• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • நீங்கள் அதற்கு என்ன செய்தீர்கள் ??????? "அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எமது போராட்டத்தை பார்வையிடவுள்ளதாக எம்மிடம் தெரிவித்திருக்கின்றார்கள். அதேவேளை சில சர்வதேச ஊடகவியலாளர்களும் எமது ஆயிரம் நாள் போராட்டத்திற்கு வருகை தரவுள்ளனர். எமது போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவினை வழங்குமாறு கோருவதாகவும் இன்று பிற்பகல் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்."  
    • உங்களுக்கென்ன???? ஒவ்வொரு லெக்சனுக்கும் வந்து வீரவசனம் பேசுவியள். எல்லாம் முடிஞ்சாப்பிறகு கொழும்பு விட்டிலை குறட்டை விட்டுக்கொண்டு பிரண்டு பிரண்டு படுக்க வேண்டியதுதான்.
    • இதுபற்றி நான் தொடர்ந்து தேடிவருகிறேன். புலிகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களும், புலிகளை ஆதரித்து வருபவர்களும் இந்த நிகழ்வினை இரு வேறுபட்ட கோணங்களிலிருந்து விளக்குகிறார்கள். முதலாவதாக, புலிகளின் இந்த முடிவினைக் கடுமையாக விமர்சிக்கும் பலரும் கூறும் ஒருவிடயம் என்னவெனில், ரணிலைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தமிழ் மக்கள் தேர்தலினைப் புறக்கணிக்க வேண்டும் என்று புலிகள் கேட்டுக்கொண்டதன் மூலம், தமது தலையிலும், தமிழர் தலையிலும் சேர்த்தே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார்கள் என்கிறார்கள். மகிந்த யதார்த்தமானவர், அப்படியானவருடன் சேர்ந்து பயணிப்பது இலகுவானதென்று நம்பிய புலிகள் அவர்களைப் பதவியில் அமர்த்தியதன் மூலம், தம்மையே முற்றாக அழிக்கும் போர் ஒன்றிற்குள் உள்வாங்கப்பட்டு அழிந்துபோனார்கள் என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.   இன்னும் சிலர், இன்னொரு படி மேலே சென்று, புலிகள் மகிந்தவிடமிருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டபின்னரே தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாகவும் புலிகளால் எடுக்கப்பட்ட இந்த முடிவினைக் கொச்சைப்படுத்துகிறார்கள். புலிகளின் இந்த முடிவினை ஆதரிக்கும் பலர், மகிந்த வராமால், ரணில் வந்திருந்தாலும்கூட, போர் ஒன்று இடம்பெற்றிருக்கும். புலிகளை இன்னும் கொஞ்சக் காலம் ஆடவிட்டு, பின்னர் எல்லோருமாகச் சேர்ந்து அடித்திருப்பார்கள். 2009 இல் முடிவடைந்த போர், வேண்டுமென்றால் 2014 இல் முடிவடைந்திருக்கும், ஆனால் முடிவு ஒன்றுதான் என்று கூறுகிறார்கள். இது ஒரு மிகவும் சிக்கலான தலைப்பு. இதனை இங்கு கேட்டதனாலேயே என்னைத் துரோகியென்று சொல்வதற்கும் சிலர் தயங்கப்போவதில்லை. ஆனால், நடந்தவைபற்றிய தேடுதலும், அறிவும் இருப்பது இனிமேல் நடப்பவை பற்றிய சரியான முடிவுகளுக்கு உதவலாம் அல்லவா?
    • 30 வருசத்துக்கு பிறகு போன உங்களுக்கே உந்த சிந்தனை வருது எண்டால்.... அங்கையிருக்கிற சிங்களவர் எப்பிடியெல்லாம் யோசிப்பாங்கள்?
    • மக்களின் வாக்குக்களை பெற்றுக்கொள்ளவதற்காக இரண்டு பிரதான கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றன. வடக்குக்கு வருகின்ற மகிந்த ராஜபக்சவும் சஜித்தும் வேறு தெற்குக்கு செல்கின்ற மகிந்தராஜபக்ச சஜித்தும் வேறு, அவ்வாறே கிழக்கிற்கு செல்கின்ற மகிந்தவும் சஜித்தும் வேறு இவர்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றை பேசிவருகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று 12-11-2019 கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள், பறங்கியர் என அனைவரும் சமத்துவமாக வாழக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.  ஆனால் நாட்டில் உள்ள  இரண்டு பிரதான  கட்சிகளும் அதற்கு மாறாக இனவாதத்தை தொடர்ந்தும் பேசி பேசி இனங்களுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்தி வருகின்றனர். யாழ்ப்பாண விமான நிலையத்தின் பெயர்  பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டமையினை தெற்கில் மிக மோசமான இனவாதத்தோடு பேசி வருகின்ற மகிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண அலுவலகத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழியே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் மத்தியில் உண்மையை பேசி நாட்டை அமைதி பாதைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக இனவாத்தை பேசி அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.. எமது மக்களும் 71 வருடங்களாக தோற்றுப் போன அரசியல் பாதையினை மாறி மாறி தெரிவு செய்து வருகின்றனர். இந்த அரசியல் பாதையில் நாட்டின் சாதாரன குடிமக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அதிகாரங்களுக்கு வருகின்றவர்களின் பிள்ளைகள் குடும்பங்கள், உறவினர்கள் வாழ்க்கை மட்டுமே வளர்ச்சி அடைந்து சென்றிருக்கிறது. இந்த நிலைமையினை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்த அவர் இலங்கையில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த மக்கள் எதிர்வரும் 16 திகதியை பயன்படு்த்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். https://www.virakesari.lk/article/68827