• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
குமாரசாமி

"நாவின் சுவையே வாழ்வின் சுவை"

Recommended Posts

நாவின் சுவையே வாழ்வின் சுவை" என உணர்த்தும் யுகாதியின் சிறப்பம்சமான Azadirachta indica என்ற வேம்பு தோன்றியது இந்தியாவில்.

DYiqlv2V4AAIBsJ.jpg

Neem, Margosa, Nimba, Neem des Indes என அழைக்கப்படும் வேம்பு, இந்தியா, இலங்கை, மியான்மர், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன.

DYiq8HpVwAAW-kH.jpg

Azaddhirak என்ற பெர்சிய சொல்லுக்கு விலைமதிப்பற்ற மரம் என்ற பொருளாம்.. Nimba என்ற சமஸ்கிருத சொல், ஆரோக்கியம் என்ற பொருள்தரும்..

DYirZC_UQAAQ08U.jpg

கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலும், சுஷ்சுருத, சாரக சம்ஹிதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள வேம்பு, ஐயாயிரம் ஆண்டுகள் பழமை மிகுந்த மரமாகும்..

DYirmEEU0AESGJO.jpg

மண்வளம், நீர்வளம் குறைந்த வறட்சிப் பகுதிகளிலும் நன்கு வளரும் வேப்ப மரங்களின் இலை, கனி, விதை, கிளை, பட்டை அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை

DYir-ACVQAA7iS-.jpg

கசப்பே உருவான வேப்பிலையில் அடங்கியுள்ளது அனைத்து மருத்துவ குணங்களும்..

வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து அமினோ அமிலங்கள், கால்சியம், காப்பர், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீஸ் நிறைந்துள்ளன..

DYiskJgUQAAo5bh.jpg

கசப்புத்தன்மை குறைவாக உள்ள கொழுந்து வேம்பு இலைகளில் வைட்டமின் A மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது..

DYisuEyV4AAnzds.jpg

Azadirachtin வேம்பின் கசப்பு சுவைக்கு காரணமாக உள்ளது. Triterpene, Beta Sitosterol, Tannins, ஆகியன வேம்பின் மருத்துவ குணங்களுக்கு உதவுகின்றன.

DYis9tNVQAAdYle.jpg

சளி, காய்ச்சல், ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய்கள், வயிற்று அமிலம், குடல் அழற்சி, காமாலை, சிறுநீரக நோய்கள் ஆகியவற்றில் வேப்பிலை உதவுகிறது

DYitVqfVoAAbb2Z.jpg

நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய், உடற்பருமன் ஆகியவற்றில் பயனளிக்கும் வேம்பு, கண்நோய், பற்சிதைவு, மூட்டுவலி ஆகியவற்றிலும் உதவுகிறது.

DYitvh0VoAAIAfS.jpg

காயங்களுக்கு சிறந்த மருந்தான வேப்பிலை, நாள்பட்ட தோல் நோய்கள், சிரங்கு, முகப்பரு மற்றும் சொரியாசிஸ் ஆகியவற்றிலும் பயன்படுகிறது..

தட்டம்மை, சிக்கன்பாக்ஸ் போன்ற வைரஸ் காய்ச்சலில் நோய் பரவாமலும், தழும்புகள் ஏற்படாமலும் இருக்க வேப்பிலை கொழுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன..

DYit9wDU0AAyaU9.jpg

வேப்பிலையின் Nimbin, Nimbinene, Flavonols போன்றவை இவற்றிற்கு antiviral, antibacterial, antifungal நோயெதிர்ப்பு பண்புகளைத் தருகின்றன..

DYiuUnVUMAAyQt9.jpg

DYiuUnVUMAAyQt9.jpg

சமீபத்திய ஆய்வில் வேப்பிலையின் Azadirachtin, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைத்து, நோய் பரவாமல் தடுக்க உதவும் என கண்டறியப்பட்டுள்ளது..

DYiux1fU0Acrh56.jpg

மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும், பூச்சிக்கொல்லியாகவும் விளங்கும் வேப்பிலையின் புகை வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்..

DYiu6cMUQAER7yp.jpg

தீங்கனி இரவமொடு வேம்புமனை எனும் புறநானூற்று பாடலில் விழுப்புண் கொண்ட போர்வீரனின் மனையில் இரவம் வேம்பு இலைகள் செருகி என குறிப்பிடப்பட்டுள்ளது

DYiwx9eU8AAHHIP.jpg

வேப்பம்பூவிலிருந்து வேப்பம்பூ பச்சடி, ரசம், வடகம் ஆகியன தயாரிக்கலாம். இளந்தளிர்களின் சாற்றில் தேநீர் மற்றும் கசாயம் தயாரிக்கப்படுகிறது..

DYiw5NUUQAAtjjH.jpg

வேப்ப விதைகளிலிருந்து பெறப்படும் வேப்பெண்ணெய் (Margosa oil) மருத்துவ ரீதியாக பல பயன்களைத் தருகின்றது..

DYixGlzVMAA24wn.jpg

மோகினி அவதாரம் கொண்ட விஷ்ணுவிடம் சொர்ணபானு என்ற அசுரன் ஏமாற்றிப் பெற்ற அமிர்தத்தை கக்கியதால் உருவானது வேம்பு என புராணங்கள் கூறுகின்றன..

DYixTmEUQAA3wB2.jpg

கல்ப விருட்சம் போன்ற மரத்தினை பூமிக்கு வழங்கிட இந்திரன் தூவிய அமிர்தமே வேம்பாக வளர்ந்தது என்றும் கூறப்படுகிறது..

DYixdooV4AA2Kc9.jpg

கிழக்கு ஆப்பிரிக்காவில், வேம்பு Mwarunaini, அதாவது நாற்பது மருத்துவ குணங்களின் மரம் என்றே அழைக்கப்படுகிறது..

DYixq1nVQAAA1Ub.jpg

ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம்மிடையே பயன்பாட்டில் உள்ள வேம்பினை, 2000 ஆண்டில்தான் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன..

DYix04RVwAAu9Yj.jpg

வசந்தத்தை வரவேற்கும் யுகாதி இன்று.. யுகாதியை வரவேற்போம் இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு சேர்ந்ததொரு பச்சடி கொண்டு..

DYix8fAUMAEsjHD.jpg

அமிர்தம் போல இனிக்கும் பலன்களைத் தருகின்ற கசப்பான வேம்புடன் அனைவருக்கும் இனிய யுகாதி தின நல்வாழ்த்துகள்..

DYiyKoiU8AEfkhz.jpg

twitter......

  • Like 3

Share this post


Link to post
Share on other sites
On 3/18/2018 at 10:47 AM, குமாரசாமி said:

ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம்மிடையே பயன்பாட்டில் உள்ள வேம்பினை, 2000 ஆண்டில்தான் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன..

ஊரில் வீட்டுக்கு வெளியே நிற்கும் வேம்பை எமது வீட்டில் உள்ளேயே வைத்து வளர்க்கிறோம்.கிழமையில் இரு நாட்களாவது 4 -5 இலைகளை தின்னத்தந்து தானும் சாப்பிடுவார் மனைவி.பிள்ளைகளுக்கும் தொண்டை நோவு இருமல் என்றால் தின்னக் கொடுப்பார்கள்.பேசிப்பேசி சாப்பிடுவார்கள்.இதிலே கழிவு என்று ஒன்றுமே இல்லை.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

வேப்பம் பூ  வடகம், ரசம் சூப்பராய் இருக்கும்......! பகிர்வுக்கு நன்றி கு. சா.....! tw_blush:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.