Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்வோம்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள்

தற்கொலை செய்வோம்..!" - நவநீதிகிருஷ்ணன் ஆவேசம் gros-lol.gif

navaneethakrishnan3456-600-1522234589.jp

டெல்லி: 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம்' என்று ராஜ்யசபாவில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் மிரட்டல் விடுத்தார். காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

'உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இல்லை' என்று கர்நாடகம் தனது வாதத்தை முன்வைக்கிறது. எனினும் மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் நவநீதிகிருஷ்ணன் எம்பி காவிரி விவகாரத்தை எழுப்பினார்.

அப்போது அவர் "உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் அரசியல் சட்டத்தால் என்ன பயன்? தமிழகத்தில் அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்களாகிய நாங்கள் ராஜினாமா செய்வதற்கு பதில் தற்கொலைதான் செய்து கொள்வோம்..!" என்று ஆவேசமாக கூறினார்.

ஒன் இந்தியா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தற்கொலை செய்தாவது தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கட்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றிலேயே தீக்குழிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 'சிறுபான்மையினர்', 'சிறுபான்மை இனக்குழு' என்று இலங்கையிலுள்ள தமிழர்களைக் குறிப்பிட்டு அவர்களை ஒரு தேசிய இனமாக போராடத் தகுதியற்றவர்களாக்கிப் பெரும்பான்மை இனத்துக்கு அடிபணிந்து வாழவைக்க, சிறீலங்க, இந்திய அரசுகளும், அவர்களின் நட்புநாடுகளும் முயன்றுவரும் வேளையில், இலங்கைத் தமிழரையும் ஒரு தேசிய இனமாகக் கருதக்கூடியவாறு, "சிறுபான்மைத் தமிழர்" என்று உலகப் பெரும் வல்லரசான அமெரிக்காவையே அழைக்க வைத்தவர்கள்தான் இந்த தமிழ் டயசுபோறா அலையன்சு இளைஞர்கள். வாழ்த்துவோம்.🙌 🙏
  • முன்னாள் தமிழ் லோயர்கள் அவர்கள் உண்மையிலே  படித்து இருந்தால் தமிழர்களாகிய நாங்கள் சண்டைபோடாமல் இலங்கையில் சிங்கப்பூர் போன்று  சம உரிமைகளுடன் வாழ்ந்து இருப்பம் ஆனால் அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பட்டது எப்படி அடிமையாய் சேவகம் பண்ணுவது என்பதே அவர்கள் தாங்கள்  படிப்பு பரம்பரை என்று தங்களை தாங்களே ஏமாத்தி இலங்கையின் தமிழினத்துக்கு கொள்ளிக்கட்டை வைத்ததே அவர்கள்தான் அவர்களின் வாரிசுகளும் இன்றும் அச்சாரம் பிசகாமல் அடிமைகதைகளை  வெளிநாடுகளுக்கு வந்து விதைக்கின்றது  எங்கள்தலைமுறையுடன் வரும் பலதலைமுறைகளை நட்டாற்றில் விட்டு சென்றதே அவர்களின் அடிமைத்தனமான சிந்தனைகள்  இன்னும் அனுமான் வால்  போல் நீண்டுகொண்டு போகின்றது .
  • இராணுவத்தின் ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே - சரத் பொன்சேகா (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண, கரன்னாகொட ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே. இவர்கள் தவறிழைத்தனர், கண்டிப்பாக  இவர்களை தண்டிக்க வேண்டும் என்பதை சபையில் வலியுறுத்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழக்குகளை மீண்டும் கையில் எடுப்பதுடன்,  கரன்னாகொடவிற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு ,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ,அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு,சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான  குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.  அவர் மேலும் கூறுகையில், இலங்கை இராணுவத்திற்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து நாம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. எமது இராணுவத்தில் ஒருவர் இருவர் தவறிழைத்துள்ளனர் என்பதை நாமும் கூறியுள்ளோம். அதற்காக நானும் விளைவுகளை அனுபவித்துக்கொண்டுள்ளேன். மேற்கத்தேய நாடுகளுக்கு செல்ல எனக்கும் வீசா வழங்குவதில்லை. இராணுவ ஜெனரல்கள் 58 பேருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய இராணுவ தளபதி, பாதுகாப்பு செயலாளருக்கும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தில் இருந்த ஒருவர் இருவர் செய்த தவறுக்காக நாமும் சேர்ந்து தண்டனை அனுபவித்துக்கொண்டுள்ளோம். ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே. இவர்கள் தவறிழைத்தனர், கண்டிப்பாக இவர்கள் குற்றவாளிகளே, இவர்களை தண்டிக்க வேண்டும். இவர்களை தண்டித்து ஏனைய இரண்டு இலட்சம் இராணு வீரர்களையும் தூய்மையாக்குங்கள். இதனை செய்வதன் மூலமாக வெளிவிவகார அமைச்சரும் நெருக்கடியில் இருந்து தப்பிக்கலாம். ஆகவே அதற்காகவேனும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இராணுவம் குற்றமிழைத்தால் அவர்களை தண்டிப்பது தவறில்லை. அதேபோல் முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொட மிகப்பெரிய குற்றமொன்றை செய்துள்ளார். பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி  அவர்களின் பெற்றோரிடம் கப்பம் பெற்று இறுதியாக கொலையும் செய்தார். இந்த 11 பேரில் சிங்கள மாணவர் ஒருவரும், முஸ்லிம் மாணவர் ஒருவரும் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் பாடசாலை மாணவர்கள். குறிப்பாக பெரேரா என்ற சிங்கள மாணவன் இங்கிலாந்து பல்கலைக்கழகத்திற்கு செல்ல இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலைசெய்யப்பட்டார். இவர்களை கொலைசெய்து கடலில் வீசியதற்கான சாட்சியங்களும் நிருபிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நபர்களை பாதுகாக்க வேண்டாம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழக்குகளை மீண்டும் கையில் எடுப்போம். கரன்னாகொடவிற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்ல நான் பார்த்த மிகத் தகுதியான கடற்படை தளபதியாக சின்னையாவை கூறுவேன். விடுதலைப்புலிகளின் ஒன்பது படகுகளுக்கும் வெடிவைத்து தகர்த்தது அவர்தான். அதுமட்டுமல்ல கடற்படையின் பல தவறான செயற்பாடுகளுக்கு அவர் எதிராக செயற்பட்டார். அதற்காகவே அவர் விரைவாக வெளியேற்றப்பட்டார். கப்பம் பெற்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு அவர் தடையாக இருந்த காரணத்தினால் தான் அவர் வீட்டுக்கு துரத்தியடிக்கப்பட்டார். ஆனால் கரன்னாகொட அவ்வாறு அல்ல. மேலும், கைது செய்யப்பட்டு சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுவிக்க நாமும் இணக்கம் தெரிவிக்கின்றோம். அவ்வாறு விடுவிக்கும் வேளையில் என்னை கொலை செய்ய முயற்சித்த மொரிஸ் என்ற நபரை முதலில் விடுதலை செய்யுங்கள் என்றே நானும் கேட்டுக்கொள்கின்றேன். அரசாங்கத்திற்கு இதனை கோரிக்கையாக முன்வைக்கின்றேன் என்றார்.    https://www.virakesari.lk/article/118379
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.