Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

இலங்கை சுற்றுலா


Recommended Posts

குடாநாட்டுக்குள் குவிந்திருக்கும் உல்லாச சுற்றுலா மையங்கள்
 

லங்கையில் வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் சுற்றுலாத்துறையில் பாரிய அபிவிருத்தியைக் கண்டு, பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, நீர்கொழும்பு உட்பட தென்கடற்கரையோர நகரங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.  

image_229eab10b3.jpg  

போரின் நேரடித்தாக்கம் பெருமளவு இல்லாத இந்த இடங்கள், அரசாங்க நிறுவனங்களினாலும் தனியார் துறையினராலும் பெருமளவு ஊக்குவிக்கப்பட்டு, பரந்தளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு உல்லாசப்பயணிகள் அழைத்து வரப்படுகின்றார்கள். ஆனால் இத்தகைய இடங்களுக்கு சற்றேனும் சோடைபோகாததும் நிகரானதும் இன்னும் மேன்மையான பல இடங்கள் வடமாகாணத்தில் காணப்படுகின்றன.   

இனம்காணப்பட்டுள்ள இந்தச் சுற்றுலா மையங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு, உல்லாசப் பயணிகள் வந்து செல்வதற்கு ஊக்குவிக்கப்படுவார்களேயானால் வடக்கில் இன்று காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டம், தொழில்வாய்ப்பின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என்பது உண்மை.   

வடஇலங்கையில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்யக்கூடிய மூன்று அம்சங்கள் காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட பேராசிரியர் ப. புஸ்பரெட்ணம் கூறுகின்றார். இது தொடர்பாக அவர் கூறும்போது, முதலாவது, இயற்கை வளங்கள்; இரண்டு தொல்லியல் அம்சங்கள்; மூன்று தொட்டுணர முடியாத மரபுரிமை அம்சங்கள் என்கிறார்.  

தென்னிலங்கையில் சுற்றுலா மேம்பாட்டில் இந்த இயற்கை வளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேபோல், குடாநாட்டிலும்  இயற்கை வளம் மிக முக்கியமான அம்சமாகக் காணப்படுகின்றது. இங்கும் பிற நாட்டவர்களும் தென்னிலங்கையில் இருந்து வருகின்றவர்களும் பார்க்கக் கூடிய, தரிசிக்கக் கூடிய பல இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. இந்தப் பிரதேசத்தில் உள்ள கடற்கரைகள் மிக உன்னதமான சுற்றுலாவுக்கு உகந்தவையாகக் காணப்படுகின்றன. 

கசூரினா கடற்கரை, கீரிமலை, வெற்றிலைக்கேணி, முல்லைத்தீவு, சாட்டி போன்ற இடங்களில் உள்ள கடற்கரைகள் பட்டுப்போன்ற வௌ்ளை மணற்பாங்கானவையாகவும் ஆழம்குறைந்த பரந்து விரிந்த அமைப்பைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.  

இந்தக் கடற்கரைகளைத் தவிர, பறவைகள் சரணாலயம், வனவிலங்குப் பகுதிகள் முக்கிய அம்சங்களாகச் சுற்றுலாவிலே காணப்படுகின்றன.  

கிட்டத்தட்ட 1965 ஆம் ஆண்டளவில் அரசாங்க அதிபராக இருந்த ஸ்ரீகாந்தா, சுண்டிக்குளத்தில் வெற்றிலைக்கேணிக்கு அண்மையில், உலகிலுள்ள பலநாடுகளில் இருந்து மிக அற்புதமான பறவைகள் வந்து செல்வதை அவதானித்து அதை ஒரு பறவைகள் சரணாலயமாக அங்கிகரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.   

2009 இன் பின்னர், இலங்கை அரசாங்கத்தின் முயற்சியால், இந்தச் சரணாலயம் சிறப்பாக அபிவிருத்தி செய்யப்பட்டு, வௌிநாட்டவர்கள், தென்னிலங்கை மற்றும் உள்ளூர் மக்கள், இங்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றார்கள். மக்களுக்கு வசதியாக தங்குமிட வசதிகள், சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதிகள், சிறுவர்கள் விளையாடுவதற்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அங்கே சேர்க்கப்பட்டு இப்போது ஒரு சர்வதேச தரத்துடனான சரணாலயமாகக் காணப்படுகின்றது 

இதைத் தவிர வங்காலையில் உள்ள சரணாலயம் பலரையும் கவர்ந்து வருகின்றது.  ஒரு பறவைகள் சரணாலயமாகக் காணப்படுகின்றது.    

அதேபோலத்தான், பூநகரி, ஆலடியிலிருந்து கல்முனை வரை செல்லக்கூடிய 10 கி. மீற்றர் நீளம் கொண்ட மணற்பாங்கான பிரதேசம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த ஓர் இடமாகக் காணப்படுகின்றது. மண்டித்தலை, கௌதாரிமுனை, வெட்டுக்காட்டை அண்டிய கடற்பரப்பு இதுவாகும்.  வடபகுதியில் ஏனைய இடங்களைக் காட்டிலும் பாறைகள் அற்ற மணற்பாங்கான ஆழம்குறைங்த கடல்களாக இவை இருப்பதனால் பலரும் அங்கு வந்து செல்கின்றார்கள்.   

பூநகரி, மண்டித்தலை, கௌதாரி முனைக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் இடைப்பட்ட ஆழம் குறைந்த பரவைக்கடல் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இப்பொழுது காணப்படுகின்றது. 

இவ்வாறான ஓர் இடம் சுற்றுலாவுக்குரிய வகையில் மாற்றப்பட்டு, படகுச் சேவைகள் மேற்கொள்ளப்படுமானால் உலக அளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த படகுப் போக்குவரத்தை இங்கு அறிமுகப்படுத்தி சுற்றுலாவை மேலும் அபிவிருத்தி செய்வதற்குரிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.  

இப்பிரதேசத்தில்தான் வரலாற்றுப் பழைமைவாய்ந்த இந்து ஆலயங்கள் காணப்படுகின்றன. இந்தப் பிரதேசத்தைப்பற்றி, 15 ஆம் நூற்றாண்டில் எழுந்த கோகிலசந்தேசி என்ற இலக்கியத்தில் சிறப்பாகக் கூறப்படுகின்றது.  

ஆனையிறவுப் பாதை திறப்பதற்கு முன்னர் தென்னிலங்கைக்கும் யாழ்ப்பாணத்துக்குமான கடல், தரை வழிப்பாதை யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையிலிருந்து பூநகரி, மண்டித்தலை ஊடாக மாதோட்டம் சென்று அங்கிருந்து அநுராதபுரம் ஊடாக தென்இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளப்பட்டது.   

கோகில சந்தேசியத்தில் இந்தக் கடற்கரைப் பிரதேசம் மிக அற்புதமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அது சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய ஓர் இடமாகக் காணப்படுகின்றது.   

‘கோகிலசந்தேசிய’ என்ற இலக்கியம், கோட்டை இராச்சியத்திலிருந்து 15 ஆம் நூற்றாண்டில் சப்புமல் குமரய்யா என்ற ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது படையெடுத்து வந்தான். அவனுடைய படை எந்தெந்த வழியூடாக நகர்ந்தது, அந்தந்த வழிகளில் எதிர்ப்பட்ட நகரங்கள், தரிசித்த ஆலயங்கள், எந்த ஊரில் படைகள் தங்கியிருந்தன போன்ற விவரங்கள் அனைத்தையும் விவரிக்கும் ஆவணமாகக் காணப்படுகிறது. 

இதில் மாதோட்டத்தை வந்தடைந்த படைகள், அங்கிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து கல்முனையில் தங்கியிருந்து, கொழும்புத்துறைக்கு வந்து, கொழும்புத்துறையில் யாழ்ப்பாண மன்னரின் படைகளை எதிர்த்துப் போரிட்டு, பின்னர் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி, அங்கிருந்த இந்து ஆலயத்தை வழிபட்டதாக இந்த இலக்கியத்தில் கூறப்படுகின்றது. 

மாதோட்டம் வந்த படைகள் அங்கிருந்து பூநகரி ஊடாக கல்முனை வரும்போது அதன் மணற்பாங்கான தரையமைப்பையும் ஆளமற்ற கடற்கரையையும் வீசிய இதமான தென்றலையும் கவித்துவமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இன்றும் மண்டித்தலை, கல்முனை கடற்கரைக்குச் செல்வோர் அந்த அழகையும் இரம்மியத்தையும் உணர்வுபூர்வமாக உணரமுடியும்.  கல்முனையில் தங்கியிருந்த படைகள் பரவைக்கடலினூடாக கொழும்புத்துறையை அடைந்தபோது, பரவைக்கடலின் தன்மையும் ஆழமற்ற, அலைகள் இல்லாத, அமைதியான கடலின் ரம்மியமான அழகையும் இந்த இலக்கியம் வர்ணித்துச் செல்லுகின்றது.

 இதேநேரத்தில் குடாநாட்டிலும் வடபகுதியிலும் இராமாயணத்துடன் தொடர்புடைய பல இடங்கள் காணப்படுகின்றன. இராமாயணம் ஓர் ஐதீகமான புராணமாகக் பார்க்கப்பட்டாலும் அந்த இடங்களினுடைய வரலாறும் அந்த வரலாற்று மையங்களில் பேணப்படுகின்ற மரபுகளும் சுற்றாடலில் வாழுகின்ற மக்களினுடைய வாழ்க்கையோடு இரண்டறக்கலந்திருப்பதனால், அவை இன்று வரலாற்றுப் பெருமையும் பழைமையும் வாய்ந்த அபிவிருத்தி செய்யப்படவேண்டிய பிரபல்யமான சுற்றுலா மையங்களாக விளங்குகின்றன.   

குறிப்பாக, புத்தூரில் நிலாவரையிலுள்ள ஆழம் அறியமுடியாத நிலாவரைக் கிணறு இராமாயணத்துடன் தொடர்புடைய ஒரு சுற்றுலா மையமாக பேசப்படுகிறது. அதேபோல், யாழ்ப்பாணத்தில் வண்ணார் பண்ணையில் உள்ள வில்லூன்றி தீர்த்தக்கேணியும் இராமாயணத்துடன் தொடர்புடைய ஓர் இடமாகும். 

பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் கூறியதுபோல், இங்கே இறந்தவர்களுக்காக நடாத்தப்படுகின்ற கிரிகைகளும் சடங்குகளும் தொட்டுணர முடியாத யாழ்ப்பாணத்துப் பண்பாடாகக் காணப்படுகின்றது. பலரும் அவற்றினுடைய மரபுகளைச் சம்பிரதாயங்களை ஆராய்வதற்கு இன்று வில்லூன்றி தீர்த்தக் கேணி மண்டபத்தில் நடைபெறுகின்ற மரணச் சடங்குக் கிரியைகள், அந்தியேட்டி சடங்குகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக செல்லுகின்றனர். ஏனெனில் யாழ்ப்பாணத்தினுடைய பாரம்பரிய தொட்டுணர முடியாத பல அம்சங்கள், அப்படியே பேணப்படுகின்ற தன்மை காணப்படுவதாக பேராசிரியர் புஸ்பரெட்ணம் அவர்கள் கூறுகின்றார்.   

இயற்கை வளங்களுக்கு அப்பால் குடாநாட்டில் பல தொல்லியல் மரபுரிமைச் சின்னங்கள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவருகின்ற இடங்களாகக் காணப்படுகின்றன. அவற்றில் வழிபாட்டுத் தலங்கள் மிக முக்கியமான மரபுரிமை அம்சங்களாகக் காணப்படுகின்றன.   

இங்கு இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சார்ந்த மரபுரிமைச் சின்னங்கள் காணப்படுகின்றன.   

போர்த்துக்கேயர் தமது ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் சிறிதும் பெரிதுமான 500 க்கும் மேற்பட்ட ஆலயங்களை அழித்துள்ளனர். அவ்விடங்களில் கத்தோலிக்க தேவாலயங்களை அமைத்தார்கள் என்று கூறப்படுகின்றது.  

அதன் பின்னர் இந்த ஆலயங்களில் பெரும்பாலானவை ஒல்லாந்தரால் புரட்டஸ்தாந்து ஆலயங்களாக மாற்றப்பட்டுள்ளன. போர்த்துக்கேய காலத்தைய ஆலயங்கள் மிக அரிதாக காணப்பட்டாலும் கலைமரபுடன் கூடியவை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதசுதந்திரம் அளிக்கப்பட்டதன் பின்னர், முன்னைய கொலனித்துவ ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட ஆலயங்கள் இருந்த இடத்தில் அவற்றின் பெயரோடு மீண்டும் ஆலயங்கள் தோற்றம் பெற்றன. இதனால் அந்தந்த ஆலயங்களின் வரலாறும் பண்பாடும் ஐதீகங்களும் முன்னைய ஆலயங்களின் ஒரு தொடர்ச்சியாகவே காணப்படுகின்றன.   

அந்தவகையில் இன்று நல்லூர், நகுலேஸ்வரம், மாவிட்டபுரம், பறாளை விநாயகர், வல்லிபுரம் விஷ்ணு கோவில், சட்டநாதர் கோவில், வீரமாகாளி அமம்மன் கோவில் எனப் பல வரலாற்று ஆலயங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேலும் அபிவிருத்தி செய்யப்படவேண்டியவையாகும்.  

இந்து ஆலயங்களுடன் ஒப்பிடும்போது, எண்ணிக்கையில் பௌத்தவழிபாட்டிடம் குறைந்தளவில் காணப்பட்டபோதிலும், கந்தரோடையிலும் நெடுந்தீவிலும் உள்ள பௌத்த ஸ்தூபிகளையும் அவற்றின் அழிபாடுகளையும் பார்ப்பதில் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் பரவியிருந்த தமிழ் பௌத்தத்தின் தொடர்ச்சியாக இலங்கையிலும் தமிழ் பௌத்தம் பரவியிருந்ததை நிரூபிக்கும் வகையில் இவை காணப்படுகின்றன.   

16 ஆம் நூற்றாண்டின் பின்னர், ஐரோப்பியர் ஆட்சியில் அவர்களுடைய பயன்பாடு பெரிதும் யாழ்ப்பாணத்திலும் வட இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்தியது. இதனால் போர்த்துக்கேயர் காலத்து கத்தோலிக்க ஆலயங்களும் ஒல்லாந்தர் பிரித்தானியர் கால வரலாற்றுப் பழைமைவாய்ந்த புரட்டஸ்தாந்து ஆலயங்களும் இங்கு முக்கிய மரபுரிமைச் சின்னங்களாகக் காணப்படுகின்றன.   

பிரித்தானிய ஆட்சியின் பிற்பகுதியில் அவற்றின் கலைமரபுகள் மாற்றியமைக்கப்பட்டாலும் ஒல்லாந்து நாட்டவரினுடைய கலைமரபுகளுடன் கூடிய கிறிஸ்தவ ஆலயங்கள் மணற்காடு, வல்வெட்டித்தறை, சங்கானை, அச்சுவேலி என்று பல இடங்களில் காணப்படுகின்றன.  

அதேபோலதான் சாட்டி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பழைமை வாய்ந்த மசூதிகளைப் பார்ப்பதற்கும் பலர் இங்கு வருகை தருகின்றார்கள். 

இந்த வழிபாட்டு ஆலயங்களைத் தவிர, யாழ்ப்பாண இராசதானி மையம்கொண்டிருந்த நல்லூரில் உள்ள மந்திரிமனை, சங்கிலியன்தோப்பு, யமுனா ஏரி போன்ற வரலாற்று மையங்களைப் பார்ப்பதற்காகவும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றார்கள்.   

   உலக அளவில் தொழில்சார் நிபுணத்துவ ரீதியில் வடபகுதி சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்படாவிட்டாலும், இங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளில் கணிசமானவர்கள் இவ்வாறான மையங்களுக்குச் சென்று அவற்றைப் புகைப்படமாகவும் ஒளிப்படமாகவும் எடுத்து ஆவணப்படுத்தி வருகின்ற ஒரு மரபு காணப்படுகின்றது.   

மேலும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள சமூகப் பழக்க வழக்கங்கள், ஆடைகள், ஆபரணங்கள், உணவு முறைகள் என்பவற்றையும் ஆராய்வதற்காகவும் இங்கே வருகின்றார்கள். இந்த வருகையின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, இன்று யாழ்ப்பாணத்திலும் வட இலங்கையிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய பாரம்பரிய உணவு விடுதிகள், பாரம்பரிய ஆடைகள், பாரம்பரிய பாவனைப் பொருட்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பாவனையிலிருந்த பாவனைப் பொருள்கள் வீட்டுப் பாவனைப் பொருள்கள் போன்றவை, முக்கிய வணிக மையங்களிலம் அரச நிறுவனங்களிலும் பிறர் பார்த்து இரசிக்கக்கூடிய வகையில் காட்சிப்படுத்தப்படுகின்ற தன்மையும் வளர்ச்சிபெற்று வருகின்றது.    

ஏ9 பாதை திறக்கப்பட்டதன் பின்னர், சுற்றுலாப் பயணிகளின் கணிசமான வருகையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் பலவிடுதிகள் உருவாகி வருகின்றன. பெரும்பாலானவர்களின் முதலீடு விடுதிகளை உருவாக்குதிலேயே காணப்படுகின்றது. 

பேராசிரியர் ப. புஸ்பரெட்ணம் வடபகுதி சுற்றுலாத்துறையின் தீர்க்கமான வளர்ச்சி குறித்து தெரிவித்த கருத்து, திட்டங்களை உருவாக்குபவர்களும் செயற்படுத்துபவர்களும் சிந்தையில் எடுக்க வேண்டிய முக்கியமான ஒன்றாகும்.  “உலகில் எந்தவொரு தொல்லியல் மையத்தை, கலாசார மையத்தை அல்லது அற்புதமான இயற்கை வளத்தைப் பார்ப்பதற்கு பெருமளவு நிதியைச் செலவு செய்து போகின்ற இன்று, தன்மை மிகக் குறைந்து வருகின்றது. ஆகவே, வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட சுற்றுலா மையங்கள் தனித்தனியாக இருந்தாலும், அவற்றை மக்கள் விரும்பிப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும்.  உதாரணமாக துர்க்கையம்மன் கோவிலைப் பார்ப்பதற்கு பல நாட்டவர்கள் வருகை தருகின்றார்கள். ஆனால், அந்தக் கோவிலை மட்டும் பார்த்துவிட்டு திரும்புவது அவர்களுடைய நோக்கமாக இல்லை. ஆகவே துர்க்கையம்மன் கோவிலை, நாங்கள் ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றுகின்றபோது, அந்த இடத்துக்கு வருகின்றவர்களுக்குரிய உணவுகள், பாதுகாப்பு தங்குமிட வசதிகளோடு அந்த இடத்தைப் பார்ப்பவர்கள் அருகிலுள்ள ஏனைய சுற்றுலா மையங்களையும் சென்று பார்ப்பதற்கான பிரசாரங்கள், போக்குவரத்து வசதிகள், பொருத்தமான உணவுவிடுதிகள், சுகாதாரம் போன்றவற்றையும் ஏற்படுத்துவது அவசியமாகும். குறிப்பாக நகுலேஸ்வரம், மாவிட்டபுரம் ஆகிய ஆலயங்களையும் அவை அமைந்திருக்கும் சுற்றாடலையும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய இடமாக மாற்றலாம். இவற்றை ஏற்படுத்துவதன் மூலம் வடபகுதியினுடைய சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் என்பது என்னுடைய கருத்தாகும்.   

பொதுவாக இந்தச் சுற்றுலாவினால் வருமானம் வருகின்றது; பலருக்கு வேலைவாய்ப்பு வருகின்றது; புதிய தொழிற்கூடங்கள் உருவாகின்றன என்பது மறுப்பதற்கில்லை. பல நன்மைகள் இருக்கின்றபோதிலும் சில தீமைகள் காணப்படுகின்றன.

சுற்றுலாப் பயணிகளாக வருபவர்கள் தங்களுடைய உணவுமுறை, வாழ்க்கைமுறை பண்பாடு என்பவற்றை தாம் செல்லுகின்ற இடத்தில் பின்பற்றுகின்றபோது, அதை அங்கிருக்கின்றவர்களும் பின்பற்றும்போது, சில வேளைகளில் வடபகுதியின் பாரம்பரிய பண்பாட்டுக்கு முரணாக இருக்கும்.

எமது சுற்றுலாத்துறையின் வளர்ச்சி என்பது, வெறுமனே பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு நன்மைகளை மட்டும் கருத்தில் கொள்ளாது, எமது பண்பாட்டு தனித்துவத்தை மற்றவர்கள் மதிப்பதற்கு ஏற்ற வகையில் சுற்றுலாப்பயணிகளுக்குச் சொல்லப்பட்டு, பாதுகாக்கப்படுவது அவசியமாகும். அதேநேரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் எங்களுடைய தனித்துவம், பண்பாடு, விழுமியங்கள், சமூக, குடும்ப உறவு முறைகள் மாற்றமடையாமல் பாதுகாக்கப்படுவதும் சுற்றுலாவை ஊக்குவிக்கின்ற திணைக்களங்கள் அமைப்புகளுக்கு முக்கிய பொறுப்புகளாகக் காணப்படுகின்றன.   

இன்று சீன, ஜப்பான் போன்ற நாடுகள் சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொண்டாலும் தமது மரபுரிமை அடையாளங்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் அழிந்தும் மறைந்தும் போகாமல் இருக்கும் வகையில் அவற்றைப் பாதுகாத்து வருகின்றனர்.   

ஆகவே வடபகுதியின் சுற்றுலா என்பது, எம்முடைய பாரம்பரிய பண்பாடுகளைப் பாதுகாக்கக்கூடிய வகையில் வளர்த்து மக்கள் பொருளாதார ரீதியில், தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றம் அடையக்கூடிய வகையில் மாற்றியமைப்பது எங்களுடைய கைகளிலேயே தங்கியுள்ளது” என்று பேராசிரியர் தெரிவித்தார்.   

http://www.tamilmirror.lk/சுற்றுலா/குடாநாட்டுக்குள்-குவிந்திருக்கும்-உல்லாச-சுற்றுலா-மையங்கள்/100-199029

Link to post
Share on other sites
உலக முடிவு
 

image_192f4805fe.jpgநுவரெலியா மாவட்டத்தில் ஹோர்டன் பிளேன்ஸின் முடிவுடன், ஆரம்பமாகுவதே உலக முடிவு ஆகும். சுமார் 4000 அடி உயரம் கொண்ட இப்பகுதி, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிற ஓரிடமாக விளங்குகிறது. 4 கிலோமீற்றர் உள்ளே செல்லும் பொழுது இடையில் பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சியினை காணக்கூடிய வாய்ப்பும் கிட்டும்.

image_f2444c1365.jpgகாலை வேளையில் இங்கு செல்கையில், வெள்ளை நிற மேகக்கூட்டங்கள் நம்மை சூழ்ந்திருப்பதை கண்டு இரசிக்கலாம். மேலும் அடிக்கடி நிகழும் வானிலை மாற்றத்தினையும் காணமுடியும். பனி படர்ந்து இருக்கும் சமயத்தில் திடீரென வெயில் அடிப்பதும் அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து மழை பொழிவதையும் அனுபவிக்கும் வாய்ப்பும் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

image_3b7e709ce6.jpgமலையின் உச்சியிலிருந்து கீழே நோக்கும் பொழுது வெறும் அதளபாதாளம் மட்டுமே நம் கண்களுக்கு புலப்படும். ஒருவித அற்புத காட்சியாக விளங்குவதனாலேயே இதனை 'உலக முடிவு' என்று அழைக்கின்றனர். இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள உலக முடிவும் ஒன்றாகும்.

image_75473e92e6.jpg

 

http://www.tamilmirror.lk/சுற்றுலா/உலக-முடிவு/100-212110

Link to post
Share on other sites

பண்ணைக்கு வாங்க...

கண்டி பேராதெனிய தாவரவியல் பூங்கா
 

image_44e7d67d64.jpg

ஆசியாவில் உள்ள மிக அழகிய தாவரவியல் பூங்காக்களில், இலங்கையின் மத்திய மலை நாடான கண்டியில் அமையப்பெற்றுள்ள, பேராதெனிய தாவரவியல் பூங்காவும் ஒன்றாகும்.

image_a6a7302274.jpg

147 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட விசாலமான தாவரவியல் பூங்கா என்பதுடன், பலவகையான ஓர்க்கிட் மலர்களையும், 4000 க்கும் மேற்பட்ட தாவரயினங்களையும், குறிப்பாக ஓர்க்கிட், மருத்துவச் செடிகள் மற்றும் பாம் மரங்களையும் இங்கு அதிகளவில் காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

image_73ca2459b6.jpg

இத்தாவரவியல் பூங்காவானது, கொழும்பு – கொம்பனித்தெரு மற்றும் களுத்துறை ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தாவரங்களை நட்டு பராமரிக்கப்பட்டதையடுத்து, 1843 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

image_90afadfb61.jpg

மேலும் 1912 ஆம் ஆண்டில் இப்பூங்காவானது, விவசாயத்துறை திணைக்களத்தின் கீழ் மீள நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வழகிய விசாலமானத் தாவரவியல் பூங்காவினைப் பார்வையிட வரும் மக்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 2 மில்லியனாக உள்ளது எனக் கணக்கெடுப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

image_2cd8019c26.jpg

கண்ணைக் கவரும் பல வர்ணங்களைக் கொண்ட ஓர்க்கிட் மலர்களுக்கு பெயர்ப்போன, பேராதெனிய தாவரவியல் பூங்காவினைக் கண்டு இரசிக்க வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இங்கு அகரித்த வண்ணமே உள்ளது. இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களில் “பேராதெனிய தாவரவியல் பூங்கா” வும் ஒன்றாகும்.

image_f64a44cc45.jpg

  •  

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
மின்னேரியா தேசியப் பூங்கா
 

image_e41c2174a1.jpgமின்னேரியா தேசியப் பூங்காவானது, இலங்கையில் பொலன்னறுவை மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. இது காட்டு யானைகளின் கூட்டத்தினைப் பார்வையிடும், ஒரு சுற்றுலாத்துறைப் பகுதியாக பிரசித்திப் பெற்றுள்ளமையினால், இங்கு வருடந்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பெருமளவாக, மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை இப்பூங்காவை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிடுகின்றனர்.

image_d95881da5c.jpg

உலகிலேயே ஆசிய யானைகள் கூடும் பெரியளவிலான இடம் மின்னேரியாப் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. கோடை காலங்களில் வெளியிடங்களில் இருந்தும் சில யானைக்கூட்டங்கள் உணவு தேடி வந்து போகும் இடமாகவும் மின்னேரியாப் பூங்கா விளங்குகின்றது. இங்கு 300 க்கும் அதிகமான யானைகளை, ஒரே தடவையில்  பார்வையிடும் வாய்ப்பு  கிடைக்கின்றமையினாலேயே, சுற்றுலாப் பயணிகளை இப்பூங்கா அதிகமாகக் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

image_53065f9e12.jpg

மேலும் இங்கு 170 வகையான பறவையினங்களையும், 24 வகையானப் பாலூட்டிகளையும், மற்றும் 25 வகையான ஊர்வன ஜீவராசிகளையும் கண்டுகளிக்க முடியும். இத்தகைய சிறப்பினைக் கொண்டிருப்பதினாலேயே, சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுதோறும் இங்கு அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

image_066789b35b.jpg

http://www.tamilmirror.lk/

Link to post
Share on other sites
கொழும்பு தேசிய நூதனசாலை
 
 

image_88a93b073b.jpgகொழும்பிற்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயமாகப் பார்வையிடும் இடங்களில் கொழும்பு தேசிய நூதனசாலையும் ஒன்றாகும். இதுவே இலங்கையின் மிகப் பெரிய நூதனசாலையாக விளங்குகின்றது. இலங்கையின் வரலாற்றை அறிந்துகொள்வதற்கும் ஏற்ற ஒரு இடமாக இந்நூதனசாலை திகழ்கின்றது.

image_5181e62c55.jpg

இது 1877 ஆம் ஆண்டு கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டது. இலங்கையின் பண்டைய கால வரலாறுகள் மற்றும் ஆதிகால கலை, கலாசாரங்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பினையும் இங்கு பெற்றுகொள்ள முடியும்.

image_e98ddb2ce2.jpg

மிகப்பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்நூதனசாலையின் உள்ளே நுழைகையில், ஒவ்வொரு விசாலமான காட்சியறை மண்டபங்களிலும் உள்ள பழம் பொருட்கள், இலங்கையின் வரலாற்றை ஒரு நிமிடம் நம் கண் முன்னே கொண்டு வரும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நூதனசாலையின் பிரம்மாண்ட தோற்ற அமைப்பே, பார்வையாளர்களை அடிக்கடி இங்கு வருகைத்தர வைக்கும் என்றால் மிகையாகாது.

image_bcaa508db3.jpg

image_209bc5568a.jpg

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
அதிசயமான ஏழு வெந்நீரூற்றுக்கள்
 
 

image_5186c941a0.jpgஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் அமையப் பெற்றுள்ளதே, இந்த  ஏழு வெந்நீரூற்றுக்கள் ஆகும். சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும் இடங்களில் இவையும் பிரதான இடத்தை பிடித்துள்ளன என்றே கூறவேண்டும். இவற்றின் சிறப்பம்சம் யாதெனில், ஒவ்வொரு கிணறுகளும்  வெவ்வேறு வெப்பநிலையுடன் விளங்குவதோடு எப்பொழுதுமே இவற்றில் நீர் வற்றுவதே இல்லை. 

image_ead814e5f0.jpg

இத்தகைய சிறப்புக்களைகொண்டு விளங்குகின்றமையினாலேயே,  இப்பகுதியை உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட தவறுவதே இல்லை. இந்த வெந்நீரூற்றுக்களை பார்வையிடவும் மற்றும் இவற்றில் நீராடுவதற்கும் கட்டணமுறைப்படி அனுமதிகள் வழங்கப்படுகின்றன.

image_f0d059a6e4.jpg

மேலும் இந்த ஏழு கிணறுகளிலும் நீராடுவதினால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளுர்வாசி மக்களிடையே நிலவி வருகின்றது. ஒவ்வொரு கிணறுகளும் 3 மற்றும் 4 அடி ஆழம் உடையவையாகும். அத்துடன் இப்பகுதியை சூழ விகாரையும் கோயிலும் காணப்படுவதினால், இங்கு அமைதி  கட்டாயமாகப் பேணப்படுகின்றது. ஒவ்வொருவரும் நிச்சயமாக சென்று பார்வையிட வேண்டிய இடங்களில் இந்த ஏழு வெந்நீர் கிணறுகளும் முக்கியமானவையாகும்.

image_6a3d3ff6d2.jpg

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
அழியாப் புகழைக் கொண்ட சிகிரியா
 

image_b1bbc785e5.jpgசுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களில், இலங்கையில் அமையப் பெற்றுள்ள 'சிகிரியா' மலைக்குன்று தனி இடத்தை வகிக்கின்றது. சுமார் 1500 வருடங்கள் பழைமை வாய்ந்த இம்மலைக்குன்றானது, கிட்டத்தட்ட 200 மீற்றர் உயரமானதாகும். இதன் பின்னணியில் இலங்கையின் அரச வரலாறு சம்பந்தப்பட்ட கதை ஒன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்;.

இலங்கையில் வாழ்ந்த காசியப்ப என்ற மன்னனால், இம்மலைக்குன்று வடிவமைக்கப்பட்டு ஆட்சி செலுத்தப்பட்டு வந்த இடமாகும். இதன் வடிவமைப்பானது தூரத்தில் இருந்து நோக்கும் பொழுது சிங்கம் ஒன்று படுத்திருப்பது போல காட்சி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளமையானது, பார்ப்பவர்களை பிரம்மிப்பூட்டுகிறது. இதனை 'சிங்க குகை' என்றும் அழைக்கும் வழக்கம் மக்களிடையே காணப்படுகின்றது.

மலைக்குன்றின் வெளிப்பகுதியில் மட்டுமல்லாது, உட்கட்டமைப்புக்களும் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். உட்பகுதியில் காணப்படுகின்ற செதுக்கல் மற்றும் சித்திர வேலைப்பாடுகள் பார்வையாளர்களை வசீகரிக்கும் விதத்தில் உள்ளன. பிரதானமாக சுவரோவியங்கள் தனி இடத்தை பிடிக்கின்றன. இவ்வோவியங்கள் 'அஜந்தா' வகையை சார்ந்தனவாகவும், இன்று வரை மங்காத நிலையில் காணப்படுகின்றமையும் அக்கால கலையின் திறனை பறைசாட்டுகின்றன.

இத்தகைய கலையம்சமும் சிறப்பம்சமும் பொருந்திய சிகிரியா மலைக்குன்றினை காண வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. முக்கியமாக சென்று பார்வையிடும் இடங்களில் சிகிரியாவும் பிரதான இடத்தைப்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
பென்தொட்ட விரிகுடா
 
 

image_97f5cedcc9.jpgஇலங்கையின் தலைநகரான கொழும்பின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள அழகிய கடற்கரையே பென்தொட்ட விரிகுடா ஆகும். இங்குள்ள பென்தொட்ட பாலம் மற்றும் பென்தொட்ட விரிகுடா ஆகிய இரண்டையும் ஒருசேர பார்க்கும் பொழுது, அழகிய இரட்டை கடற்கரையை காண்பது போல காட்சியளிக்கும்.

image_3cb3e154ac.jpg

நவம்பர் தொடக்கம் ஏப்ரல் மாதங்களில் இங்கு ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இக்காலப் பகுதியிலேயே இவ்விரிகுடாவானது, மிக அமைதியான நீரோட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் இக்கடற்கரையை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புகின்றனர்.

image_0cefafb112.jpg

மேலும் இவ்விரிகுடாவில் டைவிங் (Diving), படகோட்டம், நீர்ச் சறுக்கு (Water-sking) ஆகிய நீர் விளையாட்டுக்களில், இங்கு வருகை தருவோர் ஈடுபவதினை காணக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும்.

image_329ab5333d.jpg

பென்தொட்ட விரிகுடாவானது மிக அதிகமாக வெளியூர் மக்களையே கவர்ந்துள்ளது. இங்கு வருகை தரும் பயணிகளின் கணக்கெடுப்பில் அதிகமானளவு வெளிநாட்டு மக்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக விடுதிகள் மற்றும் வியாபார நிலையங்கள்  என்பன இவ்விரிகுடாவிற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

image_90083a173d.jpg

http://www.tamilmirror.lk/

Link to post
Share on other sites
சுற்றுலா பயணிகளை கவர்ந்த காலி
 
 

image_50a26ee2d8.jpgஇலங்கை நீர்வீழ்ச்சி, ஆறுகள், காடுகள் என பல்வேறு இயற்கை வளங்கள் நிரம்பிய ஓர் நாடாகும். இதனால் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கையை நோக்கி படையெடுத்து வருகின்றமை அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.

இந்தவகையில் இலங்கையிலுள்ள காலி மாவட்டம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த ஒரு மாவட்டமாக திகழ்கின்றது.

இதற்கு முக்கிய காரணம் ஏனைய பகுதிகளைப்போல ஒவ்வொரு சுற்றுலா தளத்திற்கும் வேறு வேறு பயணத்தை மேற்கொண்டு நெடுந்தூரம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலான புராதன கட்டிடங்கள் மற்றும் கடற்கரையும் பழைய காலிக்கோட்டையுடன் இணைந்திருப்பதால், இலகுவாக பார்வையிட கூடியதாக இருக்கின்றது

இப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப்பிரயாணிகள் காலிக் கோட்டை, காலி தேசிய அருங்காட்சியகம் , தேசிய கடல்சார் அருங்காட்சியகம் , ஆலயங்கள் என்பவற்றை பார்வையிட முடியும்.

சுற்றுலாப்பிரயாணிகள் ஓய்வு எடுப்பதற்கு ஏற்ற சகல வசதிகளுடன் கூடிய ஹோட்டல்களும் இப்பகுதிகளில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

image_071a690b7b.jpgimage_eaa825ea03.jpgimage_bbab39fe45.jpg

http://www.tamilmirror.lk/

Link to post
Share on other sites
வீரம்மிக்க யாழ்ப்பாண கோட்டை
 

 

fo9.jpg

கோட்டை என்பது ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் ஆண்டவர்களின் பலத்தினை நிரூபிக்கும் கண்ணாடியாக திகழ்வதென்ற பிரதிபலிப்பு இருக்கிறது. உண்மையிலே தொழில்நுட்ப வளர்ச்சிகள் குன்றிய காலத்திலேயே எப்பேர்ப்பட்ட கோட்டைகளை அன்றைய ஆட்சியாளர்கள் கட்டிவைத்திருக்கிறார்கள் என்னும்போது வியப்பு நம்மை தொற்றிக்கொள்கிறது.

அந்தவகையில் யாழ்ப்பாண கோட்டை ஆசியாவிலேயே சிறந்ததொரு கோட்டை என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அன்றை காலத்திலேயே இன்றைய அமெரிக்க 'பென்டகன்' போன்ற அமைப்பில் இந்த கோட்டையை உருவாக்கியிருக்கிறார்கள். இது மிகவும் வலிமைமிக்க கம்பீரமான கோட்டையாக திகழ்கிறது.

இன்றைய சூழ்நிலையில் இந்த சிதைந்த கோட்டை பொதுமக்களின் சுற்றுலா தலமாக மாறியிருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த யாழ். கோட்டையினை கண்டு பிரமித்து வருகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் இன்று காணப்படுகின்ற கோட்டை ஒல்லாந்தரினால் மீளமைப்பு செய்யப்பட்டதாகும்.

முஸ்லிம் வியாபாரிகளின் பண்டகசாலையாக இக்கோட்டை ஆரம்பத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் போர்த்துக்கேயர் இந்த பண்டகசாலையை நாற்சதுரக் கோட்டையாக்கியுள்ளனர். 1658இல் போத்துக்கேயர்கள் இந்த கோட்டையை அமைத்து 'யாழ்ப்பாணப் பட்டணம்' என்று பெயர் சூட்டியுள்ளனர். அதன்பின்னர் டச்சுக்காரர்கள் இந்த கோட்டையை சுற்றிவளைத்து போத்துகேயரிடமிருந்து கைப்பற்றி 1680ஆம் ஆண்டளவில் புதியவடிவில் யாழ்ப்பாண கோட்டையை அமைத்து 1795ஆம் ஆண்டுவரை அதாவது ஆங்கிலேயரின் வருகை வரை பாதுகாத்தனர். ஆங்கிலேயேர் இக்கோட்டையை கைப்பற்றியதன் பின்னர் 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடையும்வரை யாழ். கோட்டை ஆங்கிலேயரின் கைகளிலேயே இருந்துள்ளது. அதன் பின்னர் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும் சிலகாலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும் மாறிமாறி இக்கோட்டை இருந்தமையால் இன்று சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது.

ஆரம்பத்தில் ஒல்லாந்தரால் புனரமைக்கப்பட்ட யாழ். கோட்டை, ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டது. இதனை அவர்கள் 1680மே; ஆண்டில் கட்டி முடித்தனர். கோட்டையின் சுற்றுப்புறக் கட்டமைப்பு 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டு 1792ஆம் ஆண்டில் நிறைவுற்றது.

யாழ். கோட்டை ஐந்து கொத்தளங்களைக் கொண்டுள்ளது. கடற்புறமாக இரண்டு கொத்தளங்களையும் நிலப்பக்கமாக மூன்றையும் கொண்டுள்ளது. இந்த கோட்டை 22 ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்டதாகும். உள்கோட்டையின் சுற்றளவு 6,300 அடிகளாகும். கொத்தளத்தின் ஒரு பக்க நீளம் சராசரியாக 340 அடிகளாகும். யாழ்ப்பாணக் கோட்டை மதிலின் உச்சி 20 அடி அகலமானது. அடித்தளத்தில் 40 அடி அகலமானது. கோட்டைச் சுவர் 30 அடி உயரமானது. கோட்டையைச் சுற்நி 132 அடி அகலமான அகழியுள்ளது. அகழிச் சுவரோடு சின்னக்கோட்டைகள் அமைந்துள்ளன. இவை முருகைக் கற்களினால் மூடப்பட்ட கூரைகளைக் கொண்டுள்ளன. ஒல்லாந்தரினால் அமைக்கப்பட்ட கோட்டைகள் யாவும் முருகைக் கற்களினால் அமைக்கப்பட்டவை என்பது சிறப்பானதாகும்.

கோட்டைக்குள் கவர்னர் பங்களாஇ ராணி மாளிகைஇ சிறைச்சாலை என்பன கட்டப்பட்டன. பிற்காலத்தில் ராணி மாளிகையில் சிறைக் கைதிகள் விசாரிக்கப்பட்டார்கள்.

நீர்ப்பாதைஇ நிலப்பாதை என யாழ். கோட்டைக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. நீர்ப்பாதை கடலோரமாக அமைந்திருந்தது. நிலவழிப்பாதை தொங்கு பாலத்தினால் இணைக்கப்பட்ட பிரதான வாயிற்புறமாகும்.

அன்றைய கட்டடகலை வல்லுனர்களின் கைவண்ணத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் யாழ். கோட்டையின் இன்றைய சிதைவுகள்கூட பொதுமக்களின் பார்வைக்கு அதிசயமாகவே திகழ்கின்றது. இது வரலாற்று பொக்கிஷம். கண்டிப்பாக ஒவ்வொரு குடிமகனும் இந்த யாழ். கோட்டையின் கம்பீரத்தினை கண்டு உளம் மகிழ்வதோடு அன்றைய வீரர்களின் சாகசங்களையும் மனதில் நிறுத்த வேண்டும்.

http://www.tamilmirror.lk/

Link to post
Share on other sites
Wijaya Holiday Resort - Kiriella
 

 

ho8(2).jpg

kk3.jpg

உழைத்து களைத்த உள்ளங்களுக்கு ஓய்வு என்பது இன்றியமையாதது. அந்த ஓய்வு எங்கு கிடைக்கும் என ஏங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் அநேகமாக அமைதியான, அழகான இடங்களையே நாடுவர்.

அப்படி அமைதியான இடத்தில் களைப்பாற நீங்கள் விரும்பினால், கிரியெல்ல விஜயா ஹொலிடே ரெஸோர்ட்டுக்கு செல்லுங்கள். அழகான, அமைதியான இடத்தில் இந்த ஹோட்டல் அமைந்திருப்பது மிகவும் சிறப்பானது.

kk4.jpgசிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் மகிழ்வுடன் இருக்கக்கூடிய ஓர் இடம்தான் இது. இங்கு இயற்கையின் கைவண்ணம் விரிந்து காணப்படுகிறது. கொழும்பிலிருந்து சுமார் 60 கிலோமீற்றர் தொலைவில் இந்த ஹோட்டல் அமைந்திருக்கிறது. பாணந்துறையிலிருந்து இரத்தினபுரிக்கு செல்லும் வழியில் கிரியெல்ல விஜயா ரெஸோர்ட் அமைந்திருக்கிறது.

சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இந்த இயற்கை அழகு கொஞ்சும் இந்த இடம் அமைந்திருக்கிறது. பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும் இவ்விடத்திற்கு செல்பவர்களின் மனம் நிச்சயம் குளிர்மையடையும்.

இயற்கையான அருவி பாய்ந்தோடும் அழகிய இடத்தினை குளிப்பதற்கு ஏற்றால்போல் வடிவமைத்திருக்கிறார்கள். அவரவர் விரும்பும் ஆழங்களில் குளிக்கக்கூடிய வசதியும் இங்கு இருக்கிறது. சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள்வரை தாராளமாக பயமின்றி இந்த இயற்கை அருவியில் குளித்து மகிழலாம். அத்தோடு செயற்கையான நீச்சல்தடாகமும் அங்கிருக்கிறது.

இவைதவிர, சுமார் 2 கிலோமீற்றர் காட்டு பிரதேசத்தில் அழகிய மரங்களையும் உயிரினங்களையும் ரசித்துக்கொண்டே மனங்குளிர நடைபோட வசதியாக ஏற்பாடுகளையும் விஜய ஹொலிடே ரெஸோர்ட் நிர்வாகத்தினர் செய்துகொடுக்கிறார்கள். காட்டு மரங்கள், உயிரினங்கள் பற்றிய மேலதிக விபரங்களை பெறக்கூடிய வசதியும் இங்கு இருக்கிறது.

அத்தோடு கிரிக்கெட், கால்பந்தாட்டம், பட்மின்டன் போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபடக்கூடிய வசதிகள் இங்கிருக்கின்றமை சிறப்பம்சமாகும். திருமண வைபவம் மற்றும் உற்சவங்களை நடத்தக்கூடிய மண்டப வசதியும் இங்கிருக்கிறது.

பகல் பொழுதினை இங்கு செலவிடுவதற்கு ஒருவருக்கு 1500 ரூபாய் அறவிடுகிறார்கள். இதில் காலை தேநீர், மதிய உணவு, மாலை தேநீர் என அனைத்து உள்ளடங்குவதோடு இயற்கை அழகினை அனுபவிப்பதற்கும் ஏற்பாடுகளை செய்துகொடுக்கிறார்கள். 12 வயதுக்கு குறைந்தவர்களுக்கு அரவாசி கட்டணம் அறவிடப்படுகிறது. 25 பேருக்கு மேல், இவ்விடத்தில் பகல்பொழுதினை செலவிட விரும்பினால் ஓர் அறையினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இல்லையேல் மேலதிகமாக 2500 ரூபாய் செலுத்தி அறையினை பெற்றுக்கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல் இந்த ஹோட்டலில் எங்குமில்லாதவிதத்தில் மாணிக்க கற்கள் அகழும் இடமும் இருக்கிறது. இதனை இங்கு செல்பவர்கள் பார்த்து அதுபற்றிய விபரங்களை அறிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கின்றமை சிறப்பானதாகும். இப்படிப்பட்ட பல இயற்கை அழகுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள விஜயா ரெஸோர்டின் தலைவராக பின்சிறி விஜயபால இருக்கிறார். பொது முகாமையாளராக சுமுது குணவர்தன விளங்குகிறார்.

விஜயா ஹொலிடே ரெஸோர்ட்டினைப்பற்றிய மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள விரும்பினால் www.wijayaholidayresort.com என்னும் இணைய முகவரியினை பார்வையிடலாம். இல்லையேல் 045 2265520 என்னும் தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ளலாம்.

நிச்சயமாக இந்த அமைதியான, அழகான விஜயா ஹொலிடே ரெஸோர்ட்டினை ஒவ்வொருவரும் நேரில் சென்று பார்த்தால்தான் அதன் அழகிய வடிவம் புரியும். Pix: Priyantha Wickrama Arachchi     Video: Waruna Wanniarachi

jm1.jpg

ho7(3).jpg

ho6(4).jpg

ho5(5).jpg

ho4(4).jpg

ho3(6).jpg

ho2(6).jpg

ho1(5).jpg

kk1(2).jpg

kk2(1).jpg

ho9(2).jpg

http://www.tamilmirror.lk/

Link to post
Share on other sites
கண்டி - தலதா மாளிகை
 
 

image_0475e9ad95.jpgஇலங்கையின் கண்டி மாவட்டத்தில் அமையபெற்றுள்ள மிகப் பிரம்மாண்டமானதும், பௌத்தர்களின் புனித இடமுமான தலதா மாளிகை, இலங்கையின் பிரசித்தி பெற்ற விகாரை ஆகும்.

image_05ecb7ccc0.jpg

புத்தபகவானின் புனித தந்தத்தாதுவானது, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, இவ்விகாரையில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்புனித தந்தத்தாதுவை வழிபட வருகை தரும் மக்கள் ஏராளமாகும். அதுமட்டுமின்றி வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் இங்கு அதிகமாக வருகை தந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

image_2ef183d7df.jpg

உள் நுழைகையில் பிரதான மண்டபத்தின், பெரியளவிலானத் தூண்கள் இரு பக்கங்களிலும் காட்சியளிப்பதானது, பார்ப்பவர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளன. சற்று உள்ளே செல்கையில் காணப்படும் சிறிய மண்டபமானது, பாரம்பரிய இசை வாத்தியங்கள் அனைத்தையும் கொண்ட மண்டபமாக விளங்குகின்றது. இவை இவ்விகாரையின் அழகை மேலும் மெருகூட்டும் வகையில் காணப்படுகின்றன.

image_5a06c8a4b3.jpg

இங்கு வருடா வருடம் பௌத்த மக்களினால் “எசல பெரஹெர” வெகுவிமர்சையாக, மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் இதில் கலந்துகொள்வது வழமையாகும்.

image_5185e244de.jpg

கண்டி தலதா மாளிகையின் வரலாற்று சிறப்புக்கள் காரணமாக, “உலகின் பாரம்பரிய நகரம் கண்டி” என அறிவிக்கப்பட்டுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் செம்புவத்த ஏரி
 
 

image_4c8f4d894a.jpgஇலங்கையில் மத்திய மாகாணத்திலுள்ள மாத்தளை மாவட்டத்தில் காணப்படும் செம்புவத்த ஏரி, சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் ஓர் இடமாக அமைந்துள்ளது.

இந்த ஏரி மாத்தளை, எல்கடுவ தேயிலைத் தோட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ளது. முதலில் ஏரிக்குள் நுழையும் போது அங்குள்ள தேயிலைச் தொழிற்சாலையின் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், இந்த ஏரி ஆழமாக இருப்பதன் காரணமாக, ஒருசில பகுதிகளில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், செயற்கை நீர்த் தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஓய்வெடுக்கச் சிறிய குடில்கள் ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளதுடன், பல கடைகளும் காணப்படுகின்றன.

குறித்த ஏரியைப் பார்வையிடுவதற்கு, உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மாத்திரமின்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.

image_016d98fc00.jpgimage_94df92348f.jpgimage_a022c68601.jpgimage_d2613b9ca1.jpgimage_326034f0af.jpgimage_314795a816.jpg

  •  

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
தென்மராட்சியின் அழகிய கடல்நீரேரி
 
 

article_1444817537-IMG_1733.JPG

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், தென்மராட்சியின் தென்திசையில் இருக்கும் ஒரு சிறிய கடல்நீரேரி. இதன் எல்லைகளாக சாவகச்சேரி, கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, ஆனையிறவு, பரந்தன், பூநகரி, சங்குப்பிட்டி, தனங்கிளப்பு ஆகிய ஊர்கள் உள்ளன. இக்கடல் நீரேரியின் துறைமுகமாக கச்சாய் உள்ளது.

இக்கடல்நீரேரி 'சேத்துக்கடல்' எனவும் அழைக்கப்படுகிறது. இதிலிருந்து சங்குப்பிட்டி ஊடாக யாழ். கடல் நீரேரிக்குச் செல்லலாம். அங்கிருந்து ஆழ்கடலுக்குச் செல்லக்கூடிய வழியும் இந்த கடல்நீரேரியில் காணப்படுகின்றன. இங்கு கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, பூநகரி, போன்ற இடங்களைச் சேந்தவர்கள் மீன் பிடிப்பில் ஈடுபடுகிறார்கள்.

யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலை ஆனையிறவுப் பகுதியில் பூட்டப்பட்ட பின், இந்த கடல் நீரேரியே தென் இலங்கைக்கான போக்குவரத்துப் பாதையாக அமைந்திருந்தது. ஈழப்போராட்ட வரலாற்றில் இக்கடல்நீரேரி பெரும் பங்கு வகித்ததேன்றே சொல்லலாம். 1990 இருந்து 1995 வரை யாழ்ப்பாணத்து மக்கள் தென்னிலங்கை செல்வது என்றால் இதன் ஊடாகத்தான் பூநகரி நல்லூர் என்னும் இடத்துக்கு சென்று, அதில் இருந்து பரந்தன் வழியாக ஏ9 நெடுஞ்சாலையை அடைந்து தென்னிலங்கைக்குச் செல்வார்கள்.

இந்தக் கடல் நீரேரியின் அதிகூடிய ஆழம் நான்கு மீட்டர்கள். இப்பகுதி 'கிளாலி' என்று அழைக்கப்படும். கச்சாய் பகுதியில் இருக்கும் இந்த கடல் நீரேரியின் ஆழம் பொதுவாக ஒரு மீட்டர் இருக்கும்.

கச்சாய் துறைமுகத்திலிருந்த நான்கு கிலோமீற்றர் தென்கிழக்கு திசை, அதிலிருந்து நான்கு கிலோமீற்றர் தெற்கு திசை, அதிலிருந்து சங்குப்பிட்டி ஊடாக தென்மேற்கு திசை பதினெட்டு கிலோமீற்றர் சென்றால் பாக்குநீரினையில் இணையலாம்.

article_1444817548-IMG_1745.JPGarticle_1444817557-IMG_1759.JPGarticle_1444817581-IMG_1800.JPG

http://www.tamilmirror.lk/

Link to post
Share on other sites
“இசுருமுனிய காதலர் ஜோடி”
 
 

image_85de85d0b5.jpgஅனுராதப்புர மாவட்டத்தில் அமையபெற்ற வெஸ்ஸகிரி விகாரையே, தற்பொழுது “ இசுருமுனிய விகாரை” (Isurumuniya Rock Temple) என அழைக்கப்படுகின்றது. இந்த இசுருமுனிய விகாரையானது, இங்கு இருக்கும் செதுக்கல் கல்லொன்றால் பிரசித்திபெற்று விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

image_713b1fdf17.jpg

இக்கல் “இசுருமுனிய காதலர் ஜோடி” என பொதுமக்களால் பொதுவாக அழைக்கப்படுகின்றது. இதில் உள்ள ஆணினதும் பெண்ணினதும் வடிவமானது இந்துக்களால் சிவ பார்வதி வடிவம் என்றும், பௌத்தர்களால் இலங்கையை ஆட்சி செய்த, வரலாறு போற்றும் மன்னனான துட்டகைமுனுவின் மகனும் அவனது மனைவியும் என நம்பப்படுகின்றது.

image_8463bb2c66.jpg

மேலும் இங்கு காணப்படும் இன்னுமொரு கல்லானது, துட்டகைமுனு மன்னனின் நீதிமன்ற காட்சியை சித்தரிக்கும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட இரு கற்களும் 8 ஆம் நூற்றாண்டுக்குரியவை எனக் கருதப்படுகின்றன.

image_741e6643b7.jpg

அத்துடன் இவ்விகாரையானது, மலையின் உச்சியில் ஒரே பாறையால் செதுக்கி அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மலை விகாரையின் நுழைவாயிலில் குளமொன்று காணப்படுவதுடன், யானைகள் நீராடுவது போன்ற காட்சிகளுடனான செதுக்கல்களும் மற்றும் குதிரை தலையுடனான மனிதனின் உருவமும் காணப்படுகின்றமை இவ்விகாரையின் கலையம்சத்தை மேலும் வெளிகாட்டி நிற்கின்றது.

image_cd5a9f2e23.jpg

வரலாற்று சிறப்புமிக்க இந்த இசுருமுனிய விகாரையை உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக சென்று பார்வையிடுவது குறிப்பிடத்தக்கதாகும்.

image_e0f1792f5b.jpg

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
கே.கே.எஸ்.ஐ நாடும் சுற்றுலாப்பயணிகள்
 

article_1438780904-BULL%20PIC%20(2).JPG

-குணசேகரன் சுரேன்

உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள காங்கேசன்துறை, தல்செவன சுற்றுலா விடுதி அமைந்துள்ள கடற்கரைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.  

யாழ்ப்பாணத்தில் முக்கிய இரண்டு கடற்கரைகளாக விளங்கும் கசூரினா மற்றும் சாட்டி ஆகியன காணப்படுகின்ற போதிலும், காங்கேசன்துறைக் கடற்கரையின் அழகு மற்றும் கடலின் தெளிவு ஆகியவை சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவர்ந்துள்ளமையால் அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாகச் செல்கின்றனர்.

வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதை அவதானிக்க முடிகின்றது. குடும்பமாகச் சென்று கடற்கரையில் பொழுதைக் கழிப்பதையும் விருந்தினர் விடுதியில் உணவருந்துவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

article_1438780915-DSCF7043.JPG

article_1438780924-DSCF7044.JPG

article_1438780935-BULL%20PIC%20(1).JPG

http://www.tamilmirror.lk/

Link to post
Share on other sites
 
 
 

இதுவரை எவரும் பார்த்திராத சில அரிய ஒளிப்படங்கள்!!

காரைநகர் கடற்கோட்டையின் இதுவரை எவரும் பார்த்திராத சில ஒளிப்படங்கள் முகநூலில் வைரலாகியுள்ளது.

15541593_1835651630039368_3733109913799415541295_1835651116706086_5114510463186915541234_1835651176706080_8482366835079115492586_1835651030039428_8761742694999415492170_1835651213372743_2108482907000715492148_1835651100039421_8989712699987115420761_1835650970039434_3390302947949515400586_1835651946706003_1891236179800215391137_1835651620039369_7297091438411615380275_1835651140039417_8853234402953315284183_1835650953372769_2348425535320815541901_1835651250039406_91051391463624

http://newuthayan.com/story/85364.html

Link to post
Share on other sites
யானைகளைப் பார்க்க வேண்டுமா?: கவுடுல்ல தேசிய பூங்காவுக்கு வாருங்கள்
 
 

image_4d1fec8f3b.jpg

-ரொமேஸ் மதுசங்க

காட்டு யானைகளைப் பார்வையிடும் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றாகக் காணப்படும் கவுடுல்ல தேசிய வனவிலங்குப் பூங்கா, இந்நாட்களில், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பிரயாணிகளால் நிரம்பியுள்ளது.

சுமார் 6,200 ஹெக்டேயர் நிலப்பரப்பைக் கொண்ட இந்த வனவிலங்குப் பூங்காவினால், இவ்வருடத்தில் (2017) மாத்திரம், 2,560 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதென, அதன் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஜே.கே.ஹேரத் தெரிவித்தார்.

8,300 ஹெக்டேயர் நிலப்பரப்பைக் கொண்ட கவுடுல்ல மின்னேரிய நுழைவும் மேலும் 8,300 ஹெக்டேயர் நிலப்பரப்கைக் கொண்ட மின்னேரியா தேசிய வனவிலங்குப் பூங்காவும், 9,100 ஹெக்டேயர் நிலப்பரப்பைக் கொண்ட சோமாவதிய தேசிய வனவிலங்குப் பூங்கா ஆகிய வனவிலங்குப் பூங்காவைச் சுற்றி அமைந்துள்ளதால், கவுடுல்ல தேசிய வனவிலங்குப் பூங்காவுக்கான உல்லாசப் பயணிகளின் வருகை மேலும் மேலும் அதிகரிக்கின்றது.

விசாலமான முறையில் அமைந்துள்ள சோமாவதிய தேசிய வனவிலங்குப் பூங்கா காரணமாக, நாளொன்றில் 500 முதல் 600 வரையான உல்லாசப் பயணிகள், காட்டு யானைகளைக் கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் கிட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

image_06b6460832.jpgimage_ec15b83288.jpgimage_24a5e57185.jpgimage_949bbf3fdf.jpgimage_a4c156b5ae.jpgimage_427436c8b8.jpgimage_af71c66d01.jpg

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
சவுக்கு மரக்காடு...
 
CIMG0003.jpg
எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலந்தையடி தொடக்கம் ஆலங்குடா வரையிலான கடற்கரைப்பகுதியில் பரந்து காணப்படும் சவுக்குமரக்காடு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றது.

இவ் இடத்திற்கு வருபவர்கள் கடலில் நீராடுவதுடன் இவ் சவுக்கு மரத்தோட்டத்திற்குள் அமர்ந்து உணவு உண்ணும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் காணப்படும் சுற்றுலாத்துறையுடனான ஹோட்டல்களின் எல்லைப்பகுதிகளிலும் இச்சவுக்குமரம் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது.
CIMG0009.jpg
CIMG0021.jpg
CIMG0027.jpg
CIMG0036(1).jpg
CIMG0036.jpg
 
 
 
வெங்காயத்தாமரை
 

article_1429251106-a.JPG

–வடிவேல் சக்திவேல்  

வெங்காயத்தாமரை என்று அழைக்கப்படுகின்ற நீர்வாழ் தாவரம் மட்டக்களப்பு, பெரியபோரதீவிலுள்ள  பெரிய குளத்தில்  பூத்துக்குலுங்கிக் காணப்படுகின்றது. தற்போது இத்தாவரம் பூத்துக்குலுங்கி இக்குளத்துக்கு அழகு சேர்க்கின்றது.

article_1429251120-b.JPG

article_1429251137-c.JPG

article_1429251156-d.JPG

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
மிஹிந்தலை
 

image_3f6876df6e.jpg

 

அனுராதப்புர மாவட்டத்தில் உள்ள மிஹிந்தலை மலையானது, பௌத்த மதத்தவர்களால் பெரிதும் போற்றப்படும் உன்னதமான இடமொன்றாகும். அத்துடன் பௌத்த துறவிகளின் வழிபாட்டிற்குரிய இடமாகவும் இது விளங்குகின்றது.

image_4d18a77ab7.jpg

 

இதனை சூழ 68 குகை வீடுகள், பௌத்தத் துறவிகளுக்கென அமைக்கப்பட்டதாகவும் அத்துடன் அரசர் சேனாவினால் மருத்தவமனையொன்றும் இப்பகுதியில் அமைக்கப்பட்டதாக வரலாற்று மூலாதாரங்கள் தெரிவிக்கின்றன.

image_e412e003bf.jpg

 

இப்பழைமை வாய்ந்த மருத்துவமனை மற்றும் துறவிகளுக்கான மடங்களுக்கும் அத்துடன் மிஹிந்தலை மலைத் தொடருக்குமிடையில் எல்லை சுவர் ஒன்றும் காணப்படுகின்றது. துறவிகளின் மடத்தின் நுழைவாயிலில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய படி வரிசைகள், காவலாளி உருவங்கள் என்பன செதுக்கப்பட்டு காணப்படுகின்றன.

image_9754cebe18.jpg

 

மிஹிந்தலை மலையின் உச்சிக்குச் சென்று பௌத்தத் துறவிகள் தியானங்களில் ஈடுபடுவது வழமையாகக் காணப்பட்டு வந்தது. புத்தப்பெருமானும் இம்மலையின் உச்சியிலிருந்து தியானம் செய்து போதித்தருளினார் என வரலாறு கூறுகின்றது.

image_d02a4a1521.jpg

 

இன்றைய காலங்களில் பல சுற்றுலாப் பயணிகள் வருகைத் தரும் இடமொன்றாக இது விளங்குகின்றது. இதற்கு முக்கிய காரணம், இம்மலை உச்சியிலிருந்து மாலை வேளையில், வானத்தை பார்க்கும் பொழுது, சூரிய அஸ்தமனம் மிக அழகாகக் காட்சியளிக்கும். இதனை காண்பதற்காகவே பல சுற்றுலாப் பயணிகள் இங்கு விரைகின்றனர்.

image_0676a07de1.jpg

http://www.tamilmirror.lk/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மிஹிந்தலை மலையின் உச்சிக்குச் சென்று பௌத்தத் துறவிகள் தியானங்களில் ஈடுபடுவது வழமையாகக் காணப்பட்டு வந்தது. புத்தப்பெருமானும் இம்மலையின் உச்சியிலிருந்து தியானம் செய்து போதித்தருளினார் என வரலாறு கூறுகின்றது.

 

மிஹிந்தலை மலைக்கு வெகுகாலத்துக்கு முன் நான் போய் இருக்கிறேன். இம் மலையின் அடிவாரத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஆயிரங்கால் மண்டபம் என்று சில நூறு தூண்கள் மட்டும் இருந்தன....! இங்கே மகிந்தன் சென்று ஒளித்திருந்ததாகத்தான் நான் அறிந்திருந்தேன். சங்கமித்திரையும் சகோதரனும்தான் இலங்கைக்கு வந்திருந்திருக்கின்றார்கள். மணிமேகலை (மாதவியின் மகளாக இருக்க வேண்டும்.அவரிடம் அட்ஷய பாத்திரம் இருந்தது.) நயினாதீவுக்கு வந்ததாகவும் அறிந்திருக்கின்றேன். புத்தர் இலங்கைக்கு வந்ததே சந்தேகமாய் இருக்கு. அவர் அன்றைய காலத்தில்(அதாவது அசோகருக்கும் முற்பட்ட காலத்தில்)  இந்த பயங்கரக் காட்டுக்குள் வந்திருப்பாரா.... அன்று இங்கு வெள்ளரசும் கிடையாது ருவான் வெலிசாயாவும் கிடையாது.! ? ?

Link to post
Share on other sites
சுற்றுலாவுக்கான சொர்க்கபுரி...
 

article_1432882837-tu00.jpg

 

சுற்றுலாத்துறையில் பிரசித்தி பெற்ற இடங்களில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் அறுகம்பைப் பிரதேசமும் ஒன்றாகும். இது சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாகத் திகழ்கின்றது.

இங்கு இயற்கையாகவே அமைந்த குடா மற்றும் கடல் அலை சறுக்கல் சாகச விளையாட்டுக்கு மிகவும் பெயர் போன இடமாகத் திகழ்கின்றது. சேர்பிங் விளையாட்டுக்கு உலக தரப்படுத்தலில் அறுகம்பை 10ஆவது இடத்தை வகிக்கின்றது.

அதுமட்டுமல்லாது இப்பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் அமைந்துள்ள பூமுனை இயற்கை சரணாலயம், ஆறுகள், குளங்கள், கால்வாய்கள், மலைகள் மற்றும் புராதன சின்னங்கள் ஆகியவை காணப்படுவதுடன் சுற்றுலாப் பயணிகளுக்கான உணவகங்கள், ஹோட்டல்கள் என்பன இத்துறைக்கு சாதகமாக அமைந்துள்ளன.

ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகைதருகின்றனர். சுமார் 02 இலட்சம் வரையிலான சுற்றுலாப்பயணிகள் ஒரு வருட காலப்பகுதியில் வருகைதருவதாக இலங்கை சுற்றுலா, கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜுவ்பர் தெரிவித்தார்.

article_1432882852-tu01.jpgarticle_1432882867-tu02.jpgarticle_1432882883-tu03.jpgarticle_1432882896-tu04.jpgarticle_1432882907-tu05.jpgarticle_1432882918-tu06.jpg

http://www.tamilmirror.lk/

Link to post
Share on other sites
எகுவா பியரல் லேக் ரீசோட்
 
 
  • றிப்தி அலி
front1(1).jpg
பொல்கொட வாவி என்றால் மேல் மாகாணத்தில் தெரியாதவர்களே இல்லை. இந்த வாவி களுத்துறை மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பகுதியை உள்ளடக்கியுள்ளது.  இந்த வாவியின் ஒரு பகுதி கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் எல்லையான மொறட்டுவை பிரதேசத்தில் அமைந்துள்ளது.

இலங்கையிலுள்ள மிகப் பெரிய இயற்கை வாவி போல்கொட வாவியேயாகும். இந்த வாவியினை சுற்றி பல ஹோட்டல்களும் inside2.jpgரீசோட்களும் உள்ளன.இவற்றுக்கு மத்தியிலேயே மிக பழமை வந்த எகுவா பியரல் லேக் ரீசோட் உள்ளது. இந்த ரீசோட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் 50 சதவீதமான பரப்பு பொல்கொட வாவினை அவதானித்தவாறு உள்ளமையாகும்.

அதாவது சுமார் 24 ஏக்கர் காணியில் 1985ஆம் நிர்மாணிக்கப்பட்ட எகுவா பியரல் லேக் ரீசோட் அமைந்துள்ளது. இந்த ரீசோட்டின் 50 சதவீதமான பரப்பு போல்கொட வாவியை அவதானித்தவாறே உள்ளது.கொழும்பு நகரிலிருந்து சுமார் 40 நிமிட பயண தூரத்தில் பழைய காலி வீதியின் கொரக்கொண மொரட்டுவை எனும் பிரதேசத்தில் இயற்கை மரங்களுக்கு மத்தியில் இந்த ரீசோட் உள்ளது.

20 அறைகள், இரண்டு திருமண மண்டபம், ஒரு மாநாட்டு மண்டபம், நீச்சல் தடாகம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றினை இந்த ரீசோர்ட் கொண்டுள்ளது.இங்குள்ள அறைகளில் 10 பொதுவன அறைகளும் 10 விசேட அறைகளும் உள்ளன. விசேட அறைகளை கோட்டேஜ் என்று அழைப்பர்.way.jpg

கோட்டேஜ் வகையான அறைகள் தனித் தனியாக அமையப் பெற்றுள்ளன. அத்துடன் இந்த கோட்டேஜ் அறைகள் போல்கொட வாவியினை நோக்கி அமையப் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். புதுமணத் தம்பதிகளுக்கு ஏற்ற வகையில் இந்த கோட்டேஜ் அறைகள் விசேடமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த அறைகளில் தொலைக்காட்சி, குளிரூட்டி உள்ளிட் பல சேவைகள் உள்ளன.

இதற்கு மேலதிகமாக வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அறைகளில் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். மாலை 3.30 நண்பகல் 1.30 வரையும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என அறை நேரங்கள் இங்கு உள்ளன.இங்குள்ள பாரிய நீச்சல் தடாகத்தினையொட்டியவாறு சிறுவர்களுக்கான நீச்சல் தடாகமும் உள்ளது. இதற்கு மேலதிமாக இரண்டு திருமண மண்டபங்கள் உள்ளன. சுமார் 2,000 பேரை கொள்ளக்கூடிய வகையிலேயே இந்த இரண்டு மண்டபங்களும் உள்ளன.

இந்த மண்டபங்களில் திருமணங்கள் மற்றும் விழாக்கள் இடம்பெறுவது வழமையாகும். இங்கு திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இலவசமாக மேற்கொள்ள முடியும். புதுமணத் தம்பதிகள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்கு ஏற்ற வகையில் தோட்டமொன்று இந்த ரீசோடில் உள்ளது. இந்த தோட்டத்தில் அதிகமான புதுமணத் தம்பதிகள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

அத்துடன் 50 பேர் அமரக்கூடிய வகையிலான மாநாட்டு மண்டபமொன்றும் உள்ளது. அலுவலகங்கள் மற்றும் அமைப்புக்களின் கூட்டங்கள் பயிற்சி பட்டறைகள் இடம்பெறக்கூடிய வகையில் நவீன வசதிகளுடன் இந்த மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

menue.jpgரீசோட்டிற்கு வரும் சுற்றுல்லா பயணிகளுக்கு மேற்கத்தேய மற்றும் கீழைத்தேய உணவுகள் பறிமாற்றப்படுகின்றன. ஒரே தடவையில் 350 பேர் அமரக்கூடிய வகையில் உணவகம் அமையப் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஹலால் அங்கீகாரம் பெறப்பட்ட உணவுகளே பறிமாற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேபோன்று வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தேவையான விதத்தில் தனி நிகழ்வுகள் ஹோட்டேலில் தனியான பிரதேசத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது. இதன்போது உணவும் மதுபானமும்  வழங்கக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கள புது வருடம், கிறிஸ்மஸ் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளை கொண்டாடுவதற்கு ஏற்ற வகையிலும் அலுவலகங்களினால் மேற்கொள்ளப்படும் சுற்றுலாவிற்கு ஏற்ற வகையிலான வசதிகள் இந்த ரீசோர்ட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வாவியினை அண்டியதாக இந்த ரீசேர்ட் உள்ளமையினால் படகுப் பயணத்திற்கு இந்த ஹோட்டேல் பிரபல்யம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
inside3.jpg
இதற்கு நியாயமான கட்டணங்களே வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிடுகின்றனர். அத்துடன் குறி பார்த்து சுடும் போட்டியில் ஈடுபடுவதற்கும் இங்கு வசதிகள் உண்டு.இதற்காக விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்கள் இங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிரிக்கெட் மற்றும் வலைபந்து போட்டிகளில் ஈடுபடக்கூடிய வகையிலான மைதானமும் உள்ளது.

இதனால் குழுவாக வருகின்றவர்கள் சுற்றுப்போட்டிகளை ஏற்பாடு செய்வது வழமையாகும். அத்துடன் அலுலவகங்களிலிருந்த வருபவர்கள் கோரிக்கை விடுத்தால் தலைமைத்துவ, தீர்மானமெடுத்தல், முகாமைத்துவ முரண்பாடு, குழு உருவாக்கம் போன்றவற்றிற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

இதற்காக தொழில் வாண்மை வளவாளர்கள் இங்குள்ளதுடன் இந்த பயிற்சிகளுக்கான பிரத்தியோக வசதிகளும் இங்கு காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக ஒரு நாள் சுற்றுலா மேற்கொண்டு வருபவர்களுக்கும் விசேட பொதிகள் இங்குள்ளன.

தேவையான வசதிகளின் அடிப்படையில் பொதிகளுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். இந்த பொதியில் வரவேற்பு குளிர்பானம். பகலுணவு, மாலை நேர தேநீர் ஆகியன அடங்குகின்றன.இதற்கு ஏற்றவகையிலேயே இந்த ஹோட்டேல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலா பிரயாணிகளின் நலன் கருதி ஆயுர்வேத நிலையமொன்று இங்கு உள்ளது.

இந்த நிலையம் அண்மையிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த வைத்தியர் மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்களினாலே இந்த ஆயுர்வேத நிலையத்தில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.குறிப்பாக பஞ்சகர்ம, சிரோதாரன், சர்வங்கதார ஆயுர்தேவ சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறு பல முக்கிய அம்சங்களை கொண்ட இந்த ரீசோடிற்கு நாம் ஒரு முறை விஜயம் செய்வதில்லையா?

வார இறுதி நாட்களை கழிப்பதற்கு மிகச் சிறந்த இடமாக இந்த ரீசோர்ட் உள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் இந்த ரீசோர்டிற்கு அதிக கிராக்கியாகும்.தற்போது 2014ஆம் ஆண்டு புது வருடம் பிறந்துள்ள நிலையில் எமது வார இறுதி நாட்களை மகிழ்ச்சியாக கழிப்பதற்கு இந்த ரீசோர்டிற்கு விஜயம் செய்ய முடியுமல்லவா.

0382232960 அல்லது 0114376363 அல்லது 011522687 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் aquapearl@sltnet.lk என்ற மின்னஞ்சல் ஆகியவற்றின் ஊடாக இந்த ஹோட்டேலை தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடிவதுடன் உங்கள் பதிவுகளையும் முன்கூட்டி பதிவுசெய்துகொள்ள முடியும்.
last1.jpg
last11(1).jpg
last2.jpg
last4.jpg
last5(1).jpg
last6.jpg
last8(1).jpg
last7(1).jpg
last12(1).jpg
last9(1).jpg

http://www.tamilmirror.lk

நுவரெலியாவில்...
 
2(2925).jpg
-எஸ்.தியாகு


நுவரெலியா கலுகெலையில் எச்.எம்.எரல்ட் என்பவரின் வீட்டில் வித்தியாசமான மலர் மலர்ந்துள்ளது.

இந்த மலர் இதுவரையில் நுவரெலியாவில் மலர்ந்ததில்லை எனவும் தான் இவ்வாறான ஒரு மலரை முதன் முறையாக பார்ப்பதாகவும் இதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மலர் கூட்டத்தில் 250 தொடக்கம் 300 வரையிலான மலர்கள் மலர்ந்துள்ளன. இதனை பார்வையிடுவதற்கு பலரும் இங்கு வருகை தருகின்றனர்.
1(4842).jpg
Link to post
Share on other sites
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் புறாத் தீவு
 
 

இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக நிலாவெளி கடற்கரை மற்றும் புறாத்தீவு என்பன அமைகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டத்தில், பல உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையைக் கொண்ட, அழகிய, பிரதேசமான இங்கு, இயற்கையாய் அமைந்த ஒரு பிரதேசமாக நிலாவெளி கடற்கரை மற்றும் புறாமலை காணப்படுகிறது. திருகோணமலை நகரில் இருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் இது அமையப்பெற்றுள்ளது. 

image_b7b4e28664.jpg

கிழக்கு இலங்கையின் இயற்கை எழில் கொஞ்சும் இங்கு, படகுப் பயணம், சூரியக் குளியல், நீச்சல் போன்றவற்றுக்கு சிறந்த இடமாக அமைகின்றதாலோ என்னவோ, சுற்றுலாப்பயணிகளின் வருகை இங்கு கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது.

image_6cce721bfc.jpg

திருகோணமலையில் இருந்து வடமேற்கில் அமைந்துள்ள கரையோரப் பிரதேசமான நிலாவெளி கடலில், மீன்பிடித்தொழில் பிரதான பங்கு வகிக்கின்றது.

image_337bfc32bf.jpg

மேலும், மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இங்கு, நட்சத்திர சுற்றுலா விடுதிகள் பல காணப்படுகின்றதால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் மிகமுக்கிய தெரிவாக இது காணப்படுகின்றது.

image_d9a97c1f03.jpg

நிலாவெளிக் கடற்கரையில் இருந்து, சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது புறாதீவு. அந்தவகைய அழகிய நிலாவெளிக் கடற்கரையை இன்னும் அழகூட்டும் வகையிலான புறாதீவு, குழந்தைகளுடன் சென்று பார்க்கவேண்டிய மிகமுக்கிய இடமாகும்.

புறாத்தீவில் பெரிய புறாத்தீவு, சிறிய புறாத்தீவு என இரண்டு தீவுகள் உள்ளன. பெரிய புறாத்தீவு கரையில் பவளப் பாறைகளைக் கொண்டுள்ளது. சிறிய புறாத்தீவு, பாறை திட்டுக்களினால் சூழப்பட்டுக் காணப்படுகின்றது. பெரிய புறாத்தீவு 200 மீற்றர் நீளமும், 100 மீற்றர் அகலமும் கொண்ட பெரிய தீவாகும்.    

image_f9042a7f82.jpg

மேலும், இலங்கையின் உலர் வலயத்தில் காணப்படும் இத் தேசிய பூங்காவின் வருடாந்த வெப்பநிலை 27.0 °C (80.6 °F) ஆகும். இப்பொழுது இந்த இடத்தை, தேசிய விலங்கு சரணாலயமாக மாற்றியுள்ளார்கள். படகு போக்குவரத்து நடத்தப்படும் இந்த அழகிய இடம், மலையைச் சுற்றி ஆழம் குறைந்த கடல், அழகிய முருகை கற்களோடு காட்சி தருகிறது.

ஆரம்ப காலங்களில் இத்தீவுக்கு, புறாக்களின் வருகை அதிகமாக இருந்ததால், இத்தீவுக்கு புறாத்தீவு எனப் பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். மேலும், இங்கு 100 வகையான பவளப் பாறைகளும், முன்னூறு வகையான பவள பாறை மீன்களும் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

image_608649e3e2.jpg

இங்கு, காணப்படும் சிறு சிறு வர்ணக் கற்கள், சூரிய ஒளியில் தெறிக்கும் அழகு, நீரினினுள் கடல் வாழ் மீன்கள், உயிரினங்கள் நீந்திச் செல்லும் அழகு போன்றன மனதை கொள்ளை கொள்ளும் பேரழகாகும்.

இதேவேளை, இலங்கையிலுள்ள சிறந்த பவளப் பாறைகள் சிலவற்றைக் கொண்டுள்ள புறாத்தீவு தேசியப் பூங்கா, இலங்கையிலுள்ள இரு கடல்சார் தேசியப் பூங்காக்களில் ஒன்றாகும். இது 2003இல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், இலங்கையின் 17ஆவது தேசியப் பூங்காவான இது, பிரித்தானிய ஆட்சியின் போது, சுடு பயிற்சித் தளமாகப் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

image_3fad223927.jpg

இதன் வருடாந்த மழைவீழ்ச்சி 1,000–1,700 மில்லிமீற்றர்கள் (39–67 in)க்கு இடைப்பட்டதாகும். இது ஒக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் அதிக மழையைப் பெறுகின்றது. இப் புறாத்தீவை, நிலாவெளி கடற்கரையில் இருந்து கடல் மார்க்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் பார்க்க முடியும்.

இதேவேளை, புறாத் தீவில் உள்ள கடல் நீரானது, கண்ணாடி போன்று தெளிவாக காட்சியளிப்பதுடன் சுழியோடும் அளவுக்கு அங்கு பாதுகாப்பான ஏற்பாடுகளும் அமையப்பெற்றுள்ளன. இதனை, வனஜீவராசிகள் திணைக்களத்தின் பாதுகாப்புகள் உட்பட இலங்கை கடற்படையும் பாதுகாத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

image_6890b8a638.jpg

மேலும், புறாத் தீவில் உள்ள ஏதாவது பொருட்களையோ கடற்பாசி சிற்பிகளையோ கடல் தாவர இனங்களையோ தம்வசம் வைத்துக்கொள்ளவோ, அங்கிருந்து கொண்டுவரவோ முடியாது. மீறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

image_3c2b5552f3.jpg

ஆகவே, இயற்கையை முழுமையாக அனுபவிக்கவும் விடுமுறையை அழகாக மாற்றவும் மிகச்சிறந்த தெரிவான நிலாத்தீவு கடற்கரை மற்றும் புறாத்தீவு இலங்கையில் பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய மிகமுக்கிய இடம் என்றால் அது மிகையாகாது. 

image_715d4bfac9.jpg

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
மகாவலியை அழகுபடுத்தும் Mahaweli Reach
 
 

image_6a611703e0.jpg

கண்டி, கட்டுகஸ்தொட்டை மகாவலி கங்கைக்கு அருகில், பாரிய நிலப்பரப்பில், பசுமையான சுற்றாடலுக்கு மத்தியில், மகாவலி ரீச் ஹோட்டல் அமைந்துள்ளது. 1970களில், தேயிலை பயிரிடுபவரான அதுல் பானபொக்க, தன்னுடைய மனைவி மற்றும் மகன்மாருடன் சேர்ந்து, தன்னுடைய வீட்டையே நான்கு அறைகளாகக் கொண்ட விடுதியாக மாற்றினார்.அந்த விடுதியே, மகாவலி ரீச் என்ற பெயரில், கண்டியில் அமைக்கப்பட்ட முதலாவது ஐந்து நட்சத்திர ஹோட்டலாகக் காணப்படுகின்றது. அதுல் பானபொக்கவின் மகன்களான ஜயந்த பானபொக்க மற்றும் மொஹான் பானபொக்க ஆகியோர் இணைந்தே, வீடாக இருந்த தங்களது மாளிகையை, 112 அறைகளைக் கொண்ட ஐந்துநட்சத்திர ஹோட்டலாக மாற்றியுள்ளனர். 112 அறைகளைத் தவிர, மேலும் Presidential Suite ஒன்றும் Junior Suite மூன்றும் இந்த ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ளது.

Deluxe Rooms

image_4088581e5a.jpgimage_fc47150b18.jpgimage_a9a615307d.jpgimage_7674acc9d9.jpg

Executive Suites

image_b88d00aeab.jpgimage_7077247ca7.jpgimage_cb3ba6a710.jpgimage_333e50dea7.jpgimage_f2ab703080.jpgimage_073dbe010d.jpgimage_76d09a6a82.jpg

இந்த ஹோட்டலில், அன்றைய காலத்தில் அமைக்கப்பட்ட காலனித்துவக் கட்டடக்கலைகள் அனைத்தும், இன்னும் மாற்றப்படாமல், அவ்வாறே வைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மேலும், ஹோட்டலின் மத்தியிலும் வெளிப்புறத்திலும் காணப்படும் பூங்கா, பல்வேறு வகையான பூக்களைக்கொண்டு அமைந்துள்ளமையும் பல்வேறு பழவகை மரங்களைக் கொண்டு அமைந்துள்ளமையும், சுற்றுலா செல்வோருக்கு, இதமான காற்றையும் சுவாசத்தையும் வழங்குகின்றது. இவையனைத்துக்கும் மேலதிகமாக, இலங்கையின் மிகவும் நீளமான ஆறான மகாவலி கங்கைக்கு அருகிலேயே இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. எனேவ, நாவுக்கு சுவையான விருந்தை, இயற்கை அழகை இரசித்தபடியே உட்கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது.  

அத்தோடு, மகாவலி ரீச் ஹோட்டலில் தங்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு, ஸ்ரீ தலதா மாளிகை, பேராதெனிய தாவரவியல் பூங்கா, ஹந்தானை உள்ளிட்ட உடவட்ட வனம் போன்றவற்றை, சிறிய அளவு தூரத்துக்கு பயணத்தை மேற்கொண்டு பார்த்துவிட்டு திரும்பக்கூடியதாக உள்ளது.

image_1e25c6cdcc.jpgimage_ad3517adc4.jpg

இந்த ஹோட்டலில், சுற்றுலாப்பயணிகள் அல்லாதோருக்கும் பல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டிலிருந்து வருவோரை, விமானநிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு அழைத்து வருதல் போன்ற போக்குவரத்து சேவைகள் வழங்கப்படுகின்றன. அத்தோடு, வெளியிடங்களில் முன்னெடுக்கப்படும் விசேட நிகழ்வுகளுக்கு கேட்டரிங் சேவை, கேக் தயாரித்து வழங்குதல், பூங்கொத்து வடிவமைத்தல் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன. அத்தோடு, ஹோட்டலிலுள்ள உடற்பயிற்சிக்கூடத்தில், வெளியாட்கள் வருடாந்தம் அல்லது நாளாந்தக் கட்டணங்களைச் செலுத்தி பயன்படுத்தக்கூடியதோடு, அங்குள்ள Spa, மேசை பந்தாடல், நீச்சல் தடாகம் போன்றவற்றையும் கட்டணங்கள் செலுத்தி பயன்படுத்தக்கூடியதாகவுமுள்ளது.  அத்தோடு, ஆடை சலவை சேவைகளையும் ஹோட்டல் வழங்கி வருகின்றது.  

Uyana Restaurant என்று அழைக்கப்படும் ஹோட்டலின் உணவகத்தில், காலை மற்றும் இரவு வேலைகளில் Buffetஇல், இலங்கை உள்ளிட்ட உலகளவிலுள்ள பிரசித்தமான உணவுகளும் வைக்கப்படுகின்றன. இந்த உணவகத்தில், கூட்டுறவு நிறுவனங்கள், பிறந்தநாள் நிகழ்வுகள், பிரியாவிடை நிகழ்வுகள் மற்றும் அனைத்து மத திருமணங்கள் என்று நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்தோடு, ஹோட்டலின் முதலாவது மாடியில் அமைந்துள்ள பெருவிருந்து மண்டபத்தில் (Banquet hall) சுமார் 300 பேர் அமரக்கூடிய வகையிலான நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், நீச்சல் தடாகத்தை சுற்றியுள்ள Pool Terrace என்று அழைக்கப்படும் பகுதியிலும் பல்வேறு வகையான நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்தோடு, திருமணமான புதுமணத்தம்பதிகள், தங்களது தேநிலவைக் கொண்டாடுவதற்கு, மிகச் சிறந்த இடமாகவும் இந்த ஹோட்டல் காணப்படுகின்றது.  

image_fb692570a7.jpgimage_6506f6e5ac.jpg

கண்டியில் அமைக்கப்பட்ட முதலாவது பச்சை ஹோட்டல் (Green Hotel) என்று அழைக்கப்படும் இந்த மகாவலி ரீச் ஹோட்டல், பல்வேறான சமூக சேவைகளையும் செய்து வருகின்றது. கட்டுகஸ்தோட்டையின் மகாவலி ஆற்றை சுத்தம் செய்யும் பணியை, சர்வதேச நீர் தினத்தன்று, ஹோட்டல் ஊழியர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்திருந்தனர். மரம் நடுதல், கண்டி பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைக்கு, பாதுகாப்பு வாயில் அமைத்து, அங்குள்ள ஊழியர்களுக்கு கட்டணம் செலுத்துதல் போன்ற பல்வேறு சமூக சேவைகள் ஹோட்டலால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஹோட்டலின் தரம், சேவை உள்ளிட்ட சமூகப் பொறுப்புகளுக்கென்று, ஹோட்டல் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது. 1998 மற்றும் 2004 தொடக்கம் 2008 வரையான ஆண்டுகளில், சிறந்த உணவுக்கான விருதை ஹோட்டல் பெற்றுக்கொண்டுள்ளது. அத்தோடு, சரியான நீர் முகாமைத்துவம், காபன் வெளியேற்றம் மற்றும் கழிவகற்றல் முகாமைத்துவம் போன்றவற்றை, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முகாமை செய்து வருகின்றமைக்கு, 2018ஆம் ஆண்டு, ஹோட்டலுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.  

வாரத்துக்கு அல்லது மாதத்துக்கு ஒருமுறை, விசேடதேவையுடையோர் உள்ளடங்கிய இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றது. அத்தோடு, ஹோட்டலின் விசேட கேக் வகைகளை தயாரிப்பவரும், விசேட தேவையுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிய பாரம்பரியத்தையும் மேற்கத்திய பாரம்பரியத்தையும் கொண்ட இந்த ஹோட்டலில், விடுமுறை நாட்களை கழிப்பதற்கு மிகச் சிறந்த இடமாக உள்ளது. உங்கள் ஓய்வான நாட்களில் மேலும் சௌகரியமான இடம் தற்போது கிடைத்துவிட்டதல்லவா.  

மகாவலி ரீச் தொடர்பான மேலதிக விடயங்களை, www.mahaweli.com என்ற இணையத்தளத்தினூடாகவும் https://www.facebook.com/MahaweliReachHotel என்ற பேஸ்புக் பக்கத்தினூடாகவும் தெரிந்துகொள்ள முடியும். அல்லது, 0812472727/ 081 4471883 / 5 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொள்வதினூடாகவோ, mareach@slt.lk/ sales@mahaweli.com போன்ற மின்னஞ்சல் முகவரிகள் மூலமோ, தகவல்களைப் பெற்றுக்கொள் முடியும் என்பதோடு, இலக்கம் 35 P B A Weerakoon Mawatha, Kandy என்ற முகவரியில் அமைந்துள்ள மகாவலி ரீச் ஹோட்டலுக்கு நேரடியாக விஜயத்தை மேற்கொண்டோ பெற்றுக்கொள்ள முடியும். 

image_81de1acf56.jpgimage_0193bcb6f5.jpg

image_baa12e5e7d.jpgimage_d2f2ccf510.jpgimage_09227cbc93.jpgimage_d1bba46f32.jpgimage_278a47555c.jpgimage_76f59edcef.jpgimage_59ac0eea0d.jpgimage_44a5f6012f.jpgimage_3252c593b2.jpgimage_58da3ba1fb.jpgimage_4fb18eb217.jpgimage_2ffe01b5c4.jpgimage_d905581877.jpgimage_d74907d6e0.jpgimage_edfd0d98cb.jpgimage_5b8609cd48.jpgimage_b0e790e442.jpg

 

மகாவலி ரீச்சில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு!!

இயற்கை எழிலுடன் கூடிய இந்த ஹோட்டலில், நீங்களும் ஒரு நாளைக் கழிக்கவேண்டும் என்று ஆசைப்படுகின்றீர்களா? இதோ உங்களுக்கான ஒரு வாய்ப்பு.  

தமிழ்மிரர் பத்திரிகையில், இன்று (16) பிரசுரிக்கப்பட்ட இந்தக் கட்டுரையை, பத்திரிகையுடன் சமர்ப்பிப்பதனூடாகவும் அல்லது தமிழ்மிரர் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுரையை, உங்களது பேஸ்புக் பக்கத்தில், #mahawelireach #mahawelireachsrilanka #mahawelireachhotel மற்றும் #tamilmirror போன்றவற்றை ஹேஷ்டெக் செய்து பகிருவதன் மூலமும், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 18ஆம் திகதி வரையான இரண்டு மாதக் காலப்பகுதிகளில், ஹோட்டல் அறைகளுக்கு  30 சதவீதக்கழிவை  (நிபந்தனைகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டது) பெற்றுக்கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் பகிரப்பட்ட பின்னர், ஹோட்டலில், உங்களுக்கான அறை ஒதுக்கீடுளை மேற்கொள்ளும் போது, உங்களது பேஸ்புக் பக்கத்தில், தமிழ்மிரரில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை பகிரப்பட்டுள்ளமையை, உறுதி செய்யவேண்டும் அல்லது பத்திரிகையை ஹோட்டலில் சமர்ப்பிக்கவேண்டும்.

http://www.tamilmirror.lk/

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.