• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
நவீனன்

பாலச்சந்திரனின் படத்துடன் முள்­ளி­வாய்க்­கா­லில் போராட்­டம்!! சிரி­யப் படு­கொ­லைகளை நிறுத்­தக் கோரி

Recommended Posts

 
 
28379448_1614878135267217_21940332472531

பாலச்சந்திரனின் படத்துடன் முள்­ளி­வாய்க்­கா­லில் போராட்­டம்!!

சிரி­யப் படு­கொ­லைகளை நிறுத்­தக் கோரி

 

 

சிரிய நாட்­டில் ஏற்­பட்­டுள்ள போரி­னால் இடம்­பெ­றும் மனி­தப் படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரி முல்­லைத்­தீவு முள்­ளி­வாய்க்­கா­லில் இன்று போராட்டம் இடம்பெற்றது.

முள்­ளி­வாய்க்­கால் முதன்­மைச் சந்­திக்கு அரு­கில் இந்­தக் போராட்­டம் நடைபெற்றது. அதில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுபடுத்தும் படங்களுடன் கூடிய பாதகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர். குறிப்பாக பாலச்சந்திரனின் படங்கள் தென்பட்டன.

சிரியப் படு­கொ­லை­யைக் கண்­டித்து வடக்கு மாகா­ணத்­தில் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி, மாவட்­டங்­க­ளில் நேற்­று­ முன்­தி­னம் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன. இன்று முல்­லைத்­தீ­வு, மன்னார், மலையகம் போன்ற இடங்களில் போராட்­டங்கள் இடம்­பெ­ற்றன.

 

28379529_1614877985267232_5781376422381228576953_1614878018600562_7760417058765628575798_1614878058600558_8997301143726028468480_1614878021933895_5697418837811328468244_1614878051933892_6284227646243228468025_1614877988600565_21038874538737

http://newuthayan.com/story/73259.html

Share this post


Link to post
Share on other sites

சிரிய மக்களுக்காக போராடி சீன் போட்டதுபோதும், போய் காணாமல்போன எமது உறவுகள், மீள் குடியேற்றத்துக்காக தவிப்பவர்கள், மீள குடியேறியும் வாழ்வாதாரம் ஏதும் இன்றி தவிக்கும் எமது மக்களுக்காக போராடுங்க,உதவி செய்யுங்க!

முள்ளிவாய்க்கால் பேரழிவின்போது சிரியா எமக்கு குரல் கொடுத்ததா , அல்லது சிரிய மதத்தை சார்ந்தவர்கள் யாராவது ,எமக்காக அழாமல் இருந்தாலும் பரவாயில்லை, எம்மை பார்த்து சிரிக்காமலாவது இருந்தார்களா?

இன்னும் ஒருபடி மேலேபோய் சொல்லபோனால், இன்று சிரியாவுடன் கைகோர்த்து நிற்கும் ஈரானும் ஈழத்தின் இறுதிபோருக்கு ஆயுதம் வழங்கியநாடுகளில் ஒன்று,முள்ளீவாய்க்காலில் எல்லாம் முடிந்ததும் மஹிந்தவை வாயார வாழ்த்திய நாடுகளிலும் ஒன்று!

அவர்களுக்காக போராட ,குரல் கொடுக்க ஆயிரம்பேர் உண்டு எமக்காக குரல் கொடுக்க எமக்குள்ளேயே யாரும் இல்லை!

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

சிரியாவில் இடம்பெறும்  மனித குலத்திற்கு எதிரான படுகொலையை கண்டித்து  மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

 

 
 

 

சிரியாவில் இடம் பெற்று வரும்  மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலையை கண்டித்து இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கண்டணப்போராட்டம் இடம்பெற்றது.

DSC_0041.JPG

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில்  குறித்த போராட்டம் இடம் பெற்றது.

DSC_0042.JPG

சிரியாவில் இடம் பெற்று வரும்  மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலையை கண்டிக்கும் வகையில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிரியாவில் குழந்தைகள் முதல் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட மற்றும் அவர்களின் துன்ப துயரங்களை எடுத்துக்காட்டுகின்ற புகைப்படங்களை ஏந்தியவாறு கண்டனப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

DSC_0074.JPG

குறித்த போராட்டத்தில் மூர்வீதி ஜும்மா பள்ளி வாசல் மௌலவி எம்.அசீம்,மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன்,மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதி நிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

DSC_0063.JPG

போராட்டத்தை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதப்பட்ட மகஜர்  வாசிக்கப்பட்டு உரிய அதிகாரிகளினூடாக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

http://www.virakesari.lk/article/31224

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • குடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு.. பெரும் கலவரம்! டெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் 3 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. பேருந்துகள் தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் நடக்கும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்போராட்டத்தை போலீசார் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைந்து செல்ல போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். போலீசார் அத்துமீறுகின்றனர்.. தினமும் போலீஸ் தடியடியும் மீறி மாணவர்களின் போராட்டம் நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் இன்றும் போராட்டம் நடத்தினர். ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மாணவர்களின் இப்போராட்டத்தில் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர்.  இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்புகை குண்டுகளை போலீசார் வீசி தடியடி நடத்தினர். இந்நிலையில் திடீரென பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் 3 பேருந்துகள் தீக்கிரையாகின. மாணவர்கள் மறுப்பு இருப்பினும் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் எதுவும் செய்யவில்லை. எங்கள் போராட்டத்தை திசை திருப்ப போலீசார் இப்படி புகார் அளிக்கிறார்கள் என ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி உள்ளனர். லத்திகளை கொண்டு அங்கிருந்த மாணவர்களை மோசமாக தாக்கியுள்ளனர். பெண் மாணவிகள் பலரும் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதில் சில மாணவிகள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோசமான நிலை அதேபோல் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போலீசார் தாக்குதல் நடத்தினார்கள்.  அங்கு இருக்கும் வகுப்பறைகள், நூலகம் ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு, கண்ணீர் புகை குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். https://tamil.oneindia.com/news/india/protest-against-cab-escalate-in-delhi-3-buses-set-ablaze-by-protesters/articlecontent-pf422325-371444.html டிஸ்கி: யார் பெரியவா..அடிச்சு காட்டு ..👍
  • சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீரை மோசடியில் குற்றவாளியாக நேற்று  இனங்கண்டுள்ள அந்நாட்டு நீதிமன்றமொன்று அவரை இரண்டாண்டுகளுக்கு சீர்திருத்தல் மய்யமொன்றுக்கு அனுப்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீருக்கு 75 வயதென்பதால், அதைக் கருத்திற் கொண்டே சிறைச்சாலையை விடுத்து அவர் சீர்திருத்த மய்யத்துக்கு அனுப்பப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீரின் 30 ஆண்டுகள் ஆட்சிக்கெதிரான மாதக்கணக்கான வீதி ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இராணுவத்தால் அவர் பதவி அகற்றப்பட்டிருந்தார். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீர் பதவியிலிருந்து அகற்றப்படும்போது கண்டுபிடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள், சூடானிய பவுண்ஸ்களையும் பறிமுதல் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விதிமுறைக்கு மீறி வெளிநாட்டு நாணயத்தை வைத்திருந்தால் அதிகபட்ச 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சூடானின் டாபர் பிராந்தியத்தில் நிகழந்த இனவழிப்பு, போர்க்குற்றச்சாட்டு, மனிதத்துக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்காக 2009, 2010ஆம் ஆண்டுகளில் பிடிவிறாந்துகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/மசடககக-சரதரததல-மயயததல-சடன-மனனள-ஜனதபத/50-242480    
  • நான் இப்போது சொல்கிறேன், குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்களும் ஓர் நாள் வேலுப்பிள்ளை பிரபாகரனை துரோகி என்று கூறுவீர்கள்.  அப்போது எண்னை நினைவில் கொள்ளுங்கள்.   ஆனால்,   சிங்களம் ஒருபோதும் வேலுப்பிள்ளை பிரபாகரனை துரோகி என கூறவும் இல்லை , கூறவும் போவதில்லை .  ஏனென்றால் அவர்கள் சிங்களவர் நாங்கள் தமிழர்
  • தாங்கள் சொல்லவருவதை தெளிவாகச் சொல்லாமே ....? ஏன் இந்த இழுவை ????????