-
Tell a friend
-
Topics
-
Posts
-
By அக்னியஷ்த்ரா · Posted
பெயரை உன்னிப்புடன் படித்து முடித்து விட்டு திரும்பியவன் சுலக்சனுடன் சேர்த்து இரசாயனவியலை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான், வினாடிகள் நிமிடங்களாக, நிமிடங்கள் மணிகளாக இருவரும் புத்தகங்களிற்குள் ஒன்றிப்போய்விட்டனர். திடிரென்று அவனுக்குள் இயற்கை உபாதை எட்டிப்பார்க்க புத்தகத்தின் மேலால் சுலக்சனை எட்டிப்பார்த்தான், படிக்கிறேன் என்ற பெயரில் கடைவாயில் எச்சில் வடிய சுலக்சனோ நித்திரையாசனத்தில் உடகார்ந்திருந்தான். "பாரு தொரை படிக்கிற அழகை" என்று மெதுவாக சொல்லிவிட்டு எழுந்து கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான், நேரமோ 12:49 மண்டபத்தின் முன்னாலிருக்கும் கத்தா மரத்தின் அடியில் ஒதுங்கப்போனானவனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது, இந்த மரத்திற்கடியில் சிறுநீர் வாடை வருகிறது என்று அநேகமாக இரவில் இருந்து படிக்கும் குழுவின் வேலையாக தான் இருக்கும், இப்படியே நீடித்தால் ஆட்களை மெதுவாக நிறுத்திவிடவேண்டியதுதான் என்று அதிபர் எங்கள் பகுதித்தலைவரிடம் கண்டித்த விடயம். சரி மெதுவாக கூடைப்பந்து மைதானம் தாண்டி இருக்கும் அடர்ந்த புதர்கள் எதற்குள்ளாவது ஒதுங்கினால் பிரச்சினையில்லை என்றுவிட்டு, கையில் தனது பேனா டோர்ச்சினை எடுத்துக்கொண்டு கூடைப்பந்து மைதானம் தாண்டி கண்ணில் பட்ட ஒரு புதரின் மேல் வெள்ளத்தை மடை திறந்து பாயவிட்டான். வெள்ளம் பாய்ந்து முடிந்து நிற்கும் தருவாயில் தான் கவனித்தான், அருகே இருக்கும் வேற்று வளவின் மூலையில் இருக்கும் குடவுனிலிருந்து இயந்திரம் ஒன்று வேலை செய்துகொண்டிருக்கும் சத்தம் சீரான இடைவெளியில் கேட்டுக்கொண்டேயிருந்தது,அந்த சத்தம் அவனுக்கு மிகவும் பரிச்சயமானது அது ஒரு ரோனியோ மெஷினின் சத்தம் , மெதுவாக தடுப்பிற்கு மேலே எட்டி பார்த்தான். அங்கே குடவுன் உள்ளே மங்கலான ஒரு ஒளி வெளிச்சத்தில் மின்குமிழ் ஒன்று எரிந்துகொண்டிருந்தது அந்த ஒளியின் நிழலில் ஒரு மனிதன் நிற்பதுபோன்ற நிழல் சுவரில் தெறித்துக்கொண்டிருந்தது, மின்குமிழ் காற்றில் ஆடும்போதெல்லாம் அந்த நிழலும் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது, ஒருகணம் விதிர்விதிர்த்து போய்விட்டான் காரணம் இந்த எதுவும் அந்த குடவுனிற்குள் சாத்தியமில்லை, சாதாரணதரம் படிக்கும்போது பலமுறை விவசாய பாடவேளைகளில் விவசாய சிரமதானமென்று இந்த வெற்றுவளவை அவனது முழு வகுப்புமே துப்புரவு செய்திருக்கிறது, அந்த குடவுனுக்கு மின் இணைப்பே கிடையாது, அப்படியிருக்க எப்படி இந்த மின் குமிழ் எரிகிறது, உள்ளே நிற்கும் நபர் யார் பயத்தில் அடிவயிற்றில் அமிலம் சுரக்க மெதுவாக வந்தவழியே திரும்பினான், மீண்டும் மண்டபத்திற்குள் நுழைந்து சுலக்சன் இருந்த பக்கத்தை நோக்கி தலையை திருப்ப, அங்கே...சுலக்சன் இல்லை, 1946, ஆம்ஸ்டர்டாம் அம்மா ...அம்மா அண்ணனிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது, இந்தாருங்கள் என்று கத்திகொண்டே சோபியாவிடம் ஓடிவருகிறாள் வில்லியின் அனுப்புத்தங்கை, , கடிதத்தை வாங்கிய சோபியாவும் படிக்க ஆரம்பிக்கிறாள், வழமையான நல விசாரிப்புகளிற்க்கு பின் தான் படிப்பை முடித்து இந்தியாவின் கோவாவிற்கு செல்லும் நான்காவது மிஷனரி பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இரண்டுமாத விடுமுறையில் வீட்டிற்கு வரப்போவதாகவும் எழுதியிருந்தார் வில்லி, ஆறு மாதத்தின் பின் காணப்போகும் தன் மகனை வரவேற்க தடல் புடலான ஏற்பாடுகளுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் சோபியா (தொடரும்) -
By ஜெகதா துரை · Posted
அம்ஸ்ரடாமும், கிழக்கு மாகாணமும் நன்றாக தொடர்புபடுத்தி எழுதுகிறீர்கள். வித்தியாசமாக இருக்கிறது. தொடருங்கள் ..... -
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்களுடன் அனுமதிகள் வழங்கப்பட்டவுடன் சுகாதார அதிகாரிகள் அந்த இடத்தை முறையாக அறிவிப்பார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார். இதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு, இந்த இடத்தை அடையாளம் கண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.இலங்கையில் கொரோனா வைரஸால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் இணங்காணப்பட்ட இடமொன்றில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.(15) http://www.samakalam.com/கொரோனா-வைரஸ்-தொற்றினால்-2/
-
இது நண்பருடையது..... நாங்கள் வாங்கியது அப்பார்ட்மெண்ட்......! 😁
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.