• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ராசவன்னியன்

‘செயல்திட்டம்’தான்; ‘காவிரி மேலாண்மை வாரியம் அல்ல’ : உச்ச நீதிமன்றம் விளக்கம்.

Recommended Posts

‘செயல்திட்டம்’தான்; ‘காவிரி மேலாண்மை வாரியம் அல்ல’: 
உச்ச நீதிமன்றம் விளக்கம்!

புது தில்லி: காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் செயல்திட்டம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோமே தவிர, 'காவிரி மேலாண்மை வாரியம்' என்று கூறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மனுவை அடுத்த வாரம் ஏப்ரல் 9ம் தேதி திங்கட்கிழமை விசாரிப்பதாகக் கூறியுள்ளது.

தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்றே விசாரிக்கக் கோரிய நிலையில், அடுத்த வாரம் திங்கட்கிழமை விசாரணைக்கு ஏற்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

'தமிழகத்தின் நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது' என்று கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, 'தமிழகத்துக்கு உண்டான நீர் நிச்சயம் கிடைக்கும்' என்றும் உறுதி அளித்தார்.

இந்த மனு மீது, நீதிபதி ஒரு சில விளக்கங்களை அளித்தார். அதில், உச்ச நீதிமன்றம் வெளியிட்ட காவிரி தீர்ப்பில் 'செயல் திட்டம்' என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது, 'மேலாண்மை வாரியம்' என்று குறிப்பிடப்படவில்லை. காவிரி பிரச்னையை முழுமையாக தீர்ப்பதற்குரிய திட்டத்தை 'ஸ்கீம்' என்று குறிப்பிட்டோம். அதாவது, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒரு முழு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டதாக நீதிபதி விளக்கம் அளித்தார்.

மேலும், தமிழக அரசு தரப்பிடம், 'கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொடர்ந்துள்ள வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம். உங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த நீரின் அளவில் எந்த மாற்றமும் செய்யப்படாது. உங்களுக்கு உரிய நீர் நிச்சயம் கிடைக்கும்' என்று உறுதி அளித்தனர்.

இந்த நிலையில், 'தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்க வேண்டும் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே தீர்வாக இருக்கும்' என்று தமிழகம் கருதுகிறது. எனவே, தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் தேவையான ஆவணங்களை திரட்டி உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தத் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Topics

 • Posts

  • Das Coronavirus breitet sich in Deutschland weiter aus. Bundesweit gibt es derzeit 58.362 bestätigte Infektionen (Stand: 29. März, 3 Uhr), wie die Zahlen nach Recherchen von t-online.de zeigen. 455 Menschen sind gestorben. https://www.t-online.de/nachrichten/panorama/id_87419030/coronavirus-in-deutschland-gut-58-000-infizierte-live-karte.html ஜேர்மனியில்  58,362 பேர் கொரோனா  வைரஸ் தொற்றுக்கு  இலக்காகியுள்ளார்கள். 455 பேர் உயிரிழப்பு. ################    ############    ################## இவரின்... தற்கொலை. மிகவும் சோகமான நிகழ்வாக கருதப் படுகின்றது. மக்களின் தேவைகளை.... நிறைவேற்ற முடியாமல் உள்ளது என, மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார்.
  • மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 21ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2020) 22ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது.  இன்று முழு உலகமுமே ஒரு நெருக்கடியான காலத்திலும் பதட்டத்திலும் இருக்கின்ற இவ்வேளையில் எம் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இவ்வேளையில் யாழ் கள உறுப்பினர்களும் தம்முன் உள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து முன்மாதிரியாக செயற்பட வேண்டிக் கொள்கின்றோம். குறிப்பாக இணைக்கப்படும் மருத்துவக் குறிப்புகளினைக் கவனத்தில் கொண்டு அவைகள் இணைக்கப்பட வேண்டும். பெரும்பாலான செய்திகள் பணம் உழைக்கும் நோக்கில் பரபரப்பிலேயே வைத்திருக்கும் நோக்கில் வெளியிடப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் மத ரீதியான கருத்துக்களை வைக்கும் போது மத நம்பிக்கையுள்ளவர்களை புண்படுத்தாது கருத்துக்களை வையுங்கள். மதங்கள் ஆன்மீகம் சார்ந்து மக்களை அறநெறிப்படுத்தும் நோக்கம் கொண்டவையாயினும் சில மதப் பிரிவுகள் மக்களின் பலவீனத்தையும் அறியாமையையும் வைத்து பணம் சம்பாதிப்பதையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவதே நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை. எனினும் மத நம்பிக்கையுள்ளவர்களை காயப்படுத்தாது அவர்களது உணர்வுகளையும் மதித்து நடப்போம்.  யாழ் இணையம் 22 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளினைச் சிறப்பிக்கும் முகமாக முன்னைய வருடங்கள் போன்று யாழ் இணைய உறவுகள் பலரும் மிகவும் உற்சாகமாகச் சுயமான ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர்.  எல்லோருக்கும் பாராட்டுக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும்  நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். "நாமார்க்கும் குடியல்லோம்"  நன்றி யாழ் இணைய நிர்வாகம்
  • கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஜெர்மனி அமைச்சர். இது அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் (Thomas Schaefer). 54 வயதான இவர் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல், சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதற்கிடையே நேற்று முன் தினம்(சனிக்கிழமை) திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த 10 வருடங்களாக நிதித் தலைவராக இருந்த அவர், கடந்த சில மாதங்களாக, கொரோனவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிறுவனங்களுக்கும், அதன் தொழிலார்களுக்கும் இரவும் பகலுமாக உதவிக்கொண்டிருந்தார். https://www.thaarakam.com/news/120183 https://www.bloomberg.com/news/articles/2020-03-29/death-of-german-finance-official-linked-to-virus-crisis
  • பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து – பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ‘கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையில் அதிகளவானவர்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடுவது பொருத்தமற்றதொரு செயற்பாடாகும். அதனடிப்படையிலேயே பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தினையும் இரத்துச் செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், பரிசுத்த வாரமாக கடைப்பிடிக்கப்படும் இந்த வாரத்தில் திங்கள், வியாழன், பெரிய வெள்ளி, சனி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள விசேட ஆராதனைகள் அனைத்தும் தொலைக்காட்சி வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த ஆராதனைகளின் போது அனைத்து கத்தோலிக்கர்களும் வீடுகளில் இருந்தே தமது சமயக் கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்“ என அவர் வலியுறுத்தியுள்ளார். http://athavannews.com/பெரிய-வெள்ளி-மற்றும்-உயி/