• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ஈழப்பிரியன்

மூன்று சகோதரிகள்

Recommended Posts

2015 இல் அண்ணனின் மகனுக்கு திருமணம் என்று சிட்னி அவுஸ்திரேலியா போயிருந்தேன்.அண்ணியின் குடும்பம் கொஞ்சம் பெரியது.லண்டன் பிரான்ஸ் ஜேர'மனி என்று தூர இடங்களில் இருந்தும் வந்திருந்தார்கள்.நான்காம் சடங்கு முடியும் வரை ஒரே மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் நண்பர்கள் என்று வந்து போய்க் கொண்டிருந்தனர்.நாளாக ஆக வருவோர் போவோரும் குறைந்து விட்டது.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் தத்தமது நாடுகளுக்கு திரும்ப வேண்டும்.அதற்கிடையில் எல்லோரும் சேர்ந்து ஒவ்வொரு இடமாக கூட்டிக் கொண்டு போய் காட்டினார்கள்.

                                                                                 நாளைக்கு எல்லோரும் திறி சிஸ்ரேசைப் பார்க்க போகிறோம்.10 மணிக்கு இங்கிருந்து  வெளிக்கிட வேண்டும் எல்லோரும் வேளைக்கு எழும்பி வெளிக்கிடுங்கோ என்று மகன் சொன்னான்.அடுத்த பக்கத்தில் சுட்டு சாப்பிடக் கூடிய இறைச்சி சோளன் பாண் பழங்கள் என்று நிறைய சாமான் பட்டிலிட்டு கொண்டிருந்தார்கள்.என்னடா திறி சிஸ்ரேஸ் என்று இப்ப இதையும் கொண்டு போய் என்ன செய்கிறதென்று கேட்க பரவாயில்லi சித்தப்பா திறி சிஸ்ரேசைப் பார்த்துவிட்டு 2 மைல் ஓடினால் நல்ல பார்க் ஒன்று வரும் அங்கு போய் இதுகளை சுட்டு சாப்பிடுவோம் என்றான்.

                                                                               ஏற்கனவே போட்ட திட்டத்தின்படி எல்லோரும் வெளிக்கிட்டுக் கொண்டிருந்தனர்.நானும் திறி சிஸ்ரேசைப் பார்க்க போகிறோம் என்று வழமைக்கு மாறாக கொஞ்சம் நல்ல உடுப்பும் போட்டு அட திறி சிஸ்ரேசில ஒரு சிஸ்டர் தன்னும் என்னைப் பாரக்காதா என்று கொஞ்சம் பூசி மொழுகி கறுப்பு கண்ணாடியும் போட்டு கொண்டு வெளிக்கிட்டேன்.அப்பவும் மனைவி என்னப்பா இண்டைக்கு வழமையை விட தூக்கலாக இருக்கு என்றவுடன் திறி சிஸ்ரேசை எல்லோ பார்க்க போகிறோம் என்றவுடன் சரி சரி வாலிபத்தில் ஆடினது இப்ப காலைக்காலை போட்டு அடிக்கிறீங்கள் என்று ஒரு நமட்டு சிரிப்பு வேறை.  

                                                                             அன்று எல்லோரும் வேளைக்கே எழும்பி சொன்ன நேரத்தை விட கொஞ்ச நேரம் முன்பாகவே தாயாராக நின்றோம்.எப்படி இருந்தாலும் அதைக் காணவில்லை இதைக் காணவில்லை என்று ஒரு மாதிரி 5 கார்களில் எல்லோரும் புறப்பட்டோம்.இரண்டு மணி நேர ஓட்டம் என்றார்கள்.போகிற வழியில் நினைத்ததைத் தருகிற சிறிய வேதக் கோவில் இருக்கிறது அதையும் போய் கும்பிட்டு எல்லோர் வேண்டுதல்களையும் சொல்லிப் போட்டு வரும் என்றார்கள்.ஓசியில் கேட்பது கிடைக்குமென்றால் யார்தான் விடுவார்கள்.அங்கே போனால்அமைதியான ஒரு இடம் சிறிய கோவில்.யார் யார் என்னென்ன வேண்டினார்களோ தெரியாது.எனக்கு ஒரே திறி சிஸ்ரேசின் ஞாபகம் தான்.

                                                                              ஒரு மணி நேர ஓட்டத்தின் பின் இடத்துக்கு வந்துவிட்டோம் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும் என்றார்கள்.கிட்ட போக போக ஒரே மலைப் பிரதேசமாக இருந்தது.இன்னும் கிட்ட போக ஊரிலே மாட்டு இலையான் என்று சொல்வார்களே அந்த இலையான் எல்லோர் முகத்தையும் சுற்றி சுற்றி ஒரு வித இரைச்சலுடன் வந்து கொண்டிருந்தது.நல்ல அழகான இயற்கையாக இருந்தாலும் மாட்டு இலையான் ரொம்ப மோசமாக இருந்தது.வாயைத் திறந்து கதைக்க முடியவில்லை.என்னடா திறி சிஸ்ரேசைப் பாரக்க வந்து கதைக்கவும் ஏலாமல் இருக்கு திறி சிஸ்ரேசை கொண்டு போய்  காட்டுங்கோடா என்றால் சித்தப்பா எங்கை தெரியுது பாருங்கோ என்றான்.நானும் சுற்றி சுற்றி பார்க்கிறேன் எங்களோடு வந்திருந்தவர்களும் சுற்றி சுற்றி பார்க்கிறார்கள்.பின்பு தான் சொன்னான் மூன்று ஆள் மாதிரி மலை தெரியுது அது தான் திறி சிஸ்ரேஸ்.நான் மாத்திர மல்ல அங்கே புதிதாக வந்த எவருமே இதை எதிர் பார்க்கவில்லை.

                                                                            மலையைப் பார்க்க வித்தியாசமாக இருந்தாலும் ஏதேதோ எல்லாம் கற்பனை பண்ணிக் கொண்டு போய் ஏமாந்துவிட்டது போல ஒரு உள்ளுணர்வு.என்னைப் போலவே பலரும் எண்ணிக் கொண்டு வந்ததை பின்னர் பார்க்கில் போயிருந்து கதைக்கும் போது அட இதாடா திறி சிஸ்ரேஸ் நாங்களும் ஏதோ என்று எண்ணிவிட்டோம் என்னும் போது எனது மனமும் ஆகா நம்மளை மாதிரியே எல்லோரும் எண்ணி வந்ததை நினைக்க கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.நாங்கள் பார்த்து ரசித்த மூன்று சகோதரிகளை நீங்களும் ரசிக்க வேண்டாமோ?

IMG_1473.jpg

  • Like 7
  • Haha 5
  • Sad 1

Share this post

Link to post
Share on other sites

ஏன் அந்த நடுவில் இருக்கிறவ மட்டும்தான் கொஞ்சம் குண்டா இருக்கின்றா, மற்ற இருவரும் ஸ்லிம்மாகத்தானே இருக்கினம்......! tw_blush:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
30 minutes ago, suvy said:

ஏன் அந்த நடுவில் இருக்கிறவ மட்டும்தான் கொஞ்சம் குண்டா இருக்கின்றா, மற்ற இருவரும் ஸ்லிம்மாகத்தானே இருக்கினம்......! tw_blush:

அக்கா தங்கச்சி என்றால் ஒரே சைசில் இருக்கவா வேண்டும்?அவுசுக்காரர் வந்தா தான் அதற்கான காரணங்கள் தெரியவரும்.

Share this post

Link to post
Share on other sites

டூ சிஸ்டர்ஸ்

மூன்று சகோதரிகளைப் பார்க்க அவ்வளவு தூரம் அலைச்சலோடு போகாமல், எம் மதுரை தமிழ் மண்ணில் முகிலோடு விளையாடி கம்பீரமாய் வீற்றிருக்கும் இந்த இரண்டு சகோதரிகளை (டூ சிஸ்டர்ஸ்) பார்க்க உங்களுக்கு கொடுப்பினை இல்லை! 

so sad indeed..! :unsure:

Pillar_Rocks_in_Kodaikanal.jpg

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

 த்ரீ  சிஸ்டேர்ஸ் க்கு    இன்னும் இரண்டு சிஸ்டேர்ஸ் இருக்கினம் போல .... பகிர்வுக்கு நன்றி 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

ஈழப்பிரியன்...எங்கட தங்கச்சிமார் கொஞ்சம்....வடிவு குறைவு தான்!

காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சல்லவா? 

கீரிமலையோடு....திருப்திப் பட்டவர்கள் நாங்கள்! இது போதும்!

கொஞ்சம் எட்டி நடந்திருந்தீர்கள் என்றால்....ஜெனலோன் கேவ்ஸ் என்று நிலங் கீழ் குகைகள் இருக்கின்றன! அழகான மலைகளின் கீழ் .....கிலோ மீற்றர்கள் நீளமான சுண்ணாம்புக் குகைகள்!

அந்த அழகைப் பருகுவதற்கு ...ஆயிரம் கண்கள் வேண்டும்!

jenolan_caves2016.jpg

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Image result for seven virgin mountains sri lanka

என்னய்யா.... மூணும், இரண்டும்... சிஸ்டேர்ஸ்.... கிழவிகளோ ?

இலங்கை மஸ்கெலியா... ஏழு கன்னி மலைகள்.... பாருங்கய்யா... பாருங்க...

70 துகளில், ஹஜ் பயணம் போய் ஊர் திரும்பிக் கொண்டிருந்த, இந்தோனேசியாவின் கருடா விமானம் மோதி அனைத்து பயணிகளும் மரணித்தால், இந்த கன்னிகள்... புகழ் பெற்று.... இன்னும் கன்னிகளாகவே உள்ளன.

so sad...tw_cry:Image result for seven virgin mountains sri lanka

Edited by Nathamuni
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, ராசவன்னியன் said:

மூன்று சகோதரிகளைப் பார்க்க அவ்வளவு தூரம் அலைச்சலோடு போகாமல், எம் மதுரை தமிழ் மண்ணில் முகிலோடு விளையாடி கம்பீரமாய் வீற்றிருக்கும் இந்த இரண்டு சகோதரிகளை (டூ சிஸ்டர்ஸ்) பார்க்க உங்களுக்கு கொடுப்பினை இல்லை! 

சரி இந்தியாவுக்கு போகும் போது போய் பார்த்தா சரி.

7 hours ago, நிலாமதி said:

 த்ரீ  சிஸ்டேர்ஸ் க்கு    இன்னும் இரண்டு சிஸ்டேர்ஸ் இருக்கினம் போல .... பகிர்வுக்கு நன்றி 

புதிது புதிதாக இன்னும் வந்து கொண்டிருக்கினம்.ஆனால் பிறதேசைத்தான் காணவில்லை.

4 hours ago, புங்கையூரன் said:

கொஞ்சம் எட்டி நடந்திருந்தீர்கள் என்றால்....ஜெனலோன் கேவ்ஸ் என்று நிலங் கீழ் குகைகள் இருக்கின்றன! அழகான மலைகளின் கீழ் .....கிலோ மீற்றர்கள் நீளமான சுண்ணாம்புக் குகைகள்!

பெடியளும் தண்ணி பார்ட்டீயும் எங்கேயும் போகவிட்டா தானே.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Nathamuni said:

இலங்கை மஸ்கெலியா... ஏழு கன்னி மலைகள்.... பாருங்கய்யா... பாருங்க...

இப்படி எத்தனை எத்தனை எமக்கு தெரியாமல் இருக்கலாம்.தகவலுக்கு நன்றி.

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, Nathamuni said:

..இலங்கை மஸ்கெலியா... ஏழு கன்னி மலைகள்.... பாருங்கய்யா... பாருங்க...

இன்னங்கப்பா 'கன்னி'யின்னு பக்கத்துல போனா 'கெழவி'யா இருக்கு..? :):grin:

Seven-Virgins-Hills-in-Maskeliya-1448873

Share this post

Link to post
Share on other sites

ஈழப்பிரியன் அண்ணா பார்த்த மூன்று சகோதரிகளில் இடப்பக்கம் இருப்பவர் ஸ்லிம்மாகவும் உயரமாகவும் இருப்பதால் மனசுக்கு பிடித்துப்போயிற்று. அவுஸ் போகும்போது அவர் கன்னியாக இருந்தால் கட்டாயம் ஒரு விசிற் அடிக்கத்தான் இருக்கு?

Share this post

Link to post
Share on other sites

அமெரிக்காவின் Utah மாநிலத்தின் கிழக்குப் பகுதி Moab என்ற நகரை அண்மித்த பகுதிகளில் ஏகப்பட்ட 'செவ்விந்திய சிஸ்டர்ஸ்' இருக்கிறார்களே ஈழப்பிரியன், அவர்களை கவர்ந்தாகிவிட்டதா..? :unsure:

Fisher_Towers_at_sunset.jpg  Moab-Arches-national-park-in-moab.jpeg

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, கிருபன் said:

ஈழப்பிரியன் அண்ணா பார்த்த மூன்று சகோதரிகளில் இடப்பக்கம் இருப்பவர் ஸ்லிம்மாகவும் உயரமாகவும் இருப்பதால் மனசுக்கு பிடித்துப்போயிற்று. அவுஸ் போகும்போது அவர் கன்னியாக இருந்தால் கட்டாயம் ஒரு விசிற் அடிக்கத்தான் இருக்கு?

அந்த சகோதரிகள் கூட இருந்த சகோதரிகள் காலப் போக்கில் அழிந்து இப்போ மூவர் மட்டுமே மிஞ்சி இருப்பதாக சொன்னார்கள்.நீங்கள் போகும் போது அதிலும் எத்தனை பேர் காணாமல் போகிறார்களோ தெரியாது.

10 hours ago, ராசவன்னியன் said:

அமெரிக்காவின் Utah மாநிலத்தின் கிழக்குப் பகுதி Moab என்ற நகரை அண்மித்த பகுதிகளில் ஏகப்பட்ட 'செவ்விந்திய சிஸ்டர்ஸ்' இருக்கிறார்களே ஈழப்பிரியன், அவர்களை கவர்ந்தாகிவிட்டதா..? :unsure:

அமெரிக்காவின் நடு மாநிலங்கள் அதிகம் படிக்காத வெள்ளையர்களைக் கொண்ட மாநிலம்.இப்போதும்இனதுவேசம் கொண்டவர்கள்.இதனால் நம்மவர்கள் மிகவும் குறைவு.ஏதாவதொரு சாட்டை வைத்து போக எமக்கும் சந்தர்ப்பம் குறைவு.(இல்லை).

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ஈழப்பிரியன் said:

அந்த சகோதரிகள் கூட இருந்த சகோதரிகள் காலப் போக்கில் அழிந்து இப்போ மூவர் மட்டுமே மிஞ்சி இருப்பதாக சொன்னார்கள்.நீங்கள் போகும் போது அதிலும் எத்தனை பேர் காணாமல் போகிறார்களோ தெரியாது.

அமெரிக்காவின் நடு மாநிலங்கள் அதிகம் படிக்காத வெள்ளையர்களைக் கொண்ட மாநிலம்.இப்போதும்இனதுவேசம் கொண்டவர்கள்.இதனால் நம்மவர்கள் மிகவும் குறைவு.ஏதாவதொரு சாட்டை வைத்து போக எமக்கும் சந்தர்ப்பம் குறைவு.(இல்லை).

ஈழப்பிரியன், மெல்பனிலும் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் கடலுக்குள் நின்று தவம் செய்கிறார்கள்!

இவர்களின் சிலர் தண்ணீருக்குள் போய் விட்டார்களாம்! இன்னும் சிலர் மண்ணுக்குள் இருக்கிறார்களாம்! கடல் நீர் கரையை அரிக்க....அரிக்க...இவர்கள் காலப் போக்கில் வெளியே வருவார்களாம்!

முன்பு இரண்டு அப்போச்தலர்களைத் தொடுத்து...ஒரு லண்டன் ப்ரிட்ஜும் இருந்தது!

இப்போது அது உடைந்து விழுந்து விட்டது!

உங்கள் திரி மூலம்...நிறைய விசயங்கள் அறியக் கூடியதாக இருக்கின்றது!

depositphotos_9377370-stock-photo-12-apo

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, புங்கையூரன் said:

உங்கள் திரி மூலம்...நிறைய விசயங்கள் அறியக் கூடியதாக இருக்கின்றது!

உண்மை தான் புங்கை மூன்று சகோதரிகளை எழுதப் போக உலகெங்கும் உள்ள சகோதரிகளை இணைத்து பார்க்க வைத்துள்ளது.மிகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

Share this post

Link to post
Share on other sites
On 04/03/2018 at 3:57 AM, ராசவன்னியன் said:

இன்னங்கப்பா 'கன்னி'யின்னு பக்கத்துல போனா 'கெழவி'யா இருக்கு..? :):grin:

Seven-Virgins-Hills-in-Maskeliya-1448873

கிழவங்களுக்கும் கன்னிகள் தான் கேட்குது :11_blush:

ஈழப்பிரியன் சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் மிச்ச பார்த்த இடங்களைப் பற்றியும் எழுதியிருக்கலாம்.

On 03/03/2018 at 7:01 PM, ராசவன்னியன் said:

டூ சிஸ்டர்ஸ்

மூன்று சகோதரிகளைப் பார்க்க அவ்வளவு தூரம் அலைச்சலோடு போகாமல், எம் மதுரை தமிழ் மண்ணில் முகிலோடு விளையாடி கம்பீரமாய் வீற்றிருக்கும் இந்த இரண்டு சகோதரிகளை (டூ சிஸ்டர்ஸ்) பார்க்க உங்களுக்கு கொடுப்பினை இல்லை! 

so sad indeed..! :unsure:

Pillar_Rocks_in_Kodaikanal.jpg

இம்மலைகளில் போய் பார்க்கமுடியுமா???? அல்லது இது சட்லைட்டில்  எடுத்ததா அண்ணா???

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கிழவங்களுக்கும் கன்னிகள் தான் கேட்குது :11_blush:

யம்மா.. நீங்க வேறை, அவர் கன்னி என்று எழுதியதை சரியன்று என சொல்ல வந்தேன்..!

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இம்மலைகளில் போய் பார்க்கமுடியுமா???? அல்லது இது சட்லைட்டில்  எடுத்ததா அண்ண???

இந்த மலை தொகுதிகள், கொடைக்கானலில் உள்ளது..  "பில்லர் ராக்ஸ்" என்று பெயர். கொடைக்கானலில் அவசியம் காணவேண்டிய பகுதி.

எத்தனை தமிழ் சினிமாக்களில் இந்த இடம் வந்துள்ளது என தங்களுக்கு தெரியாதா? :unsure:

கொடைக்கானல் மலை நகரம், மதுரைக்கும், திண்டுக்கல்லுக்கும் நடுவே உள்ளது.

Edited by ராசவன்னியன்

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, ராசவன்னியன் said:

யம்மா.. நீங்க வேறை, அவர் கன்னி என்று எழுதியதை சரியன்று என சொல்ல வந்தேன்..!

இந்த மலை தொகுதிகள், கொடைக்கானலில் உள்ளது..  "பில்லர் ராக்ஸ்" என்று பெயர். கொடைக்கானலில் அவசியம் காணவேண்டிய பகுதி.

எத்தனை தமிழ் சினிமாக்களில் இந்த இடம் வந்துள்ளது என தங்களுக்கு தெரியாதா? :unsure:

கொடைக்கானல் மலை நகரம், மதுரைக்கும், திண்டுக்கல்லுக்கும் நடுவே உள்ளது.

பாட்டுக் கட்டங்களில் மலையை சும்மா பார்ப்பதோடு சரி

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பாட்டுக் கட்டங்களில் மலையை சும்மா பார்ப்பதோடு சரி

ஓ...!  பெண்கள் ஆர்வமுடன் பார்ப்பது எவையெவை என ஆண்களுக்கு புரியாததா என்ன? :grin::)

Share this post

Link to post
Share on other sites

Capture.png

மேலே படத்தில் காட்டப்பட்ட குறுகிய பாதை வரை நடந்து செல்லலாம்.  

Edited by கந்தப்பு

Share this post

Link to post
Share on other sites

"திரி ஸ்டார்" இடத்தில் இருந்து சிலநிமிடப்பயணங்களில் Scenic World  என்ற இடத்தினை அடையலாம்.

அங்கு உலகில் மிகவும் சரிவான பாதையில் (52 பாகை)  செல்லும் புகையிரச் சுற்றுலா செல்லலாம்.

download.jpg

download_1.jpg

Share this post

Link to post
Share on other sites
35 minutes ago, கந்தப்பு said:

மேலே படத்தில் காட்டப்பட்ட குறுகிய பாதை வரை நடந்து செல்லலாம்.

வணக்கம் கந்தப்பு.இங்கு நிம்மதியாக கொஞ்ச நேரம்நின்று ரசிக்க முடியாமல் போய்விட்டது.முதலாவது மாட்டிலையான் இரண்டாவது வந்தவர்கள் அங்கிருந்து 2-3 மைல் தொலைவிலிருந்த பார்க்குக்கு போய் அனுபவிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள்.

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஈழப்பிரியன் சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் மிச்ச பார்த்த இடங்களைப் பற்றியும் எழுதியிருக்கலாம்.

மற்றய இடங்கள் எல்லாம் ஏற்கனவே புத்தகங்களிலோ தொலைக்காட்சியிலோ பார்த்திருப்பீர்கள்.அத்துடன் இந்தப் பயணம் மூன்று சகோதரிகளைப் பார்ப்போம் என்று போகும் போது இப்படி ஒரு கல்லைக் காட்டுவார்கள் என்று நினைக்கவில்லை.வெளியில் இருந்து போன எல்லோருமே அட இதுவா என்று விழுந்து விழுந்து சிரித்தோம்.அதனாலேயே இதைப் பற்றி எழுதினேன்.

Share this post

Link to post
Share on other sites

உங்களது three sisters பயண அனுபவத்தை இன்று வாசித்தேன்.. அந்த மூன்று சகோதரிகளை பார்த்து சந்தோஷமே.. அவர்களது வாழ்க்கையை பற்றியும் கதை உள்ளது.. அவர்கள் இப்பவும் அப்படியேதான் இருக்கிறார்கள்.. கடந்த வியாழன்தான் அவர்களை பார்த்துவிட்டு வந்தேன்..

Edited by பிரபா சிதம்பரநாதன்

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this