Jump to content

சோறு முக்கியம் பாஸ்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பணம் / சந்தா கொடுத்து படிக்க வேண்டிய சஞ்சிகைகளை, பதிவுகளை யாழில் இலவசமாக தருவது அவர்களது வருமானத்தை பாதிக்கும் செயல் எனக் கருதுவதால் பொதுவாக நான் அவற்றை அவசியம் இல்லாவிடின் பகிர்வதில்லை. ஆனால் இந்த தொடரின் இந்த கட்டுரை இலங்கையில் இருந்து போன ஒரு தமிழ்  பெண்ணின் கடை என்பதால் பகிர்கின்றேன் (இது வெளியாகி இரு வாரம் ஆகிட்டு)

---------------------------------------------

துரையின் புதிய அடையாளங்களில் ஒன்று `ஆப்பம் ஹாப்பர்ஸ்.’ தேங்காயால் ஆசீர்வதிக்கப்பட்ட அசல் p32b_1520244864.jpgஇலங்கை உணவுகளை மதுரை கே.கே.நகர், எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் இருக்கிற `ஆப்பம் ஹாப்பர்ஸ்’ உணவகத்தில் ருசிக்கலாம்.

இலங்கையின் பாரம்பர்ய உணவான ஆப்பங்கள், அதற்கு சைட்-  டிஷ்ஷாக பொல் சம்பல், சீனிச் சம்பல், நூல் நூலாகப் பிரிகிற பூப்போன்ற இடியாப்பம்... அதற்கு சைட்- டிஷ், மணக்க மணக்கத் தேங்காய் சொதி: முட்டை ஸ்டஃப் செய்யப்பட்ட  அசல் சிலோன் ரொட்டி,  திகட்டாத  வாழைப்பழ இனிப்பு ரொட்டி, முழு விளை மீன் ஃப்ரை, மொத்தி மொத்தியான  இறால் வறுவல், வித்தியசமான நண்டு ஆம்லேட் என ருசி விரும்புபவர்களுக்கு வேறுபட்ட அனுபவத்தைத் தருகிறது இந்த உணவகம்.

ஆப்பம் ஹாப்பர்ஸ் உணவகத்தின் உரிமையாளர் சுபா, இலங்கை மருமகள். கணவர் கோபால் அங்கு தொழிலதிபர். சமையலில் தீவிர ஆர்வம் கொண்ட சுபா, பிள்ளைகளின்  படிப்புக்காக சொந்த ஊருக்கு வந்தார். கூடவே, லங்கா உணவையும் இங்கே கொண்டு வந்து விட்டார். இரவு உணவு மட்டும்தான். இரவு 7 மணிக்குத் தொடங்கி 11 மணிக்கு முடித்து விடுகிறார்கள். 20 பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். மிதமான மஞ்சள் விளக்கொளி... சுவர்களில் புன்னகை உதிர்க்கும் புத்தர். சிலோன் மனோகரின் அழுத்தமான குரலில் ‘பட்டு மாமியே...’  பாடல் உறுத்தாமல் ஒலிக்கிறது. சாப்பிட வருபவர்களை வாசலில் நின்று, யாழ்ப்பாணத் தமிழில் இன்முகத்தோடு வரவேற்று அமர வைக்கிறார் சுபா. கிச்சன், சுபாவின் அம்மா திலகம் நிர்வாகத்தில் இருக்கிறது.

``ஸ்ரீலங்காவில் பக்கத்து வீடுகள்ல விசேஷங்கள் நடக்கிறப்போ கூப்பிடுவாங்க. போய் சமைச்சுக் கொடுப்பேன். சின்னச் சின்னதா கேட்டரிங்கும் செஞ்சோம். மதுரை வந்தபிறகு, என் சமையலைச் சாப்பிடுற உறவுக்காரங்க, நீங்க ஹோட்டல் நடத்தினா நல்லாப் போகும்னு சொல்வாங்க... ஒருமுறை, மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில, லங்கா உணவுகள் சமைச்சு ஸ்டால் போடுங்கன்னு கூப்பிட்டாங்க. அதுக்குக் கிடைச்ச வரவேற்புலதான் இந்த உணவகத்தைத் தொடங்கினேன்...” என்கிறார் சுபா.

p32c_1520244893.jpg

வெரைட்டிகள் அதிகமில்லை. ஆப்பத்தில் நான்கு வகை... பிளைன், முட்டை, சிக்கன், சீஸ் ஆப்பங்கள். வெள்ளை வெளேரென அரைவட்டத்தில் ஆப்பங்கள் ஈர்க்கின்றன. நடுவில் முட்டையோ, சிக்கனோ, சீஸோ.  பொல் சம்பல், சீனிச் சம்பல், சைட்-டிஷ். துவையல் மாதிரிதான். ஆனால், ஆப்பத்துக்குத் தகுந்த தனித்துவ டேஸ்ட். உதிரி உதிரியாக இருக்கிறது.  தேங்காய்த் துண்டுகள், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கல்லுரலில் போட்டு இடித்துச் செய்வதுதான் பொல் சம்பல்... சீனிச்சம்பலில் கொஞ்சம் சர்க்கரை சேர்க்கிறார்கள். இனிப்பும் காரமும் சரிவிகிதத்தில் இருக்கின்றன.

 ``பல பண்பாட்டு வேறுபாடுகள் இருந்தாலும், லங்காவுல எல்லாப் பகுதிகளுக்கும் இருக்கிற பொதுவான  அம்சம் உணவுதான். கொழும்புல என்ன சாப்பிடுவாங்களோ, அதைத்தான் யாழ்ப்பாணத்துலயும் சாப்பிடுவாங்க. மசாலாவுல மட்டும் சின்ன வித்தியாசம் இருக்கும். கொழும்புல  மல்லி, காய்ந்த மிளகாய் அதிகம் சேர்ப்பாங்க. யாழ்ப்பாண மசாலாவுல சீரகம், மிளகு அதிகம் மணக்கும். நிறத்துக்கு எந்தக் கூடுதல் பொருளும் சேர்க்கிறதில்லை.  காரம், வாசனை, மென்மை... இது மூணுக்கும் முக்கியத்துவம் இருக்கும். ஏலக்காய், பட்டை, ரப்பை இலையும்  மசாலாவுல இருக்கும். எங்களோடது யாழ்ப்பாணம் ஸ்டைல். ரப்பை இலை மாதிரி மசாலாவுக்குத் தேவையான பொருள்களை அங்கிருந்து கொண்டு வர்றோம்” என்கிறார் சுபா.

முழு விளைமீன்... மிளகு, பூண்டு, இஞ்சி சேர்த்து பேக்கிங் ஸ்டைலில் ‘ஃப்ரை’ செய்கிறார்கள். இயல்பான நிறம்.. கைகளில் ஒட்டாத அளவுக்குத்தான் எண்ணெய் சேர்க்கிறார்கள். மிதமான காரத்தில் கேக் மாதிரி உள்ளிறங்குகிறது. தூத்துக்குடியிலிருந்து வருகிறது சிங்கி இறால். அரைவேக்காடாக வேகவைத்து மிதமான மசாலாவில் பரப்பி வைக்கிறார்கள். லேசான இனிப்பு, மெல்லிய உறைப்பு என வெரைட்டி டேஸ்ட்.

p32d_1520244919.jpg

சிலோன் ரொட்டி, அப்படியே மதுரை லாப்பாவின் மறு அவதாரம். பரோட்டாவுக்கு நடுவில் முட்டை மசாலாவை ஸ்டஃப் செய்து  முக்கால் வேக்காட்டில் வேகவைக்கிறார்கள்.   .  சைட்-டிஷ் தேவையில்லை. பெரும்பாலான இளைஞர்கள் இதற்காகவே, ஆப்பம்  ஹாப்பர்ஸ் வருகிறார்கள்.

ஆனால், டின்னர்தானே  என்று பர்ஸில் வெயிட் இல்லாமல் போனால் சிரமம்தான். சீனிச்சம்பல், பொல் சம்பல், மீல்மேக்கர் கிரேவியோடு  2 ப்ளெய்ன் ஆப்பம் 135 ரூபாய். கிரேவி நான்வெஜ்ஜாக இருந்தால் 185 ரூபாய். குறைந்தது ஐந்தாவது சாப்பிட்டால்தான் வயிறு நிறையும்.  மூன்று பீஸ் இடியாப்பம் காம்போவும் ஆப்பம் விலைதான். சிங்கிள் மீன் ஃப்ரை 300 ரூபாய். சொதி, தேங்காய்ப்பாலெல்லாம் ருசிக்க விரும்பினால் தனியாகத்தான் வாங்க வேண்டும்.
 
`‘விலையெல்லாம் ஒரு விஷயமா... வெரைட்டிதான் வேண்டும்’’ என்ற தேடல் கொண்டவர்களுக்கு ஆப்பம் ஹாப்பர்ஸ் சூப்பர் சாய்ஸ்!

https://www.vikatan.com/anandavikatan/2018-mar-21/serials/139125-food-appams-hoppers-restaurant-in-madurai.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாது யாழ்ப்பாண தமிழிலை வரவேற்பு...பிறகென்ன பொல்சம்பல்.....சம்பல் என்றூ சொல்லாமே......யாழ்ப்பாணச் சமையலுக்கு கனடாவில் செம மவுசு.....அதென கொழும்பு மிக்ஸ்.... தமிழே மிக்ஸ் பண்ணீ கிடக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, alvayan said:

என்னாது யாழ்ப்பாண தமிழிலை வரவேற்பு...பிறகென்ன பொல்சம்பல்.....சம்பல் என்றூ சொல்லாமே......யாழ்ப்பாணச் சமையலுக்கு கனடாவில் செம மவுசு.....அதென கொழும்பு மிக்ஸ்.... தமிழே மிக்ஸ் பண்ணீ கிடக்கு...

அது தானே....அதென்ன.....ஆப்பம், இடியாப்பம் ?

சிங்களம் பேசிற மாதிரிச் சவுண்டு வருகுதே?

அதென்னப்பா...ரப்பை..இலை?

நம்ம கருவேப்பிலைக்கும் பேர் மாத்திட்டாங்க போல கிடக்கு!

அல்லது ரம்பை இலையாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

தாய் யாழ்ப்பாணமாகவும் சுபா அநேகமாக கொழும்பில் அல்லது தெற்கில் வளர்ந்தவராகவும் இருப்பார்.  

யாழ்ப்பாணத்து தேங்காய் சம்பலுக்கும் தெற்கு சம்பலுக்கும் வேறுபாடு இருக்கின்றது. பொல் சம்பல் / சீனி சம்பல் மற்றும் முட்டை ரொட்டி போன்றன பொதுவாக தெற்கில் உள்ள உணவகங்களில் தான் அதிகம் வைத்து இருப்பர்.

இதை எல்லாவற்றையும் விட சுபா சொல்ல அதை கேட்டு கட்டுரையாக்கியவர் கொழும்பு தமிழை கேட்டு நல்லா குழம்பி விட்டார் என்று புரிகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடும்பமாக அவர்களது முயற்சிகளை பாராட்டிடத்தான் வேண்டும்.....! நன்றி பிழம்பு.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2018 at 2:02 PM, நிழலி said:

யாழ்ப்பாணத்து தேங்காய் சம்பலுக்கும் தெற்கு சம்பலுக்கும் வேறுபாடு இருக்கின்றது. பொல் சம்பல் / சீனி சம்பல் மற்றும் முட்டை ரொட்டி போன்றன பொதுவாக தெற்கில் உள்ள உணவகங்களில் தான் அதிகம் வைத்து இருப்பர்.

தெற்கில் பொல் சம்பல் என்பது மிளகாய் தூளில் உறைப்பாவது.  

வடககே, அரைத்த பச்சைமிளகாய் சம்பல், அரைத்த செத்த மிளகாய் சம்பல், பொரித்த செத்த மிளகாய் இடித்த சம்பல், (பொரியாமல்) இடித்த செத்த மிளகாய் சம்பல், கைச்சம்பல், கருவாட்டுச் சம்பல்  என பலவகை.

ஒவ்வொன்றும் ஒரு வகை.

பொரித்த செத்த மிளகாய் இடித்த சம்பல், தோசைக்கும்... அரைத்த செத்த மிளகாய் சம்பல் இட்லிக்கு, இடியப்பத்துக்கு என ... தனிச்சுவை.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

தெற்கில் பொல் சம்பல் என்பது மிளகாய் தூளில் உறைப்பாவது.  

வடககே, அரைத்த பச்சைமிளகாய் சம்பல், அரைத்த செத்த மிளகாய் சம்பல், பொரித்த செத்த மிளகாய் இடித்த சம்பல், (பொரியாமல்) இடித்த செத்த மிளகாய் சம்பல், கைச்சம்பல், கருவாட்டுச் சம்பல்  என பலவகை.

ஒவ்வொன்றும் ஒரு வகை.

பொரித்த செத்த மிளகாய் இடித்த சம்பல், தோசைக்கும்... அரைத்த செத்த மிளகாய் சம்பல் இட்லிக்கு, இடியப்பத்துக்கு என ... தனிச்சுவை.

தமிழரின்...  சம்பல்  வகைகளை சொல்லி, ?️
சும்மா கிடந்த வாயை... பொச்சுக்  கொட்ட வைத்து விட்டீர்கள். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன* இது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

என்ன* இது ?

?‍♀️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தமிழரின்...  சம்பல்  வகைகளை சொல்லி, ?️
சும்மா கிடந்த வாயை... பொச்சுக்  கொட்ட வைத்து விட்டீர்கள். ?

பருத்தித்துறையில் வீடுகளில் தட்டி வைத்து தோசை செய்து வியாபாரம் செய்வார்கள். அங்கே பச்சைமிளகாயில் கறி செய்வார்கள். வெங்காயத்தில் கறி... வெந்தயக் குழம்பு என்ற பெயரில்.

அகப்படட எல்லாமே கறியாக்குகிறார்கள். வாழை பொத்தி, வாழைப்பூ, சண்டி இல்லை.....இவ்வளவு  விசயம் கறிக்கு பாவிக்கப் பட்டிருக்கு...

இன்று கறி செய்வதுக்கு இதுவும் பாவிக்கிறார்கள் என்று வாசித்து ஆச்சரியப் பட்டேன்..

அவித்த பனங்கிழங்கில் கறி.... கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

இதை சாலட்டாக செய்தும் சாப்பிடலாம். மேலும் இதை சுடச்சுட சமைத்து சாதத்துடன் சைடிஸாக சாப்பிட்டும் மகிழலாம்

health benefits of palm heart

பனங்கிழங்கு சாலட்

எல்லா விதமான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தல்

கால்சியம் கிடைக்கிறது

உடல் எடை குறைதல்

குறைந்த கொழுப்பு மற்றும் சோடியம்

பனை இருதயப் பகுதி ரெசிபி

இதை சாலட்டாக செலரியுடன் சேர்த்து பயன்படுத்தி பலன் பெறலாம். இப்பொழுது நாம் பனை இருதய பகுதி லெமன் சாலட் பற்றி காண உள்ளோம்.

தேவையான பொருட்கள்

1/4 கப் நறுக்கிய வெங்காயம்

2 கப் நறுக்கிய பனை இருதயப் பகுதி

1 கப் நறுக்கிய செலரி

3 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் ஆலிவ் ஆயில்

நறுக்கிய பார்சிலி, உப்பு மற்றும் மிளகுத்தூள்

பயன்படுத்தும் முறை

1/4 கப் வெங்காயத்தை குளிர்ந்த நீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்

பிறகு அதை எடுத்து கொள்ளுங்கள்

இப்பொழுது வெங்காயத்தையும் 2 கப் பனை இருதயப் பகுதி இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும்

மற்ற பொருட்களையும் இதனுடன் சேர்த்து உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.

கடைசியாக ஆலிவ் ஆயில் மற்றும் ஆர்குலா சேர்த்து கிளறி இறக்கிட வேண்டியது தான்.

சுவையான பாம் ஹார்ட் சாலட் ரெடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSC00610-001.JPG

அரைத்த பச்சைமிளகாய் சம்பல்

DSC02172-001.JPG

அரைத்த செத்த மிளகாய் சம்பல்

DSC09892-001.JPG

இடித்த செத்த மிளகாய் சம்பல்

DSC03600-001.JPG

பச்சைமிளகாய் கறி

418096086_GreenChilliCurry.jpg.f574e6a711928e56b5986172f03f3658.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.... வெள்ளிக் கிழமையாய்... பார்த்து, சம்பல், சம்பலாய்..... அ(இ)டிக்கிறார்.... நாதமுனி. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

ஆஹா.... வெள்ளிக் கிழமையாய்... பார்த்து, சம்பல், சம்பலாய்..... அ(இ)டிக்கிறார்.... நாதமுனி. ?

சம்பலிலே சிறந்த சம்பல் மாசிச் சம்பல்.

பாண் அல்லது வெள்ளைப்புட்டு நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

சம்பலிலே சிறந்த சம்பல் மாசிச் சம்பல்.

பாண் அல்லது வெள்ளைப்புட்டு நன்றாக இருக்கும்.

மாசிக் கருவாடு,  கறி  வேப்பிலை,  சில நிறுவனங்களின் மிளகாய்த் தூள் வகையானவை..
ஜேர்மனியில்  தடை செய்யப் பட்ட  பொருட்கள்.

ஆனாலும்...  தமிழ்க்  கடைகளில்,  இது தான்  வேண்டும் என்று கேட்டால்,
எப்படியோ.... கொண்டு வந்து தந்து விடுவார்கள்.
அவர்களுக்கு....  வாடிக்கையாளர் முக்கியம், அல்லவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

மாசிக் கருவாடு,  கறி  வேப்பிலை,  சில நிறுவனங்களின் மிளகாய்த் தூள் வகையானவை..
ஜேர்மனியில்  தடை செய்யப் பட்ட  பொருட்கள்.

ஆனாலும்...  தமிழ்க்  கடைகளில்,  இது தான்  வேண்டும் என்று கேட்டால்,
எப்படியோ.... கொண்டு வந்து தந்து விடுவார்கள்.
அவர்களுக்கு....  வாடிக்கையாளர் முக்கியம், அல்லவா.

(பிரைவேட்) ஆசுபத்திரிகளுக்கும் வாடிக்கையாளர் முக்கியம் அல்லவா. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னேறுவத்துக்கான வழிகளும் கதவுகளும் 
அகல திறந்து கிடக்கிறது 
நாம்தான் வெறும் சோம்பேறிகளாக இருக்கிறோம். 

மற்றைய நாடுகளில் எப்படி என்பது என்று தெரியாது 
இங்கு அமெரிக்காவில் வார வார சம்பளத்தில் வாழும் 
படியாகவே "அரசை" ஆளும் பணக்காரர்கள் குடிவாசிகளை 
வைத்திருக்கிறார்கள் ..... ஆதலால் ஒரு சிறிய தொழில் கூட 
செய்ய ஒரு சிறிய முதலே இல்லாமல் ஆக்கி வைத்திருக்கிறார்கள் 

அந்த நுட்பத்தை புரிந்துகொண்டால் மட்டுமே சுழியோடி மீள வேண்டும் 
எனும் எண்ணம் என்றாலும் முதலில் தோன்றும்.

புலம்பெயர்ந்த ஈழ தமிழரின் காலின் கீழேயே சந்தர்ப்பமும் 
வழியும் இருக்கிறது ...
நம்பிக்கை ஈனம் .... ஒற்றுமை இன்மை போன்றவற்றால் 
சீரழிக்கிறோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.