Jump to content

நானும் யாழும்...

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் மனிசி.. என்ன ஒரே பேஸ்புக்.. வைபர்.. வாட்ஸ் அப் என்று இருக்கீங்க.. உதில அடிக்ட் ஆகிட்டால்.. அவ்வளவும் தான்.. குடும்பம் களேபரமாகிடும். 

அப்படிங்களாங்க.. யுனில இருக்கேக்க.. பாவிச்சுப் பழகிட்டன். கொஞ்சம்.. கொஞ்சமா குறைக்கப் பார்க்கிறன். ஆனால்.. முழுக்க நிற்பாட்ட ஏலாது...உடனடியா. கொஞ்சம் கொஞ்சமாத்தான்.. குறைக்கனும். 

சில மாதங்கள் கழித்து........

ஓய் மனுசா.. அதென்ன.. இவ்வளவு வேகமா ரைப் பண்ணிட்டு இருக்கிறீங்க..

அது ஒன்னுமில்ல..:rolleyes:

எங்க பார்ப்பம்..

அட யாழா.. அங்க போய் எழுதாட்டி.. உங்களுக்கு ஏதோ ஆனது மாதிரி ஆகிடுதே.... உதில ரைப் பண்ணிப் பழகித்தான் இவ்வளவு ஸ்பீட்டா கீபோட் அடிக்கிறீங்களோ....

ஐயையோ.............................................. நானும் யாழும்..... எம்பிட்டுப் போனமே. இருந்தாலும் எழுதிக்கேட்டே தான் இருப்பம். அந்தளவு உறவு நமக்குள்.. தமிழால்.. தமிழுக்காக.. தமிழருக்காக.. தமிழர் உலகிற்காக.. நல்ல சமாளிப்புக்கேசன் என்றாலும்.. யதார்த்தமும் கூட. tw_blush:

(இது ஒரு உண்மையின் தரிசனம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு வீடு வாசல் படிதான் நமக்கும் யாழ் வந்துதான் தமிழ் அதுவும் கிருபன் உதவியுடன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

அட யாழா.. அங்க போய் எழுதாட்டி.. உங்களுக்கு ஏதோ ஆனது மாதிரி ஆகிடுதே.... உதில ரைப் பண்ணிப் பழகித்தான் இவ்வளவு ஸ்பீட்டா கீபோட் அடிக்கிறீங்களோ....

நாங்களும் பேச்சு வாங்கி வாங்கி மரத்து போனோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vil-fleurs.gif   communique.gif

வீட்டிலிருக்கும்போது கணனியில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தாலே கண்டுபிடித்துவிடுவார்கள்.. "என்ன யாழ்க் களமா..? அப்படி என்னதான் அங்கே இருக்கு...இப்பிடி மாங்கு மாங்குன்னு கண்னை உறுத்துப்பார்த்து எழுதிக் கொட்டுகிறீர்களோ..? கடைக்குப்போய் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவர இன்னமும் மனசு வரலை..!" dispu07.gif

கடந்த ஒன்பது வருசமாக வீட்டில் இந்தப் 'பாட்டை'க் கேட்டுக்கேட்டு பழகிப் போச்சுது.. 

30-03-2009ல் நான் யாழில் சேர்ந்து உங்களோடு குப்பை கொட்ட ஆரம்பித்து ஒன்பது வருடம் முடிந்து, நாளை 10வது வருடம் ஆரம்பிக்கிறது..

ஏதாவது சாதிச்சோமா, இல்லை..! ஏதாவது சம்பாதிச்சோமா..? உண்டு..! இனிய நட்பு வட்டாரங்களை..!!  bjr2.gif

அதில் ரெண்டு 'பெருசுகள்', யாழைவிட்டு வெளியிலும்..! :)

யாழுக்கு நன்றி..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாகவே யாழ் எனக்கு அறிமுகமாகவில்லை என்றால் கணணிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இருந்திருக்காது. ஆங்கிலம் முன்பு டைப்ரைட்டரில் அடித்து நல்ல பழக்கம் இருந்தது.ஆனால் தமிழ் கணனியில்தான் பழகியது. பின்பு சாதாரணமாய் நான் அடிக்கும் வேகத்தை பார்த்து நண்பர்களும் உறவுகளும், நானும் கூட  வியப்பதுண்டு......!  tw_blush: 

Link to comment
Share on other sites

நான் முதன் முதலாக எழுத தொடங்கியதே யாழில் தான். நன்றி மீள் நினைவுக்கு.

எனது முதலாவது சுய பதிவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6_AD813_E2-_D85_C-43_A5-8_C72-_DFBD9_DF4

நானும் யாழில்தான் எழுதப் பழகினேன். மோகனயாழுக்கு என்றும் என் நன்றி இருக்கும் :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை எழ வைத்தது  எழுத வைத்தது  கணனியை தடவ வைத்தது தமிழைத் தழுவ வைத்தது இத்தனை உறவுகளை தேட வைத்தது மனத்தெளிவுடன் பயணிக்க வைத்தது தன்னம்பிக்கையை வளர வைத்தது  உறுதியுடன் என்னை நிமிர வைத்தது  அத்தனையையும் செய்தது இந்த யாழ் இணையம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாழில்தான் எழுதப் பழகினேன்

Quote
கருத்துக்களத்துக்கு நான் புதிய அங்கத்துவன். ஒரு மாதிரி தமிழில் எழுத பழகி விட்டேன். விரைவில் உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள என்ன வழி? 

--------------------

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

http://old.yarl.com/forum/index.php?s=&showtopic=1531&view=findpost&p=30073

என்னை முதலாவதாக வரவேற்றவர் சாட்சாத் நெடுக்கரின் இரட்டைப்பிறவிதான்?

நான் தமிங்கிலத்தில்தான் தட்டச்சு செய்வேன். அதனால் ஆங்கிலத்தில் விசைப்பலகையைப் பாராமலேயே தட்டச்சு செய்வதும் கைவந்த கலையாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு,  உறவினர்களிடமிருந்து... வரும், ஆங்கில மின்னஞ்சலுகளுக்கு...
தமிழில்,  நான் பதிலளிக்கும் போது... அவர்கள் அதனை வாசித்து, 
எப்படி.... எழுதுகின்றீர்கள்? பார்க்க ஆசையாக உள்ளது... என்று சொல்லும் போது,
யாழ். களத்திற்கு...  ஆத்மார்த்தமான   நன்றியை  சொல்வேன்.  :)

எனது வாழ்வில், உறவினர் மத்தியில் கூட... பெரும் மதிப்பை தேடித் தந்தது  யாழ்.களம்.  :love:

ஆனால்... என், யாழ். கள பெயர் ஒருவருக்கும் தெரியாது. :grin:
தெரிந்தால்... காறித்  துப்புவார்கள்.  :D:

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான் இப்போது ஒரு குடும்பஸ்தனாகி எழுதுவதை வாசிக்கின்றேன். எப்படி இருந்தவர் ஒரு காலத்தில... ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/29/2018 at 8:16 AM, நந்தன் said:

புதுசா அப்பிடித்தான் இருக்கும்

கொஞ்சம் விபரமாக சொல்லுங்களன் :unsure:

8 hours ago, கலைஞன் said:

நெடுக்காலபோவான் இப்போது ஒரு குடும்பஸ்தனாகி எழுதுவதை வாசிக்கின்றேன். எப்படி இருந்தவர் ஒரு காலத்தில... ம் 

துள்ளிவிளையாடும் மாடு பொதி சுமக்கும் என்று சொல்லுவாங்க இந்த மாட்டு கன்றுக்குட்டி கன பேரை உதைச்சி திரிஞ்சது சுமக்காமலா இருக்கும் tw_blush:

திருமண வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா 

நெடுக்கர் சொல்லுங்க இன்னும் சொல்லுங்கtw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாழுக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது ..கண்ணில் சின்ன பிரச்சனை வர மனிசி உந்த யாழை பார்க்கிறதாலதான் என்று திட்ட தொடங்கினார்..நான் கண்டு கொள்ளவில்லை....

ஒரு குட்டி எழுத்தாளனாக மாற்றிய பெருமை யாழுக்கே...என்று மகிழ்ச்சியடைந்த தருணங்கள் அதிகம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவருடைய மனைவி அவருடன் வந்து சேர்ந்து விட்டார்.:cool:
யூனியில் படித்திருக்கிறார்.
இன்னும் குழ்ந்தைகள் இல்லை/:unsure:மனிசி கர்ப்பமாய் இருக்கிறார்.
நெடுக்கர் யாழில் எழுதுவதும் அவருடைய் ம்னிசிக்கும் தெரியுமாம்.
 
இவ்வளவும் சொல்ல் வேண்டும் என நெடுக்கர் நினைத்தார்...யாழில் ஒருத்தருக்கும் விள்ங்கேல்ல்...இதுக்கும் ரதி தான் தேவையாயிருக்கு.:mellow:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:

ரதியின் பொழிப்புரை இல்லாமலேயே இதெல்லாம் பலருக்கு விளங்கித்தான் இருக்கும். இந்தப் பதிவைப் போட்டு ரதியை யாழுக்கு மீண்டும் வரச் செய்த நெடுக்ஸிற்கு நன்றி? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

29 minutes ago, ரதி said:
அவருடைய மனைவி அவருடன் வந்து சேர்ந்து விட்டார்.:cool:
..இன்னும் குழ்ந்தைகள் இல்லை/:unsure:மனிசி கர்ப்பமாய் இருக்கிறார்..

baby-shower-card.jpg

29 minutes ago, ரதி said:
..நெடுக்கர் யாழில் எழுதுவதும் அவருடைய மனிசிக்கும் தெரியுமாம்.
இவ்வளவும் சொல்ல வேண்டும் என நெடுக்கர் நினைத்தார்... யாழில் ஒருத்தருக்கும் விள்ங்கேல்ல..

எப்பிடியிருந்த மனுசன் இப்பிடியாகிப் போனாரே..!

"சிங்கத்தை" சாய்ச்சுப்புட்டாங்கல்லேய்..!!  3dtmdr.gif

268762_10150237831258995_273526558994_75

Link to comment
Share on other sites

On 28 mars 2018 at 11:48 PM, nedukkalapoovan said:

ஓய் மனிசி.. என்ன ஒரே பேஸ்புக்.. வைபர்.. வாட்ஸ் அப் என்று இருக்கீங்க.. உதில அடிக்ட் ஆகிட்டால்.. அவ்வளவும் தான்.. குடும்பம் களேபரமாகிடும். 

அப்படிங்களாங்க.. யுனில இருக்கேக்க.. பாவிச்சுப் பழகிட்டன். கொஞ்சம்.. கொஞ்சமா குறைக்கப் பார்க்கிறன். ஆனால்.. முழுக்க நிற்பாட்ட ஏலாது...உடனடியா. கொஞ்சம் கொஞ்சமாத்தான்.. குறைக்கனும். 

சில மாதங்கள் கழித்து........

ஓய் மனுசா.. அதென்ன.. இவ்வளவு வேகமா ரைப் பண்ணிட்டு இருக்கிறீங்க..

அது ஒன்னுமில்ல..:rolleyes:

எங்க பார்ப்பம்..

அட யாழா.. அங்க போய் எழுதாட்டி.. உங்களுக்கு ஏதோ ஆனது மாதிரி ஆகிடுதே.... உதில ரைப் பண்ணிப் பழகித்தான் இவ்வளவு ஸ்பீட்டா கீபோட் அடிக்கிறீங்களோ....

ஐயையோ.............................................. நானும் யாழும்..... எம்பிட்டுப் போனமே. இருந்தாலும் எழுதிக்கேட்டே தான் இருப்பம். அந்தளவு உறவு நமக்குள்.. தமிழால்.. தமிழுக்காக.. தமிழருக்காக.. தமிழர் உலகிற்காக.. நல்ல சமாளிப்புக்கேசன் என்றாலும்.. யதார்த்தமும் கூட. tw_blush:

(இது ஒரு உண்மையின் தரிசனம்)

நெடுக்கர் 10 வரிக்குக் குறைவாக எழுதிய பதிவு இதாகத்தான் இருக்கும். முன்னைய மாதிரி விரல்கள் விசைப்பலகையில் விளையாட மறுக்கின்றனவா ? :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

நெடுக்கர் 10 வரிக்குக் குறைவாக எழுதிய பதிவு இதாகத்தான் இருக்கும். முன்னைய மாதிரி விரல்கள் விசைப்பலகையில் விளையாட மறுக்கின்றனவா ? :grin: 

விசைப்பலகை இடம் மாறிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, இணையவன் said:

நெடுக்கர் 10 வரிக்குக் குறைவாக எழுதிய பதிவு இதாகத்தான் இருக்கும். முன்னைய மாதிரி விரல்கள் விசைப்பலகையில் விளையாட மறுக்கின்றனவா ? :grin: 

பத்து வரியில் எழுதினாலும் அதில  எவ்வளவு விஷயம்  சொல்லி  இருக்குறார்<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்தநாள் கலியாணம் கட்டினவருக்கே உந்த உழைச்சல் எண்டால்.....
நாங்களெல்லாம் எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பம்???? :(
"உதுக்கை என்னத்தை நோண்டிக்கொண்டிருக்கிறியள்" எண்டு கத்துறது இரண்டு காதுக்கும் பழகிப்போச்சுது......:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே வாசித்து கொண்டு வரும் வழியில் 
யார் இப்போ கர்ப்பமாக இருப்பது? என்று குழப்பமாக இருக்கிறது.
ஓகே அது கிடக்கட்டும்.

நெடுக்கரின் எழுத்து மிகவும் பண்பாகி கிடக்கிறது 
ஊரிலை அதுதான் கலியாணத்தை .... கால் கட்டு போடுறது 
என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன் 

Link to comment
Share on other sites

 நான் யாழில் இணைந்து 12வருடங்களுக்கு மேல்.  என்னுடைய 95%க்கு மேலான கருத்துக்கள், வெட்டி ஒட்டுற செய்திகள் எல்லாம் , வேலை செய்யும் இடத்தில்தான் இருந்துதான் செய்திருக்கிறேன்.  ஏன்  வீட்டில இருந்து எழுதப்போய்  Risk  எ டுக்க விரும்பவில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2018 at 12:48 PM, ரதி said:
அவருடைய மனைவி அவருடன் வந்து சேர்ந்து விட்டார்.:cool:
யூனியில் படித்திருக்கிறார்.
இன்னும் குழ்ந்தைகள் இல்லை/:unsure:மனிசி கர்ப்பமாய் இருக்கிறார்.
நெடுக்கர் யாழில் எழுதுவதும் அவருடைய் ம்னிசிக்கும் தெரியுமாம்.
 
இவ்வளவும் சொல்ல் வேண்டும் என நெடுக்கர் நினைத்தார்...யாழில் ஒருத்தருக்கும் விள்ங்கேல்ல்...இதுக்கும் ரதி தான் தேவையாயிருக்கு.:mellow:
 
ஒரு எழுத்து வடிவம்.. வாசிப்பவரின் கற்பனைக்கு ஏற்ப பல விதமான கற்பனை வடிவங்களைப் பெறுவது இயல்பே. இதை இட்டு நாங்க அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.

மீள் வரவுக்கு நன்றி அக்கீ. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.