்வானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, "இந்த செய்தியை கேட்டு மீள முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

பாடகியான ஸ்ரேயா கோஷல், "இதை என்னால் நம்பமுடியவே இல்லை. அவர் விரைவிலேயே மறைந்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.

"இதுவொரு ஈடுசெய்ய முடியாத மற்றும் மறக்கவியலாத இழப்பு" என்று நடிகை கெளதமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"மிகவும் திறமையான மற்றும் அழகான இவரின் இழப்பை விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை" என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/bbc-tamil/article22849087.ece

Share this post


Link to post
Share on other sites

நடிகை ஸ்ரீதேவி : நாம் அறிந்ததும் - அறியாததும்

 

 
sridevi

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக, 54 வயதில் மரணமடைந்துள்ளார்.

தமிழ் மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கமல், ரஜினி, சிரஞ்சீவி மற்றும் ரிஷிகபூர் என இந்திய சினிமாவில் பல உச்சநட்சத்திரங்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.

பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்த பின் படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஸ்ரீதேவி, 2012 ஆம் ஆண்டு வெளியான இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன்பின், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். அவரைப் பற்றி நாம் அறிந்த மற்றும் அறியாத சில தகவல்கள் இதோ: -

பிறப்பு - அறிமுகம்

1963ம் ஆண்டு சிவகாசியில் உள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன் – ராஜேஸ்வரி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, 1967-ஆம் ஆண்டு தமது 4 வயதில் துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  நடிகைகளில் சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற ஸ்ரீதேவியின் உண்மையான பெயர் "ஸ்ரீ அம்மா". பின்னர் சினிமாவிற்காக அந்தப் பெயரை ஸ்ரீதேவி என மாற்றிக்கொண்டார். 1979ம் ஆண்டு மூன்று முடிச்சு என்ற படத்தின் மூலம் 13 வயதில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் மாஸ் ஹீரோக்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் ஜோடி போட்டு ஹீரோக்களுக்கு நிகரான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார்.

முதல் விருது

1971-ஆம் ஆண்டில் பி.கே.பொற்றேகாட் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான பூம்பட்டா என்ற
படம், சிறுமி ஸ்ரீதேவியை பிறவிக் கலைஞராக அடையாளம் காட்டியது. அதில் சிற்றன்னையின்
கொடுமைக்கு ஆளாகி மீளும் சாரதா என்ற சிறுமியாக முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்று
நடித்து, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதை 8 வயதில் பெற்றார்.

பாடகராக பரிமாணம் பெற்ற ஸ்ரீதேவி

நடனம், நகைச்சுவை என பன்முகம் கொண்ட ஸ்ரீதேவி முதல் முறையாக 1983ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை ரீமேக் திரைப்படமான சத்மா -வில் ஒரு பாடலை பாடினார். இதே திரைப்படத்தில் இந்தியில் தனது சொந்த குரலில் முதல் முறையாக வசனம் பேசினார். இதைத் தொடர்ந்து சாந்தினி, கராஜ்னா, தெலுங்கு படமான க்ஷ்ணம் க்ஷ்ணம் ஆகிய படங்களிலும் ஸ்ரீதேவி பாடியுள்ளார்.

ஸ்ரீதேவிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு திரைப்படங்களில் நடிக்க அவர் முதலில் தேர்வு செய்யப்படவில்லை. நாகினா என்ற படத்திற்கு முதலில் ஜெயபிரதாவும், சாந்தினி திரைப்படத்திற்கு ரேகாவும் முதலில் அணுகப்பட்டனர். அவர்கள் மறுத்ததால் அந்த வாய்ப்புகள் ஸ்ரீதேவிக்கு கிடைத்தன. தன்னுடைய 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில், 4 முறை சிறந்த நடிப்புக்காக பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அதோடு, பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் தமிழில் வெளிவந்த திரைப்படங்கள்:-

 • துணைவன்    
 • நம்நாடு    
 • பாபு     
 • கனிமுத்து பாப்பா    
 • வசந்த மாளிகை    
 • பாரதவிலாஸ்    
 • திருமாங்கல்யம்      
 • மூன்று முடிச்சு    
 • 16 வயதினிலே    
 • காயத்ரி     
 • கவிக்குயில்
 • சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு    
 • வணக்கத்துக்குரிய காதலியே  
 • டாக்சி டிரைவர்
 • இது எப்படி இருக்கு    
 • மச்சான பாத்தீங்களா     
 • மனிதரில் இத்தனை நிறங்களா    
 • முடிசூடா மன்னன்      
 • வைலட் பிரேம்நாத்    
 • சிகப்பு ரோஜாக்கள்  
 • ப்ரியா  
 • தர்மயுத்தம்
 • கல்யாணராமன்
 • பகலில் ஓர் இரவு      
 • கவரிமான்     
 • நீலமலர்கள்     
 • பட்டாக்கத்தி பைரவன்     
 • லக்ஷ்மி     
 • தாயில்லாமல் நானில்லை     
 • குரு    
 • ஜானி    
 • வறுமையின் நிறம் சிகப்பு    
 • விஸ்வரூபம்    
 • பாலநாகம்மா     
 • சங்கர்லால்     
 • மீண்டும் கோகிலா      
 • ராணுவவீரன்    
 • மூன்றாம் பிறை    
 • தனிக்காட்டு ராஜா    
 • போக்கிரிராஜா    
 • வாழ்வே மாயம்    
 • அடுத்த வாரிசு    
 • சந்திப்பு      
 • நான் அடிமை இல்லை    
 • இங்கிலீஷ் விங்கிலீஷ்     
 • புலி 
 

http://www.dinamani.com/latest-news/2018/feb/25/நடிகை-ஸ்ரீதேவி--நாம்-அறிந்ததும்---அறியாததும்-2870002.html

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

நம்ப முடியவில்லை. எனக்கு பிடித்த நடிகை. 

தினமும் இவருடைய பாடல்களை யூரிப்பில் பார்பதுண்டு. 70 / 80 களின் சிறுவயது ஞாபகங்கள் வந்து போகும். 

மரணத்திற்கு சில வினாடிககுக்கு முன்பு கூட மணப்பெண்போல அழகான தோற்றத்தில் காணப்டுகின்றார்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites

நடிகை ஸ்ரீதேவி இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்!

 

 
sridevi444-1519532889

துபாய் : பிரபல நடிகை ஸ்ரீதேவி(54) மாரடைப்பால் துபாயில் சனிக்கிழமையன்று காலமானார். தனது உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீதேவி துபாய் சென்றிருந்தார். அவருடன், கணவர் போனி கபூர் மற்றும் இளைய மகள் குஷி கபூர் கலந்து கொண்டார்.

பச்சை நிறத்தில் ஜொலிக்கும் உடையணிந்து ஸ்ரீதேவி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். இதில் பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூரும் மற்றும் பலர் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து பிறகு அங்கிருந்த அனைவரையும் நோக்கி கையசைத்து சென்றுள்ளார் ஸ்ரீதேவி. இது தான் ஸ்ரீதேவி கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாகும். திருமண நிகழ்ச்சி முடிந்த நிலையில், தான் தங்கியிருந்த அறைக்கு சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து சிறிது நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்த தகவல் அவரது உறவினரும், நடிகருமான சஞ்சய் கபூரும் உறுதி செய்துள்ளார்.

http://www.dinamani.com/latest-news/2018/feb/25/நடிகை-ஸ்ரீதேவி-இறப்பதற்கு-சில-நிமிடங்கள்-முன்-வீடியோ-இணைப்பு-2870001.html

 

 

 

பிரபல நடிகை ஸ்ரீ தேவி மரணமும் வியப்பூட்டும் அமிதாப் ட்விட்டும் 

 

 
sridevi3

பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணத்தால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீதேவி இறப்பதற்கு முன்னதாக அமிதாப் பச்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போட்டுள்ளார். 

என்ன என்று தெரியவில்லை. ஆனால், ஏதோ ஒன்று விபரீதம் நடக்கப்போகிறது என்பது போன்று படபடப்பாக இருக்கிறது என்று அமிதாப் குறிப்பிட்டுள்ளார்.

அமிதாப் பதிவிட்ட ட்விட்டின் 20 நிமிடத்தில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 

ஸ்ரீதேவி மரணமடைந்ததை அறிந்த ட்விட்டர் வாசிகள், அமிதாப் ட்விட்டரைப் பார்த்து வியந்துள்ளனர். 
 

amitabh.jpg

http://www.dinamani.com/latest-news/2018/feb/25/பிரபல-நடிகை-ஸ்ரீ-தேவி-மரணமும்-வியப்பூட்டும்-அமிதாப்-ட்விட்டும்-2870008.html

https://www.instagram.com/p/BfmqY5FgEiE/?taken-by=filmyfocus

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, புங்கையூரன் said:

உ;லக வாழ்வின் அவிழ்க்க முடியாத முடிச்சுக்களில்...இந்த மரணமும் ஒன்றாகும்!

அந்த முடிச்சு அவிழ்க்கப் பட்டால்....இறைவனின் தேவை...மனிதனுக்கு இல்லாமல் போகும்!

 

உண்மை புங்கை, 

இப்பொழுதெல்லம் அடிக்கடி இப்படியான செய்திகளை கேள்விப்படுகின்றேன். பாடசாலையில் படிப்பித்த ஆசிரியர், அயலவர்கள், தெரிந்தவர்கள் என பலர் கால ஒட்டத்துடன் காலமாகி விட்டார்கள். 

இது வாழ்க்கையில் ஓர் முதிர்ச்சியையும், பக்குவத்தையும்,        ச‌கிப்புத்தன்மையையும் தருகின்றது.  ஏதோ புரியாத ஒன்றை மனம் ஆர்வமாக நாடுகின்றது.
 

Share this post


Link to post
Share on other sites

 

வடகரை அத்தி MOHIDEN
கூத்தாடி வேசிகளை பற்றி ஒரு நிமிஷம் பேசுவதே தேவையற்றது சரியா நாட்டிள்உள்ள ஏளைகளின் கஷ்ட்டத்தை போக்குவதர்க்கு என்ன செய்வது என்பதை பற்றி பேசவும் எழுதவும் செயலாற்றவும் நாம் அனைவரும் சிந்திப்போம்
 
 

வடுவா றாஸ்கல் இப்படி எழுதியிருக்கான் எங்கட கனவுக்கன்னியைப்பற்றி

 

Share this post


Link to post
Share on other sites

சிவகாசி தந்த பெண் சூப்பர் ஸ்டார்! நினைவுகளும் நினைவஞ்சலிகளும்! ஒரே பார்வையில்!!

 

 

 

 

 

 
 
நடிகை ஸ்ரீதேவியின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீதேவி டுபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்திய திரையுலகையே கலக்கிய சிவகாசி பெண்.. சென்று வாருங்கள் ஸ்ரீதேவி!

இவர் தமிழில் எப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனாரோ அப்படித்தான் மற்ற மொழிகளிலும் பிரபலம் ஆனார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளும் நடித்துக் கொண்டு இருந்தார். பல படங்களில் ஆண் குழந்தை வேடத்திலும், சிறு கடவுள் வேடத்திலும் நடித்தார்.  அதேபோல் பெரிய ஹீரோயினாக வளர்ந்த பின் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், விஜய் என முன்னாடி ஹீரோக்கள் எல்லோருடனும் நடித்துள்ளார்.

 

கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஜோடி 80களில் இந்திய திரையுலகையே ஆட்டிபடித்துக் கொண்டு இருந்தது. எல்லா மாநிலத்திற்கும் இந்தியா முழுமைக்குமான ஹீரோயினாக இவர் இருந்தார். தென்னிந்தியர்களை வடஇந்தியர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்ற பிம்பத்தை நொறுக்கினார். 15 வருடம் இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தார்.

முக்கியமாக இந்த சிவகாசி அழகியை பொலிவூட் தூக்கி சுமந்தது. எத்தனை எத்தனை விருதுகள் அதேபோல் இவர் சிறிய சிறிய மாநில விருதுகள், பிலிம் பேர் விருதுகள் என பல விருதுகள் வாங்கி இருக்கிறார். 2013ல் பத்ம விருது வாங்கினார். அதேபோல் கேரளா அரசு இவருக்கு பலமுறை விருது வழங்கி சிறப்பித்து இருக்கிறது.

16 வயதினிலே மயில், ஜானி அர்ச்சனா, மூன்றாம் பிறை விஜி

திரைப்படங்களில் தாம் ஏற்ற அத்தனை கதாபாத்திரங்களிலும் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி 1970களின் இறுதியிலும் 1980களிலும் தமிழ் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவியை 1976-ம் ஆண்டு மூன்று முடிச்சு படத்தில் செல்வி கதாபாத்திரம் மூலமாக நாயகியாக்கினார் இயக்குநர் கே. பாலச்சந்தர். அப்போது ஸ்ரீதேவிக்கு வயது 13.

 
Sridevi's unforgettable performances in Tamil movies

இதன் பின்னர் இயக்குநர் பாரதிராஜாவின் 16 வயதினிலே மயில் பாத்திரம்… இன்னமும் மயில் பாடும் ‘செந்தூரப்பூவே’ பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ரஜினி, கமல் எனும் இருபெரும் நாயகர்களுடன் அழகு மயிலாக ஜொலித்தவர் ஸ்ரீதேவி.

சிகப்பு ரோஜாக்கள் சாரதா, தாயில்லாமல் நான் இல்லை புவனா என நடிப்பில் விஸ்வரூபம் காட்டிய ஸ்ரீதேவி 1980-ல் வெளியான ஜானியில் அர்ச்சனா எனும் பாடகியாக முதிர்ச்சியான கதாபத்திரத்தில் நடிப்பின் உச்சத்தைத் தொட்டார் ஸ்ரீதேவி.

1985-ம் ஆண்டு நான் அடிமை இல்லை படத்தின் பிரியா பாத்திரத்துடன் அந்த மயில் தமிழ் சினிமாவின் பயணத்தை நிறுத்திவிட்டது. தென்னிந்திய மொழிகளிலும் இந்தி திரை உலகிலும் மயிலின் கொடி உயரவே பறந்து லேடி சூப்பர் ஸ்டாராக கோலோச்சினார்.

 
Sridevi's unforgettable performances in Tamil movies

சுமார் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலிஷ் விங்கிலிஷ் மூலம் மீண்டும் தமிழக திரையரங்குகளில் மயில் எட்டிப்பார்த்தார். 2015-ம் ஆண்டு விஜய் நடித்த புலி திரைப்படத்தில் ராணி யுவராணி பாத்திரத்தில் நடித்தார் ஸ்ரீதேவி.

அரை நூற்றாண்டுகாலம் இந்திய சினிமாவின் முகங்களில் ஒருவராக திகழ்ந்த நம் சிவகாசி மீனாம்பட்டி மீனா என்கிற ஸ்ரீதேவி என்கிற மயிலின் வாழ்க்கை 54 வயதிலேயே முடிவுக்கு வந்திருப்பது பெருந்துயரம். இந்திய திரைத்துறைக்கும் பேரிழப்பு!

 நினைவில் என்றும் வாழ்வார் ஸ்ரீதேவி: சந்திரபாபு நாயுடு, விஜயாகாந்த்

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளர். தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட முண்ணனி நடிகர்களின் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர். தமிழ் மண்ணிற்கு தலை வணங்குகிறேன்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பல்வேறு மொழிகளில் நடித்து பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் ஈடு இணையற்ற நடிப்புத் திறன் கொண்டவர். அவரின் திரைப்படங்களே அதற்கு சாட்சி. ஸ்ரீதேவியின் மரணச்செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் . அவரின் திரைப்படங்கள் மூலம் எப்போதும் நினைவு கொள்ளப்படுவார் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் மரணச்செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி இப்போது இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.. சச்சின் டெண்டுல்கர், அஸ்வின்
நடிகை ஸ்ரீதேவி இப்போது இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் விளையாட்டு வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 
 

Shocked to hear about the demise of #Sridevi ji .Heartfelt Condolences to the family. Om Shanti !

 
 

சேவாக் இரங்கல்
இதுகுறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சேவாக் ”ஸ்ரீதேவியின் மரணத்தை பற்றிய செய்தி வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுள்ளார்.

 
சச்சின்
அதேபோல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் ”ஸ்ரீதேவி நம்மிடையே இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றுள்ளார்.
 
 

Sridevi no more ? ?so difficult to fathom that she is no more, such is life I guess. Strong will to those near and dear to her. #RIPSridevi ?

 
 

அஸ்வின் இரங்கல்
தமிழக வீரர் அஸ்வின் ”ஸ்ரீதேவி இறந்துவிட்டாரா? அவரது இழப்பை ஏற்கமுடியவில்லை. இதுதான் வாழ்க்கை போல. அவருக்கு நெருக்கமானவர்கள் இந்த துக்கத்தை தாங்கி கொள்ள வேண்டும்” என்றுள்ளார்.

கங்குலி இரங்கல்

கங்குலி இரங்கல்
அதேபோல் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கங்குலி ”ஸ்ரீதேவியின் மரணத்தை பற்றிய செய்தி பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவரது குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுள்ளார்.தி

மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது…

ஸ்ரீதேவியின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, நடிகர் ரஜினி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான்.

பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த மறைவு செய்தி தன்னை துன்பத்தில் ஆழ்த்துவதாகவும், பழைய நினைவுகள் நினைவுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் இந்த மறைவு திரை உலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 ரஜினியுடன் ஜோடியிட்டு கலக்கிய ஸ்ரீதேவி

ரஜினிகாந்துடன் ஸ்ரீதேவி 22 படங்களில் நடித்து கலக்கியுள்ளார். கமல்ஹாசனை போல் 6 வயது முதல் நடித்து வந்த ஸ்ரீதேவி முதல் முறையாக ரஜினியுடன் மூன்று முடிச்சு படத்தில் 1976-ஆம் ஆண்டு நடித்துள்ளார்.

SriDevi starred with Rajinikanth

இதைத் தொடர்ந்து 16 வயதினிலே (1977) படத்தில் மயிலு கேரக்டரில் நடித்து அசத்தியவர். அதைத் தொடர்ந்து வணக்குத்துக்குரிய காதலியே (1978), பிரியா (1978), தாயில்லாமல் நானில்லை (1979), தர்மயுத்தம் (1979), ராம் ராபர்ட் ரஹீம் (1980- தெலுங்கு), ஜானி (1980), ராணுவ வீரன் (1981), தனிக்காட்டு ராஜா (1982), போக்கிரி ராஜா (1982), அடுத்த வாரிசு (1983), நான் அடிமை இல்லை (1986) ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து ஜுல்ம் கீ ஜன்ஜீர் (1984), சால்பாஸ் (1989) உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்த ஸ்ரீதேவி ரஜினியுடன் கடைசியாக 1992-ஆம் ஆண்டு வெளியான சோர் கே கார் சோர்னி என்ற படத்தில் நடித்தார்.

ஸ்ரீதேவியை பார்த்தே பல நடிகைகள் நடிப்பு துறைக்கு வந்தனர். அனைவருக்கும் ரோல் மாடலாக இருந்த இவர் நேற்று துபாயில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

கமரா முன்னால் நெருப்பு போல் நடிப்பை காட்டியவர் ஸ்ரீதேவி- ரஜினி புகழாரம்

கமரா முன்னால் ஸ்ரீதேவி வந்துவிட்டால் அப்படியே அவர் தனது நடிப்பை மிகவும் உக்கிரமாக வெளிப்படுத்துவார் என்றும் அவர் ஒரு பிறவி நடிகை என்றும் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
 
ஸ்ரீதேவி இறந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. அவர் 3 மாதங்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்தபோது ஸ்ரீதேவி, போனி கபூர், நான் ஆகியோர் குடும்பத்தினருடன் சந்தித்தோம் என்றார்.
 
யாராலும் ஈடு செய்ய முடியாது என்னுடைய 2-ஆவது படத்திலிருந்து கூடவே நடித்தவர். எனது மிக நெருங்கிய நண்பர். அவருடைய இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது.

நினைவுகளில் இருப்பார்

அவரது இழப்பால் வாடும் போனி கபூர், இரு மகள்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீதேவி இறந்தாலும் அவர் சினிமா மூலம் நம்முடைய நினைவுகளில் இருப்பார். உக்கிரமாக இருக்கும் கேமராவுக்கு முன்னால், கேமராவுக்கு பின்னால் என இரு ஸ்ரீதேவிகள் இருப்பர். கேமராவுக்கு பின்னால் இருக்கும் ஸ்ரீதேவி எதுவுமே தெரியாதது போல் இருப்பார். ஆனால் கேமராவுக்கு முன்னால் அவருடைய நடிப்பு கரென்ட் பாசவது போல் உக்கிரமாக இருக்கும்.

இந்தியில் ஜொலித்தார் யார்

மீதும் கோபம் கொள்ளமாட்டார். இந்தியில் ஒரு வார்த்தை கூட தெரியாமல் அங்கு அத்தனை படங்களில் அதுவும் ஈஸியாக எப்படி நடித்தார் என்பது எங்களுக்கு ஆச்சரியம்தான்.

நண்பரை இழந்துவிட்டேன்

அவர் ஒரு பிறவி நடிகை. எனக்கு சினிமா துறையில் நெருங்கிய நண்பர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுள் ஒருவரை நான் இழந்துவிட்டேன். மிகவும் வேதனையாக உள்ளது. அவரது இழப்பு இந்திய திரையுலகத்துக்கே மிகப் பெரும் இழப்பாகும் என்றார் ரஜினி.

கமல் என்றால் ஸ்ரீதேவி.. பிரிக்க முடியாத ஒரு ஜோடி!

தமிழ் சினிமாவில் ரசிகர்களை வசீகரித்த ஜோடிகள் வரிசையில் கமல் – ஸ்ரீதேவிக்கு தனி இடம் உண்டு. அந்த அளவுக்கு இருவரும் இணைந்து கொடுத்த நடிப்பு தீனியை அவர்களுக்குப் பின்னர் யாருமே கொடுத்ததில்லை. இருவரும் இணைந்து 24 படங்களில் நடித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை தமிழ்ப் படங்கள். இருவரும் இணைந்து கொடுத்த அத்தனை படங்களும் இருவரின் பன்முக தன்மைக்காக பெரிதும் பேசப்பட்ட பிரமாண்டப் படங்கள் என்பது முக்கியமானது.

மறக்க முடியாத மூன்று முடிச்சு
 
1976ம் ஆண்டு வெளியான மூன்று முடிச்சுதான் இருவரும் இணைந்து ஜோடியாக நடித்த முதல் படம். இதில் இன்னொரு ஹீரோவாக, நெகட்டிவ் ரோலில் ஜொலித்தவர் ரஜினிகாந்த். கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப் பெரிய ஹிட்டாக அமைந்ததோடு, ஸ்ரீதேவி என்ற ஹீரோயினின் நடிப்புப் பரிமாணத்தைப் பார்த்து அனைவரையும் வியக்க வைத்தது.
 
மயிலு ஸ்ரீதேவி
 
கமல், ரஜினி ஆகிய இரு ஆளுமைகளையும் இதில் தூக்கிச் சாப்பிட்டிருப்பார் ஸ்ரீதேவி. அதன் பிறகு இருவரும் இணைந்து மிரட்டிய படம் 16 வயதினிலே. தமிழ் சினிமாவை நிஜ கிராமங்களுக்கு முதல் முறையாக கூட்டிச் சென்ற புதுமைப் படம். பாரதிராஜா, இளையராஜா போன்ற ஆளுமைகளோடு, கமலும், ஸ்ரீதேவியும் இணைந்து வெளுத்துக் கட்டிய மறக்க முடியாத படம்.
 
புதிய ஒளி பாய்ச்சிய சிகப்பு ரோஜாக்கள்
 
பிறகு வெளியான சிகப்பு ரோஜாக்கள், கமல் – ஸ்ரீதேவி மீது புதிய ஒளியைப் பாய்ச்சியது. மனிதரில் இத்தனை நிறங்களா, சக்கைப் போடு போடு ராஜா, தாயில்லாமல் நானில்லை என இவர்களின் நடிப்பு வேட்டை தொடர்ந்தது.
 
ஹிட் கொடுத்த கல்யாண ராமன்
 
தொடர்ந்து இருவரும் நடித்த படங்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த படமாக கல்யாண ராமன் 1979ல் வெளியானது. தொடர்ந்து ஹிட் கொடுத்த முக்கியப் படம் வறுமையின் நிறம் சிவப்பு. இருவரது நடிப்புக்கும் புதிய அர்த்தம் கொடுத்த படம் இது. அதையடுத்து வெளியானது குரு. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிரமாண்ட ஹிட்டான படம் குரு.
 
சின்னஞ்சிறு வயதில்
 
கமல் -ஸ்ரீதேவி நடிப்பில் பேசப்பட்ட இன்னொரு முக்கியப் படம் மீண்டும் கோகிலா. கமலுடன் இணைந்து இவர் போட்ட நடிப்பு கதகளியை யாராலும் இன்று வரை மறக்க முடியாது. இந்த கேரக்டரில் ஸ்ரீதேவி பின்னியிருப்பார். கமலே மிரண்டு போன வேடமும் கூட இது
 
மறக்க முடியாத வாழ்வே மாயம்
 
1982ல் வெளியான வாழ்வே மாயம், கமல், ஸ்ரீதேவி இருவருக்கும் மறக்க முடியாத படம். சோகம், அழுகை நிறைந்து வழிந்த இப்படத்தின் காதல் காட்சிகளில் கமலும், ஸ்ரீதேவியும் அப்படி மெய் மறக்க வைத்திருப்பார்கள்.
 
மூன்றாம் பிறை
 
இருவரது கெரியரிலும் மறக்க முடியாத இன்னொரு முக்கியப் படம் மூன்றாம் பிறை. கமல்ஹாசனுக்கு நடிப்புக்காக முதல் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம் மூன்றாம் பிறை. அப்பாவித்தமான கேரக்டரில் மிரட்டியிருப்பார் ஸ்ரீதேவி.

கொஞ்சம் கூட மிகை இல்லாமல் அவர் நடித்த நடிப்புக்கு இணையாக இன்னொரு நடிகை இதுவரை நடித்ததில்லை. இப்படம் சத்மா என்ற பெயரில் இந்திக்கும் போனது. காலத்தால் மறக்க முடியாத ஜோடி இந்தப் படங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து பெரிய ஹிட் கொடுக்கவில்லை. ஸ்ரீதேவி பின்னர் ரஜினியுடன் பிசியானார். அப்படியே இந்தியில் பெரும் நடிகையாக மாறிப் போனதால் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அதன் பிறகு கை கூடவில்லை. கமல் என்றால் கூடவே ஸ்ரீதேவி என்ற பெயரும் சேர்ந்தே வரும். அப்படி ஒரு நடிப்புப் பிணைப்பில் மூழ்கிப் போனவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்களா என்று ரசிகர்கள் நீண்ட காலம் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் காலம் ஸ்ரீதேவியை பிரித்துக் கொண்டு போய் அத்தனை பேரையும் ஏமாற்றி விட்டது. இருப்பினும் காலம் உள்ளவரை, கமல் -ஸ்ரீதேவியின் படங்களை ரசிகர்கள் மறக்க முடியாது.

பல கோடிப் பெண்களின் உணர்வின் முகம்: வைரமுத்து

பல கோடிப்பெண்களின் உணர்வுகளைத் தனது ஒற்றை முகத்தில் பிரதிபலித்தவர் நடிகை ஸ்ரீதேவி. தெற்கில் உதித்து வடக்கை வெற்றி கொண்ட நட்சத்திரம் என்று ஸ்ரீதேவியின் மறைவுக்கான இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட முண்ணனி நடிகர்களின் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர். தமிழ், இந்தி மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் மிகச்சிறந்த படங்களில் நடித்தவர்.அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உண்டு. பல்வேறு விருதுகளும் அவர் பெற்றுள்ளார்.

னவாக இருக்க கூடாதா?.. 80களின் நடிகைகள் இரங்கல்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு 80 களில் அவருடன் நடித்த திரையுலக நடிகைகள் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். பலரும் டிவிட்டரில் இதுகுறித்து வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள்.

ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

லதா, ரேகா, ரோஜா, கஸ்தூரி ஆகிய நடிகைகள் ஸ்ரீதேவி மறைவிற்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள்.

லதாஇரங்கல்

லதாஇரங்கல்

நடிகை லதா ”ஸ்ரீதேவி மறைவு செய்தி பெரும் அதிர்ச்சி. இதை கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை” என்றுள்ளார்.

 
ரேகா இரங்கல்

ரேகா இரங்கல்
அதேபோல் அவரது சமகால நடிகை ரேகா ”ஸ்ரீதேவியின் மறைவு கனவாக இருக்ககூடாதா என நினைக்கத் தோன்றுகிறது” என்றுள்ளார்.

கஸ்தூரி இரங்கல்

அவரின் சக நடிகையான கஸ்தூரி ”ஸ்ரீதேவி இனி இல்லை. இதை எழுதுவதற்கு கூட கஷ்டமாக இருக்கிறது” என்றுள்ளார்.

ரோஜா இரங்கல்

ரோஜா இரங்கல்

மேலும் நடிகை ரோஜா”நடிகைகளுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவராக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. புகழ்பெற்ற ஸ்ரீதேவி இனி இல்லை என்பதை யாராலும் ஜீரனிக்க முடியாத ஒன்று” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

இறப்பதற்கு முன்பு  போட்ட கடைசி ட்வீட் தமிழ் படம் பற்றியது தான்

நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் மரண செய்தி அறிந்து திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரீதேவி ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்தவர்.

 
 
 
புகைப்படங்கள்டுபாயில் திருமண நிகழ்ச்சியின்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஸ்ரீதேவி. அது தான் அவர் பகிர்ந்த கடைசி புகைப்படங்கள்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கடைசி தருணங்கள். மறைந்த நடிகை ஸ்ரீதேவி துபாயில் திருமணம் ஒன்றில் பங்கேற்றதுதான் அவரது கடைசி நிகழ்ச்சியாகும். இத்திருமண விழாவில் ஸ்ரீதேவி பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 
ஜிம், யோகா, டயட் என்று கட்டுக்கோப்பாக இருந்த ஸ்ரீதேவிக்கா
 
உடல்நலத்தை பேண அதிக முக்கியத்துவம் கொடுத்த நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கோலிவுட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் செட்டிலான ஸ்ரீதேவி பெண் சூப்பர் ஸ்டார் ஆனார்.
 
உடல் நலத்தை பேணுவதற்கு எப்பொழுதுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த அவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அவரின் மரண செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. யோகா ஸ்ரீதேவி தினமும் உடற்பயிற்சி செய்து வந்தார். மேலும் யோகாவும் செய்தார். ஃப்ரை செய்த உணவு வகைகளை தொட்டுக் கூட பார்க்க மாட்டார். ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார்.
 
டென்னிஸ் வாரத்திற்கு ஒரு முறை நீச்சல் அடிப்பார். மேலும் வாரத்திற்கு இரண்டு முறை டென்னிஸ் ஆடி வந்தார். இது தவிர உணவுக் கட்டுப்பாட்டிலும் இருந்து வந்தார். உடல் நலம் பெண்கள் அனைவரும் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
 
நமக்காகவும், குடும்பத்தாருக்காகவும் நாம் நலமாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். மரணம் உடல்நலத்தின் மீது அக்கறை கொண்ட ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பதை பலராலும் நம்ப முடியவில்லை. ஸ்ரீதேவியை பற்றி தெரிந்த பாலிவுட் பிரபலங்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியையும், கவலையையும் அளித்துள்ளது.

ஸ்ரீதேவி இறப்பதற்கு முன்பு நடிகர் அமிதாப் பச்சன் போட்ட ருவீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

amitabh.png?resize=499%2C169
ருவீட் என்னவென்று தெரியவில்லை ஆனால் ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்பது போன்று படபடப்பாக உள்ளது என்று அமிதாப் பச்சன் ருவீட்டியிருந்தார்.
அமிதாப் பச்சன் கெட்டது நடக்கப் போவது போன்று இருப்பதாக ருவீட்டிய 20வது நிமிடத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து அனைவரும் அமிதாபை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.

தெரியும் நமக்கு நெருக்கமானவர்களுக்கு ஏதாவது நடக்கப் போகிறது என்றால் சில நேரங்களில் நமக்கு முன்கூட்டியே தெரியும். ஏதோ நடக்கப் போகிறது என்ற ஒரு பதட்டம் ஏற்படும். அமிதாபுக்கும் அது தான் ஏற்பட்டிருக்கிறது வியப்பு அமிதாப் பச்சன் ருவீட்டை பார்த்தவர்கள் முதலில் அவருக்கு தான் உடல்நிலை சரியில்லையோ என்று நினைத்தனர். பின்னர் ஸ்ரீதேவி இறந்தவுடன் அவரின் ட்வீட்டை பார்த்து வியப்படைந்தனர்.

http://globaltamilnews.net/2018/68402/

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அஞ்சலிகள்!

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள். 80களில் ஸ்ரீ தேவி நடித்த பல தமிழ் படங்கள் வெளி வந்தன. மீண்டும் கோகிலா இப்பவும் நினைவில் நிக்கிறாள். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.