• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • குடியுரிமை திருத்தச் சட்டம்: ‘இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும்’ - மனோ கணேசன் இந்தியாவில் வாழ்கின்ற இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் இலங்கை அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பில் பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே மனோ கணேசன் இதனைக் குறிப்பிட்டார். இந்திய உள்நாட்டு பிரச்சனைக்குள் தலையீடு செய்ய தான் விரும்பவில்லை என கூறிய மனோ கணேசன், இலங்கையிலிருந்து அகதிகளாக சென்ற மக்கள் தொடர்பிலேயே கருத்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வருகைத் தந்துள்ள அகதிகளுக்கு குடியுரிமை திருத்த மசோதாவின் ஊடாக குடியுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, இலங்கை அகதிகள் அந்த மசோதாவில் உள்வாங்கப்படாதது பாரபட்சமான விடயம் என அவர் தெரிவிக்கின்றார். இலங்கை அகதிகளுக்கு மாத்திரம் ஏன் இந்த பாரபட்சம் என பலரும் கேள்வி எழுப்புவதை அவர் நினைவூட்டினார். https://www.bbc.com/tamil/sri-lanka-50791997 இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக சென்றுள்ள இலங்கையர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் அதேவேளை, இலங்கை குடியுரிமையும் வழங்கப்பட வேண்டும் என மனோ கணேசன் கோரிக்கை விடுக்கின்றார். இலங்கை தமிழர்களின் ஜனநாயக போராட்டங்களும், ஆயுதப் போராட்டங்களும் தோல்வி அடைவதற்கு பிரதான காரணம் தமிழ் மக்களின் ஜனத் தொகை குறைவு என அவர் சுட்டிக்காட்டுகின்றார். தமிழர்களின் போராட்டத்தை தாக்குபிடிக்கும் அளவிற்கான ஜனத்தொகை குறைவே, போராட்டங்கள் தோல்வி அடைவதற்கான காரணம் என அவர் கூறுகின்றார். தமிழர்களின் போராட்டங்கள் மற்றும் கனவுகள் எல்லாம் கனவுகளாகவே முடிவடைவதற்கு ஜனத்தொகை பற்றாக்குறையே காரணம் என மனோ கணேசன் குறிப்பிடுகின்றார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும், வாழ்கின்ற தமிழர்கள் மீண்டும் தாய் நாட்டிற்கு வர மாட்டார்கள் என அவர் கூறுகின்றார். இலங்கைக்கு அவர்களை வருமாறு அழைத்தால், தமது உயிருக்கு யார் உத்தரவாதம் அளிப்பது என புலம்பெயர் தமிழர்கள் கேள்வி எழுப்புவதாக கூறுகின்ற அவர், இலங்கையில் தற்போது வாழ்கின்ற தமிழர்கள் யாருடைய உத்தரவாதத்தில் வாழ்கின்றோம் என வினவினால் அதற்கு பதில் இல்லை எனவும் குறிப்பிடுகின்றார். இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதில் எந்தவித பயனும் கிடையாது என மனோ கணேசன் தெரிவிக்கின்றார். எனினும், இந்தியாவில் வாழ்கின்ற இலங்கை தமிழ் அகதிகள் மாத்திரமே இலங்கைக் வருவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார். இந்தியாவில் சுமார் 98000 இலங்கை அகதிகள் உள்ளதாகவும், அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருகைத் தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார். இலங்கையில் தற்போது தமிழர்கள் வாழக்கூடிய சூழ்நிலையை தாம் தமது ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தியதாகவும், எதிர்வரும் காலங்களில் சமாதானம் தொடரும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அவ்வாறு இந்தியாவிலுள்ள தமிழர்கள் தாயகம் திரும்புவதன் ஊடாகவே, தமிழர் ஜனத்தொகை அதிகரிக்கும் எனவும், அதனூடாகவே அரசியல் பலத்தை அதிகரித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவிக்கின்றார். இந்த நிலையில், அரசியல் பலம் அதிகரிக்கும் பட்சத்தில் மாத்திரமே தமிழர்களின் ஜனநாயக இலக்குகளை அடைய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார். இதன்படி, இந்திய மத்திய அரசாங்கம் குடியுரிமை சட்டத்தில் மற்றுமொரு திருத்தத்தை கொண்டு வந்து, இலங்கை அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுக்கின்றார். இலங்கை தமிழர் பிரச்சினை முடிந்து விட்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்து குறித்தும் மனோ கணேசன் பதில் வழங்கினார். அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்தை அவசரப்பட்டு அவதானிக்கக்கூடாது என மனோ கணேசன் குறிப்பிடுகின்றார். இலங்கையில் யுத்தம் கிடையாது, கடத்தல் காணாமல் போதல் கிடையாது, தொல்லை கிடையாது என்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விடயத்தை தெரிவித்திருக்கலாம் என அவர் கூறுகின்றார். இலங்கையில் தமிழர் பிரச்சனை உள்ளதை அடிப்படையாகக் கொண்டே, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். தமிழர்களுக்கு பிரச்சனை உள்ளதாக கூறுகின்ற மனோ கணேசன், நாட்டில் யுத்தம் கிடையாது எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டே அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விடயத்தை கூறியிருக்கலாம் எனவும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.  
    • "கடந்த மாகாணசபையில் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் தலைமைகளின் கைகள் கொடுத்ததன் விளைவு அனைத்து சிற்றூழியர் பதவிகளிலும் முஸ்லிம்கள் இருக்கின்றனர்."  "அம்பாறையில் இருக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தில் அணிதிரள வேண்டும் அப்போது இரண்டு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முடியும்."  இவை பற்றி கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மக்களுக்கு அறியத்தராலம் !
    • "எப்படியிருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்."  30-1 ... 34-1 .... 40-1 ......   10000000000 - 1
    • ஓம் இதை எல்லாம் வெளிநாடுகளில் வற்புறுத்தி செய்வது கொஞ்சம் குறைவு. இந்த மாதிரியான முறைகளை விரும்புவர்கள் பரஸ்பரம் துணைகளை இனம்காண தனிப்பட்டு டேட்டிங் சைட்கள் கூட உண்டு. கணவன் கூட மனைவியை பாலியல் வல்லுறவு செய்யலாம், அதுவும் ரேப்தான் என்பதையே நம்மில் அநேகர் ஏற்பதில்லை. அதெப்படி கணவன் மனைவியை ரேப் பண்ண முடியும் என்று கேட்பார்கள் (தாலி கட்டினவுடன் பெண்ணின் உடல் ஆணின் சொத்து என்னும் மனநிலை). உடலுறவு என்பதே பிள்ளை பெறுவதற்கான முன்நடவடிக்கை, லைட்டை நூத்துப்போட்டு செய்யும் விசயம் என்பதாக சிந்திப்பவர்களும், பாலுறவு என்பது ஆண்கள் மட்டுமே தமக்குள் கதைத்து பேசும் விடயமாகவும் இருக்கும் நம் சமூகத்தில், இப்படியான போக்கு உடைய ஒருவருக்கு, ஒத்த போக்குள்ள ஒரு துணையை தேட வாய்ப்பே இல்லை. கலியாணம் முடிச்ச ஆள் நேரெதிர் போக்கில் இருந்தால் - நான் செய்வேன் நீ ஓம்படத்தான் வேண்டும் என்ற ரீதியில் அணுகி, துணையின் வாழ்கையை ரணமாக்கி விடுவார்கள்.
    • தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், இந்தியாவை சந்தேகக் கண்கொண்டுப் பார்க்கக்கூடாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், காலத்தாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றின் விழுதுகள் என்கிற நிகழ்ச்சிக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “அரசியல் தீர்வுகளுக்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து, அரசியல் தீர்வு சம்பந்தமான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. வாய்ப்புகளைப் பார்த்து நாம் ஒருபோதும்  அரசியல் தீர்வைத் தேடிப்போவதில்லை.தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அதனைப் பெறுவதற்கு நாம் தொடர்ந்து முயற்சிப்போம். அதனை எவராலும் தடுக்க முடியாது. சிங்கள மக்கள், தமிழ் மக்களின் தீர்வுக்கு எதிரானவர்கள் இல்லை. சிங்கள மக்களின் விரும்பமின்றி தமிழ் மக்களின் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட வேண்டும். சிங்கள மக்களைப்போல தமிழ் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் இருக்கின்றன. அந்த உரிமைகளை வழங்கினால் தான், நாடு பொருளாதார ரீதியாக முன்னேற முடியும். அரசியல் அதிகாரப் பகிர்வினூடாகவே உலகில் உள்ள அனைத்து மக்களும், சமமாகவும், சமாதானமாகவும் வழ்கிறார்கள். இது இலங்கைக்கு புதிமையான விடயமல்ல. சிங்கள மக்களுக்குப் பெரும்பான்மைத் தலைவர்கள் உண்மையைக் கூற வேண்டியக் காலம் விரைவில் வரும். இந்த அரசாங்கத்தை பகைக்க நாம் விரும்பவில்லை. அரசியல் தீர்வைக் காண்பதற்காக, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நாம் எப்போதும் உதவத் தயாராகவே இருக்கிறோம். தமிழ் மக்களின் பிரச்சினைகள் காலத்தாமதமின்றி தீர்க்கப்பட வேண்டும். இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பல தடவைகள் அவருடன் கலந்துரையாடி உள்ளோம். இந்தியாவுக்கு சென்று நாம் பிரதமருடன் கலந்துரையாட உள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடுவோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற சில தினங்களுக்குள்ளாகவே இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாக வாழ வேண்டுமெனவும், அதற்கான அரசியல் அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதியிடம் கூறியிருந்தார். தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக் கூடாது. தமிழர்களின் பிரச்சினைகள் 70 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்குக்கு அப்பால் சில மாவட்டங்களிலும் போட்டியிடும். மலையக மக்களின் பிரதிநிதிகளுடன் நாம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால் எங்களது ஒத்துழைப்பு காரணமாக அவர்கள் பலவீனமாகக் கூடாது. இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தந்தை செல்வா உருவாக்குவதற்கு மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதே காரணம். மலையகத்துக்கு வடக்குக்குமான தொடர்பு ஆழமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எந்தவிமானப் பிளவுகளும் இல்லை. ஐ.தே.க அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள், ஒற்றுமையின்மை, ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை அறிவிப்பதற்கு எடுத்துக்கொண்டத் காலத்தாமதமே, ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவின் தோல்விக்கு காரணம். புதிய அரசியலமைப்பு கொண்டவருவதில் ஏற்பட்டத் தோல்விக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவுகளே காரணம்.” எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இநதயவ-சநதகக-கண-கணடப-பரககககடத/150-242447