யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

தமிழ்த் தேசியம், சீமான் – திருமுருகன்,வை.கோ.. ஒரு வேண்டுகோள்!

Recommended Posts

தமிழ்த் தேசியம், சீமான் – திருமுருகன்,வை.கோ.. ஒரு வேண்டுகோள்!

seemanthiru-300x169.jpg

தமிழ்த் தேசியம் என்றால் என்ன? தமிழ்ப் பேசுகின்ற எல்லோரும் ஒரே தேசிய இன வகைக்குள் அடங்குவார்கள் என்பதே அதன் மறு அர்த்தம். ஆக, தமிழ் நாடு, வட கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இன்னும் தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்கள், வேண்டுமானால் புலம்பெயர் தமிழர்கள் போன்ற அனைவரையும் இணைத்து ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்வதே தமிழ்த் தேசியமா என்ன? தமிழ்த் தேசியவாதிகள் பல சந்தர்ப்பங்களில் தம்மைத் தமிழ் உணர்வாளர்கள் என்றும் அழைத்துக்கொள்கிறார்கள். தமிழ்த் தேசியவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொள்பவர்களின் பொதுவான ஆரம்பமே தாம் ஏனைய மொழி பேசும் மக்களைவிட உயர்வானவர்கள் என்பதே. இவர்கள் அனைவரதும் மற்றொரு முழக்கம் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பது என்பதாகும் எனப் புரிந்துகொள்ளலாம்.

முதலில் நாற்பது வருடகாலம் ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்டத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கையின் மத்திய பகுதியில் வாழும் தமிழர்கள் பங்கேற்றதில்லை. இன்றும் கூட வட கிழக்கில் தமிழர்களிடம் வாக்குக் கேட்கும் தமிழ் அரசியல் கட்சிகள் மலையகத்தில் இல்லை. மலையகத் தமிழர்களுக்கான அரசியல் கட்சிகளே அங்கு தேர்தல்களில் பெரும்பான்மையாக வெற்றிபெறுகின்றன. மலையகத் தமிழர்கள் வட கிழக்குத் தமிழர்களுடன் தம்மை எப்போதும் அடையாளப்படுத்தியதில்லை. பல வீரம் செறிந்த மக்கள் போராட்டங்களை நடத்திய மலையகத் தமிழர்கள் தம்மைத் தனியான தேசிய இனமாகவே உணர்கின்றனர். வட கிழக்கைச் சார்ந்த அரசியல் கட்சிகளோ, அன்றி வட கிழக்கில் தோன்றிய விடுதலை இயக்கங்களோ அவர்களின் அடிப்படையான அந்த உணர்வை மதித்ததில்லை.

1972 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற வாக்குக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு தனி நாட்டுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, வாக்கைச் சிதறவிடாமல் தடுப்பதற்காக மலையகத்தின் பலமான அரசியல் கட்சியின் தலைவரான சவுமிய மூர்த்தி தொண்டைமானுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டனர்.

அதன் பின்னர் மலையக மக்களையும் இணைத்தே ஈழம் என்ற கோட்பாட்டை ஈரோஸ் என்ற விடுதலை இயக்கம் முன்வைத்து மலையகப் பகுதிகளில் அரசியல் வேலைகள் முன்னெடுத்துத் தோற்றுப் போனது. 80 களின் ஆரம்பத்தில் ஈழப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு மலையக மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான இயக்கங்கள் தோன்றின. இலங்கை பேரினவாத ஒடுக்குமுறையின் கோரத்திற்கு அப்போதே அந்த இயக்கங்கள் பலியானமைக்கு அவற்றின் வர்க்கம் சார்ந்த போர்க்குணமும் ஒரு காரணம் எனலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு மீண்டும் வாக்குக் கட்சிகள் தோன்றிய போது, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையினான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மீண்டும் மலையக் மக்களை அன்னியப்படுத்தும் வகையிலான கோரிக்கைகளை முன்வைத்தது. தமிழர்கள் அனைவரும் ஒரே தேசத்திற்கு உரித்தானவர்கள் என்றும் இலங்கை என்பது ஒரு நாடு அதனுள் இரண்டு தேசங்கள் அடங்கும் என்ற முழக்கத்தை முன்வைத்தனர். மலையகத்தில் மட்டுமன்றி வட கிழக்கிலும் அவர்களை யாரும் ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை.

ஆக. ஒரு நாட்டின் எல்லைக்குளேயே வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் இரண்டு தேசிய இனங்களாக வளர்ந்து தமக்கான உரிமைகளைக் கோருகின்றனர். இங்கு மலையக மக்களின் சுய நிர்ணைய உரிமையை மதித்து அவர்களுடன் இலங்கைப் பேரினவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கூட்டிணைவை ஏற்படுத்திக்கொள்வதே அதிகாரவர்க்கைதைப் பலவீனப்படுத்தும். தவிர தமிழர்கள் என்ற அடிப்படையில் இணைந்து வட கிழக்குத் தமிழர்களின் ஆதிக்கத்திற்கு உட்படுமாறு மலையகத் தமிழர்களைக் கோருவது மேலாதிக்க மனோபாவமே தவிர வேறெதுவுமில்லை.

தமிழ் நாட்டிலிருந்து ஈழம் பிடித்துவருவதாகக் கூறும் ‘தமிழ்’ தேசியவாதிகளில் பலருக்கு மலையகத் தமிழர்கள் குறித்த அறிவிற்கு வாய்ப்பில்லை என்பது வேறு விடையம்

ஒரு நாட்டின் எல்லைக்குள்ளேயே இரண்டு தேசிய இனங்களாக தமிழர்கள் உணரும் போது, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை இணைத்துத் தமிழ்த் தேசிய இனம் எனக் கூறுவது எவ்வளவு அபத்தமானது?
நான்கு தசாப்தங்கள் நடைபெற்ற வீரம்செறிந்த ஈழப் போராட்டம், அதில் பங்காற்றிய இயக்கங்கள், முன்வைக்கப்பட்ட அரசியல் போன்றன தொடர்பாக எந்தக் குறைந்தபட்சப் புரிதலுமின்றி, ஈழப் போராட்டத்தை முன்வைத்து தமிழ்த் தேசியம் என்று கற்பனை செய்து சினிமாப் படம் எடுத்தால் கூட அதில் பந்தாடப்படுவது ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத் தமிழர்களே.

தமிழ்த் தேசியம் என்ற சினிமாப்பாணியிலான கற்பனையை மலையக மக்களின் வரலாறு மட்டுமன்றி ஈழத்தின் இலங்கையின் ஏனைய தேசிய இனங்களின் வரலாறும் இணைந்தே  சிதறடித்துவிடுகின்றன.

தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் இலங்கையில் ஒரு போதும் ஈழப் போராட்டத்தில் இணைந்துகொண்டதில்லை. அவர்களை முஸ்லீம் காங்கிரஸ் போன்ற வாக்குக் கட்சிகளே பிரதிநித்துவம் செய்தன. அக்கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைப்பை ஏற்படுத்தி பின்னர் தனியாகப் பிரிந்த வரலாறும் உண்டு. ஈரோஸ் மற்றும் சிறிய இடதுசாரி இயக்கங்கள் தவிர்ந்த அனைத்து விடுதலை இயக்கங்களும் முஸ்லீம்களை சாரிசாரியாகப் படுகொலை செய்த கறைபடிந்த வரலாறும் உண்டு. அதன் மறுபக்கதில் இலங்கை அரசின் துணை இராணுவப் படைகளுடனும் அடிப்படை வாதக் குழுக்களுடனும் முஸ்லீம்களின் ஒரு பகுதியினர் தொடர்பை ஏற்படுத்தி படுகொலைகளில் ஈடுபட்ட துயர்படிந்த வரலாறும் நம்முடையது தான்.

இவற்றின் உச்சமாக வடக்கில் பரம்பரைகளாக வாழ்ந்துவந்த அனைத்து முஸ்லீம் தமிழர்கள் 1990 ஆம் ஆண்டு ஒரு இரவிற்குள் விடுதலைப் புலிகளால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் முஸ்லீம்களை நிரந்தர எதிரிகளாக்கிற்று. இனப்படுகொலையோடு விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், முஸ்லீம்கள் மிண்டும் வடக்கில் தமது இருப்பிடங்களில் குடியேற ஆரம்பித்தனர்.

ஆக, இலங்கையின் எல்ல்லைகுள் வாழுகின்றன வெவ்வேறு தேசிய இனங்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவை. அவர்களின் தனித்துவத்தை மதிக்காமல் அவர்களைத் தமிழ்த் தேசியம் என்ற ஒற்றை எல்லைக்குள் உட்படுத்த முற்பட்டு அது அழிவுகளுக்கு வித்திட்டதை வரலாற்றின் பாடமாக கொள்ளலாம்.

இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதே நிலை தான். ஆங்கிலம் பேசும் இங்கிலாந்துக் காரர்கள் அயர்லாந்து மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள் என்பதற்காக ஒரே தேசிய இனமாக இணைத்துக்கொள்ள முற்பட்டதன் விளைபலன் தான் அயர்லாந்து மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம். பிரான்ஸ் நாட்டில் பிரஞ்சு மொழி பேசும் கோர்சிகா மக்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் உரிமைக்காப் போராடுகிறார்கள்.

ஆக, ஒரு மொழியைப் பேசுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரே தேசிய இனம் என்று வலிந்து இணைத்துக்கொள்வது இன்னொரு வகையான ஒடுக்குமுறை மட்டுமன்றி ஆபத்தானதும் கூட என்பதை வரலாறு எமக்கு உணர்த்துகிறது.

இலங்கை அரச கட்டமைப்பு என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய அமைதிச் சூழல் தற்காலிகமானது. தமிழ் மக்கள் மூச்சுவிடுவதற்குக் கிடைத்த இடைவெளிதான் இது. இச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கைப் பேரினவாதிகளைப் பலவீனப்படுத்துவதும் அதற்காக ஒடுக்கப்படும் சிங்கள உழைக்கும் மக்களிடம் உரையாடுவதும் ஈழத் தமிழர்களின் இன்றைய கடமை. இலங்கையில் வாழும் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை மதித்து அதன் அடிப்படையிலான இணைவை ஏற்படுத்துவது மற்றைய பணி.

நீங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக மேடை போட்டு முழங்கும் தமிழ்த் தேசியம் மற்றொரு பணியையும் செய்து முடிக்கிறது. சிங்கள பௌத்த பேரினவாதிகளைப் பலப்படுத்துகிறது. உங்களைக் காரணம் காட்டி பேரினவாதிகள சிங்கள மக்களை தமது பிடிக்குள் வைத்துக்கொள்ள நீங்கள் துணை போகிறீர்கள்,

தமிழ் நாட்டிலிருந்து உங்களுக்குத் தோன்றும் சினிமாப் பாணிக் கற்பனைக் கதைகளுடன் நீங்கள் பேசும் தமிழ்த் தேசியத்தை நிறுத்திக்கொண்டு உங்களை ஆக்கிரமிக்க எண்ணும் இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு எதிராக போராடினாலே அது மனிதகுலத்திற்கு நீங்கள் ஆற்றும் சேவையாகக் கருதப்படும்.

 

http://inioru.com/tamil-nationalism-seeman-thirumurugan/

Share this post


Link to post
Share on other sites

கிருபன்,

வைகோ, சீமான்,திருமுருகன் போன்றோர் தமிழ் தேசியத்தைப் பற்றி பேசுவது ஒருபுறம் இருக்கட்டும்

பல்லாயிரக்கணக்கான போராளிகள், பொதுமக்களின் தியாகங்கள்,முப்பது வருட ஆயுதப் போராட்டம் என்று ஏகப்பட்ட அனுபவங்களை கொண்ட ஈழத் தமிழர் சிலருக்கு, மேலே குறிப்பிட்டவர்கள் சொன்னால்தான் ஈழஅரசியல் புரிகிறது. அவர்கள் வந்து சுடரேற்றினால்தான் மாவீரர் சுடர் ஒளிர்கிறது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியம், சீமான் – திருமுருகன்,வை.கோ.. ஒரு வேண்டுகோள்!

......

இலங்கை அரச கட்டமைப்பு என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய அமைதிச் சூழல் தற்காலிகமானது. தமிழ் மக்கள் மூச்சுவிடுவதற்குக் கிடைத்த இடைவெளிதான் இது. இச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கைப் பேரினவாதிகளைப் பலவீனப்படுத்துவதும் அதற்காக ஒடுக்கப்படும் சிங்கள உழைக்கும் மக்களிடம் உரையாடுவதும் ஈழத் தமிழர்களின் இன்றைய கடமை. இலங்கையில் வாழும் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை மதித்து அதன் அடிப்படையிலான இணைவை ஏற்படுத்துவது மற்றைய பணி.

....

http://inioru.com/tamil-nationalism-seeman-thirumurugan/

இந்த ஞானம் 50 வருடங்களுக்கு முன்னர் வந்திருந்தால் நல்லது.

குறைந்த பட்சம் ஆயுதப் போராட்டத்தை கையிலெடுக்கும்போதாவது வந்திருக்கலாம்.. லட்சக்கணக்கான மக்கள் அநியாயமாக நீங்கள் உணர்ந்திருக்கும் பேரினவாதத்திற்கு பலியாகமல் இருந்திருப்பார்கள்.

இருக்கும் ஓரளவு உயிர்ப்பையும் குழிதோண்டி புதைக்கும் கட்டுரை. இம்மாதிரி நாலு பேர், சே..சே.. இவர் மாதிரி ஒருத்தர் போதும், ஒரு பயல் உங்கள் பக்கமே எட்டிப்பார்க்க மாட்டார்கள்.

சந்தேகக்கோடு அது சந்தோசக்கேடு..!  இது சிங்களவருக்கும், தமிழருக்கும் பொருந்தும்.

முயற்சியுங்கள், சிங்கள பேரினவாதத்தை இணக்கமாக அனுபவிக்க வாழ்த்துக்கள்..! :)

.

Edited by ராசவன்னியன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இடதுசாரிச் சிந்தனை உள்ளவரால் எழுதப்பட்ட கட்டுரை. என்னதான் சரியாக இருந்தாலும் கேட்பதற்கும் செயலாற்றுவதற்கும் யாரும் முன்வரமாட்டார்கள்.

உணர்ச்சி அரசியலை செய்பவர்களை நம்பும் சாதாரண தமிழ் மக்கள் பிறர் ஏதாவது தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்று இன்னமும் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.

அதில் ஒரு பகுதியினர் சிரிய அகதிகளை ஈழத்தமிழன் ஒருவன் விமானத்தில் கனடா கொண்டு சேர்பித்தான் என்று நம்பி முகநூலில் போலிச் செய்தி பரப்புமளவிற்கு அடி முட்டாள்களாக இருக்கின்றனர்.?

இந்த இலட்சணத்தில்  நூதனமாக இன அழிப்பு தொடர்வதை எப்படி அறிவார்கள்?

கேப்பாபிலவு மக்களின் எங்கள் நிலம் எங்களுக்கே வேண்டும் என்ற போராட்டத்தை பலர் காண்டுகொள்வதில்லை. காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடாத்தும் சில எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் பலர் பங்குகொள்வதில்லை. மைத்திரி/ரணிலின் நல்லாட்சி அரசு எதுவும் தமிழர்களுக்கும் செய்யாதபோதும் சிங்களவர்களுக்கு இனவாதியான மகிந்ததான் இப்போதும் நாயகன் என்று அண்மைய தேர்தல் சொல்லியுள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தேசியம் என்று வெற்று உணர்ச்சிக்கோஷம் போட்டு சிங்கள கடும்போக்காளர்களை சிங்கள மக்களின் பெருத்த ஆதரவோடு ஆட்சிக்கு வரப்பண்ண உதவினால் தமிழர்களின் சகல பகுதிகளும் விரைவில் திருகோணமலை போலக் கபளீகரம் செய்யப்படும்.

Share this post


Link to post
Share on other sites

தமிழ்தேசியம் என்று கோசம் போட, முன்னெடுக்கச் சொல்லவில்லை. 'இனியாவது ஒருமித்துச் செல்லுங்கள்' என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். 'எத்திசையில் செல்வது' என்பது ஈழத்தமிழர்களின் உரிமை. :108_metal:

சமீபத்திய தமிழீழ மாநாட்டில் கவிஞர்.காசி ஆனந்தன் உரையை கேட்டுப்பாருங்கள், நம்ப முடியாமல் இருக்கும்.

சுதந்திரம் கிட்டிய நாளிலிருந்து ஈழத்தமிழர்களிடையே ஒருமித்த அரசியல் தொலை நோக்கு சரியாக அமையவில்லை. மேலே கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் பல்வேறு 'தேசிய இனங்களை/அவர்களின் விருப்பங்களை' அக்கால தமிழ்த் தலைமைகள் கருத்தில் கொள்ளாமலா அரசியல் செய்திருப்பார்கள்..?

சில முயற்சிகளை செய்து பார்த்தார்கள், வாய்ப்பும் வந்தது, துரதிஷ்டவசமாக தவறிவிட்டது.

நிலைமை கைமீறி, எல்லால் முடிந்தபின், இப்போது ஞானம் வந்து, ஏற்கனவே விட்ட பிழைகளை(???) ஆற்றாமையால் மற்றவர் மீது ஏற்றி, 'எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் கம்முன்னு கிடவுங்கள்' என இப்போது சொல்வது சரியன்று..! :unsure:

 

Edited by ராசவன்னியன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தற்போது படித்த கட்டுரை ஒன்றில் சொல்லப்பட்டதானது:

“இராசபக்ஷே போட்டுத் தந்த பாதையில் நடக்கும் சிறிசேன அரசாங்கம், தேர்ந்த இராஜதந்திர நுட்பத்துடன் சீனாவை அணைத்து – ஒரு நாள் இந்தியாவை ஓரங்கட்டுவதில் முற்றிலும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. இதன் வினைகளைப் பட்டு அனுபவிக்கப் போகிற நாட்களில் - இந்தியப் பாதுகாப்பு ஈழப்பிரதேசத்திலும், ஈழத் தமிழர்களிடமும் தங்கியுள்ளது என்பதை உணருகிற நாளில் - இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ் தேசிய இன விடுதலைக்கு கை கொடுப்பது தவிர்க்க முடியாமல் ஆகிவிடும்”

இலங்கைத்தீவு இரண்டாக உடைவதுதான் இந்தியாவினதும், மேற்குலகினதும் நலனுக்கான ஒரேயொரு தவிர்க்க முடியாத மாற்று வழியென உணரப்படும் காலம் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஆண்டுகளில் உருவாகும்”

“முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை மட்டுமன்றி அதற்கு பின்பு இன்று வரையுங்கூட தமிழீழப் போராட்டத்திற்கான இராஜந்திர அணியோ, அதற்கான இராஜதந்திர அமைப்புக்களோ அல்லது அதற்கான அறிஞர்குழாம், அறிஞர்படை சார்ந்த ஏற்பாடுகளோ அமைப்பு ரீதியாக எதுவும் இதுவரை (2018) இல்லை என்பது மட்டுமே தமிழ் அரசியலின் கேடுகாலத்தை உணர்த்தப் போதுமானதாகும்.”

“அதற்கு முன்பு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்வதன் மூலம் தமிழர்கள் – தமிழ்ப்பிரதேசம் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டு விடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் சிங்களவரின் அடுத்த ராசதந்திர நகர்வு இலங்கையில் தமிழினம் இடமற்று, பொருளற்று, வாழ்வற்று, நசிவுற்று, மக்கள் தொகையே இல்லாமல் செய்து விடுவதன்மூலம், இந்தியாவின் தலையீட்டை முற்றிலும் நீக்கி விடவும், மொத்த இலங்கைத் தீவையே சிங்கள இனத்தின் தீவாக மாற்றிவிடவும் உறுதி பூண்டிருக்கிறது. ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இது நடக்க சில பத்தாண்டுகள் ஆகலாம்”

 

ஆக இன்னும் பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியம் என்று கோஷம் போடத் தேவையிருக்காது.

 

 

 

 • Like 3
 • Sad 1

Share this post


Link to post
Share on other sites
On 3/3/2018 at 1:14 AM, கிருபன் said:

இலங்கை அரச கட்டமைப்பு என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய அமைதிச் சூழல் தற்காலிகமானது. தமிழ் மக்கள் மூச்சுவிடுவதற்குக் கிடைத்த இடைவெளிதான் இது. இச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கைப் பேரினவாதிகளைப் பலவீனப்படுத்துவதும் அதற்காக ஒடுக்கப்படும் சிங்கள உழைக்கும் மக்களிடம் உரையாடுவதும் ஈழத் தமிழர்களின் இன்றைய கடமை. இலங்கையில் வாழும் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை மதித்து அதன் அடிப்படையிலான இணைவை ஏற்படுத்துவது மற்றைய பணி.

தமிழ் மக்கள் மூச்சு விட எந்த இடைவெளியும் ஏற்படவில்லை. முதலில அமைதிச் சூழல் என்பதே ஒரு மாயை. 

ஒடுக்கப்படும் சிங்கள மக்களுடன் சேரவும் முடியாது அவ்வாறு சேர்ந்து பேரினவாதிகளை பலவீனப்படுத்தவும் முடியாது ஏனெனில் பேரினவாதத்தின் இயக்க சக்தி என்பது சிங்கள உழைக்கும் மக்களிடமும் இருப்பதுதான். எவ்வாறு சாதீயம் மதம் போன்றன சிங்கள ஒடுக்குமுறைக்குள்ளாகி பாதிக்கப்பட்ட தமிழ்மக்களிடம் தேசீயவாதத்தை மேவி உயிர்ப்புடன் உள்ளதோ அவ்வாறே சிங்களப்பேரினவாதமும் அவர்களிடம் உள்ளது. இடதுசாரிச் சிந்தனை மற்றும் அது சார்ந்த அணுகுமுறை என்பது எப்போதும் எமது சமூகத்தில் மாற்றுசக்கதியாக உருவாகமுடியாது. எமக்குள் இருக்கும் சாதி மத பிரதேசவாத சமூக முரண்பாடுகள் அதற்கு இடமளிக்காது  என்பது இதுவரைகால வரலாற்று அனுபவமாக இருந்தாலும் இடதுசாரி சிந்தனையில் ஊறிப்போனவர்களுக்கு அது புரியப்பேவதில்லை. ஏதோ சீமான் திருமுருகன் காந்தி போன்ற சிலரால் தான் தமிழ்த்தேசீயவாதம் ஞாபகப்படுத்தப்படுகின்றது. அவர்களும் அமைதியானால் தேசீயவாதத்தை பெயரளவில் வைத்திருக்கக் கூட  இங்கேயாரும் இல்லை.  தேசீயவாதத்தை கதைத்தால் பேரினவாதம் பலப்படும் என்று பயந்து அதை நிறுத்திக்கொண்டால் பேரினவாதம் பலப்பபடவேண்டிய தேவையே இல்லாமல் அது அதன் இலக்கை  அடைந்துவிடும். பேரினவாதம் செய்யவேண்டிய வேலையை இடதுசாரிகள் செய்ய முற்படுகின்றார்கள். 

 • Like 1
 • Confused 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்களுடன் சென்ற கும்பல் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் பயணித்ததாகவும் காவலில்  ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை வழிமறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/60850
  • அமெரிக்க தலைநகரில் ஆயிரக்கணக்கான பணத்திற்கு கொள்கையை வென்றெடுக்கும் நிறுவனங்கள் உள்ளன. ஆங்கிலத்தில் இவை ' லோபியிங்' (lobbying) என அழைக்கப்படும். சகல மேற்குலக நாடுகளில் கூட இப்படியான அமைப்புக்கள் இருந்தாலும் உலகின் மிக்வும் பொருளாதார இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்குகள் காரணமாக அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் தான் இவை அதிகம்.  (https://www.hklaw.com/en)  உள்ளூர் நிறுவனங்கள் உட்பட பல வெளிநாட்டு அரசுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கூட தமது கொள்கை மாற்ற உதவிக்கு இவ்வாறு அணுகுவதுண்டு.  சிங்கள அரசு கூட இவ்வாறு  முன்னர் இழந்த ஜி.எஸ். பி. வரி சலுகையை மீளப்பெற ஒரு அமைப்பை பணம் கொடுத்து அணுகி இருந்தது.  ஆக, பணம் இருந்தால் எமது மீது உள்ள தடைகள் மட்டுமல்ல தனி நாடு இல்லாவிட்டாலும் ஒரு சுயாட்சியை கூட இலங்கையில் தமிழர்கள் பெறலாம். தமிழர்களிடம் அதற்கான பணமும், கொடுக்கும் மனமும் உள்ளது என .நம்பலாம். ஆனால், அதற்கான தலைமை தான் இல்லை.  
  • அமெரிக்க அரசிடமும், மக்களிடமும் தன் நாட்டின் மீது ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கி, உயர்வான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக  அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தை பாகிஸ்தான் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்ற பின், பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் அமெரிக்காவுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் பாகிஸ்தான் மீது அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதனால், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த பல்லாயிரம் கோடி நிதியுதவியை கடந்த 2018 ஜனவரி முதல் நிறுத்தி விட்டார். இதனால், பாகிஸ்தானுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், 3 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப்பை நாளை சந்திக்க இருக்கிறார். டிரம்ப் பதவியேற்று ஏறக்குறைய 4 ஆண்டுகள் முடியும் நிலையில், தற்போதுதான் பாகிஸ்தான் பிரதமரை சந்திக்க உள்ளார். இந்நிலையில், அமெரிக்க அரசிடமும், அதன் மக்களிடமும் தனது நாட்டை பற்றி ஏற்பட்டுள்ள தவறான எண்ணத்தை மாற்றவும், இவர்களிடம் தனது நட்டை  பற்றி உயர்வான எண்ணத்தை ஏற்படுத்தவும் ‘ஹாலண்ட் அண்ட் நைட்’ என்ற அமெரிக்க நிறுவனத்தின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது. இது தொடர்பாக, இந்த நிறுவனத்தின் ஆலோசகர் ரெய்னால்ட்சுடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு இருக்கிறார். இந்த ‘ஜால்ரா’ வேலையை செய்வதற்காக, அந்த நிறுவனத்துக்கு பாகிஸ்தான் அரசு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளது.இது தொடர்பாக குரேஷி கூறுகையில், ``ஹாலண்ட் அண்ட் நைட் நிறுவனம் பாகிஸ்தான் தூதரகத்துடன் இணைந்து செயல்பட்டு, அமெரிக்கா மீது பாகிஸ்தான் வைத்திருக்கும் நல்லெண்ணத்தை திறம்பட எடுத்துரைக்கும்,’’ என்றார். இந்த நிறுவனத்தின் ஆலோசகர் ரெய்னால்ட்ஸ், நியூயார்க் நகரத்தின் முன்னாள் காங்கிரஸ் எம்பி.யாக இருந்தவர். அவர் கூறுகையில், ``எங்கள் நிறுவனத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து, இந்த பொறுப்பை ஒப்படைத்த பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பாகிஸ்தான்-அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு, புரிந்துணர்வு தொடர்பாக வலுவான நம்பிக்கையை உருவாக்கும் முயற்சிகளில் எங்கள் நிறுவனம் செயல்படும்,’’ என்று கூறினார்.சவுதி இளவரசர் உதவி:அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே அமெரிக்கா - பாகிஸ்தான் உறவு பாதித்துள்ளது. இந்த உறவை சீராக்கும் முயற்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஈடுபட்டுள்ளார். இதற்கு, சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் உதவி வருகிறார். டிரம்பின் மருமகன் ஜரேட் குஷ்னருடன் சல்மான் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். அவர் மூலமாகதான், டிரம்ப் - இம்ரான் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தூதர் இல்லத்தில் தங்கல்:பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், தனது நாட்டில் பல்வேறு செலவுகளை குறைப்பதற்கான சிக்கன நடவடிக்கைகளை இம்ரான் எடுத்துள்ளார். தனது அமெரிக்க பயணத்திலும் இதை அவர் பின்பற்றுகிறார். அமெரிக்காவில் அவர் நட்சத்திர ஓட்டலில் தங்கவில்லை. பாகிஸ்தான் தூதரின் இல்லத்திலேயே தங்குகிறார்.    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511798
  • அமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் ‘கூட்டு’ சீனா திடீர் முடிவு சீனாவின் ஏற்றுமதி அதிகரித்து வர்த்தக பற்றாக்குறை 539 பில்லியன் டாலர் அளவுக்கும் அதிகமாக சென்றுவிட்டது, இதனால் ஏற்றுமதியை குறைத்து இறக்குமதியை அதிகரிக்குமாறு சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால், இதை சீனா பொருட்படுத்ததால், சீனாவின பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் மூண்டது. இந்நிலையில், இந்தியாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி சமீபத்தில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.  இந்தியாவில் இருந்து சீனாவுக்கு வேளாண்மை பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதி வரையிலான புள்ளிவிவரத்தை  பார்த்தால், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 5 சதவீதம் குறைந்துள்ளது.  தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பற்றாக்குறையை படிப்படியாக குறைத்து, சமநிலைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சீன அதிகாரி தெரிவித்தார்.இறக்குமதி பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதித்து அமெரிக்காவின் முதல் கொள்கையை மற்றவர்கள் மீது திணிக்கும் அதிபர் டொனால்டு டிரமப்பின் கொள்கைக்கு எதிராக போராட வேண்டும். இந்த வர்த்தக போரில் இந்தியாவும் எங்களுடன் இணைந்து போராட வேண்டும் என்று அந்த சீன அதிகாரி தெரிவித்தார். சீனாவுடன் வர்த்தக பற்றாக்குறை 539 பில்லியன் டாலர் அளவுக்கும் மேல் சென்றதால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரையில் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் மூண்டது. அதேபோல், முன்னுரிமை வர்த்தக அந்தஸ்து அளிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி உத்தரவிட்டார். இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதாவது, 5.6 பில்லியன் டாலர் அளவுக்கு வரி இல்லாமல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டு இரு்ந்தது. அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இந்தியாவுடன் சீனா நெருங்கி வருகிறது என்று வர்த்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511799
  • எட்டு அணிகள் இடையிலான 4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன், டி.என்.பி.எல். போட்டியின் மூலம் இளம் வீரர்களின் திறமை மேம்பட்டு வருகிறது. மலிங்கா போல் பந்து வீசும் வீரரை நாங்கள் எங்கள் அணிக்கு எடுத்துள்ளோம். அவரது பெயர் பெரியசாமி. 2-வது டிவிசன் போட்டிகளில் விளையாடி வரும் அவரை பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பயிற்சியின் போது அவர் பந்து வீசிய விதத்தை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து கேட்கிறீர்கள். எங்கள் அணிக்கு தேர்வாகியுள்ள ஜெபசெல்வின், ஆனந்த், சந்தானசேகர் ஆகியோர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் தான். எங்கிருந்து வருகிறார்கள் என்பது பிரச்சினை இல்லை. கிரிக்கெட் நன்றாக ஆடினால் வாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிட்டார்.     டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டம் பரபரப்பான சூப்பர் ஓவரில் திருச்சியை வீழ்த்தியது காரைக்குடி: கேப்டன் அனிருதா அசத்தல் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டத்தின் பரபரப்பான சூப்பர் ஓவரில், ஐட்ரீம் காரைக்குடி காளை அணி கேப்டன் அனிருதா காந்த் அடுத்தடுத்து 2 சிக்சர் விளாசி வெற்றியை வசப்படுத்தினார்.என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசியது. ஆதித்யா, அனிருதா இருவரும் காரைக்குடி இன்னிங்சை தொடங்கினர். ஆதித்யா 1 ரன் மட்டுமே எடுத்து விக்னேஷ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சூரியபிரகாஷ் 12 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஆர்.னிவாசன் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியாக விளையாடிய அனிருதா 32 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 58 ரன் (36 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சாய் கிஷோர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். பாப்னா 30, ஷாஜகான் 1 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். கடைசி கட்டத்தில் ராஜ்குமார் 3 சிக்சர்களைப் பறக்கவிட்டு மிரட்டினார்.காரைக்குடி காளை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் குவித்தது. னிவாசன் 37 ரன் (32 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ராஜ்குமார் 28 ரன்னுடன் (13 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். திருச்சி வாரியர்ஸ் பந்துவீச்சில் சரவண் குமார் 3, விக்னேஷ், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. அரவிந்த், முரளி விஜய் இருவரும் துரத்தலை தொடங்கினர். அரவிந்த் 13 ரன், ஆதித்யா பரூவா 16 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். மாருதி ராகவ் 22 ரன் எடுத்து லஷ்மண் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய முரளி விஜய் அரை சதம் அடித்தார். விஜய் - கணபதி ஜோடி 4வது விக்கெட்டு 77 ரன் சேர்த்தது. முரளி விஜய் 81 ரன் (56 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), கணபதி 21 ரன் (17 பந்து, 2 பவுண்டரி) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தது திருச்சி அணிக்கு பின்னடைவை கொடுத்தது.கடைசி 8 பந்தில் 16 ரன் தேவைப்பட்டதால் ஆட்டம் பரபரப்பானது. 20 ஓவர் முடிவில் திருச்சி அணியும் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுக்க, போட்டி சரிசமனில் முடிந்தது (டை). மணி பாரதி 7 ரன், கேப்டன் சாய் கிஷோர் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் விளையாடிய திருச்சி அணி 6 பந்தில் 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன் எடுத்தது. இதைத் தொடர்ந்து, 6 பந்தில் 12 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை களமிறங்கியது. சாய் கிஷோர் வீசிய ஓவரின் 3வது மற்றும் 4வது பந்தை இமாலய சிக்சர்களாக விளாசிய அனிருதா வெற்றியை வசப்படுத்தினார். ஆட்ட நாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511805