Jump to content

செத்துப்போன கருவாடு


Recommended Posts

10 hours ago, Kavi arunasalam said:

Suvy, கவலை எதற்கு? அடுத்த தலைமுறை தமிழ்க் கடைப்பக்கம் போகாது.

அடுத்த தலைமுறை தமிழ் கடைக்கும் போகும் என்றுதான் நம்புறன். எப்படித்தான் எங்கள் பிள்ளைகள்  பீசா பேர்கர் என்று சாப்பிட விரும்பினாலும் ஐஞ்சு நாளுக்கு தமிழ் சாப்பாடு சமைக்காவிட்டால் அவர்களாகவே எப்ப சோறு கறி சமைக்க போகின்றீர்கள் என்று தான் கேட்கினம். வளர வளர அவர்களின் ஜீனில் கலந்து இருக்கும் அடிப்படை சுவை உணர்வுகள் மேலே கிளம்பி வருகின்றதை அவதானித்துக் கொண்டு இருக்கின்றன்.

இங்கு வளரும் பிள்ளைகள் பாடசாலை ஆரம்ப காலங்களில் வெள்ளை பிள்ளைகளுடன் சேர்வினம், பிறகு இடையில் கருப்பு இன பிள்ளைகளுடன் சேர்வினம்..கடைசியில் 10 ஆம் வகுப்புக்கு பிறகு இலங்கை இந்திய பிள்ளைகளுடன் மட்டும் தான் சேர்ந்து சுத்துவினம். அதை மாதிரித்தான் உணவும் சுவையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavi arunasalam said:

... அடுத்த தலைமுறை தமிழ்க் கடைப்பக்கம் போகாது.

அப்பா அம்மா என்றாவது கூப்பிடுவார்களா.. இல்லை, மம்மி, டாடி தானா..?

தாத்தா பாட்டிகள்  கிரான்மா, கிரான்பா தானா..?

Link to comment
Share on other sites

11 hours ago, Kavi arunasalam said:

கந்தப்பு, நானும் உங்களைப் போல்தான் பண்டிதன் இல்லை.

ஆனாலும்அன்னைஎன்ற சொல் இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டுக்கு கொடுத்த சொல் என்பது மட்டும் தெரிகிறது.

காசி ஆனந்தன் பெரிய கவிஞர். அடியேன் சிறியேன் யாருடனும் மோத நான் விரும்பவில்லை.

 

1968இல் டீச்சம்மா என்றொரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் கண்ணதாசன் பாடலை எழுத ரி.ஆர்.பாப்பா இசை அமைக்க பி.சுசீலா பாடியிருப்பார். நல்லதொரு பாடல். மனது சிரமப்படும் நேரமெல்லாம் இந்தப்பாடலைக் கேட்டு நான் கவலைகளை மறந்திருக்கிறேன்.

அம்மா என்பது தமிழ் வார்த்தை 

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை 

அம்மா இல்லாத குழந்தைகட்கும் 

ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை 

 

கவலையில் வருவதும் அம்மா அம்மா 

கருணையில் வருவதும் அம்மா அம்மா 

தவறு செய்தாலும் மன்னிப்புக்காக 

தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா 

 

பூமியின் பெயரும் அம்மா அம்மா 

புண்ணிய நதியும் அம்மா அம்மா 

தாய் மொழி என்றும் தாயகம் என்றும் 

தாரணி அழைப்பதும் அம்மா அம்மா 

 

அம்மா இருந்தால் பால் தருவாள் 

அவளது அன்பை யார் தருவார் 

அனாதை என்னும் கொடுமையை தீர்க்க 

ஆண்டவன் வடிவில் அவள் வருவாள் 

 

 

 

 

Suvy, கவலை எதற்கு? அடுத்த தலைமுறை தமிழ்க் கடைப்பக்கம் போகாது.

 

 

 

சு.ப. வீரபான்டியன், அம்மா அப்பா தமிழ் வார்த்தைகள் இல்லையென்று சொன்ன ஞாபகம், அந்த Video வை தேடினேன் கிடைக்கவில்லை.

Emoticon-GQ-hp-18Jun14_istock_b.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

என் மனதை.....எப்போதும் கொதி நிலைக்குக் கொண்டு சென்று விடுவதில்....இந்தத் தமிழ்க் கடைகளின் பங்கு அளப்பரியது!

விடலைப்பருவத்தில் ஒரு உறவினரின் கடையில் நின்றபோது...ஒரு நள்ளிரவு நேரத்தில்...ஒரு சிங்கள் நோனா.,..தனது அழுகின்ற குழந்தையைத் தோளில் சுமந்த படி...கடைக்கு வந்தார்! அவரைப் பார்த்ததுமே..மிகவும் வறுமையான நிலையில் வாழ்பவர் போலத் தெரிந்தது! அவர் முலைகளில் பாலே இல்லைப்போல தோன்றியது! குழந்தையைச் சமாதானப் படுத்துவதற்காக ஒரு றப்பர் சூப்பி ஒன்றை வாங்கத் தான் வந்திருந்தார்! அவரிடம்...ஐம்பது சதம் மட்டும் தான் இருந்தது! சூப்பியின் வழமையான விலையும் அப்போது அது தான்! குழந்தை அழுவதைக் கண்ட கடைச் சிப்பந்தி...சூப்பியின் விலை...இரண்டு ரூபாய் என்று சொல்ல...நோனாவிடம் காசில்லை! ஆனால் அந்த நேரம் வேறு கடைகளும் திறந்திருக்கவில்லை!அதைப் பார்த்துக் கொண்டிருந்த...அந்தோனியார் கோவிலுக்கு முன்னால்...பூ வித்துக் கொண்டிருந்த ஒரு முதியவர்...இரண்டு ரூபாய்களைக் கொடுத்து...அந்த சூப்பிய வாங்கிக் குழந்தையிடம் கொடுக்க....அந்தக் குழந்தையின் முகத்தில் தோன்றிய சிரிப்பையும்....அந்த நோனாவின் முகத்தில் தோன்றிய நன்றியுணர்வையும் எழுத்தில் வடிக்க இயலாது!

அப்போது நான் கடைக்காரரிடம் கேட்டேன்! ஏன்...நீங்கள் ஐம்பது சதத்துக்கே கொடுத்திருக்கலாமே என்று..!

அதற்கு அவர் சொன்ன பதில்   என்னால் இன்று வரை மறக்க முடியாதது! 

தம்பி...நீங்கள் நிண்ட படியால தான்...இரண்டு ரூபாய் சொன்னனான்! இல்லாவிட்டால் எப்படியும் ஒரு அஞ்சு ரூபா கறந்திருப்பன்!

அடுத்த நாள்....பொன்னம்பலவாணேசர் கோவிலில்....திருநீறும்...சந்தனமும்...போட்ட படி....பக்தியில் உருகிய நிலையில் அவரைக் கண்ட போது....தலையாட்டக் கூட எனக்கு மனம் வரவில்லை@

விள மீனை...ஐந்து டொலருக்கு விற்கும் அவருக்கு...நிச்சயம் இருபத்தைந்து வீதமாவது லாபம் இருக்கும் என்று வைத்துக் கொண்டாலும்...மீனின் விலை

நாலு டொலர் தான் வரும்! அதையே ஏழு டொலருக்கு...விற்றால்..மூன்று டொலர் லாபம் வரும்! அதாவது..எழுபத்தைந்து வீத லாபத்தில் விற்கிறார்கள்!இவர்களில் பலர் காசு மட்டும் தான் வாங்குவார்கள்! அதாவது விற்பனை வரியோ...வருமான வரியோ இவர்கள் கட்டுவது கிடையாது! அநேகமாக அகதி நிலையில் உள்ள..வாய் திறக்கவியலாதவர்களைத் தான் வேலைக்கும் வைத்திருப்பார்கள்! ஏறத்தாள லண்டனில்..பட்டேல்களின் வியாபார முறை தான் இவர்களதும்! இவர்களது வர்த்தக நிலையங்களின் இலாப நட்டக் கணக்குகள் செய்வதில்...கொஞ்சக் காலம் ஈடு பட்ட படியால்....இந்தப் பெரிய மனிதர்களின் கணக்குகள்..அத்து படி!
இதை விடவும் அநியாயம் என்னவென்றால்...இவர்கள் தான் எமது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் முக்கியத்தர்களும் ஆவர்!  பனியிலும்...பாலை வனங்களிலும், நல்ளிரவுகளிலும் வேலை செய்து...வேலைக்கேற்ற கூலி கிடைக்காத தமிழர்கள் நாம்! இப்படி உழைக்கும் பணம்...இப்படியானவர்களிடம் தான்...இறுதியில் சங்கமிக்கிறது! எனது மகளுக்கு..இளமையில் பரத நாட்டியம் படிப்பித்த படியால்...அண்மையில் ஒரு அரங்கேற்றத்துக்குப் போக ஆசைப்பட்டாள்! நானும், மனுசியும் வேறு அலுவல் இருந்த படியால்...அவளே போய் ஒரு 'சல்வார் கமீஸ்' வாங்கி வந்தாள்! அதன் விலை.....இருநூற்று ஐம்பது டொலர்கள்! இந்தியாவில் அதன்   விலை...ஐம்பது டொலர்களுக்குள் தான் இருக்கும் என நினைக்கிறேன்!
எங்கள் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட அவள்....நானும் உங்களைப் போல...முன்னூற்றி ஐம்பது டொலரில்...இருந்து...இருநூற்றி ஐம்பது டொலர் வரை...பார்கயின் பண்ணித் தான் வாங்கினேன் என்றாள்!

கடைக்காரர் நிச்சயம்...கொடுப்புக்குள்...சிரித்திருப்பார்!

புங்கையர்,

ஒரு கடைக்காரர் ஒரு பொருளை மற்றய கடைக்காரர்களிலும் பார்க்க மிக மலிவு விலையில் விற்றால் அந்த பொருளில் நிச்சயம் இலாபம் இருக்க மாட்டாது, இங்கு ஏற்படும் நட்டத்தை மற்றய பொருட்களில் ஈடுகட்டுவார். இது வாடிக்கையாளர்களை உள் இழுக்கும் தந்திரம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

புங்கையர்,

ஒரு கடைக்காரர் ஒரு பொருளை மற்றய கடைக்காரர்களிலும் பார்க்க மிக மலிவு விலையில் விற்றால் அந்த பொருளில் நிச்சயம் இலாபம் இருக்க மாட்டாது, இங்கு ஏற்படும் நட்டத்தை மற்றய பொருட்களில் ஈடுகட்டுவார். இது வாடிக்கையாளர்களை உள் இழுக்கும் தந்திரம்.

 

இருக்கலாம் மீரா!

வாங்கிய விலைக்கு விற்றாலும்....நாற்பது வீதம் லாபம் வருகின்றதே!

பொதுவாகவே இவர்களது இலாப வீதம் அதிகமானது! சீரகம், வெந்தயம், கடுகு, மஞ்சள், மிளகு போன்றவற்றில் இவர்கள் வைக்கும் லாப வீதமானது இருநூறு தொடக்கம் ....இருநூற்றி ஐம்பது வீதம் வரை வரும்!

ஆரம்ப காலத்தில் தமிழர்கள் குறைவாக இருந்த காலத்தில் இந்த விலை வீதங்கள் நிர்ணயிக்கப் பட்டன! பின்னர், சந்தையின் அளவு மிகப் பெரிதான போதும்..இவர்கள் இந்த விலைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை! 

இருந்தாலும் கனடாவில் விளை மீன் விலை மலிவு போலத்தான் உள்ளது! எங்களுக்கு ஊர் விளை மீன் வருவதில்லை! சிங்கள மீன்களான தளப்பத்து போன்றவை தான் வருகின்றன! அவையும் 'அமிலத்தில் கழுவப்பட்டவை' என்று ஒரு எச்சரிக்கையுடன் தான் வருகின்றன! இங்கிலாந்துக்கு வருகின்ற மீன்களிலும் இப்படியான் எச்சரிக்கைகள் ஓட்டப்பட்டுள்ளனவா?

ஆனால் பெண்டல் ஹில் என்னுமிடத்தில்...எமது ஊரவரின் மீன்கடை ஒன்று உள்ளது! அங்கு ஊர் மீன்களான ஒட்டி, ஓரா, கணவாய், முரல், சீலா, திரளி போன்ற மீன்கள் வைத்திருப்பார்கள்! அவுஸில் நிறைய சின்னத் தீவுகள் இருக்கின்றன! அவற்றின் கடல் பரப்புகளும்..ஊரின் கடற்பரப்பு போன்று பவளப் பாறைகள் நிறைத்தவை! அங்கு  பிறந்தவர்களை Islanders  என்று அழைப்பார்கள்! அவர்களும் எங்களைப் போல..ஒட்டி, ஓரா, திருக்கை, முரல் போன்ற மீன்களை விரும்பி வாங்குவார்கள்!

மற்றும் படிக்கு விளை மீன் எல்லாம்....எங்களுக்குப் பகல் கனவுகள் தான்!

Link to comment
Share on other sites

On 3/3/2018 at 4:26 PM, Kavi arunasalam said:

கந்தப்பு, நானும் உங்களைப் போல்தான் பண்டிதன் இல்லை.

ஆனாலும்அன்னைஎன்ற சொல் இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டுக்கு கொடுத்த சொல் என்பது மட்டும் தெரிகிறது.

காசி ஆனந்தன் பெரிய கவிஞர். அடியேன் சிறியேன் யாருடனும் மோத நான் விரும்பவில்லை.

 

1968இல் டீச்சம்மா என்றொரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் கண்ணதாசன் பாடலை எழுத ரி.ஆர்.பாப்பா இசை அமைக்க பி.சுசீலா பாடியிருப்பார். நல்லதொரு பாடல். மனது சிரமப்படும் நேரமெல்லாம் இந்தப்பாடலைக் கேட்டு நான் கவலைகளை மறந்திருக்கிறேன்.

அம்மா என்பது தமிழ் வார்த்தை 

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை 

அம்மா இல்லாத குழந்தைகட்கும் 

ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை 

 

கவலையில் வருவதும் அம்மா அம்மா 

கருணையில் வருவதும் அம்மா அம்மா 

தவறு செய்தாலும் மன்னிப்புக்காக 

தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா 

 

பூமியின் பெயரும் அம்மா அம்மா 

புண்ணிய நதியும் அம்மா அம்மா 

தாய் மொழி என்றும் தாயகம் என்றும் 

தாரணி அழைப்பதும் அம்மா அம்மா 

 

அம்மா இருந்தால் பால் தருவாள் 

அவளது அன்பை யார் தருவார் 

அனாதை என்னும் கொடுமையை தீர்க்க 

ஆண்டவன் வடிவில் அவள் வருவாள் 

 

 

 

 

Suvy, கவலை எதற்கு? அடுத்த தலைமுறை தமிழ்க் கடைப்பக்கம் போகாது.

சோழர் காலத்தில் வாழ்ந்த ஓளவையார் எழுதியவை ஆத்திசூடி, கொன்றைவேந்தன்.  கொன்றைவேந்தனில் வருவது -அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம். சோழர் காலத்தில் இஸ்லாமியர்கள் இருந்தார்களா?  நிச்சயமாக இஸ்லாமியர்களினால் 'அன்னை' தமிழில் கொண்டுவரப்படவில்லை. சோழர் காலத்தில் இருந்தவர்களில் ஒருவர் கம்பர்.

 சங்ககாலத்திலும்( திருவள்ளுவர் காலம்) ஒரு ஒளவையார் இருந்தார்.  அவர் எழுதியது அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ,அகநானூறு    

 

Link to comment
Share on other sites

உலகின் பெரும்பான்மை மொழிகளில் தாயை அழைக்கும் வார்த்தை ம் , மா சம்மந்தப்பட்டே இருக்கும். ஒரு குழந்தை வாய் திறந்து பேச ஆரம்பிக்க முதல் உச்சரிக்கக் கூடிய அதாவது வாய் முடியவாறே நாவின் அசைவின்றி உச்சரிக்கக் கூடிய ஒரே எழுத்து ம் என்ற ஒலி மட்டுமே.ம் என்ற உயிரெழுத்தைத் தவிர வேறு எந்த உயிரெழுத்தையும் வாயை மூடியவாறு உச்சரிக்க முடியாது.. வாயை மூடியவாறு ம் உச்சரித்து வாயைத் திறந்தால் ம்மா என்று ஒரு சொல் உருவாவது இயற்கையின் நியதி. இந்த ஆரம்பத்தில் முன்னும் பின்னும் வேறு எழுத்துக்கள் பின்னர் சேர்ந்துகொள்ளலாம். அனேகமாக அவை மனிதர்கள் வாழும் பிரதேசத்தின் காலநிலைக்கு ஏற்ப அமைந்திருக்கலாம்.  ம் , மா  என்பது இயற்கை. முன்னால் "அ" போட்டு அமமா என்று தமிழ் தனதாக்கிக் கொண்டிருக்கலாம். 

 
Quote

 

Afrikaans Moeder, Ma
Albanian Nënë, Mëmë
Arabic Ahm
Aragones
 
Mai
Asturian Ma
Aymara Taica
Azeri (Latin Script) Ana
Basque Ama
Belarusan Matka
Bergamasco Màder
Bolognese Mèder
Bosnian Majka
Brazilian Portuguese Mãe
Bresciano Madèr
Breton Mamm
Bulgarian Majka
Byelorussian Macii
Calabrese Matre, Mamma
Caló Bata, Dai
Catalan Mare
Cebuano Inahan, Nanay
Chechen Nana
Croatian Mati, Majka
Czech Abatyse
Danish Mor
Dutch Moeder, Moer
Dzoratâi Mére
English Mother, Mama, Mom
Esperanto Patrino, Panjo
Estonian Ema
Faeroese Móðir
Finnish Äiti
Flemish Moeder
French Mère, Maman
Frisian Emo, Emä, Kantaäiti, Äiti
Furlan Mari
Galician Nai
German Mutter
Greek Màna
Griko Salentino, Mána
Hawaiian Makuahine
Hindi – Ma, Maji
Hungarian Anya, Fu
Icelandic Móðir
Ilongo Iloy, Nanay, Nay
Indonesian Induk, Ibu, Biang, Nyokap
Irish Máthair
Italian Madre, Mamma
Japanese Okaasan, Haha
Judeo Spanish Madre
Kannada Amma
Kurdish Kurmanji Daya
Ladino Uma
Latin Mater
Leonese Mai
Ligurian Maire
Limburgian Moder, Mojer, Mam
Lingala Mama
Lithuanian Motina
Lombardo Occidentale Madar
Lunfardo Vieja
Macedonian Majka
Malagasy Reny
Malay Emak
Maltese Omm
Mantuan Madar
Maori Ewe, Haakui
Mapunzugun Ñuke, Ñuque
Marathi Aayi
Mongolian `eh
Mudnés Medra, mama
Neapolitan Mamma
Norwegian Madre
Occitan Maire
Old Greek Mytyr
Parmigiano Mädra
Persian Madr, Maman
Piemontese Mare
Polish Matka, Mama
Portuguese Mãe
Punjabi Mai, Mataji, Pabo
Quechua Mama
Rapanui Matu’a Vahine
Reggiano Mèdra
Romagnolo Mèder
Romanian Mama, Maica
Romansh Mamma
Russian Mat’
Saami Eadni
Samoan Tina
Sardinian (Limba Sarda Unificada) Mama
Sardinian Campidanesu mamai
Sardinian Logudoresu Madre, Mamma
Serbian Majka
Shona Amai
Sicilian Matri
Slovak Mama, Matka
Slovenian Máti
Spanish Madre, Mamá, Mami
Swahili Mama, Mzazi, Mzaa
Swedish Mamma, Mor, Morsa
Swiss German Mueter
Telegu Amma
Triestino Mare
Turkish Anne, Ana, Valide
Turkmen Eje
Ukrainian Mati
Urdu Ammee
Valencian Mare
Venetian Mare
Viestano Mamm’
Vietnamese me
Wallon Mére
Welsh Mam
Yiddish Muter
Zeneize

Moæ

இணையத் தேடலில் கிடைத்தவை.

 

அம்மா என்பது இயற்கை தந்த மொழியின் ஊற்று. அன்னை என்பது அறிவு தந்த மொழியின் விருத்தி. அம்மா யார் என்ற சிந்தனையின் விழைவு அன்னை. அன்னமிட்டவள். உணவளிப்பவள். தாய்ப்பாலாகவோ சோறாகவோ குழந்தைக்கு உணவளிப்பவள். அதனால் தான் தானத்தில் உயர்ந்தது அன்னதானம் என்கின்றோம் ஏனெனில் உணவின்றி மனிதர் உயிர்வாழ முடியாது. 

அன்னை என்பதும் தமிழே அம்மா என்பதும் தமிழே. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கந்தப்பு said:

சோழர் காலத்தில் வாழ்ந்த ஓளவையார் எழுதியவை ஆத்திசூடி, கொன்றைவேந்தன்.  கொன்றைவேந்தனில் வருவது -அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம். சோழர் காலத்தில் இஸ்லாமியர்கள் இருந்தார்களா?  நிச்சயமாக இஸ்லாமியர்களினால் 'அன்னை' தமிழில் கொண்டுவரப்படவில்லை. சோழர் காலத்தில் இருந்தவர்களில் ஒருவர் கம்பர்.

 

கந்தப்பு,

இந்தப்பகுதியில் இது தேவையில்லை. ஆனாலும் நீங்களும் விடுவதாக இல்லை.

கிபி 712இல் முகம்மது பின் காசிமின் வருகையோடு இஸ்லாமியர்களின் காலம் இந்தியாவில் ஆரம்பிக்கிறது. அவ்வையாரின் ஆத்திசூடியின் காலம் 12ம் நூற்றாண்டு.

துருக்கியர்  தாயைஅன்னேஎன்று அழைப்பதாக  சண்டமாருதன் வேறு கோடு போட்டு காண்பித்திருக்கிறார் கவனித்தீர்களா?

கந்தப்பு, மீண்டும் சொல்வேன், ‘அன்னைஎன்ற சொல் தமிழல்ல என்று தெரிகிறது.

Link to comment
Share on other sites

புறநானூறு  கிறிஸ்துவுக்கு முதலாம் நூற்றாண்டுக்கும்  கிறிஸ்துவுக்கு முதல் 5 ம் தூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டிருக்கிறது. 


பாடியவர்: கயமனார்
திணை: பொதுவியல் 
துறை: முதுபாலை 

இளையரும் முதியரும் வேறுபுலம் படர,
எதிர்ப்ப எழாஅய், மார்பமண் புல்ல,
இடைச்சுரத்து இறுத்த, மள்ள ! விளர்த்த
வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்,
இன்னன் ஆயினன், இளையோன் என்று,    5
நின்னுரை செல்லும் ஆயின், மற்று
முனூர்ப் பழுனிய கோளி ஆலத்துப்,
புள்ளார் யாணர்த் தற்றே என் மகன்
வளனும் செம்மலும் எமக்கு என , நாளும்
ஆனாது புகழும் அன்னை 
   10
யாங்குஆ குவள்கொல் ? அளியள் தானே!     


காதலனுடன் காதலி, செல்கிறாள். வழிக்காட்டில் தாக்க வந்த காட்டுவிலங்கைத் தாக்கிக் காதலன் விழுந்துகிடக்கிறான். காதலி கலங்குவதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் இதனைச் சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இளையவர்களும் முதியவர்களும் வேறு வேறு ஊர்களுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர். உன்னை எழுப்பினால் நீ எழவில்லை. உன் மார்பு மண்ணைத் தழுவிக்கொண்டு கிடக்கிறது. இப்படிப் பாதி வழியில் கிடக்கும் மள்ளனே! (உடல்திணவு மிக்கவனே) வளையல் இல்லாமல் விளர்த்துப்போன கையினை உடையவளாக இவள் ஆக, இவன் இன்ன நிலை எய்தினான் என்னும் செய்தி உன் தாய் அறிந்தால் என்ன ஆவாளோ? அந்தோ! இரங்கத் தக்கவள்! உன் ஊருக்கு முன்னர் ஆலமரம். அது கோளி ஆலம். எல்லா உயிரினங்களும் பயன்கொள்ளும் ஆலமரம். பழுத்திருக்கும் ஆலமரம். அதில் பறவைகள் ஒலிப்பது போல எனக்கும் பிறருக்கும் பயன் தரும் பாங்கினை உடைய என் மகன் – என்று நாள்தோறும் புகழ்ந்துகொண்டிருக்கும் அன்னை – என்ன ஆவாளோ? 255 காதலன் பின்னே காதலி செல்கிறாள். காட்டுவழி அது. புலி தாக்க வருகிறது. எதிர்த்துப் போராடினான். புலியால் தாக்கப்பட்டு விழுந்து கிடக்கிறான். இவன் தாக்குதலுக்கு இரையான புலி ஒருபுறம் கிடக்கிறது. காதலி காதலனைக் கட்டி அணைத்து வாரி எடுக்கிறாள். அவன் வலி பொறுக்க முடியாமல் ‘ஐயோ’ என்கிறான். இந்தப் பின்னணியில் அவள் சொல்வதாகப் பாடல் அமைந்துள்ளது. நீ ‘ஐயோ’ எனின் நான் மீண்டும் புலி வருகிறதோ என்று அஞ்சுகிறேன். உன்னை அணைத்து அழைத்துக்கொண்டு செல்லலாம் என்றால் அணைத்த மார்பிலிருந்து என்னை எடுக்க முடியவில்லை. நீ இப்படிச் சாயும்படி எமன் (புலி வடிவில் வந்த எமன்) உன்னைத் தாக்கியிருக்கிறான். உன்னை இப்படித் தாக்கிய கூற்றுவன் என்னைப்போலத் துன்புறட்டும். வளையலணிந்த என் கையைப் பற்றிக்கொண்டு நட. சிறிது நிழலுக்குச் செல்லலா 
 

Link to comment
Share on other sites

4 hours ago, Kavi arunasalam said:

கந்தப்பு,

இந்தப்பகுதியில் இது தேவையில்லை. ஆனாலும் நீங்களும் விடுவதாக இல்லை.

கிபி 712இல் முகம்மது பின் காசிமின் வருகையோடு இஸ்லாமியர்களின் காலம் இந்தியாவில் ஆரம்பிக்கிறது. அவ்வையாரின் ஆத்திசூடியின் காலம் 12ம் நூற்றாண்டு.

துருக்கியர்  தாயைஅன்னேஎன்று அழைப்பதாக  சண்டமாருதன் வேறு கோடு போட்டு காண்பித்திருக்கிறார் கவனித்தீர்களா?

கந்தப்பு, மீண்டும் சொல்வேன், ‘அன்னைஎன்ற சொல் தமிழல்ல என்று தெரிகிறது.

 

anne / anya  இவை தாயைக் குறிக்கும் துருக்கி மற்றும் கங்கேரிய மொழிகள்.  இந்த மொழிகள் மேற்கு சைபீரியா மொழிகளில் தங்கள் வேர்களை கொணடவை என்றே அறிய முடிகின்றது. தமிழ்மொழி இங்கிருந்து இந்த சொற்களை எடுத்தது என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.  இதை  ஆம் இல்லை என்று நிறுவவும் முடியாது. 

அன்னையும் அம்மாவும்  அதேபோல் அப்பாவும் பிதாவும்  என்பன ஒரே அர்த்தத்தை போல் தோற்றம் அளித்தாலும்  அர்தத்தின் கனதி அடர்த்தி என்பன வேறுபடுகின்றது.. அப்பா என்பது நேரடியான உறவுநிலையை குறிப்பது பிதா என்பது அபபா என்ற பாத்திரத்தின் ஆழுமைகள், கடமைகள். படைப்பு மூலம் சார்ந்த உணர்வுகள் என அதிக கனதி கொண்டது. அன்னை என்பதற்கும் முன்பு குறிப்பிட்டது போல் அர்தத்தின் கனதி வேறுபடுகின்றது.  தமிழ் போல் தொன்மையான மொழியில் அர்த்தங்களின் விரிவாக்கம் சாத்தியமே;  

இவ்வாறான விவாதங்களால் மொழிக்கு எந்த நன்மையும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. மாறாக மொழிச் சிதைவே ஏற்பட வாய்ப்புள்ளது. 

அறிந்தளவில் தாயை அன்னை என்று அழைப்பது எந்த மொழியிலும் இல்லை. தமிழிலேயே உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்தாகவே தமிழ்மொழி அன்னை என்ற சொல்லை பாவித்து வந்துள்ளது. இந்நிலையில் அது தமிழல்லா என்பதால், மேலும் அது வேறு எங்கோ இருந்து வந்திருக்கலாம் என்பதாலும் என்ன லாபம் ? அன்னை என்ற வார்த்தை தமிழல்ல என்ற ஒரு கருத்து விதையாவே விழும். இந்த விதை விருட்சமானால் ஆத்திசூடியும் அவ்வையாரும் கூட தமிழர் அல்ல என்று அடுத்த நூற்றாண்டில் ஒரு கருத்து ஆரம்பிக்கும் வாய்பே உள்ளது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 01/03/2018 at 4:50 PM, குமாரசாமி said:

கேள்விப்பட்டனீங்களோ இல்லாட்டி சொந்த அனுபவமோ? ஏனெண்டால் நீங்களும் கொத்தாரும்  கொஞ்சநாள் கடை கல்லாப்பெட்டியெண்டு புடுங்குப்பட்டு திரிஞ்சனீங்கள் எல்லே...:grin:

அப்பிடி மாத்தி இருந்தா எங்கேயோவந்திருக்கலாம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.