Jump to content

காவிரி: குழுவா? வாரியமா? 'கெடு' முடியும் நிலையில் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காவிரி: குழுவா? வாரியமா? 'கெடு' முடியும் நிலையில்

உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

xcauvery-water315-1522225421.jpg.pagespexall-party-meeting7456-1522225540.jpg.pa

 

டெல்லி: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் பிறப்பித்த உத்தரவில் திட்டம் என குறிப்பிட்டுள்ளது குழுவா? இல்லை வாரியமா? என சந்தேகத்தை விளக்க வேண்டும் என்று மத்திய அரசு மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளாக காவிரி விவகாரம் நீடித்து வருகிறது. மத்தியில் எந்த தலைமையிலான ஆட்சி வந்தாலும் சரி காவிரி பிரச்சினை என்பது இடியாப்பச் சிக்கலாகவே இருந்தது.

இந்நிலையில் கடந்த 2007-இல் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்தும் கூடுதல் நீர் கேட்டும் தமிழகம், கர்நாடகம், புதுவை, கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

6 வாரங்களுக்குள் உத்தரவு

6 வாரங்களுக்குள் உத்தரவு அதில் காவிரி நீரை பகிர்வது தொடர்பாக நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காட்டிலும் தமிழகத்துக்கு குறைந்த அளவிலான நீரே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் காவிரி நீரை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகம் மறுப்பு

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் திட்டம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அது காவிரி மேலாண்மை வாரியம் என்றுதான் இருக்க வேண்டும் என்றில்லை என்று கூறும் கர்நாடக அரசு கூறுகிறது.

காவிரி விவகாரம்

கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ளதை அடுத்து காவிரி விவகாரத்தில் அந்த மாநிலத்தை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு, காவிரி மேற்பார்வை குழுவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நேரம் இல்லை

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பிரதமரை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு பிரதமர் நேரம் கொடுக்கவில்லை.

கர்நாடக மறுப்பு

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது கடந்த 15-ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்ற தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. அதுபோல் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் ஏற்படக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

கெடு முடிவு

இந்நிலையில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு நாளை முடியவுள்ளது. இந்த நேரத்தில் காவிரி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம் என்பது குழுவா அல்லது வாரியமா என்று சந்தேகம் உள்ளதாகவும் அதை நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி காவிரி வழக்கில் விளக்கம் கேட்டு மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

ஒன் இந்தியா

 

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.