2015 இல் அண்ணனின் மகனுக்கு திருமணம் என்று சிட்னி அவுஸ்திரேலியா போயிருந்தேன்.அண்ணியின் குடும்பம் கொஞ்சம் பெரியது.லண்டன் பிரான்ஸ் ஜேர'மனி என்று தூர இடங்களில் இருந்தும் வந்திருந்தார்கள்.நான்காம் சடங்கு முடியும் வரை ஒரே மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் நண்பர்கள் என்று வந்து போய்க் கொண்டிருந்தனர்.நாளாக ஆக வருவோர் போவோரும் குறைந்து விட்டது.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் தத்தமது நாடுகளுக்கு திரும்ப வேண்டும்.அதற்கிடையில் எல்லோரும் சேர்ந்து ஒவ்வொரு இடமாக கூட்டிக் கொண்டு போய் காட்டினார்கள்