Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

                                        

                                                                               குடை ராட்டினம்

 

images?q=tbn:ANd9GcTGoaqYZj_TS4Y4fYiy8G-

 

 


கண்ணுக்குள் நூறு கனவு.

ஒரு பார்வை ஒரு உதட்டசைவு ஒரு புன்முறுவல்

அடடா.. இதைத்தான் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்து என்று பாடி வைத்தார்களோ? வந்த வேலை மறந்து மீண்டும் மீண்டும் அதே தேடல்..
பார்த்த விழி பூத்திருக்க அங்கே ஒரு மௌன நாடகம் அரங்கேறியது.
ஆரம்பப் பாடசாலையை முடித்து இன்று உயர்தர பாடசாலையில் சேர்வதற்காக வந்திருக்கும் பல்லின மாணவர்களின் கூட்டம் அழகிய மலர்த்தோட்டம்.
இத்தனைபேர் நடுவில் அவள் மட்டும்.....


என்ன இது... பார்வையை எங்கும் அலைமோத விடாமல் ஒரே இடத்தையே காந்தமாய் கட்டிப்போட்டது
பதினாறின் பருவங்கள் உள்ளுக்குள் உமிழ்ந்து உடலெங்கும் மின்சாரம் பாய்ச்ச....
அவளுக்குள்ளும் அதே நிலைதானோ? அவளது பார்வையும்; அடிக்கொரு தடவை மின்வெட்டி மீண்டது.
பாடசாலை ஆரம்ப முதல்நாள்.

வகுப்பறைக்குள் நுழைந்ததும் அவர்களாகவே பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
படிப்பில் அதி சுட்டியான பிறேம் அது முதல் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியாதபடி காதல் அந்த இரு இளம் உள்ளங்களையும் ஆட்சி செய்ய....
அங்கு கல்வி பின்தள்ளப்பட்டு காதல் முன் வைக்கப்பட்டது.
இரவு பகலாக கைத்தொலைபேசியுடனேயே காலம் நகர்ந்;தது.
அபிநயாவும் பிறேமும் காதல் வானில் சிறகடிக்க சுற்றியுள்ள உறவுகளோ உலகமோ அவர்களுக்கு துச்சமாகியது.
எங்கேயும் காதல் எதிலும் காதல் என்ற உலகத்தில் அவர்களைத் தவிர யாருமில்லை.
இருவர் வீட்டிலும் விடயம் தெரிந்து எல்லைகள் போடப்பட்டு அறிவுரைகள் கூறப்பட்டு எதுவுமே அவர்களிடம் எடுபடவில்லை.
அவர்களது நண்பர்குழாம் அவர்கள் காதலுக்கு வெற்றிக்கொடி கட்ட காலமும் கை கொடுக்க பதினெட்டு வயதை எட்டியதும் பதிவுத் திருமணம் செய்து தம் காதல் வாழ்வை ஆரம்பித்தனர்.

அதன்பின்தான் அவர்களுக்கு உண்மையான யதார்த்த வாழ்க்கை புரியத் தொடங்கியது.
இருவரும் மேற்படிப்பைத் தொடராததினால் நிரந்தரமான தரமான தொழில் தேட சிரமம்
வருமானம் குறைவு
செலவு அதிகம்
வாழ்க்கையின் மேடு பள்ளங்கள்
முதிர்வடையாத மனநிலை
இளமையின் எதிர்காலக் கனவுகளில் ஏறுமாறான எதிர்பார்ப்புகள்
யார் யாருக்கு விட்டுக்கொடுப்பது
யார் யாரை அனுசரித்துப் போவது
யார் யாரை திருப்திப் படுத்துவது
யார் யாருக்கு உண்மையாக இருப்பது
யாருடைய அன்பு அதிகமானது
யாருடைய அன்பளிப்பு பெறுமதியானது
யார் தமது நேரத்தை அதிகமாக குடும்பத்திற்காகச் செலவழிப்பது
தாய்மை அடைந்திருந்த அவள் அவனது அண்மையை அருகாமையை பராமரிப்பை அதிகம் விரும்பினாள்.
அவனோ குடு;ம்பச் சுமையை சமாளிக்க பெரும் பாடுபட்டான்


பிறேம் தன் நண்பர்களுடன் வெளியே செல்வதை அபிநயா அறவே வெறுத்தாள்
முன்பு போல் விதவிதமான உடை அணியவோ விதவிதமாக றெஸ்ரோரண்டில் சாப்பிடவோ நேரம் அரிதாகியது
காதலித்தபோது தன்னைத் தாங்கியவன் கல்யாணத்தின் பின் தன்னை உதாசீனம் செய்வதான உணர்வு
காதலித்தபோது விதவிதமான பரிசளித்தவன் கல்யாணத்தின்பின் தன்னை மறந்து விட்டதாக மனதுக்குள் குறுகுறுப்பு
காதலித்தபோது பிரியாய் நடந்தவன் இப்போ தன்னைப் பிரிந்து நடப்பதாய் மனதுக்குள் வெறுமை
காதலித்தபோது கொஞ்சிக் கொஞ்சிப் பேசியவன் இப்போ கடமைக்காகப் பேசுவதாய் ஏக்கம்
காதலித்தபோது தினமும் பரிசாக வாங்கிக் குவித்தவன் இப்பொழுது பரிசு தருவது காதலர் தினத்துக்கு மட்டு;தான்
மனமே வெறுமையாகி விட்டதுபோன்ற உணர்வில் தவித்தாள் அபிநயா.


வயிற்றினுள் குழந்தை உதைப்பதுகூட அவன் தன்னை அடிப்பதுபோல மனதுக்குள் மாயத் தோற்றம்
பிறேமின் மனநிலையும் அதேதான்
அபிநயாவின் மின்னல் வெட்டிய பார்வையில் வெறுமை
கவர்ச்சி காட்டிய இதழ்களில் கயமை
தேன் சொட்டிய அவளது வார்த்தைகளில் கசப்பு
காதல் பொழிந்த அவர்களது கைத்தொலைபேசி அடிக்கடி கடும் சொற்களை மட்டுமே தாங்கி கிணுகிணுத்தது.
இருவரின் நெருக்கமும் நாளுக்கு நாள் விரிவடைந்து ......
சில சமயங்களில் ஒட்டியும் பல சமயங்களில் ஒட்டாமலும் ஏனோ தானோ என்று வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி விளையாட்டாக.....
காதலும் கடந்து போகும் என்று இதைத்தான் சொன்னார்களோ....                                                                                                                                                                                                      

அனுபவ எழுத்தாணி கொண்டு எழுதி முடிக்கும் புத்தகம் வாழ்க்கை இதில் இவர்கள் எழுதுவது எத்தனை பக்கங்களோ?

 

                                                                                  -x-x-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavallur Kanmani said:

பிறேம் தன் நண்பர்களுடன் வெளியே செல்வதை அபிநயா அறவே வெறுத்தாள்
முன்பு போல் விதவிதமான உடை அணியவோ விதவிதமாக றெஸ்ரோரண்டில் சாப்பிடவோ நேரம் அரிதாகியது
காதலித்தபோது தன்னைத் தாங்கியவன் கல்யாணத்தின் பின் தன்னை உதாசீனம் செய்வதான உணர்வு
காதலித்தபோது விதவிதமான பரிசளித்தவன் கல்யாணத்தின்பின் தன்னை மறந்து விட்டதாக மனதுக்குள் குறுகுறுப்பு

பொருளாதாரம் போதுமானதாக இல்லை என்றால் அன்பு கேள்விக்குறியாவது இயற்கை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிகூடக் காதல் பெற்றோரின் வருமானத்தில் வீறு நடை போடும்.தோளில் சுமை ஏறும்பொழுதுதான் இடுப்பொடியும்....! அழகாக சொல்லியுள்ளீர்கள் சகோதரி.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்ற மாயையின் தோற்ற வெளிப்பாடு எனலாம் காசு  இருந்தால் காதலும் இனிக்கிறது :104_point_left:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்காலத்துப் பிள்ளைகள் நல்ல விவரமாணவர்கள் என்று நினைத்தேனே.  இப்படியும் நடக்கிறதா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடட  இருக்கும்போதுதான் காதல் இனிக்கும் பொறுப்புக்கள் வர எட்டிக் காயாக கசக்கும். பின் வருவதை முன் யோசிப்பதில்லை . காதல்  அதிலும்தற்போதைய காதல் தொழில் நுட்ப வளர்ச்சியில்  வெகு வேகம். நல்லதோர்  பதிவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மைச் சுற்றி இப்படி எத்தனையோ நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. முதிர்வடையாத மனநிலையில் வாழ்க்கைச் சுமை எளிதாக இருக்காது. படித்து கருத்தெழுதிய ஈழப்பிரியன் சுவி தனி கவி சுமே அனைவருக்கும் நன்றிகள்.அத்துடன் விருப்பிட்ட தமிழ்சிறி யாயினி நவீன் யாழ்கவி புங்கையூரன் அனைவருக்கும் நன்றிகள்

நன்றிகள் நிலாமதி

Link to comment
Share on other sites

ஏராளமன இடத்தில் நடப்பதுதான்..உணர்ச்சிப்பரிமாற்றத்தால் மட்டும் உறவுகளை நீண்டகாலத்துக்கு தக்கவைக்க முடியாது. கணவனதோ மனைவியதோ உழைப்பையும் கழைப்பையும் மதிக்கத் தெரிந்த இடத்தில் உறவுகள் பலப்படும். உதாரணத்துக்கு குடும்பத்துக்காக ஒருவர் இரண்டு வேலை செய்கின்றார் என்றால் அன்பு பாசம் தான் அங்கே உழைப்பாகவும் கழைப்பாகவும் மாறுகின்றது. மாறிய வடிவத்தில் தான் அதை பெறமுடியும். அதை உணராதபோது எதுவும் கிடைக்காது. அழகு கவர்ச்சி என்பன நிலையானதில்லை. அதேபோல் அன்பு பாசம் என்பதும் அதே வடிவத்தில் நிலைக்க முடியாது. அவற்றைப் புரிந்தால் சில நன்மைகள் ஏற்படலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kavallur Kanmani said:

அனுபவ எழுத்தாணி கொண்டு எழுதி முடிக்கும் புத்தகம் வாழ்க்கை இதில் இவர்கள் எழுதுவது எத்தனை பக்கங்களோ?

 

சிறு பிள்ளை வேளான்மை வீடு வந்து சேராது என முன்னோர்கள் இதைதான் சொல்லி வைத்தார்களோ

Link to comment
Share on other sites

உணர்வுகளூடே பயணித்து நன்றாக எழுதி இருக்கிறீர்கள் அக்கா.

“குடை ராட்டினம்” என்ற தலையங்கத்தை ஒப்பிடும் விதத்தை புரிய வைப்பீர்களா அக்கா.

பார்வை அழகு அல்லது குறு நேர மகிழ்ச்சி என்று அர்த்தம் கொள்ளலாமா.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடை ராட்டினத்தில் பயணித்த சண்டமாருகன் புத்தன் பகலவன் அனைவருக்கும் நன்றிகள். சுற்றிச் சுற்றி சுழன்று வரும் குடைராட்டினத்தைப் போல எமது வாழ்விலும் இன்பம் துன்பம் மாறி மாறி வரும். எல்லாவற்றையும் கடந்து வாழ்க்கையை கொண்டு நடத்தினால்தான் குடும்பம் கோயிலாக இருக்கும். குறுகிய நேர மகிழ்ச்சிக்காக பயணித்து குடைராட்டினம் நின்றவுடன் இறங்கிக் கொண்டால் மிகுதி வழ்க்கை நரகமாத்தான் இருக்கும். எனது அறிவுக்கு எட்டிய விளக்கம். நன்றிகள் பகலவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவயதுக் காதல் வயதும் பக்குவமும் வர முதல் கலியாணத்தில் முடிந்தால் வாழ்க்கை கடினமாகத்தான் இருக்கும்.  ஆனால் ஒன்றாக வாழவேண்டும் என்று எதனையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தால் வாழ்க்கைப் பயணம் இலகுவாக இருக்கும். அதனை எதிர்கொள்ள snowflake சந்ததியினரால் முடியாது போலத்தான் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

நான் இங்கு பொதுவாக அவதானித்த எம்மவர்களின் காதல்களில் இருந்து உங்கள் கதை வித்தியாசமாக இருக்கின்றது அக்கா.

எம் இளைய சந்ததியினர் நன்கு திட்டமிட்டு தம் வாழ்வை அமைத்து கொள்வதை என்னால் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது இங்கு. நல்ல வேலை எடுத்த பிறகும்  தமக்கு என ஒரு வீடு அல்லது கொண்டோ ஒன்றை வாங்கும் வரைக்கும் பொறுமையாக இருக்கின்றனர். அப்பா அம்மாவின் காசில் கலியாண வைபவத்தை கூட செய்ய விரும்பாமல் அதற்காக தம் பணத்தை சேமித்து சிம்பிளாக நிகழ்வை வைத்து கொள்கின்றனர். அவர்களின் பெற்றோர்கள் ஒன்றுக்கு மூன்று வேலை செய்து பட்ட அவலத்தை கண்டவர்கள் என்பதால் நல்ல வருமானம் வர கூடிய தொழிலை அல்லது வர்த்தகத்தை நாடி செல்கின்றனர்.

காதலித்தவுடன் பொறுமை இல்லாமல் திருமணம் செய்ய விரும்புவதன் அடிப்படை காரணங்களில் காமமும் மோகமும் முக்கிய இடங்களில் இருக்கு என நினைக்கின்றேன்.  அவற்றை பெறுவதற்கு திருமணம் வரைக்கும் காத்திருக்கும்  அவசியம்  இங்கு வளரும் தலைமுறைக்கு இல்லை. திருமணத்துக்கு முன் வெர்ஜின்/Virgin ஆக இருக்க வேண்டிய எதிர்பார்ப்பும் மங்கி கொண்டு போவதால் தமக்கான அடிப்படை வசதிகள் வரும் வரைக்கும் பொறுமையுடன் இருக்கின்றனர் ( அதே நேரத்தில் திருமணத்தின் பின் நேர்மையான உறவை நிபந்தனையாக வைத்து உள்ளனர்). இடையில் பிரிவு வந்தாலும் அந்த பிரிவை முற்றுப்புள்ளியாக கருதாமல்  அதன் பின் இன்னொரு உறவை அமைக்கவும் ஆரோக்கியமாக சிந்திக்கின்றனர

இவை இங்கு (கனடா) வளரும் எம் இளைய  தலைமுறையில் நான் அவதானித்தவை. ஆனால் உங்கள் கதையில் இருப்பவர்கள் முற்றிலும் வேறானதாக உள்ளனர். அனுபவங்களும் அதை அணுகும் முறைகளும் வேறு வேறானவை தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி நீங்கள் கூறியதுபோல் காத்திருந்து பொறுமையாக தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் பாதிப்போர். மீதிப்போர் காமமும் மோகமும் அடிப்படைக் காரணங்களாக வாழ்க்கையைத் தொலைத்து நிற்பதையும் காணக்கூடியதாய் உள்ளது. இதைவிட திட்டமிட்டு தம் வாழ்க்கையை ஆரம்பித்த பலர்கூட விவாகரத்து செய்ய விழைகின்றனரே. எம் இளைய தலைமுறையினரின் எதிர்காலம் நாம் நினைப்பதுபோல இல்லை. காலத்தின் வேகத்துடன் அவர்களும் பயணிக்கின்றனர். திருமணவயதை எட்டிய எமது உறவுகள் நட்புக்கள் எம்மை சுற்றி இருப்பவர்கள் எம்முடன் பழகுபவர்களென பலரின் குடும்பத்தில் நடக்கும் பல கதைகள் இதைவிட இன்னும் வித்தியாசமான அணுகுமுறைகளாகவும் அனுபவங்களாகவும் இருப்பதை அவதானிக்கிறேன். இவையும் கடந்து போகும். இன்னும் பல மாற்றங்கள் வரும்...
படித்து கருத்தெழுதிய கிருபன் நிழலி அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.