Archived

This topic is now archived and is closed to further replies.

நவீனன்

வரலாற்று சிறப்புமிக்க யாழ் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா…

Recommended Posts

வரலாற்று சிறப்புமிக்க யாழ் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா…

DSC_2670.jpg?resize=800%2C533
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(17.03.2018) வெகுசிறப்பாக இடம்பெற்றது

யாழ் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த புதன்கிழமை மாலை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது

 

இந்நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது

திருவிழா திருப்பலி யாழ் நாவாந்துறை ஆலய பங்குத்தந்தை அன்ரனிபாலா மற்றும் மன்னார் மாழ்தை பங்கு தந்தை மரியதாஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது

அத்துடன் விசேட ஆராதனை வழிபாடுகளும் திருச்சொரூப பவனியும் இதன்போது இடம்பெற்றது

இந்த திருவிழா திருப்பலியில் யாழ்ப்பாணம் மன்னார் கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்

இதேவேளை இத்தீவிற்கு யாத்தரிகர்கள் பாதுகாப்பான முறையில் சென்றுவருவதற்கு ஏதுவாக கடற்படையினர் விசேட பாதை ஒன்றை அமைத்ததுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

DSC_2584.jpg?resize=800%2C533DSC_2585.jpg?resize=800%2C533DSC_2587.jpg?resize=800%2C533DSC_2596.jpg?resize=800%2C533DSC_2613.jpg?resize=800%2C533DSC_2637.jpg?resize=800%2C533

படங்கள் – ஐ.சிவசாந்தன்

http://globaltamilnews.net/2018/71276/

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • கபிதன், என்றாவது விடுதலைப் புலிகளின் முகாமில் அவர்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டு இருக்கின்றீர்களா?
  • கதைய முடிச்சிட்டாங்கய்யா... கலங்கிய துரைமுருகன் மின்னம்பலம்   திமுக பொருளாளராக இருந்து, பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு உயர்த்தப்படுவதாக இருந்த துரைமுருகன், மீண்டும் பொருளாளராகவே தொடருவார் என்று அறிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சில நாட்களுக்கு முன்னே இது அரசல் புரசலாக துரைமுருகனுக்கு தெரிவிக்கப்பட்டபோதிலும் அது அறிவிப்பாக வெளிவந்ததில் குறிப்பாக ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டதில் துரைமுருகன் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்.. ஜூன் 2 ஆம் தேதி காலை மின்னம்பலத்தின் டிஜிட்டல் திண்ணையில் பொதுச் செயலாளர் பதவி: துரைமுருகனுக்கு ஷாக் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் குறிப்பிட்டிருந்தவாறே இன்று (ஜூன் 3) துரைமுருகன் பொருளாளர் பதவியிலேயே தொடர்வதாக அறிவித்துள்ளார் ஸ்டாலின். இன்று காலை கலைஞர் பிறந்த தினத்துக்காக கோபாலபுரம் வீடு, கலைஞரின் நினைவிடம், அறிவாலயம் என்று ஸ்டாலினுடன் சேர்ந்தே அஞ்சலி செலுத்தினார் துரைமுருகன். கலைஞருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வீடு திரும்பினார். அடுத்த சில மணித்துளிகளில்தான், துரைமுருகன் பொருளாளராக தொடர்வார் என்ற அறிவிப்பு வெளியானது. அதைக் கேட்டுவிட்டு அதிருப்தியோடு மதியம் 2 மணிக்கு காட்பாடிக்குப் புறப்பட்டார் துரைமுருகன். சில நாட்களாக ஏலகிரியில் ஓய்வெடுத்து வந்த துரைமுருகன் அப்போதே தனது நண்பர்களிடம் பொதுச் செயலாளர் பதவி குறித்து தனது கருத்துகளை மனம் திறந்து சொல்லி வந்திருக்கிறார். பொதுக்குழுவையும் வீடியோ கான்பிரன்ஸிலேயே நடத்தக்கூடாதா என்று அப்போது கேட்டதையும் நாம் மின்னம்பலத்தில் பதிவு செய்திருக்கிறோம். அந்த நண்பர்களில் சிலர் உடனடியாக துரைமுருகனைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். ‘என்னண்ணே இப்படி ஆயிடுச்சு’ என்று விசாரித்த அவர்களிடம் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார் துரைமுருகன். அவர்களில் நெருக்கமான ஒருவரிடம், ‘என் கதையை முடிச்சிட்டாங்கய்யா. இனிமே பொதுத் தேர்தல் முடிஞ்சுதான் அமைப்புத் தேர்தலாம். இப்பவே நம்மளை மதிக்காதாவங்க, ஒருவேளை அதிகாரம் வந்ததுக்கப்புறம் எப்படிய்யா மதிப்பாங்க? அதிலும் இந்த அறிவிப்பை வெளியிடுறதுக்கு கலைஞர் பிறந்தநாளாய்யா கிடைச்சுது?” என்றும் ரொம்பவே வருத்தப்பட்டுக் கேட்டிருக்கிறார் துரைமுருகன். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் துரைமுருகனின் ஆதரவாளர்கள் அவரது காட்பாடி வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்   https://minnambalam.com/politics/2020/06/03/62/stalin-action-duraimurugan-reaction
  • ""உண்மைல அங்கே ருசியான உணவே சாப்பிட மாட்டாங்க. நூறு தோசைவரைக்கும் ஏற்கெனவே போட்டு அங்கே ரெடியா இருக்கும். அதைத்தான் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுவாங்க. சூடான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. போர் இடங்கள்னால பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அங்கே அதிகமா இருக்கும். நல்ல ருசியான சாப்பாடு என்னனுகூட அவங்களுக்குத் தெரியாது. கிடைக்குற டிரெஸ், செருப்பு போட்டுட்டு அலைஞ்சுக்கிட்டு இருப்பாங்க. ஏன்னா, அங்கே இருந்தவங்க எல்லாருமே வேறொரு மனநிலைல எப்பவும் இருப்பாங்க. சிலர் இப்போ சொல்லிட்டு இருக்குற கறி இட்லி உணவு வகைகளை நாங்க அங்க ஒருநாள்கூட பார்க்கல. மிகைப்படுத்திச் சொல்றாங்கனு தோணுது. ''"" அவர் தனக்கு புரிந்ததைக் கூறுகிறார். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு உண்மை தெரியும்தானே. 🙂
  • அக்கா, அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் கதக்கப்படாது.😉 பிரபாகரன் பெயரை உச்சரித்தாலும் குற்றம் உச்சரிக்காவிட்டாலும் குற்றமா 😂 சீமான் விடுதலைப் புலிகளைச் சொல்லி அரசியல் செய்வது எந்த வகையில் பிழை என்று கூறுவீர்களா ? 😏
  • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இன்று அவசரக் கூட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அவசரக் கூட்டம் ஒன்று இன்று மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. இதில் இந்தக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றார்கள். விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்., சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசியக் கட்சி, அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம், மற்றும் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் சோமசுந்திரம் கணேசமூர்த்தி தலைமையிலான கட்சி என்பவற்றின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றார்கள். திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளரும் பொருண்மிய மேம்பாட்டு கழக பொறுப்பாளராகவும் இருந்த போராளி ரூபனும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்கின்றார். பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது உட்பட முக்கியமான அரசியல் விவகாரங்கள் இன்றைய கூட்டத்தில் ஆரபாயப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.   http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-மக்கள்-தேசிய-கூட்ட-2/