Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பழுதான கைப்பேசியில் இழந்த தரவுகளை மீட்க..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

பழுதான கைப்பேசியில் இழந்த தரவுகளை மீட்க..

பழுதான கைப்பேசியிலூள்ள தொடர்பு எண்கள், மற்றும் பலதரப்பட்ட கோப்புகளை எப்படி மீளப் பெறுவது..?

திருத்தும் கடைகளுக்கு உங்கள் கைப்பேசியை எடுத்துச் சென்றால் அதைலுள்ள உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அவற்றை திருடி தவறான வழிகளில் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது..

இதை தவிர்க்க இணையத்தில் பல மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது.. அவற்றில் நான் சமீபத்தில் பயன்படுத்தியது dr.fone என்ற இந்த மென்பொருள்..

drfone-android-data-recovery-banner.jpg

 

கைப்பேசியின் உள்ளக சேமிப்பு செல்லிலிருந்து பத்திரமாக அனைத்து தகவல்களையும் மீட்டுவிட்டேன்.

பயன்படுத்தி பாருங்கள்!

கவனிக்க: கைப்பேசியின் உள்ளக மெமரியை ஃபார்மேட்(Format or Wipe) செய்யாமல் இருந்தால் மட்டுமே இந்த மென்பொருள் தரவுகளை மீட்டுத் தரும்.

டாக்டர் ஃபோன்

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைக்கப்படவில்லை! ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த செயலணியின் உறுப்பினர்களாக, பேராசிரியர் தயானந்த பண்டார, பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேத சிறிவர்த்தன, என். ஜி.சுஜீவ பண்டிதரத்ன, சட்டத்தரணி இரேஷ் செனெவிரத்ன, சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே, எரந்த நவரத்ன, பாணி வேவல, மௌலவி மொஹொமட், விரிவுரையாளர் மொஹொமட் இந்திகாப், கலீல் ரஹமான், அஸீஸ் நிசார்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த செயலணியின் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலணி உறுப்பினர்கள் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும், இறுதி அறிக்கையை 2022 பெப்ரவரி 28 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார். எவ்வாறிருப்பினும் இந்த செயலணியில் தமிழர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1246916
  • இலங்கையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடை? தடுப்பூசி செலுத்தியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயம் தொடர்பாக தெரிவித்தார். அதன்படி,  சில ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக பொது இடங்களுக்குள் பிரவேசிப்பதைக் கட்டுப்படுத்துவது போன்ற பலவந்த நடவடிக்கைகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையில் முடிவெடுக்க உரிமை உண்டு என்றபோதிலும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாமல் ஒருவரை ஆபத்தில் ஆழ்த்துவதை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் கூறினார். எனவே, எதிர்காலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளைச் செயற்படுத்த நிர்ப்பந்திக்கப்படலாம் என்றும் அவர் மேலும் கூறினார். செப்டம்பர் 15ஆம் திகதி முதல் தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி, செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பொது இடங்களுக்குச் செல்லும்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி அட்டையை எடுத்துச்செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் போதிய தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், எதிர்பார்த்தபடி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை அரசாங்கத்தால் முடிக்க முடியாததால், இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1246927
  • வாக்கு கேட்டு... ஊருக்குள் வந்தால், "மண்வெட்டி" பதிலளிக்கும் – விவசாயிகள் எச்சரிக்கை விவசாயம் குறித்து தெரியாத அமைச்சர் வாக்குகேட்டு ஊருக்குள் வந்தால் அவர்களுக்கு மண்வெட்டி பதிலளிக்கும் என வெலிமடை பிரதேச விவசாயிகள் எச்சரித்துள்ளனர். பதுளை – வெலிமடை விவசாயிகள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். தமது பொறுமைக்கும் எல்லை உண்டு என குறிப்பிட்ட விவசாயிகள் தற்போது பெரும்போகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும் விவசாயத்தை முன்னெடுக்க வழியில்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டனர். அமைச்சரினால் இரசாயன உரம் இன்றி விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்ட முடியுமா என்றும் அவர்கள் சவால் விடுத்தனர். இரசாயன உர பாவனைக்கு இலங்கையில் தடை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு உரத்தை வழங்குமாறு கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1246867
  • யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவு கூர்ந்து... பிரதமருக்கு பொப்பி மலர் அணிவிப்பு! இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரி மாளிகையில்   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு குறியீட்டு ரீதியாக பொப்பி மலரை அணிவித்தனர். உலகளாவிய ரீதியில் யுத்தத்தின் போது உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் உலக பொப்பி மலர் தினம் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதியாகும். கொரோனா தொற்று நிலைமை காரணமாக உலக பொப்பி மலர் தினத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மிகவும் எளிமையான முறையில் கொண்டாடுவதற்கு இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். பொப்பி மலர் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய் ஒவ்வொரு ஆண்டும் பிரதானமாக ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும். இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட வருடாந்த சஞ்சிகையான “Veteran” இதன்போது அச்சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உபுல் பெரேரா அவர்களினால்   பிரதமருக்கு வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வில்  அமைச்சர் ஜோன்ஸ்டன் பெரனாண்டோ, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், இலங்கை முன்னாள் பாதுகாப்பு பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உபுல் பெரேரா, உப தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) மஹிந்த அம்பன்பொல் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். https://athavannews.com/2021/1246906
  • தரம் குறைவான சீன உரத்தை நாட்டுக்குள் அனுமதிக்க இயலாது – அரசாங்கம் நட்பு நாடு என்பதற்காக தரம் குறைவான உரத்தை நாட்டுக்குள் அனுமதிக்க இயலாது என்பதை சீன அரசாங்கத்திற்கு தெளிவாக எடுத்து கூறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். சீன இரசாயன கப்பல் மீண்டும் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறித்து இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவில்லை என்றும் கூறினார். எவ்வாறிருப்பினும் தரத்தில் குறைவான குறித்த இரசாயன உரத்தைக் கொண்ட கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பது தடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார். வரலாற்று ரீதியில் இலங்கை – சீனா நட்பு நாடுகளாக இருந்தாலும் தரக்குறைவான பொருட்களை அங்கிருந்து இறக்குமதி செய்ய முடியாது என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். https://athavannews.com/2021/1246953
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.