Sign in to follow this  
நவீனன்

யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி

Recommended Posts

வெற்றியைத் தட்டிச் சென்ற சுவி அண்ணைக்கு வாழ்த்துக்கள்.
கந்தப்பு அண்ணை தனது திறமையை மீண்டுமொரு தடவை நிரூபித்துள்ளார்
ஈழப்பிரியனுக்கும் வாழ்த்துக்கள்.
நவீனனுக்கு நன்றிகள்
சளைக்காமல் உடனுக்குடன்  புள்ளிகளை வழங்கி போட்டியை விறுவிறுப்பாக்கியிருந்தார்
 

இந்த முறை கிருபனுக்கு  விசேடமான பாராட்டுக்கள்.
அடுத்த முறை சேர்ந்து கலகலப்பாக்கலாம்  கிருபன்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கொரோனா வைரஸ் எதிரொலி: எதிர்காலத்தில் பயணம் என்பது எப்படி இருக்கும்?   ஷாம்சுதீன் கடந்த 40 வருடங்களாக சுற்றுலா வழிகாட்டியாக உள்ளார். மறைந்த பிரிட்டன் இளவரசி டயானா உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை இவர் சுற்றிக் காண்பித்துள்ளார். மக்கள் கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெளிவாகக் கூறிவிட்ட நிலையில், சுற்றுலாத் துறையே முற்றிலும் மாற்றம் காணலாம் என ஷாம்சுதின் நம்புகிறார். பொது முடக்கம் நீக்கப்பட்டாலும் வரும் காலங்களில் சுற்றுலாத்துறை முன்பு இருந்தது போல இருக்காது என அவர் கூறுகிறார். மக்கள் சுற்றுலா சென்றாலும் குழுவாகச் செல்லாமல் தனித்தனியாகவே செல்வார்கள் என்கிறார் அவர். ‘’எதிர்காலத்தில் தாஜ்மகால் முன்பு மாஸ்க் அணிந்தபடி மக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்’’ என்கிறார் ஷாம்சுதீன். உலகம் முழுக்க உள்ள சுற்றுலா தலங்களில் இந்த விதி அமலில் இருக்கும். சமூக இடைவெளி கட்டாயமாக்கப்படும் இதனால் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வருவார்கள். விமான பயணம் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA), விமான போக்குவரத்தை மீண்டும் துவங்குவதற்கான வழிகாட்டுதல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச விமானங்களில் பயணிக்கும் விமானிகளுக்கு உட்சபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார் விமான போக்குவரத்து நிபுணர் அஷ்வினி பட்னிஸ். வெளிநாட்டு விமான நிலையங்களில் பயணிகளை சோதிக்கக் கணினிகள் பயன்படுத்துவதைப் போல, இந்தியாவிலும் பயணிகளுக்கும் விமான நிலைய ஊழியர்களுக்கும் இடையிலான தொடர்பைக் குறைப்பதற்கான செயல்முறைகளை அமல்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் ’வெப்-செக்கிங்’ செய்திருக்க வேண்டும். மேலும் பிரிண்ட் செய்யப்பட்ட போர்டிங் பாஸை கையில் வைத்திருக்க வேண்டும் போன்ற விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ’’விமானங்களில் சிரித்த படி பயணிகளை வரவேற்கும் விமானப்பணிப் பெண்களைப் பார்க்க முடியாது. அவர்கள் கட்டாயம் பாதுகாப்பு உடைகளை அணிந்திருக்க வேண்டும் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன’’ என்கிறார் அஷ்வினி தற்போது இயங்கும் விமானங்களில் நடுப்பகுதி இருக்கையிலும் பயணிகள் பயணிப்பதைக் காண முடிகிறது. நடுப்பகுதியில் உள்ள இருக்கைகளை காலியாக விடுவது என முன்பு முடிவு செய்யப்பட்டது. சர்வதேச விமான நிறுவனங்களான எமிரேட்ஸ், ஏர் கத்தார் போன்ற நிறுவனங்கள் இந்த வழிமுறையை இன்னும் பின்பற்றி வருகின்றன. ’’விமானப் போக்குவரத்து வழிமுறைகள் மாறிக்கொண்டே இருக்கும். இன்னும் சில வாரம் அல்லது மாதங்களில் புதிய வழிமுறைகளை நாம் காணப்போகிறோம்’’ என்கிறார் அவர். உள்நாட்டு விமானப் பயணத்தை பொருத்தவரை ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென தனித்தனி வழிமுறைகளை வைத்துள்ளன. எடுத்துக்காட்டாக பொது முடக்கம் நீக்கப்பட்டுப் பல மாதங்களுக்குப் பின்னர் டெல்லியிலிருந்து கொரோனா குறைவாக உள்ள ஒரு நகரத்திற்குப் பயணிக்கும் ஒருவர் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படலாம். வருங்காலத்தில் சர்வதேச விமானத்தில் பயணிக்கும் பயணிகள், மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும். பயணிகளுக்கும், விமான ஊழியர்களுக்கும் இடையிலான தொடர்பைக் குறைக்க முன்பே தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்படும். விமானம் கிளம்புவதற்கு முன்பு புற ஊதா தொழில்நுட்பம் மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என இந்திய விமான போக்குவரத்துத்துறை கூறியுள்ளது என்கிறார் அஷ்வினி. மேலும் பயணிகளும், விமான ஊழியர்களும் முகக் கவசம் அணிவதைக் கட்டாமாக்க அரசு திட்டமிட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. ரயில் பயணம் இந்தியாவில் ரயில் பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். சமூக இடைவெளியை உறுதிப்படுத்த ஒவ்வொரு ரயில் பெட்டிகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே அனுமதிக்கப்படுவார்கள் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கழிவறை பகுதிகளில் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, கழிவறையின் உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா அல்லது இல்லையா என தெரியப்படுத்த சில மாற்றங்களை அதிகாரிகள் செய்ய உள்ளனர். ரயிலில் வழக்கம் போல உணவு வழங்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அப்படி வழங்கப்பட்டாலும் முன்பே பேக் செய்யப்பட்ட உணவு மட்டுமே வழங்கப்படலாம். அந்த காலத்திலிருந்தது போல, பயணிகள் தங்களுக்கான போர்வை, தலையணைகளை இனி கொண்டு வர வேண்டியிருக்கும். ‘’விமான நிலையத்தில் இருப்பது போன்ற வழிமுறைகள் இனி ரயில் நிலையங்களிலும் இருக்கும். ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் வர வேண்டும். விமான நிலையத்தில் இருப்பது போல, பயணிகள் சோதிக்கப்படுவார்கள்’’ என்கிறார் அஷ்வினி. ரயில் பெட்டிகளில் உள்ள கழிவறைக்கு வெளியே சானிடைசர் வைக்கப்படும். பயணிகளும் சானிடைசர் கொண்டுவருவது கட்டாயமாக்கப்படும். நெடுஞ்சாலை பயணம் இந்தியாவில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குச் செல்ல நெடுஞ்சாலைகள் மிக முக்கியமானவை. நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் உணவகங்களும், தாபாக்களும் இனி வித்தியாசமானதாக இருக்கும். ’’வருங்காலத்தில் நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் உணவகங்களில் நின்று உணவுகளை வாங்கிச்செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும்’’ என்கிறார் சாலை போக்குவரத்து சங்கத்தின் உறுப்பினர் ராஜிவ் அரோரா. ’நெடுஞ்சாலை உணவகங்களில் சமூக இடைவெளியை விட்டு உணவுகளை வாங்கிச்செல்ல வேண்டும். லாரி ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்றவாறு தனித்தனி ஏற்பாடுகளை உணவகங்கள் செய்யலாம்’’ என்கிறார் அவர். நெடுஞ்சாலைகள் பல மாநிலங்களைக் கடந்து செல்வதால், உணவகங்கள் எப்படி இயங்க வேண்டும் என்பது குறித்து ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி வழிமுறைகளை வெளியிடும். மெட்ரோ பயணம் டெல்லி மெட்ரோ சேவை தொடங்கப்பட்டால் எதிரெதிர் இருக்கையில் அமரும்படி பயணிகள் அறிவுறுத்தப்படுவார்கள். வெகு சிலர் மட்டுமே நின்று பயணிக்க அனுமதிக்கப்படுவர் என டெல்லி மெட்ரோ செய்தி தொடர்பாளர் அனுஜ் தயால் கூறியுள்ளார். அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்லும் காலை நேரத்தில் இது மிகப்பெரிய சிக்கலாக அமையும். விமான நிலையத்தில் கடைப்பிடிக்கப்படும் அதே விதிமுறைகளே மெட்ரோ நிலையத்தின் வாயிலிலும் கடைப்பிடிக்கப்படும். வரிசையில் நிற்கும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாக தரையில் வட்டம் வரையப்பட்டு இருக்கும். தெர்மல் ஸ்கிரீனிங் மற்றும் பைகளை சோதனையிடும் எக்ஸ்ரே பேக்கேஜ் ஸ்கிரீனிங் ஆகியவை தொடரும். ஆனால் இவ்வாறு செய்ய வேண்டுமானால் அதிக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட வேண்டும். ரயில் பெட்டிகளில் அதிகம் பேர் ஏறாமல் பார்த்துக்கொள்ள பிளாட்ஃபாரத்தில் ஒவ்வொரு பெட்டிக்கும் ஒன்று அல்லது இரண்டு பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர். ராஜீவ் சௌக் போன்ற பெரிய மெட்ரோ நிலையங்களில் மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த ஏற்கனவே இது போன்ற பாதுகாவலர்கள் இருப்பார்கள். ஆனால் இது போன்ற ஒரு நிலையில் மக்களைக் கட்டுப்படுத்துவது என்பது மிகப் பெரிய வேலை என்கிறார் மெட்ரோ கார்பரேஷன் அதிகாரி. இது குறித்து தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. காப்பீடு அனைத்து பயணத்திற்காகவும் காப்பீடு எடுக்கும் நிலை எதிர்காலத்தில் வரும் என்கிறார் துபாயைச் சேர்ந்த இன்சூரன்ஸ் வணிக குழுவின் தலைமைச் செயலாளரான அஃப்தாப் ஹாசன். கோவிட்-19க்கு பிறகு உலகம் வேறு மாதிரி இருக்கும். பொதுவாக இளைஞர்கள் விமான பயணச்சீட்டு புக் செய்யும்போது அல்லது சுற்றுலாவுக்கு செல்லும்போதும் பணத்தை சேமிப்பதற்காக இன்சூரன்ஸ் திட்டத்தை எடுக்க மாட்டார்கள். ஆனால் உலகம் தற்போது மாறிவிட்டது. ஒருவர் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றாலும் சரி இல்லை சுற்றுலாவுக்குச் சென்றாலும் சரி இன்சுரன்ஸ் எடுப்பது மிக அவசியமானதாகப் போகிறது. பெருந்தொற்று என்பது பொதுவாகப் பயண இன்சூரன்ஸின் கீழ் வராது. அதற்கு தனியாக கூடுதல் பிரீமியம் செலுத்த வேண்டும். ஆனால் எதிர்கால பயண இன்சூரன்ஸில் இந்த பெருந்தொற்று முக்கிய ஒன்றாக மாறும் என்கிறார் ஹாசன். எதிர்காலத்தில் நாம் பார்க்கப்போவது யாரும் எதிர்பார்க்காத ஒன்று என்கிறார் சுற்றுலா வழிகாட்டியான ஷாம்சுதீன் ’’சரியான நேரத்தில் தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லையென்றால் பயணிகள் பயணிக்கும் விதம் அனைத்தும் மாறிவிடும் என கூறும் அவர், தடுப்பு மருந்துகள் விரைவில் வந்துவிட்டால் பழைய நிலைக்குத் திரும்பி விடலாம் என்கிறார்.     https://www.bbc.com/tamil/india-52939864  
  • அறளை பெயர்தல் என தமிழில் அறியப்படுவதே ஆங்கிலத்தில் Alzheimer's Disease எனப்படுகிறது. முன்தோன்றி மூத்தமொழி தமிழ் என்கிறார்கள். ஆனால் தமிழனாலேயே அதனை ஏற்கமுடியாதிருப்பது கவலை தருகிறது.😩 
  • கீழடி அகழாய்வு: கொந்தகையில் கிடைத்த மண்டை ஓடு, எலும்புகள், நத்தை ஓடுகள், முதுமக்கள் தாழிகள்   சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் மண்டை ஒடுடன் எலும்புகள், நத்தை ஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தொடங்கியது. ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மே 20ல் அகரம், கீழடியில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. மணலூரில் மே 22ம் தேதி, கொந்தகையில் 27ம் தேதி முதல் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறுது. கொந்தகையில் நடந்த அகழாய்வில் நான்கு முதுமக்கள் தாழிகளும், ஆறு சிறிய மண்பானைகளும் கண்டறியப்பட்டதால், கொந்தகை பண்டைய காலத்தில் இடுகாடாக இருந்திருக்க கூடும், என மதுரை காமராசர் பல்கலை கழகம் மற்றும் உயிரியல் துறை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. கொந்தகையில் குறைந்த பட்சம் 15 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் அலுவலர்கள் முடிவு செய்து அந்த பகுதியில் அகழாய்வு நடத்தி வரும் நிலையில் நேற்று (05.06.2020) அந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள கதிரேசன் என்பவரின் தோட்டத்தில் தென்னை கன்றுகள் நடுவதற்காக இயந்திரம் மூலம் குழிகள் தோண்டும் போது முதுமக்கள் தாழி முழு அளவில் கண்டறியப்பட்டது. இதுகுறித்து நில உரிமையாளர் தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் மற்றும் தொல்லியல் குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று முதுமக்கள் தாழியை ஆய்வு செய்து தாழியினுள் இருந்த மண்டை ஓடு, எலும்புகள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக வெளியில் எடுத்தனர். பின்னர் அவை தொல்லியல் ஆய்வாளர்கள், மரபணு ஆய்வாளர்கள் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது Image captionகோப்புபடம் பண்டைய காலத்தில் முதியோர்களை பராமரிக்க முடியாவிட்டால் பெரிய அளவிலான பானையினுள் அவர்களை வைத்து உணவு, தண்ணீருடன் மண்ணிற்குள் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. தற்து உணவு குவளை, தண்ணீர் பாத்திரம் உள்ளிட்டவற்றுடன் மண்டை ஓடு, எலும்புகள் கண்டறியப்பட்டது இதற்கு ஆதாரமாக கருதப்படுகிறது. முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகள், மண்டை ஓடுகளை ஆய்வு செய்த பின்தான் இவற்றின் காலம் பற்றி அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வில் அதிகமாக நத்தை கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "நத்தைகளில் இருவகை உண்டு, நன்னீரில் வளரும் நத்தைகளை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துவார்கள். கடல் நீர் நத்தைகளை அழகு பொருளாக மட்டுமே பயன்படுத்துவார்கள். அகரத்தில் கிடைத்த நத்தை கூடுகள் அனைத்துமே நன்னீர் நத்தை கூடுகள். பண்டைய தமிழர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி உடல் உபாதைகளுக்கு தீர்வு கண்டறிந்த நிலையில், நத்தைகளை மருத்துவ ரீதியாக பயன்படுத்தினார்களா அல்லது உணவு பொருளாக பயன்படுத்தினார்களா என்பது ஆய்வின் முடிவில்தான் தெரிய வரும்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போது கிடைத்து வரும் நத்தைகளை அதன் அளவுக்கு ஏற்ப தரம் பிரித்து ஆவணப்படுத்தி வருகிறோம். முழுமையான அளவில் கிடைத்த நத்தைகளை ஆய்விற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நத்தைகளை சமைத்து சாப்பிட்டால் சளி, இருமல் சிறு குழந்தைகளுக்கு உமிழ் நீர் வடிதல் உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும், ரத்தகட்டுக்கு நத்தையை அரைத்து ரத்தக்கட்டு உள்ள இடத்தில் வைத்து கட்டுப்போட்டால் விரைவில் குணமடையும். நத்தை ஓடுகள், மூலம் நோய்க்கு சிறந்த மருந்து. நத்தையின் சதை, விந்து எண்ணிக்கையை உயர்வடைய செய்யும் என்பதால், அகரத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் தொடர்ச்சியாக நத்தை கூடுகள் கிடைத்திருப்பதால் அங்கு சமையல் கூடமாக இருக்க வாய்ப்புண்டு. தொடர்ச்சியான அகழாய்வு மூலம் இதன் பயன்பாடு தெரிய வரும்" என சித்த மருத்துவர் வெங்கட்ராமன் தெரிவிக்கிறார்.   https://www.bbc.com/tamil/arts-and-culture-52947537
  • நிறவெறிக்கு எதிராக இனம் கடந்த போராட்டம்: அமெரிக்காவில் குடும்பம் குடும்பமாக குவிந்த மக்கள்   ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் அமெரிக்காவில் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதற்கு எதிராக தொடங்கிய போராட்டம் 12வது நாளாகத் தொடர்கிறது. இந்நிலையில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் பத்தாயிரக்கணக்கான மக்கள் இனம், நிறம் கடந்து ஒன்றுகூடி இனவெறிக்கு எதிராகவும், போலீஸ் வன்முறைக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேப்பிடோல், லிங்கன் நினைவகம், லஃபாயெட்டி பூங்கா ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். இந்த இடங்களில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகைக்கு செல்லும் பாதைகளை போலீசார் மறித்துவைத்தனர். பல்வேறு இனங்கள், நிறங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர். பலர் குடும்பம் குடும்பமாக, குழந்தைகளோடு வந்திருந்தனர். இந்தப் போராட்டத்தில் உறுதியான மன எழுச்சி நிலவியதாகவும், இசைக்கருவிகள் இசைக்கப்பட்டதாகவும் 'நீதி இல்லையேல் அமைதி இல்லை' என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப் பட்டதாகவும் தெரிவிக்கிறார் பிபிசி செய்தியாளர் ஹீலியர் சியூங் உணவு, தண்ணீர், கிருமி நாசினி ஆகியவை விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். இதனிடையே, ஜார்ஜ் ஃப்ளாய்ட் பிறந்த வட கரோலினாவில் அவருக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு எதிராகவும், அதற்குக் காரணமாக இருந்தது எனக் கருதப்படும் இனவெறிக்கு எதிராகவும் நடக்கும் போராட்டம் அமெரிக்க எல்லையைக் கடந்து பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. பிரிட்டனில்.... 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' (கருப்பின உயிர்களுக்கும் மதிப்புண்டு) என்ற பெயரில் நடக்கும் கருப்பின உரிமை இயக்கத்துக்கு ஆதரவாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற சதுக்கத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கொரோனா வைரஸ் தொற்றை தீவிரமாக்கும் என்ற அச்சத்தில் மக்கள் ஒன்றுகூடவேண்டாம் என்று அரசாங்கம் விடுத்த வேண்டுகோளையும் மீறி இந்தப் போராட்டம் நடந்தது. ஆஸ்திரேலியாவில்... படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் ஆகிய பெருநகரங்களில் நடந்த போராட்டங்களில் ஆஸ்திரேலியாவின் தொல்குடிகள் நடத்தப்படும் விதம் குறித்த விமர்சனங்கள் எதிரொலித்தன. யார் இந்த ஃப்ளாய்ட்? அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் கடந்த மே மாதம் 25-ம் தேதி ஆயுதம் ஏதும் வைத்திராத கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆண் போலீஸ் காவலில் இறந்தார். ஃப்ளாய்ட் இறந்த பிறகு, வெள்ளையினத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி டெரக் சாவின் என்பவர் கீழே தள்ளப்பட்ட ஃப்ளாயிட் கழுத்தில் முட்டிபோட்டு கிட்டத்தட்ட 9 நிமிடங்கள் அழுத்துவதைக் காட்டும் வீடியோ வெளியானது. சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், அவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் அங்கிருந்த வேறு மூன்று போலீஸ் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலைக்கு உதவியதாகவும், தூண்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.   https://www.bbc.com/tamil/global-52952718    
  • வெறிச்சோடி காட்சியளிக்கும் கந்தே விஹாரை     துசித குமார பொசோன்  பௌர்ணமி தினமான இன்று (05), நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்;  வரலாற்று சிறப்புமிக்க அளுத்கமை  கந்தே விஹாரை இன்று வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்த விஹாரைக்கு வழமையாக அதிகளவான பக்தர்கள்  வருகைதருகின்றபோதிலும் இம்முறை வெசாக் பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.    பொசோன் பௌர்ணமி தின வழிபாடுகளை வீட்டில் இருந்தவாறு மேற்கொள்ளுமாறு, பௌத்த மக்களுக்கு மகா சங்கரத்ன தேரரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.       http://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/வறசசட-கடசயளககம-கநத-வஹர/95-251440