Jump to content

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்வோம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள்

தற்கொலை செய்வோம்..!" - நவநீதிகிருஷ்ணன் ஆவேசம் gros-lol.gif

navaneethakrishnan3456-600-1522234589.jp

டெல்லி: 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம்' என்று ராஜ்யசபாவில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் மிரட்டல் விடுத்தார். காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

'உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இல்லை' என்று கர்நாடகம் தனது வாதத்தை முன்வைக்கிறது. எனினும் மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் நவநீதிகிருஷ்ணன் எம்பி காவிரி விவகாரத்தை எழுப்பினார்.

அப்போது அவர் "உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் அரசியல் சட்டத்தால் என்ன பயன்? தமிழகத்தில் அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்களாகிய நாங்கள் ராஜினாமா செய்வதற்கு பதில் தற்கொலைதான் செய்து கொள்வோம்..!" என்று ஆவேசமாக கூறினார்.

ஒன் இந்தியா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தற்கொலை செய்தாவது தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கட்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றிலேயே தீக்குழிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • காலம் எல்லாவற்றையும் அடிச்சுக்கொண்டு போய் விடும்......பாவம் அந்த அம்மா ....அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.........ஆழ்ந்த இரங்கல்கள்.......! 
  • மனித எச்சம் மீட்பு: மூவர் கைது செ.கீதாஞ்சன் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து  30.12.2020 அன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் உயிரிழந்த நபர் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியளை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எம்.அன்வர்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டனர்.   இதனையடுத்து, கொலை குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் நீண்டகாலத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் நேற்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். உயிரிழந்த நபரின் மனைவி, உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொன்னகர் பகுதியினை சேர்ந்த இருவரும் கேப்பாபிலவினை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.     https://www.tamilmirror.lk/வன்னி/மனித-எச்சம்-மீட்பு-மூவர்-கைது/72-289661
  • குத்துச்சண்டை வீராங்கனைக்கு அமோக வரவேற்பு குத்துச்சண்டை  போட்டியில்  தங்கப்பதக்கம் வென்ற  கணேஸ் இந்துகாதேவிக்கு  வவுனியாவிலும்  மாங்குளத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. 18-01-2022 அன்று பாகிஸ்தான் லாகூரில்  இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2 ஆவது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று   25 வயதுக்கு உட்பட்ட 50/55 கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார் கணேஸ் இந்துகாதேவிக்கு  பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து  வருகின்றனர் தந்தையை இழந்த நிலையில்  தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து  குத்துச்சண்டையில் சாதித்து  கணேஷ் இந்துகாதேவியுடன் குறித்த போட்டியில் இலங்கை அணி 7 தங்கம் மற்றும் 5 வெள்ளிப்பதக்கங்களை வெற்றிக்கொண்டு சம்பியனாக மகுடம் சூடியது. இவ்வாறான நிலையில் குறித்த இலங்கை அணி  நேற்று(20) மாலை இலங்கையை வந்தடைந்திருந்தது இந்நிலையில்  முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ள கணேஸ் இந்துகாதேவி இன்று (21) காலை மாங்குளம் கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் உள்ள தனது வீடு திரும்பும் வழியில் அவருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது   இந்நிலையில்  குறித்த யுவதிக்கு பாகிஸ்தான் போட்டியில் கலந்துகொள்ள 10 இலட்சடத்து 5,000 ரூபாய் நிதியினை ஏற்பாடு செய்து வழங்கிய  தமிழ் விருட்ஷம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமாரின் ஏற்பாட்டில்  இன்றுக் காலை  வவுனியாவில் வரவேற்பளிக்கப்பட்டு வவுனியா கந்தசாமி கோயிலில் வழிபாட்டிலும் கலந்துகொண்டுள்ளார் இதனை தொடந்து மாங்குளம் நகருக்கு  வருகை தந்த   யுவதிக்கு மாங்குளம் மின்னொளி விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில்  பாரிய வரவேற்பு பதாகை ஒன்று வைக்கப்பட்டு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.     https://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/குத்துச்சண்டை-வீராங்கனைக்கு-அமோக-வரவேற்பு/44-289668  
  • காணாமல்போன மகனைத் தேடிய தாய் மரணம் - தொடரும் துயரம் வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று (21) மரணமடைந்துள்ளார். வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த 78 வயதான கருப்பையா ராமாயி என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.  இவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் வயது 38 கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளைவேனில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.  அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 1799 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்துகொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.  இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது     https://www.virakesari.lk/article/121066
  • குவைத் எயார்வேஸ் இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த தீர்மானம் குவைத் எயார்வேஸ் விமான சேவை இந்த வாரம் முதல் இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.newswire.lk/wp-content/uploads/2022/01/download-53.jpeg விமான நிறுவனங்கள் "டொலர் நெருக்கடி" மற்றும் விமானங்களை அதிகரிக்க விமான நிறுவனங்களின் தயக்கம், உள்ளூர் அலுவலகங்கள் நிலுவைத் தொகையை செலுத்த மறுத்ததல் போன்ற காரணங்களால் குவைத் ஏயார்வேஸ் கூட்டுத்தாபனம், இந்த வாரம் முதல் இலங்கைக்கான விமானங்களை நிறுத்தியுள்ளதாக அல்-ஜரிடா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, குவைத் ஏயார்வேஸ் கடந்த செப்டம்பரில் இலங்கைக்கான தனது நடவடிக்கைகளை உத்தியோகபூர்வ காரணங்களைத் தெரிவிக்காமல் வாரத்திற்கு ஒரு விமானத்தை மாத்திரமே செலுத்தியிருந்தது. இலங்கைக்கான விமானத்தின் இயக்கச் செலவுகளுடன் ஒப்பிடுகையில், விமான நிறுவனத்தின் வருவாய் மிகவும் குறைவாக இருந்தமையே இந்த தீர்மானத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.   https://www.virakesari.lk/article/121074  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.