• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

பழுதான கைப்பேசியில் இழந்த தரவுகளை மீட்க..

Recommended Posts

 

பழுதான கைப்பேசியில் இழந்த தரவுகளை மீட்க..

பழுதான கைப்பேசியிலூள்ள தொடர்பு எண்கள், மற்றும் பலதரப்பட்ட கோப்புகளை எப்படி மீளப் பெறுவது..?

திருத்தும் கடைகளுக்கு உங்கள் கைப்பேசியை எடுத்துச் சென்றால் அதைலுள்ள உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அவற்றை திருடி தவறான வழிகளில் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது..

இதை தவிர்க்க இணையத்தில் பல மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது.. அவற்றில் நான் சமீபத்தில் பயன்படுத்தியது dr.fone என்ற இந்த மென்பொருள்..

drfone-android-data-recovery-banner.jpg

 

கைப்பேசியின் உள்ளக சேமிப்பு செல்லிலிருந்து பத்திரமாக அனைத்து தகவல்களையும் மீட்டுவிட்டேன்.

பயன்படுத்தி பாருங்கள்!

கவனிக்க: கைப்பேசியின் உள்ளக மெமரியை ஃபார்மேட்(Format or Wipe) செய்யாமல் இருந்தால் மட்டுமே இந்த மென்பொருள் தரவுகளை மீட்டுத் தரும்.

டாக்டர் ஃபோன்

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Topics

 • Posts

  • உடலில் ஹோர்மோன்கள் சீரற்ற நிலையில் காணப்படுமாயின் அதன் விளைவாக உடல், உள மற்றும் உணர்வு ரீதியாகப் பலவிதமான பிரச்சினைகள் வெளிப்படும். அதன் காரணத்தினால் போஷாக்கான உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இப்பிரச்சினையைத்  தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அதன் ஊடாக ஹோர்மோன்கள் சீராக இயங்கவும் வழிவகுக்கும்.   அதன் காரணத்தினால் அன்றாட உணவில் புரதச் சத்தைக் கொண்ட உணவு வகைகளை சேர்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன் ஊடாக பசியின்மையைத் தவிர்த்துக் கொள்ளலாம். புரதச்சத்தானது பசி உணர்வை சீராக இயங்க வைக்கப் பெரிதும் உதவதோடு ஹோர்மோன் தொழிற்பாட்டுக்கும் பக்க துணையாக அமையும். அதனால் நாளாந்தம் ஒவ்வொரு உணவு வேளையிலும் 20 -, 30கிராம் அளவு புரதச்சத்து உடலுக்குக் கிடைக்கக்கூடிய வகையில் உணவு வேளையை அமைத்துக்கொள்வதே சிறந்ததாகும். அப்போது அதிக பசி ஏற்படவும் மாட்டாது. பசி ஏற்பட்டாலும் அது தொல்லையாகவும் அமையாது.   மேலும், உடலில் இன்சுலின் அளவு சீராக சுரப்பதற்கு அன்றாடம் உடற்பயிற்சியில் ஈடுபடுவது பெரிதும் பயன்மிக்கதாக இருக்கும். குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்களை உரிய அளவில் பேணி அவற்றை சக்தியாக மாற்றுவதற்கும் உடற்பயிற்சி பெரிதும் உதவும். இது தொடர்பில் அதிக உடல் பருமன் கொண்ட பெண்கள் சிலரில் 24வாரங்கள் உடற்பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதன் படி அவர்களது உடலில் இன்சுலின் சுரப்பு சீராக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அதாவது உடற்பயிற்சி இன்றி இருக்கும் பெண்களை விடவும் உடற்பயிற்சியில் ஈடுபடும் பெண்களின் உடலில் இன்சுலினின் செயற்பாடு ஒழுங்குமுறையாக இருப்பதும் இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.   ஆனால் உடல் பருமன் அதிகரிக்கும் போது ஹோர்மோன் தொழிற்பாட்டிலும் சீரின்மை ஏற்படலாம். இன்சுலின் சுரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டு நீரிழிவும் ஏற்பட முடியும். இவ்வாறான உபாதைகளை தவிர்ப்பதற்கும் உடற்பயிற்சி பெரிதும் உதவ முடியும்.   இவை இவ்வாறிருக்க, மன அழுத்தத்திற்கான ஹோர்மோன்கள் அதிகம் தூண்டப்படுமாயின் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும். இதற்கு இன்றைய பரபரப்பான வாழ்க்கை அமைப்பு பெரிதும் உதவக்கூடியதாகவே உள்ளது. ஆனால் அந்த வாழ்க்கை முறைமையிலிருந்து விடுபடுவதே ஆரோக்கியத்திற்கு உகப்பானதாக அமையும். ஏனெனில் மன அழுத்தத்திற்கான ஹோர்மோன் அதிகம் சுரக்குமாயின் உயர் குருதியழுத்தம், இதய துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படல், கவலை, பயம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும். அதனால் பரப்பான வாழ்க்கையமைப்பிலிருந்து வெளியேறி உள அமைதி மிக்க வாழ்க்கை அமைப்பில் ஈடுபடுவதே உடல், உள ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்ககூடியதாக இருக்கும்.   அதேநேரம் உடல், உள ஆரோக்கியத்திற்கு உகப்பான முறையில் ஹோர்மோன்கள் தொழிற்படவென உணவு பழக்கவழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கொழுப்பை உடலில் அதிகரிக்கக்கூடிய உணவு வகைகளை தவிர்த்துக் கொள்வதே நல்லது.   என்றாலும் சிலர் எந்நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்பர். மூன்று வேளை உணவுக்கு மேலதிகமாக இடையிடையே நொறுக்கு தீனி என சாப்பிட்டு கொண்டிருப்பர். இதன் விளைவாக உடல் பருமனாகி ஹோர்மோன்களிலும் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக மிகக் குறைவாக சாப்பிட்டால் போதுமானளவு சத்துகள் உடலுக்கு கிடைக்காமல் போகலாம். அதனால் ஒரு நாளைக்கு 1200 கலோரிகள் கொண்ட சத்தான உணவு வகைகளை சாப்பிட்டால் போதும். அதன் மூலம் உடலுக்கு தேவையான அளவு சக்தி கிடைக்கப்பெறும். அத்தோடு ஹோர்மோன்களின் சீரான தொழிற்பாட்டுக்கு ஏற்ப செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளவும் தவறக்கூடாது. அதன் மூலம் உடல், உள ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.  http://www.thinakaran.lk/2020/02/08/சுகாதாரம்/48079/ஹோர்மோன்களின்-தொழிற்பாடு-சீராக-இல்லாமைக்கான-காரணங்கள்
  • ஊரில முன்னம் திருவிழா சமயம், சும்மா ஒரு புரளிய கிளப்பி விடுவார்கள். 8ம் திருவிழாவுக்கு சின்னமணி வில்லுப்பாட்டாம் எண்டு. மொக்கு சனமும் சின்னமணியை கேட்கும் ஆவலில் களைகட்டும். இதோ வாறார். வண்ணார்பண்ணையை தாண்டீட்டார் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டிவிட்டு, 10:30 போல கார் சில்லு காற்றுப் போனதால் வரவில்லை என முடிப்பார்கள். எதிர்பார்த்து காத்திருந்த மொக்குக் கூட்டமும், ஆச்சோ, போச்சோ எனக் கூப்பாடு போட்டு விட்டு கலைந்து போகும். இப்பவும் அதே அணுகுமுறை நல்லா வேலை செய்யுது. உடம்பு வெளிநாட்டுக்கு வந்தாலும், மண்டை ஓட்டுக்குள் இருப்பது ஒட்டிசுட்டான் சரக்கெல்லே😂
  • கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்க முடியாது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரு முழுமையான பிரதேச செயலகம் ஆக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது  என தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.  கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக தமிழர் விடுதலை கூட்டணியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் பங்குபற்றலுடன்  கல்முனை பிரதேசத்தில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.  அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாங்கள்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிவில் சமூகம் அரசியல் பிரமுகர்களை சந்தித்துள்ளோம். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் விடயம் மிக நீண்டகாலமாக  பிரச்சினை. கடந்த அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு பல உறுதிமொழிகளை வழங்கி இருந்தது. ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை. இந்த அரசாங்கமும் தேர்தல் காலங்களில் கடந்த அரசாங்கத்தைப் போல் உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. அந்த உறுதிமொழியை கேட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என இன்றுவரை உறுதியாக நம்பி இருக்கின்றனர். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் ஆவலாக இருக்கின்றனர். ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்பதை நான் உறுதிபட நம்புகிறேன். அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரேயொரு தமிழ்ப் பிரதிநிதித்துவம் தான் வரக்கூடிய சாத்தியக்கூறு இருக்கின்றது. இதனை ஏனைய அனைத்து கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும் பிரிந்தால் வரப்போகின்ற ஒரே ஒரு பிரதிநித்துவத்தை கூட இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் இதனை அனைத்து தமிழ் கட்சிகளும் சிந்தித்து செயற்பட வேண்டும்.  சாய்ந்தமருதிற்கு மாநகர சபை வழங்கியிருப்பதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் முப்பது வருடங்களாக கோரிக்கையாக இருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இன்றுவரை ஒரு முழுமையான பிரதேச செயலகம் ஆக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். கருணா அம்மான் அவருக்கு இருக்கின்ற சக்தியை பிரயோகித்து அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொடுப்பாராக இருந்தால் நான் அவரைப் பாராட்டுவேன்.  அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இங்கு பிரதிநிதித்துவத்தை பெறுவதில் அனைத்து தரப்புடனும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் இல்லையேல் அதற்கும் முழுப் பொறுப்பு கூற வேண்டியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே என்றார். http://www.thinakaran.lk/2020/02/18/அரசியல்/48511/கல்முனை-வடக்கு-பிரதேச-செயலகத்துக்கு-எதிர்ப்பு-தெரிவிப்பதை-ஏற்க-முடியாது
  • வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம் தொனிப்பொருளில் பெண்களுக்கான வன்முறைகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்றவீடுகள், சமூகங்கள், நாடுகள், உலகை உருவாக்க எழுவோம் எனும் செயல்திட்டத்தின் பெண்களுக்கானவன்முறைகளை தடுக்கும் வகையில் வீதியோர ஓவியங்கள், பறையடித்தல், வீதி நாடகங்கள் மூலம் வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்புமாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (18)மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகாமையில் நடைபெற்றது. "வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்" தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சூர்யா பெண்கள் நிறுவனம், மூன்றாவது கண் அறிவுத்திறன் குழுவினர், வன்முறையற்ற வாழ்விக்கான ஓவிய குழுவினர், மாவட்ட பெண்கள் அமைப்புக்களின் குழுவினர், வன்முறையற்ற வாழ்வை விரும்பும் தனிநபர்கள்எனப் பலர்கலந்துகொண்டனர். (என்.ஹரன் - ஆலையடிவேம்பு சுழற்சி நிருபர்) http://www.thinakaran.lk/2020/02/18/உள்நாடு/48534/மட்டக்களப்பில்-வன்முறைகளை-தடுக்கும்-விழிப்புணர்வு
  • வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு -எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன், என்.ராஜ் யாழ்ப்பாணம், தொழில் நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தைக் கண்டித்தும் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் இன்று (18) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. தொழில் நுட்பக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முரண்பாடு வாய்த்தர்க்கமாக மாறி அடிதடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வாள்வெட்டுக் குழுவினர் சென்று கல்லூரியில் அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர். இதில், ஆசிரியர்கள் மூவர் காயமடைந்தனர். வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான சம்பவங்களால் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டிருந்தது. இந்த வன்முறைக் குழுவின் சம்பவங்களைக் கண்டித்தும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன் பாதுகாப்பை உறுதியப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுமே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாணவர்கள் மத்தியில் ஏற்படிருக்கும் அச்ச உணர்வைப் போக்கி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென, வடக்கு மாகாண ஆளுநர், பிரதிப் பொலிஸமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு மகஐரொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வாள்வெட்டு-சம்பவத்தை-கண்டித்து-கவனயீர்ப்பு/71-245695