• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

ஓடிய ஓட்டம் என்ன?

 எங்கள் ஊரின் அன்றைய அழகு தேவதை அவள்தான். பெயர் எல்சி. நிறம் வெள்ளை. அதனால்தான்லொள்ளுவிட பல இளைஞர்கள் அவளைச் சுற்றிச் சுற்றி சைக்கிளில் திரிந்தார்கள். அவர்களுக்குள் கவியும் இருந்தானா என்று கேட்கிறீர்களா? இல்லை என்று சொல்ல மாட்டேன். இருந்தான். அழகு என்பது பொதுவுடமை. அதை யாரும் ரசிக்கலாம்தானே. ஆனால் பயம் காரணமாக தூரஇருந்தே கவி ரசித்துக் கொண்டிருந்தான்

 தங்களைப் பார்த்து ஒருத்தியாவது சிரிக்க மாட்டாளா என்று ஏங்கும் இளம் வயது வாலிபங்கள் மத்தியில் எல்சி எல்லோரையும் பார்த்துச் சிரித்தாள். கவனியுங்கள் அவளுக்கும் பொதுவுடமைத் தத்துவம் தெரிந்திருக்கிறது. அவளுக்கு முழங்காலுக்கு கீழே இருக்கும் பாவாடை அணியப் பிடிக்காது. இதுவும்  வாலிபங்களுக்கு அவளிடம் பிடித்த  மெகாகுணம். ஆனாலும் எல்லா வாலிபங்களுக்கும், அவர்களுக்குள்ளேயே ஒரு கேள்வி இருந்தது. “உண்மையில் எல்சி யாரை விரும்புகிறாள்?”

 அவளை நெருங்கிக் கேட்கவோ, கடிதம் எழுதிக் கொடுக்கவோ வாலிபங்களுக்கு தயக்கமாக இருந்தது. காரணம் அவளது சித்தப்பா அருமைநாயகம். ஆறடிக்கு மேலான உருவம், மற்றும் முறைப்பான பார்வை, இந்த இரண்டும் அவரது முக்கியமான அடையாளங்கள்.

 ஞாயிற்றுக்கிழமை பூசைக்குப் பின்னரான அருட் தந்தை ஆனந்தன் அவர்களின் பிரசங்கம் ஒன்று

நாங்கள், எங்களது வீட்டுப் பெண்களுக்கு கொடுக்கும் மதிப்பை மற்றைய பெண்களுக்கும் கொடுக்க வேண்டும். காலத்தின் மதிப்பு தெரியாமல் வீணாகத் தெருவில் நிற்பதும், பெண்களை இடைஞ்சல் செய்வதும் நல்லதல்ல. இளைஞர்கள் இதை உணர்ந்து நடந்தால் இருபாலாருக்கும் நன்மை தரும்....” 

 குருவானவர் இப்படிச் சொல்லிவிட, கிருஸ்தவ மதத்தில் இருந்த வாலிபங்கள் மரியாதையாக மெதுமெதுவாகக் கழன்று கொண்டார்கள். இதனால் சைவப் பெடிகளுக்கு இடைஞ்சல்கள் வெகுவாக குறைந்து போனது. அவர்கள் எல்சி செல்லும் பாதைகளில் சைக்கிளில் தங்கு தடையின்றி சுழன்று கொண்டிருந்தார்கள்.

A8_BDC750-_F469-4025-_BDF1-9_B7_CB590_E4

 கிருஸ்தவ மதத்தில் இருந்த இளைஞர்கள் தயங்கி நின்ற போதும், பிலிப்நேரி மட்டும் துணிந்து காதலில் இறங்கினான். பிலிப்நேரி நகரசபையில் வேலை செய்து கொண்டிருந்ததால் அவனிடம் போதிய பணம் இருந்தது. அவனிடம் இருந்த தொழில், வருமானம் ஆகிய இரண்டு தகுதிகளும், மாணவர்களான எங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு அவனை முன்னே கொண்டுபோய்  நிறுத்திவிட்டன. ஆனால் பிலிப்நேரிக்கு எல்சியை விட பதினைந்து வயதுகள் அதிகமாக இருந்ததால் ஜோடிப் பொருத்தத்தில் கொஞ்சம் பின்னடைவு தெரிந்தது.

 அருமைநாயகமும், பிலிப்நேரியும் ஏறக்குறைய ஒரே உயரமும் உடல்வாகும் கொண்டவர்கள். எங்களைப் போல, அவனுக்கு அருமைநாயகத்திடம் பயம் கிடையாது. ஆனால் தனது காதலை எல்சி மறுத்து விட்டால் என்னாகும் என்ற தயக்கம் மட்டும்தான் அவனிடம் மேலோங்கி இருந்தது.

 பிலிப்நேரி தனது  விடயத்தில் சில திட்டங்களைப் போட்டான். முதற் கட்டமாக எல்சியின் தம்பி ரோகானை வசப்படுத்தினான். அவன் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்தான். சினிமா பார்க்க ரிக்கெற் எடுத்துக் கொடுத்தான். ரோகான் எங்கெல்லாம் போக வேண்டும் என்று சொல்கிறானோ, அங்கெல்லாம் அவனை சைக்கிளில் கொண்டு போய் விட்டு விடுவான். ரோகானுடனான பிலிப்நேரியின் நெருக்கம், சைவப் பெடியங்களுக்கு எல்சியின் மேல் இருந்த ஈர்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வந்தது.

 ஒவ்வொரு  வீட்டிலும்அவிட்டு விட்ட மாடு போலை ஊரெல்லாம் சுத்தமாமல் படிக்கிற அலுவலைப் பார். சோதனையிலை பெயில் விட்டியோ பிறகு கொப்பரிட்டை தப்ப மாட்டாய்என்ற அம்மாக்களின் பயம் காட்டுதலும் சேர்ந்து கொண்டதால் ஒரு கட்டத்தில் போட்டியில் இருந்து சைவப் பெடியங்களும்திராட்சை புளிக்கும்என்று விலக, பிலிப்நேரி தனிக்காட்டு ராஜாவாக அங்கீகாரம் பெற்றான்.

 ஒருநாள் நானும் பிலிப்நேரியும் எதிர் எதிர்த்திசைகளில் ஒழுங்கையால் சைக்கிளில் வந்து கொண்டிருந்தோம். அந்த ஒழுங்கையில் இருந்த ஆன் அன்ரி வீட்டு வாசலில் எல்சி தனியாக நின்றிருந்தாள். பிலிப்நேரி என்னைப் பிடித்துக் கொண்டான்

 “இது நல்ல சந்தர்ப்பமடா தனிய நிக்கிறாள். அவளோடு கதைக்கலாம். பயமாயிருக்கு. நீயும் நில்லடா?”

 பிலிப்நேரி என்னிடம் கெஞ்சினான். நான் என்ன கேட்டாலும் செய்து தரும் நிலையிலேயே பிலிப்நேரியின் நிலை இருந்தது. ஆனால் அவனுக்கிருந்த உதறலை விட என்னிடம் அதிகமாக இருந்தது. ஒழுங்கையில் இரண்டு பக்கமும் பார்த்தேன். அருமைநாயகத்தின் நிழல் கூட அந்த ஒழுங்கையில் இல்லை என்பதை உறுதியாக்கிய பின்னர் எல்சியின் பக்கம் மெதுவாகத் திரும்பினேன். சிரித்தாள். அவள் என்னைப் பார்த்துத்தான் சிரிக்கிறாளா? இல்லை பிலிப்நேரியைப் பார்த்தா? நான் ஒரு முடிவுக்கு வருமுன்னரே பிலிப்நேரி முடிவெடுத்துவிட்டான்.

  “பாருடா பாருடா அவள் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள்பிலிப்நேரி அப்படிச் சொன்னதும் எரிச்சலின் உச்சத்தில் நான் இருந்தேன்.

 “அப்ப போய்க் கதையன்

 “போயிடாதையடாஎன்று என் காதிடம் சொல்லிவிட்டு பிலிப்நேரி எல்சியை நெருங்கினான்.

 பிலிப்நேரி தன்னை நோக்கி அடி எடுத்து வைப்பதைப் பார்த்து எல்சி இரண்டடி பின் நகர்ந்துஅம்மாஎன்று மாரீசன் பாணியில் அவலக் குரல் கொடுக்க, எனக்கு விளங்கி விட்டது. ஒரு போர் மேகம் தரைக்கு உடனடியாக வரப் போகிறது என்று.

 நான் நினைத்தது நடந்தது. ‘கன்றழுத குரல் கேட்டு தாய்ப்பசு ஓடும்என்பார்கள். அது நடந்தது. ஆன் அன்ரியின் வீட்டுக் கேற்றைத் திறந்துகொண்டு  எல்சியின் தாய் லூடாஸ் அன்ரி வெளியேவர, ஏற்கனவே எச்சரிக்கையோடு இருந்த நான் மெதுவாக சைக்கிளோடு நகர்ந்தேன்.

  “அக்கா, சொல்லுறதைக் கேளுங்கோ. நான் ஒண்டுமே செய்ய இல்லை அக்கா. ஏன் இதிலை நிக்கிறீங்கள் எண்டு கேக்கத்தான்...” பிலிப்நேரியின் குரல் தளதளப்போடு வெள்ளைக் கொடி பிடித்தது. இப்படியான ஒரு சம்பவம் நடக்கும் என அவன் கணித்திருக்க மாட்டான்.

 “நான் உனக்கு அக்காவோடா? நான் உனக்கு அக்கா எண்டால் என்ரை மகள் உனக்கு மருமகளெல்லோடா. உன்ரை வயசென்ன? அவளின்ரை வயசென்ன?” லூடாஸ் அன்ரிக்கு இவ்வளவு கோபம் வந்து நான் பார்த்ததில்லை. தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் அன்று அந்த இடத்தில் நின்றிருந்தால் நல்ல தமிழில் ஒரு அர்சச்சனயையும்அதனோடு சேர்த்து ஆலாபனையையும் கேட்டிருப்பார்கள்.

 அழகான தமிழில் இவ்வளவு அழுக்கான வார்த்தைகளா? நான் அதிர்ந்து போனேன்.

 லூடாஸ் அன்ரியின் பார்வை என்மேல் திரும்பினால் நிச்சயம் நான் கொங்கணன் பார்தத கொக்காகி விடுவேன். அந்தளவுக்கு அவரின் கண்கள் சிவந்திருந்தனநல்ல வேளையாக விடுப்புப் பார்க்க கொஞ்சம் ஆட்கள் சேர்ந்து விட, அவர்களுக்குள் புகுந்து வெளியேறி என் சைக்கிளில் ஏறி ஓடத் தொடங்கினேன். இரவில் படம் பார்த்து விட்டு ஒழுங்கையால் வரும்போது நாய் துரத்துமே, அப்போது கூட இவ்வளவு வேகம் என் சைக்கிள் கண்டதில்லை. அன்று நான் ஓடியதே என்  வாழ்வில் அதிகமான சைக்கிள் ஓட்ட வேகம் என்பேன்.

 நடந்த பிரச்சினை அன்று மாலையே நட்பு வட்டத்துக்குள் வந்துவிட்டது

 “நல்லவேளையடா நீ பிடிபட இல்லை. மனுசியின்ரை கையிலை நீ அம்பிட்டிருந்தால், உனக்கு சரியா பிடிச்சு மூத்திரம் விடத் தெரியுமோ என்று கேட்டு நாறடிச்சிருக்கும்

 “வாழைக்குள்ளை சந்தியாப்பிள்ளை எண்டு ஆருக்குத் தெரியும். தாய்க்காரி ஆன் அன்ரி வீட்டுக்குள்ளே இருக்கிறதை நாங்கள் கவனிக்க இல்லை

 எங்களுக்குள் எழுந்த கேள்விகள் இவைதான். பிலிப்நேரியை எல்சி உண்மையிலேயே விரும்பி இருந்தாளா? பின் எதற்காக பிலிப்நேரி எல்லா இடத்திற்கும் சைக்கிளில் எல்சியின் தம்பி ரோகானை வைத்துக் கொண்டு திரிந்தான்?

 அடுத்தநாள் எங்களுக்கு விடை கிடைத்தது. ரோகானையே பிடித்துக் கேட்டோம்.

 “நேற்று கொம்மாவுக்கும், பிலிப்நேரிக்கும் ஏதோ பிரச்சினையாமே?” 

 “அக்காவோடை சேட்டை விட்டார் அதுதான்

 “நீதானே பிலிப்நேரிக்கு தூது போற ஆள்

 “நான் ஒருத்தருக்கும் தூது போகேல்லை

 “அப்ப எதுக்கக்கடா உனக்கு கொத்து றொட்டி ஐஸ்கிறீம் எல்லாம் வாங்கித் தந்தவன்?”

 “அதை அவரிட்டை போய்க் கேளுங்கோ

 ரோகான் எங்களிடம் பிடி கொடுக்கவில்லை. அவன் உலகம் தெரியாதவனில்லை. சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கி, பிலிப்நேரியின் காசில் நன்றாக தின்று, உருண்டு திரண்டிருப்பது தெரிந்தது

 காதலிக்கும் போது காதலனுக்கு கண் இல்லாமல் போகலாம். ஆனால் காதலிகளின் தம்பிகளுக்கு அப்பொழுதுதான் அறிவு அதிகமாக வேலை செய்கிறது.

 கொஞ்ச நாளில் பிலிப்நேரி சொந்த மச்சாளுக்கே மாப்பிள்ளையாகிப் போனான்.

 பேஸ்புக்கில் தன் பேரனைக் கொஞ்சியபடி எல்சி இருக்கும் படத்தைப் பார்த்தேன். அமெரிக்காவில் பயங்கரக் குளிர் போலை, படத்தில் உடல் முழுதும் மூடி உடுப்பு போட்டிருந்தாள்.

 கவி அருணாசலம்

30.03.2017

 
 • Like 8
 • Haha 3
 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

ஊரெல்லாம் 'ஜொள்ளு' விட்டு காவாலி(?)யாய் திரிந்த கவியர், எப்போதான் 'வாலி'யாகி, ராமனாக 'செட்' ஆனார்..? vil-lettre.gif

அந்த கதையை சொன்னால், 'விடுப்பு' கேட்க சுவாரசியமாக இருக்கும்..!  vil-electric.gif

Edited by ராசவன்னியன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் ஓடாமல் நின்றிருந்தால்  சில சமயம் உங்களுக்கு எல் சி யுடைய நட்பு கிடைத்திருக்கலாம்.காரணம் அவ சிரித்தது உங்களை பார்த்துதானே......!  tw_blush:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சரியான பயந்தாங்கொள்ளியாக இருந்திருக்கின்றார்கள்? உருட்டி உருட்டி அடிபோட்டாலும் காதலுக்காக எதையும் தாங்கியிருக்கவேண்டும்.பிலிப்புநேரி எல்சியின் தாயாரை அக்கா என்று சொன்னதுதான் படுபிழை. ஆன்ரி என்று காலில் விழுந்திருக்கலாம்?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ராசவன்னியன் said:

ஊரெல்லாம் 'ஜொள்ளு' விட்டு காவாலி(?)யாய் திரிந்த கவியர், எப்போதான் 'வாலி'யாகி, ராமனாக 'செட்' ஆனார்..? vil-lettre.gif

அந்த கதையை சொன்னால், 'விடுப்பு' கேட்க சுவாரசியமாக இருக்கும்..!  vil-electric.gif

ராசவன்னியன்

நீங்கள் என்னை ராமனாக நினைத்தால் நான் என்ன செய்ய?

என் கதையை விடுப்புக் கேட்க நீங்கள் விரும்பலாம். ஆனால் அது நீங்கள் நினைப்பது போல சுவாரசியமாக இருக்காது மிக சோகமாக இருக்கும்

எதுக்கு நீங்கள் வீணாக சோகமாகி... என் கவலை என்னோடையே இருக்கட்டும்.

 
3 hours ago, suvy said:

 

நீங்கள் ஓடாமல் நின்றிருந்தால்  சில சமயம் உங்களுக்கு எல் சி யுடைய நட்பு கிடைத்திருக்கலாம்.காரணம் அவ சிரித்தது உங்களை பார்த்துதானே...

 

Suvy,

ஓடாமல் ஒருதரம் நின்றதாலேதான் எல்லாமே பிழைத்துப் போயிற்று. அதை பிறகு ஒருதரம் சொல்கிறேன்.

 

2 hours ago, கிருபன் said:

சரியான பயந்தாங்கொள்ளியாக இருந்திருக்கின்றார்கள்? உருட்டி உருட்டி அடிபோட்டாலும் காதலுக்காக எதையும் தாங்கியிருக்கவேண்டும்.பிலிப்புநேரி எல்சியின் தாயாரை அக்கா என்று சொன்னதுதான் படுபிழை. ஆன்ரி என்று காலில் விழுந்திருக்கலாம்?

கிருபன்,

கதல் வேறை. சுழட்டல் வேறை. சுழட்டலுக்குப் போய் அடி வேண்டினால் பிறகு, கதாநாயகன் தகுதி போய்விடும்.

லூடாஸ் அன்ரி உதைச்சிருப்பார்

ஏன்டா  நீ என்னை அன்ரி என்று கூப்பிடுறளவுக்கு எனக்கு அப்பிடி வயசாச்சாஎன்று பிவிப்நேரியை துவைச்சு எடுத்திருப்பார்.

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, Kavi arunasalam said:

ராசவன்னியன்

நீங்கள் என்னை ராமனாக நினைத்தால் நான் என்ன செய்ய?

என் கதையை விடுப்புக் கேட்க நீங்கள் விரும்பலாம். ஆனால் அது நீங்கள் நினைப்பது போல சுவாரசியமாக இருக்காது மிக சோகமாக இருக்கும்

எதுக்கு நீங்கள் வீணாக சோகமாகி... என் கவலை என்னோடையே இருக்கட்டும்.

என் எண்ணங்கள் பொய்த்துவிட்டன.

மன்னிக்கவும்.

Edited by ராசவன்னியன்
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

கண்ணாலேயே பேசிப் பேசி காதலித்த காலம்.காதல் கதையை நன்றாக எழுதியுள்ளீர்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் ஒரு பேப்பரில் எழுதும் இரவி அருணாசலாமா?
 

Share this post


Link to post
Share on other sites

"அமெரிக்காவில் பயங்கரக் குளிர் போலை, படத்தில் உடல்முழுதும் மூடி உடுப்பு போட்டிருந்தாள்."

ஐயாவுக்கு ஆசைய பாரன்

கதை Superb

Edited by Knowthyself
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, ரதி said:

 

7 hours ago, ரதி said:

நீங்கள் ஒரு பேப்பரில் எழுதும் இரவி அருணாசலாமா?
 

நான் அவரில்லை

 

 

7 hours ago, Knowthyself said:

ஐயாவுக்கு ஆசைய பாரன்

Knowthyself,

அடைய முடியாத பொருளின் மீது ஆசை தீராது

அபிமானம் மாறாது?

Share this post


Link to post
Share on other sites

கவியர்...நீங்கள் ஒரு காலத்தின் கண்ணாடி என்பேன்!

எவ்வளவு கச்சிதமாய்.....சைக்கிள் காதலை விபரித்திருக்கிறீர்கள்?

யாழ்ப்பாணத்து 'டீனேஜ்' தமிழனைப் போல....உலகத்தில் எந்த ஓரு இளைஞனுமே கனவுலகில் வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்று தான் தோன்றுகின்றது!

ஒரு சமன்பாட்டுக்குள்...எத்தனை x,y,z க்கள் ஒருந்தாலும்....எல்லாவற்றையும் தாண்டி...வெற்றி பெற்ற காதல்களும் உண்டு தான்!

அது சரி......தேவதைகள்...தேவாங்குகளாக மாறுவதைக் காண்பதற்கு......ஆயிரம் கண்கள் கூடப் போதாது!

குளிர் காலம் வருகின்ற போது....பழைய காதலிகள் ...யாழ் களத்தில்...பலருக்கு நினைவுக்கு வருவது தான் ஏன் என்று எனக்கு விளங்குதில்லை!

தொடர்ந்தும் காதலியுங்கள்....மன்னிக்கவும்!

தொடர்ந்தும் எழுதுங்கள்!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, புங்கையூரன் said:

குளிர் காலம் வருகின்ற போது....பழைய காதலிகள் ...யாழ் களத்தில்...பலருக்கு நினைவுக்கு வருவது தான் ஏன் என்று எனக்கு விளங்குதில்லை!

தொடர்ந்தும் காதலியுங்கள்...

புங்கையூரான் இப்போ இளவேனிற்காலம் . எல்லாம் பசுமையாகத் தெரிகிறது.

எப்போதும் காதலிக்க ஆசைதான். ஆனால் முன்னர் போலை  வேகமாக சைக்கிள் ஓட்ட முடியாதே?

Share this post


Link to post
Share on other sites

ஓடிய ஓட்டம் நின்று நினைவு கொள்கிறது காலம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 4/2/2018 at 8:06 AM, புங்கையூரன் said:

 

யாழ்ப்பாணத்து 'டீனேஜ்' தமிழனைப் போல....உலகத்தில் எந்த ஓரு இளைஞனுமே கனவுலகில் வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்று தான் தோன்றுகின்றது!

 

அது அந்தக்காலம். இந்தக்காலத்தில் கை தொலைபேசி, மின்னஞசல் , முகநூல் என்று பல வசதிகள் இருக்கிறது.

 

மீண்டும் ஒரு அருமையான அனுபவக்கதையினை எங்களுடன் பகிர்ந்திருக்கிறீர்கள்  கவி  

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நல்ல காலம் சைக்கிளைப் போட்டு விட்டு ஓடவில்லை.:rolleyes:கதை சுப்பர்.:)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, சுவைப்பிரியன் said:

 

நல்ல காலம் சைக்கிளைப் போட்டு விட்டு ஓடவில்லை

 

 

 

நல்லாயிருக்கு சுவைப்பிரியன்,

 சைக்கிள் எங்கே என்று கேட்டு வீட்டிலை அடி விழுந்திருக்கும்?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இலங்கையே வத்திக்கான் கிழக்கிஸ்தான் புத்திஸ்தான் ஆக போகிறது முன்றுபக்கத்திலும் மதம் மாறுவது பழைய இந்துக்களின் வம்சம் தானே இதில தெருவும் சந்தியும் தேவையா??😜😜🤣🤣😂😎👌
  • சிறித்தம்பி! நாங்களும் முன்னேறின நாடுகளை  பார்த்து முன்னேற வேணும் கண்டியளோ 😎
  • உணவகம் சென்று உணவை முடித்துக்கொண்டதும் இனி எங்கு செல்லலாம் என்று மகளைக் கேட்டேன். மதிய வெயிலுக்குள் இடங்கள் பார்க்கப் போய் வேர்த்தொழுகி வராமல் கொஞ்சம் வெய்யில் தணியப்  போவோம். இப்ப கோட்டல் காரர் தந்த இலவச சினிமா டிக்கற் இருக்கு படம் பார்க்கப்போவோம் என்றாள். சரி என்று அங்கு சென்றால் புதிதாக இரண்டு நாட்களுக்கு முன்னரே வெளியாகியிருந்த Will Smith நடித்த Gemini man என்னும் ஆக்சன் திரில்லர். அதுவும் VIP க்கள் மட்டும் பார்க்கும் சினிமா என்றாள் டிக்கற் கவுண்டரில் நின்றவள். 1 st கிளாஸ், பால்கனி என்று பார்த்துள்ளோம் தான். இது என்ன VIP சினிமா என்று குழப்பமாக இருக்க சரி உள்ளே போனால் தெரிந்துவிடும் என்று வாசலுக்குச் செல்ல முற்பட இன்னும் சினிமா ஆரம்பிக்க அரை மணி நேரம் இருக்கிறது. அதுவரை அங்கே சென்று இளைப்பாறுங்கள் என்று ஒரு இடத்தைக் காட்டிட அங்கே செல்ல வாசலில் நின்ற பெண் வெல்கம் மேடம் என்று உடல்வளைத்து வணக்கம் சொல்லி ஒரு இருக்கையைக் காட்ட வெளிநாடுகளில் இருப்பது போல் அழகான சோபாக்கள் தென்பட அதில் சென்று அமர்ந்தோம். சிறிது நேரத்தில் சிறிய ஸ்னாக்ஸ் அடங்கிய ஒரு தட்டைக் கொண்டுவந்து உண்ணுங்கள் என்றுவிட்டு என்ன குடிக்கிறீர்கள் என்றாள். எமக்குத் தேவையானதைக் குடிப்பதற்கு ஓடர் செய்துவிட்டு இதுதான் VIP சினிமாவின் ஸ்பெசல் என எண்ணியபடி கேக்குகளை உண்ணத் தொடங்கினேன். சுவையாக இருந்ததால் நாமிருவரும் ஒன்றைக்கூட மிச்சம் விடவில்லை. குளிர்பானங்களையும் குடித்து முடிய நீங்கள் இப்ப சினிமா பார்க்கச் செல்லலாம் என்றாள். எழுந்து உள்ளே சென்றால் அங்கு எம்மைத் தவிர யாரையும் காணவில்லை .எமது நாடுகளில் இருப்பதுபோல் பிரமாண்டமான சினிமா இல்லாவிட்டாலும் ஐரோப்பாவில் இருபது போன்று சிறியதாகவே காணப்பட்டது. இரு இருக்கைகளை நல்ல வசதியானதாகப் பார்த்து அமர்ந்துகொண்டோம். இருக்கைகள் கால் நீட்டிப் படுத்துப் பார்க்கும்படி வசதியாக அமைக்கப்பட்டிருந்தது. போர்ப்பதற்கு  ஒரு அழகிய போர்வை தலையணை என இருந்தாலும் நான் அவற்றை எதையும் தொடாது அமர்ந்தேன். நேரம் வந்ததும் விளம்பரங்கள் ஓடத் தொடங்கின. இன்னும் இருவர் வந்து தூரத்தில் அமர்வது தெரிந்தாலும் நாம் திரும்பி அவர்களை பார்க்கவில்லை. நேரம் செல்லச் செல்ல குளிரூட்டியின் அதிக குளிர் காரணமாக எனக்கு நடுங்கத்தொடங்க என்ன இப்பிடிக் குளிருது என்று மகளைக் கேட்டேன். அதற்குத்தான் இந்த போர்வையைத் தந்துள்ளனர் என்றுவிட்டு மகள் போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு திரையில் கவனம் செலுத்த,  ஏசியை எப்படிக் குறைப்பது என்பதில் மனம் ஓடியது. இந்தப் போர்வையை எத்தனைபேர் பயன்படுத்தினார்களோ என்னும் எண்ணம் எழ கதிரையில் இருந்த உதவிக்கு அழைக்கும் அழுத்தியை அழுத்தினேன். இரு நிமிடத்தில் ஒருவர் வந்து என்ன மேடம் என்றபடி நின்றார். சரியான குளிராக இருக்கிறது. ஏசியைச் சிறிது குறைக்க முடியுமா என்று கேட்டேன். இதில் போர்வை இருக்கு மேடம் என்று கூறி இன்னுமொரு கதிரையில் இருந்த போர்வையையும் எடுத்துத் தர, எனக்கும் இன்னொன்று வேண்டும் சரியாகக் குளிர்கிறதுதான் என்று மகள் கூறியதும் குறைக்கிறேன் மாம் என்றபடி அவன் நகரப் படம் ஆரம்பித்தது. அவன் சிறிது குறைத்தான் தான் ஆயினும் என்னால் குளிர் தாங்க முடியாது இருக்க, அம்மா ஊத்தை உடுப்புப் போட்டுக்கொண்டா இங்கு ஆட்கள் வருகிறார்கள். ஆகவும் நுணுக்கம் பாராது போர்த்துக்கொண்டு இருங்கள் என்றதும் இரண்டு போர்வைகளையும் காலிலிருந்து இடுப்புவரை போர்த்தபடி இருக்க தன் பையிலிருந்து மெல்லிய யம்பர் ஒன்றை மகள் எடுத்துத் தர அதை போட்டபடி படத்தைப் பார்க்கவாரம்பித்தேன். ஒரு மணிநேரம் கழிய இடைவேளை வர வடிவாகச் சுற்றிப் பார்த்தால் எம்மையும் இன்னும் இருவரையும் தவிர வேறு யாரும் அரங்கில் இல்லை. எமது இருக்கைகளிலேயே குளிர்பானம் மற்றும் பொருட்கள் வைக்க எதுவாக அமைக்கப்பட்டிருக்க இருவர் தட்டுக்களை ஏந்தியபடி வந்து எமக்கு குளிர்பானங்களும் பொப்கோனும் தந்துவிட்டு மற்ற இருவருக்கும் கொடுக்க நகர தேநீர் அல்லது கோப்பி கிடைக்குமா என்கிறேன். சொறி மேடம் இதற்குள் அவை இல்லை. நீங்கள் வெளியில் தான் வாங்கிக் குடிக்கவேண்டும் என்றுவிட்டுப் போக வேறு வழியின்றி ஆறவிட்டு யூஸைக் குடித்து முடித்தேன்.   படம் மீண்டும் ஆரம்பித்து  ஓடவாரம்பித்தது. பரவாயில்லை நல்ல கவனிப்புத்தான். ஆனால் ஆட்கள் நிறைய வாராததுக்குக் காரணம் விலை அதிகமாக இருக்கும் போல என்று மனதில் நினைத்தபடி படம் பார்த்து முடித்தோம். வெளியே வந்து மீண்டும் கவுண்டரில் சென்று விலையை விசாரித்தால் ஒருவருக்கு 25 டொலர்ஸ் என்கிறார்கள். நாம் ஏதும் தவறாக ரிவியூ எழுதினாலும் என்று நன்றாகத்தான் எம்மை  உபசரிக்கிறார்கள் கோட்டல் நிர்வாகம் என்று கூறிச் சிரித்தபடி வெளியே வந்தால் பயங்கர வெய்யில்.                    
  • அமெரிக்கன்ர அரசியல் எப்படியோ போக .. உந்த ஆய்வாளர்கள் தொல்லை தங்காதே..!😢 பசுபிக் கடலை தொட்டு அண்டார்டிகாவை றச் செய்வினம்.. தலைப்பு அருமை ..! 😊 .. இன்னும் குறை கட்டுரைகள் வருவதற்குள் ஊரை காலி செய்குக..! ☺️