Jump to content

‘நிழல்கள்’ ரவி இப்போ ‘அனிபிக்ஸ்’ ரவி..! - ’அப்போ-இப்போ’ கதை சொல்கிறார் ‘நிழல்கள்’ ரவி


Recommended Posts

‘நிழல்கள்’ ரவி இப்போ ‘அனிபிக்ஸ்’ ரவி..! - ’அப்போ-இப்போ’ கதை சொல்கிறார் ‘நிழல்கள்’ ரவி

 
 

நிழல்கள் ரவி

“நான் நினைச்சிருந்தா என் அப்பாவின் பேச்சைக்கேட்டு கவர்மென்ட் வேலையிலேயே செட்டிலாகியிருக்கலாம். ஆனால், சினிமா மேல இருந்த ஆர்வம்தான் என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கு...” 'நிழல்கள்' ரவி பேசப்பேச அவர் நடித்த பழைய படங்கள் காட்சிகளாக நம் கண்முன் வந்துபோகின்றன. ‘நிழல்கள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்... என்று வலம் வரும் 'நிழல்கள் ரவி' எனும் ரவிச்சந்திரனிடம், ‘இப்ப என்ன பண்றீங்க’ என்று கேட்டோம்.

 

'நிழல்கள்' ரவி

“எங்க குடும்பம் மிகப்பெரியது. எங்க அப்பா-அம்மாவுக்கு மொத்தம் பத்து பிள்ளைகள். அதில் நான் கடைக்குட்டி. வீட்ல எல்லாருமே நல்லா படிப்பாங்க. நானும்கூட நல்ல ஸ்டூடன்ட்தான். எட்டாவது படிக்கும்போது ஸ்கூல்ல நடந்த டிராமாவில் 'கமலா'னு பெண் வேஷம் போட்டு நடிச்சேன். ‘டேய் நல்லா நடிக்கிறடா’னு பலரும் பாராட்டினாங்க. அந்தப் பாராட்டுதான் என்னை இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்குனு நினைக்கிறேன். 

அதுதான் என் சினிமா ஆர்வத்துக்கு ஆரம்பப்புள்ளி. அப்ப கோயம்புத்தூரில் ஒரு ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தேன். ஸ்கூல் டிராமா, சினிமா பார்க்குறதுனுதான் இருப்பேன். ‘தேசிய ஒருமைப்பாடு’ என்கிற கல்சுரல் புரோகிராமில் கலந்துக்கிட்டேன். அப்பவே எங்களுக்கு மற்ற மொழி கலாசாரங்களை எப்படிக் கத்துக்கிறதுன்னு பஞ்சாப்பில் ஒரு மாசம் பயிற்சி கொடுத்தாங்க. கவனம் திசை திரும்பினதால எஸ்.எஸ்.எல்.சி-யில் மார்க் குறைஞ்சிடுச்சு. என் அப்பாவுக்கு என்னைப் பற்றிய கவலை அதிகமாகிடுச்சு. ஏன்னா, என்கூடப் பிறந்த அண்ணன், அக்கா எல்லாரும் இன்ஜினீயரிங், ஆடிட்டர்னு பெரிய படிப்பு படிக்கும்போது கடைசி பையன் இப்படி சினிமா பைத்தியமா அலையறானேனு அவருக்குக் கவலை.

மார்க் குறைஞ்சதனால பி.யூ.சி படிக்க கோயம்புத்தூரில் எந்த காலேஜிலும் சீட் கிடைக்கலை. கடைசியா உடுமலைப்பேட்டையில் சீட் கிடைச்சது. வீட்டில் இருக்கும்போதே சரியா படிக்க மாட்டேன். உடுமலைப்பேட்டையில் வெளியில் ரூம் எடுத்து தங்கி இருந்தேன், கேட்கவா வேணும். அந்த ஊர்ல இருந்த நாலு தியேட்டர்களையும் விடலை. மேட்னி ஷோ, நைட் ஷோனு எல்லா மொழிப் படங்களையும் பார்த்துடுவேன். இதன் பலனா, பி.யூ.சி-யில் ஃபெயில் ஆனேன். மார்ச், செப்டம்பர்னு அடுத்தடுத்த அட்டெம்ப்ட்ல திரும்பவும் எழுதி பி.யூ.சி பாஸ் பண்ணினேன். 

'நிழல்கள்' ரவி

எல்.ஐ.சி-யில் வேலை பார்த்துட்டு இருந்த அப்பா அப்பதான் ரிடயர்ட் ஆனார். அந்தச் சமயத்தில் அவரை அவங்க ஆபீஸ்ல இருந்தவங்க சிவாஜி சார் நடிச்ச ‘வியட்நாம் வீடு' படத்துக்கு அழைச்சிட்டுப் போய் காட்டியிருக்காங்க. அதில் சிவாஜி சாரை அவரோட மகன்கள் மதிக்க மாட்டாங்க. சுருக்கமா சொன்னா, அதில் வர்ற ஸ்ரீகாந்த், நாகேஷ் கேரக்டர்கள் மாதிரி அவர் என்னை நினைச்சிருப்பார்னு நினைக்கிறேன். என் மேல் அப்பாவுக்கு ரொம்ப டவுட் வர ஆரம்பிச்சிடுச்சு. ஏற்கெனவே சினிமான்னாலே அவருக்குப் பிடிக்காது. இதில் இந்த டவுட் வேற  சேர்ந்துடுச்சு. 

அட்டெம்ப்ட் அடிச்சாலும் பி.யூ.சி-யில் நல்ல மார்க் எடுத்ததால கோயம்புத்தூர் காலேஜில் சீட் கிடைச்சது. ’உங்க பையன் மேக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி எடுத்தா நல்லாயிருக்கும். குறிப்பா மேக்ஸ் எடுத்தால் பேங்க்ல வேலை வாங்கிடலாம்’னு காலேஜ் பிரின்ஸ்பால் சொன்னார். ''இல்லை சார், எனக்கு எகனாமிக்ஸ் கொடுக்கங்க''னு சொன்னேன். ‘எகனாமிக்ஸில் லைஃபே கிடையாது’னு சொன்னவர், சும்மா இல்லாம, ‘ஏன் சார் உங்கள் பையன் இப்படி இருக்கான்''னு அப்பாவையும் ஏத்திவிட்டார். 

நாம எப்படியும் நடிகனாகப்போறோம். நமக்கெதுக்கு கெமிஸ்ட்ரி. எகனாமிக்ஸே போதும்னு நினைச்சேன். அப்பா எவ்வளவோ சொல்லியும் எகனாமிக்ஸ்தான் எடுத்தேன். ஆனால், எகனாமிக்ஸ் பாஸ் பண்றதுக்குள்ள நான்பட்டபாடு எனக்குத்தான் தெரியும். ஏற்கெனவே டிகிரி வாங்கலைனா சினிமா வேலைக்கு அனுப்ப மாட்டேன்னு அப்பா சொல்லியிருந்தார். அதனால எப்படியோ ஒருவழியா டிகிரியை முடிச்சேன். 

என்னை ஒரு அரசாங்க ஊழியரா ஆக்கணும்னு என் அப்பா கடைசிவரை போராடினார். “எல்.ஐ.சி-யில் வேலை வாங்கித்தர்றேன். 650 ரூபாய் சம்பளம்; ப்ளஸ் ஸ்கூட்டரும் தருவாங்க''னு கொக்கி போட்டார். என் பெரிய அண்ணன், “என் கம்பெனியில் வேலை தருகிறேன். மாசம் 450 ரூபாய் சம்பளம். கூடவே ஸ்கூட்டரும் உண்டு’ன்னார். ‘எனக்கு சினிமா போதும்’னு சொன்னேன். வீட்ல ஆரம்பமாச்சு அதகளம்.  அப்பா ஒரு கண்டிஷன் போட்டார். ’உனக்கு இரண்டு வருஷம் டைம் தரேன். அதுக்குள்ள சினிமாவில் வாய்ப்பு தேடி நீ நடிகனாயிருக்கணும். இல்லைன்னா, நான் சொல்றதைக் கேட்கணும்'னு சொல்லி சென்னைக்கு அனுப்பிவெச்சார். மாசா மாசம் கை செலவுக்கு 500 ரூபாய் பணமும் அனுப்பறதா சொன்னார். 

சென்னை வந்ததும் என் அக்கா வீட்டுக்குப் போனேன். அங்க என் அக்காவோட மாமனார் சும்மா இருக்காம எனக்காக ஏர் இந்தியாவில் வேலைக்கு ஃபார்ம் ஃபில்லப் பண்ணி அனுப்பிட்டார். நான் எக்ஸாம் எழுதி, பாஸ் வேற பண்ணிட்டேன். பிறகு அங்க இருந்தா அந்த வேலையில தள்ளிடுவாங்கனு நினைச்சு அங்க இருந்து கிளம்பிட்டேன். பிறகு என்னை சென்னையில இருந்த தன் பிரதர் வீட்ல அப்பா தங்க வெச்சார். 

'நிழல்கள்' ரவி

அது சின்ன வீடு. ஏற்கெனவே பத்துப் பேர் இருந்தாங்க. பதினோறாவது ஆளா அந்த வீட்ல நுழைஞ்சேன். அங்க இருந்துதான் அண்ணாநகர் பஸ் ஸ்டாப்பில் பஸ் பிடித்து இயக்குநர் பாலசந்தர் சாரை பார்க்கப்போவேன்; வருவேன். ஆனால், பார்க்க முடியாது. பிறகு மயிலாப்பூரில் இருந்து அப்படியே நடந்து மவுண்ட் ரோடு போய் தேவி தியேட்டர்ல  இருக்கிற தேவி கலா, பாராடைஸ்னு எல்லா தியேட்டர்கள்ல ஓடுற எல்லாப் படங்களையும் பார்ப்பேன். இப்படியே ஆறு மாசத்தை ஓட்டினேன். 

டைரக்டர் பீம்சிங்கை பார்ப்போம்னு ஆழ்வார்பேட்டையில உள்ள அவரோட வீட்டுக்குப் போவேன். வீட்டு கேட்டுக்கும், வாசலுக்கும் இடையில் பெரிய தூரம். நடந்து உள்ளே போனால் ஃபியட் கார் நிற்கிறது. வாசலில் வட இந்தியர் மாதிரி ஒருத்தர் உட்கார்ந்து இருந்தார். அவர்தான் பீம்சிங்னு நினைச்சு போனேன். ‘ஐ எம் நாட் பீம்சிங், ஹி இஸ் இன் சைட். யூகோ அண்ட் மீட்''னு சொன்னார். உள்ளே போனால், பீம்சிங் உடல்நிலை சரியில்லாமல் படுத்து இருந்தார். அவர்கிட்ட போய் விஷயத்தைச் சொன்னேன். ‘எனக்கு உடல்நிலை சரியில்லை. இப்ப படம் எடுக்குறதில்லை. உன் போன் நம்பர், அட்ரஸ் எழுதிவிட்டுப் போ'னு சொன்னார். 

பிறகு எனக்கொரு விசிட்டிங் கார்டைக் கொடுத்து, ‘கோ அண்ட் சீ ஹிம்''னு சொன்னார். கார்டில் பார்த்தால், ஃபைனாசிரியர்னு போட்டு இருந்துச்சு. அந்த ஃபைனான்ஷியர் ஆபிஸ் தேவி தியேட்டர் இரண்டாவது மாடியில் இருந்தது. அன்னைக்கு சாயங்காலமே போயிட்டேன். டைரக்டர் டி.என்.பாலு, ஶ்ரீதர், கோபாலகிருஷ்ணன்னு பலருக்கும் சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். அதை எடுத்துட்டு போய் பார்த்தேன். ஶ்ரீதரும், கோபாலகிருஷ்ணனும் படம் பண்ணலைனு சொன்னாங்க. அப்ப டி.என்.பாலு படம் பண்ணிட்டு இருந்தார். தன் படத்தில் படாபட் ஜெயலட்சுமியின் பிரதர் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்; நெகட்டிவ் ரோல். படத்தின் பெயர் 'மேற்கே உதிக்கும் சூரியன்'. 

'நிழல்கள்' ரவி

பத்து நாள் தொடர்ந்து அதில் நடிச்சேன். அடுத்த ஷெடியூல் அடுத்த  மாசம்னு சொல்லிட்டாங்க. ஜாலியாக சுத்திக்கிட்டு இருந்தேன். அப்ப என் ஃப்ரெண்ட் ஒருத்தன் ராம்அரங்கன்னு பெரிய புரொடியூசர் வீட்டில் இன்ட்டீரியர் வேலைக்குப் போயிருந்தான். நானும் கூட போயிருந்தேன். அவர் ஒரு லெட்டர் கொடுத்து 'ஏ.சி.எஸ் ஆபிஸில் அனந்துவைப் பாருங்க’னு சொன்னார். அவரைப் போய் பார்த்தேன் அனந்தும் ஒரு லெட்டர் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு ஈவினிங் பாலச்சந்தர் சாரை சந்திச்சேன். 

அனந்து கொடுத்த லெட்டரை பாலச்சந்தர் சாரிடம் கொடுத்தேன். மேலே, கீழே என்னைப் பார்த்தார். 'நீங்கள் டான்ஸ் ஆடுவீங்களா'னு கேட்டார். ''எஸ் சார்'' னு சொன்னேன். 'ஆடுவீங்களா, எப்படிக் கத்துக்கிட்டீங்க'னு கேட்டார். '' அப்படியே கத்துக்கிட்டேன் சார்''னு சொன்னேன். ’வேற என்ன செய்து இருக்கீங்க’ன்னார். “ 'மேற்கே உதிக்கும் சூரியன்'னு படம் பண்ணிட்டு இருக்கேன்”ன்னேன். ’கிரேட். அதுல இருந்து இரண்டு மூணு எடிட்டிங் ரஷ் கிடைக்குமா... அதை எடுத்துட்டு இந்த வாரத்தில் வாங்க’ன்னார். 

கமல்ஹாசனும், சரிதாவும் தெலுங்கில் பண்ணிய 'மரோசரித்ரா'வை தமிழில் ரீமேக் செய்யப் போறாங்கனு அப்பதான் தெரிஞ்சுது; 'அலைகள் எழுதிய கவிதைகள்’ இதுதான் அந்தப் படப் பெயர். கமல் கேரக்டருக்காகத்தான் என்னை கமிட் செஞ்சார். இந்த வாய்ப்பை விடக் கூடாதுனு நினைச்சு, டைரக்டர் டி.என்.பாலுவைப் பார்க்கப் போனேன். அவர் ஊட்டிக்குப் போயிட்டார்னு சொன்னாங்க. நானும் உடனே ஊட்டிக்குக் கிளம்பிப் போயிட்டேன். விஷயத்தை சொன்னேன். ‘உடனே கேட்டு அதோட ரஷ் வாங்கிக்க’னு சொன்னார். சென்னை வந்து எடிட்டிங்கில் என் க்ளோஸ் அப் சீன்ஸை கட் பண்ணி எடுத்துகிட்டு நேரா பாலச்சந்தர் சார் ஆபீஸூக்குப் போனேன்; யாருமில்லை. பத்து நாள் தொடர்ந்து அலைந்தேன். யாரையும் பார்க்க முடியலை. 

'நிழல்கள்' ரவி

சில நாள் கழிச்சு, ‘டைரக்டர் டி.என். பாலு மரணம்’னு செய்தி வருது. எனக்கு செம ஷாக். நான் நடித்து அவர் எடுத்துட்டு இருந்த 'மேற்கே உதிக்கும் சூரியன்' படமும் அப்படியே நின்னு போச்சு. பாலச்சந்தர் சார் எடுக்கிறார்னு சொன்ன படத்தையும் பாதியிலேயே டிராப் பண்ணிட்டாங்க. இதுலயே ஒரு வருஷம் ஓடிடுச்சு. எங்க அப்பா கொடுத்த டைமில் இன்னும் ஒரு வருஷம்தான் மீதி இருக்கு. அப்பதான், பாரதிராஜா சாரைப் போய் பார்க்கலாம் என ஞாபகம் வந்துச்சு. ஏற்கெனவே என் காலேஜ் நாள்களில் ஒரு முறை பாரதிராஜா சாரைப் பார்த்திருக்கிறேன். 

எல்லையம்மன் காலனியில் ஒரு மாடியில் அவருடைய ஆபீஸ் இருந்தது. அந்த மாடியின் படிக்கட்டை பார்த்தால் ஸ்டெப்ஸே நமக்குத் தெரியாது. வெறும் மனிதர்கள் செருப்புகள் மட்டும்தான் படிக்கட்டு முழுக்க இருக்கும். செருப்பு மேல் கால் வைத்துதான் மாடிக்குப் போகணும். அதுவும் ஒருவர் படி ஏறினால், இன்னொருவர் இறங்க முடியாது. ஒவ்வொருத்தவங்களாக அவர் பார்ப்பார். நானும் கூட்டத்தில் ஒருத்தனாய் நின்று வணக்கம் சொல்லிட்டே இருந்து என் முகத்தை அவர் முன்னால் பதிய வைத்துவிட்டேன். 

ஒரு நாள் ரெட் ரோஸில் 'சிகப்பு ரோஜாக்கள்' ஷூட் போயிட்டு இருந்தது. 'நினைவோ ஒரு பறவை' பாட்டு ஷூட். பாரதிராஜா அப்போது வெளியே வந்தார். தன் உதவி இயக்குநரிடம், 'நிறம் மாறாத பூக்கள்' படத்தின் ஹீரோ விஜயனுக்கு டப்பிங் கொடுக்க புது வாய்ஸ் வேணும்யா’னு சொல்றார். இந்த சான்ஸை எப்படியாவது பயன்படுத்தணும்னு நினைச்சேன். ''சார், நான் முயற்சி பண்ணட்டுமா’னு கேட்டேன். பாரதிராஜா, 'நீங்க டப்பிங் பேசுவீங்களா’னு கேட்டார். ’பேசுவேன் சார்’’னு சொன்னேன். 'காலையில் பிரசாத் ஸ்டூடியோ வந்துருங்க’னு சொல்லிட்டார். 

''காலையிலே போயிட்டேன். அங்கே பாரதிராஜா, சவுண்ட் இன்ஜினீயர் லோகநாதன், உதவி இயக்குநர் மனோபாலா, மணிவண்ணன் எல்லோரும் இருந்தாங்க. டயலாக் ஷீட் கொடுத்துப் பேசுங்கனு சொன்னார். அப்போது எல்லாம் டப்பிங் லுப் சிஸ்டம். டயலாக்ஸ் பேசினேன். உள்ளே நான் இருக்கேன். வெளியே பாரதிராஜா சார், சவுண்ட் இன்ஜினீயரிடம்,  'யார் சார் வாய்ஸ். மெட்டாலிக் வாய்ஸ்'னு சொல்றார், எனக்கு இது எல்லாம் கேட்கும்போது மனசுகுள்ளே பட்டாம்பூச்சி பறக்குது. அப்புறம் இரண்டு, மூணு சீனுக்கு டப்பிங் பேசினேன். அடுத்த நாள் காலையில் டப்பிங் ஸ்டூடியோ போனால் நான் பேசின சீனுக்கு பாரதிராஜா சார் டப்பிங் பேசிட்டு இருக்கார். எனக்கு ஒண்ணும் புரியலை. 

'நிழல்கள்' ரவி

‘நேத்துதான் மெட்டாலிக் வாய்ஸ்னு சொன்னாங்க. இன்னைக்கு சீனே வேற மாதிரி இருக்கே’னு எனக்கு ஒண்ணும் புரியலை. 11.30 க்கு டீ டைம்; ஸ்டுடியோ லைட் போட்டாங்க. பாரதிராஜா சார் முன்னாடி போய் நின்னேன். '' வாங்க, வாங்க. தப்பா எடுத்துக்கிறாதீங்க. விஜயன் வாய்ஸ் கொஞ்சம் மலையாளம் கலந்த தமிழில் பேசியிருக்கார். அதை சிங் பண்ணிப் பேசணும். அதனால் நானே டப்பிங் கொடுத்தேன். மற்றபடி உங்கள் வாய்ஸ் நல்லாயிருக்கு. நீங்க கண்டிப்பாக என் படத்தில் நடிக்குறீங்க''னு சொல்லிட்டு 'உங்களை ஒரு போட்டோ எடுக்கணும். நல்ல படிச்ச பையன், வேலையில்லாமல் கஷ்டப்படுறான் என்பது மாதிரியான கேரக்டர்'னு சொன்னார். 

உடனே மனோபாலாவைப் பிடிச்சு, டைரக்டருக்குத் தெரியாமல் என்னை போட்டோ எடுக்கக் கூப்பிட்டுப் போயிட்டேன். மனோபாலாகூட நல்ல ஃப்ரெண்ட் ஆகிட்டேன். மயிலாப்பூர் பார்க்கில் என்னை உட்கார வைத்து ''அப்படிப் பார், இப்படிப் பார்''னு மனோபாலா போட்டோ எடுத்துக் கொடுத்துவிட்டார். மனோபாலா என்னிடம், 'டேய், இதை நான் எடுத்தேன்னு சொல்லிறாத, என் வேலை போயிரும்'னு சொல்லிக் கொடுத்தார். 

அடுத்தநாள் டைரக்டரிடம் எடுத்துட்டுப்போய் காட்டினேன். ''என்னய்யா, நான் எப்படி நினைச்சேனோ அப்படியே இருக்கு. நீ என் படத்தில் கண்டிப்பா நடிக்கிற’னு பாரதிராஜா சொல்லி என்னை அனுப்பி வெச்சார். அப்பறம் ஒருநாள் திடீரென்று ஒரு பெரிய புரொடியூசர் என்னை ரூமிலிருந்து அழைச்சுட்டுப்போய், கையில் 4,000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து. ‘பாருப்பா.. என்னோட படத்தில் நீ நடிக்கிற. இந்தப் படம் முடியற வரைக்கும் நீ வேற எந்தப் படமும் பண்ண கூடாது''னு என்னிடம் கையெழுத்துக் கேட்டார். 
நான், ‘’இல்லை சார் பாரதிராஜா சார் டைரக்‌ஷனில் நடிக்கப் போறேன்''னு சொன்னேன். 'அவர் அப்படித்தான் சொல்வார். பட், பண்ண மாட்டார். நம்பாதீங்கனு' சொன்னார். 'என்னடா இது இப்படிச் சொல்றாங்க. பெரிய புரொடியூசரே இப்படிச் சொல்றார்’னு யோசித்தேன். பாரதிராஜா சொல்லியும் மூணு மாசம் ஓடிருச்சு. பாரதிராஜா ஆபீஸூக்கு போன் பண்ணினேன். ''டைரக்டர்  சார் இருக்காரா''னு கேட்டேன். ’எடிட்டிங்கில் இருக்கிறார்’னு பதில் வந்துச்சு. நேரா வடபழனி ஆர்.கே.லேபுக்குப் போனேன். இந்திப் படம் எடிட்டிங் போயிட்டு இருந்தது. பாரதிராஜாவிடம் ''பிரதர் ஐ எம் டூயிங் யுவர் ஃபிலிம் ஆர் நாட் டெல் மீ''னு கேட்டேன். ’ஏன்’னு கேட்டார். ’வெளியே பேசிக்கிறாங்க’னு சொன்னேன். 

'நிழல்கள்' ரவி

பாரதிராஜா, 'யூ டூயிங், நம்பிக்கை இல்லைன்னா உன் படத்துக்கான பாட்டு பிரசாத் ஸ்டூடியோவில் போயிட்டு இருக்கு. வா’னு சொன்னார். அடுத்த நாள் ஸ்டூடியோ போனேன்; இளையராஜா சாரை அறிமுகப்படுத்தினார். ‘பூங்கதவே...' பாட்டு ரெக்கார்டிங் போயிட்டு இருக்கு. படத்துக்கு நான்தான் ஹீரோனு எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்தில் ஸ்டூடியோ வெளியே வைரமுத்து நின்னுக்கிட்டு இருப்பார். என்னிடம் சில கவிதைகள் சொல்வார். நான் நினைப்பேன், 'என்னடா இந்த மனுஷனிடம் கவிதை ஊற்று மாதிரி கொட்டிக்கிட்டே இருக்கு'னு. அவர் பெயர்கூட அப்போது நான் கேட்டதில்லை. அவரும் ஏதோ சான்ஸ் தேடித்தான் வந்திருக்கார்னு நினைத்தேன். 'நிழல்கள்' படத்தில் எல்லா பாடல்களும் ஹிட்.

அப்புறம் கொஞ்சம் நாளில் படத்தின் ஷூட் போச்சு. படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுது. அந்த நேரத்தில் 'வறுமையின் நிறம் சிவப்பு' படமும் ரிலீஸ். இரண்டும் ஒரே கதை. 'நிழல்கள்' படம் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட். 

பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸூக்காக வெயிட் பண்ணும்போது, 'அங்கே பாருடா ’நிழல்கள்’ படத்தில் நடிச்ச பையன்’னு சொல்வாங்க. கூட்டம் சேர்ந்துடும். அப்படியே ஓடிருவேன். ஹோட்டல் போனாலும் இதே நிலைமை. ஒரே இரவில் நல்ல ஃபேமஸாகி விட்டேன். 

நிழல்கள் ரவி

அதற்கு அப்புறம்தான் சொந்தமாக பைக் வாங்கினேன். 'நிழல்கள்' படத்துக்குப் பிறகு தமிழில் எனக்கு ஆறு மாதத்திற்கு எந்தப் படங்களும் வரவில்லை. என்னடா நம்ம பாப்புலர் ஆகிட்டோம்’ படங்கள் எதுவும் வரவில்லையேனு நினைத்தேன். அப்போது ஒரு போன் வந்தது. மலையாளத்தில் பி.எம்.சுந்தரம்னு ஒரு கேமராமேன் அவர் பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்கிறார். அதில் நீங்கதான் ஹீரோனு சொல்றாங்க. மலையாளம் எனக்கு தெரியாது. பட், படம் வந்தால் சரினு ஒப்புக்கிட்டேன். அப்போது போன் செய்தவர் '' உங்களுக்கு நீச்சல் தெரியுமா''னு கேட்டார். எதுக்குனு கேட்டேன். அவர், ''இல்லை, இல்லை போன படத்தில் ஆக்டர் ஜெய்னு ஒரு பெரிய டைரக்டர் ஹீரோவா பண்ணினார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதிக்கும்போது இறந்துவிட்டார். ஹீரோ இறந்துவிட்டதால் ரொம்ப பயப்படுறாங்க. அதனால்தான் உங்களுக்கு நீச்சல் தெரியுமானு கேட்குறோம். தெரிந்தால் ஓகே, இல்லைனா வேண்டாம்''னு சொன்னார். ஏன்னா, நீச்சல் தெரியாமல் நான் நடிக்கப் போய் எனக்கு ஏதாவது ஆச்சுனா. கம்பெனி பேர் கெட்டுப் போயிருமில்லையா அதனால் யோசிச்சாங்க. 

நான் உடனே எனக்கு நீச்சல் நல்லா வரும் அப்படினு சொல்லிட்டேன். பட், உண்மையாக எனக்கு நீச்சல் தெரியாது. என் மனசுக்குள்ளே ''நீச்சல்தானேடா ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி கத்துக்கிட்டா போச்சு''னு நீச்சல் கத்துக்கிட்டு கேரளாவுக்கு ஷூட்டிங் போயிட்டேன். நான் ஹீரோ, ரகுவரன் வில்லன், ரோகினி ஹீரோயின்; படம் பேர் 'கக்கா'.  கேரளா போனால் எங்கே பார்த்தாலும் தண்ணீராக ஓடுது. சின்னப் பசங்க கூட மேலே இருந்து தண்ணீருக்குள்ளே டையிங் அடிக்கிறாங்க. ரகுவரன் என்னிடம் வந்து, ''டேய் மச்சான், உனக்கு நீச்சல் சரியாக தெரியாது பார்த்து பண்ணு''னு என்னை பயப்பட வைக்கிறான். எப்படியோ நீச்சல் தெரியாமல் படத்தில் நடித்து முடித்துவிட்டேன். படம் சில்வர் ஜூப்ளி. அப்புறம் மலையாளமும் பேசக் கத்துக்கிட்டேன். நீச்சலும் முழுச்சா அடிக்கக் கத்துக்கிட்டேன். இப்படித்தான் மலையாள சினிமா எனக்கு அறிமுகம் ஆச்சு. 

மலையாளத்தில் தொடர்ந்து எனக்கு நிறைய சினிமா வாய்ப்புகள். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா சார் என்னை அழைத்து 'மண்வாசனை'படத்தில் ஒரு கேரக்டர் ரோல்  பண்ண வைத்தார். கேரக்டர் ரோல் பண்ண யோசித்தேன். பட், என்னிடம் கேட்பதோ என்னை அறிமுகப்படுத்திய பாரதிராஜா சார், அதனால் பண்ணினேன். படம் சூப்பர் டூப்பர் ஹிட். படத்தில் நான் வருகின்ற சீன்ஸூக்கு கிளாப்ஸ் சத்தம் காதைப் பிளக்குது. தியேட்டரில். என்னடா நம்ம என்ட்ரிக்கு கிளாப் சத்தம் இப்படியானு பார்த்தால் வைரமுத்து கவிதையை நான் சொல்லிட்டு வருவேன். ஸோ, அவர் கவிதைக்குதான் கிளாப்ஸ். 

நிழல்கள் ரவி

இவ்வளவு கிளாப் சத்தத்தைப் பார்த்த புரொடியூசர், விநியோகஸ்தர்கள் ''என்னடா நிழல்கள் ரவிக்கு இவ்வளவு கிளாப்ஸா’’னு என்னை வரிசையாக அவர்களின் படங்களில் புக் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். தொடர்ந்து நிறைய படங்களில் கேரக்டர் ரோல், வில்லன் ரோல் செய்தேன். நான் ஒரு நடிகனாக வர வேண்டுமென்ற ஆசையில்தான் சென்னைக்கு வந்தேன். அது ஹீரோவாக இருந்தால் என்ன வில்லனாக இருந்தால் என்னனு ஹாப்பியாக எடுத்துக்கொண்டேன். ஏன்னா, சினிமாத் துறையில் என்னை உயர்த்தி விடுவதற்கு ஆட்கள் யாருமில்லை. நம்மதான் சொந்தக் காலில் நின்னு ஜெயிக்க வேண்டும். அதனால், வருஷத்துக்கு பத்து, பதினைந்து படங்கள் பண்ணினேன். நான் நடித்த முதல் நெகட்டிவ் கேரக்டர் படம் 'ஆராதனை'; சுமன் ஹீரோ. படத்தில் என்னை ஹீரோவாகவே கொண்டு வருவாங்க; கடைசியில் நான் வில்லனாக இருப்பேன். வில்லன் கேரக்டருக்கு எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. 

ரஜினியுடன் முதலில் சேர்ந்து நடித்த படம் 'தம்பிக்கு எந்த ஊர்'. அந்தப் படத்தில் பக்கா வில்லனாக நடித்தேன். அதற்கு அப்புறம் ரஜினியுடனே பல படங்களில் வில்லனாக நடித்து விட்டேன். அப்போதே அவர் சூப்பர் ஸ்டார். என் வாழ்க்கையில் பார்த்த ரொம்ப சிம்பிளான மனிதன். மேட்டுப்பாளையத்தில் 'தம்பிக்கு எந்த ஊர்' ஷூட்டிங் நடந்தது. அப்போது இரவு முழுவதும் ஷூட் போகும். அதை முடித்துவிட்டு பகல் ஷூட்டிங்கும் வந்துவிடுவார். மதியம் சாப்பிட்டுவிட்டு பாக்குத் தோப்பில் அப்படியே துண்டை விரித்துப் படுத்து விடுவார். அவர் படங்கள் எல்லாம் நல்ல வசூல் செய்யும். அப்போதே அவர் அப்படித்தான் இருந்தார். 

கமலுடன் 'நாயகன்'படத்தில் நடித்திருப்பேன். மணிரத்னம் சாரின் டைரக்‌ஷன். மணி சாரின் முதல் தமிழ் படமான, 'பகல்நிலவு' படத்திலும் நடித்திருப்பேன். அதன்பிறகு ’நாயகன்’ படம். கமல் சார் கொஞ்சம் ஹைட் கம்மியா இருப்பார். அவருடைய பையனாய் படத்தில் நான் நடிக்கிறேன். நான் கொஞ்சம் ஹைட்.  அப்போது என்னையும், கமலையும் நிற்க வைத்துப் பார்த்தாங்க. அப்போ, நான் கால் இரண்டையும் மண்ணுக்குள்ளே விட்டு குட்டையாக நின்னேன். அவங்க பார்த்துவிட்டு ஹைட் சரியாக இருக்குனு சொல்லிட்டாங்க. 

நிழல்கள் ரவி

ஃபர்ஸ்ட் பத்து நாள் ஷூட்டிங் போவேன்; நல்ல மேக்கப் எல்லாம் போட்டுவிட்டு உட்கார்ந்திருப்பேன். எனக்கு ஷாட்டே இருக்காது. கமல் சார் நடிக்கிறதை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பேன். அவர் நடிப்பை பார்ப்பதே அபூர்வம் இல்லையா. மணி சார் டைரக்‌ஷனே ஸ்டைலாக இருக்கும். கமல் வேற அப்பா கெட்டப். பத்து நாள் ஷூட்டிங் கமல் நடிப்பை நான் வேடிக்கை பார்த்தே முடிந்து விட்டது. 11-வது நாள் வந்தது; 'நாயகன்' ஷூட்டிங்கில் இருக்கேன். அன்னைக்கு நைட் ட்ரெயின் ஏறணும்.  தெலுங்குப் பட ஷூட்டிங்கிற்காக ராஜமுந்திரி போகணும். நானும், கெளதமியும் கிளம்பிப் போறோம், பெரிய டைரக்டர் படம் வேற. 

காலையில் ஷூட்டிங் போனவுடனே மணி சாரிடம் சொல்லி விட்டேன், நைட் ஒன்பது மணிக்கு ட்ரெயின் இருக்குனு. அவரும் ஓகே சொல்லிட்டார். ஷூட்டிங் போகுது போகுது போயிக்கிட்டே இருக்கு. மதியம் சாப்பாட்டு டைம் வந்துவிட்டது, எனக்கான ஷூட் எடுக்கவே இல்லை. நேராக என் ரூமுக்குப் போய் என் பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு வந்தேன். ஷூட்டிங் ஸ்பாட் போனால் மாலை ஏழு மணிக்குதான் எனக்கான ஷாட் வைக்குறாங்க. நைட் ஒன்பது மணிக்கு எனக்கு ட்ரெயின். எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. 

என்ன சீன்னுகூட தெரியாது. 'நாயகன்' படத்தில் ஃபர்ஸ்ட் டைம் நடிக்கப் போறேன். மணி 8.15 ஆச்சு. டயலாக் ஷீட் கையில் தராங்க. என் மண்டையில் எதுவும் ஏறவே இல்லை. கமல் ரெடியாக இருக்கிறார். அப்போது என்னை வைத்து எடுத்த சீன்தான் கமல் எனக்கு வெத்தலை கொடுப்பார். அப்பா முன்னாடி எப்படி சாப்பிடுறதுன்னு கொஞ்சம் தள்ளிப்போய் சாப்பிட்டு வருவேன். வெத்தலையை போட்டுத் துப்புற சீன். சீன் ஓகே ஆனவுடன் ட்ரெயின் பிடிக்க ஓடிவிட்டேன். படத்தில் அந்த சீன் நல்லாயிருக்கும். 

நிழல்கள் ரவி

என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் 'மறுபடியும்'.  பாலு மகேந்திரா டைரக்‌ஷனில் எனக்கு நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. 11 வருஷத்துக்கு முன்னாடி ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரைப் பார்த்து என் போட்டோ கொடுத்து உங்கள் டைரக்‌ஷனில் நடிக்கணும்னு சொன்னேன். 11  வருஷம் கழித்து அவர் என்னை 'மறுபடியும்' படத்தில் நடிக்க அழைத்தார். நிழல்கள் ரவியை வித்தியாசமாகக் காட்டினார். எனக்கே என் ஸ்டைல் பிடித்திருந்தது. அப்போதுதான் டைரக்டர் பாலாவை மீட் பண்ணினேன். பாலா சார் எப்படி அப்போது ட்ரெஸ்ஸிங் பண்ணி இருந்தாரோ அதைதான் 'மறுபடியும்' படத்தில் என் ட்ரெஸ்ஸிங்காக பாலுமகேந்திரா வைத்தார். ஏன்னா, பாலா ஜீன்ஸ் பேன்ட் போட்டு சர்ட் போட்டு கையை மடித்து விட்டிருப்பார். அப்படியேதான் என் ட்ரெஸ்ஸிங் இருக்கும். 

ஏ.வி.எம் ராஜன் ஒரு நாள் வாகை ஸ்டூடியோவுக்குக் கூப்பிட்டுப் போனார். யாரைப் பார்க்கப் போறோம்னு எனக்குத் தெரியாது. நேராகப் போனால் சிவாஜி சார் உட்கார்ந்து இருந்தார். அவரைப் பார்த்தவுடன் காலில் விழுந்துவிட்டேன். சிவாஜி சார், 'பேர் என்ன'னு கேட்டார். ’நிழல்கள்’ ரவினு சொன்னேன். ''அதென்ன ’நிழல்கள்’ ரவி, வெயில் ரவினு வெச்சுக்கோ’’னு கிண்டல் பண்ணினார். ''ராஜன் , இந்தப் பையன் மூக்கு முழியுமாய் இருக்கான் இவனையே படத்தில் நடிக்க வைத்துவிடு''னு சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷம். சிவாஜி சாரின் தம்பியாக படத்தில் நடித்தேன். வாய்ஸ் மாடுலேஷன் சிவாஜி சாரிடம்தான் கற்றுக்கொண்டேன். சிவாஜி சாரின் பையன் பிரபு உடனும் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். பிரபு பையன் விக்ரம்பிரபு உடன் 'பக்கா' படத்தில் நடித்திருக்கிறேன். சிவாஜி குடும்பத்தின் மூன்று தலைமுறைகளுடனும் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. 

எனக்கு திருமணம் ஆகி ஒரு பையன் இருக்கிறார். சமீபத்தில்தான் அவருக்குத் திருமணம் முடிந்தது.  நிறைய பிரபலங்கள் வந்து வாழ்த்தினார்கள். அப்போது என் திருமண வரவேற்பு சென்னையில் நடந்த ஞாபகம் வந்தது. என் திருமண வரவேற்பிற்கு சிவாஜி, கமல் ரஜினி என எல்லோரும் வந்திருந்தார்கள் அப்போதுதான் என் அப்பா வாழ்க்கையில் நான் செட்டிலாகி நல்லா இருக்கிறேன் என்று நம்பினார். என் பையன் அனிபிக்ஸ் என்ற பெர்யரில் அனிமேஷன் ஸ்டூடியோ வைத்திருக்கிறார். ப்ரீ டைமில் என்னை ஸ்டூடியோவில் பார்க்கலாம். 

தற்போது என் நடிப்பில் 'கரு'படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கிறேன். ரொம்ப கேஷுவலான ஒரு டைரக்டர் விஜய், அவருடன் வேலை பார்த்தது ஹாப்பி. 'தமிழ் படம் 2.0' படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். இந்திப் படங்களில் நடித்து வருகிறேன், தொடர்ந்து படங்களில் நடிப்பேன்’’ என்று சொல்லி முடித்தார் நிழல்கள் ரவி. 

 

இன்னும் சொல்வார்கள்...

https://cinema.vikatan.com/others/cinema-serials/119060-from-nizhalgal-ravi-to-anipix-ravi-appo-ippo-story-of-nizhalgal-ravi.html

Link to comment
Share on other sites

``பெண்களுக்கு ஹாஸ்டல், ஆண்களுக்கு மேன்சன் நடத்திட்டு இருக்கேன்..!’’ - `அப்போ-இப்போ’ கதை சொல்கிறார் ‘கிழக்குச் சீமையிலே’ விக்னேஷ் பகுதி-2

 

அப்போ இப்போ

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

’’ஈரோடு பக்கத்தில் சின்னக் கிராமத்தில் பிறந்தவன் நான். சின்ன வயதிலிருந்து என் அம்மா அப்பாவைப் பார்த்த ஞாபகமில்லை. ஒரு போட்டோவில் என் அம்மா, அப்பாவுடன் நான் இருப்பேன். அதைத்தான் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்’’ என்று அந்த போட்டோவை எடுத்துக் காட்டி நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார், 'சின்னத்தாயி' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 'கிழக்குச் சீமையிலே', 'பசும்பொன்', 'அப்பு' உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் விக்னேஷ். 

 

'' ஈரோடு பக்கத்தில் மூலனூரில்தான் படித்தேன். ஸ்கூல் படிக்கும்போதிலிருந்தே சினிமாவில் நடிக்கணும்னு ஆசை இருந்தது. அதனாலேயே ஸ்கூல் நாடகம், கோயில் திருவிழா எல்லாவற்றிலும் கலந்து கொள்வேன். 

நடிப்பையும் தாண்டி எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். அட்லெட் பிளேயர்;  கபடியிலும் ஃபர்ஸ்ட். பாட்டிதான் என்னை வளர்த்தாங்க. வசதி இல்லாத காரணத்தால் விளையாட்டுத் துறையில் ஜொலிக்க முடியவில்லை. ரஜினியின் தீவிர ரசிகன் நான். ஒருநாள் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு ஓடி வந்துவிட்டேன். எனக்கென்று இருந்த ஒரே ஜீவன் என் பாட்டிதான். அவரிடமும் சொல்லவில்லை. 

விக்னேஷ்

சென்னையில் நிறைய வேலைகள் செய்தேன். பெயின்ட் அடித்தேன், லாட்டரிச் சீட்டு விற்றேன். ஐந்து வருஷம் கிடைத்த வேலை எல்லாம் செய்துகொண்டிருந்தேன். அதற்கப்பறம் கேமரா மேன் தர்மாவிடம் உதவி கேமராமேனாக வேலை பார்த்தேன். உதவி இயக்குநராகவும் இருந்திருக்கிறேன். அந்த நேரத்தில் கலா மாஸ்டரிடம் டான்ஸ் க்ளாஸ் போனேன். டான்ஸ் க்ளாஸுக்கு விக்ரம், ரோகிணி, சூர்யா எல்லாம் வருவாங்க. விக்ரம்  அப்போதே சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார். நான் கிடைத்த வேலை எல்லாம் செய்து, அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து டான்ஸ் க்ளாஸுக்குப் பணம் கட்டுவேன். 

எல்லா இயக்குநர்களிடமும் சான்ஸ் கேட்டுக்கொண்டே இருந்தேன்.  அந்த நேரத்தில் என்னை பாலுமகேந்திரா சார் பிரசாந்த் நடித்த  'வண்ண வண்ண பூக்கள்' படத்துகாக முதலில் ஒப்பந்தம் செய்தார். எனக்குப் படத்தில் நடிப்பதற்காக ட்ரெய்னிங் கொடுத்தார். பாலுமகேந்திரா சார் படத்தில் நடிக்க போறேன்னு, ரொம்ப சந்தோஷமாக இருந்தேன்.
நான் நடிக்க வேண்டிய கேரக்டருக்கு நடிகை அர்ச்சனா அவங்களோட சொந்தக்காரப் பையன் ஒருத்தரை நடிக்க வைக்கணும்னு பாலு சாருக்கிட்ட சொன்னாங்க. படத்துக்கான ஷூட்டிங் நடந்து, இரண்டு நாள் ஷூட்டிங்கில் நான்தான் ஹீரோவாக நடித்தேன் . அந்த நேரத்தில் அர்ச்சனா, பாலு சாரிடம் ரொம்ப சண்டை போட ஆரம்பித்து விட்டார். உடனே, பாலு சார், ‘உனக்குப் புது பையன்தானே பிரச்னை. நீ சொன்ன பையனும் வேணாம், விக்னேஷூம் வேணாம். பிரசாந்த் நடிக்கட்டும்’னு பிரசாந்த்தை நடிக்க வைத்தார். 

டைரக்டர்  மனோஜ் குமார் சார் ஆபீஸுக்கு அடிக்கடி போயிட்டு வருவேன். அங்கே டைரக்டர் கணேஷ் ராஜ் , மனோஜ் சாரிடம் இணை இயக்குநராய் இருந்தார். கணேஷ் சாருக்கு அந்த நேரத்தில் படம் இயக்க சான்ஸ் கிடைத்தவுடன் என்னை வைத்துப் படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணி என்னைத் தேட ஆரம்பித்து விட்டார். அப்போது பாலு மகேந்திரா சார் ஆபீஸில் என்னைத் தேடியிருக்கிறார். அப்புறம் நான் இருக்கிற இடம் தெரிந்து, என்னை 'சின்னத்தாயி' படத்துக்காக ஒப்பந்தம் செய்தார்கள். 'சின்னத்தாயி' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஒருமுறை சொந்த ஊருக்குப் போனேன். 'என்னடா பண்ணுற'னு கேட்டவங்ககிட்ட, ‘படத்தில் நடிச்சிட்டு இருக்கேன்’னு சொன்னதும் யாரும் நம்பலை. அதற்கப்புறம் படம் ரிலீஸுக்குப் பிறகுதான் ஊரில் நம்புனாங்க. படம் நூறு நாள் ஓடி ஹிட் அடித்தது. 

விக்னேஷ்

அதற்கு அப்புறம்  'அம்மா பொண்ணு' படத்தில் நடித்தேன். அந்த நேரத்தில் பாரதிராஜா சார் 'கிழக்குச் சீமையிலே' படம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் என் கேரக்டரில் நடிக்க முதலில் புதுமுகம் ஒருவர் ஒப்பந்தமானார். பாரதிராஜா சாருக்கு அவருடைய நடிப்பு பிடிக்கவில்லை. அப்போதுதான் பாரதிராஜா சாருக்கு நம்மக்கிட்ட ஒரு பையன் சான்ஸ் கேட்டானேனு என் ஞாபகம் வந்திருக்கு. 'உழவன்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்  இருந்தேன்.  உடனே என்னை அழைத்து வந்து 'கிழக்குச் சீமையிலே' படத்தில் நடிக்க வைத்தார்கள். 

படத்தில் 'ஆத்தங்கரை மரமே' பாடல் நல்ல ஹிட் அடித்தது. வத்தலகுண்டு பக்கத்தில் ஓர் அருவி இருக்கும், அங்குதான் ஷூட்டிங் எடுத்தார்கள். எனக்கு இந்தப் பாட்டு கேட்கும்போதெல்லாம், பாரதிராஜா சாரோட அர்ப்பணிப்புதான் ஞாபகத்துக்கு வரும். அந்தப் பாடலின் ஷூட்டிங்கின்போது பாரதிராஜா அப்பா இறந்து விட்டார். அப்பா இறந்து நான்காவது நாள் இந்தப் பாட்டின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பமானது. அப்பா இறந்திருந்தாலும்,  கரெக்டா ஷூட்டிங் ஸ்பாட் வந்து விட்டார் பாரதிராஜா.  அதுவும் ரொமான்ஸ் பாடல் ஷூட்டிங்.  அவர்தான் பாடல் ஷூட்டிங்போது நடிக்க எனக்குச்  சொல்லிக் கொடுத்தார். 

விக்னேஷ்

'கிழக்குச் சீமையிலே' படம் ரிலீஸான நேரத்தில் எனக்கு நிறைய படங்கள் புக் ஆச்சு. அப்போது எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை. எந்த டைரக்டர் படத்தை ஒப்புக்கணும், நடிக்கணும்னு அதை எல்லாம் சொல்லித் தருவதற்கு யாருமே இல்லை. ஒரு நடிகருக்கு மேனேஜர் இருக்கணும்கிற விஷயம்கூட தெரியவில்லை. அதனாலேயே நிறைய படங்களில் கமிட் ஆகிவிட்டேன்.  கால்ஷீட் பிரச்னையின் காரணமாக பெரிய டைரக்டர் படமெல்லாம் விட்டுவிட்டேன்.

பிரபு சாரை எனக்குப் பிடிக்கும். அவருடன் 'உழவன்' படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எந்த பந்தாவும் இல்லாமல் நல்லா பழகுவார். பிரபு சார்தான் என்னை 'பசும்பொன்' படத்தில் நடிக்கக் கூப்பிட்டார். சிவாஜி சார் என்னை பார்த்துவிட்டு, ‘சின்ன பிரபு மாதிரியே இருக்க’னு சொல்லுவார். 

பாலு மகேந்திரா சார் 'ராமன் அப்துல்லா' படத்துக்காக என்னை கூப்பிட்டு ஒப்பந்தம் செய்தார். ''ஸாரிடா, ’வண்ண வண்ண பூக்கள்' படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை. அந்த நேரத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை''னு சொன்னார். பாரதிராஜா சார் ஷூட்டிங் ரொம்ப பரபரப்பாக இருக்கும். ஆனால், பாலு மகேந்திரா சார் ஷூட்டிங் அமைதியாக நடக்கும். காலையில் ஆறு மணிக்கு ஷூட்டிங் ஆரம்பித்தால் 12 மணிக்கு பிரேக் விட்டு விடுவார். அப்புறம் மூணு மணிக்கு மேல்தான் ஷூட் போவார். ரிலாக்ஸாக வேலை வாங்குவார். பாரதிராஜா சார் நடித்துக் காட்டுவார். இவர், அப்படியில்லை. 'இப்படித் திரும்பு, நில்லு'னு சொல்ல மட்டும்தான் செய்வார். கோபமே பட மாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும் தொப்பியைக் கழற்றவே மாட்டார். அவருடைய ரூமுக்குச் சென்று  அவரைப் பார்த்தால், தொப்பியை கழற்றி வைத்து விட்டு. லுங்கியுடன் உட்கார்ந்து இருப்பார். அந்த நேரத்தில் பாலு சார் அவருடைய அப்பா மாதிரி இருப்பார்.

விக்னேஷ்

இயக்குநர் பாலா, சீனு ராமசாமி, வெற்றி மாறன்... இவர்கள் அப்போது பாலு சாரிடம் உதவி இயக்குநராய் இருந்தார்கள். பாலு சார் எல்லோரையும் ஒரே மாதிரிதான் நடத்துவார்; நல்ல மனுஷன். ஆனால், எப்போதும் கொஞ்சம் சீரியஸாகத்தான் இருப்பார். 

'ராமன் அப்துல்லா' படத்தில் நடிகர் கரண் என்னுடன் நடித்திருப்பார். கரணுடன் அதற்குப் பிறகு 'கண்ணெதிரே தோன்றினாள்’ படம் பண்ணினேன். இந்தப் படம் செய்ய முக்கியக் காரணம் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் சார்தான். அவர் என்னை ஹீரோவாக வைத்து ஒரு படம் பண்ண பிளான் வைத்திருந்தார். அந்த நேரத்தில்தான் 'கண்ணெதிரே தோன்றினாள்' படம் பண்ணினார். அதனால், என்னைக் கூப்பிட்டு 'இந்தப் படத்தில் முக்கியமான ரோல் நீங்க பண்ணணும்'னு கேட்டார். அதனால் பண்ணினேன். 

பிரசாந்த் சார்தான் படத்தின் ஹீரோ. ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசவே மாட்டார். ஒரு வட்டத்துக்குள்ளே இருப்பார். ஆனால், அதற்குப் பிறகு நானும், பிரசாந்தும் 'அப்பு' படம் பண்ணினோம். அப்போது நல்லா சகஜமாகப் பழகினார். 'அப்பு' படத்தை வசந்த் சார்தான் இயக்கினார். அவருடைய மேக்கிங், பாலு சார் மேக்கிங் மாதிரியே இருக்கும். நாம எதாவது தப்பு பண்ணிவிட்டால் பக்கத்தில் இருக்கும் உதவி இயக்குநரைத்தான் திட்டுவார். அப்பவே புரிஞ்சிக்கணும், நம்மளைத்தான் திட்டுறார்னு. 

விக்னேஷ்

என் கேரியரில் மறக்க முடியாத ஒரு படம் 'சுயம்வரம்'. ஒரே நாளில்தான் ஷூட் நடந்தது. கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். ஏ.வி.எம் ஸ்டூடியோவில்தான் ஷூட் நடந்தது. ரிகர்சல் எதுவும் பார்க்கவில்லை. காலையில் வந்தவுடன் டயலாக் ஷீட் கொடுப்பாங்க. எனக்கு மூணு சீன் இருந்தது. நிறைய நடிகர். நடிகைகள் நடித்து இருந்தார்கள். இந்தப் படத்தில் நான் நெகட்டிவ் கேரக்டர் பண்ணினேன். முதலில் அப்பாஸ் நடித்த கேரக்டர்தான் எனக்குக் கொடுத்தார்கள். நான்தான் நெகட்டிவ் கேரக்டர் கேட்டு வாங்கினேன். 

ஃபுல் காமெடி ரோலில் நான் நடித்த படம் 'பொங்கலோ பொங்கல்'. ஒரு ஷாட் எடுத்தாலும் ஃப்ரேமிற்குள் குறைந்தது பத்து ஆர்டிஸ்ட்டாவது இருப்பார்கள். இந்தப் படம் பண்ணும்போதுதான் செல்போன் அறிமுகம் ஆச்சு. அப்போதெல்லாம் நான் கால் பண்ணினாலும் நமக்கு கால் வந்தாலும் காசு பிடிப்பார்கள்.  இந்த யூனிட்ல வடிவேலுக்கிட்டதான் செல் இருந்தது. அவரிடம் செல்போன் கேட்டால் கொடுக்கவே மாட்டார். தலை தெறிக்க ஓடிவிடுவார். யூனிட்டே கலகலப்பாக இருக்கும். எனக்கு சிலம்பம் தெரியும். அதனால் படத்தில் சிலம்பம் வைத்தே ஒரு ஃபைட் சீன் இருந்தது. 

விக்னேஷ்

நிறைய நடிகர்களுடன் நடித்திருந்தாலும், எனக்கு ரஜினிகூட நடிக்கவில்லையே என்ற வருத்தம் எனக்குள் உண்டு. ரஜினியின் 'அருணாச்சலம்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதுவும் ரஜினியின் தம்பியாக. ராகேந்திரா திருமண மண்டபத்திற்கு போய் அட்வான்ஸ் எல்லாம் வாங்கி விட்டேன். அந்த நேரத்தில் கால்ஷீட் பிரச்னையின் காரணமாக நடிக்க முடியவில்லை. அதை நினைத்து நிறைய நேரம் வருத்தப்பட்டிருக்கிறேன்'' என்றவரிடம், ''சில ஆண்டுகளாக சினிமாவில் பார்க்க முடியவில்லையே’' என்று கேட்டோம்.
''இடையில் படங்கள் இல்லாத காரணத்தால் பிசினஸில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். லேடீஸ் ஹாஸ்டல், ஜென்ஸ் மேன்சன் நடத்திக் கொண்டிருக்கிறேன். சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்கிறேன். அப்புறம் 'விக்னேஷ் மக்கள் இயக்கம்'னு ஓர் இயக்கம் தொடங்கியிருக்கிறேன். பழக்குடி மக்களின் வாழ்வுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். இதை வைத்து அரசியலுக்கு வர மாட்டேன். மக்கள் சுய மரியாதையுடன் வாழ வேண்டும்; அதற்காகதான் தொடங்கினேன். 

என் வாழ்க்கையில் இடையில் சில குடும்ப பிரச்னைகள் இருந்தது. 'அவன், அவள்' னு ஒரு படம் தயாரித்தேன். அதில் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. அதனால், வீட்டில் கொஞ்சம் பிரச்னை ஏற்பட்டது. பணம், உறவுகள் இடையே விரிசலை ஏற்படுத்தி விட்டது. இப்போது எல்லா பிரச்னையும் தீர்ந்து விட்டது. ஒரு மகன், மகள் இருக்காங்க; படிச்சிட்டு இருக்காங்க. அடிபட்டுதான் மேலே வந்ததால் வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொண்டேன். 

விக்னேஷ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பா.விஜய் இயக்கத்தில் அவரோடு சேர்ந்து 'ஆருத்ரா'னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். யுவன் ஷங்கர் ராஜா மியூசிக். ஒரு மெயின் ரோல் செய்திருக்கிறேன். இதற்கு அப்புறம் நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்'' என்றவர் தன் அம்மாவைப் பற்றிச் சொல்கிறார். 

’’என் அம்மாவை பார்க்க வேண்டுமென்ற ஆசை இப்போதும் இருக்கிறது. அதனால் அவர்களை இன்னும் தேடிக் கொண்டு இருக்கிறேன். என்னிடம் ஒரே போட்டோ இருக்கிறது. அதை வைத்துக்கொண்டுதான் அலைகிறேன். 'மகாநதி’ படத்தில்  கமல் எப்படி தன் மகளை தேடி அலைவரோ அதே மாதிரி என் அம்மாவைத் தேடி அலைகிறேன். என் அம்மா ஹைதராபாத்தில் இருப்பதாக தகவல் வந்தது. ஒரு வாரம் ஹைதராபாத்தின் எல்லா வீதிகளிலும் தேடி அலைந்தேன். ஆனால், கண்டுபிடிக்கவே முடியவில்லை. என் அம்மா என்னை விட்டுச் சென்றதால் அவங்க மேல் எனக்குக் கோபம் வரவில்லை. அவங்க ஏன் என்னைவிட்டுப் போனார்கள் என்பதே எனக்குத் தெரியாது. அவர்களுக்கு என்ன பிரச்னையோ. எனக்கு என் அம்மாவை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும். அவ்வளவுதான்.

 

வாழ்க்கையில் பல வலிகளைத் தாண்டி வந்தவன் நான். என் வாழ்க்கையின் சோகமான காலகட்டத்தின்போதெல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றியிருக்கிறது. சினிமாவில் பிஸியாக இருந்த எனக்கு ஒரு காலத்தில் சினிமா வாய்ப்பே வரவில்லை. ரொம்ப வருத்தப்பட்டு இருக்கிறேன். அந்தக் காலம் எல்லாம் ரொம்ப கொடுமையான காலகட்டம். திருமணம் முடிந்து  அப்போதுதான் குழந்தை பிறந்திருந்தது. ரொம்பக் கஷ்டப்பட்டேன். பிசினஸும் நஷ்டம். ஆனால், அந்த வலிகள் எல்லாத்தையும் தாண்டி வந்ததால்தான் வாழ்க்கையில்  இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன். எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை முடிவல்ல. அந்த வெற்றிடத்தைத் தாண்டி வந்துவிட்டால் எல்லாம் நல்லதாக நடக்கும்’’ என்று புன்னகை செய்கிறார் நடிகர் விக்னேஷ். 

 

இன்னும் சொல்வார்கள்...

https://cinema.vikatan.com/tamil-cinema/news/119629-actor-vignesh-runs-hostel-now-appo-ippo-series-2.html

Link to comment
Share on other sites

``சிவராத்திரி... பாட்டுல நடிக்கவேமாட்டேன்னு அடம்பிடிச்சேன்!'' - 'அப்போ இப்போ' கதை சொல்கிறார், நடிகை ரூபிணி பகுதி 3

 
 

``எனக்கு சின்ன வயதிலிருந்து பரதம் ஆடுவது பிடிக்கும். முறையாக பரதம் கற்றுக் கொண்டேன். நிறைய மேடைகளில் பரதம் ஆடியிருக்கிறேன். பரதம் ஆடுவதற்காக சின்ன வயதிலேயே உலகம் முழுக்கச் சுற்றியிருக்கிறேன். அப்போது, ஒரு ரிகர்சலுக்காக பரதநாட்டியக் கலைஞர் குருஜி கோபிகிருஷ்ணா வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது இந்தியில் பெரிய டைரக்‌டராக இருந்த ஹிரிகேஷ் முகர்ஜி அங்கே இருந்தார். அவர் மூலம் சிறுவயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன்!" - சினிமா தனக்கு அறிமுகமான தருணத்தை அப்படியே நம்மிடம் கடத்துகிறார், நடிகை ரூபிணி.

நடிகை ரூபிணி

 

``குழந்தை நட்சத்திரமாகத்தான் இந்தியில் அறிமுகமானேன். `மிலி' என் முதல் படம். அமிதாப் பச்சன் ஹீரோவாக நடித்திருந்தார். ஷீட்டிங் ஸ்பாட்டில் எத்தனையோ குழந்தைகள் இருந்தாலும், என்னை மட்டும் கூப்பிட்டு டைரக்டர் ஹிரிகேஷ் முகர்ஜி சாக்லேட் கொடுப்பார். ஏன்னே தெரியாது, எப்போதும் எனக்கு அவரிடமிருந்து ஸ்வீட் கிடைக்கும். அவருடைய அடுத்தடுத்த படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக எனக்கு வாய்ப்புகள் கொடுத்தார். அப்போ எல்லாம் `பேபி கோமல்' என்றால், ரொம்ப ஃபேமஸ். ஏன்னா, கோமல்தான் என் நிஜப்பெயர்!" - தன்னைப் பற்றிய அறிமுகத்தோடு பேச ஆரம்பிக்கிறார், ரூபிணி.  `மனிதன்', `அபூர்வ சகோதர்கள்', `மைக்கேல் மதன காமராஜன்' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர். 

``என் சொந்த ஊர் மும்பை. குடும்பத்தில் யாரும் சினிமாவைச் சேர்ந்தவர்கள் இல்லை. சினிமாவிலிருந்து எனக்கு சப்போர்ட் செய்வதற்குக்கூட யாருமில்லை. கடவுள் அருளால்தான் சினிமாவுக்குள் நான் வந்தாக நினைக்கிறேன். என் அம்மா ஒரு டாக்டர். அப்பா லாயர். மூன்று தலைமுறைகளாகவே எங்கள் குடும்பம் லாயர் குடும்பம்தான். 

பரதம் கற்றுக்கொண்டேன்; படித்தேன். சினிமாவில் நடித்தேன். நிறைய கலை நிகழ்ச்சிகளுக்குப் போவேன். அப்போது என்னைத் தேடி நிறைய சினிமா வாய்ப்புகள் வரும். ஆனா, என் அம்மா செலக்டிவாதான் நடிக்க அனுப்புவாங்க. அந்தச் சமயத்தில், `Payal ki jhankaar'னு ஒரு இந்திப் படம். ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனம்தான் தயாரிப்பு. அந்தப் படத்தில் ஒரு முக்கியமான ரோல் பண்னேன். அந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கு என்ட்ரி ஆச்சு.  

ரூபிணி

பிறகு ரஜினி சார் நடித்த இந்திப் படத்தில் நடித்தேன். அப்போதுதான் அவரை முதலில் பார்த்தேன். அப்புறம் நிறைய இடைவெளி வந்துருச்சு. அப்போது, தென்னிந்தியாவில் குச்சிப்புடி அகாடமி ஒன்று இருந்தது. அங்கே குச்சிப்புடி கற்றுக்கொள்ள வந்தேன். ஜெயலலிதா அம்மா அங்கேதான் குச்சிப்புடி கத்துக்கிட்டாங்க. அவங்களோட குச்சிப்புடி ஆசிரியர்தான், எனக்கும் ஆசிரியர்!

அப்போ அறிமுகமான பூர்ணிமா பாக்யராஜ் அக்கா என்னைப் பார்த்துவிட்டு நடிக்கக் கூப்பிட்டாங்க. பூர்ணிமா அக்காவுக்கு மும்பைதான் சொந்த ஊர். என் அம்மா பூர்ணிமா அக்காவின் ஃபேமிலி டாக்டர். அவங்கதான் என்னை பாக்யராஜ் சாரின் `சார் ஐ லவ் யூ' படத்தில் கமிட் பண்ணாங்க. அப்படியே மணிவண்ணன் சாரின் `தீர்த்தக் கரையினிலே', விஜய்காந்த் சாரின் `கூலிக்காரன்', ரஜினியின் `மனிதன்' என ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட் ஆகிவிட்டேன். எல்லாப் படமும் ஒரே வருடத்தில் ரிலீஸாகி எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. 

நான்கு படங்களையும் முடித்துவிட்டு மும்பைக்குப் போயிட்டேன். அப்போது டைரக்டர் வாசு சார் எனக்குப் போன் பண்ணினார். `என் படத்தில் நீ நடிக்கணும்'னு சொன்னார். அப்போ எனக்கு எக்ஸாம் இருந்தது. காலேஜ் படித்துக்கொண்டிருந்த சமயம் அது. வாசு சார் அவருடைய `என் தங்கச்சி படிச்சவ' படத்தில் என்னைத்தான் நடிக்க வைக்கணும்னு ரொம்ப ஆவலாக இருந்தார். என் அம்மா, `இல்லை சார், அவளுக்குப் பரிட்சை இருக்கு, நடிக்கமுடியாது'னு சொன்னாங்க. சார் விடவே இல்லை. உதவி இயக்குநரையெல்லாம் அனுப்பி ஒருவழியா என் அம்மாகிட்ட ஓகே வாங்கிட்டார். `பொள்ளாச்சியில்தான் படத்தின் ஷீட்டிங் நடக்கப்போகுது. ஷீட்டிங் முடிந்தவுடன் நேரா மும்பைக்குப் ஃபிளைட் பிடிச்சுப் போயிடலாம்'னு சொல்லி, அந்தப் படத்தில் நடிக்கவைத்தார். 

ரூபிணி

அந்த நேரத்தில் கன்னடப் படம் ஒன்றில் நான் நடித்துக்கொண்டிருந்தேன். சிக்மகளூரில் ஷூட்டிங். `என் தங்கச்சி படிச்சவ' படத்தின் தயாரிப்பாளர் மோகன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சைக்கிளிலேயே வந்து கால்சீட் வாங்கிட்டுப் போனார். அப்புறம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். 

ஆச்சர்யமாக இருக்கு... எல்லா முன்னணி ஹீரோக்கள்கூடவும் படம் பண்ணிருக்கேன். ரஜினியுடன் `மனிதன்' படம் பண்ணும்போது எனக்குப் 16 வயசுதான். அந்தப் படத்தில் இடம்பெற்ற `காளை காளை..' பாடல் நல்ல ரீச். அப்போது, ரஜினி மராத்தி மொழியில் என்னிடம், 'நீ பெரிய டான்ஸர். நான் அப்படியில்லை'னு சொல்வார். ரொம்ப டவுன்ட் டூ எர்த் பெர்சன் ரஜினி. அப்போது அவருடன் நடிக்கும்போதெல்லாம் எவ்வளவு பெரிய ஆளோட நடிக்கிறோம்ங்கிற விஷயம் எனக்குத் தெரியாமபோச்சு. `மனிதன்' படத்துக்கு முன்னாடியே ரஜினியுடன் இந்திப் படம் ஒன்றில் நடித்திருந்ததால், எனக்கும் ரஜினிக்கும் நல்ல புரிதல் இருந்தது. `மனிதன்' பெரிய சக்சஸ் ஆகும்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கவே இல்லை. இப்போது நினைத்தாலும் பிரமிப்பாகத்தான் இருக்கு. இந்தியில் இருக்கும் பலர் ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும்போது, எனக்குக் கிடைச்ச அந்த வாய்ப்பு பெருமைதான்!  

`மனிதன்' படத்துக்குப் பிறகு `ராஜா சின்ன ரோஜா' படத்திலும் ரஜினியுடன் நடித்தேன். அதில் எனக்குக் கேமியோ ரோல். ஏவிஎம் ஸ்டூடியோவில்தான் ஷூட்டிங் நடக்கும். ரஜினி சரியான நேரத்துக்கு ஸ்பாட்டுக்கு வந்துடுவார், ராத்திரி எவ்ளோ நேரம் ஆனாலும் முகம் சுளிக்காமல் நடிப்பார். கொஞ்சம்கூட பந்தா காட்டாத நடிகர். இந்தியில் இருக்கும் பெரிய நடிகர்கள் எல்லாம் இப்படி இருப்பாங்கனு சொல்லமுடியாது!" என்றவர், கமல் பற்றிச் சொல்கிறார். 

ரூபிணி

``கமல், என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி இருந்தார். கமல் சாரின் சிஸ்டர் நளினி மும்பையில் இருந்தாங்க. அவங்க நல்ல டான்ஸர். என்னை எப்போதும் பரத நாட்டிய கிளாஸூக்கு அம்மாதான் அழைத்துச் செல்வார். அப்போது நளினி அக்கா எனக்கு நல்ல பழக்கம். கமல் சார் மும்பைக்கு நளினி அக்காவைப் பார்க்க வரும்போது, கமலைப் பார்த்துப் பேசியிருக்கிறேன். இந்தியில் ஒரு டெலிவிஷன் ஷோ பண்ணேன். அப்போது என்னுடன் கமல் சாரும் அதில் நடித்தார். ஆனால், அது பாதியிலேயே நின்றுவிட்டது!. 

பிறகு, கமல் சாருடன் `அபூர்வ சகோதர்கள்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் கமல் சாரின் தயாரிப்பு. படத்தில் இரண்டு முக்கியக் கேரக்டர்கள். ஒன்று, கெளதமிக்கு மற்றொன்று உங்களுக்கு... இதில் எந்த ரோல் நீங்க பண்ணனும்னு ஆசைப்படுறீங்கனு கேட்டாங்க. நான், `அப்பு' கமலின் காதலி கேரக்டரை செலக்ட் பண்ணேன். ஏன்னா, படத்தில் அப்பு ரோல் ரொம்ப முக்கியம்ல... அதனாலதான்.  

பட ரிலீஸூக்கு முன்னாடி பலபேர், `ஏன் கெளதமி ரோல் பண்ணவில்லை'னு கேட்டாங்க. அப்பு கேரக்டரைப் பார்க்கும்போது ஒரே ஷாக். எப்படிக் கமல் இந்த கேரக்டரைப் பண்ணினார் என்று... அதற்குப் பிறகு கமலுடன் `மைக்கேல் மதன காமராஜன்' பண்னேன். இந்தப் படத்தில் `சிவராத்திரி...' பாட்டு வரும். அந்தப் பாட்டை ஷீட் பண்ணும்போது, இப்படி ஒரு கிளாமர் பாட்டுல நடிக்கமாட்டேன்னு அவ்ளோ அழுதேன். ஏன்னா, எனக்கு அந்தப் பாடல் பிடிக்கவே இல்லை. கமல் சாரிடம், `நானும், நீங்களும் கிளாசிகல் டான்ஸர். இந்தமாதிரி பாட்டு வேணாமே'னு சொன்னேன். ஆனால், அதைக் கமலும், டைரக்டரும் கேட்கவே இல்லை. ரொம்ப ரகளை பண்ணினேன். 

ரூபிணி

 

அழுதுகொண்டே ஷூட்டிங்கில் இருந்த ஊர்வசி அக்காவிடம், `இப்படி ஒரு பாடலில் நடிக்க, எனக்கு இஷ்டமே இல்லை'னு சொன்னேன். ஊர்வசி அக்கா, `கவலைப்படாத... இது வெறும் சினிமாதானே, நடி'னு சொன்னாங்க. இப்படி ஒரு பாட்டுல நடிக்க, எனக்கு ரொம்ப வெட்கமாக இருந்தது.  

இந்தப் பாட்டின் ஒரு வரியை மட்டும் 9 நாள்கள் ஷூட்டிங் செய்தார்கள். பாட்டை எடுத்து முடிப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. அதேமாதிரி, இந்தப் பாட்டில் மனோரமா ஆச்சி எனக்கு டான்ஸ் சொல்லிக் கொடுப்பதுபோல காட்சி இருக்கும். மனோரமா ஆச்சிக்குக் கமல்தான் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்தார். படத்தில் இடம்பெற்ற க்ளைமாக்ஸ் காட்சியின்போது எல்லோரும் ஜாலியாக இருந்தோம். இனி இதுமாதிரி ஒருபடம் பண்ணுவது சாத்தியமில்லை. 

ரஜினி சாரின் `உழைப்பாளி' படத்திலும் `ஒரு மைனா மைனா' என்ற பாட்டில் நடிக்கவும் எனக்கு உடன்பாடு இல்லை. வாசு சார் சொன்னதுக்காக சம்மதிச்சேன்.  

என் கரியரில் முக்கியமான படம், `பத்தினி பெண்'. ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி மேடமோட வாழ்க்கை வரலாறு இது. இந்தப் படத்திற்காக `சிறந்த நடிகை'னு மாநில அரசு விருது கொடுத்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மா கையில் கோல்டு மெடலை வாங்கினேன். அப்புறம் ஒருநாள் ஜெயலலிதா அம்மா அவரோட வீட்டுக்கு என்னை அழைத்தார், பயந்துகொண்டே போனேன். ஏனெனில், எதற்காக நம்மைக் கூப்பிட்டார் என்ற சந்தேகம். `பிளாக் கேட்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு கொடுத்த விருதை நம்மிடமிருந்து வாங்கி விடுவார்களோ?'னு நினைச்சேன். கிட்டத்தட்ட 45 நிமிடம் ஜெயலலிதா அம்மா என்னிடம் பேசினார். `நீ தென்னிந்தியப் பெண்ணா'னு கேட்டார், `இல்லை. பிறந்தது வளர்ந்தது எல்லாம் மும்பைதான்'னு சொன்னேன். `எப்படி நடிக்க வந்த'னு கேட்டார். விவரங்களைச் சொல்லிக்கொண்டே, `உங்களுக்குக் குச்சிப்புடி கற்றுக்கொடுத்த குருதான், எனக்குக் கத்துக்கொடுத்தார்'னு சொன்னேன். அப்போது என் கையைப் பிடித்துப் பேசினார். அவங்க கை மல்லிகைப் பூ மாதிரி அவ்வளவு மென்மையாக இருந்தது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் அது. 

ரூபிணி

தமிழ் சினிமாவில் ஃபேமஸாக இருக்கும்போதே அப்பா, அம்மா திருமணத்திற்கு வற்புறுத்தியதால், மும்பைக்குப் போயிட்டேன். அப்படியே கொஞ்சநாள் அமெரிக்காவுல இருப்போம்னு முடிவெடுத்திருந்த சமயம். அப்போ என் அப்பா, அம்மா, `உனக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ, அவரையே திருமணம் செய்துகொள். உனக்கு மும்பையில் இருக்கிற பையன் பிடிக்கலைனா, அமெரிக்காவுல இருந்து மாப்பிள்ளையைக் கைகாட்டினாலும் ஓகேதான்'னு சொன்னாங்க. அமெரிக்கா கிளம்பிட்டேன். ஒரு வருடம் இருந்தேன். ஆனா, எனக்கு அங்கே யாரையும் பிடிக்கலை. 1999-ல் இந்தியா வந்தேன். 2000-ல் வீட்டில் பார்த்த பையனையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். 

என் வீட்டுக்காரர் பிசினஸ்மேன். இப்போ, வாழ்க்கை ரொம்ப நல்லாப் போய்க்கிட்டு இருக்கு. ஒரு பொண்ணு இருக்கா, பெயர் அனிஷா. 13 வயசு ஆகுது. கல்யாணம் முடிஞ்சு அனிஷா பொறந்ததும், குடும்பத்தைப் பார்த்துக்கணும்னு சினிமாவுக்கு டாட்டா காட்டிட்டேன். ஆனால், பரதநாட்டியத்தை மட்டும் விட மனசு இல்லை. இன்னும் கத்துக்கிட்டு இருக்கேன், கத்துக்கொடுத்துக்கிட்டும் இருக்கேன். 

சென்னைக்கு வரும்போது சினிமா ஆட்கள் சிலரைச் சந்திப்பேன். பூர்ணிமா பாக்யராஜ் அக்காவுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறேன். ரஜினி சாரிடம் எப்போதாவது பேசுவேன். மும்பையில்தான் மது, சுதா சந்திரன் இருக்காங்க... அவர்களை அடிக்கடி பார்ப்பேன். எப்போதும் லொட லொடனு எல்லோருடன் பேசிக்கொண்டே இருப்பேன். என் பொண்ணு சொல்வா, `என்னம்மா நீ... அம்மா மாதிரியே இல்லை, இன்னும் குழந்தை மாதிரியே இருக்க!'னு கமென்ட் அடிப்பா. 

`விஜபி 2' படத்தின் புரமோஷன் வேலைகளுக்காக தாணு சார், தனுஷ் எல்லோரும் மும்பை வந்திருந்தப்போ அவங்களைச் சந்திச்சேன். ரஜினி சார் மும்பை வந்தாலும், பார்ப்பேன். நல்ல ரோல் கிடைத்தால் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்கலாம்னு இருக்கேன். அப்படியாவது சென்னைக்கு வந்துட்டுப் போகலாம்ல... பார்ப்போம், சென்னைக்கு வர்ற நாள் சீக்கிரமே வரலாம்!" என முடித்தார், நடிகை ரூபிணி. 

https://cinema.vikatan.com/tamil-cinema/news/120277-actress-rupini-says-about-her-life-journey-in-appoippo-series-3.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

"இப்போ ஊர்ல விவசாயம் பாக்குறேன்... மீண்டும் டைரக்டர்!" - 'அப்போ இப்போ' சின்னி ஜெயந்த்

 
 

இப்போ என்ன பண்றாங்க

 

"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை மியூசிக் அகாடமிக்குப் பின்னாலிருந்த புதுப்பேட்டை தோட்டத்தெரு. என் அப்பா கிடைச்ச சின்னச் சின்ன வேலைகளைப் பார்த்தார். என்கூடப் பிறந்தவங்க ஆறு பேர். நான்தான் கடைக்குட்டி. எங்க வீடு ரொம்ப சின்னதாதான் இருக்கும். மிடில் கிளாஸ் ஃபேமிலி நாங்க. என் மாமா எங்க வீட்டுக்கு மாடியில் இருந்தார். மியூசிக் அகாடமியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். எங்க அம்மாவுக்கும் கர்நாடக மியூசிக் நல்லாத் தெரியும்!" - 'அப்போ இப்போ' கதையை உற்சாகமாகச் சொல்ல ஆரம்பிக்கிறார், நடிகர் சின்னி ஜெயந்த்.

சின்னி ஜெயந்த்

நாங்க தெலுங்கு பேசுவோம். அதனால என்னை சின்னினு கூப்பிடுவாங்க. ஆனா, என் பெயர் சின்ன நாராயண சாமி. சினிமாவில் நடிகன் ஆனதுக்குப் பிறகு என் பெயரை சின்னி ஜெயந்த்னு இயக்குநர் ஜே.மகேந்திரன் சார் மாத்தி வெச்சார். நியூ காலேஜில் படிச்சேன். சின்ன வயசுல மியூசிக் அகாடமியில் நிறைய நாடகங்கள் பார்ப்பேன். என் வயசிலே இருக்கிற யாரும் இந்த அளவுக்கு நாடகங்கள், கர்நாடக மியூசிக் கேட்டவர்கள் இருக்க மாட்டாங்கனு சவாலே விடுவேன். ஏன்னா, நான் பொறந்த ஏரியாவே அந்த இடம்தானே.  ஒய். ஜி. மகேந்திரன் காலத்து நாடகங்கள், இங்கிலீஷ் நாடங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். குழந்தையா இருக்கும்போதே சிவாஜி சார் நாடகங்கள் பார்க்கப் பிடிக்கும். அவர் நாடகத்தில் நடிக்கும்போது அதைப் பார்க்க ஓடிவிடுவேன். ஒருமுறை அவர் நடித்த நாடகத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி இறந்துட்டார். உடனே, ஓ...னு அழ ஆரம்பிச்சுட்டேன். அப்போ, அங்கேயிருந்த கிதார் ஆர்டிஸ்ட் ஒருத்தர், 'ஏன் அழறீங்க'னு கேட்டார். 'சிவாஜி மாமா செத்துப் போயிட்டார்; அதான் அழறேன்'னு சொன்னேன். அதுக்கு அவர், 'டேய்... நாடகத்துல செத்த மாதிரி நடிச்சாரு. பின்னாடி போய் நில்லுங்க. அவர் உயிரோட நிற்பார். போய்ப் பாரு'னு சொன்னார். ஓடிப் போனேன். அங்கே இருந்த எல்லோரும் 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க'னு கோஷம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. நானும் அவங்ககூட சேர்ந்து, 'வாழ்க'னு கத்துனேன். அப்போ எனக்கு ஆறு வயசுதான். சிவாஜி சாரோட வெறித்தனமான ரசிகன் நான். அவர் நடித்த படங்களைப் பார்க்க ஃபர்ஸ்ட் டே போயிருவேன். அவரை ரசிச்ச அளவுக்கு நான் ரசிச்ச இன்னொரு நபர் இருக்கார். அவர்... யாருன்னா...!

"நான் இருந்த புதுப்பேட்டை கார்னர் தெரு கார்னர் வீட்டு பக்கமா ஒருத்தர் நடந்து போயிட்டிருந்தார். அவரை அடிக்கடி அந்த வீட்டில் பார்ப்பேன். ஆனா, யாருனு தெரியலை. அந்த சமயத்தில் ஸ்கூலைக் கட் அடிச்சிட்டு நண்பர்களோட சினிமாவுக்குப் போயிருந்தேன். அந்தப் படத்துல நான் பார்த்த நடந்து போன நபர் நடிச்சிருந்தார். 'என்னடா... இந்த அங்கிள் சினிமாவுல நடிச்சிருக்காரே'னு எனக்குள்ளே நினைச்சுக்கிட்டேன். அடுத்தநாள், அந்த வீட்டுப் பால்கனியில நின்னுக்கிட்டு இருந்தார். நண்பர்கள் எல்லோரும், 'வாடா அவர்கிட்ட போய்ப் பேசுவோம்'னு கூட்டிக்கிட்டு போனாங்க. கையில சிகரெட்டோட மாடியில நின்னுக்கிட்டு இருந்தார், அவர். 'அங்கிள்... நீங்கதானே அந்தப் படத்துல நடிச்சீங்க'னு கேட்டேன். 'ஆமா...'னு சொல்லிச் சிரிச்சார். அந்தச் சிரிப்புக்குச் சொந்தக்காரர்.... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! நாங்க பார்த்த அந்தப் படம், 'அபூர்வ ராகங்கள்'. ரஜினிகாந்த் சாரை சினிமாவில் நடிக்கிறதுக்கு முன்னாடியே பார்த்த என் வயது நடிகர்கள் நான் மட்டும்தான். சினிமாவில் நடிக்கிறதுக்காக ரஜினி சார் போட்டோ எடுத்து கொண்ட ஸ்டூடியோ பேர்கூட எனக்குத் தெரியும். அப்போ எனக்குப் 13 வயசு. அந்த ஸ்டூடியோ பெயர், ஜெயா ஸ்டூடியோ!  

சிவாஜி சார் நடிப்பை மத்தவங்க நடிக்கிறது கஷ்டம்.  ரஜினி சார் திரும்புனா, நின்னாகூட கை தட்டுறாங்க. அவர் பெரிய ஹீரோவா வளர வளரப் பார்த்திருக்கிறேன். அதுவரைக்கும் அவர் அந்த வீட்டிலேயேதான் இருந்தார். போயஸ் கார்டன் வீட்டுக்கு ரஜினி குடிபெயர்ந்து போகும்போது, நான் நியூ காலேஜில் படிச்சுக்கிட்டு இருந்தேன். என் காலேஜ் நாட்களில் கலை நிகழ்ச்சியில் 'சங்கராபரணம்' படத்தில் ரஜினி நடிச்சிருந்தா எப்படி இருக்கும்னு நடிச்சுக் காட்டினேன். என் நடிப்புக்குப் பசங்க, விசில் அடிச்சுக் கை தட்டுனாங்க. இப்படியும் நடிக்கலாம்னு எனக்குக் கத்துக்கொடுத்தது ரஜினி சார்தான். என் நண்பர்கள், 'நீயும் சினிமாவுக்குப் போடா... உன் தெருவில் இருந்த ரஜினி சினிமாவில் நடிகர் ஆயிட்டார், நீயும் ஆயிடலாம்!'னு சொல்வாங்க. உடனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்தேன். அங்கே டைரக்டர் ஜே.மகேந்திரன் சாரின் உதவி இயக்குநர்கள் வருவாங்க. அவங்ககிட்ட நடிக்க சான்ஸ் கேட்டுக்கிட்டே இருப்பேன். அவங்க எனக்கு வாய்ப்பு கொடுத்த படம்தான், என் முதல் படம் 'கை கொடுக்கும் கை'.

சின்னி ஜெயந்த்

நான் நடிச்ச முதல் படத்தோட ஹீரோ, ரஜினி சார். நமக்குப் பிடிச்ச ஹீரோவோட படமே நமக்கு முதல் படமா அமைஞ்சிருச்சேனு சந்தோஷப்பட்டேன். ஆனா, சின்னப் பையனா என்னைப் பார்த்த ரஜினி சாருக்கு அப்போ என்னை ஞாபகம் இல்லை.ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் 'உன்னை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே'னு கேட்டார். அதற்கு பிளாஷ்பேக் காட்சியைச் சொன்னேன். 'ஓ... அது நீதானா!'னு ஆச்சரியமா கேட்டார். நாம ஒரு விஷயத்தை ஃபாலோ பண்ணா, அது நமக்குக் கிடைச்சே தீரும்ங்கிறதுக்கு உதாரணம் இது. சினிமாவுல நடிக்க வந்ததுக்கு அப்புறம் பார்ட் டைமா மிமிக்ரி ஆர்டிஸ்டா வேலை பார்த்தேன்.  

ரஜினியுடன் நடிச்சுட்டேன், சிவாஜி சாருடன் நடிக்கணும்னு சான்ஸ் தேடிக்கிட்டே இருந்தேன். 'மலையூர் மம்மட்டியான்' படத்தோட டைரக்டர் ராஜசேகர் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். அவர் சிவாஜி சாரை வெச்சு எடுத்த படம், 'லட்சுமி வந்தாச்சு'. இந்தப் படத்தோட ஷூட்டிங்கின்போது டைரக்டர் என்னை சிவாஜி சாரிடம் அறிமுகப்படுத்தினார். மதிய சாப்பாடு முடிஞ்சதும் சிவாஜி சார் சேர்ல உட்கார்ந்துக்கிட்டே தூங்குவார். அப்போது, சிவாஜியின் உதவியாளர் திருக்கோணம் முதுகைப் பிடித்துக்கொடுத்து சிவாஜி சாருக்கு மசாஜ் பண்ணிவிடுவார். தொடர்ந்து ரெண்டுநாள் இதைப் பார்த்துக்கிட்டே இருந்தேன். மூணாவது நாள், 'கொஞ்ச நேரம் முதுகைப் பிடிச்சு விடுறியா, நான் பாத்ரூம் போயிட்டு வந்திடுறேன்'னு திருக்கோணம் சார் சொல்ல, 'நல்ல வாய்ப்பு இது!'னு உடனே சரினு சொல்லிட்டேன். சிங்கத்துக்கே மசாஜ் பண்ற வாய்ப்பை எப்படி விடமுடியும்... அவ்ளோ சந்தோஷம் எனக்கு. சிவாஜி சார் நல்லாத் தூங்கிட்டிருந்தார். கொஞ்சநேரத்துல திருக்கோணம் வந்துட்டார். நான் மசாஜ் பண்றதை நிறுத்திட்டு, திருக்கோணம் சாருக்கு வழிவிட்டேன். சிவாஜி சார் கண்ணை மூடியே சொன்னார், 'டேய்... நீயே அமுக்குடா!".

தூக்கத்துல இதை எப்போ கவனிச்சார்னு எனக்கு ஒரே ஆச்சரியம். 'தம்பிக்கு, சொந்த ஊர் குற்றாலமா?'னு கிண்டல் அடிச்சார்.அப்புறம் என்னைப்பத்தி விசாரிச்சார். அன்னைக்கு ஷூட்டிங் முடிஞ்சதும் இயக்குநர்கிட்ட, 'இவனுக்கு எத்தனை நாள் வொர்க்'னு கேட்டார். 'இன்னும் நாலு நாள் இருக்கு'னு அவர் சொல்ல, 'நான் இருக்கிறவரை இவனும் ஷூட்டிங்ல இருக்கட்டும்!'னு சொன்னார் சிவாஜி. அதுக்கு அப்புறம் அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிக்கிட்டு போய் எல்லோர்கிட்டேயும் அறிமுகப்படுத்தி வெச்சார்,  சாப்பாடு போட்டார். அவர் மகன் ராம்குமாரும் நானும் நல்ல நண்பர்கள் ஆயிட்டோம். சிவாஜி சார் தேர்தலில் நின்னப்போ, அவருக்கு ஆதரவா பிரச்சாரம் பண்னேன். தேர்தல்ல அவர் தோத்துட்டார். 'மக்களுக்குக் கொடுத்து வைக்கலை; அவ்ளோதான்!'னு நினைச்சுக்கிட்டேன். இப்போ ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்திருக்காங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம். ஒருவேளை எதிர்காலத்துல நானும் அரசியலுக்கு வரலாம். 

சின்னி ஜெயந்த்

இப்படி என் சினிமா டிராவல் போயிட்டிருந்தது. காலேஜ் ஸ்டூடண்ட் கேரக்டர்ல மட்டுமே கிட்டத்தட்ட 40 படங்கள் நடிச்சிருக்கேன். அதில், பெரும்பாலான படம்  சூப்பர் ஹிட். யூத்தாவே நிறைய படம் நடிச்சிருக்கேன். முக்கியமா, 'இதயம்' படம் எனக்கு மிகப்பெரிய பெயரை சம்பாதிச்சுக் கொடுத்த படம். படத்தோட இயக்குநர் கதிரும் நானும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்தோட கதையை என்கிட்ட சொன்னப்பவே, 'இந்தப் படம் சூப்பரா ஓடும்'னு சொன்னேன். ஒருதலைக் காதலை அழகாகச் சொன்ன படம். இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்துல நடிக்க முதல்ல சுஹாசினியைக் கமிட் பண்றதா இருந்துச்சு. அவங்க கால்ஷீட் கிடைக்காததால புதுமுக ஹீராயினை நடிக்க வெச்சாங்க. படத்துல ஹீரோயினைக் கலாய்ச்சு ரெண்டு பாட்டு இருக்கும். அந்த ரெண்டு பாட்டுக்கும் என்னை டான்ஸ் ஆடச் சொன்னாங்க. நான் முடியாதுனு சொல்லவே, பிரபுதேவா, ராஜூசுந்தரம் ரெண்டுபேரும் டான்ஸ் ஆடியிருப்பாங்க. 

 

கார்த்திக் சார்கூட நிறைய படம் பண்ணியிருக்கேன். காலேஜ் படிக்கும்போது என் பேஜ்மேட் அவர். 'கிழக்கு வாசல்' படம் பண்ணப்போ நான் கல்யாணம் பண்னேன். அரேஞ்ச் மேரேஜ். ஆனா, இப்பவும் நிறைய லவ் பண்ணிக்கிட்டு இருக்கோம். ரெண்டு பசங்க இருக்காங்க. காலேஜ் படிக்கிறாங்க. பெரியவன் பி.ஹெச்.டி பண்றான். சின்னவன் டெலாயிட் கம்பெனியில் வேலை பார்க்கிறான். பசங்களை ஏன் இவ்வளவு பெரிய படிப்பு படிக்க வைக்குறீங்கனு பலபேர் கேட்டாங்க. சினிமாவில் எப்போ வேணாலும் நடிக்கலாம், படிப்பு அப்படியில்லை. என் மனைவி ஸ்கூல் வெச்சிருக்காங்க. தவிர, ஈவென்ட் மேனேஜ்மென்ட்டும் நடத்திக்கிட்டு இருக்காங்க. நானும் அவங்ககூட சேர்ந்து அந்த வேலைகளைப் பார்த்துக்கிறேன். என்னைவிட என் மனைவி ரொம்ப பிஸி. தவிர, கோயம்புத்தூர் பக்கத்தில் அம்மா ஊரில் நான் விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்போ, அடுத்தடுத்து ரெண்டு படங்களை டைரக்‌ஷன் பண்ணலாம்னு இருக்கேன். விரைவில் அதுக்கான அறிவிப்புகள் வரும்!" நம்பிக்கையுடன் முடிக்கிறார், சின்னி ஜெயந்த். 

https://cinema.vikatan.com/tamil-cinema/news/121018-actor-chinni-jayanth-doing-farming-now-appo-ippo-series-4.html

Link to comment
Share on other sites

"அப்போ ஹீரோ... இப்போ, டீச்சர்!"- 'அப்போ இப்போ' கதை சொல்கிறார், மனோஜ் பாரதிராஜா பகுதி - 5

 
 

 

"நான் பிறந்து ஒரு வயசு வரைக்கும்தான் எங்க ஊர் தேனியில இருந்தேன். அப்புறம் சென்னைக்கு வந்துட்டோம். நான் பிறந்த அடுத்தநாள் அப்பாவோட '16 வயதினிலே' பட ஷூட்டிங் ஆரம்பிச்சது. எங்க பெரியப்பா, மாமான்னு எல்லாருக்கும் அடுத்தடுத்து வேலை செட்டாச்சு. நான் பிறந்தபிறகுதான் இதெல்லாம் நடந்ததுன்னு, எனக்கு நானே 'லக்கி'னு ஃபீல் பண்ணிக்குவேன். மூணாவது வரைக்கும் சென்னையில படிச்சேன். நிறைய சேட்டை பண்றேன்னு அப்பா ஊட்டியில இருக்குற ஸ்கூல்ல சேர்த்துவிட்டார். ரெண்டு வருடம் அங்கே படிச்சு முடிச்சுட்டு, மறுபடியும் சென்னைக்கு வந்து படிச்சேன்" - பள்ளிக் காலத்திலிருந்தே தன் ஸ்டோரியை மனோஜ் பாரதிராஜா சொல்லத் தொடங்க, நானும் அவருடைய டைம் டிராவலில் ஐக்கியமானேன்.   

மனோஜ் பாரதிராஜா

"ப்ளஸ் ஒன் படிச்சுட்டு இருந்தப்பவே எனக்கு சினிமா ஆர்வம் அதிகம். டைரக்ட் பண்ணணும்ன்னு முடிவெடுத்துட்டு, 'எனக்கு படிப்பு வரலை. எனக்கு படம் டைரக்ட் பண்ணணும்னுதான் ஆசையா இருக்கு. இனிமே ஸ்கூலுக்குப் போகலை'னு வீட்ல பிடிவாதம் பிடிச்சு, அழுதேன். ஒரு வழியா அப்பா சரினு சொன்னார். அப்பாகூட அவரோட 'கொடி பறக்குது', 'நாடோடித் தென்றல்', 'கிழக்குச்சீமையிலே'னு சில படங்கள்ல உதவி இயக்குநரா இருந்தேன். அப்பாவோ, 'நீ என்கிட்ட இருந்தா, தொழில் கத்துக்க முடியாது. என்னதான் இருந்தாலும் அப்பா - மகன் உறவு அதைத் தடுக்கும்'னு சொல்லிட்டார். அதனால, மணிரத்னம் சார்கிட்ட வொர்க் பண்றேன்னு நான் சொல்ல, அப்பா அடுத்தநாளே மணி சாரைப் பார்க்க என்னைக் கூட்டிக்கிட்டுப் போனார். அவர்கிட்ட விஷயத்தைச் சொன்னார், 'ஜாயின்ட் பண்ணிக்கோ'னு சொல்லிட்டார், மணி சார். 'பம்பாய்' படத்துல அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தேன். எனக்கு சினிமாவைப் பத்தி முழுசா பிரிச்சுக்காட்டி சொல்லிக்கொடுத்தது, மணிரத்னம் சார்தான். 

மனோஜ்

கொஞ்ச நாள்கள்லயே அம்மா, அப்பாகிட்ட இருந்து ப்ரஷர். ஏன்னா, அப்பா என்கிட்ட 'நான் நடிக்கணும்னுதான் சினிமாக்குள்ள வந்தேன். வேற வழியில்லாமல் டைரக்டர் ஆயிட்டேன். இது ரொம்பவே கஷ்டமான வேலை. நான் பட்ட கஷ்டத்தை நீ படக்கூடாது. நீ நடிக்கணும்'னு சொல்லியிருந்தார். நாலு மாசம் வீட்ல பிரளயமே வெடிச்சது. நான் டைரக்டராதான் ஆவேன்னு, வீட்ல தர்ணா பண்ணியிருக்கேன். ஒரு கட்டத்துக்கு மேல, அப்பாவுக்காக நடிப்பைக் கத்துக்கலாம்னு ஃப்ளோரிடா போய், அங்கே 'யூனிவர்சிட்டி ஆஃப் ஃப்ளோரிடா'வுல தியேட்டர் ஆர்ட்ஸ் படிச்சேன். ரெண்டு வருடம் படிச்சு முடிச்சுட்டு வந்தவுடனே, அப்பா டைரக்‌ஷன்ல 'தாஜ்மஹால்' படத்துல நடிச்சேன்!" என்று டைரக்‌ஷனில் இருந்து நடிப்புக்கு வந்த கதையைப் பகிர்ந்துகொண்டவர், தன் முதல் படமான 'தாஜ்மஹால்' பற்றி விரிவாகப் பேசுகிறார்.

"இந்தப் படத்தோட டைட்டில் ரைட்ஸ் டைரக்டர் கதிர் சார் வாங்கி வெச்சிருந்தார். அப்பா கேட்டதும், அதை விட்டுக்கொடுத்தார். எனக்காக, இந்தப் படத்துக்காக மணிரத்னம் சார், ராஜிவ் மேனன் சார்னு பெரிய லெஜண்ட்ஸ்களையெல்லாம் படத்துக்குள்ளே கொண்டுவந்தார், அப்பா. அந்தப் படத்துல தண்ணிக்கு அடியில ரெண்டு பேரும் மீட் பண்ற மாதிரியான ஐடியாஸ் எல்லாம் மணி சார் சொன்னதுதான். என்னை நடிகன் ஆக்கணும்னு அப்பா குறிக்கோளா இருந்ததுனால, நான் நடிக்கிற முதல் படம் அப்டீங்கிறதால அப்பா கதையைவிட என்மேல அதிக கவனம் செலுத்தினார். இப்படி ஒரு ஓப்பனிங் யாருக்காவது கிடைக்குமானு தெரியலை. இதை நான் எனக்குக் கிடைச்ச கிஃப்ட்னுதான் சொல்லணும். அந்தப்பட ஹீரோயின் ரியா சென்னுக்கும் எனக்கும் ஷூட்டிங் ஸ்பாட்ல செட்டே ஆகாது. அடிக்கடி சண்டை போட்டுப்போம். குழந்தைத்தனமா ஏதாவது பண்ணிட்டே இருப்பாங்க. 'தாஜ்மஹால்' பண்ணும்போது கேமரா முன்னாடி நின்னு டயலாக் பேசுறதே எனக்குப் பெரிய சவாலா இருந்துச்சு. 

மனோஜ்

நடிக்கிறதுக்கு முன்னாடி, நான் ஒரு ஆல்பம்ல பாடியிருந்தேன். ரஹ்மான் சார், அதைக் கேட்டுட்டு, பாட  வாய்ப்பு கொடுத்தார். அதுதான், 'ஏச்சி எலுமிச்சி..' பாட்டு. 'தாஜ்மஹால்' ஷூட்டிங்ல நான் ரெண்டு தடவை உயிர் பிழைச்சேன். 30 அடி ஆழத்துல இறங்கி தண்ணியில இருந்து மேல வர்றமாதிரி, ஒரு சீன். உள்ளே போனவன்... உள்ள இருக்கிற புதர்ல கால் மாட்டிக்கவே, என்னால வெளியே வரமுடியலை. கேமராமேன் அதைக் கவனிச்சுட்டு, சுத்தி இருந்த உதவி இயக்குநர்கிட்ட சொல்லி என்னைக் காப்பாத்தினார். இன்னொரு சீன்ல குதிரையில ஏறமுடியாம, கீழே விழுந்துட்டேன். முதுகெலும்புல சரியான அடி. அந்தப் படத்துக்குப் பிறகு, 'அல்லி அர்ஜுனா' படத்துலதான் கமிட் ஆனேன். ஆனா, 'சமுத்திரம்' படம் முதல்ல ரிலீஸாகிடுச்சு. 'சமுத்திரம்' படத்துல நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் சாரே என்னைக் கேட்டார். அவ்ளோ சந்தோஷம் எனக்கு... உடனே ஓகே சொல்லிட்டேன். அந்தப் படத்துல சரத் சாரும் முரளி சாரும் எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்தாங்க. முரளி சார்தான் டயலாக் டெலிவரி, மாடுலேஷன்னு நிறைய விஷயங்கள்ல உதவியா இருந்தார். சீனியரா இருந்தாலும், ஒரு பையன் புதுசா உள்ளே வர்றான்னு என்னை என்கரேஜ் பண்ணிட்டே இருப்பார். அந்தப் படத்துல இருந்துதான் கவுண்டமணி அண்ணணும் நானும் க்ளோஸாக ஆரம்பிச்சோம். அந்தப் படத்துல ஸ்பாட்ல  அவர் அடிச்ச காமெடிகள் எல்லாம் செம ஹிட். ஷூட்டிங் ஸ்பாட்லேயும் சைலைன்டா எல்லாரையும் கலாய்ச்சிடுவார். ஹாலிவுட் படங்களைப் பற்றிய விஷயங்களையெல்லாம் விரல் நுனியில வெச்சிருப்பார். எனக்கும் அவருக்குமான வேவ் லெங்த் அதுதான். அதேமாதிரி மணிவண்ணன் சார் என்னைத் தூக்கி வளர்த்தவர். அப்பப்போ என்னை ஸ்கூல்ல கொண்டுவந்து விடுறது மணிவண்ணன் சார், மனோபாலா சார், இளவரசு சார்... இவங்க மூணு பேரும்தான். ஒருமுறை நான் வேடிக்கை பார்த்துட்டு, 'அது ஏன் இப்படி இருக்கு, இது ஏன் அப்படி இருக்கு'னு கேள்வி கேட்டுக்கிட்டே இருந்திருக்கேன். என் டார்ச்சர் தாங்கமுடியாம தலையில கொட்டிட்டாராம் மணிவண்ணன் சார். நான் அழுததும், 'டேய் தம்பி, அப்பாக்கிட்ட சொல்லிடாதே'னு சொன்னாராம். இதையெல்லாம் நான் நடிக்க வந்தபிறகு, என்கிட்ட சொல்லி சிரிச்சுக்கிட்டு இருந்தார், மணிவண்ணன் சார். 

மனோஜ்

'வருஷமெல்லாம் வசந்தம்' படத்துல 'இந்தக் கேரக்டருக்கு நீதான் வேணும்'னு சொல்லி, ரவிசங்கர் சார் நடிக்க வெச்சார். செளத்ரி சாருக்கும் ரவிசங்கர் சாருக்கும்தான் நன்றி சொல்லணும். உண்மையிலேயே இந்தப் படத்துல என்ஜாய் பண்ணி நடிச்சேன். எனக்கு என் கரியர்லேயே பிடிச்ச படம் இதுதான். அப்பா டைரக்‌ஷன்ல 'ஈரநிலம்' படத்துல சுஹாசினி மேடம்கூட நடிக்கும்போது, மணி சார் மனைவிங்கிறதுனால எனக்கு அவங்கமேல ஒருவித பயம் இருக்கும். அதையெல்லாம் க்ளியர் பண்ணி எனக்கான ஸ்பேஸ் கொடுத்து நடிக்க வெச்சாங்க. அப்படியே சினிமா வாழ்க்கை போயிட்டு இருக்கும்போதுதான், நந்தனாவை மீட் பண்னேன். எங்களுக்குள்ள நல்ல நட்பு இருந்தது, அதுவே காலப்போக்குல காதலா மாறிடுச்சு. இந்த விஷயம் என் ஃப்ரெண்டு மூலமா அப்பாவுக்குத் தெரிஞ்சிடுச்சு. அவர், 'பொண்ணு பார்க்கப் போலாம். அங்கே போய் பிடிக்கலைனு சொல்லிட்டு வந்திடலாம்'னு ப்ளான் பண்ணி பெரியவங்க எல்லாம் சேர்ந்து போனாங்க. அங்கே போய் அவளைப் பார்த்தவுடனேயே எல்லோரும் ஆஃப் ஆகிட்டாங்க. அவங்க வீட்ல எல்லோருமே நல்லாப் படிச்சவங்க. இதைவிட அவனுக்கு நல்ல பொண்ணு கிடைக்காதுன்னு எங்க பெரியப்பா சொல்ல, அதற்குப் பிறகுதான் எங்க அப்பா போய் பொண்ணைப் பார்த்திட்டு 'என் பையன் தங்கமான பையன். உன்னை நல்லாப் பார்த்துக்குவான். நீ எங்க வீட்ல சந்தோஷமா இருக்கலாம்'னு சொல்லிட்டு வந்துட்டார். அப்புறம் கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் நடக்க ஆரம்பிச்சுது; கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சது." என்று கல்யாணக் கதையை உதட்டோரப் புன்னகையோடு உதிக்கிறார், மனோஜ்.  

மனோஜ்

"கல்யாணத்துப் பிறகு சினிமாவுல கொஞ்சம் பெரிய கேப். பிறகு, 'அன்னக்கொடி' படத்துல அசோஸியேட் டைரக்டரா வொர்க் பண்னேன். அப்போ, 'இப்படி ஒரு கேரக்டர் இருக்கு. என்ன பண்ணலாம்னு தெரியலை. படத்துல மொத்தமே 15 நிமிடம்தான் வருவான். ஆனா, நல்ல கேரக்டர்'னு அப்பா சொன்னார். 'நான் பண்ணவா?'னு கேட்டேன். 'நீ அதைப் பண்ணிடுவியா?'னு கேட்டார். ரெண்டுபேரும் அதை அப்படியே விட்டுட்டோம். ஒருநாள் அதுக்கான போட்டோஷூட் பண்னோம். அப்புறம், அதைப் பத்தி நானும் பேசலை; அவரும் பேசலை. பேக்அப் சொல்றதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னைக் கூப்பிட்டு, 'அந்த காஸ்ட்யூமைப் போட்டுட்டு வா'னு சொன்னார். இப்படித்தான் கிடைச்சது, 'அன்னக்கொடி' வில்லன் கேரக்டர். அப்பா ஒருநாள் போன் பண்ணி, 'டேய்... எடிட்டிங் முடிஞ்சு நீ நடிச்ச சீன்ஸ் எல்லாம் பார்த்தேன். சூப்பரா நடிச்சிருக்க, வாழ்த்துகள். நீ நல்ல நடிகன். ஆனா, எங்கேயோ உனக்கு லாக் ஆகியிருக்குடா'னு சொன்னார். என் வாழ்க்கையில அந்தப் பாரட்டைத்தான் பெருசா நினைக்கிறேன்.

'நீங்க மிஸ் செய்த படங்கள் ஏதாவது இருக்கா?' என்று கேட்க, "நான் மிஸ் பண்ண படங்கள்னு பார்த்தா, 'குஷி', 'கற்றது தமிழ்' இந்த ரெண்டும்தான். பேக்ரவுண்ட் இருந்து சினிமாவுக்குள்ள வந்து நிறைய பேர் சக்சஸ் ஆகலை. அதுக்கு நானும் ஒரு உதாரணம். நான் சக்சஸ் ஆகாததுக்கு காரணம், நான் எடுத்த சில முடிவுகள்தான். ஒருத்தர் சக்சஸ் ஆகுறதுக்கு உழைப்போட சேர்ந்து நேரமும் அதிர்ஷ்டமும் தேவை" என்றவர், 'பணத்தோட அருமையைத் தெரிஞ்சுக்கோ, உன்னைவிட யாரும் பெரியவனும் இல்லை; உன்னைவிட யாரும் சின்னவனுமில்லை' இந்த ரெண்டைத்தான் அடிக்கடி என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பார்" என்று அப்பா சொன்ன அறிவுரையை நினைவு கூர்ந்தார்.   

மனோஜ்

"ரெண்டு பெண் குழந்தைகள். பெரியவள் அர்த்திகா, சின்னவள் மதிவதனி. சின்னப் பொண்ணுக்குப் பேரு வெச்சது அப்பாதான். செம வாலு. எங்க அப்பா டென்ஷன்ல இருந்தார்னா, ஓடிப் போய் கட்டிப் பிடிச்சு கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்து, அப்பாவைக் கூல் பண்ணிடுவா. மதிவதனிக்கு மட்டும்தான் அந்த டெக்னிக் தெரியும். பெரியவள் ரொம்பப் பொறுப்பு. திடீர்னு 'அப்பா எனக்கு பைலட் ஆகணும்'னு சொல்வா. 'சரி'னு சொன்னா, 'இப்ப இருந்தே டிரை பண்ணாதான் அச்சீவ் பண்ண முடியும்'னு சொல்லிக்கிட்டே இருப்பா. அப்பாவோட 'என் இனிய தமிழ் மக்களே' டயலாக்கை டப்ஸ்மாஷ் பண்ணி, அதை அவர்கிட்ட காட்டி விளையாடுறதுதான் இவங்களோட வேலை. அதைப் பார்த்துட்டு நாள் முழுக்கச் சிரிச்சுக்கிட்டு இருப்பார்" என்று தன் மகள்களின் சேட்டைகளை நினைவு கூர்ந்தவர், தற்போதைய செயல்பாடுகளைச் சொன்னார்.
 

மனோஜ்

"இப்போ, 'பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் சினிமா'வில ஆக்டிங் கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்கேன். 'சிவப்பு ரோஜக்கள் 2' படத்துக்கு நானும் டைரக்டர் ராமும் சேர்ந்து ஸ்கிரிப்ட் எழுதினோம். அதைப் படமா எடுக்கணும்னு நான் பிளான் பண்ணும்போதெல்லாம் ஏதோ ஒரு தடங்கல் வந்திடுது. அதனால, அதை வெப் சீரியஸா எடுக்கலாம்னு இருக்கேன். அதுக்கான வேலை போயிட்டு இருக்கு. அதுல, அப்பா 'இயக்குநர் பாரதிராஜா'வாவே வர்றார். அவர் இப்போ ஆக்டிங்ல ரொம்ப பிஸி. அதனால, அவர் கால்ஷீட்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். அதுதவிர, த்ரில்லர், ஹியூமர்னு ரெண்டு வகையான ஸ்கிரிப்ட் எழுதி வெச்சிருக்கேன். அதைப் படமாக்குற வேலைகளும் போயிட்டு இருக்கு. தொடர்ந்து எனக்கான வாய்ப்புகள் வரும்போது நடிப்பேன். ஆனா, என் கனவு முழுக்க ஸ்டார்ட்... கேமரா... ஆக்‌ஷன் சொல்றதுலதான் இருக்கு!" என்கிறார், உறுதியுடன்.

 
 

வாழ்த்துகள் ப்ரோ! 

https://cinema.vikatan.com/tamil-cinema/interview/121721-manoj-bharathiraja-in-appo-ippo-series-5.html

Link to comment
Share on other sites

``அப்போ 'சக்கரை' இப்போ `சர்வம் தாள மயம்'! " - 'அப்போ இப்போ' வினீத். பகுதி 6

 
 

appoo_ipoo_13169.jpg

 இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

'ஆவாரம் பூ' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 'ஜென்டில்மேன்', 'வேதம்', 'சந்திரமுகி' எனப் பல படங்களில் நடித்தவர், நடிகர் வினீத். நல்ல நடிகர் மட்டுமின்றி பரதநாட்டியக் கலைஞரான வினீத் இப்போ என்ன பண்றார்... சந்தித்தோம். 

நடிகர் வினித்

''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கேரளா. ஆனால், எனக்குத் தமிழ் ரொம்பப் பிடிக்கும். சென்னையில்தான் பி.காம் முடித்தேன். சின்ன வயதிலிருந்தே பரதநாட்டியம் கற்றுக்கொண்டேன். என் பரதநாட்டிய குரு, கலாமண்டலம் சரஸ்வதி. என் சினிமா கரியரைத் தொடங்கி வைத்தது, எம்.டி.வாசுதேவன் நாயர். சரஸ்வதியோட கணவர். என் முதல் மலையாளப் படமான 'இடநிலங்கள்' படத்துக்கு ஸ்கிரிப்ட் வாசுதேவன் சார்தான். அவர்தான் எனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இதில் மம்முட்டி, மோகன்லாலுடன் நடித்தேன். எனக்குச் சின்ன ரோல்தான். ஆனா, முக்கியமான ரோல்!. 

என் ரெண்டாவது படத்தில், ஹீரோ சான்ஸ் கிடைத்தது. அதற்கும் வாசுதேவன் சார்தான் ஸ்க்ரிப்ட் ரைட்டர். பிறகு தொடர்ந்து பல மலையாளப் படங்கள் நடிச்சுக்கிட்டு இருந்தேன். தமிழில் 'ஆவாரம் பூ' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  இந்தப் படத்திற்காக ஃபிலிம் பேன்ஸ் அசோசியேஷன் தமிழ்நாடு சார்பாக சிறந்த அறிமுக நாயகன் விருது கிடைத்தது. 

'ஆவராம்பூ' படத்தின் வாய்ப்பு இயக்குநர் பரதன் மூலமாகக் கிடைத்த வாய்ப்பு. ஏற்கெனவே 'வைஷாலி' என்ற ஒரு மலையாளப் படத்தை பரதன் இயக்கினார். அந்தப் படத்தின் ஆடிஷனுக்காக நான் போனேன். ஆனால், சில காரணங்களால் முடியாமல் போனது. பிறகு, 'பிராணமம்' என்ற மலையாளம் படத்தை பரதன் இயக்க, நான் நடித்தேன். மம்முட்டி, சுஹாசினி நடித்த படம். படத்தில் இடம்பெற்ற நான்கு இளைஞர்கள் கேரக்டரில், நானும் ஒருவன்.  

நடிகர் வினித்

சென்னை நியூ காலேஜில் பி.காம் படித்துக்கொண்டிருந்த சமயம் அது. கேரளாவில் ஒரு நடிகராக என்னைப் பலருக்கும் தெரியும். அதனால், சென்னையில் படித்தேன். அந்த நேரத்தில்தான் பரதநாட்டியப் பயிற்சி பெற்றேன். ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் பரதன் சாரை சந்தித்தேன், அவரது 'ஆவாரம் பூ' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 'ஆவாரம்பூ' படத்தில் இடம்பெற்ற ஹீரோவின் நண்பர் கேரக்டருக்குத்தான் என்னை முதலில் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு, என்ன நினைத்தாரோ... என்னை ஹீரோ ஆக்கிவிட்டார். ஹீரோ 'சக்கரை' கேரக்டருக்கு என்னை போட்டோஷூட் செய்த தேதிகூட எனக்கு ஞாபகம் இருக்கிறது, மே 21, 1991-ல்தான் அந்த போட்டோஷூட் நடந்தது. நாள் மறக்காமல் இருக்கக் காரணம், அன்றைய தினம்தான் ராஜீவ்காந்தி  கொல்லப்பட்டார். அன்று நடந்த பல வன்முறை நிகழ்வுகளில் இருந்து என்னைப் பாதுகாத்தது, இயக்குநர் பரதன் சார்தான். 

'ஆவாரம் பூ' பெரிய வெற்றியைப் பெற்றது. மலையாளத்திலும் தொடர்ந்து படங்களில் நடித்தேன். திடீரென ஒருநாள் இயக்குநர் பாலசந்தர்  அலுவலகத்தில் இருந்து அழைப்பு. 'பாலசந்தர் பேசுறேன்' என்ற குரலைக் கேட்டவுன் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. 'உன் படம் பார்த்தேன், ரொம்ப நல்ல நடிச்சிருக்க... நான் ஒரு படம் பண்றேன். அதுல நீ நடி. அடுத்து எப்போ சென்னைக்கு வர்றியோ, அப்போ வந்து மீட் பண்ணு' என்றார். சென்னை வந்து பாலசந்தர் சாரை சந்தித்தேன். 'ஜாதிமல்லி' கதையைச் சொன்னார். என் கேரக்டர் பெயர், 'மாஸ்கோ'. இயக்குநர் சிகரம் படத்தில் நான் நடித்தது அவ்ளோ சந்தோஷம். 

பிறகு, 'ஜென்டில்மேன்' பட வாய்ப்பு வந்தது. குஞ்சுமோன் சார் மூலமாகக் கிடைத்த வாய்ப்பு இது. அதற்கு முன் ஷங்கர் சாரை நான் பார்த்ததில்லை. ஜீவா சார்தான் கேமராமேன். மனோராமா ஆச்சிகூட இந்தப் படத்தில் நடித்தது எனக்குப் பெருமையா இருந்தது. ஏனெனில், எனக்கு ஆச்சி மனோரமாவின் நடிப்பு ரொம்பப் பிடிக்கும். முதல் முறையா இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் அவரை சந்தித்தேன்.  

படத்தில் நான் தற்கொலை செய்துகொள்ளும் ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியை எடுக்கும்போது, எனக்கு ரொம்பப் பயம். ஏனெனில், அந்தக் காட்சியைப் படமாக்கும்போது, பஸ் ரீவர்ஸில் போகும், என் தலை பஸ் சக்கரத்தின் அடியில் இருக்கும். கொஞ்சம் தவறினாலும், என் தலை அவ்வளவுதான். அதனால், ரொம்பப் பயந்தேன். அர்ஜூன் சாருடன் 'ஜென்டில் மேன்' படத்துக்குப் பிறகு 'வேதம்' படத்தில் நடித்தேன். ஒரு நடிகராக அவரைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இயக்குநராக முதல் முறை பார்த்தது இந்தப் படத்தில்தான். அர்ஜூன் சார் நடிப்பைச் சொல்லித்தரும் விதம் ரொம்ப அழகாக இருக்கும். பாடல் காட்சிகளுக்குக்கூட மேனரிஸங்களைச் சொல்லிக்கொடுத்து அசத்துவார். 

என் கரியரில் மறக்கமுடியாத படம், 'மே மாதம்'. ரஹ்மான் சாரோட இசையில் படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட். பிறகு, 'காதல் தேசம்' எனக்குப் பெரிய ரீச் கொடுத்தது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது, 'காதல் தேசம்'.  குஞ்சுமோன் சார் மூலமாகத்தான் 'காதல் தேசம்' பட வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

அதற்குப் பிறகு, எனக்கு தமிழைவிடத் தெலுங்கில் பல படங்கள் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கில் நடித்தேன். 

வினித்

'காதல் தேசம்' படத்தின் ஷூட்டிங்கின்போதே படத்தில் நடித்த தபு, அப்பாஸ் உள்பட அனைவரும் நல்ல நட்போடு இருந்தோம். ரிலீஸுக்குப் பிறகும் அந்த நட்பு தொடர்ந்தது. வாய்ப்பு கிடைக்கும்போது சந்தித்துப் பேசிக்கொண்டோம். அப்பாஸ் தற்போது நியூசிலாந்தில் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில்தான் அவருடன் பேஸ்புக்கில் தொடர்புகொண்டு பேசினேன். அவருடைய குழந்தைகள் எல்லாம் நன்றாக வளர்ந்துவிட்டார்கள். சமீபத்தில் தபுவை கேரளாவில் என் உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பார்த்துப் பேசினேன். அப்பாஸ், தபு இருவரையும் இத்தனை வருடம் கழித்துப் பார்த்துப் பேசினாலும் நேற்று பழகியது மாதிரிதான் இருக்கும்!" என்ற வினீத், நடிகர் நாசரைப் பற்றி சொல்கிறார்.  

வினித்

``தங்கமான மனிதர் நாசர் சார். அவருடைய எளிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோடு அவுட்டோர் படப்பிடிப்புக்குப் போவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு மரத்தைப் பார்த்தால், அதன் வேர் வரை ஆராயும் இயற்கை விரும்பி அவர். அவருடைய இயக்கத்தில் நான் நடித்திருக்கிறேன். நல்ல நண்பர்!" என்றவரிடம், 'சந்திரமுகி' அனுபவங்களைக் கேட்டேன். 

''ரஜினி சாருடன் எனக்கு முதல் படம், 'சந்திரமுகி'. எனக்கு சினிமாவில் அவருடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அது இந்தப் படத்தின் மூலமாகத்தான் நிறைவேறியது. 'ரா...ரா...' பாடல் ஷூட்டிங்கின்போது நானும், ஜோதிகாவும் ஒத்திகை பார்த்துக்கொண்டிருப்போம். அப்போது, அங்கே இயக்குநர் வாசு, ரஜினி, பிரபு எல்லோரும் இருப்பார்கள். ஜோதிகாவுடன் படத்தில் இடம்பெறும் இந்த முக்கியமான பாடலில் நடித்தது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. ஜோதிகா கிளாசிக் நடனம் கத்துக்கிட்டதில்லை. ஆனால், படத்தில் பிரமாதமாக ஆடியிருந்தார். 'சந்திரமுகி' வாழ்க்கையில் மறக்கமுடியாத படம்!" என்றவர், 'இப்போ' கதைகளைச் சொன்னார்.  

வினித்

 

``எனக்குத் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை இருக்கு. குடும்பத்தோடு சென்னையில் செட்டில் ஆகிவிட்டேன். மனைவி பரதநாட்டியப் பள்ளி நடத்திக்கிட்டு இருக்காங்க. என் பொண்ணு பரதநாட்டியம் கத்துகிட்டு இருக்காங்க. தொடர்ந்து மலையாளப் படங்கள் பண்ணினேன். தமிழில்தான் 8 வருட இடைவெளி விழுந்துவிட்டது. என் பரதநாட்டியமும் மேடைகளில் அரங்கேறிக்கிட்டுதான் இருக்கு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ராஜீவ்மேனனின் 'சர்வம் தாள மயம்' படத்தில் நடித்திருக்கிறேன். ஜி.வி.பிரகாஷ்தான் ஹீரோ. முக்கியமான, சவாலான கேரக்டர் எனக்கு... இனி தொடர்ந்து தமிழ் படங்களில் பார்க்கலாம்!" என்கிறார், வினீத். 

https://cinema.vikatan.com/tamil-cinema/news/122408-actor-vineeth-appo-ippo-series-six.html

Link to comment
Share on other sites

`அப்போ முதலமைச்சர் பேத்தி; இப்போ, முதல்வரோட மருமகள்!" - நடிகை மானு 'அப்போ இப்போ' பகுதி 7

 
Chennai: 

"அஜித் சாரைத் தவிர 'காதல் மன்னன்' படத்துல வேலை பார்த்த மற்ற ஆர்ட்டிஸ்ட் எல்லோருக்குமே சினிமா புதுசு.  சரண் சார் மட்டும் இல்லைனா இந்தப் படத்துல நடிச்சிருக்கவே மாட்டேன். பெண்கள் மீது அவர் அளவுகடந்த மரியாதை வெச்சிருக்கார். டாக்டர் குடும்பத்துல பொறந்து வளர்ந்த நான், இப்போ முதலமைச்சர் குடும்பத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கேன்." என்று விழிகள் விரியப் பேசத் தொடங்குகிறார், 'காதல் மன்னன்' மானு. 

மானு

 

"இப்போ என்ன பண்றீங்க?"

``எனக்கு மூன்று வயது பெண் குழந்தை இருக்கா. 'மானு ஆர்ட்ஸ்'ங்கிற லாப நோக்கமற்ற டிரஸ்ட்டை கடந்த 20 வருடமா நடத்திட்டு வர்றேன். ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் பெற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வதுதான் இந்த டிரஸ்டின் நோக்கம். இதற்காக நிறைய நடன நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டு, அதன்மூலம் வர்ற பணத்தை டிரஸ்டுக்கு செலவழிக்கிறேன். நாடக நிகழ்ச்சிகளுக்கு காஸ்டியூம்ஸ் டிசைன் பண்றதையும் பகுதிநேர வேலையா செஞ்சுட்டு வர்றேன். மாற்றுத்திறனாளிகள் பெற்ற குழந்தைகளுக்கு நடனம், இசை போன்ற கலைகளைக் கத்துக்கொடுத்துட்டிருக்கேன். அவங்களுக்கான படிப்புச் செலவு, மருத்துவச் செலவு போன்றவற்றையும் எங்களால முடிந்தளவு செஞ்சுட்டு வர்றோம்.''  

``இப்படியொரு டிரஸ்ட் நடத்தலாம்ங்கிற முடிவு எப்படி வந்துச்சு?"

``எனக்கு நடனம் தவிர வேற எதுவும் தெரியாது. நடன நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு வெளிநாடுகளுக்கு டிராவல் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போதான், 'டான்ஸ் பண்றது மூலமா நிறைய பணம் கிடைக்குது. இதை வெச்சு நம்ம சமூகத்துக்கு என்ன பண்ணிட்டோம்'னு தோணுச்சு. கையில இருந்த பணத்தை வெச்சு சமூகசேவை நோக்கத்தோட தனியாளா ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சேன். இப்போவரைக்கும் என் வருமானத்தை வெச்சுத்தான் இதை நடத்திக்கிட்டு இருக்கேன். யார்கிட்டேயும் டொனேஷன் கேட்டதில்லை. காசு கொடுக்கணும்னு விருப்பப்படுறவங்ககிட்ட நடன நிகழ்ச்சிகள் நடத்தச்சொல்லிக் கேட்பேன். அதுல வர்ற பணத்தை டிரஸ்டுக்கு செலவழிப்பேன். நிறைய நண்பர்கள் இந்தமாதிரி எனக்கு உதவி பண்ணிட்டு இருக்காங்க. 

அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா போன்ற பல நாடுகள்ல நடன நிகழ்ச்சி நடத்தியிருக்கேன். இலங்கை போருக்குப் பின், அங்கே டான்ஸ் பெர்ஃபாமன்ஸ் பண்ண முதல் குழு எங்களோடதுதான். யோகா பயிற்சியாளராகவும் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். 2011-ல நாடக நிகழ்ச்சிகளுக்குத் தயாரிப்பாளராகவும் வேலை பார்க்க ஆரம்பிச்சேன். இயக்குநர் மோகன் ராஜா, இயக்குநர் சரண், நடிகர் நிதின் சத்யா போன்ற சினிமா பிரபலங்கள் என் டிரஸ்டுக்கு உதவி பண்ணிக்கிட்டு இருக்காங்க.

2011-ம் ஆண்டு மூன்று நாள் நாடக நிகழ்ச்சி ஒண்ணு நடத்திக்கிட்டு இருந்தப்போ, திடீர்னு சூப்பர் ஸ்டார் வந்துட்டார். இரண்டு மணிநேரம் குழந்தைகளோட நிகழ்ச்சிகளைப் பார்த்தார். அதேமாதிரி இன்னொரு நாடகத்துக்கு பாலசந்தர் சாரும், எம்.எஸ்.வி சாரும் வந்திருந்தாங்க. எனக்கு ஏதாவது உதவின்னா, இவங்கெல்லாம் முதல் ஆளா வருவாங்க."

நடிகை மானு

``திருமண வாழ்க்கை எப்படிப் போகுது?" 

``கடந்த 20 வருடமா சென்னையில இருக்கேன். என் கணவர் சந்தீப் துவாரா, மியாட் மருத்துவமனையில கேன்சர் யூனிட்ல வேலை பார்க்கிறார். 2008-ம் ஆண்டு எங்களுக்குத் திருமணம் நடந்துச்சு. கடவுள் மாதிரி ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு, வாழ்க்கை சொர்க்கம் மாதிரி மாறிடுச்சு. ஏன்னா, அவர் பார்க்குற வேலை அந்த மாதிரி. மருத்துவமனைக்கு வர்ற அத்தனை கேன்சர் நோயாளிகளும் டாக்டர்களை நம்பிதான் வர்றாங்க. இவருக்கும் என்னை மாதிரி சமூக சேவை உணர்வு அதிகம். இந்த மைண்ட்-செட்தான் எங்களைச் சேர்த்து வெச்சுச்சுனு நினக்கிறேன். எங்களோடது காதல் திருமணம். திருமணத்துல எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. இப்போவரை நாங்க நல்ல நண்பர்கள்னுதான் சொல்வேன். 'மானு ஆர்ட்ஸ்' தொடங்கும்போது, இவர் அதுல ஒரு உறுப்பினரா சேர்ந்தார். கிட்டத்தட்ட 20 வருடப் பழக்கம்."

``காதல் மன்னன் படத்துல கமிட் ஆன தருணம் ஞாபகத்துல இருக்கா?"

``எனக்குப் பதினாறு வயசு இருக்கும்போது, சென்னைக்கு வந்தேன். 'பத்மபூஷண்' தனஞ்ஜெயனோட நடன நிகழ்ச்சியில டான்ஸ் ஆடும்போது நடிகர் விவேக் என்னை முதல்முறையா பார்த்தார். 'காதல் மன்னன்' படத்தோட ஸ்க்ரிப்ட் வேலை முடிந்து, அஜித் படத்துல கமிட் ஆகிட்டார். ஹீரோயின் மட்டும் முடிவாகலைனு என்கிட்ட சொன்னார். அப்படியே என்னை இயக்குநர் சரண்கிட்ட அறிமுகப்படுத்தி வெச்சார். என் குடும்பம் நடிக்க ஒத்துக்கலை. கிட்டத்தட்ட ஆறு மாசம் தொடர்ந்து பேசி, என்னையும் என் குடும்பத்தையும் சரண் சார் சம்மதிக்க வெச்சார்."

மானு

``குடும்பம் பத்தி?" 

``எங்களோடது டாக்டர் குடும்பம். தாத்தா, அப்பா, சொந்தக்காரங்க பலரும் டாக்டர்ஸ். சின்ன வயசுல இருந்து, இப்போவரை என்னோட அப்பா என்ன சொல்றாரோ, அதைத்தான் செய்றேன். அவரோட வார்த்தைகளை மீறி எதையும் செஞ்சதில்லை. 'காதல் மன்னன்' ஷூட்டிங்கிற்குகூட, குடும்பத்தோடதான் போவேன். ஒருநாள்கூட ஷூட்டிங் ஸ்பாட்ல என்னைத் தனியா விட்டதில்லை. நடிப்பு எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா, அதை ஒரு வேலையா தொடரணும்னு ஒருபோதும் நினைச்சதில்லை. தினமும் காலையில ஷூட்டிங்குக்கு வந்தவுடனே ஒருத்தர் நமக்கு மேக்அப் போடுவாங்க. இன்னொருத்தர் ஹேர்ஸ்டைல் பண்ணிவிடுவாங்க. இன்னொருத்தர் நமக்கான காஸ்ட்யூம்களை ரெடி பண்ணுவாங்க. இப்படிப் பலபேர் நமக்காக வேலை பார்ப்பாங்க. அதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணணும்னு எனக்குத் தெரியலை. நம்மளைக் கடவுள் மாதிரி ட்ரீட் பண்றாங்க. அது எனக்கு ஒருவித பயத்தைக் கொடுத்துருச்சு. நமக்குப் புரியாத விஷயத்தை நாம செய்யக்கூடாதுனு நினைச்சேன். அதனாலதான் அடுத்தடுத்து நடிக்கலை. 

அஸ்ஸாம், கவுஹாத்தியில மரியாதை மிக்க குடும்பங்கள்ல எங்க குடும்பம் முக்கியமானது. எங்க குடும்பத்து ஆட்கள் நடந்து வந்தாலே, ரோட்டுல போறவங்க வர்றவங்க எல்லாரும் வணக்கம் வெச்சுட்டுப் போவாங்க. என் தாத்தா கோபிநாத் பர்டலோய்தான் அஸ்ஸாமோட முதல் முதலமைச்சர். நான் அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோயோட மருமகள். என் குடும்பமும் என் கணவர் குடும்பமும் அரசியல் பின்னணி கொண்டவங்க. என் குடும்பத்தைச் சேர்ந்தவங்க, நான் அரசியல்ல ஈடுபடணும்னு நினைக்கிறாங்க. உலகத்துல அமைதியையும் அன்பையும் பரப்பணும்னு நினைக்கிற பாபா பக்தர்கள் நாங்கள். அஸ்ஸாம்லேயே பொறந்து வளர்ந்த பொண்ணு. கல்யாணத்துக்கு அப்புறம்தான் தமிழ்நாட்டுல செட்டில் ஆனேன். உண்மையிலேயே தமிழ் கலாசாரம் ரொம்ப அழகானது. பெண்கள் புடவை கட்டுற விதம், சாப்பாடு... என எல்லா விதத்துலேயும் தமிழ்நாடு சொர்க்கம் மாதிரி இருக்கு."

``அஜித்தோட நடித்த அனுபவம்..." 

``அஜித் சார் எப்போ என்கிட்ட பேசுனாலும், 'எனக்கு உன்னைப்பத்தி நல்லாத் தெரியும் மானு. சினிமாவுல இருக்கணும்ங்கிறது உன் விருப்பமில்லை. ஆனா, இந்த ஒரு படத்தை மட்டும் முடிச்சுக் கொடுத்துட்டுப் போங்க. பாதியிலேயே போயிடாதீங்க'னு சொல்வார். 

 

ஷூட்டிங் முடிந்த அடுத்தநாளே அஸ்ஸாமுக்குப் போயிட்டேன். சென்னையில இருந்தா நிறைய பட வாய்ப்புகள் வரும். தொடர்ந்து 'நோ' சொல்லிகிட்டே இருக்கமுடியாது. அதனாலதான், மீடியாக்களுக்குப் பேட்டிகூட கொடுக்கலை. அப்போ நான் அதிகமா பணம் எதிர்பாக்குறேன், புகழ் எதிர்பார்க்குறேன்னு ஒவ்வொரு தயாரிப்பாளரும் ஒவ்வொருவிதமா சொல்ல ஆரம்பிச்சாங்க. போகப் போகத்தான் எனக்கு நடிக்க விருப்பமில்லைனு அவங்களுக்குப் புரிஞ்சது. அப்புறம் டான்ஸ் கத்துக்கிறதுக்காக மறுபடியும் சென்னைக்கு வந்தேன். வரலாறு இளங்கலைப் பட்டமும், ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும் முடிச்சேன். பரதநாட்டியம், கதக் மற்றும் மணிப்பூரி ஆகிய நடனங்களைக் கத்துக்கிட்டேன். அரங்கேற்றம் முடிந்ததும் வெளிநாடுகள்ல நடன நிகழ்ச்சிகள்ல பங்கேற்க ஆரம்பிச்சேன். 15 வருடம் கழித்து 2014-ல 'என்ன சத்தம் இந்த நேரம்' படத்துல நடிக்கச்சொல்லி கேட்டிருந்தாங்க. இயக்குநர் குரு ரமேஷோட முதல் படம். இவர் ஏற்கெனவே 'காதல் மன்னன்' படத்துல வேலை பார்த்திருக்கார்னு சொன்னார். வெறும் நான்கு நாள்கள்தான் ஷூட்டிங். இந்தப் படத்தோட அனுபவம் முதல் படத்தைவிட பெட்டரா இருந்துச்சு. ஏன்னா, என்னால இந்த தடவை சினிமானா என்னனு புரிஞ்சுக்க முடிஞ்சது. அதாவது, இப்போ சினிமா கார்ப்பரேட் நிறுவனம் மாதிரி செயல்படுதுனு தெரிஞ்சுகிட்டேன்." என்று முடித்தார், மானு. 

https://cinema.vikatan.com/tamil-cinema/interview/123106-actress-manu-in-appo-ippo-series-7.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

''இவனா இப்படினு ரீ-என்ட்ரி கொடுக்குறேன் இருங்க..." - 'ராசாத்தி' சாம் ஆண்டர்சன் அப்போ இப்போ கதை - 8

 
 

 

appo ippo

 

''நான் நடிச்ச 'யாருக்கு யாரோ' படத்தில் இடம்பெற்ற பாட்டு 'ராசாத்தி'. அந்தப் பாட்டை பலரும் கிண்டலடித்தனர். ஆனா, இன்னைக்கு நான் நிறைய படங்களில் நடிச்சு ஃபேமஸ் ஆனதுக்கு அதுதான் காரணம்'' என்கிறார், நடிகர் சாம் ஆண்டர்சன். 'பத்து எண்றதுக்குள்ள' படத்துக்குப் பிறகு தமிழ்சினிமாவை விட்டு விலகியிருக்கும் சாம் ஆண்டர்சன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவரிடம் பேசினேன். 

சாம் ஆண்டர்சன்

''நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோடு. என் வீட்டுல நான்தான் மூத்த பையன். எனக்குப் பிறகு ஒரு தம்பி இருக்கான். அம்மா, அப்பா ரெண்டுபேரும் வேலை பார்க்குறாங்க. ஸ்கூல் படிச்சு முடிச்சதும், காலேஜ்ல இன்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசைப்பட்டு படிச்சேன், மெக்கானிகல் இன்ஜினீயரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போ, சொந்தமா ஏதாவது பிசினஸ் பண்ணலாம்னு தோணுச்சு. ஏற்கெனவே கொரியர் கம்பெனியில வேலை பார்த்த அனுபவம் இருந்ததுனால, சொந்தமா கொரியர் கம்பெனி ஆரம்பிச்சேன். எங்க தாத்தாவுக்கு, 'பேரன் சினிமாவுல நடிக்கணும்'னு ரொம்ப ஆசை. எனக்கு அப்படி எதுவும் தோணுனதில்லை. தவிர, வீட்டுல பெரியப்பா ஒருத்தரும் சினிமாமேல ரொம்பக் காதலோட இருப்பார். கொஞ்சம் பணம் சேர்ந்தாலே, இதைவெச்சுப் படம் தயாரிப்போமானு நினைப்பார். நல்ல தயாரிப்பாளரா சினிமாவுல வலம் வரணும்னு அவருக்கு ஆசை. 

 நான் எப்போவும்போல கொரியர் பிசினஸை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துலதான், 'யாருக்கு யாரோ' படத்தை எங்க பெரியப்பாவே ஸ்க்ரிப்ட் எழுதித் தயாரிச்சு இயக்க ரெடி ஆனார். என்னையும் அவரோட மேனேஜரா பக்கத்திலே வெச்சுக்கிட்டார். அக்கவுன்ட்ஸ் சம்பந்தப்பட்ட எல்லா வேலையையும் பார்த்துக்கிட்டிருந்தேன். அப்போ, அவர் எடுக்கப் போற படத்துக்காக புதுமுக ஹீரோ, ஹீரோயினுக்கு ஆடிஷன்ஸ் வெச்சார். பலபேர் கலந்துக்கிட்டாங்க. ஆனா, வந்தவங்க எல்லோரும், 'எவ்வளவு சம்பளம்; டூயட் சாங் இருக்கா?'னுதான் கேட்டாங்க. அதனால, இவங்க யாரும் படத்துல நடிக்க செட் ஆகமாட்டாங்கனு எங்க பெரியப்பாவுக்குத் தோண... என்னையைவே ஹீரோ ஆக்கி 'ஆக்‌ஷன்' சொல்ல ஆரம்பிச்சுட்டார். 

தலைவா

ஆக்சுவலி, நான் நடிக்க வந்தது தற்செயலா நடந்தது. நான் ஹீரோவா ஆகணும்னு கனவுலகூட நினைச்சதில்ல. என் முதல் படத்தின்போது எப்படி நடிக்கணும், எப்படி டயலாக் பேசணும், எப்படி ஃபைட் பண்ணனும்னு எதுவும் தெரியாது. படத்துல 'ராசாத்தி' பாட்டு செம ஃபேமஸ் ஆச்சு. அந்தப் பாட்டை சென்னையில மொட்டை வெயில்ல ஷூட் பண்ணோம். பெரியப்பா பட்ஜெட் பத்தாதுனு சொல்லிட்டதுனால, நடன இயக்குநர்னு யாரையும் ஃபிக்ஸ் பண்ணிக்கலை. 'சரி, நாமளே ஆடுவோம்'னு டான்ஸைப் போட்டேன். அந்தப் பாட்டு, அப்பவே யூடியூப் வைரல். எல்லாம் எதுக்கு... நான் போட்ட அந்த டான்ஸுக்குக் கிடைச்ச ரெஸ்பான்ஸ்! அந்தப் பாட்டுக்காக என்னைக் கலாய்க்கிறவங்க அதிகம். அதையெல்லாம் பெருசா எடுத்துக்கமாட்டேன். 

இதுக்குப் பிறகுதான் எனக்கு 'தலைவா', 'பிரியாணி', 'கோலி சோடா' வாய்ப்புகள் கிடைச்சது. 'விஜய் சார்கூட நடிக்கணும்'னு சொன்னப்போ, எனக்கு ஒரே ஷாக்கிங். அதுவரை என்கிட்ட பாஸ்போர்ட் இல்ல... 'ஜெர்மனியில் ஷூட்டிங், பாஸ்போர்ட் எடுங்க'னு சொன்னாங்க. எடுத்தேன். எனக்கும் விஜய் சாருக்குமான காட்சிகளை ஆஸ்திரேலியாவுல ஷூட் பண்ணாங்க.

அந்த சீன் எடுக்கும்போது, காலையில எட்டு மணிக்கு சிட்னியில இறங்கினேன். அங்கே, ஒரு இடத்துல 'தலைவா' ஷூட்டிங் போய்க்கிட்டு இருந்துச்சு. விஜய் சாரைப் பார்த்துட்டு, என்னால 'இது நிஜம்தானா'னு நம்பவே முடியலை. சேர்ல ஒரு ஓரமா உட்கார்ந்து, விஜய் சார் நடிக்கிறதைப் பார்த்துக்கிட்டே இருந்தேன். ஏ.எல்.விஜய் சார் என்கிட்ட வந்து பேசினார். அப்புறம் விஜய் சாரும் எனக்குக் கை கொடுத்துப் பேசினார். 'தலைவா' படம் மட்டும் பிளான் பண்ன மாதிரி ரிலீஸ் ஆயிருந்தா, என் ரீச் வேற லெவல்ல இருந்திருக்கும். 

வெங்கட்பிரபு சாரோட 'பிரியாணி' படத்துல நடிச்சேன். வெங்கட்பிரபு சார் என்கிட்ட, 'பயப்படாத... உனக்கு என்ன தோணுதோ, அதைப் பண்ணு'னு சொன்னார், நடிச்சேன். யூடியூப்ல என் வீடியோக்களையெல்லாம் பார்த்துட்டுதான், விஜய் மில்டன் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.  

 

சினிமாவுல எனக்கு ஏதாவது சந்தேகம்னா, மிர்ச்சி சிவாவுக்கு போன் பண்ணிக் கேட்பேன். அவர்தான், எனக்கு சரியானதைச் சொல்வார். என் நலம் விரும்பி அவர். இன்னும் நான் கல்யாணம் பண்ணிக்கலை; சினிமாவுல நிலையான இடம் பிடிச்சுட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். நல்ல கேரக்டர்ல நடிக்கக் கதை கேட்குறேன். 'இவனா இப்படி ஒரு படத்துல நடிக்கிறான்'னு எல்லோரும் ஆச்சர்யப்படுற மாதிரி ஒரு ரீ-என்ட்ரி சீக்கிரமே கொடுப்பேன். அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க!"- நம்பிக்கையுடன் முடிக்கிறார், நடிகர் சாம் ஆண்டர்சன்.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/123854-sam-anderson-in-appo-ippo-series-8.html

Link to comment
Share on other sites

"அப்போ நடிகர்... இனி நடிக்கவே மாட்டேன்!" - 'அப்போ இப்போ' நடிகர் தாமு : பகுதி 9

 

"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். நான் பேசுற ஸ்டைலே பக்கா சென்னை பாஷையாதான் இருக்கு. சினிமாவுல நடிக்க வந்ததுக்குப் பிறகு, அது படிப்படியா மாறிடுச்சு!" - உற்சாகமாக உரையாடலைத் தொடங்குகிறார், தாமு. சில காலமாய் சினிமாவில் தலைகாட்டாத இவரது, 'அப்போ இப்போ' கதையைக் கேட்டேன். 

''இயக்குநர் வஸந்த் என் நெருங்கிய நண்பர். 'கேளடி கண்மணி' படத்தோட நூறாவது நாள் விழா நடந்தப்போ, 'நீ மிமிக்ரி பண்ண வா, எனக்குக் கொஞ்சம் உதவியா இருக்கு'னு கூப்பிட்டார். அப்போ நான் சினிமாவுக்கு நடிக்க வராத காலம். காலேஜ் படிச்சுக்கிட்டு இருந்தேன். அந்த நிகழ்ச்சியில மிமிக்ரி பண்ணிக்கிட்டு இருக்கும்போது, இயக்குநர் பாலசந்தர் சார் கீழே உட்கார்ந்து என்னைப் பார்த்துக்கிட்டு இருந்தாராம். ஆனா, எனக்கு அவர் வந்ததே தெரியாது. அவர் பக்கத்துல என் தமிழாசிரியர் மு.மேத்தா உட்கார்ந்திருந்தார். நிகழ்ச்சி முடிஞ்சதும், மு.மேத்தா என்கிட்ட, 'டேய், பாலசந்தர் சார் உன்னை ரொம்ப விசாரிச்சார். உன் மிமிக்ரியை ரொம்ப ரசிச்சார்'னு சொன்னார். உடனே வஸந்த்கிட்ட, 'எப்படியாவது என்னை பாலசந்தர் சார்கிட்ட அறிமுகப்படுத்தி வைங்க'னு கேட்டேன்.

தாமு

ஒருநாள் என்னைக் கூட்டிக்கிட்டு போனார். 'இங்கே வெயிட் பண்ணு, சார்கிட்ட சொல்லிட்டேன்... வருவார்'னு சொல்லிட்டு, வஸந்த் வேறொரு வேலையா வெளியே போயிட்டார். நான் ஒரு பத்து நிமிடம் வரைக்கும் பார்த்தேன்... பாலசந்தர் சார் வர்ற மாதிரியே தெரியலை. அங்கே, ஒரு வயசான ஆள் பாலசந்தர் சாரோட வீட்டுல இருந்த விருதுகளை எல்லாம் துடைச்சுக்கிட்டு அங்கிட்டும், இங்கிட்டுமா நடந்துக்கிட்டு இருந்தார். அவர்கிட்ட, 'டைரக்டர் எப்போ வருவார்'னு கேட்டேன். 'என்ன அவசரம். உட்காரு தம்பி'னு சொல்லிட்டு, அவர் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டார். 

ஒரு டேபிள் மேல பாலசந்தர் சாரோட கண்ணாடி மட்டும் இருந்துச்சு. 'எப்படியிருந்தாலும், இந்தக் கண்ணாடியை எடுத்து மாட்டுறதுக்கு அவர் வந்துதானே ஆகணும்?'னு நினைச்சுக்கிட்டு, அங்கேயே உட்கார்ந்துட்டேன். அந்த வயசான ஆள் கண்ணாடியை எடுத்து மாட்டினார். அப்போதான் தெரிஞ்சது... இவ்ளோ நேரம் என்னைச் சுத்தி நடந்துக்கிட்டு இருந்தவர், பாலசந்தர் சாரேதான்!. அதிர்ச்சியில வாயை மூடி நின்னுட்டேன். அந்த அதிர்ச்சியில இருந்து மீண்டு வர எனக்கு சிலநிமிடம் ஆச்சு. 'இது உனக்குத் தேவையா?'ங்கிற மனநிலையில அப்படியே இருந்துட்டேன்!" - பாலசந்தருடனான முதல் சந்திப்பின் முழு காலத்தையும் நினைவில் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார், தாமு. 

 

தாமு


"பிறகு, கேஷூவலா பேச ஆரம்பிச்ச பாலசந்தர் சார், என் மிமிக்ரியைப் பற்றி புகழ்ந்து தள்ளினார். 'நீ அன்னைக்கு மேடையில என்ன பாஷைடா பேசுன'னு கேட்டார். 'மெட்ராஸ் பாஷை சார்'னு சொன்னேன். 'உனக்கு என் படத்துல ஒரு சான்ஸ் தர்றேன். தினமும் நீ என் ஆபீஸுக்கு வந்து கையெழுத்து போட்டுட்டுப் போகணும். ஏன்னா, வேற யாராவது சான்ஸ் கொடுத்தா, நீ ஓடிடுவ'னு சிரிச்சார். அவர் சொன்னத தெய்வ வாக்கா நினைச்சுக்கிட்டு, தினமும் ஆபீஸுக்குப் போனேன். எனக்குனு ஒரு நோட்டு அங்கே ரெடியா இருக்கும். பாலசந்தர் சார் ஆபிஸுக்கு வர்றவங்க எல்லாம், 'சீட்டு கம்பெனிக்காரன்போல... தினமும் வந்துட்டுப் போறான்!'னு நினைச்சிருப்பாங்க. இப்படித்தான், சினிமாவுல என் என்ட்ரி ஆரம்பமாச்சு.

"பாலசந்தர் சார், 'வானமே எல்லை'படத்துல எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். 'செவ்வாய்'ங்கிற வாட்ச்மேன் கேரக்டர்ல நடிச்சேன். அந்தப் படத்துக்காக மூணாறுல ஷூட்டிங் போனோம். என்கூட நடிச்ச எல்லோரும் பெரிய இடத்துப் பசங்க. நாகேஷ் சார் பையன் ஆனந்த் பாபு, சின்ன வயசுல இருந்தே சினிமாவுல இருக்கிற நடிகர் பப்புலு, மேஜர் சுந்தர் ராஜன் பையன் பத்மநாபன், ரம்யா கிருஷ்ணன். படத்துல நானும், மதுபாலாவும்தான் புதுசு. மதுகூட நடிகை ஹேமமாலினியோட சொந்தக்கார பொண்ணு. ஆனா, எல்லோருமே என்கூட ரொம்ப ஜாலியா பழகினாங்க. அதுவரைக்கும் சினிமா நடிகர், நடிகைகள் மேல எனக்கு வேறொரு பிம்பம் இருந்தது. ஆனா, இது வேறொரு அனுபவம். அதுக்குக் காரணம், கே.பி சார்தான். என்னைப் பத்தி அவர் எல்லோர்கிட்டேயும் பெருமையா சொல்லி வெச்சிருந்தார். அதனாலதான், அங்கே எனக்கு மரியாதை அதிகமா கிடைச்சது.  

டைரக்டர் சரண், பாலசந்தர் சார்கிட்ட உதவி இயக்குநராய்இருந்தார். அவர்தான் எனக்கு வசனம் சொல்லிக் கொடுப்பார். ஒரு ரவுண்ட் டேபிள்ல ஆனந்த் பாபு, பப்புலு, பத்மநாபன், ரம்யாகிருஷ்ணன், மதுபாலா எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடுவாங்க. நான், அவங்களுக்கு சாப்பாடு போட்டுக்கிட்டே வசனம் பேசணும். இதுதான் என் முதல் காட்சி. கிட்டதட்ட 24 முறை ரிகர்சல் பண்ணியும், அந்தக் காட்சியில ரொம்ப சொதப்புனேன். சாப்பாடு போடும்போது வசனம் வரலை, வசனம் பேசும்போது சாப்பாடு போடணும்னு தோணலை. அந்த சமயத்தில் பாலசந்தர் சார் நினைச்சிருந்தா, என்னைப் படத்துல இருந்து தூக்கியிருக்க முடியும். ஆனா, அவர் அதைப் பண்ணலை. ஒருத்தர் என்கிட்ட, வந்து, 'ரொம்ப ஜாக்கிரதையா இரு. வாய்ப்பு கிடைக்கிறது கஷ்டம். நீ இவ்வளவு சிரமம் கொடுத்தா எப்படி... கொஞ்சம் முயற்சி பண்ணு'னு சொன்னார். 'நான் முயற்சியெல்லாம் பண்ணிட்டுதான் இருக்கேன். எனக்கு டைரக்டரைப் பார்த்தா பயம் வந்துடுது'னு சொன்னேன். இதை பாலசந்தர் சார் கேட்டுட்டார்.

பாலசந்தர் சார் என் தோள்மேல கையைப் போட்டு, 'அங்கே பார்த்தியாடா.. எவ்வளவு பெரிய மலை, மேகம். பக்கத்துல தெரியுது பார். நீ விரட்டிப் பார்.. ஓடிரும்'னு சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாம என்னென்னமோ பேசிக்கிட்டு இருந்தார். பிரேக் முடிஞ்சு, ஷாட்டுக்கு ரெடியானோம். முதல் டேக்லேயே ஓகே ஆயிருச்சு. யூனிட்டே பெருமூச்சு விட்டுச்சு. பாலசந்தர் சாரும், 'அப்படா... ஜெயிச்சேன் ஐயா'னு அவரே அவருக்கு சொல்லிக்கிட்டார். இப்படித்தான் தொடங்குச்சு என் சினிமா பயணம். இந்தத் தருணத்துல நான் ஆனந்த விகடனுக்கு நன்றி சொல்லிக்கிறேன். ஏன்னா, 'வானமே எல்லை' பட விமர்சனத்துல என் கேரக்டர் பத்தி நல்லா எழுதியிருந்தாங்க. பாலசந்தர் சாரும் அதைப் படிச்சுட்டு, 'உன்னைப் பத்தி மட்டும்தான்யா நல்லா எழுதியிருக்கான்... பாருடா'னு காட்டினார். நான் இன்னும் அந்தப் புத்தகத்தை பத்திரமா வெச்சிருக்கேன்." என்றவர், தொடர்ந்தார்.

"ரெண்டாவது படம் 'நாளைய தீர்ப்பு'. இது, விஜய்யோட முதல் படம். விஜய் குடும்பத்தோட எனக்கு நெருக்கமான உறவை ஏற்படுத்தினது, அவரோட தாய்மாமா எஸ்.ஏ.சுரேந்தர். பிறகு, விஜய்கூட நிறைய படங்கள்ல நடிச்சேன். விஜய்க்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கு. விஜய்கூட கடைசியா சேர்ந்து நடிச்ச படம், 'கில்லி'. படத்துல நான் நடிச்ச ஓட்டேரி நரி கேரக்டருக்கு இன்னைக்கு வரைக்கும் ரெஸ்பான்ஸ் இருக்கு. இந்தப் படத்துல என் ஹேர் ஸ்டைல் வித்தியாசமா இருக்கும்ல...  அது ஒரு காமெடி கதை. 'ஜே ஜே' படத்துக்காக நீளமா முடி வளர்த்திருந்தேன். அதைப் பார்த்துட்டு, 'இந்தப் படத்துக்கு இதை ஜடை போட்டுக்கோ... போதும்'னு சொல்லிட்டார், தரணி சார். வீட்டுக்குப் போனா, என் மனைவி வேறா யாரோ ஒருத்தர்னு நினைச்சுக்கிட்டு உள்ளே ஓடிட்டாங்க. 

"அதுக்கு அப்புறம், 'ஜாதிமல்லி'யில நடிச்சேன். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைச்ச கதையும் காமெடிதான். ஒருநாள் பாலசந்தர் சார் ஆபிஸ்ல, 'ரஜினி சார் வரப்போறார்'னு ஒரே பரபரப்பு. சில மணிநேரம் ஆச்சு. ரஜினி சார் வரலை. அப்புறம், நானே பாலசந்தர் சார் மேனேஜர்கிட்ட, 'ரஜினியெல்லாம் வரமாட்டார். ஏன்னா, ரஜினி மாதிரிப் பேசுனதே நான்தான்'னு சொன்னேன். அவர் டென்ஷனாகி பாலசந்தர் சார்கிட்ட, 'தாமுதான் இப்படிப் பேசி ஏமாத்தியிருக்கான்'னு சொல்லிட்டார். பயத்தோட பாலசந்தர் சார் ரூமுக்குள்ள போனேன். ஆனா, 'நீயா இப்படிப் பண்ண... எங்கே இன்னொரு தடவை பண்ணிக் காட்டு'னு ரசிச்சார், பாலசந்தர். 'ஜாதிமல்லி' படத்துல ரஜினி மாதிரி நான் பேசுறதுக்குப் பின் கதை இதுதான். கே.பி சார் எப்பவுமே என்னை ரசிப்பார், அப்படி அவர் ரசிச்சு ரசிச்சுதான் என்னை ஒரு நடிகனா மாத்தினார். அவருக்குப் பிறகு அப்துல் கலாம் ஐயா என்னை ரசிச்சார், என்னை ஆசிரியர் ஆக்கிட்டார். அதனாலதான், சினிமாவுக்கு ஒரு லாங் லீவ் கொடுத்துட்டு, இப்போ ஆசிரியரா இருக்கேன்!" என்றவர், 'இப்போ' பயணத்தைத் தொடர்ந்தார்.  

தாமு

"கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் அப்துல்கலாம் சார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் முன்னிலையில் பேச வந்தார். அப்போ, மிமிக்ரி புரோகிராமுக்காக என்னைக் கூப்பிட்டாங்க. காலையில கலாம் சார் பேசுவார், நீங்க மதியம் புரோகிராம் பண்ணனும்னு சொன்னாங்க. ஆனா, காலையில கலாம் சார் வர்றதுக்கு ஒருமணி நேரம் லேட் ஆயிடுச்சு. அதனால, என்னை அந்த நேரத்துல மிமிக்ரி பண்ணச் சொல்லிட்டாங்க. நானும் பண்ணேன். அப்போ, மிமிக்ரிக்குள்ள இருக்கிற அறிவியல் குறித்துப் பேசினேன். அந்த நேரத்துல கலாம் சார் மேடைக்கு வந்துட்டார். என் நிகழ்ச்சியைப் பார்த்து ரசிச்சார். என் திறமையை என்கிட்ட இருந்து கண்டுபிடிச்சு, எனக்கே அதை அறிமுகப்படுத்திய என் ஆசிரியர் வேலம்மாள் பற்றிப் பேசினேன். ஸ்கூல் படிக்கும்போது கிளாஸ் ரூம்ல டீச்சரைக் கலாய்க்க பின்னாடி பெஞ்ச்ல இருந்து மாடு, நாய், கழுதை மாதிரி நான் கத்துவேன். நான் மிமிக்ரி பண்ணதைக் கேட்டு, 'மாடு ஸ்கூலுக்குள்ள வந்திடுச்சு'னு நினைச்ச எங்க டீச்சர், தலைமை ஆசிரியர்கிட்ட சொல்லப் போயிட்டாங்க. இது எப்படியோ தெரிஞ்சுடுச்சு போல... என்னை தலைமை ஆசிரியர் ரூமுக்குக் கூப்பிட்டாங்க. 

'என்ன... உள்ளே உட்கார்ந்துக்கிட்டு ஆடு, மாடு மாதிரியெல்லாம் கத்துறியாமே?'னு அதட்டினார், தலைமை ஆசிரியர். நான் அழ ஆரம்பிச்சிட்டேன். நான் என்னென்ன மாதிரியெல்லாம் மிமிக்ரி பண்றேன்னு ஒரு நோட் புக்ல எழுதி வெச்சிருந்தாங்க, வேலம்மா டீச்சர். ஆனா, அதுவரை என்னை அவர் அடிக்கவோ, அதட்டவோ இல்லை. 'நாளைக்கு சுதந்திர தினம். மாணவர்களுக்கு முன்னாடி15 நிமிடம்  மைக் பிடிச்சு மிமிக்ரி பண்ணப்போற பையன் நீதான்'னு சொல்லிட்டாங்க. அதுக்குத்தான் உன்னைக் கூப்பிட்டேன்'னு சொன்னார், தலைமை ஆசிரியர். இந்த சம்பவத்தை நான் மாணவர்கள்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கும்போது, அப்துல் கலாம் சாரும் கண் கலங்கிட்டார். 

அந்த மேடையில அப்துல்கலாம் சாருக்குப் பக்கத்துல எனக்கு ஒரு இருக்கை போட்டாங்க. அப்துல் கலாம் ஐயா பக்கத்துல நானா?'னு எனக்கு ஆச்சர்யம். அப்போ, அப்துல் கலாம் ஐயா என் காதில், 'மூணு மணிநேரம் நான்-ஸ்டாப்பா கலக்கிட்ட, பியூட்டிஃபுல். நீ ஒரு டீச்சர். யூ நோ. பேசாம உன்னைக் கல்விக்காக கொடுத்திடு... ஐந்து வருடம் மாணவர்களுக்காகப் பணி செய், உன்னை நான் பார்த்துக்கிறேன். ஆனா, சினிமாவுக்கு லாங் லீவு போட்டுடணும்!'னு சொன்னதோட, பக்கத்துல இருந்த பொன்ராஜ்கிட்ட என்னை அறிமுகப்படுத்தி வெச்சு, 'டேக் கேர் ஆஃப் திஸ் ஃபன்னி கய்'னு சொன்னார்.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
124382_thumb.jpg

பிறகு, எனக்கு முழு பயிற்சியும் அப்துல்கலாம் சார் கொடுத்தார். அவர் எங்கே போனாலும் நானும் போனேன். அப்துல் கலாம் ஐயா எனக்கு இட்ட கட்டளையை என்னால மீற முடியலை. அதனால, மாணவர்களுடன் என் பயணத்தைத் தொடர்ந்துகிட்டிருக்கேன். சினிமாவுல நடிக்கிற ஆசையே என்னை விட்டுப் போயிடுச்சு. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க, ட்வின்ஸ். எனக்குக் கல்யாணம் ஆகி பல வருடம் கழிச்சுதான் குழந்தைகள் பிறந்தாங்க. லேட்டா அப்பா ஆனாலும், லேட்டஸ்ட் அப்பாவா கலாம் ஐயா சொல்லிக்கொடுத்த பாடங்களை என் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். இதுதவிர, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்துக்கிட்டிருக்கேன். மாணவர்களுக்கு மட்டுமில்ல, ஆசிரியர்களுக்கும் எடுக்கிறேன். பள்ளி மாணவர்களுக்காகவே 'கசடற கற்க'னு ஒரு இதழ் தொடங்கியிருக்கேன். சினிமாவுல நடிக்கிற ஐடியா இல்லை. ஏன்னா, பசங்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்துட்டு, சினிமாவுல சிகரெட் பிடிச்சு வசனம் பேச எனக்குப் பிடிக்காது. என் பணி இனி அப்துல் கலாம் ஐயா காட்டுன வழியில்தான்!'' என முடிக்கிறார், நடிகர் தாமு. 

https://cinema.vikatan.com/tamil-cinema/interview/124418-actor-dhamu-in-appo-ippo-series-9.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

"மார்பிள் பிசினஸ் பண்றேன், 18 வருடமா நடிக்க வெயிட்டிங்!" - 'கடலோரக் கவிதைகள்' ராஜா

 
 

 

''என் உண்மையான பெயர், வெங்கடேஷ். படத்துக்காக என் பெயரை மாத்துனது பாரதிராஜா சார். அதுவும் படத்துக்கான பிரஸ் மீட் நடந்துக்கிட்டு இருக்கும்போது, 'வெங்கடேஷ் தமிழ் பெயர் மாதிரி இல்லைடா... வேற பெயர் ஏதாவது சொல்லு, வெச்சிடுவோம்!'னு கேட்டார். 'பரத்'னு நான் சொல்ல, 'இல்லைடா பரத் நல்லாயில்லை. என் பெயர்ல பாதியை வெச்சிக்கோ. ராஜாதான் இனி உன் பெயர்'னு சொல்லி, எல்லோருக்கும் என்னை ராஜாவாக அறிமுகப்படுத்தினார், பாரதிராஜா'' - தன் பெயர்க் காரணத்தோடு உரையாடலைத் தொடங்குகிறார், 'கடலோரக் கவிதைகள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ராஜா.  

 

அப்போ - இப்போ ராஜா

 

``நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். வசதியான குடும்பத்தில் பிறந்ததால சின்ன வயசுலே இருந்து கஷ்டத்தை அவ்வளவாகப் பார்த்தது இல்லை. அப்பா பிசினஸ் பண்னார். அம்மா ஹவுஸ் ஒஃயிப். சென்னை நியூ காலேஜ்ல படிச்சேன். சீனியர் நடிகர் சுரேஷ் என் காலேஜ் மேட். ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது சினிமாவுல நடிக்க வரணும்னு ஆசைப்பட்டதே இல்லை. சினிமாவும், நானும் எப்போதும் ரொம்ப தூரமாதான் இருந்தோம். 

 என் சொந்தக்காரங்க பல பேர் சினிமாவுல இருந்தாங்க. தெலுங்கு நடிகர் வெங்கடேஷோட அப்பா ராமநாயுடு, என் சொந்த சித்தப்பா. தெலுங்கில் நிறைய படங்களைத் தயாரித்திருக்கிறார். அவர்தான் என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தார்னு சொல்லலாம். ஏன்னா, 'நீ பார்க்க அழகாக இருக்கடா... படத்துல நடி'னு சொன்னது அவர்தான். அப்போ நான் காலேஜ் படிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போவே என்னை ஸ்டண்ட், டான்ஸ் கிளாஸ்னு எல்லாத்துலேயும் சேர்த்து விட்டார், சித்தப்பா. நானும் படிச்சுக்கிட்டே இதையெல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தேன். சித்தாப்பா என்னை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தணும்னு ஆசைப்பட்டார். நானும் தெலுங்கு படம்தான், என் முதல் படமா இருக்கும்னு நினைச்சேன். அந்த நேரத்தில் என் உறவினர் வேணு தயாரிப்பில் பாரதிராஜா சார் படம் இயக்குவதாக இருந்தது.

அந்தப் படத்துக்கான கதை விவாதம் போய்க்கிட்டு இருந்த சமயத்துலதான், பாரதிராஜா சார், 'என் படத்துக்குப் புதுமுக ஹீரோ வேணும்'னு கேட்டிக்கிட்டு இருந்தார். வேணு என்னை பாரதிராஜா சார்கிட்ட அறிமுகப்படுத்தினார். அப்போ, நான் காலேஜ் முடிச்சிருந்தேன். என்னைப் பார்த்தவுடனே பாரதிராஜா, 'இவ்வளவு நாள் எங்கேடா இருந்தான்'னு சொல்லிட்டு, 'என்னடா பண்ணப்போற'னு கேட்டார். 'மும்பை போகப் போறேன் சார். சித்தாப்பா அங்கே நடிக்கிறது எப்படினு கத்துக்கச் சொல்லியிருக்கார்'னு சொன்னேன். உடனே பாரதிராஜா சார், 'நடிப்பெல்லாம் சொல்லிக்கொடுத்து வர்றது இல்ல. அது இயல்பாவே வரும். நீ இதுக்காக மும்பை வரைக்கும் போகணும்னு அவசியம் இல்ல. நீ என்கூட வந்துடு. என் படத்துல நீ நடிக்கிற. நாளைக்கு ஷூட்டிங், கரெக்ட் டைமுக்கு வந்திடு!'னு சொல்லிட்டுப் போயிட்டார்.  

raja

எனக்கு இரவு முழுக்கத் தூக்கமே வரலை. அடுத்தநாளே ஆந்திராவுக்குப் போயிட்டோம். ஷூட்டிங் ஆரம்பமாச்சு. அந்தப் படம்தான், 'கடலோரக் கவிதைகள்'. படத்தோட முதல் ஷெட்யூல் ஆந்திராவிலும், இரண்டாவது ஷெட்யூல் நாகர்கோவிலிலும் நடந்துச்சு. ஒரு நடிகனிடம் எப்படி நடிப்பை வாங்கணும்னு அவருக்குத் தெரியும். 'கடலோரக் கவிதைகள்' படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே நான் நடிச்ச இரண்டாவது படம் ரிலீஸ் ஆயிடுச்சு. பிறகு ரொம்ப பிஸியா நடிக்க ஆரம்பிச்சேன். என் சினிமா பயணத்தில் நல்ல இயக்குநர்கள், நல்ல நடிகர்கள்கூட வொர்க் பண்ணிட்டேன். என் வாழ்க்கையில முக்கியமான இடம் பாரதிராஜா சாருக்கு இருக்கு. அவருடைய 'கருத்தம்மா' படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துச்சு. பெண்களை மையப்படுத்திய இந்தக் கதையிலும், எனக்கான கேரக்டரை ரொம்ப ஸ்ட்ராங்கா வடிவமைச்சிருப்பார், பாரதிராஜா சார்.

பாலுமகேந்திரா சார் இயக்கிய 'சதிலீலாவதி' படத்துல நடிச்சேன். கமல் சார் தயாரிச்சு நடிச்சார். முதலில் இந்தப் படத்தை ஹியூமர் ஜானர்ல இல்லாம, சீரியஸா எடுக்கலாம்னுதான் பிளான் பண்ணோம். கமல் சாருக்கு கெஸ்ட் ரோல், எனக்கு நெகட்டிவ் ரோல்னு முடிவு பண்ணியிருந்தாங்க. ஆனா, கதையைக் கொஞ்சம் மாத்திட்டாங்க. கமல் சாரும், 'இதை சீரியஸான படமா இல்லாம, காமெடி படமா எடுக்கலாம்'னு சொன்னார். அதனால, 'இந்தப் படத்துல நடிக்கலை, என் கேரக்டர் வலுவா இல்லை'னு சொன்னேன். பாலுமகேந்திரா சார்தான், 'முக்கியத்துவத்தைவிட, அனுபவம் ரொம்ப முக்கியம். நீ பண்ணு'னு சொல்லிட்டார். அவர் பேச்சை மீறினா, நல்லா இருக்குமா.. நடிக்க ஒப்புக்கிட்டேன்.

ராஜா

வைரமுத்து சார் சினிமாவுக்காக எழுதுன முதல் பாட்டு இடம்பெற்ற படமும், நான் நடிச்ச 'கேப்டன் மகள்' படம்தான். குஷ்பூக்காக 'எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று' பாட்டு எழுதியிருந்தார், வைரமுத்து. இந்தப் பாட்டு இப்போவரை ஃபேவரைட். ரஜினி சார்கூட 'மாப்பிள்ளை'யில சேர்ந்து நடிச்சேன். பிறகு, 'அருணாச்சலம்' படத்திலும் நடிச்சேன். விக்ரமன் சாருடைய முதல் படம் 'புது வசந்தம்'ல நாலு ஹீரோக்கள்ல ஒருத்தரா நடிச்சேன். 

 

பிஸியா நடிக்கும்போது கல்யாணம் நடந்தது. 1993-ம் வருடத்துல என் கல்யாணம் நடந்தது. எங்களுக்கு இப்போ ஒரு பையன், பொண்ணு இருக்காங்க. அழகான குடும்பம், வாழ்க்கை சந்தோஷமா போய்க்கிட்டு இருக்கு. வித்தியாசமான ரோலில் நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அந்தமாதிரி கேரக்டர்ஸ் எதுவும் வராததுனாலதான் சினிமாவுக்கு கொஞ்சம் பிரேக் கொடுத்துட்டேன். சினிமாவுல நடிச்சு 18 வருடம் ஆச்சு. ஆனா, சினிமாவுல இருக்கிற நண்பர்கள்கூட பேசிக்கிட்டுதான் இருக்கேன். இப்போவும் நடிக்க வாய்ப்புகள் வருது. வித்தியாசமான கதைனும் சொல்றாங்க. என் மனசுக்கு அது வித்தியாசமான ரோலா படமாட்டேங்குது. வரும்போது வரட்டும்னு காத்திருக்கேன். ஏன்னா, மார்பிள் பிசினஸ்ல நான் பிஸி. எந்தக் குறையும் இல்லாத அந்த பிசினஸ் நல்லாப் போகுது!" என்கிறார், ராஜா.

https://cinema.vikatan.com/tamil-cinema/news/125045-kadaloora-kavithaigal-raja-in-appo-ippo-series-10.html

 

 

 

"அப்போ ஹீரோயின், இப்போ ஐஸ் ஃபேக்டரி ஓனர்!" - 'சேரன் பாண்டியன்' சித்ரா - பகுதி 11

 
 

'ஷேவ் பண்ணாத தாடியுடன் கையில் மாலையை வைத்துக்கொண்டு ஶ்ரீவித்யாவைப் பார்க்கக் காத்திருந்தபடி, தமிழ் சினிமாவுக்குள் ரஜினி அடியெடுத்து வைத்த 'அபூர்வ ராகங்கள்' க்ளைமாக்ஸை யாரும் மறக்கமுடியாது. ஶ்ரீவித்யாவின் கச்சேரி நடக்கும் அந்த அரங்கத்தின் வாசலில் வந்து நின்ற ரஜினி, ஒரு சிறுமியை அழைத்து, அந்தச் சிறுமி கையில் தன்னுடைய மன்னிப்புக் கடிதத்தைக் கொடுத்து, ஶ்ரீவித்யாவிடம் கொடுக்கச் சொல்வார். அந்தச் சிறுமிதான், இந்தவார 'அப்போ இப்போ' நாயகி.

பின்னாளில் 'ஊர்க்காவலன்', 'சேரன் பாண்டியன்', 'என் தங்கச்சி படிச்சவ' போன்ற பல படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்திருந்த சித்ராதான் அவர். தமிழில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து 'நல்லெண்ணெய்' சித்ரா எனவும் அறியப்பட்ட இவருக்கும் 'அபூர்வ ராகங்கள்'தான் அறிமுகப்படம்.

 

அபூர்வ ராகங்கள்

'ரஜினியுடன் அறிமுகமானவங்களா நீங்க?' என்றால், 'அட ஆமால்ல, நானே இதை நினைச்சுப் பார்த்ததில்லையே!' எனச் சிரித்துவிட்டு, பேசத் தொடங்குகிறார்.

`` `அபூர்வ ராகங்கள்' சான்ஸ் கிடைச்சதே ரொம்ப சுவாரஸ்யமான கதை. சென்னையில ஐ.சி.எஃப்-ல அப்பாவுக்கு வேலை. வீடும் கம்பெனியும் பக்கத்துலேயே இருந்துச்சு. என் அத்தை வீடு வடபழனி. கோடை விடுமுறைக்கு அங்கே போறது வழக்கம். பக்கத்துல ஏவி.எம்-ல ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கக் கூட்டிக்கிட்டு போவாங்க. நடிகர் நடிகைகள் பெரிய பெரிய கார்ல வந்து போறதைப் பார்த்தாலே பிரம்மிப்பா இருக்கும். ஆனா, சினிமாவுக்கும் எங்க குடும்பத்துக்கும் தொடர்பில்லை. ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துப் பழகி, எங்கே ஷூட்டிங் நடந்தாலும் பார்க்கணும்கிற ஆசை வந்திடுச்சு. எனக்கு மட்டுமில்ல, அப்பாவுக்கும். அதனால, ஷூட்டிங் நடக்குற இடங்களுக்கு நானும் அப்பாவும் போயிடுவோம்.

அப்படித்தான் ஒருநாள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போயிட்டுத் திரும்பிட்டிருந்தோம். வழியில 'நாரத கான சபா'வுல 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். கூட்டத்தை வேடிக்கை பார்க்க ஒதுங்கினதுல, அப்பா ஒரு பக்கமாகவும், நான் ஒரு பக்கமாவும் போயிட்டோம். அப்போ, எனக்கு ஆறு வயசுதான். பின்னாடி இருந்து கூட்டம் என்னை நெருக்கித் தள்ள, தடுமாறி கேமராவுக்கு முன்னாடி போய் விழுந்துட்டேன். உடனே, 'கட்... கட்'னு சத்தம். ஓடிவந்து சிலர் என்னைத் தூக்கி விட்டாங்க. சிலர் திட்டுனாங்க. திரும்பிப் பார்த்தா, அப்பாவையும் காணோமா... அழுதுட்டேன். படத்தோட டைரக்டர் கே.பாலச்சந்தர் சார் என் பக்கத்துல வந்து, 'சரி பாப்பா அழாத. யார்கூட வந்தே'னு கேட்டார். அதுக்குள்ள அப்பா என்கிட்ட வந்துட, அவருக்கும் வசவு. 'தெரியாம நடந்திடுச்சுங்க'னு ஸாரி கேட்டுட்டு, அப்பா என்னைக் கூட்டிட்டுக் கிளம்பிட்டார்.

அபூர்வ ராகங்கள்

கொஞ்சதூரம் போயிருப்போம். ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து ஒருத்தர் ஓடி வர்றார். 'டைரக்டர் உங்களைக் கூப்பிடுறார்'னு சொல்றார். பயந்துக்கிட்டே போனோம். 'எப்படியோ ஃபீல்டுக்குள்ள வந்து விழுந்துட்ட. பட்டுப் பாவாடையெல்லாம் கட்டியிருக்க. இந்தப் படத்துல நடிக்கிறியா'னு கேட்டார், கேபி சார். என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டிருக்க, 'ஒன்னுமில்ல, இந்த அங்கிள் தர்ற ஒரு பேப்பரை அந்த ஆன்ட்டிகிட்ட போய்க் கொடுக்கணும்... அவ்ளோதான்!'னு சொன்னார். ரஜினிகிட்ட இருந்து கடிதத்தை வாங்கிட்டுப்போய் மேடையில பாடிக்கிட்டு இருக்கிற ஶ்ரீவித்யாகிட்ட கொடுக்கணும். சந்தோஷமா வாங்கிக் கொடுத்துட்டுக் கிளம்பினேன். 'லன்ச் சாப்பிட்டுப் போங்க'னு சாப்பாடு போட்டு அனுப்பினாங்க. படத்துல அந்தக் காட்சி அப்படியே வர, தமிழ் சினிமாவுல நானும் என்ட்ரி ஆகிட்டேன்.

அப்பாகிட்ட தொடர்புலேயே இருக்கச் சொன்ன கே.பி சார் அடுத்து, 'மூன்று முடிச்சு' படத்துக்காகக் கூப்பிட்டார். ஆனா, ஸ்கூல்ல லீவு தராததுனால, அந்தப் படத்துல நடிக்க முடியலை. ஆனாலும் அடுத்த கொஞ்சநாள்ல 'கவிதாலயா' ரெகமன்டேஷன்லேயே 'அவள் அப்படித்தான்' வாய்ப்பு வந்தது.

படிப்பையும் நடிப்பையும் பேலன்ஸ் பண்ணிப் போயிட்டிருந்தேன். அடுத்து 'ராஜ பார்வை' வாய்ப்பு. கண் தெரியாத குழந்தையா நடிச்சேன். படத்தோட 100-வது நாள் விழாவுல கலந்துக்கிட்ட எம்.ஜி.ஆர்., 'பார்வையற்றோர் பள்ளியில இருந்து வந்து நடிச்சிருந்த பாப்பா ரொம்ப நல்லா நடிச்சிருந்தது'னு பாராட்டினார். அதாவது, என்னைப் 'பார்வையற்ற குழந்தை'னே நினைச்சிருக்கார். பிறகு, எனக்குப் பார்வை தெரியும்னு சொன்னது, ஆச்சரியப்பட்டுப் போனார். 

தமிழ்ல சில படங்கள்ல தலைகாட்டத் தொடங்கினதும், மலையாள வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனா, அங்கே முதல் படமே ஹீரோயின் ரோல். 'அட்ட கலசம்'ங்கிற அந்தப் படத்தின் ஹீரோ மோகன்லால். அப்போ நான் பத்தாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தேன். சினிமாவுல நடிக்கணும்னா, ஃபோட்டோஷூட் பண்ணி வைக்கணும்னுகூட தெரியாத வயசு. நிறைய பேர்கிட்ட ஸ்டாம்ப் சைஸ் போட்டோவைக் கொடுத்துவிட்டிருக்கார் அப்பா. மோகன்லால் படத்துல கமிட் ஆனப்போ, ஒரு விஷயம் நடந்திச்சு. கமிட் ஆகுறதுக்கு முதல்நாள் திடீர்னு புரொடியூசர் வந்து, என்னோட ஜாதகத்தைக் கேட்டார். 'இது என்ன புதுசா இருக்கு'னு நினைச்சோம். 'இல்ல, எனக்கு ஜாதகம்மேல நம்பிக்கை, அதனால கொடுங்க'னு சொன்னார், கொடுத்தோம். 

வாங்கிப் பார்த்த அடுத்த நொடி, படத்துல கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க. ஏன்னா, ஹீரோ மோகன்லால் பிறந்தநாளும் என் பிறந்தநாளும் ஒரே தினம். மே 21. இந்த ஒரு விஷயம் போதும்னு சொல்லிட்டார். படம் கோல்டன் ஜூப்ளி. பிறகு, மம்முட்டிகூட ஒரு படம் பண்ணிட்டேன்.

அபூர்வ ராகங்கள்

பிறகு, மறுபடியும் தமிழுக்கு வந்தேன். கே.பி.சார் படம்தான். 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தை கன்னடத்துல எடுத்தார். எந்த ஶ்ரீவித்யாகிட்ட லெட்டரைக் கொண்டுபோய் கொடுத்து, நான் சினிமாவுக்கு அறிமுகமானேனோ, அதே ஶ்ரீவித்யா தமிழ்ல பண்ணின கேரக்டரை நான் கன்னடத்துல பண்னேன். 

பிளஸ் டூ பரீட்சை முடிஞ்சது. அதுல கொஞ்சம் வரிசையா படங்கள் அமைஞ்சது. 'ஊர்க்காவலன்', 'நினைவுச் சின்னம்'னு தமிழ்ல ஒரு பக்கம் நடிச்சுக்கிட்டே, தெலுங்கு பக்கமும் போனேன். மலையாளம் போலவே அங்கேயும் ஹீரோயின் கேரக்டர். 'மத்த மொழிகள்ல ஹீரோயினா நடிச்ச மாதிரி, தமிழ்ல ஏன் பண்ணலை?'னு கேட்கலாம். அதென்னவோ தெரியலை, இங்கே அந்தமாதிரி அமையலைங்கிறதுதான் உண்மை. ஆனா, கதையில எனக்கு முக்கியத்துவம் இருந்தது. அதுவும் ஒருவகையில நல்லதுனு நினைச்சுக்கிட்டேன். ஏன்னா, கட்டிப் பிடிக்கற காட்சிகளுக்கெல்லாம் தயங்கின குடும்பம்தான் எங்களோடது.

அபூர்வ ராகங்கள்

ஏதோ ஒரு சின்ன சம்பவம் மூலமா சினிமாவுக்கு வந்து, தென்னிந்திய மொழிகள்ல 200 படங்கள் வரைக்கும் நடிச்ச பிறகு, என்னோட அப்பாவோட உடல்நலக் குறைவும் என்னோட கல்யாணமும் ஒருசேர வந்தது. வேற வழியில்லை. அப்பா பார்த்து கைபிடிச்சுக் கொடுத்தவர்தான் என்னோட கணவர் விஜயராகவன், மகள் ஸ்ருதி.  அவளுக்கு ஒரு வயசு ஆனப்போ ஒரு மலையாளப் பட வாய்ப்பு வந்திச்சு. 'பண்ணலாமே'னு கோழிக்கோடு கிளம்பிப் போனேன். மறுநாளே குழந்தைக்கு உடம்பு சரியில்லாம போக, பெரிய கும்பிடு போட்டுட்டுக் கிளம்பி வந்துட்டேன்.

அந்தநாள்ல இருந்து சினிமா வாய்ப்புகளை ஏத்துக்கலை. நடிகை சரிதா ஒருமுறை எனக்கு அட்வைஸ் தந்தாங்க. 'பிள்ளைங்களுக்குப் பத்து வயசு ஆகுறவரையாவது பக்கத்துலயே இருக்கணும்'னு அவங்க சொன்னது, எனக்கும் சரினு பட்டுச்சு. என் மகள் இப்போ பத்தாவது படிக்கிறா. இதுநாள் வரை அவளோடேயே என் நேரத்தைச் செலவு செய்ய முடிஞ்சதைப் பெரிய வரமாகவே நினைக்கிறேன்'' என்றவரிடம், இன்றைய ஒருநாள் எப்படிக் கழிகிறது? என்றோம்.

``மகளை ஸ்கூல் கொண்டுபோய் விடுறது, வீட்டுல சமையல்... இப்படிப் பாதிநேரம் போகும். கணவர் ஐஸ்க்ரீம் ஃபேக்டரி வெச்சிருக்கார். நேரம் கிடைச்சா அங்க போய் அவருக்கு உதவுவேன். மதிய நேரங்கள்ல நான் நடிச்ச பழைய படங்கள் டி.வியில் ஒளிபரப்பானா, பார்ப்பேன்" என்றவர், கொசுறாக இரண்டு விஷயங்களைச் சொன்னார்.

முதலாவது : மறுபடியும் நடிக்கப் போகிறாராம். 'மலையாளத்துல கமிட் ஆகிட்டேன். தமிழ்லேயும் வாய்ப்பு வந்தா, இனி பண்ணலாம்னு இருக்கேன்!

இரண்டாவது : இவர் நடித்த நல்லெண்ணெய் விளம்பரத்துக்காகவே இன்றும் அந்த நல்லெண்ணெய் தயாரிப்பாளர்கள் தீபாவளிதோறும் நல்லெண்ணெய் பாக்கெட்டுகளை இவருக்கு அனுப்பி வருகிறார்களாம்.

https://cinema.vikatan.com/tamil-cinema/125616-cheran-pandian-chitra-in-appo-ippo-series-11.html

 

 

"அப்போ ஆக்டிங், இப்போ ஆடிட்டிங், சீக்கிரமே ஒரு யூ-டியூப் சேனல்!" - 'அப்போ இப்போ' கதை சொல்லும் ரேகா : பகுதி 12

 
 

``என் சொந்த ஊர் கேரளாவில் இருக்கிற ஆழப்புலா. அப்பாவுக்கு சென்ட்ரல் கவர்மென்ட் வேலை. நான் குட்டிப் பொண்ணா இருக்கும்போதே, அப்பாவை தமிழ்நாட்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டாங்க. ஊட்டியில்தான் படிச்சு வளர்ந்தேன். அப்போ, அப்பா எங்களை சினிமா பார்க்க அனுமதிக்கவே மாட்டார். அப்படி இருந்த நான், சினிமாவுல கிட்டத்தட்ட 300 படங்களுக்கும் மேல நடிச்சுட்டேன். பிரைவஸி பாதிக்கும்ங்கிறதால நான் எப்பவுமே ஃபேமிலியைப் பற்றி மீடியாக்கள்கிட்ட அவ்வளவா பேசமாட்டேன். ஆனாலும், நான் சினிமாவுக்குள்ள வந்த அந்தச் சுவாரஸ்யமான கதையை உங்களுக்குச் சொல்றேன் வாங்க..." - உற்சாகமாகத் தனது `அப்போ இப்போ’ கதையைச் சொல்லத் தொடங்குகிறார், `கடலோரக் கவிதைகள்' ரேகா.

ரேகா

 

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

`தெற்கத்திக் கள்ளன்' பட இயக்குநர் கலைமணி சார் ஒருமுறை என்னை ஊட்டியில் யதேச்சையா பார்த்துட்டு, `பார்க்க சாவித்திரி மாதிரி இருக்க...'னு சொல்லி, அவரோட படத்துல நடிக்கக் கூப்பிட்டார். `சினிமா பார்க்கிறதையே குற்றம்னு சொல்ற எங்க அப்பா சினிமாவுல நடிக்கிறதுக்கெல்லாம் அனுமதிக்கவே மாட்டார்’னு சொல்லிட்டுப் போயிட்டேன். 

பிறகு, சிலநாள் கழித்து கலைமணி சாரே என்னைத் தேடிவந்து, ``பாரதிராஜா சார் புதுப்படம் ஒண்ணு எடுக்கிறார். ஹீரோயினுக்கு டீச்சர் கேரக்டர். அதுவும் கிறிஸ்தவப் பெண்ணா இருக்கணும். அந்தக் கேரக்டருக்கு உங்கப்பா எதுவும் சொல்லமாட்டார்'னு சொல்லி, அவரே என் அப்பாகிட்ட பேசினார். எங்க அப்பாவும் ஆடிஷனுக்குப் போக சம்மதிச்சார் என்பதுதான், இதில் பெரிய ஆச்சர்யம். பிறகென்ன... நானும் அம்மாவும் ஆடிஷனுக்காக சென்னையில இருந்த பாரதிராஜா சார் ஆபீஸுக்குப் போனோம்.  

அப்போ எனக்கு 15 வயதுதான். பத்தாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தேன். பேன்ட், ஷர்ட் போட்டுப் போயிருந்தேன். `இந்தக் காட்டன் சேலையைக் கட்டிக்கோ; பெரிய பொட்டு வெச்சுக்கோ; மேக்கப் எதுவும் போடாமா, இந்தக் கண்ணாடியைப் போட்டுகிட்டு வா’னு பாரதிராஜா சார் சொன்னார். அப்படியே வந்து நின்னேன். சினிமா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதனால, மனசுக்குள்ள பயம் எதுவும் இல்லை. ஆனால், அந்தப் பெரிய கண்ணாடிதான் கொஞ்சம் காமெடியா இருந்துச்சு. பிறகு அன்னைக்கே பாரதிராஜா சார், `கடலோரக் கவிதைகள்’ பட ஜெனிஃபர் கேரக்டருக்கு என்னைத் தேர்ந்தெடுத்துட்டார்.  

அதுவரை நான் பாரதிராஜா சார் படங்கள் எதையும் பார்த்ததே இல்லை என்பதுதான் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விஷயம். `அட்வான்ஸை பிடிம்மா’னு உடனே 11 ரூபாய் பணத்தைக் கொடுத்த பாரதிராஜா சார், `இங்க பாரு, சினிமாவுல நடிக்கிறேன்னு யாருக்கிட்டேயும் சொல்லக் கூடாது'னு சொல்லி அனுப்பிவெச்சார். பிறகு, மூன்று நாள் கழிச்சு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிக்கிட்டு போனார். அங்கே போனா, சத்யராஜ் சாரை என் முன்னாடி நிற்க வெச்சாங்க. அவரைப் பார்த்ததுமே, `ஐய்யோ... இவ்வளவு பெரிய ஆள்கூடவா நடிக்கப்போறோம்’னு நினைச்சு பயந்துட்டேன்.

நடிகை ரேகா

பிறகு சத்யராஜ் சாரின் ஹைட், வெயிட்டுக்கு ஓரளவுக்காவது பொருத்தமா தெரியணும்னு நிறைய முட்டையும் சத்தான சாப்பாடும் கொடுத்து சாப்பிட வெச்சாங்க. வெரைட்டியான காட்டன் புடவைகளைக் கொடுத்து கட்டச் சொன்னாங்க. இதுக்கிடையில் ஷூட்டிங் ஸ்பாட்ல சின்னப் பசங்ககூட சேர்ந்து கடல்ல நண்டு பிடிச்சுக்கிட்டு விளையாடிக்கிட்டு இருப்பேன். பாரதிராஜா சார் அதைப் பார்த்துட்டு, `என் படத்தில் எப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்திருக்கேன். நீ என்னடான்னா சின்னப் பசங்ககூட சேர்ந்துகிட்டு நண்டு பிடிச்சுக்கிட்டு இருக்க, இங்க வந்து உட்காரு... டேய், போய் அந்தப் பொண்ணை இழுத்துக்கிட்டு வாங்கடா'னு திட்டுவார். சின்னப்பிள்ளை மாதிரி நான் நடந்துகிட்ட அந்த ஷூட்டிங் ஸ்பாட் நாள்களையெல்லாம் நினைச்சுப் பார்த்தா இப்போவும் சிரிப்புதான் வருது. 

ஷூட்டிங் முடிச்சுட்டு எங்க ஊரான ஊட்டிக்குப் போயிட்டேன். பிறகு சில நாள்கள்லேயே, `கவிதாலயா ஆபீஸ்ல இருந்து பேசுறோம். பாலசந்தர் சார் டைரக்‌ஷனில் நடிக்கணும்'னு சொல்லி ஒரு போன் வந்தது. உண்மையைச் சொன்னா, அப்போ எனக்குப் பாலசந்தர் சார் யாருன்னே தெரியாது. `கடலோரக் கவிதைகள்' படத்தோட போட்டோ ஆனந்த விகடனில் அட்டைப் படமா வந்திருந்துச்சு. அதைப் பார்த்துட்டுதான் பாலசந்தர் சார், `புன்னகை மன்னன்' படத்துல நடிக்கக் கூப்பிட்டிருக்கார்னு தெரிஞ்சது.  

`நான் கமல் சாருக்கு ஹீரோயினா?’னு உள்ளுக்குள்ள பயம். அந்தப் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடி, `எப்படி நடிக்கணும்’னு வொர்க்ஷாப் நடத்தினாங்க. அங்கே கமல் சார், பாலசந்தர் சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்த சுரேஷ் கிருஷ்ணா, வஸந்த் சார்னு பலரும் இருந்தாங்க. எல்லோரும் என்னைத் தங்கத் தட்டில் வெச்சுத் தாலாட்டாத குறையா தாங்குவாங்க. பாலசந்தர் சார் அடிக்கடி, `நல்லா கண்ணைத் திறந்து நடி'னு சொல்லி, ஒவ்வொரு காட்சியையும் நடிச்சுக் காட்டுவார். 

அதில் வந்த `என்ன சத்தம் இந்த நேரம்’ பாட்டோட ஷூட்டிங் டைம்ல திடீர்னு கமல் சார் எனக்கு முத்தம் கொடுப்பார். அந்தக் காட்சி ஸ்கிரிப்ட்ல கிடையாது. அப்படியொரு காட்சி எடுக்கப்போறாங்கனு எனக்குத் தெரியாது. அது, கமல் சாரும் பாலசந்தர் சாரும் பேசி முடிவு பண்ண விஷயம். எனக்கே தெரியாமத்தான் அந்த ஷாட்டை திடீர்னு ஷூட் பண்ணாங்க. நான் உடனே பாலு சார்கிட்ட, `இப்படி ஒரு சீன்ல நடிக்க எங்க அப்பா ஒப்புக்கமாட்டார்'னு சொன்னேன். சுரேஷ் கிருஷ்ணா சாரும் வஸந்த் சாரும், `இதை சென்சாரே ஒப்புக்கமாட்டாங்கம்மா’னு சொன்னாங்க. உடனே நான், `சென்சார்னா என்ன சார்?’னு கேட்டது இப்போவும் ஞாபகம் இருக்கு. அப்படிக் கேட்டதும், எல்லோரும் சிரிச்சுட்டாங்க. 

ரேகா

என் மூணாவது படம் `நம்ம ஊரு நல்ல ஊரு’. நாயகன், ராமராஜன் சார். அந்தப் படத்துல நான் நடிக்கப்போறதைத் தெரிஞ்சுக்கிட்டு பாரதிராஜா சார், `உன்னை எவ்வளவு பெரிய ஹீரோயினா கொண்டு வந்திருக்கிறேன். நீ என்னடானா யாரோ புதுமுக ஹீரோகூட நடிக்கிறியாம்ல'னு திட்டினார். ஆனால், அந்தப் படம் ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட். பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. அதைத் தொடர்ந்து நிறைய படங்கள், நிறைய கேரக்டர்கள். 

`பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படம் பண்ணப்போ மலையாள சினிமாவுல இருந்து நடிக்கக் கூப்பிட்டாங்க. `ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’னு முதல் படமே இயக்குநர் ஃபாசில் சாரின் தயாரிப்பு. அப்போ எனக்காக இயக்குநர் பாசில் சாரே செட்டுக்கு வந்திருந்தார். அப்படி மலையாளத்தில் நடித்த பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. கடவுள் புண்ணியத்தில் நிறைய நல்ல படங்கள், நல்ல கதாபாத்திரங்கள், பெரிய இயக்குநர்கள், பெரிய ஹீரோக்களுடைய படங்களில் நடிச்சேன். 

மம்மூட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, விஷ்ணுவர்தன்னு மற்ற மொழிகளின் டாப் ஹீரோ படங்களில் நடிச்சுட்டேன். ஆனா, ரஜினி சார்கூட மட்டும்தான் நடிக்க முடியலை. ஒருமுறை அந்த வாய்ப்பும் வந்தது, கால்ஷீட் பிரச்னை காரணமா நடிக்க முடியாம போச்சு. ஆனா, ரஜினி சார்கூட எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வு உண்டு. காவிரி பிரச்னைக்காக ரஜினி சார் உண்ணாவிரதம் இருந்தப்போ, ஒரு பொண்ணு அவருக்கு ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதத்தை முடிச்சு வெச்சா... அடுத்தநாள் காலையில அந்தப் புகைப்படம் எல்லா நாளிதழ்களிலும் வந்திருந்தது. அது என் பொண்ணுதான்!

எனக்காக ஆஷா போஸ்லே பாடின, `செண்பகமே... செண்பகமே' பாட்டு. பிறகு டிவியில் `கனா காணும் காலங்கள்' தொடர். பல மொழிப் படங்கள், பாடல்கள், சீரியல்கள்னு எனக்கு எல்லாமே அமைந்தன. முக்கியமா, `கனா காணும் காலங்கள்’ சீரியல் பார்த்துட்டு, `இந்த மாதிரியான அம்மாதான் வேண்டும்’னு பலரும் பேசுவாங்க. அந்தத் தொடருக்கான ஸ்கிரிப்ட் எழுதும்போதே, நான், ரமணன் சார் எல்லாரும் `இப்படி இருக்கட்டும், அப்படி இருக்கட்டும், இப்படி இருந்தாதான் பசங்களுக்குப் பிடிக்கும்!'னு பார்த்துப் பார்த்து செதுக்குவோம்.  

நான் ஹீரோயினா உச்சத்தில் இருந்த காலத்திலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சினிமாவுல நடிக்க வந்ததுக்குப் பிறகு படிப்பைத் தொடர முடியாம பேச்சு. ஆனா, என் கணவர் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தார். எங்களுக்கு ஒரே பொண்ணு. அவளும் எனக்கு நிறைய கத்துக்கொடுத்தா. இப்போ என் கணவரோட எல்லா ஆடிட்டிங் வேலைகளையும் நான்தான் பண்ணிக்கிட்டு இருக்கேன்.  

ரேகா

கல்யாணத்துக்குப் பிறகு சில வருடங்கள் நடிக்காம இருந்தேன். ஒரு பொது நிகழ்ச்சியில் என்னையும் என் கணவரையும் பார்த்த ரஜினி சார், `அப்படியே இருக்காங்களே. திரும்பவும் நடிக்கச் சொல்லலாமே. யோசிங்க'னு என் கணவரிடம் சொன்னார். அப்புறம் நானும், கணவரும் பேசி, நான் மீண்டும் நடிக்கிற முடிவை எடுத்தோம். நான் திரும்ப நடிக்க வந்ததுக்கு ரஜினி சார் மாதிரி ராதிகா மேடமும் நிறைய நம்பிக்கை கொடுத்தாங்க.  

சினிமாவுல நடிச்சுக்கிட்டே இருந்தாலும், வீட்டையும் குடும்பத்தையும் நல்லா பார்த்துக்குவேன். படத்துக்கான அட்வான்ஸ் பணம் கைக்கு வந்ததுமே, நானும் பொண்ணும் ஷாப்பிங் கெளம்பிடுவோம். வாழ்க்கையை பாசிட்டிவ்வா, ரிலாக்ஸா அனுபவிக்கணும்னு நினைப்பேன். காலையில் எழுந்ததும் யோகா பண்ணுவேன். சத்தான உணவுகளைச் சாப்பிட்டு, ஹெல்த்தியா இருக்கணும்னு நினைப்பேன். 

அதேசமயம், நல்ல கேரக்டர்ஸ் கிடைச்சாதான் நடிப்பேன். ஆனா, பலரும் ஒரேமாதிரியான கேரக்டர்களுக்கே என்னைக் கூப்பிடுறாங்க. அப்படிப் பல வாய்ப்புகளைத் தவிர்த்திருக்கேன். ஒரு யூ-டியூப் சேனல் ஆரம்பிச்சு, பெண்களுக்கான பல விஷயங்களைப் பதிவு பண்ணனும்னு ஆசை இருக்கு, சீக்கிரமே அதைப் பண்ணப்போறேன்!" 

வாழ்த்துகள் ரேகா!

https://cinema.vikatan.com/others/cinema-serials/126264-actress-rekha-in-appo-ippo-series-episode-12.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

"வாய்ப்புகளைத் தவிர்த்துட்டேன், பேரப் பிள்ளைகளுக்கு ஊறுகாய், ஜாம் செஞ்சு கொடுக்கிறேன்!" - செளகார் ஜானகியின் அப்போ இப்போ கதை!- பகுதி 13

 

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி தன் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

``ரொம்ப ஆச்சாரமான குடும்பத்திலிருந்து வந்தவள் நான். சினிமா பார்க்க எங்க அப்பா எப்போவுமே அனுமதி தரமாட்டார். நான் சினிமாவுக்கு வந்ததே பெரிய கதைதான்!'' என்று தன்னுடைய பயணத்தைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார், பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி. 

``ஆந்திராதான் என் பூர்வீகம். பானுமதி அம்மா நடிச்ச படம் ஒண்ணு தெலுங்கில் ரிலீஸ் ஆச்சு. அப்போ எனக்கு வயசு ஏழு. அந்த சமயத்தில் பானுமதி அம்மா நடிச்ச படத்தைப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனா, அப்பா கூடாதுனு சொல்லிட்டார். அப்பா இங்கிலாந்தில் படிச்சவர். கெமிக்கல் இன்ஜினீயர். நல்ல உழைப்பாளி. எனக்கு ஒரு அண்ணா, தங்கை, தம்பி. அப்பாவுக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் கிடைக்கும். அதனால, எங்க வீட்டுல இருந்த யாரும் சரியாக ஸ்கூல்ல சேர்ந்து படிக்க முடியலை. ஆனா, எங்க அப்பா அவருக்குக் கல்யாணம் ஆன புதுசுல எங்க அம்மாவை தபால் மூலமா டிகிரி படிக்க வெச்சு பாஸ் பண்ண வெச்சார். ஆனா, அவருடைய பசங்களைதான் அவரால சரியா படிக்க வைக்க முடியலை. எங்க அம்மா நல்லா சமைப்பாங்க. கடவுள் பக்தி அதிகம். எங்களுக்கு வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கத்துக்கொடுத்தாங்க. படிப்பு மட்டும் வாழ்க்கையில் அரிதான விஷயமா அமைஞ்சிருச்சு எங்களுக்கு!. 

சௌகார் ஜானகி

 

 

 

அப்பா வேலை நிமித்தமா சென்னைக்கு வந்தார். அப்போ, எனக்கு இருந்த விருப்பத்தின் காரணமா சென்னை ஆல் இந்தியா ரேடியோவுல ரேடியோ ஆர்டிஸ்ட் வேலைக்குச் சேர்ந்தேன். ரொம்பப் பிடித்த வேலை. அப்போ என் குரல் கேட்டுட்டு, படத்துல நடிக்க வைக்க வாணி ஸ்டூடியோ அதிபர் பி.எம்.ரெட்டி ரேடியோ ஸ்டேஷனுக்கு போன் பண்ணி என்னை விசாரிச்சிருக்கார். நல்ல பொண்ணு, அழகாக இருப்பானு ரேடியோ ஸ்டேஷனில் இருந்து பதில் சொல்லியிருக்காங்க. உடனே, என்னைப் பார்க்க வந்துட்டார். அவர் என்கிட்ட பேசுனவுடனே, ஓகே நான் பண்றேன்னு சொல்லிட்டேன். அப்போ எனக்குப் பதினைஞ்சு வயசு.  

 

 

வீட்டுக்குப் போனதும் அம்மாகிட்ட சினிமாவுல வாய்ப்பு வந்தது பத்தி சொன்னேன். என் அண்ணன் பாய்ஞ்சு வந்து என்னை பெல்ட்டால அடிச்சார். 'இவளை ரேடியோ ஸ்டேஷன் அனுப்புனதே தப்பு. இதுல சினிமாவுக்கு நடிக்கப்போறேன் வேற சொல்றா'னு உடனே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. கல்யாணம்னாலே என்னனு தெரியாத வயசு அது. தூரத்து சொந்தத்துல கல்யாணம் நடந்துச்சு. என் கல்யாணம் முடிஞ்சவுடனே என் அப்பா, அம்மா, தம்பியெல்லாம் அசாம் போயிட்டாங்க. நான் திருமணம் முடிச்சு விஜயவாடா வந்துட்டேன். 

என் கணவருக்கு என்ன வேலை, சம்பளம் எப்படினு எந்த கேள்வியும் கேட்டதில்லை. இதுதான் என் வாழ்க்கைனு நினைச்சு வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்தில் என் கணவர், ``எனக்கு இங்கே வேலை பிடிக்கலை. உங்க பொண்ணக் கூட்டிக்கிட்டு அசாம் வந்துட்றேன். எனக்கு நல்ல வேலை இருந்தா சொல்லுங்க'னு என் அப்பாவுக்கு லெட்டர் எழுதியிருக்கார். இந்த விஷயமே எனக்குத் தெரியாது. 'புறப்படு, அசாம் போலாம்'னு என்கிட்ட சொன்னார். ``ஏங்க, அம்மா அப்பாவைப் பார்க்க போறாமா?'னு கேட்டேன். அப்போதான் விஷயத்தைச் சொன்னார். எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. எனக்கு அம்மா வீட்டுக்கு உதவிக்காகப் போறதுல விருப்பம் இல்லை. ஏமாற்றத்துடன் அம்மா வீட்டுக்குப் போனேன். 

 

 

Sowcar janaki

அங்கப் போய் பல நாள்கள் அவர் வேலை கிடைக்காமல் இருந்தார். அந்த சமயம் பார்த்து நான் கர்ப்பம் ஆனேன். என் மனசுக்குள்ளே பல கவலைகள் குடிகொள்ள ஆரம்பிச்சது. அசாமில் அப்போது அடிக்கடி பூகம்பம் வரும். அதனால, டெலிவரிக்காக நானும் அவரும் சென்னைக்கு வந்துட்டோம். சென்னையில் என் தாய்மாமன் வீட்டுக்குப் போய் தங்கினோம். அங்கேதான் என் முதல் குழந்தை பிறந்துச்சு. குழந்தை பிறந்து மூணு மாசம் இருந்தபோது கணவரிடம், ``நீங்க இப்படியே வேலை இல்லாம இருக்கீங்க. நமக்கும் குழந்தை பிறந்துருச்சு. நான் வேலைக்குப் போகட்டுமா? நம்ம திருமணத்துக்கு முன்னாடி சினிமாவில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்துச்சு... இப்போ முயற்சி பண்ணிப் பார்க்கட்டுமா?''னு கேட்டேன். கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேசாமல் யோசிச்சுக்கிட்டே இருந்தார். அதற்குப் பிறகு, `நடிக்கிறதுக்குப் பதிலா பின்னணிப் பாடகியா போலாமே?'னு சொன்னார். எனக்குப் பாட்டு பாட வராது. கொஞ்சம் நடிக்க வரும். ஸ்கூல் படிக்கும்போதும் டிராமா பண்ணியிருக்கேன்னு சொன்னேன். என்ன நினைச்சாரோ, ஓகே சொல்லிட்டார். 

அடுத்தநாள் காலையில வாணி ஸ்டூடியோவுக்கு கணவர், குழந்தையுடன் பி.எம்.ரெட்டி சாரை பார்க்கப் போனேன். அவர் என்னைப் பார்த்துட்டு, 'ஏன் வந்தீங்க'னு கேட்டார். 'சார், நடிக்க வாய்ப்பு தரேனு சொன்னீங்களே'னு கேட்டேன். 'அந்தப் படத்தோட ஷூட்டிங் எப்போவே முடிஞ்சிருச்சுமா'னு சொல்லிட்டு, என் கணவரைப் பார்த்துட்டு, விசாரிச்சார். என் கணவரையும், குழந்தையையும் அறிமுகப்படுத்தினேன். 'கல்யாணத்துக்கு அப்புறம் நடிக்கிறது கஷ்டம்'னு சொல்லிட்டார். 'என் குடும்பம் கஷ்டமான சூழ்நிலையில இருக்கு. நீங்க எனக்கு ஏதாவது வேலை கொடுங்க சார். யாரிடமாவது சிபாரிசு பண்ணுங்க'னு கேட்டேன். 

அவருடைய தம்பி நாகி ரெட்டிக்குப் போன் பண்ணினார். என்னைப் பத்தி சொல்லிட்டு, 'ஒருநாள் வாஹினி ஸ்டூடியோவுக்கு வரச் சொல்றேன். படத்துக்கு டெஸ்ட் எடுத்துப் பாரு'னு சொன்னார். எனக்கு அவர் பேசுனது ஆறுதலா இருந்துச்சு. அடுத்தநாள் வாஹினி ஸ்டூடியோவுக்குப் போனேன். என்னை வெச்சு மேக்கப் டெஸ்ட் எடுத்தாங்க. அப்போ, அந்த இடத்தில் ஜெமினி கணேசன் காஸ்ட்டியூம் டிசைனரா இருந்தார். என்னைப் பார்த்துட்டு, 'என்னமா குழந்தையுடன் வந்திருக்க'னு கேட்டார். 'சவுகார்' படத்துக்காக ஆடிஷன் நடந்துச்சு. டயலாக் பேப்பரைக் கையிலே கொடுத்துப் படிச்சு காட்டச் சொன்னாங்க. நான் ரெண்டு நிமிடத்துல மனப்பாடம் செஞ்சு நடிச்சேன். அன்னைக்கு பொழுது வாஹினி ஸ்டூடியோவுல நல்லபடியா முடிஞ்சது. பிறகு ரெண்டு மாசம் ஆச்சு. எந்தப் பதிலும் வரலை. கவலையா இருந்தேன். 

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஏரியாவுல வீடு. ஒருநாள் வீட்டு வாசல்ல கார் வந்து நிற்குது. காரிலிருந்து எல்.வி.பிரசாத், நாகி ரெட்டி சார் வந்து நின்னாங்க. 'உனக்கு வேஷம் கிடைச்சிருச்சு பொண்ணு'னு சொன்னாங்க. சின்ன வேஷமா இருக்கும்னு சந்தோஷப்பட்டேன். 'ஹீரோயின் ரோல்'னு சொன்னதும், எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்தப் படத்துலதான் என்.டி.ராமராவ் அவர்களும் அறிமுகமானார். முதல் படமே பெரிய படமா அமைஞ்சிருச்சு. என் உண்மையான பேர் சங்கரமன்சி ஜானகி. 'செளகார்' படத்தோட ஹிட் என் பெயரை 'செளகார் ஜானகி'னு மாத்திருச்சு. தெலுங்கில் படம் செம ஹிட். பிறகு தமிழில் 'வளையாபதி' படத்துல அறிமுகமானேன். இந்தப் படம் ரிலீஸ் ஆன நேரத்துலதான், 'பராசக்தி' படமும் ரிலீஸ் ஆச்சு. என் தமிழ் உச்சரிப்பு நல்லாயிருக்குனு கலைஞர் சொன்னதா சொல்வாங்க. கலைஞர் ஆட்சியில் எனக்கு நிறைய விருதுகள் கிடைச்சிருக்கு. 

கே.பி.பாலசந்தர்

நான் தெலுங்குப் பொண்ணா இருந்தாலும், எனக்கு வாழ்க்கை கொடுத்து, என்னை வாழ வைத்தது தமிழ் சினிமாதான்!. அதை எப்போவும் மறக்கமாட்டேன். தெலுங்கு சினிமாவுலேயே இதைச் சொல்லியிருக்கேன். கே.பி.பாலசந்தர் சார் எனக்கு அவருடைய படங்களில் நல்ல கேரக்டர் கொடுப்பார். நான் சினிமாவில் நடிச்சுக்கிட்டு இருந்த நேரத்தில் கே.பி. இயக்குநராக இல்லாத காலகட்டத்தில் அவருடைய நாடகங்களில் நடிச்சிருக்கேன். மேஜர் சுந்தர்ராஜன் சார் சைக்கிளில் வந்து என்கிட்ட, 'கே.பி நாடகத்துல நடிக்க முடியுமா'னு கேட்டார். அப்போ சினிமாவுல  நான் பிஸி.  ஆனாலும், பாலசந்தர் நாடகத்துல ஒரு பைசா வாங்காம, சொந்த காஸ்ட்யூமில் நடிச்சுக் கொடுத்தேன். அவருடைய டைரக்‌ஷன் எனக்கு ரொம்பப் பிடிக்கும். 

எனக்கு மொத்தம் மூணு பசங்க. எல்லோரையும் நான்தான் படிக்க வெச்சு, நல்லபடியா கல்யாணம் பண்ணி வெச்சேன். என் பொண்ணு சர்ச் பார்க் ஸ்கூலில் படிக்கும்போது, ஜெயலலிதா சீனியர். 'ஜெயா படிப்புல கெட்டிக்காரி. எல்லாத்துலேயும் அவதான் ஃபர்ஸ்ட்'னு என் பொண்ணு சொல்வா. நான் ஜெயலலிதா நடிக்க வருவார்னு எதிர்பார்க்கவே இல்லை. கலெக்டரா வருவார்னுதான் நினைச்சேன். அந்த அளவுக்குப் படிப்புல கெட்டிக்காரி. அவங்க அம்மா சந்தியா எனக்கு நல்ல பழக்கம். சந்தியா ஷூட்டிங் போகும்போது ஜெயா என் பசங்ககூட வீட்டுல விளையாடுவா. குடும்பச் சூழ்நிலை என்னை மாதிரி ஜெயலலிதாவையும் சினிமாவுக்குக் கொண்டு வந்துருச்சு. வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வந்தவள் நான். சினிமாவுக்கு நான் வந்தப்போ பெண்களை மதிச்சாங்க. ஆனா, வெளியே இருக்கிற மக்கள் எங்களை அவதூறாகப் பேசினாங்க. சினிமாவுல இருக்கிறனால தங்குறதுக்கு வீடு தரலை. சினிமா நட்சத்திரங்களும் ஒழுக்கமானவங்கதான். இந்த சினிமா எனக்கு நிறைய நல்லதைக் கொடுத்திருக்கு. சில கஷ்டங்களையும் பார்த்திருக்கேன். ஒரு படத்துல நடிக்கிறதுக்கு எல்லாம் ஓகே ஆகி, கடைசி நேரத்துல வேற ஹீரோயினுக்கு வாய்ப்பு போயிரும். 'தேவதாஸ்' படம் நான் நடிக்க வேண்டியது. மேக்கப், காஸ்ட்டியூம் எல்லாம் ஓகே ஆனதுக்குப் பிறகு சில காரணங்களால என்கிட்டகூட சொல்லாம என்னைப் படத்துல இருந்து தூக்கிட்டு, அதில் சாவித்திரியை நடிக்க வெச்சாங்க. 

ஜெயலலிதா

ஆண்டவன் புண்ணியத்துல இப்போ நல்லா இருக்கேன். நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. நான்தான் சில வாய்ப்புகளைத் தவிர்த்துட்டேன். மகன், மகள் அமெரிக்காவில் இருக்காங்க. ஒரு பொண்ணு மட்டும் சென்னையில் இருக்கா. நான் பெங்களூரில் எனக்கான வீட்டில் இருக்கேன். கொள்ளுப் பேரன், பேத்தியும் இருக்காங்க. என்னை கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. நான் யாரையும் எதிர்பார்க்காம, யாரிடமும் ஒரு ரூபாய் வாங்காம எண்பத்து ஏழு வயசுல கடவுளை நினைச்சுக்கிட்டு பேரப் பிள்ளைகளுக்கு ஊறுகாய், ஜாம்னு ரெடி பண்ணிக் கொடுத்துட்டு சந்தோஷமா இருக்கேன்!'' எனச் சிரிக்கிறார், சௌகார் ஜானகி. 

 

 

 

"பொண்ணு செட்டில் ஆயிட்டா; நான் வாழ்க்கையை அதுபோக்குல விட்டு ரசிக்கிறேன்!" - பிரதாப் போத்தன் : 'அப்போ இப்போ' பகுதி 14

 

அப்போ இப்போ தொடருக்காக நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் தனது வாழ்க்கைப் பயணத்தை பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``வாழ்க்கை ரொம்ப அழகானது; அதை ரசிச்சுக்கிட்டே இருக்கேன்'' என்கிறார், நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன். 'அப்போ இப்போ' தொடருக்காக அவரிடம் பேசினேன். 

பிரதாப் போத்தன்

 

 

 

``நான் பிறந்தது கேரளா. ஆனா, சின்ன வயசுலேயே தமிழ்நாட்டுக்கு வந்தாச்சு. ஊட்டி அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். காலேஜ் படிப்புக்காக சென்னைக்கு வந்தேன். பி.ஏ எக்கனாமிக்ஸ் படிச்சேன். காலேஜ்ல நிறைய மேடை நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். ஏன்னா, எனக்கு சின்ன வயசுல இருந்தே சினிமாவுல நடிக்க ஆர்வம் அதிகம். எப்படியாவது சினிமாவுக்குள்ள போயிடணும்னு நினைச்சுக்கிட்டே இருப்பேன். 

 

 

சினிமா மேல எனக்கு ஈர்ப்பு வந்ததுக்குக் காரணம், எங்க அண்ணன் ஹரி. அவர் சினிமா தயாரிப்பாளரா இருந்தார். வீட்டுல எப்பவுமே சினிமாவைப் பத்திப் பேசிக்கிட்டே இருப்பார். காலேஜ் படிப்பு முடிஞ்சதும் மும்பையில இருக்கிற ஒரு கம்பெனியில காப்பி ரைட்டர் வேலைக்குப் போயிட்டேன். அப்போ, இயக்குநர் பரதன் அறிமுகம் கிடைச்சது. எங்க அண்ணனைப் பார்க்க வரும்போது, எங்கிட்டேயும் அடிக்கடி பேசுவார். அவருக்கு என்னைய ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. அதனால, அவருடைய மலையாளப் படமான 'தகாரா (Thakara)'ல சின்ன  கேரக்டர்ல நடிக்க வெச்சார். இந்தப் படத்துக்குப் பிறகு, தமிழ்ல எனக்கு முதல் வாய்ப்பு கிடைச்சது. 

பிரதாப் போத்தன்

பாலுமகேந்திரா சார் என்னோட ஆல்பத்தைப் பார்த்துட்டு, அவர் இயக்கிய 'அழியாத கோலங்கள்' படத்துக்கு ஹீரோவா கமிட் பண்ணார். இந்தப் படம் பண்ணும்போது பாலுமகேந்திரா சார் பெரிய இயக்குநர் கிடையாது. அவர் இயக்கிய இரண்டாவது படம் இது. படத்துல என் நடிப்பு அவருக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. அதனால, தொடர்ந்து அவர் படங்கள்ல எனக்கு நடிக்க சான்ஸ் கொடுத்தார். பல தயாரிப்பாளர்கள்கிட்ட கேட்டு, என்னை நடிக்க வெச்சிருக்கார். 

'மூடுபனி' என் வாழ்க்கையில மறக்க முடியாத படம். ஏன்னா, இந்தப் படத்துல சைக்கோ கேரக்டர்ல நடிச்சேன். இந்தப் படத்துக்குப் பிறகுதான் எனக்கு நிறைய நெகட்டிவ் கேரக்டர்கள் கிடைச்சது. பாலுமகேந்திரா சார் என்மேல எப்போவும் நிறைய நம்பிக்கை வெச்சிருப்பார். 'என் இனிய பொன் நிலாவே' பாட்டு ஷூட்டிங் நடக்கும்போதே, இந்தப் பாட்டு செம ஹிட் ஆகும்னு ஸ்பாட்ல இருந்த பலரும் சொன்னாங்க. இந்தப் பாட்டைக் கேட்கும்போது எனக்கு நடிகை ஷோபா ஞாபகம்தான் வரும். ஏன்னா, இந்தப் பாட்டு எடுத்து முடிச்ச கொஞ்சநாள்ல ஷோபா இறந்துட்டாங்க. நல்ல நடிகை. என் முதல் படத்தோட ஹீரோயின். ரொம்ப சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க. அவங்க மரணம் எனக்குப் பேரதிர்ச்சியா இருந்துச்சு.  

 

 

பாலு மகேந்திரா

'மூடுபனி',  'வறுமையின் நிறம் சிவப்பு' ரெண்டு படமும் தீபாவளி அன்னைக்கு ஒரே சமயத்துல ரிலீஸ் ஆச்சு. ரெண்டு படமும் என்னை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். அப்போதான், ஒரே மாதிரியான கேரக்டர்கள்ல நடிக்கிறோமோனு தோணுச்சு. நடிக்கிறதுக்கு முன்னாடி, டைரக்‌ஷன் பண்ணதான் ஆர்வம் இருந்தது. அதனால, படங்களை இயக்கவும் ஆரம்பிச்சேன். நடிக்கிறதைவிட டைரக்‌ஷன் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. 

நிறைய ஆங்கில புத்தகங்கள் படிக்கிற பழக்கம் எனக்கு இருந்தது. நான் படிக்கிற ஆங்கிலப் புத்தகங்கள்ல வர்ற கதைகளை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு படங்களுக்கான ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்சிடுவேன். அப்படி எழுதுன கதைதான், 'வெற்றி விழா' படம். இந்தப் படம் நூறு நாளைக்கு மேல ஓடி சூப்பர் ஹிட் ஆச்சு. 'சீவலப்பேரி பாண்டி' படமும் என் வாழ்க்கையில மறக்க முடியாத படம். இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையா வெச்சு உருவாக்குனது. நண்பர் ஒருவர் சீவலப்பேரி பாண்டியைப் பற்றிய கதையைச் சொன்னார். கேட்டதும் எனக்குப் பிடிச்சுப் போனதுனால, உடனே அதைப் படமாக்கிட்டேன்.  

 

பிரதாப் போத்தன்

 

நடிகை சில்க் ஸ்மிதாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். திறமையான நடிகை. அவங்களும் சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க. என்னோட 'ஜீவா', 'லக்கிமேன்' ரெண்டு படத்துல அவங்க நடிச்சிருப்பாங்க. மலையாளத்துல சிவாஜி கணேசன், மோகன்லாலை வைத்து 'ஒரு யாத்ரா மொழி (Oru Yathramozhi)' எடுத்தேன். இதுதான் கடைசியா நான் இயக்கிய படம். இதுக்குப் பிறகு சினிமாவுல சின்னச் சின்ன கேரக்டர்கள்ல நடிச்சுக்கிட்டு இருந்தேன். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில நடுவரா இருந்தேன். இப்போ உடல்நிலை ஒத்துழைக்க மாட்டேங்குது. அதனால, வீட்டுல கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன். கிடைக்கிற இடைவெளியில நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். மீண்டும் டைரக்‌ஷன் பண்ற ஐடியா இருக்கு. அதுக்கான வேலைகள்ல தீவிரமா இருக்கேன். எனக்கு ஒரு பொண்ணு இருக்கா. பெங்களூரில் செட்டில் ஆயிட்டா. அவ்வளவுதான். மத்தபடி, வாழ்க்கையை அதுபோக்குல விட்டு ரசிச்சுக்கிட்டு இருக்கேன்!" என்று முடிக்கிறார், பிரதாப் போத்தன்.  

prathap pothan

https://cinema.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த ஒரு விடயம் மட்டும் பிடிபடேல்ல....., எல்லா நடிகைகளும் சொல்லி வைத்த மாதிரி எடுத்தவுடனேயே "எங்க குடும்பம் ரொம்ப ஸ்ரிக்டு, அப்பா,அண்ணன் எல்லாம் கண்டிப்பானவர்கள். என்று சொல்கிறார்கள். ஆனால் 13,....15 வயசிலேயே நடிக்க வந்துட்டேன் என்று பெருமையாய் வேற சொல்லிக்கொள்கிறார்கள். என்றால் நடிகையாய் இருப்பதில் அவர்களுக்குள்ளேயே ஒரு உறுத்தல் இருக்குமோ.....!  ?

Link to comment
Share on other sites

``அப்போ டான்ஸர், இப்போ என் பசங்களுக்காக வாழ்றேன்!" - டிஸ்கோ சாந்தி : 'அப்போ இப்போ' பகுதி 15

 

'அப்போ இப்போ' தொடருக்காக, நடிகை டிஸ்கோ சாந்தி தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

``அப்போ டான்ஸர், இப்போ என் பசங்களுக்காக வாழ்றேன்!
 

``சின்ன வயசுல நான் நல்லா படிப்பேன். டாக்டர் ஆகணும்ங்கிறதுதான் என் ஆசையா இருந்துச்சு. ஆனா, காலம் என்னை சினிமாவுக்குக் கூட்டிக்கிட்டு வந்திருச்சு!" என்கிறார், நடிகை டிஸ்கோ சாந்தி. 80, 90-களில் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர். 

அப்போ இப்போ

 

 

 

டிஸ்கோ சாந்தி

``என் அப்பா தமிழ் சினிமாவுல பெரிய நடிகர். அவர் அதிகமா படிக்காத காரணத்தால சம்பாதிச்ச பணத்தையெல்லாம் சுத்தி இருந்தவங்க ஏமாத்தி எடுத்துக்கிட்டாங்க. அதனால, எங்க குடும்பம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படவேண்டிய சூழல் வந்துச்சு. குடும்ப கஷ்டத்தைப் போக்கத்தான் சினிமாவுல நடிக்க வந்தேன். 

 

 

எங்க வீட்டுல குழந்தைகளுக்குப் பஞ்சம் இல்லை. எனக்குக் கூடப் பிறந்தவங்க மொத்தம் பத்து பேர். நான் மூணாவது குழந்தை. ஸ்கூல் படிப்பைப் பாதியிலேயே விட்டுட்டு நடிக்க வந்துட்டேன். மலையாளத்துல நான் நடிச்ச முதல் படத்திலேயே மோகன்லாலுக்கு ஜோடி ஆனேன். அமெரிக்காவுல 40 நாள் ஷூட்டிங் நடந்தது. ஆனா, இந்தப் படம் பாதியிலேயே டிராப் ஆயிடுச்சு. அப்போ, தமிழ் சினிமாவுல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடக் கூப்பிட்டாங்க. எனக்கும் டான்ஸுக்கும் ரொம்ப தூரம். பரதநாட்டிய டீச்சர் வீட்டுக்கு வந்தாலே பாத்ரூம் பக்கமா ஒளிஞ்சுக்குவேன். ஆனா, என் தங்கச்சி, அக்கா நல்லா பரதம் கத்துக்கிட்டாங்க. கொஞ்சம் குண்டா இருந்ததுனால, ஆடுனா மூச்சு வாங்கும். அதுக்காகவே, டான்ஸ் கத்துக்கலை. 

ஆனா, சினிமாவுல டான்ஸ் ஆடக் கூப்பிட்டப்போ, வேற வழியில்லாம போனேன். ஸ்பாட்ல எனக்கு டான்ஸ் ஆடவே தெரியலை. மாஸ்டர் என்னைத் திட்டாம, பக்கத்துல இருந்த ஒருத்தரைத் திட்டுறமாதிரி, என்னைத் திட்டிக்கிட்டு இருந்தார். 'ஊமை விழிகள்' படத்துல வர்ற 'ராத்திரி நேரத்துப் பூஜையில்...' பாட்டு செம ஹிட் ஆச்சு. அதனால தொடர்ந்து இந்தமாதிரி பாட்டுக்கு டான்ஸ் ஆடக் கூப்பிட்டாங்க. பணம் கிடைச்சது. வீட்டுல சாப்பாடு, பசங்க படிப்புக்குப் பிரச்னை இல்லாம இருந்தது. அதனால, தொடர்ந்து ஆடுனேன்.  

 

 

என் முதல் வருட சினிமா வாழ்க்கையில எனக்கு டான்ஸ் வரலை. பிறகு கொஞ்சம் கொஞ்சமா பிக்அப் ஆச்சு. குண்டா இருந்த உடம்பைக் குறைச்சேன். பத்து நிமிடம் கேப் கிடைச்சாலும், டான்ஸ் மூவ்மென்ட்ஸ் கத்துக்க ஆரம்பிச்சேன். எந்த மாஸ்டர்கிட்டேயும் திட்டு வாங்கக்கூடாதுனு காலையில 4 மணிக்கெல்லாம் எந்திரிச்சு டான்ஸ் கிளாஸுக்குப் போனேன்.  

அப்போ இப்போ பகுதி 15

தெலுங்குல என் முதல்படம் செம ஹிட். என் டான்ஸைப் பார்க்கவே நிறைய ஆடியன்ஸ் படத்துக்கு வர ஆரம்பிச்சாங்க. தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ்னு எல்லா மொழிப் படங்களிலும் நடிக்க ஆரம்பிச்சேன். என் ஒரிஜினல் பெயர் சாந்தகுமாரி. `டிஸ்கோ சாந்தி'னு பெயர் வெச்சது பத்திரிகை நண்பர்கள்தான். சினிமாவுல என்னோட வளர்ச்சிக்கு அவங்களுக்கும் முக்கியமான பங்கு இருக்கு. சினிமாவுல நடிக்க வந்ததுக்குப் பிறகு என் குடும்பத்துல இருக்கிறவங்களைப் படிக்க வெச்சு, கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். வீடு கட்டுனேன், பிளாட், கார் வாங்குனேன். அப்போதான், எனக்குக் காதல் மலர்ந்தது. 

தெலுங்கு சினிமாவுக்காக டான்ஸ் பண்ண ஹைதராபாத் போயிருந்தேன். அங்கேதான் என் கணவர் ஶ்ரீஹரியை சந்திச்சேன். அவர், அந்தப் படத்துல துணை வில்லன் கேரக்டர்ல நடிச்சுக்கிட்டு இருந்தார். பார்க்க அழகா இருந்தார். அவர்கூட எனக்கு டான்ஸ் மூவ்மென்ட் இருந்தது. அப்போ என் நகம் அவர் முதுகைக் கீறிடுச்சு. உடனே, நான் பதறிப் போய் 'ஸாரி' சொன்னேன். அவர், 'பரவாயில்லை'னு சொன்னார். இதுதான் எங்களுக்குள்ள நடந்த முதல் உரையாடல்.  

டிஸ்கோ சாந்தி

பிறகு, வேறொரு காரணத்துக்காக எனக்கும் அந்தப் படத்தோட இயக்குநருக்கும் சண்டை. பேக் பண்ணிட்டு நான் கெளம்பிட்டேன். இதைப் பார்த்து, ஶ்ரீ எனக்கு போன் பண்ணார். 'நீங்க எப்போ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவீங்க'னு கேட்டார். அவரோட இம்சை தாங்காம பலமுறை அவரைத் திட்டியிருக்கேன். கொஞ்சமும் அடங்காம, எங்கெல்லாம் எனக்கு ஷூட்டிங் இருக்கோ, அங்கெல்லாம் வந்துடுவார். வீட்டுக்கு அடிக்கடி போன் பண்ணிக்கிட்டே இருப்பார். எங்க அம்மாதான் எடுத்துப் பேசி, விசாரிச்சுட்டு கட் பண்ணி விடுவாங்க. 

டிஸ்கோ சாந்தி

ராஜமுந்திரில '420' படத்துக்காக ஷூட்டிங் போயிருந்தேன். அங்கேயும் வந்துட்டார். மதிய நேரம். திடீர்னு எல்லோரும் பரபரப்பா எங்கேயோ ஓடிக்கிட்டு இருந்தாங்க. என்னனு விசாரிச்சா, 'நம்ம பிரதமர் ராஜூவ் காந்தியை கொன்னுட்டாங்களாம்.. ஷூட்டிங் கேன்சல்'னு சொன்னாங்க. எங்க எல்லோரையும் ஹைதராபாத்ல இருக்கிற ஒரு ஹோட்டல்ல தங்க வெச்சாங்க. ஹரி மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த சிலரும் அந்த ஹோட்டல்ல தங்குனாங்க.

அடுத்த மூணுநாள் கழிச்சு டிரெயின் ஏறி, சென்னைக்கு வந்தோம். டிரெயின் கெளம்புற நேரத்துல ஶ்ரீஹரி ஏறி, என் பக்கத்துல உட்கார்ந்துக்கிட்டார். 'உன்னைக் காதலிக்கிறேன்; கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்'னு சொன்னார். எனக்கும் அவரைப் பிடிக்கும். எங்க அம்மாகிட்ட வந்து பேசுங்கனு சொல்லிட்டேன். நான் சென்னையில இருக்கிற என் வீட்டுக்குள்ள நுழையும்போது, எனக்கு முன்னாடியே இவர் என் வீட்டுல இருந்தார். அம்மாகிட்ட ஏற்கெனவே இவர்கிட்ட சொல்லியிருந்ததுனால, அம்மாவுக்கும் இவரைப் பிடிச்சிருந்தது. ஆனா, உடனடியா கல்யாணம் பண்ணிவைக்க முடியாதுனு சொல்லிட்டாங்க. எங்க குடும்பத்தோட பொருளாதார நிலையைப் புரிஞ்சுக்கிட்டதுனால, அவரும் சரினு சொல்லிட்டார். 

எங்க அக்காவோட குழந்தைக்கு மொட்டை அடிக்க சென்னை பக்கத்துல இருக்கிற அம்மன் கோவிலுக்கு குடும்பத்தோட போனோம். அங்கே இவரும் வந்திருந்தார். கோவில் கருவறைக்குள்ள நின்னு சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்கும்போது, டக்குனு என் கழுத்துல தாலி கட்டிட்டார். என்னால அதை மறக்கவே முடியாது. என் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் அங்கே இருந்தாங்க. சாமிகிட்ட நான், எனக்கு நல்ல கணவர் கிடைச்சா, தாலியை உண்டியல்ல போடுறதா வேண்டியிருந்தேன். அதனால, அவர் கட்டுன தாலியை உண்டியல்ல காணிக்கையா போட்டுட்டேன். வெளியே போய் கருகமணி ஒன்னு வாங்கிட்டு வரச்சொல்லி, கழுத்துல போட்டுக்கிட்டேன்.

எனக்குக் கல்யாணம் முடிஞ்ச விஷயத்தை மீடியாகிட்ட, சினிமாவுல யாருகிட்டேயும் சொல்லலை. பிறகு என் குடும்பத்துல இருக்கிற எல்லோரும் நல்லா செட்டில் ஆனதுக்குப் பிறகு, ஏழு வருடம் கழிச்சு எல்லோருக்கும் அழைப்பு கொடுத்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணத்துக்குப் பிறகு சினிமாவுல நடிக்கிறதை நிறுத்திக்கிட்டேன். 

டிஸ்கோ சாந்தி

என் கணவர் எந்தக் குறையும் இல்லாம என்னையும், பசங்களையும் பார்த்துக்கிட்டார். ரொம்ப அன்பானவர். உடல்நிலை சரியில்லாம, சில வருடங்களுக்கு முன்னாடி இறந்துட்டார். பையனும், பொண்ணும் காலேஜ் படிக்கிறாங்க. நான் வீட்டுலதான் இருக்கேன். அவர் இறப்புல இருந்து என்னால மீண்டுவர முடியலை. கொஞ்சநாள் உடம்புக்கு முடியாம ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். அப்போ என் தங்கச்சி லலிதா குமாரி, அவளோட கணவர் பிரகாஷ் ராஜ் ரெண்டுபேரும் வந்து பார்த்துட்டுப் போனாங்க.

எனக்கே தெரியாம, என் உடல்நிலை சரியில்லாம இருந்தப்போ பிரகாஷ்ராஜ் உதவி செஞ்சிருக்கார். மூணு வருடமா எனக்கு வேண்டிய உதவிகளை என் தம்பிகள் அருண்மொழி வர்மனும், பிரசன்னாவும் செஞ்சாங்க. இப்போ என் பொருளாதார சூழல் கஷ்டமான நிலையிலதான் இருக்கு. அதனால, மறுபடியும் சினிமாவுல நடிக்கலாம்னு தோணுது. ஆனா, நல்ல கேரக்டர் வந்தா மட்டும்தான் நடிப்பேன். இல்லைனா, என் பசங்க என்னைத் திட்டுவாங்க. என் வாழ்க்கையை அவங்களுக்காக வாழ்த்துக்கிட்டு இருக்கேன்!" என்று முடிக்கிறார், டிஸ்கோ சாந்தி.

https://cinema.vikatan.com/tamil-cinema/128086-appo-ippo-series-part-15-disco-shanti.html

Link to comment
Share on other sites

``அப்போ நடிகை; இப்போ ஹோட்டல் எம்.டி..!’’ - விசித்ரா :`அப்போ இப்போ’ பகுதி 16

 
``அப்போ நடிகை; இப்போ ஹோட்டல் எம்.டி..!’’ - விசித்ரா :`அப்போ இப்போ’ பகுதி 16
 

``சென்னைதான் என்னோட சொந்த ஊர். எங்க அப்பா அரசாங்க வேலையில் இருந்தார். அம்மா ஹவுஸ் வொய்ஃப். எங்க வீட்டுல மூணு பசங்க. எங்க மூணு பேரையும் நல்ல சி.பி.எஸ்.இ ஸ்கூல்ல அப்பா படிக்க வெச்சார்'' என்று உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் நடிகை விசித்ரா. 

``என்னோட அம்மா, அப்பா காதல் திருமணம் செஞ்சவங்க. அவங்க ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருந்தப்போ, ஆஃபீஸ் விழாவில் நடந்த கலைநிகழ்ச்சியில ஒண்ணாச் சேர்ந்து நடிச்சாங்க. அப்போதான் ரெண்டு பேருக்கும் இடையில காதல் மலர்ந்து இருக்கு. திருமணம் முடிச்சு சக்சஸ்ஃபுல் தம்பதியா வாழ்ந்தாங்க. அப்பாவுக்கு சினிமா பிடிக்கும். கமல் சாருடைய `மனிதரில் இத்தனை நிறங்களா' படத்துல நடிச்சிருக்கார். இதுதவிர ஆல் இந்தியா ரேடியோவில் வேலைப் பார்த்திருக்கார். அரசாங்க வேலை கிடைச்சதனால கலைத்துறையில் அவரால் தொடர்ந்து நீடிக்க முடியலை.  

நான் பத்தாவது படிச்சிட்டு இருக்கும் போது என்னோட முதல் சினிமா வாய்ப்பு அமைஞ்சது. ஆனா, நான் நடிச்ச முதல் படம் ரிலீஸ் ஆகலை. ரெண்டாவது படமா எனக்கு அமைஞ்சது `ஜாதி மல்லி'. பாலசந்தர் சார் வாய்ப்புக் கொடுத்தார். அதன்பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சேன். இயக்குநர் பிரதாப் போத்தன் எடுத்த `ஆத்மா' படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுனேன். அந்தப் படம் எனக்கு நல்ல வாய்ப்புகளை அதன்பிறகு ஏற்படுத்திக் கொடுத்துச்சு. 

 

 

டான்ஸ் ஆடுறது எனக்கு ஈஸியான விஷயமாத்தான் இருந்துச்சு. ஏன்னா, சின்ன வயசுலேயே பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். சினிமாவுக்கு வந்ததுக்குப் பிறகு கலா மாஸ்டர்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்டேன். சினிமாவுல இருந்த எல்லா டான்ஸ் மாஸ்டர்ஸ் கூடவும் வொர்க் பண்ணியிருக்கேன். சினிமாவுல நடிச்சிட்டு இருக்கும் போதே, சீரியலிலும் நடிச்சேன். நல்ல கேரக்டர்ஸ் தேடி வர ஆரம்பிச்சது. கமல் சார் தவிர சினிமாவில் எல்லா சீனியர் நடிகர்கள் கூடவும் நடிச்சிட்டேன். `முத்து' படத்துல என் கேரக்டர் எல்லாருக்கும் பிடிச்சிருந்துச்சு. ரதிதேவி என்கிற கேரக்டருல நடிச்சிருந்தேன். இந்த கேரக்டருல நான் நடிச்சா நல்லாயிருக்கும்னு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சார்கிட்ட சொன்னதே ரஜினி சார்தான். அவர் மூலமாகத்தான் இந்தப் படத்தோட வாய்ப்புக் கிடைச்சது. `வீரா' படத்துல அவர்கூட ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுனேன். அதனால அவருக்கு என்னோட நடிப்புத் திறமை தெரியும்ங்குறனால அவருடைய படங்களில் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். இந்த நேரத்தில் ரஜினி சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். 

 

 

விசித்ரா

 

ரொம்ப பிஸியா நடிச்சிட்டிருந்த காலத்திலேயே சினிமாவை விட்டு விலகிட்டேன். நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, எல்லாத்தையும் தவிர்த்தேன். அதுக்குக் காரணம் என் திருமணம். 2001 ம் வருஷம் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்னோட கணவரை முதன் முதலா கேரளாவில் இருக்கிற ரெஸ்டாரன்ட்ல பார்த்தேன். ஜி.எம்.மா வொர்க் பண்ணுனார். ரெண்டு பேரும் பேசிப் பழகுனோம்; பிடிச்சிருந்துச்சு. பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவர் ஹோட்டல் துறையில் இருந்ததுனால மும்பை, பூனே, பெங்களூருனு ஒவ்வொரு ஊரா வேலை விஷயமா ஷிப்ட் ஆக வேண்டிருந்தது. அதனால, சினிமாவுக்கு குட்பைய் சொல்லிட்டு கணவர்கூட நானும் பயணம் செய்ய ஆரம்பிச்சுட்டேன். எங்களுக்கு மூணு ஆண் குழந்தைகள். பெரிய பையன் பத்தாவது படிக்குறான். அடுத்து ட்வின்ஸ். அவங்க நாலாவது படிக்குறாங்க. பசங்க படிப்பு காரணமா இப்போ மைசூரில் செட்டில் ஆகிட்டோம். 

 

 

விசித்ரா

பத்தாவது படிக்கும் போதே சினிமாவுக்கு நடிக்க வந்திருந்தாலும் தபால் மூலமா காலேஜ் படிச்சேன். பி.ஏ.சைக்கலாஜி படிச்சேன். திருமணம் முடிந்து பசங்க பிறந்ததுக்குப் பிறகு எம்.எஸ்.சி சைக்கோ தெரபி கவுன்சலிங் படிச்சேன். அதனால ப்ரைவேட்டா கவுன்சலிங் கொடுத்துட்டு இருக்கேன். நிறையப் பெற்றோர்களுக்கு கவுன்சலிங் கொடுப்பேன். என் பசங்க படிக்குற ஸ்கூலுக்கும் கவுன்சலிங் கொடுக்க அப்பப்போ  போவேன். மன திருப்தியுடன் இதைச் செஞ்சிட்டு இருக்கேன். இதுதவிர மைசூரில் எங்களுக்குச் சொந்தமா ரெண்டு ஸ்டார் ஹோட்டல்ல இருக்கு. அப்புறம், ஜெயா கிச்சன்ஸ்னு ஒரு கம்பெனியும் நடத்திட்டு வரேன். இந்த கம்பெனிக்கு நான்தான் எம்.டி. என்னோட வாழ்க்கை சந்தோஷமா இருக்குறதுக்கு என் கணவர் ஷாஜிதான் காரணம். எனக்குப் பக்க பலமா இருப்பார். அழகான குடும்பம், பிசினஸ்னு செட்டில் ஆயிட்டேன். வாழ்க்கை சந்தோஷமாப் போகுது'' என்று சொல்லிச் சிரிக்கிறார் நடிகை விசித்ரா. 

https://cinema.vikatan.com/others/cinema-serials/129572-appo-ippo-series-part-16-actress-vichitra.html

Link to comment
Share on other sites

`` `நாட்டாமை' டீச்சர், `ஓ போடு', `நந்தி விருது'... இப்போ ஹவுஸ் வொய்ஃப்!" - `அப்போ இப்போ' நடிகை ராணி - 17

 

`வில்லுப்பாட்டுக்காரன்' படத்தில் அறிமுகமான நடிகை ராணி, `அப்போ இப்போ' கதை சொல்கிறார்.

`` `நாட்டாமை' டீச்சர், `ஓ போடு', `நந்தி விருது'... இப்போ ஹவுஸ் வொய்ஃப்!
 

``என் சொந்த ஊர் ஆந்திரா. என்கூட பிறந்தவங்க ஆறு பேர். பெரிய குடும்பம் எங்களுடையது. அப்பா தெலுங்கு சினிமாவுல தயாரிப்பாளரா இருந்தார். என்.டி.ராமாராவ் நடிச்ச படங்களையெல்லாம் தயாரிச்சிருக்கார். எனக்கு ஏழு வயசு இருந்தப்போ சென்னைக்கு வந்துட்டோம். அப்பா, `பொம்பளைப் பிள்ளைங்க ரொம்பப் படிக்கணும்னு அவசியம் இல்லை'னு சொல்லி, படிக்க விடலை. அதனால எட்டாம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடரமுடியலை. தவிர, எனக்குமே படிப்புல அவ்வளவு ஆர்வம் இல்லை!" - உற்சாகச் சிரிப்போடு `அப்போ இப்போ' கதையைச் சொல்லத் தொடங்குகிறார், நடிகை ராணி. 

``சின்ன வயசுல இருந்தே டான்ஸ் ஆடுறது எனக்குப் பிடிக்கும். நான் அதிகநேரம் செலவு பண்ணி டான்ஸ் ஆடுவேன். பாபு மாஸ்டர்கிட்ட குரூப் டான்ஸரா இருந்தேன். அந்தச் சமயத்துல ஒரு படத்துல குரூப் டான்ஸரா ஆடிக்கிட்டு இருந்தப்போ, இயக்குநர் கங்கை அமரன் சார் என்னைக் கூட்டத்துல ஒருத்தரா பார்த்திருக்கார். `யாரு டா.. இந்தப் பொண்ணு? பார்க்க லட்சணமா இருந்துக்கிட்டு, குரூப்ல டான்ஸ் ஆடுறாளே?'னு விசாரிச்சிருக்கார். `என் அடுத்த படத்துல இவதான் ஹீரோயின்'னும் சொல்லியிருக்கார். 

நடிகை ராணி

 
 

சொன்ன மாதிரியே கங்கை அமரன் சார், `வில்லுப்பாட்டுக்காரன்' படத்துல என்னை ஹீரோயின் ஆக்கினார். படம் நூறு நாள்களுக்கு தியேட்டர்ல ஓடுச்சு. தொடர்ந்து தெலுங்கு, மலையாளப் படங்கள்ல நடிச்சேன். தெலுங்குல ஒரு படத்துல நானும், விக்ரம் சாரும் ஜோடியா நடிச்சோம். `மீரா' படத்தில் தமிழில் ஹீரோவா நடிச்சதும், தெலுங்குல அவர் நடிச்ச படம் அது. தவிர, நடிகர் மம்மூட்டி சார்கூட மலையாளப் படத்துல ஹீரோயினா நடிச்சிருக்கேன். இப்படித் தொடர்ந்து பல நல்ல நல்ல கேரக்டர்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கும்போதுதான், தமிழில் `நாட்டாமை' படத்துல கே.எஸ்.ரவிக்குமார் சார் நடிக்கக் கூப்பிட்டார். `கிளாமரான டீச்சர் கேரக்டர் பண்ணணும். நீங்க பண்ணா நல்லா இருக்கும்'னு சொன்னார். முதல்ல வேணாம்னு தவிர்த்தேன். `கண்டிப்பா, இந்த கேரக்டர் உங்களுக்கு முக்கியமான அடையாளமா இருக்கும்'னு சொன்னார். அவர் சொன்னமாதிரியே, `நாட்டாமை' என் வாழ்க்கையில முக்கியமான படமா அமைஞ்சது. இப்போ அந்தப் படத்தைப் பார்க்கிற தலைமுறையும், அந்த டீச்சர் கேரக்டரை ரசிக்கிறாங்க. இதைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் சாரோட `அவ்வை சண்முகி' படத்திலும் என்னை நடிக்க வெச்சார்.  

 
 

 

கமல்ஹாசன் சார்கூட நடிச்சது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்துல நடிக்கும்போதும், `வேலைக்காரி கேரக்டரா?'னு முதல்ல தயங்கினேன். `கமலே இந்தப் படத்துல வேலைக்காரி கேரக்டர்லதான் நடிக்கிறார், நடி!'னு ரவிக்குமார் சார் சொன்னதும், சரினு சொல்லிட்டேன். இந்தப் படமும் பெரிய ஹிட். இப்படித் தொடர்ந்து நடிச்சுக்கிட்டு இருக்கும்போது, திருமணம் பண்ணிக்கிட்டேன். 1999- ம் வருடம் எனக்குத் திருமணம் நடந்தது. என் கணவர் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர். காதல் திருமணம் எங்களோடது. வீட்டுல எந்த எதிர்ப்பும் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்களுக்கு ஒரே பொண்ணு. காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் படிச்சுக்கிட்டு இருக்கா.  

`இவ்ளோ பெரிய பொண்ணுக்கு நீங்க அம்மாவா?'னு என்னைப் பார்க்கிறவங்கெல்லாம் ஆச்சர்யமா பாராட்டுவாங்க. என் பொண்ணு பிறந்தபிறகு, சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்தேன். அப்போ, `ஜெமினி' படத்துல நடிக்கிற வாய்ப்பு வந்தது. இந்தப் படத்துல நான் நடிக்கணும்னு விக்ரம் சாரும், சரண் சாரும் கேட்டாங்க. `குழந்தை பெத்துக்கிட்டேன், கொஞ்சம் வெயிட் போட்டிருக்கேன்!'னு சொல்லி சமாளிச்சுப் பார்த்தேன். `நீங்க சரியா இருப்பீங்க'னு சொல்லி, நடிக்க வெச்சுட்டாங்க. 

 

 

படத்துல `ஓ... போடு' பாட்டு செம ஹிட் ஆச்சு. ஆக்சுவலா, விக்ரம் எனக்கு நல்ல நண்பர். என் சினிமா வாழ்க்கையில `ooh la la' என்ற தெலுங்குப் படத்துல அம்மா கேரக்டர்ல நடிச்ச எனக்கு, சிறந்த நடிகைக்கான நந்தி விருது கிடைச்சது. இந்தப் படம் தமிழ்ல ரீமேக் ஆச்சு. ஆனா, சரியாப் போகலை. இதுக்கிடையில ஒரு இயக்குநர் தமிழ்ல நடிக்கக் கூப்பிட்டார். அவர் என்னை அப்ரோச் பண்ண விதமே எனக்குப் பிடிக்கலை. நடிக்க மறுத்தேன். ரொம்பக் கெஞ்சுனதுனால, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனேன். அங்கே அவர் என்கிட்ட நடந்துக்கிட்ட விதம் எனக்குக் கோபம் வரவைக்கிற மாதிரி இருந்தது. ஷூட்டிங்ல எல்லோருக்கும் முன்னாடி அவரை அறைஞ்சுட்டு வந்துட்டேன். அதுக்குப் பிறகு எந்தத் தமிழ்ப் படங்களிலும் நடிக்கலை. இப்போ, நான் ஹவுஸ் வொய்ஃப் ஒன்லி!. அப்பப்போ சில தெலுங்குப் படங்கள்ல தலைகாட்டுவேன். ஏன்னா, எனக்கு சினிமாவைவிட என் குடும்பம் ரொம்ப முக்கியம். நான் அதிக நேரம் குடும்பத் தலைவியா இருக்கிறதைத்தான் விரும்புறேன்!" என்கிறார், நடிகை ராணி. 

ராணி

 

https://cinema.vikatan.com/tamil-cinema/news/130355-actress-rani-interview-for-appo-ippo-series-part-17.html

 

Link to comment
Share on other sites

``கருத்தம்மா, சேது, நந்தா-லாம் வரம்... இப்போ ஒன்லி குடும்பம்!" - ராஜாஶ்ரீ `அப்போ இப்போ' பகுதி 18

 

`அப்போ இப்போ' தொடருக்காக `கருத்தம்மா' படத்தில் நடித்த நடிகை ராஜஶ்ரீ, அவரது சினிமா பயணத்தைப் பற்றிச் சொல்கிறார்...

``கருத்தம்மா, சேது, நந்தா-லாம் வரம்... இப்போ ஒன்லி குடும்பம்!
 

``நான் பிறந்தது ஹைதராபாத் சிட்டி. ஒன்பது வயசுல இருந்து தமிழ் சினிமாவுல இருக்கேன். பலரும் நான் `கருத்தம்மா' படத்துலதான் அறிமுகம் ஆனேன்னு தப்பா நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அதுக்கு முன்னாடியே நான் சினிமாவுல இருக்கேன்!'' - தன் `அப்போ இப்போ' கதையைச் சொல்லத் தொடங்குகிறார், நடிகை ராஜாஶ்ரீ.  

அப்போ இப்போ

 

 

 

``அப்பா பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்தார். அம்மா ஹவுஸ் வொய்ஃப். எனக்கு ஒரே ஒரு தங்கச்சி. பேரு, மிதுனா. அவளும் சினிமாவுலதான் இருக்கா. நாங்க ரெண்டுபேரும் சின்னப் பொண்ணா இருக்கும்போதே சென்னைக்கு வந்துட்டோம். வளர்ந்தது எல்லாம் இங்கேதான். ஹபிபுல்லா சாலையிலதான் எங்களுடைய வீடு இருந்துச்சு. அப்பாவோட கடையும் பக்கத்துலதான் இருந்தது. ஸ்கூல் லீவ்ல அப்பாவோட கடைக்குப் போவேன். அப்போ அங்கே வந்த சில சினிமாக்காரங்க என்னைப் பார்த்துட்டு, குழந்தை நட்சத்திரமா நடிக்க வைக்கலாம்னு அப்பாகிட்ட கேட்டாங்க. அப்பாவும் `சரி'னு சொல்லிட்டார். 

 

 

ஒன்பது வயசு இருக்கும்போது `பச்சைக்கிளி' என்ற படத்தில் அறிமுகமானேன். தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமா நடிச்சேன். அந்தக் காலத்துல நடிகர் சங்கத்துலதான், ஆடிஷன்ஸ் வெச்சு குழந்தை நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுப்பாங்க. அந்தக் குழந்தைகள்தாம் எல்லா மொழிப் படங்களிலும் நடிப்பாங்க. நான் அதுல செலக்ட் ஆனேன். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம்னு நான்கு மொழிகள்ல முப்பதுக்கும் அதிகமான படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சேன். தவிர, நடிகர் சங்கம் சார்பாக நடனப் பயிற்சிகளும் கொடுப்பாங்க. அப்போ, நான் கலா மாஸ்டர் ஸ்டூடன்ட்! 

ராஜஶ்ரீ

கன்னடப் படத்துலதான், நான் முதல் முதல்ல ஹீரோயினா அறிமுகம் ஆனேன். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பையனோட அமைஞ்சது. இரண்டாவது படம் தமிழில், `கருத்தம்மா'. கன்னடப் படத்துல நடிச்சு முடிச்ச சமயத்துல டைரக்டர் பாரதிராஜா சாரோட மேக்கப்மேன் ஒருத்தர், `பாரதிராஜா சார் அவரோட அடுத்த படத்துக்காக நடிகையைத் தேடிக்கிட்டு இருக்கார்'னு அப்பாகிட்ட சொன்னார். அப்பா என்னைக் கூட்டிக்கிட்டு போய், பாரதிராஜா சார்கிட்ட அறிமுகப்படுத்தி வெச்சர். அவர், தமிழில் பெரிய இயக்குநர்னு அப்போ எனக்குத் தெரியாது. என்னை உற்றுப் பார்த்துட்டு, கையில சில டயலாக் பேப்பர்ஸ் கொடுத்துப் படிக்கச் சொன்னார், படிச்சேன். மேக்கப் டெஸ்ட் எடுத்தார். `கருத்தம்மா' கேரக்டருக்கு நான் ஓகேவா இருப்பேன்னு அவருக்குத் தெரிஞ்சது. என்னைப் படத்துல கமிட் பண்ணிட்டார். 

 

 

அவர் படத்துல நடிச்சபிறகுதான், அவர் எவ்ளோ பெரிய இயக்குநர்னு எனக்குத் தெரிஞ்சது. சினிமாவைத் தாண்டி பல விஷயங்களைப் பற்றி பேசுவார். நடிகை எப்படி இருக்கணும்னு அறிவுரையெல்லாம் சொல்வார். `கருத்தம்மா' படம் எனக்கு நிறைய விருதுகளை வாங்கிக் கொடுத்தது. தமிழில் என் முதல் படமே நல்ல பெயரை வாங்கிக்கொடுத்ததுல, என்னைவிட எங்க அப்பாவுக்குத்தான் பெரிய சந்தோஷம். தொடர்ந்து தமிழ்ல மட்டுமல்லாம, பிறமொழிப் படங்களிலும் ஹீரோயினா நடிச்சேன். பிறகு, சினிமாவுல கொஞ்சம் இடைவெளி கொடுத்துட்டு சீரியல்ல நடிச்சுக்கிட்டு இருக்கும்போதுதான், இயக்குநர் பாலா சாரை சந்திச்சேன். `சேது' படத்துக்காக என்கிட்ட பேசினார். அப்போ நான் டிவி சீரியல்ல பிஸியா இருந்தேன். முதல்ல கால்ஷீட் இல்லைனு மறுத்தேன். `சேது' படத்தோட முழுக் கதையையும் பாலா சார் என்கிட்ட சொன்னார். என்னைத்தவிர, அந்தப் படத்தோட கதை வேறு நடிகர்களுக்குத் தெரியாது. 

படத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டார். `இந்த கேரக்டர் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்'னு சமாதானப்படுத்தி, நடிக்க வெச்சார். சொன்ன மாதிரியே, அந்த கேரக்டர் எனக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது." என்றவர், தொடர்ந்தார். 

அப்போ இப்போ ராஜஶ்ரீ

``நடிச்ச எல்லோருக்கும் `சேது' முக்கியமான படமா அமைஞ்சது. பெரும்பாலும் புதுமுகங்கள்தாம். ஆனா, ஜூனியர்ஸ் மாதிரி யாரும் வேலை பார்க்கலை. முக்கியமா, பாலா சார். அவர் என்ன பண்றார்னு ஸ்பாட்ல பார்க்கும்போது எதுவும் தெரியாது. அவுட்புட்ல அவ்வளவு விஷயங்கள் பண்ணியிருப்பார்.  

`சேது'வுக்குப் பிறகு `நந்தா' படத்தில் சூர்யாவுக்கு அம்மாவா நடிச்சேன். இந்த கேரக்டர்ல முதல்ல நந்திதா தாஸ்கிட்டதான் பேசியிருந்தார், பாலா சார். `அம்மா' கேரக்டர் என்பதால், நந்திதா தாஸ் நடிக்க மறுத்துட்டாங்க. என்கிட்டயே பலர், `சூர்யாவுக்கு அம்மாவா நடிக்கிறியா?'னு கேட்டாங்க. எனக்கு பாலா சார்மேல நம்பிக்கை அதிகம். உடனே ஓகே சொன்னேன். அந்தப் படம் வந்த சமயம், எங்கே போனாலும் `நந்தா' படத்துல அம்மா கேரக்டர்ல நடிச்சது நீங்கதானேனு சந்தோஷமா விசாரிப்பாங்க. இப்படி, சினிமாவில் மறக்க முடியாத சில படங்களில் நான் நடிச்சதே பெரிய வரமா நினைக்கிறேன்.  

திருமணத்துக்குப் பிறகு, சினிமாவுல நடிக்க அவ்வளவா ஆர்வமில்லை. 99 சதவிகிதம் நான் குடும்பத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். மீதி இருக்கிற ஒரு சதவிகிதம்தான் சினிமா. எனக்கு ஒரு பொண்ணு இருக்கா, பெயர் தன்வி. மூணாங் கிளாஸ் படிக்கிறா... அவகூட நேரம் செலவழிக்கிறதுதான் இப்போ நான் பண்ணிக்கிட்டு இருக்கிற ஒரே வேலை!" என்கிறார், ராஜாஶ்ரீ.

 

https://cinema.vikatan.com/tamil-cinema/news/131034-appo-ippo-story-telling-by-actress-rajashree.html

Link to comment
Share on other sites

``எல்லோருக்கும் உதவினேன்; எனக்கு யாரும் உதவலை!" - கே.டி.குஞ்சுமோன் `அப்போ இப்போ' பகுதி 19

 

இயக்குநர் ஷங்கரை சினிமா உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். தனது `அப்போ இப்போ' பயணத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

``எல்லோருக்கும் உதவினேன்; எனக்கு யாரும் உதவலை!
 

``என்னோட சொந்த ஊர் கேரளா. அப்பா பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்தார். என்கூடப் பிறந்தவங்க ரெண்டு பேர். பத்தாவது வரைக்கும் படிச்சேன். அதுக்குமேல படிப்பு மண்டையில ஏறலை. சின்ன வயசுலேயே ஹோட்டல், டிராவல்ஸ்னு பிசினஸ்ல இறங்கிட்டேன்!" என்று தனது 'அப்போ இப்போ' கதையைச் சொல்லத் தொடங்குகிறார், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். 

குஞ்சுமேனன்

 

 

 

``தமிழில் ரிலீஸான படங்களைக் கேரளாவுல விநியோகம் பண்ணிக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்துல படங்களைத் தயாரிக்கலாம்னு தோணுச்சு. மலையாளத்துல நிறைய படங்கள் தயாரிக்க ஆரம்பிச்சேன். தமிழில் `வசந்தகால பறவை' என் முதல் படம். ரெண்டாவது படம், `சூரியன்'. மூணாவது படம், `ஜென்டில் மேன்'. இது, இயக்குநர் ஷங்கரோட முதல் படம். `சூரியன்' படத்தின் இயக்குநர் பவித்ரன் பெயரில் நான் ஒரு தயாரிப்பு நிறுவனம் வெச்சிருந்தேன். என்னை ஏமாற்றி அதை அவர் எடுத்துக்கொண்டார். அந்த மனஉளைச்சலில் நான் இருந்த நேரத்தில்தான், ஷங்கர் எனக்கு அறிமுகம் ஆனார். நான் தயாரித்த இரண்டு படங்களில் ஷங்கர் உதவி இயக்குநரா வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தார். ஆனால், அவரை நான் சந்திச்சதில்லை.   

 

 

ஒருநாள் ஸ்டில்ஸ் ரவி, இயக்குநர் ஷங்கரை என்னிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்தார். உடன், எடிட்டர் விஜயனும் வந்திருந்தார். `ரொம்ப நல்ல பையன். கதை ஒண்ணு வெச்சிருக்கார். கேட்டுப் பாருங்க'னு சொன்னாங்க. எனக்கு முன்னாடி, `ஜென்டில்மேன்' கதையை பல தயாரிப்பாளர்கள்கிட்ட சொல்லியிருக்கார், ஷங்கர். யாரும் அதைப் படமா எடுக்க முன்வரலை. ஸ்டில்ஸ் ரவி மேல இருந்த நம்பிக்கையில ஷங்கரிடம் பேசினேன். ``எஸ்.ஏ.சந்திரசேகர் சார்கிட்ட உதவி இயக்குநரா இருக்கேன். அம்மா மட்டும் இருக்காங்க. அப்பா இல்லை'னு சொன்னார். முழு கதையையும் கேட்டேன். கேட்டதும் பிடிச்சிருந்தது. ரொம்ப திறமையான பையன்னு மனசுல பட்டுச்சு. `இதைப் படமா எடுக்கிறதுல எந்தப் பிரச்னையும் இல்ல; ஆனா, எனக்குச் சில நிபந்தனைகள் இருக்கு'னு சொல்லி, ஸ்டன்ட் காட்சிகள் இப்படி இருக்கணும், சில காட்சிகளை அப்படி வைக்கணும்னு ஷங்கர்கிட்ட சொன்னேன். ஷங்கரும் என் நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னார். 

மனோரமா, நம்பியார், வினித்... இவங்களையெல்லாம் கமிட் பண்ணலாம்னு பேசினோம். இசையமைப்பாளரா ஏ.ஆர்.ரஹ்மான் சார் இருந்தா நல்லாயிருக்கும்னு ஷங்கர் சொன்னார், சரினு சொன்னேன். படத்துல ஹீரோவா நடிக்க சரத்குமார் சார்கிட்ட கேட்டோம். அவர் முடியாதுனு சொல்லிட்டார். பிறகு, தெலுங்கு ஹீரோ டாக்டர் ராஜசேகர்கிட்ட கேட்டோம். அவருக்குக் கதை பிடிச்சிருந்துச்சு. ஆனா, கால்ஷீட் பிரச்னையால பண்ணலை. அதற்குப் பிறகுதான், அர்ஜூன் இந்தப் படத்துக்குள்ள வந்தார். ஷங்கர் படத்துக்காக யார் யாரெல்லாம் வேணும்னு சொன்னாரோ, எல்லோரையும் கமிட் பண்ணிக் கொடுத்தேன். `உனக்கு எவ்வளவு சம்பளம் வேணும்?'னு ஷங்கர்கிட்ட கேட்டேன். `உங்க விருப்பம்'னு சொல்லிட்டார். 50,000 ரூபாய் தரட்டுமானு சொன்னதுக்கு, ஷங்கர் ரொம்ப ஆச்சர்யப்பட்டார். ஏன்னா, அப்போ, ஒரு அறிமுக இயக்குநருக்கு யாரும் இந்தளவுக்குச் சம்பளம் கொடுக்கமாட்டாங்க. உடனடியா, 5,000 ரூபாயை அட்வான்ஸா கொடுத்து, `நல்ல இயக்குநரா வருவ!'னு ஆசிர்வாதம் பண்ணேன். 

ஜென்டில்மேன்

படத்துக்கு நாங்க பிளான் பண்ண பட்ஜெட்டை விட அதிகம் ஆயிடுச்சு. எல்லாத்துக்கும் ஓகே சொன்னேன். `ஜென்டில்மேன்' படத்துக்காக என் வீட்டையே அடமானம் வெச்சேன். படம் ரெடி ஆனதுக்குப் பிறகு, விநியோகஸ்தர்கள்கிட்ட போட்டுக் காட்டினேன். `படத்துல அர்ஜூன் நடிச்சிருக்கார். டப்பிங் படம் மாதிரி இருக்கு. ஓடாது'னு சொல்லி, யாரும் வாங்க முன்வரலை. அந்தச் சமயத்தில் எனக்கு உதவியா வந்தவர், தயாரிப்பாளர் ஜி.வி.வெங்கடேஷ்வரன் சார். அவரை ரொம்ப மதிக்கிறேன். படம் ரிலீஸாகி பெரிய ஹிட் ஆனது. எங்கே பார்த்தாலும் `ஜென்டில்மேன்' பற்றிய பேச்சாவே இருந்தது. எல்லா மொழிகளிலும் படத்தை டப்பிங், ரீமேக் பண்ணாங்க. உடனே, ஷங்கருக்குச் சொந்தமா ஒரு பிளாட், கார் வாங்கிக் கொடுத்தேன். என்னை மாதிரி எந்தத் தயாரிப்பாளரும் செஞ்சிருக்க மாட்டாங்க. தவிர, படத்துல வொர்க் பண்ண எல்லோருக்கும் ஸ்கூட்டர், செயின் கொடுத்தேன். எனக்குக் கிடைச்ச லாபத்தை, சந்தோஷத்தை எல்லோரிடமும் பகிர்ந்துக்கிட்டேன். பிறகு, ஷங்கர் `காதலன்' கதையைச் சொன்னார். 

 

 

உடனே படத்துக்கான பூஜையைப் போட்டோம். ஹீரோ, பிரபுதேவா. பிரபுதேவாவை ஹீரோவா போட யாரும் முதலில் சம்மதம் தெரிவிக்கலை. விநியோகஸ்தர்கள் பலரும், `அவரோட டான்ஸை ரசிப்பாங்க. ரெண்டு மணிநேரம் அவர் முகத்தைப் பார்ப்பாங்களானு தெரியலை'னு சொன்னாங்க. ஆனா, இவர்தான் ஹீரோனு நான் பிடிவாதமா இருந்தேன். ஏன்னா, என் ஆபீஸூக்கு தினமும் சுந்தரம் மாஸ்டர் வருவார். `என் பையனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுங்க'னு கேட்டுக்கிட்டே இருப்பார். `காதலன்' படமும் ஹிட். ஆனா, ரிலீஸூக்குப் பிறகு அவர் என்னைப் பார்க்கக்கூட வரலை. 

ஷங்கர்

`காதலன்' படத்துல வந்த `முக்காலா...' பாட்டுக்கு மட்டும் பல கோடிகள் செலவு பண்ணினேன். அந்தப் பணத்தை வெச்சு நாலு படம் எடுத்திருக்கலாம். சிஜி வொர்க்ஸ் பயன்படுத்தி வெளியான முதல் தமிழ்ப் படம், `காதலன்'. நான் நினைச்ச மாதிரியே, படம் பெரிய ஹிட் ஆச்சு. தொடர்ந்து ஷங்கருடைய அடுத்த படத்தையும் தயாரிக்க ஆசைப்பட்டேன். ஷங்கரும் ஓகே சொன்னார். ஆனா, அக்ரிமென்ட் எதுவும் போடலை. மூணாவது படமும் என்கூட பண்ணுவார்னு நினைச்சேன். ஆனா, ஷங்கர் ஏ.எம்.ரத்னம் சார்கிட்ட அட்வான்ஸ் வாங்கிட்டார். `இந்தியன்' படமெடுத்தார். அதுவும் பெரிய ஹிட். அதற்குப் பிறகு என்கூட அவர் படம் பண்ணவே இல்லை. எனக்கு இது வருத்தமா இருந்தாலும், இன்னைக்கு அவர் இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநரா இருக்கிறதைப் பார்க்கும்போது, சந்தோஷமா இருக்கு.

அப்போ இப்போ

பிறகு, நான் தொடர்ந்து படங்கள் தயாரிச்சேன். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், `விஜயை வைத்துப் படம் எடுக்கணும். நீங்க ஃபைனான்ஸ் பண்ணுங்க, சேர்ந்து தயாரிப்போம்!'னு சொன்னார். விஜய் நடிச்ச `நிலாவே வா', `என்றென்றும் காதல்'னு ரெண்டு படங்கள் எடுத்தேன். ரெண்டுமே தோல்வி. இந்தப் படங்களோட தோல்வியால, என் மகன் நடிச்ச `கோடீஸ்வரன்' படத்தை ரிலீஸ் பண்ணமுடியாமப் போயிடுச்சு. இதுல இருந்து நான் மீண்டுவர பல வருடங்கள் ஆச்சு. பிறகு நான் படங்களைத் தயாரிக்கவே இல்லை. பலருக்கும் நான் உதவிகள் செஞ்சிருக்கேன். ஆனா, எனக்கு உதவி செய்யத்தான் யாரும் வரல. அதுக்காக நான் என்னைக்கும் வருத்தப்பட்டதில்லை. சினிமாவுல பெரிய இடத்தைப் பிடிச்ச பிறகு, என்னை மறந்துட்டாங்க. ஒவ்வொரு சினிமாவுக்கும் தயாரிப்பாளர்கள் ரொம்ப முக்கியம். அவங்க எல்லோரும் அம்மா, அப்பா மாதிரி! 

கே.டி.குஞ்சுமேனன்

இந்தியாவின் தலைசிறந்த இயக்குநரா ஷங்கரும், பெரிய நடிகரா விஜய்யும் இருக்கிறதே எனக்கு சந்தோஷம்தான். இப்போ நான் படங்கள் தயாரிக்கிறதில்லை. இனியும் தயாரிக்கப் போறதில்லை. சென்னையிலதான் இருக்கேன். பேரன், பேத்திகளோட சந்தோஷமா நேரத்தைச் செலவழிக்கிறேன். தவிர, பிசினஸ் கன்சல்டிங் பண்றேன். உலகம் முழுக்க இருக்கக்கூடிய என் நண்பர்கள் இந்த பிசினஸுக்கு எனக்கு உதவிகள் பண்றாங்க!'' மனநிறைவோடு முடிக்கிறார், தயாரிப்பாளர் குஞ்சுமோன். 

 

https://cinema.vikatan.com/tamil-cinema/news/132531-producer-k-t-kunjumon-speaks-about-his-career-in-appo-ippo-series.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

``அப்போ இயக்குநர்; இப்போ லாட்ஜ் ஓனர்..!" - டி.பி.கஜேந்திரன் `அப்போ இப்போ' பகுதி 20

 

`அப்போ இப்போ' தொடரின் 20-வது பகுதி. இயக்குநர், நடிகர் டி.பி.கஜேந்திரன் தன் திரை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

``அப்போ இயக்குநர்; இப்போ லாட்ஜ் ஓனர்..!
 

யக்குநராகவும் நடிகராகவும் நமக்கு நன்கு பரிட்சயமானவர், டி.பி.கஜேந்திரன். தற்போது இயக்கம், நடிப்பு என இரண்டையும் குறைத்துக்கொண்டு சாலிகிராமத்தில் லாட்ஜ் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு அவரை சந்தித்துப் பேசினோம்.

டி பி கஜேந்திரன்

``இப்போ லாட்ஜா இருக்கிற இந்த இடத்துலதான், எங்க அப்பா சின்னச் சின்னதா ரூம் கட்டி வாடகைக்கு விட்டுக்கிட்டு இருந்தார். அப்போ பாரதிராஜாவுல இருந்து பட வாய்ப்பு தேடுற பல ஆள்கள் இங்கு தங்கிட்டு இருந்தாங்க. அவங்க எல்லோரும் மாதம் பிறந்துட்டா வாடகை கொடுக்க முடியாம கஷ்டப்படுறதை என் கண்ணால பார்த்திருக்கேன். அதனாலேயே எனக்கு சினிமாத்துறை மேல பெருசா ஈர்ப்பு வந்ததில்லை. படிச்சு ஒரு நல்ல வேலைக்குப் போகணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காக, படிப்புல நான் கில்லினு நினைச்சுக்காதீங்க; அதுவும் ரொம்ப சுமார்தான். பியூசியே ரெண்டு வருடம் படிச்சேன்னா, பார்த்துக்கோங்க!. முதல் முறை பியூசியை பாதியிலேயே நிறுத்திட்டு இரண்டாவது முறையாக விவேகானந்தா காலேஜ்ல பியூசி படிக்கும்போது, ஸ்டாலின் என்னோட கிளாஸ்மேட். எப்படியோ பியூசி முடிச்சுட்டு பொலிட்டிகல் சயின்ஸ் படிக்கப் போனேன். அங்கே போனா, ஸ்டாலினும் அதே வகுப்புல இருக்கார். மறுபடியும் மூன்று வருடங்கள் ஸ்டாலின்கூட பழகுற வாய்ப்பு கிடைச்சது. ஒரு வழியா காலேஜ் படிப்பையும் முடிச்சுட்டு, எந்த வேலைக்குப் போகலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்போ, எங்க ரூம்ல தங்கியிருந்த சில உதவி இயக்குநர்களோடு ஷூட்டிங்கிற்குப் போனேன். ஷூட்டிங் எனக்குப் பிடிச்சிருந்ததுனால, தொடர்ந்து போக ஆரம்பிச்சேன். அங்கே ஏற்பட்ட பழக்கம்தான் என்னை இயக்குநர் பாலசந்தர்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்க்க வெச்சுச்சு. அவர்கிட்ட வேலை பார்த்தப்போ, இயக்குநர் விசு பழக்கமானார். 

 

 

பாலசந்தர்கிட்ட இருந்த விசு, தனியா படம் பண்ண ஆரம்பிச்சதும் என்னையும் அவரோட அழைச்சுக்கிட்டார். விசுகூட பல படங்களில் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அவரோட `சம்சாரம் அது மின்சாரம்’ படம் ரிலீஸான சமயத்தில், ராம.நாராயணன் சார் என்கிட்ட, `விசுவோட கால்ஷீட் வாங்கிட்டு வந்தா உனக்கு இயக்குநர் சான்ஸ் தர்றேன்’னு சொன்னார். நானும் விசுகிட்ட கேட்டதும், `உனக்காகப்  பண்ணமாட்டேனா... எத்தனை நாள் கால்ஷீட் வேணும்’னு கேட்டார். இப்படித்தான் எனக்கு இயக்குநர் வாய்ப்பு கிடைச்சது. பல உதவி இயக்குநர்கள் மாதிரி இந்த வாய்ப்புக்காக நான் அதிகம் அலையவில்லை; சொல்லப்போனா, இந்த வாய்ப்பு எனக்கு ரொம்ப ஈஸியாவே கிடைச்சிடுச்சு. தயாரிப்பாளர் கிடைச்சாச்சு; ஹீரோவும் ரெடி. ஆனால், விசுக்கு ஏற்றமாதிரி என்கிட்ட கதை இல்லை. ஒரு இளம் ஹீரோவா இருந்தா அவரை வெச்சு காதல் படம் எடுத்திடலாம். என்கிட்ட 10 காதல் கதைகளும் இருந்தன. ஆனால், விசு ஒரு மிடில்ஏஜ் ஆள். அவருக்கு ஏற்றமாதிரி ஒரு குடும்பத் தலைவன் கதை என்கிட்ட இல்லை. அவருக்காகவே ரெடி பண்ண கதைதான், `வீடு மனைவி மக்கள்’. இந்தப் படம் ஹிட்டாகி அதோட வெற்றி விழாவுக்குக் கலைஞர் வந்திருந்தார். 

 

 

டி.பி.கஜேந்திரன்

முதல் படம் பண்ணிட்டு, அதுக்குப் பிறகு அதையே கன்னடத்தில் ரீமேக் பண்ணினேன். அதுல, ரொம்ப நாளா நடிக்காம இருந்த வாணிஸ்ரீயை நடிக்க வெச்சேன். அந்தப் படமும் செம ஹிட்டாகி, வாணிஸ்ரீ இன்னொரு ரவுண்ட் கலக்கினாங்க. `மாப்பிள்ளை’ படத்தோட ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷனில் அவங்கதான் அந்த மாமியார் கேரக்டர் பண்ணினாங்க. வாணியோட இரண்டாவது இன்னிங்ஸை நான்தான் ஆரம்பிச்சு வெச்சேன். 

எதார்த்தமான கதைகளைத்தான் படமா எடுக்கணும்னு நான் முடிவு பண்ணியிருந்தேன். அதுதான் எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்கள் மனசுல நிற்கும்னு நம்புனேன். அப்படித்தான் நான் எடுத்த, `எங்க ஊரு காவல்காரன்’, `பாண்டி நாட்டு தங்கம்’, `பாசமுள்ள பாண்டியரே’, `பட்ஜெட் பத்மநாபன்’, `மிடில்கிளாஸ் மாதவன்’னு பல படங்கள் மக்கள் மனசுல இன்னும் எவர்கிரீனா இருக்கு.  

 

 

இயக்குநராவதுக்கு முன்னாடியே விசுவோட சில படங்களில் நடிச்சிருக்கேன். இயக்குநரானதுக்குப் பிறகு என்னுடைய படங்களிலும் வேற இயக்குநர்களின் படங்களிலும் நடிச்சுக்கிட்டு இருந்தேன். சினிமா டிஜிட்டலுக்கு மாறுனதுக்குப் பிறகு நடிக்கிறதுல எனக்கு ஆர்வம் குறைஞ்சிடுச்சு. இருந்தாலும், என்னை நடிக்க வைக்க சில இயக்குநர்கள் ஆசைப்படுறாங்க. அப்படிச் சில படங்களில் மட்டும் நடிச்சுக்கிட்டு இருக்கேன். தவிர, பிரபுவை வெச்சு ஒரு படம் டைரக்ட் பண்றதுக்கான வேலைகளும் போய்க்கிட்டு இருக்கு. விரைவில் அறிவிப்பு வரும். 

 

 

எங்க அப்பா கட்டி வெச்சிருந்த குட்டி, குட்டி ரூம்களை நான்தான் அஞ்சு வருடத்துக்கு முன்னாடி பெரிய லாட்ஜா மாத்தினேன். முதல் தளத்துக்கு என்னை இயக்குநராக வளர்த்தெடுத்த விசுவின் பெயர், இரண்டாவது தளத்துக்கு என்னை உதவி இயக்குநராய் வேலைக்குச் சேர்த்துக்கொண்ட பாலசந்தரின் பெயர், மூணாவது தளத்துக்கு இங்கு தங்கி இப்போது பெரிய ஆளுமையாக இருக்கும் பாரதிராஜாவின் பெயர்... இப்படி ஒவ்வொரு தளத்துக்கும் ஒரு இயக்குநரின் பெயரை வெச்சு, சந்தோஷமா லாட்ஜ் நடத்திக்கிட்டு இருக்கேன்!.’’ என்றார், டி.பி.கஜேந்திரன்.

https://cinema.vikatan.com/tamil-cinema/interview/136610-t-p-gajendran-speaks-about-his-cinema-career-for-appo-ippo-series.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.