• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

                                                                                                                           தங்கக் கூண்டு

 

     என் பெயர் எழில். பருவப் பெண்களுக்கே உரிய வாழ்க்கை பற்றிய கனவுகள் எனக்கும் உண்டு - பிரத்தியேகமாக எனக்கென்றே பிரம்மனால் படைத்து அனுப்பப்பட்ட தலைவன் வெண்புரவியில் வந்து சேருவான் போன்ற அதீதமான கற்பனைகள் தவிர. இந்த மாதிரியான கற்பனைகள் தோன்றாததற்குக் காரணம் பாழாய்ப் போன(!) வாசிப்புப் பழக்கமும், என் தந்தையாரால் நேர்முகமாகவும் நூல் முகமாகவும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவாளர்களின் சிந்தனைகளும் என்றே நினைக்கிறேன்.

 

     என் விருப்பம் போல் அறிவியலில் ஆய்வு மாணவியானேன். என் விருப்பம் போல் ஏனைய பிறவும் வாசித்துத் தள்ளினேன். எழுத்து பற்றி என்னுள் எழுந்த வேட்கை என்னை சிறு பத்திரிக்கைகளில் எழுத வைத்தது. சான்றாண்மை மிக்க ஒரு சிலரின் கேண்மை இப்பூவுலகில் எனக்குக் கிடைத்த வரம். என் ஆரம்ப எழுத்துக்களை அவர்களிடம் வாசிக்க அளித்தேன். "அட ! உனக்கு எழுத்து நல்லாத்தான் வருது. உனக்கே உரிய அந்த அங்கத நடையுடன் நீ எழுத்துலகில் வீறு நடை போடலாம், வா !" என அவர்கள் பெரிய மனதுடன் வரவேற்புரை நல்கியது தேவர்கள் என் மீது சொரிந்த பூமாரி. அவர்கள் தூண்டுகோலாக நான் எழுதுகோல் ஆனேன். அவர்கள் ஆசியுடன் என் முதல் கட்டுரைத் தொகுப்பு புத்தகமாய் வெளிவந்த போது தரையிலிருந்து சிறிது எழுந்து காற்றில் மிதந்தது போன்ற உணர்வு. எழுத்துலகில் இன்னும் சரியாக காலே பதிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் தடம் பதிக்க வேண்டும் என்ற கனவு உண்டு. இது நியாயமான கனவுதானே ! வெண்புரவிக் கனவு ஒன்றும் இல்லையே !

 

     வருடம் என்று ஒன்று உண்டு. வயது என்று ஒன்று உண்டு. காலாகாலத்தில் நடப்பவை நடக்க வேண்டும் என்று ஒன்று உண்டு. அம்மா, அப்பா, ஆச்சி, சித்தி, சித்தப்பா  எல்லோரும் எனக்கான அந்த வெண்புரவித் தலைவனைத் தேட ஆரம்பித்தார்கள். இக்காலத்தில் ஐவகை நிலங்களில் சென்றா தேட வேண்டும் ? இணையத்தில்தானே இணையைக் கண்டெடுக்க வேண்டும் ! கணினித் திரையில் குதிரைப் பந்தயத்தில் எத்தனையோ புரவிகள் ஓடின. நாங்கள் என்னதான் சுமாராயிருந்தாலும் எங்களுக்கும் கற்பனை வளங்களும் தெரிவுகளும் இருக்காதா என்ன !

 

     வீட்டுக்கே வந்து பெண்ணையோ பையனையோ பார்ப்பது இப்போதெல்லாம் கடைசிக் கட்டம்தான் என்றாலும், அருகாமையில் இருந்த காரணத்தால் ஒரு மாப்பிள்ளை வீட்டார் தயக்கத்துடன் அனுமதி கேட்டு நேரில் வந்தனர். இயற்கையின் விதியாக நானும் உயர் நடுத்தர வர்க்கத்தில் பிறந்திருந்தாலும், வந்தவர்கள் பெரும் வணிகச் சமூகத்தைச் சார்ந்த, பொருளாதாரத்தில் மிகவும் உயர் வகுப்பினர்; வேடிக்கையாக வியாபாரக் காந்தம் என்பார்களே, அக்காந்த சக்தி படைத்தவர்கள். ஆனால் அதற்கான பகட்டு எதுவுமின்றி எளிமையாகத்தான் பேசினார்கள், பழகினார்கள். இதையெல்லாம் பார்க்கும் போதுதான் மனித சமூகமும் நாகரிகமடைய முயல்கிறது என்ற ஐயம் ஏற்படுகிறது. அம்முயற்சி உண்மையானால் மகிழ்ச்சியே !

 

     பையனின் பெற்றோருக்கும் உற்றோருக்கும் பிடித்துப் போயிருக்க வேண்டும். அதனால்தான் அவர்களின் ஒரே நிபந்தனையான "பெண் வேலைக்குச் செல்லக் கூடாது" என்பதை வெளியிட்டனர். என் பக்கத்தில் யாரும் சரியென்று தலையை ஆட்டவில்லை. பார்த்துவிட்டுச் சென்றவர்கள் சுமார் பத்து நாட்கள் கழித்து, பையனும் பெண்ணும் பார்த்து பேசிக் கொள்ளலாமா எனக் கேட்டனர். "கண்டிப்பாக அவர்கள் பார்க்கத்தான் வேண்டும், பேசத்தான் வேண்டும். இருவரின் தலைக்கு மேலேயும் பல்பு எரிந்தால் மட்டுமே நாம் மேற்கொண்டு தொடர முடியும். நீங்கள் தாராளமாய் அழைத்து வரலாம்" என என் அப்பா - அம்மா பச்சைக் கொடி காட்டினார்கள். அந்த நாளும் வந்தது. முதன் முதலாக என்னைப் பார்க்க வந்த பையனுடன் பேசப் போகிறேன் என்ற திகிலோ, பரபரப்போ, பரவசமோ என்னிடம் இல்லை. என் வயதையொத்தவர்களை விட அறிவுலகில் வலம் வருகிறவர்களிடம் என் அப்பாவின் மூலமாக ஏற்பட்ட நட்பின் விளைவாக இருக்கலாம். ஆனாலும் பருவப் பெண்ணுக்கே உரிய அச்சம், மடம், நாணம் எதுவும் இல்லாமல் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். பையனின் நிழற்படத்தைப் பார்த்த போது என் தலைக்கு மேல் மங்கலாக எரிந்த பல்பு, நேரில் பார்த்த போது பிரகாசமாய் எரிந்தது.

 

     சற்றுத் தூரத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். அவரே தொடங்கினார் (என்னது ! 'பையன்' என்பதிலிருந்து மாறி 'அவர்' என்று ஆனது பல்பின் மகிமையோ!), "நீ வேலைக்குச் செல்வதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்களைப் போன்ற பெருவணிகச் சமூகத்தில் வழக்கமில்லை. மேலும் அம்மா-அப்பா விரும்பாத போது அவ்வழக்கத்தை ஏன் மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். நீ யோசித்துக் கொள். தற்போது உன் ஆய்வுப் படிப்பு முடிவடையும் வரை நீ தொடர்வதில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை. மற்றபடி பொதுவான விஷயங்களில் நம் ஆர்வம், விருப்பம் எனப் பேசலாமே" என்றார். பேசினோம். நன்றாகப் பேசினோம். அவரது தோற்றம் மட்டுமல்ல, எளிமையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் ஏதோ ஒன்று உறுத்தியது. வணிகச் சமூகத்தில் உள்ள உறவினர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன், "நாம் யாரோ ஒருவருக்குத் தலைவணங்கி வேலை பார்ப்பதை விட சுயதொழிலில் 'நானே வேலைக்காரன், நானே முதலாளி' என்றிருக்கலாமே!" அந்த உறவினரை அடுத்த முறை பார்க்கும் போது கேட்க வேண்டும், "நம் பெற்றோர்க்குத் தலை வணங்குவதும் அவர்களின் பொற்பாதங்களை நம் தலையில் தாங்குவதும் நாம் பெற்ற பேறு. ஆனால் உங்கள் நிறுவனத்துக்கு முதலாளிகளாய்ப் போன ஒரே காரணத்திற்காக உங்கள் பெற்றோர் முன் உங்கள் ஆசைகளைக் காலில் போட்டு மிதிக்கவில்லையா?  அவர்களின் விருப்பு வெறுப்பிற்கு முன் நீங்கள் தலை வணங்கவில்லையா? இதைத்தானே நிலவுடைமைச் சமூகத்தில் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த பிள்ளைகளும் செய்தார்கள்?"

 

     அதே சமயம் மாமனார் - மாமியார் என அனைவரும் சேர்ந்து வாழ்வதை விடுத்து தனித்தனியாய் வாழும் வாழ்க்கையிலும் எனக்கு விருப்பமில்லை. அனைத்து வகையான வாழ்க்கை முறைகளிலும் சிறந்த விஷயங்கள் அத்தனைக்கும் ஆசைப்படும் பேராசைக்காரி நான். கூடி வாழ வேண்டும். நியாயமான என் சுதந்திரமும் ஆசைகளும் பறிபோகக் கூடாது. இந்தச் சமூகத்திற்கானவள் நான் என்று ஊட்டி வளர்க்கப்பட்ட நான் நான்கு சுவற்றுக்குள் (எவ்வளவு பெரிய பங்களாவானாலும் நான்கு சுவர்கள்தானே !) எப்படி என்னைச் சுருக்கிக் கொள்வது ? என்னிடமுள்ள இன்னும் முழுமையடையாத சில திறமைகளுக்கே என்னைக் கொண்டாடும் சமூகத்தை விடுத்து வேறு எங்கோ எப்படிக் காணாமல் போவது? வெளியிற் சென்று வேலை பார்க்கும் எண்ணத்தை நான் உதறினாலும் கூட, அருகிலுள்ள என் தாய் வீடு செல்வதற்குக் கூட இவர்களிடம் கைகட்டி நிற்க வேண்டுமோ? அந்தப் பள்ளி அரங்கில் நடக்கும் நிகழ்வு ஒன்றிற்கு அ.மார்க்ஸ், சுப.உதயகுமார் ஆகியோர் பேச வருகிறார்கள். அங்கு செல்வதற்கும் இவர்கள் தயவை நாட வேண்டுமோ? மண வாழ்க்கை என்று ஒரு சாதாரண விஷயத்திற்காக என் அடையாளத்தையே நான் தொலைக்க வேண்டுமோ? மனித குல நீட்சிக்கு நான் ஒருத்தி பங்களிக்கா விட்டால் குடியா முழுகிப் போகும்? இவர்கள் தேடும் பெண் நான் இல்லையோ? இது போன்ற இனம் புரியாத பயம் அனைத்தும் என் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

 

     இனிய சம்பிரதாயங்களுடன் பெண் (பெண்ணும் ஆணும்) பார்க்கும் படலம் நிறைவு பெற்றது. பெண்ணுக்கும் பையனுக்கும் ஒருவரையொருவர் மிகவும் பிடித்திருக்கிறது. பெண் வீட்டாருக்கும் பிள்ளை வீட்டாருக்கும் மகிழ்ச்சியே. ஆனாலும் இத்திருமணம் நிகழும் வாய்ப்பு மிகவும் குறைவு. என்ன ஒரு நகைமுரண் ! அவர்களின் மரபு சார்ந்து ஒரு நிபந்தனையில் உறுதியாய் இருப்பதைத் தவிர மற்றபடி மாப்பிள்ளை வீட்டார் நல்ல குணமுடையவர்கள்; அவர்களின் மூத்த மருமகளைப் போல என்னையும் மகாராணி போல் வைத்துக் கொள்வார்கள் என்று எனக்கு மட்டுமல்ல, என் பெற்றோர் உற்றோர்க்கும் தோன்றியது. நாங்கள் கண்டவையும் கேட்டவையும் இதனை உறுதிப்படுத்தின. எனக்கு அவர்கள் வீட்டில் ஒரு தங்கக் கூண்டு தயாராய் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். கூண்டு கூண்டுதானே ! அதில் தங்கமென்ன ? இரும்பென்ன ?

 

     வீட்டு மாடியில் எனது அறையைத் திறந்து மின்விசிறியைச் சுழலவிட்டேன். அப்போது செல்பேசி ஒலிக்க அதில் கவனமானேன். ஜன்னல் கதவுகளை என் ஆச்சி அடைத்திருந்ததை உணரவில்லை. சாளரத்தில் கூடு கட்டி வாழ்ந்திருந்த குருவி கூட்டை விட்டு வந்து, வெளியே போக வழி தெரியாமல் சுற்றியது. செல்பேசியின் கவனத்தில் குருவியின் மீது மனம் செல்லவில்லை. திடீரென்று மின்விசிறியில் அடிபட்ட குருவி தொப்பென்று விழுந்தது. பஞ்சைப் போல அதன் இறகுகள் உதிர்ந்து நாலாபுறமும் பறந்தன. அந்தக் கோரக் காட்சியில் அதிர்ச்சியில் உறைந்து செல்பேசியைத் துண்டித்தேன். ஐயோ ! அந்த அறையை என்னுடன் பகிர்ந்த அந்தக் குருவி இனியில்லை. அதன் சிவந்த வால் என் கண்ணில் ஆடியது. செல்பேசி டவரால்தான் சிட்டுக்குருவி காணாமல் போனது என்பார்கள். இன்று என் செல்பேசியால் இந்த சிகப்பு வால் குருவி இவ்வுலகை விட்டுப் போனது என்ன ஓர் அவலக் குறியீடு? உயிர்த்தோழி சுதாவை (அதே நாசமாய்ப் போகிற) செல்பேசியில் அழைத்து அழுது தீர்த்தேன். "அழாதேமா ! நீ வேண்டுமென்றா சாகடித்தாய்? அதன் விதி அவ்வளவுதான்" எனத் தேற்ற முயன்றாள். அப்புறம்தான் அந்த மாப்பிள்ளை வந்து போன விஷயத்தைச் சொன்னேன். அதற்கும் பதில் தயாராய் வைத்திருந்தாள். "அது ஒரு பெரிய விஷயமில்லை. அதற்காக மறுக்காதே. திருமணத்திற்குப் பின் உன் இயல்பைப் பார்த்து அவர்களே மகிழ்ந்து மனம் மாறிவிடுவார்கள்". "இல்லை, சுதா ! நானும் ஏமாற வேண்டாம். அவர்களும் ஏமாற வேண்டாம். நானோ அவர்களோ ஏன் மாற வேண்டும்?" கனத்த இதயத்தோடு இதை நான் சொல்லும் போது என் மனக்கண்ணிலும் வெண்புரவி தோன்றியது. ஆனால் பின்னோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் குருவிக்கே வந்தேன், "நாளைக் காலையில் நான் விழிக்கும் போது அந்தக் குருவி இருக்காதே !" துக்கத்தில் தொண்டை அடைக்க பேச்சு வராது என்பார்கள். எனக்கு என் மூச்சான தமிழே வரவில்லை. "The sparrow has vacated its room" முனங்கினேன். மீண்டும் சுதா, "விடு எழில் ! வேறு குருவி வரும்............ வேறு மாப்பிள்ளையும் வருவான்". 

 

 

                                                                                                                                                                                                                                                                      - சுப.சோமசுந்தரம் 

 • Like 10

Share this post


Link to post
Share on other sites

 வணக்கம் சுப. சோம சுந்தரம் யாழ் களத்துக்கு இனிய நல்வரவு . 

அரிச்சுவடியிலேயே  அழகான முற்போக்கான ஒரு சிறுகதையுடன் வந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.  கதைக்காக   வேறுபகுதி இருக்கிறது அங்கு உங்கள் பகிர்வை நகர்தினால்  நன்று அல்லது நிர்வாகத்தினரைக் கேட்கலாம்  மேலும் உங்கள் பதிவுகள்  அதிகம் வரவேண்டும் .தொடர்ந்து இணைந்து இருங்கள்.   . 

Share this post


Link to post
Share on other sites

தோழர் நிலாமதி அவர்களுக்கு நன்றி. தங்கள் ஊக்கம் என் எழுத்துக்கு ஆக்கம் தரும். சமூகச் சாளரம் என்னும் பகுதியில் இக்கதையைப் பதிவிட அனுமதி கேட்டுள்ளேன். தங்கள் கருத்துப்படி இனி சிறுகதை எனில் 'கதை கதையாம்' பிரிவில் வெளியிடுகிறேன். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்...சுப சோமசுந்தரம்!

தங்கள் வரவு நல்வரவாகட்டும்!

சிட்டுக்குருவியின் இறப்பைப் பற்றி...அதிகம் கவலைப்படாதீர்கள்!

நாளை....அது இன்னொன்றாக உருவெடுக்கும்!

அழிந்தது அதன் சூக்கும உடல் மட்டும் தான்.....!

இன்னொரு சிட்டுக்குருவியை....அதே இடத்தில் குடியேற்றுங்கள்!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் வரும்போதே படைப்போடு வருகிறீர்கள் 
நல்வரவு ஆகட்டும் 

Share this post


Link to post
Share on other sites

'யாழ்' உலகினுள்  எனக்கு நல்வரவு கூறிய மற்றும் கூறப்போகும் நல்லுள்ளங்களுக்கு பெருநன்றி. இத்தனைக் காலம் இவ்வரிய நல்லுலகத்தை அறியாத இருளில் இருந்தமைக்கு வருந்துகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் சுப. சோமசுந்தரம் .

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, nunavilan said:

வணக்கம் சுப. சோமசுந்தரம் .

வணக்கம் நவிலன். யாழில் உங்களைக் கண்டது மகிழ்ச்சி.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம். வாருங்கள் சோமசுந்தரம்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, இணையவன் said:

வணக்கம். வாருங்கள் சோமசுந்தரம்.

வணக்கம் இணையவன். மகிழ்ச்சி.

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையம் தன் இருபதாவது அகவையைப் பூர்த்திசெய்த இந்த இனிய தருணத்தில் இணைந்து முதல் கதையை அசத்தலாகத் தந்திருக்கும் சுப.சோமசுந்தரத்தை வாழ்த்தி வரவேற்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

சு.ப.சோ.அழகாக கதை சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

இன்னும் சொல்லுங்கள்.

Share this post


Link to post
Share on other sites
24 minutes ago, Kavallur Kanmani said:

யாழ் இணையம் தன் இருபதாவது அகவையைப் பூர்த்திசெய்த இந்த இனிய தருணத்தில் இணைந்து முதல் கதையை அசத்தலாகத் தந்திருக்கும் சுப.சோமசுந்தரத்தை வாழ்த்தி வரவேற்கின்றோம்.

நன்றி.

21 minutes ago, Kavi arunasalam said:

சு.ப.சோ.அழகாக கதை சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

இன்னும் சொல்லுங்கள்.

சொல்வேன். பேசுவோம்.நன்றி.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் சோமா....உங்கள் வரவு நல்வரவாகட்டும்..

Share this post


Link to post
Share on other sites

நன்றி, தோழர் புத்தன் மற்றும் அபராஜிதன்.

Edited by சுப.சோமசுந்தரம்
இருவருக்கும் நன்றி சொல்ல.

Share this post


Link to post
Share on other sites

வரும்பொழுதே அழகான கதையுடன் வந்திருக்கிறீர்கள் இப்போதுதான் பொறுமையாக வாசித்தேன், அருமையாக இருக்கின்றது. தொடர்ந்து நிறைய எழுதுங்கள் சுப.சோமசுந்தரம்.....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites
On 9/4/2018 at 3:21 PM, suvy said:

வரும்பொழுதே அழகான கதையுடன் வந்திருக்கிறீர்கள் இப்போதுதான் பொறுமையாக வாசித்தேன், அருமையாக இருக்கின்றது. தொடர்ந்து நிறைய எழுதுங்கள் சுப.சோமசுந்தரம்.....!  tw_blush:

 தோழர் சுவி அவர்களுக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites
Quote

கூண்டு கூண்டுதானே ! அதில் தங்கமென்ன ? இரும்பென்ன ?

நல்லதோர் கதை.

பழக்கவழக்கம், பண்பாடு என்று சொல்லியே பழமையைப் பேணுவது ஒரு உத்திதான். காலாவதியான பெறுமதிகளை கைவிட்டு புதியவற்றை பற்றிக்கொள்ளுவதுதான் நாகரீக முன்னேற்றமாக இருக்கும்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • சைக்கோ (2020) – கொடூரத்தின் மீதான ‘ஆன்மீக’ விசாரணை       ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் திரைப்படம் வெளியானால் போதும், ‘பிடித்தது, பிடிக்கவில்லை’ என்று இரு நேரிடை கோஷ்டிகள் தன்னிச்சையாக உருகி சமூகவலைத்தளங்களில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆவேசமாக மோதிக் கொள்கின்றன. ‘படம் மொக்கை.. உனக்கு எப்படிடா பிடிச்சது.. என்று ஒரு தரப்பும் ‘படம் உன்னதம். உனக்குப் பிடிக்கலைன்னா.. பொத்திட்டு போ..’ என்று அதற்கு இன்னொரு தரப்பு பதில் சொல்வதும் என பல ரகளையான காமெடிகள் அரங்கேறுகின்றன. 'சைக்கோ' திரைப்படத்திற்கும் இது நடந்து கொண்டிருக்கிறது. ‘இயக்குநரே ஒரு சைக்கோதான்’ என்கிற நகைச்சுவையான உளப்பகுப்பாய்வு முதல் ‘சைக்கோங்களுக்கு இந்தப் படம் பிடிக்காதுதான்’ என்பது வரை பல சிறுமைத்தனமான அவதூறுகள் எழுதப்படுகின்றன. ‘சைக்கோ’ என்கிற வார்த்தைக்குப் பின்னுள்ள கனத்தை அறிந்தவர்கள், எளிதாக கல்லெறிவது போல அந்த வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள். அதன் பின்னுள்ள வாதையும் வேதனையும் சொல்லில் அடங்காதது. ‘அவரவர் ரசனை, புரிதல், அனுபவம் அவரவர்க்கு’ என்கிற முதிர்ச்சியான கலாசாரத்தை நோக்கி நாம் எப்போது நகர்வோம் என்று தெரியவில்லை. ‘ஒரு திரைப்படத்தைப் பற்றிய முதிர்ச்சியான உரையாடல்களை நிகழ்த்துவது என்பது வேறு, என் மதிப்பீடுதான் சிறந்தது’ என்று குடுமிப்பிடி சண்டையிட்டுக் கொள்வது வேறு. இரண்டாவதுதான் அதிகம் நிகழ்கிறது. ** புத்தரின் வாழ்க்கையில் கடந்து போன அங்குலிமாலா என்பவரைப் பற்றிய ஒரு கதை அல்லது வரலாறு (சமயங்களில் இரண்டும் ஒன்றுதானே?!) உண்டு. இணையத்தில் தேடி வாசித்துக் கொள்ளுங்கள். ‘இதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன்’ என்று ஒரு நேர்காணலில் மிஷ்கின் சொன்னார். படத்தைப் புரிந்து கொள்ள இந்தக் குறிப்பு  மிக அவசியமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். கதைகளை நேரடியாக அப்படியே புரிந்து கொள்வதைப் போன்ற அபத்தம் இருக்கவே முடியாது. அது குழந்தைகள் தங்களின் அறியாப்பருவத்தில் செய்யும் விஷயம். ‘காக்கா எப்படி குடுவைல கல்லைப் போடும்?” என்று பெரியவர்களான பின்னரும் கேட்டுக் கொண்டிருப்பது அறியாமை. நுட்பமான புனைவுகளை அப்படியே நடைமுறை இயல்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அதுவொரு தனியான உலகம். அதைச் சரியாகப் புரிந்து கொள்ள எழுதியவனுக்கு மட்டுமல்ல, வாசகனுக்கும் நல்ல கற்பனை வளம் வேண்டும். ஒரு நல்ல புனைவு என்பது பல்வேறு உருவகங்கள், குறியீடுகள், புதிர்ப்பாதைகள் என்று பல வழிகளைக் கொண்டிருக்கும். ஆழமானதொரு மையத்தை மறைமுகமாக உணர்த்த விரும்பும். அந்தப் பயணத்தின் வழியே சென்றால் குறிப்பிட்ட புனைவின் ஆன்மாவை அடைய முடியும். அங்குலிமாலா கதையின் மையமும் அதுதான். ஒரு ஞானியால் தன் தூய வெளிச்சத்தின் மூலம் கரிய இருளை அகற்ற முடியும். தன் அன்பால், ஞானத்தால், சகிப்புத்தன்மையால் ஒரு கொடூரனை புத்தர் மனம் மாற்றிய கதை அது. இந்த மையத்தையே தன் பிரத்யேக திரைமொழியில் சொல்ல விரும்புகிறார் மிஷ்கின். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் இதிலுள்ள தர்க்கப் பிழைகளை அதிகம் நோண்டிக் கொண்டிருக்க மனம் வராது. அது அவசியமுமில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.  “கொலை நிகழும் இடங்களில் சிசிடிவி காமிரா இருக்காதா?” என்பது முதற்கொண்டு இத்திரைப்படம் தொடர்பாக எழும் பல கேள்விகள், தர்க்கப்பிழைகள் போன்றவை  இதை இயக்கிய மிஷ்கினுக்குள்ளும் எழாமலா இருந்திருக்கும்? அந்தச் சந்தேகத்தின் பலனை அளிக்க நாம் தயாராகவே இல்லையா? தன் திரைப்படங்களை தனித்துவமாக உருவாக்க விரும்புகிற ஒரு படைப்பாளி, தன்னுடைய பாணியில் ஒரு பிரத்யேகமான உலகை உருவாக்குகிறார். அதில் அவர் காட்டுகிற சித்திரங்களுக்கு முன்னும் பின்னும் ஆயிரம் விஷயங்கள் நடந்திருக்கக்கூடும். அந்த இடைவெளிகளை ஒரு புத்திசாலியான பார்வையாளன் தன்னிச்சையாக இட்டு நிரப்பிக் கொள்வான் என்கிற துணிச்சலான அனுமானத்தில் அவர் அந்த இடைவெளிகளை விட்டுச் செல்கிறார். ஒரு படைப்பை உருவாக்குகிறவனுக்கும் அதை நுகர்கிறவனுக்கும் உள்ள பரஸ்பர புரிதலும் பகடையாட்டமும்தான் அந்த அனுபவத்தை இன்னமும் உன்னதமாக்குகிறது.  திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிற சிசிடிவி உதாரணத்தையே எடுத்துக் கொள்வோமே! சமகால கண்காணிப்பு சமூகத்தில் எங்கெங்கு காணினும் காமிராக்கள் இருக்கத்தான் செய்கின்றன?! எனில் நடக்கின்ற குற்றங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விடுகிறார்களா? இல்லைதானே? ‘நம்மளை விட சைக்கோ அதிக புத்திசாலி சார்’ என்றொரு வசனம் இந்தப் படத்தில் வருகிறது. காவல்துறை அதிகாரியினாலேயே அது சொல்லப்படுகிறது. எனில் தன் புத்திக்கூர்மையை வைத்து அதற்கேற்ப சாதகமான சூழலை அவன் அமைத்துக் கொண்டான் அல்லது தற்செயல் அதிர்ஷ்டங்கள் அவனுக்குத் துணை புரிந்தன என்கிற கற்பனையை ஏன் நம்மால் மேற்கொள்ள முடியவில்லை? இப்படி தர்க்கப்பிழைகளை நோண்டி கண்டுபிடிக்கும் சமயத்தில் நம் கண் முன்னாலேயே பல உன்னதமான சித்திரங்கள் திரைப்படத்தில் நழுவிக் கொண்டிருக்கும் அபத்தம் நமக்கு உறைக்கவேயில்லையா? இந்தத் திரைப்படம் குறித்து என் பார்வையிலும் சில போதாமைகளும் சந்தேகங்களும் இருக்கத்தான் செய்தன. இயக்குநரின் நோக்கில் அதற்கு விடைகள் இருக்கலாம். இவற்றிற்குப் பின்னர் வருகிறேன். ஆனால் இந்தப் போதாமைகளைக் கொண்டு நிச்சயம் இந்தப் படத்தை நான் 'ஹெஹ்ஹே' என்று கெக்கலி கொட்டி நிராகரிக்க மாட்டேன். ஏனெனில் பெரும்பாலும் குப்பைகள் நிறைந்திருக்கும் தமிழ் சினிமாவில் தனித்துவமாக செயல்படுகிற ஒரு சில படைப்பாளிகளையும் நாம் அவமதித்து, மலினப்படுத்தி நிராகரிப்பதைப் போன்ற அபத்தம் இருக்கவே முடியாது. ** இந்தத் திரைப்படத்திலுள்ள உன்னதமான விஷயங்களை முதலில் பார்த்து விடுவோம். தொழில் நுட்பங்களை கையாண்டவர்களின் வரிசையில் நான் முதலில் கைகுலுக்க விரும்புவது ஒளிப்பதிவாளரிடம். தன்விர் மிர் மிரட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கொலையாளி தான் கடத்தி வந்த இளம் பெண்ணை பலிபீடத்தில் கிடத்தி வெட்டுவதற்கான முனைப்புகளை செய்கிறான். வேகமான உடல் அசைவுடனும் அதற்கு எதிர்மாறாக நிதானமான முகபாவத்துடனும் அவன் இந்தக் காரியத்தை செய்யும் போது அவனுடன் காமிரா சுழன்றடிக்கும் காட்சி ஒன்றே போதும், தன்விரின் மேதமையைச் சொல்ல. கொலையாளியின் உளக்கொதிப்பை காமிரா மிகத் துல்லியமாக பிரதிபலித்திருக்கிறது என்றே என்னால் கற்பனை செய்ய முடிந்தது. இது போல் பல காட்சிகளை உதாரணம் சொல்ல முடியும். மெழுகுவர்த்தி வெளிச்சத்தின் பின்னணியில் மேரிமாதாவின் பின்புலத்துடன் வருகிற அந்த பிரத்யேகமான காட்சிக்கோர்வையை உன்னதம் என்றே சொல்ல வேண்டும். எடிட்டிங்கும் பல இடங்களில் மிக அபாரமான தன் பணியைச் செய்திருக்கிறது. அடுத்ததாக இளையராஜா. எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ‘குற்றமே தண்டனை’ போன்ற திரைப்படங்களில் இளையராஜாவின் இசை அநாவசியமான இடங்களிலும் மிகையாக ஒலித்துக் கொண்டே இருந்ததாக நான் உணர்ந்தேன். “முன்னணி இசை’ என்று டைட்டில் கார்டில் குறிப்பு போட்டு மிஷ்கின் இதை ‘ரொமான்டிசைஸ்’ செய்ததும் அப்போது எனக்கு நகைப்புக்குரியதாக இருந்தது. (அந்தச் சமயத்தில் இவற்றையெல்லாம் எழுதி பல ராஜா ரசிகர்களின் பகைமையை வேறு சம்பாதித்துக் கொண்டேன்). ஆனால் இந்தத் திரைப்படத்தில் இளையராஜா ஓர் அற்புதமான மாயத்தை நிகழ்த்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அமைதியாகச் செல்ல வேண்டிய இடங்களில் மெளனத்தை நிரப்பியது ஓர் ஆச்சரியம் என்றால் பரபரப்பான தருணங்களில் ஓர் அருவி போல இசை ஆவேசமாக மேலே எழுந்து அடங்கும் பாணியானது காட்சியின் சுவாரசியத்தைக் கூட்டியதை வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்தேன். எந்தவொரு இடத்திலும் பின்னணி இசையை நான் இடையூறாக உணரவே இல்லை. மூன்று பாடல்களுமே அட்டகாசம். ‘உன்னை நெனச்சு..நெனச்சு’ ஏற்கெனவே ஹிட் ஆகி பலரின் இதயத்தை உருக்கிக் கொண்டிருக்கிறது. இது படமான விதம், என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு இருந்தது. (சிங்கம்புலி எப்போதுமே என்னை எரிச்சலூட்டக்கூடிய ஒரு நகைச்சுவை நடிகர். ஆனால் இந்தப் பாடலின் சில கணங்களில் அவர் தருகிற முகபாவம் அத்தனை அற்புதமாக இருந்தது. கீழேயுள்ள படத்தைக் கவனியுங்கள்.   ‘தாய் மடியில்’ பாடலுக்கு கைலேஷ் கேர்’ரின் குரலை உபயோகித்தது நல்ல தேர்வு. அவரின் கரகரப்பான குரல்தான் இந்தப் பாடலின் அடிப்படை வசீகரமே. பாடல்கள் உருவானதில் மிஷ்கினின் பங்களிப்பும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். ‘வெளியே போடா’ன்னு பல சமயங்கள்ல என்னை ராஜா துரத்திடுவாரு. இருந்தாலும் கேட்டு கேட்டு இந்த விஷயங்களை வாங்கினேன்” என்று நேர்காணல்களில் சொல்கிறார் மிஷ்கின். போலவே இந்தத் திரைப்படத்தின் ‘சவுண்ட் டிசைனிங்கும்’ அட்டகாசம். இதற்காகவே இது நல்ல ஒலியமைப்பு உள்ள அரங்கத்தில் பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது. இல்லையெனில் இந்த அனுபவத்தை நிச்சயம் இழப்போம். ** டிரைய்லரைக் கண்டபிறகு உதய்நிதியின் மீது எனக்கு கூடுதல் அவநம்பிக்கையாக இருந்தது. மிஷ்கின் படத்தின் கனத்தை அவர் தாங்குவாரா என்பது குறித்து. பல காட்சிகளில் குளோசப் இல்லாமல், கூலிங்கிளாஸ் போட்டு  அவர் சமாளித்து விட்டாலும் (அல்லது மிஷ்கினின் உதவியுடன் சமாளிக்க வைக்கப்பட்டாலும்) உதய்நிதியின் நடிப்பில் குறையாக ஏதும் சொல்ல முடியாததே அவரின் சாதனை எனலாம். உதய்நிதியை இப்படி நடிக்க வைத்ததை மிஷ்கினின் சாதனை என்பதையும் இதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். ஜலதோஷம் பிடித்த மூக்கு  போன்ற அசட்டுத்தனமான சிகப்புடன் இருக்கும் அதிதி ராவின் முகத்தை என்னால் எப்போதும் அத்தனை ரசிக்க முடியாது. ஆனால் இந்தத் திரைப்படத்திற்கு அவர் அத்தனை கச்சிதமாகப் பொருந்தியிருந்தார். ‘அவன் கொலைகாரன் இல்லை. குழந்தை’ என்று ஒரு தேவதையால்தான் சொல்ல முடியும். அந்தத் தேவதைத்தனம் அவரின் தோற்றத்திலும் உடல்மொழியிலும் இருந்தது. (குறிப்பாக கொலைகாரன் பீடத்தில் கிடத்தி இவரை வெட்ட முனைய போது பளிங்கு போன்ற அந்தக் கழுத்தின் வெண்மை எத்தனை அழகாக இருந்தது?! நாயகி சவால் விடாமல் இருந்திருந்தாலும் அவன் வெட்டாமல் நிறுத்தியிருப்பானோ.. என்னவோ! அத்தனை அழகான கழுத்து). நித்யா மேனனின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது என்றாலும் அந்தப் பாத்திரம் ஏன் அத்தனை ‘சினிக்’தனமாக நடந்து கொள்கிறது என்பது புரியவில்லை. ஒரு விபத்து அவருடைய வெற்றிகரமான வாழ்க்கையை முடக்கிப் போட்டது குறித்தான எரிச்சலும் கோபமும் அவரிடம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் அம்மாவை ‘வாடி போடி’ என்று அழைப்பதும் (நான் முதலில் ரேணுகாவை வேலைக்கார அம்மணி என்றே நினைத்தேன்). பார்ப்பவர்கள் அனைவரிடமும் எரிந்து விழுவதும் என அவரின் பாத்திர வடிவமைப்பு செயற்கைத்தனமாக இருந்தது. (‘அவள் ஒரு தொடர்கதை’ நாயகி ‘கவிதா’வைப் போல. ஆனால் ‘அஒதொ’வில் அதற்கான பின்னணிக்காரணங்களும் நியாயங்களும் இருந்தன.) போலவே க்ரைம் சீனை பார்வையிடும் அசந்தர்ப்பமான நேரத்திலும் பாட்டை முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிற காவல்துறை அதிகாரி. தன் கதாபாத்திரத்திற்கு வித்தியாசமானதொரு மேனரிசத்தை தந்து விட வேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்டது போல் தெரிகிறது. "எப்படியாவது தப்பிச்சிடுங்க சார்" என்று அதிதி ராவ் சாத்தியமில்லாத உபதேசத்தைச் சொல்லும் போது "முடியாதும்மா.. டயர்டா இருக்கு" என்று தன் கையறு நிலையை ஏற்றுக் கொள்ளும் காட்சியில் ராம் கவனத்தைக் கவர்கிறார். ** இப்போது இந்தத் திரைப்படத்தில் நான் உணர்ந்த போதாமைகளின் விஷயத்திற்கு வருவோம். முன்பே குறிப்பிட்டபடி இயக்குநரின் நோக்கில் இதற்கான விடைகள் இருக்கலாம். ஆனால் இந்த விஷயங்கள் எனக்கு உறுத்தலாக பட்டன. ஆனால் படத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தில் இவை பெரிதும் குறுக்கீடு செய்யவில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன். காவல்துறையினரின் சாகசங்களை பெருமிதப்படுத்தும் விதத்தில் ‘சாமி சிங்கம்’ போன்ற மிகையான திரைப்படங்கள் ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சமீபத்திய ‘தர்பாரிலும்’ என்கவுண்ட்டர் என்பது பெருமிதத்தின் கூச்சலாகவே இருந்தது. இப்படிப்பட்ட மிகைகள் ஒருபக்கம் என்றால் இந்தத் திரைப்படத்தில் காவல்துறையின் பங்களிப்பு மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தது. ஒரு கொடூரமான மனிதனை, கண்பார்வையற்ற இளைஞன் தேடிப் பிடிக்க வேண்டும். இது எப்படி சாத்தியம்? இந்த அசாதாரணமான விஷயமும் முரணும்தான் இந்தப் படத்தின் அடிப்படை சுவாரசியம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதற்காக உதய்நிதி பாத்திரத்தை மட்டும் பிரதானமாக முன்னிறுத்தி காவல்துறை ஆசாமிகளை ‘டம்மி’யாக்கியிருப்பது சற்று ஏமாற்றமாக இருக்கிறது. அதிலும் சிபிசிஐடி அலுவலகத்தில் இருக்கிற ஒருவரே ‘இந்தப்பா.. சம்பந்தப்பட்ட பைல்.. பல வருஷம் ஆகியும் எங்களால பிடிக்க முடியலை. நீயாவது முயற்சி பண்ணு’ என்று கொடுத்து விடுகிறார். நல்ல வேளை, அடுத்த காட்சியில் ஐ.ஜியே தன் தொப்பியைக் கழற்றி உதய்நிதியின் கையில் கொடுத்து விட்டு ‘நான் ரிசைன் பண்ணிட்டேன். நீ அந்தப் போஸ்ட்டுக்கு அப்ளை பண்ணு’ என்பது போல் காட்சி வந்துவிடுமோ என்று பயமாகி விட்டது. நித்யா மேனன் சிறப்பாக பணிபுரிந்த ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி. அவர் சமகால அதிகாரிகளோடு பேசி வழக்கு தொடர்பான தகவல்களை வாங்க முடியாதா? இதற்காக உதய்நிதியை சிபிசிஐடி அலுவலகத்தில் திருட அனுப்புவது எல்லாம் அசாதரணமான கற்பனையாக இருக்கிறது. உதய்நிதியை ஆரம்பத்தில் ஒரு சராசரி நபர் என்கிற கோணத்தில் ஒதுக்கித் தள்ளினாலும் ஒரு கட்டத்தில் அவருடைய தேடலில் உள்ள சிரத்தையை காவல்துறையினரும் அறிந்து கொள்கிறார்கள். எனில் தங்களின் விசாரணையில் ஏன் அவரையும் இணைத்துக் கொள்ளவில்லை? அதிதி ராவ் போகிற இடங்களுக்கு எல்லாம் அவரை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறார் உதய்நிதி. Stalking என்கிற இந்த விஷயம் எத்தனை ஆபத்தானது என்பதைப் பற்றி தொடர்ந்து பேசுகிறோம். ஆனால் மிஷ்கின் படத்திலேயே இது வருகிறது. ‘உங்க வீட்டு வாட்ச்மேன், வேலைக்காரங்களுக்கு காசு கொடுத்துதான் நீ போற இடங்களை தெரிஞ்சுப்பேன்” என்கிறான் நாயகன். இது போன்ற சில்லறைத்தனமான விஷயத்திற்கே நாயகி அவனை வெறுக்க வேண்டும். ஆனால் காதல் போல் ஏதோ ஒன்று அவளுக்குள் வந்து விடுவது அநியாயம். “அவன் என்னைக் காப்பாத்த வருவான்’ என்கிற அசாதாரணமான நம்பிக்கை அதிதி ராவிற்கு வர வேண்டுமென்றால் அவர்களின் காதலும் பரஸ்பர புரிதலும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பழகத் துவங்கிய கணத்திலேயே அவள் கடத்தப்பட்டு விடும் போது அவளுக்கு எவ்வாறு அப்படியொரு நம்பிக்கை வரும்? இது சம்பந்தப்பட்ட காட்சிகள் அழுத்தமாக பதிவாகாததால் அதிதி ராவின் நம்பிக்கை மிகையாகத் தோன்ற வைக்கிறது. கார் ஓட்டத் தெரிந்த ஒரு நபர் கூட இருக்கும் போது உதய்நிதியும், நித்யாவும் ஏன் அந்த சாகசப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்? கொலைகாரனின் குணாதிசயத்தைப் பற்றி நன்கு அறிந்த சிங்கம்புலி, ஏன் எந்தவொரு உதவியும் இல்லாமல் அவனைப் பின்தொடர வேண்டும்.. இப்படி பல கேள்விகள் எனக்கும் தோன்றத்தான் செய்கின்றன. ஆனால்? ** ‘அவன் என்னைத் தேடி வருவான்; காப்பாத்துவான்’ என்கிற அதிதி ராவின் சவாலை ஏற்று கொலைகாரன் சில நாட்கள் அவகாசம் தருவது ஒரு கிளிஷேதான் என்றாலும் அதிலொரு வசீகரம் உள்ளது. காவல்துறை அதிகாரி சொல்வது போல ‘சராசரி நபர்களை விடவும் மனப்பிறழ்வு உள்ளவர்கள் கூடுதல் புத்திசாலித்தனத்துடன் இயங்குவார்கள். எனவேதான் அதிதி ராவ் சொல்வது அவனுக்கு ஒரு சுவாரசியமான விளையாட்டாகப் படுகிறது. எனவேதான் உற்சாகமாக இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு அவளை தற்காலிகமாக சாகடிக்காமல் இருக்கிறான். அதே சமயத்தில் உதய்நிதி மெல்ல மெல்ல தன்னை நெருங்கி வருவதை அறிந்து தோல்வியின் வாசனையையும் அவனால் உணர முடிகிறது. ‘கெளதம் வந்துட்டு இருக்கான்” என்று தன் வீழ்ச்சியை ஒப்புக் கொள்கிற இடத்திற்கு அவன் வந்து சேர்வது இந்தப் பாத்திரத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. ** மனிதனை அவனிடமிருந்து உற்பத்தியாகிற கீழ்மைகளிலிருந்து விலக்கி, நல்லனவற்றின் பக்கம் தள்ளுவதைத்தான் ஏறத்தாழ அனைத்து மதங்களும் செய்ய முயல்கின்றன. ஆனால் காலப்போக்கில் அதில் நுழைக்கப்படுகிற இடைச்செருகல்கள் நஞ்சை கலந்து விடுகின்றன. சில மத நிறுவனங்களில் ‘காமம்’ என்பது பாவமானது என்கிற விஷயம் தொடர்ந்து விதைக்கப்பட்டு அது தொடர்பான குற்றவுணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுகின்றன. மனிதனின் சில ஆதாரமான இச்சைகள் என்றுமே பாவமாக முடியாது. இது சார்ந்த விசாரணையையும் இந்தத் திரைப்படம் மேற்கொள்கிறது. பெரும்பாலான மனச்சிக்கல்களின் ஆணிவேருக்கும் காமத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது உளவியலின் ஆதாரமான கண்டுபிடிப்பு. ‘இயற்கையான உந்துதலால் செய்யப்பட்ட ஓர் இயல்பான காரியம், தவறு என்று கடுமையாக தண்டிக்கப்பட்டதால், அவமானப்படுத்தப்பட்டதால் ஒருவன் மிருகமாக உறுமாறுகிறான். சமூகத்தைப் பழிவாங்கத் துவங்குகிறான். கொடூரமான குற்றவாளிகள் வானத்தில் இருந்து குதிப்பதில்லை. இந்தச் சமூகத்தின் உள்ளே இருந்துதான் உருவாகிறார்கள். ஒருவகையில் சமூகம்தான் அவர்களை உருவாக்குகிறது எனலாம். அவர்களின் பங்களிப்பில்லாமல் குற்றவாளிகள் உருவாவதில்லை. குடும்பம், சமூகம், கல்விக்கூடம், அரசு என்று பல நிறுவனங்கள், குற்றவாளிகளின் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கின்றன. நீங்கள், நான், அவர்கள் என்று நாம் அனைவருமே இதற்கு அறிந்தோ அறியாமலோ காரணமாக இருக்கிறோம். எப்போதோ படித்த ஒரு சிறுகதை நினைவிற்கு வருகிறது. தன்னுடைய மாணவன் ஒருவன் பெரும்பான்மையான சமயங்களில் ஆபாச வசைகளை சக மாணவர்களிடம் இறைப்பதை ஓர் ஆசிரியர் தொடர்ந்து கண்டித்துக் கொண்டேயிருக்கிறார். இத்தனைக்கும் அவன் மூன்றாம் வகுப்பு மாணவன்தான். ஆனால் ஆசிரியரின் கண்டிப்பை அலட்சியப்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் மிகவும் கோபமடையும் அவர், சிறுவனை இழுத்துக் கொண்டு அவனுடைய வீட்டுக்குச் செல்கிறார். அவனுடைய பெற்றோர்களிடம் இவனைப் பற்றி புகார் சொல்லி கண்டிக்கச் சொல்ல வேண்டும் என்பது அவரின் நோக்கம். வீட்டை நெருங்கும் போது உள்ளே இருந்து பயங்கர சத்தம். சிறுவனின் பெற்றோர்கள் கர்ணகடூரமான ஆபாச வசைகளை பரஸ்பரம் இறைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஒரு கணத்தில் ஆசிரியரின் பார்வை முற்றிலுமாக மாறி விடுகிறது. சிறுவனின் ஆபாச பேச்சிற்கு காரணம் அவனல்ல என்கிற உண்மை புரிகிறது. சிறுவனின் மீதுள்ள கோபம் முற்றிலும் மறைந்து ஆசிரியரின் பார்வையில் அவன் அனுதாபத்திற்குரியவனாக அந்தக் கணத்தில் மாறி விடுகிறான். இந்த அடிப்படையான விஷயத்தைத்தான் மிஷ்கின் இந்தத் திரைப்படத்தில் ஒரு நேரடி நீதிக்கதையாக அல்லாமல் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் வடிவத்தில் நுட்பமாக சொல்ல முனைகிறார். “அவனைப் பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. தூக்குல போடுங்க சார்” என்று சந்தானத்தின் பாணியில் கூவுவது சராசரிகளின் இயல்பு. ஆனால் அறிவுத்தளம், ஆன்மீகத் தளம் போன்றவற்றின் பின்னணியில் இயங்குபவர்களால் அப்படி எளிதான. செளகரியமான தீர்விற்கு வந்து விட முடியாது. கொடூரமான குற்றவாளிகள் என்றாலும் அவர்களின் இளமைப்பருவ பிரச்சினைகளை, பின்னணிக் காரணங்களை அறிய முற்படும் அனுதாபத்துடன்தான் அவர்களால் இயங்க முடியும். அவர்கள் இந்த மனக்காயங்களுக்கு சிகிச்சையளித்து குற்றவாளிகளை மைய சமூகத்தில் கலக்க வைக்கவே முற்படுவார்கள். ஊரே அச்சத்துடன் வெறுத்து ஒதுக்கிய கொடூரன் அங்குலிமாலாவை புத்தர் தேடிக் குணப்படுத்தியது போல. இந்தப் புரிதலுக்கும் முதிர்ச்சிக்கும் நாம் வந்தடையாவிட்டால் “ஏம்மா.. ஒரு கொடூரமான கொலைகாரனைப் போய் குழந்தைன்னு சொல்றீங்க?” என்று இந்தத் திரைப்படத்தில் வரும் பத்திரிகையாளர்களைப் போல நாமும் அதிர்ச்சியடைய வேண்டியதுதான். சைக்கோவாக நடித்த ராஜ்குமாரின் பங்களிப்பு அபாரம். அவருக்குள் இருக்கும் நல்லியல்பு ஒரு துவக்க காட்சியில் காட்டப்படுவதின் மூலம் ஒரு மனிதனுக்குள் உள்ள மிருகத்தின் அளவின் சதவீதமும் உணர்த்தப்படுகிறது. மதவெறி பிடித்தவன், ஆணவக்கொலை செய்கிறவன், காதலை மறுத்த பெண்ணின் மீது ஆசிட் அடிக்கிறவன் என்று நம் சமூகத்தில் பல சைக்கோக்கள் உண்டு. உண்மையைச் சொன்னால் நாம் அனைவருமே ஒவ்வொரு வகையில் சைக்கோக்கள்தான். அவற்றின் சதவீதம்தான் மாறுபடுகிறது. குற்றவாளிகளுக்குத் தரப்பட வேண்டியது தண்டனை அல்ல. மன்னிப்பு. ஏனெனில் அதன் சுமையை அவனால் தாங்கவே முடியாது. மன்னிப்புதான் குற்றங்களின் பங்களிப்பை கணிசமாக குறையச் செய்யும். தண்டனைகள் அல்ல. suresh kannan https://pitchaipathiram.blogspot.com/2020/01/2020.html
  • கனேடிய மருத்துவர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் மாநிலங்கள் ஊதியத்தை தருகின்றன. அந்த பணம், மக்கள் வரிப்பணத்தில் இருந்து வருகின்றது, மருத்துவர்கள் ஒரு தொழில் சங்க உறுப்பினர்கள். அதிகமாக ஊதியத்தை அதிகரிக்க வேண்டியபடி இருப்பார்கள். அதற்கு, இவ்வாறான 'பயமுறுத்தும்' அறிக்கைகளை 'வடிவமைப்பது' வழமை. குறிப்பாக ஒன்றை கவனிக்கலாம், இந்த செய்தி அறிக்கையில் 'கனடாவில் தொற்றுநோய்கள், விபத்துகள், தற்கொலைகள் உள்ளிட்டவை இருமடங்காக அதிகரித்துள்ளமைக்கும் உணவு பற்றாக்குறையே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது" என கூறப்பட்டாலும் எத்தனை ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளமை என கூறவில்லை ( அது கடந்த நூறு வருடங்களில் ஆக இருக்கலாம்).
  • “எனக்கு ஒப்பிடும் தவறான பழக்கம் இருந்தது”- மனம் திறந்த கார்த்தி..! http://www.puthiyathalaimurai.com/newsview/63969/Actor-Karthi-speech-at-Akaram-event
  • சென்னை சோழிங்கநல்லூரில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா, உணர்ச்சிவசப்பட்டு மீண்டும் கண்கலங்கினார். சென்னை சோழிங்கநல்லூர் சத்யபாமா கல்லூரி வளாகத்தில் “அகரம் அறக்கட்டளை 10 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா, அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமார், அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அகரம் நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையின் மூலம் பயின்று வரும் மாணவர்கள் 3 ஆயிரம் பேரும் நிகழ்வில் பங்கேற்றனர். முதலாவதாக பேசிய நடிகர் சிவக்குமார், எத்தனை படங்கள் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அகரம் தான் சூர்யாவின் அடையாளம் என்றும், உழவன் பவுண்டேசன் தான் கார்த்தியின் அடையாளம் என்றும் கூறினார். சிவக்குமாரைத் தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, தன்னை யாருடனாவது ஒப்பிடும் தவறான பழக்கம் தனக்கு இருந்தது என்றார். அப்படி இருக்கக் கூடாது என்றும், நாம் யாரை விடவும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ இல்லை, ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்றும் கூறினார். இறுதியாக மேடையேறிய நடிகர் சூர்யா, கலகலப்புடன் சிரித்துக்கொண்டே பேச்சைத் தொடங்கினார். பின்னர் அறக்கட்டளை நிர்வாகிகளின் பங்களிப்புகள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய சூர்யா, அறக்கட்டளையின் பொறுப்பாளரான ஜெயஸ்ரீ என்பவரை பாராட்டி பேசும்போது அவரது மகனை கட்டியணைத்து கண்கலங்கினார். https://www.polimernews.com/dnews/98331/மீண்டும்-கண்கலங்கினார்நடிகர்-சூர்யா-!   கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அகரம் தான் என் அடையாளம் - நடிகர் சூர்யா அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும், மாணவர்களை ஆசிரியர்கள் சாதிப் பெயரை சொல்லி திட்டுவது தொடர்ந்து வருவதாகவும் நடிகர் சூர்யா ஆதங்கத்துடன் கூறியுள்ளார். நடிகர் சூர்யாவின் "அகரம் அறக்கட்டளை" துவங்கப்பட்டதன் 10-ம் ஆண்டு விழா சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார், சகோதரர் கார்த்தி மற்றும் அகரம் அறக்கட்டளையில் பயின்ற மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர். விழாவின் தொடக்கமாக மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பேசிய சூர்யா,... குடும்பம், சமூகம் மற்றும் செய்யும் தொழில் ஆகிய மூன்றுக்கும் மாணவர்கள் சரிசமமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நடிப்பின் மூலம் கூடுதலாக சம்பாதித்து அகரம் அறக்கட்டளையின் வாயிலாக இன்னும் அதிகமாக உதவுவேன் என்று உறுதியளித்த அவர், சமூகத்தை பற்றியும் சிந்திப்பதுதான் வாழ்க்கை என்றார். பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் சாதிப் பெயரை சொல்லி திட்டுவது போன்ற நிகழ்வுகள் வருத்தமளிப்பதாகவும் சூர்யா கூறினார். அறக்கட்டளை நிர்வாகிகளின் அர்ப்பணிப்பு உணர்வை குறிப்பிட்டு பேசிய சூர்யா, குடும்பத்தைக் காட்டிலும் அகரம் அறக்கட்டளைக்காக அதிக நேரம் செலவழிக்கும் ஜெயஸ்ரீ-யின் குழந்தையை ஆரத்தழுவி கண்கலங்கினார். முன்னதாக பேசிய நடிகர் சிவக்குமார், இன்னும் 100 படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், "அகரம்" தான் சூர்யாவின் அடையாளம் என்று பெருமிதத்துடன் கூறினார். https://tamil.news18.com/news/entertainment/actor-suriya-speech-at-agaram-foundation-san-247321.html   இவ்விழாவில் நடிகர் சிவக்குமார் பேசுகையில், “உங்களுக்கெல்லாம் அகரம் என்கிற அறக்கட்டளை இருக்கு, அதன் உரிமையாளர் ஒரு நடிகர் இருக்கிறார், இன்னொரு ஹீரோ அவருக்கு உதவியாக இருக்கிறார். நான் பிறந்தபோது எனக்கு யாரும் இல்லை. நான் பிறந்து ஒரு வயது இருக்கும்போது என்னுடைய தந்தை இறந்துவிட்டார். அவர் சிவப்பா, கருப்பா என்று கூட தெரியாது. எனக்கு நான்கு வயதிருக்கும்போது, எஸ் எஸ் எல் சி படித்து முடித்து கல்லூரிக்கு செல்ல வேண்டிய 16 வயது அண்ணன் பிளேக் நோயால் இறந்துபோனார். என்னுடைய கிராமங்களில் உச்சக்கட்ட பஞ்சம். கம்பு, கேழ்வரகு, சாமை போன்றவை விளையவில்லை மனிதனின் உயிரை கொல்லும் எருக்கஞ்செடி, அரளிவிதை வளர்ந்தது. அந்த மாதிரி கடுமையான சூழ்நிலையில் நான் பிறப்பதற்கு முன்பு என்னுடைய ஒரு அண்ணன், எட்டு வயதில் அக்கா இறந்துவிட்டனர், பிளேக் நோயால் ஒரு அண்ணன் இறந்துபோனார். அதன்பின் ஒரு அக்கா இருந்தார்கள். நான் கடைசி ஐந்தாவது பையனாக இருந்தேன். என்னுடைய அம்மா என்னை வளர்த்ததால் இங்கு நான் உங்கள் முன்னே நிற்கிறேன். நான் போயிருந்தால் அகரமும் இல்லை, சூர்யாவும் இல்லை, கார்த்தியும் இல்லை. அந்த தாய்க்குதான் நீங்கள் நன்றி சொல்லவேண்டும். அப்போது ஒரு சவரண் நகையின் விலை 12 ரூபாய். நான் இரண்டாவது படிக்க இரண்டு ரூபாய், எனது அக்கா மூன்றாவது படிக்க மூன்று ரூபாய். மொத்தம் ஐந்து ரூபாய். ஒரு சவரண் நகைக்கு பாதியாக இருந்தது படிப்பு செலவு அதனால் என்னுடைய அக்காவின் படிப்பை நிறுத்திவிட்டு, என்னை படிக்க வைத்தார்கள்” என்றார்.