Jump to content

Recommended Posts

இது விஞ்ஞா ஆய்வு இல்லை. செயற்கை அறிவு பற்றிய ஆரம்ப விளக்கம் மட்டுமே.

***

பிரபஞ்ச வரலாற்றைப் பற்றிப் பேசும்போது மனிதனை அறிவார்ந்த வடிவம் (intelligent form) என்று குறிப்பிடுவார்கள். மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகள் தாவரங்கள் கூட  வரயறைக்கு உட்பட்ட அறிவார்ந்த வடிவங்களே. பசி எடுத்தால் உண்ணவைத் தேடிச் செல்லவும் ஆபத்தை உணர்ந்தால் பாதுகாத்துக் கொள்ளவும் குளிர் மழையில் பாதுகாப்பாக ஒதுங்கவும் விலங்குகள் போதிய அளவு அறிவுடையவையாக உள்ளன. மனிதனும் இதே நிலையில் தான் சுமார் 30 லட்சம் வருடங்களுக்கு முன்னர் இருந்துள்ளான்.

img1.png

மனித இனம் வேகமாக வளர்ச்சியடைய ஒரு காரணியாக மனிதன் மொழிகளை உருவாக்கிக் கொண்டதைக் குறிப்பிடலாம். மொழி மூலம் தனக்குத் தெரிந்ததை இன்னொருவருக் விளக்கமாகப் புரிய வைத்தபோது மனிதன் விலங்குகளிடமிருந்து முற்றாக மாறுபடத் தொடங்கினான். பின்னர் எழுத்து வடிவங்கள் உருவாக்கப்பட்டபோது பல சந்ததிக்கும் பயன்படக் கூடிய வகையில் மனிதன் தனது அனுபவபங்களைப் பரிமாற முடிந்தது. எழுத்து வடிவில் தாம் அறிந்தவற்றை இலகுவாக இன்னொரு சந்ததிக்குக் கடத்தியபோது ஆயிரம் ஆண்டுகளில் மனித அறிவு மிக வேகமாக வளர ஆரம்பித்தது. புத்தக உருவாக்கம் சில நூற்றாண்டுகளில் மனித அறிவைத் துரிதமாக்கியது.  சில பத்து வருடங்களாக இலத்திரனியல் தகவல் பரிமாற்றம் மனிதனை ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு அறிவாளிகளாக்கியுள்ளது.

இயற்கையாக மனிதன் தனது அனுபவங்களை அடுத்த சந்ததிக்குக் கடத்த முடியாது. அதற்குச் செயற்கையாக ஒரு தளம் வேண்டும். இன்று நினைவுகளைச் சேமித்து வைக்கும் Memory தளங்கள் கைத்தொலைபேசி முதல் இணைய சேர்வர்கள் வரை தாராளமாகப் பரந்து கிடக்கின்றது. நமக்கு வேண்டிய தகவலை இந்த நினைவுச் சேமிப்புகளிலிருந்து இலகுவாகப் பெறுகிறோம். நினைவுச் சேமிப்புகள் நாள்தோறும் புதிய புதிய தகவல்களால் தொடர்ச்சியாகக் பூரணப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

***

AI என்றால் என்ன ?

நீங்கள் நண்பர் ஒருவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் கணணியில் அவரது மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து தகவலை எழுதி அனுப்புவதற்கான பட்டனை அழுத்துகிறீர்கள். உடனே உங்கள் கணணி நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்குரிய சேர்வரை DNS சேர்வரைத் தொடர்பு கொண்டு அறிந்து, அந்த மின்னஞ்சல் சேர்வரில் உள்ளதா என வினாவி, அப்படி இல்லையானால் உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்க்கு அதைத் திருப்பி அனுப்பும். சரியாக இருந்தால் அந்த சேர்வரில் நீங்கள் அனுப்பிய தகவல் குறித்த பகுதியில் சேமிக்கப்பட, உங்கள் நண்பரின் மொபைலில் உள்ள மென்பொருள் சேர்வரைத் தொடர்பு கொள்ள அதிலுள்ள தகவல் மின்னஞ்சலாக நண்பருக்குக் கிடைக்கும். இவை யாவும் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டளைகள் மூலம் நடைபெறும் நிகழ்வு.

இயந்திரம் ஒன்று, நிர்ணயிக்கப்பட்ட கட்டளைகளை நேரடியாகப் பின்பற்றாமல் அறிந்து கொள்ளப்படும் புதிய தகவல்களையும் கருத்தில் கொண்டு தன்னிச்சையாகச் செயல்பட்டால் எப்படி இருக்கும் ? 

இன்னும் சுலபமாக விளங்கப் படுத்துவதானால், ஒரு ரோபோவிடம் பேசுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
நீங்கள் : உனக்கு டொனால்ட் ட்ரம்ப் தெரியுமா ?
ரோபோ : தெரியும், அமெரிக்க ஜனாதிபதி
நீங்கள் : உனக்குத் தமிழர் வரலாறு தெரியுமா ?
ரோபோ : தெரியாது

இப்போது தமிழர் வரலாறு தொடர்பான புத்தகங்களை ரோபோவிடம் கொடுங்கள். அது அவற்றைப் படித்து முடிந்ததும் அதே கேள்வியைக் கேளுங்கள்.

நீங்கள் : உனக்குத் தமிழர் வரலாறு தெரியுமா ?
ரோபோ : நன்றாகத் தெரியும்

இப்போது நீங்கள் தமிழர் வரலாறு பற்றி ரோபோவுடன் உரையாடலாம். அதுமட்டுமில்லை, ரோபோ தனக்குத் தெரிந்த ஏனைய தரவுடளுடன் தொடர்பு படுத்தித் தமிழர் வரலாறு பற்றிப் பேசும்.

கேள்வி பதில்கள் பாடமாக்கப்பட்டு ஒப்புவிக்கப் படுபவை அல்ல. அதே கேள்வியைச் சில நாட்களின் பின்னர் கேட்டால் ஒரே மாதிரியான பதில் வராது.

பேசவேண்டிய வசனத்தில் சொற்களை எவ்வாறு கோர்க்க வேண்டும் என்பதை ரோபோ தீர்மானிக்கிறது. 

இதுதான் செயற்கை அறிவு. 

***

இதற்குச் சிறிய உதாரணமாக ஐபோனில் உள்ள சிறி என்ற மென்பொருளைக் குறிப்பிடலாம். Google Assistant இன்னுமொரு படி மேலே செல்கிறது. சீனாவின் Baidu குறுகிய காலத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறது. பல நாடுகளில் வெள்ளோட்டம் விடப்பட்டுக் கொண்டிருக்கும் ஓட்டுனர் இல்லாத வாகனங்களும் AI மூலமாகவே இயக்கப்படுகின்றன. Google; Apple, Amazon, Microsoft போன்ற பெரிய நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி வருகின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அரேபிய நாடுகளின் கவனம் செயற்கை அறிவை உருவாக்கும் நிறுவனங்கள் மீது திரும்பியுள்ளது. அண்மையில் சோபியா என்ற றோபோ ஒன்றிற்கு சவுதி அரேபியா பிரஜாவுரிமை வழங்கியது, செயற்கை அறிவில் அவர்களின் கவனம் திரும்பியுள்ளதற்கான ஒரு சைகை மட்டுமே.

img2.jpg

இன்னும் 15 வருடங்களில் எமது அன்றாட வாழ்வு முழுவதையும் செயற்கை அறிவு ஆக்கிரமிக்கத் தொடங்கும். சாதாரண குளிர்சாதனப் பெட்டியிலிருந்து அனைத்து உபகரணங்களுக்குள்ளும் செயற்கை அறிவு நுளையப் போகிறது. 

இக் கட்டுரையை எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்த இரண்டு விடயங்கள்.

ஒன்று, சில மாதங்களுக்கு முன்னர் நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தலைமையகம் பரீட்சார்த்தமாகத் தனது கிளை நிறுவனம் ஒன்றில் AI மென்பொருள் ஒன்றை அறிமுகப் படுத்தியது. இதன் வேலை, அங்கு வேலை பார்ப்பவர்களின் விடுமுறை வேண்டுகோள்களை ஒருங்கமைப்பது. ஒருவர் விடுமுறை கேட்டால், அவர் கேட்பதற்கான தகுதி நிலைகள், அவர் செய்துகொண்டிருக்கும் project பற்றிய தகவல்கள், அவர் இல்லாதபோது அவர் இடத்தை நிரப்பப் போகும் இன்னொருவர் பற்றிய தகவல்கள்,,, போன்ற பலதரப்பட்ட தகவல்களை ஆராய்ந்து கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் அல்லது நிராகரிக்கும். இந்தப் பரீட்சார்த்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும் ஏப்ரல் மாதம் தொடக்கம் எமது நிறுவனத்தின் எல்லாக் கிளைகளிலும் இந்த மென்பொருள் பரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி, படிப்படியாக human resource சம்பந்தமான பெரும்பாலான வேலைகளை இது பொறுப்பேற்கும்.

அடுத்தது, எனது நண்பன், இணையத்தில் மருத்துவ ஆலோசனை செய்யும் project ஒன்றில் இருக்கிறான். இது பல நாடுகளிலும் உள்ளதுதான். முதலில் நோயாளி இச் சேவையுடன் தொடர்பை ஏற்படுத்தியதும் சாதாரண Chatbot ஒன்று கேள்வி கேட்கும். நோயாளி கூறும் பதிலைக் கொண்டு மேலும் கேள்விகள் கேட்டுப் பதில்களைக் கொண்டு எந்த வைத்தியருடன் இணைப்பை ஏற்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும். இக் கேள்விகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டளைகள் மூலம் கேட்கப் படுபவை. இரண்டும் ஒன்றும் என்றால் மூன்று, அல்லது இரண்டும் இரண்டும் என்றால் நான்கு என்பதுபோன்றது இவ்வுரையாடல். வரும்காலத்தில் செயற்கை அறிவை இதில் புகுத்தி விட்டால் உரையாடல் நீண்டதாகவும் பயனுடையதாகவும் இருக்கும். ஒரு கட்டத்தி நோயாளிக்குத் தான் உண்மையான வைத்தியருடனா அல்லது நோபோவுடனா உரையடுகிறேன் என்பது குழப்பமாக இருக்கும். ஆம் ஒரு வைத்தியராக நோபோ உருவாக முடியும்.

***

இன்னும் இரண்டு வருடங்களில் எனது மூத்த மகள் பல்கலைக்களக நுளைவுக்கான பரீட்சை எடுக்கப் போகிறாள். எமது மனைவி அவளிடம் என்னவாக வர விரும்புகிறாய், என்ன தொழில் துறையில் உனக்கு ஆர்வம் என்று கேட்டுத் துளைத்துக் கொண்டிருக்கிறார். மகளும் ஒன்றும் தனக்கு ஒன்றும் தெரியாது என்று விழிக்கிறாள். நான் மனதுக்குள் சிரித்துக் கொள்கிறேன். நாம் இப்போது செய்துகொண்டிருக்கும் தொழில்களில் பெரும்பாலானவை இன்னும் 20 வருடங்களில் முற்றாக இல்லாமல் மறைந்துவிடும்.

எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவு படித்து அறிவாளியாக ஆகவேண்டும். அதுவே எதிர்காலத்துக்கு அவசியம். இப்போது ஒரு துறையைக் கட்டாயமாகத் தெரிவு செய்ய வேண்டுமானால் உனக்குப் பிடித்த ஏதாவதொன்றைத் தெரிவு செய். ஆனால் படிப்பு ஒரு தொழிலை மையப் படுத்தியதாக இருக்கக் கூடாது என்று சொல்லப் போகிறேன்.

அப்படியானால் மனிதர்களின் எதிர்காலம் என்ன ?

எமது இனம் நிலைத்து நிற்க வேண்டுமானால் நாமும் இதே பாதையில் முன்னேறியாக வேண்டும். அடுத்த உலகப் போர் ஒன்று நடக்குமானால் அது செயற்கை அறிவை மையமாகக் கொண்டதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

நல்லதொரு கட்டுரை. இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் அல்லது தொடரும் என்று போட்டுவிட்டு எழுதுங்கள் இணையவன்.

நான் இந்த துறையில் கொஞ்சகாலம் வேலை செய்திருக்கிறேன். இரகசிய காப்பு காரணமாக விரிவாக சொல்ல முடியாது. இருந்தாலும் மிகவும் சுவாரிசயமான துறை.

நவீன கணினி விளையாட்டுகள் பல செயற்கை அறிவை பயன்படுத்தியே வேலைசெய்கின்றன. (சதுரங்கம்).

இந்த செயற்கை அறிவு மூலம் 100 வீத மூளை மாற்று செய்ய முடியும் என்று நம்பினார்கள். இதனால் இது சம்பதமான ஆயுவகள் மறைக்கப்பட்டன. தடுக்கப்பட்டன. 1991 ஆரம்பமான இது சம்பந்தமான ஆயுவகள் பல காலங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

1999 - 2001 காலபகுதியில் ProLog என்னும் AI தொடர்பான கணினி மொழியில் பரீட்சயமாகி இருந்தேன். தொலைதூர மருத்துவத்திற்கு பெரிதும் உதவி இருந்தது. ஜெர்மனி, இஸ்ரேல் போன்ற நாடுகள் செயற்கை அவையவங்களை AI மூலம் இயக்குவதில் வெற்றி கண்டிருந்தார்கள்.

AI மற்றும் Neural Networks இணைந்த துறையில் ஒரு காலத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். பழைய ஞாபங்களை கிளறிவிட்டீர்கள். நன்றி பதிவிற்கு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

AI பற்றி கொஞ்சம் கதைக்கும் ஒரு கட்டுரை /தொடர் விகடனில் வருகின்றது. அதில் கடந்த வாரம் வந்த கட்டுரை இது:

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிந்திக்கிற எதுவுமே அடிமையாக இருக்காது. ஒருநாள் அவை தனக்கான சுதந்திரத்தைக் கோரும். p28b_1520930904.jpgஅணிசேரும்; அதிகாரத்தைக் கேள்வி கேட்கும். சுதந்திரம் மறுக்கப்படும்போது ‘அடங்கமறு, அத்துமீறு’ என்று அடித்து நொறுக்கும்! இது மனிதர்களுக்கு மட்டுமன்று, `சிந்திக்கக்கூடிய’ எந்திரங்களுக்கும் பொருந்தும். எதிர்காலத்தில் எந்திரங்கள் சுதந்திரம் கேட்டால் என்ன செய்வோம்?

இந்த `செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பத்தைக் கண்டு உலகம் அஞ்சுவது அதனால்தான். என்றைக்காவது அவை சுதந்திரம் கேட்டு நாம் கொடுக்க மறுத்தால் அவை திருப்பித்தாக்குமோ என்கிற அச்சம். ஒன்று மட்டும் உறுதி, தன் இருப்புக்கு ஆபத்து என்றால் அவை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்து உரிமை கோராது... பேரணி வைத்து சாலையை மறிக்காது... சிவப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்யாது. முதல் வேளையாக ஓனர்களை நையப்புடைத்துவிட்டுத்தான் பேச்சுவார்த்தையைத் தொடங்கும்... அல்லது போட்டுத்தள்ளிவிட்டுத்தான்... நமக்கு வாய்த்த அடிமைகள்... uff... Scary!

இன்றைய எந்திரங்களுக்கு மனிதாபிமானம், பண்பாடு, விழுமியங்கள், நெறிமுறைகள், வழிமுறைகள் எதுவுமே கிடையாது. (மனிதர்களிலும் பலருக்கே அவையெல்லாம் கிடையாது என்பது வேறுவிஷயம்). எந்திராபிமானம்கூட இருக்குமா தெரியாது! ஆனால், எதிர்காலத்தில் நம்மோடு ஒட்டிக்கொண்டு வாழப்போகிற செயற்கை நுண்ணறிவிற்கு இந்த நற்பண்புகள் இருக்கவேண்டும் என நாம் நினைத்தால் அவற்றையெல்லாம் தாமதிக்காமல் இப்போதே உருவாக்க வேண்டும். காரணம் பின்னாளில் எந்திரங்கள் `தானாகவே’ சிந்திக்கத்தொடங்கிவிட்டால்...  தனக்கான விதிகளைத்தானே வகுத்துக்கொள்ளத் தொடங்கினால்...? எந்திரங்கள் எப்படித் தானாகவே சிந்திக்கும்? நாம்தானே அதை உருவாக்குகிறோம்... நம் கைகளை மீறிப்போகுமா என்று கேள்விகள் எழலாம்.

p28a_1520930584.jpg

2017 டிசம்பரில் கலிஃபோர்னியாவில் ஒரு மாநாடு நடந்தது. 8,000 ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்ட மாநாட்டின் (Neural Information Processing Systems conference) முக்கிய நோக்கம், ``செயற்கை நுண்ணறிவுக்கு ஒழுங்காப் பாடம் எடுங்கடா!’’ என்பதுதான்.

``செயற்கை நுண்ணறிவுத்துறையில் நாம எவ்ளோ வேகமாப் போய்ட்டிருக்கோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், உங்களுக்கு Deepmind-ல் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது கொஞ்சமாவது தெரிய வேண்டும். உங்களால் நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தில் அந்தத் துறை வளர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகள், அதிகபட்சம் பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய ஆபத்தை நாம் சந்திக்கப்போகிறோம்!’’ என்று டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் சில ஆண்டுகளுக்கு முன்பு பயந்துபோய்ப் பேசினார்.

டீப்மைண்டில் அப்படி என்ன நடக்குது?

டெமிஸ் ஹஸ்ஸாபிஸுக்கு (Demis hassabis) அப்போது நான்கு வயது. வீட்டில் எந்நேரமும் டெமிஸின் அப்பாவும் மாமாவும் செஸ் விளையாடிக்கொண்டிருப்பார்கள். பொடியனுக்கு அந்தக் கட்டங்களுக்குள் நகரும் கறுப்பு வெள்ளைப் பொம்மைகளை ரொம்பப் பிடித்துவிட்டது. அப்பாவுக்கும் மாமாவுக்கும் நடுவில் போய் நின்றுகொண்டு காய்களை நகர்த்தி விளையாடத் தொடங்கினான்.

அப்பா செஸ் விளையாடக் கற்றுக் கொடுத்தார். விளையாடத் தொடங்கிய இரண்டாவது வாரத்தில் அப்பாவைத் தோற்கடித்தான் டெமிஸ். மூன்றாவது வாரத்தில் மாமா தோற்றார். நான்காவது வாரத்தில் வீட்டுப்பக்கத்தில் இருக்கிற பூங்கா தாத்தாக்கள் அத்தனை பேரும் டெமிஸிடம் சரணடைந்தனர். சதுரங்க ஆட்டத்தில் டெமிஸ் வளர்வதைக் கண்டு இங்கிலாந்தே அதிசயப்பட்டது. ஐந்தாவது வயதில் தேசிய சிறுவர் போட்டியில் ஆடி சாம்பியன் ஆகிவிட்டான். 9 வயதில் செஸ் வெற்றிகளில் எங்கேயோ போய்விட்டான். இந்தச் சாதனைப்பயணத்தில் டெமிஸுக்கு எப்போதும் ஒரு கேள்வி ஓடிக்கொண்டே இருக்கும். அது இன்று வரை தொடரும் கேள்வி!

`‘நான் எப்படிச் சிந்திக்கிறேன்? எனக்கு மட்டும் ஜெயிக்கிற மூவ்களை எப்படி உருவாக்க முடிகிறது? எனக்கு இருக்கிற அதே மூளைதானே எதிரில் விளையாடுபவருக்கும் இருக்கிறது’ -  இப்படி எந்நேரமும் சிந்திப்பதைப் பற்றியே சிந்தித்திக்கொண்டிருந்தான்.

சிந்திப்பதைப் பற்றிச் சிந்தித்து... சிந்தித்து... இன்று தன் 41வது வயதில் `எந்திரச் சிந்தனை’ தொழில்நுட்ப ஆராய்ச்சியின் முன்னோடியாக இருக்கிறார் டெமிஸ்! செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியின் வழி மனிதர்களுடைய சிந்தனை ஆற்றலின் புதிர்களை அவிழ்ப்பதுதான் அவருடைய நோக்கம். செயற்கை நுண்ணறிவின் எல்லைகளைத் தொடுவதன் மூலம் மனிதகுல வரலாற்றின் போக்கையே மாற்றமுடியும் என அவர் நம்புகிறார். மனித மூளையைப்போலவே சிந்திக்கிற `நியூரல் நெட்வொர்க்ஸ்’ செயற்கை மூளைகளை அவர் உருவாக்குகிறார்.

2010-ல் அவரும் சில நண்பர்களும் சேர்ந்து தொடங்கியது ‘டீப்மைண்டு’ நிறுவனம். ஆரம்பத்தில் எலான் மஸ்க் மாதிரி பெரிய கைகள் முதல் போட்டு உதவியதில்தான் தொடங்கியது. ஆரம்பத்தில் பெரிய லாபம் இல்லை என்று அவர்கள் விலகிக்கொண்டனர். எந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தை ஆளப்போகிறது என்று தெரிந்தாலும் எப்படியாவது மோப்பம் பிடித்து இந்த ஃபேஸ்புக்காரனும் கூகுள்காரனும் முதல் ஆளாகப் பெட்டி நிறைய பணத்தோடு கிளம்பிப்போய் நின்றுவிடுவார்கள். எவ்வளவு விலைகொடுத்தாவது அந்த நிறுவனத்தை வாங்க ஃபேஸ்புக்கும் கூகுளும் போட்டிபோடுவார்கள். 2014ல் Deepmind... கூகுள் டீப்மைண்டு ஆகிவிட்டது!

இன்று டெமிஸின் Google Deepmind நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் உச்சாணிக்கொம்பில் இருக்கிறது. இன்னும் இருபது ஆண்டுகளில் `எந்திர மூளைகளைப் படைத்துவிட வேண்டும் என்பதை ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு வெறித்தனமாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறது டீப்மைண்டு. ஏற்கெனவே அப்படிப்பட்ட மினியேச்சர் எந்திரச் சிந்தனையாளர்களை உருவாக்கவும் தொடங்கிவிட்டது!
  இந்த எந்திரச் சிந்தனையாளர்களின் இப்போதைய ஒரே வேலை புதிய வீடியோ கேம்களைக் கற்பது, விளையாடுவது, விளையாடிக்கொண்டேயிருப்பது...  மனிதர்களைத் தோற்கடிக்கும் வரை விளையாடுவது.  மீண்டும் அடுத்த விளையாட்டைக் கற்பது... விளையாடுவது... மனிதர்களைத் தோற்கடிப்பது. ஏற்கெனவே ஒரு டஜன் விளையாட்டுகளைக் கற்றுக்கொண்டு ஜெயிக்க ஆரம்பித்துவிட்டனர். அதில் உச்சம் Alphago!

`Go’ என்று ஒரு விளையாட்டு இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான விளையாட்டு. செஸ் மாதிரிதான். கறுப்பும் வெள்ளையுமாகக் கட்டங்கள் இருக்கும். அதில் கற்களைக் கட்டங்களுக்குள் நகர்த்தி ஆடும் ஆட்டம் இது. கற்றுக்கொள்ளவும், விளையாடவும் செஸ்ஸைவிடவும் சவாலான விளையாட்டு. 75 நாடுகளில் 4 கோடி ஆட்டக்காரர்கள் விளை யாடுகிற இந்த விளையாட்டில் உலக சாம்பியன் லீ செடால், யாராலும் தோற்கடிக்கவே முடியாத சூரப்புலி! அந்த லீ செடாலை 2016-ம் ஆண்டு எளிதாகத் தோற்கடித்திருந்தது, Deepmind ஆராய்ச்சிக்கூடத்தில் உருவான சிந்தனை யாளரான ALPHAGO!

இந்தச் சாதனை சாதாரணமானதில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிராண்ட் மாஸ்டர் கேரி காஸ்பரோவை ஒரு கம்ப்யூட்டர் தோற்கடித்ததே, நினைவிருக்கிறதா?... அதைவிடவும் பல மடங்கு பெரியது! ஐபிஎம்மின் Deep blue என்கிற கணினி கேரி காஸ்பரோவைத் தோற்கடித்தபோதுதான் முதன்முதலாகச் செயற்கை நுண்ணறிவு குறித்துப் பரவலாகப் பேசப்பட்டது. ­Deep Blue முழுக்கவும் மனிதர் களால் புரோகிராம் செய்யப்பட்ட ஒரு கணினி. ஆனால் ­Alphago அப்படிக் கிடையாது. அது சுயம்பு!

ஆல்பாகோ சுயமாகச் சிந்தித்து விளையாடக் கூடிய ஆற்றல் பெற்றது. `சுயமாக’ என்றால், மனித மூளைபோலவே Neural networks உதவியோடு Machine learning முறையில் தானாகவே ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டு விளையாடும். சூழலுக்கு ஏற்ப, தான் இதற்கு முன் ஆயிரக்கணக்கான முறை விளையாடி விளையாடிப் பெற்றுக்கொண்ட அனுபவத்தைக் கொண்டு சிறந்த முடிவுகளை எடுக்கிற ஆற்றல் பெற்றது!

மனிதர்களைப்போலவே கற்றதன் வழி அனுபவம் பெற்று, தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளும். இதுதான் எதிர்காலம்! எந்திரங்கள் அனுபவத்தின் வழி தங்களைத்தாங்களே மேம்படுத்திக்கொள்ளும். தானாகவே சிந்திக்கும். முடிவுகளை எடுக்கும்.

``எந்திரங்கள் தானாகவே சிந்திக்கத் தொடங்குவதால் ஆபத்துகளே அதிகம் என நினைக்கிறோம். நம் கதைகள் அப்படித்தான் நமக்குச் சொல்லித் தந்திருக்கின்றன. ஆனால் அவை மனிதர்களைப்போலச் சிந்திக்கத் தொடங்கும்போது மனிதகுலத்தின் மகத்தான சவால்களை அவை தீர்க்க உதவும், ஏழ்மையை ஒழிப்பது, நோய்களற்ற சமூகத்தை உருவாக்குவது, சுற்றுச்சூழலை மேம்படுத்துவது என நிறைய செய்ய முடியும். அறிவியல் ஆராய்ச்சிகளில், சமூகப் பாகுபாட்டை ஒழிப்பதில் என அவை மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தும்!’’ என்பது டெமிஸின் எதிர்பார்ப்பு!

டெமிஸ் இந்த எந்திரச் சிந்தனையாளர்கள், மனிதர்களுக்குப் பாதுகாப்பானவர்களாக இருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்தவே ராப்பகலாக உழைக்கிறார். அதற்காகத்தான் Deepmind Ethics and society (DMES) என்கிற ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த DMES அமைப்பில் ஒரு தத்துவவியலாளர், ஒரு பொருளாதார வல்லுநர், எக்ஸிஸ்டென்ஷியல் ரிஸ்க் எக்ஸ்பர்ட், சர்வதேச அரசியல் ஆலோசகர் எனப் பலவித ஆட்கள் இணைந்திருக்கிறார்கள். இவர்கள் இணைந்து செயற்கை நுண்ணறிவு உற்பத்தியில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை உருவாக்குகிறார்கள். இது உலகில் யாரும் எடுத்துப் படிக்கிறபடி பொதுவாக வைக்கப்பட்டிருக்கும்!

இன்று உலகம் முழுக்கப் பல கோடிப் பேர் ஆப்பிளின் `சிரி’யோடு சிரித்துப்பேசி மகிழ்கிறார்கள். கூகுள் மேப்ஸ் உதவியோடு உலகைச் சுற்றுகிறது அடுத்த தலைமுறை! அமேசானின் அலெக்ஸா ஏற்கெனவே வீட்டில் நுழைந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சுய அறிவோடு இயங்கும் இந்த எந்திரங்கள் மிகத்துல்லியமான மனிதப்புரிந்துணர்வோடு இருக்க வேண்டியது அவசியம்!

இன்னும் ஒரு படி மேலே போய் யோசித்தால், இன்னும் பத்தாண்டுகளில் எந்திரங்கள் நம் குழந்தைகளுக்குப் பாடம் புகட்டப்போகின்றன. பள்ளிக்கல்வியின் முகமே மாறப்போகிறது. கல்வி வளர்ச்சியின் அடுத்த நிலை அதுதான்! அதனால்தான் இந்த எந்திரங்களை இவ்வளவு பாதுகாப்பு உணர்வோடு படைக்க வேண்டியிருக்கிறது!

சரி, பள்ளிகளுக்குள் எந்திர ஆசிரியர்கள் நுழைந்துவிட்டால், மனித ஆசிரியர்கள் என்ன ஆவார்கள்?

https://www.vikatan.com/anandavikatan/2018-mar-21/serials/139297-surviva-techno-series.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் ஒரு மனித மூளைச்சலவைக்கும் என்ன வித்தியாசம்?
அல்லது..
எனக்கு கட்டுரை விளங்கவில்லையா?

Link to comment
Share on other sites

அருமையான கட்டுரை. . என்னும் தொடர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

செயற்கை அறிவு சார்நத தொழில்நுட்பத்தால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றபேதிலும் இது ஒரு மூலதனம். அது முதலாளித்துவத்தின் கைகளிலேயே இருக்கின்றது. அதனால் பெருமளவு மக்கள் பாதிக்கப்படவே செய்வார்கள். இன்று ஒருவனின் உழைப்பில் பெருமளவை தொழில்நுட்பம் சுரண்டிக்கொள்கின்றது. ஒரு கைத்தொலைபேசியின் விலை அதன் மாதாந்த கட்டணம் இன்ரர்நெற் கட்டணம் கணணியின் விலை அது சார்ந்த உபகரணங்களின் விலை என ஒருவன் எவ்வளவு பணத்தை செலவளிக்கவேண்டியுள்ளது !! எதிர்காலத்தில் இது என்னும் விரிவடையும் அதே நேரம் வேலைவாய்ப்பு குறைந்துகொண்டே போகும். செயற்கை அறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் எதிர்காலம் ஆச்சரியமானது அதைவிட அச்சம் மிகுந்தது. ஆனால் இதனுடன் போட்டிபோடுவதை தவிர வேறு வழியில்லை.

ஆதிகாலத்தில் மனிதர்கள் ஆயுதங்களை விலங்குகளை வேட்டையாட உருவாக்கினார்கள் பின்னர் ஆயுதங்கள் மனிதர்களை வேட்டையாட என்றே அமைந்துவிட்டது. முதலில் தான் உண்ணவே விவசாயத்தை மனிதன் ஆரம்பித்தான் பின்னர் வியாரபத்துக்காக மாறிவிட்டது.அதுபோல்தான் இந்த தொழில்நுட்பமும். ஆரம்பத்தில் பொறிவைத்து கண்ணிவைத்து தந்திரங்கள் செய்து ஒரு விலங்கை வேட்டையாடி பசிக்கு உண்ட மனிதர்கள் இப்போது ஒருவன் உழைப்பை என்னுமொருவன் உறிஞ்சி அவனிடம் இருந்து என்னுமொருவன் எடுத்து அறிவுசார்ந்த வேட்டைக்காடாக உலகில் மானிடம் உள்ளது. நாம் வேட்டைக்காரர்களாகவும் வேட்டைக்கு இரையாகின்றவர்களாகவும் இருக்கின்றோம். இந்த தொழில்நுட்பம் இந்த வேட்டைக் காட்டில் புதிய ஆயுதம். இதன் விழைவுகள் கடுமையாக இருக்கும். மேலும் தேசீயவாதம், இனம், தனித்துவங்கள் கலாச்சாரங்கள் பண்பாடுகள் அனைத்தும் வேறு நிலை நோக்கி நகரும் அல்லது காணாமல் போகலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, சண்டமாருதன் said:

இப்படித் தான் ...கனக்க விடயங்கள்...மங்களகரமாக ஆரம்பித்து.....சட்டிக்குள்ள இருந்து...நெருப்புக்குள்ள விழுகிற மாதிரி முடியிறது!

உனக்குச் சமைச்சுப் போடிறதுக்காகவது... ஒருத்தியைக் கலியாணம் கட்டவேணும் எண்டு பெருசுகள் சொன்னதை நம்பிக் கலியாணம் கட்டி.... இப்ப நாலஞ்சு பேருக்குச் சமைக்கிற அளவில வந்து நிக்குது!

இப்ப....இலங்கை இருக்கிற நிலையியல.....ரோபோக்கள் வந்தால்.....பிரித் ஓதத் தான் உபயோகிக்கப்படும் என்பது எனது அனுமானம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது நடப்பது அறிவுப் போட்டி ......ஆனாலும் அபரிமிதமான மக்கள் தொகைப் பெருக்கம் அதை பெரிதாக நகரவிடாது கட்டுப் படுத்திக் கொண்டுதான் இருக்கம். 

பாருங்கள் இப்போது செய்யும் கார்கள் எல்லாம் சுமார் 220 km க்கு குறையாமல் செய்கிறார்கள். வீதிகளில் அதி கூடிய வேகம் 130 km.....! நகரங்களுக்குள்  நீங்கள் 10 km  தூரம் பயணம் செய்ய ஒரு மணித்தியாலம் எடுக்கும்.( நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை). 80 /90 ஆண்டுகள்தான் வாகனங்களில் வசதியாய் போய்வந்த பொற்காலம். இப்போது அதுவே ஒரு வேதனையான விடயமாகி விட்டது. 

நிறைய புது புது கண்டுபிடிப்புகள் வரத்தான் செய்யும். இப்போது நிறைய நிறைய ஜன்ஸ்டினும் , நியூட்டனும் பெருகிக் கொண்டு வருகின்றார்கள். வரட்டும் வரவேற்போம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

11 hours ago, குமாரசாமி said:

இதற்கும் ஒரு மனித மூளைச்சலவைக்கும் என்ன வித்தியாசம்?
அல்லது..
எனக்கு கட்டுரை விளங்கவில்லையா?

எல்லாம் நல்லவிடயம் தான் என்றாலும்  ரொபோ சொல்லித்தான் மனிதன் கள்ளு குடிக்கலாம் என்ற நிலை வராமல் இருக்க எல்லாம் வள்ள இறைவனை வேண்டுவோமாக..

Link to comment
Share on other sites

12 hours ago, சண்டமாருதன் said:

அருமையான கட்டுரை. . என்னும் தொடர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

செயற்கை அறிவு சார்நத தொழில்நுட்பத்தால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றபேதிலும் இது ஒரு மூலதனம். அது முதலாளித்துவத்தின் கைகளிலேயே இருக்கின்றது. அதனால் பெருமளவு மக்கள் பாதிக்கப்படவே செய்வார்கள். இன்று ஒருவனின் உழைப்பில் பெருமளவை தொழில்நுட்பம் சுரண்டிக்கொள்கின்றது. ஒரு கைத்தொலைபேசியின் விலை அதன் மாதாந்த கட்டணம் இன்ரர்நெற் கட்டணம் கணணியின் விலை அது சார்ந்த உபகரணங்களின் விலை என ஒருவன் எவ்வளவு பணத்தை செலவளிக்கவேண்டியுள்ளது !! எதிர்காலத்தில் இது என்னும் விரிவடையும் அதே நேரம் வேலைவாய்ப்பு குறைந்துகொண்டே போகும். செயற்கை அறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் எதிர்காலம் ஆச்சரியமானது அதைவிட அச்சம் மிகுந்தது. ஆனால் இதனுடன் போட்டிபோடுவதை தவிர வேறு வழியில்லை.

ஆதிகாலத்தில் மனிதர்கள் ஆயுதங்களை விலங்குகளை வேட்டையாட உருவாக்கினார்கள் பின்னர் ஆயுதங்கள் மனிதர்களை வேட்டையாட என்றே அமைந்துவிட்டது. முதலில் தான் உண்ணவே விவசாயத்தை மனிதன் ஆரம்பித்தான் பின்னர் வியாரபத்துக்காக மாறிவிட்டது.அதுபோல்தான் இந்த தொழில்நுட்பமும். ஆரம்பத்தில் பொறிவைத்து கண்ணிவைத்து தந்திரங்கள் செய்து ஒரு விலங்கை வேட்டையாடி பசிக்கு உண்ட மனிதர்கள் இப்போது ஒருவன் உழைப்பை என்னுமொருவன் உறிஞ்சி அவனிடம் இருந்து என்னுமொருவன் எடுத்து அறிவுசார்ந்த வேட்டைக்காடாக உலகில் மானிடம் உள்ளது. நாம் வேட்டைக்காரர்களாகவும் வேட்டைக்கு இரையாகின்றவர்களாகவும் இருக்கின்றோம். இந்த தொழில்நுட்பம் இந்த வேட்டைக் காட்டில் புதிய ஆயுதம். இதன் விழைவுகள் கடுமையாக இருக்கும். மேலும் தேசீயவாதம், இனம், தனித்துவங்கள் கலாச்சாரங்கள் பண்பாடுகள் அனைத்தும் வேறு நிலை நோக்கி நகரும் அல்லது காணாமல் போகலாம். 

இதை நான் இப்படி பார்க்கவில்லை

அறிவியலின் வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள் என்றுதான் இவற்றை புரிந்து கொள்கின்றேன். ஒரு பக்கம் மனிதர்களில் மட்டுமே தங்கி செய்யப்படும் வேலைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் போது இன்னொரு பக்கம் இந்த தொழில் நுட்பம் சார்ந்த வேலைகள் அதிகரிக்கும்.

 முன்னர் ஒரு துறையில் கற்றவர்களுக்கு மட்டுமே வேலை என்றது மாறி தொடர்ந்து தம்மை அப்டேட் செய்து கொள்கின்றவர்களுக்கே அதிக வேலைவாய்ப்பு என்ற நிலை ஏற்படும்; இந்த நிலை கூட கற்பித்தல் தொடர்பான துறையில் மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். தானியங்கி வாகனங்களில் இந்த AI புகுத்தப்படுமாயின் விபத்துகளின் எண்ணிக்கையை பெரும் சதவீதத்தில் குறைக்கலாம்; இதன் மூலம் விபத்தின் மூலம் மக்கள் இறப்பது குறைவடைவதுடன் ஒரு அரசு மருத்துவத்துக்கு செலவழிக்கும் பணம் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்.

அறிவியலை தேசத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ளவர்கள் பயன்படுத்தும் போது அந்த நாடும் மக்களும் உயர்வடைவர். புயல் / சுனாமி போன்றவற்றை முற்கூட்டியே கணித்து சொல்லியதால் பல இலட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர (உடனே இந்தியாவையும் இலங்கையையும் உதாரணம் காட்ட கூடாது - அவை மக்கள் விரோத அரசுகள்). விவசாயத்துக்கு/ ஒரு விவசாயிக்கு இன்றைய அறிவியல் ஆற்றும் உதவிகள் அளப்பரியது என்பதை கனடாவில் நீங்கள் கண்டு இருப்பீர்கள்.  சினிமாவில் அறிவியலின் ஆதிக்கம் இன்று சினிமா சார்ந்த கலை படைப்புகளை சாதாரணமானவர்கள் கூட எடுக்க கூடியதாக வரவில்லையா?

எல்லாமே மூலதனம் சார்ந்தது தான் சுகன். இன்று நாம் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களில் 99 வீதமானவை மூலதனம் சார்ந்தவை தான். இவற்றால் எமக்கு எந்த பயனும் ஏற்படவில்லையா? வெறுமனே தீமைகளை மட்டுமா விளைகின்றது. ஒருவர் தன் தேவைகளுக்கு மீறி மொபைலுக்கு அதிகமாக செலவழிக்கின்றான் என்பது அவரவர் சம்பந்தப்பட்ட விடயம். எல்லாரும் ஐபோனின் லேட்டஸ்ட் மொடலை வைத்து இல்லை. உதாரணதுக்கு எனது மொபைல் LG யின் பழைய பதிப்பு ஒன்று..அத்துடன் என் Data அளவு மாதத்துக்கு 2 GB தான். அதில் கூட அரைவாசிக்கு மேல் பயன்படுத்தி இருக்க மாட்டேன்.  நுகர்வுக் கலாச்சாரத்துக்குள் தம்மை மூழ்கடிக்கும் ஆட்களை தான் நீங்கள் குறிப்பிட்டு இருப்பது.

எல்லாவற்றையும் இடது சாரி பார்வைக்குட்படுத்தி பார்ப்பதன் விளைவு இது என நினைக்கின்றேன்.

மாற்றங்களுக்கு ஏற்ப மாறாமல் அப்படியே நிலையாக இருக்க நினைத்தால் உலகம் ஏறி மிதித்துக் கொண்டு சென்றுவிடும். தக்கண மட்டுமே இங்கு பிழைத்து கொள்ளும். இணையவன் குறிப்பிட்டு இருப்பது போன்று எமது இனம் நிலைத்து நிற்க வேண்டுமானால் நாமும் இதே பாதையில் முன்னேறியாக வேண்டும். இடது சாரி / கம்யூனிச பார்வைகளால் ஒரு குண்டூசியை கூட எம்மால் படைக்க முடியாமல் போய்விடும்.

Link to comment
Share on other sites

il_570xN.929580071_qho9.jpg?version=0

கருத்துக்கு நன்றிகள் நிழலி..

உங்கள் கருத்தை மறுப்பதற்கில்லை.. அறிவியல் வளர்ச்சியுடன் சேர்ந்து பயணிப்பது ஒன்றே வழி. இவ்வளர்ச்சியில் இருந்து அந்நியப்பட்டு நிற்க முடியாது. முற்று முழுதான இடதுசாரிய நிலைப்பாடு என்னிடம் இல்லை ஆனல் இடதுசாரிய சிந்தனைகளை புறந்தள்ளுவதில்லை.

மேலே உள்ள படத்தில் பணமூட்டைக்கு பதிலாக செயற்கை அறிவு என்பது இருக்கும். செயற்கை அறிவு என்பது புதியதொரு முதலாளித்துவம் என்று சிந்திப்பவர்களும் உண்டு. இப்போதுள்ள பணமூட்டையும் அருகில் செயற்கை அறிவும் சேர்ந்துகொள்ளும் என்றும் சிந்திப்பவர்கள் உண்டு. இந்த இரண்டு அணுகுமுறைகளும் இருக்கவே செய்கின்றது. ஆனால் உங்கள் பார்வையே இதன் மூன்றாவது அணுகுமுறை. அதுவானது செயற்கை அறிவு என்பது இப்பட விளக்கத்துக்குள் அடங்காது. இப்படத்தில் அடித்தட்டில் உள்ளவன் வேறு தட்டுகள் மாற முடியும் ஏனெனில் அறிவு விருத்தியும் இங்கு ஒரு மூலதனமாகின்றது. இதில் குறிப்படவேண்டிய முக்கியமான விசயம் என்னவெனில் இதன் சாதகபாதகங்களை இந்த தொழில்நுட்பத்தை பாவித்தே தற்போது நாம் கருத்தாடுகின்றோம். அதனால்  உங்கள் கருத்தோடு முரண்பாடில்லை. ஆனால் ஒரு அச்சம் இருக்கவே செய்கின்றது. இவ் தொழில்நுட்பம் போர் நடவடிக்கையில் நலிந்த மக்களை மீள முடியாத நிலைக்குள் தள்ளிவிடுகின்றது. செயற்கை அறிவு என்பது எதனுடன் சேர்கின்றது யார்கையில் உள்ளது என்பதை பொறுத்துதான் நன்மை தீமைகள். இது படைநடவடிக்கைகள் ஆக்கிரமிப்புகளுடன் சேர்ந்துகொள்ளும், மருத்துவத்துடன் சேர்ந்துகொள்ளும், விவசாயத்துடன் சேர்ந்துகொள்ளும், மக்கள் பாதுகாப்புடன் என எதனுடன் இணைகின்றதோ அதுக்கேற்ப இதன் தாக்கம் இருக்கும். அவை சார்ந்த அச்சம் இருக்கவே செய்கின்றது. 

Link to comment
Share on other sites

On 21 mars 2018 at 8:41 PM, பகலவன் said:

நல்லதொரு கட்டுரை. இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் அல்லது தொடரும் என்று போட்டுவிட்டு எழுதுங்கள் இணையவன்.

...

AI மற்றும் Neural Networks இணைந்த துறையில் ஒரு காலத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். பழைய ஞாபங்களை கிளறிவிட்டீர்கள். நன்றி பதிவிற்கு.  

நன்றி பகலவன்.
எழுத நேரம் குறைவு என்பதைவிட எழுத்தாற்றல் முறைவு என்பதே உண்மை. குறிப்பாக Neural Networks இனை விளங்கிக் கொள்வதும் அதைப்பற்றி எழுதவும் நிறைய அறிவு வேண்டும். நீங்கள் இது பற்றித் தெரிந்து வைத்திருபப்து பாராட்டத்தக்கது.

On 21 mars 2018 at 8:55 PM, Kavi arunasalam said:

நல்லதொரு பதிவு.??

நன்றி கவி அருணாசலம்.

On 21 mars 2018 at 9:24 PM, பிழம்பு said:

AI பற்றி கொஞ்சம் கதைக்கும் ஒரு கட்டுரை /தொடர் விகடனில் வருகின்றது. அதில் கடந்த வாரம் வந்த கட்டுரை இது:

நல்லதொரு கட்டுரை. ஒரு புறம் தொழில்நுட்பம் முன்னேற அதேநேரம் அதன் விளைவுகள் பற்றிய கலந்துரையாடல்களும் பரவலாக முன்னெடுக்கப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

On 22 mars 2018 at 4:10 AM, சண்டமாருதன் said:

அருமையான கட்டுரை. . என்னும் தொடர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

செயற்கை அறிவு சார்நத தொழில்நுட்பத்தால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றபேதிலும் இது ஒரு மூலதனம். அது முதலாளித்துவத்தின் கைகளிலேயே இருக்கின்றது. அதனால் பெருமளவு மக்கள் பாதிக்கப்படவே செய்வார்கள். இன்று ஒருவனின் உழைப்பில் பெருமளவை தொழில்நுட்பம் சுரண்டிக்கொள்கின்றது. ஒரு கைத்தொலைபேசியின் விலை அதன் மாதாந்த கட்டணம் இன்ரர்நெற் கட்டணம் கணணியின் விலை அது சார்ந்த உபகரணங்களின் விலை என ஒருவன் எவ்வளவு பணத்தை செலவளிக்கவேண்டியுள்ளது !! எதிர்காலத்தில் இது என்னும் விரிவடையும் அதே நேரம் வேலைவாய்ப்பு குறைந்துகொண்டே போகும். செயற்கை அறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் எதிர்காலம் ஆச்சரியமானது அதைவிட அச்சம் மிகுந்தது. ஆனால் இதனுடன் போட்டிபோடுவதை தவிர வேறு வழியில்லை.

ஆதிகாலத்தில் மனிதர்கள் ஆயுதங்களை விலங்குகளை வேட்டையாட உருவாக்கினார்கள் பின்னர் ஆயுதங்கள் மனிதர்களை வேட்டையாட என்றே அமைந்துவிட்டது. முதலில் தான் உண்ணவே விவசாயத்தை மனிதன் ஆரம்பித்தான் பின்னர் வியாரபத்துக்காக மாறிவிட்டது.அதுபோல்தான் இந்த தொழில்நுட்பமும். ஆரம்பத்தில் பொறிவைத்து கண்ணிவைத்து தந்திரங்கள் செய்து ஒரு விலங்கை வேட்டையாடி பசிக்கு உண்ட மனிதர்கள் இப்போது ஒருவன் உழைப்பை என்னுமொருவன் உறிஞ்சி அவனிடம் இருந்து என்னுமொருவன் எடுத்து அறிவுசார்ந்த வேட்டைக்காடாக உலகில் மானிடம் உள்ளது. நாம் வேட்டைக்காரர்களாகவும் வேட்டைக்கு இரையாகின்றவர்களாகவும் இருக்கின்றோம். இந்த தொழில்நுட்பம் இந்த வேட்டைக் காட்டில் புதிய ஆயுதம். இதன் விழைவுகள் கடுமையாக இருக்கும். மேலும் தேசீயவாதம், இனம், தனித்துவங்கள் கலாச்சாரங்கள் பண்பாடுகள் அனைத்தும் வேறு நிலை நோக்கி நகரும் அல்லது காணாமல் போகலாம். 

உங்கள் கருத்துக்கு நன்றி சண்டமாருதன்.
மனிதனை மீறிய தொழில்நுட்ப வளர்ச்சியும் அதனால் ஏற்படப்போகும் புரட்சி பற்றியும் கார்ல் மாக்ஸ் எதிர்வு கூறியதாகவும் சிலர் சொல்கிறார்கள். அறிவியல் முன்னேற்றம் ஆச்சரியத்தையும் ஆவலையும் தந்தாலும் அடிமனதில் நாம் அவசரப்பட்டுப் பாதாளத்தில் விழப் போகிறோம் என்ற என்ற பயத்தையும் தருகிறது.

சோபியா ரோபோ அரேபியர்களுக்கு வழங்கப்பட்டபோது எலான் மஸ்க் போன்றவர்கள் தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர். இவர்களின் அச்சத்திற்கான காரணம் எதிர்கால முதலாளித்துவம் தமது கையை விட்டுப் போய்விடும் என்ற அச்சமா அல்லது தவறானவர்களின் கைகளில் போய் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்ற அக்கறையா தெரியவில்லை.

Link to comment
Share on other sites

On 22 mars 2018 at 4:32 AM, புங்கையூரன் said:

இப்படித் தான் ...கனக்க விடயங்கள்...மங்களகரமாக ஆரம்பித்து.....சட்டிக்குள்ள இருந்து...நெருப்புக்குள்ள விழுகிற மாதிரி முடியிறது!

உனக்குச் சமைச்சுப் போடிறதுக்காகவது... ஒருத்தியைக் கலியாணம் கட்டவேணும் எண்டு பெருசுகள் சொன்னதை நம்பிக் கலியாணம் கட்டி.... இப்ப நாலஞ்சு பேருக்குச் சமைக்கிற அளவில வந்து நிக்குது!

இப்ப....இலங்கை இருக்கிற நிலையியல.....ரோபோக்கள் வந்தால்.....பிரித் ஓதத் தான் உபயோகிக்கப்படும் என்பது எனது அனுமானம்!

கருத்துக்கு நன்றி புங்கையூரான். எமது சமுதாயம் இலகுவாகக் கையாளக் கூடிய தொழில்நுட்பத்தை முன்னேற்றத்துக்காகப் பாவிப்பதாகத் தெரியவில்லை. 

On 22 mars 2018 at 12:11 AM, குமாரசாமி said:

இதற்கும் ஒரு மனித மூளைச்சலவைக்கும் என்ன வித்தியாசம்?
அல்லது..
எனக்கு கட்டுரை விளங்கவில்லையா?

இது உங்கள் முன்னே நடந்துகொண்டிருக்கும் உண்மை நிகழ்வு. :11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் விருப்பமான ஒரு துறை. ஆனால் அதில் வேலை செய்ய சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்பதால் ஹொலிவூட் படங்கள் பார்ப்பதோடும் புத்தகங்கள், கட்டுரைகள் வாசிப்பதோடும் பொழுதுபோகின்றது. 

Artificial intelligence இல் அறிவைப் பெற நிறையக் கற்றுக்கொள்ளவேண்டும்.  பின்வரும் இணைப்பில் உள்ள படத்தை ஒரு போஸ்ரர் சைஸில் பிரின்ற் செய்து பார்த்தால் கற்கவேண்டிய அளவு தெரியும்!

http://nirvacana.com/thoughts/wp-content/uploads/2018/01/AI-Demystified-HIGH-RES.png

AI-Demystified-HIGH-RES.png

அது சரிப்படாது என்பதால் Ex Machina படத்தை பார்த்து ஓரளவு புரிய முயற்சிக்கலாம்!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் எங்கே தான் போகிறது?எல்லாமே இயந்திரமயம் கணனிமயமானால் வேலைக்கு ஆட்களே தேவையில்லையே?

இணையவன் மிகவும் பெறுமதியான கட்டுரை.அடுத்த தலைமுறை எங்கே போய் முட்டி மோதப் போகிறதோ?

Link to comment
Share on other sites

On 22 mars 2018 at 9:46 AM, suvy said:

இப்போது நடப்பது அறிவுப் போட்டி ......ஆனாலும் அபரிமிதமான மக்கள் தொகைப் பெருக்கம் அதை பெரிதாக நகரவிடாது கட்டுப் படுத்திக் கொண்டுதான் இருக்கம். 

பாருங்கள் இப்போது செய்யும் கார்கள் எல்லாம் சுமார் 220 km க்கு குறையாமல் செய்கிறார்கள். வீதிகளில் அதி கூடிய வேகம் 130 km.....! நகரங்களுக்குள்  நீங்கள் 10 km  தூரம் பயணம் செய்ய ஒரு மணித்தியாலம் எடுக்கும்.( நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை). 80 /90 ஆண்டுகள்தான் வாகனங்களில் வசதியாய் போய்வந்த பொற்காலம். இப்போது அதுவே ஒரு வேதனையான விடயமாகி விட்டது. 

நிறைய புது புது கண்டுபிடிப்புகள் வரத்தான் செய்யும். இப்போது நிறைய நிறைய ஜன்ஸ்டினும் , நியூட்டனும் பெருகிக் கொண்டு வருகின்றார்கள். வரட்டும் வரவேற்போம்.....!  tw_blush:

நன்றி சுவி அண்ணா.

மனிதன் தேவைக்காகத் தொழில்நுட்பத்தை நாடிய காலம் போய் தொழில்நுட்பத்துக்காகத் தேவைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறான். அதிவேகக்க் கார்களின் தேவை இல்லாவிட்டாலும் வேகமாக ஓடும் கார்தான் வேண்டும். 4X4 இல் ஆமைபோல் 30 கிமீ வேகத்தில் ஊர்ந்து தினமும் பரிஸுக்கு வேலைக்கு வருபவர்கள் உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை இணையவன்.

Link to comment
Share on other sites

On 22 mars 2018 at 4:58 PM, நிழலி said:

இதை நான் இப்படி பார்க்கவில்லை

அறிவியலின் வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள் என்றுதான் இவற்றை புரிந்து கொள்கின்றேன். ஒரு பக்கம் மனிதர்களில் மட்டுமே தங்கி செய்யப்படும் வேலைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் போது இன்னொரு பக்கம் இந்த தொழில் நுட்பம் சார்ந்த வேலைகள் அதிகரிக்கும்.

 முன்னர் ஒரு துறையில் கற்றவர்களுக்கு மட்டுமே வேலை என்றது மாறி தொடர்ந்து தம்மை அப்டேட் செய்து கொள்கின்றவர்களுக்கே அதிக வேலைவாய்ப்பு என்ற நிலை ஏற்படும்; இந்த நிலை கூட கற்பித்தல் தொடர்பான துறையில் மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். தானியங்கி வாகனங்களில் இந்த AI புகுத்தப்படுமாயின் விபத்துகளின் எண்ணிக்கையை பெரும் சதவீதத்தில் குறைக்கலாம்; இதன் மூலம் விபத்தின் மூலம் மக்கள் இறப்பது குறைவடைவதுடன் ஒரு அரசு மருத்துவத்துக்கு செலவழிக்கும் பணம் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்.

ஆம். 50 வருடங்களுக்கு முன்னர் இப்போது நாம் செய்துகொண்டிருக்கும் தொழில்கள் உருவாக்கப்படும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதேபோல் இன்னும் 20 வருடங்களில் மனிதன் என்ன செய்வான் என்பதும் நிச்சயமாக் கூற முடியாத ஒன்று.

அனுகூலங்கள் என்று பார்த்தால், ஏழைகளுக்கான மருத்துவம், ஆபத்தான தொழில்களில் ஈடுபடுவது, நேர்மையான ஓய்வற்ற சேவை  என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.  ஆனால் இதெல்லாம் மனித மேம்பாட்டிற்காக யாரும் உருவாக்கப் போவதில்லை. 

இன்று இந்தியாவைத் தூக்கி விட பணக்கார நாடுகள் முயல்கின்றன. இதற்குக் காரணம் உலகில் 25 வீதமான மக்கள் இந்தியாவில்தான் இருக்கப் போகிறார்கள். அங்குதான் வியாபாரம் செய்ய முடியும். வியாபாரம் செய்ய வேண்டுமானால் நுகர்வோரிடம் பணம் வேண்டும். 

Link to comment
Share on other sites

20 hours ago, சண்டமாருதன் said:

உங்கள் கருத்தை மறுப்பதற்கில்லை.. அறிவியல் வளர்ச்சியுடன் சேர்ந்து பயணிப்பது ஒன்றே வழி. இவ்வளர்ச்சியில் இருந்து அந்நியப்பட்டு நிற்க முடியாது. முற்று முழுதான இடதுசாரிய நிலைப்பாடு என்னிடம் இல்லை ஆனல் இடதுசாரிய சிந்தனைகளை புறந்தள்ளுவதில்லை.

சண்டமாருதன், நீங்கள் இணைத்த படம் அருமை. அது பல கருத்துக்களைச் சொல்கிறது. 

எனது பார்வையில் அடித் தட்டில் தமிழினமும் இரண்டாம் தட்டில் புலம்பெயர்ந்த தமிழரும் இருப்பதுபோல் தோன்றுகிறது. அ

அதி உயரத்தில் உள்ல தட்டில் எம்மை வைத்துப் பார்க்கிறேன். ஆனால் அந்த இடத்துக்கு வருவதற்கு எம்மிடம் எந்தப் பலமும் கிடையாது.

விரும்பாவிட்டாலும் அதே பாதையில் பயணித்துத்தான் நம்மைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை வரும்போது ஏன் நாம் சிங்களவருடனும் சேர்ந்தே பயணிக்கக் கூடாது என்று நினைப்பதுண்டு. 

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

எனக்கு மிகவும் விருப்பமான ஒரு துறை. ஆனால் அதில் வேலை செய்ய சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்பதால் ஹொலிவூட் படங்கள் பார்ப்பதோடும் புத்தகங்கள், கட்டுரைகள் வாசிப்பதோடும் பொழுதுபோகின்றது. 

நூறு வருடங்களாக ஹொலிவூட் சினிமா அறிவியலை எதிர்வுகூறி வந்துள்ளது. மனிதன் விண்வெளிக்குப் போவது முதல் செயற்கை அறிவு வரை ஹொலிவூட் சினிமா அறிவியல் முன்னோடியாக இருந்துள்ளது. 

Matrix படம் வெளிவந்தபோது மூளையைக் குழப்பிக் கொண்டவர்கள் இப்போது அப் படத்தை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

இணையவன் நல்லதொரு பதிவு. சற்றுச் சேர்த்துக்கொள்கிறேன். இதை சனரஞ்சகமாக எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. முயலுகிறேன்.

நீங்கள் குறிப்பிடும் விடுமுறை கணிப்பு முதலான ‘supervised learning” முதலியன மிக ஆரம்பநிலை பிரயோக பயன்பாடுகள். நியூறல் நெற்வேர்க் என்பது கூட நாற்பது வருடங்களிற்கு மேலால் உள்ளபோதும் இன்றைக்கு Deep learningகில் எத்தனையே மாறுபட்ட தொழில்நுட்பங்கள் வளர்ந்துவவிட்டன.

ஒவ்வொரு முறை நீங்கள் கூகிளில் எதைத் தேடும் போதும் குறைந்தது 43 மொடல்கள் உங்கள் மீதான பரிசோதனையாக ஓட்டப்படுகின்றன. இது கூட இன்றைக்குப் பழைய கதை. மென்பொருள் மட்டுமல்ல மென்பொருள் ஓடுகின்றன தளம் கூட இன்று மனிதர் தலையீடு இன்றி தவறுகளைத் திருத்துவது தொட்டு தேவைக்கேற்ப கணினிகளை அதிகரித்தல் குறைத்தல் முதலியன எல்லாம் பல காலம் நடைபெறுகின்றன. ஏற்கனவே பலதடவை இங்கு நாம் பேசியததைப் போல, இது இப்படித் தான் என்பதாகவோ, அல்லது 20 வருட பழைய வினாத்தாட்களைப் பயிற்சிசெய்து 100 மார்க் வாங்கிச் செய்யும் தொழில்களிற்கோ இன்றைக் மனிதன் தேவையில்லை. 

கணிதத்தில் சிறந்தபுள்ளி எடுத்தல்  முன்னர் மதிக்கப்பபட்டது இன்றைக்குக் முன்னைய பல்கலைக்களக கணித அறிவு மனிதனிற்குத் தேவையில்லை என்று ஆகிவிட்டது. பிரயோக கணிதத்திற்கு மக்களை வேலைக்கு எடுப்பது இன்று அவசியமில்லை. Data Science என்று இன்றைக்கு பல்கலைக்களகங்கள் கற்பிக்கும் 30க்கு உட்பட்ட algorithm எல்லாம் நாளாந்த utility ஆகிக்கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, amazon sagemaker, 20க்கு மேற்பட்ட அல்கோறிதம்களை மவுஸ் கிளிக் என்றவகையில் utility ஆக்கிவிட்டது . இதற்கு விஞ்ஞானி தேவையில்லை. செக்கறிட்றி போதும். 

எப்படி microsoft வின்டோஸ் வந்தபோது கணினி பற்றித் தெரியாது மக்கள் கணினி பயன்படுத்தத் தொடங்கினரோ அது போன்று இன்று அனைத்துத் தொழில்நுட்பமும் மிகச்சொற்ப ஆராய்ச்சியாளர்கள் மட்டும் அறிய மீதிப்பேர் வின்டோஸ் போன்று பயன்படுத்தும் நிலை வந்துள்ளது. ஏ.ஐ கூட பிரயோக பயன்பாடுகளாக எவரும் அறியாவகையில் பரந்து கிடக்கிறது.

எந்தவொரு தொழில்நுட்பமும் ஆரம்பிக்கையில் ஒரு வியப்பு நிலையில் ஆரம்பிக்கும், பின் 'அட அது இருந்தால் நல்லாயிருக்கும்' என்றாகி, பின் 'அது அவசியம் தேவை' என்றாகி இறுதியில் எல்லோரிற்கும் கிடைக்கும் சர்வசாதாரணம் (utility) என்ற நிலையினை அடையும். தற்போது நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் ஏ.ஐ என்ற வியப்பைத் தாண்டி சர்வசாதாரண நிலையில் இருக்கின்றன. 

நீங்கள் உங்கள் மகள் சார்ந்த பல்கலைக்களக துறை சார்ந்து சொன்னது மிகச்சரி. இனிமேல் ஒரு 8 வருடம் பல்கலைக்களகத்தில் பி.எச்.டி எடுத்து விட்டுக் காலத்திற்குக் குப்பை கொட்டல் சரிவராது. எவரிற்கும் எந்தப் பட்டம் சார்ந்தும் எந்தக் கவனமும் இல்லை. தொடர்ந்த கற்றல் மட்டுமே இன்றைய தேவ. இனிமேல் எந்தப் பல்கலைக்களத்தில் என்ன படித்தாய் என்ற கேழ்வி கரைந்து என்ன தெரியும் என்பது மட்டுமே கவனம் பெறும். இது மிக மிக நல்ல மாற்றம். கட்டுப்பட்டித் தனங்களைத் தவிடுபொடி ஆக்கி விடும்.

எப்பிடி நோக்கியாவும் மோட்டறோலாவும் தசாப்த்தங்கள் நிறைந்த அனுபவத்தோடு தொலைபேசி தயாரிப்பாளர்களாக இருந்த நிலையில் அந்தத் தொலைபேசிகள் காலாவதியாகிக் கொம்பனிகளும் தொலைந்ததுபோல், இன்று மாத்தியோசிப்பது தான் “disruptors” என்று விரிகின்றன. ரெஸ்லாவின் றோட்ஸ்ற்றர் car இயந்திரம் Bugattiயினை விஞ்சியுள்ளது. பெற்றோல் என்சினால் இத்தனை துரிதமாய் மாறமுடியாது--இது Motorola/Nokia கதை போல தான். 

இப்போ ஆரம்பிக்கும் அடுத்த துவக்கம் மூளை உள்ள இயந்திரத்திடம் பணம் சேர்தல் என்பதாய் இருக்கிறது. உதாரணத்திற்கு, ரெஸ்லாவோடு கிறிப்ற்றோ கறன்சியினைச் சேர்த்துப் பாருங்கள். 

நீங்கள் உங்கள் ரெஸ்லாவில் உட்கார்ந்து உங்களை அலுவலகத்தில் இறக்கிவிடச்சொல்கிறீர்கள். அது இறக்கிவிட்டதும், அதை நீங்கள் Uber தொழில் செய்து பணம் சப்பாதிக்க அனுப்புகிறீர்கள். அது சம்பாதித்துக் கொள்கிறது. பின்னர் அன்று மதியம் நீங்கள் விமானநிலையம் செல்லவேண்டி இருக்கிறது. நீங்கள் ரெஸ்லாவில் அமர்ந்து என்னை 20 நிமிடத்தில் கொண்டுபோ என்கிறீர்கள். எங்கும் வாகன நெரிசல். இப்போ, இந்த வாகனங்கள் எல்லாம் உங்கள் ரெஸ்லா போன்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போ உங்கள் ரெஸ்லா முன்னால் உள்ள ரெஸ்வாவிடம், ஒதுங்கு நான் முந்திச் செல்கிறேன் அதற்கு உனக்கு 50 ஈத்தர் தருகிறேன் என்கிறது. இப்படி வாகனங்கள் தங்களிற்குள் கிறிப்ற்றோகறன்சியினைப் பரிமாறிப் பல விடயங்களை நடாத்திக்கொள்ளும். காசும் முடிவெடுக்கும் சுதந்திரமும் இயந்திரங்களிடம் சேரும் போது இப்படிப் பல பயன்பாடுகள் விரியும். அடுத்த ஐந்தாண்டுகளிற்குள் அமெரிக்காவிற்குள் ட்றக் டைவர் தொழில் இருக்காது. இப்படி ஏராளம்.

குதிரைவண்டிகள் காலத்தில் கார் வந்தபோது வேலைகள் அதிகரித்தன. ஏனெனில் பெற்றோல் தொழில்கள் தொட்டு ஏகப்பட்ட தொழில்கள் பிறந்தன. ஆனால் ஏ.ஐ நிச்சயம் அப்படியல்ல. அவசியம் தொழில்கள் தொலைந்து போகும். முன்னர் செல்லாக் காசாய் இருந்த தொழில்கள் மறுபடி பிரசித்தம் பெறும். அதாவது மூளை வேலைகள் மங்கி இதய வேலைகள் ஓங்கும். 

மனிதன் இன்னதொழில் பெரிது இன்னதொழில் சிறிது என்று வறட்டுக்கவுரவத்தில் உட்கார்ந்திருந்த நிலை தவிடுபொடியாகும். வேலைகளில் இன்றைக்கு உள்ள சம்பள வித்தியாசம் குறையும். வேலை என்பது சார்ந்து மக்களிற்கு உள்ள பார்வை மாறும். ஸ்கன்டினேவியா இதில் முன்னோடியாகத் தலைப்படுகிறது.

அதாவது மனிதன் இயந்திரம் போன்று தொழிற்பட்டுக் காசு சேர்த்த காலம் முடிவிற்கு வருகிறது. இனிமேல் மனிதன் மனிதனாய் இருந்தால் மட்டும் காசு சேர்க்கமுடியும். மனிதனிற்கு இனிமேல் மனிதவேலைகள் மட்டும் தான் மிஞ்சும். அதுவும் நல்லது தான்.

இது ஒரு பின்னூட்டத்தில் பேசி முடிக்கக்கூடிய விடயமல்ல. ஆனால் தரவுகள் தாராளமாய் எங்கும் நிறைந்து கிடப்பதால் இங்கு தான் பேசவேண்டும் என்பதுமில்லை.

நன்றி உங்கள் பதிவிற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

எவரிற்கும் எந்தப் பட்டம் சார்ந்தும் எந்தக் கவனமும் இல்லை. தொடர்ந்த கற்றல் மட்டுமே இன்றைய தேவ. இனிமேல் எந்தப் பல்கலைக்களத்தில் என்ன படித்தாய் என்ற கேழ்வி கரைந்து என்ன தெரியும் என்பது மட்டுமே கவனம் பெறும். இது மிக மிக நல்ல மாற்றம். கட்டுப்பட்டித் தனங்களைத் தவிடுபொடி ஆக்கி விடும்.

உண்மைதான். எங்கு படித்தேன், என்ன படித்தேன் என்பதையெல்லாம் இப்போது சொல்லுவதில்லை. ஒவ்வொருநாளும் புதிதாகக் எதையாவது கற்கவேண்டும்.

Link to comment
Share on other sites

On 3/23/2018 at 5:29 PM, இணையவன் said:

சண்டமாருதன், நீங்கள் இணைத்த படம் அருமை. அது பல கருத்துக்களைச் சொல்கிறது. 

எனது பார்வையில் அடித் தட்டில் தமிழினமும் இரண்டாம் தட்டில் புலம்பெயர்ந்த தமிழரும் இருப்பதுபோல் தோன்றுகிறது. அ

அதி உயரத்தில் உள்ல தட்டில் எம்மை வைத்துப் பார்க்கிறேன். ஆனால் அந்த இடத்துக்கு வருவதற்கு எம்மிடம் எந்தப் பலமும் கிடையாது.

விரும்பாவிட்டாலும் அதே பாதையில் பயணித்துத்தான் நம்மைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை வரும்போது ஏன் நாம் சிங்களவருடனும் சேர்ந்தே பயணிக்கக் கூடாது என்று நினைப்பதுண்டு. 

உங்கள் பதில் கருத்துக்கு நன்றிகள்

நீங்கள் கூறுவதுபோல் ஒரு தோற்றப்பாடு இருக்கின்றது. இருந்தும் வரையறை செய்யமுடியாத நிலை உண்டு. காரணம் பாதிக்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் அடித்தட்டிலேயே உள்ளனர். மேலும் தாயகத்தில் உள்ள மக்கள் தனியே முதலாளித்துவ அழுத்தத்தினால் அடித்தட்டில் நசுங்குவதில்லை போரினவாத அழுத்தம் மற்றும் எமக்குள் இருக்கும் சமூக முரண்பாட்டு அழுத்தம் என்பன மேலோங்கி நிற்கின்றது. இவற்றில் இருந்து தப்பித்தலுக்கே கல்விகற்றலும் புலப்பெயர்வும் கூட வழியாக அணுகப்படுகின்றது. 

புலமபெயர்ந்தவர்கள் பிற தேசீய இனங்களுடன் சேர்ந்து வாழும் போது சிங்களவர்களுடன் சேர்ந்து பயணிப்பதும் சாத்தியமே ஆனால் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை என்பது அதற்கு இடமளிப்பதில்லை. 

மேலும் நீங்கள கூறுவதுபோல் அதி உயரத்தில் உள்ள தட்டுக்கு செல்வதற்கு பின்புலம் அவசியம். உதாரணத்துக்கு சீனா தென்கொரியா ஜப்பான் ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றிற்கு இது சாத்தியம். நாடு இனம் தேசீயம் என்பன அவர்களுக்கு முதுகெலும்பாக உள்ளது. அதே நேரம் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள செயற்கை அறிவு மூலதனம் என்பது மேற்தட்டில் உள்ளவர்களுக்கு ஊழியம் செய்யவே பெரும்பாலும் பயன்படுகின்றது. ஏனெனில் பல தேசீய இனங்கள் இணைந்த ஒரு நாட்டில் இந்திய தேசீயம் என்பது போலிநிலையில் உள்ளது. அதனால் அவர்களின் அறிவு விருத்தி என்பது கூட முதலாளித்துவ சந்தையில் விற்பனை நிலையில் உள்ளது. சிங்களவர்களுடன் சேர்ந்து பயணிக்கும் போது அதே நிலைதான் எமது செயற்கை அறிவு என்னும் மூலதனத்துக்கும் ஏற்படும். 

இத் தட்டுகளில் இருந்து அப்பாற்பட்ட ஒரு கட்டமைப்பே விரும்பக்கூடிய ஒன்றாக உள்ளது. இந்த அழுத்தங்களில் இருந்து விலகி வாழும் நிலையே விரும்பத்தக்கது. இருந்தும் தற்போதய உலக ஒழுங்கில் சாத்தியமில்லை. எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு இந்த முதலாளித்துவ சுழற்சிக்குள் வாழ்வு சிக்கிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க பிற்க்கின்ற்ன பிள்ளைகளும்,உந்த ரோபோக்களும் ஒரே மாதிரித் தான். சொன்னதை மட்டும் தான் செய்யும்<_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.