Jump to content

ஆலமரமும் அழியாத ஞாபகமும்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஆலமரமும் அழியாத ஞாபகமும்

- சாந்தி நேசக்கரம் -

__________________________________

வேர்கட்டிய மண்ணின்
ஆழத்தை அழி(ரி)த்தது மழை.

ஊர்கட்டி வளர்த்த 
காலத்தின் க(வி)தை
இறுக்கம் தளர்ந்து
சரியத் தொடங்கியது.

வல்லியர் காலத்து வைரம் 
வசந்தம் காணாமல்
இரவடி(ழி)த்த
மழையின் பெயரால் 
பாறி வீழ்ந்தது.

எம்மூரின் பரம்பரை 
ஆல்விழுதின் கதை 
விடிய முதல் 
ஆயுள் முடிந்தது.

இருந்தவரை நிழல்
நாங்கள் ஊஞ்சலாட விழுது 
ஊர் மடியில் கனத்தோரின்
கதையறிந்து 
கண்ணீர் துடைத்த தோழமை.

சோளகக் காலம்
கால்நடைகள் உணவாக
ஆலிலைகள் தந்த 
உரம் பாய்ந்த மரம்.

எங்கள் பெரிய ஆலமரம்
ஓரிரவில் குடைசாய்ந்து
ஓய்ந்தது உயிர்.

பங்கு பிரித்து கோடரிகள்
பல்லாண்டுப் பலம் 
பக்கமக்கம் எல்லாம் 
பிரிந்து போனது
குளையாக விறகாக.

கூடு கட்டிய பறவைகள் 
இடம்பெயரும் கண்ணீரை
அறியாத மனிதர்களும்
ஒருநாள் இடம் பெயர்ந்தோம்.

பறவைகளின் துயரறியாக் 
கண்ணீர் போல 
உலகறியாத - எங்கள் 
துயர் வலிகள்
இன்னும் புரியாதவர்களாய்.

உலகெலாம் அலைகிறோம். 
வேர்களை அங்கங்கே நாட்டி
வந்த வழி மறந்து 
வாழ்கிறோம்.

பெருமையும் பேரமும் 
பேசியே தொலைகிறோம். 
அருமை என்பதன்
பெருமை அறியாப் 
பேதமைகளோடு.

19. 11. 2016

(என் கிராமத்தில் நான் வாழ்ந்த குறிச்சி பெயர் பத்தகல் சமாதி கோவிலடி.  எங்கள் குறிச்சியில் இருந்த வைரவர் கோவிலடியில் இருந்த பெரிய ஆலமரம் 88ம் ஆண்டு பெய்த பெருமழையில் பாறிவிழுந்தது. அந்த ஆலமரத்தின் நினைவில் இக்கவிதை. வல்லிபுரம் (வல்லியர்) எனது பூட்டனார். அந்த ஆலமரம் பற்றி பலகதைகளைச் சொல்லியிருக்கிறார்)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நினைவுக் கவிதை சகோதரி....!

இதை வாசித்துக் கொண்டு வரும்போது நான் நினைத்தேன், இந்த நாடுகளில் இப்படியான சம்பவங்கள் நேரும்போது யந்திரங்களின் துணையுடன் அதை மீண்டும் அந்த இடத்தில் நிறுத்தி விடுவார்கள் என்பதை....!  tw_blush:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கொரு ஆலமரம் அநேகமாய் நிக்கும்....அதிலை கட்டாயம் வைரவர் இல்லாட்டி முனியப்பர் இருப்பார்...
இருந்தாலும் கவிதை  இனத்தின் விடுதலையையும் அழிவையும் கண்முன்னே நிறுத்தி விட்டது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 ஒவ்வொரு   ஊருக்கும் ஒவ்வொரு பிரபலமான மரம் இருந்திருக்கும் புளியமரம் ஆல மரம் போன்றவை . சிலர்  அடையாளம் சொல்வதற்கும் அந்த மரத்தை குறிப்பிட்டு சொல்வார்கள் இந்த மரங்களின் வீழ்ச்சி  ஒரு வரலாறு கண்டதாயிருக்கும்.  இதன் கீழ் விலங்குகள் வழிப்போக்கர் உட்பட  பலரும் இளைப்பாறுவர்கள்.  இதன் வீழ்ச்சி ஒரு கெடட   சகுனமாக் கருதப்படும்.  ஊரின் நினைவுகளை சொல்லும் உங்கள் பதிவு அருமை. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, shanthy said:

உலகெலாம் அலைகிறோம். 
வேர்களை அங்கங்கே நாட்டி
வந்த வழி மறந்து 
வாழ்கிறோம்.

நாங்கள் தான் அலைகின்றோம்.பிள்ளைகளின் காலத்தில் வந்த வழி என்று இருக்காது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வேர்கள் அங்கும் விழுதுகள் இங்குமாய் வாழும் எம்மக்களின் நிலையைப் படம் பிடித்துக்காட்டும் உருவகக் கவிதையாய் இக் கவிதை என்னைச் சிந்திக்க வைக்கிறது. ஆலமரம் போல் வாழ்ந்த எம் குடும்பங்கள் சிதறி சின்னாபின்னமான பின் பங்காடப்பட்டு விட்டோம் அருமையான கவிதை நன்றிகள் சாந்தி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2018 at 5:03 AM, குமாரசாமி said:

ஊருக்கொரு ஆலமரம் அநேகமாய் நிக்கும்....அதிலை கட்டாயம் வைரவர் இல்லாட்டி முனியப்பர் இருப்பார்...

நான் இல்லை :11_blush:

ஆலமரம் தான் சாய்ந்தது கூடு கட்டி கூடி வாழ்ந்த பறவைகள் நிலமைதான் கண்டம் விட்டு கடல் கடந்து கரை தேடி சென்றுவிட்டன அக்காச்சிக்கு நேரம் இருக்குதோ எழுத  வாழ்த்துக்கள் நன்றாக இருக்கிறது 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நேரம்...சிந்திக்க வைத்த ஒரு கவிதை!

எங்கள் ஊரிலும் சந்தியில் ஒரு ஆலமரம் ஒன்று நின்றது!

அந்தச் சந்திக்குப் பெயரே...ஆலடிச் சந்தி என்று வந்து விட்டது!

ஊருக்குப் போன போது....அதைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சென்ற எனக்கு வெறும் ஏமாற்றம் தான் மிஞ்சியது!

பரந்து கிடந்த அதன் கிளைகள் எல்லாம் துண்டாடப் பட்டு.... தலைகளை இழந்து விட்ட இராவணனாய்.....அதன் முள்ளந்தண்டு மட்டும்....குற்றுயிருடன்..நின்று கொண்டிருந்தது!

ஒரு வேளை...இந்தப் பெருமரங்களும்...எங்கள் வாழ்வின் நிலையைப் பிரதி பலிக்கின்றனவோ...என்னவோ?

நன்றி....சாந்தி !

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா,   உங்கள் கவிதை 
எமக்கு அடிநாதமாயும், அரவணைப்பாயும் திகழ்ந்த லட்சியப் போராட்டம்  எப்படியெல்லாம் சிதைந்து , சின்னாபின்னமாகி மௌனமாகிப்போனதோ அதை மட்டுமே நினைவில் நிறுத்திப்  போனது...
 

Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரிலும் இரு ஆலமரங்கள் வீதியோரம் இருந்தன. இப்போது இரண்டும் இல்லை. ஆனால் பஸ் தரிப்பிடம் இப்போதும் ஆலடிச் சந்தி என்றுதான் அழைக்கின்றார்கள் என்றுதான் நினைக்கின்றேன்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.