Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

இலங்கை சுற்றுலா


Recommended Posts

Stamford Star Hotel
 
h2(45).jpg
உலகில் எத்தனையோ அழகான இடங்கள் இருந்தாலும், நம்மூரில் இருக்கின்ற அழகினை ரசிப்பதில் இருக்கின்ற சுகமே தனிதான். அப்படி அழகு கொட்டிக்கிடக்கும் இடம்தான் நுவரெலியா.
 
எங்கும் பசுமை விரிந்து கிடக்கின்ற, இயற்கையில் அழகிய படைப்பது. பனி விழும் பொழுதில், பச்சைப் பசேலென்ற அழகிய மலைகளுக்கிடையில் கிடைக்கின்ற மன நிம்மதி, நுவரெலியாவில் மட்டுமே நம்மால் அனுமானிக்க முடியும். 'குட்டி இங்கிலாந்து' என்று செல்லமாக அழைக்கின்ற இயற்கையின் கைக்குழந்தை, நுவரெலியாவில் ரசிப்பதற்கு ஏராளமான இடங்கள் இருக்கின்றன.
 
பொதுவாக டிசெம்பர் மாதத்தில் நுவரெலியாவில் குளிர் அதிகமாக காணப்படும். ஏப்ரல் மாதத்தினை வசந்தகாலம் என்பார்கள். ஏப்ரல் மாதத்தில் நுவரெலியா மாநகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். வசந்தகால நிகழ்வுகள் கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாக இருக்கும். இதனை ரசிப்பதற்கு நாம் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.
 
பிற இடங்களில் இருக்கின்ற மக்கள், மனதுக்கு சாந்தி வேண்டி நுவரெலியாவுக்கு வருவார்கள். குறிப்பாக பாடசாலை விடுமுறை நாட்களை தமது குழந்தைச் செல்வங்களுடன் களித்திடுவதற்கு நுவரெலியாவை தேர்ந்தெடுப்பார்கள். டிசெம்பர் மாத விடுமுறை என்பது இங்கு மிகவும் விசேடமானது. இயற்கையில் குளிர்மையை இங்கு நன்கு அனுபவிக்க முடியும். 
 
பனி விழும் காலைப் பொழுதில், நுவரெலியாவின் கிரகரி ஆற்றோரமாக நடந்துசெல்லும்போது மனதுக்கு ஏற்படும் சுகத்திற்கு அளவே இருக்காது. இப்படியான இயற்கை அதிசயங்களை ரசிப்பதற்கு, நாம் நுவரெலியா சென்றால் தங்குவதற்கும் நல்ல இடம் தேவை. அந்த ஆசையினை நிறைவேற்ற காத்திருக்கிறார்கள் ஸ்டம்போர்ட் ஸ்டார் ஹோட்டல் (Stamford Star Hotel) உரிமையாளர்கள்.
 
நுவரெலியா மாநகரின், குதிரைப் பந்தய தடாத்கதிற்கு முன்பாக, நுவரெலியா – பதுளை வீதியின் அருகாமையில் அழகிய, கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது இந்த ஹோட்டல். ஸ்டம்போர்ட் ஸ்டார் ஹோட்டலில் மொத்தம் 40 அறைகள் இருக்கின்றன. அத்தனையும், நட்சத்திர விடுதிகளில் காணப்படுகின்ற அறைகளை ஒத்ததாக காணப்படுகின்றன. உயர்தர வசதிகளைக் கொண்ட 40 அறைகளிலிருந்தும் நுவரெலியாவின் அழகினை ரசிக்க முடியும். 
 
வசந்த கால கார்ப்பந்தயம், குதிரைப் பந்தயம் மற்றும் நிகழ்வுகளை முன்பக்க அறைகளின் பல்கனியில் இருந்து அழகாக ரசிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், பின்புற அறைகளினூடாக நுவரெலியாவின் அழகினை ரசிக்க முடியும். அனைத்து அறைகளிலும் தொலைக்காட்சிப் பெட்டி, சுடுதண்ணீர் வசதி காணப்படுகின்றமை சிறப்பானதாகும்.
 
h1(59).jpgநிஹால் ரத்னாயக்கவின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த ஹோட்டலின் பொதுமுகாமையாளராக சாந்த ஹத்தொட்டுவேகம இருக்கின்றார். பல முன்னணி ஹோட்டல்களில் பணிபுரிந்த அனுபவத்தினைக் கொண்டவர் சாந்த ஹத்தொட்டுவேகம. இவரது முகாமைத்துவத்தில் ஸ்டம்போர்ட் ஸ்டார் ஹோட்டல் இன்னமும் அழகுறுகின்றது. 
 
ஸ்டம்போர்ட் ஸ்டார் ஹோட்டலின் மற்றுமொரு விசேடம், சாப்பாடு. தரமான சமையல் விற்பன்னர்களினால் அனைத்துவிதமான சாப்பாடுகளும் பரிமாறப்படுகின்றன. அனுபவமிக்க, திறமைசாலிகளான சமையற்கலை விற்பன்னர்களை தன்னகத்தே கொண்டிருப்பது ஸ்டம்போர்ட் ஸ்டார் ஹோட்டலுக்கு மேலும் வலுச்சேர்க்கிறது. 
 
அதுமட்டுமல்லாமல் 'மினி பார்' வசதியும் இங்கிருக்கிறது. இந்த பாரில் உட்கார்ந்தும் நுவரெலியாவின் அழகினை ரசிக்க முடியும். அத்தோடு சாப்பாட்டு மண்டபத்தில் இருந்து, இலங்கையில் மிகவுயர்ந்த மலையான பீதுருதாலகால மலையினையும் ரசிக்க முடிகின்றமை மேலும் சிறப்பானதாகும்.
 
இவ்வளவு வசதிகளையும் உள்ளடக்கிய, நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டல்களுக்கு இணையான ஸ்டம்போர்ட் ஸ்டார் ஹோட்டலில் தங்குவதற்கு பெரும் தொகை பணம் செலவிடத் தேவையில்லை. உங்கள் வசதிக்கேற்ப, மிகக் குறைந்த கட்டணங்களே இங்கு அறவிடப்படுகின்றன. இந்த வசதி, நுவரெலியாவில் வேறு எங்கும் கிடைக்காது என்பதும் சிறப்பானதாகும். 
 
ஸ்டம்போர்ட் ஸ்டார் ஹோட்டலில் நீங்களும் தங்கி, நுவரெலியா மாநகரின் அழகினை ரசிக்க வேண்டுமானால், நீங்கள் கீழுள்ள தொடர்புகளை அணுகுங்கள்.
No.120, Badulla Road, Nuwara-Eliya, Sri Lanka. 
Reservation: 052- 2220550-1 Fax: 052-2220552
Email: fomstamford@sltnet.lk, gmstamford@sltnet.lk
Web: www.stamfordstarhotel.com
h5(9).jpg
h4(11).jpg
h3(34).jpg
h6(6).jpg
h7(4).jpg
h8(1).jpg
h9(1).jpg
 •  

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites

மகாவலிக்கு அழகூட்டும் Mahaweli Reach Hotel இன் காணொளியை இங்கு காணலாம்

'இரவின் இளவரசி'
 
 
DSC00697%20copy.jpg
-பாலகிருஷ்ணன் திருஞானம்


உலகில் மிகவும் அரிதான  பூ வகைகளில் ஒன்றாகக் காணப்படும்  கடுப்புல் பூக்கள் புஸல்லாவை, ரஜஎல பிரதேசத்திலுள்ள வீடொன்றில்  மலர்ந்துள்ளன.

இந்நிலையில், இப்பூக்களை பார்வையிடுவதற்காக இரவு வேளைகளில் பொதுமக்கள் வந்தவண்ணமுள்ளனர்.

இந்தியா, இலங்கை, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுகின்ற இப்பூக்கள், அப்பூச்செடிகளின் இலைகளிலேயே மலர்கின்றன. இவ்வாறு செடியில் 100 இற்கும் அதிகமான பூக்கள் மலர்கின்றன.  முழு நிலவு கால பகல் வேளைகளில் மொட்டுக்களாகி இரவு வேளைகளில்  படிப்படியாக மிக்க நறுமணத்துடன் இப்பூக்கள் மலர்கின்றன. இவ்வாறு மலர்ந்து 02 மணித்தியாலங்களின் பின்னர் இப்பூக்கள் வாடிவிடுகின்றன. இதுவே கடுப்புல் பூக்களின் சிறப்பம்சமாகும்.

இப்பூக்களை பூஜைகளுக்கும் இரவு வேளைகளிலேயே பயன்படுத்த முடியும். ஏனைய வேளைகளில் இதன் மொட்டுக்களையே பூஜைகளுக்கு பயன்படுத்த முடியும்.

மேலும், பெரும்பான்மையின மக்கள் இப்பூக்களை  புத்தபகவானுக்கு பூஜைக்காக பயன்படுத்துகின்றார்கள்.  வருடத்திற்கு ஒரு முறை மலரும் இப்பூக்கள்  வெசாக் காலத்தில் மலர்ந்திருப்பது  பௌத்தர்களுக்கு விசேடமாகும்.

இப்பூக்கள் 'இரவின் இளவரசி' நிலவிலிருந்து பூ எனவும் வர்ணிக்கப்படுகின்றன. இதில் 05 விதமான இனங்கள் இலங்கையில் காணப்படுவதாக தெரியவருகிறது.
DSC00663%20copy.jpg
DSC00666%20copy.jpg
DSC00678%20copy.jpg
DSC00684%20copy(1).jpg
DSC00692%20copy.jpg
DSC00693%20copy(1).jpg

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
கிராமிய இரசனையை கொண்ட செர்னிட்டி விலேஜ்
 
 

SAM_4166.JPG
கொழும்பு என்றாலே சன நெரிசல் மிக்க நகர். அந்த நகரில் ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்க நேரமில்லை என்றே பொதுமக்கள் கூறுவர். அந்தளவிற்கு 24 மணி நேரமும் பரபரப்பான நகராக கொழும்பு காணப்படுகின்றது.  இந்த கொழும்பு நகரை போன்றே கொழும்பு மாவட்டத்திலுள்ள தெஹிவளை, ஹோமாகம மற்றும் அவிசாவளை உட்பட ஏனைய அனைத்து நகரங்களும் சன நெரிசல் மிக்க பரபரப்பான நகராக காணப்படுகின்றன. Map(1).jpg

இதனால் இந்த மாவட்டத்தில் ஓய்வெடுப்பதற்கு சிறந்த இடமொன்றில்லை என்கின்றனர். இதன் காரணமாக கொழும்பிலுள்ளவர்கள் தங்களது விடுமுறையை கழிப்பதற்காக பல ரூபாய் பணத்தையும் பல மணி நேரங்களையும் செலவளித்து வெளி இடங்களுக்கு செல்கின்றனர்.

இது முற்றிலும் தவறான செயற்பாடாகும். இதற்கு காரணம் என்னவென்றால் கொழும்பிலும் ஓய்வெடுப்பதற்கு சிறந்த இடங்கள் உள்ளமையாகும். அவ்வாறான ஒரு இடமே செர்னிட்டி விலேஜ் ஆகும். கொழும்பு மாநகரிலிருந்து சுமார் ஒரு மணித்தியால பிராயண தூரத்தினை கொண்ட இந்த விலேஜ் - கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களையும் இணைக்கும் பிரதேசத்தில் உள்ளது.

அதாவது குறித்த மூன்று மாவட்டங்களின் எல்லை பிரதேசமான கலதுவாவ எனும் கிராமத்திலேயே இது அமைந்துள்ளது. அதாவது கொழும்பிலிருந்து சுமார் 48 கிலோ மீற்றர் தூரத்தில் ஹைலெவேல் வீதியிலிருந்து இங்கிரிய நகரிற்கு செல்லும் பிரதான வீதியின் உட்பகுதியிலேயே இந்த விலேஜ் உள்ளது.
SAM_4177.JPG
இயற்கையான மலைகள் மற்றும் காடுகளுக்கு மத்தியிலேயே இந்த செர்னிட்டி விலேஜ் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுமார் 30 ஏக்கர் காணியில் தேயிலை, இறப்பர் தோட்டங்கள் மற்றும் மரக்கறி தோட்டம் ஆகியவற்று மத்தியிலேயே இந்த செர்னிட்டி விலேஜ் அமையப்பெற்றுள்ளது.

மலைகளை குடைந்து இயற்கையான வடிவில் இந்த ஹோட்டேல் நிர்மாணிக்கப்படடுள்ளது.  அத்துடன் சூழல் சுற்றுலாவினை மையப்படுத்தும் இந்த ஹோட்டேலின் கட்டிடங்கள், இயற்கையினை அருகில் கொண்டுவரும் வகையில்  அமையப்பெற்றுள்ளன.
untitled2.jpg
சுமார் ஏழு அறைகளை கொண்ட இந்த ஹோட்டேல், உணவகம், வரவேற்பு மண்டபம், இயற்கையான நீச்சல் தடாகம், நவீன வகையில் நீர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகம், மீன் பிடிப்பதற்கான அணைக்கட்டு ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஏழு அறைகளும் மலைகளுக்கு மத்தியில் பலகைகளினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த அறைகளின் முன் பக்கத்தில் நின்றால் மலைகளின் இயற்கை காட்சியினை ரசிக்க முடியும். இதற்கு ஏற்ற வகையிலேயே குறித்த அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக நாட்டுப்புற சைக்கிள் சவாரி, றப்பர் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து தேயிலை கொழுந்து பறித்தல் மற்றும் றப்பர் பாலெடுத்தல் ஆகியவற்றை பார்வையிடல், மரக்கறி தோட்ட விஜயம், பறவைகள் பார்வையிடல் ஆகிய வசதிகளும் இந்த ஹோட்டேலில் உள்ளன.
SAM_4192.JPG
அத்துடன் வயல் நிலங்களுக்கு விஜயம் செய்து கிராமத்தின் இயற்கையை அறிவதுடன் கிராமங்களில் மேற்கொள்ளும் நெல் உற்பத்தி செய்முனையினை அறிவதற்கான வாய்ப்புக்களினையும் இந்த ஹோட்டேலில் தங்குபவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஹோட்டேலுக்கு விஜயம் செய்பவர்கள் வேண்டுகோள் விடுத்தால் உலகின் இயற்கையான பாரம்பரிய தளங்களில் ஒன்றான சிங்கராஜ காட்டு விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

இவற்றுக்கு மேலதிகமாக பெட்மின்டன் மற்றும் உள்ளக விளையாட்டுக்களுக்கான வசதிகளும் இந்த ஹோட்டேலில் உள்ளன. கிராமப் புறத்தினை மையமாக கொண்ட இந்த ஹோட்டேலின் உணவகத்தில் இலங்கையின் பாரம்பரிய உணவுகளே அதிகம் பறிமாறப்படுகின்றன.
SAM_4259.JPG
புதுமணத் தம்பதிகளின் உல்லாச விடுமுறை மற்றும் அலுவலக சுற்றுல்லாக்கள் ஆகியவற்றுக்கு இந்த ஹோட்டேல் பிரபல்யம் பெற்றதாகும். இதன் காரணமாக வார இறுதி நாட்களில் இந்த ஹோட்டேலிற்கு அதிக கிராக்கியாகும். அலுவலக சுற்றுல்லாக்களை மேற்கொள்வோரிற்கு ஏற்ற வகையில் சுமார் 1,000 ரூபாய் முதல் பல்வேறு வகையான பேக்கேஜ்கள் இந்த ஹோட்டேலினால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த செர்னிட்டி விலேஜிற்கு நாமும் ஒருமுறை விஜயமொன்றை மேற்கொள்வதில்லையா? அந்த அடிப்படையில் வார இறுதி நாட்கள் விடுமுறை அல்லது போயா விடுமுறை ஆகியவற்றை மகிழ்ச்சிகரமான முறையில் கழிப்பதற்கு இந்த ஹோட்டேலினை தெரிவுசெய்ய முடியும்.

0114422722 அல்லது 0363368494 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் serenity@sltnet.lk என்ற மின்னஞ்சல் ஆகியவற்றின் ஊடாக இந்த ஹோட்டேலை தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடிவதுடன் உங்கள் பதிவுகளையும் முன்கூட்டி பதிவுசெய்துகொள்ள முடியும்.
SAM_4167.JPG
untitled5.jpg
SAM_4193.JPG

SAM_4283.JPG
SAM_4293.JPG
SAM_4221.JPG
untitled3.jpg
untitled4.jpg

untitled6.jpg
untitled7.jpg
SAM_4197.JPG

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
’எழில் மிகுந்த இயற்கை துறைமுகம்’
 

image_2295773cba.jpg

 

இலங்கையில் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தளங்களில் திருகோணமலையில் அமைந்துள்ள, இயற்கைத்துறைமுகமானது, சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும் இடங்களில் ஒன்றாகும்.

இத்துறைமுகத்தின் சிறப்பம்சங்கள் எண்ணிலடங்காதவையாகும். உலகின் மூன்றாவது மிகப் பெரிய துறைமுகமாக இது விளங்குவதுடன், இயற்கையாக அமையப்பெற்றுள்ள மூன்று விரிகுடாக்களையும் கொண்டு காணப்படுகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

image_33e93bd784.jpg

 

இத்துறைமுகத்தை சென்று பார்வையிட சில மீற்றர்கள் இலங்கை கடற்படையினரின் அனுமதியுடன் உள்ளே செல்ல வேண்டும். அத்துடன் கடற்படையினரின் முகாம்களுடன் இத்துறைமுகம் காணப்படுகின்றமையால் துறைமுகம் பற்றிய அனைத்துவிதமான தகவல்களையும் அவர்களின் வழிகாட்டலுடன் அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பும் கிட்டும்.

image_3bba809c1d.jpg

 

 

உயரமான மலைப்பாங்கான இடமாகையால், அங்கிருந்து துறைமுகத்தின் அழகினையும், கடற்பரப்பையும் காணும் காட்சி மிகவும் இரம்மியமானதாகும். மேலும் திருகோணமலை துறைமுகத்துடன் சம்பந்தப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தகவல் களஞ்சியங்களையும் பார்வையிடலாம்.

image_500cbe2c82.jpg

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
மனங்கவர் ஹக்கலை பூங்கா
 
 
H01(5).JPG
-மொஹொமட் ஆஸிக்


உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளது மனதை கவர்ந்;த இடமாக ஹக்கலை பூங்கா விளங்குகிறது. மத்திய மலையகத்தின் நுவரெலியா நகரை அன்மித்து அமைந்திருந்கும் ஹக்கலை பூங்கா கடல் மட்டத்திலிருந்து 5,400 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது.

1861ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் சிங்கோனா என்ற தாவரத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஹக்கலை பூங்காவை பயன்படுத்தியதுடன் தேயிலை உற்பத்தியும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது பூங்காவாக மாற்றப்பட்டது.

ஹக்கலை பூங்காவானது மலர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கு சுமார் 10,000க்கும் மேற்பட்ட மலர் வகைகள் காணப்படுகின்றன. ஹக்கலை பூங்கா 27.2 ஹெக்டயார் பரப்பளவை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
H02(4).JPG
H03.JPG
H04.JPG
H05.JPG
H06.JPG
 
 
 
 
 
இயற்கை எழில்மிக்க ஹெரிடன்ஸ் கந்தலம
 
Kandalama1.jpg

-றிப்தி அலி

கிராமவாசிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டதே இந்த இடமாகும் என இந்த நிறுவனத்தின் முகாமையாளரான பிரியன் விஜேரத்ன தெரிவித்தார். ஆனால் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் இன்று இந்த நிறுவனத்தினால் பல நன்மைகளை அடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆம்....அந்த இடம் எது? ஏன் எதிர்ப்பு தெரிவித்தனர்? தற்போது ஏன் ஆதரிக்கின்றனர்? என்ற பல கேள்விகள் தற்போது உங்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் தானே. அவை அனைத்திற்குமான பதில் இந்த கட்டுரையில் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

இவ்வாறான கேள்விகளுடனே மத்திய மாகாணத்தின் எல்லை பிரதேசங்களில் ஒன்றான தம்புள்ளை நகரத்திற்குட்பட்ட கந்தலம கிராத்திலுள்ள ஹெரிடன்ஸ் கந்தலம ஹோட்டலினுள் நுழைகின்றேன். இந்த கந்தலம கிராமம் மாத்தளை மாவட்டத்திலுள்ள வரலாற்று பிரசித்தி வாய்ந்த தம்புள்ளை மாநகரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது.
Kandalama2.jpg
இந்த கிராமத்தின் வனப்பகுதி மற்றும் வாவி ஆகியவற்றுக்கு மத்தியில் உள்ள மலையினை குடைந்து ஹெரிடன்ஸ் கந்தலம ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரசித்தி பெற்ற கட்டிட வடிமைப்பாளரான ஜெப்ரி பாவாவின் வடிவமைப்பில்  1994ஆம் ஆண்டு இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டது.

இதன்போது கிராமவாசிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரினால் இந்த ஹோட்டல் நிர்மாணத்திற்கு பலத்த எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஹோட்டல், 2005ஆம் ஆண்டு மீள் புனரமைப்பு செய்யப்பட்டது. மொத்தமாக 287 ஏக்கர் காட்டுப் பகுதியில் சுமார் 15 ஏக்கர் காணியிலேயே இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
Kandalama5.jpg
இந்த ஹோட்டல் சீகிரிய முனை மற்றும் தம்புள்ளை முனை என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணம் என்னவென்றால் சீகிரிய முனையிலிருந்த பார்த்தால் உலகில் பிரசித்தி பெற்ற சீகிரிய குன்றினை அவதானிக்க முடியும்.

அதேபோன்று தம்புள்ளை முனையிலிருந்து பார்த்தால் பிரசித்தி பெற்ற தம்புள்ளை ரன்கிரி விகாரையினை அவதானிக்க முடியும். இவ்வாறான சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஹோட்டலின் குறித்த இரண்டு முனைகளுக்கும் இடையிலான நீளம் ஒரு கிலோ மீற்றராகும்.
Kandalama3.jpg
டீலக்ஸ், சூட், ரோயல் சூட், லக்ஷரி பனோரமிக் லக்ஷரி என எட்டு வகையான 152 அறைகளை இந்த ஹோட்டல் கொண்டுள்ளது. சீகிரிய முனையில் 75 அறைகளும் தம்புள்ள முனையில் 77 அறைகளும் உள்ளன. இந்த அறைகளில் தேனீர் தயாரிப்பான், கேபிள் அலைவரிசைகளுடனான தொலைக்காட்சி, வெளிநாட்டு தொலைபேசி வசதி, மினி பார், இலவச வைபை சேவை, 24 மணி நேர அறை சேவை, சலவை வசதி போன்ற பல வசதிகள் உள்ளன.

இந்த சேவைகளுக்கு மேலதிகமாக மூன்று உணவகங்கள் மற்றும் மூன்று நீச்சல் தடாகங்கள் ஆகியவற்றையும் இந்த ஹோட்டேல் கொண்டுள்ளது. இவற்றில் ஒரு நீச்சல் தடாகம் இயற்கையானதாகும். அதாவது மலைகளின் பாறைகளுக்கு மத்தியிலேயே இந்த நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் இயற்கையான இந்த நீச்சல் தடாகத்தினை வெளிநாட்டவர்களே அதிகம் விரும்புவதாக அங்கு பணியாற்றும் ஊழியரொருவர் தெரிவித்தார்.
Kandalama4.JPG
அத்துடன் ஸ்பா வசதி, சிறுவர் விளையாட்டு திடல், தினசரி பொழுதுபோக்கு, நூலகம், வைபை சேவை சந்தை தொகுதி, 24 மணி நேர வைத்திய சேவை, கால்பந்து மற்றும் கிரிக்கெட் மைதானம், நூலகம் மற்றும் கணணி வசதி ஆகியவற்றையும் இந்த ஹோட்டல் கொண்டுள்ளது.

நான்கு சிறிய கூட்ட அறைகள் மற்றும் பாரிய வரவேற்பு மண்டபத்தினையும் கொண்டுள்ளது. அலுவலகங்களிலிருந்து வருகை தருவோர் கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்காகவே இந்த நான்கு கூட்ட மண்டபங்கள் உள்ளன. இதற்கு மேலதிகமாக காஞ்சனா எனும் பெயரில் வரவேற்பு மண்டபமொன்றும் இந்த ஹோட்டலில் உள்ளது.

கடந்த வருடம் மீள் புனர்நிர்மாணம் செய்த இந்த வரவேற்பு மண்டபத்தில் திருமணம், பிறந்தநாள், விருது வழங்கல் நிகழ்வுகள் போன்ற பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. 180 பாகை அரை வட்ட வடிவிலேயே இந்த மாநாட்டு மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வரவேற்பு மண்டபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களின் திருமண வைபவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Kandalama6.JPG
புதுமண தம்பதிகளின் உல்லாச பிரயாணத்திற்கு இந்த ஹோட்டல் பிரபல்யம் பெற்றுள்ளது. இதனால் அதிகமான புதுமண தம்பதிகளினை இந்த ஹோட்டலில் அவதானிக்க முடிந்தது. புதுமண தம்பதிகளுக்கான ஹோட்டல் என செல்லமாக அழைக்கப்படும் இந்த ஹோட்டிலுள்ள அனைத்து பெயர்களும் "ஹ" என்ற சிங்கள எழுத்திலேயே ஆரம்பிக்கின்றன.

இதன் அடிப்படையில் சீகிரியவை ஆட்சி செய்த காசியப்பனின் பெயரிலும் அறையொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுற்றுலா பிரயாணிகளை மகிழ்வூட்டுவதற்காக யானை சவாரி, குதிரை சவாரி, படகோட்டம்,  பறவை பார்வையிடல், பலூன் சவாரி, புராணகமா (புராதன கிராமம்) விஜயம்,  துவிச்சக்கர வண்டி பயணம், வண்ணத்து பூச்சி பார்வையிடல் போன்ற பல சேவைகள் இந்த ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Kandalama8.JPG
ஏனைய ஹோட்டல்களில் இது போன்ற வசதிகள் காணப்பட்டாலும் ஹெரிடன்ஸ் கந்தலமவுடன் ஒப்பிட முடியாது. இந்த சேவைகளில் யானை சவாரி, குதிரை சவாரி ஆகியவற்றை மேற்கொள்வதற்காக ஒரு யானை மற்றும் 10 குதிரைகளை இந்த ஹோட்டேல் சொந்தமாக கொண்டுள்ளது.

அத்துடன் ஹோட்டலுக்கு அருகாமையிலுள்ள புராணகமா எனும் புராதன கிராமம் இந்த ஹோட்;டலினாலேயே பாராமரிக்கப்படுகின்றது. ஹோட்டலிலுள்ள யானையிலிருந்து வெளியாகும் கழிவு சாணத்தின் ஊடாக கடதாசி இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Kandalama9.JPG
அதாவது இந்த ஹோட்டேலில் அனைத்து செயற்பாடுகளும் சூழல் நட்பான வகையிலேயே செயற்படுகின்றன. இதனாலேயே ஹோட்டலிலிருந்து வெளியேற்றப்படும் கடாதாசி மற்றும் யானையின் சாணம் ஆகியவற்றை கலந்து மீண்டும் கடதாசி தயாரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த கடதாசி தயாரிப்பு செயன்முறை ஹோட்டலிற்குள்ளேயே இடம்பெறுகின்றது. இங்கு தயாரிக்கப்படும் கடதாசியினை கொண்டு பல பொருட்கள் மீள் உற்பத்தி செய்யப்பட்டு ஹோட்டலிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.
Kandalama16.JPG
அத்துடன் ஹோட்டலினை சுற்றி வாவி காணப்பட்டாலும் ஹோட்டலிலிருந்து சிறு துளி நீர் வாவியுடனோ வாவியிலிருந்து சிறுதுளி நீரோ ஹோட்டலினுள் கலக்கக்கூடாது என்ற கொள்ளையினை இந்த ஹோட்டல் நிறுவனம் கொண்டுள்ளது. இந்த அடிப்படையில் ஹோட்டலுக்கு தேவையான ஒரு துளி நீர் கூட வாவியிலிருந்து பெறப்படுவதில்லை. அத்துடன் இங்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறு துளி நீர்கூட வாயியுடன் இணைவதில்லை.
Kandalama11.jpg
ஹோட்டலில் பயன்படுத்தப்படும் நீர் மீள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஹோட்டலுக்கு இறுதி நாட்களில் அதிக கேள்வி உள்ளது. அதாவது வார இறுதி நாட்களில் இந்த ஹோட்டலின் அனைத்து அறைகளும் முன்கூட்டியே பதிவுசெய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிகம் உள்நாட்டு சுற்றுல்லா பயணிகளே விஜயம் மேற்கொள்ளும் இந்த ஹோட்டலிற்கு மத்திய கிழக்கு நாட்டு சுற்றுல்லா பயணிகளும் விஜயம் மேற்கொள்வது வழமையாகும். இதனால் முஸ்லிம் சுற்றுல்லா பயணிகளின் வசதி கருதி ஹலால் வகையான உணவுகள் பரிமாற்றப்படுகின்றமை முக்கிய செயற்பாடாகும்.
Kandalama13.JPG
இவ்வாறு பல முக்கிய அம்சங்களை கொண்ட இந்த ஹோட்டலின் ஊடாக பொதுமக்களுக்கு பல சமூகசேவை நிகழ்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கமைய சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் தம்புள்ள பிரதேசத்திலுள்ள 17 விகாரைகள் மற்றும் மற்றும் 34 பாடசாலைகள் ஆகியவற்றின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இந்த ஹோட்டல் நிதியுதிவி வழங்கியுள்ளது.

இதற்கு மேலாக குறித்த ஹோட்டலில் தொழில் புரிபவர்களில் 60 சதவீதமானவர்கள் இந்த கிராமத்தவர்கள். கிராமத்திலுள்ள இளைஞர்களை தெரிவுசெய்து ஹோட்டல் தொடர்பிலான பல பயிற்சிகள் வழங்கிய பின்னர் தொழிலுக்காக ஹோட்டலில் உள்வாங்கப்படுகின்றனர்.

இவ்வாறு பல சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த ஹோட்டலிற்கு விஜயமொன்றை மேற்கொள்வதில்லையா? ஆம் ஹஜ் பெருநாள் மற்றும் தீபாவளி போன்ற விடுமுறைகள் வருகின்ற இந்த காலப் பகுதியில்  இந்த ஹோட்டலை நீங்கள் தெரிவுசெய்து கொண்டால் பண்டிகை விடுமுறையினை மகிழ்ச்சியாக கழிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

0094665555000 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் kandalama@heritancehotels.comஎன்ற மின்னஞ்சல் ஆகியவற்றின் ஊடாக தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.
Kandalama10.JPG
Kandalama12.JPG
Kandalama14.JPG
Kandalama15.JPG

Kandalama17.JPG
Kandalama18.JPG
Kandalama19.JPG
Kandalama20.JPG
Kandalama21.JPG
Kandalama22.JPG
 

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
வில்பத்து வன பிரதேசத்தில் உள்ள குதிரை மலை
 
 

SAM_1075.jpg
-எம்.என்.எம்.ஹிஜாஸ்


வில்பத்து வன பிரதேசத்தில் காணப்;படும் குதிரை மலை பகுதி பண்டைய காலம் முதல் கடல் பயணிகளுக்கு நன்கு தெரியக்கூடிய அடையாளமாகவும் தொல்பொருள் பெறுமதிமிக்க இடமாகவும் காணப்படுகின்றது.

தற்போது நாட்டில் நிலவும் சாதகமான சூழ்நிலையில் வனஜீவராசி தினைக்களத்தின் அனுமதியுடனும் வழிகாட்டலுடனும் இந்த மலைப் பகுதியினை பார்க்க வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுல்லா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த மலைப்பகுதி வில்பத்து வனத்திற்குள் காணப்படுவதினால் குதிரை மலையினை பார்வையிட செல்லும் வழியில் மான், யானை, ஊர்வன வகைகள், பறவைகள் என பல உயரினங்களை பார்வையிடும் சந்தர்ப்பமும் உள்ளது. இது போன்று குதிரை மலைக்கு செல்லும் வழியில் பாலைப்பழம் மற்றும் வீரப்பழம் என்பனவற்றுடன் மூலிகை தாவரங்கள் பலவற்றினையும், இயற்கையாக அமையப்பெற்றுள்ள இரண்டு வில்லுகளினையும் அவதானிக்கலாம்.

இந்த மலைப் பகுதியில் காணப்படும் மட்பாண்ட சிதைவுகள், சுட்ட செங்கள்கள் என்பன மொசோலினி காலம் முதல் இப்பகுதயில் குடியிருப்புக்கள் இருந்ததினை உறுதிப்படுத்துகின்றன. கி.மு. 543 காலப்பகுதிகளில் விஜயனும், அவனது தோழர்களும் இந்த மலைப்பகுதியில் கரையிறங்கி செப்பு நிற மண் உடைய கரையை கண்டு 'தம்பபண்ணி' என அழைத்ததாக செவிவழி சரித்திரம் கூறுகின்றது.

மேலும் உள்நாட்டு இயக்க கோத்திரத்து அரசியாகிய குவேனி இதற்கு அண்மையிலுள்ள 'காளிவில்லு' அதாவது இன்றைய வில்பத்து பகுதியில் வாழ்ந்து வந்தது விஜயனின் துணைவியாக இருந்ததாகவும் சிதைவுகளிலிருந்து தெரியவருகின்றது.

இது போன்று இன்னுமொரு செவிவழி சரித்திரத்திற்கேற்ப குதிரை மலைப்பகுதியில் அல்லிராணி ஆட்சி செய்ததாகவும் அவள் முத்துக்கள் மீது அதிகம் விருப்பம் கொண்டிருந்ததோடு அரேபிய வர்த்தகர்களுக்கு குதிரைகளுக்கு பதிலாக முத்து பண்டமாற்று வர்த்தகத்தை இந்த குதிரைமலை துறையில் மேற்கொண்டுள்ளார்.

ஆகையால் இதற்கு குதிரை மலை என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. குதிரைமலை குன்றில் வடக்கு நோக்கி செல்லும் போது பண்டைய இந்து கோவில் சிதைவுகள் காணப்படுகின்றன.

35 அடி உயரமான வானத்தினை நோக்கி கால்களை உயர்த்திக் கொண்டிருந்த மனிதனுடைய சிலையின் சிதைவுகள் என்றும் கூறப்படுகின்றது. இதற்கு அண்மையில் கடற்கரையினை அண்மித்து முஸ்லிம் ஒருவரின் அடக்கஸ்தலத்தையும் காண முடியும்.

இந்த மலைப்பகுதியின் தூரத்தில் தெரிகின்றன தீவுகளான பத்தலங்குண்டு மற்றும் பள்ளிவாசல் தீவுகள் கருவாடு வியாபாரத்துக்கு பிரசித்தி பெற்றதாகும். இந்த மலை பகுதியிலிருந்து கடலினை பார்க்கும் செங்குத்தாகவும், நூற்றுக்கணக்கான அடிகள் ஆழமானதாகவும் காணப்படுகின்றது. இதனால் மக்களின் நலன்கருதி மலையின் விளிம்பு பகுதியில் கயிற்றினால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று குதிரை மலை பகுதியில் காணப்படும் காடுகள் குட்டையாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும். மலைப்பகுதியின் மரங்களுக்கிடையில் அங்கு செல்பவர்கள் இளைப்பாறுவதற்கென இயற்கையாகவே சில இடங்கள் அமையப்பெற்றுள்ளமையும் செப்பு நிற மண்னும் இம் மலைப்பகுதியின் அழகினை மேலும் அதிகரிக்கின்றது.
SAM_1079.jpg
SAM_1020.jpg
SAM_1051.jpg
SAM_1084.jpg
SAM_1062.jpg
SAM_1069.jpg

SAM_1101.jpg

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
 • 2 weeks later...
கிழக்கின் அழகை கண்டுகளிக்க உதவும் 'ஈஸ்ட் லகூன்' நட்சத்திர ஹோட்டல்
 
_DSC0057%20(2)%20copy%20copy.JPG
-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக மட்டக்களப்பு சின்ன உப்போடையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடனான 'ஈஸ்ட் லகூன்' எனும் நட்சத்திர ஹோட்டல் எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் பெற்றி இன் பிறைவட் லிமிட்டட் நிறுவனத்தின் பணிப்பாளருமான சமூக சேவையாளர் எம்.செல்வராஜாவின் முயற்சியினால் தேசிய முதலீட்டுச்சபை மற்றும் சுற்றுலா சபை என்பவற்றின் அனுமதியுடன் சகல வசதிகளுடனும் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாடிகளைக் கொண்ட இந்த ஹோட்டலில் தேனிலவு அறை மற்றும் சொகுசு அறை, உல்லாச அறை, மேம்படுத்தப்பட்ட அறை, குடும் அறை என பல்வேறு வகைகளைக்கொண்ட 45 அறைகள் உள்ளன.

நீச்சல் தடாகம், மற்றும் திருமண மண்டபம், என்பவற்றுடன் புதிய தொழிநுட்பங்களுடனான உள்ளக கூட்ட மண்டம் என்பவைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பின் இயற்கை அழகைக் கொண்ட வாவியின் ஓரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்ந ஹோட்டலின் வெளி மற்றும் சுற்றுப்புறச் சூழல் இயற்கை அழகும் பசுமை நிறைந்ததாகவும் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு வரலாற்றில் முதன் முதலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலை திறந்து வைக்கும் வைபவத்தில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
_DSC0031.JPG
_DSC0033.JPG
_DSC0087%20(2).JPG
_DSC0073%20(2).JPG
_DSC0077%20(2).JPG
_DSC0025%20(2).JPG
_DSC0029%20(2).JPG
_DSC0042.JPG
_DSC0093%20(2).JPG
_DSC0038.JPG

http://www.tamilmirror.lk/

களைகட்டும் சொர்க்கபுரி…
 

எம்.எல்.எஸ்.டீன்

image_e8d241e053.jpg

 

உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்கபுரியாகத் திகழும் பொத்துவில் பிரதேசத்துக்கு பல நாடுகளிலிருந்தும் உல்லாசப் பிரயாணிகள் படையெடுத்துள்ளமையால் சுற்றுலாத்துறை அங்கு களைகட்டியுள்ளது.

உல்லாசப் பிரயாணிகளின் வருகையால், இப்பிரதேசத்தில் பலர் தொழில் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

image_27aaa07921.jpg

image_482e2989d3.jpg

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites

ஊரெழு பொக்கணை

 
 

பொக்கணை

 

ஊரெழு மேற்கு சுண்னாகத்தில் அமைந்துள்ள வரலாற்று சான்றுமிக்க ஒரு இடம் தான் பொக்கணை. இது எப்போது உருவானது என்பது பற்றி தகவல்களை அறிய முடியவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். இங்கு காணப்படும் பொக்கணையின் சிறப்பம்சம் என்னவெனில்,

ராமரும் சீதையும் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டனர் அவ் வேளையில் ராமருக்கு தாகம் ஏற்பட்டதும் நிலாவரையில் தண்ணீர் பருகி தனது தாகத்தினை தீர்த்துக் கொண்டார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊரெழுக்கிராமத்தை அடைந்தனர். அப்போது சீதைக்கு தாகம் ஏற்பட்டது. சீதையின் தாகத்தினை தீர்ப்பதற்காக ராமர் அருகில் இருந்த பொக்கணைக்கு சென்று தன்னுடைய வில்லை ஊன்றி தண்ணீரை எடுத்து சீதையின் தாகத்தினை தீர்த்தார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.
இராமர் வில் ஊன்றி தண்ணீர் எடுக்கும் போது இராமருடைய பெருவிரல் அடையாளமும் முழங்கால் அடையாளமும் தரையில் பதிந்து காணப்படுகிறது (வலக்காலை முழங்கால் படுமாறும் இடது காலை பாதம் படுமாறும் ஊன்றி தண்ணீரை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது)
இந்த பொக்கணை ஆனது பல அழிவுகளையும் ஏற்படுத்தியது. பொக்கணையின் மேற்பகுதி ஒரு சாதாரண குட்டையாக தான் காணப்படுகிறது. ஆனால் அடிப்பகுதியில் ஒரு பெரிய அகழியே காணப்படுகிறது.

அது பற்றி சில கர்ண பரம்பரைக் கதைகள் ஊர் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன.….

பொக்கணைபொக்கணைக்கு அருகில் உள்ள ஆலயத்தில் பூசை செய்யும் பூசகரின் கனவில் பொக்கணையின் அடிப்பகுதியில் ஒரு சூலம் இருப்பதாகவும் அது 8கி.கி.தங்கத்தினால் ஆனது என்றும் காட்டி இருந்தது. அதனை ஊர் மக்களிடத்தில் கூறியிருந்தார். அதனைக்கேட்டு ஒருவர் பொக்கணையின் அடிப்பகுதிக்குள் இறங்கி பார்த்துவிட்டு மேலே வந்து கூறினார் ‘ஒரு சூலம் இருப்பதாகவும் அதனை சுற்றி பாம்புகள் இருப்பதாகவும் அதுமட்டும் அல்லாது கீழே பெரிய ஆறே ஓடுகிறது எனக்கூறினார் ” பின்னர் மறுபடியும் அந்த சூலத்தினை எடுப்பதற்காக பொக்கணை அடிக்குள் இறங்கியிருந்தார். பல மணி நேரமாகியும் அவர் மேலே வரவில்லை. அவர் இறந்திருக்கலாம் என நம்பப்பட்டது.

அதுமட்டும் இல்லாது இந்த பொக்கணைக்கும் கீரிமலைக்கும் தொடர்பிருக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது. அதனை எவ்வாறு கிராம மக்கள் அறிந்தார்கள் என்றால் ஓரு தேசிக்காயினை பொக்கணைக்குள் போடும்போது அது கீரிமலை கடலில் மிதக்கின்றது என்பதாலாகும்.

கீரிமலைக் கடல் கொந்தளிக்கும் போது இவ் பொக்கணையானது தண்ணீரை வெளியில் தள்ளுகின்றது. இதனால் அக்கிராமம் வெள்ளத்தில் மூழ்கிவிடும். இவ்வாறு பல முறை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு மூழ்கும் போது அக்கிராமத்தில் உள்ள வீடுகள், ஆடு, மாடு, கோழி, மற்றும் விவசாயம் போன்றவை அழிந்துபோயின. இவ்வாறான நேரத்தில் தொடர்ந்து வெள்ளம் 56 நாட்கள் வற்றாமல் இருக்கும். அதுவரைக்கும் மக்கள் அயல் கிராமங்களில் குடியேறுவார்கள். பின்னர் கடல் கொந்தளிப்பு குறைந்ததும் பொக்கணை தண்ணீரை இழுத்துவிடும். பின்னர் மக்கள் தமது கிராமத்துக்கு வந்து குடியேறுவார்கள். இவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு பல அமைப்புகள் உதவிசெய்துள்ளன.

இந்த பொக்கணையை பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகளாக வெளிநாட்டவர்களும் சிங்களவர்களும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். தேசிய நீர் வளங்கள் வடிகால் அமைப்பு சபையினர் பொக்கணையை புனரமைத்து நீர் வழங்கும் வளமாக மாற்றி அமைத்துள்ளனர். இதற்கருகில் குழாய் கிணறுகள் அடித்து குழாய்கள் மூலம் இங்கிருந்து மானிப்பாய், சங்குவேலி, சுன்னாகம், கந்தரோடை, கட்டுடை, நவாலி போன்ற இடங்களிற்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு பயனாளிகளிடமிருந்து நீர் விநியோக அடிப்படையில் பணம் அறவிடப்படுகிறது.

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – http://oodaham.com இணையம்.

https://ourjaffna.com/famous/ஊரெழு-பொக்கணை

Link to post
Share on other sites
9 hours ago, நவீனன் said:

ஊரெழு பொக்கணை

 
 

பொக்கணை

 

ஊரெழு மேற்கு சுண்னாகத்தில் அமைந்துள்ள வரலாற்று சான்றுமிக்க ஒரு இடம் தான் பொக்கணை. இது எப்போது உருவானது என்பது பற்றி தகவல்களை அறிய முடியவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். இங்கு காணப்படும் பொக்கணையின் சிறப்பம்சம் என்னவெனில்,

ராமரும் சீதையும் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டனர் அவ் வேளையில் ராமருக்கு தாகம் ஏற்பட்டதும் நிலாவரையில் தண்ணீர் பருகி தனது தாகத்தினை தீர்த்துக் கொண்டார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊரெழுக்கிராமத்தை அடைந்தனர். அப்போது சீதைக்கு தாகம் ஏற்பட்டது. சீதையின் தாகத்தினை தீர்ப்பதற்காக ராமர் அருகில் இருந்த பொக்கணைக்கு சென்று தன்னுடைய வில்லை ஊன்றி தண்ணீரை எடுத்து சீதையின் தாகத்தினை தீர்த்தார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.
இராமர் வில் ஊன்றி தண்ணீர் எடுக்கும் போது இராமருடைய பெருவிரல் அடையாளமும் முழங்கால் அடையாளமும் தரையில் பதிந்து காணப்படுகிறது (வலக்காலை முழங்கால் படுமாறும் இடது காலை பாதம் படுமாறும் ஊன்றி தண்ணீரை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது)
இந்த பொக்கணை ஆனது பல அழிவுகளையும் ஏற்படுத்தியது. பொக்கணையின் மேற்பகுதி ஒரு சாதாரண குட்டையாக தான் காணப்படுகிறது. ஆனால் அடிப்பகுதியில் ஒரு பெரிய அகழியே காணப்படுகிறது.

அது பற்றி சில கர்ண பரம்பரைக் கதைகள் ஊர் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன.….

பொக்கணைபொக்கணைக்கு அருகில் உள்ள ஆலயத்தில் பூசை செய்யும் பூசகரின் கனவில் பொக்கணையின் அடிப்பகுதியில் ஒரு சூலம் இருப்பதாகவும் அது 8கி.கி.தங்கத்தினால் ஆனது என்றும் காட்டி இருந்தது. அதனை ஊர் மக்களிடத்தில் கூறியிருந்தார். அதனைக்கேட்டு ஒருவர் பொக்கணையின் அடிப்பகுதிக்குள் இறங்கி பார்த்துவிட்டு மேலே வந்து கூறினார் ‘ஒரு சூலம் இருப்பதாகவும் அதனை சுற்றி பாம்புகள் இருப்பதாகவும் அதுமட்டும் அல்லாது கீழே பெரிய ஆறே ஓடுகிறது எனக்கூறினார் ” பின்னர் மறுபடியும் அந்த சூலத்தினை எடுப்பதற்காக பொக்கணை அடிக்குள் இறங்கியிருந்தார். பல மணி நேரமாகியும் அவர் மேலே வரவில்லை. அவர் இறந்திருக்கலாம் என நம்பப்பட்டது.

அதுமட்டும் இல்லாது இந்த பொக்கணைக்கும் கீரிமலைக்கும் தொடர்பிருக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது. அதனை எவ்வாறு கிராம மக்கள் அறிந்தார்கள் என்றால் ஓரு தேசிக்காயினை பொக்கணைக்குள் போடும்போது அது கீரிமலை கடலில் மிதக்கின்றது என்பதாலாகும்.

கீரிமலைக் கடல் கொந்தளிக்கும் போது இவ் பொக்கணையானது தண்ணீரை வெளியில் தள்ளுகின்றது. இதனால் அக்கிராமம் வெள்ளத்தில் மூழ்கிவிடும். இவ்வாறு பல முறை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு மூழ்கும் போது அக்கிராமத்தில் உள்ள வீடுகள், ஆடு, மாடு, கோழி, மற்றும் விவசாயம் போன்றவை அழிந்துபோயின. இவ்வாறான நேரத்தில் தொடர்ந்து வெள்ளம் 56 நாட்கள் வற்றாமல் இருக்கும். அதுவரைக்கும் மக்கள் அயல் கிராமங்களில் குடியேறுவார்கள். பின்னர் கடல் கொந்தளிப்பு குறைந்ததும் பொக்கணை தண்ணீரை இழுத்துவிடும். பின்னர் மக்கள் தமது கிராமத்துக்கு வந்து குடியேறுவார்கள். இவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு பல அமைப்புகள் உதவிசெய்துள்ளன.

இந்த பொக்கணையை பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகளாக வெளிநாட்டவர்களும் சிங்களவர்களும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். தேசிய நீர் வளங்கள் வடிகால் அமைப்பு சபையினர் பொக்கணையை புனரமைத்து நீர் வழங்கும் வளமாக மாற்றி அமைத்துள்ளனர். இதற்கருகில் குழாய் கிணறுகள் அடித்து குழாய்கள் மூலம் இங்கிருந்து மானிப்பாய், சங்குவேலி, சுன்னாகம், கந்தரோடை, கட்டுடை, நவாலி போன்ற இடங்களிற்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு பயனாளிகளிடமிருந்து நீர் விநியோக அடிப்படையில் பணம் அறவிடப்படுகிறது.

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – http://oodaham.com இணையம்.

https://ourjaffna.com/famous/ஊரெழு-பொக்கணை

நல்ல கற்பனைக் கதை ?

Link to post
Share on other sites
மனங்கவர் 'ஷிலவ் சிட்டி' ஹோட்டல்
 
 
chilw1(1).jpg
கொழும்பு – புத்தளம் பிரதான வீதி மற்றும் குருநாகல் - புத்தளம் பிரதான வீதி ஆகியவற்றின் மத்தியிலேயே சிலாபம் நகரம் அமைந்துள்ளது. மீன்பிடி, இறால் வளர்ப்பு, கிறிஸ்தவ தேவலாயங்கள் மற்றும் முன்னேஸ்வரம் கோயில் உட்பட பல முக்கிய இடங்களுக்காக பிரபல்யம் பெற்ற நகரமாகவே சிலாபம் காணப்படுகின்றது.

அது மாத்திரமல்ல புத்தளம் மாவட்டத்தின் மத்திய பிரதேசமாகவும் இந்த நகரே காணப்படுகின்றது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிலாபத்தை மத்திய நகராக அல்லது இடமாற்றல் நகராக பயன்படுத்துக்கின்றனர். இவ்வாறு பல சிறப்பம்சங்களை கொண்ட சிலாபம் நகரிற்கு விஜயம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஹோட்டல்கள் முக்கியமல்லவா? அவ்வாறான ஓர் இடமே "ஷிலவ் சிட்டி ஹோட்டல்".
chilaw1(1).jpg
கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஹோட்டல், கடற்கரை மற்றும் டச் கால்வாய் ஆகியவற்றிக்கு மத்தியிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரபல்யம் பெற்ற முன்னேஸ்வரம் கோயிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தூரத்திலும் சிலாபம் நகரிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலும் இந்த ஹோட்டல் அமையப்பெற்றுள்ளது.
chilw2.jpg
சுமார் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பெற்றுள்ள இந்த ஹோட்டலில் சுமார் 26 அறைகள் உள்ளன. இந்த அறைகளில் குளீருட்டி, செய்மதி இணைப்பு அடங்கிய தொலைக்காட்சி, சுடுநீர் மற்றும் குளிர்நீர் வசதி ஆகிய வசதிகளை கொண்டுள்ளன.
தற்போது 28 அறைகள் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் 10 சுயிட் அறைகளாகும். இந்த சுயிட் அறைகளுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வழங்கப்பட்டுள்ள வசதிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
chilw3.jpg
இவற்றுக்கு மேலதிகமாக நீச்சல் தடாகம், சிறுவர் நீச்சல் தடாகம், இரண்டு பென்குயிட் மண்டபங்கள், வை.பை வசதிகளைக் கொண்ட கலந்துரையாடல் மண்டபம் ஆகியன அடங்குகின்றன. இந்த இரண்டு பென்குயிட் மண்டபங்களில் சுமார் 800 பேரும் கூட்ட மண்டபத்தில் சுமார் 80 பேரும் அமர முடியும். இவற்றில் திருமணம், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வரவேற்பு நிகழ்வுகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் செயலமர்வுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்தக்கூடிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
chila5(1).jpg
chilaw10(2).jpg
இந்த ஹோட்டலிற்கு அதிகமாக வடக்கு, கிழக்கு, மேல், தென் மற்றும் மலையகம் ஆகிய மாகாணங்களை சேர்ந்தவர்கள் வருகை தருவது வழமையாகும். இவர்கள் இந்த ஹோட்டலில் தங்கிச் செல்லும் நிலையமாகவும் ஒய்வுகளை கழிப்பதற்கான இடமாகவும் பயன்படுத்துகின்றனர்.

chilaw2(1).jpg

அதாவது தெற்கிலிருந்து வடக்கிற்கும் வடக்கிலிருந்து தெற்கிற்கும் சுற்றுலாக்களை மேற்கொள்பவர்கள் தங்கி செல்லும் இடமாக பயன்படுத்துகின்றனர். அத்துடன் ஓய்வினை கழிப்பதற்காக வருகின்றவர்களும் இந்த ஹோட்டலை பயன்படுத்துகின்றனர். இதற்கு காரணம் என்னவென்றால் இந்த ஹோட்டலினால் மேற்கொள்ளப்படுகின்ற புறா தீவு, தெதுரு ஓயா படகு சவாரி, இறால் பண்ணை, வில்பத்து தேசிய சரணாலயம், புகழ்பெற்ற சிலாபம் அனீஸ் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் முன்னேஸ்வர கோயில் விஜயம் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றமையேயாகும்.
chil5(1).jpg

இதற்கு மேலதிகமாக கற்பிட்டி கடலில் திமிங்கில பார்வை போன்ற பல சேவைகளையும் இந்த ஹோட்டல் வழங்குகின்றது. இவ்வாறு பல வசதிகளை கொண்ட இந்த ஹோட்டல், உல்லாசப் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் 24 மணி நேரமும் வழங்கி வருகின்றது.

அத்துடன் விசேட தினசரி பெக்கேஜ்கள் மிகக் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் காலைநேர தேநீர், பகல் உணவு, மாலை நேர தேநீர் மற்றும் நீச்சல் தடாக வசதி ஆகியவற்றை கொண்டுள்ளன. ஊடகவியலாளர்கள், சந்தைப்படுத்தல் முகாமையாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமை புரிவோருக்கு 30 சதவீத விசேட கழிவு இந்த ஹோட்டலில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட வசதிகளை கொண்ட இந்த ஹோட்டலின் உரிமையாளரான சிலாபம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் செல்டன் பெர்ணான்டோவின் வழிகாட்டலில் முகாமையாளர் டொனால்ட் குட்பிரிட் தலைமையிலான ஊழியர்கள் - விருத்தினர்களை மிக்க சிறந்த முறையில் வரவேற்கின்றனர்.


chilaw6(2).jpg
chilaw7(1).jpg
chilaw8(1).jpg
chilaw9(1).jpg

chilaw11.jpg

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
’குகை விகாரை’
 

image_b40860a06b.jpg

 

தம்புளையில் அமைந்துள்ள குகை விகாரையானது,  வரலாற்று சிறப்பு மிக்கதென, யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட ஒன்றாகும்.

image_cd7fe9d9b5.jpg

 

 

“தம்பா” எனப்படுவது பாறை எனவும் “உள்ள” எனப்படுவது நீருற்று எனவும் வழங்கப்படுகிறது. இங்கு இயற்கையாகவே, நீர்த் துளிகள் நிரம்பி, நீர் வெளியில் வழியாத வண்ணம் அமையப்பெற்றுள்ள, அதிசய நிகழ்வு காணப்படுகிறது. இதனை காண்பதற்காகவே ஏராளமான மக்கள் இவ்விடத்துக்கு வருகை தருவது வழமையாகும்.

image_1ffe1cbfad.jpg

 

இக்குகையில் மேல் நோக்கி பாறை முழுவதும் உள்ள ஓவியங்களை பார்க்கும் பொழுது, புத்த பகவானின் ஓவியங்கள் மிகவும் கண்களை கவரும் வண்ணம் இருப்பது சிறப்புக்குரியது என்பதுடன், அக்கால ஓவிய திறன்களை பறைசாட்டுவனவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

image_aea1edae44.jpg

 

மற்றுமொரு சிறப்பம்சம் யாதெனில், இங்கு காணப்படும் பௌத்த அருங்காட்சியகமாகும். இதன் நுழைவாயிலில் நுழையும் பொழுது சிங்கமொன்றின் தாடைகள்  விரிக்கப்பட்டு, வாய் வழியே நுழைவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளமை அற்புதமான அனுபவத்தை தருகின்றது.

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites

சுவர்க்கத்தீவின் அழகிய சில தருணங்கள்...!

 

 

ஆசியா கண்டத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நாடு இலங்கை, இந்த தனி பொக்கிஷ நாட்டில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகளின் கனவத்தை ஈர்ப்பது இயற்கை என்றால் அது மிகையாகாது.

இலங்கை ஒரு குட்டித்தீவாக இருந்தாலும் இங்கு கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்களும் ஆச்சரியங்களும் உள்நாட்டவர்களையும், சுற்றுலாப்பயணிகளையும் எப்போதும் தன் பக்கம் வசப்படுத்தும் வள்ளமை கொண்டது.

நான்கு பக்கமும் சாகரம் சூழ, மத்தியில் மலைகளும், அடர்ந்த காடுகளும் அதன் நடுவே விசாலமான நீர் வீழ்ச்சிக்களும் என ஒரு குட்டி சுவர்க்கத்தையே எம் கண் முன் காட்டிவிடுவதாய் அமைந்ததுதான் எமது தீவு.

இவ்வாறு பல அற்புத பொக்கிஷங்களை உள்ளடக்கிய எமது நாட்டில் உள்ள சில இயற்கைசார் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வான்பரப்பில் இருந்து நோக்கும்போது இந்த இடங்களின் காட்சியமைப்பு தனி அழகு கொண்டவை,

அவ்வாறான புகைப்படங்களுள் சில....

யாழ்ப்பாணம்

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

கிண்ணியா

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

தங்காலை

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

மஸ்கெலியா

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

மாரவில

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

திருகோணமலை

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

அருகம்பை

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

மின்னேரியா

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

கிரிகெட்டிய

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

ஹிக்கடுவ

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

சிவனொளிபாத மலை

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

பாராக்கிரம சமுத்திரம்

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

விக்டோரியா நீர்த்தேக்கம்

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

மிரிஸ்ஸ

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

மாத்தறை தீவு

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

சீனிகம

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

பன்வில

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

பிடவலபதன

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

சீகிரியா

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

பெந்தோட

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இராவணா எல்ல

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

தியலும

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

மதுகம

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

கவுடுல்ல

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

தேவேந்திர முனை

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

குடாவெல்ல

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

பின்னவல

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

 

http://www.tamilwin.com/special/01/187408?ref=home-feed

Link to post
Share on other sites
ரம்மியமான ஹெரிடன்ஸ் அகுங்கல
 
Ahungalla1.jpg

-றிப்தி அலி


மலையும் மலை சார்ந்த இடம், கடலும் கடல் சார்ந்த இடம் மற்றும் வயலும் வயல் சார்ந்த இடம் ஆகிய வார்த்தைகளை நாம் பாடசாலைகளில் கல்வி கற்கும் காலங்களில் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் கடலும் ஹோட்டலும் சார்ந்த இடமொன்றை கேள்விப்பட்டதே இல்லை.

அவ்வாறான ஓரிடத்திற்கே தற்போது நான் உங்களை அழைத்துச் செல்கின்றேன். அதாவது கடலும் ஹோட்டேலும் இணைந்தாக காணப்படுகின்ற ஓர் இடம் தான் ஹெரிடன்ஸ் அகுங்கல. கடலை அண்மித்த இடங்களில் ஹோட்டல்கள் காணப்படலாம்.
HA%20-%20Exterior%202.JPG
Ahungalla3.jpg
ஆனால் ஹோட்டலும் கடலும் இணைந்ததாக எங்கும் காண முடியாது. எனினும் கடலும் ஹோட்டலும் இணைந்த ஓர் இடத்திலேயே இந்த அகுங்கல ஹெரிடன்ஸ் உள்ளது. ஐந்து நட்சத்திர அந்தஸ்தினை பெற்ற இந்த ஹோட்டல் தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் உள்ளது. அதாவது அம்பலாங்கொடை நகரிற்கும் அளுத்கமை நகரிற்கும் இடையில் இந்த ஹோட்டல் உள்ளது.

கொழும்பிலிருந்து 76 கிலோ மீற்றர் தூரத்தில் காலி வீதியிலேயே ஹெரிடன்ஸ் அகுங்கல உள்ளது. 1981ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஹோட்டல் ரைட்டன் என அழைப்பட்டது.சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் இலங்கையின் பிரபல தனியார் நிறுவனமான எயிட்கன்ட் ஸ்பென்சினால் நிருவகிக்கப்படுகின்றது.
TT-Beach%20&%20Elephant%202.JPG
HA%20-%20Bed%20Room%202.jpg
HA%20-%20Pool.jpg
இந்த ஹோட்டலின் வரவேற்பு பகுதியிலேயே நீர் தடாகமுள்ளது. இந்த நீர் தடாகத்திற்கு அண்மித்த பகுதியிலேயே கடற்கரையும் உள்ளது. இரண்டு நீல நிற நீர்களும் ஒன்றினைவதனாலேயே கடற்கரையும் ஹோட்டலும் நெருங்கியதாக இந்த ஹோட்டல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஹோட்டிலிற்கான வடிவமைப்பு பிரபல கட்டிட கலைஞர் ஜெப்ரி பாபாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவரின் வடிவமைப்பிற்கு அமைய எந்தவித மாற்றங்களுமின்றியே இந்த ஹோட்டல் மிகுந்த இயற்கை அழகுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டேல் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும் இந்த அனர்த்தத்தினால் ஹோட்டலுக்கு பாரிய சேதம் ஏற்பட்டதே தவிர எந்தவித உயிர் ஆபத்தும் ஏற்படவில்லை.சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்த ஹோட்டல் 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் புனரமைக்கப்பட்டு ஹெரிடன்ஸ் அகுங்கல என பெயர் மாற்றப்பட்டது.
HA%20-%20Sunset%201.JPG
இந்த ஹோட்டலிற்கு சுவிற்ஸர்லாந்து, ஜேர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்தே அதிக சுற்றுலா பயணிகள் வருவது வழமையாகும். இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக இந்த ஹோட்டலுக்கு தங்களின் விடுமுறையினை கழிப்பதற்காக விஜயம் செய்வது வழமையாகும். 

இதற்கு மேலதிகமாக உள்ளூர் சுற்றுலா பயணிகளும் இந்த ஹோட்டலுக்கு விஜயம் செய்கின்றனர். இவர்களுக்கு ஏற்ற வகையில் விசேடமாக பல வகையான பக்கேஜ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு ஏற்றவகையில் தெரிவு செய்வதற்கான சிறந்த பக்கேஜ்கள் குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.

152 அறைகளை கொண்டுள்ள இந்த ஹோட்டலில் 128 டிலக்ஸ், 15 லக்ஷரி, 5 சுட் மற்றும் 4 லக் சுட் ஆகிய வகையான அறைகள் உள்ளன. இந்த சுயிட் அறைகளில் இரண்டுக்கு மாத்திரம் சேர் ஹிலிப் ரிச்சர்ட் மற்றும்; டெண்டுல்கர் என பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் லக்ஷரி அறையில் தங்குபவர்கள் நேரடியாக கடலை பார்வையிட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Heritance%2019.JPG
HA%20-%20Infinity%20Pool.JPG
இந்த அறைகளில் மின் விசிறி, ஏ.சீ, மினி பார், வைபை, வானொலி பெட்டி, சவர், பாத், எல்.சீ.டி. சடலைட் தொலைக்காட்சி, உள்நாட்டு - வெளிநாட்டு தொலைபேசி சேவை மற்றும் தேநீர் தயாரிப்பு உபகரணம் ஆகியன உள்ளன. இவற்றுக்கு மேதிகமாக லொன்டிரி சேவை, வைத்தியர் சேவை, ஜிம், கார் சேவை, குதிரை மற்றும் யானை சவாரி ஆகியனவும் உள்ளன.

அத்துடன் மூன்று உணவகங்களும் ஐந்து பார்களும் இங்கு உள்ளன. இதன் பிரதான உணவகத்திற்கு யூட் எனவும் ஏனையவற்றிற்கு மஸ்ராட், அப்ப றூம் (பைன் டைனிங்) எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாக்குஸ், பூல், வோல், அப்போலோ மற்றும் ஒபியஸ் ஆகிய பெயர்களில் பார்களும் உள்ளன.
HA%20-%203.JPG

இதற்கு மேலதிகமாக நீச்சல் தடாகம், பிலியர்ட்ஸ், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், வலைப்பந்தாட்டம், ஸ்பா மற்றும் 24 மணி நேர இணையத்தள சேவையுடன் கூடிய நூலகம் ஆகிய வசதிகளும் காணப்படுகின்றன. திவ்யான ஸ்பா சேவை இலங்கை சில இடங்களில் மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் இந்த ஹெரிடன்ஸ் அகுங்கலவும் ஒன்றாகும்.

இங்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தாய்லாந்து மற்றும் பாலி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களினாலேயே இந்த வகையான ஸ்பா சேவை மேற்கொள்ளப்படுகின்றது. இந்த ஹோட்டேல் இரண்டு கூட்ட அறைகளையும் கொண்டுள்ளது. இவற்றிற்கு காங்கிரஸ் மற்றும் மினி காங்கிரஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாரம்பரிய கலை அம்சத்தினைக் கொண்ட இந்த ஹோட்டல் உணவுக்கு பிரபல்பயம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஹோட்டலிற்கு விஜயம் செய்பவர்கள் வெப்ப வளி பலூன் சவாரி, மாது கங்க ஆற்று சவாரி ஆகியவற்றை அனுபவிப்பதுடன் அம்பலாங்கொடை முகமூடி நூதனசாலை, காலி கோட்டை மற்றும் ஹிக்கடுவை முருகைக்கற் பாறை, மெட்டியாகொடை மூன் ஸ்டோன் மைன் மற்றும் திமிங்கிலங்களை பார்வையிடும் வாய்ப்பு ஆகியனவும் உள்ளது.

இவற்றிற்கு மேலதிகமாக வெளிநாட்டவரின் திருமணங்களை நடத்துவதிலும் இந்த ஹோட்டல் பிரபல்யம் பெற்றுள்ளது. இதுவரை பல வெளிநாட்டு பிரஜைகளின் திருமணங்கள் இந்த ஹோட்டலில் இடம்பெற்றது. அது மாத்திரமல்லாமல் உள்நாட்டு பிரஜைகளின் திருமணங்களும் இங்கு இடம்பெறுவது வழமையாகும்.

சுற்றுலா பயணிகளின் நன்மைகருதி நகைக்கடை, கைவினைத்திறனினால் உருவாக்கப்பட்ட பொருட்களின் கடை ஆகியனவும் உள்ளன. மேற்குறிப்பிட்ட வசதிகளை கொண்ட இந்த ஹோட்டலின் பொது முகாமையாளராக கடமையாற்றுகின்ற ரெப்ஹான் என். ரசீனினின் தலைமையிலான ஊழியர்கள் - விருத்தினர்களை மிக்க சிறந்த முறையில் வரவேற்கின்றனர்.

புதுவருட விடுமுறை ஆரம்பிக்கும் இந்த தருணத்தில் இப்பொழுதே இந்த ஹோட்டலை நீங்கள் தெரிவுசெய்து கொண்டால் புதுவருட விடுமுறையினை மகிழ்ச்சியாக கழிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 0094915555000 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் gm.ahu@heritancehotels .com என்ற மின்னஞ்சல் ஆகியவற்றின் ஊடாக தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.
Ahungalla2.jpg

HERITANC%2020.JPG
HERITANC%2030.JPG

Heritance%2027.JPG
Heritance%2044.JPG
HERITANC%2028.JPG
Heritance%2024.jpg
Heritance%2018.JPG
 

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
’இராவணன் எல்லை’
 

image_f5a8ce0c3b.jpg

 

 

இராவணன் நீர்வீழ்ச்சியானது இலங்கையின் ஊவா மாகாணத்தில், கிரிந்தி ஓயாவுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்லை – வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. அத்துடன் வீதியில் நின்றடியே இதனை பார்வையிட முடியும்.  

image_a166e01145.jpg

 

 

இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டு நிலக்காடாகும். இந்நீர்வீழ்ச்சியானது, மூன்று படிநிலைகளில் பாய்கிறது. முக்கிய பாய்ச்சல் 9 மீற்றர் மட்டுமேயாகும்.  மேலும் நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பாறையில் அமைந்துள்ளது. எனவே பாறை அரிப்பு துரிதமாக ஏற்படும் நிலை காணப்படுகின்றது.

image_a6cdfbe953.jpg

 

 

இராவணன் நீர் வீழ்ச்சியானது, இந்துக்களின் இதிகாச கதையான, இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்றுதொட்டு இருந்து வரும்  நம்பிக்கையாகும். அத்துடன் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த இடங்களில் இராவணன் எல்லையும் ஒன்றாகும்

http://www.tamilmirror.lk/

Link to post
Share on other sites
கண்டி இந்திரா மானெல் ஹோட்டல்
 
 
DSC_0214.JPG
கண்டி, தெல்தெனிய மகாவலி கங்கைக்கு அருகில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் மிகவும் அழகான மலைப்பகுதியில் அமைந்துள்ளது இந்திரா மானெல் ஹோட்டல். போர்த்துக்கேயர்களால் கொக்கோவா தோட்டம் என்று இப்பகுதி அழைக்கப்பட்டிருந்தது.

கறுவா, மிளகு போன்ற சிறு ஏற்றுமதிப் பயிர்கள் நிறைந்த இப்பகுதி, காட்டு விலங்குகளான முள்ளம்பன்றி, முயல்கள், மான்கள் உள்ளிட்ட பலவகை பறவைகள் நடமாடும் ரம்மியமான இடமாகவும் திகழ்கிறது. நீச்சல் தடாகம் போன்று இயற்கையாக அமையப்பெற்றுள்ள ஆறு இவ்விடத்துக்கு மிகவும் புத்துணர்ச்சியையும் குளிர்ச்சியையும் வாரி வழங்குகின்றது.

டபள், ட்ரிபல், குடும்ப சகிதம் தங்கக்கூடிய வகையில் 23 படுக்கையறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் ஏசி கொண்ட படுக்கையறையொன்றுக்கு 5500 ரூபாவும் ஏசி அற்ற படுக்கையறையொன்றுக்கு 3300 ரூபாவும் அறவிடப்படுகின்றது. சுமார் 500 பேர் அமரக்கூடிய வகையில் தலா இரு திருமண மண்டபங்கள் இங்கு அமையப்பெற்றுள்ளன.

மீமூரே கொல்ப் மைதானம், விக்டோரியா பூங்கா, மகியங்கனை, பல்லேகல விளையாட்டு மைதானம், தெகல்தொருவ விகாரை உள்ளிட்ட முக்கியத்துவம்வாய்ந்த இடங்கள் பல இந்த ஹோட்டலுக்கு அருகாமையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


DSC_0215.JPG
DSC_0218.JPG
DSC_0226.JPG
DSC_0227.JPG
DSC_0230.JPG
DSC_0241.JPG
DSC_0253.JPG
DSC_0259.JPG
DSC_0518.JPG
DSC_0576.JPG
DSC_0669.JPG
DSC_0670.JPG
 

http://www.tamilmirror.lk/

Link to post
Share on other sites
’சிங்கராஜா வனம்’
 
 

image_2c3f4498a4.jpg

 

 

சிங்கராஜா வனம் இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட, மிகப் பெரிய தேசிய வனமாகும். இது இலங்கையின் சப்ரகமுவ, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது.

image_3165b2a956.jpg

 

 

சிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீற்றர் தொடக்கம் 1170 மீற்றர் உயரம் கொண்ட அயன மண்டல மழைக்காடாகும். இக்காட்டின் உயிரினப் பல்வகைமை மிக அதிகமாகும். இதன் உயிரியல் முக்கியத்துவம் காரணமாக 1988ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் உலக உரிமை தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உள்ளாசப் பிரயாணிகளிடையே மிக பிரசித்தமான தளங்களில் ஒன்றாகும்.

image_77b098bd9b.jpg

 

 

இன்றைய சிங்கராஜா வனத்தின் பெரும்பகுதி 1875 ஆண்டு மே 8 ஆம் நாள், சிங்கராஜா வனம் இயற்கை ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேலும் பல பகுதிகள் இதற்குள் இணைக்கப்பட்டன. அத்துடன்  ஏப்ரல் 1978 ஆம் ஆண்டு இது உயிரின ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 1988 அக்டோபர் 21 ஆம் திகதி, இலங்கையின் தேசிய உரிமை காடாக இது அறிவிக்கப்பட்டது.

இது இலங்கையின் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளதுடன், சிங்கராஜா வனப்பகுதியில், ஆண்டுக்கு சராசரி வெப்பநிலை 23.6 செல்சியஸ் ஆகும். மே மாதம் தொடக்கம் ஜுலை வரை தென்மேற்குப் பருவக் காற்று மூலமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவக் காற்று மூலமும் இக்காடு மழையைப் பெறுகின்றது. ஆண்டுக்கு சராசரியாக 2500 மில்லிமீற்றர் மழை இங்கே பொழிகின்றது.

image_52c14cbc1e.jpg

 

 

இவ்வனப்பகுதியை பார்வையிடுவதற்காக வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்த வண்ணமே உள்ளது.

http://www.tamilmirror.lk/

Link to post
Share on other sites
வஸ்கமுவ தேசிய பூங்கா
 
 

image_35f4bd3ec7.jpg

 

இலங்கையின் பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் இயற்கைப் பூங்காவாகும். இப்பூங்கா 1984 ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி திட்டத்தின்போது, இடம்பெயர்ந்த காட்டு விலங்குகளை பாதுகாக்க மற்றும் அடைக்கலம் செய்யும் நோக்கத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது அத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நான்கு தேசிய பூங்காக்களில் ஒன்றாகும்.

image_0a0db4e63b.jpg

 

 

யானைகளை பெரிய கூட்டங்கூட்டமாக காணக்கூடிய, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வஸ்கமுவயும் ஒன்றாகும். மேலும், இது இலங்கையிலுள்ள முக்கிய பறவை பகுதிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.

image_c52a27e50b.jpg

 

முதலாம் பராக்கிரமபாகு மூலம் கட்டப்பட்ட மலகமுவ, வில்மிடிய, டஸ்தொட்ட போன்ற நீர்ப்பாசன குளங்களின் இடிபாடுகள் மற்றும் கலிங்கா, யோதா எல கால்வாய் என்பன இத்தேசிய பூங்காவில் எஞ்சியுள்ளன. பண்டைய காலத்தில் மினிப்பே அணைக்கட்டின், இடது கரை கால்வாயிலிருந்து பராக்கிரம சமுத்திரத்திற்கு அம்பன் கங்கை மூலம் பாய்ச்சப்பட்ட நீரானது வஸ்கமுவ ஊடகவே செல்லக்கூடியவாறு நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

image_7c762f36c6.jpg

 

வஸ்கமுவ தேசிய பூங்காவனது, 23 வகையான பாலூட்டிகளுக்கு உறையுள்ளாக காணப்படுகிறது.  இங்கு 150 இலங்கை யானை கூட்டங்களால் குடியிருக்கப்படுகிறது. சதுப்பு நில யானைகள் மகாவலி ஆற்றுப்பகுதியில் சுற்றித்திரிகின்றன. மேலும் பூங்காவில் தென்படும் குரங்குகள் இலங்கைக்கே உரித்தானவையாகும். அதே வேலை நீர் எருமை மற்றும் இலங்கை அச்சு மான் என்பன பொதுவாக காணக்கூடியவையாக உள்ளன. இலங்கை சிறுத்தை மற்றும் கரடி என்பன அரிதாகவே உள்ளன.

image_aa75834fd8.jpg

 

இப்பூங்காவில் பதிவு செய்யப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை 143 ஆகும். இவை 8 தனிச்சிறப்பான இனங்களை உள்ளடக்கியுள்ளது. சில பிரதேசங்களில் அரிதாக காணப்படும் செம்முக பூங்குயிலானது இப்பூங்காவிட்கே உரிய குடியுரிமை பறவை என்பது சிறப்புக்குரியதாகும்.

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites

யாழில் இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் Thinnai orginc farm

 

நவீன மயமாக்கப்பட்டு வரும் இன்றைய உலகில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமானதும் சுகாதாரமானதுமான இயற்கை சூழலோடு ஒன்றித்த வாழ்வியல் அனுபவத்தை வழங்குகின்றது Thinnai orginc farm.

IMG_9167-01.jpg

திரு.ஜெயசீலன் ஞானம்ஸ் இன் சிந்தனையில் உருவான இவ் பசுமை செயற்திட்டமானது யாழ்ப்பாணத்தில் பரந்த நிலப்பரப்பில் கட்டமைக்கப்பட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகின்றது.

இவ் இயற்கை சூழலோடு இணைந்த வாழ்வியல் அனுபவத்தை நாங்களும் ஒருமுறை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பொன்றை அந் நிறுவனம் எமக்கு வழங்கியிருந்த்து.

IMG_9178-01.jpg

யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள திண்ணை ஹோட்டலில் இருந்து 11 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இப் பண்ணைக்கு 15 நிமிடத்தில் சென்றுவிட முடியும். இதற்கான வாகன ஒழுங்குகளையும் இவர்களே செய்து தருகின்றார்கள்.

இப் பண்ணையானது இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டிருந்த்து. இதற்காக பொன் விளையும் பூமி என்று விவசாயிகளாலும் யாழ்.மக்களால் புகழப்படும் வலிகாம்ம் வடக்கில் பத்து ஏக்கர் நிலப்பரப்பானது தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கேயே இவ் இயற்கை பண்ணை (Thinnai organic farm) அமைக்கப்பட்டுள்ளது.

IMG_9192-01.jpg

ஆரம்பத்தில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே இது தொடங்கப்பட்டிருந்த்து. இங்கே உள்ள பத்து ஏக்கர் நிலப்பரப்பில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பு வேளான்மைக்காக பயன்படுத்தப்படுகின்றது. 

IMG_9201-01.jpg

தற்போது எமது பண்டைய விவசாய முறைகள் வழக்கொழிந்து சென்று நவீன இரசாயன கலந்த விவசாய முறைகள் பரவத் தொடங்கவிட்ட இக் காலத்தில், இப் பண்ணையில் இரசாயன பசளைகளற்ற இயற்கை முறையிலான விவசாய நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனூடாக தமது வாடிக்கையாளர்களுக்கு உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த பசுமையான உணவுகளை வழங்கிவருகின்றார்கள். குறிப்பாக இங்கு இலங்கையில் பயிரிடப்படுகின்ற மரக்கறிகளில் இம் மண்ணில் பயிரிடப்படக்கூடிய அனைத்து மரக்கறிகளும் பயிரிடப்பட்டு வருகின்றது. அதேபோன்று பழ வகைகளும் பயிரிடப்பட்டு வருகின்றன.

IMG_9206-01.jpg

இன்னும் ஒராண்டுகளில் இயற்கையான மாம்பழங்களை உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை தவிர விலங்கு வேளாண்மையும் இங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் ஆடு போன்றனவும் இப் பண்ணையில் அதற்கேற்ற வாழ்வியல் சூழல் அமைப்பில் சுகாதார முறைப்படி வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. 

IMG_9221-01.jpg

இதனூடாக இங்கே நேரடியாக 15 தொடக்கம் 20 வரையானவர்களும் மறைமுகமாகவும் அதே அளவிலானவர்களும் வேலைவாய்புக்களை பெற்று வருகின்றார்கள்.

இவ்வாறு பசுமையாக இயற்கையான முறையில் இங்கே உற்பத்தியாக்கப்படும் வேளாண்மை பொருட்கள் அனைத்தும் தின்னை ஹோட்டலிற்கே விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

IMG_9227-01.jpg

இவை தவிர ஆரோக்கியமான சுகாதர முறையிலான இம் மரக்கறி தேவைப்படுகின்றவர்களுக்கு இதனை கொண்டு சேர்க்கும் வகையில் எதிர்காலத்தில் கீல்ஸ் சூப்பர் மாக்கெட்டில் இதனை பெற்றுக்கொள்ள கூடிய ஒழுங்களும் செய்யப்பட்டுள்ளன.

தற்போது மின்னஞ்சல் மூலமாக இங்குள்ள மரக்கறி மற்றும் வேளாண்மை பொருட்களை தெரிவு செய்து பதிவு செய்வதனூடாக அவற்றை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் குளிரூட்டி வசதியுள்ள பேரூந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்படவும் அதனை வாடிக்கையாளர்கள் புதிய மரக்கறிகளாகவே அங்கு பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

IMG_9243-01.jpg

இந்நிலையில் இங்கு வேளாண்மை மாத்திரமன்றி பசுமையான சூழலில் அமைந்த வாழ்விட அனுபவத்தை Thinnai organic farm வழங்குகின்றது. அதற்காக இங்கே “பசுமை, மருதமுனை” ஆகிய இரண்டு வித்தியாசமான வீடுகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவ் வீடுகள் மற்றும் கட்டிக் கலையானது யாழ்ப்பாணத்து மக்களது வாழ்வியலை எடுத்துக் காட்டுகின்ற வகையில் அவர்களது கட்டிடக் கலையினை மையப்படுத்தி சிறந்த வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

IMG_9246-01.jpg

இவை தவிர 09 கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதனுள் சௌகரியமான படுக்கை, சிறிய அலுமாரி, மின் விசிறி, போன்றனவும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் இவற்றுக்கான குளியலறை தொகுதியானது பொதுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவை யாவும் அப் பண்ணையில் முற்றிலும் மரங்கள் சூழ்ந்த பகுதிகளின் நடுவேயே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கே தங்கியிருப்பது மகிழ்ச்சிகரமானதும், புதுமையானதுமா அனுபவத்தை வழங்குவதாக உள்ளது.

IMG_9256-01.jpg

பண்ணையின் நடுவில் சுமார் 500 பேர் பங்குகொள்ள கூடிய விசாலமான “சாந்தம்” கட்டிடம் காணப்படுகின்றது. இதனை சுற்றி முற்றிலும் பசும் புற தரை காணப்படுவதுடன் பெரிய நீர் நீர் நிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விஷேட நிகழ்வுகள் கொண்டாட்டங்களை நடாத்த கூடிய வகையில் ஒலைக் கூரைகளை கொண்ட அழகிய சிறு சிறு கொட்டகைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இங்கே தங்கியிருந்து பொழுதை கழிக்க வருவோர் இப் பண்ணையில் தாமாகவே சென்று தமக்கு தேவையான மரக்கறிகளையும் பழங்களையும் மாமிச உணவுகளையும் அங்கிருக்கும் தோட்டக்கார்ர்களிடம் பெற்று வந்து தமக்கு பிடித்தால் போல சமையல்கார்ர்களூடாக சமைத்து உண்ணக்கூடிய வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.

அத்துடன் உணவை பச்சையாகவே தீயல் வாட்டி உண்ணும் BBQ வசதிகளும் வழங்கியிருக்கின்றார்கள்.

இவை தவிர உடலுக்கு ஆரோக்கிம் தரும் வகையில் காலையில் நடை பயிற்சியும், யோகசன பயிற்சிகளும் ஆயுள்வேத சிகிச்சைகளும் இங்கு வழங்கப்படுவதுடன் சிறுவர்களுக்கான சித்திரம் வரைதல், பட்மின்டன் போன்ற விளையாட்டுக்களை விளையாடவும் சந்தர்ப்பத்தை வழங்குகின்றார்கள்.

எமது முன்னோரது இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறைகள் முற்றாக அழிவடைந்து கிராமங்கள் அனைத்தும் நகரகங்களாகிவிட்ட இன்றைய காலத்தில், தனது வாடிக்கையாளர்களுக்கு மீளவும் அச் சுகமான வாழ்க்கை அனுபவத்தை வழங்குவதில் திண்ணை ஹோட்டல் நிறுவனத்தினர் சிறப்பாகவே செயற்படுகின்றார்கள் என்பதை நீங்களும் ஒரு முறை உங்கள் குடும்பத்தாருடன் அங்கு சென்று வந்தால் தெரிந்துகொள்வீர்கள்.

http://www.virakesari.lk/article/37504

Link to post
Share on other sites
 • 2 weeks later...
’பின்னவல சரணாலயம்’
 

image_7a7e031622.jpg

 

இலங்கையில் அமைந்துள்ள அனாதை யானைகளைப் பராமரிக்கும் ஒரு சரணாலயம் இதுவாகும். இங்கு சுமார் அறுபதற்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த யானைகளில் பெரும்பாலானவை தாயினால் கைவிடப்பட்ட குட்டிகள் அல்லது அனாதையாக்கப்பட்ட குட்டிகளாகும்.

image_dd71ee79fe.jpg

 

 

1975 இல் சுமார் 25 ஏக்கர் தென்னம் தோப்பு காணியில் மகா ஓயாவை ஒட்டி இந்தப் சரணாலயம் அமைக்கப்பட்டது. அந்த நாட்களில், முதன்மையாக இங்கு தாய் கொலை செய்யப்பட்ட யானைகள் அல்லது குழியினுள் அகப்பட்டு, தாய் இறந்தபின் அனாதையான யானைகள் என்பன பராமரிக்கப்பட்டன.

image_b1924527e1.jpg

 

 

ஆரம்பத்தில் வில்பத்து பிரதேசத்திலுள்ள தேசிய பூங்காவில் இந்த அனாதை யானைகள் சரணாலயம் இருந்தாலும், பின்னாளில் பெந்தோட்டைப் பிரதேசத்தில் இந்த அனாதை யானைகளின் மடம் அமைக்கப்பட்டது.

image_5204742766.jpg

 

ஆயினும், மீளவும் தெஹிவளை விலங்கியல் பூங்காவுக்கு இந்த சரணாலயம் மாற்றப்பட்டது. தெஹிவளை விலங்கியல் பூங்காவில் இருந்து இறுதியாக பின்னவல எனும் இடத்திற்கு இந்த சரணாலயம் மாற்றப்பட்டது. இந்த சரணாலயத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் இந்த சரணாலம் நிர்வகிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
’பெத்தகன ஈரநிலப் பூங்கா’
 

image_f0984f5da4.jpg

 

இலங்கையின் தலைநகரான ஜயவர்தனப்புர கோட்டையில், அமையபெற்றுள்ள ரம்மியமிக்க சுற்றுலா தளமே, "பெத்தகன வெட்லன்ட்" என்றழைக்கப்படும் ஈரநில பூங்காவாகும்.
 

image_683b5304b2.jpg

 

 

தியவன்ன ஓயாவை சுற்றி, கொழும்பு நகர் பகுதியில் அமைந்துள்ள இப்பூங்காவானது, காண்பதற்கரிய பல வகையான மரஞ்செடி,கொடிகள் மற்றும் பல இன பறவைகள் என்பவற்றுடன் நீர்வாழ் உயிரினங்களையும் பார்வையிடக்கூடிய வாய்ப்பு பலருக்கும் கிடைக்கின்றது. கொழும்பு நகர் பகுதியில் இத்தகைய இயற்கை சூழலைப் பார்வையிட முடிகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
image_e1d332758a.jpg

 

 

ஏழு வகையான பாலூட்டியினங்கள், இருபத்தெட்டு வகையான ஊர்வன என்பவற்றுடன் பட்டாம்பூச்சிகளின் பிரத்யேகமான வகைகள் என, பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அத்துடன் புலம்பெயர் பறவைகளின் இருப்பிடமாகவும் பெத்தகன ஈரவலயப் பூங்கா அறியப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து வருகை தரும் ஏராளமான பறவை இனங்கள் இப்பூங்காவை இருப்பிடமாகவும் கொள்கின்றமையால், இது "பறவைகள் சரணாலயம்" எனவும் அழைக்கப்படுகிறது.

மேலும் பிறிதொரு சிறப்பம்சம் யாதெனில், இவ்விடம் புகைப்படக்கலைஞர்களுக்கான சொர்க்கப்புரியாகவும் விளங்குகின்றது.
பூங்காவின் முதல் நுழைவாயிலை அண்மித்ததும், முதலில் காணக்கிடைப்பது பல்லின மரங்களையாகும். ஒவ்வொரு மரங்களும் வேலிகளடைத்து, பராமரிக்கப்பட்டு இருப்பதுடன், அவற்றின் பெயர்களை மும்மொழிகளிலும் மட்டுமின்றி, அவற்றுக்கே உரித்தான விஞ்ஞானப் பெயர்களுடனும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

image_a6ecf3f66c.jpg

 

 

வில்வம், வெரளி, மதுரை, ஜம்பு, காமரங்கா உட்பட பலவகை தாவரங்களை இங்கு காணலாம். அவற்றை தொடர்ந்து மேலும் உள்ளே செல்லும் போது, பூங்காவுக்கு உரித்தான "பூங்கா பள்ளி"யுடன் (Park School) இரண்டாவது நுழைவாயில் காணப்படும். அங்கு சென்று நுழைவுச்சீட்டைப் பெற்ற பின்னர், பரிசோதனைகளனைத்தும் முடிக்கப்பட்டு, உள்ளே செல்ல அனுமதிக்கப்படும். அங்கு பிளாஸ்டிக், பொலிதீன் பக்கட்டுக்கள் என்பன முற்றிலும் தடை செய்யப்பட்டவைகளாகும். இதற்கான காட்சி பலகைகள் மற்றும் சுற்றுநிரூபங்கள் என்பவற்றுடன் பூங்காவில் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவையென்பன என்ற வாசகங்களும் காட்சிப்படுத்தப்பட்டு, பொருத்தப்பட்டிருக்கும்.

image_cde4ffe24b.jpg

 

 

உள்நுழைகையில், அங்கு பெயரிடப்பட்ட குறிப்பு பலகைகளைக் காணமுடிகிறது. அவை குறித்த இடத்துக்கே உரித்தான சிறப்பை, பிரதிபலிப்பதாக விளங்குகின்றன.

image_03c2c39228.jpg

 

 

பயணம் ஆரம்பமாகும் இடம் முதல், பலகைகளால் அமைக்கப்பட்டிருக்கும் முடிவற்ற நீண்டப்பாதை நம்மை பூங்காவுக்குள் அழைத்துச் செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றமை, பூங்காவுக்குள் செல்லும் ஆர்வத்தை மேலும் மேலும் அதிகரிக்கிறது.

image_92a84ee758.jpg

 

 

இவற்றை அடுத்து முதலில் சென்றவுடனையே நம்மை "பட்டாம்பூச்சிகள் நடைப்பாதை" (Butterfly Walk) வரவேற்கும். எண்ணுக்கடங்காத ஏராளமான மற்றும் விதவிதமான வர்ணங்களில் பட்டாம்பூச்சிகளை இரசித்த வண்ணம் நமது பயணம் ஆரம்பமாகும்.

image_a7cbf97dfc.jpg

 

 

சிறிது தூரம் சென்றதும், மிகவும் விசாலமான "அன்னக் குளம்" (Duck Pond) ஐ காணலாம். குளம் முழுதும் நிரம்பி காணப்படும் வெந்தாமரை மலர்களுடன், அதில் சுற்றி திரியும் அன்னப் பறவைகளையும் கண்டு இரசிக்கலாம். அவற்றை இடையூறு செய்யாத வண்ணம் விரும்பிய வகையில் புகைப்படங்கள் எடுத்துகொள்ள முடியும். அதனை தொடர்ந்து நடைப்பாதை வழியே மேலும்  செல்கையில், அன்னக் குளத்துக்கு மத்தியில் மிகவும் உயரமாக அமைக்கப்பட்டிருக்கும் " பார்வையாளர்கள் கோபுரம்"  ஒன்று நம் கண்களுக்கு தென்படும்.

image_4a6167526a.jpg

 

 

அதன் மீது ஏறி நின்று, தியவன்ன ஓயாவினதும் ஈரலலயப் பூங்காவினதும் உச்சகட்ட அழகினை இரசிக்கக்கூடியதுடன் பல்வகை பறவை இனங்களையும் உயர் நிலையிலிருந்து பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைக்கும் என்றால் மிகையாகாது.

image_2316d32241.jpg

 

 

அங்கிருந்து புறப்பட்டு செல்கையில், அடுத்து நாம் காணக்கூடியது "தியவன்ன நடைப்பாதை" (Diyawanna Walk) ஆகும். இதுவரை பார்வையிட்ட இடங்களைக் காட்டிலும், இவ்விடம் மிகவும் பிரம்மிப்பூட்டக்கூடியதாகும். அதாவது, இதற்குள் செல்ல செல்ல இருமருங்கிலும் அடர்ந்த காட்டுக்குள் நுழையும் அனுபவத்தை பெற்றுகொள்ளலாம். சதுப்பு நிலத்தில் நெளிந்து வளைந்து காணப்படும் மரம் கொடிகளின் வழியே பாதை நீண்டு சென்றுகொண்டே இருக்கும். ஆங்காங்கே நீர் பாம்பு, தவளை மற்றும் முதலை போன்ற நீர்வாழ் உயிரினங்களையும் காணக்கூடிய சந்தர்ப்பம் கிட்டும் என்பதோடு ஒருபுதுவித கிளர்ச்சி கொள்ளும் உணர்வையும் நம்மில் ஏற்படுத்தும்.
image_c54fa1b151.jpg

 

 

மனதை பரவசமூட்டும் இவ்வனுபவத்தைபெற்றவாறே தொடர்ந்து செல்லலாம். அடர்த்தியான மரங்கள், கொடிகள் மற்றும் புதர்களைக் கடந்து செல்கையில், பாதை பெரும்பாலும் நிழல் தரக்கூடியதாகவே காணப்படும் என்பதால், நண்பகலில் கூட அங்கு செல்லலாம்.

image_69a3b2a175.jpg

 

 

இறுதியாக காணக்கூடியது "பார்வை இடம்" (Look Point) ஆகும். இங்கு தான் மிக பிரம்மாண்டமாக விரிந்து கிடக்கும் தியவன்ன ஓயாவின் முழு  பரப்பையும் கிடை தோற்றத்தில் இருந்து காணமுடியும். இதில் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய பாலத்தின் வழியே நின்று, அள்ளி வீசும் குளிர் காற்றை அனுபவித்த வண்ணம், ஓயாவினது அழகை மனங்குளிர இரசிக்க முடியும்.

image_e88aeeac92.jpg

 

 

அதன் பிறகு “வனப் பகுதி” (Forest Trail) க்குள் பிரவேசிக்கமுடியும். இதுவரை நேரமும் அமைக்கப்பட்டிருந்த மென்மையான பாதையமைப்பு மாற்றமுற்று, இயற்கை மண்தரையை அடையலாம். இதில் தொடர்ந்து பயணிக்கும் பொழுது, ஒருவித திகில் அனுபவத்தை பெறமுடியுமென்றே கூறமுடியும். அங்கிருந்து புறப்பட்டு செல்கையில், மீண்டும் இரண்டாவது நுழைவாயிலுக்கு வந்து, எமது பயணத்தை முடித்துக் கொள்ளலாம்.

image_58447a99f4.jpg

 

 

இந்நுழைவாயிலை தொடர்ந்து இறுதியாக நாம் பார்வையிடக்கூடியது, “புலம்பெயர் பறவைகள் பகுதி” (Migratory Bird Trail) ஆகும். இது பயணத்தின் தொடக்கத்தில், நாம் கண்ட பூங்கா பள்ளிக்கு எதிராக அமையபெற்றுள்ளது. இங்கு தான் ஏராளமானப் பறவையினங்களை மிக அதிகளவில் பார்வையிடலாம். அவற்றில் பெரும்பாலனவை புலம்பெயர் பறவைகளாகும். ஆகையினால் தான், இப்பூங்காவை பறவைகள் சரணாலயம் என்ற பெயரிலும் அழைக்கின்றனர். பறவைகள் காதலர்களுக்கு இப்பூங்கா ஏற்ற இடமாக விளங்குகிறதென்றே கூற வேண்டும்.

image_bdb80c39eb.jpg

 

 

இதற்கு அண்மித்த பகுதியில் தொடர்ந்து முன்னேறி செல்கையில், புதிதாக நடப்பட்ட பலவகை பூவினங்களைக் காணக்கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது. பலவதமான வர்ணங்களில் மலர்ந்து விரிந்திருக்கும் மலர்களை ஒரே இடத்தில் பார்க்க கிடைப்பது, மிக அரிதான சந்தர்ப்பமாகும். ஆனால் இப்பூங்காவின் மூலமாக கிடைத்தற்கரிய இவ்வாய்ப்பை பெற்றுகொள்ளமுடிகிறது.

image_6eae557daa.jpg

 

கொழும்பு நகர் பகுதியில் இத்தகைய இயற்கை சூழலுடன் அமையபெற்றுள்ள ஓர் சுற்றுலா தளத்தை காணக்கூடியமை, மகிழ்ச்சியை அளிக்கிறது என்பதுடன், அனைவரும் கட்டாயம் சென்று பார்வையிடுவதால் நிச்சயமாக ஒரு புதுவித அனுபவத்தை பெற்று கொள்ளலாம் என்பது நிதர்சனமாகும்.

http://www.tamilmirror.lk

Link to post
Share on other sites
 • 3 weeks later...

இலங்கையில் ஒளிந்திருக்கும் விசித்திரமான ஹோட்டல்! உலகளாவிய ரீதியில் முன்னிலை

 

உலகிலுள்ள விசித்திரமான ஹோட்டல்களில் முதல் பத்து இடங்களுக்குள் இலங்கையிலுள்ள ஹோட்டல் ஒன்று தெரிவாகி உள்ளது.

உலகின் முதல் 10 விசித்திரமான ஹோட்டல்களின் தரவரிசை TripAdvisor வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் பயண மதிப்பீடுகள், மதிப்பீடுகளின் தரம் மற்றும் பயணிகள் பயணிக்கும் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கமான ஹோட்டல்களுக்கு மேலதிமாக வித்தியாசங்களை பார்க்க விரும்பும் பயணிகளுக்கு, உலகெங்கிலும் உயர்ந்த தரம் வாய்ந்த விசித்திரமான மற்றும் அற்புதமான ஹோட்டல்களை TripAdvisor வெளிப்படுத்தியுள்ளது.

அதற்கமைய இந்த பட்டியலில் இலங்கை ஹோட்டல் ஒன்று 8வது இடத்தை பிடித்துள்ளது.

இலங்கையின் புத்தல பகுதியில் உள்ள கும்புக் நதி ஹோட்டலே இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

யால தேசிய பூங்காவுக்கு அருகில், அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உள்ள இந்த ஹோட்டலில் ஒரு நாள் இரவுக்கு 186 டொலர் அறவிடப்படுகின்றது.

யானை வில்லா என்று அழைக்கப்படும் இந்த ஹோட்டல், பயணிகளினால் அதிகம் விரும்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு பெரிய இரண்டு படுக்கை அறைகள் உள்ளது. இங்கு 8 பேர் உறங்க முடியும். மேல் பகுதி திறந்த நிலையில் காணப்படும். குளியல் அறைக்கு நடுவில் மரம் ஒன்று காணப்படும்.

தொலைக்காட்சி மற்றும் இணையவசதி இன்றி அமைந்துள்ள இந்த ஹோட்டலில், அமைதியாக தங்கிவிட்டு செல்வதற்கான சூழல் உள்ளமையே முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது.

பல நட்சத்திர ஹோட்டல்களுக்கு அப்பால் இயற்கையுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விநோத ஹோட்டல் உலகளாவிய ரீதியில் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

https://www.tamilwin.com/business/01/192492?ref=imp-news

Link to post
Share on other sites
அரச மாளிகை
 

image_7b643a2084.jpg

 

பொலன்னறுவையில் அமையப்பெற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்கவொன்றாக, அரச மாளிகை (Royal Palace)  விளங்குகின்றது. இது பொலன்னறுவையை ஆட்சி செய்த பராக்கிரமபாகு (1153 – 1186)  மன்னனால் கட்டப்பட்டதாகும்.

இங்குள்ள “வைஜயந்தா பிரசாதய”  என்னும் 7 மாடிகளை கொண்ட மாளிகையே இங்குள்ள பெரிய கட்டடமாகும். இம்மாளிகையானது தற்பொழுது இடிபாடுகளுடன் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதினால், 3 அடுக்கு மாடிகளை மட்டுமே கொண்டமைந்துள்ளது. குறித்த மாளிகையானது 7 ஆண்டுகளில் 7 மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

image_8c40450840.jpg

 

வரலாற்று சான்றுகளின் படி, குறித்த மாளிகையானது 1000 அறைகளை கொண்டு காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று 55 அறைகளை மட்டுமே காணக்கூடியதாகவுள்ளது. அத்துடன் குறித்த மாளிகையானது முழுவதுமாக செங்கற்கற்களால் கட்டப்பட்டுள்ளமையையும் காணமுடியும்.

இதன் சிறப்புகளில் ஒன்றாக, குறித்த மாளிகையானது மத்திய பகுதியில் அரசனுக்கென பிரத்தியேக அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 100 அடி நீளமும் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

image_cff6a17327.jpg

 

 

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இடத்தினை அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் நாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

image_7014dbff8c.jpg

http://www.tamilmirror.lk/சுற்றுலா/அரச-மாளிகை/100-221368

Link to post
Share on other sites

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரி அறுகம்பை

 

Untitled-1desw.jpg

இயற்கை எழில்மிகு பிரதேசங்கள் பலவற்றைக் கொண்டமைந்த எமது இலங்கைத் தேசமானது மன்னர்களின் ஆட்சி காலம் முதல் மக்களாட்சி காலம்வரை மக்களின் பொழுதுபோக்கு சொர்க்கபுரியாகவே இருந்து வருகின்றது. இங்கு இயற்கையாகவே கொண்டமைந்த துறைமுகங்கள், வனப் பிரதேசங்கள், வானைத் தொடும் மலை முகடுகள், அதிலிருந்து ஊற்றெடுக்கும் கங்கைகளுடன் பறவையினங்கள் போன்றவைகள் எல்லாம் அழகிற்கு அழகு சேர்ப்பனவாக உள்ளன. இதனால் தான் இலங்கை தீவு உல்லாசப் பயணிகளின் பயணப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதெனலாம்.

எமது நாட்டிற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகள் ஒரேயொரு முறையுடன் பயணத்தை நிறுத்திக் கொள்ளாது வருடா வருடம் தமது பயணத்தை மேற்கொள்கின்றனர். இதற்கு எமது நாட்டின் பூகோள அமைப்பே பிரதான காரணமாக அமைந்துள்ளது. அதாவது 12 மணி நேரத்தில் சூடு, குளிர் மிதமான காலநிலையினை அனுபவிக்கக் கூடிய ஒரே ஒரு நாடாக உள்ளதே மூலகாரணம் என கூற முடியும். காலையில் அம்பாறை அறுகம்பை கடற்கரையில் கடலலை சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு விட்டு மதியம் நுவரெலியாவில் ஓய்வு எடுக்கக் கூடிய சூழ்நிலை இருப்பது எமது நாட்டிற்கு அதிக மதிப்பெண்ணாக உள்ளதெனலாம்.

முன்னர் யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட புராதன இடங்களுக்கு மட்டுமே சென்று வந்த சுற்றுலாப் பயணிகள் தற்போது அதிகளவில் கரையோரப் பிரதேசங்களின் எழில்மிகு அழகிய காட்சிகளை கண்டு அனுபவிக்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இதன் மூலமாக அதிக நாட்கள் நாட்டில் தங்கியிருக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படலாயிற்று. இதனால் எமது நாட்டின் அந்நிய செலாவணி வருமானத்தில் கணிசமான அதிகரிப்பு தோன்றியுள்ளது.

எமது நாட்டில் உல்லாசப் பயணிகளை அதிகம் கவர்ந்திருக்கின்ற இடங்களில் ஒன்றாக அம்பாறை மாவட்டம் அறுகம்பை முக்கிய இடத்தில் உள்ளதெனலாம். இந்த அறுகம்பை ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்பிருந்தே அந்நியர்களின் சிறிய மீன்பிடித்துறைமுகமாகவும் பொழுதுபோக்கு இடமாகவும் இருந்துள்ளது.

ஆங்கிலேயர்கள் கிழக்கின் கரையோரப் பிரதேச கடற்கரைகளை மையப்படுத்தி பல ஓய்வு மண்டபங்களை அமைத்தார்கள். இதில் பொத்துவில் நகருக்கு அண்மையிலுள்ள அறுகம்பையிலும் ஒரு பெரியளவான வாடிவீட்டினை அமைத்துள்ளார்கள்.

 

 
 

உலகிலுள்ள கடற்கரைப் பிரதேசங்களை அண்மித்த குடா பகுதிகளில் மிகவும் இயற்கையான குடாவாக அறுகம்பைக்குடா இருப்பதாக வெளிநாட்டு பயண கையேடுகளில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனுடன் இணைந்ததாக சர்வதேச ரீதியில் கடலலைச் சறுக்கு விளையாட்டுக்கு மிக பொருத்தமான இடமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் அறுகம்பை பிரதேசம் மேற்குல உல்லாசப் பயணிகளின் வருகையினால் களைகட்டியுள்ளது. குறிப்பாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் வரை இப்பகுதி மிகுந்த சுறுசுறுப்பாகவே காணப்படும். சுற்றுலாப் பயணிகளுடன் தென்பகுதி, மீனவர்களின் வருகை இப்பகுதியில் மிகுதியாக காணப்படுவதால் பதப்படுத்தப்படாத புத்தம்புதிய கடலுணவுகளை சுவைப்பதில் வெளிநாட்டவர்களுடன் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளதை காணமுடியும்.

தற்போது இங்கு வருகை தந்துள்ள உல்லாசப் பயணிகளில் பெரும் பகுதியினர் தமது குழந்தைகளுடன் குடும்பமாக வருகை தந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. மாலை வேளைகளில் அறுகம்பை குடா கடற்கரை நீர்ச் சறுக்கு விளையாட்டு, படகுச் சவாரி, கடற்குளியல், மீன்பிடி என களைகட்டியிருக்கும், உள்ளூர் பயணிகள் தமது வாகனங்களை நிறுத்துவதில் பாரிய இடநெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றார்ள்.

அறுகம்பைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இக்கடற்கரைப் பகுதியை மட்டும் அனுபவிப்பது கிடையாது. இதனை அண்மித்துள்ள குமண பறவைகள் சரணாலயத்திற்கும் சென்று வருகின்றார்கள். அறுகம்பையிலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள உகந்தை முருகன் ஆலயத்தின் பின்புறமாகவே குமண சரணாலய பிரதான நுழைவாயில் அமைந்துள்ளது. உல்லாசப் பயணிகள் சரணாலயத்திற்கு செல்வதற்கு முன் உகந்தை முருகனை தரிசித்து புகைப்படம் பிடித்து அவரது அருளைப் பெற்றுக் கொள்வதுடன், இப்பகுதியின் புராதன இடங்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் கற்சுனைகள், மலை மேல் உள்ள ஆலய பீடம், சிறு கற்குகைகள், கடலில் நீண்டுள்ள மலைப்பாறை (இதுவே முருகப் பெருமானின் தங்கத்தோணி) போன்றவற்றையும் ஆலய சூழலில் கூட்டம் கூட்டமாக வலம்வரும் மான் மயில் கூட்டங்கள், பட்சிகளின் ஓசைகளை அனுபவிப்பவர்களாகவும் உள்ளார்கள்.

ஆர். நடராஜன்
(பனங்காடு தினகரன் நிருபர்)

http://www.thinakaran.lk/2018/09/14/கட்டுரைகள்/26926/சுற்றுலாப்-பயணிகளின்-சொர்க்கபுரி-அறுகம்பை

Link to post
Share on other sites
இலங்கையின் முதலாவது international shopping mall
 

இலங்கையின் முதலாவது சர்வதேச ஷொப்பிங் தொகுதி, தலைநகரின் Colombo City Centre இல் இன்று (19) திறந்துவைக்கப்படவுள்ளது. சர்வதேச விற்பனை நாமங்களைக் கொண்ட கடைத்தொகுதிகளில், உலகளாவிய ரீதியிலான அதிசொகுசு மற்றும் உயர்தர விற்பனை நாமங்களைக் கொண்ட உற்பத்திகளை ஷொப்பிங் செய்யக்கூடிய அனுபவத்தை Colombo City Centre வழங்குகிறது.  

image_413156b9a3.jpg

Colombo City Centre இன் தலைமை நிறைவேற்று அதிகாரி ஆனந்த் சுந்தரம் கருத்து வெளியிடுகையில், “கொழும்பு நகரவாசிகள் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்து காத்திருந்த சகல சர்வதேச தேவைகளையும் உள்ளடக்கிய அனுபவத்தை வழங்கக்கூடிய அனைத்து அம்சங்களும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கையில் இலங்கையர்களுக்கு முதல் முறையாக சர்வதேச கடைத்தொகுதிகளில் ஷொப்பிங் செய்யக்கூடிய அனுபவமும், வாய்ப்பும் வழங்கப்படுவதோடு, மேலும் உலக நாடுகளின் தலைசிறந்த அறுசுவை உணவுகளை சுவைத்திடக்கூடிய உணவகங்கள், விற்பனை கூடங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை முழுமையாக அனுபவித்திடக்கூடிய சகல வசதிகளையும் இது உள்ளடக்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் இங்கு வரும் அனைவராலும் அதிகமாக ஈர்க்கப்படும்” என்றார்.  

இதற்கமைய, ஷொப்பிங் அனுபவங்கள், சர்வதேச உணவகங்கள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்றவற்றை புதிய முறையில் மாற்று விதமாக இலங்கையர்களுக்கு வழங்கும் ஒரேயொரு கூட்டுத்திட்டமாக கொழும்பு நகர மத்தியில் பிரம்மாண்டமாய் உருவெடுத்து வரும் Colombo City Centre கூட்டுத்திட்டத்தைச் சுட்டிக்காட்ட முடியும். சர்வதேச தரத்திலான உலகின் முன்னணி விற்பனை நாமங்களை உள்ளடக்கிய கடைத்தொகுதிகள் 200,000 சதுர அடி நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.   

நவீன தொழில்நுட்பத்திலான கருவிகளுக்கு Abans மற்றும் Apple காட்சியறைகள், அழகுக்கலை உற்பத்திகளுக்கு Body Shop அல்லது Spa Ceylon, நவீன புத்தாக்க ஆபரணங்களுக்கு Colombo Jewellery Stores அல்லது Swarovski, புதிய ஆடை அணிகலன்களுக்கு ALDO அல்லது Mango போன்ற பல்வேறு விற்பனை நாமங்களை இங்கு காணமுடியும்.   

உலகளாவிய ரீதியில் காணப்படும் பல்வேறு உணவு வகைகளை உள்ளடக்கிய அதிசொகுசு, ‘foodcourt’ இங்கு காணமுடியும். இதில் இலங்கையின் உள்நாட்டு உணவுகள் உள்ளிட்ட இந்திய, ஜப்பானிய, சீன, இந்தோனேஷிய, சிங்கப்பூர், போர்த்துக்கல் உள்ளிட்ட உலகளாவிய பல்வேறு நாடுகளின் அறுசுவை உணவுகளை உங்களுக்கு சுவைத்திடவும், அதேபோல் சிங்கப்பூர் சிக்கன் ரைஸ்ஸின் சுவையை அறிந்திடவும் முடியும்.   

மேலும் Three Star Michelin சமையல் வல்லுநரை கொண்ட அதிசொகுசுDesert Bar உடன், Tropical Island உணவகம் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இலங்கையர்களுக்கு முதல் முறையாக அனுபவிக்கக்கூடிய அதிசொகுசு மல்டிபிளெக்ஸ் சினிமா அரங்கம் Colombo City Centre இல் உருவாக்கப்பட்டு வருகிறது. 6 சினிமா திரைகளின் மூலம் ஒரு தினத்திற்கு 25 காட்சிகள் திரையிடப்படும். அதேபோல் இலங்கையின் சினிமா ரசிகர்கள் இதற்கு முன்னர் இலங்கையில் ஒருபோதும் அனுபவித்திராத 4k Projection தொழில்நுட்பத்தை Colombo CityCentre திரையரங்கம் அவர்களுக்கு வழங்கும்.  

http://www.tamilmirror.lk/வணிகம்/இலங்கையின்-முதலாவது-international-shopping-mall/47-222163

Link to post
Share on other sites
’கங்காராமய விகாரை’
 

image_466cd4baa5.jpg

 

கங்காராமய இலங்கையில் கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரசித்தி வாய்ந்த ஒரு  பௌத்த விகாரை ஆகும்.

image_8d97614b8f.jpg

 

 

இந்த விகாரையின் கட்டிடக்கலையானது இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மற்றும் சீனக்கட்டிடக்கலைகளின் கலவையாக உள்ளது. அத்தோடு, பெர வாவிக்கு அருகாமையில் சில கட்டடத்தொகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக விகாரை, போதிமரம், சீமா மலக்க (பௌத்த பிக்குகளின் ஒன்றுகூடுமிடம்), நூலகம், அருங்காட்சியகம், தங்கும் பகுதி, பௌத்த பிக்குகளின் கல்விக்கூடம் மற்றும் யாசகசாலை போன்றவை காணப்படுகின்றன.

image_fb37d177a5.jpg

 

 

சீமா மலக்க ஆனது, சுற்றுலா பயணிகளின் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இது முஸ்லிம் மத வர்த்தகரின் நன்கொடையினால், இலங்கைக் கட்டிடக்கலை நிபுணரான Geoffrey Bawa என்பவரின் வடிவமைப்பில் உருவானதாகும்.

image_77aa1e396f.jpg

 

மேலும் புகைப்பட கலைஞர்களுக்கு ஏற்ற இடமாகவும் இது விளங்குகின்றமையினால், ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் இவ்விகாரைக்கு தினசரி வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.tamilmirror.lk/சுற்றுலா/கங்காராமய-விகாரை/100-222608

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நல்ல வேளை எச்சரிக்கை செய்தினம் சாப்பிட ஏலாமல் போய் இருக்கும்.
  • இந்தியாவும் தமிழீழ விடுதலைக்கான போராட்டமும் துணைப்படைகளுக்கான ஆட்சேர்ப்பினை இந்தியாவில் மேற்கொண்டுவரும் இந்திய புலநாய்வுத்துறை றோ காலம் : ஆனி 2006 மூலம் : தமிழ்நேசன் மற்றும் தமிழ்நெட்   "நாடுகளுக்கிடையேயான உறவுகள் தார்மீக அடிப்படையில் உருவாவதில்லை, மாறாக, தார்மீகத்தினை எதிர்த்தே உருவாக்கப்பட்டு தொடரப்பட்டு வருகின்றன" - ஜோதிந்திரா நாத் டிக்ஸீத், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் 1985 - 1989, வெளியுறவுச் செயலாளர் 1991 - 1994, இந்தியப் பிரதமருக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 2004 - 2005.   இந்தியாவின் முன்னணிச் செய்திச் சேவைகளில் ஒன்று இன்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பொன்றில் இலங்கை ராணுவத்தின் துணைப்படையாக இயங்கும் கருணா குழு தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் தமிழர்களிடையே தமக்கான புதிய உறுப்பினர்களைத் தேடிவருவதாகத் தெரிவித்திருக்கிறது. பெருந்தொகைப் பணத்தினை மாதாந்தக் கொடுப்பனவாக வழங்குவதாகக் கூறியே இந்த ஆட்சேர்ப்பில் கருணா குழு ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் ராணுவத் துணைப்படையான கருணா குழுவின் கீழ் இயங்கிவரும் ஈழ ஜனநாயகத் தேசிய விடுதலை முன்னணி எனப்படும் அமைப்பே கருணா குழு சார்பாக தமிழகத்தில் ஈழத்தமிழர் அகதிமுகாம்களில் இருந்தும் அநாதை விடுதிகளில் இருந்தும் கருணா குழுவுக்கான உறுப்பினர்களைச் சேர்க்க முயன்றுவருவதாக உள்ளூர் செய்தியாளர்களை மேற்கோள் காட்டி இந்த செய்திச்சேவை செய்திவெளியிட்டிருக்கிறது. இலங்கை ராணுவத் துணைக்குழுவினருக்கான இந்த ஆட்சேர்ப்பு இந்திய வெளியக புலநாய்வுத்துறையான றோவின் அனுசரணையுடனும், ஆசீர்வாதத்துடனுமே நடைபெற்றுவருவதாக இந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. ஈ என் டி எல் எப் அமைப்பின் தலைவரான பரந்த ராஜனை பயன்படுத்தி தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்திருக்கும் தமிழர்களிலிருந்து கருணா குழுவுக்கான ஆட்சேர்ப்பினை றோ மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. கருணா குழுவில் இணைபவர்களுக்கு உடனடிக் கொடுப்பனவாக 10,000 ரூபாய்களும், அவர்கள் இலங்கையை வந்தடைந்த பின்னர் மேலதிகக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் செல்லப்பிள்ளையாக இருக்கும் பரந்தன் ராஜன் எனும் துணை ராணுவக் குழுவின் தலைவர் தனது கண்காணிப்பின் கீழ் பெங்களூர் பகுதியில் அநாதை விடுதிகளை நடத்திவருவருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனது அநாதை விடுதியிலிருந்து சிறுவர்களை இலங்கையில் போர் நடவடிக்கைகளில் பாவித்தார் என்கிற பலமான குற்றச்சாட்டு அவருக்கெதிராகச் சுமத்தப்பட்டிருக்கிறதென்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. புலிகளுக்கெதிரான பல துணைராணுவக் குழுக்களுடன் நெருங்கிச் செயற்படும் பரந்தன் ராஜன், புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டே வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆரம்பத்தில் உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பில் செயற்பட்டு வந்த பரந்தன் ராஜன், இந்திய அமைதிப்படை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நின்றகாலப்பகுதியில்,புளொட்டிலிருந்து வெளியேறி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய துணைராணுவக் குழுக்களின் உதிரிகளை இணைத்துக்கொண்டு "த்ரீ ஸ்டார்" எனும் துணைராணுவப் படையினை உருவாக்கிச் செயற்பட்டு வந்தார்.     1987 ஆம் ஆண்டு, இந்தியப்படை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நின்ற காலப்பகுதியில் இந்திய உளவுத்துறையுடன் நெருங்கிச் செயற்பட்ட பரந்தன் ராஜன், அவர்களின் உதவியுடனேயே தனது துணைராணுவப்படையான ஈ என் டி எல் எப் அமைப்பினை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. 1990 இல் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறிய போது, ராஜனும் அவரது பல துணைராணுவக் குழு உறுப்பினர்களும் இந்தியாவுக்குத் தமது தளத்தினை மாற்றிக்கொண்டார்கள். பின்னாட்களில் பரந்தன் ராஜன் சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் இந்திய. இலங்கை அரச புலநாய்வுத்துறைகளின் சார்பாகச் செயற்பட்டு வந்தார். பரந்தன் ராஜன் கருணாவுடன் சேர்ந்து தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி எனும் துணைராணுவக் குழுவினை அமைத்துக்கொண்டபோது, இந்திய உளவுத்துறையின் பெரிதும் விரும்பப்பட்ட ஈழத்தமிழராக மாறினார். கருணா குழுவின் ஆதரவாளர்களின் கருத்துப்படி, கருணாவையும் பரந்த ராஜனையும் ஒன்றாக இயங்கும்படி பணித்தது இந்திய உளவுப்பிரிவான றோ அமைப்பே என்று கூறியிருக்கிறார்கள். பரந்தன் ராஜன் துணை ராணுவக் குழுவொன்றை வழிநடத்தியவாறே இந்தியாவில் நெடுநாள் தங்கியிருப்பதும், தங்குதடையின்றி இந்தியாவின் எப்பகுதிக்கும் சென்றுவருவதும், புலிகளுக்கெதிராகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதும்  கூறும் ஒருவிடயம் அவர் இந்திய உளவுத்துறையினரால் இயக்கப்படும் ஒரு ஆயுததாரி என்பதுதான் என்று அச்செய்தி மேலும் கூறுகிறது. 2004 இல் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை ஜெயலலிதா தேடித் தேடி வேட்டையாடியபோது பரந்தன் ராஜனும் தவறுதலாக கைதுசெய்யப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், கைதுசெய்யப்பட்ட சில மணிநேரத்திற்குள்ளேயே றோ வின் தலையீட்டினால் பரந்தன் ராஜன் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்று அச்செய்தி மேலும் குறிப்பிடுகிறது.  2005 இல் இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பரந்தன் ராஜன் மீளவும் இந்தியாவில் செயற்படுவதற்கும், அலுவலகங்களை அமைத்து இயங்குவதற்கும், ஆட்களைச் சேர்ப்பதற்கும் அவருக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்வரை பெங்களூரிலிருந்து செயற்பட்ட ராஜன், 2006 இல் தி மு க அவின் ஆட்சியின் பின்னர் தமிழக அரசின் ஆதரவுடனும்,இந்திய புலநாய்வுத்துறையின் ஆசீருடனும் மீண்டும் சென்னையிலிருந்து செயற்பட ஆரம்பித்திருக்கிறார். தமிழகத்தில் பரந்தன் ராஜனின் இருப்பிடம் பற்றித் தமக்கு எதுவுமே தெரியாது என்று கையை விரிக்கும் தமிழகக் காவல்த்துறை "அவர் ஒரிஸாவில் எங்காவது இருக்கலாம்" என்று மழுப்பலாகப் பதிலளிப்பதாக இச்செய்தி கூறுகிறது. ஆனால், தன்னை அடையாளம் காட்டவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட தமிழக காவல்த்துறை அதிகாரியொருவர், "ராஜன் தற்போது கருணாவுடன் மட்டக்களப்பில் தங்கியிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று கூறியிருக்கிறார். மட்டக்களப்பு தீவுச்சேனைப்பகுதியில் அமைந்திருந்த கருணா - ஈ என் டி எல் எப் அமைப்பின் முகாம் மீதான புலிகளின் தாக்குதலின்போது   ஈ என் டி எல் எப் அமைப்பினை புலிகளுக்கெதிரான சக்திகளை ஒன்றிணைக்கும் ஒரு கருவியாக றோ பாவிப்பதாக இச்செய்தி கூறுகிறது. ராஜனின் செயற்பாடுகளை வழிநடத்திவரும் றோ, அவரையும் கருணாவையும் இணைப்பதன் மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி, தமிழகத்தில் புலிகளுக்கும் பிரபாகரனுக்கு இருக்கும் ஆதரவினைக் குறைத்துவிட முயல்வதாக இச்செய்தி மேலும் கூறுகிறது. சித்திரை 2004 இல், கருணாவின் ராணுவப் பலம் புலிகளால் முற்றாகச் சிதைக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலிருந்து பெருமளவு தமிழ் துணை ராணுவக் குழு உறுப்பினர்களை இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கை ராணுவம் வரவழைத்திருக்கிறது. புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தில் ஈடுபடுத்தவென தமிழகத்தில் தங்கியிருக்கும் ஈ என் டி எல் எப் கூலிகளை ஒருவருட நுழைவு அனுமதியுடன் சுழற்சி முறையில் அழைத்துவரும் இலங்கை அரசு, புலிகளுக்கும் தமிழருக்கும் எதிரான நாசகார நடவடிக்கைகளில் வடக்குக் கிழக்கில் ஈடுபடுத்தி வருகிறது. இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்குமிடையே ஆரம்பித்திருக்கும் சிறியளவிலான இப்போர் நடவடிக்கைகளால் குறைந்தது 3000 தமிழர்கள் தமிழகத்தில் தற்போது தஞ்சமடைந்திருப்பதாகவும் இச்செய்து கூறுகிறது.      
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.