சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்
karu

புதுவைக்கோர் புகழஞ்சலி

Recommended Posts

ஈழ மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காகக் களத்தில் நின்று புரட்சிக்கனல் கக்கிய அந்த மாபெரும் கவிஞனை சும்மா புதுவையென்றாலே தமிழ்த் தேசியவாதிகள் யாவருமறிவர். 2009 இலிருந்து காணாமற்போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்ட அக்கவிஞனை முகநூலில் சிலர் இன்று நினைவு கூர்ந்ததால் அவரைப் பற்றி முன்பொருகால் நானெழுதிய இந்தக் கவிதையை இங்கு பதிவிடுகிறேன்.

தணலை மூட்டிய தமிழ்க் கவி வாணன்

புதுவையென்னும் புகழுக்குரியவன்
புனிதவேள்விக் கவிகளியற்றுவோன்
எதுகை மோனை இலக்கணச் சாத்திரம்
எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும்
வதுவை செய்து கவிமகள் தன்னையே
வாழ்வு முற்றும் அவட்கென வாழ்ந்தவன்
மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன்
மாந்தி வீழ்ந்து மயங்கினர் ஆயிரம்.

அகவை ஐம்பது ஆனது அவன் கவிக்(கு)
ஆயினும் பதினாறின் இளமையாள்
தகைமையால் தமிழ் ஈழமறவரின்
தழலெரிந்திடு நெஞ்சினை மூட்டினாள்
பகைமை தோற்றது பாயும் மறவரின்
படை நடந்தது பாரதம் சோர்ந்தது
இகமெலாம் தமிழ் வீரம் தெரிந்தது
ஈழதேசம் உயிர்த்து எழுந்தது.

நீரிலே நெருப்பேற்றிய எங்களின்
நேரிலாத் தலைவன் ஒளிர் சூரியன்
போரிலேற்றிய வெற்றிச் சுடர்களைப்
பொன்னெழுத்திற் புதுவை பொறித்ததால்
தேரிலேறிய தீந்தமிழாளவள்
திலகமாகத் திகழ அவன் கவி
பாரிலே தமிழீழப் பரணியைப்
பாட வேண்டியதில்லை யென்றானது.

காற்றையே கயிறாக முறுக்கியும்
கனலை நெஞ்சில் அடக்கியும் தங்களின்
ஆற்றல் யாவும் விடுதலைக்கேயெனும்
அணி வகுத்த மறவரின் நெஞ்சிலே
ஏற்றி ஏற்றி உணர்வினை ஊட்டிய
இரத்தினத்துரை எம் கவி வாணனைப்
போற்ற நாவிற் புகழ்மொழி ஆயிரம் 
பொய்யிலாதவர் நெஞ்சிலுதிக்குமாம்.

வாழ்வு வேறு கவிக்களம் வேறெனும்
வகை பிரித்த நடிப்புச் சுதேசியாய்
தாழ்பிடித்து உயர்ந்திடத் தன்னிலை
சாகஸங்கள் நடாத்த அறிந்திலான்
கூழ் குடித்து அரைவயிற்றோடுதன்
குடும்ப மோடினும் ஈழவிடுதலை
நாளை நோக்கி நலிந்தவப் பெற்றியான்
நமது தேசக் கவிதனைப் போற்றுவோம்!

வேறு:
புதுவைக் கவி எம் ரத்தினமே
புகழ்மிக்குயர் நட் சத்திரமே
எதுகைக்கொரு வெண் நித்திலமே
எழுசப்த சுரத்தின் நிலமே

வெல்லற்கரிய தமிழினிமை
மேவக் கவியால் தளையிடையே
அல்லல் படுமெம் நிலையுரைத்த
சொல்லேருழவா சீராளா

எழுத்தாம் அம்பை மழையாக்கி
எறியும் வில்லை நாவாக்கி
ஒளித் தூறல்களால் மானுடத்தின்
உயர்விற் குறிவைத்துரமூட்டி
புழுத்தே வழியும் சமுதாயப்
பொல்லா நாற்றச் சிணிபோக்கி
முழுத் தாரணியும் கழுவுண்ண
முழுக்காட்டினை நின் கவியாலே!

என்றும் உனது இனியகவி
ஈழமண்ணில் அழியாது
நின்று மறவர்க்(கு) உரம் ஊட்டும்
நின்றன் புகழைப் பறைசாற்றும்.

முற்றும்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்

நன்றி கவிஞா, என் ஆருயிர் நண்பன் புதுவையின் நினைவினைப் போற்றுவோன்.

Share this post


Link to post
Share on other sites
On 05/04/2018 at 6:13 PM, poet said:

நன்றி கவிஞா, என் ஆருயிர் நண்பன் புதுவையின் நினைவினைப் போற்றுவோன்.

நன்றிங்க.

On 06/04/2018 at 8:47 PM, Kavi arunasalam said:

தூசு தட்டாமலே

காசு பார்த்தவர் 

கூழ் குடித்து அரைவயிற்றோடுதன்
குடும்ப மோடினும் ஈழவிடுதலை
நாளை நோக்கி நலிந்தவப் பெற்றியான்
நமது தேசக் கவிதனைப் போற்றுவோம்!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்