Jump to content

வடையும் மோதகமும் அண்ணன் தம்பிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடையும் மோதகமும் அண்ணன் தம்பிகள்

 சூசை ஒரு Bci பட்டதாரி. அந்தப் பட்டப் படிப்புக்காக அவன் பல்கலைக்கழகம் எங்கும் போகவில்லைஅந்தப் பட்டத்திற்கான தகுதியை அவன் சினிமா தியேட்டர்களில் இருந்துதான் பெற்றுக் கொண்டான்.

 பருத்தித்துறை சென்றல், வல்வெட்டித்துறை யோகநாயகி, புலோலி காசில், நெல்லியடி மகாத்மா, லக்சுமி தியேட்டர்கள்தான்  அவனை (Bachelor of Cinema)  பட்டம் பெற வைத்த முக்கிய கூடங்கள். எவ்வளவு கேவலமான படங்களாக இருந்தாலும் முதல்நாள் முதல் காட்சியில் பிரதம விருந்தினராக சூசை இருப்பான். அவனிடம் சினிமா சம்பந்தமாக எது கேட்டாலும் பதில் கிடைத்து விடும்.

 அறுபதுகளின் பிற்பகுதியிலேயே வானொலியில் பாடல்களை ஒலிபரப்பும் போதே அதை எழுதியவர், இசையமைத்தவர், பாடியவர்கள் விபரங்களையும் சேர்த்தே இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிக்கும் நிலை வந்து விட்டது. இங்கு  நான் சொல்லவருவது அதற்கு சற்று முந்தியது

 அப்பொழுது திரைப்பட இசையமைப்பாளர்கள் பலர் இருந்தாலும், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி  ஆகியோரே முன்ணணியில் இருந்தார்கள். பாடல்கள் இனிமையாக இருக்கும் ஆனால் அதை யார் இசையமைத்தார்கள் என்பது எனக்குத் தெரியாதுஎனது இந்தப் பிரச்சனையை சூசையிடம் சொன்னேன். சற்றும் யோசிக்காமல் அவன் பதில் தந்தான்

 “ பாட்டு தொடங்கைக்கேயேடும் டும்எண்டு மேளச் சத்தம் கேட்டால் அது கே.வி.மகாதேவன் பாட்டு. மேளச் சத்தம் கேக்கேல்லையோ அப்பிடி எண்டால் அது விஸ்வநாதன்-ராமமூர்த்தி  பாட்டு”.  

 நான் மேலே சொன்ன இசையைப்பாளர்கள் இசையமைத்த  ஏதாவது ஒன்று இரண்டு பாடல்களை கேட்டுவிட்டுச் சொல்லுங்கள். சூசையின் சினிமா அறிவு உங்களுக்கும் தெரிந்து விடும்.

 மகாத்மா  தியேட்டருக்கு அருகே இருக்கும் தேனீர் கடையில் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பொரித்த மோதகம் சூசைக்கு மிகவும் விருப்பமானது. படத்துக்கான ரிக்கெற்றை வாங்கிக் கொண்டு நேராக தேனீர் கடைக்குத்தான் முதலில் போவான். பொரித்த மோதகத்தையும், பிளேன் ரீயையும்  உள்ளே தள்ளி விட்டால் அடுத்து அவனுக்குத் தேவையானது ஒரு  Sportsman  சிகரட். எல்லாவற்றிற்கும் நேரம் கணித்து வைத்தே அவன் நடந்து கொள்வான். சிகரெட் எரிந்து பில்டர் வரை வந்து அதை கட்டை, சுண்டு விரல்களின் நுனியில் பிடித்து கடைசி இழுப்பு இழுத்து அவன் புகை விடும் அதே நேரம் படம் தொடங்குவதற்கான மணி அடிக்கும். தியேட்டருக்கு உள்ளே போனால் தியானத்தில் இருப்பது போல் ஆடாமல் அசையாமல் அப்படியே படத்துடன் ஒன்றிவிடுவான். ஆனால் அவன் வாய் மட்டும் அகலத் திறந்திருக்கும்.

 நானும் அவனுடன் சில தடவைகள் படத்துக்குப் போயிருக்கிறேன். தன்னுடன் படம் பார்க்க வருபவருக்கு அவனே படத்துக்கான ரிக்கெற்றுக்கு பணம் கொடுத்துவிடும் நல்ல குணம் அவனிடம் இருந்ததுஆனாலும் அவனிடம் ஒரு குறை இருந்தது. படம் முடிந்து வரும் போது அவனை வைத்து சைக்கிள் ஓட வைத்து விடுவான். அத்தோடு சைக்கிளின் பாரில் இருந்து கொண்டு, வேதாளம் கதை சொல்லி விட்டு விக்கிரமாதித்தனிடம் கதை பற்றி ஏதாவது கேள்வி கேட்குமே அதேபோல படத்தை பார்க்க வைத்து விட்டு அது பற்றி கேள்விகள் கேட்டுக்கொண்டே வருவான். சாதாரணமான நிலையில் அவனது கேள்விகளுக்குப் பதில் கொடுத்து விடலாம். அவனை வைத்து சைக்கிள் ஓடும் போது அதுவும் நெல்லியடியில் இருந்து மாலிசந்திவரை உள்ள வயல் வெளியில் எதிர்க்காற்றில் எம்பி எம்பி பெடலை உழக்கும் போது அவனது கேள்விகளால் மண்டை உடைந்து சுக்கு நூறாகச் சிதறிவிடும். ஒருதடவை அப்படியான சூழலில் நான் வேதாளமாக மாறி அவனுக்கு ஒரு கதை சொல்லத் தொடங்கினேன்.

 17_D7_C27_D-7607-4_D69-8193-84_FDA4_D648

 இற்றைக்கு ஏறக்குறைய ஐம்பத்தைந்து ஆண்டுகள் கடந்து போன கதை அது.

 பருத்தித்துறை நகரில் உள்ள தேனீர்க்கடை ஒன்று நித்திரை கொள்ளாது. சினிமா இரண்டாம் காட்சி பார்த்து விட்டு வருபவர்கள், கடற்தொழிலாளர்கள், மற்றும் பருத்தித்துறையின் கிழக்குப் பக்கமாக இருந்து மாட்டு வண்டிகளில் விறகு, தேங்காய், தென்னோலை, அலம்பல் கட்டிக் கொண்டு அதிகாலையில் நகரத்துக்குள் நுழையும் வியாபாரிகள், காலையில் முதல் பஸ் பிடிக்க வருபவர்கள் போன்றவர்களுக்காகவே அந்தக் கடை உறங்குவதில்லை.

 நான் சொல்லும் கடையின் வாரிசுகள் புலம் பெயர்ந்து  ஐரோப்பியா அல்லது கனடாவில் கண்டிப்பாக இருப்பார்கள். ஆகவே என் நலன் கருதி கடையின் பெயரை இங்கே தவிர்த்து விடுகிறேன்.

 கடையில் ஒரு கண்ணாடிப் பெட்டி, அதனுள்ளே மெது வடைகள், அவைகள் காலையில் நகருக்குள் நுழையும் வண்டி வியாபாரிகளுக்காக காத்திருக்கும்.

 “தம்பி, ஒரு பிளேன் ரீயும் இரண்டு நூல் வடையும் தா” 

 அதிகாலையில் வியாபாரிகள் நூல் வடையை ரசித்து சாப்பிட்டுக் கொண்டே, யார் யார் எந்த திசையில் போய் வியாபாரம் பார்ப்பது என்று  தங்களுக்குள் தீர்மானித்துக் கொள்வார்கள். கடையை விட்டு வெளியேறும் போது தங்கள் தங்கள் குடும்பங்களுக்கும் நூல் வடைகளை மறக்காமல் வாங்கிக் கொள்வார்கள். அநேகமாக நூல் வடைகள் எல்லாவற்றையும் அந்த வியாபாரிகள், அதிகாலையிலேயே முடித்து விடுவார்கள். சில வேளைகளில் அவர்கள் வரும் போது நூல் வடைகள் கடையில் இல்லாமல் போனால், “சரி, அடுத்தமுறை பாப்பம்என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொள்வார்கள். அந்தளவிற்கு அவர்கள் நூல் வடைப்பிரியர்கள்.

 இந்தக் கதையைத்தான் சைக்கிள் ஓட்டிக் கொண்டே சூசைக்கு அன்று நான் சொன்னேன்.

 “இப்ப இதை ஏன் எனக்கு சொல்லுறாய்?”

 “நெல்லியடியிலை நீ சாப்பிடுற பொரிச்ச மோதகம், முதல்நாளோ இல்லாட்டில் அதுக்கு முதல்நாளோ மிஞ்சிப் போனதா இருக்கலாம். புதுசா எண்ணையிலை போட்டு பொரிச்சு எடுத்து வைச்சிருப்பாங்கள்

 நான் சொன்னதைக் கேட்டு, சூசை தனது வாய்க்கு இடைவேளை அறிவித்து விட்டான். அத்தோடு, என்னுடன் படத்துக்கு வருவதையும் அன்றோடு தவிர்த்து விட்டான். இந்தச் சம்பவத்தை நான் வெளியே சொல்லப் போக, ஆளாளுக்கு சூசையைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். படம் பார்த்து விட்டு, யாராவது சூசையை வைத்து சைக்கிள் ஓட்டும் போது, சூசை ஏதாவது கேட்டால், “ஏன் சூசை பொரிச்ச மோதகம் முதல்நாள் மிஞ்சினது எண்டு சொல்லுறாங்கள் உண்மையோ?” என்று சொன்னால் போதும் சூசை அமைதியாகி விடுவான். ‘சூசைதாசன்என்று அவனது தந்தை மார்டின் வைத்த பெயர் நாளடைவில் மறைந்து போய் PM (Poricha Mothagam)  என்ற பெயர் அவனுக்கு நிலைத்து விட்டது.

 சூசைக்கு என்மேல் கோபம் இருந்ததை நான் அறிவேன். அதை அவன் காட்டிக் கொள்ளவில்லை. நானும் கண்டு கொள்ளவில்லை.

 ஆங்கிலப் படங்களுக்காக அப்பொழுது மாலையில் நாலு மணிக்கும் காட்சி இருக்கும். பாடசாலை முடிய பிரத்தியேக வகுப்பு என்று போகும் மாணவர்களை குறிவைத்து அந்தக் காட்சி இருக்கும். Adults only என்று போட்டிருப்பார்கள். ஆனாலும் தாராள மனதுடன் மாணவர்களான எங்ளையும் படம் பார்க்க அனுமதிப்பார்கள். ஒரு தடவை முக்கியமான வகுப்பு இருந்ததால் புதுப் படம் ஒன்றுக்கு நாலு மணிக் காட்சிக்கு எங்களால் போக முடியவில்லை. படம் பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்த சூசையிடம்படம் எப்பிடி?“ என்று கேட்டோம்

 “அநேகமா உங்களை உள்ளை விடமாட்டாங்கள். அந்தமாதிரிக் காட்சி எல்லாம் இருக்கு. நானே கஸ்ரப்பட்டு, கெஞ்சிக் கூத்தாடித்தான் உள்ளை போனனான். இன்னுமொருக்கால் படத்தைப் பாக்கோணும். இப்ப வேலை ஒண்டு இருக்கு. செக்கன்ட் ஷோவுக்கு கட்டாயம் வந்து பாப்பன்

 எங்களுக்கு படம் பார்க்கும் ஆசையை உண்டாக்கி விட்டு சூசை  போய்விட்டான்.

 நேரம் கழித்து வீட்டுக்கு போனால் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்  என்ற துணிவோடு தியேட்டருக்குள் நுளைந்து விட்டோம். படம் ஓடிக் கொண்டிருந்தது. படத்தில் கிளுகிளுப்பான காட்சிகள் எதையுமே காணவில்லை. படம் முழுதும் கதைத்துக் கொண்டே இருந்தார்கள். மொழி தெரிந்தால்தானே கதை விளங்க. இதோ வரும், அதோ வரும் என்று ஒன்றரை  மணித்தியாலமும் போய்விட்டது. படம் முடிந்து வெளியே வந்தால், சூசை சைக்கிளில் சாய்ந்தபடி தியேட்டர் வாசலில் நிற்கிறான்.

 “படம் எப்பிடி? நான் பட்ட துன்பம் மற்றையவையளும் பட வேண்டாமே அதுதான்..” பொரித்த மோதகத்துக்காக. சூசை எங்களை பழி வாங்கி விட்டது விளங்கியது.

 மூன்று வருடங்களுக்கு முன்னர், சூசையப்பர் பங்குனி திருவிழாவுக்கு தேவாலயத்தைச் சுத்தம் செய்யும் போது ஏணியில் இருந்து தவறிக் கீழே விழுந்து முதுதுகெலும்பு உடைந்து சூசை இப்பொழுது படுக்கையில் இருக்கிறான். ஆனாலும் தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராமல், பார்த்த படங்களென்றாலும் படுக்கையில் இருந்து கொண்டே சூசை அவற்றை எல்லாம் ரிவியில் மீண்டும் மீண்டும்  சலிக்கமல் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறானாம்

 கவி அருணாசலம்

24.03.2018

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான பதிவு..

இதே மாதிரியான அனுபவம்..

எனது பள்ளி வாழ்க்கை முழுவதும் மதுரையருகேயுள்ள எங்கள் கிராமத்தில்தான்.. எழுபதுகளின் இறுதியில் என நினைக்கிறேன்..

சென்னை எனக்கு முற்றிலும் புதிது.. கல்லூரி விடுமுறை நாட்களை பயன்படுத்தி சென்னை செல்லலாமென விடுதியின் சக அறைத் தோழர்களுடன் சென்னைக்கு பயணித்து, ஓட்டலில் அறையெடுத்து தங்கினோம்..

முதலில் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் தெரிந்த நண்பர் மூலம் அனுமதி பெற்று, அப்போதைய ரஜினி நடித்த 'நான் போட்ட சவால்' என்ற படத்தின் 'சூட்டிங்'கை பார்த்தோம்.. மதியத்திற்குப் பின் அதே ஸ்டுடியோ வளாகத்தில் புதிதாக திறந்திருந்த ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திரையரங்கில் ஆங்கிலப்படம் ஓடுவதாகவும், அதில் 'முக்கியமான காட்சி' ஒன்று அவசியம் பார்க்க வேண்டுமென சக தோழன் ஏற்கனவே விசாரித்து வைத்திருந்ததால், திரையரங்கிற்கு சென்றோம்.. எங்களின் வயது அப்போது இருபதுக்கும் கீழே..

சுற்றும்முற்றும் பார்த்து கூச்சத்துடன் டிக்கட் எடுத்துவிட்டு, குளிரூட்டப்பட்ட அப்புதிய திரையரங்கில் படம் பார்க்க ஆவலுடன் உட்கார்ந்திருந்தோம்..

படமும் ஓடியது.. ஓடியது.. ஓடிக்கொண்டேயிருந்தது.. படம் ஆரம்பித்து முக்கால் மணி நேரமாயிற்று.. பேசிக்கொண்டே இருந்தார்கள்..

'ஒன்றையும்' காணோம்..

கடுப்பில் படத்தை சிபாரிசு செய்த தோழனை திட்டித் தீர்த்துவிட்டோம்..

அவனோ, "இருங்கடா..! வரும்.. நிச்சயம் வரும்டா..!" என அழாத குறையாக எங்களை ஆறுதல் படுத்தினான்..

வெறுப்பில் இருந்த எங்களுக்கு திடீரென திரையில் ஒரு காட்சியின் தொடக்கம் வரவும், சில ரசிகர்கள் கூச்சல் போட்டனர்.. அவர்கள் ஏற்கனவே இந்த படத்தை பார்த்துவிட்டு மறுபடியும் அக்காட்சியை பார்க்க வந்திருப்பார்கள் போலிருந்தது..!

அடுத்த சில நிமிடங்களில் படுக்கையறை காட்சி வந்தது..

சில நொடிகளே ஓடியது..

திரையரங்கில் பலத்த ஆரவாரம்.. விசில் சத்தங்கள் காதைப் பிளந்தது..

அக்காட்சி முடிந்தது..

திரையரங்கில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகிவிட்டன.. படத்தை சிபாரிசு செய்துவிட்டு, குற்றுயிராக இருந்த சக தோழன் "இப்போ என்னடா சொல்கிறீர்கள்..?" என எங்களை நோக்கிச் சிரித்தான்..

பால்ய வயதிலிருந்த நாங்கள், முதன் முதலில் அக்காட்சியை பார்த்தவுடன் ஏற்பட்ட இனம் புரியாத உணர்வில் திரையரங்கை விட்டு வெளியே வந்தோம்..நண்பன் தெம்பாக வீறு நடை போட்டான்..

நாற்பது வருடங்களுக்கு மேல் கடந்தாலும் இன்னமும் மூளையில், அவ்வுணர்வு அழியாமல் உள்ளது..!

படத்தை சிபாரிசு செய்து எங்களுக்கு 'வழிகாட்டிய' எம் அறைத் தோழன், இப்பொழுது பன்னாட்டு நிறுவனத்தில் இயந்திர பாகங்களுக்கான உற்பத்திப் பிரிவின்  பொறுப்பாளராக, தலைமைப் பொறியாளராக பணிபுரிந்து வருகிறான்..

சென்னை சென்றால், ஏ.வி.எம் ஸ்டுடியோவை கடந்து செல்லும்போது, இன்னமும் அக்கால காட்சி நினைவில் வந்து செல்லும்..! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kavi arunasalam said:

ஆனாலும் தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராமல், பார்த்த படங்களென்றாலும் படுக்கையில் இருந்து கொண்டே சூசை அவற்றை எல்லாம் ரிவியில் மீண்டும் மீண்டும்  சலிக்கமல் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறானாம்

எல்லா படங்களையும் பார்க்கவும் ஒரு பொருமை வேண்டும்...அதுவும் வயது போக போக அந்த பொருமை அதிகம் தேவைப்படும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன நூல் வடை ??? இதுவரை கேள்விப்படாததாக இருக்கே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதென்ன நூல் வடை ??? இதுவரை கேள்விப்படாததாக இருக்கே. 

 சுமேரியர்,

உளுந்து வடை (மெது வடை) செய்து வைத்துவிட்டு இரண்டு நாட்கள் கழித்து சாப்பிட்டுப் பாருங்கள்  தெரியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதென்ன நூல் வடை ??? இதுவரை கேள்விப்படாததாக இருக்கே. 

துவரங்கேட்டி தெரியாது..:grin:
முச்சக்கர வண்டி தெரியாது..:grin:
நூல்வடை தெரியாது....:grin:
படத்திலை இருக்கிறது என்னெண்டு தெரியுதோ?:cool:

%25E0%25AE%259A%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%2581.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஹாத்மா தியேட்டர் பக்க மோதகக் கடையின் தீவிர  மோதக தீவிர தின்பாளன் நான்...இ ளமப்பருவத்தின் இனிய மாலைபொழுதுகள்   அங்குதான்..சுகாதாரக் குறைபாடு மிகாதிகம் இருந்தும் மோதகம் கண்ணை மறைத்துவிடும்....சமாதானகாலத்தில் ஊர் போயும் ஆசைவிடாமல் அங்குபோனேன்.....அப்ப அது ஆமிக்கு சாப்படு சப்பாடு சப்பிளை பணணுமிடமாக பணியும் புரிந்தது....அதன் பிறகு மோதக ஆசை வாரவில்லை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

 சுமேரியர்,

உளுந்து வடை (மெது வடை) செய்து வைத்துவிட்டு இரண்டு நாட்கள் கழித்து சாப்பிட்டுப் பாருங்கள்  தெரியும்?

அட அதுவா இது. நானும் எதோ ஊர் வழக்கில் புதிய செய்முறை என எண்ணிவிட்டேன்.

5 hours ago, குமாரசாமி said:

துவரங்கேட்டி தெரியாது..:grin:
முச்சக்கர வண்டி தெரியாது..:grin:
நூல்வடை தெரியாது....:grin:
படத்திலை இருக்கிறது என்னெண்டு தெரியுதோ?:cool:

%25E0%25AE%259A%25E0%25AF%258B%25E0%25AE%25B1%25E0%25AF%2581.jpg

ஏன் தெரியாததைத் தெரியாது எண்டு சொல்லுறது குற்றமோ ????:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.வி.எம் ஸ்டுடியோ வளாகத்தினுள்ளேயிருந்த படபிடிப்பு தளத்தின் ஒரு கட்டிடத்தையே எழுபதுகளின் இறுதியில்(1977-78?) ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்காக திருத்தியமைத்து, அதற்கான நுழைவு வாயிலையும் மாற்றி அமைத்தார்கள். சென்னையில் நிலத்தின் விலை மலைபோல் ஏற, தற்பொழுது ஏ.வி.எம். வளாகத்தின் பிரதான சாலையை அண்மித்த பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளும் வந்துவிட்டன.

avm-rajeshwari-cinema-hall-vadapalani-ch avm-studio-and-audio-vadapalani-chennai-

திரையரங்கு                                                                                                                                       ஸ்டுடியோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அவனை வைத்து சைக்கிள் ஓடும் போது அதுவும் நெல்லியடியில் இருந்து மாலிசந்திவரை உள்ள வயல்வெளியில் எதிர்க்காற்றில் எம்பி எம்பி பெடலை உழக்கும் போது

இந்த ரோட்டில நாங்கள் எப்பவுமே இலாவகமாகவும், வேகமாகவும், ஏன் இரண்டு கைகளையும் ஹாண்டில் பாரில் இருந்து எடுத்துவிட்டும் ஓடுவோமே?. எதிரில் அழகு சுந்தரிகள் வரும்போது  சண்டமாருத ஆடிக்காற்று எங்களை தென்றலாகத் தழுவிச் சென்றதாகத்தான் நினைவு!?

Link to comment
Share on other sites

உங்கள் ஞாபகங்கள் பலரது இளம் பராயத்தை நினைவு கொள்ள வைக்கிறது.தலைமுறைகள் கடந்து வாழும் கதைகள் இவை.

Link to comment
Share on other sites

அக்காலங்களில் யாழ்நகரில் படம் ஒடியபின்பு தான் பருத்தித்துறை சென்றல், வல்வெட்டித்துறை யோகநாயகி, புலோலி காசில், நெல்லியடி மகாத்மா, லக்சுமி தியேட்டர், சுன்னாகம் நாகம்ஸ், தெல்லிப்பளை துர்க்கா, இணுவில் காலிங்கன், காங்கேசந்துறை இராஜநாயகி  போன்ற திரையரங்குகளில் திரைப்படங்கள் காண்பிக்கப்படும்.  இவ்வாறன திரையரங்குகளில் காண்பிக்கும் படங்களின் சில காட்சிகள் (நெகடீவ் ) முன்னைய திரையரங்கில் வெட்டப்பட்டிருக்கும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கந்தப்பு said:

அக்காலங்களில் யாழ்நகரில் படம் ஒடியபின்பு தான் பருத்தித்துறை சென்றல், வல்வெட்டித்துறை யோகநாயகி, புலோலி காசில், நெல்லியடி மகாத்மா, லக்சுமி தியேட்டர், சுன்னாகம் நாகம்ஸ், தெல்லிப்பளை துர்க்கா, இணுவில் காலிங்கன், காங்கேசந்துறை இராஜநாயகி  போன்ற திரையரங்குகளில் திரைப்படங்கள் காண்பிக்கப்படும்.  இவ்வாறன திரையரங்குகளில் காண்பிக்கும் படங்களின் சில காட்சிகள் (நெகடீவ் ) முன்னைய திரையரங்கில் வெட்டப்பட்டிருக்கும்.   

நீங்கள் மறந்து விட்டீர்கள் கந்தப்பு, மானிப்பாயிலும் ஒரு தியேட்டர் இருந்தது. பெயர் மறந்து விட்டேன். அதில் முதன் முதலாக ஓடிய படம் மறக்க முடியுமா அதாவது படத்தின் பெயரே "மறக்க முடியுமா"தான் தேவிகா நடித்தது. "காகித ஓடம் கடலலை மீது போவதுபோல மூவரும் போவோம்" என்னும் மறக்கமுடியாத பாடல் இடம்பெற்ற திரைப்படம் மறக்க முடியுமா.இதை எப்படி மறந்திர்கள் கந்தப்பு.....!  tw_blush:

Link to comment
Share on other sites

On 4/4/2018 at 6:19 PM, suvy said:

நீங்கள் மறந்து விட்டீர்கள் கந்தப்பு, மானிப்பாயிலும் ஒரு தியேட்டர் இருந்தது. பெயர் மறந்து விட்டேன். அதில் முதன் முதலாக ஓடிய படம் மறக்க முடியுமா அதாவது படத்தின் பெயரே "மறக்க முடியுமா"தான் தேவிகா நடித்தது. "காகித ஓடம் கடலலை மீது போவதுபோல மூவரும் போவோம்" என்னும் மறக்கமுடியாத பாடல் இடம்பெற்ற திரைப்படம் மறக்க முடியுமா.இதை எப்படி மறந்திர்கள் கந்தப்பு.....!  tw_blush:

மானிப்பாய் வெஸ்லி  , சங்கானை மணிமஹால் ,பண்டத்தரிப்பு செல்வா ,மூளாய் நியூ தீவாளி ,சாவகச்சேரி தேவேந்திரர் , வேல் சினிமா  ,   வல்வெட்டி ரஞ்சனாஸ்  , கோண்டாவில் லதா ,  
அச்சுவேலி, கிளிநோச்சியிலும் திரையரங்குகள் இருந்தன.
காங்கேசன் துறையில் யாழ் என்ற இன்னுமொரு திரையரங்கும் இருந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.